Monday, May 19, 2014

கோமாதா வழிபாடு ஏன்?

கோமாதா வழிபாடு ஏன்?...

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன. 

அவை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகியவை. 

இவை பொன்னிறம், கருமை, வெண்மை, புகை, சிவப்பு நிறம் கொண்டிருந்தன. 

இவற்றின் சந்ததிகளே பூலோகத்தில் நமக்கு உதவியாக இருந்து வருகின்றன. 

இவற்றில் இருந்துவரும் சாணம், கோமியம், பால், தயிர், வெண்ணெய் ஆகிய ஐந்தும் புனிதமானவை. 

இவற்றை குறிப்பிட்ட அளவில் கலந்து சிவபெருமானுக்கு செய்யும் அபிஷேகமே பஞ்சகவ்ய அபிஷேகம் எனப்படுகிறது. 

இப்பசுக்களில் மும்மூர்த்திகள், சத்தியம், தர்மம் என்று எல்லா தேவதைகளும் வசிக்கின்றனர். 

செல்வவளம் தரும் திருமகள் இதன் பிருஷ்டபாகத்தில் வசிக்கிறாள். 

இப்பகுதியை தொட்டு வழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள் விலகும். 

காலையில் எழுந்ததும் பசுவைத் தொழுவத்தில் காண்பது சுபசகுனம். தெருக்களில் கூட்டமாகப் பார்த்தால் இன்னும் விசேஷம். 

பாற்கடலில் பிறந்த ஐந்து பசுக்களும் கோலோகம் என்னும் 
பசுவுலகில் இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். 

பசுவைத் தெய்வமாக வழிபட்டால் கோலோகத்தை அடையும் பாக்கியம் உண்டாகும்

No comments:

Post a Comment