செல்வாக்கின் முக்கியம் என்ன?
வெற்றி வாய்ப்புகளை உருவாக்கும் எண்ணம் இருப்பின், மற்றவர்களிடம் நமக்கிருக்கும் செல்வாக்கினை வளர்த்துக்கொள்ள வேண்டும். நல்ல செல்வாக்கு நண்பர்களை உருவாக்கித் தரும்.
செல்வாக்குப் பெற தேவையான குறிப்புகள்:
1. உணர்ச்சி வயப்படாதிருத்தல்:
மற்றவர்களின் உணர்ச்சி வேகத்திற்குப் பணியாமல் உறுதியாக இருந்தால், நமது ஆற்றல் அதிகரிக்கும். அதே சமயம் எதிராளி தன் வசம் இழக்க நேரிடும். மன உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் வாழ்வு மேம்படும்.
2. திட்டமிடுதல்:
திட்டமிட்டு வாழ்பவர்கள் எந்தப் பிரச்சினைகளையும் சமாளிக்க வல்லவர்கள். பேச ஆரம்பிக்கும் முன் என்ன பேசப் போகிறோம், எப்படிப் பேச வேண்டுமெனத் திட்டமிட்டு, அதை வழிகாட்டியாகக் கொண்டால் அநாவசிய பயம் நீங்கும். தோல்வி குறையும்.
3. பிறர் கவனத்தைக் கவர்தல்:
மற்றவர்களின் மனதைக் கவர்ந்து அவர்களின் நம்பிக்கையைப் பெற்றால் நமது நோக்கம் நிறைவேறும். வியாபாரத்தில் விளம்பரம் செய்வதைப் போலாகும் இது. மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட முறையில் நம்மை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும். உதாரணமாக, ஆடை, அணிகலன்கள் அணிவதில் வித்தியாசம் காட்டுவது. இதன் மூலம் பிறரது கவனத்தை எளிதாக கவர முடியும்.
4. வாக்கு கொடுப்பதைத் தவிர்த்தல்:
தனிப்பட்ட வகையில் வாக்குக் கொடுக்கும் போது நமது பலவீனங்கள் வெளிப்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எடுத்ததற்கெல்லாம் வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்த்து செயலைச் செய்து முடித்தபின் பேசுவதே நலம்.
5. விரோதிகளிடம் கவனமாயிருத்தல்:
விரோதிகளிடம் பேசும் போது முதலில் அவர்களின் பலத்தை நிர்ணயிக்க வேண்டும். அவர்களது சக்தியை சரியாகப் புரிந்து கொள்ளாமல் சீண்டினால் காயப்பட்டுவிடுவோம்.
No comments:
Post a Comment