Monday, February 29, 2016

எழுந்து வா..

உனக்கான வாழ்க்கை அங்கே காத்திருக்கிறது..

யாருக்குத்தான் இவ்வுலகில் பிரச்சனைகள் இல்லை சொல் ?

பிரச்சனைகள் மட்டுமே வாழ்க்கையில்லை..

பிரச்சனைகள் இல்லாமலும் வாழ்க்கையில்லை..

சின்னஞ்சிறு பிள்ளையை பார்

நடக்க முயல்கையில் ஆயிரம் முறை கீழே விழும்

ஆனால், உடனே எழுந்து நடக்கும்..

உன் வாழ்விலும் சறுக்கல்கள் இருக்கும்.

அதனால் வாழ்வே முடிந்துவிட்டதாய் அர்த்தம் இல்லை..

எழுந்து வா..

உன்னால் முடியும் !

பணம் , வாழ்க்கை , நாளை வாழ்வதற்கு பணம் தேவையாக இருக்கிறது:

பணம் சம்பாதிக்கவோ, நீ, உன் வாழ்ககையையே தொலைக்க வேண்டியிருக்கிறது.

இது ஒரு பொல்லாத வளையம்.

நீ வாழ வேண்டுமென்றால் உனக்கு பணம் தேவை,பணம் வேண்டுமென்றால் பலதோடும் ஒத்துப்போக வேண்டியுள்ளது.

அதன் பிறகு வாழ்வதற்கு உன்னிடம் வாழ்க்கை இருக்காது.

பணம் இருக்கும் : வாழ்க்கை இருக்காது.

பிரச்சனை இவ்வளவு குழப்பமாக இருப்பதால், சில வருடங்கள் இந்த வேலையைச் செய்தபின்,ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு ஓய்வாக நாம் நம் வழியை பார்த்துக் கொண்டு இருக்கலாம். என்று மக்கள் நினைக்கிறார்கள்.

இதில் பல பிரச்சனைகள் உள்ளன....

முதலாவதாக, ஒருவன் தொடர்ந்து வாழ்வதை தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். நீ முப்பது, இருபது வருடங்கள் வாழ்வதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தால்

அந்த தள்ளிப்போடும் தன்மையே உன் மனதின் பாகமாகி, உன் அமைப்பாகி விடும். நீ அதை கற்றுக்கொள்வாய்.

'ஓய்வுக்குப் பிறகு காட்டுக்குச் சென்று, நான் வாழ்வேன் ' என்று இருபது வருடங்கள் தள்ளிப்போட்டபின் தள்ளிப்போடுதல் ஒரு தன்மையாகிவிடும்.

"நாளை -நாளை -நாளை என்று முப்பதாண்டுகள் தள்ளியபின்,முப்பது வருடங்களுக்குப் பிறகு பென்சன் ஒருநாள் கிடைக்கும் : ஆனால் முப்பது வருடப் பழக்கமான 'நாளை 'யும் உன் கூடவே இருக்கும்."

திடீரென அதைவிட முடியாது. அது உன்னுடனே தங்கி இருக்கும்.
இப்போது நீ சிக்கிக் கொண்டாய்.

இதுவரைக்கும் ஒரு நம்பிக்கையாவது இருந்தது. இனி, அந்த நம்பிக்கைக்கும் வழியில்லை. இவ்வளவு நாளும் நாம் ஓய்வூதியம் பெற்று ஓய்வாக இருப்போம் என்ற நம்பிக்கையாவது இருந்தது.

பணப்பிரச்சனை தீர்ந்து விடும். சொந்த விஷயங்களை இனி செய்யலாம்.ஆடலாம்,பாடலாம் செய்ய விரும்பியதை எல்லாம் செய்யலாம்,ஏனெனில் இனி பணம் ஒரு பிரச்சனை இல்லை.

"ஆனால்,ஓய்வுக்குப் பிறகு, ஒருவன் வெறுமையையே உணர்வான். ஏனெனில்,அவனுக்கு,ஒரே மாதிரிதான் வாழத்தெரியும்...'நாளைக்கு வாழ்ந்து கொள்ளலாம் ' என்பதே அது"

ஓய்வு பெற்றவர்கள் சீக்கிரம் இறந்து விடுகிறார்கள். வேலையில் இருந்திருந்தால் இன்னும் பத்து வருடங்கள் வாழ்ந்திருப்பார்கள். எந்த வேலையில் எப்போதும் துன்பத்துடன் இருந்தார்களோ அதே வேலையை தொடர்ந்திருந்தால் இன்னும் பத்து ஆண்டுகள் வாழ்ந்திருப்பார்கள்.

ஓய்வினால் வாழ்வில் பத்தாண்டுகள் குறைந்து விட்டது. தொண்ணூறு வருடம் வரை வாழவேண்டிய மனிதன் எண்பது வரைதான் வாழ்வான்.

"ஓய்வுபெற்ற மனிதனின் வாழ்க்கை ஒரு பயங்கர கனவுபோல ஆகிவிடுகிறது. யாருக்கும்,எதற்கும், அவன் தேவையற்றவன் ஆகிவிடுகிறான். அவன் அநேகமாக 'பயனற்ற' பொருள்களோடு எறியப்பட்டவனாகிறான்."

யார் கவலைப்படுகிறார்கள் அவனைப் பற்றி?

'நாம் பயனற்றவனாகி விட்டோம் ' என்று எண்ண ஆரம்பிக்கிறான்.

"இந்த எண்ணம் வந்த நாள் முதலே, நீ, தற்கொலை செய்துகொள்ள துவங்கிவிட்டாய் என்று அர்த்தம் "

இந்த எண்ணம் ஒரு விஷம்.

எனவே....
காலத்தை வீணாக்காதே.
பணம் ஒரு தேவை . அதுவே வாழ்வல்ல ..
இப்போதே ஆனந்த்தித்திரு நாளை அல்ல .
நாளை என்றுமே வருவது அல்ல . நாளை வந்தால் கூட
அதுவும் இன்றாகி விடும் . வாழ்க்கை இங்கு
இப்பொழுது மட்டுமே .
--- ஓஷோ ---

Friday, February 26, 2016

எப்படி எப்படி எப்படி


சரி அடுத்தபடியான “புரிந்துகொள்ளுதல் எப்படி? ” என்கிறீர்களா?  பிறர் மூலம் அல்லது பிறரின் மூலம் அறிந்து கொண்டதை அப்படியே விட்டுவிட்டால் அதனால் எந்தப் பயனும் விளையாது.  ஏனென்றால் அறிந்து கொண்ட ஒன்றை அரைகுறையாகவே பிறரிடமும் பகிர்ந்து கொள்வதிலேயே தற்பெருமை அடைந்துவிடுகிறோம். மாறாக… நாம் அறிந்து கொண்ட ஒரு விஷயம் குறித்து எடுத்துக்காட்டாக கணிப்பொறியைப் பற்றி யாரோ பேசக்கேட்டு அறிந்து கொண்டபின் நாம் நமக்குள் தனிமையில் அமர்ந்து யோசிக்க  கணிப்பொறி பற்றிய யோசனையில் மூழ்க வேண்டும். இந்தக் கணிப்பொறியால் நமக்கு என்ன பயன்?  கணிப்பொறியின் அளப்பறிய நினைவாற்றலால் அதன் கொள்ளளவால் நமக்கென்ன பயன்? ஒரு கணிப்பொறியை வாங்குவதற்கு கிட்டதட்ட ரூ. 25 ஆயிரம் தேவை எனில் அவ்வளவு செலவு செய்து வாங்கி வைப்பதன் மூலம்  நமக்கென்ன பயன் வரும்?  -  போன்ற சிந்தனைகள் தோன்றுமென்றால் – அந்த ஐயப்பாடுகளை வல்லுநர்களிடம் விசாரித்து விடை பெறுவதையே நான் “புரிதல்” என்கிறேன். இதுவே தெளிவடைதலின் இரண்டாம் நிலை ஆகும்.

அடுத்து முனைறாம் நிலையாகிய “உணர்தல்” என்றால் என்னவென்று பார்ப்போம்?  எப்போது உணரமுடியும் தெரியுமா?  நாமே ஒன்றைச் செய்து அதனை நமது அனுபவமாக சொந்தமாக்கிக் கொள்வதே “உணர்தல்” எனப்படும்.  உதாரணமாக, உங்களிம் ஒருவர் “லட்டு” எப்படியிருக்கும்?  எனக் கேட்டால், நீங்கள் என்ன சொல்வீர்கள்?, “இனிப்பாய் இருக்கும்” என்பீர்களல்லவா?  அவர் உடனே “இனிப்பு” எப்படியிருக்கும்? எனக்கேட்டால்என்ன செய்வீர்கள் நீங்கள், இனிப்பை எப்படி விளக்குவது என்னும் யோசனையில் மூழ்கிக் கொடுத்து “தின்றுப் பாருங்கள் தெரியும்” என்பீர்கள் அல்லவா… அந்த அனுபவம் தான் உணர்வாகும்.

“தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்” என்பார்களல்லவா?   – இதுதான் உணர்தலைக் குறிப்பதாகும். ஏற்கனவே நீங்கள் கணிப்பொறியைப் பற்றி பிறர் மூலம் “அறிந்து” கொண்டீர்கள்;  பிறகு நீங்கள் கணிப்பொறியைப் பற்றி ஆழமாக உங்களுக்குள்ளேயே சிந்தித்தும் – விஷயமறிந்த வல்லுநர்களிடம் விசாரித்தும் “புரிந்து”  கொண்டீர்கள். இனி என்ன செய்ய வேண்டும் தெரியுமா?  ஒரு கணிப்பொறியை இயங்கி அதன் கூறுகளை, அதனுள் பொதிந்திருக்கும் தொழில் நுட்பத்தை, மென்பொருள் மற்றும் வன்பொருள் குறித்த நுணுக்கங்களை அனுபவமாக ஆக்கிக்கொள்ளும் செயலையே “உணர்தல்”என்று கூறுகிறேன்.

இனி வருவது நாம் எட்ட விரும்பிய நான்காவது படியாகும்.  அது தான் தெளிவடைவது, ஒரே ஒருமுறை அனுபவம் பெற்று உணர்ந்தால் மட்டும்  போதாது.  தொடர்ந்து பலமுறை அந்த கணிப்பொறி அனுபவத்தைப் பெற்று மீண்டும் மீண்டும் அதன் நுணுக்கங்களில் தேர்ச்சி பெற்றால் ஐயம் தெளிவடைந்து விடும்.  இது கணிப்பொறி விஷயத்தில் மட்டுமல்ல;  எந்தத்துறை குறித்த அறிவானாலும் சரி.. அது மருத்துவமானாலும் சரி,  பொறியியலானாலும் சரி, சமையலானாலும் சரி, அரசியலானாலும் சரி, மேலாண்மையானாலும் சரி, பயிலப் பயில, பழகப் பழகப் பெறுகிற தொடர் உணர்வே தெளிவை நோக்கி இட்டுச் செல்லும் மார்க்கமாகும்.

அப்படிப்பட்டத் தெளிவைப் பெற்றுவிடுகிறபோது, அந்தத் துறை குறித்த எந்த ஐயத்தையும் சிக்கலையும் – எங்கிருந்தபோதும், எந்த நேரமானாலும் தீர்த்துவைத்துவிட முடியும்.  ஒரு விமானத்திலிருந்தபடியே தன் அலுவலகத்திலிருக்கும் கணிப்பொறியில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்களுக்கான தீர்வை கம்பில்லாத தொலைபேசி மூலம் தீர்த்து வைக்கும் வல்லமை கைவந்துவிடும்.

இத்தகையத் தெளிவையே “ஞானம்” என்கிறார்கள் நம் முன்னோர்கள்.  இவையே அறியாமையிலிருந்து ஞானத்தை (To Wisdom) அடையும் பயணத்தின் படிகளாகும். (“Knowing) (அறிதல்), (Understanding) (புரிதல்), Feeling of Experiencing (உணர்தல்), Becoming Clear (தெளிதல்).

என்ன நண்பர்களே.. “தெளிதல்” பற்றிய தெளிவைப்பெற முடிந்ததா?

3

வாழக்கையே ஒரு தேடல் திருவிழா தான். அந்தத் தேடல் தொடரில் முதலாவதாக, “தெளிதல் எப்படி” என்பதை அறிந்தோம். இந்த இதழில் நாம் காணவிருப்பது “கவனித்தல் எப்படி?” என்பதை!

“கவனிப்பது எப்படி”

“கவனிப்பது எப்படியா?” – இதென்ன விந்தையான கேள்வி என்று தோன்றுகிறதா?  “கவனித்தல்” என்னும் செயல் வெகு எளிதானதென்று நாம் எண்ணிக்கொள்கிறோம் என்றாலும் நடைமுறையில் அது முழுமையாக நிகழ்கிறதா? என்றால் “இல்லை” என்பதே பலரின் பதிலாக அமைந்திருக்கிறது.

“நில் கவனி!, புறப்படு” (Stop, listen and proceed) – என்னும் எச்சரிக்கை வாசகத்தை நாம் பயணத்தினூடே காண நேருகிறதல்லவா? அந்த மூன்று வார்த்தைகளுள் நடுவில் நாயகமாய் அமர்ந்திருக்கும் “கவனி” என்னும் சொல்லைக் கொஞ்சம் உற்று கவனியுங்கள்.  அது என்ன பொருளை நமக்கு வழங்குகிறதென்று இப்போது பார்ப்போம்.

“கவனித்தல்” – என்னும் ஒரு சொல் மூன்று பொருள்களை உள்ளடக்கியதாக பவனி வருகிறது. முதலாவது “பார்த்தல்”, இரண்டாவது “கேட்டல்”; மூன்றாவது “மனம் வைத்தல்” – என மூன்று பரிமாணகளை உள்ளடக்கிச் சுழலும் ஒரு சொல்லாக “கவனித்தல்” திகழ்கிறது.

சரி.. எப்படி கவனிப்பது?  அன்றாடம் எத்தனையோ விஷயங்களைக் கவனித்துக் கொண்டுதானே இருக்கிறோம்.


வாழ்க்கை சுமையல்ல

எழுந்து நில் இளைஞனே
எழுச்சி மிகக் கொண்டு
எழுந்து நில்!

விழிப்புடன்
வாழ்பவனுக்கு
வீழ்ச்சி என்றும் இல்லை!

இலட்சியம்
உள்ளவனுக்கு
தடைகள் பெரிதல்ல!

வாழத் தெரிந்தவனுக்கு
வாழ்க்கை சுமையல்ல
எழுந்தி நில் இளைஞனே
எழுந்து நில்!

கொடுத்துப் பெறுங்கள்


விமானப் பயணத்தின்போது உங்கள் இருக்கை அருகே ஒரு வெள்ளைக்காருக்கான இருக்கை இருக்கிறது என்றால் அதில் அமருவதற்கு வரும்போது அந்த நபர் உங்களிடம் ஒரு “ஹாய்” சொல்லிவிடும் பழக்கம் உள்ளது!  உங்களுக்கு ஆர்வம் இருந்தால் தொடர்ந்து ஹலோக் கொள்ளலாம். இலையனில் அப்படியே (உர் என்று) பயணிப்போம் என்று பொருள்.

புதியதாக சந்திக்கும் இரு நபர்களிடையோ, அல்லது ஓரிடத்தில் தொடர்ந்து இருக்க வேண்டிய சந்தர்ப்பமாக இருக்கும் சமயத்திலோ அல்லது ஒரு அலுவலகம் அல்லது நபரை சந்திக்க செல்லும் இடத்திலோ நம்மைப்பற்றி நாமே எப்படி அறிமுகம் செய்து கொள்வது என்பதைப் பார்ப்போம்!

எங்கு சென்றாலும் அங்கு இருக்கும் நபர்களுக்கு முதலில் வணக்கம் செலுத்துங்கள்.  (அங்கு இருப்பவரின் வயதைப்பற்றி கவலைப்படாதீர்கள்).. அறைக்கு உள்ளே போக வேண்டுமெனில் (அறைக் கதவு திறந்திருந்தாலும்)  அனுமதி கேட்டபின்பு உள்ளே செல்லுங்கள்.  வணக்கத்திற்குப் பிறகு உங்கள் பெயரை இனிஷியலுடன் திருத்தமாச் சொல்லுங்கள்.  நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பதைக்கூறிய பின்பு நீங்கள் பார்க்க வேண்டிய நபரைப்பற்றி விசாரியுங்கள் அல்லது உங்களுக்கு தேவையான தகவல்களை “கோரிக்கை” யாக தெரிவியுங்கள்.  அத்தகவல்கள் எதற்காக தேவைப்படுகின்றன என்பதையும் தெரிவித்துவிடுங்கள்.

மேற்படி தகவல்கள் நீங்கள் யார்?  எதற்காக வந்துள்ளீர்கள்? என்பதற்கு போதுமானதாக இருக்கும்.

சில அலவலகங்களில் இதை எழுதிக் கேட்பார்கள்.  எப்போதும் சில வெள்ளைத்தாள்கள் உங்கள் பாக்கெட்டில் இருக்கட்டும். கேட்டதை புரியுமாறு சுருக்கமாக எழுதிக் கொடுங்கள்.

உங்களுக்குக் கிடைக்க வேண்டிய தகவல்கள் தர தாமதித்தாலோ, அங்கு அசட்டையான சூழ்நிலை நிலவினாலோ மீண்டும் ஒருமுறை அங்கிருப்பவரிடம் உங்களுக்கு அது தேவைப்படும் காரணத்தைக் கூறுங்கள். அவசியமேற்பட்டால் அலுவலமாக இருப்பின் உயரதிகாரியை பார்க்க வேண்டுமா?  என்பதையும் அவரிடமே கேளுங்கள்.  “வேண்டாம், பிறகு வாருங்கள் என்று கூறினாலும் சரி, நீங்க அங்க போனாலும் இந்த சீட்டுக்குதான் திரும்பி வரணும்” என்று கூறினாலும் சரி, “சரிங்க சார் வெயிட் பண்றேன்ணு” சொல்லுங்க.

எந்தக் காரணத்துக்காகவும் நீங்கள் காத்திருப்பதினால் உங்களுக்கு ஏற்படும் எரிச்சலைக் காட்டிவிடாதீர்கள். இதனால் நீங்கள் பெற வேண்டிய தகவல்கள் மேலும் தாமதமாகலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம்.

சிலருக்கு தங்களைப்பற்றி தாங்களே எப்படி சொல்லிக் கொள்வது என்பது சங்கோஜமாக இருக்கும்.

இன்டர்வியூ செல்லும் இளைஞர்களுக்கும், வேலை தேடிப்போகும் இடத்தில் உங்களைப் பற்றி நீங்கள் கூறவேண்டியது கட்டாயமானதாகும்.

முதலாளி அல்லது நேர்முகம் நடத்துவோர் உங்கள் சான்றிதழ்களைப பார்த்துக் கொண்டே, “உங்கள் பெயர் என்ன?” என்று கேட்பார்.

“அதுதான் சர்டிபிகேட்லியே இருக்கே!” என்று நீங்கள் நினைக்கக்கூடாது.  உங்களோடு சகஜமாக  பேசத் துவங்குவதற்கு உங்கள் பெயரைக் கேட்பது உதவும்.  உதாரணமாக தியேட்டரில் இடைவேளையின்போது திடீரென சந்திக்கும் நண்பனை எங்க பிக்சருக்கு வந்திங்களான்னு கேட்பது போலத்தான், உங்கள் பெயரை அவர் கேட்பார்.

இவ்விஷயங்களில் புதிதாக இருப்பவர்களுக்கு சில டிப்ஸ்:

1 ஒரு முகம் பார்க்கும் கண்ணாடிக்கு முன்பு நின்று உங்கள் பெயரை இன்ஷியலுடன் புன்சிரிப்புடன் உச்சரித்துப் பழகுங்கள் (வெட்கப்படாதீர்கள். கூச்சம் குறையும்)

2. உங்கள் பெயரை சில முறையேனும் (தனியாக) சத்தம்போட்டு சொல்லிப்பாருங்கள்.

3. இண்டர்வியூ செல்வதற்கு முன்பு (நண்பர்களிடம்) உங்களைப் பற்றி அறிமுகம் செய்து பழகுங்கள்.  (அன்று நண்பர்களுக்கு டீ, வடை நீங்கள் சப்ளை செய்துவிடுங்கள்).

4. தனியாக நாற்காலியில் அமர்ந்து, நின்று கொண்டு பல முறை பயிற்சி செய்து பாருங்கள்.

5. உங்களைப்பற்றி எழுதி வைத்து படித்துப் பாருங்கள்.

6. அலுவலக நிமித்தம் சென்றால் சரிசமமான பதவியில் இருப்பவராக இருந்தால் அங்கிருப்பவரிடம் (ஜென்டில் ஹேண்ட் ஷேக்) கைகுலுக்கலாம்.

உங்களைப் பற்றி சிறப்பாக தகவல் “கொடுங்கள்” உங்களுக்கு வேண்டியதை தாராளமாக “பெறுங்கள்”.

Tuesday, February 16, 2016

பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்

1.பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்

உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது. சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர் முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும். இதுதான் முதற் பழமொழியின் பொருள்.

2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.

உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம் மறைவு உடையவை. காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறான். அப்படியானால் மறையும் சூரியன் மறு நாள் உதயமாகும். இஃது சூரிய சந்திரர்களுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும்.

3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.

சந்திரோதயம் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள் முதற்கொண்டு தேய்பிறையாய்ச் சிறுத்துக் கொண்டே வந்து முடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும். அந்த அமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து வளர் பிறை பூரணச் சந்திரனாக காட்சியளிகும். நிலவு தேய்வதும் வளர்வதும் இயற்கை நிகழ்வுகள்.

4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்

மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம் பிடித்ததல்லவா அலைந்திருப்பான். எத்தனை சம்பவங்களைத் தான் அவன் நினைவு கொண்டிருப்பது. சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக நிலைத்து நிற்கின்றன. உணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்டே வரும். அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.

5. புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்

ஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. அந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும். இது ஒரு வட்டச் சுழற்சி.

6. உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பபாம்

விரும்பிப் போனால் விலகிப் போகும். விலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இப்படி உருமாறி நிற்கின்றது. பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் கோயில் திருவகவலில் மனதிற்கு உபதேசமாகச் சொல்கிறார். மனம் உணருமா..?!

Monday, February 8, 2016

பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள்.....

1: மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.
காரிய சித்தி தருவார்

2: குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும். குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்
3: புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும்.
விவசாயம் செழிக்கும்
4: வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள்(கொப்பளம்) கரையும்.
வளம் தருவார்
5: உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின்தொல்லை நீங்கும்.
எதிரிகளை விரட்டுவார்
6: வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும்.
செல்வம் உயரச் செய்வார்
7: விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.
8: சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.
9: சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.
10: வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழி பட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.
11: வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழி பட்டால் கடன் தொல்லை நீங்கும்.
12: சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழி பட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.
13 பசுஞ்சாண விநாயகர்- நோய்களை நீக்குவார்
14 கல் விநாயகர்- வெற்றி தருவார்
15 புற்றுமண் விநாயகர்- வியாபாரத்தை பெருக வைப்பார்
16 மண் விநாயகர்- உயர் பதவிகள் கொடுப்பார்.

நாம் செய்யும் நற்காரியங்கள் எத்தனை தலை முறைக்கு சென்றடையும்

நாம் செய்யும் நற்காரியங்கள் எத்தனை தலை முறைக்கு சென்றடையும் என்பது குறித்து கேட்டவரையில் சில இங்கே :

பட்டினியால் வருந்தும்
ஏழைகளுக்கு உணவளித்தல் ........ 3 தலைமுறைக்கு.

புண்ணிய நதிகளில் நீராடுதல் ........3 தலைமுறைக்கு.

திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் ....5 தலைமுறைக்கு.

அன்னதானம் செய்தல் ....................5 தலைமுறைக்கு.

ஏழைப்பெண்ணுக்கு
திருமணம் செய்வித்தல் ................ 5 தலைமுறைக்கு.

பித்ரு கைங்கர்யங்களுக்கு
உதவுவது ..........................................6 தலைமுறைக்கு.

திருக்கோயில் புனர்நிர்மாணம் ........7 தலைமுறைக்கு.

அனாதையாக இறந்தவர்களுக்கு
அந்திம கிரியை செய்தல் .................9 தலைமுறைக்கு.

பசுவின் உயிரைக் காப்பாற்றுவது ..14 தலைமுறைக்கு.

முன்னோர்களுக்கு கயாஷேத்திரத்தில்
பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல் ..21 தலைமுறைக்கு.

நாமும் முடிந்தவரை புண்ணியம் செய்வோம்...!
நமது பிந்தைய தலைமுறையாவது நன்றாக இருக்கட்டும் ..!!

வளமான வாழ்க்கைக்கு சித்தர்களால் சொல்லப்பட்ட மாந்திரீக தாந்திரீக ரகசிய 20 பரிகார முறைகள்.

(1) முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.

(2) புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.

(3) வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3 முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள் சேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்.

(4) கடன்களால் வெகு காலம் துன்பப்படும் நபர்களுக்கு : ஒன்னேகால் அடி வெள்ளை துணியை எடுத்து அதில் நான்கு பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி, பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள் அடியோடு அழியும்.

(5) வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம் செழிக்கும்.

(6) வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில், முயற்சி தொடங்குமுன், சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விட வேண்டும். அவர் சென்றதும் அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது செயலில் வெற்றியை தேடித்தரும்.

(7)அரச மரத்தை சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை வலம் வந்து பின்பு தூப,தீபம்-நிவேதனம் செய்து வழிபட்டால் பண புழக்கம் அதிகரிக்கும். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.

(8)செவ்வாயின் பாகமான தெற்கில் 7 நல்லெண்ணை விளக்கு (மண்) வைத்து தூபம் காட்டி வேண்டி வர, வருடக்கணக்கில் வராத கடன்களும் வந்து சேரும். ஏமாற்றப்பட்ட பொருட்களும் திரும்ப சேரும்.வீட்டிலேயே செய்யலாம்.

(9)7 பற்கள் மட்டுமே உள்ள வெள்ளை பூண்டு வாங்கி வந்து அதுதான் 7 காய்ந்த மிளகாகளையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி வீடு,கடை,ஆபீஸ் வாசல்களில் தொங்க விட திருஷ்டிகள் சகலமும் விலகி நன்மை சேரும்.

(10)வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது அருகம் புல் நுனி ஒன்று பறித்து எடுத்து பாக்கெட்டில் வைத்து செல்ல செல்லும் காரியம் வெற்றி அடையும்.

(11)ஆரஞ்சு மரத்தில் வேரை பாக்கெட்டில் வைத்து செல்ல எதிரிகளும் வசியமாவார்கள்.

(12)படிக்கும் பிள்ளைகள் இடது கையை டேபிள் மீது வைத்து படிக்க,எழுத தொடங்கினால் படித்த பாடங்கள் நினைவில் நிற்கும். தேர்வெழுதும் போதும் இதை செய்யலாம்.

(13)வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல.வீட்டின் முன்பகுதியில் வாடிய செடிகள் இருந்தால் அது செல்வவரவை,வசீகர சக்தியைப் பாதிக்கும்.
வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய்,பிசாசு போன்ற துர்ச்சக்திகளை ஈர்க்கும்.இது பூமி தோஷத்தை உண்டாக்கும்.எனவே இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் உள்ள வாடிய செடிகளை ஒரு செவ்வாய்க்கிழமை அன்று வேரடி மண்ணுடன் பிடுங்கி ஓடும் நீரில் அல்லது கடலில் விட்டு விட மேற்சொன்ன பாதிப்புகள் தீரும்.

(14)உங்கள் வீட்டு பணப்பெட்டியில் மல்லிகைபூ ஏலக்காய் பச்சைகற்பூரம் சந்தனம் வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமை களில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு ஏற்படும் ..

(15)உங்களின் வீட்டு படுக்கை அறையில் கண்ணாடி இருக்கக்கூடது , மூன்றாம் மனிதனின் குறுக்கீடு இருக்கும் ,அல்லது குழந்தை வாய்பேசாமல்
போகவும் வாய்ப்புவுண்டு .அப்படி இருந்தால் இரவில் மூடி வைத்து விடுங்கள்

(16)சிறிது கல் உப்பை ஒருகின்னத்தில்
போட்டு ,கழிவறையில் வைத்தால் கெட்டசக்திகளை இழுத்து கொள்ளும்
ஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும் .

(17)வீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது.இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்தும்.தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டின் வாசற்கதவில் மஞ்சளால் ஸ்வஸ்திக் வரையலாம்.இது பாதிப்பை பெருமளவில் குறைக்கும்

(18)கோவில் கொடி,கொடிமரம்,கோவில் கோபுரம் இவற்றின் நிழல் வீட்டின் மேல் படியக்கூடாது.தாந்த்ரீக நூல்கள் இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் கஷ்டப்படுவார்கள்.இது ப்ருத்வி தோஷங்களில் ஒன்று.

இதற்குப் பரிகாரம்:-
-----------------------------
வீட்டில் வடக்கிருந்து தெற்கு நோக்கிய படி பைரவர் படம் வைத்து தினமும் வெல்லம்,கற்கண்டு அல்லது இனிப்புகள் படைத்து வணங்கி வர 12 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்புகள் நீங்கி நலம் ஏற்படும்.மேற்கண்ட பாதிப்பு உள்ளவர்கள் பைரவ மந்திரம் அல்லது பைரவ காயத்ரி ஜெபித்து விபூதி அணிந்து வர நன்று

(19)சுடுகாட்டுக்கு சமீபத்தில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது.இது அக்னி தோஷத்தை உண்டாக்கும். இதனால் வீட்டில் உள்ள சுப தெய்வங்களை வெளியேறும்.முகத்தில் தேஜஸ் ,கவர்ச்சி குறைந்து நம்மைப் பார்ப்பவர்களிடம் வெறுப்பை உண்டுபண்ணும். வறுமை,அவமானம் உண்டாக்கும்.பேய்,பிசாசுகள் நம்மைப் பீடிக்க நாமே வழியமைத்துத் தருவதாக அமைந்து விடும்.

இதற்குப் பரிகாரம்:-
--------------------------------
ஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மறு ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் சூரியனுக்கு அல்லது துளசிச் செடிக்கு 3 கை ஜலம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.மேலும் சூரியனையும், அக்னி தேவரையும் பிரேத தோஷம் நீங்க வேண்டிக் கொண்டு பின் வலது உள்ளங்கையில் நீர் வைத்துக்கொண்டு "ஓம் ரம் அக்னி தேவாய சர்வ தோஷம் நிவாரய நிவாரய" என 3 தடவை ஜெபித்து அந்த நீரைத் தலையில் தெளித்துக் கொள்ளவும்

(20)கோதுமை மாவினால் சிறு சிறு உருண்டைகளாக 7 அல்லது 14 அல்லது 7ன் மடங்குகளில் உருண்டை செய்துகொள்ளவும்.குங்குமத்தில் கொஞ்சம் நீர் விட்டு அதை வெள்ளிக்குச்சி அல்லது மாதுளைமரக் குச்சியால் தொட்டுக் கோதுமை உருண்டையில் ஸ்ரீம் என்று எழுதி அதைக் குளம்,ஆறு அல்லது கோவில் தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்குப் போடவும்.எழுதிய பின்னர்ஸ்ரீம் என்பது அழிந்து விட்டாலும் பரவாயில்லை. இவ்வாறு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்து வர லக்ஷ்மியின் அருள் உண்டாகி பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் சேரத் தொடங்கும்.

Friday, February 5, 2016

தமிழரின் இயற்கை மருத்துவம் !!!

1.மார்புச் சளி
வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும்.

2.சளிக் காய்ச்சல்
புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.

3.இருமல், தொண்டை கரகரப்பு
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

4.சளி
பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

5.டான்சில்
வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.

6.வயிற்றுப் போக்கு
சிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் குணமாகும்.

7.வாயுக் கோளாறு
மிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.

8.நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

9.தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

10.தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

நாத்திகம், பகுத்தறிவு பற்றி கவிஞர் கண்ணதாசன்.

ஈ வே ரா சேலத்தில் நடத்தியது போல் சென்னையிலும் ஒரு ஆபாச ஊர்வலம் நடத்த முயன்ற போது கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை இது. இதை தொடர்ந்து அந்த அந்த ஆபாச ஊர்வலம் கைவிடப்பட்டது.

கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம் என்ற நூலிலிருந்து!!!!!!!!!!!!!!!!!!!!

நான் ஒரு இந்து. இந்து என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.நான் எல்லா மதத்தினரையும் மனமார நேசிக்கிறேன்; ஆனால் இந்துவாகவே வாழ விரும்புகிறேன். நான் கடவுளை நம்புகிறேன்; அவனைக் காட்டியவனைப் போற்றுகிறேன்; அந்தக் கடவுளைக் கல்லிலும் கருத்திலும் கண்டு வணங்குகிறேன்.

ஆன்மா இறைவனோடு ஒன்றிவிடும்போது, அமைதி இருதயத்தை ஆட்சி செய்கிறது.

நாணயம், சத்தியம், தர்மம் இவற்றின் மீது நம்பிக்கை பிறக்கிறது.
நேரான வாழ்க்கையை இருதயம் அவாவுகிறது.
பாதகங்களை, பாவங்களை கண்டு அஞ்சுகிறது.

குறிப்பாக ஒரு இந்துவுக்குத் தன் மத அமைப்பின் மூலம் கிடைக்கும் நிம்மதி, வேறு யாருக்கும் கிடைப்பதில்லை.

கடைசி நாத்திகனையும், அது ஆத்திகன் என்றே அரவணைத்துக் கொள்கிறது.
என்னை திட்டுகிறவன்தான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறான்; ஆகவே அவன்தான் முதல் பக்தன்” என்பது இறைவனின் வாக்கு.
இந்து மதத்தைப்போல் சகிப்புத்தன்மை வாய்ந்த மதம் உலகில் வேறு எதுவும் இல்லை .

நீ பிள்ளையாரை உடைக்கலாம்; பெருமாள் நாமத்தை அழிக்கலாம்; மதச்சின்னங்களை கேலி செய்யலாம்; எதைச் செய்தாலும் இந்து சகித்துக் கொள்கிறான்.

ஏதோ பரம்பரையாகவே பகுத்தறிவாளனாகப் பிறந்தது போல் எண்ணிக் கொண்டு, பாத்திரத்தை நிரப்புவதற்காகவே சாஸ்திரத்தைக் கேலி செய்யும் பகுத்தறிவுத் தந்தைகள் இஸ்லாத்தின் மீதோ, கிறிஸ்துவத்தின் மீதோ கை வைக்கட்டும் பார்க்கலாம்.

கடந்த நாற்பது வருசங்களில் ஒரு நாளாவது அதற்கான துணிவு ஏற்பட்டதாக தெரியவில்லையே!

பாவப்பட்ட இந்து மதத்தை மட்டுமே தாக்கித் தாக்கி, அதை நம்புகிற அப்பாவிகளிடம் ‘ரேட்டு ‘ வாங்கிச் சொத்துச் சேர்க்கும் ‘பெரிய ‘ மனிதர்களைத்தான் நான் பார்த்திருக்கிறேன்.

அவர்கள் பேசுகிற நாத்திக வாதம், அவர்கள் ‘குடும்பம் நடத்தும் வியாபாரம்’ என்பதை அறியாமல், வாழ்கையையே இழந்து நிற்கும் பல பேரை நான் அறிவேன்.

பருவ காலத்தில் சருமத்தின் அழகு மினுமினுப்பதைப் போல், ஆரம்ப காலத்தில் இந்த வாதத்தைக் கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.
நடிகையின் ‘மேக் அப்’ பைக் கண்டு ஏமாறுகிற சராசரி
மனிதனைப்போல், அன்று இந்த வாதத்தைக் கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.

அந்த கவர்ச்சி எனக்கு குறுகிய காலக் கவர்ச்சியாகவே இருந்தது இறைவனின் கருணையே!

என்னை அடிமை கொண்ட கண்ணனும், ராமனும் இன்று சந்திர மண்டலத்துக்குப் பயணம் போகும் அமெரிக்காவையே அடிமைக்கொண்டு, ஆன்மீக நெறியில் திளைக்க வைத்திருக்கிறார்கள்.
அமெரிக்காவை விடவா ஈரோடு பகுத்தறிவில் முன்னேறிவிட்டது?
வேண்டுமானால் ‘பணத்தறிவில் ‘ முன்னேறிவிட்டது என்று சொல்லலாம்.

ஆளுங் கட்சியாக எது வந்தாலும் ஆதரித்துக் கொண்டு, தன் கட்சியும் உயிரோடிருப்பதாகக் காட்டிக் கொண்டு, எது கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு வாழ்கையை சுகமாக நடத்துவதற்கு, இந்த நாத்திக போலிகள் போட்டிருக்கும் திரை, பகுத்தறிவு!

உலகத்தில் நாத்திகம் பேசியவன் தோற்றதாக வரலாறு உண்டே தவிர, வென்றதாக இல்லை.

இதை உலகமெங்கும் இறைவன் நிரூபித்துக் கொண்டு வருகிறான்.
அவர்கள் எப்படியோ போகட்டும்.

இந்த சீசனில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில மனிதர்கள் கோவில்களுக்கு முன்னால் பகுத்தறிவு விளையாட்டு விளையாடிப் பார்க்கலாம் என்று கருதுகிறார்கள். இதை அனுமதித்தால், விளைவு மோசமாக இருக்கும்.

நம்பிக்கை இல்லாதவன் கோவிலுக்கு போக வேண்டாம்.
நம்புகிறவனை தடுப்பதற்கு அவன் யார்?

அப்பாவி இந்துக்கள் பேசாமல் இருக்க இருக்கச் சமுதாய வியாபாரிகள் கோவிலுக்கு முன் கடை வைக்க தொடங்குகிறார்கள்
.
வெள்ளைக்காரனின் கால்களை கட்டிப்பிடித்துக் கொண்டு ‘போகாதே போகாதே என் கணவா ‘ என்று பாடியவர்களுக்கு நாட்டுப் பற்று எங்கிருந்து வரும்?

நாட்டு பற்று இல்லாதவர்களுக்கு தெய்வப் பற்று எங்கிருந்து வரும்?

தெய்வப் பற்று இல்லாதவர்களுக்கு நாணயம், நேர்மை இவற்றின் மீது நம்பிக்கை எங்கிருந்து வரும்?

இந்த நாலரை கோடி (அன்று) மக்களில் நீங்கள் சலித்துச் சலித்து எடுத்தாலும், நாலாயிரம் நாத்திகர்களைக் கூட காண முடியாது.

பழைய நாத்திகர்களை எல்லாம் நான் பழனியிலும், திருப்பதியிலும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்!

ஆகவே இந்த காரியங்களுக்கு யாரும் துணை வர மாட்டார்கள்