நில்; கவனி; முன்னேறு!
* எந்தச் செயலையும் தன் முனைப்போடு செய்யுங்கள். மற்றவர்கள் சொல்வதற்காகச் செய்ய வேண்டாம்.
* மற்றவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வதில் ஆர்வமுடையவராய் இருங்கள். உங்கள் வளர்ச்சிக்கு அது மிகவும் உதவியாக இருக்கும்.
* தவறுகளைத் திருத்திக் கொள்ளுங்கள். மாறாகச் சமாதானம் செய்து கொள்ளாதீர்கள்.
* நிதானமாய் செயல்படுங்கள். அவசரம், ரென்ஷன் முதலியவைகளை அறவே தவிர்த்து விடுங்கள்.
* சுய ஒழுக்கத்தை உங்களிடம் இருந்து மற்றவர்கள் கற்றுக் கொள்ளும் விதமாக நடந்து கொள்ளுங்கள்.
* உங்கள் திறமையில் நம்பிக்கை வைத்துச் செயற்படுங்கள். காக்காய் பிடிப்பது, ஜல்ரா தட்டுவது போன்றவைகளை அறவே தவிருங்கள்.
* மற்றவர்களின் வளர்ச்சிக்கு உதவுபவராக இருங்கள்.மாறாக பொறாமைப்படுபவராக இருக்க வேண்டாம்.
* உங்களின் பேச்சிலும் செயலிலும் வெளிப்படையாக இருப்பதன் மூலம் மற்றவர்களிடம் உங்களின் நம்பகத்தன்மையை அதிகரியுங்கள்.
* எத்தனை வேலைகலை முடிக்கிறோம் என்பதல்ல முக்கியம். எத்தனை அழகாகவும் நேர்த்தியாகவும் திறமையாகவும் முடிக்கிறோம் என்பதே முக்கியம்.
* உங்களின் செயல்பாட்டினால்; வேலையைச் செய்து முடிக்கும் தன்மையினால் மற்ரவர்களைக் கவர முயற்சி செய்யுங்கள். மாறாக உங்கள் சாதுரியமான பேச்சினால் அல்ல.
* உங்கள் திறமையில் நம்பிக்கை உடையவராய் இருங்கள். மாறாக கர்வமோ தலைக்கனமோ கொள்ள வேண்டாம்.
* அன்றய வேலையை அன்றே செய்து முடிக்கப் பழகுங்கள். நாளைக்கு என்று தள்ளிப் போட வேண்டாம்.
* எடுத்துக் கொண்ட வேலையில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். ஏனோ தானோ என்று கடமைக்காகச் செய்து முடிக்க வேண்டாம்.
* கூட்டுகிற வேலையாக இருந்தாலும் அதில் உங்கள் திறமையைக் காட்டுங்கள்.
* உங்கள் வேலை நீங்கள் முன்னுக்கு வருவதற்காக அளிக்கப்பட்ட பொன்னான சந்தர்ப்பம்.அதில் முறையாகச் செயற்பட்டு உங்கள் முன்னேற்றத்திற்காகப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment