Wednesday, July 20, 2016

பதவி உயர்வுக்குக் கைகொடுக்கும் 10 வழிகள்! #DailyMotivation

சிறு வேலையில் பணிபுரிபவர் தொடங் சி.இ.ஓ-வாக இருப்பவர் வரை அனைவருமே விரும்பும் விஷயம் பதவி உயர்வு என்பது ஒவ்வொரு வருடமும் முன்பைவிட அதிகம் உழைத்து ஒரு படி மேலே செல்ல வேன்டும் என்பது அனைவரது கனவாகவும் உள்ளது. சென்ற வருடத்தைவிட குறைந்தபட்சம் 10% சம்பளமாவது இந்தவருடம் உயர்ந்துவிட வேண்டும் என்பதைத்  தான் அனைவரும் விரும்புகிறார்கள். உங்கள் பதவி உயர்வுக்கு கடின உழைப்பு மட்டுமல்ல இந்த 10 விஷயங்களும் கட்டாயம் தேவைப்படுகின்றன. அவை இதோ...

நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்!

இந்த வருட‌ இறுதியில் பதவி உயர்வு வேண்டும் என நினைத்தால் அதற்கான வேலைகளை இன்றே தொடங்குங்கள். எந்த அளவுக்கு உங்களுக்கு வேலை தரப்படுகிறததோ அதனை முதலில் 100% முழுமையாக முடிக்க பழகுங்கள். சிலர் அலுவலகத்தின் கவனத்தைத் தன் மீது திருப்ப அதிகமாக வேலை செய்வார்கள். அவற்றில் சில  100% முழுமையாக முடிக்க இயலாமல் போகலாம். அதற்குப்  பதில் உங்களிடம் ஒரு வேலையைக்  கொடுத்தால் 100% முழுமையாக முடிக்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். அது தானாகவே அலுவலகத்தின் கவனத்தை உங்கள் மீது திருப்பும்.

வாய்ப்புகளை வீணடிக்காதீர்கள்!

உங்களது உயர் அதிகரியோ அல்லது உங்களைவிட ஒருபடி மேலே இருக்கும் நபரோ ஏதோ ஒரு காரணத்திற்காக அலுவலகத்தில் இல்லாமல் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டு, உங்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டால் அன்று உங்களைச்  சிறப்பாக நிருபிக்க முயற்சி செய்யுங்கள். மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் சில சமயம் இதனை வேண்டுமென்றே ஒருவரின் தலைமை பண்பைச்  சோதிக்க செய்து பார்க்கும் முயற்சியாக மேற்கொள்கின்றன. அதனால் உங்களை நம்பி வழங்கப்படும் வாய்ப்புகளை வீணடிக்காதீர்கள். இது  உங்களுக்கான இன்னொரு நுழைவுத்தேர்வு போன்றது.

அப்டேட் ஆகுங்கள்!

உங்கள் துறையில் அப்டேட்டாக இருங்கள். அது தொடர்பான தொழில் நுட்பங்களையோ, புதிய கண்டுபிடிப்புகளையோ கற்றுக்கொள்ளுங்கள். சில சமயங்களில் நீங்கள் அப்டேட்டாக இருக்கிறீர்கள் என்பதற்காகவே உங்களுக்கு சில பதவிகள் உங்களைத்  தேடி வரும். இன்னும் சொல்லப்போனால் உங்களது அப்ட்டேட்டுக்காகவே சில புதிய பதவிகள் உருவாக்கப்படலாம்.

வயது பிரச்னை அல்ல!

இது குறைந்த வயதில் உள்ளவர்களுக்கும், வயது அதிகமானவர்கள் என  இருவருக்குமே பொருந்தும். குறைந்த வயதில் இருப்பவர் இவர் என்னை விட சீனியர் இவர் இருக்கும் போது எனக்கு எப்படி பதவி உயர்வு கிடைக்கும் என்ற எண்ணமும், இவர்கள் நான் உயர்பதவிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வார்களா என்ற தயக்கத்தோடும் காணப்படுவார்கள். இது தடையே அல்ல. உங்கள் திறமைக்கு தான் நிர்வாகம் மதிப்பளிக்கும் வயதுக்கு அல்ல. உங்களால் நிர்வாகத்திற்கு அதிக பயன் என்றால், கண்டிப்பாக நிர்வாகம் உங்களைத்  தான் தேர்வு செய்யும். அதனால் உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள்.

இதே போல் வயது அதிகமானவர்களிடமும் ஒரு கேள்வி இருக்கிறது ''இன்றைய தொழில்நுட்பம் மட்டும் தான் எனக்கு புதிது. என் அனுபவம் இருக்கும் போது இந்தப்  புதியவர்களை அதிகம் நிர்வாகம் நம்புகிறதே, நமக்கு வயதாகிவிட்டதோ என்ற எண்ணம் இருக்கலாம். ஆனால் உங்கள் கேள்வியிலேயே உங்களுக்கான பதில் உள்ளது. உங்களுக்கு தொழில்நுட்பம் மட்டும் தான் புதிது. அதிக அனுபவம் உள்ளது. அதனை கற்றுக்கொண்டால் நீங்கள் தான் கில்லி. அனுபவத்துக்கு நிர்வாகம்  எப்போதுமே மதிப்பளிக்கும்.

பன்முகத்தன்மை!

இவர் ஒரே ஒரு வேலையைச்  செய்பவர் இந்த வேலை தவிர இவருக்கு வேறு எதுவும் தெரியாது என்ற வரிகளில் சிக்கி கொள்ளாதீர்கள். உங்களால் எந்த ஒரு வேலையையும் அசால்ட்டாக செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கையை அலுவலகத்துக்கு ஏற்படுத்துங்கள். அதற்காக அனைத்துப்  பணிகளையும் நீங்களே செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களுக்கு அனைத்து வேலைகளும் தெரியும் ஆட்கள் பற்றாக்குறையோ அல்லது திடீர் தேவையோ ஏற்பட்டால்  இவரால் முடியும் என்கின்ற பன்முகத்தன்மை கொண்டவராக இருங்கள்.

 அறிவு பரிமாற்றம்! 

நீங்கள் புதிய விஷயங்களைக்  கற்றுக்  கொள்வது மட்டுமல்ல. புதிதாகக்  கற்றுக்கொண்ட‌ , உங்களுக்குத்  தெரிந்த விஷயங்களைக்  கற்றுக் கொடுப்பவராகவும் இருங்கள். உங்களுக்கு மட்டுமே தெரிந்த, அலுவலகத்துக்குப்  பயன்படும் விஷயங்களை அதனைக் கற்க ஆர்வமுள்ளவருக்குக்  கற்றுக்கொடுங்கள். இது உங்கள் தலைமைப் பண்பையும், உங்கள் மீதான கவனத்தையும் கூட்டும்.

அலுவலக அரசியலைச் சமாளியுங்கள்!

எல்லா அலுவலகத்திலுமே, சிலரால் தொடர்ந்து பிரச்னைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். சில சமயங்களில் உங்களுக்கு வரும் வாய்ப்பைத்  தட்டி பறிப்பவராகக்  கூட அவர் இருக்கலாம். அவர்களைச்  சமாளிக்க பழகுங்கள். எப்படியும் உங்களுடன் திறமை குறைந்தவராக இருந்தால் அந்த இடத்தில் அவரால் நீண்ட காலம் நீடிக்க முடியாது. அவர்களிடம்  பிரச்னையை வளர்க்காமல் அமைதியாக இருங்கள். அதுவே பல பிரச்னைகளை தவிர்க்கும். உங்களுக்கான வாய்ப்பு உங்களைத்  தேடி தானாக வரும். 

சர்ச்சைகளில் சிக்காதீர்கள்!

அலுவகத்தில் உள்ள உயர் அதிகாரிகளை பற்றியோ அல்லது நிர்வாகம் பற்றிய கருத்துக்களையோ வெளிப்படையாக தெரிவித்தோ? அல்லது உடன் பணிபுரிவர்களுடன் தேவையற்ற விஷயங்களை பகிர்ந்தோ சர்ச்சைகளில் சிக்கி கொள்ளாதீர்கள். சர்ச்சைகளை நீண்ட நாட்களுக்கு அனைவரும் நியாபகம் வைத்திருப்பார்கள். அது உங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் சர்ச்சைகளை தவிர்க்கப் பாருங்கள்.

தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள்!

உங்கள் மீதான நியாயமான தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள். நிர்வாகம் உங்களிடம் எதிர்பார்ப்பதும் அது தான். ஆனால் தவறுகளை ஒப்புக்கொள்வதையே வழக்கமாக வைத்திருக்காதீர்கள். ஒருமுறை நீங்கள் செய்த தவறை எதிர்காலத்தில், நடந்திடவே கூடாது என்பதில் தீர்மான‌மாக இருங்கள். அதேபோல் நீங்கள் காரணமாக இல்லாத தவறுக்கு நீங்கள் குறை கூறப்பட்டால் அதற்கான உரிய விளக்கத்தை சரியான வார்த்தைகளால் கூறி புரிய வையுங்கள்.

மாற்றங்களுக்குத்  தயராக இருங்கள்!

 சில நேரங்களில் நீங்கள் முன்பு பணிபுரிந்த இடத்துக்கும் தற்போது பணிபுரியும் இடத்தில் கலாச்சாரம் மாறி இருக்கலாம். அல்லது அலுவலகமே பெரிய கலாச்சார மாற்றத்துக்கு உட்படலாம். இதற்கு உங்களைத்  தயாராக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் மாற்றத்துக்குத்  தயாராக இல்லை என்றால் உங்களுக்கான தேவை நிறுவனத்துக்கு இருக்காது. அதேசமயம் நீங்கள் எளிதாக மாற்றிக்கொள்ளும் நபராக இருந்தால் உங்களுக்கான பதவி உயர்வு, கட்டாயம் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து ஒருபடி மேலே தான் இருக்கும்.

Monday, July 18, 2016

நேரம் நல்ல நேரம்

நேரம் நல்ல நேரம்
|
காலம் இயற்கை சொத்து

இந்த உலகில் நேற்று வரை வாழ்ந்த மனிதர்களுக்கு இயற்கை அளித்த சொத்து... ஒரு நாளில் 24 மணி நேரம் தான்.
இந்த உலகில் இன்று வாழும் மனிதர்களுக்கு இயற்கை அளித்த சொத்து... ஒரு நாளில் 24 மணி நேரம் தான்.

இதே போல், இந்த உலகில் இனி வர இருக்கும் அனைத்து மனிதர்களுக்கும் இயற்கை கொடுக்க இருக்கும் சொத்து... ஒரு நாளில் 24 மணி நேரம் தான்.

இந்த காலம், குறிப்பாக ஒரு நாளில் 24 மணி நேரம் என்பது ஒரு வழிப்பாதை.

வாழ்வில் தனி மனிதன் எந்த ஒரு காலக்கட்டத்திலும் நேரத்தை செலவு செய்து விட்டால், வாழ்நாளில் அந்த நேரத்தை எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் திரும்பப் பெற முடியாது.

இதை தெளிவாக உணர்ந்து கொண்டு ஒவ்வொரு இளைஞனும் நேரத்தை பல வேலைகளுக்கு செலவு செய்யும் முன் தெளிவாகத் திட்டமிட்டு, நேரத்தை சேமித்து, உடல் ஆரோக்கியத்தை காக்க மன ஆரோக்கியத்தை வளர்க்க அந்த நேரத்தை செலவு செய்ய வேண்டும்.

வெற்றி ... தோல்வி

தனி ஒரு மனிதனின் வாழ்க்கையில் வெற்றி மற்றும் தோல்வி அவனது முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்தின் அளவைப் பொறுத்து இல்லை. மாறாக, ஒரு தனி மனிதன் தன்னுடைய வாழும் காலத்தில் திட்டமிட்டு காலத்தை செலவிடும் முறையில்தான் உள்ளது.

காலத்தை சரியான முறையில் திட்டமிட்டு ஒரு இளைஞன் பயன்படுத்தினால் , மனித வாழ்வில் வெற்றி மற்றும் மேலும், பலப்பல மேன்மைகள் அடைவது நிச்சயம்.
அதே சமயம் ஒரு இளைஞன் காலத்தை தவறான முறையில் திட்டமிடாமல் பயன்படுத்தினால் , வாழ்வில் தோல்வி நிச்சயம்.

காலத்தே பயிர் செய்

இளைஞனே ! சற்று சிந்தித்துப் பார்த்தால் புரியும். மனித வாழ்க்கையே நம் கையில் என்பதைவிட காலத்தின் கையில் என்பது தெளிவாகப் புரியும்.
இதனால் தான் நம் முன்னோர்கள் பல அனுபவ மொழிகளை சொல்லி உள்ளார்கள். அவைகள் 

காலத்தே பயிர் செய்
காலம் பொன் போன்றது
காலமும், கடல் அலையும், யாருக்காகவும் காத்து இருக்காது.

காலத்தின் அருமை

இன்றைய 114 கோடி இந்திய மக்களில் 57 கோடி பேர் இளைஞர்கள். இந்த 57 கோடி இளைஞர்களில் எத்தனை பேர் காலத்தின் அருமையை உணர்ந்து உள்ளனர் ?

பதில் விரல் விட்டு எண்ணி விடலாம். இதுதான் எதார்த்த உணமை

காலத்தின் அருமையை உணர்ந்தால், TV முன் உட்கார்ந்து பொழுது போக்கு என்ற போர்வையில் இன்றைய இளைஞர்கள் பல மணி நேரம் வீணடிக்க மாட்டார்கள்.

காலத்தின் மேன்மை

இன்றைய இளைஞர்களில் பலர் இளமை முறுக்கில் காலத்தின் அருமை புரியாமல், காலத்தின் மேன்மையை உணராமலும் இளமை காலத்தை வீணடிக்கிறார்கள்.
இளமை காலம் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொள்ளும் காலம்.
இதை உணாராமல், இன்றைய இளைஞர்கள் பொழுது போக்குக்காக மாதம் ஒரு முறை மற்றும் இரு முறை பார்க்க வேண்டிய திரைப்படங்களை கணிசமான நேரம் செலவு செய்து பார்க்கின்றனர். 

நேரப் போராட்டம்

இந்திய சாதாரண இளைஞனுக்கு உடல் ஆரோக்கிய பயிற்சி செய்ய திறந்த மைதானம் மற்றும் ஜிம்முக்கு போக நேரம் இல்லை !

இந்திய சாதாரண இளைஞனுக்கு பேட்மிட்டன், டென்னிஸ், வாலிபால் போன்ற பல விளையாட்டுகளை விளையாட நேரம் இல்லை !!

இந்திய சாதாரண இளைஞனுக்கு பலப்பல நல்ல அறைவை தூண்டும் புத்தகங்கள் படித்து, அறிவை வளர்த்துக் கொள்ள நேரம் இல்லை !!

இன்றைய இளைஞனுக்கு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க நேரம் இல்லை ! மன ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்ள நேரம் இல்லை !!

நேரப் போராட்டம்

தினம், தினம் ஒரு பெட்டிக் கடைக்கு 50க்கும் மேற்பட்ட செய்தித்தாள்கள் வருகின்றன. ஆனால், இன்றைய இந்திய இளைஞனுக்கு இரு செய்தித்தாளை கூட முழுமையாக படிக்க நேரம் இல்லை.

அவ்வளவு ஏன்?

ஒரு செய்தித்தாளில் மேம்போக்காக சில தலைப்புகளைக் கூட படிக்க நேரம் இல்லை.

இந்திய இளைஞன் தினம், தினம் பல வேலைகளை திறம்பட செய்ய நேரத்தோடு போராடிக் கொண்டே இருக்கிறான். இந்த நேரப் போராட்டம் இளமைக் காலத்தில் ஆரம்பித்து, வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 6 வயது முதல் 60 வயது வரை நேரப் போராட்டம்.

வாழ்க்கை அஸ்திவாரம்

ஒரு பல் மாடி கட்டிடம் கட்ட ஆரம்பிக்கும் போதே, பின்னாளில் உயர இருக்கும் உயரத்தை கட்டிடத்திற்கு போடப்படும் அஸ்திவாரத்தைக் கொண்டே கண்க்கிட்டுவிடலாம்.

அதே போல், ஒரு மனிதன், வாழ்க்கையில் அடைய இருக்கும் வளர்ச்சி, அவனுடைய இளமைக் காலத்தில் அதிலும் குறிப்பாக முதல் 30 ஆண்டு கால வாழ்க்கையில் நேரத்தை எவ்வாறு முறையாக முறைப்படுத்திக் கொண்டு செயல்படுகிறான் என்பதில் தான் உள்ளது.

உண்மை....

"உண்மை என்பது எளிது,
எளிமையாக இருப்பதால் உண்மையை 
மக்கள் மறந்துவிட்டார்கள்"
- சுவாமி விவேகானந்தர்.


தன்னடக்கம்,
தன் நம்பிக்கை,
தன் வழி......

"Truth is simple, because of simplicity
truth has been forgotten"
- Swami Vivekananda.

நேர நிர்வாக கலை

நேரமே வாழ்க்கை

நேரமே வாழ்க்கை.... வாழ்க்கை நேரம்
நேரத்தை இழந்தவன் வாழ்க்கையை இழக்கிறான்.
நேரம் ஒரு மனிதனை நிர்வகிக்கும் முன் ,மனிதன் நேரத்தை நிர்வகிக்க பழகிக் கொள்ள வேண்டும்.
இதைத் தான் நபிகள் நாயகம் மிக அழகாக சொல்கிறார். "மற்றவர்கள் உனக்காக பிரார்த்தனை செய்யும் முன் , நீங்கள் உங்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்."

நேர நிர்வாகம்.

நேரத்தை நிர்வகிப்பது என்பது ஒரு முக்கியமான வாழ்க்கை கலை.
மனிதன் ஆய கலைகள் 64 யும் தெரிந்து கொண்டு இந்த ஒரு நேர நிர்வாகக்கலையை முறையாக தெரிந்து கொள்ளவில்லை என்றால் மொத்த மனித வாழ்க்கையும் அர்த்தமற்றதாகிவிடும். 
நேர நிர்வாக கலையை எந்த ஒரு நபரும் எந்த ஒரு காலக்கட்டத்திலும் தெரிந்து கொள்ளலாம்.
6 வயது முதல் 60 வயது வரை ஒவ்வொருவருக்கும் நேர நிர்வாகம் பற்றிய விழிப்பு உணர்வு வேண்டும். பிறகு அந்த விழிப்பு உணர்வு வழி வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஆரோக்கிய நேரம்

சாதாரண மனிதன் வாழ்க்கையின் முதல் பாதியில் , அதாவது 60 வயது வரை உடல் ஆரோக்கியத்தை உதாசீனப்படுத்தி, மன ஆரோக்கியத்தை கெடுத்துக் கொண்டு பணம் சம்பாதிக்கின்றான்.
பிறகு, வாழ்க்கையின் அடுத்த பாதியில் ,அதாவது 60 வயது முதல் இழந்த உடல் ஆரோக்கியத்தில் சிறிது அளவையாவது மீட்க வேண்டும் எண்ர ஆவலில், சம்பாதித்த பணத்தை தண்ணீராக ஆரோக்கியத்துக்காக செலவு செய்கிறான்.

ஆரோக்கியமே மனிதனின் மிகப் பெரிய சொத்து . நோய் இல்லாதவன் வாலிபன். இந்த உண்மை தெரிந்தும், புரிந்தும், இன்றைய இளைஞர்களுக்கு தன்னுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நேரம் இல்லை. மேலும் மனதை ஆரோக்கியமாகவும், அமைதி நிலையிலும் வைத்துக் கொள்ள இன்றைய இளைஞர்களுக்கு நேரம் இல்லை.

நேர விழிப்புணர்வு

நம்மில் அதிகமான இளைஞர்களுக்கு முதலில் நேர விழிப்பு உணர்வு இல்லை.
அவ்வாறு நேர விழிப்பு உணர்வு உள்ள சில இளைஞர்களில் பலருக்கு உடற்பயிற்சி பற்றிய விழிப்பு உணர்வு இல்லை.
நேர விழிப்பு உணர்வு மற்றும் உடற்பயிற்சி பற்றிய விழிப்பு உணர்வு உள்ள சிலரில், பலருக்கு மனப்பயிற்சி பற்றிய விழிப்பு உணர்வு இல்லை.
அதிலும் நேர விழிப்பு உணர்வு, உடல் விழிப்பு உணர்வு மற்றும் மனப்பயிற்சி பற்றிய விழிப்பு உணர்வு உள்ள சிலரில் பலருக்கு ஆன்மிகப் பயிற்சி பற்றிய விழிப்பு உணர்வு துளி கூட இல்லை.

தற்சோதனை விழிப்பு உணர்வு

அவ்வாறு உடல் பயிற்சி, மனப் பயிற்சி மற்றும் ஆன்மிகப் பயிற்சி பற்றிய விழிப்பு உணர்வு உள்ள மிக சிலரில் பலருக்கு தன்னைத் தானே தற்சோதனை செய்து எண்ணத்தை சீரமைத்துக் கொண்டு , குண நலங்களை பண்படுத்திக் கொண்டு தெளிந்த வழியில் தினசரி வாழ்க்கையை இனிமையாக அமைத்துக் கொள்ளும் விழிப்பு உணர்வு இல்லை.
இதைத்தான் சுவாமி விவேகானந்தர் கூறுகிறார், " இளைஞர்கள் எல்லாம் வீண் அல்ல. இளைஞர் சமுதாயத்தின் ஆற்றலை , சிந்தனை வேகத்தை, இந்த முதிய சமுதாயம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை" 

தூக்கத்தில் பாதி

சாதாரண மனிதன் வாழ்நாள் முழுவதும் தூக்கத்தில் பாதி, ஏக்கத்தில் பாதி என்ற நிலையில் நல்ல எதிர்காலத்தை பற்றி நினைத்து கனவு கண்டு , அதில் திளைத்து நல்ல நிகழ் காலத்தை கோட்டை விருகிறான்.

சமச்சீர் வாழ்க்கை

இளமை - முதுமை , ஆரோக்கியம்---நோய் , இன்பம் - துன்பம் என்ற வாழ்க்கை நிலைகளை ஒரு மனிதன் வாழ்க்கைப் பயணத்தில் எதிர் கொள்கிறான். இந்த நிலை இல்லாத உலகில் , உடல் நிலைக்கும் என்ற கனவில் வாழும் இளைஞனே.. வாழ்க்கையின் நிதர்சன உண்மையை குறிபாக நேர நிர்வாகத்தின் அவசியத்தை இளமை காலத்திலேயே உணர்ந்து கொள்.

தனிமனித மேம்பாடு

சுருங்க சொன்னால், நேர நிர்வாகம் என்பது தனிமனித சிந்தனை மேம்பாட்டு நிர்வாகம் 
நம் நேரத்தை சரியாக நிர்வகிக்க கற்றுக் கொள்வோம். சிந்தனஒயோடு நம் செயல்களை சரியாக செய்யக் கற்றுக் கொள்வோம். நம் வாழ்க்கையை சீரமைத்துக் கொள்வோம்.
ஒரு நாளில் நமக்குக் கிடைக்கும் இந்த உன்னதமான 24 நிமிட நேரத்தை சரியான வகையில் நிர்வகிக்க கொள்வோம்

சிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்



* மண்ணுக்குள் மறைந்தால்தான் செடியாக முளைக்க முடியும்.
-மு.வ

* மௌனமாக இருப்பது கோழைத்தனம் என்று நினைத்துவிடக் கூடாது.
-மொரார்ஜி தேசாய்

* ஆற்றலை வெளிப்படுத்தும் ஆற்றல் இல்லாவிட்டால் அந்த ஆற்றல் மதிப்பற்று போய்விடுகிறது.
- நெப்போலியன்

* இனிமையாக பேசுபவனுக்கு பகைவர்கள் இருக்கமாட்டார்கள்.
-கிருபானந்த வாரியார்.

* துன்பமும் ஏழ்மையும் போதிப்பதுபோல் வேறொன்றும் போதிக்கமுடியாது.
-விவேகானந்தர்.

*உங்களுக்கு அவசியமில்லாததை நீங்கள் வாங்கினால் சீக்கிரமே உங்களுக்கு அவசியமானவற்றை விற்க நேரிடும்.
-ரிச்சர்ட் சாண்டர்ஸ்.

* ஒருமுறை அறிவாளியுடன் பேசுவது,ஒரு மாதம் நூல்களைப் படிப்பதைவிட அதிக நன்மை தரும்.
- யாரோ.

* ஒழுக்கம் பிச்சைக்கார உருவில் இருந்தாலும் கௌரவிக்கப்படும்.
-யாரோ.

* மனம் ஒரு நல்ல வேலைக்காரன்,ஆனால் மோசமான எஜமான்.
-சாக்ரட்டீஸ்.

* உங்கள் எதிரிகளை கவனியுங்கள்,அவர்களே உங்கள் குற்றங்களை முதலில் கண்டுபிடிப்பவர்கள்.
-பெனிலின்.

* வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது பிறரை மகிழ்விப்பதில்தான் உள்ளது.
-மெஹர்பாபா.

* ஒரு மனிதனின் தலைசிறந்த நண்பர்கள் அவனது பத்து விரல்கள்.
-ராபர்ட் கோலியர்.
`
* நமக்கு தெரிந்தது எது? தெரியாதது எது? -என்பதை அறிந்துகொள்வதே உண்மையான அறிவு.
-கன்பூசியஸ்
`
* படிப்பில் பிரியமில்லா அரசனாக இருப்பதைவிட ஏராள நூல்களைக் கற்ற ஏழையாக இருப்பது நல்லது.
-மெக்காலே.
`
* எதை வேண்டுமானாலும் புள்ளி விவரங்களால் அளந்திடமுடியும், உண்மையைத்தவிர.
-குஷ்வந்த் சிங்.
`
* அதிருப்தி என்பது இயற்கையாகவே நம்மிடம் உள்ள செல்வம்.ஆடம்பரம் நாமே தேடிக்கொள்ளும் வறுமை.
-சாக்ரடீஸ்.

சந்தோசம் பெற சிந்தனை துளிகள்

01.வேலை செய்யச் செய்ய உங்கள் நடத்தை மேம்படும். சுய கட்டுப்பாடு, சுறுசுறுப்பு, மன உறுதி, திருப்தி போன்ற நூற்றுக்கணக்கான நல்ல குணங்கள் ஏற்படும்.

02. வாழ்வின் பெருமைக்கும், இனிமைக்கும் காரணமான மாபெரும் எண்ணங்களை மாபெரும் மனங்கள் இந்தப் புவியில் விட்டுச் சென்றுள்ளன. அவற்றை தேடிப் பெறுவது நமது கடமை. அதைச் செய்யாவிட்டால் இழந்துவிடுவோம்.

03. நீங்கள் நூல்களைப் படிக்கும்போது சில நல்ல வார்த்தைகள் உங்களைப் பாதிக்கும், அவை உங்களுக்காகவே எழுதப்பட்டது போலிருக்கும். அவற்றை மறவாது இதயச் சுவரில் பதித்து வையுங்கள்.

04. நமக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் எப்படி வாழ வேண்டும், எப்படி சாக வேண்டும் என்பதை கற்றுத்தந்துவிட்டே இறந்துள்ளார்கள், அவற்றை அறிந்தும் கடைப்பிடிக்க மறுப்பதே சோகமான விடயம்.

05. சிறந்த சிந்தனைகளுக்கு ஒரு காலமும் வயதாகாது. சொல்லப்பட்ட காலத்தில் எப்படி புதுமையாக இருந்ததோ அப்படியே இன்றும் வீரியத்துடன் இருக்கும்.

06. நமக்கு முன்னர் வாழ்ந்த சரித்திரகால புருஷர்களை மனதின் முன் நிறுத்தி வாழ்ந்தால் அவர்களுடைய சக்தி எங்களை பாதுகாக்கும்.

07. வாழ்வின் அர்த்தமும் தேடலும் சந்தோஷம்தான், மனித வாழ்வின் நோக்கமும் இறுதி இலட்சியமும் அதுதான்.

08. திருப்தியான மனமே சந்தோஷத்தின் அடிப்படை, அந்த அடிப்படை உருவாவது விருப்பமாக செய்யும் வேலையில் இருந்துதான்.

09. வேலையைச் சார்ந்துதான் சந்தோஷம் இருக்கிறது என்பதை ஒரு சிலர்தான் 
உணர்ந்திருக்கிறார்கள். சந்தோஷம் உங்களை விஞ்ச வேண்டும் நீங்கள் அதை விஞ்சக்கூடாது.

10. ஒவ்வொரு நாள் காலையிலும் புன்னகையுடன் விழித்தெழுந்து, ஒவ்வொரு நாளும் தரப்போகும் நல்ல வாய்ப்புக்களை வரவேருங்கள். காலை எழுந்ததும் உங்களுக்கு செய்வதற்கு ஒரு வேலையைத் தந்த இறைவனுக்கு நன்றி கூறுங்கள்.

11. சிறந்த சிந்தனைகளால் உங்கள் மனதை செழுமையாக்குங்கள். ஒவ்வொரு தலைமுறையும் பழமை தந்த புதையலை சந்தோமாக அனுபவிக்கிறது. பின்னர் புதிய சொற்களை அந்தச் சொற்களில் சேர்த்து பெரியதாக்கி எதிர்கால தலைமுறைக்கு வழங்குகிறது.

12. நம்மிடம் இருப்பதில் திருப்தியடைவதுதான் உன்னதமான மிகவும் பாதுகாப்பான செயலாகும். நீங்கள் எல்லாவற்றிலும் முதலிடம் பிடிக்க இயலாது என்பதை உணர்வீர்களாக.

13. நிகழ்காலத்தை சந்தோஷமாகக் கழிக்க வேண்டும். கடவுளுக்கும், மனிதனுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை செய்வதுதான் சந்தோஷம்.

14. எப்போதும் நம்மிடம் கவனம் இருக்க வேண்டும், படபடப்பு இருக்கக் கூடாது. அளவற்ற செல்வம் நம்மிடம் இருக்கிறதோ இல்லையோ சமமான மன நிலையுடன் வாழ வேண்டும்.

15. நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்களோ அதே நிலையில் திருப்தியடையக் கற்றுக் கொள்ளுங்கள்.

16. நாம் எங்கும் வாழலாம் ஆனால் நாம் தேர்ந்தெடுத்த சூழல்தான் நமக்கு வாழ்வில் இன்பம் தரும்.

17. நமது நிலை இந்தப் பிரபஞ்சத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடாது என்பதை புரிந்து, தனது சொந்த சக்தியை அறிந்து அமைதியாக வாழப் பழக வேண்டும்.

18. ஒரு மனிதனோ அல்லது ஓர் இனமோ சந்தோஷமின்றி இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அவர்களுடைய சொந்தத் தவறுதான் என்று உணர வேண்டும். காரணம் கடவுள் எல்லோரையும் சந்தோஷமாகத்தான் படைத்திருக்கிறார்.

19. நீங்கள் யார்.. என்னவாக இருக்கிறீர்கள் என்பதில் சந்தோஷம் இல்லை, இப்போது என்ன செய்கிறீர்கள் என்பதில்தான் சந்தோஷம் இருக்கிறது.

20. நீங்கள் உங்களுக்காக மட்டும் சுயநலத்துடன் வாழ்ந்தால் ஒரு கட்டத்தில் களைப்பு ஏற்படும், ஆகவே சக மனிதர்களுக்காகவும் அர்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்.

21. காலம் கடப்பதற்கு முன்னதாக உங்கள் சக்தியை இந்தச் சமுதாயத்திற்காகப் பயன்படுத்துங்கள்.

22. அறிவோடு அன்பைக் கலந்து, நகைச்சுவை உணர்வோடு, எதிர்கால நம்பிக்கையோடு ஒரு வார்த்தை சொன்னால் அதைவிட பெரியது வேறெதுவும் இருக்க முடியாது.

23. பெறுவதிலோ வைத்திருப்பதிலோ அல்ல தருவதில்தான் சந்தோஷமே இருக்கிறது.

24. சந்தோஷம் என்பது நறுமணம் போன்றது. அது உங்களிடம் இல்லாவிட்டால் உங்களால் மற்றவருக்கு ஒரு துளி தெளிக்க இயலாது.

25. தனக்குத்தானே திருப்தியாக இருக்க முடியாத ஒரு மனிதனால் சந்தோஷமாக இருக்க முடியாது, சந்தோஷத்தை மற்றவர்களுக்கு வழங்கவும் முடியாது.

நிகழ்காலம் என்கிற வைரக்கற்களை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்

நிகழ்காலம் என்கிற வைரக்கற்களை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்
முக நூலில் படித்ததில் பிடித்தது  - தன்னம்பிக்கை கதை

அவன் ஒரு வியாபாரி. எதிர்காலத்தில் பெரிய தொழிலதிபராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால், சரியாகத் திட்டமிட்டுச் செயல்படாததால், அவன் பெரிய நஷ்டத்தைச் சந்திக்க நேர்ந்தது.

மிகுந்த கவலையில் ஆழ்ந்த அவன் வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல், ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக இருந்த ஆற்றங்கரைக்குப் போனான். அங்கே மெல்லிய நிலா வெளிச்சத்தில் ஆற்று மணலில் அமர்ந்து நினைவுகளை ஓடவிட்டான். வியாபாரத்தில் தோற்றுப்போன அவலம் அவனை அழுத்தியது. பங்குதாரர்கள் எப்படியெல்லாம் தனக்குத் துரோகம் செய்தார்கள், நம்பவைத்துக் கழுத்தறுத்தார்கள் என்று எண்ணியெண்ணி வேதனையில் மூழ்கினான்.

தொடர்ந்து எப்படி வியாபாரம் செய்யப்போகிறோம்... குடும்பத்தை எப்படி நடத்தப் போகிறோம் போன்ற எதிர்காலக் கவலைகள் வேறு ஒருபுறம் எழுந்து அடங்கின. இந்தச் சிந்தனையினூடே அவன் வலக்கை அவனை அறியாமல் ஆற்று மணலைத் துழாவி கைக்குத் தட்டுப்பட்ட சிறு சிறு கற்களை எடுத்து ஆற்றில் வீசியவண்ணம் இருந்தது. இப்படியாக அவன் அன்றிரவு முழுதும் அங்கேயே அமர்ந்திருந்தான்.

பொழுது விடிய ஆரம்பித்தது! வெளிச்சம் பரவியது. ஆற்றிலே வீசுவதற்கு அவனைச் சுற்றி இருந்த கற்கள் எல்லாம் தீர்ந்து போய்விட்டன. அவன் தன் கையில் இருந்த கடைசிக் கல்லைப் பார்த்தான். பிரமித்துவிட்டான். காரணம் - அது சாதாரண கூழாங்கல் இல்லை. விலை உயர்ந்த வைரக்கல்.

யாரோ கொள்ளையர்கள் தாங்கள் கொள்ளையடித்து வந்த வைரக்கற்களை ஆற்றங்கரையிலேயே தவறவிட்டு விட்டு ஓடியிருக்கிறார்கள். அவற்றைத்தான் அவன் இருட்டில் இன்னதென்று அறியாமல் எடுத்து வீசியிருக்கிறான்.

ஒருவகையில் பார்த்தால் நம்மில் பலர் அந்த வியாபாரி மாதிரிதான். கடந்த காலம் மற்றும் எதிர்கால நினைவுகளில் மிதந்துகொண்டு நிகழ்காலம் என்கிற வைரக்கற்களை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்

தமிழில் சில சிந்தனை துளிகள்

தமிழில் சில சிந்தனை துளிகள்

உன்னைவிட உனக்கு உதவ யாராலும் முடியாது.

எல்லோரும் எல்லாம் தெரிந்து கொண்டு பிறப்பதில்லை. நமது அறிவைப் பயன்படுத்தி, நாம்தான் ஏன்(why), எதற்கு(which), எப்படி(How to) என்ற கேள்விகளால் பகுத்தறிந்து சிந்தித்துச் செயல்பட்டு வெற்றிகளைக் குவிக்க வேண்டும்.
மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!

வெற்றிக்கும் தோல்விக்கும் வித்தியாசம் அதிகம் இல்லை. கடமையை செய்தால் வெற்றி! கடமைக்கு செய்தால் தோல்வி!

நம்மால் முடியாது என்று நினைக்கும் செயல்களை, யாரோ ஒருவர் எங்கோ ஓர் இடத்தில் அதை செய்து கொண்டுதான் இருக்கிறார்.

ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தையே மாற்ற வேண்டும் என்னு நினைக்கிறார்கள். ஆனால் ஒருவர் கூட தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது இல்லை! – லியோ டால்ஸ்டாய் 

எது உன்னை அச்சம் கொள்ளச் செய்கிறதோ அதை அஞ்சாமல் எதிர்த்து நில் – சுவாமி விவேகானந்தர் 

வெற்றி என்பது பெற்றுக் கொள்வதற்கு… தோல்வி என்பது கற்றுக் கொள்வதற்கு – வைரமுத்து
வயிற்றுக்குச் சோறிட வேண்டும் – இங்கு வாழும் மனிதருக் கெல்லாம்; பயிற்றிப் பல கல்வி தந்து – இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்.-முண்டாசுக் கவிஞன்

நாடென்ன செய்தது ந‌ம‌க்கு என கேள்விகள் கேட்பது எதற்கு நீயென்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு.

நாம் வேறு நபர் அல்லது வேறு சில நேரம் காத்திருந்தால் மாற்றம் வராது. நாம் தான் நம்முடைய மாற்றத்திற்கு காத்திருக்கிறோம். நாம் தான் நாம் தேடிக்க கொண்டிருக்கும் மாற்றம் - பராக் ஒபாமா

உங்களுக்கு ஏதாவது பிடிக்கவில்லை என்றால், அதை மாற்றுங்கள். உங்களால் அதை மாற்ற முடியாது என்றால், உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். அதைவிடுத்து புகார் கூற வேண்டாம்." - மாயா அந்ஜிலாவ்
"ஏன் பிறந்தோம்?"
"எப்படி வாழ்கிறோம்?" என்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டியது தான் முக்கியம் .

உனக்கு மன அமைதி வேண்டுமானால் யாருடைய குறையையும் காணாதே விவேகானந்தர்

ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித உருவில் தெய்வம்-கண்ணதாசன்

பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை 
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை 
பணம் படைத்த வீட்டினிலெ வந்ததெல்லாம் சொந்தம் 
பணமில்லாத மனிதருக்கு சொந்தமெல்லம் துன்பம் - கண்ணதாசன்

அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு தினம் 
அச்சப்பட்டக் கோழைக்கு இல்லம் எதற்கு
கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு 
கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு நீ
கொண்டு வந்ததென்னடா மீசை முறுக்கு - கண்ணதாசன்

உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு

மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர்,
விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர். - திருக்குறள்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். -- திருக்குறள்
விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.

தமக்கு துன்பம் வரக்கூடாது என்று நினைபவர்கள் ,
யார்க்கும் தீவினைகளை செய்யக்கூடாது - தெய்வப்புலவர் வள்ளுவர்
நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள் - தெய்வப்புலவர் வள்ளுவர்

ஒவ்வொரு நிகழ்வையும் விழிப்பு உணர்வுடன் அணுகினால் வாழ்க்கையே வழிபாடுதான்! நூல் : வாழ்க்கையேஒரு வழிபாடுதான்! வெ. இறையன்பு

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. - தெய்வப்புலவர் வள்ளுவர்

மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே;

எங்கு அன்பு இருக்கிறதோ,அங்கு தான் பயனுள்ள வாழ்க்கை இருக்க முடியும்...படித்ததில் பிடித்தது 
ஒண்ணா இருக்க கத்துக்கணும் இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்தைப் பாருங்கஅதுக்கு கத்துக் கொடுத்தது யாருங்க -கவிஞர் வாலி

உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான செல்வம் இங்கேயே உள்ளது ஆனால் ஒரு தனி மனிதனின் பேராசைக்கு முன்னால்தான் அது போதாது'' -காந்தி

துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம்! குணம்! அது கோவிலாகலாம்

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

என்னைப் பொருத்த மட்டில ஓரே ஒரு ் ஒழுக்கம் தான் உள்ளது 
அது நீங்கள் உங்களை அறிந்து கொள்வது . - ஓஷோ

உழைக்குற நோக்கம் உறுதியாயிட்டா, கெடுக்குற நோக்கம் வளராது

ஊக்கமது கைவிடேல், எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.

பகுத்தறிவு பிறந்தததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே
உரிமைகளைப் பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதினாலே

வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பல கல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.-முண்டாசுக் கவிஞன்

நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா
வேர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமா

மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை.
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை. - கண்ணதாசன்

நாடென்ன செய்தது ந‌ம‌க்கு என கேள்விகள் கேட்பது எதற்கு
நீயென்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு

எந்த ஒருப் பொருளையும் இழக்கும் வரை அதன் அருமை நமக்கு தெரியாது" -ஆத்தங்கரையோரம் நாவலில் - திரு. வெ. இறையன்பு அவர்கள்

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம்
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்
மனமது செம்மையானால் மந்திரம் செம்மை யாமே"

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் ..!! வரிகள்…

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் இறுதி வரிகள்…
நான் வணிக உலகில்........
வெற்றியின் உச்சத்தைஅடைந்திருக்கிறேன்.பிறரின் பார்வையில் என்வாழ்க்கை வெற்றிகரமானது.எப்படியிருந்தாலும் என் பணிச்சுமைகள் எல்லாம் தாண்டி நானும் வாழ்க்கையில் சிறிது சந்தோசங்களை
அனுபவித்திருக்கிறேன்.

பணமும் வசதிகளும் மட்டுமேவாழ்க்கையில்லை என்பதை
இறுதியில் தான் அறிந்து கொண்டேன்.
இதோ இந்த மரணத்தருவாயில், நோய் படுக்கையில் படுத்து கொண்டு என் முழு வாழ்க்கையையும் திரும்பிபார்க்கும் இந்த தருணத்தில் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த அங்கீகாரங்கள், பணம் , புகழ் எல்லாம் செல்லா காசாக , அர்தமற்றதாக மரணத்தின் முன் தோற்று போய் நிற்பதை உணர்கிறேன்.

இந்த இருளில் என் உயிரை தக்கவைக்க போராடிக் கொண்டிருக்கும் மருத்துவ இயந்திரங்களின் மெல்லியசத்தங்கள் மட்டுமே காதுகளில்ரீங்கரிக்கிறது. கடவுளின் மூச்சுக்காற்றையும் மரணத்தையும் மிக அருகில் உணர்கிறேன்.

வாழ்க்கையில் நாம் வாழ்வதற்குபோதுமான பணம் சம்பாரித்த
பின், பணத்திற்குசம்மந்தமில்லாத விஷயங்களையும் சம்பாரிக்க தொடங்க வேண்டும் என்பதுஇப்போது புரிகிறது. அது உறவாகவோ, இல்லை எதாவது கலை வடிவமாகமாவோ , நம் இளமையின் கனவாகவோஇருக்கலாம். அது தான் வாழ்வில் மிக முக்கியமானது.
அதைவிட்டு பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு ஓடும்
மனிதனின் வாழ்க்கை முற்றிலும் வேறு திசையில் திரும்பிவிடுகிறது என் வாழ்க்கையை போல. கடவுள் நம் புலன்களின் மூலம் அனைவரின் மனதில் இருக்கும் அன்பை உணரசெய்யும் சக்தியை கொடுத்திருக்கிறார், பணத்தால்
நாம் உண்டாக்கியிருக்கும் எல்லா சந்தோசங்களும் வெறும் பிரமைகள் தான்.

நான் சம்பாரித்த பணம் எதையும் இங்கு கொண்டுவர முடியாது.
நான் மகிழ்ந்திருந்த என் நினைவுகள் மட்டுமே இப்போது என்னுடன் இருக்கிறது.
அன்பும் காதலும் பல மைல்கள் உங்களுடன் பயணிக்கும். வாழ்க்கைக்கு எந்த எல்லைகளுமில்லை. எங்கு செல்ல ஆசைப்படுகிறீர்களோ அங்கு செல்லுங்கள். தொட நினைக்கும் உயரத்தை தொட முயற்சியுங்கள்.நீங்கள் வெற்றியடைவது உங்கள் எண்ணத்திலும் கைகளிலும் தான் உள்ளது.

உங்கள் பணத்தை வைத்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம்,
ஆனால் அந்த பணத்தின் மூலம் உங்கள் வலியை, உங்கள் துயரை யாரும்
வாங்கிகொள்ளுமாறு செய்ய முடியாது. பணத்தின் மூலம் வாங்கும் பொருட்கள் தொலைந்துவிட்டால் மீண்டும் வாங்கிவிடலாம்.
ஆனால் நீங்கள் தொலைத்து அதை பணத்தால் வாங்க முடியாது என்ற ஒன்று உண்டென்றால் அது உங்கள் வாழ்க்கை தான்.

வாழ்க்கையில் எந்த கட்டத்தில் நீங்கள் இருந்தாலும்
பரவாயில்லை , இப்போது வாழ்க்கையை வாழஆரம்பியுங்கள்.
நாம் நடித்து கொண்டிருக்கும் வாழ்க்கை எனும் நாடகத்தின் திரை எப்போது வேண்டுமானாலும் இறக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் குடும்பத்தினருக்கு, மனைவிக்கு, நண்பர்களுக்கு,அன்பை வாரி வழங்குங்கள். உங்களை நீங்கள் சந்தோசமாக வைத்து கொள்ளுங்கள்.
அனைவரையும் மனமார நேசியுங்கள்.
மரணப்படுக்கையில் ஸ்டீவ்..!!

விவேகானந்தரின் சிந்தனை துளிகள்...

தெய்­வ­நி­லைக்கு உய­ருங்­கள்
* மற்­ற­வர்­க­ளுக்கு நன்மை ஏற்­ப­டு­மா­னால் நர­கத்­திற்­குக் கூட செல்­வ­தற்­குத் தயா­ராய் இருங்­கள். மர­ணம் வரு­வது உறு­தி­யாக இருக்­கும்­போது ஒரு நல்ல காரி­யத்­திற்­காக உயிரை விடு­வது மேல்.
* உல­கில் நல்­ல­வர்­கள் பெரிய தியா­கங்­க­ளைச் செய்­கி­றார்­கள். அதன் விளை­வாக வரும் நன்­மை­களை மனி­த­கு­லம் முழு­வ­தும் அனு­ப­விக்­கி­றது.
* உல­க­வாழ்­வில் இருந்து தப்பி ஓட முயற்சி செய்ய வேண்­டாம். வெற்­றியோ தோல்­வியோ போரா­டுங்­கள்.
* பாம­ரன் பண்­புள்­ள­வ­னா­க­வும், பண்­புள்­ள­வன் தெய்­வ­மா­க­வும் உய­ர­வேண்­டும். இதுவே ஆன்­மி­கத்­தின் பயன்.
* தெய்­வீ­கத்­தன்மை இல்­லா­மல் பெறும் மித­மிஞ்­சிய அறி­வும், ஆற்­ற­லும் மனி­தர்­களை மிரு­கங்­க­ளாக்கி கீழ்­நி­லைக்­குத் தள்­ளி­வி­டும்.
* சுய­ந­லம், சுய­ந­ல­மின்மை இந்த இரண்­டை­யும் தவிர கட­வு­ளுக்­கும் சாத்­தா­னுக்­கும் வேறு­எந்­த­வி­த­மான வேறு­பா­டும் கிடை­யாது.
மின்­னல் வேக மாற்­றம்
* ஆன்­மிக வாழ்­வில் பேரின்­பம் கிடைக்­கா­மல் போனால் அதற்­கா­கப் புல­னின்ப வாழ்­வில் திருப்தி கொள்­ளக்­கூ­டாது. இது அமு­தம் கிடைக்­கா­விட்­டால்­சாக்­க­டை­நீரை நாடிச் செல்­வ­தற்கு சமம்.
* மாபெ­ரும் வீரனே! உறக்­கம் உனக்­குப் பொருந்­தாது. துணி­வு­டன் எழுந்து நில்.
* உன்னை நீயே பல­வீ­னன் என்று நினைப்­பது உனக்கு பொருந்­தாது. "நான் ஒரு வெற்றி வீரன்' என்று எப்­போ­தும் உனக்­குள்­ளேயே சொல்­லிக்­கொள். மின்­னல் வேகத்­தில் உனக்­குள் புதிய மாற்­றம் ஏற்­ப­டு­வ­தைக் காண்­பாய்.
* கீழ்த்­த­ர­மான தந்­திர முறை­க­ளால் இந்த உல­கத்­தில் மகத்­தான காரி­யம் எதை­யும் சாதித்­து­விட முடி­யாது.
* அதிர்ஷ்­ட­தே­வதை உனக்கு அருள்­பு­ரி­யட்­டும் அல்­லது புரி­யா­மல் போகட்­டும். ஆனால் நீ, உண்மை என்­னும் பாதை­யில் இருந்து அணு­வ­ள­வும் பிறழ்ந்து போகா­மல் இருப்­ப­தில் கவ­ன­மாக இரு.

க்ரியேட்டிவிட்டியை வளர்க்கும் எட்டு படிகள்!

க்ரியேட்டிவிட்டி என்பது நம் அனைவருக்கும் இயல்பாய் வருவதில்லை. க்ரியேட்டிவிட்டி என்பது புதுமையாக ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைவதாக இருந்தாலும், கூடவே கொஞ்சம் பயத்தையும் கொண்டுவரவே செய்கிறது.  ஏனென்றால், சிறுவயதிலிருந்தே நாம் எந்தவகையில் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கி்றோம் என்று கொஞ்சம் யோசியுங் கள். 'தம்பி தெரிந்த விஷயத்தைச் செய். சும்மா புதுசா எதையாவது செய்கி்றேன் என்று சொதப்பிவிடாதே. நாலுபேர் போற பாதையிலே போப்பா. தனிவழியெல்லாம் வேண்டாம்' என்றுதானே பழக்கப்படுத்தி வருகிறோம்.

வளரும் பருவத்தில்  இப்படி பழக்கப் படுத்திவிட்டு திடீரென ஒருநாள் க்ரியேட்டிவ்வாக இரு. எல்லோரும் போகும் பாதையில் போகாதே என்று சொன்னால் என்னவாகும்?

என்னடா இது. இவ்வளவுநாள் கூட்டம் போகும் பாதையில் போகச் சொன்னார்கள். இப்போது திடீரென சிங்கிளாகப் போகச் சொல்கிறார்கள் என்ற மலைப்பும் திகைப்பும் பயமும் தானே மிஞ்சும் என்று ஆரம்பத்திலேயே எகத்தாளம் பேசுகி்றார் 'ஜிக் ஜாக் – தி சர்ப்ரைஸிங் பாத் டு கிரேட்டர் க்ரியேட்டிவிட்டி' என்ற புத்தகத்தின் ஆசிரியர் கீத் சாயர்.

தனி மனித வாழ்வில், என் வேலை போரடிக்கிறது, என்ன பண்றதுன்னே புரியவில்லை என்கிறீர்களா? பிள்ளைகள், மனைவி போன்றவர்களுடன் சுமூகமான நிலை இல்லை என்கிறீர்களா? ஏன், நான் சம்பாதிப்பதைவிட அதிகமாகச் செலவழிக்கிறேன் என்கிறீர்களா? வேலை பார்க்கும் இடத்தில் அடுத்த விளம்பரத்துக்கான ஐடியா வரவே மாட்டேங்கிறது என்கிறீர்களா? என்கூட வேலை பார்க்கிற குரூப்பில் ஒன்றும் உருப்படியாய் நடப்பதேயில்லை; ஒருத்தனை ஒருத்தன் புரிஞ்சுக்கவே மாட்டேனென்கிறான் என்று புலம்புகிறீர்களா? உங்களுக்கெல்லாம் உதவக்கூடிய அளவில் எழுதப்பட்டுள்ளதுதான் இந்தப் புத்தகம்.

நம்மில் யாருமே இதெல்லாம் நமக்கு வருமா என்று க்ரியேட்டிவிட்டி குறித்து பயப்படத் தேவையில்லை. நாம் எல்லோருமே அதிர்ஷ்டக் காரர்கள். ஏனென்றால், இறைவன் அனைவருக்குமே இயல்பாக மூளையில் க்ரியேட்டிவிட்டிக்குத் தேவையான விஷயங்களை வைத்தே படைக்கிறான். சிலரால் அதைத் திட்டமிட்டு வெளிக்கொணர முடிகிறது. விரும்பினால் எல்லோராலும் அதை வெளிக்கொணர முடியும் என்றே சொல்லலாம்.

ஆனால், செங்கல் செங்கலாய் நீங்கள்தான் அந்த க்ரியேட்டிவ் கட்டடத்தை முயற்சி செய்து கட்டி முடிக்க வேண்டும் என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் கீத். இந்தப் பணிக்கான பயணத்தை எங்கே தொடங்குவது, எப்படி வழிநடத்துவது என்பதைச் சொல்லும் புத்தகம்தான் இது.

நீங்கள் நினைப்பதுபோல க்ரியேட்டிவிட்டி என்பது ஒரு திடீர் மின்னலைப்போல வந்து ஒளியைத் தருவதில்லை. சின்னச் சின்ன அடிகள், மிகச் சிறிய நுண்ணறிவுகள், கொஞ்சம் கொஞ்சமாய் நம்முள் நாம் செய்துகொள்ளும் மாறுதல்கள் போன்றவைதான் க்ரியேட்டிவிட்டிக்கு ஆணிவேராய் அமைகின்றன. இதைத்தான் ஆசிரியர் ஜிக் ஜாக் என்று சொல்கிறார். இந்த ஜிக் ஜாக்குகளைத் தொடந்து பிறழாமல் கடைப்பிடிப்பவர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் புதுப்புது ஐடியாக்கள் தோன்றும். சில சமயம் இந்த ஐடியாக்கள் தேவையான நேரத்தில் கரெக்ட்டாக வரவும் ஆரம்பித்துவிடும்.

க்ரியேட்டிவிட்டி என்ன பெரிய புடலங்காய்! என் வேலை ஒரு ரொட்டீனான வேலை. குழந்தைகளுக்கு புராஜெக்ட் செய்யும்போது கொஞ்சம் தேவைப்படுகிறது. இல்லை, ஆபீஸில் கடிஜோக் சொல்ல ரெடியாய் இருக்கும் ஒரு கூட்டத்தை மிரளவைக்க மட்டுமே எனக்குத் தேவைப்படுகிறது என்று சொல்லாதீர்கள்.

க்ரியேட்டிவிட்டி என்பது உங்களை வேலையில் சிறக்க வைக்கும். வெற்றிகரமான கேரியரை உருவாக்கும். வேலையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் வெற்றிபெற வைக்கும். உங்கள் பெர்சனா லிட்டி, ஸ்டைல், உலகத்தை நீங்கள் பார்க்கும் பார்வை, உங்களை உலகம் பார்க்கும் பார்வை என எல்லாவற்றையுமே மாற்றவைக்கும். குழந்தைகளை ஒரு ரொட்டீன் வாழ்க்கை வாழவைக்காமலும், கடுஞ்சொற்களைச் சொல்லாம லும், ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கினால் புது மொபைல் என்பது போன்ற லஞ்ச-லாவண்யத்தை உபயோகிக்காமல் வளர்க்க உதவும். நீங்கள் கற்றுக்கொள்வதை வெறுமனே மனதில் இருத்துதல் என்பது மட்டுமல்லாமல் அதை லாவகமாய் உபயோகப்படுத்தவும் உதவும். உங்களைத் தொடர்ந்து  நச்சரிக்கும் பிரச்னைகளுக்கு சூப்பரான தீர்வுகளைத் தரும். எப்போதுமே நல்ல மற்றும் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க வைக்கும். நல்ல சுவையான மற்றும் நாள்படத் தொடரக்கூடிய நட்புகளை வளர்க்கும். உங்களைச் சுற்றியிருக்கும் உலகத்தில் ஒரு நிஜமான மாற்றத்தைக் கொண்டு வர உதவும் என க்ரியேட்டிவிட்டி யின் பலனையும் பட்டியலிட்டுள் ளார் ஆசிரியர்.

எட்டு படி நிலைகளைச் சொல்லியுள்ள ஆசிரியர், அதை விரிவாக விளக்கவும் செய்துள்ளார். முதலாவதாக, கேளுங்கள் என்கிறார். பிரச்னை வருகிறதே என நினைக்காதீர்கள். பிரச்னை இருக்கிறதா? இல்லை என்றால், ஏன் வரவில்லை என எதிர்பார்க்க ஆரம்பியுங்கள். பிரச்னைகளைத் தேடிப் பிடிப்பதால் புதிய ஐடியாக்களுக்குப் பஞ்சமே இருக்காது. இப்படிப்பட்ட மனநிலையில் இருப்ப தால் எதிரே வருவதையெல்லாம் அசால்ட்டாய் சமாளித்துவிடுவீர்கள் என்கிறார்.

இரண்டாவதாக, க்ரியேட்டிவ்வாக வாழ நீங்கள் நிறையப் படிக்கவும்; கற்றுக்கொள்ளவும்; தெளிவுபடவும் வேண்டும். வகுப்புகள் மட்டும் என்றில்லாமல் மென்டர்கள், நிபுணர்கள், புத்தகங்கள், பத்திரிகைகள், நாளிதழ்கள், சினிமா போன்றவற்றில் இருந்தெல்லாம் நிறையவே கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.

மூன்றாவதாக, உங்கள் பார்வையை அனைத்திலும் செலுத் துங்கள். உங்களுக்குப் பிடித்ததை மட்டுமே பார்க்காமல் அனைத்திலும் உங்கள் பார்வையைப் பதியுங்கள். எல்லோரும் இதுதானே என நினைத்து அசிரத்தையாய் பார்க்கும் விஷயங்களையும் நீங்கள் உன்னிப்பாய்ப் பாருங்கள். புதிய அனுபவங்களைத் தரும் விஷயங்களைத் தேடி ஓடுங்கள். எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் புதிய இடம், ஊர், மனிதர், சூழல், தகவல் என எல்லாவற்றையும் தேடிக்கொண்டே இருங்கள்.

நான்காவதாக, கொஞ்சம் நிறையவே விளையாடுங்கள். ஏனென்றால், சிறுபிள்ளையைப் போன்ற விளையாட்டு என்பது உங்கள் மூளையை இலகுவாக்கி ஆழ்மனத்தைக் குதூகலிக்கச்செய்து க்ரியேட்டிவிட்டியை ஊக்குவிப்பதாய் இருக்கும்.

ஐந்தாவதாக, சிந்தனைச் செய்யுங்கள் என்கிறார். சிந்தனை என்பது மூளைக்குப் பயிற்சி. சிந்திப்பதால் ஆயிரக்கணக்கான ஐடியாக்கள் உங்கள் மூளையில் தோன்றும். அவற்றில் ஒரு சிலவே வெற்றி பெறுவதாய் இருக்கும். ஒரே ஒரு ஐடியா தோன்றி அதுவே வெற்றி பெறுவதாய் அமைவதேயில்லை என்பதாலேயே பல ஐடியாக்கள் தேவைப்படுகிறது.

ஆறாவதாக, தோன்றும் ஐடியாக்களை ஒன்றுடன் ஒன்று இணைத்துப் பாருங்கள். சில சமயம் ஜோடி சேரவே சேராது என்று நினைத்த பல ஐடியாக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து சூப்பராய்ச் செயல்பட்டிருக்கின்றன.

ஏழாவதாக, தேர்ந்தெடுக்கப் பழகிக் கொள்ளுங்கள். ஏனென்றால், க்ரியேட்டிவிட்டி என்பதே கொண்டா, கொண்டா என்று பல்வேறு ஐடியாக்களையும் பெற்றுக்கொண்டு, பின்னர் அதனை க்ரிட்டிக்கலாக ஆராய்ந்து இது தேறாது, இது லாயக்குப்படாது என்று திறம்படக் கழித்துக் கட்டுவதில்தான் இருக்கிறது.

எட்டாவதாக, உருவாக்கிப் பழகுங்கள். ஐடியாவை ஐடியாவாக வைத்துக்கொள்வது மட்டுமே போதாது. ஐடியாவைச் செயலாக்க வேண்டும். செயலாக்க முயலும்போதுதான் ஐடியாக்கள் இன்னமும் கூர்மைபடுத்தப்பட்டு,  பொலிவு பெறும். ஐடியா என்பது ஒரு டிராப்ட் தான். அதைத் தொழிலுக்கு ஏற்றாற்போல் வரைபடமாக வரைந்து, அதை நடைமுறைக்குக் கொண்டுவந்தால் மட்டுமே க்ரியேட்டிவிட்டி என்ற விஷயத்துக்கு அர்த்தம் கிடைக்கும்.

மேலே சொன்ன, எட்டு படி நிலைகளையும் பல உதாரணங்களுடன் சொல்லியிருக்கும் ஆசிரியர், க்ரியேட்டிவிட்டி என்ற விஷயத்தில் நாம் தவிர்க்க வேண்டிய இரண்டு பெரிய தவறுகளையும் நச்செனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒன்று, சிலசமயங்களில் அல்லது தேவையான சமயங்களில் மட்டுமே க்ரியேட்டிவ்வாக இருந்தால் போதுமானது என்று நாம் நினைத்துக்கொள்வது. இரண்டாவது, கையில் இருக்கும் பிரச்னைக்கு ஒரே ஒரு சரியான தீர்வுதான் இருக்கிறது என்று நினைத்துக்கொள்வது.

சின்னச் சின்ன பொறிகளைக் கண்டறிந்து அந்த வெளிச்சத்தில் மேலே சொன்ன எட்டு படிகளில் ஏறிச்சென்றால் க்ரியேட்டிவிட்டி தரும் வெற்றிக்கனியைச் சுவைக்கலாம் என்கிறார் ஆசிரியர். முதலாளி, தொழிலாளி, மேனேஜர், உதவியாளார் என்ற பாகுபாடு ஏதுமில்லாமல் அனைவருமே படிக்கவேண்டிய புத்தகம் இது எனலாம்.