Tuesday, March 28, 2017

கணவன் மனைவி இடையே பிரியம் பெருக்கும் 10 பழக்கங்கள்!

'ஒருவனுக்கு ஒருத்தி...' 
சொல்லும்போதே காதுகள் இனிக்கிறதல்லவா? சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமண வாழ்வு மொத்தமும் அங்கேயே தொடர்ந்தால், மகிழ்ச்சிக்குச் சொல்லவா வேண்டும்? தம்பதியரின் கைகளில்தான் அதற்கான மந்திரச் சாவியும் உள்ளது. 'இவன் எனக்குத்தானே', 'இவள் எங்கே போய்விடப்போகிறாள்?' என்கிற எண்ணத்தில், தனது இணைக்கு சின்னச் சின்ன சந்தோஷங்களுக்கான வாய்ப்பை அளிக்கத் தவறும்போது, அந்த உறவே சிக்கலாகிறது. தனது விருப்பம், ஆர்வம் எல்லாவற்றையும் ஒத்த அலைவரிசையில் தன்னைப் புரிந்துகொள்கிற இன்னொருவரிடம் கொட்டத் தொடங்கி, அதுவே ஆழமான நட்பாக வேரூன்றுகிறது. கணவன் மனைவிக்கு இடையில் உள்ள முடிச்சு அவிழ்ந்து, ஒரே வீட்டில் பெயருக்கு வாழ்வதில் என்ன இருக்கிறது? கணவன், மனைவி உறவு கசந்துவிடாமல் எப்பொழுதும் ஃபிரஷ்ஷாக உணர, சில விஷயங்களில் கவனம் செலுத்துவது முக்கியம். இதோ அவை... 

* இருவரும் தினமும் ஏதாவது ஒரு விஷயத்துக்காக ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்ளுங்கள். அது, ரசம் நன்றாக இருந்தது என்றோ, காய்கறிகளைச் சரியாக நறுக்கினீர்கள் என்றோ இருக்கலாம். 

* எதிர்பாராத அணைப்பு, முத்தம் இருவரையும் அன்புத் தூண்டிலில் சிக்கவைக்கும். இதை இருவரும் பின்பற்றுங்கள். 
ஒருவரது குறையை எந்தச் சூழலிலும் மற்றவர் குறிப்பிட்டுப் பேசக் கூடாது. இது, மனதில் கசப்புக்கான விதைகள் பரவாமல் தடுக்கும். 

* ஒருவர் ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லத் தொடங்கும்போது, மற்றவர் காதுகொடுத்து கேட்க வேண்டும். தன் பேச்சுக்கு மதிப்புள்ள இடத்தில் நம்பிக்கை பலப்படும். 

* தாம்பத்தியத்தில் ஒருவருக்கு விருப்பம் இல்லாதபோது, மற்றவர் தொந்தரவு செய்ய வேண்டாம். இருவருக்கும் தேவையான ஒன்று என்பதால், மற்ற பிரச்னைகளை மறந்து இதற்கும் நேரம் ஒதுக்குங்கள். 

* ஒரே மாதிரியான வாழ்க்கை முறை போரடிக்க செய்யும். பிடித்த இடங்களுக்குச் செல்ல திட்டமிடுங்கள். உங்கள் வாழ்வின் ஸ்டைலையும் அவ்வப்போது மாற்றிக்கொள்ளுங்கள்..உணவு, உடை உட்பட. வாழ்வதன் சுவாரஸ்யம் கூடும். 

* சோஷியல் மீடியாக்கள் இரண்டாவது துணை அல்லது இணை என்பது போல ஆகிவிட்டது. குடும்பத்தைப் பொறுத்தவரை தனி ஒருவரின் விருப்பத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கலாம். இருக்கும் உறவுகளுக்குள் நட்பின் தன்மை மாறாமல் பார்த்துக்கொள்ளும்போது புதிய துணையோ, இணையோ தேவையிருக்காது. 

* ஒவ்வொருவரும் வீட்டில் இருப்பதைவிட வேலையிடத்தில் அதிக நேரம் இருக்கிறோம். அந்தச் சூழலில் நட்புடன் பழகுபவர்களுக்கு இடையில் ஆழமான புரிதல் இருக்க வாய்ப்புள்ளது. அதுபோன்ற உறவுகளை நட்பின் எல்லைக்குள் நிறுத்தவும். எல்லை தாண்டியே பழகினாலும் அது உரிமையற்ற உறவு. எப்போதும் மனதுக்குள் ஒரு பயத்தையும், குற்ற உணர்வையும் ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். இதுபோன்ற உறவுகள் கணவன் மனைவிக்குள் விரிசலை ஏற்படுத்தும். எல்லைக் கோட்டை தாண்டாமல் இருப்பதே வாழ்வு முழுமைக்குமான பாதுகாப்பு. 

* காதலெல்லாம் திருமணத்துக்கு பிறகு கிடையாது என்று நினைக்க வேண்டாம். நம் மனசு எப்போதும் குழந்தைதான். கணவன், மனைவிக்குள் காதல் பகிர்ந்தல்கள் இருக்கும் வரை அந்த அன்புக் கோட்டைக்குள் அந்நியர் நுழைய முடியாது. வாழ்வின் கடைசி மூச்சு வரை காதலியுங்கள். 

* கணவன், மனைவி இருவரும் அவரவர் வேலையில் இலக்குகளை நிர்ணயித்து தீவிரம் காட்டுங்கள். ஒருவர் இலக்கை எட்ட மற்றவர் தோள் கொடுங்கள். உயர உயர அன்பின் நெருக்கம் அதிகரிக்கும். 

* பிறந்த நாள், திருமண நாள் என முக்கிய நாட்களை மறந்துவிடாமல் அன்பு செய்யுங்கள். 'நீ என் வாழ்வில் அவ்வளவு முக்கியம்' என்பதைப் புரியவையுங்கள். காதல் என்றென்றும் தித்திக்கும். ஒருவர் மற்றவரது உறவினர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவர்கள் குறைகளைப் பற்றி அதிகம் பேசாதீர்கள். கணவன், மனைவிக்குள்ளான பல்வேறு சண்டைகளுக்கு இதுவே காரணம். உங்களைப் பற்றிய பாசிட்டிவான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இனிக்க இனிக்க வாழுங்கள். வாழ்த்துக்கள்! 

Monday, March 20, 2017

வேலையில் இருப்பவர்கள் பிசினஸ்மேன் ஆக விரும்புகிறீர்களா... இதப் படிங்க முதல்ல!

பிசினஸ்

எல்லோருக்குமே பெரிய பெரிய கனவுகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை நிறைவேற்றிக்கொள்ள சூழல் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அல்லது வாய்ப்பை உருவாக்கிக் கொள்வதில்லை. மனதுக்குள் பிசினஸ்மேன் ஆக வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பலர், மனது ஒட்டாமல் எதோ ஒரு வேலையில்  காலத்தைக் கழித்துக்கொண்டிருப்பார்கள். கேட்டால், `முதலீடு செய்ய பணமில்லை' என்பார்கள். அவர்கள் எல்லாம் சந்தையில் இறங்கியே இருக்கமாட்டார்கள். ஏனெனில், உண்மையில் பிசினஸ் செய்ய முதலீடு ஒரு பிரச்னையே இல்லை. ஏராளமான பொது மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் அமைப்புகள், முதலீட்டு நிறுவனங்கள் பிசினஸ் செய்ய விரும்புபவர்களுக்கு பணம் தர தயாராக உள்ளன. எனவே துணிந்து இறங்கினால் வெற்றி பெறலாம்.

அப்படி வேலையை விட்டுவிட்டு பிசினஸ் செய்ய நினப்பவர்கள் சில விஷயங்களை மனதில் வைத்துக்கொள்வது அவசியம். ஒருபோதும் நாம் எடுத்த முடிவு,  தவறான முடிவாகிவிட்டதே என்று நம்மை கவலைப்பட வைத்துவிடக் கூடாது. எனவே பின்வரும் விஷயங்களை பிசினஸ் செய்பவர்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.

30 வயது!

30 வயது என்பதுதான் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டம். அந்த வயதில் எடுக்கும் முடிவுகள் தான் இறுதிவரை நம்முடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கும். மேலும் 30 வயதுக்கெல்லாம் நமக்கு வாழ்க்கையைப் பற்றியும் நம்முடைய திறமைகள் பற்றியும் எதிர்காலம் பற்றியும் ஒரு தெளிவு ஏற்பட்டுவிடும். இந்த வயது வரைக்கும் நாம் பல வேலைகளுக்கு மாறி இருக்கலாம். பல தவறுகளைச் செய்திருக்கலாம். வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பற்றி கவலைப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் 30 வயதுக்குப் பிறகு நாம் பொறுப்பானவர்களாக மாற வேண்டியிருப்பது, நம்முடைய சமூக கட்டமைப்பில் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அப்படியும் பொறுப்பில்லாமல் இருந்தால் காலம் நமக்கு அதற்கான பாடத்தைக் கற்றுத்தந்தே தீரும்.

எனவே நம் வாழ்க்கைக்கான முடிவை 30 வயதில் தீர்மானித்துவிட வேண்டும். நாம் என்ன செய்யப் போகிறோம், வேலையா, பிசினஸா, பிசினஸ் என்றால் என்ன பிசினஸ், எப்படி செய்யப் போகிறோம்? போன்ற கேள்விகளைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் 30 வயதைக் கடந்த பிறகு குடும்பம், குழந்தைகள், செலவுகள் என்று நம் கையை மீறிதான் வாழ்க்கை இருக்கும். மேலும் வயதான பிறகு ரிஸ்க் எடுக்கவும் முடியாது.

ஆர்வம், திறமை, தேவை!

பிசினஸ் செய்வதற்கு முன் நம்முடைய ஆர்வம் எதில் இருக்கிறது, நம்மிடம் என்னென்ன திறமைகள் இருக்கின்றன, நாம் செய்யப்போகும் பிசினஸின் தேவை என்ன? என்ற இந்த மூன்று கேள்விகளையும் ஒருவர் தனக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும். ஏனெனில் இவை மூன்றும் ஒரு புள்ளியில் இணைந்தால்தான் வெற்றி வசமாகும். ஆர்வம் இருந்து திறமை இல்லையென்றாலும் சரி, நம்முடைய பிசினஸுக்கான தேவையே இல்லாமல் இருந்தாலும் சரி தோல்விதான். எனவே என்ன பிசினஸ் செய்ய ஆசைப்படுகிறோம் என்பதை முடிவு செய்துவிட்டு, அதற்கு தேவையான திறமைகளையும் திறன்களையும் வளர்த்துக்கொள்ளுங்கள். அந்த பிசினஸ் குறித்த அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். முக்கியமாக அந்த பிசினஸின் தேவை எந்தளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு தான் வளர்ச்சி இருக்கும்.

துவண்டுபோகக் கூடாது!

தொழில் தொடங்கிய ஆரம்பத்தில் பெரிதாக வளர்ச்சி இருக்காது. 'சூரியவம்சம்' படத்தில் வருவது போல ஒரே பாட்டில் ஓஹோ என்றெல்லாம் வளர்ந்துவிட முடியாது என்பதை முதலில் உணருங்கள். ஆரம்பத்தில் வருமானம் குறைவாக இருந்தால், வேலையில் இருந்திருந்தாலே மாத வருமானம் ஒழுங்காகக் கிடைத்திருக்குமே என்று நீங்களும் நினைக்கக்கூடாது; அப்படி கூறுபவர்களின் பேச்சையும் காதில் போட்டுக்கொள்ள கூடாது. ஆரம்பத்தில் ஏற்படும் இந்த நெருக்கடி நிலையைச் சமாளிக்கும் மனதைரியம் வேண்டும்.

இருக்கு, ஆனா இல்லை!

வேலையில் இருக்கும்போது நம்முடைய சுதந்திரம் என்பது ஒரு வட்டத்துக்குள்தான் இருக்கும். ஆனால் பிசினஸ் செய்வது என்று கிளம்பிவிட்டால் நம் இஷ்டம்தான், நம் சுதந்திரம்தான் என்று நினைக்கலாம். தவறில்லை உண்மைதான். சுதந்திரம் இருக்கிறது. ஆனால் அதே சமயம் ஒவ்வொரு நாளும் வளர்ச்சியை அடைய வேண்டுமெனில் வேலையில் இருந்ததைவிட பிசினஸில் அதிக ஒழுக்கங்களைக் கடைபிடிக்க வேண்டியிருக்கும்.

வேலையில் இருக்கும்போது, எட்டு மணி நேரம் வேலை செய்கிறீர்கள் என்றால் பிசினஸில் 10 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஆரம்பத்தில் கடினமாகத்தான் இருக்கும். 'உழைப்புதான் உன்னை உயர்த்தும்' என்பதை நீங்களே உங்களுக்குச் சொல்லிக்கொள்ளுங்கள். பின்னர் அதுவே பழகிவிடும்.

போட்டியாளர்களைப் படியுங்கள்!

எல்லா பிசினஸிலும் போட்டி இருக்கிறது. போட்டி என்பது மிக ஆரோக்கியமான ஒரு விஷயம். ஒருவரின் வளர்ச்சியைக் குறைக்கவும், கூட்டவும் போட்டிக்கு வலிமை உண்டு. வளர்ச்சியை அதிகரித்துக்கொள்ள போட்டியாளர்களைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அவர்களை விட எந்தவிதத்தில் நாம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் மாற முடியும் என்பதை அதை வைத்துதான் முடிவு செய்ய முடியும்.

உங்கள் பிசினஸ் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். நடைமுறைகள், அரசு கட்டுப்பாடுகள், தொழில்நுட்பங்கள் ஆகியவைக் குறித்து அப்டேட்டாக இருங்கள்.

வேலையில் சம்பள உயர்வுக்கும், பிசினஸில் லாப வளர்ச்சிக்கும் இடையே உள்ள வித்தியாசம்தான் பிசினஸ் செய்வதிலுள்ள ப்ளஸ். ஆனால் உண்மையில் பிசினஸ் செய்வது, ஒரு இடத்தில் வேலை செய்வதைக் காட்டிலும் கடினமானது. அந்த ரிஸ்க்கை எடுப்பவர்களும், ஒருபோதும் முன்வைத்த காலை பின்வைக்காதவர்களும் தான் பிசினஸில் ஜெயிக்க முடியும்.

ஆல் தி பெஸ்ட்...!

கேவலமான உண்மைகள் !!!

1. அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 40 லிருந்து 50 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக்  கிடைக்கிறது..!!

2. பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

3. வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!

4. Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட ஆம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!

5. ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக்கொ டுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச்செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!

6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!!

7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc  இவையெல்லாம் செயற்கையான ரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!

8. மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்று கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9. கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!

10. விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்.!

11. வாழ்க்கையில் உயரச் செல்வதற்கான வாய்ப்பு,  சிலருக்கு படிக்கட்டாகவும்,  சிலருக்கு எஸ்கலேட்டராகவும்,  சிலருக்கு லிஃப்டகாவும் அமைகிறது..

12. பியூட்டி பார்லரை ஏளனச் சிரிப்போடு கடந்து செல்லும் ஏழைப்பெண் தான் கொள்ளை அழகு.!

13. தோற்றுப்போய் வீடு திரும்புகையில், தலை கோதி மடி சாய்க்க ஒருவர் இருந்தால் போதும், வாழ்க்கையை ஜெயித்துவிடலாம்.

14. முதியோர் இல்லத்திற்கு 
பணம் கொடுங்க, 
பொருள் கொடுங்க, 
உணவு கொடுங்க, 
உடை கொடுங்க.. 
ஆனா உங்க பெற்றோரை மட்டும் கொடுத்துடாதீங்க..

15. 20 வயசு வரைக்கும்தான் வேளா வேளைக்கு சோறு..  அதுக்கு மேல வேலைக்கு போனால் தான் சோறு.. 

16. டாக்டரை மறந்து விட்டு நர்சுகளை ஞாபகம் வைத்திருக்கும் விசித்திரமான உலகம் இது.!

17. ரெண்டையும் பொண்ணுங்களா பெத்தவங்கள விட,  ரெண்டையும் பசங்களா பெத்தவங்கதான்  பெரும்பாலும் முதியோர் இல்லத்துல இருக்காங்க.!

18. கடவுள் சிற்பத்தை 'கல்' என ஒத்துக்கொள்பவர்கள்,  பணத்தை 'காகிதம்' என ஒத்துக்கொள்வதில்லை.

19. அன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள்..  இன்று சங்கம் வைத்து சாதி வளர்க்கிறார்கள்...

20 .கடவுளாக வாழ கல்லாயிருந்தால் போதும்..  மனிதனாக வாழத்தான் அதிகம் மெனக்கிட வேண்டியிருக்கிறது.! 

21. மழையை நிறுத்த தமிழர்கள் இரண்டு யுக்திகளைக் கையாளுகிறார்கள்.. ஒன்று, ஃபேஸ்புக்கில் கவிதை எழுதுகிறார்கள்..  மற்றொன்று ஸ்கூலுக்கு லீவு விடுகிறார்கள்..

21. மழைக்காக விடப்பட்ட விடுமுறையில் ஒருபோதும் மழை பெய்வது இல்லை..  அவை குழந்தைகள் மீதான கடவுளின் மனிதாபிமானம்..

22. ஷாப்பிங் மால்களில் பேரம் பேச வக்கில்லாத நாம்தான், சாலையோரத்து ஏழை வியாபாரியிடம் வெட்கமே இல்லாமல் பேரம் பேசுகிறோம்.

23. ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுறீங்க சரிதான்.. 

ஆள் இருக்கிற பல கிராமப்புற ஊருக்கு எப்ப பஸ் விடுவீங்க?

இன்னிக்கு இதுபோதும் மீண்டும் பார்போம்...

இழந்தது எல்லாம் திரும்பத் தா இறைவா!

இழந்தது எல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன்..

இழந்தது எவை என இறைவன் கேட்டான்..

பலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றேன்..

பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்?

கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்..

கோலம் மாறி அழகையும் இழந்தேன்..

வயதாக ஆக உடல் நலம் இழந்தேன்..

எதை என்று சொல்வேன் நான்..

இறைவன் கேட்கையில்?

எதையெல்லாம் இழந்தேனோ

அதையெல்லாம் மீண்டும் தா என்றேன்.

அழகாகச் சிரித்தான் இறைவன்.

”கல்வி கற்றதால் அறியாமையை இழந்தாய்"..

"உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்"..

"உறவுகள் கிடைத்ததால் தனிமையை இழந்தாய்"..

"நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்"..

சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல..

தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்..

திகைத்தேன்!

இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்..

வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறு தான்..

இழந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்..

இறைவன் மறைந்தான்..

ஞானத்தை யாரிடம் கற்பது ?

”குரங்கு சாவதற்கு ஒரே ஒரு புண் போதும்
முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும்” என்று கிராமத்தில் ஒரு உவமான வாக்கியம் உண்டு.

காடுகளில் வாழும் குரங்குகள் பெரும்பாலும் நோய் வாய்ப்படுவதில்லை.
ஆனால் அவைகளுக்கு ஒரே ஒரு புண் வந்துவிட்டால் போதும். அதை நோண்டி நோண்டிப் பெரிதாக்கித் தன்னை அழித்துக் கொள்ளும்.

அதுபோலத்தான் மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்வதும்.

அந்தக் குரங்கு கொஞ்சம் பொறுமையாய் புண்ணை நோண்டாமல் இருந்தாலே போதும், புண் விரைவில் ஆறிவிடும்.

இதை குரங்குக்குச் சொன்னாலும் புரியாது. அது புண்ணை நோண்டுவதை நிறுத்தப்போவதில்லை.

ஆனால்,

மனிதன் புரிந்து கொள்ள முடியும் தானே?

மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்ளாமல் வாழமுடியும் தானே?

மனித மனம் வெறும் “மனம்” மட்டுமே… மனித மனம் குரங்கு அல்ல…
என்ற புரிந்து கொள்ளுதல்தான் ”ஞான உதயம்”.

இந்த புரிதல் எப்போதும் இயற்கையில் எதிர்பாராத தருணங்களில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

இதில் புரிந்து கொள்வது எல்லாமே சீடர்கள். புரிய வைப்பவை எல்லாமே குரு. இந்த மொத்த நிகழ்வும் ”ஆன்மிகம்” எனப்படுகிறது, அவ்வளவுதான்.

தத்தாத்ரேயர் எனும் அவதூதர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, ஒரு நாட்டின் மன்னனைச் சந்தித்தார்.

தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக் கண்ட அரசன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார்? என்பதையும் கேட்டான்.

'எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார் தத்தாத்ரேயர்.

இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட அரசன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான்.

அவனிடம், "பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று,

“சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு,

“தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு
ஆகியவையும், 

“நாட்டியக்காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப்பவன்,
சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...“ என்றார் தத்தாத்ரேயர்.

மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...

"மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்;

“தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.

“பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.

“எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ (நெருப்பு)உணர்த்தியது. 

“பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் - தெரிவித்தது.

"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மெய்ப்பொருள் ஒன்றாக இருந்தாலும் மனம் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.

"வேடன் ஒருவன் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது.
இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.

"எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.

“பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.

“பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.

"எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.

“பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது.

“இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.

"புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையைப் பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்... "
என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.

இதைக் கேட்ட அரசன், பூரண அமைதி அடைந்தான்.

தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே..

தத்தாத்ரேயரின் ”அவதூதகீதை” பகவான் ராமகிருஷ்ணர், ரமண மகரிஷி போன்ற பல மஹான்களால் சீடர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அத்வைத கிரந்தமாகும்.

நல்ல சீடனுக்கு எல்லாமே குருதான்.

மன அழுத்தத்தை தடுக்கும் எளிய வழிகள் !!!

மனிதனுக்கு 'மன அழுத்தம் ' என்னும் வியாதி தான் கொடிய வியாதி. அது சப்தமில்லாமல் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக உயிரை எடுக்கும். அதை மனிதனை அளிக்கும் 'எமன் ' என்று கூட சொல்லலாம். அது எதனால் வருகின்றது மற்றும் அதற்க்கான தீர்வுகளைப் பார்ப்போம். 

வரும் காரணம் : 1

மனதில் 'தாழ்வு மனப்பான்மை ' மேலோங்கி நிற்ப்பது. தான் மற்றவர்களைக் காட்டிலும் எல்லாவிதத்திலும் குறைந்தவன் அல்லது தனக்கு மதிப்பு ஏதுமில்லை என்பது போல் ஒரு உணர்வு. 

அதன் தீர்வு : 1

இப்போது இருக்கும் நிலைமையை மட்டும் வைத்து எண்ணிக்கொண்டு இருக்காதே! உனது வாழ்க்கையைவிட மோசமாக உள்ள, சாவின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் கோடிகணக்கான மக்களின் வாழ்கையை ஒருமுறை பார். அவர்களே நம்பிக்கையோடு காலம் தள்ளுகின்றபோது உன்னால் வாழமுடியாதா! தாழ்வு மனப்பான்மையை உன் மனதிலிருந்து அகற்றிவிடு. உன் வாழ்கையை உயர்த்த வரும் உழைப்பு, முயற்சி என்கிற அழகிய தங்க ரதம் உன்பக்கத்தில் நிற்கிறது. உனது தாழ்வு மனப்பன்மையை தூக்கி எறிந்துவிட்டு , அந்த ரத்தத்தில் ஏறிக்கொண்டு வீறுநடை போடு. அதில் உன்னைபோன்று பாதித்தவர்களை ஏற்றிக்கொண்டு அவர்களுக்கு நல்வாழ்வு கொடு. அவர்களுக்கு புது தெம்பு கொடு. இன்றிருக்கும் நிலைமை நிரந்தரமானவை அல்ல. மாறக்கூடியவை. மன மகிழ்ச்சி கொள். அனைத்தும் சரியாகிவிடும்.

வரும் காரணம் : 2

வாழ்வில் எவ்வித பிடிப்புமில்லாமல் வீணான கற்பனைகள், எண்ணங்களை வளர்த்து கொண்டு 'தன்னம்பிக்கை 'இல்லாமல் இருப்பது.

அதன் தீர்வு : 2

அதற்கு காரணம் 'பயம் ' தான். யாரைக்கண்டும் பயப்பட தேவையில்லை! அவர்களும் உன்னைப்போன்ற மனிதர்கள். அவர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் கிடையாது. அவர்களுக்கென்று தனிப்பட விதத்தில் 'பலம்' தனியாக இருப்பதில்லை. உன்னாலும் பலம் பெறமுடியும். அதற்கு 'தன்னம்பிக்கை ' கொள். உன் வாழ்வில் பிடிப்பு தானாக வரும். 

வரும் காரணம் : 3

பிறர் சுட்டெரிக்கும் வார்த்தைகளால் பேசி அவமதிப்பது. கௌரவத்தை குலைப்பது, உண்மைக்குப் புறம்பாக பழிகளை சுமத்துவது போன்றவற்றை பெரிதாக எண்ணி மனதளவில் வருந்திக் கொண்டிருப்பது.

அதன் தீர்வு : 3

வாழ்கையில் முன்னேறும்போது 'விமர்ச்சனங்கள்' வரத் தான் செய்யும். அதைப்பற்றி அதிகம் கவலை படாமல் , உதறிதள்ளி விட்டு உன்னுடைய குறிக்கோளை நோக்கி பயணம் செய்துகொண்டிரு. அப்போது தான் அவைகள் உன் காதில்விழாது. வெற்றி உனதே! 

வரும் காரணம் : 4

தொழில்களில் அல்லது வேலையில் முடிவு எடுக்கமுடியாமல் திணறுவது, செய்யும் காரியத்தில் முழு ஈடுபாடு செலுத்த முடியாமல் கவனக் குறைவாக செயல படுவது, மறதியின் காரணமாக பல பிரச்சனைகள் உருவாவது. 

அதன் தீர்வு : 4

முடிவு எடுப்பது, வேலையில் கவனக்குறைவு, மறதி ஆகியவற்றிக்குக் காரணம் மனம் ஒருமுகப் படுத்தமுடியாமல் இருப்பது. அதை களைவதற்கு தியானப் பயிற்சி சிறிதளவு தினமும் மேற்க் கொள்ளுங்கள். நாளடைவில் அனைத்திலும் தேர்ச்சி பெறுவீகள். 

வரும் காரணம் : 5

சில நேரத்தில் வழக்கமாக இருக்கும் சூழ்நிலைகள் பதிலாக புதிய சூழ்நிலைக்கு மாறும் போது , அதை சமாளிக்க வழி தெரியாமல் திணறுவது, புதிய உணவு மற்றும் உறவுகளில் மாற்றங்கள், தூங்கும் நேரத்தில் பெரிய மாறுதல்களை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடுவது. 

அதன் தீர்வு : 5

எவருக்குமே சூழ்நிலைகள் மாறும்போது அனைத்துமே புதியதாயும், கூச்சமாகவும், யாரிடத்தில் என்ன கேட்பது என்று குழம்புவதும் , தான் மட்டும் தனியாக இருப்பது போன்ற பிரமையும் உண்டாகும். அந்த சமயங்களில், தான் மட்டுமே அதிகமாக கஷ்டப்படுவது போலவும் ஒரு உணர்வு உண்டாகும். ஆனால் பழகப் பழக அந்த சூழ்நிலைகள் உங்களுக்கு பிடிக்கத் துவங்கிவிடும். அதுவரை பொறுமையுடன் மாற்றத்திற்கேற்ப அனுசரித்து நடந்து கொண்டால் அந்த சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறிவிடும். ஆத்திரப்பட்டு அப்போது சட்டுபுட்டென்று முடிவு எடுத்துவிடக்கூடாது. அப்படி எடுக்கும் முடிவு சரியாக இருக்காது. பொறுமை கொள். உனக்கேற்றவாறு சூழ்நிலைகள் மாறும். 

வரும் காரணம் : 6

வேலை, வேலை என்று ஓய்வில்லாமல் , மனதிற்கு சிறிதளவு கூட ஓய்வு கொடுக்காமல் இருப்பதும், பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் கலங்கி நிற்பது.

அதன் தீர்வு : 6

'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்' என்பது சரிதான். ஆனால் உடலை, மனதை வருத்திக்கொண்டு உடல் ஆரோக்கியம் இழந்துவிடக்கூடாது. வேலைக்கு நேரம் ஒதுக்க வேண்டும். அதில் தவறில்லை. ஆனால் அதுவே பல புது பிரச்சனைக்கு வழிவகுக்கக் கூடாது. உடல், மனதிற்கு கட்டாயம் நிம்மதியான ஓய்வு தேவை. அது தூங்குவதால் மட்டுமே சாத்தியமாகும். அதற்காக ஒரு நாள் பிக்னிக், வெளி, உள்நாடு சுற்றுப் பயணம் மேற்கொள்வதால் மனதில் உற்சாகமும், உடலில் புத்துணர்ச்சியும் உண்டாகும். பிரச்சனையினால் ஏற்படும் கலக்கம் மறைந்து அதை எதிர்கொள்ளும் மனவலிமை கிடைக்கின்றது. 

வரும் காரணம் : 7

தோல்விகளையே நினைத்துக்கொண்டு மனச்சோர்வையும், மன உறுதியையும் இழத்தல். 

அதன் தீர்வு : 7

'தோல்வி' என்பது ஒரு பனிப்பாறை. வெப்பம் தாக்காத வரையில் அதன் உறுதி 'டைட்டானிக்' போன்ற மிகப்பெரிய கப்பலையே கவிழ்த்து விடுமளவிற்கு வல்லமை கொண்டது. ஆனால் முயற்சி மற்றும் கடின உழைப்பு என்னும் வெப்பம் அதன்மீது படும்போது , அந்த மலை போன்ற பனிப்பாறை உருகி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். ஆகையால் தோல்வி ஏற்படும் போது உழைப்பையும், முயற்சியையும் விட்டுவிடக் கூடாது. 

வரும் காரணம் : 8

அன்பு உள்ளங்களை எதிர்பாராமல் இழக்கும்போது அதனால் தற்கொலை பற்றிய எண்ணங்களை வளர்த்துக்கொள்ளும் போதும் .... 

அதன் தீர்வு : 8

எதிர்பாராமல் அன்புள்ளங்களை இழக்கும்போது மனமதில் பூகம்பங்கள், எரிமலை மற்றும் சுனாமி போன்ற ஆபத்தான உணர்வுகள் ஓங்கி வரும். உன் மனஉறுதி கொண்டு பூகம்பத்தை நிறுத்து! அன்பு , சாந்தம், இரக்க குணத்தை அதிகரித்து எரிமலையை குளிரச் செய். தன்னம்பிக்கை கொண்டு சுனாமி அலைகளை கட்டுப்படுத்து. நீ நினைப்பது இனி நடக்கும்.

வரும் காரணம் : 9

பிறர் உதவியால் எளிதாக தீர்க்கும் பிரச்சனைகளை மனதிலே அடக்கிக் கொண்டு , பிறரிடம் அந்த பிரச்சனை மற்றும் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது....

அதன் தீர்வு : 9

நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை உங்களுக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால் அதே பிரச்சனையை எதிர்கொண்டு சிலர் எளிதாக தீர்த்து வெற்றி கண்டிருப்பார்கள். அவர்களிடம் பிரச்னையை பகிர்ந்துகொண்டு அதன்படி நடந்தால் கை மேல் பலன் கிடைக்கும். அப்படிப்பட்ட நபர்களின் நம்பகத்தன்மையை கண்டிப்பாக உறுதி செய்துகொள்ளவேண்டும். 

வரும் காரணம் : 10

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படும் தொந்தரவினால் எப்போதும் அழுவது. 

அதன் தீர்வு : 10

தகுந்த மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையினை உடனடியாக மேற்கொண்டு அதன்படி நடப்பது. உடற்ப்பயிற்சி, தியானம், யோகா மற்றும் உங்களுக்கு பிடித்த விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்றவற்றில் கவனம் செலுத்தும்போது உங்கள் உடல் மற்றும் மனம் புதிய பலம் பெரும். 

வரும் காரணம் : 11

தான் நினைத்தது நடக்காமல் இருக்கும் சமயத்தில் ஆவேசமும், எரிச்சலும் அதிகரிக்கும் போது....

அதன் தீர்வு : 11

எந்த ஒரு காரியம் நடக்கவேண்டுமென்றால் காலமும், நேரமும் கை கூடும் வரை காத்திருக்க வேண்டும். பொறுமையை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் கொண்டிருக்கும் குறிக்கோளை அடைவீர்கள்.

வரும் காரணம் : 12

நேரம் காலம் தெரியாமல் செல்போன் அழைப்புகள் வருவது..

அதன் தீர்வு : 12

செல்போன் அழைப்புகளை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ஏற்றுக்கொண்டு பதிலளியுங்கள். மற்ற நேரத்தில் 'சைலன்ட் மோட் ' இல் வைத்துக்கொள்ள முயலுங்கள். 'தலை போகும் காரியத்திற்கு ' மட்டும் மதிப்பு கொடுங்கள். நல்லதே நடக்கும் என்று எப்போதும் நம்பிக்கை கொள்ளுங்கள்.

மன அழுத்தம் என்பது மனதில் ஏற்பட்ட காயங்களை அடிக்கடி நினைவுகளின் மூலம் வெளிக்கொண்டு வந்து, அதன் மூலம் வீணான கற்பனைகளை வளர்த்து, விபரீத எண்ணங்களை உருவாக்கி, ஆபத்தான செயலில் முடிவது.

மன அழுத்தத்தின் வேகம் அசுர வேகம். எதையும் சிந்திக்காமல் , சூழ்நிலைகளை மறக்கச் செய்து ஆபத்தான முடிவெடுக்கும் ஆற்றல் கொண்டது. 

பொதுவாக மன அழுத்தத்தை தடுக்க , எதையுமே திட்டமிட்டுச் செய்யுங்கள். அதனால் செயல்களை செய்வதற்கு அதிக நேரம் கிடைக்கும் . நிதானமாக , நினைத்த நேரத்தில் வெற்றிகரமாக செய்துவிடலாம்.

திட்டமிடுவோம்!

மன அழுத்தம் ஏற்படுவதை தடுப்போம் !

Wednesday, March 15, 2017

கேம்பஸ் தேர்வு : கவனிக்க வேண்டியவை.

சமீப காலமாக எல்லோரையும் வசீகரிக்கும் ஒரு துறை கணினி மென்பொருள் துறை என்பதில் சந்தேகமில்லை. மற்ற துறைகளுடன் ஒப்பிடுகையில் கணினி மென்பொருள் துறையில் வேலை வாய்ப்புகளும் அதிகம், கை நிறைய சம்பளமும் சாத்தியம் என்பதால் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கணினி மென்பொருள் துறையை மாணவர்கள் குறி வைக்கின்றார்கள்.

எம்.சி.ஏ, எம்.எஸ்.சி (ஐ.டி) , பி.இ  பி.டெக் போன்றவற்றில் கணினித் துறை சிறப்புப் பிரிவு போன்றவையே கணினி மென்பொருள் நிறுவனத்தினர் குறிவைக்கும் பட்டப் படிப்புகளாகும். இவை தவிர தேவைக்கேற்ப மற்ற துறை மாணவர்களும் கூட அணுகப்படலாம், ஆனால் அதற்கான வாய்ப்புகள் ரொம்பக் குறைவு !

மென்பொருள் துறையில் தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க கணினி துறைப் படிப்புகளும் வெகு வேகமாகப் பரவி விட்டன. இன்றைக்கு கணினி மென்பொருள் பட்டப் படிப்பு முடித்தவர்களால் நாடு நிரம்பி வழிகிறது. ஒரு காலத்தில் கணினி நுட்பத்தில் பி.ஜி.டி.சி.ஏ போன்ற டிப்ளமோ படித்தாலே வேலை கிடைக்கும் சாத்தியம் இருந்தது. ஆனால் இப்போது அப்படியில்லை. பட்டப்படிப்பு படித்தவர்கள் புற்றீசல் போலப் பெருகி விட்டதால் வேலையில்லாத் திண்டாட்டம் கணினிப் பட்டம் படித்தவர்களிடையேயும் வேகமாகப் பரவி வருகிறது.

பத்து பேர் தேவை என விளம்பரம் கொடுக்கும் நிறுவனத்துக்கு குறைந்த பட்சம் ஐநூறு பேர் விண்ணப்பிக்கின்றனர். முன் அனுபவம் இல்லாதவர்களுக்கு வேலை கிடைப்பது மிகப்பெரிய சவாலாக மாறி வருகிறது. புதியவர்கள் வேலைக்குத் தேவை என நிறுவனங்கள் அழைப்பு விடுத்தால் பத்தாயிரம் பேர் படையெடுக்கின்றனர். எத்தனை பேர் வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்த்த இதுவே போதும் !

கணினி மாணவர்களுக்கு மிகப்பெரிய போட்டிக் களம் உருவாகிவிட்டது. இத்தகைய போட்டி நிறைந்த உலகில் வேலை கிடைக்க மிகச் சிறந்த வழி “கேம்பஸ் தேர்வு” என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. கல்லூரியை விட்டு வெளியே வந்து முயற்சி செய்வதில் பத்து சதவீதம் கஷ்டப்பட்டாலே கல்லூரி கேம்பஸ் தேர்வில் வெற்றி பெற முடியும். எனவே கல்லூரி மாணவ மாணவியர் கேம்பஸ் தேர்வை மிக மிக சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

கேம்பஸ் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டீர்களெனில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மிக முக்கியமான எதையோ ஒன்றைச் சாதித்து விட்டீர்கள் என காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
கல்லூரியில் படிக்கும் காலத்தில் இன்டர்வியூ பற்றி முழுமையாய் தெரிந்திருக்காது. கேம்பஸ் இன்டர்வியூவில் என்ன நடக்கும் ? எப்படி அதை எதிர்கொள்ளவேண்டும் ? போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்வது அதில் வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்க உதவும்.

கேம்பஸ் தேர்வில் நாம் போட்டியிடப் போவது அதிகபட்சம் சில நூறு நபர்களுடன் தான். கல்லூரிக்கு வெளியே இந்தப் போட்டி சில பத்தாயிரங்கள் என எகிறும். எனவே அதிகபட்சக் கவனத்துடன் கேம்பஸ் இன்டர்வியூவை எதிர்கொள்ளுங்கள்.

வெற்றியாளனுக்கும், தோல்வியடைந்தவனுக்கும் இடையே இடைவெளி மிக மிகக் குறைவாகவே இருக்கும். அரை வினாடி நேரத்தில் கோப்பையை இழக்கும் விளையாட்டுப் போட்டிகளைப் போலவே கேம்பஸ் தேர்வையும் அணுகுங்கள். கொஞ்சமும் அலட்சியமோ, விளையாட்டுத் தனமோ வேண்டாம்.

மற்றவர்களை விட வித்தியாசமாய் உங்களிடம் என்ன இருக்கிறது ? அடுத்தவர்களை விட அதிகமாய் உங்களுக்கு என்ன தெரியும் என்பதை யோசித்துப் பாருங்கள். அது ஜாவா, டாட் நெட், மெயின்ஃப்ரேம் போன்ற ஏதோ ஒரு மென்பொருள் சார்ந்த தொழில்நுட்ப சான்றிதழாகவும் இருக்கலாம். அல்லது கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ், லீடர்ஷிப் ஸ்கில்ஸ் போன்ற மென் திறமையாகவும் இருக்கலாம் ! ஒரு ஸ்பெஷாலிடியாவது உங்களிடம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் !

பலரும் தங்களுடைய அறிவு என்பது தொழில் நுட்ப ரீதியான படிப்பு மட்டும் என நினைத்துக் கொள்கிறார்கள். அது தவறு ! கம்யூனிகேஷன், நட்பு, சமூக அனுசரிப்பு, மரியாதை, விவாதத் திறமை, பற்றுறுதி, உரையாடல் திறமை, தலைமைப் பண்பு என ஏகப்பட்ட விஷயங்கள் சாஃப்ட் ஸ்கில்ஸ் எனப்படும் திறமையின் கீழ் வரும். எனவே அவற்றிலும் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள்.

உங்கள் கையிலிருக்கும் மார்க் ஷீட் உங்களுடைய கண்ணாடி. உங்களுடைய படிப்பு ஆர்வத்தையும், கடின உழைப்பையும் அது தான் காட்டிக் கொடுக்கும். கல்லூரி காலம் முழுதும் ஒழுங்காகப் படித்து மதிப்பெண் பட்டியலில் ஒரு நல்ல ஸ்கோர் வைத்திருக்க வேண்டியது உங்கள் கடமை ! அதிக சதவீதம் வைத்திருக்கும் மாணவர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும் என்பது நீங்கள் அறிந்ததே !

ஆங்கில அறிவு மிக மிக அவசியம். அதற்காக நீங்கள் சேக்ஸ்பியரைப் போல கவிதை எழுத வேண்டுமென்பதில்லை. நீங்கள் சொல்ல வரும் விஷயத்தை மிகத் தெளிவாக சொல்லக் கூடிய அளவுக்கு அழகான ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். தொலைக்காட்சி, இணையம் போன்றவற்றையெல்லாம் ஆங்கிலம் கற்றுக் கொள்ளப் பயன்படுத்துங்கள். அது உங்களுக்குப் பயன் தரும்.

ஆங்கில அறிவைப் பொறுத்தவரையில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் மூன்று. முதலாவது நிறைய ஆங்கில வார்த்தைகள் அறிந்திருத்தல். அதாவது நல்ல ஸ்ட்ராங் வக்காபுலரி. இரண்டாவது சரளமாகப் பேசுதல். மூன்றாவது சரியான உச்சரிப்புடன் பேசுதல் ! இந்த மூன்று விஷயங்களையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆங்கில அறிவை வளர்த்தெடுக்க மிகச் சிறந்த இடம் கல்லூரி ! கல்லூரியில் நண்பர்களுடன் விளையாட்டாய் ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டிருந்தாலே உங்கள் ஆங்கில அறிவு  வளரும். ஆங்கில செய்திச் சேனல்களை கவனமாகப் பாருங்கள், ஆங்கில செய்தித் தாள்களைப் படியுங்கள். ஆங்கிலத்தில் நடக்கும் குவிஸ், பட்டிமன்றம் போன்றவற்றிலெல்லாம் கலந்து கொள்ளுங்கள். சின்னச் சின்ன குழுக்கள் அமைத்து ஆங்கிலத்தில் பேசும் போட்டிகள் வையுங்கள். இப்படி எத்தனையோ விதமாக விளையாட்டுத் தனமாகவே நீங்கள் ஆங்கிலம் கற்றுக் கொள்ள முடியும்.

நவீன முறையில் ஆங்கிலம் கற்க விரும்பினால் இன்டர்நெட் உங்கள் தோழன். ஆங்கில வார்த்தைகளை அதன் உச்சரிப்புடன் அழகாகச் சொல்லித் தரும் ஏராளமான வலைத்தளங்கள் உள்ளன. உதாரணமாக www.dictionary.cambridge.org போன்ற தளங்கள் உலகப் புகழ் பெற்றவை. இதில் வார்த்தைகள், அதன் பொருள், அதன் உச்சரிப்பு ஒலி என சர்வ விஷயங்களும் உண்டு. ஒரே வார்த்தையை அமெரிக்கர்கள் எப்படி உச்சரிப்பார்கள், இங்கிலாந்தில் எப்படி உச்சரிப்பார்கள் போன்ற நுணுக்கங்கள் கூட கற்றுக் கொள்ளலாம்.

இளைஞர்கள் அதிக நேரம் செலவிடும் யூ-டியூப், கற்றுக் கொள்ள ஏதுவான நல்ல இடம். ஸ்போக்கன் இங்கிலீஷ் என டைப் செய்து தேடினாலே ஏகப்பட்ட வீடியோக்கள் உங்கள் உதவிக்கு வரும். தினமும் கொஞ்ச நேரம் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு முன் உங்கள் இன்டர்நெட் பிளான் அன்லிமிடட் தானா என்பதைப் பாருங்கள். ரொம்ப நேரம் வீடியோ பார்த்தால் பில் வந்து உங்களை மிரள வைக்கலாம் !

கம்யூனிகேஷன் என்றதும் நமக்குத் தெரிவது பேச்சும், எழுத்தும் தான் இல்லையா ? இன்னொரு வகை உரையாடலும் உண்டு. அது உடல்மொழி ! வார்த்தைகளற்ற உரையாடல் அது ! 60 சதவீதம் செய்திகளை உங்கள் உடல்மொழியே சொல்லிவிடும் என்பது கணக்கு ! எனவே உடல் மொழியில் கவனம் தேவை. பதட்டம், பயம், தடுமாற்றம் போன்ற எதையும் உங்கள் உடல் மொழி பேசாதிருப்பது நல்லது !

உடல் மொழியில் சில அடிப்படை விஷயங்கள் உண்டு. கைகளை விரித்து வைத்துக் கொண்டு பேசினால் நீங்கள் உண்மையுள்ளவர், திறந்த மனமுடையவர் என்று பொருள். பின்னால் சாய்ந்து கொண்டு பேசினால் உங்களுக்கு விஷயத்தில் விருப்பமில்லை என்று பொருள். நேராக அமர்ந்து சிரித்துக் கொண்டே பேசினால் நீங்கள் ரொம்ப ஆர்வமாய் இருக்கிறீர்கள் என்று பொருள். விரல்களைத் தட்டிக்கொண்டே இருப்பது நீங்கள் பொறுமை இழந்து இருக்கிறீர்கள் என்று சொல்லும், நகம் கடிப்பது பதட்டம் என்று சொல்லும்.
தன்னம்பிக்கை இல்லாதவர்கள் தடுமாறிப் போவார்கள். உங்களுடைய கண்களில் தன்னம்பிக்கை ஒளிரட்டும். நேர்த்தியான உடை உடுத்திக் கொண்டு நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளுங்கள். ஒரு முக்கியமான விஷயம், தன்னம்பிக்கை என்பது செயற்கைத் தனம் இல்லாமல் வெளிப்பட வேண்டியது அவசியம். ‘நான் ரொம்ப தன்னம்பிக்கை உடையவன் சார்’ என சொல்லாமலேயே அது தெரியவேண்டும். ஒரு புன்னகை, ஒரு தைரியமான பதில், ஒரு பாசிடிவ் மனநிலை இவையெல்லாம் உங்கள் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும்.

நேர மேலாண்மை முக்கியம். காலம் தவறாமை என்றதும், இன்டர்வியூவுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடி போறது தானே அது ? என கேட்பவர்கள் உண்டு. எழுத்துத் தேர்வை நீங்கள் எதிர்கொள்ளும் விதம், குழு உரையாடலில் செயல்படும் விதம், இன்டர்வியூவில் நடந்து கொள்ளும் விதம் என எல்லாவற்றையும் அது  தொட்டுச் செல்லும் !

எழுத்துத் தேர்வு கேம்பஸ் இன்டர்வியூக்களில் முக்கியமான அம்சம். அதில் நீங்கள் பட்டையைக் கிளப்ப வேண்டியது அவசியம். உங்களுக்கு அதற்கான ஏகப்பட்ட வாய்ப்புகளை இணையம் வழங்குகிறது. இணையத்தில் ஏகப்பட்ட கேள்வித்தாள் மாதிரிகள் இருக்கின்றன. அவற்றை எடுத்து நீங்கள் பயிற்சி செய்யலாம். ஒரு பத்து மாதிரித் தேர்வுகளையாவது நீங்கள் செய்து பாருங்கள். உங்களுக்கு தானாகவே எழுத்துத் தேர்வு கைவந்து விடும்.

எழுத்துத் தேர்வில் ஆப்டிடியூட் தேர்வு ரொம்ப முக்கியம். உங்களுடைய பிராப்ளம் சால்விங் திறமை, லாஜிகல் அறிவு போன்ற விஷயங்களெல்லாம் சோதிக்கப்படும். பயந்து விடாதீர்கள். மிகவும் சுவாரஸ்யமான தேர்வு இது. சுடோகு பிரியர்கள் மிக விரைவாக சுடோகு போடுவது போல, சரியான பயிற்சி இருந்தால் இந்த தேர்வை எளிதில் ஊதித் தள்ளலாம். நிறைய நிறைய பயிற்சி அவசியம் !

நேர்முகத் தேர்வுக்குச் செல்வதற்கு முன் அந்த நிறுவனத்தைப் பற்றிய விஷயங்களையெல்லாம் தெரிந்து வைத்திருங்கள். அவர்களுடைய நோக்கம், எதில் முதன்மையாய் இருக்கிறார்கள், எதில் அவர்கள் ஸ்பெஷலிஸ்ட், அவர்களுடைய திட்டங்கள் என்ன போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். கூகிளிடம் கேட்டால் அவரே விஷயங்களைத் தருவார். அது உங்களுக்குக் கைகொடுக்கும். ஆர்வமுடைய மாணவர்களே நிறுவனங்களின் முதல் சாய்ஸ் !

சுருக்கமான ஒரு விஷயம். எல்லா நிறுவனங்களும் மூன்று விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு தான் இயங்கும். குவாலிடி, காஸ்ட், டைம் இவை தான் அந்த மூன்று விஷயங்கள். தரம், விலை, காலம் ! உயர்ந்த தரத்தில், குறைவான விலையில், சொன்ன நேரத்தில் வேலையை முடிப்பதே முக்கியம். இந்த தத்துவத்தை மனதில் வைத்திருங்கள். பயன்படும்.

நேர்முகத் தேர்வுக்கு நல்ல ஃபார்மல் ஆடை அணியுங்கள். கல்லூரி வாழ்க்கை வேறு இன்டர்வியூ வேறு. கல்லூரியில் போவது போல ஜீன்ஸ், சாயம் போன டீ-ஷர்ட் எல்லாம் ஒதுக்குங்கள். நேர்த்தியான ஆடை, டை இருந்தால் அணியலாம். நண்பர்கள் கிண்டலடிப்பார்கள் போன்ற சிந்தனைகளையெல்லாம் ஒதுக்குங்கள். “ஓவர் ஃபார்மல்” என்று எதுவும் கிடையாது என்பதை மனதில் கொள்ளுங்கள். பெண்கள் ரொம்ப ஃபேன்ஸியாகவோ, ரொம்ப இறுக்கமாகவோ இல்லாத நல்ல ஃபார்மல் உடைகளை அணிவது சிறப்பானது.

உங்களுடைய கல்விச் சான்றிதழ்கள், சாதனைச் சான்றிதழ்கள், பயோடேட்டாக்கள், புகைப்படங்கள், பேனா , பேப்பர் என அனைத்தையும் ஒரு ஃபைலில் போட்டு அழகாக நேர்த்தியாக வரிசையாக வைத்திருங்கள். உங்களுடைய ஒழுங்கு அதில் பிரதிபலிக்கட்டும். உங்களுக்கும் தேவையற்ற பதட்டம் குறையும்.

நேர்முகத் தேர்வுக்கு முந்தைய நாள் என்ன செய்வீர்களோ இல்லையோ, நன்றாகத் தூங்குங்கள். காலையில் சோர்வின்றி எழும்புங்கள். சிறிதாய் உடற்பயிற்சி செய்யுங்கள். தண்ணீர் குடியுங்கள். நல்ல உற்சாகமாய் நேர்முகத் தேர்வுக்கு வாருங்கள். எக்காரணம் கொண்டும் முந்திய இரவில் தூங்காமல் விழித்திருந்து சோர்வில் சிக்கி, சிக்கலில் மாட்டாதீர்கள்.

இன்டர்வியூவில் பேசுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் கேட்பது ! என்ன கேள்வி கேட்கப்படுகிறது என்பதைக் கேட்காமல் முந்திரிக் கொட்டை மாதிரி பதில் சொல்வது தப்பு. அதே போல கிணற்றில் போட்ட கல் போல பதிலே பேசாமல் இருப்பதும் ரொம்பத் தப்பு. கேள்விகளைச் சரியாகக் கேட்டு, அதற்கானப் பதிலை தெளிவாகச் சொல்லுங்கள்.

“உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்” என்பது தான் பெரும்பாலான நேர்முகத் தேர்வுகளில் கேட்கப்படும் முதல் கேள்வி. இந்தக் கேள்வி தான் நமக்கான துருப்புச் சீட்டு. இந்த கேள்விக்கான பதிலை ரொம்ப சூப்பராகத் தயார் செய்து கொள்ளுங்கள். நிறுவனம் எதை எதிர்பார்க்குமோ அதைச் சொல்லுங்கள். உங்கள் பிளஸ் பாயின்ட்கள் எல்லாம் அதில் வரட்டும். தேவையில்லாத விஷயங்களை ஒதுக்குங்கள். “அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் ஐயா தான் கிங்க்” என்பது போன்ற விஷயங்களை விட்டு விடலாம்.

கேள்விக்குப் பதில் சொல்லும் போது பராக்குப் பார்க்கவே கூடாது. கேள்விக்கும் பதிலுக்கும் ரொம்ப கவனம் செலுத்துங்கள். செல்போனை அணைத்து வைத்திருங்கள். ரொம்ப வேகமாகப் பேசாதீர்கள். “உங்களுக்கு ஏதாவது கேள்வி இருக்கா ?” என கேட்பார்கள். அதன் பொருள் நிறுவனத்தைப் பற்றி ஏதாவது கேள்வி இருக்கிறதா என்பது தான். “எந்த மாதிரி வேலை இருக்கும்” என்பது போன்ற கேள்விகள் ஏதெனும் இருந்தால் கேட்கலாம். அதை விட்டு விட்டு தனிப்பட்ட கேள்விகளைக் கேட்கவே கேட்காதீர்கள்.

சிலருக்கு ஒரு தப்பான அபிப்பிராயம் உண்டு. ‘கஷ்டமான வார்த்தைகளைப் பேசுவது தான் நல்ல ஆங்கிலத்தின் அடையாளம்’ என்று ! உலக மகா தவறான சிந்தனை அது. புரியாமல் எழுதி மூலையில் போட இது நவீன கவிதை அல்ல ! ரொம்பவே சிம்பிளான வார்த்தைகளே போதும் ! தெளிவாய், நீரோடையாய், சரியாய் பேசவேண்டும் அவ்வளவே !

‘நிறைய நேரம் பேசினா தான் நாம நல்லா பதில் சொன்னோம்ன்னு அர்த்தம்’ எனும் தப்பான அபிப்பிராயம் சிலருக்கு உண்டு. அதே போல ‘எல்லாம் தெரிந்த சகலகலா வல்லவனாய் தன்னைக் காட்டிக் கொண்டால் தான் வேலை கிடைக்கும்’ எனும் சிந்தனை சிலருக்கு உண்டு. வேறு சிலரோ ஆணவத்தில் பேசுவார்கள். ‘என்னை விட்டா உங்களுக்கு வேற ஆள் யாரு இருக்கா’ என்பது போல ! இதெல்லாம் தப்பு. நச்சுன்னு நாலு வார்த்தை தெளிவா, அழகா, பணிவா, நேர்மையா சொல்லுங்க. அதுபோதும்.

பேசும்போது குரலும், உடல்மொழியும் இணைந்தே பேச வேண்டும். ஒரு புன்னகை நிச்சயம் தேவை. கண்ணில் பார்த்து தன்னம்பிக்கையுடன் பேசுவது நல்லது. அதே போல பேசுவதை பாதி விழுங்கி மீதியை துப்பாமல் தெளிவாய்ப் பேசுங்கள். சொல்லும் விஷயம் தப்பாய் இருந்தால் கூட சொல்லும் முறை தப்பில்லாமல்  இருக்க வேண்டும் !

நீங்கள் எவ்வளவு தூரம் மாற்றங்களை ஏற்றுக் கொள்வீர்கள் என்பது கவனிக்கப்படும். சென்னை, பங்களூர், ஹைதராபாத் இப்படி எங்கே வேணும்னாலும் வேலை செய்வேன் என்பவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகம். ‘சென்னையைத் தவிர வேற எங்கேயும் போக முடியாது பாஸ்’ – என முரண்டு பிடித்தால் வாய்ப்புகள் குறையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்களுக்கு தனித் திறமைகள் இருக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் நிறுவனங்களின் வெற்றி என்பது குழுவாக இணைந்து பணியாற்றுவதில் தான் இருக்கிறது. உங்களிடம் அந்த விருப்பமும், ஆர்வமும் இருக்க வேண்டும். குழுவாகப் பணி செய்த அனுபவங்கள் இருந்தால் அதை மறக்காமல் தெரியப்படுத்துங்கள். உதாரணமாக, என்.எஸ்.எஸ், என்.சி.சி, கலைக்குழு போன்றவை !

தலைமைப்பண்பு வசீகரமானது. உங்களிடம் அந்த பண்பு இருந்தால் அதை நேர்முகத் தேர்வு, குழு உரையாடல் போன்ற இடங்களில் வெளிப்படுத்துங்கள். தலைமைப் பண்புடன் கூடிய இளைய தலைமுறையை நிறுவனங்கள் இருகரம் விரித்து வரவேற்கும்.

அழுத்தமான சூழல்களை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பது முக்கியமாய் கவனிக்கப்படும். எளிதில் டென்ஷனாகும் பார்ட்டியா நீங்கள் ? கடினமான சூழல்களில் நீங்கள் சமாளிக்க முடியுமா ? அல்லது சவால்களை நீங்கள் விரும்பி ஏற்றுக் கொள்வீர்களா ?இந்த கேள்விகளுக்கான பதில்களை கண்டறியுங்கள். அழுத்தமான சூழல்களிலும் நிதானம் தவறாமல் இலட்சியங்களை நோக்கி உழைப்பவர்களையே நிறுவனங்கள் விரும்பும்.

அழுத்தமான சூழலை எப்படி சமாளிப்பீர்கள் என்பதைச் சோதிக்க சில தந்திரங்கள் வைத்திருப்பார்கள். பெரும்பாலும் ஒரே நேரத்தில் நான்கைந்து பேர் இன்டர்வியூ பேனலில் அமர்ந்து கேள்விகளை வீசுவார்கள். ஒரு பதில் சொல்லி முடிக்கும் முன் அடுத்த கேள்வியை தருவார்கள். உங்கள் பதிலை கொஞ்சம் கிண்டலடிப்பார்கள். என்னதான் நடந்தாலும் நிதானம் தவறாதீர்கள் !
பாசிடிவ் மனநிலையுடன் வாழ்க்கையை அணுகுபவர்களுக்கு நிறுவனங்கள் எப்போதும் முன்னுரிமை கொடுக்கும். “என்னத்த படிச்சு…” என ஒரு சோர்வு மனநிலையில் இருப்பவர்கள் நிராகரிக்கப்படுவார்கள். எதையெடுத்தாலும் எதிர்மறையாய்ப் பேசுபவர்களையும் நிறுவனங்கள் நிராகரிக்கும் !

“உங்களோட வீக்னெஸ் என்ன?” எனும் கேள்வி சாதாரணம். எல்லா மனிதர்களுக்கும் பலவீனங்கள் உண்டு. எனவே ‘எனக்கு வீக்னெஸே கெடையாது சார் என கதை விடாதீர்கள்”. பலவீனங்களைச் சொல்வதே நல்லது. அதையும் பாசிடிவ் ஆகச் சொல்லுங்கள். “எனக்கு இந்த பலவீனம் இருக்கு. ஆனா அதை நான் சீக்கிரம் வெற்றி கொள்வேன். அதற்காகத் தான் இன்னின்ன முயற்சிகளை எடுத்திருக்கிறேன்” போன்ற பதில்கள் சிறப்பானவை.

இரக்கத்தைக் காட்டி வேலையை இழுக்க முயலாதீர்கள். அது வெற்றியைத் தராது. குடும்ப கஷ்டம், அப்பாக்கு உடம்பு முடியல, நான் தான் அம்மாவைக் காப்பாத்தணும் எப்படியாச்சும் ஒரு வேலை கொடுங்க என சினிமா டயலாக் பேசுவது பெரும்பாலும் பயன் தராது. உங்கள் திறமையைக் காட்டி வசீகரியுங்கள்.ஐடி நிறுவனங்கள் தொண்டு நிறுவனங்களல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நேர்மையாய் இருக்க வேண்டியது மனிதத் தன்மை ! அதையே நிறுவனங்களும் எதிர்பார்க்கும். நேர்மையற்று நடப்பவர்களை நிறுவனங்கள் உடனுக்குடன் கழற்றி விடும். பொய்சொல்லி வேலையில் சேர்வது, அலுவலக பொருட்களைத் திருடுவது, தப்பான பில் கொடுத்து பணம் வாங்குவது போன்றவையெல்லாம் நிறுவனங்களுக்கு அலர்ஜி ஏற்படுத்தும் விஷயங்கள். வேலை பறிக்கப்படுவது சர்வ நிச்சயம். நீங்கள் நேர்மையானவராய் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமான எதிர்பார்ப்பு !

ஒவ்வொரு நிறுவனமும் சில சட்ட திட்டங்களை வைத்திருக்கும். அவற்றை நீங்கள் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். மனித வள இன்டர்வியூவில் அது சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். “இதெல்லாம் என்ன திட்டம், சரியில்லையே’ என்றெல்லாம் உங்கள் மேதாவித்தனத்தைக் காட்டாதீர்கள். நிறுவன விதிவரம்புகளுக்குள் செயல்படுவேன் எனும் உறுதியை மட்டும் அளியுங்கள் போதும்.

உங்களுடைய நீண்டகாலத் திட்டங்கள், வாழ்க்கை இலட்சியம் போன்றவற்றை நிறுவனம் கேட்கலாம். நிறுவனத்தின் கொள்கைகளுக்கும், இலட்சியங்களுக்குமேற்ற ஒரு பதிலைச் சொல்வது வசீகரிக்கும். நிறுவனத்தில் நிலைத்திருந்து, உங்கள் முழு பங்களிப்பையும் நல்கும் உறுதியையும் வழங்குங்கள்.

“என்ன எதிர்பார்க்கிறீங்க?” எனும் ஒரு கேள்வி கேட்கப்படும். பல மாணவர்கள் இது சம்பளத்தை மட்டுமே குறிக்கும் கேள்வி என நினைத்து விடுவதுண்டு. உங்கள் எதிர்பார்ப்பு எதுவாகவும் இருக்கலாம். நன்றாக வேலை கற்றுக் கொள்வதாகவும் இருக்கலாம். நல்ல வேலைச் சூழல், சவாலான வேலை, பிடித்தமான வேலை என விஷயங்கள் எதுவாகவும் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

“நாங்க ஏன் உங்களைத் தேர்வு செய்ய வேண்டும்?” எனும் கேள்வி திடீரென கேட்கப் பட்டால் என்ன செய்வீர்கள் ? தடுமாறுவீர்கள் தானே ? முதலிலேயே அந்த கேள்விகளை உங்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். நிறுவனங்கள் ஏன் உங்களைத் தேர்வு செய்ய வேண்டும் ? நீங்கள் பணக்காரர் என்பதாலா ? அழகானவர் என்பதாலா ? ஏழை என்பதாலா ? கிடையவே கிடையாது. அவர்களுக்கு ஆட்கள் தேவை. அவர்களுடைய பணிகளைச் செய்ய திறமையான ஊழியர்கள் தேவை. அவ்வள்வு தான். அதை மனதில் கொண்டு ,”உங்களுடைய பணித் தேவைகளை நிச்சயம் என்னுடைய முழுப் பங்களிப்பையும் செலுத்தி நிறைவேற்றுவேன்” என்பது போல பதில் சொல்வது நல்லது.

உங்களுடைய நீண்டகாலத் திட்டம், குறுகிய காலத் திட்டம் போன்றவற்றை ஹைச்.ஆர் இன்டர்வியூக்கள் கேட்கும். குறுகிய காலத் திட்டம் “நிறுவனத்துக்கு உங்களுடைய முழுமையான பங்களிப்பு !” எனுமளவில் இருப்பது நல்லது. நீண்டகாலத் திட்டம், நிறுவனத்தில் நல்ல வளர்ச்சி இருந்தால் நிறுவனத்தோடு இணைந்து வளர்வது எனும் பாணியில் இருப்பது சிறப்பு. எதுவானாலும், பணத்தை அடிப்படையாகக் கொண்டு உங்கள் திட்டங்களை வரையறுக்காதீர்கள்.

ஒரு சிக்கலான சூழலைச் சொல்லி இந்த சூழலில் நீ என்ன முடிவெடுப்பாய் ? என்பது போன்ற கேள்விகளை ஹைச்.ஆர் கேட்க வாய்ப்பு உண்டு. உங்களுக்குத் தோன்றும் ஒரு நல்ல பதிலைச் சொல்லுங்கள். பதிலைச் சொல்லும்போது இரண்டு விஷயங்களை மனதில் கொள்ளுங்கள். ஒன்று, அது நிறுவனத்தின் கொள்கைகள், மதிப்பீடுகளுக்கு எதிரானதாய் இருக்கக் கூடாது. இரண்டு, ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு பதிலாய் இருக்க வேண்டும். ஒருவேளை உங்கள் பதில் இன்டர்வியூ எடுப்பவரை “அட ! “ போட வைத்தால் உங்களுக்கு வாய்ப்பு பிரகாசம் !

நீங்கள் கல்லூரியில் செய்த புராஜக்ட் வேலை, தீசிஸ், பிராக்டிகல் போன்றவற்றையெல்லாம் நன்றாகப் படித்து வைத்திருங்கள். கேள்விகள் நிச்சயம். பயோடேட்டாவில் குறிப்பிட்டிருக்கும் எல்லா விஷயங்களையும் மிகச் சரியாகத் தெரிந்து வைத்திருங்கள்.

குழு உரையாடல் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? குரூப் டிஸ்கஷன் என ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஒரு குழுவாக சுமார் பத்து பேரை அமரவைத்து ஒரு தலைப்பைக் கொடுத்து பேசச் சொல்வார்கள். தைரியமாகப் பேசுபவர்கள் கவனிக்கப்படுவார்கள். தெளிவாக, தைரியமாக, கொடுக்கப்படும் தலைப்பின் கீழ் பேசுபவர்களுக்கு வெற்றி வாய்ப்பு நிச்சயம்.

பயிற்சியே உங்களை உயர்த்தும். எவ்வளவு பெரிய பேச்சாளராய் இருந்தாலும் அவர் மேடைக்குப் போகும் முன்னால் என்ன பேசப்போகிறோம் என்பதைப் பற்றி சின்ன ஒரு பயிற்சி எடுப்பார். ஆபிரகாம் லிங்கனே அதற்கு விதிவிலக்காய் இருக்கவில்லை. எனவே குழு உரையாடல், இன்டர்வியூ அனைத்துக்குமே நல்ல பயிற்சி எடுங்கள்.

குழு உரையாடலில் பேசும் முன்னர் ஒரு வரி சுய அறிமுகம் நல்லது. குழு உரையாடலில் முதலில் பேசுபவருக்கு ஸ்பெஷல் மதிப்பெண் உண்டு. மூன்று நான்கு முறை பேசுங்கள். ஒவ்வொரு தடவையும் ஒரு 15 – 20 வினாடிகள் பேசினாலே போதும். அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைக்காதீர்கள். அதே போல வலுக்கட்டாயமாய் பேசிக்கொண்டே இருக்காதீர்கள் ! பேச்சை தப்பான ஏரியாவுக்கு திசை திருப்பாதீர்கள். இவையெல்லாம் நெகடிவ் மதிப்பெண்களைத் தரும்.

ஒருவேளை உங்களுக்கு அறவே பரிச்சயமற்ற ஒரு தலைப்பைத் தந்தார்கள் என வைத்துக் கொள்ளுங்கள். கப்பலே கவிழ்ந்தது போல அமர்ந்திருக்கத் தேவையில்லை. மற்றவர்கள் பேசுவதை வைத்து சில பாயின்ட்களை உருவாக்கிப் பேசலாம். எதுவானாலும் நிச்சயம் பேசுங்கள். பேசாமல் இருந்தால் தோல்வி நிச்சயம் என்பதை மறக்க வேண்டாம்.

பயோடேட்டா பற்றிச் சொல்லத் தேவையில்லை. நேர்த்தியாக அதைத் தயாராக்க வேண்டியது அவசியம். எழுத்துப் பிழைகள் இல்லாமல், முக்கியமான தகவல்களுடன் இருக்க வேண்டும். ஒரு பயோடேட்டா வாசிப்பவரை 15 வினாடிகளுக்குள் வசீகரிக்க வேண்டும். எனவே ரொம்ப சிரத்தையெடுத்து செய்யுங்கள். எளிமையான ஃபாண்ட், தெளிவான அளவு, பளிச் என வசீகரிக்கும் தன்மை இது அவசியம். எப்போதும் சில காப்பிகளைக் கையிலேயே வைத்திருங்கள்.

நிறுவனம் எப்போதுமே ஆர்வமும், உற்சாகமும், திறமையும் உடையவர்களையே தேடும். நிறுவனத்தில் வேலை செய்ய விருப்பமுடையவர்களை விட, நிறுவனத்தின் பாகமாகவே மாறிவிடத் துடிக்கும் இளைஞர்கள் அவர்களை வசீகரிப்பார்கள். “நிறுவனத்தின் இந்த கொள்கைகள் என்னை வசீகரித்தன. அதனால் இந்த நிறுவனத்தில் இணைவதில் மிகுந்த ஆர்வமாய் இருக்கிறேன்” எனும் டைப்பில்மவர்களுடன் உரையாடுங்கள்.

நிறுவனங்களுக்கு கடின உழைப்பாளிகளை விட, ஸ்மார்ட் உழைபாளிகளை ரொம்பப் பிடிக்கும். புதுமையான சிந்தனைகள் ஐ.டி துறையில் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கப் படும். எனவே அதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் கல்லூரி காலத்தில் அப்படி ஏதேனும் செய்திருந்தால் குறிப்பிட மறக்கவேண்டாம்.

இந்த சில டிப்ஸ்களை மனதில் எழுதுங்கள். தன்னம்பிக்கை, தைரியம், உற்சாகம் இவற்றை மனதில் கொள்ளுங்கள். கேம்பஸ் தேர்வில் வெற்றி பெற்றே தீருவேன் எனும் முழுமையான அர்ப்பணிப்புடன் தயாராகுங்கள். இப்போது கஷ்டப்பட்டால் எதிர்காலத்தில் உங்கள் வாழ்க்கை மிகவும் அழகானதாக இருக்கும். இப்போது நண்பர்களுடன் சேர்ந்து பொழுதை வீணடித்தால், பின்பு வேலை தேடும் போது நண்பர்கள் அருகில் இல்லாமல் இருக்கும் சூழலும் ஏற்படலாம்.

கடைசியாக ஒன்று ! வெற்றிக்காக முழுமையாய் உழையுங்கள். ஆனால் தோல்வி வந்தால் துவண்டு விடாதீர்கள்.  வாழ்க்கை தோல்விகளைத் தாண்டியும் உங்களை அரவணைக்கும். வாழ்க்கை அழகானது. ஒரு தோல்வியுடன் எதுவும் முடிந்து விடுவதில்லை.

வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துகள்.

உங்களைத் தலைவனாக்கும் 10 கோல்டன் ரூல்ஸ்!

நாம் அறிமுகப்படுத்துவது, ‘தி டென் கோல்டன் ரூல்ஸ் ஆஃப் லீடர்ஷிப்’ என்னும் எம்.ஏ.சூப்பியஸ் மற்றும் பனோஸ் மோர்டொவ்கோட்ஸ் எழுதி, அமெரிக்கன் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் வெளியிட்ட புத்தகத்தை.

ஒரு சிறந்த தலைவனாகத் திகழ என்னென்ன குணாதிசயங்கள் வேண்டுமோ, அவை அத்தனையுமே கொண்டிருந்தால் மட்டுமே, வெற்றி பெற முடியும். ஏனென்றால், தெளிந்த டெக்னிக்கல் அறிவை மட்டுமே வைத்துக்கொண்டு ஒருவரால் எதிர்காலத்தைக் கணித்து, அதற்கேற்ப கூட இருக்கும் பணியாளர்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்திக் கடலளவுக்குப் போட்டிகள் நிறைந்த இந்த உலகில் நம் கம்பெனி என்ற கப்பலை முன்னோக்கிச் செலுத்தி வெற்றி கண்டுவிட முடியாது. இதில் கொடுமை என்னவெனில், லீடர்ஷிப் குறித்த சில எதிர்த்துப் பேசமுடியாத, அதேசமயம் தவறான கோட்பாடுகள் சிலவற்றை (மூடநம்பிக்கை என்று கூடச் சொல்லலாம்) நாம் கொண்டிருப்பதுதான்.

முதலாவதாக, யார் வேண்டுமானாலும் லீடராகலாம் என்ற எண்ணம். ஒரிஜினல் லீடர்ஷிப்புக்கான சில சிறப்பான குணாதிசயங் களை அனைவரும் பெற்றிருப்பதில்லை என்ற உண்மையை நாம் ஒட்டுமொத்தமாக மறந்தே போய்விடுகின்றோம். லீடர்ஷிப் குணம் சற்றும் இல்லாத, அதேநேரம் திறமையாகச் செயல்படும் ஒரு மேனேஜரை நாம் லீடர் என்று சொல்வதும் கோமாளித்தனமே. அவர் அவருடைய கடமையை சிறப்பாகச் செய்கின்றார் என்றே கொள்ள வேண்டும். சரியாக வேலை செய்பவரெல்லாம் லீடர் இல்லை. குறிப்பாகச் சொன்னால், நிர்வாகம் செய்வது வேறு. லீடர்ஷிப் என்பது வேறு என்கிறார்கள் ஆசிரியர்கள்.

இரண்டாவது, லீடர்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதை நாம் நம்புவது. இதற்கான உற்பத்தி செய்யும் டெக்னிக்குகளின் விற்பனை வேறு கொடிகட்டிப் பறக்கின்றது. இத்தனை மில்லி பால், இத்தனை மில்லி டிக்காஷன், இவ்வளவு சர்க்கரை, இவ்வளவு சூடு போன்றவை இருந்தால் அது சூப்பர் காபி ஆவதுபோல் இந்திந்த டெக்னிக்குகளையெல்லாம் ஒருவருக்குக் கற்றுக்கொடுத்தால், அவர் லீடராக மாறிவிடுவார் என்று நினைப்பதெல்லாம் கட்டுக் கதை என்கின்றனர். எத்தனை பெரிய மேனேஜ்மென்ட் ஸ்கூலில் படித்தாலும் லீடர்ஷிப் குணாதிசயம் எள்ளளவும் இல்லாத ஒருவர்  லீடராக மாறிவிட முடியாது என்றே சொல்லலாம்.

அப்புறம் எப்படி லீடராக மாறுவது என்று கேட்கின்றீர்களா?

லீடர்ஷிப் எனில், என்ன என்று முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். திறமை, அனுபவம் மற்றும் பழுத்துப் பக்குவப்பட்ட தொலைநோக்கு என்ற மூன்றின் அளவான கலவைதான் லீடர்ஷிப் என்கின்றனர் ஆசிரியர்கள். பழுத்துப் பக்குவப்பட்ட தொலை நோக்கற்ற, ஆனால், அதேசமயம் திறமையும் அனுபவமும் கொண்ட நன்கு பணிபுரியும் மேனேஜர்கள் அனைவருமே லீடர்கள் இல்லை. ஒருவர் பழுத்துப் பக்குவப்பட்ட தொலை நோக்கைப் பெற, முதலில் சுயமாக தெளிவாக இருக்க வேண்டும். அப்போதுதான் கையில் இருக்கும் சவால்களின் மீது முழுக்கவனம் செலுத்த முடியும்.



இதைப் பெற ஒரு மனிதனுக்கு வாழ்க்கையின் தத்துவம் (பிலாசபி ஆஃப் லைஃப்) முதலில் தெளிவாய்ப் புரிய வேண்டும். வாழ்க்கையின் தத்துவம் தெளிவாய்ப் புரிந்த ஒருவனால் மட்டுமே தொழிலில் சிறப்புடன் செயல்பட்டு ஒரு லீடராய்த் திகழ முடியும் என்கின்றனர் ஆசிரியர்கள்.
ஆனால், வேலை பார்க்கும் இடத்தில் இருக்கும் குறைபாடுகளுக்கெல்லாம் மூலகாரணமே வாழ்க்கையின் தத்துவத்தைப் புரிந்துகொள்ளாமல் செயல்படுவதுதான் என்பதை நாம் முதலில் உணர வேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள். இதனாலேயே இந்தப் புத்தகத்தில் அரிஸ்டாட்டில், பிளாட்டோ போன்ற பல பேரறிஞர்களின் கருத்துக்களை உங்களுக்கு வரிசைப்படுத்தித் தந்துள்ளோம் என்கின்றனர் அவர்கள்.

லீடர்ஷிப் என்றால் என்ன என்பதற்கான பதிலை இப்போது பார்ப்போம்.

லீடர்ஷிப் என்பது நிர்வாக ரீதியான வெற்றி கரமான மேலாண்மையல்ல. லீடர்ஷிப்புக்குத்  தேவையான குணாதிசயங்கள் என்பது மிகமிகச் சிறப்பானதும், மாறுபட்டதும் ஆகும். அதனால், எல்லோராலும் லீடராக முடியாது.

அதேபோல், லீடர்களை உற்பத்தி செய்ய முடியாது. சில ஃபார்முலாக்களை வைத்து லீடர் களைத் தயாரிக்க முடியாது. திறமை, அனுபவம் மற்றும் மனித வாழ்க்கையின் நுட்பமான வேறுபாடுகள் மற்றும் உணர்வுப்பூர்வமான சிக்கல்கள் குறித்து பழுத்துப் பக்குவப்பட்ட தொலைநோக்கு என்பவற்றின் கலவையே லீடர்ஷிப் ஆகும்.

ஆணோ, பெண்ணோ ஒரு லீடாராக வேண்டுமென்றால் வாழ்க்கையின் தத்துவத்தை அவர்கள் முழுமையாகப் புரிந்துகொண்டேயாக வேண்டும். அதன் பின்புதான் அவர்கள் உண்மையான லீடராக மாற முடியும்.

இந்த லீடர்ஷிப் குணாதிசயத்தைப் பெற்று வளர்த்துக்கொள்ள பத்து எளிமையான சட்டங்கள் இருக்கின்றன.

1.உன்னை அறிந்துகொள்!

உன்னை முழுமையாக நீ அறிந்துகொள். உன்னுள் இருக்கும் நல்லது - கெட்டது, உன்னுடைய பலம் - பலகீனம் போன்றவற்றைத் தெளிவாய் புரிந்துகொள். சுயபுரிதல் என்பதுதான் லீடர்ஷிப்புக்கான முதல் அஸ்திவாரம்.

2. அதிகாரம் ஆளை அடையாளம் காட்டும்!

அதிகாரம் கிடைத்தால் நாம் எப்படி நடந்து கொள்கின்றோம். அதிகாரத்தைப் புத்திசாலித் தனமாக உபயோகித்தால் உண்மையான லீடர். அதிகாரத்தை அலுவலகம் சிறப்பான நிலையை அடைய உபயோகப்படுத்துவது. உதாரணத்துக்கு,  மேனேஜர்  என்றாலும்கூட அலுவலகத்துக்குக் குறித்த நேரத்துக்கு  வருவது போன்றது. போலியான லீடரோ அதிகாரத்தைத் தண்டனை தருவதற்கு மட்டுமே உபயோகப்படுத்துவார். பிடிக்காதவன் லேட்டாய் வந்தால் மெமோதான்.

3.தோழமை உணர்வை வேலை பார்க்கும் இடத்தில் வரவழைத்தல்!

ஆண்டான், அடிமை என்பதைப்போல் இல்லாமல் எல்லோருடைய முன்னேற்றமும் நமக்கு முக்கியம் என்ற தோழமை உணர்வை வேலை பார்க்கும் இடத்தில் கொண்டுவரத் தெரிந்தவரே உண்மையான லீடராவார். இதில் முக்கியச் சிக்கலே ‘நான்’ என்பதிலிருந்து ‘நாம்’ என்று மாறுவதில்தான். கார்ப்பரேட் உலகத்தில் இது சாத்தியமாவது கடினம். வெற்றி வரும்போது அதைத் தன்வசமாக்கிக்கொள்ளாமல் மொத்த டீமுமே இதற்குக் காரணம் என்பதை உணரச் செய்பவரே உண்மையான லீடர்.

4. நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களில் நேரத்தையும் சக்தியையும் செலவிடுவதைத்தவிர்ப்பது!

இதெல்லாம் என் கட்டுப்பாட்டில்  இருப்பது. இவற்றின் மீது நமக்குக் கட்டுப்பாடு கிடையவே கிடையாது என்ற புத்திசாலித்தனமான தெளிவை உண்மையான லீடர் தன்வசம் கொண்டிருக்க வேண்டும். இது தெரிந்துவிட்டால் எனர்ஜியும் நேரமும் பெருமளவில் சேமிக்கப்படும்.

5. எப்போதும் உண்மையை வரவேற்பது!

லீடர் என்பவர் உண்மையை எப்போதும் வரவேற்பவராய் இருக்க வேண்டும். பிழைகள் இருந்து அவைகுறித்து யார் சொன்னாலும் கேட்டு அதைச் சரிசெய்துகொள்ளும் குணம் உடையவராய் இருக்க வேண்டும். போலியான லீடர்கள், சுற்றியிருப்பவர்கள் தங்கள் செயல்பாடு குறித்துக் குறைகளைச் சொல்லாமல் இருக்கத் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துவார்கள்.

6.போட்டி, திறமையை வெளிக்கொணரும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருத்தல்!

போலி லீடர்கள் போட்டி உருவானால் அதை அழிக்கவே முயல்வார்கள். உண்மையான லீடர்களோ போட்டியை வரவேற்பார்கள். ஏனென்றால், போட்டி என்பதே உண்மையான திறனை வெளிக்கொணரும் என்பதில் அவர்கள் நம்பிக்கைக் கொண்டிருப்பார்கள்.

7. ஓர் உயரிய வாழ்க்கை முறையை வாழ்தல்!

தனிமனித நடத்தை என்பதில் ஓர் உயரிய வாழ்க்கையை வாழ்பவர்களே உண்மையான லீடர்களாவார்கள். எதிரிகள் குறித்து காழ்ப்பு உணர்ச்சியும், அவர்கள் கெட்டழிய வேண்டும் என்ற எண்ணமும் கொண்டு திரிபவர்கள் போலி லீடர்களே.

8. தகவல்களை எப்போதும் திறனாய்வு செய்த பின்னரே ஒப்புக்கொள்ளுதல்!

இன்னார் சொன்னார், இப்படித்தான் செய்து வருகின்றார்கள், காலங்காலமாய் இப்படித்தான் என்பது போன்றவற்றை விட்டுவிட்டுப் பெறப் படும் இந்தத் தகவல்களால் என்ன நன்மை. சொல்பவர் யாராக இருந்தாலும் உண்மை எவ்வளவு, பொய் எவ்வளவு போன்ற திறனாய்வு செய்பவரே உண்மையான லீடராவார்.

9. தனிமனித ஒழுங்கின் சக்தியைக் குறைத்து மதிப்பிடாமல் இருத்தல்!

எப்போதுமே ஒரு நல்ல எண்ணத்துடன் செயல்களைச் செய்யுங்கள். ஒரு புரபஷனலாகத் திகழுங்கள். பொய்யையும் திருட்டுத்தனத்தையும், இந்தக் காலகட்டத்தில் இதுதான் சரி என்று சப்பைக்கட்டு கட்டாதவரே உண்மையான லீடர்.

10. நற்குணங்களே தலைவிதி (ஊழ் வினை) என்று நினைத்தல்!

ஒரு நிறுவனத்தின் தலைவிதி என்பது ராசி/நட்சத்திரத்தால் வருவது இல்லை. அதன் குணாதிசயங்களால் மட்டுமே நிர்ணயிக்கப் படுகின்றது என்பதை உண்மையான லீடர்கள் முழுமையாக உணர்ந்திருப்பார்கள்.

இதெல்லாம் எழுதவும் படிக்கவும் நன்றாக இருக்கிறது. நடப்பில் எத்தனை கத்திகள், எத்தனை ஆப்புகள், எத்தனை பாலிடிக்ஸ், எத்தனை கழுத்து நெரிசல், எத்தனை கால்வாரல்கள் என்பீர்கள். சூழலுக்கேற்ப நல்லது கெட்டதை மாற்றிக்கொள்ள வேண்டியதுதான் என்ற வாதத்தைக்கூட நீங்கள் வைக்கலாம். அப்படி மாற்றிக்கொண்டால் அந்தச் சூழலில் மட்டுமே வெற்றி பெறலாம்.

ஆனால், நிறுவனங்கள் நீண்ட நாள் அடிப்படையில் தொடர்ந்து வெற்றிபெறவல்லவா பாடுபடுகின்றன. அந்த நீண்ட நாள் தொடர் வெற்றியை அடைய மேலே சொன்ன குணாதிசயங்களைக் கொண்ட லீடர்களை நிறுவனங்கள் கட்டாயம் கொண்டிருக்க வேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

உங்களைத் தலைவனாக்கும் 10 கோல்டன் ரூல்ஸ்!

நாம் அறிமுகப்படுத்துவது, ‘தி டென் கோல்டன் ரூல்ஸ் ஆஃப் லீடர்ஷிப்’ என்னும் எம்.ஏ.சூப்பியஸ் மற்றும் பனோஸ் மோர்டொவ்கோட்ஸ் எழுதி, அமெரிக்கன் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் வெளியிட்ட புத்தகத்தை.

ஒரு சிறந்த தலைவனாகத் திகழ என்னென்ன குணாதிசயங்கள் வேண்டுமோ, அவை அத்தனையுமே கொண்டிருந்தால் மட்டுமே, வெற்றி பெற முடியும். ஏனென்றால், தெளிந்த டெக்னிக்கல் அறிவை மட்டுமே வைத்துக்கொண்டு ஒருவரால் எதிர்காலத்தைக் கணித்து, அதற்கேற்ப கூட இருக்கும் பணியாளர்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்திக் கடலளவுக்குப் போட்டிகள் நிறைந்த இந்த உலகில் நம் கம்பெனி என்ற கப்பலை முன்னோக்கிச் செலுத்தி வெற்றி கண்டுவிட முடியாது. இதில் கொடுமை என்னவெனில், லீடர்ஷிப் குறித்த சில எதிர்த்துப் பேசமுடியாத, அதேசமயம் தவறான கோட்பாடுகள் சிலவற்றை (மூடநம்பிக்கை என்று கூடச் சொல்லலாம்) நாம் கொண்டிருப்பதுதான்.

முதலாவதாக, யார் வேண்டுமானாலும் லீடராகலாம் என்ற எண்ணம். ஒரிஜினல் லீடர்ஷிப்புக்கான சில சிறப்பான குணாதிசயங் களை அனைவரும் பெற்றிருப்பதில்லை என்ற உண்மையை நாம் ஒட்டுமொத்தமாக மறந்தே போய்விடுகின்றோம். லீடர்ஷிப் குணம் சற்றும் இல்லாத, அதேநேரம் திறமையாகச் செயல்படும் ஒரு மேனேஜரை நாம் லீடர் என்று சொல்வதும் கோமாளித்தனமே. அவர் அவருடைய கடமையை சிறப்பாகச் செய்கின்றார் என்றே கொள்ள வேண்டும். சரியாக வேலை செய்பவரெல்லாம் லீடர் இல்லை. குறிப்பாகச் சொன்னால், நிர்வாகம் செய்வது வேறு. லீடர்ஷிப் என்பது வேறு என்கிறார்கள் ஆசிரியர்கள்.

இரண்டாவது, லீடர்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதை நாம் நம்புவது. இதற்கான உற்பத்தி செய்யும் டெக்னிக்குகளின் விற்பனை வேறு கொடிகட்டிப் பறக்கின்றது. இத்தனை மில்லி பால், இத்தனை மில்லி டிக்காஷன், இவ்வளவு சர்க்கரை, இவ்வளவு சூடு போன்றவை இருந்தால் அது சூப்பர் காபி ஆவதுபோல் இந்திந்த டெக்னிக்குகளையெல்லாம் ஒருவருக்குக் கற்றுக்கொடுத்தால், அவர் லீடராக மாறிவிடுவார் என்று நினைப்பதெல்லாம் கட்டுக் கதை என்கின்றனர். எத்தனை பெரிய மேனேஜ்மென்ட் ஸ்கூலில் படித்தாலும் லீடர்ஷிப் குணாதிசயம் எள்ளளவும் இல்லாத ஒருவர்  லீடராக மாறிவிட முடியாது என்றே சொல்லலாம்.

அப்புறம் எப்படி லீடராக மாறுவது என்று கேட்கின்றீர்களா?

லீடர்ஷிப் எனில், என்ன என்று முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். திறமை, அனுபவம் மற்றும் பழுத்துப் பக்குவப்பட்ட தொலைநோக்கு என்ற மூன்றின் அளவான கலவைதான் லீடர்ஷிப் என்கின்றனர் ஆசிரியர்கள். பழுத்துப் பக்குவப்பட்ட தொலை நோக்கற்ற, ஆனால், அதேசமயம் திறமையும் அனுபவமும் கொண்ட நன்கு பணிபுரியும் மேனேஜர்கள் அனைவருமே லீடர்கள் இல்லை. ஒருவர் பழுத்துப் பக்குவப்பட்ட தொலை நோக்கைப் பெற, முதலில் சுயமாக தெளிவாக இருக்க வேண்டும். அப்போதுதான் கையில் இருக்கும் சவால்களின் மீது முழுக்கவனம் செலுத்த முடியும்.

இதைப் பெற ஒரு மனிதனுக்கு வாழ்க்கையின் தத்துவம் (பிலாசபி ஆஃப் லைஃப்) முதலில் தெளிவாய்ப் புரிய வேண்டும். வாழ்க்கையின் தத்துவம் தெளிவாய்ப் புரிந்த ஒருவனால் மட்டுமே தொழிலில் சிறப்புடன் செயல்பட்டு ஒரு லீடராய்த் திகழ முடியும் என்கின்றனர் ஆசிரியர்கள்.
ஆனால், வேலை பார்க்கும் இடத்தில் இருக்கும் குறைபாடுகளுக்கெல்லாம் மூலகாரணமே வாழ்க்கையின் தத்துவத்தைப் புரிந்துகொள்ளாமல் செயல்படுவதுதான் என்பதை நாம் முதலில் உணர வேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள். இதனாலேயே இந்தப் புத்தகத்தில் அரிஸ்டாட்டில், பிளாட்டோ போன்ற பல பேரறிஞர்களின் கருத்துக்களை உங்களுக்கு வரிசைப்படுத்தித் தந்துள்ளோம் என்கின்றனர் அவர்கள்.

லீடர்ஷிப் என்றால் என்ன என்பதற்கான பதிலை இப்போது பார்ப்போம்.

லீடர்ஷிப் என்பது நிர்வாக ரீதியான வெற்றி கரமான மேலாண்மையல்ல. லீடர்ஷிப்புக்குத்  தேவையான குணாதிசயங்கள் என்பது மிகமிகச் சிறப்பானதும், மாறுபட்டதும் ஆகும். அதனால், எல்லோராலும் லீடராக முடியாது.

அதேபோல், லீடர்களை உற்பத்தி செய்ய முடியாது. சில ஃபார்முலாக்களை வைத்து லீடர் களைத் தயாரிக்க முடியாது. திறமை, அனுபவம் மற்றும் மனித வாழ்க்கையின் நுட்பமான வேறுபாடுகள் மற்றும் உணர்வுப்பூர்வமான சிக்கல்கள் குறித்து பழுத்துப் பக்குவப்பட்ட தொலைநோக்கு என்பவற்றின் கலவையே லீடர்ஷிப் ஆகும்.

ஆணோ, பெண்ணோ ஒரு லீடாராக வேண்டுமென்றால் வாழ்க்கையின் தத்துவத்தை அவர்கள் முழுமையாகப் புரிந்துகொண்டேயாக வேண்டும். அதன் பின்புதான் அவர்கள் உண்மையான லீடராக மாற முடியும்.

இந்த லீடர்ஷிப் குணாதிசயத்தைப் பெற்று வளர்த்துக்கொள்ள பத்து எளிமையான சட்டங்கள் இருக்கின்றன.

1.உன்னை அறிந்துகொள்!

உன்னை முழுமையாக நீ அறிந்துகொள். உன்னுள் இருக்கும் நல்லது - கெட்டது, உன்னுடைய பலம் - பலகீனம் போன்றவற்றைத் தெளிவாய் புரிந்துகொள். சுயபுரிதல் என்பதுதான் லீடர்ஷிப்புக்கான முதல் அஸ்திவாரம்.

2. அதிகாரம் ஆளை அடையாளம் காட்டும்!

அதிகாரம் கிடைத்தால் நாம் எப்படி நடந்து கொள்கின்றோம். அதிகாரத்தைப் புத்திசாலித் தனமாக உபயோகித்தால் உண்மையான லீடர். அதிகாரத்தை அலுவலகம் சிறப்பான நிலையை அடைய உபயோகப்படுத்துவது. உதாரணத்துக்கு,  மேனேஜர்  என்றாலும்கூட அலுவலகத்துக்குக் குறித்த நேரத்துக்கு  வருவது போன்றது. போலியான லீடரோ அதிகாரத்தைத் தண்டனை தருவதற்கு மட்டுமே உபயோகப்படுத்துவார். பிடிக்காதவன் லேட்டாய் வந்தால் மெமோதான்.

3.தோழமை உணர்வை வேலை பார்க்கும் இடத்தில் வரவழைத்தல்!

ஆண்டான், அடிமை என்பதைப்போல் இல்லாமல் எல்லோருடைய முன்னேற்றமும் நமக்கு முக்கியம் என்ற தோழமை உணர்வை வேலை பார்க்கும் இடத்தில் கொண்டுவரத் தெரிந்தவரே உண்மையான லீடராவார். இதில் முக்கியச் சிக்கலே ‘நான்’ என்பதிலிருந்து ‘நாம்’ என்று மாறுவதில்தான். கார்ப்பரேட் உலகத்தில் இது சாத்தியமாவது கடினம். வெற்றி வரும்போது அதைத் தன்வசமாக்கிக்கொள்ளாமல் மொத்த டீமுமே இதற்குக் காரணம் என்பதை உணரச் செய்பவரே உண்மையான லீடர்.

4. நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களில் நேரத்தையும் சக்தியையும் செலவிடுவதைத்தவிர்ப்பது!

இதெல்லாம் என் கட்டுப்பாட்டில்  இருப்பது. இவற்றின் மீது நமக்குக் கட்டுப்பாடு கிடையவே கிடையாது என்ற புத்திசாலித்தனமான தெளிவை உண்மையான லீடர் தன்வசம் கொண்டிருக்க வேண்டும். இது தெரிந்துவிட்டால் எனர்ஜியும் நேரமும் பெருமளவில் சேமிக்கப்படும்.

5. எப்போதும் உண்மையை வரவேற்பது!

லீடர் என்பவர் உண்மையை எப்போதும் வரவேற்பவராய் இருக்க வேண்டும். பிழைகள் இருந்து அவைகுறித்து யார் சொன்னாலும் கேட்டு அதைச் சரிசெய்துகொள்ளும் குணம் உடையவராய் இருக்க வேண்டும். போலியான லீடர்கள், சுற்றியிருப்பவர்கள் தங்கள் செயல்பாடு குறித்துக் குறைகளைச் சொல்லாமல் இருக்கத் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துவார்கள்.

6.போட்டி, திறமையை வெளிக்கொணரும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருத்தல்!

போலி லீடர்கள் போட்டி உருவானால் அதை அழிக்கவே முயல்வார்கள். உண்மையான லீடர்களோ போட்டியை வரவேற்பார்கள். ஏனென்றால், போட்டி என்பதே உண்மையான திறனை வெளிக்கொணரும் என்பதில் அவர்கள் நம்பிக்கைக் கொண்டிருப்பார்கள்.

7. ஓர் உயரிய வாழ்க்கை முறையை வாழ்தல்!

தனிமனித நடத்தை என்பதில் ஓர் உயரிய வாழ்க்கையை வாழ்பவர்களே உண்மையான லீடர்களாவார்கள். எதிரிகள் குறித்து காழ்ப்பு உணர்ச்சியும், அவர்கள் கெட்டழிய வேண்டும் என்ற எண்ணமும் கொண்டு திரிபவர்கள் போலி லீடர்களே.

8. தகவல்களை எப்போதும் திறனாய்வு செய்த பின்னரே ஒப்புக்கொள்ளுதல்!

இன்னார் சொன்னார், இப்படித்தான் செய்து வருகின்றார்கள், காலங்காலமாய் இப்படித்தான் என்பது போன்றவற்றை விட்டுவிட்டுப் பெறப் படும் இந்தத் தகவல்களால் என்ன நன்மை. சொல்பவர் யாராக இருந்தாலும் உண்மை எவ்வளவு, பொய் எவ்வளவு போன்ற திறனாய்வு செய்பவரே உண்மையான லீடராவார்.

9. தனிமனித ஒழுங்கின் சக்தியைக் குறைத்து மதிப்பிடாமல் இருத்தல்!

எப்போதுமே ஒரு நல்ல எண்ணத்துடன் செயல்களைச் செய்யுங்கள். ஒரு புரபஷனலாகத் திகழுங்கள். பொய்யையும் திருட்டுத்தனத்தையும், இந்தக் காலகட்டத்தில் இதுதான் சரி என்று சப்பைக்கட்டு கட்டாதவரே உண்மையான லீடர்.

10. நற்குணங்களே தலைவிதி (ஊழ் வினை) என்று நினைத்தல்!

ஒரு நிறுவனத்தின் தலைவிதி என்பது ராசி/நட்சத்திரத்தால் வருவது இல்லை. அதன் குணாதிசயங்களால் மட்டுமே நிர்ணயிக்கப் படுகின்றது என்பதை உண்மையான லீடர்கள் முழுமையாக உணர்ந்திருப்பார்கள்.

இதெல்லாம் எழுதவும் படிக்கவும் நன்றாக இருக்கிறது. நடப்பில் எத்தனை கத்திகள், எத்தனை ஆப்புகள், எத்தனை பாலிடிக்ஸ், எத்தனை கழுத்து நெரிசல், எத்தனை கால்வாரல்கள் என்பீர்கள். சூழலுக்கேற்ப நல்லது கெட்டதை மாற்றிக்கொள்ள வேண்டியதுதான் என்ற வாதத்தைக்கூட நீங்கள் வைக்கலாம். அப்படி மாற்றிக்கொண்டால் அந்தச் சூழலில் மட்டுமே வெற்றி பெறலாம்.

ஆனால், நிறுவனங்கள் நீண்ட நாள் அடிப்படையில் தொடர்ந்து வெற்றிபெறவல்லவா பாடுபடுகின்றன. அந்த நீண்ட நாள் தொடர் வெற்றியை அடைய மேலே சொன்ன குணாதிசயங்களைக் கொண்ட லீடர்களை நிறுவனங்கள் கட்டாயம் கொண்டிருக்க வேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

Friday, March 10, 2017

ருசியாக இருக்கும்


1. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்

* 2. எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.

* 3. ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்

. * 4. கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும்.

* 5. மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது

. * 6. தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும். தயாரிக்கும் போது அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் ருசி அதிகமாக இருக்கும்.

* 7. பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.

* 8. வாஷ் பேசினில் இரண்டு அல்லது மூன்று ரசகற்பூரம் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வராது.

* 9. அடைக்க அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும்.

* 10. இளம் காலை வெயிலிலும் மாலை வெயிலிலும் பிறந்தகுழந்தையை சிறிது நேரம் படுக்க வைத்தால் அந்த குழந்தைக்கு வைட்டமீன் ”D” யும் கோடை காலத்தில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம் மலக்குடல் சிறப்பாக செயல்பட உதவும்.

* 11. பழய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரீல் கேட் பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது.

*12. மீன்தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும்.

*13. சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது.

* 14. பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்து கொண்டால் கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.

* 15. உங்கள் வீட்டு .ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து ஃப்ரீஸருக்குள்ளும் ஃப்ரிஜ்ஜின் உள் மூலையிலும் போட்டு விடுங்கள். இனி ஃப்ரிஜ்ஜை திறந்தால் ஒரே கமகமதான்.

* 16. ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோவை திறக்கும் போது கமகமக்கும்.

* 17. துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.

* 18. நைலான் கயிரை வாங்கியவுடன்சோப்புநீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்

. * 19. தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும்.

*20. ஏலக்காயை பொடித்து அதன்விதைகளை உபயோகத்திற்கு எடுத்தபிறகு தோலை எறிந்து விடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும்.

* 21. நிறம் மங்கிய வெள்ளை துணிகளை வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும்

. * 22. மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.

* 23. பூண்டு உரிப்பதற்கு முன் தண்ணீரில் ஜந்து நிமிடம் போட்டு விட்டு உரித்தால் தோல் கைகளில் ஒட்டாது.

* 24. நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை சாம்பாரில் கலந்து விடுங்கள். நெய் மணம் கமழும் சாம்பார் ரெடி

. * 25. தேங்காயை ஃபிரிஜில் வைத்து ஜில்லென்று எடுத்து உடைத்தால் சுலபமாக உடைத்து விடலாம்.

* 26. மெழுகு வர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாது அதிக நேரம் எரியும்

. * 27. பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.

* 28. மிக்ஸியில் சட்னி மசாலா போன்ற வற்றை அரைத்து வழித்து எடுத்ததும் மீண்டும் ஜாரில் தண்ணீர் விடடு மிக்ஸியை ஓட விடவும். அதனுள்ளே கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி மசாலா போன்றவை தண்ணீரோடு கரைந்து வந்து விடுவதால் ஜாரை சுத்தம் செய்வது மிகவும் சுலபம்

. * 29. நாலு இன்ச் பெயிண்ட் பிரஷ்ஷினால் வீட்டு ஜன்னல், டிவி, கீபோர்டு போன்றவற்றை சுத்தப்படுத்தினால் துணியால் துடைப்பதைவிட நன்றாக துடைக்க முடியும்

. * 30. குக்கர் காஸ்கட் தொளதொளவென்றாகிப் போனால் புது காஸ்க்ட் வாங்கும் வரை இந்த காஸ்கட்டை ஃபிரிஜின் ஃபிரிஸரில் வைத்து எடுத்துப் பயன்படுத்தினால் நான்கைந்து நாட்கள் வரை பயன்படும்.

* 31. நான்கு பாதாம் பருப்புகளை எடுத்து இரவில் ஊறவைத்து காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.

* 32. தினமும் சிறிது துளசி இலைகளை மென்று தின்றால் சுவாசப்பகுதி நோய்கள் வராது.

*33. எலுமிச்சம் பழ சர்பத் தயாரிக்கும் போது கொஞம் இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

* 34. வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.

* 35. அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம் காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.

* 36. கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.

* 37. தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ·பிரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.

* 38. வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீருற வைக்கும்

. * 39. பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்

. * 40. அடை செய்யும்போது கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ரம்யமாக இருக்கும்

. * 41. இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு சாப்பிடத் தோன்றும்.

* 42. பாகற்காயை சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, முற்றியதாக இருந்தால் அகற்றி – தேவையான அளவு எலுமிச்சை ரசத்தில் கொட்டி வெளியில் வைத்து ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் நன்றாக ஊறிப் பக்குவப்படும். தினமும் நன்கு குலுக்கி வெயிலில் வைக்க வேண்டும். கசப்பு துளியும் இராது. நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.

* 43. மைதாவை நீர் விட்டுப் பிசையாது அப்படியே ஒரு பாத்திரத்தில் கொட்டி நீராவியில் சிறிது நேரம் வேகவைத்து எடுத்து, சுவைக்கேற்ப உப்பும், நெய்யும் கூட்டிப் பிசைந்து முறுக்குப் பிழியலாம். கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.

* 44. எண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.

* 45. ஜவ்வரிசி அல்லது அரிசிக்கூழ் கிளரும்போது கசகசாவையும் ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டுக் கிளறி வடாம் அல்லது வற்றல் தயாரித்தால் பொரிக்கும்போது தனி மணமும், ருசியும் காணலாம்.

* 46. பெருங்காயம் கல்போல் இருந்தால் உடைப்பது கஷ்டம். இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துக் காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து தனித்தனியாகப் போட்டுவிட்டால் ஆறியவுடன் டப்பியில் போட்டுக் கொள்ளலாம்.

* 47. கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும்.

*48. காய்கறிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை நறுக்கத் தொடங்குமுன் கைவிரல்களில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்குவது நல்லது. வேலை முடிந்ததும் சிகைக்காய் போட்டுக் கழுவி விடவும். விரல்கள் கறுத்துப் போகாமல் இருக்க இது உதவும்.

* 49. மோர் மிளகாய் தயாரிக்கும்போது அத்துடன் பாகற்காய்களையும் வில்லைகளாக அரிந்து போட்டு வற்றலாக்கலாம். பாகல் வற்றல் காரமுடனும், மிளகாய் சிறு கசப்புடன் சுவை மாறி ருசியாக இருக்கும்.

* 50. அரிசி குருணையில் உப்புமா செய்தால், குருணை பாதி வெந்து கொண்டிருக்கும்போது, சம அளவு வறுத்த சேமியாவைக் கொட்டி வெந்ததும் இறக்கி வைத்து, அரைமூடி எலுமிச்சம்பழம் பிழியவும். இந்த டூ-இன்-ஒன் உப்புமா, புதுமையான சுவையோடு இருக்கும். 

Friday, March 3, 2017

நாம் செய்யும் புண்ணியம் எத்தனை தலைமுறையினருக்கு?

நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியத்திலும் புண்ணியம் என்பது நிச்சயம் உள்ளது. அதில் என்ன என்ன புண்ணியம் செய்தால் எத்தனை தலைமுறைக்கு அந்த புண்ணியம் போய் சேரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

👉 அன்னதானம் செய்தால் 3 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

👉 திருக்கோவிலில் தீபம் ஏற்றினால் 5 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

👉 முன்னோர்களுக்கு திதிபு ஜை செய்தல் 21 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

👉 பித்ருகளுக்கு உதவுவது 6 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

👉 புனித நதிகளில் நீராடினால் 3 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

👉 அனாதையாக இறந்தவர்களுக்கு அந்திம கிரியை செய்தால் 9 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

👉 பசுவின் உயிரைக் காப்பாற்றுவது 14 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

👉 பட்டினியால் வருந்தும் ஏழைகளுக்கு உணவளித்தால் 5 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

👉 ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தால் 5 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

முடிந்தவரை நல்ல காரியங்கள் செய்து நமக்கும் நமது வருங்கால தலைமுறைக்கும் புண்ணியம் சேர்ப்போம்!...⁠⁠⁠⁠