Thursday, October 16, 2014

புதன் திசை

புதன் திசை

 புதன் திசை மொத்தம் 17 வருடங்களாகும். புதன் பகவான் கல்விகாரகன் ஞானகாரன் தாய் மாமனுக்கு காரகனாக விளங்குகிறார். கணக்கு, கம்பியூட்டர் சம்மந்தப்பட்டவைகளுக்கும், கமிஷன் ஏஜென்ஸி போன்றவற்றிற்கும் காரகனாகிறார். நல்ல ஞாபக சக்தி, நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் நரம்பு தொடர்புடைய பிரச்சனைகளுக்கும் காரகம் வகுக்கிறார்

 புதன் சுப கிரக சேர்க்கை பெற்றால் சுபராகவும், பாவிகள் சேர்க்கைப் பெற்றால் பாவியாகவும் செயல்படுவார். புதன் சுபராக இருந்தால் கேந்திர திரிகோண ஸ்தானங்களிலிருந்தால் மிகவும் சிறப்பு. அதுவே பாவியாக இருந்தால் 3,6,10,11 ஆகிய ஸ்தானங்களில் இருந்தால் நற்பலன்களை வழங்குவார்.

 புதனுக்கு சுக்கிரன் சனி நட்புகிரகங்களாகும். புதன் இந்த நட்சத்திரங்களின் சேர்க்கையோ, சாரமோ பெற்றிருந்தாலும், இவர்களின் வீட்டிலிருந்தாலும் புதன் திசை வரும் காலங்களில் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். சொந்த தொழில் யோகத்தை கொடுக்கும். நல்ல அறிவாற்றல் பேச்சு திறன் ஞாபக சக்தி, பலரை வழி நடத்தி செல்லும் ஆற்றல் உண்டாகும். பல லட்சங்கள் சம்பாதிக்கும் யோகம் அமையும்.

 அதுவே புதன் பலமிழந்திருந்தால், முட்டு வலி, கை கால் வலி, நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், ஆண்மை  குறைவு, உடல் பலவீனம் உண்டாகும். பலவகை பிரச்சனைகளும் தேடி வரும்.

   ஆயில்யம், கேட்டை, ரேவதி போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு புதன் திசை முதல் திசையாக வரும் பலமாக அமைந்து புதன் திசையானது. ஒருவருக்கு குழந்தை பருவத்தில் நடைபெற்றால் நல்ல அறிவாற்றல் அழகான பேச்சுத் திறன் உண்டாகும். இளமை பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் சாதனைகள் செய்யும் அமைப்பு, நல்ல அறிவாற்றல் பேச்சாற்றல், பெரியோர்களின் ஆசி போன்ற யாவும் அமையும். மத்திம வயதில் நடைபெற்றால் நல்ல அறிவாற்றல் கௌரவமான பதவிகளை அடையும் வாய்ப்பு பேச்சு திறனால் சமுதாயத்தில் நல்ல கௌரவமும் உயர்வு போன்ற யாவும் உண்டாகும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் கௌரவ பதவிகளை வகிக்கும் வாய்ப்பு நல்ல ஞாபக சக்தி, மற்றவர்களை வழி நடத்தி செல்லும் ஆற்றல், சுறுசுறுப்புடன் செயல்படும் திறன், உடல் ஆரோக்கியத்தில் நல்ல மேன்மைகள் உண்டாகும்.

   அதுவே புதன் பலமிழந்திருந்து  குழந்தைப் பருவத்தில் திசை நடைபெற்றால் காதுகளில் கோளாறு, பேச்சில் தெளிவில்லாமை மந்த நிலைமை கொடுக்கும். இளமை பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் தடை, உடல் பலஹீனம், ஞாபகமறதி  நெருங்கியவர்களிடையே பகை, பேச்சில் நிதானமின்மை உண்டாகும். மத்திம வயதில் நடைபெற்றால் மனக்குழப்பம், இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றமின்மை, உற்றார் உறவினர்களிடையே பகை, நரம்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் நரம்பு தளர்ச்சி ஞாபகமறதி, மூளையில் பாதிப்பு, உடல் பலவீனம், பொருளாதார நெருக்கடி, உறவினர்களிடையே பகை உண்டாகும்.

புதன்தசா புதன்புக்தி

  புதன் திசையில் புதன் புக்தியானது 2 வருடம் 4 மாதம் 27 நாட்கள் நடைபெறும். 

 புதன் பலம் பெற்று அமைந்திருந்தால் நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், உயர்வான அதிகாரம் பெற்று வாழம் அமைப்பு, மனைவி பிள்ளைகளால் அனுகூலம், குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, புத்திர வழியில் பூரிப்பு, புதுமையான வீடு, ஆடை ஆபரண கேர்க்கை போன்ற நற்பலன்கள் உண்டாகும்.

 புதன் பலமிழந்திருந்தால் மனைவி பிள்ளைகளுக்கு ஆரோக்கிய பாதிப்பு, கலகம் துக்கம், ஞாபகமறதி ஊர் விட்டு  ஊர் சுற்றி திரியும் அமைப்பு, கெட்ட பெண்களின் சகவாசம், நேரத்திற்கு சாப்பிட முடியாத நிலை நரம்பு தளர்ச்சி போன்ற அனுகூல மற்ற பலன்கள் ஏற்படும். உறவினர்களின் ஆதரவும் குறையும்.
   
புதன்திசா கேதுபுக்தி

   புதன் திசையில் கேது புக்தியானது 11மாதம் 27நாட்கள் நடைபெறும். 

 கேது பலம் பெற்று நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் வண்டி வாகன யோகம், வியாபாரத்தில் மேன்மை, மனைவி பிள்ளைகளால் மகிழச்சி, பூமி மனை வாங்கும் யோகம், தாராள தனவரவு, பெண்களால் அனுகூலம் நவீன பொருட்கள் சேரும் யோகம், ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு, தெய்வ தரிசனங்களுக்காக பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

 கேது நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் குடும்பத்தில் கலகம், அடிமை வாழ்க்கை, அதிக பயம் வண்டி வாகனங்களால் நஷ்டம், பணவிரயம், பூர்வீக சொத்துகளால் பிரச்சனை பிரிவு, உத்தியோகத்தில் தேவையற்ற இடமாற்றம், தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாக கூடிய நிலை உண்டாகும்.

புதன்திசா சுக்கிர புக்தி

புதன் திசையில் சுக்கிர புக்தியானது 2வருடம் 10மாதம் ந¬பெறும். 

 சுக்கிர பகவான் பலமாக அமைந்திருந்தால் தான தருமங்கள் செய்யும் வாய்ப்பு, வீடு மனை வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் புத்திர பாக்கியம் உண்டாகும் வாய்ப்பு, குடும்பத்தில் சுபிட்சம், அதிகாரமுள்ள பதவிகள் அடையும் யோகம் ஊதிய உயர்வுகள், நண்பர்களால் உதவி, முதலாளிகளிடையே ஒற்றுமை, பெண்களால் அனுகூலம் ஆடை ஆபரண சேர்க்கை யாவும் உண்டாகும்.

 சுக்கிரன் பலமிழந்திருந்தால் உடல் நிலை பாதிப்பு, மர்ம ஸ்தானங்களில் நோய், சர்க்கரை வியாதி, குடும்பத்தில் வறுமை, மனைவி பிள்ளைகளுக்கு கண்டம், எடுக்கும் முயற்சிகளில் தடை சுகவாழ்வு பாதிப்பு, ஈனப் பெண்களின் தொடர்புகளால் அவமானம், வீண் விரயங்கள் உண்டாகும். 


புதன்திசை சூரிய புக்தி

    புதன் திசையில் சூரிய புக்தியானது 10மாதம் 6நாட்கள் நடைபெறும். 

 சூரியன் பலம் பெற்றிருந்தால் அரசியலில் பெயர் புகழ் கௌரவம் உயரக்கூடிய வாய்ப்பு, எடுக்கும் காரியங்களில் வெற்றி, பகைவரை வெற்றி கொள்ள கூடிய வலிமை வல்லமை தந்தை, தந்தை வழி உறவுகளால் அனுகூலம் மனைவி பிள்ளைகளால் மகிழச்சி உண்டாகும். அரசு வழியில் அனுகூலங்கள் கிட்டும்.

 சூரியன் பலமிழந்திருந்தால் பகைவர்களால் விரோதம், தேவையற்ற வம்பு வழக்குகள், தனவிரயம் வண்டி வாகன இழப்பு, தந்தைக்கு தோஷம், தந்தை வழியில் அனுகூலமற்ற நிலை, உறவினர்களிடம் விரோதம், மனைவி பிள்ளைகளிடையே கருத்து வேறுபாடு, உஷ்ண கோளாறு, கண்களில் பாதிப்பு அரசு வழியில் தொல்லை உண்டாகும்.

புதன் திசையில் சந்திரபுக்தி

    புதன் திசையில் சந்திர புக்தியானது 1 வருடம் 5 மாதங்கள் நடைபெறும். 

 சந்திரன் பலம் பெற்றிந்தால் அனுகூலமான பயணங்கள், வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்பு உண்டாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடும் யோகம், பணவரவுகளில் மகிழ்ச்சி எடுக்கும் காரியங்களில் வெற்றி, அரசு வழியில் அனுகூலம், ஆடை ஆபரண சேர்க்கை, பூமி மனையால் யோகம், ஆடம்பரமான உணவுகளை உண்ணும் யோகம், நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். ஜலதொடர்புடைய தொழில் ஏற்றம் ஏற்படும்.

 சந்திரன் பலமிழந்திருந்தால் பயணங்களால் தேவையற்ற அலைச்சல், ஜலத்தால் கண்டம், மனதில் வீண் குழப்பம், நிம்மதியற்ற நிலை, உடல் நிலையில் பாதிப்பு, மனைவி மற்றும் தாயிக்கு தோஷம், வம்பு வழக்குகள்  தோல்வி, எடுக்கும் காரியங்களில் தடை ஏற்படும் மனநிம்மதி குறையும்.

புதன்திசையில் செவ்வாய் புக்தி
   
புதன் திசையில் செவ்வாய் புக்தியானது 11 மாதம் 27நாட்கள் நடைபெறும். 

 செவ்வாய் பலம் பெற்றிருந்தால் பூமி மனை யோகம், வண்டி வாகனங்கள்  வாங்கும் வாய்ப்பு, அரசு வழியில் அனுகூலம், நல்ல நிர்வாகத்திறன், தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, உடல் நலத்தில் சிறப்பு, எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும். 

 செவ்வாய்  பலமிழந்திருந்தால் ரத்த சம்மந்தமான பாதிப்புகள், உடலில் காயம்படும் அமைப்பு உடன் பிறப்புகளிடையே வீண் பிரச்சனை, அரசு வழியில் தொல்லை, காரியத்தடை, எதிர்பாராத விபத்தால் கண்டம் உண்டாகும்.

புதன் திசையில் ராகுபுக்தி

    புதன் திசையில் ராகுபுக்தியானது 2&வருடம் 6&மாதம் 18&நாட்கள் நடைபெறும். 

 ராகு பலம் பெற்று நின்ற வீட்டதிபதியும் பலம் பெற்றிருந்தால் அரசு வழியில் மேன்மை, உயர் பதவிகளை வகுக்கும் யோகம் புதுமையான விஷயங்களில் ஈடுபாடு வீடு மனை ஆடை ஆபரண சேர்க்கை, புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல் பகைவரை வீழ்த்தும் பலம் உண்டாகும்.

 ராகு பலமிழந்து நின்ற வீட்டதிபதியும் பலமிழந்திருந்தால் தீய  நட்புகளால் பிரச்சனை, உணவே விஷமாக கூடிய நிலை, விஷ பூச்சிகளால் ஆபத்து, கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு, வியாதி, மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள், தற்கொலை எண்ணம், இடம் விட்டு இடம் அலையும் அவ நிலை  பகைவர்களால் தொல்லை போன்றவை உண்டாகும்.

புதன் திசையில் குருபுக்தி
   
புதன் திசையில் குருபுக்தியான 2வருடம் 3மாதம் 6நாட்கள் நடைபெறும். 

 குருபகவான் பலம் பெற்றிருந்தால் தாராள தனவரவு, குடும்பத்தில் சுப காரியம் கைகூடும் அமைப்பு, உற்றார் உறவினர்களின் ஆதரவு, ஆடை ஆபரண சேர்க்கை பூமி மனை, வண்டி வாகனங்கள் சேரும் யோகம்  குடும்பத்தில் சுபிட்சம், புத்திர வழியில் பூரிப்பு, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பூர்வீக சொத்துகளால் லாபம் பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.

 குரு பலமிழந்திருந்தால் உடல் நிலை பாதிப்பு உறவினர்களிடையே பகை, பூமி மனை வண்டி வாகன இழப்பு, பிராமணர்களின் சாபத்திற்கு ஆளாக கூடிய நிலை, குடும்பத்தில் பிரச்சனை, சுபகாரியங்களுக்கு தடை உண்டாகும்.

புதன் திசையில் சனி புக்தி

   புதன் திசையில் சனி புக்தியானது 2&வருடம் 8&மாதம் 9&நாட்கள் நடைபெறும். 

 சனி பகவான் பலம் பெற்றிருந்தால் தொழில் வியாபாரம் முலம் லாபம், இரும்பு சம்பந்தபட்ட தொழிலில் அனுகூலம்  நிறைய வேலையாட்களை வைத்து வேலை வாங்கும் வாய்ப்பு, தன தான்ய விருத்தி, ஆடை ஆபரணம் சேரும் அமைப்பு, புண்ணிய தீர்த்த யாத்திரை, தெய்வ பக்தி உண்டாகும் அமைப்பு, தாய் தாய் வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும்.

 சனி பலமிழந்திருந்தால் விபத்துகளை சிந்திக்கும் நிலை, தூர பிரதேஷங்களில் சென்று வாழும் நிலை, உறவினர்களுடன் விரோதம் கலகம் அரசு வழியில்  அனுகூலமற்ற நிலை, திருமணதடை வீண் பழி, வம்பு வழக்குகளை  சந்திக்கும் நிலை எடுக்கும் காரியங்களில் தோல்வி போன்ற சாதகமற்ற நிலை உண்டாகும்.

புதன் பகவானுக்கு பரிகாரங்கள்
    
 விஷ்ணு பகவானை புதன் கிழமைகளில் விரதமிருந்து வழிபாடு செய்வது, சதர்சன ஹோமம் செய்வது, சதர்சன எந்திரம் வைத்து வழிபடுவது பச்சை பயிறு, பச்சை நிற ஆடை,நோட்டு புத்தகங்கள் போன்றவற்றை படிக்கும் பிள்ளைகளுக்கு தான அளிப்பது நல்லது. மரகதக்கல் மோதிரத்தையும் அணியலாம்.

No comments:

Post a Comment