Thursday, August 28, 2014

உங்கள் மனதை சந்தோசமாக வைத்து இருப்பது எப்படி?

மனிதர்களுக்கு பெரும்பாலும் சந்தோசத்தை கொடுப்பது 
அவர்கள் மனது சந்தோசமாக இருக்கும் போதுதான். 
அந்த சந்தோசம் என்பது அவர்கள் நினைக்கும் நினைப்பை 
பொறுத்துதான்.

ஒரு காரியத்தில் ஈடுபடும்போது அந்த காரியத்தில் 
வெற்றி கிட்டுவது போல் நினைக்க வேண்டும். 
வெற்றி அடைவது போல் உங்கள் மனத்திரையில் 
காண வேண்டும். 

வெற்றி அடைவதை போன்று மனதில் உருவாக படுத்தி 
பார்க்கும்போது தோல்வி அடைந்துவிடுவோம் 
என்ற எண்ணங்கள் உருவாகுவதற்கு அங்கு வாய்ப்பு 
இல்லை. 

வெற்றியடைந்து விடுவோம் என்று உங்கள் மனத்தால் 
நினைக்கும் போது அந்த காரியம் வெற்றி அடைந்து 
விடுவதர்க்குண்டான அணைத்து வழிகளையும் 
உங்கள் மனது ஏற்படுத்தி கொடுத்து விடும். 

உங்கள் மனதை சந்தோசமாக வைத்திருப்பதற்கு 
இன்னும் நிறைய வழிகள் உள்ளன.

ஒரு நாளை துவக்கும் போது உங்கள் மனதில் 
சந்தோசமான நிகழ்சிகளை மட்டும் நிரப்பி வையுங்கள். 
அப்படி செய்யும் போது அந்த நாள் முழுவதும் 
மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருப்பீர்கள். 
அந்த உற்சாகம் அன்று முழுவதும் நீங்கள் ஈடுபடும் 
காரியங்களில் வெற்றியடைய உதவுகிறது.

மற்றவர்களிடம் பேசும்போது சந்தோசமான 
ஆக்க பூர்வமான (positive speech) விசயங்களை மட்டும் பேசுங்கள். 
அந்த இடத்தில ஒரு மகிழ்சிகரமான சூழ்நிலை உருவாகுவதற்கு 
காரணமாக இருங்கள். அப்போது மற்றவர்களால் நீங்கள் 
வெகு சுலபமாக கவரப்பட்டுவிடுவீர்கள். 

உங்கள் மனத்திரையில் உங்கள் வாழ்க்கையில் நடந்த 
மகிழ்சிகரமான நிகழ்சிகளை படங்களாக மாட்டி வையுங்கள். 
அவை தந்த மகிழ்சிகரமான நினைவுகளை அடிக்கடி 
நினைவு கூர்ந்து உங்கள் காரியங்களில் செயல் படுங்கள். 
வெற்றியும் கிட்டும். மன அமைதியும் கிட்டும். 

உங்களுடைய அன்றாட வேலைகளை போல மனதில் 
அடிக்கடி சந்தோசமான நிகழ்சிகளை நினைப்பதற்கு நேரம் 
ஒதுக்க வேண்டும். அடிக்கடி உங்கள் மனதில் சந்தோசமான 
நிகழ்சிகளை செலுத்தி கொண்டே இருந்தால் உங்களுக்கு 
மன அமைதியும் கிட்டும் அதன் விளைவாக உங்களுடைய 
காரியத்தில் வெற்றியும் கிட்டும். 

ஒரு காரியம் நடக்காது அல்லது தோல்விதான் என்ற 
நினைவு வரும்போது உடனடியாக அதற்க்கு மாற்று மருந்தாக 
நாம் வெற்றியடைய போகிறோம் நமக்கு சாதகமாக 
அந்த காரியம் நடக்கும் என்று எண்ணுங்கள். 

உடனே அந்த தோல்வி எண்ணங்கள் 
இருந்த இடம் தெரியாமல் போய் விடும். உங்கள் காரியமும் 
நிச்சயமாக வெற்றி அடையும். 

எந்த சக்தியாலும் உங்களை தோல்வி அடைய செய்ய முடியாது 
என்று அடிக்கடி எண்ணி கொண்டே இருங்கள். உங்களையும் 
அறியாது உங்கள் மனது எப்போதும் சந்தோசமாகவே இருக்கும். 

என்னதான் நம்முடைய மனதை சந்தோசமாக வைத்துகொள்ள 
நினைத்தாலும் மனம் என்பது ஒரு மாறும் குணமுடைய 
மனித அங்கமாகும். அதனால்தான் மனம் ஒரு குரங்கு என்று 
கூறினார்கள். ஒரு இடத்தில் நிலையாக இருக்காது. 

தியானம் என்னும் அற்புத கலையினால் நம்முடைய 
மனதை நிலையான ஒரு இடத்தில நிறுத்தி மனதை 
எப்போதும் சந்தோசமாக வைத்திருக்கலாம் ...

No comments:

Post a Comment