Thursday, October 30, 2014

சுந்தரகாண்டம் படிப்பதால் ஏற்படும் கற்பனைக்கும் எட்டாத நன்மைகள்!

சுந்தரகாண்டம் படிப்பதால் ஏற்படும் கற்பனைக்கும் எட்டாத நன்மைகள்!

1. ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.

2. காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும் அதை குணப்படுத்த இயலவில்லை என்றார். உடனே காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும் சாப்பிடும் முன் படி என்றார். அதன்படி அந்த நபர் பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய் விட்டது.

3. சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.

4. சுந்தரகாண்டத்தை நாம் எந்த அளவுக்கு படிக்கிறோமோ அந்த அளவுக்கு பகவானை நெருங்குகிறோம் என்று அர்த்தம்.

5. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும்.

6. சுந்தரகாண்டம் வாசித்தால் வாழ்வு வளம் பெறும். கஷ்டங்கள் தொலைந்து போகும்.

7. சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், வாசிக்க, வாசிக்க மன வலிமை உண்டாகும்.

8. சுந்தரகாண்டத்தை முறைப்படி வாசித்தால் காலதாமதமான திருமணம் விரைவில் கை கூடும். கவலைகள் மறந்து போய் விடும்.

9. சுந்தரகாண்டம் படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம்.

10. சுந்தரகாண்டத்தை மனம் உருகி படித்தால் பாவம் தீரும். முடியாத செயல்கள் முடிந்து விடும்.

11. ஆஞ்சநேயருக்கு வடை வெண்ணை வைத்து நெய்தீபம் ஏற்றி சுந்தரகாண்டம் படித்து வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

12. ராம நவமியன்று விரதம் இருந்து ராமருக்கு துளசி மாலை அணிவித்து சுந்தரகாண்டம் படித்து வந்தால் வாழ்வில் அமைதி பெறலாம்.

13. ராமனுடன் மறுபடியும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை சீதைக்கு கொடுத்து சுந்தரகாண்டம்தான். எனவேதான் கருவுற்ற தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்கிறார்கள்.

14. ஏழரை சனி, அஷ்டமத்து சனி திசை நடப்பவர்கள் தினமும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

15. சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலைத் தாண்டுவதற்கு முன்பு சொன்ன ஸ்லோகத்துக்கு “ஜெய பஞ்சகம்” என்று பெயர். இதை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

16. சுந்தரகாண்டத்தில் அனுமன் சீதையை கண்டுபிடிக்க அசோக வனத்துக்கு செல்லும் முன்பு கூறிய ஸ்லோகத்தை கூறி வந்தால் வெற்றி மீது வெற்றி உண்டாகும்.

17. சுந்தரகாண்டத்தை நீண்ட நாட்களாக பாராயணம் செய்பவர்களை விட்டு நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும்.

18. சுந்தரகாண்டம் என்று பெயர் சொல்லுவார். இதை சுகம் தரும் சொர்க்கம் என்பார்கள்.

19. சுந்தர காண்டம் படிப்பதன் மூலம் வேதம் சொல்லிய புண்ணியத்தை பெண்கள் பெற முடியும்.

20. ராமாயணத்தில் மொத்தம் 24 ஆயிரம் சுலோகங்கள் உள்ளன. இதில் 2885 சுலோகங்கள் சுந்தரகாண்டத்தில் இருக்கிறது.

21. சுந்தரகாண்டத்தை எவர் ஒருவர் ஆழமாக படிக்கிறாரோ, அவருக்கு தனது உண்மையான சொரூபத்தை உணரும் ஆற்றல் கிடைக்கும்.

22. சுந்தரகாண்ட பாராயணம் நமது ஊழ்வினையால் ஏற்படும் நிம்மதி சீர்குலைவை சரி செய்து விடும்.

23. சுந்தரகாண்டத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்தால் மனம் லேசாகி விடும்.

24. சுந்தரகாண்டத்தில் 42-ம் சர்க்கத்தில் 33-வது ஸ்லோகம் முதல் 37-வது ஸ்லோகம் வரை உள்ள ஸ்ரீஜெயபஞ்சகம் ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் உடனே திருமணம் கைகூடும்.

25. ராமநவமியன்று ராகவேந்திர சுவாமிகள் இயற்றிய சுந்தரகாண்ட சுலோகம் கூறினால் மன தைரியம் உண்டாகும்.

26. ஒரு பெண் கருத்தரித்த நாள் முதல் 9 மாதம் வரை நாள் தவறாமல் சுந்தரகாண்டம் படித்து வந்தால் சுகப் பிரசவம் உண்டாகி குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும் என்பது ஐதீகம்.

27. கர்ப்பிணிகள் குறைந்த பட்சம் 5-வது மாதத்தில் இருந்து சுந்தரகாண்டம் படித்து வந்தால், பிறக்கும் குழந்தை ஆன்மிக சிந்தனை உள்ள குழந்தையாக பிறக்கும்.

28. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்தால்தான் அதன் முழு பலனும் கிடைக்கும்.

29. சுந்தரகாண்டம் மிகவும் வலிமையானது. அதை வாசிப்பவர்களுக்கும் வலிமை தரக்கூடியது.

30. சுந்தரகாண்டம் படிக்கும் நாட்களில் உறுதியாக அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். வீட்டிலும் அசைவ உணவு தயாரிக்கக் கூடாது.

31. சுந்தரகாண்டத்தில் காயத்திரி மந்திரத்தின் அளவற்ற சக்தி உள்ளதாக கருதப்படுகிறது.

32. சுந்தரகாண்டம் படிக்க தொடங்கும் மன்பு முதலில் ராமாயணத்தை ஒரே நாளில் படித்து விட வேண்டும். அதன் பிறகு சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்பது ஐதீகம். (ராமாயணத்தை முழுமையாக படிப்பதா? அதுவும் ஒரே நாளில்… என்று நினைக்கவேண்டாம். அதற்க்கு ஒரு எளிய வழி இருக்கிறது. அடுத்த பதிவில் அது பற்றி சொல்கிறோம்.)

33. பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து, அந்த அறை முன்பு அமர்ந்து சுந்தரகாண்டம் படிப்பது மிகவும் நல்லது.

34. சுந்தரகாண்டத்தை காலை, மாலை இரு நேரமும் படிக்கலாம்.

35. சுந்தரகாண்டத்தை படிக்கத் தொடங்கினால் ஒருநாள் கூட இடைவெளி விடாமல் படிக்க வேண்டும்.

36. பெண்கள் வீட்டுக்கு தூரமாக இருக்கும் நாட்களில் சுந்தரகாண்டம் படிக்கக் கூடாது.

37. சுந்தரகாண்டத்தின் ஒவ்வொரு சர்க்கத்துக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதை அறிந்து படித்தால் மிக எளிதாக பலன் பெறலாம்.

38. சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்து முடித்ததும் ஆஞ்சநேயரை வழிபட்டு, ஏழைகளுக்கு உதவி செய்தால் அளவில்லா புண்ணியம் கிடைக்கும்.

39. வசதி, வாய்ப்புள்ளவர்கள் சுந்தர காண்டம் படிக்கும் நாட்களில் ஆஞ்ச நேயருக்கு பிடித்த நைவேத்தியங்களை படைத்து பயன்பெறலாம்.

40. சுந்தரகாண்டம் புத்தகத்தின் பதினோரு பிரதிகள் வாங்கி பதினோரு பேருக்கு படிக்க கொடுத்தால் யாகம் செய்ததற்கான பலன்கள் கிடைக்கும்

Monday, October 27, 2014

நெருக்கடியும் வாய்ப்பும் ஒரே வார்த்தைதான்

நெருக்கடியும் வாய்ப்பும் ஒரே வார்த்தைதான்

வாய்ப்பு என்பது ஒரு மறைமுக வரம். ஆனால் பல சமயங்களில் சாபம் போலத் தோன்றும். வேலையிலும் தொழிலும் ஏற்படும் பல சிக்கல்கள் நிஜமாகவே வாய்ப்புகள் என்றால் நீங்கள் நம்புவீர்களா?

நல்ல வாய்ப்பை அது வந்து போன பின் உணர்பவர்கள் தான் இங்கு அதிகம். அதைத் தவறவிட்டவர்கள்தான் அதன் அருமை அறிந்தவர்கள்.

தெரியாம போச்சே

“அப்பவே அந்த கம்ப்யூட்டர் கம்பனியில வேலை கிடைச்சது. இதெல்லாம் நிலைக்காதுன்னு இங்க வந்தேன். எனக்குப் பதிலா சேர்ந்தவரு இப்ப எங்கேயோ போயிட்டாரு. ஒரு கோடி ரூபாய் ஆண்டு வருமானம். நாம இன்னமும் இங்கே முப்பதைத் தாண்டலை!” என்று அங்கலாய்த்தார் இருபத்தைந்து வருடங்கள் அனுபவம் கொண்ட ஒரு முதிய மேலாளர்.

“யாரு கண்டாங்க ஐ.டியெல்லாம் இப்படி வளரும்னு?” என்று சொல்லி எழுந்து சென்றார்.

நெருக்கடியில் வாய்ப்பு

“எனக்கு நல்ல பாஸ். அவனுக்கு ஒரு மோசமான பாஸ். நாங்க இரண்டு பேரும் ஒரே கம்பனியில ஒண்ணா ட்ரெய்னியா சேந்தவங்க. புதுசா வந்த எம்.என்.சியில இரண்டு பேருக்கும் வேலை கிடைச்சது. எனக்குப் போகப் பெரிய மனசில்ல. சம்பள உயர்வும் அதிகமில்ல, பாஸ் தொந்தரவு தாங்காம அங்கே போன என் நண்பன் இன்னிக்கு அங்க டிபார்ட்மெண்ட் ஹெட். நான் இங்கே ஒரு புரமோஷன்தான் வாங்கியிருக்கேன். நல்ல பாஸ்னு அந்தப் புது கம்பனிக்கு போகாம விட்டது பெரிய தப்பாப் போச்சு. அது எவ்வளவு பெரிய வாய்ப்புன்னு அப்பத் தெரியாமப் போச்சு!”

உடனடி அனுகூலம் எதிர்பார்ப்பது அல்லது இன்றைய பிரச்சினையிலிருந்து உடனடியாகத் தப்பிப்பது இதுதான் நம் முடிவுகளைப் பெரிதும் பாதிக்கும் மன நிலை. இது நாளைய வாய்ப்புகளைப் பற்றி யோசிக்க வைக்காது!

இன்று பெரிதாகத் தெரிவது வருங்காலத்தில் பெரிதாகத் தெரியாது. அதேபோல இன்று சாதாரணமாகத் தெரிவது வருங்காலத்தில் பெரிதாகத் தெரியலாம். இந்தச் சிந்தனை இடைவெளியில்தான் வாய்ப்புகள் நழுவிப்போய் விடுகின்றன!

ஆனால் ஒவ்வொரு நெருக்கடியிலும் ஏதேனும் வாய்ப்பு தென்படுகிறதா என்று பாருங்கள். அது உங்கள் முடிவு எடுக்கும் திறனைக் கூர்மைப்படுத்தும்.

பிரச்சினைகளில் வாய்ப்புகளைத் தேடுபவர்கள்தான் வேலையில் பெரிய வெற்றிகளைப் பெறுகிறார்கள்.

எனது நெருக்கடி

என் ஆரம்பக் காலச் சிக்கல் ஒன்றுதான் என் வாழ்க்கையை மாற்றும் சக்தியாக மாறியது. 1990-ல் நடந்த சம்பவம் அது.

முனைவர் ஆராய்ச்சியும், மருத்துவ உளவியல் ஆலோசனையும் மட்டும்தான் உலகம் என அப்போது நான் இருந்தேன். ஒரு குடியிருப்போர் சங்கத்தின் ஆண்டு விழாவிற்குச் சிறப்பு பேச்சாளனாக வர அழைப்பு கிடைத்தது.

முதல் முறை என்பதால் செம கெத்து. புதுச் சட்டை, கூலிங்கிளாஸ் சகிதம் பஸ்ஸில் பாரிமுனை சென்று அங்கிருந்து ஆட்டோ வைத்துக்கொண்டு வண்ணாரப்பேட்டை சென்றேன். உடன் என் உயிர் நண்பர் வேறு. சந்துக்குள் நுழைய முடியாது என்ற ஆட்டோ ஓட்டுனருடன் சண்டை போட்டு உள்ளே செலுத்தி ஒருங்கிணைப்பாளார் வீட்டு வாசலில் கித்தாப்பாய் இறங்கினோம். ஆரத்தி எடுக்க ஆளில்லாவிட்டால் பரவாயில்லை. நிகழ்ச்சிக்கே யாரும் வர ஆரம்பிக்கவில்லை. ஒரு வெயில் நேரத்தில் குழந்தைகள் மட்டும் பவுடர் பூசி நடனத்திற்கு ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்படி இப்படி ஏழு மணிக்குக் கூட்டம் சேர்ந்தது. என்னைப் பேசச் சொன்னார்கள்.

நான் பெரிதாகச் சொன்ன உளவியல் விஷயங்கள் எடுபடவில்லை. சில சிரிப்புத் துணுக்குகளுக்கு ஆரவாரமாய்க் கை தட்டினார்கள். இறுதியில் பலமாகக் கை தட்டியபோது ‘போதும்’ என்று நினைத்துக் கை தட்டினார்களா என்று சந்தேகம். இருந்தும் பலர் ஆட்டோகிராப் வாங்கினார்கள். விழா முடிவில் “நீங்கள் கண்டிப்பாக இதை வச்சுக்கணும்” என்று ஒரு சின்ன கவரைத் திணித்தார் அந்த ஒருங்கிணைப்பாளர். பையில் போட்டு விட்டு ஆட்டோ ஏறினோம். முனை தாண்டியதும் பிரித்துப் பார்த்தால் ஆட்டோ காசிற்கே பற்றாத ஒரு ஒற்றை நோட்டு நோஞ்சானாகத் தென்பட, ஆட்டோவை நிறுத்தி பஸ் பிடித்தோம். வீடு வரும்வரை அவர்கள் போற்றிய பூத்துவாலையில் எங்கள் ஆனந்தக் கண்ணீரைத் துடைக்கும் அளவு விழுந்து விழுந்து சிரித்தோம்!

எனது வாய்ப்பு

அடுத்த வாரமே வேறு ஒரு காப்புரிமை முகவர்களுக்கான கூட்டத்தில் பேச அழைத்தார்கள். நண்பன் காதைக் கடித்தான். “மீண்டும் தேங்காய் மூடி கச்சேரியா?”

எவ்வளவு கட்டணம் வேண்டும் என்று அவர்களே கேட்டவுடன் ஒரு நல்ல தொகையைச் சொன்னோம். 20 முதல் 70 வயதுவரை இருந்த மக்கள் கூட்டத்தில் பேசினேன். வண்ணாரப்பேட்டை அனுபவம் நிரம்ப கை கொடுத்தது. அன்றைய பேச்சு மிகச் சிறப்பாக அமைந்ததாகச் சொன்னார் அந்த அதிகாரி, தன் சொந்த வங்கி கணக்கில் உள்ள காசோலைப் புத்தகத்திலிருந்து தாள் கிழித்தார்.

“கம்பெனிதான் கொடுக்கிறது என்று பெரிய தொகை கேட்டோம். உங்கள் அக்கவுண்ட் என்றால் கொடுப்பதைக் கொடுங்கள்!” என்றேன். அதற்கு அவர், “உங்கள் பேச்சைக் கேட்ட முகவர்களில் 5% பேர் கூடுதலாக 25% ரிசல்ட் கொடுத்தாலே போதும். இந்த மூலதனம் எனக்கு நூறு பங்காகத் திரும்பி வரும்!” என்றார்.

இரண்டுக்கும் ஒரே சொல்

ஒரு பெரும் வணிகச் சூத்திரத்தை நொடிப் பொழுதில் கற்றுக் கொண்டதோடு, ஒரு தொழில் வாய்ப்பையும் கண்டுகொண்டேன். தனியார் நிறுவனங்களுக்கு உளவியல் பயிற்சி எடுக்கத் தயாரானேன்.

என் வாழ்வின் போக்கையே மாற்றிய தருணம் அது.

முதல் அனுபவத்தை மறக்க வேண்டிய சம்பவமாக அல்லாமல் படிக்க வேண்டிய பாடமாக எடுத்துக் கொண்டேன். பின் வருடங்களில் உலகின் முன்னணி நிறுவனங்களுக்குப் பயிற்சி அளிக்க, அந்தக் கற்றல் ஆதாரமாய்த் தேவைப்பட்டது.

சீன மொழியில் “நெருக்கடி” மற்றும் “வாய்ப்பு” இரண்டிற்கும் ஒரே சொல் தான். அதை இடம் பார்த்துப் பொருள் படுத்திக் கொள்ள வேண்டும்.

உங்கள் வாழ்வில் நிகழும் சம்பவங்களை நெருக்கடியாகப் பார்ப்பதும் வாய்ப்பாகப் பார்ப்பதும் உங்கள் மனநிலையைப் பொறுத்தது.

“வேலை எப்படிச் சார்?” என்றால் உங்களிடமிருந்து வரும் முதல் பதில் உங்களின் இந்த மனநிலையைக் காட்டிக் கொடுத்துவிடும்!

துன்பங்கள் எல்லாம் தூசிகளே!

துன்பங்கள் எல்லாம் தூசிகளே!


“வேலை கிடைக்க வில்லை. சாகலாம் போல உள்ளது.” என்று ஒரு மின்னஞ்சல் வந்தது. எழுதியவர் நல்ல கல்லூரியில் நல்ல மதிப்பெண்களுடன் தேறிய பொறியாளர். தாமதிக்காமல் பதில் போட்டேன்.

பணியிட மனநலம்

வேலையில்லாத நிலை, வேலையில் பளு, வேலையில் மனஅழுத்தம் எனப் பல காரணங்களுக்காகத் தற்கொலைகள் பெருகி வருகின்றன. இது கவலை தரும் விஷயம்.

தமிழ்நாட்டில் சாலை விபத்துகள், டாஸ்மாக், மாரடைப்பு போல இதுவும் அவசியம் விழிப்புணர்வு அளிக்கப்பட வேண்டிய விஷயம். இதன் சமூக, உளவியல், மருத்துவத் தீர்வுகள் எல்லோருக்கும் தெரிய வேண்டியவை. மேலை நாடுகளில் பணியிட மனநலம் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இங்கும் அதன் தேவை வளர்ந்துவருகிறது.

துக்கம் எனும் நோய்

சுய மதிப்பு இழத்தல், உதவி இல்லாமை மற்றும் நம்பிக்கையின்மை என 3 முக்கிய உளவியல் காரணங்களைத் துக்க நோய்க்குக் காரணமான மனநிலைகள் என்கிறார்கள். ஆமாம், துக்கம் என்பதும் ஒரு நோய்தான்.

இதில் நம்பிக்கை யின்மைதான் கடைசியில் தவறான முடிவை எடுக்க வைக்கிறது.

நம்பிக்கையை வளர்க்கும் செய்திகளைத் தேர்வு செய்து உட்கொள்வது மிக அவசியம். நம்பிக்கையைக் கெடுக்கும் செய்திகளை நச்சு போலத் தவிர்ப்பது நல்லது. இதை ஒரு திறனாகச் செய்ய நம் குழந்தைகளுக்குக் கற்றுத் தர வேண்டும்.

வாலியைத் தேற்றிய கண்ணதாசன்

கவிஞர் வாலி திரைப்படத் துறைக்கு வருவதற்கு மிகவும் போராடிக்கொண்டிருந்த நேரம். ஒரு முறை சலித்துப் போய் ஊருக்குத் திரும்பலாம் என்று நினைக்கையில் அவர் கண்ணதாசனின் ஒரு திரைப்பாடலைக் கேட்கிறார்.

அது அவர் மனதை உறுதி செய்து மீண்டும் போராடித் திரைப்பட வாய்ப்பிற்கு நெருக்கமாக அழைத்துச் செல்கிறது. அந்தப் பாடல் “மயக்கமா கலக்கமா?” என்று தொடங்கும்.

அதில் என் பிரிய வரிகள்:

“உனக்கும் கீழே உள்ளவர் கோடி.

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!”

அமரத்துவம் பெற்ற இந்த வரிகள் துன்பம் வரும் தருணங்களில் ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டிய வரிகள்.

மாறும் நிஜங்கள்

வேலை கிடைக்கவில்லை. வருமானம் இல்லை. வேலை போய் விட்டது. குடும்பம் கஷ்டத்தில். வேலையில் தீராத மன உளைச்சல். ஆரோக்கியம் கெடுகிறது. எல்லாம் நிஜமான போராட்டங்களே. எதையும் மறுப்பதற்கில்லை.

ஆனால் மறந்துவிட்ட ஒரே உண்மை: இவை அனைத்தும் மாறக்கூடிய நிஜங்கள். இவற்றை மாற்றத் தேவை மனோ திடம்.

மாறாத நிஜங்கள்

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் மாற்ற முடியாத நிஜங்களுடன் எத்தனை பேர் போராடிக் கொண்டிருக்கிறார்கள்?

மன வளர்ச்சி குன்றியவர்கள், சிறு வயதில் பெற்றோர்களை இழந்தவர்கள், போர்க் குற்றங்களால் பாதிக்கப் பட்டோர், இயற்கைப் பேரிடரில் அனைத்து உடைமைகளையும் இழந்தவர்கள், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுமிகள், விபத்தில் உறுப்பிழந்தவர்கள், சாதிக் கொடுமையால் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டோர், வேற்று நாட்டுச் சிறையில் நீதி கிடைக்காமல் வருடக்கணக்கில் சிக்கி உள்ளோர், மனநலம் பாதிக்கப்பட்டுத் தெருவில் விடப்பட்டவர்கள்...இன்னமும் நிறையப் பேரைப் பட்டியலிடலாம்.

பூதக்கண்ணாடியில்..

இவர்கள் வலிகளை விட நம் வலி பெரிதா? எந்த நம்பிக்கையில் இவர்கள் வாழ்கிறார்களோ, அதே நம்பிக்கை நம்மைக் காக்காதா?

யோசித்துப் பார்த்தால் நம்மில் பலர் சமூகத்தின் 98 சதவீத மக்களை விடச் சிறப்பாக இருக்கிறோம். இந்த உண்மையைப் பெரும்பாலான நேரத்தில் நாம் நினைப்பதில்லை. நம்மிடம் இல்லாததை நினைத்து வேதனை கொள்ளும் மனம் நாம் மற்றவர்களை விடச் சிறப்பாக இருக்கிறோம் என்கிற உண்மையைப் புறந்தள்ளி விடுகிறது.

இப்படிச் சலித்து எடுத்துப் பிரச்சினைகளைப் பூதக்கண்ணாடியில் வைத்துப் பார்க்கையில் நாம் மலைத்து விடுகிறோம்.

நல்லதே நடக்கும்

போதாக்குறைக்கு, நாம் பேசும் மொழி நம் எண்ணங்களைக் கூர்மைப்படுத்துகிறது.

“இந்த வேலை மாதிரி கஷ்டமான வேலை உலகத்திலேயே கிடையாது!”

“என் அளவுக்கு அடிபட்டவன் யாரும் இருக்க மாட்டான்.”

“என் நிலைமை என் எதிரிக்குக் கூட வரக் கூடாது.”

“அது மாதிரி ஒரு சோதனையை என் வாழ்க்கையிலேயே நான் பார்த்ததில்லை”

“இந்த மாதிரி ஒரு மோசமான முதலாளி உலகத்திலேயே கிடையாது!”

இப்படிப் பேசப்படும் சொற்களை ஆழ்மனம் பதிவு செய்து கொள்கிறது. பின்னர் இவை மெல்ல நம் சுய மதிப்பைக் குறைக்கின்றன. பின் அடுத்தவர் மதிப்பையும் குறைத்துத் ‘தன்னை யாராலும் காப்பாற்ற முடியாது’ என்று நம்ப வைக்கிறது. எதிர்காலம் சூனியமாகத் தெரியும். பின் தன்னம்பிக்கை மறையும். வாழ்க்கை பற்றிய நம்பிக்கை மறையும்.

அதனால் படித்துவிட்டு வேலை தேடுவோர், வேலை தாவி வேறு வேலை தேடுவோர், வேலைச் சூழ்நிலையில் சிக்கலில் உள்ளவர்கள் என அனைவரும் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்:

நல்லது நிச்சயம் நடக்கும் என நம்புவது!!

அந்த நம்பிக்கையைத் தரக்கூடிய தெய்வங்கள், மனிதர்கள், புத்தகங்கள், பாடல்கள், வழிமுறைகள், அமைப்புகள், வார்த்தைகள், நடத்தைகள் என அனைத்தையும் தழுவிக்கொள்ளுங்கள்.

சிறு தூசி

ஒரு சோதனைக் காலத்தில் நான் தலைப்பு பார்த்து வாங்கிய புத்தகம் என் சோதனைகளை விட என் வலிமையை உணர்த்தியது. அந்தப் புத்தகத்தின் பெயர்:

“Tough times never last. Tough people do!”

ஆண்டவன் இந்தச் சோதனையை உங்களுக்கு அளித்திருக்கிறான் என்றால் அதை வென்று வெற்றி கொள்ளும் திறமை உங்களுக்கு உள்ளது என்கிற காரணத்தில் தான்!

கண்ணில் விழும் தூசி கண் பார்வையையே மறைக்கும். அதைத் துடைத்துப் போடுகையில்தான் தெரியும் அது கண் பார்வைக்குக்கூட அகப்படாத சின்னஞ்சிறிய தூசி என்று.

எதை இழந்தாலும் இழக்கக் கூடாதது நம்பிக்கை!

உழைப்பால் வரும் தன்னம்பிக்கை

உழைப்பால் வரும் தன்னம்பிக்கை

டா க்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் எழுதிய FORGE YOUR FUTURE ஆங்கில நூலின் பகுதிகள் இங்கே தரப்படுகின்றன. கலாமிடம் பலர் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள்தான் இந்த நூல். வெளியீடு: ராஜ்பால் அண்ட் சன்ஸ். தமிழில் கண்ணதாசன் பதிப்பகம் வெளியிடுகிறது. மொழியாக்கம் மு. சிவலிங்கம். இவர் கலாமின் அக்கினிச் சிறகுகள் நூலை மொழியாக்கம் செய்தவர்.

“உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள், உங்கள் திறமை மீது நம்பிக்கை வையுங்கள், உங்களது சுய ஆற்றல்களில் நியாயமான நம்பிக்கை வைக்காமல் உங்களால் வெற்றிபெறவோ, மகிழ்ச்சியை அனுபவிக்கவோ முடியாது” என நீங்கள் பேசியதைக் கேட்டேன். என் மீது எப்படி நான் நம்பிக்கை கொள்வேன்? குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்தத் திறமைகளும் என்னிடம் இல்லை. நான் குழப்பத்தில் இருக்கிறேன். நீங்கள் சொல்வது உண்மைதான் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால், நீங்கள் சொல்வது எனக்குப் பொருந்தாது என நினைக்கிறேன். தயவுசெய்து, எனக்கு வழிகாட்டுங்கள்.

நண்பரே, உங்களுடைய தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டிய நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பது தெளிவாகப் புலப்படுகிறது.

வாழ்க்கையின் எந்த ஒரு களத்திலும், தயக்கத்துடனும் தடுமாற்றத்துடனும் எடுத்ததற்கெல்லாம் மன்னிப்புக் கோரியவாறும் ஒருவர் முன்வைக்கும் திட்டத்தை யாரும் ஏற்றுக்கொள்ளத் தயங்குவார்கள். இதற்கு மாறாக, தெளிவாகப் பேசும் திறனுடன் தலை நிமிர்ந்து, கேள்விகளுக்குத் திட்டவட்டமாகப் பதில் அளித்து, தனக்குத் தெரியாத எதையும் உடனடியாக ஒப்புக்கொள்ளத் தயாராக இருப்பவர் மற்றவரின் நம்பிக்கையைப் பெற்றுவிடுகிறார்.

வழிநடத்தும் நம்பிக்கை

தன்னம்பிக்கை கொண்டுள்ளோர் மற்றவர்களிடமும் அவர்கள் தங்கள் ரசிகர்களாக இருந்தாலும், சகாக்கள் அல்லது எஜமானர்கள், வாடிக்கையாளர்கள் அல்லது தங்கள் நண்பர்களாக இருந்தாலும் அனைவரிடமும் நம்பிக்கையைத் தூண்டிவிடுகின்றனர். மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுவதை வெற்றியடைவதற்கான ஒரு முக்கிய வழிமுறையாகத் தன்னம்பிக்கை நிறைந்தவர்கள் வகுத்துக் கொண்டுள்ளனர்.

தன்னம்பிக்கையைக் கற்றுக்கொள்ள முடியும், வளர்த்துக்கொள்ள முடியும் என்பது நல்ல விஷயம். உங்களது சொந்தத் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதிலோ உங்களைச் சுற்றிலும் உள்ளவர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதிலோ நீங்கள் ஈடுபடும்போது, அந்த முனைப்பு நல்ல பலன் தரும்.

சுய ஆற்றல், சுய உழைப்பு ஆகியவைதான் தன்னம்பிக்கையை உருவாக்கிக்கொள்வதற்கான இரண்டு முக்கிய அம்சங்கள். திறன்களில் நாம் நிபுணத்துவம் பெற்று நமக்கு முக்கியமாக உள்ள இந்தத் திறன் தொடர்பான இலக்குகளை அடைவதில் நாம் வெற்றி பெறும்போது, சுய ஆற்றலை நாம் உணர்கிறோம். ஒரு குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் பெறுவதற்காக நாம் கடுமையாகப் பாடுபட்டால், நம்மால் வெற்றி பெற முடியும் என்ற அறிதலில் நம்பிக்கை பிறக்கிறது. தோல்விகள் குறுக்கிடும்போது துவண்டுவிடாமல், சிக்கலான சவால்களை எதிர்கொண்டு வெற்றி நடை போடுவதில் இப்படிப்பட்ட நம்பிக்கைதான் நம்மை வழிநடத்துகிறது.

சுயமதிப்பு என்றால்..

சுய மதிப்பு குறித்த சிந்தனையுடன் இந்த நம்பிக்கை ஒன்றிணைந்து கொள்கிறது. நமது வாழ்க்கை நிகழ்வுகளை நம்மால் சமாளிக்க முடியும், மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு நமக்கு உரிமை உள்ளது என்ற அறிதல்தான் பொதுவாகச் சுய மதிப்பு எனக் கருதப்படுகிறது. நற்பண்புகளுடன் நாம் நடந்துகொள்கிறோம், நாம் மேற்கொள்ளும் செயல்களுக்கான திறன்படைத்தவர்களாக இருக்கிறோம், நாம் முழு மனதுடன் செயல்படும்போது, நம்மால் போட்டியில் வெல்ல முடியும் என்ற அறிதலிலிருந்தும் சுய மதிப்பு தோன்றுகிறது. நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் நமக்கு அங்கீகாரம் கிடைக்கிறது என்ற உணர்வும் நமது சுய மதிப்புக்கு ஒரு காரணமாக உள்ளது.

1957-ம் ஆண்டு. சென்னை தொழில்நுட்பப் பயிலகத்தில் (Madras Institute of Technology) நான், இறுதியாண்டு பயின்ற நேரம். ஒப்படைக்கப்பட்ட வேலையைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றுவதற்கான அவசர உணர்வை எப்படி உருவாக்கிக்கொள்வது என்ற மிகவும் மதிப்புவாய்ந்த பாடத்தை நான் அப்போது கற்றுக்கொண்டேன். ஒரு திட்டத்துக்காக எனது தலைமையில் ஆறு உறுப்பினர் அணியை எனது ஆசான் பேராசிரியர் நிவாசன் அமைத்திருந்தார். தாழ்வாகப் பறந்து தாக்கும் போர் விமானத்தின் ஆரம்பக் கட்ட வடிவமைப்பை உருவாக்கும் பொறுப்பு எங்கள் அணியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. காற்று இயக்கம் மற்றும் கட்டமைப்பு வடிவத்தை உருவாக்குவது எனது பொறுப்பு.

நீண்ட பட்டியல்

எங்கள் அணியின் மற்ற ஐந்து உறுப்பினர்களும் விமானத்தின் உந்துவிசை, கட்டுப்பாடு, வழிகாட்டுதல், ஏவியானிக்ஸ், இன்ஸ்ட்ருமன்டேஷன் ஆகியவற்றுக்கான வடிவமைப்பை உருவாக்கும் பணியை ஏற்றிருந்தார்கள். ஐந்து மாதங்களுக்குப் பிறகு இந்தத் திட்டத்தை ஆய்வு செய்த பேராசிரியர் நிவாசன், திட்ட முன்னேற்றம் குறித்து அதிருப்தி அடைந்தார். மிகுந்த ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினார். பல்வேறு வடிவமைப்பாளர்களிடமிருந்து தேவையான தகவல்களை ஒன்றுதிரட்டுவதில் எதிர்கொண்ட சிக்கல்களை நான் நீண்ட பட்டியலிட்டதை எல்லாம் அவர் காதுகொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை. எனது ஐந்து சகாக்களிடமிருந்தும் உள்ளீடுகளை நான் பெற வேண்டியிருந்தது. அவை இல்லாமல், வடிவமைப்புப் பணியைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில், நான் மேலும் ஒரு மாத அவகாசம் கேட்டேன். பேராசிரியர் நிவாசனோ “இங்கே பார் இளைஞனே, இது வெள்ளிக் கிழமை பிற்பகல் நேரம். கான்ஃபிகரேஷன் வரைபடத்தை (விமானத்தின் அனைத்து அம்சங்களையும் விவரித்துக்காட்டும் வரைபடம்) என்னிடம் காட்டுவதற்கு மூன்று நாள் அவகாசம் கொடுக்கிறேன். அது எனக்குத் திருப்தியாக இருந்தால், கூடுதலாக ஒரு மாதம் அவகாசம் அளிப்பேன். திருப்தியாக இல்லாவிட்டால், உன்னுடைய உதவித்தொகை ரத்து செய்யப்படும்” என்று சொல்லிவிட்டார்.

மன அழுத்தம்

என் வாழ்க்கையின் பேரதிர்ச்சி என்னை இடியாகத் தாக்கியது. எனது உயிரோட்டமே அந்த உதவித் தொகைதான். அது நிறுத்தப்பட்டுவிட்டால், விடுதியில் என் உணவுக்கான பணத்தைக்கூட என்னால் கொடுக்க முடியாமல் போய்விடும். மூன்று நாள் கெடுவுக்குள் அந்த வேலையை முடிப்பதைத் தவிர வேறு எந்த வழியுமே இல்லை. நானும் எனது அணி உறுப்பினர்களும் எங்களால் முடிந்த அளவுக்குத் தீவிர முனைப்புடன் செயல்படுவது என முடிவு செய்தோம். 24 மணி நேரமும் பாடுபட்டோம். இரவு முழுவதும் வரைபலகையிலிருந்து எங்கள் தலைகளை நிமிர்த்தவே இல்லை. உணவையும் உறக்கத்தையும் துறந்தோம். சனிக்கிழமை அன்று ஒரு மணி நேரம் மட்டுமே நான் ஓய்வெடுத்துக்கொண்டேன்.

ஞாயிறு காலை எனது வேலையில் நான் மூழ்கியிருந்தபோது, ஆய்வுக் கூடத்தில் வேறு யாரோ இருப்பதை உணர்ந்தேன். அவர் வேறு யாரும் இல்லை, பேராசிரியர் நிவாசன் தான். அமைதியாக அவர் என்னுடைய முன்னேற்றத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். எனது வேலையைப் பார்த்த பிறகு, பாசத்துடன் என்னைக் கட்டித் தழுவிக்கொண்டு முதுகில் தட்டிக்கொடுத்துப் பாராட்டினார். “ஒரு நெருக்கடியான கெடுவுக்குள் வேலையை முடிக்க வேண்டும் என்று சொல்லி உங்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கினேன் என்பது எனக்குத் தெரியும், ஆனால், இந்தத் திட்டத்தை உங்களை முடிக்க வைப்பதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை” என்று குறிப்பிட்டார்.

மேலும் ஒரு மாதம் இருட்டில் நாங்கள் துழாவிக் கொண்டிருப்பதற்கு இடம் தராமல், அடுத்த மூன்று நாட்களுக்குள் முடிக்க வேண்டும் எனப் பேராசிரியர் நிவாசன் தெள்ளத் தெளிவாகக் கெடு விதித்தார். இந்தக் காலக்கெடு என்ற நிர்ப்பந்தம்தான், கடந்த சில மாதங்களாக எங்களுக்குப் போக்குக் காட்டி வெற்றியை நோக்கி எங்களை விரைவாகப் பயணிக்க வைத்தது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றிய தொடர்கட்டங்களில், நான் பொறுப்பேற்றிருந்த பணியில் அடிப்படைத் தகுதியை மேம்படுத்திக்கொண்டேன். அணி உறுப்பினர்களின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கான மென் திறன்களையும் வளர்த்துக்கொண்டேன்.

நான்கு படிநிலைகள்

இந்த அனுபவம் தரும் செய்தி என்ன? பின்வரும் நான்கு படிநிலைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்களுடைய தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அந்தச் செய்தி. முதலாவது, உங்களுடைய இலக்கை வரையறுத்துக்கொள்ளுங்கள். இரண்டாவது, அந்த இலக்கை எட்டுவதற்குக் களம் இறங்குங்கள். மூன்றாவது, இலக்கை நோக்கி விரைந்து முன்னேறுங்கள். நான்காவது, உழைப்பு; உழைப்பு; உழைப்பு.

உங்களுடைய தன்னம்பிக்கையை மேம்படுத்திக்கொள்வதற்கு நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான செயலாக அமையக்கூடியது, இலக்கை நிர்ணயித்துக்கொள்வதுதான். உங்களை மிகவும் ஈர்க்கும் ஒரு துறையில் உங்களுக்கான இலக்கை முடிவு செய்துகொண்டு, அந்த இலக்கை அடைவதற்காகக் கடுமையாகப் பாடுபடுங்கள். இது, ஆயுட்காலம் முழுவதும் நீங்கள் வெற்றிகளைக் குவிப்பதற்கு உந்துசக்தியாக அமையும். மற்றவர்களுடன் இணைந்து வெற்றிகரமாகச் செயல்படுவதற்கான நம்பிக்கையையும்கூட நீங்கள் பெறுவீர்கள்.

Friday, October 17, 2014

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...!

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...!

1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.

2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.

4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.

5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.

6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.

7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை,நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

# மாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடினால், தாழ்வு மனப்பான்மையை எளிதில் போக்கி விடலாம்.

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் ...

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம். அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.

01. போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு.
02. நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.
03. உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.
04. பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல
05. பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல
06. சொல்றவங்க நூறு சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?
07. அவன் அப்படித்தான் இருப்பான். அப்படித்தான் பேசுவான். அதையெல்லாம் கண்டுக்கலாமா? ஒதுங்கு. அப்பதான் உனக்கு நிம்மதி.
08. இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.
09. கஷ்டம் தான் … ஆன முடியும்.
10. நஷ்டம் தான் … ஆன மீண்டு வந்திடலாம்.
11. இதில விட்டா அதில எடுத்திட மாட்டனா?
12. விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?
13. விழுந்தது விழுந்தாச்சு. எழுந்திருக்கிற வழியைப் பாரு.
14. ஒக்காந்து கிட்டே இருந்தா என்ன அர்த்தம்? எழுந்திரு. ஆக வேண்டியதப் பார்.
15. இவன் இல்லேன்னா வேற ஆளே இல்லியா?
16. இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?
17. இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.
18. இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே.
19. முடியுமா…ன்னு நினைக்காதே. முடியணும்…னு நினை.
20. கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இத விட நல்லதாகவே கிடைக்கும்.
21. அவன் கதை நமக்கெதுக்கு. நம்ம கதையைப் பாரு.
22. விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதுக்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.
23. திருப்பித் திருப்பி அதயே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.
24. சும்மா யோசிச்சுக் கிட்டே இருக்காதே.குழப்பம் தான் மிஞ்சும். சட்டுனு வேலையை ஆரம்பி.
25. ஆகா, இவனும் அயோக்யன் தானா?சரி,சரி.இனிமே யார் கிட்டயும் நாலு மடங்கு ஜாக்ரதையாத்தான் இருக்கணும்.
26. உலகத்துல யாரு அடிபடாதவன்? யாரு ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும், அவனவன் தலை தூக்காமலா இருக்கான்?
27. ஊர்ல ஆயிரம் பிரச்சனை. என் பிரச்சனைய நான் தீர்த்தா போதாதா?
28. கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.
29. எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?
30. அவனை ஜெயிச்சாதான் வெற்றியா? நான் தான் தினம் வளர்றேன, அதுவே வெற்றி இல்லையா?
31. அடடே, இதுவரை நல்லா தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிருந்தாலே போதும்.
32. நாலு காசு பாக்குற நேரம். கண்டதப் பேசிக் காலத்த கழிக்கலாமா?

ஆம், நண்பர்களே, வீழ்வது கேவலமல்ல, வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம். ஒன்பது முறை விழுந்தவனுக்குஇன்னொரு பெயர் உண்டு-. எட்டு முறை எழுந்தவன். எழுந்திருங்கள். உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள். எவ்வளவு உயரம் தொட முடியும் என்பதைக் காட்டுங்கள்.

அறுபடை வீடுகள்

அறுபடை வீடுகள்

01.திருப்பரங்குன்றம்

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அசுரனை வென்ற அவர் இந்த தலத்தில் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். முருகன் அமர்ந்த கோலத்தில் இருப்பது சிறப்பு. இத்தலத்தில் மலை வடிவில் சிவபெருமான் அருள்புரிகிறார். சிவனின் பெயரால் இத்தலம் "திருப்பரங்குன்றம்' எனப்படுகிறது. முருகனின் அருகில் நாரதர் தாடியுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

02. திருச்செந்தூர்

முருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். இது கடலோரத்தில் அலைகள் வீச அமைந்துள்ளதால் அலைவாய் என்ற பெயரும் உண்டு. இந்ததலம் கைலாயத்திற்கு சமமானது. முருகப்பெருமான் சூரர்களை வெல்வதற்கு முன்னும் பின்னும் தங்கிய இடம். இவரது திருவடிகளை படகிற்கு சமமாக சொல்கிறார்கள். அதனால் தான் கடலின் முன்புள்ள இத்தலத்திலுள்ள முருகனின் திருவடிகளை வணங்கி பிறவிப் பெருங்கடலை கடப்பதாக நம்பிக்கையுள்ளது.

03. பழநி

சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி பழநி. மருந்தே மலையாக அமைந்த தலம். பழநியில் கால்வைத்தாலே பாதி நோய் தீரும். மலை ஏறிவிட்டால் முழு நோயும் நீங்கும். 12 ஆண்டுகளுக்கு தொடர்ந்து காலை 4 மணிக்கு எழுந்து நீராடி, கிரிவலம் வந்து, மலை மீது ஏறி, முருகன் திருவடி நாடி, தியானத்தில் அமர்ந்தால் அனைத்தும் ஒன்றே என்ற அற்புத தத்துவ விளக்கம் பெறுவதுடன், வாழ்க்கை என்றால் இன்னதென்று உணரும் ஞானஒளியையும் பெறலாம். அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் சாப்பிட்டால் நோய் தீரும். ஒரு கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பவை அங்குள்ள மூர்த்தி (சிலை), தீர்த்தம், தலம் (அமைவிடம்) ஆகியவை. பழநி கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பது சிலை. போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. 

04. சுவாமிமலை சிவகுருநாதன்

சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்து சுவாமி மலையில் சுவாமிநாதனாக முருகப்பெருமான் வீற்றிருக்கின்றார். "தன்னைவிட தன் பிள்ளைகள் அறிவுடையவர்களாக இருப்பது இப்பரந்த உலகத்தில் வாழும் உயிர்களுக்கெல்லாம் நன்மையைத் தரும்' என்கிறார் வள்ளுவர். அந்த வழியில் தன் பிள்ளையின் வாயால் மந்திரத்தின் பொருளை கேட்டு மகிழ்ந்தார் சிவன். அதுவும் தன் பிள்ளை குருவாக வீற்றிருக்க, தானே சீடனைப் போல் அமர்ந்து கேட்டார். அதனால் ""சிவகுருநாதன்'' என்ற பெயரை முருகப்பெருமான் பெற்றார்.

05. திருத்தணி முருகன்

அழகே உருவாக பொலிவுடன் காட்சி தரும் முருகன், திருத்தணியில் மார்பில் காயம்பட்ட தடத்துடன் இருக்கிறார். இதனை சூரனுடன் போரிட்ட போது ஏற்பட்ட காயம் என்கிறார்கள். திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் இங்கு வந்து கோபம் தணிந்து சாந்தமாக அமர்ந்தார். கோபம் தணித்த இடம் என்பதால் "தணிகை' என இவ்வூர் பெயர் பெற்றது. அபிஷேக சந்தனம் இத்தலத்தில் பிரசாதமாக தரப்படுகிறது. இ தனை பக்தர்கள் நீரில் கரைத்து குடிக்கின்றனர். இதனால், நோய் நீங்கும் என்பது நம்பிக்கை. 

06. சோலைமலை

அறுபடைவீடுகளில் ஆறாவது வீடாக விளங்குவது சோலைமலை. மதுரையிலிருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ளது. அவ்வைக்கிழவியிடம்,"" சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?,'' என்று சாதுர்யத்துடன் உரையாடிய முருகன், இங்கு கோயில் கொண்டிருக்கிறார். உலக உயிர்கள் அனைத்தும் பழங்கள். அவற்றின் மீது பாசபந்தம் என்னும் மண் ஒட்டியிருக்கிறது. அதனைப்போக்க கல்வியறிவு மட்டும் போதாது. இறையருள் என்னும் மெய்யறிவும் வேண்டும் என்பதை உணர்த்த சுட்டிப்பையனாக வந்து திருவிளையாடல் புரிந்தவர் இவர். தன்னை வழிபட்டவர்க்கு கல்வியறிவும், ஞானமும் தருபவராக அருள்கிறார். ""அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே'' என்று அருணகிரிநாதர் இவரைப் போற்றியுள்ளார்.

விரதங்களும் அவற்றின் பலனும்!

விரதங்களும் அவற்றின் பலனும்!

நமது உடலுறுப்புக்கள் பலவித செயல்களைச் செய்கின்றன. அவற்றில் நல்லதும், கெட்டதும் அடக்கம். இந்த செய்கைகள் மனதின் தூண்டுதலால் வெளிப்படுகிறது. நல்லவற்றை மட்டும் செய்து, தீய செயல்களை ஒடுக்க வேண்டுமானால், பட்டினி கிடக்க வேண்டும் அல்லது உணவைக் குறைக்க வேண்டும். இதற்காகவே விரதங்கள் ஏற்படுத்தப்பட்டன.

சோமவார விரதம்

நாள் : கார்த்திகை மாத திங்கள்கிழமைகள்
தெய்வம் : சிவபெருமான்
விரதமுறை : இரவு மட்டும் சாப்பிட வேண்டும். முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம்.
பலன் : திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கை துணை, திருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை
சிறப்பு தகவல் : கணவன், மனைவி இருவரும் இணைந்து சிவாலயம் சென்று வருவது மிகவும் நல்லது.

பிரதோஷம்

நாள் : தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதிகள்.
தெய்வம் : சிவபெருமான், நந்திதேவர்
விரதமுறை : சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் வரும் சனிப் பிரதோஷம் முதலாக தொடங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும். பகலில் சாப்பிடக்கூடாது. மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று வணங்கி, பிரதோஷ காலம் கழிந்தபிறகு சிவனடியார்களுடன் இணைந்து சாப்பிட வேண்டும்.
பலன் : கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், அவமானம் ஏற்படுதல், மரண வேதனை ஆகியவற்றிலிருந்து விடுதலை, பாவங்கள் நீங்குதல்.
சிறப்பு தகவல் : பிரதோஷ நேரத்தில் சாப்பிடுதல், தூங்குதல், குளித்தல், எண்ணெய் தேய்த்தல், விஷ்ணு தரிசனம் செய்தல், பயணம் புறப்படுதல், மந்திர ஜபம் செய்தல், படித்தல் ஆகியவை கூடாது.

சித்ரா பவுர்ணமி விரதம்

நாள் : சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம்
தெய்வம் : சித்திரகுப்தர்
விரதமுறை : இந்நாளில் இரவில் மட்டும் சாப்பிட வேண்டும். காலையில் பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
பலன் : மறைந்த முன்னோர் பாவம் நீங்கி பிறப்பற்ற நிலையை எய்துவர்.

தை அமாவாசை விரதம்

நாள் : தை அமாவாசை
தெய்வம் : சிவபெருமான்
விரதமுறை : காலையில் சாப்பிடாமல் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
பலன் : முன்னோர்களுக்கு முக்தி, குடும்ப அபிவிருத்தி
சிறப்பு தகவல் : பிற அமாவாசைகளில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், இன்று அவசியம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

கந்தசஷ்டி விரதம்

நாள் : ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட்கள்
தெய்வம் : சுப்பிரமணியர்
விரதமுறை : முதல் 5 நாட்கள் ஒருபொழுது சாப்பாடு. கடைசிநாள் முழுமையாக பட்டினி, சூரசம்ஹாரம் முடிந்தபிறகு வாழைப்பழம், சிறிதளவு மிளகு சாப்பிட்ட பின், மாம்பழச்சாறு, பால், பானகம் இவற்றில் ஏதாவது ஒன்று அருந்துதல்.
பலன் : குழந்தைப்பேறு

மங்களவார விரதம்

நாள் : தை மாதம் முதல் செவ்வாய் துவங்கி ஆயுள்முழுவதும் செவ்வாய் கிழமைகளில் அனுஷ்டித்தல்
தெய்வம் : பைரவர், வீரபத்திரர்
விரதமுறை : பகலில் ஒரு பொழுது சாப்பிடலாம்
பலன் : பயணத்தின்போது பாதுகாப்பு, பயம் நீங்குதல்

உமா மகேஸ்வர விரதம்

நாள் : கார்த்திகை மாத பவுர்ணமி
தெய்வம் : பார்வதி, பரமசிவன்
விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.
பலன் : குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

விநாயக சுக்ரவார விரதம்

நாள் : வைகாசி மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டித்தல்
தெய்வம் : விநாயகர்
விரதமுறை : பகலில் பட்டினி இருந்து இரவில் பழம், இட்லி உள்ளிட்ட உணவு சாப்பிடலாம்.
பலன் : கல்வி அபிவிருத்தி

கல்யாணசுந்தர விரதம்

நாள் : பங்குனி உத்திரம்
தெய்வம் : கல்யாண சுந்தர மூர்த்தி (சிவனின் திருமண வடிவம்)
விரதமுறை : இரவில் சாப்பிடலாம்
பலன் : நல்ல வாழ்க்கைத்துணை அமைதல்

சூல விரதம்

நாள் : தை அமாவாசை
தெய்வம் : சூலாயுதத்துடன் கூடிய சிவபெருமான்
விரதமுறை : இரவில் மட்டும் சாப்பிடக்கூடாது, காலையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்
பலன் : விளையாட்டில் திறமை அதிகரிக்கும்

இடப விரதம்

நாள் : வைகாசி மாதம் வளர்பிறை அஷ்டமி திதி
தெய்வம் : ரிஷபவாகனத்தில் அமர்ந்த சிவன்
விரதமுறை : பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிடலாம். நந்திதேவரை வழிபட வேண்டும்.
பலன் : குடும்பத்திற்கு பாதுகாப்பு

சுக்ரவார விரதம்

நாள் : சித்திரை மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும்
தெய்வம் : பார்வதி தேவி
விரதமுறை : பகலில் ஒருபொழுது மட்டும் சாப்பிடலாம்
பலன் : மாங்கல்ய பாக்கியம்

தைப்பூச விரதம்

நாள் : தை மாத பூச நட்சத்திரம்
தெய்வம் : சிவபெருமான்
விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.
பலன் : திருமண யோகம்

சிவராத்திரி விரதம்

நாள் : மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி
தெய்வம் : சிவன்
விரதமுறை : மூன்று வேளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. தண்ணீர் அல்லது பால் குடிப்பது மத்திமம். முடியாதவர்கள் பழம் சாப்பிடலாம். உடல் நிலை சரியில்லாதவர்கள் மட்டும் இட்லி முதலான சாத்வீக உணவு வகைகளை சாப்பிடலாம். இரவில் சிவாலயத்தில் தங்கி நான்கு ஜாம பூஜையிலும் பங்கேற்க வேண்டும்.
பலன் : நிம்மதியான இறுதிக்காலம்

திருவாதிரை விரதம்

நாள் : மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம்
தெய்வம் : நடராஜர்
விரதமுறை : பிரசாதக்களி மட்டும் சாப்பிடலாம்.
பலன் : நடனக்கலையில் சிறக்கலாம்
சிறப்பு தகவல் : காலை 4.30க்கு நடராஜர் திருநடன தீபாராதனையை தரிசித்தல்.

கேதார விரதம்

நாள் : புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அல்லது தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் அல்லது தேய்பிறை அஷ்டமி முதல் சதுர்த்தசி வரையான 7 நாட்கள். இதுவும் முடியாதவர்கள் தேய்பிறை சதுர்த்தசி நாள் மட்டும்.
தெய்வம் : கேதாரநாதர்
விரதமுறை : ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். முதல் 20 நாள் ஒருபொழுது உணவு, கடைசிநாள் முழுவதும் உபவாசம் உடல்நிலை சரியில்லாதவர்கள் உப்பில்லாத உணவு சாப்பிடலாம்.
பலன் : தம்பதிகள் நீண்டநாள் வாழ்வர்

விநாயகர் சஷ்டி விரதம்

நாள் : கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்கள் 
தெய்வம் : விநாயகர்
விரதமுறை : ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். முதல் 20 நாளும் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு கடைசிநாள் முழுமையாக பட்டினி இருக்க வேண்டும்.
பலன் : சிறந்த வாழ்க்கைதுணை, புத்திசாலியான புத்திரர்கள் பிறத்தல்.

முருகன் சுக்ரவார விரதம்

நாள் : ஐப்பசி மாதம் முதல் வெள்ளி துவங்கி மூன்று ஆண்டுகள் வரை அனுஷ்டிக்க வேண்டும்.
தெய்வம் : சுப்ரமணியர்
விரதமுறை : பகலில் ஒருபொழுது உணவு, இரவில் பழம் மட்டும் சாப்பிட வேண்டும்.
பலன் : துன்பம் செய்தவருக்கும் நன்மை செய்யும் மனம் கிடைக்கும்.

கிருத்திகை விரதம்

நாள் : கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதம் கார்த்திகை நட்சத்திரத்திலும் அனுஷ்டிப்பது. தொடர்ந்து 12 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும்.
தெய்வம் : சுப்பிரமணியர்
விரதமுறை : பகலில் பட்டினி கிடந்து இரவில் பழம், இட்லி சாப்பிடலாம்
பலன் : 16 செல்வமும் கிடைத்தல்

நவராத்திரி விரதம்

நாள் : புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி திதி வரை
தெய்வம் : பார்வதிதேவி
விரதமுறை : முதல் 8 நாள் பழம், இட்லி உள்ளிட்ட சாத்வீக உணவு சாப்பிடலாம். 9ம் நாளான மகாநவமி அன்று (சரஸ்வதி பூஜை

ராமாயணத்தில் ... இவர்கள் யார்?

ராமாயணத்தில் ... இவர்கள் யார்?

1. அகல்யை - ராமரின் அருளால் சாபம் நீங்கப்பெற்றவள்.
2. அகத்தியர் - ராமனுக்கு போர்க்களத்தில் ஆதித்ய ஹ்ருதயம் உபதேசித்த மாமுனிவர்.
3. அகம்பனன் - ராவணனிடம் ராமனைப்பற்றி கோள் சொன்னவன். ராமனின் அம்புக்கு தப்பிப்பிழைத்த அதிசய ராட்சஷன்
4. அங்கதன் - வாலி, தாரையின் மகன். கிஷ்கிந்தையின் இளவரசன்.
5. அத்திரி - அனுசூயா என்ற பத்தினியின் கணவர். ராமதரிசனம் பெற்றவர்.
6. இந்திரஜித் - ராவணனின் மகன். லட்சுமணனால் அழிந்தவன். மேகநாதன் என்ற பெயரையும் உடையவன்.
7. கரன், தூஷணன் - ராவணனின் தம்பிகள், ராமனின் கையால் அழிந்தவர்கள். ஜனஸ்தானம் என்ற இடத்திற்கு அதிபதிகள்.
8. கபந்தன் - தலையும் காலும் இல்லாத அரக்கன். ராமனால் வதைக்கப்பட்டவன். கந்தர்வ வடிவம் பெற்று ராம லட்சமணர்கள் கிஷ்கிந்தை செல்ல வழி காட்டியவன்
9. குகன் - வேடர் தலைவன், படகோட்டி
10. கும்பகர்ணன் - ராவணனின் தம்பி, எப்போதும் பெரும் தூக்கம் தூங்குபவன்.
11. கும்பன் - கும்பகர்ணனின் மகன்
12. குசத்வஜன் - ஜனகரின் தம்பி, மாண்டவி, சுருதகீர்த்தி ஆகியோரின் தந்தை. பரத சத்ருக்கனின் மாமனார்.
13. கவுசல்யா, கைகேயி, சுமித்திரை - தசரதரின் பட்டத்தரசியர்
14. சுநைனா - ஜனகரின் மனைவி, சீதையின் தாய்
15. கவுதமர் - அகல்யையின் கணவர், முனிவர்
16. சதானந்தர் - அகல்யை, கவுதமரின் மகன். சீதையின் திருமணத்திற்கு வந்த புரோகிதர்.
17. சம்பராசுரன் - இவனுக்கும், தேவர்களுக்கும் நடந்த போரில் தசரதர் தேவர்களுக்கு உதவினார்.
18. சபரி - மதங்க முனிவரின் மாணவ, ராமனை தரிசித்தவள்
19. சதபலி - வடக்கு திசையில் சீதையை தேடச்சென்றவன்.
20. சம்பாதி - கழுகரசன் ஜடாயுவின் அண்ணன், சீதையைக்காண அங்கதனின் படைக்கு உதவியவன்.
21. சீதா - ராமனின் மனைவி, ஜானகி, வைதேகி, ஜனகநந்தினி, ஜனககுமாரி, மைதிலி ஆகிய பெயர்களும் இவளுக்கு உண்டு.
22. சுமந்திரர் - தசரதரின் மந்திரி, தேரோட்டி
23. சுக்ரீவன் - கிஷ்கிந்தையின் மன்னன், வாலியின் தம்பி, சூரியபகவானின் அருளால் பிறந்தவன்.
24. சுஷேணன் - வாலியின் மாமனார், வானர மருத்துவன், மேற்கு திசையில் சீதையை தேடச்சென்றவன்.
25. சூர்ப்பணகை - ராவணனின் தங்கை, கணவனை இழந்தவள்.
26. தசரதர் - ராமனின் தந்தை
27. ததிமுகன் - சுக்ரீவனின் சித்தப்பா, மதுவனம் என்று பகுதியின் பாதுகாவலர்
28. தாடகை - காட்டில் வசித்த அரக்கி, ராமனால் கொல்லப்பட்டவள்.
29. தாரை - வாலியின் மனைவி, அங்கதனின் தாய். அறிவில் சிறந்த வானர ராணி.
30. தான்யமாலினி - ராவணனின் இளைய மனைவி
31. திரிசடை - அரக்கிகளுள் நல்லவள், சீதைக்கு நம்பிக்கை ஊட்டியவள்.
32. திரிசிரஸ் - ராவணனின் தம்பியான கரனின் சேனாதிபதி.
33. நளன் - பொறியியல் அறிந்த வானர வீரன், விஸ்வகர்மாவின் மகன், கடலின் மீது இலங்கைக்கு பாலம் கட்டியவன்
34. நாரதர் - பிரம்மாவின் மனத்தில் பிறந்தவர், கலக முனிவர்.
35. நிகும்பன் - கும்பகர்ணனின் மகன்
36. நீலன் - வானர வீரன் நளனின் நண்பன், வானர சேனாதிபதி, அக்னி தேவனின் அருளால் பிறந்தவன்
37. பரசுராமர் - விஷ்ணுவின் அவதாரம், ஜமத்கனியின் மகன், ராமனுடன் போரிட்டவர்
38. பரத்வாஜர் - பிராயாகை அருகே ஆசிரமம் அமைத்திருந்த முனிவர்
39. பரதன் - கைகேயியின் மகன், ராமனின் தம்பி.
40. மந்தரை - கைகேயியுடன் கேகய நாட்டிலிருந்து அயோத்திக்கு வந்த வேலைக்காரி, கூனி என்றும் சொல்வர்.
41. மதங்கர் - தவ முனிவர்
42. மண்டோதரி - தேவலோக சிற்பியான மயனின் மகள், ராவணனின் பட்டத்தரசி, இந்திரஜித்தின் தாய்.
43. மாரீசன், சுபாகு - தாடகையின் மகன்கள். ராமனால் வதம் செய்யப்பட்டவர்கள், மாரீசன் மாய மானாக வந்தவன்.
44. மால்யவான் - ராவணனின் தாய்வழிப்பாட்டன்.
45. மாதலி - இந்திரனின் தேரோட்டி
46. யுதாஜித் - கைகேயியின் தம்பி, பரதனின் தாய்மாமன்
47. ராவணன் - மிச்ரவா என்பரின் மகன், குபேரனின் தம்பி, புலஸ்திய முனிவரின் பேரன்.
48. ராமன் - ராமாயண கதாநாயகன்
49. ரிஷ்யசிருங்கர் - புத்திரகாமேஷ்டி செய்த முனிவர்.
50. ருமை - சுக்ரீவனின் மனைவி, வாலியால் கவரப்பட்டவள். 
51. லங்காதேவி - இலங்கையின் காவல் தெய்வம்
52. வசிஷ்டர் - தசரதனின் குலகுரு, அருந்ததியின் கணவர்.
53. மார்க்கண்டேயர், மவுத்கல்யர், வாமதேவர், காஷ்யபர், கார்த்தியாயனர், கவுதமர், ஜாபாலி - தசரதரின் மற்ற குருமார்கள்
54. வருணன் (சமுத்திரராஜன்) - கடலரசன், தன்மீது அணை கட்ட ராமனை அனுமதித்தவன்
55. வால்மீகி - ராமாயணத்தை எழுதியவர். ரத்னாகரன் என்பது இயற்பெயர், கொள்ளைக்காரனாக இருந்தவர், ராமனின் மகன் குசனுக்க ராமாயணம் போதித்தவர், சீதைக்கு அடைக்கலம் அளித்தவர்.
56. வாலி - இந்திரனின் அருளால் பிறந்த வானர வேந்தன்.
57. விஸ்வாமித்ரர் - ராமனுக்கு அஸ்திரவித்தை போதித்தவர், சீதா - ராமன் திருமணத்திற்கு காரணமானவர்.
58. விராதன் - தண்டகவனத்தில் வசித்த அரக்கன், ராமனால் சாபம் தீர்ந்தவன்.
59. விபீஷணன் - ராவணனின் தம்பி, ராமனிடம் அடைக்கலம் அடைந்தவன்.
60. வினதன் - கிழக்குத்திசையில் சீதையை தேடச் சென்றவன்.
61. ஜடாயு - கழுகரசன் சம்பாதியின் தம்பி, தசரதனின் தோழன், சீதைக்காக ராவணனுடன் போராடி உயிர்நீத்தவன்.
62. ஜனகர் - சீதை, ஊர்மிளாவின் தந்தை.
63. ஊர்மிளா - லட்சுமணனின் மனைவி.
64. ஜாம்பவான் - கரடி வேந்தர், பிரம்மாவின் அருள்பெற்று பிறந்தவர்
65. அனுமான் - அஞ்சனை, கேசரி ஆகியோருக்கு வாயுபகவானின் அருளால் பிறந்தவன், ஆஞ்சநேயன், மாருதி ஆகியவை வேறு பெயர்கள்.
66. ஸ்வயம்பிரபை - குகையில் வாழ்ந்த தபஸ்வினி, குரங்குப் படையினருக்கு உணவிட்டவள்.
67. மாண்டவி - பரதனின் மனைவி.
68. சுருதகீர்த்தி - சத்ருக்கனனின் மனைவி.

பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள்

பிறந்த தமிழ் மாதத்திற்கான உங்களது பொதுவான குணங்கள்

சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டின் துவக்க மாதம். இந்த மாதத்தை எந்த அளவு மகிழ்வுடன் வரவேற்கிறோமோ அதே போல இந்த மாதத்தில் பிறந்தவர்களையும், அனைவரும் விரும்புவது உண்டு. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். ஏதாவது ஒரு லட்சியத்தை மனதில் கொண்டு அதை நறைவேற்ற வேண்டும் என்பதில் முழு மூச்சுடன் ஈடுபடுவார்கள். எந்த துறையில் இருந்தாலும் அந்த துறையில் பிரகாசிக்கும் வாய்ப்பு உண்டு. குறிப்பாக அறிவியல் மற்றும் காவல் துறைகள் இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏற்றவை. உங்கள் முயற்சியில் மின்னல் வேகம் இருக்கும். எதற்கும் கலங்காத மனம் உண்டு. இந்த வேகத்தை செயல்படுத்தும்போது மற்றவர்களை பகைத்துக்கொள்ள வேண்டி வரும். நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால் சக தொழிலாளர்களை விரட்டி வேலை வாங்க வேண்டியிருக்கும். அப்போது அவர்கள் உங்களை அக்னி போல நனைத்து ஒதுங்கிப்போவார்கள். உங்களை திட்டுவார்கள். இதையெல்லாம் தாங்கிக்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு இருக்க வேண்டும். வேலை செய்யாமல் ஏதாவது ஒரு மூலையில் முடங்கி இருப்போம் என்ற எண்ணமே உங்களுக்கு பிடிக்காது. சூரியனின் பலத்தால் உங்களிடம் ஆற்றல் அதிகம். செவ்வாய் உங்கள் சக்தியை வெளிப்படுத்தும். சுக்கிரன் உங்களை எதிர்ப்பவர்களை விரட்டியடிக்கும் தன்மையைக் கொடுப்பார். இன்னும் கொஞ்சநிõள் கழித்து ஒரு காரியத்தை செய்வோமே என்று ஒதுக்கிவைக்கும் பழக்கம் உங்களிடம் இல்லை. பெரிய துணிவைப் பெற்றுள்ள நீங்கள், உங்கள் மனதிற்குள் கோழை என்றே உகளை எண்ணிக்கொள்வீர்கள். இதற்கு காரணம் அவசரமாக முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பரபரப்புடனும், ஆத்திர உணர்வுடனும், உணர்ச்சி கிளர்ந்தெழுவதாலும் ஏற்படும் நிரம்புத்தளர்ச்சியால் யாரைப் பார்த்தாலும் கத்தத் தொடங்கிவிடுவீர்கள். இந்த கோபத்தை அடக்க நீங்கள் பழகிக்கொண்டால் உங்கள் வாழ்க்கை சித்திரை சூரியன் போல பிரகாசமாக அமையும். பொதுவாகவே சித்திரை மாதத்தில் பிறந்தவர்களுக்கு கோபம் மிக அதிகமாக இருக்கும். சூரியனின் வெப்ப சூழலில் பிறந்ததால் ஏற்படும் ஆத்திரமே இது. இதற்கு உடல் நிலத்தையும் பேணிக்கொள்வதன் முலம் ஆத்திரத்தை அடக்கலாம். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை வழக்கமாக வைத்திருக்க வேண்டும். வாரம் ஒரு முறைய õவது குளிர்ந்த நீரில் எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும். திருத்தலங்களுக்கு சென்று அங்கு ஓடும் ஆறுகளில் மூழ்கி நீராடவேண்டும். சித்திரை மாதத்தில் பிறந்த பெண்கள் நிடை, உடை, பாவனைகளில்கூட கவர்ச்சி அதிகமாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். இந்த கவர்ச்சியின் காரணமாக மற்ற மாதங்களில் பிறந்தவர்கள் உங்களிடம் பொறாமை கொள்வார்கள். ஆனால் உங்கள் உள்மனதை புரிந்துகொண்டால் அவர்கள் உங்களிடம் ஆயுள் முழுவதும் நிட்புடனும் உறவுடனும் இருப்பார்கள். மொத்தத்தில் உங்கள் முன்கோபத்தை மட்டும் தவிர்த்துவிட்டால் உங்களை வெல்ல யாராலும் முடியாது. உங்கள் இளம் வயதில் நீங்கள் கோபக்காரராக இருப்பதால் யாருக்கும் பாதிப்பு இல்லை. ஆனால் திருமணமான பிறகு இந்த கோபத்தை அடியோடு ஒழிக்க வேண்டும். 

வைகாசியில் பிறந்தவர்கள் எதையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். காலம்தான் இவர்களுக்கு மறதியைக் கொடுக்க வேண்டும். இவர்கள் வாழ்க்கையில் பல அனுபவங்களை பெறுவார்கள். இதை மற்றவர்களிடம் சொல்லி, எனது அனுபவத்தில் நான் இன்னின்ன துன்பங்களையும் இன்பங்களையும் சந்தித்திருக்கிறேன். என்னை முன் உதாரணமாகக் கொண்டு நடந்துகொள்ளுங்கள் என கூறுவர். இதனால் துன்பத்தையும் இன்பத்தையும் சமமாக பாவிக்கும் பழக்கம் இவர்களிடம் உண்டு. இவர்கள் திடகாத்திரமான உடலமைப்பு கொண்டவர்கள். இவர்களுக்கு நோய் ஏற்பட்டாலும், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் டாக்டரிடம் போகக்கூட வேண்டாம் என நினைத்து தங்கள் பணியை பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதேநேரம் இவர்களிடம் பொறுமை அதிகம் என்பதால் வேலையை முடிக்க அதிகநேரம் எடுத்துக் கொள்வார்கள். இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவிப்பதுபோல் இந்த மாதத்தில் பிறந்த தொழிலதிபர்களாக இருந்தாலும் சாதாரண தொழிலாளியாக இருந்தாலும் அவரவர் துறையில் கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை வேலைகளை தெரிந்து வைத்திருப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு படிப்பு வராவிட்டாலும் அதைப் பற்றி கவலை கொள்ள மாட்டார்கள். தங்கள் அனுபவ அறிவால் படித்தவர்களை விட சிறப்பாக செயல்படுவார்கள். இவர்கள் மற்றவர்கள் விஷயத்தில் தலையிட மாட்டார்கள். ஆனால் யாராவது இவர்களிடம் சண்டை போட்டால் கடைசிவரை விடாப்பிடியாக நின்று அதில் வெற்றி பெறும்வரை போராடுவார்கள். ஆனால் இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு என்னதான் பொருள் வந்தாலும் அது கையில் நிற்காத அளவிற்கு செலவழிந்து போவதுண்டு. செலவுகளை கட்டுப்படுத்த முயன்றாலும், வீட்டில் உள்ள மற்றவர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டு செலவழிக்க வேண்டிய அவசியம் வந்துவிடும். இவர்கள் வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்கள். சிறு குடிசையாக இருந்தாலும் கூட அதனுள் நுழைந்தால் பெரிய மாளிகைக்குள்ளோ அல்லது புனிதமான கோயிலுக்குள்ளோ வந்ததுபோன்ற உணர்வு ஏற்படும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் யாரிடமும் லேசாக பழகமாட்டார்கள். பழகியவர்கள் இவர்களுக்கு துரோகம் நினைத்தால் காலம் முழுவதும் அவர்கள் முகத்தில் விழிக்கமாட்டார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு சோம்பல் அதிகம். வேகமாக வேலை செய்துகொண்டிருக்கும்போதே திடீரென சோம்பல் தலைதூக்கி அப்படியே உட்கார்ந்துவிடுவார்கள். பணம் இவர்களிடம் சேராமல் போவதற்கு இதுவும் ஒரு காரணம். இந்த மாதத்தில் பிறந்த பெண்களுக்கு நல்ல கணவன் அமைவான். இவர்களுக்கு லேசில் கோபம் வராது. கோபம் வந்தால் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதுபோல கடுமையான கோபம் வரும். இந்த குணத்தை மட்டும் நீங்கள் மாற்றிக்கொண்டால் உங்களை யாராலும் வெல்ல முடியாது. இதுபோல சோம்பல் ஏற்படும் நேரங்களில் மட்டும் அதை எப்படியாவது விடுத்து பணியில் தீவிரம் காட்டினால் வாழ்வில் வருத்தம் என்பதே இருக்காது.

ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலிகள். இவர்களிடம் மற்றவர்களை அடக்கி ஆளும் சக்தி உண்டு. இதை பயன்படுத்திக்கொண்டு இவர்கள் வாழ்க்கையில் மிகவும் முன்னேறத் துடிப்பார்கள். இவர்களைப் பொறுத்தவரை, தானும் சிரித்து மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என எண்ணுபவர்கள். இவர்களிடம் சிந்திக்கும் சக்தி அதிகம். சிந்தித்ததை செயல்படுத்த வேண்டும் என்றும் கருதுவார்கள். அதேநேரம் இவர்களுக்கு குணம் அடிக்கடி மாறுபடும். ஒரு வேலையை துவங்கி அதை செய்து கொண்டிருக்கும்போதே இன்னொரு வேலையில் கால் வைப்பார்கள். இதனால் பழைய வேலை கெட்டுப்போகும் வாய்ப்பு உண்டு. எனவே இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எடுத்த வேலையை முடித்துவிட்டு, அடுத்த வேலைக்கு செல்வது நலம் பயக்கும். இவர்கள் மற்றவர்களை மயக்கும் வகையில் பேசுவார்கள். இந்த பேச்சைக்கொண்டு இவர்கள் எழுத்து மற்றும் மேடைப்பேச்சில் ஈடுபட்டால் எதிர்காலம் சிறக்கும். இவர்கள் எந்த விஷயத்தை எடுத்தாலும் சந்தேகப்படுவதும் உண்டு. இதை தவிர்க்க முயல வேண்டும். ஆரம்பிக்கும் முன்பே தீர ஆலோசித்து ஒரு வேலையை தொடங்கினால் இந்த பிரச்னைக்கு இடம் இருக்காது. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் ஞாபகசக்தி மிக்கவர்கள். ஆனியில் பிறந்தவர்கள் நகைச்சுவை பிரியர்கள். இவர்கள் ரோஷக்காரர்கள். மற்றவர்கள் ஏதாவது தங்களுக்கு இடையூறு செய்தால் அதற்காக வருத்தப்படவும் செய்வார்கள். எரிந்தும் விழுவார்கள். இவர்கள் மனைவி மற்றும் குழந்தைகள் மீது மிகுந்த பாசம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களில் யாரையாவது தொழில் காரணமாகவோ பிற காரணங்களாலோ பிரிய வேண்டி வந்தால் அதனால் ஏற்படும் கஷ்டத்தை தாங்கிக்கொள்ளும் சக்தி அற்றவர்கள். இவர்கள் கட்டட வேலை, வண்டி இழுத்தல் போன்ற வேலைகளை செய்ய தயங்குவார்கள். இவர்களைப் பொறுத்தவரை கிளார்க் தொழில் செய்யவே அதிகமாக விரும்புவார்கள். இந்த மாதத்தில் பிறந்த பணக்காரர்கள் தொழிலதிபர்களாக இருக்கவே விரும்புவார்கள். சிறு சிறு வேலைகளை செய்ய விரும்புவதில்லை. ஆனி மாதத்தில் பிறந்தவர்களுக்கு பைனான்ஸ் தொழில் சரியாக வராது. இவர்கள் வட்டி வாங்கும் குணம் உடையவர்கள் அல்ல. அதே போல பிறரிடம் கடன் வாங்கினாலும் உடனே திருப்பி கொடுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அரக்கப் பரக்க வேலை பார்ப்பார்கள். இவர்களில் சிலர் கெட்டவர்களுடன் சகவாசம் வைத்து அதனால் வாழ்க்கையையே தொலைத்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் தீயவற்றில் இருந்து மீண்டு நல்லதையே செய்து பழகினால் மீண்டும் தீமைகள் இவர்களை அணுகாது. இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள். இவர்களுக்கு அதிகமான குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்பு உண்டு. அதே நேரம் குழந்தைகளால் சிறிது காலம்வரை கஷ்டப்படுவார்கள்.

ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள். எதிர்காலத்தை திட்டமிடுவதில் இவர்களை மிஞ்ச யாராலும் முடியாது. அந்த கற்பனைகளை செயல்படுத்துவதற்காக என்னென்ன வித்தைகளை செய்ய முடியுமோ அத்தனையும் செய்வார்கள். இந்த மாதத்தில் பிறந்த ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் திருமணமாகி குழந்தை பெற்றுவிட்டால் இவர்கள் காட்டும் பாசத்தை வேறு யாராலும் காட்ட இயலாது. குடும்பத்தின் மீதுள்ள பாசத்தை மனதிற்குள் வைத்துக்கொண்டு, பெற்றவர்களிடமோ மற்றவர்களிடமோ காட்டமாட்டார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு தமிழ் மொழி மீது அதிக விருப்பம் இருக்கும். தமிழில் அதிக மார்க் வாங்குவார்கள். இந்த மாதத்தை கடக மாதம் என சொல்வதுண்டு. கடகத்திற்குரிய சின்னமான நண்டைப்போல இவர்கள் மற்றவர்களை பேச்சில் கடித்தும் விடுவார்கள். அதே நேரம் முன்னெச்சரிக்கையாக ஒதுங்க வேண்டிய நேரத்தில் நண்டு ஓடி ஒளிந்துகொள்வது போல மறைந்தும் கொள்வார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பணம் ஈட்ட வேண்டுமென்று திட்டமிட்டு அதை மட்டும் செயல்படுத்துவதில் இறங்கிவிட்டால் இவர்களை மிஞ்ச யாராலும் முடியாது. அதேநேரம் பணம் நம்மைத் தேடி வரட்டும் என இருந்துவிட்டால் பிற்காலத்தில் மிகவும் நொந்துகொள்ள வேண்டி வரும். இவர்கள் அரசியலில் ஈடுபட்டால் பழைய தலைவர்களுக்கு சிலை எடுத்தே சம்பாதித்துவிடுவார்கள். இவர்களை யாராவது திட்டினால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதே நேரம் யானையைப் போல மனதில் வைத்துக்கொண்டு மறக்கமாட்டார்கள். இவர்களிடம் ஞாபகசக்தி அதிகம். இவர்களுக்கு ஒரே ஒரு அறிவுரையை சொல்லியாக வேண்டும். இவர்களுக்கு யாரையாவது பிடித்துவிட்டால் அவர்களுடன் மிக அதிகமான நட்பு கொண்டுவிடுவார்கள். அதே நேரம் அவர்களால் இடையூறு ஏற்பட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டதுபோல விரக்தியின் உச்சத்திற்கு சென்றுவிடுவார்கள். இவ்வாறு செய்யாமல் நண்பர்களை பொறுத்தவரை அளவோடு இருந்து கொண்டால் வாழ்க்கையில் முன்னேறுவதை யாராலும் தடுக்கமுடியாது. ஆடி மாதத்தில் பிறந்த பெண்களால் பெற்றோர்கள் மகிழ்ச்சி குறைந்தே இருப்பார்கள். எனவே இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் பெற்றவர்கள் மனம் கோணாமல் நடக்க முயற்சி செய்தால், வாழ்க்கையில் மிக வேகமாக முன்னேறி விடுவார்கள்.

ஆவணியில் பிறந்தவர்கள் சுதந்திரமான தொழிலில் இருக்க விரும்புவார்கள். பெருந்தன்மையான குணம் கொண்ட இவர்கள் புகழோடு வாழ காரியங்களை சாதிப்பவர்களாக இருப்பார்கள். எதையும் உடனடியாக செய்து முடித்துவிட வேண்டும் என்ற குணமுடையவர்கள். இதன் காரணமாக இவர்களிடம் பிடிவாத குணமும் இயற்கையாகவே அமைந்திருக்கும். இவர்கள் செய்வது மட்டுமே சரி, மற்றவர்கள் செய்வதெல்லாம் தவறு என்ற எண்ணம் படைத்தவர்களாக இருப்பார்கள். இதனால் மற்றவர்களின் பழிச்சொல்லுக்கு ஆளாவார்கள். இந்த மாதத்தில் பிறந்த கடைக்குட்டி குழந்தைகளின் பேச்சுக்கு குடும்பத்தில் மதிப்பு இருக்கும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தங்கள் ஜாதகத்தை பார்த்து இவர்கள் பிறந்த சிம்ம ஸ்தானத்தில் இருந்து சூரியனின் இருப்பைப் பொறுத்து எந்த அளவுக்கு கவுரவமாக வாழலாம் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வைகாசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துகொண்டால் பெரும் செல்வந்தர்களாக மாறுவார்கள். ஏனெனில் இந்த மாதங்களில் பிறந்தவர்களின் கொள்கைகள் ஒரே மாதிரியாக இருக்கும். இவர்களிடம் நிதான புத்தி இருக்கும் அளவிற்கு அவசரமும் இருக்கும் என்பதால் சில காரியங்களில் தடுமாற்றம் ஏற்படும். எனவே அவசர குணத்தை மட்டும் விட்டுவிட்டால் நல்லது. இவர்களிடம் சிக்கனம் அதிகம். அதேநேரம் வீட்டிற்கு வந்தவர்களை நல்லபடியாக உபசரிப்பார்கள். இவர்களின் உபசரிப்பை பொறுத்தே உறவினர்களும் நண்பர்களும் இவர்கள் விரிக்கும் வலையில் விழுந்து விடுவார்கள். இவர்களுக்கு கடன் வாங்குவது பிடிக்காது. அதுபோல கடன் கொடுக்கவும் பிடிக்காது. யாரிடமாவது கடன் வாங்கும் நிலைமை ஏற்பட்டால் அதற்கு பதிலாக ஏதாவது கடன் கொடுத்த நபருக்கு உபகாரம் செய்துவிட முயற்சி செய்வார்கள். அதிகாரம் செய்யும் சுபாவம் இவர்களிடம் அதிகம். இவர்களுக்கு ஏற்ற மனைவி அமைவது மிகவும் கடினம். இதன் காரணமாக வாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டதாக கருதி மனம் உடைந்து போவார்கள். எனவே திருமணத்தின்போது தகுந்த மணமகளையோ, மணமகனையோ தேடிக்கொள்வது நல்லது. ஆரம்பகாலத்தில் நாத்திகராக இருக்கும் இவர்கள் காலப்போக்கில் மிகப்பெரிய ஆத்திகராக மாறிவிடும் சூழல் ஏற்படும்.

புரட்டாசி மாதம் பிறந்தவர்கள் பெரும் செல்வத்துடன் வாழ பிறந்தவர்கள். இவர்கள் முதல் போடாமலே சம்பாதிக்கும் வலிமை படைத்தவர்கள். இவர்களின் எதிர்பாராத முன்னேற்றத்தால் மற்றவர்கள் இவர்களைக் கண்டு பொறாமைப்படுவதுண்டு. இவர்களுக்கு தொழில் ரீதியாக பின்னால் என்ன நடக்கும் என்பதை கிரகிக்கும் சக்தி உண்டு. எனவே தொழில் மற்றும் வியாபாரத்தில் இவர்களை வெற்றிகொள்ள யாராலும் முடியாது. கல்வியிலும் இவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. அறிவியல் துறையில் ஈடுபட்டால் இவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புத்தகம் படிப்பதில் இவர்களுக்கு விருப்பம் அதிகமாக இருக்கும். யாராவது தவறு செய்தால் அவர்களை தட்டிக்கேட்கும் குணம் இவர்களிடம் உண்டு. அத்துடன் திரும்பவும் அந்த தவறை செய்யாமல் இவர்கள் பார்த்துக்கொள்வார்கள். இயற்கை எழில் மிகுந்த இடங்களுக்கு சென்று வருவதிலும் இவர்களுக்கு விருப்பம் அதிகம். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர்களிடம் சில குறைகளும் உண்டு. இயற்கையாகவே இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு புத்திசாலித்தனம் அதிகம் இருந்தும்கூட ஒரு லட்சியத்தை மேற்கொண்டு அதை நிறைவேற்ற வேண்டுமென நினைக்கமாட்டார்கள். இவர்களுக்குரிய திறமை இவர்களுக்கே தெரியாமல் போய்விடுவது தான் பெரிய குறையாகும். இவர்கள் சந்தேக மனப்பான்மை மிக்கவர்களாக இருப்பார்கள். இப்போதைக்கு கிடைத்ததுபோதும் என்ற எண்ணமே அதிகமாக இருக்கும். எனவே பின்னால் வரப்போகும் பெரிய லாபத்தை விட்டுவிடுவார்கள். இதையெல்லாம் தவிர்த்து ஒரு லட்சியத்துடன் வாழ்ந்தால் இந்த மாதத்தில் பிறந்தவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். இவர்களுக்கு கண்ட கண்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவதில் விருப்பம் அதிகம். இதைத் தவிர்த்து சத்துள்ள உணவை அளவோடு சாப்பிட்டால் இவர்களது ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இந்த மாதத்தில் பிறந்த பெண்களை கணவன்மாருக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இவர்கள் தங்கள் கணவன் வீட்டு வேலை உட்பட அனைத்தும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் குறும்புத்தனம் அதிகமாக இருக்கும். இந்த மாதத்தில் பிறந்த பெண்களில் பலருக்கு செவ்வாய் தோஷம் இருக்கும். எனவே தக்க பரிகாரம் செய்து இவர்களை திருமணம் செய்து கொடுக்கலாம்.

ஐப்பசி மாதத்தில் பிறந்த ஆண்களும், பெண்களும் எந்த காரியத்திலும் வல்லவர்கள். இந்த மாதத்தில்தான் ராஜராஜசோழன் பிறந்தான். அவர் கட்டிய தஞ்சை கோயில் காலத்தால் அழியாத ஒன்று. அவரைப் போலவே இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பெரிய திட்டமாகவே போடுவார்கள். இதனாலேயே இவர்கள் அரசியல்வாதிகளாக ஆவதற்கு தகுதி கொண்டவர்கள். இவர்களைப் பொறுத்தவரை வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் சேர்த்துக் கொள்வதில் ஆர்வம் இருக்கும். பெண்களிடம் பழகுவதில் இவர்களைப் போல் வல்லவர்களை காணமுடியாது. ஐப்பசி மாதத்தில் பிறந்த ஆண்களின் நட்பை பெண்களும் விரும்புவார்கள். இவர்களிடம் பொறுமை அதிகம். உழைத்துப் பிழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும் உண்டு. இவர்களில் சைவத்தை ஏற்றுக் கொண்டவர்கள்கூட அசைவம் சாப்பிட வேண்டும் என விரும்புவார்கள். பிறரது தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதில் இவர்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள். இவர்களிடம் உணர்ச்சிவசப்படும் பழக்கம் அதிகம். பிறர் முன்னிலையில் கவுரவமாக வாழவேண்டும் என நினைப்பார்கள். இவர்கள் மனைவிக்கு பயப்படமாட்டார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு மூத்த சகோதரர்கள் இருப்பது அபூர்வமான ஒன்றாகும். நீதித்துறையில் நுழைந்தால் இவர்கள் ஜொலிப்பார்கள்.இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் எந்த வேலையையும் தாமதமாகவே செய்வார்கள். தெய்வபக்தி அதிகமாக இருந்தாலும் இவர்களிடம் கர்வமும் அதிகமாக இருக்கும். கல்லூரிக்கு சென்று படிக்காவிட்டாலும் சாதாரண கல்வி அறிவு உள்ளவர்கள்கூட ஏதாவது வேலை செய்து வாழ்க்கையை நடத்தவேண்டும் என எண்ணுவார்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்களுக்கு நகைகள், உடைகள் மீது ஆர்வம் அதிகம். ஆனால் இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளால் வாழ்நாள் முழுவதும் சிரமம் இருக்கும். இந்த மாதத்தில் பிறந்த பெண்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் நடந்துவிடும். அவ்வாறு நடக்காவிட்டால் மிகவும் தாமதமாகிவிடும்.

கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்கள் பயந்த சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள். ஆனால் அந்த பயத்தைப் போக்கி துடிப்புள்ளவர்களாக விளங்க இவர்கள் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அண்ணாமலையாரை வணங்க வேண்டும். இவர்கள் வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு எதிர்காலத்தை வகுத்துக் கொள்ளும் வல்லமை உடையவர்கள். எனவே இவர்கள் செய்யும் செயல்கள் நல்லதாகவே அமையும். ஜோதிடம் கற்றுக்கொள்ளும் தகுதி இவர்களிடம் உண்டு. இந்த மாதத்தில் பிறந்த குழந்தைகளின் காதுகளை டாக்டரிடம் பரிசோதித்துக் கொள்வது நல்லது. கார்த்திகை இடியும் மின்னலும் உடைய மாதம் ஆதலால் இந்த சத்தத்தைக் கேட்டு குழந்தைகளின் காதுகள் பாதிக்கப்படலாம் என கூறுவார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் இளமையிலேயே பல சோதனைகளை சந்திப்பார்கள். அந்த சோதனைகளால் ஆத்திரம் ஏற்பட்டு செய்யக்கூடாத செயல்களை செய்து விடுவதும் உண்டு. எனவே பொறுமையுடன் இருப்பது மிகவும் நல்லது. இவர்கள் இயற்கையிலேயே தாகம் உடையவர்களாக இருப்பார்கள். ஆத்திரக்காரர்களாக இருப்பதால் இவர்கள் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்டு அடிக்கடி கோயிலுக்கு செல்வார்கள். இப்படியே சென்றுகொண்டிருக்கும் இவர்கள் பெரும் பக்தர்களாக மாறி ஞான மார்க்கத்திற்கே சென்றுவிடுவார்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்களின் நிலை சிறப்பாக இருக்கும். முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களுக்குரிய மாதம் இது. எனவே முருகனை இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் வணங்கிவந்தால் சகல சவுபாக்கியங்களுடன் விளங்குவார்கள். இவர்கள் குழந்தையைப் போல மற்றவர்களிடம் பழகுவார்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்களை திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு சகல பாக்கியங்களும் உண்டாகும். இந்த பெண்கள் பெரியவர்களிடம் மரியாதையாக நடப்பார்கள். விரதங்கள், தானம், தர்மம் செய்வதில் வல்லவர்கள். இந்த பெண்களுக்கு எதிரிகள் இருக்க வாய்ப்பில்லை. இவர்கள் ஏராளமாக செலவு செய்வார்கள். இதனால் கணவன் மனைவி இடையே சிறு மனஸ்தாபங்கள் வரலாம். இதைத் தவிர்த்துவிட்டால் இந்தப் பெண்களை அசைக்க யாராலும் முடியாது. இவர்களுக்கு அரசு துறைகளில் வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகம். லாட்டரி விஷயத்தில் ஆர்வம் கூடுதலாக இருக்கும். இதையும் இவர்கள் தவிர்க்க வேண்டும்.

குளிர்ந்த மாதமான மார்கழியில் பிறந்தவர்கள் எந்த விஷயத்திலும் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும் என விரும்புபவர்கள். ஒரு காரியத்தை துவங்கினால் அதை முடிக்காமல் தூங்க மாட்டார்கள். இவர்களுக்கு அரசியல், ஆன்மிகம், தத்துவம், அரசு பணிகளில் நிர்வாகம் போன்ற உயர்பணிகள் ஏற்றவை. இதில் ஈடுபட்டால் இவர்களால் செல்வத்தை குவிக்கமுடியும். ஆடம்பரத்தில் இவர்கள் விருப்பம் கொண்டவர்கள். சம்பாத்தியம் குறைவாக இருந்தாலும் அதிகமாக செலவழிக்க வேண்டும் என விரும்புவார்கள். இதன் காரணமாக இவர்கள் வாழ்க்கையின் பின்பகுதியில் சிரமப்படுவார்கள். எனவே இவர்கள் இந்த குணத்தை மாற்றிக்கொண்டு எதிர்காலத்தைப் பற்றி யோசித்து நடந்து கொள்ள வேண்டும். இவர்கள் ஒரு சைக்கிளில் சென்றால்கூட வேகமாக செல்லவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அதே நேரம் பெரிய பிரச்னைகளை சந்திக்க நேர்ந்தால் அப்படியே இடிந்து போவார்கள். இந்த நேரத்தில் இறைவனை வணங்கி அமைதியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். சிறந்த எழுத்தாளர்களாகவும் இவர்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இவர்கள் முக்கியமான எதைப்பற்றியாவது எழுதினால் அது உலகின் தலைவிதியையே மாற்றும் தன்மை கொண்டதாக இருக்கும். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு கெட்ட சிநேகிதங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கெட்டவர்களுடன் சேர்ந்து மோசமான உணர்ச்சிகளுக்கு அடிமைப்படும் வாய்ப்பு அதிகம். இதற்காக பின்னால் மிகவும் வருத்தப்படுவார்கள். அதே நேரம் படிப்பில் மிகுந்த கவனத்துடன் இருப்பார்கள். இவர்களுக்கு திருமணத்தில் அதிக விருப்பம் இருக்காது. அதேநேரம் ஆண்கள் பெண் நண்பர்களுடனும், பெண்கள் ஆண் நண்பர்களுடனும் வாழ்வதற்கு பிரியப்படுவார்கள். மொத்தத்தில் சுதந்திரமான வாழ்க்கையை இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் விரும்புவர். எனவே பொருத்தமான வாழ்க்கை துணையை தேடிக்கொண்டால் வாழ்க்கை இனிமையாக அமையும்.

தை மாதத்தில் பிறந்தவர்கள் கஞ்சத்தனம் உடையவர்கள். ஒருவருக்கு பத்து காசு செலவழித்தால் தனக்கு பத்து ரூபாய் வருமானம் வருமா என பார்த்து செலவு செய்வார்கள். கடமையில் கெட்டிக்காரர்கள். உயர் அதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொண்டு பணம் கொடுத்தாவது காரியத்தை சாதித்துக் கொண்டு விடுவார்கள். இதன்மூலம் ஏராளமான வருமானம் பெறுவார்கள். தை மாதத்தில் பிறந்தவர்களை நம்பி மற்றவர்கள் எந்தக் காரியத்திலும் இறங்கக்கூடாது. இவர்களுக்கு விவசாயம் மற்றும் மனைகள் வாங்கி விற்பது ஏற்ற தொழிலாக இருக்கும். இந்த மாதமே விவசாய மாதம் என்பதால் இவர்கள் முழுமையாக விவசாயத்தில் ஈடுபடுவது பெரும் லாபம் தரும். அதே நேரம் இவர்கள் எதிலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்பட்டால் வெற்றிகள் பெருகும். இவர்கள் ஒரு அழகிய அல்லது பயனுள்ள பொருளைப் பார்த்தால் அந்தப் பொருளைவிட அதை செய்தவரையே பாராட்டுவார்கள். அப்படிப்பட்டவர்களை சென்று பார்த்து தாங்களும் அந்த தொழிலில் இறங்கினால் என்ன என்று நினைப்பவர்கள். தை மாதத்தில் பிறந்த பெண்கள் அழகாக இருப்பார்கள். வயதான காலத்தில் கூட மேக்கப் போட விருப்பப்படுவர். மற்ற பெண்களுடன் நெருங்கிப் பழகமாட்டார்கள். இவர்களுக்கு உடன் பிறந்தவர்கள் இருப்பது அபூர்வமான விஷயம். திருமணமான பிறகு கணவர் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று யோசிப்பதைவிட தனது பொறுப்பில் எவ்வளவு உள்ளது என்று கணக்குப்போடும் குணம் இவர்களிடம் உண்டு. காதல் விஷயத்தில் இவர்கள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. காதல் திருமணம் இவர்களுக்கு ஒத்துவராது. குழந்தைகளை வளர்க்க தை மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொள்வார்கள். அவர்களது முன்னேற்றத்தில் மிக மிக கவனமாக இருப்பார்கள். குழந்தைகளுக்கு செல்லம் கொடுப்பதில்லை. இந்த மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு திரும்பத்திரும்ப விஷயங்களை சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் இவர்கள் என்ன சொன்னாலும் தங்கள் இஷ்டம் போலவே நடந்து கொள்வார்கள். அதே நேரம் படிப்பிலும் விளையாட்டிலும் குழந்தைகள் அதிக கவனம் செலுத்துவார்கள்.

மாசி மாதத்தில் பிறந்தவர்கள் முன்கோபக்காரர்கள். குழந்தைகள் அதிகம் பிறக்காது. இவர்களிடம் யாராவது உண்மையை மறைத்தால் அதை அறிந்துகொள்ளும் வல்லமை உடையவர்கள். விஞ்ஞானத்தில் ஆர்வம் உண்டு. எதை எந்த வேளையில் செய்தால் பலன் கிடைக்கும் என்பதை அறிந்து திட்டமிட்டு காரியம் செய்யக்கூடியவர்கள். இவர்களில் சிலர் பிறந்த ஊரில் சிலகாலம் தான் இருப்பார்கள். பின்பு பிழைப்புக்காக பல்வேறு இடங்களுக்கும் சென்று விடுவார்கள். கஷ்டப்பட்டு பொருள் சம்பாதிப்பார்கள். இவர்கள் தங்களைத் தாங்களே அழகில் சிறந்தவர்களாக எண்ணிக்கொண்டு கர்வத்துடன் நடப்பார்கள். இந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டால் வாழ்வில் வெற்றி பெறலாம். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் காதல் திருமணத்தில் ஆர்வம் உள்ளவர்கள். புகுந்த வீட்டில் இவர்கள் செல்வ செழிப்புடன் வாழ்வார்கள். கணவனை கைக்குள் வைத்திருப்பார்கள். இவர்கள் அனைவருடனும் சகஜமாக பழகும் தன்மை கொண்டவர்கள். எனவே ஏராளமான நண்பர்கள் கிடைப்பார்கள். உறவினர்களை நேசிப்பார்கள். அடிக்கடி வீட்டிற்கு உறவினர்களும் நண்பர்களும் வருவார்கள் என்பதால் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதும் ஆடம்பர பொருட்களை வாங்கவும் ஆசைப்படுவார்கள். இதனால் அதிகச் செலவுகள் ஏற்படும். இதைத் தவிர்த்து தங்கள் வருமானத்திற்கு ஏற்றவகையில் பொருட்களை வாங்கிக் கொள்வது எதிர்கால சேமிப்புக்கு உதவும். தங்கள் இஷ்டப்படிதான் எதுவும் நடக்க வேண்டும் என்ற கொள்கையிலிருந்து இவர்கள் மாறுபட்டவர்கள். அடுத்தவர்களை அனுசரித்து செல்வார்கள். தொழிலில் அதிக அக்கறை காட்டும் குணம் இவர்களிடம் உண்டு. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வெங்கடாசலபதியையும், பத்ரகாளியையும் வணங்கிவந்தால் இவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் விலகும். இந்த மாதத்தில் பிறந்த குழந்தைகளிடமும் புத்திசாலித்தனமும் ஆரோக்கியமும் உண்டு. கல்வியில் ஆர்வம் இருக்கும். தங்களுக்கு சம அந்தஸ்தில் உள்ள குழந்தைகளிடமே பழகுவர்.

பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியவர்கள். இவர்கள் விரைவில் போதைப்பழக்கத்திற்கு ஆளாகிவிடுவார்கள். அதிகமான மனக்கஷ்டங்கள் ஏற்படும் என்பதால் இந்த பழக்கம் உருவாக வாய்ப்புண்டு. எனவே போதைக்கு அடிமையாகாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவர்கள் திரைப்படத் தொழிலுக்கு ஏற்றவர்கள். சிற்பக்கலையிலும் ஆர்வம் உண்டு. இயற்கைக் காட்சிகளை ரசிப்பார்கள். கலையை தெய்வமாக கருதி வழிபடுவார்கள். முன்கோபம் அதிகமாக வரும். தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு உழைப்பை மறந்துவிடும் குணமுண்டு. தெய்வ பக்தி அவசியமே எனினும் செய்யும் தொழிலே தெய்வம் என்பதையும் இவர்கள் மனதில் கொள்ள வேண்டும். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் படபடப்புடன் பேசுவார்கள். நாகரீகமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. சினிமா கவர்ச்சி அதிகம். எனவே இவர்கள் ஏமாந்து போகும் நிலையும் வரலாம். கலைத்துறைக்கு செல்பவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். இந்த பெண்களில் சிலர் இளவயதில் வறுமையில் வாடும் வாய்ப்பு உண்டு. இவர்களில் பலருக்கு பெண்குழந்தைகளே பிறக்கும். எழுத்து தொழிலுக்கு இவர்கள் ஏற்றவர்கள். எப்போதும் கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள். சுற்றிவளைத்துப் பேசும் குணமுடையவர்கள். எதிலும் முன்ஜாக்கிரதையாக இருப்பார்கள். மற்றவர்கள் இவர்களை பாராட்டி பேசினால் அதில் மயங்கி விடுவார்கள். ஆன்மிகத் துறையில் ஈடுபட்டால் இவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பசிதாங்கும் சக்தி இவர்களிடம் அதிகம். பங்குனியில் பிறந்த குழந்தைகளிடம் பொய்சொல்லும் வழக்கம் அதிகமாக இருக்கும். பெற்றோருக்கு கட்டுப்படாமல் தங்கள் இஷ்டப்படி நடப்பார்கள். இந்த குழந்தைகளை வளர்ப்பதில் அதிக அக்கறையுடன் செயல்பட வேண்டும். இவர்களுக்கு சிறு வயதிலேயே தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது நல்லது.

நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள்!

நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள்!

ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றை தலா மூன்று நட்சத்திரமாகக் கொண்டு ஒன்பதாக பிரிப்பர். அதன்படி, நட்சத்திரத்திற்கேற்ற அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள் இங்கே தரப்பட்டுள்ளன. உங்களின் நட்சத்திரம் எதில் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். வாழ்வில் வளம் பெறுங்கள். 

அசுவினி, மகம், மூலம்

நட்சத்திர அதிபதி கேது ஆவார். கேது திசையில் பிறந்த உங்களின் அதிர்ஷ்ட தெய்வம் விநாயகர். எப்போதும் விநாயகரை வழிபட்ட பின் பணிகளைத் துவக்குங்கள். சதுர்த்திநாளில் விநாயகர் கோயிலுக்குச் செல்ல மறக்காதீர்கள். அதிர்ஷ்டநிறம் சிவப்பு. சிவப்போடு பல நிறமும் கலந்த ஆடைகள் அணிவது யோகம் தரும். அதிர்ஷ்ட எண் 5,7,9. இந்த தேதிகளில் தொடங்கும் முயற்சிகள் எளிதாக நிறைவேறும். நவரத்தினத்தில் வைடூர்யத்தை அணிந்து கொள்வது நன்மை தரும். மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனராசியினர் நல்ல நண்பர்களாக அமைவர். 

பரணி, பூரம், பூராடம்

சுக்ரனே உங்களின் நட்சத்திர அதிபதி. சுக்ர திசையில் பிறந்த உங்களின் அதிர்ஷ்ட தெய்வம் மகாலட்சுமி. காலையில் கண் விழிக்கும் போதே மகாலட்சுமி படத்தை பார்த்து வணங்குங்கள். வெள்ளிக்கிழமையில் லட்சுமி சந்நிதியில் நெய்தீபமிடுங்கள். அதிர்ஷ்ட நிறம் வெள்ளை. வெண்ணிற ஆடைகளை அணிவது யோகம் தரும். அதிர்ஷ்டம் தரும் எண்கள் 3,6,8. இந்த தேதிகளில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் எளிதில் முடியும். அதிர்ஷ்டக்கல் வைரம். எல்லோராலும் வாங்கமுடியாது. வைரத்திற்குப் பதிலாக, ஸ்படிக மாலை வாங்கி அணிவதும் நல்லது. மிதுனம், தனுசு, மகரம், கும்பம் ராசியினரோடு நல்ல நட்பு மலரும்.

கிருத்திகை, உத்திரம், உத்திராடம்

சூரியனே உங்கள் நட்சத்திர நாதனாக விளங்குகிறார். நீங்கள் சூரிய திசையில் பிறந்தவர். சிவபெருமானைத் தொடர்ந்து வழிபடுவதால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும். பிரதோஷ நாளில் சிவாலய தரிசனம் செய்வது சிறப்பு. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு. சிவப்பு நிற ஆடை அணிவது யோகம் தரும். 1,5,7 ஆகிய எண்கள் அதிர்ஷ்டத்தை உங்களுக்கு வரவழைக்கும். இந்த தேதிகளில் ஆரம்பிக்கும் செயல்களில் கிடைக்கும். அதிர்ஷ்டக்கல் மாணிக்கம். கடகம், விருச்சிகம், தனுசு, மீனராசியினர் நண்பர்களாக அமைந்தால் நட்பு நீண்ட காலம் தொடரும்.

ரோகிணி, அஸ்தம், திருவோணம்

உங்களின் நட்சத்திர நாதனாக சந்திரன் இருக்கிறார். சந்திரதிசையில் பிறந்த நீங்கள், அம்பிகையை வழிபடுவதால் நன்மை பெறுவீர்கள். பவுர்ணமியில் அம்மனுக்கு தீபமேற்றி வழிபட யோகம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம் வெள்ளை. வெண்ணிற ஆடைகளை அணிவதன் மூலம் வெற்றி வந்து சேரும். அதிர்ஷ்டம் தரும் எண்கள் 2,3,9. இந்த தேதிகளில் தொடங்கும் செயல் எதுவானாலும் வெற்றி உங்களுக்கே. முத்து பதித்த ஆபரணங்கள் அணிய நன்மை உண்டாகும். மிதுனம், சிம்மம், கன்னி ராசியினரோடு பழகினால் நட்பு வாழ்வில் வளம் சேர்க்கும். 

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்

நவகிரகங்களில் செவ்வாய்க்குரிய நட்சத்திரம் உங்களுடையது. செவ்வாய்திசையில் பிறந்த உங்களுக்கு, அதிர்ஷ்டதெய்வம் முருகன். செவ்வாயன்று முருகனுக்கு பாலபிஷேகம் செய்வது சிறப்பு. அதிர்ஷ்டநிறம் இளஞ்சிவப்பு. சிவப்புநிற ஆடை அணிவதால் நலம் பெருகும். அதிர்ஷ்ட எண்கள் 3,6,9. இந்த தேதிகளில் தொட்ட செயல்கள் யாவும் இனிதே முடியும். அதிர்ஷ்டக்கல் பவளம். பவளத்தை மோதிரமாகவோ, டாலராகவோ அணிந்துகொள்ளலாம். சிம்மம், தனுசு, மீனராசியினர் நண்பராக அமைய அனுகூல பலன்கள் உண்டாகும்.

திருவாதிரை, சுவாதி, சதயம்

ராகுவிற்குரிய இந்த மூன்று நட்சத்திரங்கள் இவை. ராகுதிசையில் பிறந்த நீங்கள் வழிபடவேண்டிய அதிர்ஷ்டதெய்வம் துர்க்கை. ராகுவேளையில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவது நன்மைதரும். அதிர்ஷ்டநிறம் கருமை. ஆடையில் கருப்பு புள்ளிகள், கோடு இருந்தாலும் போதுமானது. அதிர்ஷ்ட எண்கள் 1,4,7. இந்த தேதிகளில் தொடங்கும் விஷயம் எளிதில் நிறைவேறும். அதிர்ஷ்டக்கல் கோமேதகம். கோமேதகத்தை மோதிரத்தில் பதித்தும், டாலராக அணிந்து கொள்ளலாம். மிதுனம், கன்னி, தனுசு, மகரம், மீனராசியினர் நல்ல நண்பர்களாக அமைவர். 

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

நவகிரகங்களில் பூரணசுபரான குரு உங்களுக்கு நட்சத்திராதிபதியாவார். குருதிசையில் பிறந்த உங்களின் அதிர்ஷ்டதெய்வம் தட்சிணாமூர்த்தி. வியாழனன்று இவருக்கு நெய்தீபம் ஏற்றி, கொண்டல்கடலை மாலை சாத்தி, வழிபட்டு வந்தால் சுபபலன் உண்டாகும். அதிர்ஷ்டநிறம் மஞ்சள். இந்நிறத்தில் கைக்குட்டையாக வைத்துக்கொள்ளுங்கள். அதிர்ஷ்ட எண்கள் 2,3,9. இந்த தேதிகளில் புதிய பணிகளைத் துவங்குவது நன்மை தரும். அதிர்ஷ்டக்கல் புஷ்பராகம். மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிக ராசியினரின் நட்பு கொள்வதால் நற்பலன் உண்டாகும்.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி

உங்களின் நட்சத்திராதிபதியாக இருப்பவர் சனி. முதல் திசையாக சனியில் பிறந்த நீங்கள், வழிபடவேண்டிய அதிர்ஷ்டதெய்வம் சாஸ்தா. காலையில் எழுந்ததும் இவரை தரிசிப்பது சிறப்பு. குலதெய்வ வழிபாடும் உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இயன்ற போதெல்லாம் சாஸ்தா கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருவது நன்மை தரும். அதிர்ஷ்டநிறம் கருநீலம். அதிர்ஷ்டஎண்கள் 5,6,8. இத்தேதிகளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும். அதிர்ஷ்டக்கல் நீலம். ரிஷபம், மிதுனராசியினரிடம் நட்பு கொண்டால் நன்மை ஏற்படும்.

ஆயில்யம், கேட்டை, ரேவதி

கிரகங்களில் புதன் உங்களின் நட்சத்திராதிபதி. புதன்திசையில் பிறந்த உங்களுக்கு அதிர்ஷ்டம் அருள்பவர் மகாவிஷ்ணு. சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி, நெய் தீபம் ஏற்றி வழிபடுவது யோகம் தரும். ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிகவும் சிறப்பு. அதிர்ஷ்டநிறம் பச்சை. அதிர்ஷ்டஎண்கள் 1,5,8. இத்தேதிகளில் செய்யும் செயல்கள் அனைத்தும் நற்பலன் தரும். அதிர்ஷ்டக்கல் மரகதம் என்னும் பச்சைக்கல். ரிஷபம், சிம்மம், துலாம் ராசியினரிடம் உண்டாகும் நட்பு உண்மையானதாகவும், ஆழமானதாகவும் இருக்கும்

சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க

சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க

சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க ஓரு சித்தர் எளிய பரிகாரம் ஒன்றை சொல்லியுள்ளார்.அந்த பரிகாரம் வருமாறு: பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அதை நன்கு பொடி செய்து சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு விநாகரை வணங்க வேண்டும். பிறகு விநாயகரை மூன்று சுற்று சுற்ற வேண்டும்.

அப்போது கையில் உள்ள அரிசியை போட வேண்டும். அதை எறும்புகள் தூக்கி செல்லும். அப்படி தூக்கி சென்றால் நமது பாவங்களில் பெரும்பாலனவை நம்மை விட்டு போய்விடும். வன்னி மரத்தடி விநாயகர் கோவில் என்றால் அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்ய வேண்டும்.

பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்துக்காக சேமித்து வைத்து கொள்ளூம். இரண்டரை ஆண்டுகளுக்கு எறும்புக்கு அந்த உணவு போதும். இதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை கிரக நிலை மாறும்.

அப்போது பரிகாரம் வலுவிழந்து விடும். எனவே நாம் அடிக்கடி பச்சரிசி மாவை எறும்புக்கு உணவாக போட வேண்டும். ஒரு எறும்பு சாப்பிட்டால் 108 ஏழைகள் சாப்பிட்டதற்கு சமம். இதன் மூலம் இந்த பரிகாரத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை அடிக்கடி செய்தால் சனிபகவான் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.

ஒருவருக்கு சனி திசை வந்து விட்டால் கூடவே சந்தேகத்தையும் ஏற்படுத்தி விடுவார். யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள். அஷ்டமத்து சனி நேரடி சண்டையை உருவாக்காது. நம்மை சேர்ந்த உறவினர்கள் மூலம் பிரச்சினைகளை உருவாக்கி விடும். இதற்கு செய்ய வேண்டிய பரிகாரம் வருமாறு....

தேவை இல்லாமல் சந்தேகப்படக் கூடாது. உப்பு இல்லாமல் சாப்பிட வேண்டும். சுவையான உணவுகளை தவிர்க்க வேண்டும். சகிப்புத் தன்மையை அதிகரிக்க வேண்டும். எது நடந்தாலும் தாங்கிக் கொள்ள வேண்டும். சனிக்கிழமைகளில் எள் எண்ணை ஏற்ற வேண்டும். மன நலம் குன்றியவர்களுக்கு உதவ வேண்டும்.

பிரதோஷ பூஜைகளில் பங்கேற்பது நல்லது. சனி தசை நடக்கும் போது எந்த செயல் செய்தாலும் தாமதமாகும். அதற்காக கோபப்படக் கூடாது. பொறுமையாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். இப்படி நம்மை மாற்றிக் கொண்டால் சனி பாதிப்பில் இருந்து சற்று தப்பிக்கலாம்.

* தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.
* சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும்
* கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.
* வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.
* சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.
* சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.
* விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.
* அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.
* ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.
* தேய்விறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.
* அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.
* கோமாதா பூஜை செய்யலாம்.
* ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம்.
* சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.
* அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.
* சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.
* உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள்.
* வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.
* பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை கொடுத்து வணங்க வேண்டும்.
* தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனிபகவானின் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.
லக்னத்தில் சனி அமர்ந்து உடலில் அபரிமிதமாக ரோமங்கள் காணப்பட்டால் பணம் இல்லாமை, பணமுடை ஏற்படும். அதற்கு
* பரிகாரம்,சாதுக்கள் மற்றும் தானம் கேட்போருக்கு ஒரு இரும்பு ஸ்டவ் இனாமாக கொடுக்கலாம்.
* சனி இரண்டில் இருந்தால்- நெற்றியில் எள் எண்ணெய் தேய்த்தல் கூடாது.
* சனி மூன்றில் இருந்தால்-வீட்டு வாசல் கதவில் மூன்று இரும்பு ஆணி இருக்கச் செய்யவும்.
* சனி நான்கில் இருந்தால்- கறுப்பு ஆடைகள், கொள்ளு( தானியம்) தானம் செய்யலாம்.
* சனி ஐந்தில் இருந்தால்- வீட்டின் மேற்கு பாகத்தில், செம்பு, வெள்ளி, தங்க உலோகம் இருக்கச் செய்யவும்.
* சனி 6-ல் இருந்தால் 40-க்கும் மேல் 48 வாதிற்குள்ள இடைகாலத்தில் வீடுகட்டுதல் கூடாது.
* சனி7-ல் இருந்தால்- கருப்பு நிற பசுவுக்கு புல் தரலாம். மூங்கில் குழாயில் சர்க்கரையை நிரப்பி வீட்டு வாசலில் பூமியினுள் மூடி வைப்பதுவும் போதுமானது.
* சனி 8-ல் இருந்தால்- கல்லில் அல்லது மரப்பலகை நாற்காலியில் அமர்ந்து, தண்ணீரில் ஒரு ஸ்பூன் பாலை கலந்து குளித்தல் சிறப்பானது.
* சனி 9-ல் இருந்தால்-வீட்டின் மொட்டை மாடியில் புல் வளர்த்தல் கூடாது.
* சனி 10-ல் இருந்தால்-10-பார்வையில்லாதோருக்கு தானம் செய்யலாம்.
* சனி11-ல் இருந்தால்- வீட்டை நீண்ட நாள் பூட்டி செல்லும் போது வீட்டு வாசலில், சிறு குடம் தண்ணீரை வைத்து செல்வது தீமையை அகற்றும்.
* சனி 12-ல் இருந்தால்-வீட்டின் கடைசி இருட்டறையில் 12-ம் பாதாம் பருப்பை கறுப்பு துணியில் முடித்து வைப்பது நன்மையூட்டும்.

சனியை முறையோடு வணங்கினால் தொல்லைகளை அகற்றிவிடுவார்.

ஏழரைச் சனி நீங்கும் போது அந்த ராசிக்காரர்கள் அன்றைய தினம் புண்ணிய நதிகள், சமுத்திரம், நீர்த்தடாகங்கள், குளம் போன்றவற்றில் நீராட வேண்டும். இயலாதவர்கள் வீட்டில் உள்ள கிணற்றில் குளிக்கலாம். சமுத்திர ஸ்நானம் செய்யாதவர்கள் நல்லெண்ணை தலையில் வைத்து குளிப்பது சிறப்பு.

குலதெய்வ வழிபாடு செய்த பின்பு சிவதரிசனம் செய்ய வேண்டும். இயன்றவர்கள் நவக்கிரக சூக்தம் ஜெபம் செய்யலாம். ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். பசுவிற்கு அகத்திக்கீரை உண்ணத் தருவது மிகவும் சிறப்பு.

சனி பகவான் நீதிமான். குற்றங்கள் புரிபவர்களையும் தெரிந்தே பாவங்கள் செய்பவர்களையும் அகந்தையுடனும், அகங்காரத்துடனும் நடப்பவர்களையும் அவர் தண்டிக்காமல் விடமாட்டார். சில சமயங்களில் ஒரு பாவமும் அறியாத நல்லவர்கள் கஷ்டப்படும் பொழுது, சனி என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டான் என்று புலம்புவது உண்டு.

அது போன ஜென்மத்து பாவங்களின் தொடர்ச்சியாகும். ஆகவே எப்பொழுதும் நன்மைகள் செய்ய சனியின் தாக்கம் குறையும் என்று அருளாளர்கள் கூறுவர். சனீஸ்வரர் எப்பொழுதும் கண்களைக் கட்டிக் கொண்டு தான் இருப்பார், அவரது நேரடிப்பார்வையின் உக்கிரத்தை யாராலும் தாங்க முடியாது என்பதால் தான் அவர் இப்படி கருப்புத் துணியால் கண்களைக் கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம்.

ஏழரை நாட்டுச் சனி, அஷ்டமச் சனி, ஜன்மச் சனி, ஜாதகத்தில் சனி திசை நடக்கும் போது நல்லதும், கெட்டதும் நடக்க வாய்ப்பு உண்டு. சனியின் பிடியில் சிக்கியிருப்பவர்கள் அவரின் தாக்கம் குறைய ஒவ்வொரு சனிக்கிழமையும் காகத்திற்கு சாதத்தில் எள் கலந்து உணவு வைக்க வேண்டும்.

உளுந்து வடையை காகங்களுக்குப் போடுவது நல்லது. ஒவ்வொரு சனி அன்றும் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் வைக்க வேண்டும். வெள்ளிக்கிழமை இரவு படுக்கும் போது கொஞ்சம் எள்ளை ஈரத் துணியில் கட்டி தலைக்கு அடியிலோ, உடலுக்கு அடியிலோ, வைத்து விடிந்த பின் சாப்பிடுவதற்கு முன் அந்த எள்ளை சாதத்துடன் கலந்து காகத்திற்கு வைக்க வேண்டும். சனி பகவான் கால் ஊனமுற்றவர், ஆதலால், உடல் ஊனமுற்றவர்களுக்கும், முதியவர்களுக்கும், ஏழைகளுக்கும் முடிந்த உதவிகள் செய்யலாம். தயிர் அன்னம் அளிப்பது மிகவும் நல்லது. விநாயகப் பெருமானை வணங்கி அவருக்கு நல்லெண்ணெயில் தீபம் இடுதல் நல்ல பலனைக் கொடுக்கும். சனிக்கிழமை வரும் பிரதோஷ நாட்களில் சிவ வழிபாடு சனியின் உக்கிரத்தைக் குறைக்கும். கரிநாளில் பைரவரை சிவப்பு மலர்களால் அர்ச்சித்தால் சனியின் தாக்கம் குறையும்.

வாதம் நீக்குபவர்........

இந்த சனி பிடித்தவன் சந்தைக்கு போனாலும், கந்தலும் அகப்படாது....

இந்த சனியின் பிறந்த நாளிலிருந்து குடும்பத்தை பாடாய்படுத்துகிறது. இப்படியாக சனியை பல கோணங்களில் வசை பாடினாலும் அவரின் மகத்துவம் சிறப்பானது. சனி ஒருவர் மட்டுமே பிற கிரகங்களை விட உலகத்து மக்களிடம் பிரபலமானவர்.

குரு கிரகத்திற்கு அடுத்த கிரகம் சனி, குறுக்களவு உத்தேசமாக 73,000 மைல். குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணு மாலையா கோவிலில் கற்சிலையாக தூணில் பெண் உருவில் காட்சி தருகிறார். நெல்லையை அடுத்த கருங்குளத்திலும் சனி பகவான் நீலாவுடன் அமர்ந்துள்ளார். மனித உடலில் தொடைகளுக்கு உடையவர்.

குடல் வாத நோய் இவரால் ஏற்படும். மேலும் முதுகு வலி, முடக்கு வாதம், யானைக் கால், பேய் தொல்லை, மூலநோய், மன தளர்ச்சி இவையும் இவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இந்நோய் பாதித்தவர்கள் சனியை வணங்குவதால் நோயின் வேகம் வெகுவாக தணியும்

மங்கு சனி, பொங்கு சனி

பரிகாரம் செய்வது எப்படி?

சனி கிரக பாதிப்பு இருப்பவர்கள் பொதுவாக எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். ஆதரவற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் உதவிகள் செய்தால் சனி பகவானின் பூரண அருளை பெறலாம். சனிபகவான் உச்சம் பெற்ற திருநள்ளாறு, திருகொள்ளிக்காடு, குச்சனூர் போன்ற தலங்களுக்கு சென்று வழிபட்டு வருவது கூடுதல் பலன்களை தரும். 

ஏழரைச்சனி

ஜாதகத்தில் சூரியனும் சனியும் உச்சம் பெற்று இருந்தால் பித்ரு தோஷம் என்று கொள்ள வேண்டும். இதற்கு உரிய பரிகாரம் தில ஹோமம் செய்வதுதான். மேலும் சனிக்கிழமைகளில் சனியையும் ஞாயிற்றுக்கிழமை சூரியன் மற்றும் சிவபெருமானை வணங்கினால் தோஷங்கள் மறையத் தொடங்கும் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய உதவுபவர்களுக்கும் சனியின் இருள் விரைவில் கிடைக்கும். அவர்களுக்கு சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

சனீஸ்வர பகவான் ஒரு ராசி வீட்டை கடக்கும் கால அளவு இரண்டரை ஆண்டுகள் ஆகும். சந்திரன் நின்ற வீட்டுக்கு 12,1,2 ஆகிய மூன்று வீடுகளை கடக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு 2+3=7 ஆண்டுகள் ஆகும். இதனையே ஏழரைச்சனி என்பர். 12-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை சிரசு சனி என்றும் 1-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை ஜென்மச்சனி என்றும் 2-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை பாதச்சனி என்றும் கூறுவர்.

ஒருவர் வாழ்வில் ஏழரைச்சனி என்பது மூன்று முறை வரலாம். முதல் முறை வருவது மங்குசனி என்றும் இரண்டாவது முறை வருவது பொங்குசனி என்றும் மூன்றாவது முறை வருவது மரணச்சனி என்றும் கூறப்படும். கோசார ரீதியில் சந்திரன் நின்ற வீட்டுக்கு 4-ல் சனி வருங்காலத்தை அஷ்டமச்சனி என்பர்.

ஒவ்வொருவர் வாழ்விலும் ஏழரை சனி குறுக்கிட்டே தீரும். சனி பகவான் அவரவர் பூர்வ புண்ணியத்துக்கு ஏற்ப நன்மையும் தீமையும் கலந்தே தருவார். சோதனைக் காலங்களில் மனமுருகி சனியை வழிபட்டால் தேவையான பரிகாரங்கள் செய்தால் சோதனையின் அளவு குறையும். சிவ பூஜை செய்பவரை சனி அவ்வளவு பாதிப்பது இல்லை. பூஜை, ஜெபம் மூலம் சனீஸ்வர பகவானை தியானிக்கலாம்.

சனி பவானுக்குரிய கோவில்களில் உள்ள தீர்த்ததில் நீராடி தக்கதான தருமங்களை செய்வது பயன்தரும். இவை இரண்டும் செய்ய இயலாதவர்கள் தாம் இருக்கும் இடத்திலேயே உள்ள சனீஸ்வர பகவானை மனமுருகி வழிபட்டு தினசரி காக்கைக்கு அன்னமிடுவதுடன் எள் தீபம் ஏற்றி வருவது மற்றொரு வகை சாந்தி பரிகாரம் ஆகும்.

சைவர்களாக இருந்தால் சிவபுராணம், பஞ்சாட்சர ஜெபம் செய்வது உத்தமம், வைஷ்ணவர்களாக இருந்தால் சுதர்சன மூல மந்திரம், ஜெபம், சுதர்ஸன அஷ்டகம், ஆஞ்சநேயர் கவசம் போன்றவற்றை வாசிக்கலாம். அல்லது ஜெபிக்கலாம். இதனால் சனியின் இன்னல்கள் நீங்கி சங்கடங்கள் அகன்று சர்வ மங்களம் பெருகும்.

கந்த சஷ்டி கவச பாராயணமும் சனி பகவானின் கோபத்தை தணிக்கும். தாரித்ரிய தஹன ஸ்தோத்திரத்தை வாசிக்க நலங்கள் விளையும். பிரதோஷ விரதமிருந்து சனீஸ்வர பகவானையும் சர்வேஸ்வரனையும் வழிபட்டால் பிறவிப்பிணி அகலும் பிறப்பின் பயன் புலப்படும். சனி பகவான் கோசார ரீதியில் வரும் போது ஏற்படும் நோய்களுக்கு மருந்து என்ன தெரியுமா? காராம் பசுவின் பாலை சிவபெருமானுக்கு அபிஷேகத்துக்கு அளிக்கலாம்.
இதனை அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்று அல்லது ஜென்ம தினத்தன்று வரும் சனிக்கிழமையன்று அல்லது சனி பிரதோஷம், சோம பிரதோஷம், செவ்வாய் பிரதோஷம், குரு பிரதோஷம் ஆகிய தினங்களில் அல்லது ஜென்ம, வாரம் அல்லது ஜெனன திதி ஆகிய நாட்களில் அளிக்கலாம். சிவதரிசனம் செய்வதும் சிவனின் உடல் பூராவும் கருத்த பசுவின் பாலை அபிஷேகம் செய்வதும் நலம். சிவதரிசனம் செய்பவரை, சிவபூஜை செய்பவரை சனீஸ்வர பகவான் பாதிப்பது இல்லை. 

சனி பகவான் ஸ்தான பலன்கள்

சனிபகவான் உச்ச, ஆட்சி, நீச வீடுகளில் அளிக்கும் பலன்களைக் காண்போம். சனி பகவான் துலாத்தில் உச்சம் அடைகிறார். மேஷத்தில் நீசம் அடைகிறார். மகரம், கும்பம் ஆகிய வீடுகளில் ஆட்சி பெறுகிறார். சனி பகவான் உச்சம் பெற்றிருப்பாரானால் அந்த ஜாதகர் எதையும் நல்ல முறையில் செய்து பலரது பாராட்டைப் பெறுவார்.

மனோதிடம், தீர்க்காயுள் பெற்று தொழில் துறையில் சிறந்து விளங்குவார். சனி பகவான் ஆட்சி பெற்றிருப்பாரானால் சுகபோக வாழ்க்கையுண்டாகும். தொழில் வளம் சிறக்கும். விவசாய நன்மை விருத்தியாகும். வாகன யோகமுண்டு. பிரயாண லாபம் உண்டாகும். சனி பகவான் நீசம் பெற்றிருப்பாரானால் நாத்திக வாதம் புரிவார்.

சாஸ்திர சம்பிரதாயங்களை நம்ப மாட்டார். எதற்கும் மனோ தைரியம் இருக்காது. கீழ்த்தரமானவர்களுடன் நட்பு கொள்வார். கடகம், சிம்மம், விருச்சிகம் ஆகிய வீடுகளில் சனி பகவான் பகை பெறுகிறார். சனி பகவான் பகை வீட்டிலிருப்பாரானால் உடல்நலம் அடிக்கடி பாதிக்கும். எதிலும் எப்போதும் ஒருவித சலிப்பான உணர்வு மிகுந்து காணப்படும். உற்றார், நண்பர் ஆதரவு இருக்காது. 

சனி என்பவர் யார்?

சூரிய பகவான் த்விஷ்டா என்பவரின் மகள் சுவர்ச்சலாதேவியை திருமணம் செய்தார். அவர்களுக்கு வைவஸ்தமனு, எமன் என்ற 2 மகன்களும் யமுனை என்ற மகளும் பிறந்தனர். சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாத சுவர்ச்சலாதேவி தன் நிழலை ஒரு பெண்ணாக மாற்றினாள்.

அந்த பெண்ணுக்கு சாயாதேவி என்று பெயரிட்டாள். பிறகு அவள் இனி நீ சூரியனுடன் குடும்பம் நடத்து என்று கூறி விட்டு தன் தந்தை வீட்டுக்கு சென்று விட்டாள். இதையடுத்து சாயாதேவிக்கு சூரியன் மூலம் தபதீ என்ற மகளும் ச்ருதச்ரவசி, ச்ருதசர்மா என்ற 2 மகன்களும் பிறந்தனர்.

இவர்களில் ச்ருதசர்மா உன்னத பலன்கள் பெற்று சனிபகவான் என்ற அந்தஸ்தை பெற்றார். சிவனை வழிபட்டு ஈஸ்வர பட்டமும் பெற்றார். 

சனிபகவானின் பார்வை

சனிபகவானின் பார்வையானது மிகவும் தீட்சண்யம் வாய்ந்தது. இளம் வயதில் இருந்தே சனி பார்வை விழிகளில் அபார சக்தி இருந்தது. அவரது உக்கிர பார்வைபட்டவர்கள் பலம் இழந்து விடுவார்கள் என்பது ஜதீகமாகும். ஒரு சமயம் சிவனிடம் அரிய வரம் பெற்ற ராவணன் நவக்கிரகங்களை அடக்கி தன் வீட்டில் படிக்கட்டுகளாக குப்புறப்போட்டு வைத்திருந்தான்.

அதை பார்த்த நாரதர், ராவணா சனியை நேருக்கு நேர் பார்க்க பயமா? என்று கேட்டார். உடனே ராவணன் ஆவேசத்துடன், சனியே என்னை நன்றாக நிமிர்ந்து பார் என்று கூறினான். சனியும் நிமிர்ந்து பார்க்க, மறு வினாடியே ராவணனிடம் இருந்த சக்தி பலம், வீரம், வரம் எல்லாம் போய் விட்டது அவனை ராமர் மிக எளிதாக வென்றார்.

சனியின் பார்வைக்கு இத்தகைய அபார சக்தி உண்டு. சனி பார்வை தனித்துவம் கொண்டது என்பதற்கு இது போன்று பல உதாரணங்களை சொல்லலாம்.
சனி பகவானின் குணம்

ஓருவரது ஜாதகத்தில் சனி பகவான் உச்சம் பெற்று இருந்துவிட்டால் திரண்ட செல்வத்தை தந்து சமுதாயத்தில் உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்று அனைவராலும் பாராட்டவைப்பார். சனி பகவானின் பலத்தைப்பொருத்துத்தான் ஒரு மனிதனின் நேர்மையை கூற முடியும்.

சனி கெட்டு நீசம் அடைந்துவிட்டால் காக்கை வலிப்பு மற்றும் நரம்புக் கோளாறுகள் வந்துவிடும். அவ்வாறு வரும்போது சனிக்குறிய பரிகாரங்களை செய்து மருத்துவரின் உதவியையும் நாடினால் வெற்றிகள் கண்டிப்பாக உண்டாகும்.

சனி திசையில் ஒருவருக்கு கிடைக்கும் அனுபவம் இருக்கிறதே அந்த அனுபவத்தை எங்கும் பெற முடியாது. ஒருவரது வாழ்க்கையில் 7 சனி வரும்போது அவர் கும்பராசியாகவோ அல்லது மகர ராசியாகவோ, அல்லது துலாம், ரிஷபம், மிதுனம், கன்னி ராசிகளாகவோ இருந்தால் நல்வழிப்படுத்தி விடுவார்.

அதே சமயத்தில் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம் போன்ற ராசிகளாக இருந்தால் கடினமாக தண்டித்து பிறகு நல்வழிப்படுத்துவார். அதே சமயத்தில் மீனம், தனசு ராசிக்காரர்களுக்கு தண்டனையை கொடுத்து முன்னேற்றப்பாதையை காட்டுவார். எனவே, நவ்வழிப்படுத்துவதில் இவருக்கு நிகர் இவரே உலகம்.

விரயச்சனி

கோசார ரீதியில் சனி பகவான் சந்திரன் நின்ற ராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் காலம் விரயச்சனி ஆகும். இதற்கு சனிக்கிழமை தவறாது சனீஸ்வர பகவானை வலம் வர வேண்டும். எள் எண்ணெய் தீபம் ஏற்றினால் நலம். தினசரி காக்கைக்கு அன்னம் இடுவது.

இல்லையென்று இரப்போர்க்கு இல்லை என்று சொல்லாமல் தன்னால் இயன்ற தான தர்மங்களை செய்து வருவதும் நலம். இது மிகமிக எளிமையானது ஆகும். விரயச்சனி காலத்தில் இதுபோல செய்யலாம்.

`ஜென்மச்சனி'

கோசார ரீதியில் சனிபகவான் சந்திரன் நின்ற ராசி இல்லத்துக்கே வந்து நிற்கும் காலம் `ஜென்மச்சனி' இதற்கு தினசரி அல்லது சனிக்கிழமைகளில் முக்கூட்டு எண்ணெய் (நல்லெண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய்) விளக்கேற்றி சனி பகவானை வலம் வருவது நலம்.

இந்த காலத்தில் பசுவின் பாலை சிவபெருமானுக்கு அபிஷேகத்துக்கு வழங்கலாம். ஏழைகளுக்கு கறுப்பு ஆடை தானம் வழங்கலாம். இந்த தானம் அவரவர் ஜென்ம வாரமாகவோ அல்லது ஜென்ம நட்சத்திரமாகவோ இருப்பது மிகவும் சிறப்பு ஆகும்.

உடலில் பலகீனம், நோய் போன்றவை பீடித்து நீங்காமலிருப்பின் தவறாது பிரதோஷ விரதமிருத்தல் சிறப்பு. அதிலும் சனிப்பிரதோஷ விரதம் இருப்பது மிக மிக சிறப்பு. 

சனி பகவான்

பெயர் - சனி பகவான், சனீஸ்வரன், முடவன், மந்தன்
தந்தை - சூரிய பகவான்
தாயார் - உஷா, சாயாதேவி
மனைவிகள் - நீலாதேவி,
சேஸ்டா தேவி புத்திரர் - குளிகன் அல்லது மாத்தி
நண்பர்கள் - புதன், சுக்கிரன்
சின்னம் - தராசு
மொழி - அந்நிய பாஷை
ஆசனம் - வில்வ வடிவம்
பாலினம் - அலி
சாஸ்திர பெயர் - மேற்கோள்
கோத்திரம் - காசியபர்
வடிவம் - குள்ளம்
நாடி - வாத நாடி
உடல்உறுப்பு - நரம்பு (தொடை)
உணவு - எள்ளு சாதம்
உடமை - ஆயுளுக்கு முழுப் பொறுப்பு
ரத்தினம் - கருநீலம், நீலம் பஞ்சபூதத்
தன்மை - ஆகாயம்
குணம் - குரூரர்
நன்மை அடையும் இடம் - 3, 6, 11 தசை
வருடம் - 19 வருடம் பலன் கொடுக்கும்
பார்வை - 3, 7, 10
ராசி சஞ்சாரம் - 2 வருடம்
பிணி - வாதம், நரம்பு நோய்
பகைவர்கள் - செவ்வாய், சூரியன், சந்திரன்
கிழமை - சனிக்கிழமை
பூஜிக்கும் தேவதை - துர்க்கா, சாஸ்த்தா
பெற்ற பட்டம் - ஈஸ்வர பட்டம்
பரிகார தலங்கள் - 1. திருநள்ளாறு, 2. குச்சனூர், 3. திருக்கொள்ளிக்காடு
திசை - மேற்கு
அதிதேவதை - எமன்
தேவதை - பிரஜாபதி
தலம் - திருநள்ளாறு
இனம் - சூத்திரர்
நிறம் - கருமை
வாகனம் - காகம்
தானியம் - எள்
மலர் - கருங்குவளை மற்றும் வன்னி
ஆடை - கருப்பு நிற ஆடை
ரத்தினம் - நீலமணி
சுவை - கசப்பு
சமித்து - வன்னி
உலோகம் - இரும்பு
பயன் - நோய்,
வறுமை, சிரமங்கள், நீங்குதல்
தீபம் - எள்ளு தீபம் ஆட்சி
வீடு - மகரம், கும்பம்
உச்ச வீடு - துலாம்
நீச்ச வீடு - மேஷம்
நட்பு வீடு - ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு, மீனம்
சம வீடு - விருச்சிகம்
பகை வீடுகள் - கடகம், சிம்மம் 
சனியைப் போல கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை

ஜோதிட விதிப்படி ஒருவர் பிறக்கும் நேரத்தில் சந்திரன் எங்கு சஞ்சரிக்கின்றாரோ அதையே அவரின் ஜென்ம ராசியாக கணக்கில் கொள்கிறோம். ஜென்ம ராசியை வைத்து பலன் கூறுவதே கோட்சாரப் பலன் ஆகும். கோட்சார ரீதியாக ஒவ்வொரு கிரகங்களின் நிலையையும் ஆராயும்போது ஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய கிரகமாக சனிபகவானே இருக்கிறார்.

சனியைப் போல கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என்றே கூறலாம். சனி பகவான் 12 ராசியை சுற்றிவர 30 வருடங்கள் எடுத்துக் கொள்கிறார். அதனால்தான் 30 வருடம் வாழ்ந்தவரும் இல்லை. 30 வருடங்கள் தாழ்ந்தவரும் இல்லை என்ற பழமொழி உள்ளது. பொதுவாக ஒருவருக்கு சனியின் முதல் சுற்று மங்கு சனி என்றும் இரண்டாவது சுற்று பொங்கு சனி என்றும் கூறுவர்.

குறிப்பாக சனிபகவான் 3, 6, 11-ல் சஞ்சரிக்கும் காலங்களில் எல்லா வகையிலும் முன்னேற்றமான பலன்களை ஏற்படுத்துவார். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பொருளாதார மேன்மை, குடும்பத்தில் சுபிட்சம் தொழில் வியாபார உத்தியோக ரீதியாக உயர்வுகள் உண்டாகும். எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கக் கூடிய வலிமை வல்லமை. உடல்நிலையில் ஆரோக்கியம் போன்ற அனுகூலமான நற்பலன்கள் உண்டாகும்.

ஆனால், சனி பகவான் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிக்கும்போது அதிகப்படியான சோதனைகளை உண்டாக்குவார். குறிப்பாக 12, 1, 2-ல் சஞ்சரிக்கும் காலங்களை ஏழரை சனி என்று கூறுவார்கள். ஜென்மராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் காலத்தை விரைய சனி என்றும் 1-ல் சஞ்சரிக்கும் காலத்தை ஜென்ம சனி என்றும் 2ல் சஞ்சரிக்கும் காலத்தை குடும்ப சனி, பாத சனி என்றும் கூறுவார்கள்.

இக்காலங்களில் உடல்நிலையில் பாதிப்புகள் குடும்பத்தில் பிரச்சினைகள், நெருங்கியவர்களிடையே கருத்துவேறுபாடுகள், தொழில் வியாபாரத்தில் நெருக்கடிகள், உத்தியோகத்தில் தேவையற்ற அவப்பெயர் உண்டாகும். பொருளாதார நெருக்கடிகளைக் கொடுக்கும். தேவையற்ற விரயங்கள் உண்டாகும். சனி 4-ல் சஞ்சரிக்கும் காலங்களை அர்த்தாஷ்டம சனி என்கிறோம்.

இக்காலங்களில் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் சுக வாழ்வு சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகும். சனி 7-ல் சஞ்சரிப்பதை கண்ட கனி என்கிறோம். இக்காலங்களில் உடல்நிலையில் பாதிப்பு, கணவன்-மனைவி யிடையே கருத்து வேறுபாடு, நெருங்கியவர்களிடையே கருத்துவேறுபாடு, கூட்டுத் தொழிலில் வீண் பிரச்சினைகள், விரயங்கள் உண்டாகும். சனி 8-ல் சஞ்சரிக்கும்போது, அஷ்டம சனி உண்டாகிறது.

இக்காலங்களில் அதிகப்படியான சோதனைகளையும் எதிர்கொள்ள நேரிடும். உடல்நிலையில் பாதிப்பு, நெருங்கியவர்களால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். குறிப்பாக சனிபகவான் சாதகமற்று சஞ்சரிக்கும்போது சிலருக்கு அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தும். சனி ஜெனன காலத்தில் நீசம் பெற்றிருந்தாலும் அஷ்டம சனி, ஏழரை சனி காலங்களில் பிறந்திருந்தாலும் பாதிப்புகள் அதிகரிக்கும்.

தொழில் ஸ்தானமான 10-ல் சனி சஞ்சரிப்பதும் நல்லதல்ல. சனி சாதகமற்ற பலன்களை ஏற்படுத்தும் என்றாலும் ஜெனன காலத்தில் ஆட்சி உச்ச வீடுகளாகிய மகரம், கும்பம், துலாகத்தில் அமைந்திருந்தாலும் சனியின் நட்சத்திரங்களாகிய பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் சனியால் அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படாது