Monday, July 27, 2015

இந்து மதத்தில் புதைந்துள்ள‍ எவரும் அறியா அரிய ரகசியம்!

இந்து மதத்தில் புதைந்துள்ள‍ எவரும் அறியா அரிய ரகசியம்!

நமது முன்னோர்கள் இந்த அரிய ரகசியங்களைக்கண்டுபிடித்து அவற்றை யந்திரங்களாக மாற்றி வழிபட வழி வகுத்தனர். ஸ்ரீ சக்ர யந்திரம் என்பது பிரபஞ்ச தத்துவத்தையும் ரகசியத்தையும் சிறு யந்திரத்தில் அடக்கிக் காண்பிக் கப்பட்ட வழியே என்றும் அதிக ஆற்றலைக் கொண்ட இந்த யந்திரத்தை இப்போது ‘டீ- கோட்’ செய்ய விஞ்ஞானிகள் முயல்கின்றனர் என்பதும் சுவையான செய்தி அல்லவா! நான்காம் தலைமுறை கணினி கூட ஸ்ரீயந்திரத்தின் சிக்கலான அமைப்பைக் கண்டு பிடிக்க முடிய வில்லை இதுவரை!

பெயரில் உள்ள எழுத்துக்களுக்கும் எண்களுக்கும் உள்ள தொடர்பை முத லில் பிதகோரஸ் கூறினார் என நம்புகின்றனர். ஆனால் வடமொழியில் உள்ள ‘கடபயாதி சங்க்யா’ என்ற முறை எதையும் கணித சூத்திரத்தில் அடக்கிவிடும் ஒரு வழி முறையாகத் தொன்றுதொட்டு நம் நாட்டில் இரு ந்து வரு கிறது. பெயரில் உள்ள எழுத்துக்களுக்கும் எண்களுக்கும் உள்ள தொடர்பை -இந்த கடபயாதி வழிமுறை உள்ளிட்ட விஷயங்களை–பல சம்ஸ்கிருத நூல்கள் விளக்குகின்றன!

எடுத்துக்காட்டாக ஆதிசங்கரரின் பெயரிலேயே அவர் பிறப்பு பற்றிய அனைத்து விவரங்களும் அமைந்துள்ளன. சம்-க-ர என்பதற்கு உரிய எண்களாக 5-1-2 ஆகியவை அமை கின்றன. கடபயாதி முறைப்படி இந்த எண்களைத் தலைகீழாகத் திருப்பிப்போட்டு விவரங்களை அறிய வேண்டும். அதன்படி இந்தஎண்கள் 2-1-5 என்ற வரிசை யில் மாற்றி அமைத்துப்பார்த்தால் 2 என்பது அவர் பிறந்த மாதமான வைகாசி மாதத்தையும் ஒன்று முதல் பக்ஷமான வளர்பிறையையும் ஐந்து என்பது அவர் பிறந்த திதியான பஞ்சமியையும் குறிக்கும். வைகாசி மாதம் சுக்ல பட்சம் பஞ்சமியில் சங்கரர் அவதரித்தார் என இதன்மூலம் அறிய முடிகிறது.

மஹாபாரதத்தின் உண்மைப் பெயரான ஜய என்பதை 8-1 என்ற எண்கள் குறிக்கின்றன. இதை கடபயாதி முறைப்படி திருப்பிப் போ ட்டால் வருவது 18. ஆகவே பதினெட்டுப் பர்வங்களைக் கொண்ட இந்நூலில் 18 என்ற எண் முக்கியத்துவத்தைக் கொண்ட தாக அமைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகி றது. இவை எளிய உதாரணங்கள். ஆனால் சிக்கலான பல மர்மங்களை இந்த முறைப்படி சம்ஸ்கிருத நூல்களில் மறைத்து வைத்துள்ளனர். இதை ஆராய்வோர் பிரமித்து மலைக்கின்றனர்.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து மர்மங்களையும் ஆராய்ந்து பார்த்து விட்டு, “எல்லாமே எண்கள் தான்” என்ற பிரபலமான தத்துவத்தைச் சொன் னார் பேரறிஞர் பிதகோரஸ். ஆனால் இதையே தொலைக்காட்சி, ரயில், கார் போன்ற நவீன வசதிகள் இல்லாத தமிழக குக்கி ராமத்தைச் சேர்ந்த சாதாரண பாமரன் ஒருவன் “எல்லாம் ஒரு கணக்குத் தான்” என்று சர்வ சாதாரணமாகச் சொல்லும் போது பிரபஞ்சம் பற்றிய பேரறிவை அவனது அனுபவபூர்வமான வார்த் தைகளில் கண்டு பிரமிக்க வேண்டி இருக்கிறது! ஆராய்ந்து பார்த்தால் எல்லாமே எண்கள் தான்!!

இந்தியாவை பார்த்து உலகமே ஆச்சரியப்படும் சில‌ அரிய தகவல்கள்..!!

இந்தியாவைக் கண்டு உலகே ஆச்சரியப்படும் அரிய தகவல்கள்..!!
மாம்பழங்கள்

1000 வகை மாம்பழங்கள் சுவை, நிறம், வடிவம் என இந்தியாவில்

1000வகையான மாம்பழவகைகள் இருக்கின்றன. வேறு எந்த ஒரு கனியும் இவ்வளவு வகைகளில் கிடை ப்பதும் இல்லை. விளைவிக்கப்படுவதும் இல்லை.

கால நிலைகள்

6 கால நிலைகள் கோடை பருவ மழை, கோடை காலம், குளிர் பருவ மழை, குளிர் காலம், இலையுதிர் மற்றும் வசந்த காலம் என்று ஆறு கால நிலைகள் இந்தியாவில் நிலவுகி ன்றன.

அதிக மசூதிகள் கொண்ட இந்துக்கள் நாடு

இந்துக்கள் நாடு எனும் போதிலும் கூட, உலகிலேயே அதிக மசூதிகள் கொண்ட நாடு இந்தியா தான். உலகெங்கிலும் 4 லட்சம் மசூதிகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது

சோம்நாத் கோவில்

சோம்நாத் கோவிலுக்கும் தென் துருவத்திற்கும் இடை யே எந்த நிலப் பரப்பும் கிடையாது.

உலகின் முதல் பல்கலைகழகம்

பீகாரில் இருக்கும் தக்ஷில்லா பல்கலை கழகம் தான் உலகின் பழமையான மற்றும் முதல் பல்கலைகழகம். இந்த பல்கலைகழகத்தில் 10,000க்கும் மேற்பட்ட மாண வர்களுக்கு 60வது பாடப்பிரிவுகள் கற்பிக்கப்பட்டுள்ள து.

உலகிலேயே நீளமான இராமேஸ்வரம் கோவில் நடைப்பாதை

இராமேஸ்வரம்கோவிலில் உள்ள நடைபாதை தான் உலகிலேயே நீளமான கோவில் நடைபாதை ஆகும். 4000 அடி நீளம் கொண்ட இந்த நடை பாதையின் இருப்புரங்களிலும் 985 தூண்கள் இருக்கின்றன. முதல் கண் அறுவைசிகிச்சை கண் மாற்று அறுவை சிகிச்சை செய்த முதல் நாடு என்ற பெருமை இந்தியாவையே சேரும்.

அரபிக் எண்கள்

அரபிக் எண்கள், அரபிக் என்று பெயர் இருந்தாலும், அரபிக் எண்களைக் கண்டுப்பிடித்தவர்கள் இந்தியர்கள் தான். மருத்துவம் மற்றும் அறுவைசிகிச்சையின் தந்தையர்கள் இந்தியர்கள்மருத்துவத்தின் தந்தை 2500ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆயுர்வேதாதான் முதல் மருத்துவ முறையாகும். சுஷ்ருதா, இவர் 2600 வருடங்களுக்கு முன்பே அறுவைசிகிச்சை செய்துள்ளார். அதனால், மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றின் தந்தைகள் இந்தியர்கள் தான்.

உலகின் பணக்கார கோவில்

உலகின்பணக்காரகோவில் எனும்பெருமை பத்மனா ப சுவாமி கோவிலையே சேரும். சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கண்டெடுக்கப்பட்ட லட்சம் கோடிகளை தாண்டும் அரிய புதையலே இதற்கு காரணம்.

உலகின் பெரிய தபால் துறை

இந்தியாவில் மொத்தம் 1,50,000அஞ்சல் அலுவல கங்கள் இருக்கின்றன. உலகிலேயே பெரிய அஞ்சல் துறை இந்தியாவுடையது தான்.

வைரத்தை கண்டுபிடித்த‍வர்கள் இந்தியர்கள்

வைரத்தை கண்டுப்பிடித்தவர்கள் 1896 ஆம் ஆண்டு வரை வைரம் இருக்கும் ஒரே நாடாக அறியப்பட்டது இந்தியாதான். மற்றும் வைரத்தை முதல் முதலில் கண்டுபிடித்தவர்களும் இந்தியர்கள் தான்.

பொறியியல் (Engineering) படிப்பே வேண்டாம்! – மாணவர்கள் ஒதுங்க‌ காரணம்என்ன‍?- ஓர் ஆழமான அலசல்!

பொறியியல் (Engineering) படிப்பே வேண்டாம்! – மாணவர்கள் ஒதுங்க‌  காரணம்என்ன‍?- ஓர் ஆழமான அலசல்!

இந்தியாவிலேயே அதிகமான பொறியியல் கல்லூரிகளைக் கொண்டிருப் பதும் அதிக அளவில் பொறியியலாளர்களை உருவாக்கிக் கொண்டிருப் பதும் தமிழ்நாடுதான். எப்படியாவது தங்கள் வாரிசுகள் பி.இ. படித்து ஒரு நல்ல வேலையில் சேரவேண்டும் என்பது பல தமிழ்க் குடும்பங்களின் கனவு. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிவரும் புள்ளி விவரங் கள் தரும் தகவல்கள் பி.இ. படித்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் இல்லையோ என்ற அச்சத்தை எழுப்புகிறது.

கடந்த சில ஆண்டுகளைவிட இந்தாண்டில் +2வில் பெரும்பாலான மாணவர்கள் சிறந்த மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றனர். பள்ளிகள் பெருமிதத்திலும் பெற் றோர்களும் சந்தோஷத்தில் பத்திரிகைகளுக்குப் பேட்டிகள் கொடுத்த னர். தமிழகமே பெருமைப்பட்டது.

ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புக்கு வந்திருக் கும் விண்ணப்பங்கள் பெருமளவில் குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டை விட இருபது சதவிகிதம் குறைவு. 2014ஆம் ஆண்டே அதற்கு முந்தைய ஆண்டைவிட பத்து சதவிகிதம் குறைந்திருந் தது. கடந்தாண்டு விற்பனையான விண்ணப்ப ங்கள் 2லட்சத்து 12ஆயிரம். மனுச்செய்தவர்க ள் 1 லட்சத்து 70 ஆயிரம். நிரப்பப்படாமல் இருந்த காலியிடங்கள் 1 லட்சம். இந்த ஆண்டு (2015) விண்ணப்பங்கள் விற்பனை 1 லட்சத்து 90 ஆயிர மாகக் குறைந்தது. மனுச் செய்தி ருப்பவர்கள் 1 லட்சத்து 45 ஆயிரம் மட்டு மே. மனுச்செய்தவர்களில் பலர் கலந்தாய்வில் பங்கேற்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கலந்தாய்வுக்குப் பின் காலியாக இருக்கப் போகும் இன்ஜினியரிங் சீட்டுகள் 1 லட்சத்து 20 ஆயிரமாக இருக்கலாம் என்பது நிபுணர்களின் கணிப்பு.

பல கோடி ரூபாய் முதலீடு செய்து கல்லூரி வளாகங்களைப் பிரம்மாண்ட மாக உருவாக்கி பல லட்சங்களில் நன்கொடை பெற்று சீட்டுகளை ஒதுக்கிய கல்லூரிகள் இன்று அரசு நிர்ணயித்திருக்கும் கட்டணத்திலேயே மாண வர்களைச் சேர்க்கத் தயாராகக் காத்திருக்கின்றன. ஆனால், மாணவர்கள் சேருவதில்லை

ஏன் இந்த நிலைமை?

நல்ல மதிப்பெண்கள் இருந்து, கலந்தாய்வில் அரசுகோட்டாவில் இடம் கிடைத்தாலும், மாணவர்கள் கணிப்பில் அந்தக் கல்லூரி, நல்ல கல்லூரி இல்லையென்றால் அதில் சேர விரும்புவதில்லை. பொறியியல் கல்வியி ல் உயர்ந்த தரம், கேம்பஸ் தேர்வில் பங்கேற்கவரும் நல்லநிறுவனங்கள் போன்றவற்றினால் மட்டுமே ஒரு பொறியியல் கல்லூரியின் தரம் நிர்ணயிக்கப் படுகிறது.

அதனால்தான் நல்ல மதிப்பெண் பெற்றுள்ள மாணவ ர்கள் கூட, நன்  கொடை கொடுத்து நிர்வாக கோட்டா வில் குறிப்பிட்ட சில கல்லூரிகளில் சேர விரும்புகின் றனர். படிப்புக்குப் பின் நல்ல வேலை என்பதை குறிக்கோளாகக் கொண் டிருக்கும் மாணவர்கள் தங்களின் கட்-ஆஃப் மார்க்கு க்கு கலந்தாய்வில் முதல் தரமான கல்லூரிகளில் அரசுகோட்டாவில் இடம் கிடைக்காது என்பதை கணித்தபின் கலந்தாய்வில் பங்கேற்பது அவசியமில்லை என விட்டு விடுகின்றனர்.
அதாவது எப்படியாவது பி.இ. படித்தாக வேண்டும் என்ற நிலையிலிருந்து நல்ல தரமான கல்விக்கும் வேலைக்கும் வாய்ப்புள்ள கல்லூரியில் இடம் கிடைக்காவிட்டால் பொறியியல் படிப்பே வேண் டாம் என மாணவர்கள் ஒதுங்க ஆரம்பித்திருக்கி றார்கள்.
தமிழகத்தில் 552 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர்களின் தகுதி, உள்கட்டுமானம், இதர வசதிகள் போன்றவற்றின் அடிப்படையில் தரப்பட்டியலும் இடப்பட்டிருக்கிறது. ஆனால், மாணவர்கள் இதைத் தவிர பல்வேறு அளவுகோல்களை அடிப் படையாகக் கொண்டு ஒரு பட்டியலை வைத்திருக்கிறார்கள். அதில் முதலிடத்தில் இருப்பவை 30 கல்லூரிகளே. இதற்கு அடுத்த கட்டமாக இரண்டாம் நிலையில் 15 கல்லூரிகள். இவற்றில் சேரத்தான் மாணவ ர்கள் விரும்புகிறார்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளில் அக்கல்லூரிகளில் படித்தவர்களுக்குக் கிடைத்த வேலைவாய்ப்பை வைத்து இப்பட்டியலை உருவாக்கி இருக்கி றார்கள். அதிகாரபூர்வமாக இல்லாவிட்டாலும் சமூக, நட்பு ஊடகங்கள் வழியாக இந்தப் பட்டியல் பகிரப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழக த்தின் கல்விச்சூழலில் ஏற்பட்டிரு க்கும் மற்றொரு மாற்றம் அகில இந்திய அளவில் நடைபெறும் பொறியி யல் கல்வி நுழைவுத்தேர்வுகளில் தமிழக மாணவர்கள் முந்தைய ஆண்டுகளைப்போல பெருமளவில் பிரகாசிக்க வில்லை என்பது தான். பிளஸ் டூவுக்குப்பின், தமிழகத்துக்கு வெளியே அகில இந்திய அளவில் பொறியியல் படிக்க வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள பல நுழைவுத் தேர்வு கள் இருக்கின்றன. அதில் அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் படிக்க JEE என்ற நுழைவுத்தேர்வு மிக முக்கியமானது. 13 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற இந்தத் தேர்வில் தேறிய 1.5 லட்சம்பேர் மட்டுமே அடுத் த கட்டத்துக்கு முன்னேறியிரு க்கிறார்கள்.  

இத் தேர்வில் தேர்வுபெற்ற தமிழக மாணவர்க ளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்துகொண்டே வருகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தில் தேர்வுபெற்ற மாணவர்கள் 4000 மட்டுமே. ஆந்திரத்தில் 32 ஆயிரம், கர்நாடகத்தில் இதைவிட அதிகம்.

தமிழ்நாட்டில் ஐந்துவிதமான சிலபஸ்கள் இருக்கின்றன. அண்ணா பல் கலைக்கழகத்துடன் இணைந்தது, தன்னாட்சிப் பெற்றவை, அரசின் கட்டு ப்பாட்டில் இயங்கும் தன்னாட்சிப் பெற்றவை, தனியார் சுயநிதிக் கல்லூரிகள் என பலவகைக் கல்லூரிகள் வெவ்வேறு சிலபஸ்களுடன் இயங் குகின்றன. இதனால் தரம் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்பில்லை. இந்த வேறுபாடுகளைக் களைய மத்திய அரசின் கல்வித்துறை முயற்சிகள் எடுத்து NPTEL (National Programme on Technology Enhanced learning) என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறது. ஆனால் பல கல்லூரிகள் அந்தத் திட்டத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. இன்னும் சொல்லப் போனால் பல கல்லூரிகளுக்கு இந்தத் திட் டம் பற்றித் தெரியுமா என்பதே சந்தேகமாயிருக்கிறது.  

மேலும் பல கல்லூரிகளில் திறமையான ஆசிரி யர்கள் இல்லை. வேறு வேலை கிடைக்காத தால் ஆசிரியரானவர்களே அதிகம். இவர்கள் பள்ளிகளில் இறுதித்தேர்வுக்கு மாணவர்களை த் தயாரிப்பது போலவே கல்லூரியிலும் செய்கி றார்கள். அதனால் நமது மாணவர்கள் தேர்வுக ளில் பாசானாலும் நிறுவனம் எதிர்நோக்கும் திறன்கள் இல்லாமல், வேலை கிடைக்காமல் இருக்கி றார்கள். அதைப் பார்க்கும் கிராமப்புற இளைஞர்கள் பி.இ.யைப் படிக்கத் தயங்குகிறார்கள்.”

தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகள் 552.
ஆண்டுக்கு சராசரியாக வெளிவரும் பொறியாளர்கள் 1.7 லட்சம்.
காம்ப்ஸ் இண்டர்வியூவில் வேலை பெறுபவர்கள் 32 ஆயிரம் பேர்கள்.
வேலையில்லாமல் காத்திருப்போர் 68 ஆயிரம் பேர்கள்.

துரத்திக்கொண்டே இருப்பவனுக்கு சாந்தி எப்படி வரும்? – மஹா பெரியவா

துரத்திக்கொண்டே இருப்பவனுக்கு சாந்தி எப்படி வரும்? – மஹா பெரியவா

மனுஷ்யனாகப் பிறந்த ஒவ்வொருத்தனும் ஓயாமல் அலைச்சலான அலைச்சல் அலைந்து கொண்டிருக்கிறானே, எதற்காக?ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்குத்தான். வெளியிலிருக்கிற வஸ்துக்களிடம் இவனுக்கு ஆசை. அவற்றைப் பெறவே அலைகிறான். ஒன்று கிடைத்து விட்டா லும் போதவில்லை. அதனால் வருகிற சுகம் தீர்ந்து போகிறது. இன்னொன்றுக்கு ஆசைப்படுகி றான். அதைத் தேடி ஓடுகிறான். இவனுக்கு சாந்தி என்பதே ஒரு நாளும் இல்லாமலிருக்கிறது.

வெளியில் இருக்கிற வஸ்து வந்தால்தான் சந்தோஷம், ஆனந்தம் என்று துரத்திக்கொண்டே இருப்பவனுக்கு சாந்தி எப்படி வரும்? வெளியில் இருப்பது நம் வசத்தில் இருப்ப தல்ல. அது வந்தாலும் வரும், போனாலும் போகு ம். அதை நம் வசப்படுத்திக் கொண்டதாக நினைத்தபோதே கை விட்டுப் போகக்கூடும். நமக்கு அன்னியமான வெளி விஷயங்களிலிருந்து ஆனந்த த்தைச் சாசுவதமாகச் சம்பாதித்துக் கொள்வது நடக்காத காரியம். அது சாந்தியைக் கெடுக்கிற பிரயத்தனம்தான்.

மநுஷ்யன் புறத்தில் ஆனந்தத்தைத் தேடிக் கொண்டு போவதற்குக் காரணம், அவன் உள்ளுக்குள்தானே ஆனந்த ஸ்வரூபமாக இருப்பது தான். இவன் உள்ளூர ஆனந்த ஸ்வரூபமாய் இருப்பதாலேயே ஆனந்தத்தை எப்போது பார்த்தாலும் தேடிக்கொண் டு இருக்கிறான். மாயையால், தானே ஆனந்த ஸ்வரூபம் என்பதை மறந்து விட்டிருக்கிறான். இருந்தாலும் இவனுடைய ஸ்வபாவமே ஆனந்தமான படி யால் இவனுக்கு ஆனந்தம் அடைய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறது.

மனுஷ்யர்களில் எவராவது ஆனந்தத்தைத் தேடாமல் துக்கத்தைத்தேடிப்போகிறவர்கள் உண்டா? ஆனாலும், அந்த ஆனந்தம் உள்ளே இருப்பதை அறிந்து சாந்தத்தில் அதை அனுபவிக்காமல், வெளியே ஆனந்தத்தைத் தேடித் துரத்திக் கொண்டே போய் சாந்தியை ஓயாமல் கெடுத்துக் கொள்கிறார்கள். தன் நிஜ ஸ்வரூபம் என்ன என்று ஒருவன் அம்பாளின் கிருபையால் பிரார்த்தித்து ஆத்ம விசாரம், தியானம் செய்து பார்த்தால், தானே பூரண ஆனந்த வஸ்து என்று தெரிந்து கொள்வான்.

Wednesday, July 22, 2015

முதலீட்டில் நஷ்டத்தைத் தவிர்க்கும் 10 குணாதிசயங்கள்!

முதலீட்டில் நஷ்டத்தைத் தவிர்க்கும் 10 குணாதிசயங்கள்!

1 தெளிவான முதலீட்டு நோக்கம்!

முதலீட்டாளர்கள் நஷ்டத்தைத் தவிர்க்க கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை விதி, முதலீட்டுக்கு தெளிவான நோக்கம் அவசியம். உதாரணத்துக்கு, மகனின் படிப்புக்காகத் தேவைப்படும் பணத்தை  பங்குச் சந்தையிலோ அல்லது அது சார்ந்த திட்டங் களிலோ முதலீடு செய்வாராயின், அவருக்கு அதிர்ஷ்டம் கைகொடுத்தாலொழிய நஷ்டம் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதேபோல், அடுத்த ஐந்தாண்டுக்குத் தேவையில்லாத பணத்தை வங்கிகளில் முடக்கி னால், அதுவும் ஒருவித நஷ்டம் தான்.

முதலீடு செய்வதற்குப் பல வழிகள் இருந்தாலும், நமது நோக்கத்தின் அடிப்படை யிலேயே முதலீடு செய்தால், நஷ்டத்தைத் தவிர்த்து லாபம் சம்பாதிக்கலாம். முதலீடு சில மாதங்களுக்கு என்றால் வங்கியிலோ குறுகிய கால மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலோ முதலீடு செய்யலாம். ஓரிரு ஆண்டுகளுக்கு என்றால் வங்கி டெபாசிட் மற்றும் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.  மூன்றாண் டுக்கு மேல் என்றால் பங்குகளிலோ அல்லது பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலோ முதலீடு செய்யலாம். ஆனால், அடிப்படை விதி, முதலீட்டு நோக்கம்தான்.

2 தெரிந்ததில் முதலீடு செய்தல்!

முதலீட்டில் நஷ்டத்தைத் தவிர்க்க ஒரு முக்கிய விதி, நமக்குத் தெரிந்ததில் முதலீடு செய்வது அவசியம். உலகின் தலைசிறந்த முதலீட்டாளரான வாரன் பஃபெட் நவீன தொழில் நுட்பம், இ-காமர்ஸ் போன்ற துறைகளில் என்றுமே முதலீடு செய்தது இல்லை. செய்வதும் இல்லை. ஏன் என்று கேட்டதற்கு, எனக்கு அந்தத் துறைகளின் வியாபாரப் போக்கை புரிந்து கொள்ள முடிவதில்லை என்றார்.

எல்லோருக்கும் எல்லா முதலீட்டு வழிகளைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும் என்பது இல்லை. ஒருவருக்குத் தெரிந்து கொள்ளக்கூடிய, புரிந்து கொள்ளக்கூடிய முதலீட்டு வழி களில் முதலீடு செய்தாலே நஷ்டத்தைத் தவிர்க்கலாம். அதிலும் குறிப்பாக, ரிஸ்க் அதிகமாக இருக்கும் முதலீடுகளில் அதைப் பற்றிய புரிதல் இல்லாமல் முதலீடு செய்வதால்தான் நஷ்டம் ஏற்படுகிறது.

3 சுயபலம் / பலவீனம் அறிந்து முதலீடு!

முதலீடு என்பது பணம் மட்டும் சார்ந்த விஷயம் அல்ல. அது மனமும் சார்ந்த விஷயம்என்பதுதான் அடிப்படை. அதனால் முதலீடு செய்யும்போது நமது பலம், பலவீனத்தைக் கருத்தில்கொண்டு முதலீடு செய்தால் நஷ்டத்தைத் தவிர்க்கலாம்.

பல முதலீட்டாளர்களின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிப் பது மனம்தானே தவிர, பணம் அல்ல. ஒருவரது வயது, முதலீடு, முதலீட்டுக் காலம், ரிஸ்க் எடுக்கும் திறன் போன்ற அடிப்படை விஷயங்கள்தான் பலம், பலவீனத்தைத் தீர்மானிக்கும்.

உதாரணத்துக்கு, ஒருவர் தனது முப்பதாவது வயதில் முதலீடு செய்யத் துவங்குகிறார். மற்றொருவர் 45-வது வயதில் துவங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். முதலாமவருக்கு வயதும், முதலீட்டுக் காலமும் பெரிய பலம். இரண்டாமவருக்கு அவை இரண்டும் பலவீனம்.

இருவரும் வெவ்வேறு யுக்திகளைக் கையாள வேண்டும். சுயப்பலம் / பலவீனம் அறிந்தால் முதலீட்டில் நஷ்டம் தவிர்க்க உதவியாக இருக்கும்.

4 துறை நிபுணர்களிடம் நம்பிக்கை வைத்தல்..!

முதலீட்டாளர்கள் அனைவரும் எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. வாரன் பஃபெட் முதலீட்டை தன் முழுநேர பணியாகச் செய்வதால், அவருக்குப் பல விஷயங்கள் தெரிகிறது. பல முதலீட்டாளர் களுக்கு அது பொருந்தாது. ஆகவே, முதலீட்டாளர்கள் அவர்களாகவே நேரத்தை செலவு செய்து, விஷயங்களைத் தெரிந்துகொண்டு முதலீடு செய்வது என்பது கடினமான வேலைதான்.

அதற்குத்தான் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற துறை சார்ந்த நிபுணர்கள் உள்ளார்கள். நமது முதலீட்டுத் தேவைக்கேற்ப சரியான முதலீட்டு வழிமுறைகளைத் தேர்வு செய்து முதலீடு செய்து வந்தால் நஷ்டத்தைத் தவிர்த்து லாபம் சம்பாதிக்கலாம்.

5 பரந்துபட்ட முதலீடு!

டைவர்ஸிஃபிகேஷன் என்று வழங்கப்படுகிற பரந்துபட்ட முதலீட்டுக் கொள்கை ஓர் அடிப்படை முதலீட்டு விதியா கும். ஒருவர் தனது முதலீட்டை ஓரிரு மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்யாமல் பரந்துபட்ட விதத்தில் செய்தால் முதலீட்டில் நஷ்டம் தவிர்க்க முடியும். ஏனென்றால், ஒருவர் இரண்டு ஃபண்டுகளில் முதலீடு செய்வதைக்காட்டிலும் ஐந்து முதல் எட்டு ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்யும்போது ஓரிரு ஃபண்டுகள் சரியான முறையில் வருமானம் தரவில்லை என்றாலும், மீதமுள்ள ஃபண்டு கள் கைகொடுக்கும். பரந்துபட்ட முதலீட்டு அணுகுமுறை என்பது லாபத்தைக் கூட்டுவதற்கு மட்டுமல்லாது நஷ்டத்தைத் தவிர்க்க சிறந்த யுக்தியாகும்.

6 சொத்து ஒதுக்கீடு!

முதலீட்டில் நஷ்டத்தைத் தவிர்த்து லாபத்தைக் காணச் செய்யும் முக்கிய முதலீட்டுத் தந்திரம், அஸெட் அலோகேஷன் என வழங்கப்படும் சொத்து ஒதுக்கீட்டு முறைதான். ஒரு சொத்திலோ அல்லது ஒரே முதலீட்டு வழியிலோ முதலீடு செய்யாமல் ஒருவருடைய வயது, முதலீட்டு மூலதனம், முதலீட்டுக் காலம், ரிஸ்க் போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு முதலீட்டை பல்வேறு வழிகளில் பிரித்து முதலீடு செய்யும்போது நஷ்டத்தைத் தவிர்க்க முடியும். பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கும்போது எல்லா பணத்தை யும் பங்குகளில் போடுவது, வீழ்ச்சியடையும்போது எல்லாவற்றையும் வங்கிகளில் வைப்பது போன்ற அணுகு முறையைத் தவிர்த்து, அனைத் திலும் நம் தேவைக்கேற்ப முதலீடு செய்து வந்தால் நஷ்டம் தவிர்க்கலாம்.

7 எஸ்ஐபி திட்டம்!

முதலீடுகளில் நஷ்டம் தவிர்த்து நீண்ட நாள் லாபம் சம்பாதிக்க எளிதான வழி, எஸ்ஐபி முதலீட்டுத் திட்டம். இந்த வழிமுறை ஏற்ற இறக்கம் அதிகமாக உள்ள முதலீடுகளுக்குப் பொருத்தமாக இருக்கும். பங்கு மற்றும் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளுக்கு எஸ்ஐபி நல்ல முறையில் கைதரும். ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் ஒருமுறை முதலீடு (ஒன் டைம் இன்வெஸ்மென்ட்) என்பது நஷ்டத்தைத் தர அதிக வாய்ப்பு கள் உண்டு. முதலீட்டாளர்கள் எஸ்ஐபி முறையைப் பின்பற்றினால் ஏற்ற இறக்கத்தைச் சமாளிப்பது மட்டுமல்லாது, நஷ்டத்தைத் தவிர்த்து லாபம் சம்பாதிக்க உதவும்.

8 அகலக்கால் வைக்கக் கூடாது!

முதலீடு என்பது நமது சேமிப்பில் இருக்கும் பணத்தை முதலீடு செய்ய வேண்டுமே தவிர, கடன் வாங்கி முதலீடு செய்தல், சொத்தை விற்றோ அடமானம் வைத்தோ முதலீடு செய்தல் என்பது கூடவே கூடாது. அப்படிச் செய்வது என்பது நஷ்டத்தைத் தர வாய்ப்புள்ளதாகும்.

அதேபோல, முதலீடு செய்யும்போது சிறிய அளவில் துவங்குவது என்பது சரியான அணுகுமுறையாக இருக்கும். நமது முதலீட்டுக் காலம், ரிஸ்க் போன்றவற்றைக் கணக்கில் கொண்டு படிப்படியாக முதலீடுகளில் ஈடுபட்டால் நஷ்டத்தைத் தவிர்க்க முடியும்.

உலகின் மிகப் பெரிய முதலீட்டாளர்கள் சிறிய முதலீடு களோடுதான் துவங்கினார்கள், வாரன் பஃபெட் உட்பட.

9  நிறைய முதலீட்டு வழிகளில் முதலீடு செய்தல்!

பரந்துபட்ட முதலீடு என்பது முதலீட்டுக்கு முக்கியமான விஷயம்தான். அது அளவுக்கு அதிகமாகப் போகும்போது அதுவே நஷ்டம் ஏற்படக் காரணமாக மாறுகிறது.

பல மியூச்சுவல் ஃபண்டுகளிலோ, பல பங்கு களிலோ பரந்துபட்டால் அவற்றை ஆராயவும் சரிபார்க் கவும் இயலாத காரியமாகிறது.

ஒருவர் எஸ்ஐபி மூலம் ஒரு லட்சம் முதலீடு செய்கிறார். அதை ஐந்து முதல் ஏழே ஃபண்டு களில் முதலீடு செய்தால் அவற்றை எளிதில் கண்காணிக்க முடியும். பத்து முதல் பதினைந்து ஃபண்டுகளில் முதலீடு செய்தால் கண்காணிப்பது கடினம். அந்தச் சூழலில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பரந்துபட்ட முதலீடும் அளவாகத்தான் இருக்க வேண்டும்.

10 முதலீடுகளின் ஆய்வு!

எந்த ஒரு முதலீடும் நமது நேரடிக் கண்காணிப்பில் இருப்பது அவசியம். முதலீடு எவ்வளவு முக்கியமோ ஆய்வும் அந்தளவு முக்கியம். மூன்று அல்லது ஆறு மாதத்துக்கு ஒருமுறை நமது முதலீடுகளை ஆய்வு செய்தால் முதலீடுகளில் இருக்கும் நிலையை நாம் உணர முடியும்.

முதலீடுகளில் தொய்வு இருந்தால், அதை சீர்ப்படுத்திச் சரி செய்ய முடியும். அதுவே நஷ்டத்தைத் தவிர்க்க பெரிய வழிமுறையாக அமையும்.

Tuesday, July 21, 2015

நன்றி கூறுவது எவ்வளவு முக்கியம்

நன்றி கூறுவது எவ்வளவு முக்கியம்

01. உற்சாகப்படுத்துங்கள், அதைரியப்படுத்தாதீர்கள். மற்றவர்களின் உற்சாகத்தைக் குறைப்பதால் நாம் அடையப்போகும் இலாபம் எதுவும் இல்லை. உற்சாகப்படுத்தினால் மற்றவர் உள்ளத்தில் இருப்பதை அறிய முடியும்.

02. வாழ்க்கையின் எல்லாக் கடமைகளையும் வைத்துப் பார்க்கும்போது நன்றி, நன்மை ஆகிய இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே பொருள்தான் என்பதை உணரலாம்.

03. நன்றி சூரிய வெளிச்சத்தைப் போன்றது, அது இருந்தால் வாழ்க்கை ஒளி பெறுவதை உணர்வீர்கள். 04. நமது உள்ளத்தில் எப்போதும் நன்றியுணர்வு ஒலிக்க வேண்டும். நன்றி கூறுவது ஒருபோதும் உங்கள் கௌரவத்தை தாழ்த்திவிடாது.

05. ஒருவன் வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் நன்றியுணர்வு அவனிடம் இல்லாமல் போனால் அவன் மதிக்கத்தக்கவனாக மாட்டான்.

 06. நமக்கு ஒரு கிறிஸ்மஸ் பரிசு தந்தவனுக்கு பெரிதாக நன்றி கூறுகிறோம், ஆனால் இந்த வாழ்க்கையை நமக்கு தந்த இறைவனுக்கு என்றாவது நன்றி கூறியிருக்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 07. நன்றியுள்ள ஆத்மாக்களுக்குத்தான் இறைவன் மேலும் மேலும் வெகுமதியளித்து உதவுகிறான்.

 08. கடவுளின் எல்லையற்ற அன்புக்கு நன்றி கூறுவோம். நம்மை நேசிக்கின்ற இதயங்களுக்காக கடவுளுக்கு நன்றி கூறுவோம். கடவுள் நமக்களித்திருக்கும் நம்பிக்கைகளுக்காக அவருக்கு நன்றி கூறுவோம்.

 09. கீழ்வரும் வார்த்தைகளை எப்போதும் கூறுங்கள் வாழ்க்கை செழிக்கும் : அ. உன்னைப் பார்த்து பெருமைப்படுகிறோம். ஆ. நீ எவ்வளவு அன்புடன் இருக்கிறாய். இ. உன் உதவி எனக்கு தேவை. ஈ. நீ என்னுடன் இருந்தால் எனக்கு உற்சாகமாக இருக்கும்.

10. நன்றி எப்படிப்பட்டது என்றது முக்கியமில்லை அது உங்கள் இதயத்தில் இருந்து வருகிறதா என்பதுதான் முக்கியம். 11. மக்கள் எப்போதுமே அரசை குறை சொல்வார்கள் அவர்கள் அரசால் அனுபவிக்கும் இலவசக்கல்வி, இலவச மருத்துவம் போன்ற நல்ல காரியங்களுக்காக அரசுக்கு நன்றி கூறுவதில்லை.

12. வேலை செய்யும்போதும் வேலை வாங்கும் போதும் பரஸ்பரம் நன்றி கூற வேண்டும்.

 13. சம்பளம் கொடுப்பது மட்டும் முக்கியமில்லை செய்த வேலைகளை பாராட்டுவதும், நன்றி கூறுவதும் முக்கியம்.

14. நான் என்னைச் சுற்றி துதிபாடுகின்ற கூட்டத்தை மட்டும் உருவாக்கிக் கொண்டேன், நண்பர்களை நான் உருவாக்க முயற்சிக்கவில்லை என்று நெப்போலியன் சொன்னான். இறக்கும்போது அவன் தனி மனிதனாகவே இறந்தான்.

15. ஜனாதிபதி தேர்தலில் வென்ற ஆபிரகாம் இலிங்கனுக்கு அதிக நண்பர்கள் இருந்தார்கள் வேறெதுவும் அவரிடமிருக்கவில்லை. அவர் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டபோது கோட் சூட் தைக்க பணம் இல்லாமல் கடன் வாங்கினார்.

16. நண்பர்கள் இருக்கும்வரை எவரும் பயனில்லாதவர் ஆகிவிடுவதில்லை.

17. பயன் கருதி நட்பைத் தேடுவது வான வீதியில் இருந்து தங்கத்தைப் பெறச் செய்கின்ற முயற்சி போன்றது.

18. நட்புடன் இருப்பவனைப் போல நல்ல வேலையாள் உலகில் கிடையாது. நல்ல நட்புடன் இருப்பவன் வாழ்க்கையில் பெரிய முதலீடு போன்றவன்.

19. மற்றவர்களின் புன்முறுவலுடன் பழகுங்கள். முகத்தைச் சுளிப்பதற்கு 72 தசைகள் வேண்டியிருக்கிறது, புன்முறுவல் செய்ய 14 தசைகளே போதுமானவை.

 20. தனி நபராக உங்கள் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கென்றே கடவுள் சில பொறுப்புக்களை ஒப்படைத்துள்ளார். உங்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்புக்கள் மற்றவருக்கு இல்லை என்பதை உணர வேண்டும். இந்த உலகத்தை சிறப்பாக்க உங்கள் பங்கும் இருக்கிறது. அந்தக் காரியத்தை உங்களைவிட மற்ற எவராலும் செய்ய முடியாது.

 21. கடவுளிடமும், மனிதனிடமும் நீங்கள் காட்டுகிற அன்பு மேலோங்கட்டும். எந்த வேறுபாடும் இன்றி அனைவரையும் நேசிக்கவே நீங்கள் படைக்கப்பட்டுள்ளீர்கள். உங்களை விட தாழ்ந்தவர்கள் உங்களிடமிருந்து அதிகமான அன்பை பெறும் தகுதி உடையவர். அன்பை கொடுக்கிறவர்களுக்கே அது கிடைக்கும்.

22. பேசுவதிலும், குறை கூறுவதிலும் நேரத்தை செலவிடாது செயலில் இறங்குங்கள். தவறுகளைப்பற்றி வருந்திக் கொண்டிருக்காமல் தவறுகளை திருத்தும் முயற்சிகளில் ஈடுபடுங்கள்.

23. மகிழ்ச்சியுடன் செயற்படுங்கள் எது தவறு என்று எண்ணி பயப்படாமல், எது நல்லதோ அதை நேசித்து, உங்கள் கடமையை செய்யுங்கள். வாழ்வது சந்தோஷமான விடயம் ஆகிவிடும்.

 24. ஓரத்தில் இருந்து வேடிக்கை பார்க்காமல் உள்ளே புகுந்து வேலை செய்யுங்கள். செயல்களை உங்களாலும் நல்ல வழியில் திருப்ப முடியும்.

25. கணக்குப் பார்க்கும்போது வெற்றி பெற்றீர்களா தோற்றீர்களா என்பது முக்கியமில்லை. எப்படி வாழ்ந்தீர்கள் என்பதே முக்கியம்.

தவறான கொள்கைகளை சரியானவையாக மாற்ற வல்லவை பயிற்சிகள்.

தவறான கொள்கைகளை சரியானவையாக மாற்ற வல்லவை பயிற்சிகள்.

01. ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் கைகளைக் கோர்த்தபடி கண்ணாடியை பார்த்துக் கொண்டே.. என்னால் முடியும்.. என்னால் முடியும்.. எதையும் செய்ய என்னால் முடியும்.. சாதிக்க முடியும்.. சாதிக்க முடியும் எதையும் என்னால் சாதிக்க முடியும் என்று கூறுங்கள். சூழல், காலம், இடம், சக மனிதர்கள் தரக்கூடிய எதிர்மறைகளை இப்பயிற்சி நீக்கும்.

02. இலட்சியங்களையும் கருத்தேற்றங்களையும் பெரிதாக எழுதி, அல்லது அச்சிடப்பட்ட வாக்கியங்களை உங்கள் அறையின் சுவரில் எழுதி ஒட்டி வைத்திருங்கள்.

03. நல்ல வாசகங்களை மறவாமை வேண்டும், அவை கண்களைவிட்டு அகலாமை வேண்டும் அதற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்யுங்கள்.

04. உங்கள் இலட்சியத்தை எழுதி இதயத்தோடு இருக்கும் சட்டைப் பையில் வைத்துக் கொள்ளுங்கள். இலட்சியத்தோடு சேர்ந்து உங்கள் இதயமும் துடிக்கிறது என்று எண்ணுங்கள். இப்படிச் செய்தால் ஆழ் மனது விழித்துக் கொள்ளும்.

05. காலை எழுந்ததும் கைகளைப் பார்த்து வணங்குங்கள். விரல் நுனிப்பகுதியில் லக்சுமியும், மையப்பகுதியில் சரஸ்வதியும், மணிக்கட்டில் கோவிந்தனும் இருப்பதாகக் கூறுவார்கள். ஆலய தரிசனத்திற்கு உங்கள் கைகள் உள்ளன.

06. உங்கள் உடலை தெய்வீக ஒளி சூழ்ந்துள்ளதாக எண்ணி, உள்ளங்கையில் அந்தக் காட்சியைக் காணுங்கள். உடல் நலத்துடன் நீங்கள் ஆடுவதாகவும், பாடுவதாகவும் காணுங்கள், மகிழ்ச்சியை உணருங்கள்.

07. பயிற்சிகளால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை.. பயிற்சிகளால் எட்ட முடியாதது எதுவுமே இல்லை… தீய ஒழுக்கங்களை நல்ல ஒழுக்கங்களாக மாற்ற வல்லவை பயிற்சிகள்.. தவறான கொள்கைகளை சரியானவையாக மாற்ற வல்லவை பயிற்சிகள். மனிதர்களை தேவர்களாக உயர்த்தக்கூடியவை இப்பயிற்சிகளே.

08. கரும்பு – மிளகாய் – மலர்ச்செடி இந்த மூன்றையும் அருகருகாக நட்டு நீரை ஊற்றி வளர்த்தான் ஒருவன். ஊற்றியது ஒரே கிணற்றின் நீர்தான் ஆனால் மிளகாய் உறைத்தது, கரும்பு இனித்தது, பூ வாசமாக இருந்தது.. காரணம் இவை மூன்றும் ஒரே நீரை உண்டு வளர்ந்தாலும் தத்தமது இயல்பை மாற்றவில்லை.

09. கரும்பு, மிளகாய், பூமரம் ஆகிய மூன்றும் மற்றவருக்காக தமது இயல்பை மாற்றவில்லை. மற்றவருக்கு பயந்து வாழ்ந்தால் மிளகாய் இனிக்னும் கரும்பு உறைக்கும். கடைசியில் இரண்டுமே சந்தையில் செல்லாக்காசாகப் போய்விடும். மற்றவர்களுக்கு பயந்து தமது இயல்பை மாற்றுவோர் செல்லாக்காசுகளாகவும், நடைப்பிணங்களாகவும் வாழ்வது இதனால்தான்.

 10. மற்றவர் உனக்கு எதைச் செய்யக்கூடாது என்று நினைக்கிறாயோ நீ அதை மற்றவர்களுக்கு செய்யாதே.. அதைப் புரிந்து கொண்டால் உன் இயல்பை மாற்ற வேண்டியதில்லை.

11. நாம் என்ன நினைத்தாலும் அது நடக்காது, எதெது வரவேண்டுமென்றிருக்கோ அதது வந்துதான் தீரும். நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்றை நினைக்குமில்லையா.. என்று கூறுவேருடைய குரலுக்கு செவி கொடுக்காதே… 12.

12. உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா உனது தகுதிக்கு ஏற்றாற் போல பாரு..! என்போர் பேச்சைக் கேட்காதே.

 13. கேலியான பழமொழிகளை சொல்லும்போது இளையோர் உள்ளம் சுக்கு நூறாக உடைந்துவிடும் ஆகவே இப்படியான எதிர்மறைகளைப் பேசாதே.

14. குழந்தையிடம் ஒரு டம்ளர் நிறைய நீரைக் கொடுத்து, சிந்தாமல் எடுத்துப் போ என்று உறுக்கிக் கூறுங்கள்.. அதன் கைகள் நடுங்கி நீர் நிலத்தில் கொட்டுப்பட்டுவிடும். நீரை எடுத்துச் செல் என்று சர்வசாதாரணமாக சொல்லுங்கள் நீர் சிந்தவே வழியில்லை.

 15. எந்தச் சொல்லும் நம்மில் உயிர்ப்பை, வளர்ச்சியை தோற்றுவிக்க வேண்டும். உறங்கிக் கிடக்கும் தன்னம்பிக்கையை தூசு தட்டி எழுப்ப வேண்டும்.

16. சாவின் கரையில் இருப்பவனுக்குக் கூட, வாழ வேண்டும் என்ற நம்பிக்கையை நமது வார்த்தைகள் தர வேண்டும்.

 17. தளர்ந்து விழுந்தவனைக்கூட துடிப்புடன் எழச் செய்ய வேண்டும். கரைந்த நிழலைக்கூட நிறைந்த உருவமாக மாற்ற வேண்டும்.

18. முயற்சியுடையவர்களை தப்பான பழமொழிகளைக் கூறி கேலி செய்யக் கூடாது.

19. பழமொழிகள் எதுகை மோனையுடன் இருப்பவை, அவை சட்டென ஆழ்மனதிற்குள் நுழைந்துவிடும். அகவே எதிர்மறையான பழமொழிகளை பேச வேண்டாம்.

20. மனிதர்கள் வார்த்தைகளால் உயிர் வாழ்வது உண்மை, அதுபோல வார்த்தைகளாலேயே உயிரிழப்பதும் உண்டு. ஆகவே வார்த்தைகளை சரியாக பாவிக்க வேண்டும்.

 21. எது இலட்சியமோ அது நமது மனதில் கனன்றுகொண்டே இருக்க வேண்டும், அந்தத் தணலில் மனம் சதா விழித்துக் கொண்டே இருக்கவும் வேண்டும்.

22. நம்பிக்கையின் பாதுகாப்பில் எதிர்பார்ப்பு என்ற வெளிச்சத்தில் உழைப்பு என்ற பயணத்தை நடாத்த வேண்டும்.

23. ஒவ்வொரு நாளும் குன்றாத உற்சாகத்துடனும், தணியாத ஆவலுடனும், திறமையான உழைப்புடனும் முன்னேற வேண்டும்.

24. என்னுடைய உழைப்பில் தீவிரமாக இருக்கிறேன். ஊக்கத்துடன் எனது காரியங்களை செய்கிறேன் என்று எண்ண வேண்டும்.

25. சராசரி மனிதருக்குரிய மூட நம்பிக்கைகளையும் பயங்களையும் தவிர்த்து விடுங்கள். வாழ்வின் அழிவற்ற மாறுதலுக்குட்படாத முன்னேற்றக் கருத்துக்களை நம்புங்கள்.

எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள்

எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள்

01. ஒரு முட்டைக்குள் தங்கம் மறைந்திருக்கிறது என்று கற்பனை செய்யுங்கள். இனி ஒவ்வொரு பிரச்சனையையும் ஒரு முட்டையாகக் கற்பனை செய்யுங்கள். அதற்குள் ஒரு தங்கம் மறைந்திருக்கிறதாக நினையுங்கள், இதுவே பிரச்சனையை வெற்றியாக்கும் வழியாகும்.

02. ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதற்கு 20 வழிகள் இருக்கின்றன என்று கூறுகிறார்கள். முதலில் ஐந்து வழிகளை தேர்வு செய்யுங்கள், தேடலை ஆரம்பியுங்கள் அதிலிருந்து புதிதாக 20 வழிகள் பிறக்கக் காண்பீர்கள். இதுதான் படைப்பாற்றல் அதாவது படைப்பாற்றலின் தாயே புதிய சிந்தனைதான்.

03. ஒரு பிரச்சனையை வேதனை என்று கருதாதீர்கள் அப்படிக் கருதினால் அந்த வேதனையை உங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்துவிடுவீர்கள். பிரச்சனையை ஒரு முட்டையாகவும் அதில் தங்கம் மறைந்திருக்கிறது என்றும் நினைத்தால் நீங்களே அந்தப் பிரச்சனைக்கு தீர்வைக் காண்பீர்கள்.

04. உங்கள் மனதை சுறுசுறுப்பாக்க 20 வழிகளைக் காணுங்கள், அதுபோல சேம்பேறிகளாக இருக்கும் பிள்ளைகளின் மனதையும் உற்சாகமாகத் தூண்டி விடுங்கள்.

05. ஆர்வமும் துடிப்பும் உள்ள சக்தியை நீங்கள் உருவாக்கினால் உங்கள் குடும்பம் பயனுள்ள ஓர் இலட்சியத்தை அடையும்.

06. நீங்கள் வார்த்தைகளை கடுமையாக உச்சரித்தால் அன்பு என்ற மலர் கசங்கிவிடும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

07. வெறுப்பு என்பது கூடாத செயல் அது நமது எண்ணத்தில் இருந்துதான் பிறக்கிறது, வெறுப்பு வரும்போதெல்லாம் உள்ளே கூடாத எண்ணம் ஒன்று ஓடுவதைக் கண்டு பிடியுங்கள்.

08. சுவர்க்கம் என்பது ஓர் இடமல்ல மன அழுத்தமில்லாத, இலேசாக, கனமில்லாத உணர்ச்சியை அனுபவிக்கும் நிலைதான் சுவர்க்கமாகும்.

09. நமது கையில் ஆண்டவன் தந்து புவிக்கு அனுப்பி வைத்திருக்கும் அறிவாயுதம் விலை மதிப்பற்றதாகும், அதைப் பயன்படுத்தாவிட்டால் கழுதை சந்தனக்கட்டையை சுமந்து சென்று அதன் வாசம் புரியாமலே ஒரு நாள் செத்தது போன்ற கதையாகிவிடும்.

10. ஓர் எண்ணத்தை நல்ல முறையிலும் தெரிவிக்கலாம் கூடாத முறையிலும் தெரிவிக்கலாம், நல்லது கெட்டது நாம் தெரிவிக்கும் முறையாலும் தீர்மானிக்கப்படுகிறது.

11. நமது தூய உணர்வின் தரத்தை உயர்த்திக் கொள்ளாததால்தான் மனம் திரும்பத் திரும்ப பேசுகிறது. ஒரு புலி இரையை உன்னிப்பாக நோக்குவது போல எண்ணங்களை அவதானித்து ஒன்று இரண்டு என்று இலக்கமிடுங்கள் ஒரு கட்டத்தில் அவை நின்று மனம் சாந்தியடையும்.

12. ஆணவத்தை விட்டு சரணடையும் போதுதான் ஆன்மீக உடல் வெளிப்படுகிறது. அப்போது இறைவன் அமுதக்கடலாக இருந்து உங்களுக்கு வழி காட்டிக் கொண்டிருப்பதைக் காண்பீர்கள்.

13. நாம் வாழ்க்கையின் கீழ் மட்டத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதால் அதன் உயர்ந்த பரிமாணங்களைப் பற்றி பகுத்தறிந்து வாழும் ஆனந்தத்தை இழந்துவிடுகிறோம்.

14. நீங்கள் தொடர்ந்து நல்ல வழியில் சிந்தித்தால் நீங்கள் வெறுமனே உள்ளமும் உடலும் மட்டுமல்ல அதற்கும் அப்பாலும் உள்ளவர் என்பதைக் கண்டு கொள்வீர்கள்.

15. உள்மன நிலமைகளை விவேகத்துடன் கையாண்டு உங்களை அவமானப் படுத்தியதால் வரும் துன்பங்களை மறக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அதை மனதில் வைத்திருந்தால் நல்ல சிந்தனைகளின் வீச்சுக்கு தடையாகிவிடும்.

16. உள்மன நிலையை மாற்றிக் கொண்டால் அமைதியானவராகவும் அதிக சக்தி மிக்கவராகவும் நீங்கள் மாறிவிடுவீர்கள். வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களில் மாட்டுப்பட்டு தவிக்கமாட்டீர்கள்.

17. மூட் அவுட் என்று பலர் கூறுவார்கள், நீங்கள் அதற்கு ஆட்பட்டுவிடக்கூடாது மூட் என்பது ஓடும் மேகங்களைப் போன்றது, அவ்வப்போது வரும் போகும் அதைக் கழற்றிவிட்டு இயல்பாக வாழப் பழக வேண்டும்.

18. இந்தக் கணத்தை ஆனந்தமாகக் கழி… நேற்றைய கெட்ட தினத்தையே எண்ணிக் குமைந்து கொண்டிருக்காதே.

19. பிணம் நீரில் இலகுவாக மிதக்கும் ஆனால் மனிதன் நீரில் மூழ்கி இறந்துவிடுவான். மனிதன் நீரில் மூழ்கக் காரணம் அவன் நீருடன் சண்டை போடுகிறான். பிணம் நீருடன் சண்டையிடுவதில்லை ஆதலால் மிதக்கிறது. வாழ்க்கையை கடல் என்று கூறுவார்கள் அந்தக் கடலுடன் சண்டையிட்டு மூழ்காது பிணம் போல இலகுவாக மிதக்க வேண்டும்.

20. நீங்கள் டென்சனாக இருப்பதால்தான் சகல பிரச்சனைகளும் வருகிறது. பாம்மை டென்சனுடன் அணுகினால் தீண்டிவிடும், இயல்பாக இருந்தால் வந்த வழியே போய்விடும்.

21. எதிரியையும் அன்புடன் நேசித்தால் பகை தானாக விலகிவிடும். எந்தக் காரியம் செய்தாலும் அன்பின் சக்தியை பிரயோகியுங்கள்.

22. கோபமாக இருக்கும்போது மனம் பாரமாக இருக்கும் அன்பாக இருக்கும்போது காற்றில் மிதக்கும் இதுதான் இறைவனுடைய அருள் சுரக்கும் விதி.

23. புண்ணினால் ஆன காயம் ஆற சிறிது காலம் எடுப்பதைப் போல கஷ்டங்களின் காயம் ஆறவும் சிறிது காலம் எடுக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

24. உடல், உணர்ச்சி, அறிவு ஆகிய மூன்றையும் ஒன்றாக இணைத்து சமமாக ஓடவிட்டால் மாஜாஜாலம் போல பெரும் சக்தி உருவாகும். அப்போது இந்தப் பிரபஞ்சம் தேஜோமயமாக மாறி சொல்ல முடியாத ஆனந்தத்தை ஏற்படுத்தும்.

25. யோகாவின் முக்கிய அம்சமே உடலை டென்சன், படபடப்பு இல்லாமல் தளர்ச்சியாக வைத்துக் கொள்வதுதான். அப்படி இருந்தால் உங்கள் உடலில் ஆரோக்கியமான இரசாயனங்கள் சுரக்கும்.

நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்

நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்

பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை
3. புதிதாகச் சிந்தித்தல்

இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி.

ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.

இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.

தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாரங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.

இதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.

இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.

புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.

உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.

ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்.

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்

*அருகம்புல் பொடி :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பொடி :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

*கடுக்காய் பொடி :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பொடி :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பொடி :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பொடி :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பொடி :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பொடி :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பொடி :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பொடி :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பொடி :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பொடி :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பொடி :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பொடி :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பொடி :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பொடி :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பொடி :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பொடி :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பொடி :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பொடி :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பொடி :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பொடி :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பொடி :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

*கோரைகிழங்கு பொடி :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பொடி :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பொடி :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பொடி :- ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பொடி :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பொடி :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பொடி :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பொடி :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பொடி :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பொடி :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பொடி :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பொடி :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பொடி :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பொடி :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பொடி :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பொடி :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பொடி :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பொடி :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பொடி :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பொடி :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பொடி :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

நம் உடலில் உள்ள உறுப்புகளின் வேலைகள்

நம் உடலில் உள்ள உறுப்புகளின் வேலைகள்

கருப்பையில் கரு தரித்ததும் முதலில் உருவாவது இருதயம்தான்.

* இருதயம் ஒவ்வொரு முறைதுடிக்கும்போதும் 70 கன செண்டி மீட்டர் இரத்தத்தை தன்னிடமிருந்து வெளியே செலுத்துகிறது.  இந்த இருதயம் இவ்வாறு ஒரு மனிதனின் சராசரி 70 ஆண்டு கால வாழ்க்கையில் ஏறக்குறைய இரண்டரைக்கோடி முறைகள் சுருங்கி விரியும்.

* இப்படி இடைவிடாமல் செயல்படும் இருதயம் வலுவிழந்து போய்விடாதா என்கிற சந்தேகம் தோன்றலாம். இருதயத்தின் வால்வுகள் சிறப்புத் தன்மைகள் மிக்கபாப்பிலரி எனும் தசைகளால் ஆனவை.எனவே அதிக வேலையின் காரணமாக வலுவிழந்து போகாமல் இருக்கின்றன. இருதயம் தொடர்ந்து இயங்க இதுவே காரணமாகும்.

* இருதயத் துடிப்பானது, ஒவ்வொரு துடிப்பிற்கும் இடையே வினாடியில் ஆறு பாகத்தில் ஒரு பாக நேரம் நின்று பின்பே துடிக்கிறது.

* நம் மூளையில் ஆயிரம் கோடி உணர்ச்சிஅணுக்கள் இருக்கின்றன. அதில் கார்டெக் எனும் பகுதி பல ஆண்டுகளாக நினைவுகளை வரிசைப்படுத்திச் சேமித்து வைத்து விடுகிறது.

* நாம் உட்கொள்ளும் பிராணவாயுவிலும்உடலில் ஓடும் இரத்தத்திலும் ஐந்தில் ஒரு பங்கு மூளையினால்தான் பயன்படுத்தப்படுகிறது. நான்கு நிமிட நேரம் இவைகிடைக்காமல் போனால், மூளை தனதுசக்தியை இழந்து விடுகின்றது.

* ஆண்களை விட பெண்களுக்குத்தான்புத்திக்கூர்மை அதிகமாம். இடது கையால்எழுதுபவர்களுக்கு, வலது கையால் எழுதுபவர்களை விட புத்திக்கூர்மை அதிகம்.

* இன்று பிரபலமாக இருக்கும் கணினிகள்ஒரு மூளையின் வேலையைச் செய்ய வேண்டுமானால் அதன் தற்போதைய சக்தியை 10 ஆயிரம் மடங்கு பெருக்க வேண்டியிருக்கும்.

* மூளையிலிருந்து 12 இணை நரம்புகள் உடலின் பல்வேறு இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது.

* மனிதனின் மூளை 100 மில்லியன் துண்டுத் தகவல்களை நினைவில்
வைத்திருக்க முடியும்.

* நம் கண்கள் வெளிச்சத்தைப் பார்க்கும் போதுஒருவித இரசாயணக் கிரியை நடத்துகின்றன. இதனால் "டிரான்ஸ்ரெடினின்" என்னும் பொருள் உண்டாகிறது. இதேபோல் இருட்டினைப் பார்க்கும்போது"ரெடாப்சினின்" என்னும் பொருள்உண்டாகிறது. இதனால்தான் வெளிச்சத்திலிருந்து திடீரென்று இருளுக்குள் நாம் நுழைந்தால் கண் தெரிய சிறிது நேரமாகிறது.

* உடலில் சராசரியாக 10,000,000,000,000,000,000,000,000,000 அணுக்கள் உள்ளன.  அணுக்களின் வளர்ச்சியில்தான் உடலின்வளர்ச்சியே இருக்கிறது.

* நம் உடலில் சுமார் 5லிட்டர் முதல் 6 லிட்டர் வரை இரத்தம் இருக்கிறது. இது அவரவர் எடையில் மூன்றில் ஒரு பங்காகும்.

* உடலிலுள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கை 35,000,000,000 ஆக இருக்கிறது. இந்த இரத்த அணுக்கள்தான்வேண்டிய இரத்தத்தை உற்பத்தி செய்கின்றன.இதில் இன்னொரு வகையான வெள்ளை அணுக்கள்தான் உடலுக்கு நிறத்தைக் கொடுக்கின்றன. ஒவ்வொரு நிமிடத்திற்கும் சுமார் 1,000,000 புதிய சிகப்பு அணுக்கள் உற்பத்தியாகின்றன.

* இதயத்திலிருந்து சுமார் 60 முதல் 70 காலன் வரை இரத்தம் பம்ப் செய்யப்பட்டு வெளியேற்றப்படுகின்றது. இவ்வாறு வெளியேறிய இரத்தம் உடல் முழுவதும் சுற்றிவிட்டு 23 வினாடிகளில் மீண்டும் உள்ளே நுழைந்து விடுகிறது. ஒரு நாளில் சுமார் 3, 700 முறைகள் இரத்தம் இப்படி வருகின்றது.

* மனித உடலில் இரத்தம் ஒரு நாளைக்கு சுமார் 60,000 மைல்களிலிலிருந்து 1,00,000மைல்கள் வரை பயணம் செய்கிறது.

* பிறக்கும்போது எலும்புகள் 270 இருந்தாலும் நாளடைவில் 206 எலும்புகளாகி விடுகின்றன. சில சிறிய எலும்புகள் பெரிய எலும்புகளுடன் இணைந்து விடுவதே இதற்குக் காரணமாகும்.

* மோவாய் கட்டை எலும்புதான் மிக வலுவுடையதாகும். அது சுமார் 36,000 பவுண்டு எடையைக் கூடத் தாங்கக்கூடியது.

 *தசைகள் 639 தசைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு சதுர அங்குலத் தசை 55 முதல் 140 பவுண்டு வரை எடையைத் தாங்கும் என்றுகூறுகின்றனர்.

* நாம் ஒரு வார்த்தை பேச சுமார் 72 தசைகள்வேலை செய்ய வேண்டியிருக்கும்.

* உடல் நடுங்கும் போது உடலில் ஐந்துமடங்கு உஷ்ணம் பிறக்கிறது.

* நாளொன்றுக்கு மனிதன் குறைந்தது 50 அவுன்சுகள் சிறுநீரை வெளியேற்றுகின்றான்.

* நம் தலைமுடி வெட்டப்படாமல் விட்டுவிட்டால், சராசரியாக 8 அடி வரை வளரும்.

* மனிதன் எவ்வளவுதான் வேகமாகஓடினாலும் ஒரு மணிக்கு 36 கிலோ மீட்டருக்கு மேல் ஓட இயலாது.

* பிறந்த குழந்தை ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை சுவாசிக்கிறது. 16 வயதில் ஒரு நிமிடத்திற்கு 20 முறை சுவாசிக்கிறான

Marketing Concepts என்றால் என்ன?

Marketing Concepts என்றால் என்ன?

* நீங்கள் ஒரு விருந்தில் அழகான, பணக்கார ஒரு பெண்ணை பார்க்கிறிர்கள். நீங்கள் அந்த பெண்ணிடம் சென்று “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள்”என்று கூறினால் அது Direct Marketing.

* உங்கள் நண்பர்கள் அந்த பெண்ணிடம் சென்று உங்களை காண்பித்து “அவனும் பணக்காரன் தான். அவனை திருமணம் செய்துக்கொள்ளுங்கள்” என்று கூறினால் அது Advertising.

* நீங்களே அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று அந்த பெண்ணின் தொலைபேசி எண்ணை வாங்கிகொண்டு, அடுத்த நாள் அந்த பெண்ணை தொலைபேசியில் அழைத்து “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துக்கொள்ளுங்கள்” என்று கூறினால் அது Telemarketing.

* அந்த அழகான பெண்ணே உங்களிடத்தில் வந்து “நீங்களும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துக்கொள்ளுங்கள்” என்றால் அது Brand Recognition.

* அந்த அழகான, பணக்கார பெண்ணிடம் சென்று நீங்கள் “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறுகிறர்கள். உடனே அதற்கு அந்த பெண்ண உங்களின் கன்னத்தில் அறைந்தால்… அதுதான் Customer Feedback.

* அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று “நானும் பணக்காரன்தான். என்னைதிருமணம் செய்துக்கொள்ளுங்கள்” என்று கூறியதற்கு, அந்த பெண்தன்னுடைய கணவரை அறிமுகம் செய்தால் அது Demand and Supply gap.

* நீங்கள் அந்த பெண்ணிடம் சென்று நீங்கள் பேசுவதற்கு முன்னால் வேறொரு நபர் வந்து அந்த பெண்ணிடம் “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துக்கொள்ளுங்கள்” என்று கூறுகிறான். அந்த பெண்ணும் அவனுடன் சென்றுவிடுகிறாள். இதுதான் Competition eating your market share.

* நீங்கள் அந்த அழகான பணக்கார பெண்ணிடம் சென்று “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துக்கொள்ளுங்கள்” என்று கூறுவதற்கு முன்பே உங்களின் மனைவி அருகில் வந்தால் Restriction for entering new markets.

இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே Marketing Concepts என்றால் என்னவென்று….!

வாழ்க்கை வாழ்வதற்கே!

வாழ்க்கை வாழ்வதற்கே!

வாழ்க்கையின் பொருள் பற்றி சமீபத்தில் நான் படித்த ஒரு கதை இங்கே.

ஒரு கல்லூரியில் ஒன்றாக படித்த சில மாணவர்கள், படித்து முடித்து சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கல்லூரியில் சந்திக்கின்றனர். அப்போது, கல்லூரி வாழ்க்கையைப் போல வெளி உலக வாழ்க்கை சந்தோசமானதாக இல்லை என்றும் வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கின்றது என்றும் அலுத்துக் கொள்கின்றனர்.

அப்போது அங்கு வந்த அவர்களது முன்னாள் பேராசிரியர் அவர்களை தன் வீட்டிற்கு தேநீர் விருந்துக்கு அழைக்கிறார். சுவையில் சிறந்த அவர் வீட்டு தேநீர் கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தமானது.

அவரது வீட்டில் தேநீர் பல்வேறு விதமான கோப்பைகளில் பரிமாறப் படுகின்றது. சில கோப்பைகள் சாதாரணமானவை, சில கோப்பைகள் அழகானவை, சில கோப்பைகள் விலை உயர்ந்தவை, வேறு சிலவோ பிரத்யேகமாக கலை அழகோடு வடிவமைக்கப் பட்டவை.

அந்த மாணவர்கள், அழகற்ற கோப்பைகளை தவிர்த்து விட்டு அழகிய கோப்பைகளிலேயே தேநீர் அருந்த விரும்புகின்றனர். கலை வடிவம் மிக்க தேநீர் கோப்பைக்காக அவர்களிடையே சிறிய போட்டி கூட நடக்கிறது.

ஒருவழியாக, தமக்கான கோப்பையை தேர்வு செய்து, மாணவர்கள் அனைவரும் தேநீர் அருந்தும் போது அங்கு வந்த பேராசிரியர் சிறிய விளக்க உரை நிகழ்த்துகிறார். அது இங்கே.

“ஒரு விஷயத்தை நான் கவனித்தேன். நீங்கள் அனைவரும் அழகில் சிறந்த, விலை உயர்ந்த கோப்பைகளிலேயே தேநீர் அருந்த விரும்பினீர்கள். ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கென சிறந்ததையே தேர்ந்தெடுக்க விரும்புகிறான். இது மிகவும் இயல்பான விஷயம்தான் என்றாலும் பல பிரச்சினைகளின் மூல காரணம் அதில்தான் உள்ளது.

நீங்கள் கஷ்டப் பட்டு போராடி தேர்வு செய்த கோப்பைகள், தேநீருக்கு எந்த ஒரு தனிச் சுவையையும் கூட்ட வில்லை. சொல்லப் போனால், கலைநயம் மிக்க சில கோப்பைகள், எளிதில் தேநீர் அருந்த, அதன் சுவையை முழுமையாக உணர தடையாகவே இருந்தன.

உண்மையில், என் வீட்டிற்கு நீங்கள் வந்தது சுவையான தேநீரை அருந்தவே. கலை நயம் மிகுந்த கோப்பைகளை உபயோகிக்க அல்ல.

ஆனாலும், தேநீர் அருந்த வந்த உங்கள் கவனம், கோப்பைகளைப் பார்த்தவுடன் திசை மாறி விட்டது. அதிலும், உங்கள் கையில் உள்ள கோப்பை மீது இருந்த கவனத்தை விட அடுத்தவர் கையில் என்ன கோப்பை உள்ளது என்பதில்தான் அதிக கவனம் இருந்தது.

நண்பர்களே! இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வாழ்க்கை என்பது கூட சுவையான தேநீர் போன்றது. இடையில் வந்து போகும் பதவி, பணம், புகழ் எல்லாமே, அந்த வாழ்க்கையை தாங்கிப் பிடிக்க உதவும் கோப்பைகள் மட்டுமே.

மேற்சொன்ன பணம் பதவி போன்ற விஷயங்கள் எதுவும் வாழ்க்கை எனும் தேநீரின் சுவையை மாற்றுவதில்லை. ஆனால் பல சமயங்களில், கோப்பைகளில் அதிக கவனம் செலுத்தும் நாம் வாழ்க்கையை முழுமையாக சுவைக்க மறந்து விடுகிறோம். பலர் இது போல காலப் போக்கில் வாழ்க்கை எனும் தேநீரின் உண்மையான சுவை மறந்து போய் இயந்திரகதியாக வாழ ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்! மகிழ்ச்சியாக வாழும் மனிதர்களுக்கு எல்லாவற்றிலும் உயர்ந்த விஷயங்கள் கிடைப்பதில்லை. அவர்கள் தங்களுக்கு கிடைத்த தேநீரை முழுமையாக சுவைப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகிறார்கள். அதை தாங்கிப் பிடிக்கும் கோப்பைகளில் அல்ல.

அதிகமான பொருட்கள் வைத்திருப்பவன் உண்மையான பணக்காரன் இல்லை. குறைவாக தேவைகள் உள்ளவனே பெரிய பணக்காரன். ”

இவ்வாறு அவர் உரைத்ததும், அந்த மாணவர்களுக்கு வாழ்க்கை பற்றி கொஞ்சம் விளங்கியது போல இருந்தது. இந்த முறை தேநீரின் சுவையை முழுமையாக ருசித்து பின்னர் கலைந்து போனார்கள்.

எனக்கு இந்த கதை பிடித்திருந்தது. உங்களுக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.

வாருங்கள். ஒரு நல்ல டீ சாப்பிட்டுக் கொண்டே யோசிப்போம்.

அறியாமையும், இருளும் கூடிய தொடக்கத்தில் நம்பிக்கை ஒன்றே துணையாக!

அறியாமையும், இருளும் கூடிய தொடக்கத்தில் நம்பிக்கை ஒன்றே துணையாக!

ஃபிளெமிங், ஒரு ஏழை விவசாயி! ஸ்காட்லாந்து பகுதியில் டார்வேல் என்ற கிராமப் பகுதி, அன்றாட ஜீவனத்திற்கே மிகவும் கஷ்டம்!

ஒரு நாள்  யாரோ, அபாயத்தில் சிக்கி உதவி கேட்டுக் கூச்சலிடுவது கேட்டது.

போய்ப் பார்த்தபோது, ஒரு இளைஞன், புதைசகதியில் இடுப்பளவு சிக்கி, வெளியே வர முடியாமல் பயத்தோடு கத்தித்  தவித்துக் கொண்டிருந்ததை  அந்த  விவசாயி பார்த்தார். புதை சகதியில் இருந்து அந்த இளைஞனை மெல்ல விடுவித்து, தேற்றினார். அந்த விவசாயி, சரியான நேரத்தில் உதவிக்கு வராமல் இருந்திருந்தால், அந்த இளைஞன் கத்தி கத்தியே, பயம் பாதி சகதிக்குள் முழுகுவது மீதி என்று கதை முடிந்திருக்கும்.

மறுநாள், அந்த விவசாயியைத் தேடி, வண்ணச் சாரட் வண்டியில், ஒரு பெருந்தனக்காரர் வந்திறங்கினார். ” என் பெயர் ரண்டால் ஃப் ! நேற்று நீங்கள் காப்பாற்றிய இளைஞன், என் மகன்!  அவனுடைய உயிரைக் காப்பாற்றியதற்காக என்னுடைய நன்றியைத் தெரிவித்துப் போக வந்தேன், உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்! என்னிடம் இருப்பதைத் தருகிறேன்.” என்று தழுதழுத்தார்.

ஸ்காட்லாந்து மக்களே கொஞ்சம் பெருமிதமும், சுயகௌரவமும் பார்க்கிற  மக்கள். ஒரு உயிரைக் காப்பாற்றுவது மனிதனுடைய கடமை!  ஆபத்தில் இருப்பவன் எதிரியே ஆனாலும் காப்பாற்ற வேண்டும், அப்படியிருக்க செய்த உதவிக்குக் கைம்மாறு எதிர்பார்ப்பதா? அந்த விவசாயி, பணிவோடு பெருந்தனக்காரருடைய உதவியை மறுத்தார். அந்த நேரம் ஒரு சின்னப்பையன்,   ஃபிளெமிங்குடைய மகன், அங்கே வந்தான்.  விவசாயி, அவனைத் தன்னுடைய மகன் என்று அறிமுகம் செய்து வைத்தார்.பிரபு அவனைப் பார்த்துவிட்டுச் சொன்னார்.

“இதையாவது கேளுங்கள்! இவனை நான் அழைத்துப் போகிறேன், நன்றாகப் படிக்க வைக்கிறேன்!  உங்களுடைய நல்ல குணம் இவனிடம் இருக்குமானால், நீங்களே பார்த்துப் பெருமிதப்படுகிற மாபெரும் மனிதனாக இவன் வருவான்!”

அதே மாதிரி, அந்தச் சிறுவன், லண்டனில் இருந்த பிரபுவோடு அனுப்பப் பட்டான். லண்டனில், செயிட் மேரி மருத்துவப் பள்ளியில் படித்துப் பெரிய மருத்துவராகவும், கண்டுபிடிப்பாளராகவும் உயர்ந்தான். பின்னால் சர் அலெக்சாண்டர்  ஃபிளெமிங் என்று உலகம் முழுக்க அறியப்பட்ட மருத்துவர். பெனிசிலின் தடுப்பு  மருந்தைக் கண்டுபிடித்தவர்.

ரண்டால் ஃப் பிரபுவின் மகன்,  முன்னால் ஸ்காட்லாந்து விவசாயியால் புதை சகதியில் இருந்து காப்பற்றப் பட்டவன், நிமோனியா காய்ச்சல் வந்து அவதிப்பட்டபோது, காப்பாற்றியது பெனிசிலின் தடுப்பு மருந்தால் தான்!

அப்படி, தகப்பன், மகன் இருவராலும் இரு வேறு தருணங்களில் காப்பாற்றப்பட்ட அந்த இளைஞனின் பெயர் வின்ஸ்டன் சர்ச்சில்! பின்னாட்களில் இங்கிலாந்துப் பிரதமராகவும் பதவி வகித்த, அதே வின்ஸ்டன் சர்ச்சில்!

சர் அலெக்சாண்டர்  ஃபிளெமிங் நோய்த் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கத் தீவீரமாகப் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோதிலும், பெனிசிலின் கண்டுபிடிக்கப் பட்ட விதம்,  ஒரு தற்செயலான தருணத்தில் தான்! கிருமிகளால் ஏற்படும் நோய்கள், மரணத்திற்கு எதிராக மருந்தே இல்லை என்ற நிலையை மாற்றப் பிறந்த முதல் ஆண்டிபயாடிக் மருந்து  பெனிசிலின்! நடந்தது 1928 ஆம் ஆண்டு! அடுத்த ஆண்டில்,   ஃபிளெமிங் முழுமையான ஆராய்ச்சிக் குறிப்புக்களை வெளியிட்டார்,

ஒரு சிக்கலான தருணத்தில் தான் அதற்குத் தீர்வும் பிறந்தது!.
அதற்கும் பதினான்கு  ஆண்டுகளுக்கு முன்னால், அமெரிக்காவில் ஒரு ஆராய்ச்சியாளனுடைய அத்தனை உபகரணங்களும், குறிப்புக்களும் தீயில் கருகிச் சாம்பலாயின. மறுநாள், அந்த அழிவைப் பார்த்து விட்டு, அந்த மனிதர் சொன்னார்,

“இந்த அழிவிலும் பெரிய வரம் இருக்கிறது. நம்முடைய எல்லா முட்டாள்தனங்களும் அழிக்கப் பட்டு விட்டன! ஆண்டவனுக்கு நன்றி சொல்லிவிட்டு, இனிமேல் நாம் புதிதாகத் தொடங்கலாம்!”

அதற்கடுத்த மூன்றாவது வாரம், அந்த கண்டுபிடிப்பாளர்,  தனது புதிய கண்டுபிடிப்பான  போனோக்ரா ஃப் (கிராமபோன்)-ஐ அறிமுகம் செய்தார்! அந்த விந்தை மனிதரின் பெயர் தாமஸ் ஆல்வா எடிசன்!

வெற்றி, சாதனை என்பதெல்லாம், பேரிடர், சோதனை, சிக்கல்கள் என்பதில் இருந்து தான் பிறக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதா?

இளம் பருவ சர்ச்சில், இன்னும் சிறிது நேரம் கவனிக்கப் படாமல் இருந்தால், முக்கிப் போயிருக்க வேண்டியது. பயம் ஆட்டிப் படைத்த நேரத்திலுமே கூட உதவி கோரிக் கூச்சல் எழுப்புவது ஒன்று தான் அந்த நேரத்தில் செய்ய முடிந்தது. அதைச் செய்தபோது, யாரோ ஒருவரது கவனத்தை ஈர்க்கவே வந்து காப்பாற்றுகிறார்.

அதே மாதிரி, பாக்டீரியாக்களால், நோயாளிகள் மரணமடைந்து கொண்டிருந்த நேரம், காரணம் என்ன என்பது புரிகிறது, ஆனால், மருந்து என்ன என்பது தெரியவில்லை! அதே சிந்தனையாக இருந்த  ஃபிளெமிங் கண்ணில், கிருமிகள்  இருந்த தகட்டில் தற்செயலாக, பூசனம் பிடித்த  ஒரு தகட்டில் இருந்த ஒரு விஷயம், கிருமிகளை அறவே காலி செய்து விட்டது படுகிறது. ஆக, இந்த நுண்ணுயிர்க் கொல்லியாக ஒன்று இருக்க முடியும், மருந்தாகப் பயன்பட முடியும் என்பது தெரிய வருகிறது. அடுத்தடுத்த சோதனைகளில் உறுதிப் படுகிறது.

விபத்து எதிர்பாராமல் நடப்பது! அது விளைவிக்கும் சேதமும் கூட அப்படித்தான்!

ஆனால் ஒரு மனிதர், தான் அது வரை மேற்கொண்ட ஆராய்ச்சியில் உருவாக்கிய விஷயங்கள், குறிப்புக்கள் எல்லாமே எதிர்பாராத தீ விபத்தில் மொத்தமாகப் பறி கொடுத்த தருணத்திலும் கூடக் கலங்கவில்லை.

எல்லா முட்டாள்தனங்களும் தடையமே இல்லாமல் ஒழிந்தன என்று சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார். இனிமேல் புதிதாகத் தொடங்கலாம் என்று சந்தோஷப் பட்டுக் கொள்கிறார்! அவர் சந்தோஷப் பட்டுக் கொண்ட மாதிரியே, நூற்றுக்கணக்கான கண்டுபிடிப்புக்கள் தொடர்ந்துவருகின்றன.

இதே மாதிரித் தான், மின்சாரத்தினால் எரியும் (ஒளிர்விடும்) பல்ப் ஒன்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், தாமஸ் ஆல்வா எடிசன் தொடர்ச்சியாகத் தோல்வியையே சந்தித்துக் கொண்டிருந்தார். தோல்வி மாதிரியே முயற்சியும் தொடர்ந்தது. வெவ்வேறு விதமான இழைகள், அதில் கடைசியாக ஜப்பானிய மூங்கிலில் இருந்து தயார் செய்யப்பட இழைகளும் அடங்கும்! கடைசியாக டங்க்ஸ்டன் உலோக இழை பொருத்தமாக இருப்பது கண்டறியப்பட்டது. இன்றைக்கும் உலகம் முழுவதும் டங்க்ஸ்டன் இழை கொண்ட குண்டு பல்ப் புழக்கத்தில் இருக்கிறது. இப்போது கூட,உங்களால் ஒரு சிறந்த பல்பை உருவாக்க முடியுமானால், உங்களுக்கு ஒரு கோடி அமெரிக்க டாலர்கள் பரிசாகக் காத்திருக்கிறது! ரீல் அல்ல! நிஜம் தான்!

சோதனை முடிவுகளில் ஏற்பட்ட தொடர்ச்சியான தோல்விகளை, எடிசன் எடுத்துக் கொண்ட விதமே அலாதி! ” ஒரு விஷயத்தை எப்படியெல்லாம் செய்யக் கூடாது என்பதைப் பத்தாயிரம் முறைகளில் இருந்து கற்றுக் கொண்டேன்!”

இங்கே துணுக்குகளாகப் பேசப்பட்டசம்பவங்கள் சொல்வது என்ன?

தோல்வியே வெற்றிக்கு அடிப்படை! அடுத்த படிக்கட்டு!

அதான் எனக்குத் தெரியுமே என்று “அறிவாளி” திரைப்படத்தில் முத்துலட்சுமி திரும்பத் திரும்பச் சொல்லி, டணால் தங்கவேலுவை வெறுப்பேற்றுகிற காமெடியாக மட்டும் பார்த்துவிட்டுப் போய்விடுவதால் எதையும் தெரிந்துகொள்ள முடிவது இல்லை.

வாழ்க்கையில் எதிர் கொள்ளும் ஒவ்வொரு சம்பவத்தையும் நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில் மட்டுமே அதன் வெற்றியோ, தோல்வியோ தீர்மானிக்கப் படுகிறது.

இன்றைக்குப் பொருளாதார மந்தம், ஒரு பக்கம் வளர்ச்சி என்பது, மற்ற விஷயங்களை வெகு பள்ளத்தில் தள்ளிவிடுவதாக ஆக்கிக் கொண்டிருக்கும் ஒழுங்கு முறை எதுவுமில்லாத போக்கு, வேலைவாய்ப்புக்கள் சுருங்கிக் கொண்டே போவது, எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் இப்படி ஏராளமானவற்றை ஒவ்வொருவரும் எதோ ஒரு விதத்தில் சந்தித்தாக வேண்டியிருக்கிறது. பார்க்கும் விஷயங்கள், அத்தனையுமே மன நிறைவைத் தருவதாக இல்லை. பல விஷயங்கள் மன நிம்மதியைக் குலைப்பது போலத் தான் இருக்கின்றன.

அதனால் என்ன? நமக்குப் பிடித்தமான விளையாட்டில், ஆர்வத்தோடு பங்குபெறும் பொது, இப்படி எதிர்மறையான விஷயங்களைப் பற்றி யோசிக்கிறோமா? அங்கே நம்முடைய  அடுத்த மூவ் என்னவாக இருக்க வேண்டும் என்பதிலும், அதைச் செயல்படுத்துவதில் மட்டுமே கவனத்தை வைத்திருக்கிறோம் அல்லவா!

அதே மாதிரித் தான், எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினையும், சோதனையும், தன்னுள் ஏராளமான வாய்ப்புக்களைச் சுமந்து கொண்டு தான் வருகிறது என்பதைப் புரிந்து கொண்டாலே, வருகிற வாய்ப்புக்களைத் தவறவிடக் கூடாது என்பதில் மட்டுமே நம்முடைய கவனம் இருக்கும்.

இரண்டாவது உலகப் போருக்குப் பின்னால், மிகப் பெரிய அழிவை ஜப்பான் சந்தித்தது. அணுகுண்டு வீசப்பட்டது மட்டுமல்ல, அவர்களுடைய தேசீயப் பெருமிதமே பெரும் சரிவைச் சந்தித்தது. தன்னை விடப் பெரிய வஸ்தாத் எவனுமில்லை என்று இறுமாப்போடு அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்த ஒருவன், அவனுடைய  ஆணவத்தின் மீது, பெருமிதத்தின் மீது விழுகிற அடி மாதிரிக் கொடுமையான அனுபவம், பிரச்சினை வேறு ஒன்று இருக்க முடியுமா?

ஜப்பானிய மக்கள் துவண்டு விடவில்லை. தங்களுக்கு விழுந்த அடியை, வலியை ஏற்றுக் கொண்டார்கள். அழிவில் இருந்து மீண்டு வருவதற்கு உறுதி கொண்டார்கள்.

அடித்துத் துவம்சம் செய்து விட்டு அப்புறம் தடவிக் கொடுப்பது போலப் பொருளாதார உதவிகளை, அமெரிக்கா செய்தது. உற்பத்தி செய்யப் படும் பொருட்களை வாங்கிக் கொள்ளக் கதவைத் திறந்தது.

ஆனால், ஆரம்ப காலங்களில் மேற்கத்திய மக்களுடைய விருப்பங்கள், தேவைகள் என்ன என்பது, அவர்களுடைய ஆங்கில மொழி போலவே, ஜப்பானியர்களுக்குப் புரியவில்லை. தயாரித்து விற்பனை செய்த பொருட்கள் எல்லாம், தரக் குறைவாக, கேலிக்குரியவைகளாக இருந்தன.

ஜப்பானிய மக்கள், அந்த ஏளனத்தையும் சகித்துக் கொண்டார்கள். சகித்துக் கொண்ட விதம், வேறு வழியில்லை என்ற விரக்தியின் வெளிப்பாடாக இல்லை! தம்முடைய குறைகள் என்ன என்பதை, பதறாமல் சிந்தித்தார்கள். தயாரிப்பதில் ஏற்டும் குறைகள் என்ன என்பதை, தயாரிக்கப் படும் கட்டத்திலேயே கண்டுபிடித்து அங்கேயே சரி செய்தது மட்டுமல்ல, முன்னை விட இன்னும் அதிகம் பயனுள்ளதாக, ஒரு வளர் நிலை மாற்றத்தை, இயல்பான பண்பாடாகவே வளர்த்துக் கொண்டார்கள். ஜப்பானியத் தயாரிப்பு என்றாலே தரம் மிகுந்தது என்ற உத்தரவாதத்தை, மிகக் குறைந்த காலத்திலேயே சாதித்துக் காட்டினார்கள்.

இங்கே நாம் பார்க்க வேண்டிய முக்கியமான அம்சம், என்ன செய்யப் போகிறோம் என்பது தெரியாமல் நம்மைத் திகைக்க வைக்கிற, முடக்கிப் போட்டுவிடுகிற சூழ்நிலைகள் அவ்வப்போது வந்துகொண்டே தான் இருக்கும்! 2012 இல் உலகம் அழிந்து விடப் போகிறது  என்று ஒரு கற்பனை உலவிக் கொண்டிருக்கிறது அல்லவா, அதே மாதிரி! கொஞ்சம் நிதானித்துப் பார்த்தீர்களேயானால், இதற்கு முன்னாலும் கூட இதே மாதிரி அச்சம், பீதி ஏதோ வடிவத்தில் கிளப்பி விடப்பட்டுக் கடைசியில்  ஒன்றுமே இல்லாமல் போயிருப்பதைப் பார்க்க முடியும்!

இத்தனைக்கும் ஆதார சுருதியாக இருப்பது நம்பிக்கை! நம்மால் முடியும் என்கிற தன்னம்பிக்கை! கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது என்றோ எவனோ வேலையில்லாமல் எழுதி வைத்துப் போனதல்ல, கூடி வாழும்போது மட்டுமே மனிதர்களால் உன்னதமான தருணங்களை எட்டிப் பிடிக்க முடிகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிவது தான்!

மிகப்பெரும் வெற்றிக்குப்பின் கர்வம் கொள்ளுவது தவறா?

மிகப்பெரும் வெற்றிக்குப்பின் கர்வம் கொள்ளுவது தவறா?

சூரியன் மறைந்ததும் இரவில் தென்படுகிற மின்மினிப் பூச்சிகள் உலகத்திற்கு தாங்கள்தான் வெளிச்சம் தருவதாக நினைத்துக் கொள்கின்றன.

ஆனால் நட்சத்திரங்கள் பிரகாசிக்கும் போது மின்மினிப்பூச்சிகளின் கர்வம் அடங்கி விடுகிறது

ஆனால் முன்இரவில் சந்ரோதயம் ஆனதும் சந்திரன் ஒளியில் நட்சத்திரங்கள் மங்குகிறது அப்போது உலகம் முழுமைக்கும் வெளிச்சம் கொடுப்பது  தான்  தான் என்று சந்திரன் கர்வம் அடைகிறான்

சூரியன் உதயம் ஆகும் போது  சந்திரன் மறைந்து மங்கிப் போகிறான் நமது செல்வம் குறித்தோ வேறு செல்வாக்குகள் குறித்தோ செல்வந்தர்கள் செருக்குற வேண்டாம்.

“நம்மைக்காட்டிலும் பெரியோர் இந்த உலகில்  இருக்கின்றார்கள் என்று நினைக்க வேண்டும் என சொல்லித் தருகிறார்  பகவான்  இராம கிருஷ்ண பரமஹம்சர்” மித மிஞ்சிய தன்னம்பிக்கை தோன்றும் போது எனது கடந்த கால தொல்விகளை எண்ணுவேன் வரம்பில்லாது எதையும் அனுபவிக்கும் நிலையில் எனது கடந்த கால பசியை எண்ணிக் கொள்வேன்;

மெத்தனமாக இருப்பதை உணரும் போது எனது களத்திலுள்ள போட்டிகளை நினைவில் கொள்வேன்;

எனது பெருமைகளை எண்ணி  மகிழும் போது  நான் அவமான அடைந்த தருணங்களை  நினைவிற்கு கொண்டு வருவேன்; நான் வல்லமை மிக்கவன் என்றஉணர்வு வரும் போது வீசுகின்றகாற்றை நிறுத்த முயல்வேன்; அதிகளவு செல்வம் சேரும் போது உணவு கிடைக்காத வாய் ஒன்றை எண்ணிக் கொள்வென்;

என்னைப்பற்றி கர்வப்படும் போது எனது பலவீனமான  குணங்களை நினைவில் கொள்வேன்; எனது திறமைகள் இணையற்றவை என பெருமைப்படும் போது உயரத்திலுள்ள நட்சத்திரங்களை நோக்குவேன்  என தன் அனுபவத்தைப் பதிவு செய்கிறார் ஓக் மாண்டினோ.

ஜோதிடமுத்துக்கள்: ஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தித்த பின்:

ஜோதிடமுத்துக்கள்: ஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தித்த பின்:   

ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு:

லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர். லக்னாதிபதி இருக்கும் இடம் அவர்மனப்பாங்கை தீர்மாணிக்கும்.

லக்னாதிபதி லக்னத்தில் பலம் பெற்றால் நேர்மறை மனப்பாங்கு உடையவர், 1,2,3,4,5,7,9,10,11 ல் இருப்பது நேர்மறை மனப்பாங்கைத் தரும்....

உச்சம், ஆட்சி, நட்பு, பகை, சமம், நீசம் பெறும் பலம் பொறுத்து நேர்மறை மனப்பாங்கை செயல்படுத்தும் நிலை தரும்.

லக்னாதிபதி 6,8,12ல் இருப்பது எதிர்மறை மனப்பாங்கை தரும். பெறும் பலம் பொறுத்து செயல்படும் நிலை இருக்கும்.

தீய திசை புத்திகளில் தொடர்ந்து வரும் பிரச்சினைகளால் நமது சூழ்நிலைகளால் எதிர்மறை மனப்பாங்கு ஏற்பட்டு எல்லா வகையிலும் பிரச்சினைகளை அதிகரிக்கும்.

நல்ல திசை புத்திகளால் உற்சாகமும் வெற்றி களிப்பும், மகிழ்ச்சியும் உருவதால், நேர்மறை மனப்பாங்கு ஏற்பட்டு சோதனைகளை சாதனைகளாக, எல்லோர்க்கும் நல்லவனாகும் நிலை ஏற்படும்.

6,8,12 , பாதகஸ்தானம், சனி , ராகு , கேது, இவற்றின் திசையில் சுய புத்தியில் மிகுதியான எதிர்மறை மன்பாங்கு அதிகரிக்கும். சனி ராகு கேது உபஜெய ஸ்தாணங்களில் இருந்தால் நேர்மறை மனப்பாங்கு தரும் மற்ற நல் பாவங்களின் 1,2,3,4,5,7,9,10,11 மற்றும் சூரி, சந், செவ், குரு, சுக் திசா புத்திகளில் நேர்மறை மனப்பாங்கு தந்து வாழ்வில் வெற்றி தரும்.

சூரியன் சனி, சனி செவ்வாய் தொடர்பு , சேர்க்கை, சம்பந்தம் சந்தேகபுத்தியை தரும்

ஜோதிட முத்துக்கள் :

லக்னாதிபதி 8 -ல் இருந்தால் - ஜாதகன் கஞ்சனாகவும் செல்வத்தை சேமிப்பவனாகவும் இருப்பான். லக்கனாதிபதி சுபக்கோளாகில் நீண்ட ஆயுள் உடையவனாகவும், பாபராகில் குறைந்த ஆயுள் உடையவனாகவும் இருப்பான்.

2-ஆம் அதிபதி 8-ல் நின்றால் - ஜாதகன் தற்கொலை செய்து கொள்பவனாயும், கபாலத்தைக் கொள்பவனாயும் , உயர்ந்த குடியில் பிறந்தாலும் வெகு விரைவில் தாழ்ந்த நிலையை அடைவான்.

3 - ஆம் அதிபதி 8 -ல் நின்றால்- ஜாதகனின் சகோதரன் நோயாளியாவான். அசுபக்கிரகமானால் 8 - வது வயதில் ஜாதகனுக்கு நோ...ய் - கண்டத்தை ஏற்படுத்தும். சுபக்கிரகமாயின் நோயிலிருந்து விடுபடுவான்.

4 - ஆம் அதிபதி 8 -ல் நின்றால்- ஜாதகனுக்கு தீராத வியாதி இருந்து கொண்டேயிருக்கும். தீய செயல்களில் ஈடுபடுபவனாகவும் இருப்பான்.

5 - ஆம் அதிபதி 8 -ல் நின்றால்- ஜாதகனின் மனைவி ஒல்லியாகவும், வீட்டுச்செயல்களை முடிக்க இயலாதவளாகவும் இருப்பாள்.

6 - ஆம் அதிபதி 8 -ல் நின்றால்- ஜாதகன் எப்பொழுதும் கவலைப்பட்டவனாகவும், நண்பர்கள் அற்றவனாகவும், எதிரிகளால் ஆயுளுக்கு பங்கத்தை ஏற்படுத்திக் கொள்பவனாகவும் இருப்பான்.

ஜோதிடமுத்துக்கள் :

பிறப்பு ஜாதகத்தில் குருவும் சனியும் சேர்ந்திருந்தால் இளம் வயதிலேயே வேலைக்கு செல்லும் நிலை ஏற்படும்

சுக்கிரன் + புதன் + சனி - சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்ற ஜாதகன்- பொன், ஆடை , ஆபரணங்கள், வீடு, வாகன வசதிகளை அடைவான்.

சுக்கிரன் + குரு + சனி - சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்ற ஜாதகன்- வாலிப வயதில் ஏராளமாக சம்பாதித்து மிகுதியான செலவு செய்வான்.

செவ்வாய் + சந்திரன் + சூரியன்- சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்ற ஜாதகன்- கிராம தலைவனாகும் அமைப்பு உண்டு. பேச்சு திறமையின் காரணமாக புகழ் பெறுவான்....

சூரியன் + சந்திரன் + புதன் சேர்க்கை- சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்ற ஜாதகன்- அரசனைப் போல செல்வமும் செல்வாக்கும் பெற்றவனாவான்

குரு + புதன் + சூரியன் சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்றால் ஜாதகன் செல்வந்தன் ஆவான். வீடு, நிலம் ஆகியன பெற்று சிறப்பான வாழ்க்கை அமையும்.

குரு + சுக்கிரன் + புதன் - சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்றால் ஜாதகன் பாக்கியமுள்ளவன். இளம் வயதில் செல்வம் சேர்ப்பவன். குடும்பத்தாருடன் ஒற்றுமையாக வாழ்பவன்.

செவ்வாய் + சுக்கிரன் + சனி - சேர்க்கை சுப ஸ்தானங்களில் நின்றால் , ஜாதகனுக்கு பிறக்கும் மகன் நற்பண்புகள் இல்லாதவனாக இருப்பான். அதனால் ஜாதகனுக்கு பொருள் நஷ்ட...மும் மான இழப்பும் ஏற்படும்.
குரு + சனி சேர்க்கை - வலிமை பெற்று சுப ஸ்தானங்களில் நிற்க - ஜாதகன், புகழ் உள்ளவன். செல்வம் சேர்ப்பவன். ஒழுக்கமுள்ளவன், கொடுத் வாக்கை காப்பபாற்றுபவன். பெரியோர்களை மதிக்கத் தெரிந்தவன்.

7-ல் சனி, லக்கனத்தில் - குரு இருக்க பிறந்த ஜாதகனுக்கு வாதநோய், பக்கவாதம் ஏற்படும்.

5, 9 -ல் சனி இருந்து -அந்த சனியை செவ்வாய் , சூரியன் பார்த்தால் பல் வியாதி.

லக்கனத்திற்கு 4 அல்லது 10 -ல் - சூரியன் + செவ்வாய் சேர்க்கை - மலை மீதிருந்து வீழ்ந்து சாவான் அல்லது உயரமான இடத்தில் இருந்து விழுந்து உயிர் துறப்பான்.
லக்னத்திற்கு 10 - ல் சந்திரன், 7 -ல் செவ்வாய், சூரியனுக்கு 2-ல் சனி இருக்க பிறந்தவன் - அங்க வீணணாக இருப்பான்.

லக்கனத்திற்கு 10 -ல் சந்திரன், 7 -ல் சுக்கிரன், 4-ல் பாவர்கள் இருக்கப் பிறந்த ஜாதகனுக்கு புத்திரர்கள் ( சந்ததி ) நசிந்து போகும்.
5- க்குடையவன் 10-லும் , 10 -க்குடையவன் 5-லும் பரிவர்த்தனைப் பெற்று இருப்பது , அல்லது
5- ல் 2 -ஆம் அதிபதி அல்லது புதன் + சனி + செவ்வாய் --- சேர்க்கைப் பெற்று பலம் பொருந்தி இருக்க பிறந்த ஜாதகர்- வைத்தியத்தில் வல்லுனர் + இரண சிகிச்சை புரிவதில் சமர்த்தர்.
1-5-9- க்குடையவர்வர் 6- ல் அமர்ந்து 12-ஆம் அதிபதி 5- அமர்ந்து இருக்கப் பிறந்த ஜாதகி- கர்ப்பச்சேதம் அல்லது வயிற்றிலேயே குழந்தை இறந்து பிறக்கும்.
5 - ஆம் வீட்டில் அல்லது 5 -ஆம் அதிபதியுடன் , அல்லது குரு - இவர்களை செவ்வாய் பார்கினும் அல்லது சேர - பிறந்த ஜாதகிக்கு கர்ப்பத்திலேயே குழந்தை இறந்து பிறக்கும்.
5 -ஆம் வீடு - கன்னி , கும்பமாகி அதில் புத்திர ஸ்தானாதிபதி + மாந்தி நிற்கினும், 5 -ஆம் வீட்டை 6-8-12- க்குடையவர்கள் பார்த்தால் தத்துபுத்திரர் உண்டு.






புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் அதிகமாக தூங்குவாள்
சுகமும், உணவும் அதிகமாக விரும்பமாட்டாள்
யாருக்கும் வஞ்சகம் செய்ய மாட்டாள்...
இவள் மனதில் ஆசையும் இருக்காது.,
பயமும் இருக்காது
கொண்ட கணவன் மீது குறை சொல்ல மாட்டாள்
கணவனே தனக்கு எல்லாம் என்று கருதுவாள்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் உருவான தொடையும், 
மெலிந்த காலும், கரிய கூந்தலும்,
பருத்த கண்ணும், அளவில்லாத தனங்களும், சிறு சொல் சொல்லுதலும்,
நல்ல அழகும் உடையவள் இவள்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் உச்சந்தலை சிறிது உயர்ந்திருக்கும்
பொய் பேசுவாள், ஆனால் அச்சம் இருக்கும்.
அன்பில்லாதவள் போல் காணப்படுவாள்...
அண்டியவருக்கு உதவி செய்வாள்
உறவினரைக் காப்பாற்றுவாள்
இரவு நேரத்தில் சாப்பிட்டு விட்டுப் படுத்தால் தன் பெருமையை பற்றியே பேசிக் கொண்டிருப்பாள்

ஆண் ஜாதகத்தில களத்திரகாரகனான சுக்கிரன் கன்னியில் நின்று அந்த ஆணுக்கு வரும் மனைவியின் ஜாதகத்தில் கன்னி ராசியில் கேது கிரகம் இருக்கக்கூடாது. இந்நிலையில் உள்ள ஜாதகம் இணைந்தால் அந்த ஆணின் காமம் அந்த பெண்ணிடம் செல்லாது. காம விஷயத்தில் விரக்தியே மிஞ்சும். மற்ற கிரக நிலையை அனுசரித்து விவாகப்பிரிவினைக்கும் இட்டுச் செல்லும். பொருத்தம் பார்க்கும் போது இந்நிலையை கவனித்துச் சேர்க்க நலம்.

மணவாழ்க்கை மகிழ்ச்சிக்கான விதிகள்

ஒருவரின் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய லக்கின ராசிக்கு 7ம் பாவமும், களத்திரகாரகன் சுக்கிரனும் லக்கின சுபர்களின் சம்பந்தம் பெறவேண்டும்.
இவர்கள் அம்சத்தில் ஆட்சி உச்சம் பெற்று எந்த வொரு பாவ கிரக தொடர்பு பெறாமல் இருந்தால் அச் ஜாதகரின் திருமண வாழ்க்கையானது மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை உறுதியாக கூறலாம். மேலும் 7ம் அதிபதி அம்சத்தில் ஆட்சி, உச்சம் பெற்று இருப்பின் திருமணத்திற்கு பிறகு முன்னேற்றம் பன்மடங்கு இருக்கும்....

லக்கினத்திற்கும் லக்கினாதிபதிக்கும் கேந்திர கோணங்களில் 7ம் அதிபதி சுபர் தொடர்பில் இருந்தால் அவரின் மணவாழ்க்கை பிரகாசிக்கும்.
தோஷம் இல்லாத் குருவின் பார்வை 7ம் அதிபதி மேல் இருப்பது யோகத்தை உறுதிசெய்யும். சுபரான சனியின் பார்வை 7ம் அதிபதி மேல் இருந்தால் திருமணத்திற்கு பின் யோகத்தை கொடுத்து நிம்மதியை பரித்துவிடுவார். அல்லது வாழ்க்கை துனைவிக்கு எதேனும் நிரந்தர நோயை தந்துவிடுவார்.
செவ்வாயின் பார்வை அதிகாரம் மிக்க துனைவி அமைவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் உண்டு. பொதுவாக திரிகோணதிபதிகளின் பார்வை 7ம் அதிபதி அல்லது சுக்கிரன் மேல் இருப்பது நலம் பயக்கும்.

ஜென்ம லக்கினத்திற்கு 2, 7ம் அதிபதிகள் 6, 8, 12 ல் மறையாமல் இருப்பதும் 2, 7ம் அதிபதிகள் வக்ரம் பெறாமல் இருப்பதும். ஜென்ம லக்கினாதிபதியும் 7ம் அதிபதியும் ஒருவருக்கொருவர் மறையாமல் இருப்பதும் நல்லது. ஒற்றுமையை நிலை நிறுத்தும்.
மேலும் ஆண்களுக்கு 7ம் அதிபதி மற்றும் சுக்கிரனும், பெண்களுக்கு 7ம் அதிபதி செவ்வாயும் , குருவும் நல்ல நிலையில் இருப்பது அவசியம்.
இவர்கள் யாருடனும் சேர்ந்து கெட்டுவிட கூடாது. குறிப்பாக இவர்கள் நின்ற வீட்டதிபதிகள் ராசியிலோ அல்லது அம்சத்திலோ நீச்சம் பெறக்கூடாது. ராகு கேதுக்களுடன் சேரவும் கூடாது.
ஒருவரின் ஜாதகத்தில் திருமண பாவகங்களான 1,2,4,7,8,10,12 ல் பாவகிரகங்கள் ஏதும் இல்லாமல் பலமாக அமையப் பெற்றால் மண வாழ்க்கையானது மகிழ்சிகரமானதாக‌ இருக்கும்,.பொதுவாக 7ம் மிடம் சுத்தமாக இருப்பது அவசியம்.

சம்போக விஷயம்:

திருமணம் ஆன தம்பதியினரின்  தாம்பத்யம் (உடல் உறவு ) வைத்துக்கொள்ள கூடாத நாட்கள்...

ஏகாதசி , பவுர்ணமி , அமாவாசை ,மாதப் பிறப்பு ஆகும்.
இது தவிர மாதவிடாய் ஏற்பட்ட முதல் மூன்று நாட்களும் சேர்க்கைக்கு ஆகாத நாட்களாகும்.

பெண்ணானவள் மாதவிடாய் முடிந்த நான்காம் நாள் சேர்ந்தால் பிறக்கும் ஆண் குழந்தை சிறந்த கல்வியாளனாக இருக்கும்

6ம் நாள் சேர்ந்தால் பிறக்கும் ஆண் குழந்தை சிறந்த தவ வலிமையும் ஞானமும் உடையதாக இருக்கும்
7,ம் நாள் சேர்ந்தால் பிறக்கும் பெண் குழந்தை கொடைத் தன்மை மிகுந்ததாகவும், தயை தாட்சண்யம் கொண்டதாகவும் இருக்கும்
9ம் நாள் சேர்ந்தால் பிறக்கும் பெண் குழந்தையானது செல்வச் செழிப்பு மிக்கதாக இருக்கும்
10ம் நாள் சேர்ந்தால் பிறக்கும் ஆண் குழந்தையானது காமம் மிகுந்ததாகவும், பெண் மோகங் கொண்டதாகவும் இருக்கும்
12ம் நாள் சேர்ந்தால் பிறக்கும் ஆண் குழந்தையானது சிறந்த பாண்டித்தியமுடைய நிபுணராகவும் 
கல்வி , கேள்விகளில் வல்லவனாகவும் விளங்கும்
15,ம் நாள் சேர்ந்தால் பிறக்கும் பெண் குழந்தையும் 
16ம் நாள் சேர்ந்தால் பிறக்கும் ஆண் குழந்தையும் சிறந்த யோகியாகவும், ஞான மார்க்கத்தில் ஈடுபடுவதாகவும் இருக்கும்
நல்ல நாட்கள் மட்டுமே பதிவிடப்பட்டு உள்ளது. நன்றி-காளிதாஸர், உத்தர காலாமிர்தம்
புகழ் உடைய குழந்தை பிறக்க. ஒருவருடைய சாதகத்தில் குரு,செவ்வாய்,சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களும் சேர்ந்து 1,2,5,9,11 ஆகிய ஜந்து வீட்டில் ஏதேனும் ஒரு வீட்டில் இருந்தால் இளமையிலே பேரும்,புகழும் அடைய கூடிய குழந்தை பிறப்பான்.

புத்திர தோஷம்

ஒரு ஜாதகத்தில் புத்திர ஸ்தானம்என்பது ஜந்தாமிடம் அதேபோல் 
ஜந்தாமிட அதிபதி புத்திரஸ்தானாதிபதி,குரு புத்திரகாரகன்....
ஒருவருக்கு குழந்தை பாக்கியம் குறைவின்றி கிடைக்க மேற்கண்ட மூன்று ஸ்தானங்களும் பாதிப்படைய கூடாது.

மேற்கண்ட மூன்று ஸ்தானங்களுடன் பாவிகள்( ராகு,கேது,சனி) சேர்க்கை, பார்வை, நட்சததிர சாரம் பெற்று,சுபர் பார்வையின்றி இருந்தாலும்,
இதேபோல் குரு, புத்திர ஸ்தானதிபதி நீசம்,அஸ்தங்கம்,பகை மற்றும் மறைவு ஸ்தானங்களிலிருந்து பாவிகள் பார்வை பெற்று,சுபர் பார்வையின்றி இருந்தாலும் புத்திர தோஷம்

பரிகாரம் :ராகு,கேது ஸ்தலங்களுக்கு சென்று சர்ப்ப சாந்தி பரிகாரம் செய்து கொள்ளவும்.
குரு ஸ்தலத்திற்கு வியாழக்கிழமை சென்று வழிபடவும்.
அரச மரம் சுற்றி வந்து சுமங்கலி பெண்களுக்கு பூ,பொட்டு,மஞ்சள்,துணி தாணம் செய்யவும்

1.ஜந்துக்குசடையவர் புதன் வீட்டில் ஏறி ஏகனாய் தனித்து நின்றால்குழந்தை இல்லை.கூட்டு கிரகம் இருந்தால் அல்லது பார்வை பெற்றால் மறுதாரம் செய்து 7 ஆண்டுக்கு பிறகு ஆண்குழந்தை பிறக்கும்
2.குருவோடு,சூரியன் அவருக்கு ஏழில் சனியும்,செவ்வாயும் சேர புத்திர வம்சம் நிற்காது.சந்திரன் கூடியிருக்கில் தாய்க்கு தோஷம்....
நன்றி கேரள சோதிடம்

திருவாதிரை நட்சத்திரத்திலாவது,அஸ்த்த நட்சத்திரத்திலாவது புத்திர ஸ்தானதிபதி இருந்தால் புத்திரன் இல்லை.

புத்திர ஸ்தானதிபதி புதனாகி சனி வீடு ஏறினாலும், புத்திரஸ்தானாதிபதி சனியாக அமைந்து புதன் வீடு ஏறினாலும் புத்திரம் இல்லை என பிரஹத் சோதிடம் கூறுகிறது.

அதிமதுரம் :
மாதவிடாய் காலத்தில் இதை உட்கொண்டு, பின் கணவனுடன் இணையும் பெண், கருத்தரிப்ப‍து நிச்ச‍யம்!!!
ம‌ணமாகியும் இன்னும் குழந்தை பேறு கிட்ட‍வில்லையே என்று ஏங்கும் கணவன் மனைவிகளை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். அவர் களுக்கு ஓர் இனிப்பான
செய்தி...
அதிமதுரம், உலர் திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 – 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாத விடாய் தொட ங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், 6 ஆவது நாளில் கணவனுடன் தாம்பத் தியம் கொள்ளும் பெண்ணுக்குக் கருத்தரிக்கும். சில பெண்களுக்கு இது தாமதப்படலாம். அவர் கள் சோர்ந்து போகாமல் கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள்வரை இதுபோன்றே சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை கூடிய விரைவில் எதிர்நோக்க‍லாம்.


புதன் அஸ்தங்கம் ஒருவரை கல்வியில் சிறந்தவர் ஆக்கும். புதன் வக்கிர அஸ்தங்கம் ஒருவரை மிக சிறந்த அறிவாளியாக்கும். எனினும் சந்திரனின் நிலை கொண்டே அவர்களின் புத்திசாலிதனத்தை (நல்ல வழி/தீய வழி ) செயல்படுத்தும் என்ற நிலை அமையும். ஏனெனில் புதனின் இயக்கம் சந்திரனின் நிலை பொருத்தது.
இங்கே சந்திர நிலை என்பது
1. சந்திரனுடன் சேர்க்கை பெற்ற கிரகம்,
2. சந்திரனை பார்க்கும் கிரகம்
3. சந்திரன் அமர்ந்த நட்சத்திர அதிபதி....
4. சந்திரன் உச்சம் மற்றும் நீசம்
5. சந்திரன் இருக்கும் ராசி
Note: சந்திரனுடன் குரு சேர்க்கை இதில் சிறப்பு மிக்கது

சந்திரன், சுக்ரன் , ராகு ஆகியவை பெண் கிரகங்கள்சூரியன், செவ்வாய், குரு ஆகியவை ஆண் கிரகங்கள்.புதன், சனி, கேது ஆகியவை அலி கிரகங்கள்.

அமாவாசையில் பிறந்தவர்களிடம் ரகசியம் அறிய முடியாது.பௌர்ணமியில் பிறந்தவரின் ரகசியம் உடன் அறியலாம்.

சுகத்திலும்(4),விரயத்திலும்(12) பாவியிருக்க(பாவ கிரகங்கள்) பஞ்சம ஸ்தானாதிபதியுடன்(%) கதிரோன் மைந்தன்(சனி) கூட பெற்ற தாய் இட்ட சாபத்தால் பிள்ளை இல்லாமல் போகும்.

ஆறுமி ஆறுதன்னில் அம்புலி கதிரோன் சேர 
கூறுவார் ஈனம் என்று கொடும் பிணி விரோதன்
சீருள அன்னை தந்தை செல்வமும் விரயமாவதுடன் 
வேறு வேறு ஆவார் என்பது வேதியர் உரைத்த வாக்கு." 
பலன்: சூரியனும்,சநதிரனும் 12_ல் கூடினால் தாய்,தந்தை செல்வம் குறைவதோடு தனித்தனியாக வாழ்வார்கள்.

பேசிடும் நாலாமாதி பலத் திரி கேண மேறில்
காசி யாத்திரையே போவான் கணக்கனும் பார்வை
யுற்றால்
தேசமும்சுற்றி மன்னன் திசையெட்டும் பேரு மோங்க
வாசமாயிருக்கப் பூவியில் வணங்கு வாரிவரைத்தானே
...
நான்காம் அதிபதி பலம் பெற்று 1-5-9-ல் இருந்தால் பல புண்னிய திர்த்த யாத்திரைகள் செல்வார்கள். புதனும் நான்காம் அதிபதியை பார்த்தால் பல நாடுகள் சுற்றி வருவர்கள். எட்டு திசையிலும் மன்னனைப்போல் புகழ் பெறுவர்கள். உலகில் அனைவரும் இவரை வணங்குவர்கள்.
பிரபல சாமிஜி சர்சைக்குரீய ஒருவர் ஜாதகத்தில் இந்த அமைப்புள்ளது.

நவக்கிரக காரகத்துவங்கள் :

சூரியன்: தந்தை, மகன், வலது கண்,அரசாங்கம், அமைச்சர், ஆத்மா, புகழ்,கீர்த்தி, மாநகரம், நிர்வாகப்
பொறுப்பில் உள்ளவர், சிவன்,...அரசியல்வாதி, வீட்டின் வலது ஜன்னல்,சந்தன மரம், தேக்கு, பொன் ஆபரணம்,மண், அணுத் தொழில், அறுவைசிகிச்சை நிபுணர், துப்பறிதல்,தந்தையின் தொழில்.

சந்திரன்: மனம், ஆழம், அறிவு, தாய்,மாமியார், திரவப் பொருள், பயணம்,உணவுப்பொருள், இடது கண்,
இடமாற்றம், கற்பனை, பால், நதி,கள்ளக்காதல், வீட்டின் இடப்புற ஜன்னல்,துர்நடத்தை, குளிர்ச்சி, தாய்மாமன்மனைவி, சோதிடம், அரிசிவியாபாரம், பழ வியாபாரம், கவிதை,ஓவியம், நீர் தொடர்பான தொழில்,பார்வதி.

செவ்வாய்: சகோதரன், கணவன், பழி வாங்குதல், மனவலிமை,காவல்துறை, இராணுவம், வெட்டுக்
காயம், வீரம், பூமி, ரத்தம், பல்,முருகன், எதிரிகள், கூர்மையான ஆயுதம், திருமணம், விவசாயம்,
அடுப்பு, மின் கருவி, பாறை, வீட்டு உத்திரம், தீயணைப்புத் துறை,செங்கல் சூளை, தாதுப் பொருட்கள்,
பொறியியல் துறை, சுரங்கத் துறை, அறுவை சிகிச்சை.

 செவ்வாய் காரகத்துவம் : { ஆண்கள் }

கட்டுக்கோப்பான உடல், குறையில்லாத ரத்த ஓட்டம், சுகபோகம் தரும் வீரியம், ஆகிய தன்மைகள், செவ்வாய் நல்ல முறையில் ஒரு ஆண் ஜாதகத்திலிருந்தால் அமையக்கூடியனவாகும்.
 செவ்வாய் காரகத்துவம்: { பெண்கள் }
காலத்தே பூப்பெய்துதல், முறையான மாத விடாய் ஆகியன, ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் நல்ல முறையில் இருந்தால் அமையக்கூடியனவாகும்.

புதன்: கல்வி, அறிவு, வணிகம்,பேச்சுத்திறன், நிலபுலன், கணக்கர்,கணிதம், பத்திரிகைத் தொழில்,
நண்பன், இளைய சகோதரி, சகோதரன், தாய் மாமன், காதலி, காதலன், சட்டம்,கைகள், கழுத்து, வரவேற்பு அறை,உள்ளங்கை, சோதிடம், தொலை பேசி,புலனாய்வுத் துறை, தரகு,
மஹாவிஷ்ணு, தூதரகப்பணி.

குரு: ஜீவன், வேதம், பக்தி, ஞானம்,ஒழுக்கம், கோவில், வழக்கறிஞர்,நீதிபதி, உயர்குலம், ஆசிரியர்
கௌரவம், சாந்த குணம், தெற்கு,சதை, தொடை, பூஜை அறை, பசு,அமைச்சர், நிர்வாகி, மூக்கு,
கரும்பு, வாழை, சோதிடம்,நீதித்துறை, தட்சணாமூர்த்தி.

சுக்கிரன்: மனைவி, சகோதரி,காமம், காதல், பாடகன், நடிகன், வீடுசுகம், வாசனைத் திரவியங்கள்,
ருப்பை, கன்னம், வட்டித் தொழில், மதுபானம், ஆடை ஆபரணங்கள், மலர்,வேசி, திருமணம், பிந்து, பணம்,இனிப்பு, சிறுநீரகம், கேளிக்கை விடுதி, துணிமணிகள், பிரம்மா,மஹாலட்சுமி, மூத்த சகோதரி,
மூத்த மரு மகள்.

சனி: மூத்த சகோதரன், சேவகன்,கழுதை, எருமை, தொழில்காரகன்,தாடை, பிட்டம், பூட்டு, ஜீரண
உறுப்பு, சேமிப்பு அறை,சாப்பாட்டு அறை, சாலை, வாயுசம்பந்தமான நோய், நிலக்கரி,
சோம்பேறித்தனம், பிச்சை எடுத்தல்,தொழிற்சாலையில் எடுபிடிவேலை, ஹோட்டல் சுத்தம் செய்யும்
வேலை, பழைய பொருள் விற்பனை,துப்புறவுத் தொழில், கால்நடைவளர்த்தல், லட்சுமி, பரமசிவன், கர்மா,அரசு தூதுவர்.

ராகு: வாய், உதடு, காது, முஸ்லீம்,கோபுரம், அகலமான வீதி, தகப்பன்வழிப் பாட்டன், தலை, நிழல், மாயை,குடை, பாம்பின் தலை, கடத்தல்தொழில், உலர்ந்த தோல், பிளாஸ்டிக்,இரசாயனம், மொட்டை மாடி,சேமிப்புக் கிடங்கு, விதவை,தொழுநோய், மருத்துவம்,வெளிநாட்டு வர்த்தகம், விபசாரம்
செய்தல், வாகனம் ஓட்டுதல், சினிமாத்தொழில், போகக்காரகன்.

கேது: சாயா கிரகம், மோட்ச காரகன்,கயிறு, நூல், கூந்தல், மூலிகை,பாம்பின் வால், குறுகிய சந்து,
மருத்துவம், சோதிடம், ஆன்மீகம்,சட்டத்துறை, துறவறம், தாய்வழிப்பாட்டன், நரம்பு, குளியல் அறை,
ஞானம், தவம், மனவெறுப்பு,கொலை செய்தல்.



பாதகாதிபதி யார் ??
=======================
சரத்திற்கு (மேசம், கடகம், துலாம், மகரம்) லாப ஸ்தானமும் 
ஸ்திர ராசிக்கு (ரிஷபம், சிம்மம், விருச்சகம்) பாக்ய ஸ்தானமும்
உபயதிற்க்கு (மிதுனம், கன்னி, தனுசு, மீனம்) களத்திர ஸ்தானமும்...பாதக ஸ்தனங்கள் மற்றும் அதன் அதிபதிகள் பாதகாதிபதிகள்.

சர லக்னத்து பாதகாதிபதிகள் - கால புருஷ சக்கரத்திற்கு பண பர கேந்திரங்களையும் (2, 5, 8, 11) பாதிப்பதை காணவும்
ஸ்திர லக்ன பாதகாதிபதிகள் - கால புருசனின் லக்ன கேந்திரங்களையும் (1, 4, 7, 10) பாதிப்பதை காணவும்
உபய லக்ன பாதகாதிபதிகள் - கால புருசனின் அசுப கேந்திரம் என்னும் அபோலீகதையும் (3, 6, 9, 12) பாதிப்பதை காணவும்.

இதன் மூலம் சர லக்ன பாதகாதிபதி பலம் பெற, பாதகாதிபதி தன் காரகத்துவ மூலம் பணவரவை தடுக்கும், பணம் தேவையற்ற வழிகளில் செலவழியும் அல்லது சேர்த்துவைத்த பணத்தால் அவமானம் ஏற்படும்.
இதன் மூலம் ஸ்திர லக்ன பாதகாதிபதி பலம் பெற, கேந்திரத்தில் இருக்க, பாதகாதிபதி காரகதுவதில் தொழில், மனைவி மற்றும் ஆரோக்கியம் மூலம் அவமானம், இழப்பு ஏற்படும்.
இதன் மூலம் உபய லக்ன பாதகாதிபதி பலம் பெற, கேந்திரத்தில் இருக்க, பாதகாதிபதி காரகதுவதில் வீரிய இழப்பு, எதிரிகளால் தொல்லை மற்றும் காம எண்ணங்களால் பாதிப்பு போன்றவைகள் ஏற்படும்.

ரிஷிபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் ஆகிய நான்கு லக்னங்களும் ஸ்திர லக்னங்கள்.இந்த லக்னங்களில் பிறந்த பெரும்பாலான ஜாதகர்கள் ஜோதிட கலையில் ஆர்வம் உள்ளவர்களாவும் மற்றும் சிறந்த ஜோதிடர்களாவும் திகழ்கிறார்கள்
பாதகாதிபதி எப்போது நன்மை செய்வார்
====================================
1. பாதகாதிபதி லக்ன திரிகோணத்தில் இருந்து, திரிகோண அதிபதி பலம் பெற நற்பலன்கள் உண்டாகும். முன்னோர்கள் செய்த புண்ணிய காரியங்கள் ஜாதகனை காக்கும்.
2. பாதகாதிபதி லக்ன தொடர்பு கொள்ளாமல், லக்னத்துக்கு மறைவு பெறும் போது நன்மை செய்வார்கள். கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
3. பாதகாதிபதி நீச பங்கம் பெற்று இருக்க நன்மை உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
4. தன் சுய வீட்டிற்க்கு மறைந்திருந்தால் நன்மை உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
5. பாதகாதிபதி திரிகோனாதிபதிகள் நட்சத்திரத்தில் இருக்க பலன் உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
6. பாதகாதிபதி வக்கிரம் பெற நன்மை உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
7. பாதகாதிபதியை சனி பார்க்க நன்மை உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
8. பாதகாதிபதி ராகு மற்றும் கேதுகளின் சமந்தம் பெற நன்மை உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
9. பாதகாதிபதி பலம் இழந்தால் பாதக ஸ்தானமும் பலம் இழக்கும் என்ற கூற்றுபடி, பாதகாதிபதியால் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது.
10. பாதகாதிபதி திரிகோண அதிபதியுடன் பரிவர்த்தனை பெற்றால் நற்பலன்கள் உண்டு.
11. பாதகாதிபதி அஸ்தங்கம் பெற, அந்த கிரக காரகத்துவம் பாதிக்கபட்டு, பாதகா ஸ்தனம் பலம் இழக்கும்.
12. பாதகாதிபதி ராசியதிபதியாக வரும்போது தீமைகள் செய்வதில்லை.

குறிப்பு: குரு பாதகாதிபதி வரும் கன்னி மற்றும் மிதுன லக்ன ஜாதகத்தில், குருவின் பார்வை நமையே செய்யும். ஏனெனில் பார்வை என்பது ஒரு கிரகத்தின் காரகத்துவ வெளிபாடு என்பதே. அது பாவஆதிபத்திய வெளிபாடு அல்ல.

பாவம் 
6,8,12 அதிபதிகள் லக்கின அசுபர்கள் இல்லை. லக்கின அசுபர்கள் 3,6,11 ஸ்தானாதிபதிகள் தான். மேச லக்கினம் 1,8க்கு அதிபதி செவ்வாய் லக்கின அசுபர் இல்லை, ரிஷப லக்கினம் 1,6 க்கு அதிபதி சுக்கிரன் அசுபர் இல்லை, கும்ப லக்கினம் 1,12 அதிபதி சனி அசுபர் இல்லை. எந்த பாவமும் நல்ல பாவம் இல்லை, எந்த பாவமும் கெட்டபாவமும் இல்லை. எந்தக் கோளும் நல்வர்கள் இல்லை எந்தக் கோளும் கெட்டவர்கள் இல்லை. அந்த அந்த பாவங்களும் அதன் வேலையை செய்கிறது. இதெபோல் கோள்களும். 6,8,12 ல் நல்ல காரகத்துவங்களும் இருக்கத்தான் செய்கிறது. உதாரணம். 6 - உப ஜெயம். 8 - பணபரம் (பணம் வரும் வழி). 12 - வெளி நாட்டு வாசம் / படுக்கை சுகம்.
  ராகு
உயிர்யுள்ள தன்மைகளை அழிக்கும்...உயிர் அற்ற தன்மைகளை பெருக்கும்
கேது
உயிர்யுள்ள தன்மைகளை பிரிக்கும்...உயிர் அற்ற தன்மைகளை அழிக்கும்

கிரக நீச்சம் யாரைபாதிக்காது?

சூரியன் - வேளாளர்,முதலியார்,வேடர்கள்,மலைவாசிகள்
சந்திரன்- வன்னார்,செம்படவர் செவ்வாய்... குயவர்,கருமன்
புதன்  - செட்டியார்,வாணியர்,கோமுட்டி
குரு - பிராமணர்,சேட்டு,ஜனர்கள்,
சுக்கிரன் - வேசிகள்,நட்டுவனர்,கோனார்,மந்திரி,இடையர்
சனி - அரிஜனம்
ராகு - முகமதியர்கள் 
கேது - கிருஸ்துவர்கள்,

மேற்கண்டவர்களுக்கு கிரகநீசத்தினால்பாதிப்புஇல்லை

திதி சூன்ய ராசிகள்:

திதி - சூன்ய ராசிகள் -அதிபதிகள்
பிரதமை - மகரம், துலாம் - சனி ...சுக்கிரன்
துதியை - தனுசு, மகரம் - குரு சனி
திருதியை - மகரம், சிம்மம் - சனி  சூரியன்
சதுர்த்தி - கும்பம்,ரிஷபம் - சனி  சுக்கிரன்
பஞ்சமி - மிதுனம், கன்னி - புதன்
சஷ்டி - மேஷம், சிம்மம் - செவ், சூரியன்
சப்தமி - தனுசு, கடகம் - குரு , சந்திரன்
அஷ்டமி - மிதுனம், கன்னி - புதன்
நவமி - சிம்மம் - சூரியன்
தசமி - விருச்சிகம் - செவ்வாய்
ஏகாதசி - மகரம்,துலாம் - சனி சுக்கிரன்
திரயோதசி - ரிஷபம் , சிம்மம் - சுக்கிரன்,  சூரியன்
சதுர்தசி - மிதுனம், கன்னி,் - புதன்
துவாதசி - துலாம் மகரம் - சுக சனி

# பௌர்ணமி, அமாவாசை திதி சூன்ய ராசிகள் இல்லை.

# ராகு, கேது சூன்ய ராசிகளில் இருந்தால் அதன் தசாபுத்திகளில் நன்மை தரும்.

# ஒருவர் துதியை திதியில் பிறந்தவரானால் தனுசு, மகரம் சூன்ய ராசிகளாகிறது. அதன் அதிபதிகள் குரு , சனியின் தசாபுத்திகளில் நன்மையான பலன்கள் நடைபெறுவதில்லை.

# சூன்யமடைந்த கிரகங்கங்கள் நலம் தரும் பாவங்களான, 1,2,4,5,7,9,10,11 இல் இருந்தால் நன்மை தருவதில்லை.

# அவை லக்கினத்திற்கு மறைவு ஸ்தானங்களான 3,6,8,12 இல் இருந்தால் நலம் தரும்.

# கேந்திர ஸ்தானங்களில் ஒரு கிரகம் சூன்யம் பெற்றால் தோஷம் நீங்கி நன்மை தரும்.

# சூன்ய ராசிக்குரிய கிரகம் வக்கிரம் நீசம் பெற்றால் நன்மையே தரும்.

# திதி சூன்யம் பெறும் கிரகங்கள் தன் காரக பலத்தை இழந்துவிடும். அதன் காரகத்துவத்தால் பாதிப்பு ஏற்படுத்தும்

# செவ்வாய் திதி சூன்யம் பெற்றால் உடன் பிறப்புகளால் நன்மை இல்லை.

# சந்திரன் திதி சூன்யம் பெற்றால் தாயாரின் அன்பை பெற மாட்டார்.

# சூரியன் திதி சூன்யம் பெற்றால் தந்தை பாசம் குறையும்

# புதன் திதி சூன்யம் பெற்றால் கல்வியில் தடங்கல் ஏற்படும்

# சுக்கிரன் திதி சூன்யம் பெற்றால் திருமணம் தாமதப்படும்

# குரு திதி சூன்யம் பெற்றால் புதல்வர்களால் நன்மை இல்லை

# சனி திதி சூன்யம் பெற்றால் தொழிலாளர்களால் பாதிப்பு ஏற்படும்

சகல தேவதை வசிய அஞ்சனம் :

இதனை நெற்றியில் திலகம் இட்டுக் கொண்டு எந்த மந்திரம் ஜெபம் செய்தாலும் அந்த தேவதை பிரசன்னமாகி நமக்கு வசம் ஆகும் தொட்டால் சுருங்கி வேர் பேய்தும்பை வேர் சிருமுன்னை வேர் வெண்குன்றி வேர் வெள்ளெருக்கன் வேர் பேய்தேத்தான் வேர் புன்னை வேர் சந்தனவேர் இவைகளை முறையாகக் காப்பு கட்டி சாபம் நிவர்த்தி செய்து ஹோமத் தீயில் கறுக்கி எடுத்து வைத்துக் கொண்டு பச்சை கற்பூரம் புனுகு கொரோசம் கும்குமப்பு கஸ்துரி இவைகளை வகைக்கு ஒரு குன்றிமணி பிரமாணம் சேர்த்து ஒரு ஜாமம் அரைத்து மை...யை எடுத்து வெள்ளி சிமிழில் பத்திரம் செய்யவும்.

சத்துரு வசிய அஞ்சனம்:

வெள்ளைக் காக்கரட்டைவேர் வெள்ளெருக்கன் வேர் வெண் குன்றிவேர் வெள்ளை விஷ்ணு காந்தி வேர் வெண்கொழிஞ்சிவேர் ஆனைவணங்கி வேர் இவைகளை முறைப்படி காப்பு கட்டி சாபம் பொக்கி ஆணிவேர் அறாமல் வெட்டி எடுத்து தீயில் கறுக்கி எடுத்துக் கொண்டு பச்சைக் கற்பூரம் கொரோசனம் புனுகு குங்குமப்பூ கஸ்துரி இவைகளை வகைக்கு ஒரு குன்றிமணி எடை வீதம் மேல்கண்ட வேருடன் சேர்த்து கலுவத்திலிட்டு காராம்பசு நேய் விட்டு இரண்டு ஜாமம் அரைத்து கொம்பு சிமிழில் பத்திரம் செய...்யவும் இதற்கு பூஜை மந்திரம் ஒம் க்லீம் ஸெளம் ஸ்ரீம் நமோ பகவதி ராஜமோகினி க்லீம் க்லீம் சகல ஸ்தாவர ஜங்கமம் மமவசம் ஆகர்ஷய ஆகர்ஷய ஸ்வாஹா இந்த மந்திரத்தை பத்தொன்பது தினம் ஜெபம் செய்ய வேண்டும் தினம் 1008உருவு வீதம் ஜெபம் செய்தால் மை உயிர்பெறும் இதன் பின் தான் இதைக் கொஞ்சம் எடுத்து நெற்றியில் அணிந்து சென்றால் பகையாளி கிடையாது எதிரி நம்மை காணும் போது வணங்கி மரியாதை செய்வான் இந்த சத்ரு வசியம் மட்டுமின்றி சத்துரு இல்லாமல் எல்லா நன்மையும் கூட அடையலாம்! பெண்களும் இது பயன்படுத்தலாம் ! சத்துருயாராயினும் நமக்கு நண்பராவது உறுதி !

 ஆன்மாவைப் பற்றி அறியும் கலைக்குப்பெயர் ஆன்மீகம்