Tuesday, March 22, 2016

பங்குனி உத்திரம்.

பங்குனி உத்திரம்.

12வது மாதமான பங்குனியில், 12வது நட்சத்திரமான உத்திரம் இடம்பெறும் புனிதநாள்தான் பங்குனி உத்திரம். வளமான பலன்களைத் தரும் விரதங்களுள் பங்குனி உத்திர விரதமும் ஒன்று.

இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள். இது ஈசனுக்குரிய அஷ்டமகா விரதங்களுள் ஒன்றாகும்.

பங்குனி உத்திரம் இறைவழிபாட்டிற்கு மிகவும் சிறப்பான நாளாகும். திருமணமாகாத இரு பாலாரும் இந்நாளில் விரதமிருந்து வழிபடின் திருமணப்பேறு கிட்டும். தெய்வீக அற்புதங்கள் பல பெற்ற பங்குனி உத்திர திருநாள் பாவத்தை போக்கும் அற்புத நாளாகவும் பகையை அகற்றும் திருநாளாகவும் திகழ்கிறது.

புராணங்களிலே பங்குனி உத்திரத்தில் நிகழ்ந்த சிறப்புகள் பற்றி விவரிக்கப்படுகின்றது. இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன.

புராணத் தகவல்கள் :

1. இந்த நன்னாளில் தான் அன்னை பார்வதிக்கும், பரமேஸ்வரனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

2. காஞ்சியில் ஆற்றுமணலை பிடித்து வழிபட்ட காமாட்சி அன்னைக்கு அருள் புரிந்து, ஏகம்பரநாதருடன் திருக்கல்யாணம் நடந்தது இந்நாளில் தான்.

3. மதுரையில், மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்ததும் இந்நாளில் தான்.

4. சூரபத்மனை வதம் செய்த முருகன், இந்திரனின் 
மகளான தெய்வானையை இந்நாளில் தான் மணம் செய்து கொண்டார்.

5. இந்நாளில் தான் பாற்கடலில் இருந்து அன்னை மகாலட்சுமி தோன்றி, நாராயணனை மணந்த திருநாள் ஆகும். எனவே இதே நாள், அன்னையின் தோற்ற மற்றும் திருமண நாளாகவும் கொண்டாடப் பெறுவது குறிப்பிடத்தக்கது. எனவே இந்நாளை மகாலட்சுமி ஜெயந்தி என்றும் வழங்குவர்.

6. இந்நாளிலேயே ஆண்டாள் நாச்சியார் ரங்கமன்னாரை கரம்பிடித்தார்.

7. மேலும், இந்நாளிலேயே பிரபு ஸ்ரீராமர் – சீதையின் திருக்கல்யாணமும் நடைபெற்றது.

8. இந்நாளிலேயே, பிரம்மதேவர் அன்னை சரஸ்வதியை மணந்தார்.

9. இந்நாளிலேயே இறைவன் தர்மசாஸ்தா அவதரித்தார்.

10. இந்நாளிலேயே தேவேந்திரனுக்கும், இந்திராணிக்கும் திருமணம் நடைபெற்றது.

11. இந்நாளிலேயே 27 நட்சத்திர கன்னியருக்கும், சந்திரனுக்கும் திருமணம் நடைபெற்றது.

12. இந்நாளிலேயே நம்பிராஜனுக்கு அன்னை ஸ்ரீவள்ளி அவதரித்தார்கள்.

மேலும் பல சிறப்புகள் :

1. சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான்.

2. இவ்விரதத்தின் மகிமையால், இதே நாளில் அன்னை மகாலட்சுமி ஸ்ரீமன் நாராயணனின் மார்பில் இடம்பிடித்தார்கள்.

3. இவ்விரதத்தின் மகிமையால், இதே நாளில் அன்னை சரஸ்வதி பிரம்மதேவரின் வாக்கினில் இடம்பிடித்தார்கள்.

4. சிவனின் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான்.

5. இந்நாளில் தான் அர்ஜுனன் அவதரித்தான் என மகாபாரதம் குறிப்பிடுகிறது.

6. இந்தத் திருநாளில் லோபாமுத்திரை அகத்திய முனிவரையும், பூரணா-பூஷ்பாகலா ஐயப்பனையும் மணந்து கொண்டதாக கந்தபுராணம் குறிப்பிடுகிறது.

7. இந்நாளில் தான் காரைக்கால் அம்மையார் முக்தி அடைந்தார்.

ஆலய விசேஷங்கள் :

1. கங்கையினும் புனிதமான காவிரியின் நடுவில் உள்ள திருவரங்க நகரத்தில் பாம்பணையில் பள்ளி கொண்ட திருவரங்கநாதன் திருவரங்கநாயகித் தாயாருடன் சேர்த்தித் திருக்கோலத்தில் அமர்ந்து காட்சி தருவது இந்த உன்னதமான திருநாளில்தான்.

வருடத்தில் வேறு எந்த நாளிலும் இந்த திவ்ய தரிசனம் கிடைக்காது. அண்ணலும் தாயாரும் சேர்ந்து அமர்ந்திருக்கும் இந்தத் திருக்கோலத்தை தரிசிப்பவர் நினைப்பதெல்லாம் நடக்கும் என்பது காலம் காலமாய் 
வரும் நம்பிக்கை.

2. அன்று காஞ்சி வரதராஜர் ஆலயத்தில் பெருந்தேவித் தாயார் சந்நதியில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக வரதராஜர் காட்சி தருவார். அந்த தலத்தின் வரலாறு அவர் முன்னிலையில் படிக்கப்படும்.

3. பங்குனி உத்திரத்தன்று சில கோயில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும்.

4. காஞ்சியில் காமாட்சி ஏகாம்பரரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள்.

5. மயிலையில் அறுபத்துமூவர் திருவிழா நடைபெறும். இந்நாளில், இறைவனைத் தொடர்ந்து 63 நாயன்மார்களும் ஊர்வலமாக வருவார்கள். இது 7ஆம் நூற்றாண்டில் இருந்து கடைபிடிக்கப்படும் தொன்மையான திருவிழா ஆகும்.

6. முருகப் பெருமானின் அவதார நோக்கமான சூரனை அழித்ததற்குப் பரிசாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்துத் தந்தார்.

அந்த நாள் பங்குனி உத்திரமே. எனவே முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்றான தெய்வானையுடன் முருகனுக்குத் திருமணம் நடந்த தலமான திருப்பரங்குன்றத்தில் திருக்கல்யாண உற்ஸவம் கோலாகலமாக நடைபெறுகிறது.

7. சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் அணிவகுக்கும் மச்சக்காவடி, சேவற்காவடி, கற்பகக் காவடி உலகப் பிரசித்தி பெற்றது. எனவே அன்றைய தினம் அருகில் உள்ள முருகன் கோயில்களுக்குச் சென்று முருகனின் கல்யாணக் கோலம் கண்டு வாழ்வில் நன்மங்கலம் அடையப் பெறுவோம்.

8. சபரிமலை சாஸ்தாவாம் ஐயப்பனின் அவதார நன்னாள் பங்குனி உத்திரம் என்பதால் சபரிமலையில் ஆறாட்டுவிழா நடக்கிறது. அன்று தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது. ஸ்ரீசாஸ்தா நீராடும் புண்ணிய நதியில் நீராடினால் நாமும் புனிதமடைகின்றோம்.

விரத முறை :

பங்குனி உத்திர நன்னாள் குலதெய்வ வழிபாட்டுக்கு மிக மிக உகந்த நாள். இந்நாளில் குலதெய்வத்தை வழிபடுவது நம்முடைய குலம் தழைக்க உதவுகிறது. நம்முடைய முன்னோர்களின் பரிபூரண ஆசிகளை பெற்று தரக்கூடியது.

பங்குனி உத்திர நாளில் அதிகாலை நீராடி மனத் தூய்மையோடு விரதம் இருக்க வேண்டும். இயலாதவர்கள் ஒருவேளை பால், பழம் சாப்பிடலாம். மாலையில் ஆலய தரிசனம் செய்து, விளக்கேற்றி வழிபட வேண்டும். தெய்வ திருமண வைபவங்களை தரிசிக்க வேண்டும்.

ஆலயம் சென்று வணங்கி, அஸ்தமனத்தின் மேல் இரவிலே உணவுண்டு, வெறும் தரையில் ஒரு துணியை விரித்து அதன் மீது உறங்க வேண்டும். காலையில் மீண்டும் அம்மையப்பனை ஆலய தரிசனம் செய்து விட்டு பாரணை செய்து விரதம் பூர்த்தி செய்ய வேண்டும்.

பங்குனி உத்திரத்தில் சிவ பார்வதி படத்தை அலங்கரித்து சிவபார்வதி கல்யாண மூர்த்தியாக பாவித்து வழிபாடு செய்தல் வேண்டும். குத்து விளக்கேற்றி வைத்து, தாம்பூலத்தோடு சித்ரான்னங்கள், சர்க்கரைப் பொங்கலோடு நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.

பங்குனி உத்திர நாளில் திருவிளக்கு தீபத்தில் சிவன் பார்வதி இருவரும் ஐக்கிய சொரூபமாக எழுந்தருள்வதாக ஐதீகம். எனவே விளக்கு பூஜை செய்து நம் பாவங்கள் அகன்று மங்களம் கைகூடப் பெறலாம்.

கந்தக் கடவுளுக்கும் உரிய திருநாள் ஆதலால் ஆலய தரிசனத்தோடு இல்ல வழிபாட்டின் போது சஷ்டிக் கவசம் சொல்லி முருகனையும் வழிபட்டுச் சிறக்கலாம்.

விரத பலன்கள் :

தெய்வத் திருமணங்களை தரிசித்து, நம் வீட்டிலும் மங்கள விழாக்கள் நடக்கவேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். தெய்வத் திருமண உற்ஸவங்களில் கலந்து கொண்டு இறைவனிடம் நம் மனதின் பாரத்தை வைத்தால், நம் இல்லங்களிலும் கல்யாண கெட்டிமேளம் கேட்கும் வாய்ப்பு கூடிவரும் என்பது வழிவழியாக வரும் நம்பிக்கை.

பங்குனி உத்திர விரதம் இருந்து மகாலட்சுமி ஸ்ரீமன் நாராயணனின் மலர்க்கரம் பிடித்ததைப் போல் நம் வீட்டுப் பெண்கள் மற்றும் ஆண்கள் கடைபிடிக்கும் விரதத்தின் மூலம் நல்ல பக்தி உடைய துணைவர் கிடைக்கப் பெறுவதுடன், வற்றாத செல்வ வளமும் உண்டாகும்.

பங்குனி உத்திர விரதம் 48 ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொள்வோருக்கு அடுத்தபிறவி தெய்வப்பிறவியாக அமையும் என்று விரத நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதன் மூலம் ஜனன, மரணச் சக்கரத்தில் இருந்து உயிர் விடுபட்டு முக்தி பெறும் என்பது ஐதீகம்.

உத்திர விரதமிருப்பதால் அனைத்து தெய்வங்களின் அருள் பூரணமாக கிடைக்கும்.

இந்நாளில் விரதம் இருக்க இயலாதவர்கள் அன்னதானம், வஸ்த்ரதானம் செய்வது மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

உத்திர நட்சத்திரத்திற்குரிய கிரகம் சூரியன். இந்நாளில் செய்யும் வழிபாட்டினால் பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகிவிடும் என்று சூரியபுராணம் கூறுகிறது.

பங்குனி உத்திர நாளில் சந்திரன் பலம்பெற்று கன்னிராசியிலும், சூரியன் மீனவீட்டிலும் இருக்கும். இவ்விரு கிரகங்களும் இந்நாளில் ஒருவரை ஒருவர் ஏழாம்பார்வையால் பார்த்துக் கொள்வர். இதன் மூலம் ஆத்ம பலமும், மனோபலமும் ஒருசேர நமக்குக் கிடைக்கிறது.

Tuesday, March 15, 2016

நீங்களே உங்கள் மனதை டியூன் அப் செய்யுங்கள்

சாதாரண இயந்திரமொன்றை சரிசெய்வதைப்போல் மனதினை டியூன் செய்வது இலகு என்றும் கூற முடியாது,அதுக்காக ஒரேயடியாக கடினம் என்றும் சொல்லிவிட முடியாது.

முயற்சி செய் முடியாவிட்டால் பயிற்சி செய் என்பதற்கிணங்க செயற்படுவோம்.நிச்சயம் வெற்றி பெறுவோம்.

முதலில் உங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கு புரிதல் என்பது உங்களின் அகம் சார்ந்த அதாவது ஆழ்மனது பற்றிய உயர்வான ஓர் எண்ணத்தை கொண்டிருக்க வேண்டும்.

நிச்சயமாக ஆழ்மனதிடம் உள்ள அளப்பரிய சக்தியினால் நமக்கு வேண்டியதை நேர் வழியிலேயே அடைய முடியும் என்பதனை உறுதியாக நம்புவது அவசியம்.

இதுவரை காலத்தில் உங்களைப் பற்றிய பல விதமான அபிப்பிராயங்களை பலர் கூறக் கேட்டிருக்கலாம்.

அதில் பல நம்மை தாழ்த்தி கூறப்பட்டிருக்கலாம்.

இப்போது அவையனைத்தையும் தூக்கி வீசுங்கள் என்றும் உங்கள் பக்கம் வராதவாறு. (தயவு செய்து மனதின் ஒரு ஓரத்தில் மட்டும் வைத்து விடாதீர்கள், பின் மீண்டும் அது தொல்லை கொடுக்கும்.)

அது எப்படி தூக்கி எறிவது என்று முனுமுனுப்பது கேட்குதுப்பா..

நீங்க இப்ப உயிரோட இல்லைன்னு உங்களுக்கு ஒருத்தர் போன் பன்னா நீங்க என்ன பன்னுவிங்க.

முதல்ல சொன்னவன் லூசு என்றத கன்போர்ம் பன்னீருவிங்க. அப்புறம் அவன்கூட பழகுறத குறைச்சுருவீங்க.

ஏன் இப்பிடில்லாம் செய்ரீங்க.

ஏன்னா உங்களுக்கு தெரியும் நீங்க உயிரோட இருக்குறது, அப்புறமென்ன...

அது மாதிரித்தான் இதுவும் உங்களப்பத்தி அதிகமாக தெரிஞ்சது நீங்க மட்டும் தான். இது உண்மை தான்ங்க. நம்புங்க!

உங்க மனதின் சக்தி பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கன்.
அப்ப எவனோ ஒருத்தன் உங்கள பத்தி தாழ்வா சொன்னா அதநம்புவீங்களா?
நம்பாதீங்க ப்ளீஸ்.

(குசும்புக்காரன்: என்னடா நீ முதல்ல‌ நம்புங்கடா என்றா இப்ப நம்பாதிங்கடா என்றா , எங்கள பாத்தா உன்க்கு என்னா தோனுது???)

உங்களைப் பற்றிய தாழ்வான கருத்துக்களை கொண்டவர்களிடம் இருந்து வரும் அவதூறுகளை செவிமடுக்காமல் அவர்களிடம் இருந்து விலகி இருப்பதே உங்களை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.

உங்களைப் பற்றி தவறாக சொல்லுபவர்களிடம் தயவு செய்து கோபப்பட வேண்டாம்.அவர்கள் வளர்ந்த சூழல் அவர்களை அவ்வாறு பேசும் படி வைத்திருக்கலாம்.

தனக்கு தெரிந்த விடயத்தையே அனைவரும் செய்ய முயற்சிப்பார்கள்.
உண்மையில் அவர்கள் மேல் இறக்கம் காட்டி அங்கிருந்து நகருங்கள்.


நீங்க எந்த துரையில சாதிக்கனும் என்று நினைக்கிறீங்களோ அதில் உங்களால் சாதிக்க முடியும். ஏனெறால் அது உங்களால் உங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.உங்கள் நோக்கம் உங்களால் முடிவு செய்யப்பட்டது.

எந்த ஒரு முடிவையும் பதற்றத்திலோ, பயத்திலோ, அவசரத்திலோ எடுத்தல் ஆபத்தான விளைவுகளை தேடித்தரும்.

அதனால் ஏற்படப்போகும் நன்மை தீமைகளை அலசி ஆராய்வதில் கவனத்தை செலுத்துங்கள்.

இவ்வாறான சிந்தனைகள் ஒரு நொடியில் வரப்போவதில்லை. தொடர்ச்சியான பயிற்சிகளும் முயற்சிகளும் உங்களை அணுவணுவாக செதுக்கும்.

எப்போதும் உங்கள் இலக்குகளின் மேல் நம்பிக்கையுடன் இருங்கள். எவ்வளவு தோல்விகள் வருகின்றதென கவலைப்படாதீர்கள்.

அவற்றை தோல்விகள் என்று சொல்வதை நிறுத்துங்கள்.

உங்கள் இலக்கை அடைய இவ்வழி சரியானதல்ல என்பதை அவை உணர்த்துகின்றன. எவ்வாறெல்லாம் உங்கள் இலக்கை அடைய முடியாதென அவை உங்களுக்கு கற்றுத்தருகின்றன.

அது மீண்டும் அவ்வழியில் நீங்கள் சென்று சிக்கித்தவிப்பதை தவிர்க்கும்.

உங்கள் முயற்சிகள் வெற்றியளித்தால் அது பற்றி பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளாதீங்க.

அது உங்களை அவ் வெற்றியிலேயே முடக்கி விடலாம்.

ஒவ்வொரு வெற்றியும் உங்கள் வழி சரியானதென்பதை உணர்த்துகிறது என்பதை நினைத்துக்கொள்ளுங்கள்.

இலக்கை அடைய மட்டும் நீங்கள் எந்தவொரு பிரச்சனைகளுக்குள்ளும் உள்நுழையாதீங்க.பிரச்சனைகள் எப்போதும் உங்களை சுற்றி நிற்பதாக சொல்றீங்களா?

நிச்சயம் எப்போதும் பிரச்சனைகள் இருப்பது தானே வாழ்க்கை, அதிலென்ன மாற்றம். ?

பிரச்சனையில்லமல்,தடைகள் இல்லாமல் மாபெரும் சாதனைகள் எங்கயாவது நடந்திருக்கிறதா?

இங்கு பிரச்சனை , பிரச்சனை நம்மை சுற்றி இருப்பதில்ல.
(குசும்புக்காரன்: இப்ப உனக்கென்னடா பிரச்சனை)

அப் பிரச்சனையை நாம் எதிர் கொள்ளும் விதமும் அது பற்றிய எமது கண்ணோட்டமும் தான்.

புறா ஒன்று மழை வரும் போது மரக்கிளைகளுக்குள் சென்று ஒதுங்குகிறது. ஆனால் கழுகு முகில்களின் மேலாக பறந்து மழையில் இருந்து விலகிக் கொள்கிறது.

இங்கு மழை இரண்டிற்கும் பொதுவான பிரச்சனையாகத்தான் வந்தது.

ஆனால் இரண்டு பறவைகளும் அப்பிரச்சனையை எதிர்கொண்ட விதத்தை பார்த்தீங்களா?

புறாவுக்கு பிரச்சனையின் தாக்கம் குறைவாக இருக்கும்.கழுகுக்கு பிரச்சனையே இல்லை என்றாகிவிட்டது.

இது போலத்தான் நாமும் இருக்க வேண்டும்.

பிரச்சனை வருவது உங்களுக்கு தான் ஆனால் அதன் தாக்கம் உங்களின் ஆழ்மனதையோ ,இலக்கினையோ பாதிக்க கூடாது.

பிரச்சனை என்னை ஒன்றும் செய்து விடாது எனபதை முழுமையாக நம்புங்கள்.

அந்த முழு நம்பிக்கையே பிரச்சனையின் தாக்கம் உங்களை ஏதும் செய்து விடாது. வருவது வரட்டும் பார்க்கலாம் என்ற உறுதியான நம்பிக்கையுடன் எப்போதும் இருங்கள்.


உங்களால் உங்களுக்காக நிச்சயிக்கப்பட்ட இலக்கை உங்களால் அடைய முடியுமென 100% நம்புங்கள்.

நிச்சயம் உங்களால் உங்களால் உங்கள் இலக்கை அடைய முடியும்.

உங்களை நீங்களே தயார்ப்படுத்தும் நேரமிது. இனியும் தாமதிக்க வேண்டாம்.

பணம் மட்டும் தான் வாழ்க்கையா? - 2

எல்லோருக்கும் வணக்கம்,

இவ்வளவு நாளா எங்கப்பா போய்ட்டா என்று கேட்கிறது புரியுது.

எக்கச்சக்கமான பிரச்சனைகளின் புயலிற்குள் சிக்கி சின்னா பின்னமாகி வெளியே வர தாமதமாகிற்று.

காத்திருந்த அனைவருக்கும் நெஞ்ஞார்ந்த நன்றிகள்.

இப்போதெல்லாம் உங்கள் வாழ்க்கையின் நோக்கம் என்னவென்று கேட்டால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பதிலே பெரும்பாலானோர்களிடமிருந்து வருகின்றது.

இது நான் கண்ட அனுபவ உண்மை.

நிம்மதியான சந்தோசமான வாழ்க்கை இருந்தால் போதுமே என்று கேட்டதிற்கு பணம் இருந்தால் தானே இந்த சந்தோசம், நிம்மதி எல்லாம் கிடைகிறது என்று சொல்லும் நிலை வந்து விட்டது.

இது கேலிக்குறிய விசயம் இல்ல. கவலைக்குரிய விசயம்.
வாழ்க்கைக்கு பணம் இன்றியமையாதது என்பது உண்மை தான்.

பணம் மட்டுமே வாழ்க்கை இல்லையே.
கோடிக்கணக்கில் பணம் புரளும் பிஸ்னஸ் ஜாம்பவான்கள் கூட நிம்மதி தேடி கிராமங்கள்,காடுகள்,மலைகள் என்று வெக்கேசன் போவது பற்றி ஒன்லைன் செய்தித் தளங்கள் அடிக்கடி செய்தி வெளியிடுவது அனைவரும் அறிந்ததே.

அவர்களிடம் இருக்கும் பணம் ஏன் அவர்களுக்கு நிம்மதியைத் தரவில்லை என்று கொஞ்சம் யோசியுங்கள்.

நிம்மதியையும் சந்தோசத்தையும் தருவது பணம் அல்ல.மனம் தான்.

பணம் இருந்தால் சந்தோசம் வரும் என்று உங்கள் மனதை நினைக்க வைத்திருக்கின்றீர்கள்.

மனம் நினைப்பதை அடைந்தால் தான் நிம்மதி அடையும். அந்த நினைப்பை மாற்றுவது அவ்வளவு எளிதும் அல்ல, நீங்கள் நினைக்கும் அளவிற்கு கடினமும் அல்ல. பழைய பதிவுகள் மனம் பற்றிய விடயங்களையும் அதன் செயற்பாடுகளையும் கூறும்.

சிலருக்கு இந்த எண்ணம் வேறுபடுகிறது. சிலர் ஒர் குறிக்கோளுடன் செயற்படுவார்கள். மனதை எண்ணங்கள் இல்லாமல் வைத்திருத்தல் மிகவும் கடினமான செயல். மகான்களுக்கும் யோகிகளுக்கும் இது கைகூடும்.

மனிதர்களால் எண்ணங்கள் இல்லாமல் செயற்பட முடியாது, அதற்காக பயனற்ற எண்ணங்களோடு பணியாற்றுவது வீண் செயல்.

பயனுள்ள எண்ணங்கள் வாழ்க்கையை உயர்விற்கு கொண்டு செல்லும்.
பணம் எப்போதும் மனித வாழ்விற்கு தேவையான ஒன்று.

"நாம் செய்யும் செயல்கள் எமக்கு பணத்தை பெற்று தரலாமே தவிர பணத்திற்காக செயல்களை நாம் செய்யக்கூடாது."
அப்படிச் செய்யும் செயல்களால் நாம் உயரத்திற்கு ஒரு போதும் போக முடியாது. அதன் வளர்ச்சி மறைப் பெறுமானத்திலே தான் போகும்.

உங்கள் எண்ணங்கள் எப்போதும் உயர்ந்த ஒன்றாக இருக்க வேண்டும்.
அத்தகைய எண்ணங்கள் உங்களை சிறந்த மனிதனாக்கும்.

உயர்ந்த குறிக்கோள் ஒன்றை எண்ணி அதற்காக உழைக்கும் போது சந்தோசம், நிம்மதி அனைத்தும் உங்களுடன் பயணிக்கும்.

பணம் மட்டும் வாழ்க்கையா ? - 1

        நான் எழுதிய  “எங்கு நோக்கினும் பணம்” என்னும் பதிவிற்கு என் தோழி ஒருத்தர், பணம் இல்லாவிட்டால் உறவுகள், நண்பர்கள் இப்படி எல்லோரும் நம்மை உதாசீனப்படுத்துவர் என்று கருத்து தெரிவித்திருந்தார். பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை அனைவரும் அறிவர். ஆனால், பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்பதை நானும் அறிவேன்.உயிர் வாழ பிராணவாயு தேவை. ஆனால், வெறும் பிராணவாயு மட்டும்போதுமா நாம் வாழ? சரி, நாம் உயிர் வாழ தண்ணீர் மிகவும் முக்கியம். சரி, நைல் நதியை உங்கள் பெயரில் எழுதி வைக்கிறேன், அந்த தண்ணீரை மட்டும் கொண்டு உங்கள் வாழ்க்கை வாழமுடியுமா. முடியாது.

        நாம் உயிர்வாழ பிராணவாயு முக்கியம். தண்ணீ முக்கியம். அதே போலத்தான் பணமும் முக்கியமே தவிர, பணம் மட்டுமே முக்கியம் அல்ல. சிறந்ததொரு எதிர்காலத்தை செதுக்கும் வேலையில் நாம் இன்று கிடைக்கும் நிகற்காலத்தை இனிதாய் வாழ மறக்கின்றோம். நாளை என்பது தினமும் வரத்தான் செய்யும். ஆனால் நாளை என்ன நடக்கும் என்பது யாருக்குமே தெரியாது. இன்று இருப்பது மட்டும்தான் நிஜம். அந்த உண்மையை உணர்ந்து இன்றைய பொழுதை மனதிற்கு சந்தோஷமாய் வாழவேண்டும். நாளைய பொழுதை சிறப்பாய் அமைக்க பாடுபடுகிறேன் என்பவர்கள் என்றுமே, நாளைக்குத்தான் உழைப்பார்களேயன்றி உழைத்து சம்பாதித்ததை எப்போது அனுபவிப்பது என்பதை மறந்துவிடுகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் ஒரு செய்தி படித்தேன். இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலை ஒரு செய்தித்தாள் வெளியிட்டது. சென்ற வருடம் முதல் இடத்தில் இருந்தவர் இந்த வருடமும் முதலிடம் என்று. சிரித்தேன் நான். செய்தித்தாள் என்னும் காகித்ததில் தங்கள் பெயர் இடம்பெறத்தான் இவர்கள் உழைக்கிறார்கள் போல. எல்லோரும் ஒருநாள் கல்லைறையில் இடம்பெறத்தான் போகிறோம். பணம் சம்பாதிப்பதே செலவு செய்யத்தான் என்பதை அனைவரும் பல நேரங்களில் மறந்துவிடுகின்றனர். 

            எது எப்படியோ, என் கைகளால் எவ்வளவு தாங்க முடியுமோ அவ்வளவு மட்டும்தான் என்னால் தாங்க முடியும். அந்த அளவிற்கு ஈன்று, அதில் பாதியை செலவு செய்து, மிச்சத்தில் பாதியை சேவை செய்து, மிச்சமான கால் பகுதியை சேர்த்துவைத்து வாழ்வதுதான் என் பாதை.

Monday, March 14, 2016

image Trap ! இமேஜ் பற்றிய பயம் ஒரு பொறி ! இந்த பயம் இருந்தால் No Creativity?

பிறர் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் பலவேளைகளிலும் எமக்கு ஒரு சிறையாகி விடுகிறது, எம்மை பற்றி நாமே கருதிக்கொள்ளும் தோற்றங்களும் பலவேளைகளில் எம்மை நகரவிடாமல் செய்து விடுகிறது,
பிறரின் அபிப்பிராயங்கள் எமது தீர்மானங்களின் மீது பாதிப்பை உண்டு பண்ணுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது,
அதன் காரணமாகவே பல சமயங்களில் நாம் நாமாக இல்லாமல் இருக்கிறோம்.
பிறரின் அபிப்பிராயங்கள் நமது மூளையை பல சமயங்களிலும் கழுவி விடுகிறது.நம்மை அறியாமலேயே  நாம் எமது சுய புத்தியை அல்லது சுய விருப்பத்தை மீறி நடந்து கொள்கிறோம்

ஏனெனில் பிறர் எம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் எமக்கு அவ்வளவு அக்கறை.
பிறரின் அபிப்பிராயங்களுக்கு நாம் ஏன் பயப்படுகிறோம் ?
நாம் சுயமாக சுதந்திரமாக சிந்திக்கும் போதெல்லாம் சமுகத்தை நாம் வழிநடத்துகிறோம்.
பிறரின் அல்லது சமுகத்தின் அபிப்பிராயங்களுக்கு ஏற்ப சிந்திக்கும் பொழுதெல்லாம் நம்மை சமுகம் வழிநடத்துகிறது.

இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வெரு ஜீவராசியும் தனி தனி தனது நோக்கங்களுக்காக பிறவி எடுத்திருக்கிறது,
தனது சுயத்தை இழந்து யாரோ ஒருவரது வாழ்வை வாழ்வது என்பது மனிதர்களிடம் மட்டும்தான் காணப்படுகிறது,
மனிதர்கள் ஏன் சுயத்தை இழக்கிறார்கள் ?
பயம்! தன்னை பற்றி பிறர் என்ன நினைப்பார்கள்?
சமுகத்தில் தனது பிரதிமை எப்படி இருக்கும்? அதாவது இமேஜ் பற்றிய பயம்.
இந்த இமேஜ் பொறி என்பது மிகவும் பலம் வாய்ந்தது, நம்ம வாழவும் விடாது சாகவும் விடாது,
பலவீனமான மனிதர்கள் இந்த இமேஜ் பொறியில் சிக்கி கடனாளியாவது அடிக்கடி நாம் காணும் காட்சியாகும் .
பிறரின் பார்வைக்கு ஏற்ப தனது இமேஜை மாற்றி கொள்வது ஒரு விதத்தில் ஒரு  மெல்ல கொல்லும் வியாதிதான்.
பல குடும்பங்கள் கடனாளியவதும் , தேவையே இல்லாமல் தமக்கு விருப்பம் இல்லாவிடினும் சமயம் அரசியல் போன்ற பொது காரியங்களில் அதிகமாக ஈடுபடுபவர்கள் அநேகர் இந்த வியாதியால் பீடிக்க பட்டவர்கள்தான்,
இவர்கள் தங்கள் வாழ்வை வாழாமல் யாரோ ஒருவரது வாழ்வை வாழ முயற்சிப்பவர்கள் ஆவர்.
இதைதான் இல்லாத ஊருக்கு போகும் வழி என்று சொல்வர்.
தனது பணம் நேரம் மற்றும் சகல சக்திகளையும் வீண் விரயம் செய்து தனக்கு சம்பந்தம் இல்லாத கருமங்களில் காட்சி அளிக்கும் இவர்களின் செய்கை உண்மையில் வெறும் வீண் விரயமே .
இதற்கு அடிப்படை காரணம் தன்னம்பிக்கை இல்லாமையே,
தனது உண்மையான விருப்பங்களை பூர்த்தி செய்யவே தனக்கு இந்த அற்புத வாழ்வு அமைந்திருக்கிறது என்ற விழிப்புணர்வு வந்தால் மட்டுமே இந்த இமேஜ் ட்ராப் இல் இருந்து விடுதலை கிடைக்கும் ,
அப்படி அதில் இருந்து விடுபடுவது அவ்வளவு சுலபம் அல்ல.
ஏனெனில் எமது சமுக கட்டமைப்பு நீண்ட காலமாக பிறரின் அபிப்பிராயம் அல்லது கடவுளின் அபிப்பிராயம் என்று ஏதாவது ஒரு பயத்தை காட்டியே நிறுவனப்படுத்தி வந்துள்ளது,
அரசியல் கட்சிகள்  மற்றும் சமயம் சார்ந்த  அமைப்புக்கள் அல்லது குழுக்கள் எல்லாமே இந்த இமேஜ் பொறியை வைத்து தான் தங்கள் கடையை விரித்துள்ளன.
இதே தந்திரத்தை ஆம்வே போன்ற வர்த்தகர்களும் பயன்படுத்தியே வருகிறார்கள் . இவர்கள் அடிக்கடி தமது  வாடிக்கையாளர்கள் அல்லது ஏஜெண்டுகளை கூட்டமாக சேர்த்து அதை ஒரு இமேஜ் பொறியாக மாற்றி விடுவார்கள். அங்கு பலர் முன்னிலையில் ஒவ்வொருவரினதும் திறமை மேன்மை தகுதி போன்றவற்றை செயற்கையாக புகழ்ந்து அவர்களை உயர உயர உயர்த்தி விடுவார்கள். அவர்களின் வார்த்தைகளால் மயங்கும் தனி நபர்கள் அவர்களின் இமேஜ் பொறியில் வசமாக சிக்கி தங்களின் சுயத்தை இழக்கிறார்கள்.
இமேஜ் பொறியை வைத்து பிறரிடம் கடன் போன்ற உதவிகளை பெற்றுக்கொள்வதை நாம் சர்வ சாதாரணமாக காணலாம்.

அந்த காலத்து புலவர்கள் அரசர்களையும் பணக்காரர்களையும்  இந்த விதமான இமேஜ் பொறியை வைத்து  பணம் பரிசுகள் பெற்றுள்ளதாக படித்திருக்கிறோம் .
ஆண்டாண்டு காலமாக அடிமனத்தில் ஆழமாக பதிக்கப்பட்ட கோட்பாடுகளை பற்றி மீள் பரிசீலனை செய்து பார்க்க மிகுந்த தன்னம்பிக்கை வேண்டும்,
திறந்த மனதோடு ஒரு விடயத்தை ஆராயும் பண்பு வேண்டும் .ஆனால் நாம்தான் எதையும் பார்க்காதே கண்ணை மூடிக்கொண்டு நம்பு அல்லது நம்புவது மாதிரி நடி , கும்பல்ல கோவிந்தா போடு, அப்படியே விழுந்த பாட்டுக்கு குறி போடு  என்றெல்லாம் தப்பு தப்பாக்க நடதுகொள்கிறோம்,
உள்ளதை சொல்லாதே ஆனால் உண்மை சொல்வது போல் நடி. என்றெல்லாம் பக்கா கிரிமினல் கோட்பாடுகளை போற்றி வாழ்கிறோம்
அது மட்டுமல்ல வாழும் வழி இதுதான் என்று பரம்பரை பரம்பரையாக நம்பி கடைபிடித்து வருகிறோம்
நான் யார்? எனக்கு உண்மையில் எது விருப்பம்? நான் எப்படி இருக்கவேண்டும்?
என்ற அடிப்படை கேள்விகளை எமக்கு நாமே கேட்டு கொள்வதில்லை.
மொத்தத்தில் எம்மை நாமே மதிப்பதில்லை.அதன் காரணமாகவே பிறரையும் நாம் அதிகம் மதிப்பதில்லை.ஆனால் பொறாமை படுவோம் பொல்லாப்பும் சொல்வோம்.
பிறருக்காக எமது  சுய சிந்தனையை இழந்துவிட்டால்  பிறகு எமக்கு சுய சிருஷ்டியே இருக்காது,
அதாவது எமக்குள் இருக்கும் மென்மையான உணர்வுகள் செத்து போய்விடும்.
 சுயம் இருப்பவர்கள்தான் சிருஷ்டி கர்த்தாக்கள். சுயம் இல்லாதவர்களிடம் Creativity இருக்காது.Creativity என்பது கணக்கு பாடம் அல்ல அது உள்ளுணர்வில் இருந்து தானே வரவேண்டும். இளையராஜா சொல்கிறார் இசையமைக்கும் அந்த கணம் கூட அந்த பாடலின் இசை என்ன என்று எனக்கு தெரியாது . அது வெளிப்படும்போதுதான் தனக்கே அது தெரிய வருகிறது?
இதே போல தான் கண்ணதாசனும் அவரது வாயால் வருபோழுதுதான் அந்த வரிகள் அவருக்கே தெரிய வருக்கிறது.
இவர்களும் நம்மவர்களை போல சதா இந்த இசை அல்லது இந்த பாடல்வரிகளை பிறர் எப்படி நோக்குவர் என்பதிலேயே குறியாக இருந்திருந்தால் இவர்களும் வெறும் Empty மனிதர்களாக இருந்திருப்பார்கள்.
இவர்கள் எல்லாம் இமேஜ் பொறியை உடைத்து எறிந்தவர்கள்.
அதனால்தானோ என்னவோ நம்மவர்  இசை இலக்கியம் திரைப்படம் போன்ற நுண் கலைகளில் மிகவும் பின் தங்கி இருக்கிறார்கள்.
சுயத்தை இழந்தவர்கள் வெறும் மெஷின் தான் .  வெறும் மெஷின் கதைவசனம் எழுதுமா அல்லது சுயமாக இசையமைக்குமா என்ன?
சுயத்தை இழந்தவரின் வார்த்தைகள் எல்லாம் Empty words தான்.
வெறும் சொற்களை வைத்து வெறும் வாயை மெல்லுவார்கள்.
சுய பரிசோதனை செய்வது அவசியம், ஏற்கனவே தலைக்குள் ஏறிவிட்ட கோட்பாடுகளை தூசி தட்டி சுயமாக கூர்ந்து பார்க்க வேண்டும்.
அவர் பாதை அவருக்கு நல்லது . உன் பாதைதான் உனக்கு உரியது ,
அதுதான் உன்னை உனக்கு தெரிய படுத்தும்.
இமேஜ் பொறியை ஒரு சிறை என்று எப்போது தெரிகிறதோ அப்போதுதான் நீ நீயாக இருக்கமுடியும்
உன் முழு பிரகாசமும் இந்த பிரபஞ்சத்தில் ஜொலிக்க இமேஜ் பொறி என்ற இருட்டில் இருந்து கொஞ்சமேனும் வெளியே வர எனது வாழ்த்துக்கள். 

Thought is a Invitation எண்ணங்கள் எல்லாமே சம்பவங்களுக்கான அழைப்பிதழ்கள்தான்

உங்களை நோக்கி வரும் நிகழ்சிகள் அல்லது சம்பவங்கள் எல்லாமே உங்கள் அழைப்பிதழை பெற்ற பின்பே வருகின்றன.
உங்களுக்கு கிடைக்கும் பொருட்கள் செல்வங்கள் இன்பங்கள் அல்லது துன்பங்கள் எல்லாமே உங்கள் அழைப்பிதழ் கிடைக்காமல் உங்களை நோக்கி வரமுடியாது. இது நிச்சயமான உண்மையாகும்
ஒருவரின் காதலோ அல்லது கோபமோ மட்டும் அல்லாது விபத்தும் லாட்டரி அதிஷ்டமும் கூட உங்கள் அழைப்பிதழை பெற்று உங்கள் அனுமதியுடன்தான் உங்களை வந்தடைகின்றது.
இதை விளங்கி கொள்வதில் உள்ள சிக்கல் என்னவென்றால் , நீங்கள் உங்களை அறியாமலேயே அழைப்பிதழ்களை அள்ளி வீசி கொண்டிருக்கிறீர்கள்.
உங்களுக்கு விருப்பமான விடயங்களுக்கும் வீசுகிறீர்கள்.
உங்களுக்கு விருப்பமே இல்லாத விடயங்களுக்கும் கூட அழைப்பிதழ்களை அள்ளி அள்ளி வீசுகிறீர்கள்.
நீங்களே அழைப்பை அனுப்பி அனுமதியும் கொடுத்துவிட்டு பின்பு எனக்கு ஏன் இது வரவேண்டும் அல்லது இப்படி நடக்கவேண்டும் என்று உங்களை நீங்களே கேள்வி கேட்டு பதில் கிடைக்காமல் குழம்புகிறீர்கள்.
தெரிந்தோ தெரியாமலோ உங்கள் மனதில் வந்து போகும் எண்ணங்கள் எல்லாமே மின்சாரம்தான் . அவை மிகவும் சக்திவாய்ந்த தொழிற்சாலைகள்தான் .
இந்த பிரபஞ்சத்திற்கு நல்லது கெட்டது விரும்பியது வெறுத்தது என்று ஒன்றும் கிடையாது.
உங்கள் மனம் என்ற தொழிற்சாலையில் வரும் மூலபொருள் அதாவது எண்ணங்கள் எல்லாமே  சம்பவங்கள்  அல்லது பொருட்களாக உருப்பெற்று வெளியேவரும் .

 எவ்வளவுக்கு   எவ்வளவு  அழுத்தமாக மீண்டும் மீண்டும் நினைக்கின்றீர்களோ  அவ்வளவு  சீக்கிரமாகவும்   முழுமையாகவும்  அது  வெளிவரும் . அதாவது அதை  நீங்கள்  அனுப்பவமாக  பெறுவீர்கள்.
 நேற்று ஒரு சிறு உதாரணம்  ஏன் கண்முன்னே இடம்பெற்றது.
 ஒரு அம்மையார்  சுமார் ஒரு மணித்தியாலமாக  யாரோ தனது  உறவினர்கள் நண்பர்கள் போன்றவர்களது  தீராத நோய்களையும்  அதன் தாக்கத்தை பற்றியும்   ரொம்பவும்  விலாவாரியாக   தெளிவான  மருத்துவ குறிப்புக்களோடு  தொடர்ந்து  பேசி கொண்டே இருந்தார். ஏன் இவ்வளவு தூரம் இவற்றை ஒரு மாதிரி ரசித்து ரசித்து பேசுவது போல பேசுகிறார் என்று எண்ணிக்கொண்டேன்.  ஏனோ அவரது மனதை அந்தவிதமான நோய்களும் அதற்குரிய  வேதனை சிகிச்சை  போன்ற விடயங்கள் கவர்ந்து கொண்டே இருந்ததை அவதானித்து கொண்டு இருந்தேன்  . அவர் மட்டும் அல்ல நம்மில் பலரும்  எமது மனதின் இயங்கு சக்தியை பற்றிய புரிதல் இல்லாமல் தவறான சம்பவங்களுக்கு  பச்சை சிக்னல் கொடுத்துகொண்டே இருப்பது அடிக்கடி நடப்பதுதான் . திடீரென்று  அவரது காலடிக்கு கீழ் படுத்திருந்த நாய் அவரை கடித்து விட்டது . அவர் பதட்டப்பட்டு  நாளை டாக்டரை பார்க்க வேண்டும் என்று கூறி போததற்கு அவருக்கு  டயபடீஸ் வேறு இருப்பதாகவும் விசனபட்டார்.
சுமார் ஒரு மணித்தியாலம் நோயையும் அதன் வேதனைகளையும் தொடர்ச்சியாக பேசி பேசி  ஒரு ஸ்ட்ராங்கான அழைப்பிதழையும் அனுமதியையும் கொடுத்த அவரது எண்ணத்திற்கும் பேச்சிற்கும் பிரபஞ்சம்  ஈடு கொடுத்ததாக தான் அந்த சம்பவம் எனக்கு தெரிந்தது.
எமக்கு வாழ்வில் நடைபெறும் நன்மை  தீமை எல்லாமே ஏதோ ஒரு காலத்தில் எம்மை அறியாமலோ அல்லது அறிந்தோ  நாமே அழைத்துகொண்டவைதான்
எனது பழைய நண்பன் ஒருவனிடம் இந்த கருத்துக்களை பற்றி பேசிகொண்டிருந்த போது அவன் தனது அனுபவம் ஒன்றை கூறினான்.
சிறுவயதில்  அவனுக்கு  சோடா பாக்டரி போடவேண்டும் என்று ஒரு  ஆசை  இருந்தாம் அதே சமயம்  பசு மாடு வளர்த்து ஒரு பெரிய  பால் பண்ணை வைக்கவேண்டும் என்றும்   விரும்பி இருந்தானாம்..
ஆனால் காலப்போக்கில் அந்த இரு எண்ணங்களும் அவனிடம் அழுத்தமாக இருக்கவில்லை
எனவே அது இரண்டும் நடைபெறவில்லை என்றும் கூறினான்.
அப்பொழுது நான் அவதானித்தேன் அவன் ஒன்றிரண்டு மாடுகள் வளர்க்கிறான் அதன் பாலை சிலவேளை அவனே கொண்டு சென்று கொடுக்கிறான் . அவன் அந்த பாலை சோடா போத்தல்களிலேயே  அடைத்து கொண்டு போய் கொடுக்கிறான். ஆகவே அவனது இரண்டு எண்ணங்களுமே ஈடேறி விட்டன என்றுதான் சொல்லவேண்டும்  அவனது சிந்தனயில் பாலுக்கும் சோடாவுக்கும் பலமில்லாத அழைப்பையும் அனுமதியையும்தான் கொடுத்திருக்கிறான் எனவே இரண்டுமே சிறிய அளவில் நிறைவேறியுள்ளன.
இதுதான்  கனவு  காணும்போது அழகாக மகிழ்ச்சியாக கனவு காண வேண்டும்,
உங்கள் கற்பனைகள் எண்ணைகள் எல்லாமே பிரபஞ்சத்திற்கு நீங்கள் வழங்கும் அனுமதி பத்திரங்கள் .

பரந்து விரிந்த  இந்த பிரபஞ்சத்திற்கு  உங்கள் விருப்பமே  அதன் விருப்பம்.
உங்கள் மூலம்தான் பிரபஞ்சம் தனது லீலையை ரசிக்கின்றது.
உங்களின் ஊடாகத்தான் பிரபஞ்சம் தன்னை தானே செதுக்கி கொண்டிருக்கிறது.
நீங்கள் வேறு அது வேறல்ல . நீங்கள் ஒரு கண்ணாடி . உங்கள் முகத்தில் பிரபஞ்சம் தன்னை பார்த்து ரசிகின்றது.
உங்களின் ஒவ்வொரு அசைவுக்கும் அது பதில் கொடுக்கிறது.
உங்களின் ஒவ்வொரு எண்ணங்களும் அதற்கு நீங்கள் இடும் கட்டளைகள்
உங்களின் எண்ணங்களை இனி இது எனது விருப்பமானதுதானா என்று எண்ணி பார்த்து  எண்ணுங்கள்.
உங்கள் எண்ணங்கள் வேறு விருப்பங்கள் வேறு  அல்ல .
இரண்டுமே ஒன்றுதான் .
இரண்டுமே பிரபஞ்சத்திற்கு நீங்கள் கொடுக்கும் கட்டளைகள்தான்/ 
 instructions and invitations.
Thought is a Invitation. 

நீங்கள் விரும்புவதும் நினைப்பதுவும் ஒன்றா? இதை உறுதிப்படுத்தினால் அது நிச்சயம் நிறைவேறும்...அது ஒரு ரகசியம் அல்ல ...

நீங்கள் விரும்புவதும் நினைப்பதுவும் ஒன்றா? இதை உறுதிப்படுத்தினால் அது நிச்சயம் நிறைவேறும்...அது ஒரு ரகசியம் அல்ல ...
ஓடிக்கொண்டு இருக்கும் இந்த வாழ்கை ஒவ்வொரு கணமும் உங்களால் தீர்மானிக்கப்பட்டு உருவாக்க பட்டுக்கொண்டே ஓடுகிறது.
நிச்சயமாக உங்களின் வாழ்க்கை வேறு ஒரு சக்தியால் 

தீர்மானிக்கப்படவில்லை,
இதை நம்புவது அல்லது ஏற்று கொள்வது மிகவும் கடினமான காரியமாகும்.
நமக்கு இந்த வாழ்க்கையை தீர்மானிக்கும் சக்தி இருந்தால் நாம் ஏன் எமக்கு விருப்பமான விதத்தில் எமது வாழ்க்கையை தீர்மானித்து உருவாக முடியாமல் இருக்கிறது என்ற கேள்வி எழுவதும் தவிர்க்க முடியாது,

எமது வாழ்க்கை  அல்லது எமது நோக்கம்  எமது விருப்பப்படியே  உருவாக்கப்படுகிறது எனில், 
ஏன் நாம் விரும்பியபடி எமது வாழ்க்கை  அமைவது இல்லை?

நிச்சயமாக நாம் விரும்பியபடிதான் எமது வாழ்க்கை அமையும்.
இதில் சந்தேகமே தேவை இல்லை,
நாம் எதை விரும்புகிறோம் என்பது மிகபெரும் உள்ளார்த்தம் உள்ள கேள்வியாகும்.
நாம் விரும்புவது என்று நாம் நினைக்கும் எல்லாவற்றையும் நாம் நிச்சயம் விரும்புகிறோமா?
நாம் விரும்பவில்லை என்று நாம் நினைக்கும் எல்லாவற்றையும் உண்மையில் நாம் விரும்பவில்லையா?
உதாரணமாக நாம் ஒருவரும் விபத்துக்கள் எமக்கு நடக்க வேண்டும் என்று விரும்புவதில்லை .
ஆனாலும் எமக்கு விபத்துக்கள் சிலவேளை நடக்கின்றதே?
அது எப்படி?
எமக்கு ஒரு விபத்து நடந்து விட்டால் அது எப்படி எமக்கு சம்பவித்தது?
நிச்சயமாக நாம் அதை விரும்பி இருக்க முடியாது.
நிச்சயம் நாம் அதை உருவாக்கி இருக்கவும் முடியாது.
எமக்குள் இருக்கும் எது அந்த விபத்தை எம்மை நோக்கி ஈர்த்தது?
நிச்சயமாக அந்த விபத்தை ஈர்க்கும்  ஏதோ ஒரு சக்தி எம்முள் இருந்துதான் உருவாக்கி இருக்கிறது.
எம்மை அறியாமலே நாம் உருவாக்கும் சக்திகளுக்கு இயங்கும் ஆற்றல் இருக்கிறது.

எமது சிந்தனைகள், எமது உள்ளுணர்வுகள், எமது உணர்ச்சிகள் மட்டும் அல்லாது எமக்குள் எம்மை அறியாமலேயே எமது ஆழமான அடிமனதில் மறைந்து இருக்கும் எண்ணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை,
இவைதான் எல்லா சம்பவங்களுக்கும் ஆதார சக்தியாக இருக்கிறது,

நாம் விபத்தை விரும்ப மாட்டோம் ஆனால் விபத்து பற்றி  செய்திகளை டிவியில் பார்ப்போம் , சிலவேளைகளில் எம்மை அறியாமல் அந்த விபத்து பற்றிய எண்ணங்கள் எமக்குள் பதிந்து விடுகிறது,

விபத்து பற்றிய செய்தி எமக்குள் இருந்து  எவ்வளவு அழுத்தமாக அது தனது இயங்கு சக்தியை பெறுகிறதோ அந்த அளவு விபத்து நடக்கும் சாத்தியமும் அதிகமாகிறது,
எமது மனம் இயங்கும் வழிமுறைக்கும் வெளி உலகம் எமக்கு கற்று தந்த வழிமுறைகளுக்கும் இடையில் பாரிய ஒரு இடை வெளி இருக்கிறது.

அதனால்தான் எமக்கு வாழ்வானது அனேகமாக ஒரு போராட்டமாக மாறிவிடுகிறது.
இதை விளங்கி கொள்வது எளிதான காரியம் அல்ல.

ஏனெனில் இயற்கையின்  சிருஷ்டி நிர்வாக பொறி முறையை பற்றி ஏதும் அறியாதவர்களாக இருக்கிறோம்,
இயற்கையின் இயங்கு விதிகளை நாம் பெரிதும் அக்கறை கொள்வதில்லை.

இந்த இயங்கு விதிகளை பற்றிய எமது கோட்பாடுகள் எல்லாம் சமயங்கள் சார்ந்த கோட்பாடுகள் அல்லது செய்திகளாக தான் உள்ளன.
அவை விஞ்ஞான ரீதியான அல்லது தர்க்க சாஸ்திர ரீதியான கோட்பாடுகளாக பெரிதும் இருப்பதில்லை.
மனிதர்களின் சிருஷ்டி பற்றிய ரகசியங்கள் பெரிதும் ரகசியங்களாகவே இருக்கின்றன.
சிருஷ்டியின் அற்புத சக்திகளை நாம் ஏன் அறியாமல் போய்விட்டோம் என்பது உணமையில் கவலைக்கு உரியதுதான் ,
நாம் எமக்கு நடக்கும் சம்பவங்கள் எல்லாம் ஏதோ கண்ணுக்கு தெரியாத கடவுள் அல்லது கிரகங்கள் எமது தலையில் இட்டு கட்டுவதாகதான் எமக்கு இதுவரை காலமும் கற்பிக்க பட்டு வந்துள்ளது.
எமக்கு வருவதெல்லாம் எமது தலையில் இருந்து வந்தவை என்பது தான் உண்மை.
இந்த சிருஷ்டி ரகசியத்தை அறிவதற்கு உள்ள ஒரே வழி எம்மை பற்றி நாமே கொஞ்சம் ஆராய்ச்சி செய்வதுதான்.
நாம் இதுவரை எம்மை பற்றி சரியாக ஆராய்ச்சி செய்ய வில்லை என்றுதான்  கூறுவேன்.
நாம் சதா ஏதாவது ஒன்றின் பின்னால் ஓடிகொண்டே இருக்கிறோம்.
ஓடுவதை நிறுத்தி விட்டால் நாம் ஏதோ பின்தங்கி விட்டோம் அல்லது தோற்று விட்டோம் அல்லது வாழவே இல்லை என்ற முடிவுக்கு வந்து விடுவோம்,

தன்னை மறக்காமல் ஓடிகொண்டே இருந்தால் அது நல்லது.
ஆனால் தன்னை மறந்தல்லவா பலரும் ஓடிகொண்டிருக்கிரார்கள்.

ஒரு அழகான நதியானது தான் கடலை சேரவேண்டும் அதற்கிடையில் அழகான பல ஊர்களை பார்க்கவேண்டும் பல மொழிபேசும் மாநிலங்களை கடக்கவேண்டும் பலவிதமான காற்றை சுவாசிக்க வேண்டும் பலவிதமான காட்சிகளை காணவேண்டும் இப்படி எல்லாவற்றையும் கண்டுகொண்டே அது வேக வேகமாக கடலை நோக்கி ஓடுகிறது ,
அது அதன் வாழ்க்கை. நீரோடு நீராக சேர்வது அதன் விருப்பம். அந்த நதியானது கடலை சேருமுன் அனுபவங்களை ரசித்த பின்பே அது கடலை அடைகிறது,
அது பின்பு கடலாக வாழ தொடங்குகிறது.
மனிதவாழ்வுக்கும் இந்த நதியின் கதைக்கும் நல்ல நெருக்கம் இருக்கிறது,
நாம் எங்கிருந்து வருகிறோம்?
எங்கே போகிறோம்?
இந்த கேள்விகளுக்கு எல்லா சமயங்களும் விதம் விதமான பதில்களை கூறுகின்றனர் .
நாம் அந்த விடயத்திற்கு போகவில்லை.
எங்கிருந்தோ வந்துவிட்டோம் எங்கேயோ போகப்போகிறோம் அது பற்றி பிறிதொரு அத்தியாயத்தில் பார்போம்.
தற்போது  இந்த உலகத்தில் நாம் எப்படி மகிழ்ச்சியாக வாழலாம்/?
எப்படி நாம் நினைத்ததை எல்லாம் சாதிக்கலாம்?
நாம் நினைத்தபடியே எமது வாழ்வு அமையுமா?
அதற்கு நாம் என்னதான் செய்ய வேண்டும்?

முதலில் எமது எண்ணங்களை நாம் ஒழுங்கு படுத்தி கொள்ளவேண்டும்.

ஒவ்வொரு எண்ணமும் எமது மனதில் உதிக்கும்போதும் இது நிச்சயம் ஒரு நாளில் ஒரு நிதர்சனமான உண்மையாக போகிறது என்று கருதி கொள்ளவேண்டும். இது முதல் படி.

இந்த எண்ணம் மட்டும் எமக்குள் உருவாக்கி விட்டால்  எமது எண்ணங்களுக்கு வலிமை வந்துவிடும்,

இந்த கோட்பாட்டை அழுத்தமாக நாம் நம்பும் பொழுது எமது எண்ணங்கள் எவ்வளவு சக்திவாய்ந்தவை என்பது நடைமுறை வாழ்க்கையிலேயே எமக்கு மெல்ல மெல்ல புரியதொடங்கும்.

எமக்கு தெரிந்தோ தெரியாமலோ எமது மனதில் வந்து போகும் அத்தனை எண்ணங்களுக்கும் அத்தனை செய்திகளுக்கும் அத்தனை உணர்வுகளுக்கும் அத்தனை உணர்சிகளுக்கும் நிச்சயம் சிருஷ்டி  சக்தி இருக்கிறது,

அது எவ்வளவு அழுத்தமோ அல்லது அழுத்தம் இல்லையோ அதற்கு ஏற்ற அளவு அது நிதர்சனமாக நடைபெறும்.

இதனால்தான் எமது மனதை ஒரு அதி சக்திவாய்ந்த மின்சாரம் போன்று கருத வேண்டும்,
நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ என்னன்னா எண்ணங்களுக்கு அல்லது என்ன செய்திகளை அதிகம் எண்ணுகிறீர்களோ அவற்றிக்கு உயிர்கொடுப்பது நீங்கள் தான் என்பதை மறக்க வேண்டாம்.

உதாரணமாக எனக்கு தெரிந்த ஒருவர் சதா துன்ப பாடலை விரும்பி விரும்பி பாடுவார் அல்லது முணுமுணுப்பார் கடைசியில் அவர் அதிகம் முணுமுணுத்த பாடல் போன்றே அவரது வாழ்க்கையும் அமைந்து விட்டது,

எனது வேறொரு நண்பர்  சதா சண்டை படங்களை விரும்பி பார்ப்பார். அவர் மிகவும் நல்லவர் .ஆனால் அவரது வாழ்வில் யாரும் எதிர்பாராத மாதிரி ஒரு சண்டை  சம்பவம் நடந்தது. தற்போது அவர் அதிலிருந்து மீண்டுவிட்டார்,

இது போல இன்னும் எத்தனையோ பல சம்பவங்கள் நான் அறிந்துள்ளேன்.
மனதின் வலிமையின் நாம் இன்னும் சரியாக உணரவில்லை.

வருந்தி வருந்தி மனதையும் ....வருத்தி வருத்திக்கொண்டு இருந்தால் வருத்தம் தான் வரும். வாழ்க்கை வாராது,

வாழ்க்கை வேறு மகிழ்ச்சி வேறல்ல .
இன்னும் சரியாக சொல்லப்போனால் இந்த பூமிக்கும் நாம் வந்த நோக்கமே வாழ்க்கைதான்.
இந்த வாழ்க்கை சகல சக்திகளும் கொண்டதாகும்.
எம்மை சுற்றி உள்ள இந்த பிரபஞ்சத்தை கொஞ்சம் உற்று நோக்கினால் சகல சிருஷ்டி ரகசியங்களும் தெளிவாகவே தெரியும்,

நாம்தான் கண்ணை மூடிக்கொண்டு சதா யாரோ சொல்வதை எல்லாம் நம்பி கொண்டு காலத்தை கடத்தி விட்டோம்.
இயற்கையை மிஞ்சிய சக்தி எதுவுமே இல்லை.

இன்றய சமயங்கள் எல்லாம் தோன்றுவதற்கு எத்தனையோ கோடானு கோடி ஆண்டுகளாக இந்த அற்புதமான உலகத்தை படைத்து காத்து நாமும் சகல ஜீவராசிகளும் வாழக்கூடிய வாய்ப்பை எமக்கு தந்தது இந்த பிரபஞ்சம்தான்.
அதன் கோட்பாடுகள் எல்லாமே நம் கண்முன்னே தெரிபவைதான் ,

பிரபஞ்சம் யாரையும் தனியே கூப்பிட்டு உங்களுக்கு மட்டும் சொல்கிறேன் என்று தனது இயங்கு விதிகளை கூறவில்லை.

நாம்தான் அவற்றை பார்க்க மறுத்து கண்களை மூடிக்கொண்டு கண்ணுக்கு தெரியாதவற்றை பார்க்க முயற்சிக்கிறோம் ஆனால் கண்ணுக்கு தெரிந்த பிரபஞ்சத்தை பார்க்க மறுக்கிறோம்,
நாம் வேறு பிரபஞ்சம் வேறல்ல. நமக்கு வரும் எண்ணங்களும் பிரபஞ்சத்திற்கு வரும் எண்ணங்களும் வேறல்ல.
அதனால்தான் நாம் எப்படியோ அப்படித்தான் எம்மை சுற்றி உள்ள பிரபஞ்சமும் இயங்குகிறது.
இது எப்படி என்பது நிச்சயமாக நாம் விளங்கி கொள்ள முடியும் .
இதில் ஒன்றும் மர்மம் இல்லை,
சாதாரண மக்கள் அறியக்கூடாது என்று ஆண்டாண்டு காலமாக மக்களை இருட்டில் வைத்திருந்த சுயநலவாதிகளை மனித சரித்திரம் கண்டிருக்கிறது.

அதனால்தான் இன்னும் மனிதர்கள் சண்டை போட்டு கொண்டிருக்கிறார்கள்.
எல்லா மனிதர்களும் எல்லா ஜீவராசிகளும் பிரபஞ்சத்தில் ஒன்றோடு ஒன்று உறவு கொண்டவை தான்.
ஒரு நாய்க்குட்டியின் சுவாசித்திற்குள் இருந்து வந்த  காற்றை  நீங்களும் நானும் சுவாசித்திருப்போம் 
கோடானு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு ஜீவராசியின் ஒரு அணு கூறு எமது உடலிலும் இருக்ககூடும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு மகானின் சுவாசம் அல்லது ஒரு கொலைகாரனின் சுவாசமும் கூட எமது சுவாசிதிற்குள் புகுந்து வந்திருக்க கூடும் .
இதை போன்று எமது உடலும் மனமும் கூட பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயணம் செய்து வருபவைதான்.
இந்த பிரபஞ்ச நாடகம் வெறுமனே தற்செயலாக நடைபெறவில்லை.

எல்லாவற்றிக்கும் ஒரு காரணம் இருக்கிறது, அதுதான் வாழ்க்கை.
தற்போது நமக்கு வாய்த்திருக்கும் வாழ்க்கை அழகானது.
இந்த வாழ்க்கையை நாம் எப்படி புரிந்திருக்கிறோம்?
இதுதான் மிகப்பெரும் கேள்வி.
இதற்கு பதிலும் கூட அவ்வளவு இலகுவானதல்ல.
ஒவ்வொருவரும் தானே தனக்குள் கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருக்கின்றன.
நாம் சிந்திக்க கொஞ்சம் பயப்படுபவர்கள்.
சிந்திக்காமலேயே நம்புவதற்கு பழக்கபடுத்த பட்டவர்கள் .
நம்புவது நல்லது என்றே பலரும் நம்புகிறார்கள் .அது மிகவும் தவறு,
எதிலும் நியாயமான சந்தேகம் கொள்வது மிகவும் நல்லது.
சந்தேகம்தான் உங்களை சிந்திக்க தோன்றும்,
போதை வஸ்த்து போன்று இலகுவில் நம்பி சரணடைந்து பின்பு நிரந்தரமாக ஒரு தூக்க நிலையில் தான் நமது வாழ்வு பெரும்பாலும் கழிந்திருக்கிறது,
சிந்தனைதான் மனிதர்களை வாழ வைத்திருக்கிறது.

கனவுக்கு ஒரு பாலம்......அங்கே உங்களின் ஒரு விசுவரூபத்தை நீங்கள் தரிசிப்பீர்கள்.

கனவுகள் உண்மையானவையா?
இறந்தவர்களுடன் பேச முடியுமா?
ஒருவரோடு ஒருவர் மனத்தால் பேசமுடியுமா?
எதிர்காலத்தில் சந்திக்கபோகும் ஒருவருடன் இப்போதே பேசிக்கொண்டு இருக்கிறோமா?
நேரில் பரிச்சயம் இல்லாத ஒருவரோடு நாம் மனத்தால் பேசமுடியுமா? அல்லது பேசிக்கொண்டுதான் இருக்கிறோமா?
எல்லாவற்றிக்கும் பதில்கள் ஒன்றுதான். ஆம் ஆம் ஆம் .
இந்த கேள்விகள் எல்லாமே சாத்தியம் அற்ற கேள்விகளாக தோன்றக்கூடும்.
உண்மையில் இவை எல்லாமே நிச்சயம் சாத்தியமான விடயங்கள்தான்.
இன்னும் சரியாக சொல்லப்போனால் நாம் எம்மை அறியாமலேயே அடிக்கடி செய்துகொண்டிருக்கும் விடயங்கள்தான் இவை.

இவற்றை ஆராய்வதற்கு முன்பாக  நாம் பலவிதமான அடிப்படை மாற்றங்களை எமக்குள்ளேயே உருவாக்க வேண்டியிருக்கிறது.


முதலில் நாம் மிகவும் திறந்த மனதோடு அணுகவேண்டும்.
ஏற்கனவே நாம் நம்பிவிட்ட கோட்பாடுகள் எமது அறிவை சிறைபடுத்தி வைத்திருக்கின்றன.
இன்றைய விஞ்ஞானம் என்று நாம் நம்பும் அறிவியல்துறை உண்மையில் இன்னும் பலபடிகளை தாண்ட வேண்டி இருக்கிறது.

உதாரணமாக கனவுகளை பற்றிய இன்றைய விஞ்ஞான உண்மைகள் மிகவும் பாமரத்தனமான கோட்பாடுகளாக  இருக்கிறது.
சகல கனவுகளும் எமது மனதில் உணரப்பட்ட செய்திகளின் பல்வேறு தோற்றங்கள் என்றுதான் விஞ்ஞானம் வரையறுத்து வைத்திருக்கிறது.

சில ஆய்வுகள் இன்றைய விஞ்ஞான கோட்பாடுகளையும் மீறி கனவுகள் பற்றிய சில கருத்துக்களை கவனத்தில் எடுத்துக்கிறது.எனினும் இன்றுவரை விஞ்ஞானம் கனவுகளை வரும்பொருள் உரைக்கும் ஒரு அதிசய சக்தியாக அங்கீகரிக்கவில்லை.
கனவுகளுக்கு விஞ்ஞான உலகின்  அங்கீகாரம் கிடைக்காமையால் அதன் அற்புத சக்தியும் மேன்மையும் மனிதர்களுக்கு இன்னும் சரியாக புரியவில்லை.
கனவுகளை மிகவும் ஒரு சரியான தரவுகளாக உணர்வதற்கு எமது கனவுகளின் தரம் உயர்த்தப்படவேண்டும்.
கனவு காணும் கலை வளர்க்கப்படவேண்டும். அது ஒரு சக்திவாய்ந்த கருவியாகும்.

எப்படி ராடார் கருவி விஞ்ஞான உலகிற்கு பயன்படுகிறதோ அதைவிட பல மடங்கு  சக்திவாய்ந்த  பயன்பாடு கனவு கலைக்கு உண்டு.
சரியான கனவை எப்படி காண்பது என்பதை பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ள படவேண்டும்.
அதற்கு பலவழிகள் உண்டு. ஓரளவு அதைப்பற்றி நான் கண்டு 
உணர்ந்துள்ளேன். நான் மட்டும் அல்ல, எல்லோருமே இந்த அனுபவத்தை  ஓரளவு பெற்றுள்ளார்கள். 
பல கனவுகள் எனக்கு பலவிதமான எதிர்கால தகவல்களை தந்துள்ளது.

எனது கனவில் தோன்றிய பல சம்பவங்கள் மிகவும் ஆச்சரியமான அதிசயமான செய்திகளை அறியத்தந்துள்ளது. பின்பு அவை சரியாகவே நடைபெற்றது .

எந்த( Conventional Scientist )விஞ்ஞானியும் நான் கூறுவதை ஏற்றுகொள்ள மாட்டார்.
ஏனெனில் அவர்கள் தாங்கள் படித்து வாங்கிய பட்டத்தின் அத்திவாரத்தில் ஏறி நிற்பவர்கள். அதை ஆட்டம் காட்டி விட்டால் அவர்கள் கற்றது எல்லாம் ஒன்றும் இல்லை என்று ஆகிவிடும் அல்லவா?

நிறுவனப்படுத்தப்பட்ட விஞ்ஞானம் புதிய கருத்துக்கள் எதையும் இலகுவில் ஏற்றுக்கொண்டதாக வரலாறு இல்லை.

அவர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் தத்துவத்தை அல்லது உண்மைகளை அங்கீகரிப்பதற்கு நேர்மையும் துணிவும் வேண்டும்.

நாம் நித்திரையில் இருந்து விழித்து எழுகின்ற ஒரு சில கண்சிமிட்டும் நேரத்திலேயே எமக்கு ஏராளமான கனவுகள் மறந்து போய்விடுகின்றன.
அந்த ஞாபக மறதி  கவனிக்க படவேண்டிய ஆராய்ச்சி செய்யப்படவேண்டிய 
ஒரு முக்கியமான நிகழ்வாகும்.
அந்த ஞாபக மறதியை வெற்றி கொள்ள பலவிதமான உத்திகள் பாவிக்கபடுகிறது.
எமது மனம் விழித்தெழும் சமயத்தில் கனவுகளும் நிகழ்கால செய்திகளும் அலை மோதும்.
அந்த சமயத்தில் கனவுகள் எல்லாம்  விரைவாக மறந்து போய்  
கொண்டிருக்கும். 
எனவே கனவுகளை மறக்க விடாது கூடியவரை  மீண்டும் மீண்டும் 
ஞாபகத்தில் நிறுத்தி வைக்கவேண்டும்.
எமது (Unconscious Mindi) உள்ளுணர்வில் உள்ள எமது ஆளுமையும் எமது ஆளுமை என்று நாம் எண்ணி கொண்டிருக்கும்  (Conscious Mind) எமது ஆளுமையும் வேறுவேறானவை. சில நேரம் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் மிகவும் அதிகமாக இருக்கும்.
இந்த இரண்டு எப்பொழுது மிகவும் நெருக்கமாக இருக்கிறதோ அப்போதுதான் நாம் எமது  வாழ்வின் சரியான அர்த்தத்தை நோக்கி செல்கிறோம் என்று பொருள்.

பெரும்பாலும் இன்றைய  உலகின் வாழ்வு முறையானது  மிகவும்  செயற்கை ஆகிவிட்டது. உள்ளுணர்வுகளுக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது.
அதன் காரணமாக  உள்மனதின் செய்திகளை  புரிந்து கொள்ளும் ஆற்றலை மனிதர்கள் இழந்து விட்டார்கள்.
உள்ளுணர்வுகள் மிக அதிகமாக வெளிப்படுவது கனவுகளில்தான்.
எமது ஐம்புலன்களின் ஆதிக்கம் உள்ளுணர்வுகளில் கொஞ்சம் குறைவாகவே பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
ஆனால்  எமது சாதாரண அறிவு  எமது ஐம்புலங்களில்தான் பெரிதும் தங்கி இருக்கிறது. .
எமது அறிவு தரும் செய்திகள் எல்லாமே ஐம்புலன்களின் வழிவந்தவைதான்.
மிகவும் அபூர்வமாகவே ஐம்புலன்களையும் தாண்டி உள்ளுணர்வுகளின் அடிப்படையில் இருந்து சில செய்திகளை நாம் பெறுகிறோம்.

நமது ஐம்புலங்களையும் தாண்டி உள்ளுணர்வுகளின் செய்திகளையும் 
கொஞ்சம் நாம் கவனித்தால் வாழ்வு மிகவும் அற்புதமாக இருக்கும்.
அந்த உள்ளுணர்வுகளின் மணியோசைகள் எமக்கு அடிக்கடி கேட்டு கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நாம்தான் அவற்றை அலட்சியம் செய்தே பழகிவிட்டோம்.
எந்த சம்பந்தமும் இல்லாத காட்சிகள்  எல்லாம் சிலவேளைகள் எமது கனவுகளில் வருகிறது. அவை ஏன் வருகிறது என்று கொஞ்சம் கூட நாம் சிந்திப்பதில்லை. 
இந்த கனவுகளின் சிக்கலான உண்மைகளை அறியவிடாமல் எம்மை தடுப்பது விஞ்ஞானத்தின் குறைபாடு மட்டும் அல்ல.
 மந்திர தந்திர ஜோதிஷ கனவு சாஸ்திர விற்பன்னர்களும் தங்கள் பங்குக்கு  கனவுகளை பற்றி  இட்டு கட்டிய பிற்போக்கு கதைகள் கனவின் அத்திவாரத்தையே தகர்த்து விட்டன.

ஒருபுறம் பிற்போக்கு பார்பனீயம் கட்டி விட்ட கதைகள், மறுபுறம் இதை ஒரு பொருட்டாகவே மதிக்காத வியாபர விஞ்ஞானம், இந்த இரண்டும் சேர்ந்து மனிதர்களுக்கு உள்ளே புதைந்து இருக்கும் கனவுகளின் ராஜ்யத்தை அதன்   ரகசியத்தை அறியவிடாமலே செய்து விட்டன.

உங்கள் கனவுகளை நீங்கள் மதிக்க வேண்டும்.
முதல் படியாக தினசரி நீங்கள் காணும் கனவுகளை தினமும் அடிக்கடி ஞாபகத்தில் இருத்தி அவை மறந்து போகாமல் இருக்கும் பயிற்சியை செய்யுங்கள். முடிந்தால் அவற்றை எழுதி வையுங்கள்.
அவை உங்கள் உள்ளுனர்வுகளோடு உங்களை எப்போதும் பிணைத்து வைத்திருக்கும்.
எவ்வளவு தூரம் உங்கள் உள்ளுணர்வோடு நீங்கள் இணைந்து இருக்கிறீர்களோ அவ்வளவோதூரம் நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள் என்று எண்ணி கொள்ளுங்கள்.
நீங்கள் உண்மையில் நீங்களாகவே இருந்தால் உங்கள் பிறவி நோக்கம் சந்தோஷமாக நிறைவேறும்.
அதுதான் உங்களுக்கு உரித்தான் அற்புத வாழ்க்கை .
அதுதான் நீங்கள் பிறந்ததன் நோக்கம்.
நன்றாக சிந்தித்து பாருங்கள்  கனவு காட்சிகளில் பலநேரங்களிலும் நீங்கள் கொஞ்சம் வித்தியாசமாக சிந்திப்பீர்கள் வித்தியாசமாக செயல்படுவீர்கள்.
கனவுகளின்போது  உங்களின் மனம் ஒரு வித்தியாசமான எண்ண கலவையாக இருக்கும்.
அதை ஞாபகத்தில் கொண்டு வந்து பார்ப்பது கொஞ்சம் கடினமாக தோன்றலாம்.
மீண்டும் மீண்டும் முயற்சி செய்தால் உங்களின் கனவு மன நிலையை கொஞ்சம்  மெதுவாக  ஞாபகத்தில் கொண்டுவரலாம்.

எவ்வளவு தூரம் உங்களால் அந்த மனநிலயைஅடைய   முடியுமோ  அந்த அளவு  நீங்கள்  உங்கள்  உள்ளுணர்வு  பொக்கிஷத்தை   அடைந்து விட்டீர்கள்  என்று அர்த்தமாகும்.
இதுநாள்  வரையும் உங்களுக்கு தெரியாத உங்களின் ஒரு  விசுவரூபத்தை நீங்கள் தரிசிப்பீர்கள்.
அதுதான் நிஜமான நீங்கள்.
இதுவரை  நீங்கள் யாரென்று நீங்கள்  எண்ணி கொண்டிருந்தவரைவிட நீங்கள்  கொஞ்சம் அதிக பலசாலி என்பதை  உணர்வீர்கள்.

குழந்தைகள் அதிக நேரம் நித்திரை கொள்ளும். அந்த குழந்தைகள் நித்திரையில்  சிரிப்பதுவும் அழுவது வேடிக்கையான சில அங்க அசைவுகளை காட்டுவதும் கூட அவர்களின் நித்திரை  உலகின் சஞ்சாரங்கள்தான்.
அங்கு அவர்களுக்கு கடந்த பிறவியின்  ஞாபகங்கள் கூட இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. 
வளர வளர அவர்களும் தங்கள் கனவு சஞ்சார வாய்ப்பை இழந்து விடுகிறார்கள்.
தங்கள் உள்ளுணர்வுகள் என்ற தங்க மாளிகையை  விட்டு வெளியே வருகிறார்கள்.
 உங்களின் உண்மையான அச்சு அசல் அத்திவாரம் அதுதான். அதை கண்டு பிடிக்க உங்கள் கனவுகள் பெரிய உதவி செய்யும்.
கனவுகள் மட்டும் அல்ல உங்கள் எண்ணங்களும் அந்த காரியத்தை செய்யும் .
இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்  ஒன்று இலகுவில் தெரியும் மற்றது இலகுவில் தெரியாது.
இரண்டுக்கும் இடையே பயணிப்பதற்கு ஒரு பாலம் உண்டு . அந்த பாலத்தில் பயணத்தை ஆரம்பியுங்கள் 

Thursday, March 3, 2016

ஐஸ்வர்யம் பெருக வழிமுறைகள்

1. காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை தான் பார்க்கவேண்டும்

2. குளித்தபின்பு முதுகைத்தான் முதலில் துடைக்கவேண்டும். பின்புதான், முகத்தை துடைக்கவேண்டும்.

குளித்தவுடன் துவட்டும்போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பாள். பின்தான் லட்சுமி வருவாள்.

3. பூஜைகளில் அல்லது கடவுளை வணங்கும் சமயத்தில் கைலிகள் என அழைக்கபடும் லுங்கிகள் அணியக்கூடாது.

4. சாப்பிடும்போது இடதுகை எப்போதும் வட்டிலைத் தொட்டுகொண்டுதான் இருக்கவேண்டும்.

வட்டிலை தட்டு என்று சொல்லகூடாது. அது தட்டுபாட்டுக்கு உரிய சொல்.

5. இரவில் தயிர் சேர்த்துகொள்ளக்கூடாது.

அது விஷ்ணுவானாலும் சரி, அவரை விட்டு லட்சுமி கடாக்சம் காணாமல் போய்விடும்.

6. பூஜை அறையில் அனைவரும் பழனியாண்டவர் படம் வைத்து இருப்போம்.

அதுவும் ராஜ அலங்காரம், அதில் சிலருக்கு ஆண்டியின் கோலமான கையேந்தும் வடிவம் இருக்கும்.

இதை எடுத்துவிட்டு ராஜா கைவைத்து இருப்பதுபோல் வைக்கவேண்டும்.

7. வீட்டின் வாசலை பார்த்தவாறு ஏழுமலையான் (பெருமாள்) படம் வைக்க வேண்டும்.

இதை பல அலுவலகங்களில் வைத்திருப்பதை நாம் இன்றும் காண முடியும்.

8. மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்கவேண்டும்.

9. படத்திற்க்கும் கள்ளாபெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும்.

மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ.

10. பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.

11. திருவள்ளுவர் உருவம் பதித்த டாலர் அல்லது ஐந்து ரூபாய் நாணயம் பர்சில் வைத்திருக்க வேண்டும்.

12. லட்சுமி ,குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம “என்றாவது கூறவேண்டும்.

இதை மல்லிகை பூ போடும் போது கட்டாயம் கூறவேண்டும்.

13. வீட்டின் முன்பு கண்திருஷ்டி படம் என்று கூறும் பூதம் படத்தை எடுத்துவிட்டு விநாயகர், முருகர் படங்களை மாட்டவும்.

அப்போது தான் தெய்வாம்சம் காணப்படும்.

அதை விடுத்து அரக்கர் படம் எல்லாம் மாட்டகூடாது.

14. விநாயகர் கோபமாக உள்ள கண்திருஷ்டி படமெல்லாம் மாட்டகூடாது.

இது எதுவுமே செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை ஒரு நாளைக்கு ஓரு முறையாவது மகான் அரங்க மகாதேசிகர் அருளிய சித்தர் மந்திரம் கூறவும்.

அப்போதுதான் அருள்செல்வம் முதலில் வரும். அப்புறம்தான் பொருள்செல்வம்.

ஓம் அகத்தீசாய நம!
ஓம் கரூவூர்தேவாய நம!
ஓம் போகதேவாய நம!
ஓம் கோரக்கதேவாய நம!

Tuesday, March 1, 2016

கோபத்தை அடக்க சுலபமான வழிகள் !!!

1. பொருட்படுத்தாதீர்கள்(Objects do not)

உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.

2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்(Do not expect anything to anyone)

ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான். எனவே , யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்(Please disregard opponents)

தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம்.
தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.

4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்(Please stop unwanted thoughts)

பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.

நமது புராணங்களும் கோபத்தின் தீமைகளைப் பற்றி விபரமாக விளக்குகின்றன.

பாருங்கள் இங்கொரு முனிவரின் கோபத்தை..
துர்வாசர் என்றொரு முனிவர் இருந்தார். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் அடிக்கடி கோபப்படகூடியவர். கோபத்தின் மறு உருவமாகவே அவரை புராணங்கள் சித்தரிக்கின்றன. அவர் அடிக்கடி சாதாரண விசயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு, தனது தவவலிமைகளை இழந்தவர். மகாமுனிவரையே ஆட்டுவித்த கோபம், சராசரியான மனிதனை பாடாய்படுத்துவதில் என்ன அதிசயம்?

எனவே நாம் வாழ்க்கையில் வெற்றி பெற , முதலில் நம்முடைய கோபத்தை ஆட்சி செய்ய வேண்டும். அதாவது தேவைப்படும் இடத்தில் அளவான கோபம் மட்டுமே கொள்ளலாம். அதுவும் நம் சுயமதிப்பை காப்பாற்றிக்கொள்ள கூடிய அளவில் இருந்தாலே போதுமானது. என்ன நண்பர்களே !இனி எடுத்ததற்கெல்லாம் கோபப்படமாட்டீர்கள்தானே!