பெண்கள் எப்படி தங்களை அழகுப்படுத்த அழகு நிலையங்களுக்குச் சென்று நேரத்தை செலவழிப்பார்கள். அதேப் போல் ஆண்கள் தங்கள் உடல் கட்டமைப்பை பாதுகாக்க உடற்பயிற்சி செய்வதில் நேரத்தை செலவழிப்பார்கள். அதிலும் சில பேர் மணிக்கணக்கில் உடற்பயிற்சியில் ஈடுபடுவதுண்டு. பொதுவாக காலையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டவுடன், உடலில் உள்ள புரதச்சத்து, நீர்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் போன்றவை வெளியேறும். மேலும் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களும் வெளியேறும்.
அதனால் அந்த நாள் முழுவதும் சோர்வுடன் இருக்க நேரிடும். ஆகவே உடற்பயிற்சி செய்த 30 நிமிடங்களில் உணவை உண்ண வேண்டும். ஏனென்றால் இந்த நேரத்தில் தான் உடற்பயிற்சியால் இழந்த ஊட்டச்சத்துக்கள் வேகமாக மறுபடியும் உடலில் ஏறும். உடற்பயிற்சி செய்த பின் சோர்வு ஏற்படுவதால், சில சமயங்களில் அதனை தினமும் செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழக்கூடும்.
இனிமேல் கவலையை விட்டொழியுங்கள். இழந்த ஊட்டச்சத்துக்களை மீண்டும் பெறுவதற்கு, உடற்பயிற்சி செய்த பின் சாப்பிட வேண்டிய உணவு வகைகளை என்னவென்று தெரிந்து கொண்டு, அதனை உடற்பயிற்சிக்கு பின்னர் சாப்பிட்டு வாருங்கள்.
ஆம்லெட்

உடற்பயிற்சி செய்த பின், உடலில் உள்ள தசை வளர்ச்சிக்கு அதிக புரதச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். இத்தகைய புரதச்சத்து, முட்டையில் உள்ள வெள்ளை கருவில் போதுமான அளவில் உள்ளது. மேலும் அதில் அத்தியாவசிய அமினோ அமிலங்களும், வைட்டமின்களும் அடங்கியுள்ளது. உடற்பயிற்சி செய்த பின், பாதிப்படைந்த திசுக்களின் மறு வளர்ச்சிக்கு அமினோ அமிலங்கள் உதவி புரியும்.
அவகேடோ

அவகேடோ என்னும் வெண்ணைப் பழத்தில் சாச்சுரேட்டட் கொழுப்புகள், ஃபோலிக் அமிலம், வைட்டமின் கே, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் பேண்டோதெனிக் அமிலம் உள்ளது. மேலும் இதில் அதிக அளவில் பொட்டாசியம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கும். அதுமட்டுமல்லாமல் இது ஆக்கத்திறனை அதிகரித்து, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
சால்மன் மீன்

சால்மன் மீனில் புரதம் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இது துரிதமாக குணப்படுத்தும் ஆற்றலை உடையது. மேலும் இதில் வைட்டமின் டி, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி12 உள்ளதால், ஆக்கத்திறனை அதிகரித்து, உடலுக்கு போதிய தெம்பைக் கொடுக்கும். மேலும் உடம்பில் உள்ள இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவும்.
செரில்

ஒரு கிண்ணத்தில் செரிலை நிரப்பி சாப்பிட்டால், தசைகள் இழந்த ஆற்றலை வேகமாக மீண்டும் பெறும். செரிலில் அதிக அளவு புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளதால், உயிரணுக்களின் மெட்டபாலிச ஆற்றலை அதிகரிக்கும். அதிலும் செரிலுடன் பால் அல்லது சாக்லெட் பாலை கலந்து சாப்பிட்டால், அதிக அளவில் புரதச்சத்து கிடைக்கும். அதனால் தசைகள் வேகமாக வீரியத்தை திரும்பி பெறும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அதிக அளவு காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, பீட்டா கரோட்டீன், வைட்டமின் சி, மாங்கனீசு மற்றும் பொட்டாசியம் அதிகம் இருக்கிறது. பொதுவாக உடற்பயிற்சி செய்து முடித்த பின், உடலில் உள்ள கிளைக்கோஜென்னின் அளவு குறையும். சர்க்கரைவள்ளிக் கிழங்கில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால், உடலில் உள்ள கிளைக்கோஜென்னின் அளவை உயர்த்த உதவும்.
வெள்ளை சாதம்

வெள்ளை சாதத்தை விட பழுப்பு நிற சாதம் தான் உடலுக்கு நல்லது. இருப்பினும் உடற்பயிற்சி செய்த பின் அதிக கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ள உணவை சாப்பிட்டால் தான், உடலில் உள்ள கிளைக்கோஜென்னின் அளவு அதிகரிக்கும். மேலும் வெள்ளை சாதம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிப்பதால், கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவும் அதிகரிக்கும்.
உலர் பழங்கள்

நட்ஸ் மற்றும் உலர் பழங்களில் வளமையான அளவு புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, வைட்டமின் கே மற்றும் கால்சியம் அடங்கியிருக்கிறது. இதில் எளிமையான கார்போஹைட்ரேட் இருப்பதால், செரிமானம் சுலபமாக நடக்கும். மேலும் கிளைக்கோஜென்னின் அளவை அதிகரிக்கும். அதனால் உடலின் ஆற்றல் திறன் அதிகரிக்கும்.
ஹம்மஸ் (Hummus)

ஹம்மஸ் என்ற க்ரீமில் அதிகமான அளவில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி அடங்கியுள்ளது. மேலும் புரதச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டும் அடங்கியுள்ளது. அதனால் உடற்பயிற்சி செய்த பின், சாப்பிடுவதற்கு இது சிறந்த உணவாக விளங்கும்.
கோழிக்கறி

கோழிக்கறியில் புரதம், ஒமேகா-3 மற்றும் அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளது. இது உடலில் உள்ள உயிரணுக்களின் மெட்டபாலிச ஆற்றலை அதிகரிக்கும்.
பழங்கள்

பழங்களில் அதிக நார்ச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. இதில் அதிகமாக நொதிகள் உள்ளதால், அது ஊட்டச்சத்துக்களை உடைத்து சோர்வடைந்த தசைகளுக்கு சுலபமாக அனுப்பி வைக்கும். உடற்பயிற்சிக்கு பின்னர் பழங்கள், பழச்சாறுகள் போன்றவைகளை எடுத்துக் கொள்ளலாம். இதனால் சோர்வடைந்த தசைகளுக்கு, போதிய புரதச்சத்தையும் அவை அளிக்கும்.
No comments:
Post a Comment