Thursday, August 28, 2014

பிறந்த நட்சத்திரங்களில் பலன் /(பிறந்த கரணங்களில் பலன்)/பிறந்த கிழமைகளில் பலன்/பிறந்த திதிகளில் பலன்


பிறந்த நட்சத்திரங்களில் பலன் 

1) அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவன் எந்த காரியத்தையும் செம்மையாகச் செய்து முடிப்பான்
2) பரணி நட்சத்திரத்தில் பிறந்தவன் தன் பெற்றொருக்கு நல்ல பிள்ளையாக நடப்பான்
3) கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவன் சாதுர்யமான பேச்சுத்திறமையைப் பெற்று இருப்பான்,
4) ரோகிணி, நட்சத்திரத்தில் பிறந்தவன் பிறருக்கு உதவி செய்வதில் விருப்பம் உடையவனாய் இருப்பான்,
5) மிருகசீர்ஷம், நட்சத்திரத்தில் பிறந்தவன் எப்போதும் சுறுசுறுப்பு உடையவனாய் இருப்பான்
6) திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவன் எதிலும் கண்ணியம் வாய்ந்தவனாய் இருப்பான்
7) புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவன்வக்கீல்களைப் போல வல்லவனாய் இருப்பான்,
8) பூசம், நட்சத்திரத்தில் பிறந்தவன் பகைவருக்குப் பயப்படமாட்டான்,
9) ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவன் பகைவருக்கு பகையாய் இருப்பான்,
10) மகா நட்சத்திரத்தில் பிறந்தவன் சுற்றுப்பயணங்களிள் பிரியம் உள்ளவனாய் இருப்பான்.
11) பூரம். நட்சத்திரத்தில் பிறந்தவன் கல்வியில் ஆர்வம் உடையவனாய் இருப்பான்.
12) உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவன் பெண்களிடம் விருப்பம் உள்ளவனாய் இருப்பான்.
13) ஹஸ்தம், நட்சத்திரத்தில் பிறந்தவன் குரு வினிடத்தில் பக்திஉள்ளவனாய் இருப்பான்.
14) சித்திரை.நட்சத்திரத்தில் பிறந்தவன் சிறிது முன் கோபக்காரனாய் உள்ளவனாய் இருப்பான்.
15) சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவன் உணவில் பிரியம் உள்ளவனாய் இருப்பான்.
16) விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவன் நல்ல நீதிமானாக விளங்குவான் உள்ளவனாய் இருப்பான்.
17) அனுஷம், நட்சத்திரத்தில் பிறந்தவன் புகழைத் தேடிக் கொள்ள ஆசைப்படுவான்
18) கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவன் பக்திமானாக விளங்குவான்
19) மூலம், நட்சத்திரத்தில் பிறந்தவன் ஆன்மீகத் துறையில் முன்னேற்றம் உள்ளவனாய் இருப்பான்.
20) பூராடம், நட்சத்திரத்தில் பிறந்தவன் தன்னை அடுத்தவரைக்காப்பாற்றுவதில் ஆர்வம் உள்ளவனாய் இருப்பான்.
21) உத்திராடம், நட்சத்திரத்தில் பிறந்தவன்தன் சுற்றத்தார் நலனில் அக்கறை கொண்டவனாய் இருப்பான்
22) திருவோணம், நட்சத்திரத்தில் பிறந்தவன் எப்போதும் உற்சாகம் உடையவனாய் இருப்பான்.
23) அவிட்டம், நட்சத்திரத்தில் பிறந்தவன் தியாகக் குணம் படைத்தவனாய் இருப்பான்
24) சதயம், நட்சத்திரத்தில் பிறந்தவன் பொய் பேச விரும்பமாட்டான்.
25) பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவன் பிறர் சொல்பொறுக்காதவனாய் இருப்பான்.
26) உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவன் நல்லவர்களுக்கு நல்லவனாகவும்.பொல்லாதவர்களுக்குப் பொல்லாதவனாகவும் விளங்குவான்.
27) ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவன் பிறர் பேச்சைக் கேட்பவனாக இருப்பான்.
28) அபிஷித்து நட்சத்திரத்தில் பிறந்தவன் சேன்மம் தெரியாது இருப்பான்.

(பிறந்த கரணங்களில் பலன்)

1) பவ கரணத்தில் பிறந்தவன்.அச்சம் இல்லாதவனாய் இருப்பான்
2) பாலவ கரணத்தில் பிறந்தவன், பல நற்குணங்களை உடையவனாய் இருப்பான்.
3) கௌலவ கரணத்தில் பிறந்தவன், நல்ல ஓழுக்கங்களை உடையவனாய் இருப்பான்
4) தைதுலை கரணத்தில் பிறந்தவன்,உத்தியோகத்தில் ஆர்வம் உள்ளவனாய் இருப்பான்
5) கரசைக் கரணத்தில் பிறந்தவன்,பிற மாதரிடம் பிரியம் உள்ளவனாய் இருப்பான்
6) வணிசைக் கரணத்தில் பிறந்தவன்.இனிக்கப் பேசும் இயல்பு உடையவனாய் இருப்பான்
7) பத்திரைக் கரணத்தில் பிறந்தவன், எதிலும் விரைவில் சலிப்பு அடைபவனாய் இருப்பான்,
8) சகுனிக் கரணத்தில் பிறந்தவன், நல்ல அறிவாளியாக விளங்குவான்,
9) சதுஷ்பாத கரணத்தில் பிறந்தவன்.தத்துவ நூல்களில் விருப்பம் உடையவனாய் இருப்பான்.
10) நாகவ கரணத்தில் பிறந்தவன், மிக்க மானம் உள்ளவனாய் இருப்பான்

கிழமைகளில் பிறந்தவர் பலன்

1) ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவன்.செல்வம் உடையவனாய் இருப்பான்
2) திங்கள்கிழமையில் பிறந்தவன்,புகழ் உடையவனாய் இருப்பான்
3) செவ்வாய்க்கிழமையில் பிறந்தவன். தந்திரக்காரனாய் இருப்பான்
4) புதன் கிழமை பிறந்தவன், கல்வி உடையவனாய் இருப்பான்.
5) வியாழக்கிழமை பிறந்தவன்,அறநெறியில் விருப்பம் உடையவனாய் இருப்பான்
6) வெள்ளிக்கிழமை பிறந்தவன், உயர்ந்த காரியங்களைச் செய்பவனாய் இருப்பான்
7) சனிக்கிழமை பிறந்தவன், பிறரை ஏமாற்றுவதில் திறமைசாலியாக இருப்பான்

பிறந்த யோகங்களில் பலன்

விஷ்கம்ப யோகத்தில் பிறந்தவன், உறவினர்களிடம் அன்பு உள்ளவனாய் இருப்பான்
பிரீதி யோகத்தில் பிறந்தவன், துணிவு உடையவனாய் இருப்பான்,
ஆயுஷ்மான் யோகத்தில் பிறந்தவன், ஓழுக்கம் உடையவனாய் இருப்பான்
சௌபாக்கிய யோகத்தில் பிறந்தவன், தெய்வபக்தி உடையவனாய் இருப்பான்.
சோபன யோகத்தில் பிறந்தவன்,மானம் உள்ளவனாய் இருப்பான்.
அதிகண்ட யோகத்தில் பிறந்தவன்,புகழ் உடையவனாய் இருப்பான்.
சுகர்ம யோகத்தில் பிறந்தவன், புண்ணியங்களைச் செய்வதில் விருப்பம் உடையவனாய் இரு
திருதி யோகத்தில் பிறந்தவன், இனிய சொற்களைப் பேசுபவனாய் இருப்பான்.
சூல யோகத்தில் பிறந்தவன், கருணை உடையவனாய் இருப்பான்.
கண்ட யோகத்தில் பிறந்தவன், கர்வம் உடையவனாய் இருப்பான்.
விருத்தி யோகத்தில் பிறந்தவன், செல்வந்தர்களிடத்தில் நட்பு உடையவனாய் இருப்பான்.
துருவ யோகத்தில் பிறந்தவன், பெரியோரிடம் பக்தி உடையவனாய் இருப்பான்.
வியாகாத யோகத்தில் பிறந்தவன், அடிக்கடி வெளியூர் செல்வதில் விருப்பம் உடையவனாய் இருப்பான்.
ஹர்ஷண யோகத்தில் பிறந்தவன்,அறிவாளியாக இருப்பான்.
வஜ்ரயோகத்தில் பிறந்தவன், வேளாண்மையில் விருப்பம் உடையவனாய் இருப்பான்.
சித்தியோகத்தில் பிறந்தவன், எல்லாருக்கும் நல்லவனாக விளங்குவான்.
வரீயான் யோகத்தில் பிறந்தவன்,பகைவரை ஒடுக்குவதிலேயே ஆர்வம் உள்ளவனாய் இருப்பான்.
வாரீயன் யோகத்தில் பிறந்தவன்,உண்மையை மறைப்பதில் திறமை உள்ளவனாய் இருப்பான்.
பரிக யோகத்தில் பிறந்தவன், பிறரை ஏமாற்றுவதில் கெட்டிக்காரனாய் இருப்பான்
சிவயோகத்தில் பிறந்தவன், பெற்றோர்களைப் பேணுவதில் பிரியம் உள்ளவனாய் இருப்பான்.
சித்தி யோகத்தில் பிறந்தவர், செல்வ செல்வாக்கு உள்ளவர்
சாத்திய யோகத்தில் பிறந்தவர், கலைகளில் வல்லுநனாய் இருப்பான்.
சுபயோகத்தில் பிறந்தவன், பெண்களிடம் பிரியம் உள்ளவனாய் இருப்பான்.
சுப்ரயோகத்தில் பிறந்தவன், முன்கோபக்காரனாய் இருப்பான்
பிராம்ய யோகத்தில் பிறந்தவன், பிறருக்கு உதவுவதிலேயே நாட்டம் உடையவனாய் இருப்பான்.

பிறந்த திதிகளில் பலன்

பிரதமையில் பிறந்தவன்,எதையும் ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்பான்.
துவிதியையில் பிறந்தவன், பொய் பேச வெட்கப்படுவான்.
திருதியையில் பிறந்தவன், நினைத்த காரியத்தை முடிப்பான்.
சதுர்த்தியில் பிறந்தவன், மந்திர சித்தியில் விருப்பம் உடையவனாய் இருப்பான்.
பஞ்சமியில் பிறந்தவன், பெண்களிடத்தில் ஆசை உடையவனாய் இருப்பான்.
சஷ்டியில் பிறந்தவன், செல்வர்களால் விரும்பப்படுவான்.
சப்தமியில் பிறந்தவன், இரக்கம் உடையவனாய் இருப்பான்.
அஷ்டமியில் பிறந்தவன்,குழந்தைகளிடத்தில் பிரியம் உள்ளவனாய் இருப்பான்.
நவமியில் பிறந்தவன்,புகழில் நாட்டம் உடையவனாய் இருப்பான்.
தசமியில் பிறந்தவன், ஒழுக்கம் மிக்கவனாய் இருப்பான்.
ஏகாதசியில் பிறந்தவன், பொருள் ஈட்டுவதில் நாட்டம்
உள்ளவனாய் இருப்பான்.
துவாதசியில் பிறந்தவன்,புதுமையான தொழில்களில் ஈடுபடுவான்.
திரயோதசியில் பிறந்தவன்,உறவினர்களோடு ஓட்டி வாழமாட்டான்.
சதுர்த்தசியில் பிறந்தவன்,பிறர் செய்த சிறு தவறுகளையும் மன்னிக்கமாட்டான்
பௌர்ணமியில் பிறந்தவன்,மிகவும் தெளிவான சிந்தனா சத்தி உடையவனாய் இருப்பான்.
அமாவாசையில் பிறந்தவன், தன் அறிவையும், ஆற்றலையும் மேலும் பெருக்கிக்கொள்வதிலேயே ஆர்வம் உடையவனாய் இருப்பான்

No comments:

Post a Comment