ஸ்ரீ விஸ்வரூப இதி த்யானம் - திருமண் இடுவது எப்படி?
ஆனால் அதற்கு என்று ஒரு முறை இருக்கிறது . அந்த நெறிமுறையோடு இட்டுக்கொள்ளவேண்டும். திருமண் காப்பிடுவதற்குவிரல்களை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் .கவனிக்கவும் வேறு பொருள்களை பயன்படுத்தகூடாது. விரல்களிலும் கூட நடு விரலையும் நாகத்தையும் பயன் படுத்தக்கூடாது.
ஒவ்வொரு விரலையும் ஒவ்வொரு பயன் கருதி உபயோகிக்க வேண்டும் என்பது பழைய நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. திருமண் காப்பு இடும் போது, புத்திரப்பேரு விரும்பிகிறவர்கள் மோதிர விரலைப் பயன்படுத்தி இட்டு கொள்ள வேண்டும் .
மோட்சத்தை விரும்பிகிறவர்கள் ஆட்காட்டி விரலாலும், ஆயுளை விரும்பிகிறவர்கள் சுட்டு விரலாலும், பொருளை விரும்பிகிறவர்கள் கட்டை விரலாலும் இட்டு கொள்ள வேண்டும்.
நடுவிரலினாலும் இடக்கையினாலும் திருமண் இட்டுகொள்ளக்கூடாது .
பிறரைக் கொண்டும் திருமண் தரித்துக்கொள்ளுவது கூடாது என்று கூறப்படுகிறது . ஆனால் வயதானவர்கள், கண் பார்வை குறையுடையவர்கள் இதற்கு விதிவிலக்கு .
தற்காலத்தில் நாம் குச்சி, வெள்ளிக்கம்பி ப்போன்றவற்றை உபயோகித்து திருமண் காப்பைத் தரிக்கிறோம் . இவ்வாறு செய்வது ஆசாரகுறைவு என்பதோடு அங்கீகாரம் செய்யப்படாததும் ஆகும். பலர் துடைப்பக் குச்சியாலும், நூற்றுக்குத் தொண்ணூறு பேர் எறிந்து மிச்சமிருக்கும் ஊதுபத்தியின் அடிப்பகுதிக் குச்சியலும் திருமண் இட்டு கொள்வதை வழக்காமாக்கிக் கொண்டுள்ளனர். இதற்குக் காரணம் தினமும் திருமன் அணியாமல் என்றோ ஒருநாள் இத்டுக்கொள்வது தான் . தினமும் இட்டுக்கொள்ளும் பழக்கம் இருந்தால் அதற்கு தேவையான திருமன்பெட்டி ,திருமண் எனப்படும் நாமக்கட்டி, ஸ்ரீசூரணம் ஆகியவற்றை வாங்கி வைத்திருப்போம் அல்லவா ?
திருமண் காப்பு நன்றாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்க வேண்டும் என்பது விதி. எனவே விரலால் சரியாக அழகாக இட முடியவில்லை என்றாள் முதலில் விரலால் எழுதி ,பிறகு வெள்ளிக் குச்சியால் கோணல் இல்லாமல் சரி செய்துகொள்ளவேண்டும்.
எனவே குச்சியாலும் மற்ற பொருள்களாலும் திருமண் காப்பு தரிக்கப்பாடும் அநாசாரமான வழக்கம் ஒழிக்கப்பாட வேண்டும். தினமும் திருமன் இட்டுக்கொண்டு அலுவலகம் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும் . இதனால் தவறேதும் இல்லை. நான் வைஷ்ணவன் என்று சொல்லிக் கொள்வதில் ஒவ்வொரு மனிதனும் பெருமை கொள்ளலாம் . அந்த அளவிற்கு மனிதநேயத்தோடு நடந்துகொள்வதை வைஷ்ணவம் மிக எளிமையாகச் சொல்லித்தருகிறது. வைஷ்ணவம் என்றாலே சாந்தமானவன், நம்பகமானவன், தூய்மையானவன் என்ற எண்ணம் மற்றவர்களின் மனதில் ஏற்படும்படி திருமண் நமக்கு ஒரு யோகியதையை அளிக்கிறது .
திருமண் காப்பு தரிப்பதையும் அழகாக அளவோடு தரிக்க வேண்டும்,. நெற்றி,கழுத்தின் மூன்று புறம் , பிடரி, மற்றும் முதுகு ஆகிய இடங்களில் நான்கு அங்குல நீளமுடைய திரும்ன்நைதரிக்க வேண்டும் . வயிற்றில் இடுகின்ற திருமண் பத்து அங்குல நீளமுடையதாக இருக்க வேண்டும் . மார்பிலும் இரண்டு தோள்களிலும் தரிக்கும் காப்பு எட்டு அங்குல
நீளம் உடையதாக இருத்தல் வேண்டும்.
அடுத்ததாக நாம் தெரிந்து கொள்ளவேண்டியது திருமண்காப்பின் நடுவில் இடம்பெறும் ஸ்ரீசூரணத்தை பற்றித்தான். இது மஹாலக்ஷ்மியின் சொருபமானது .ஸ்ரீசூரானத்தில் வருகின்ற ஸ்ரீ என்ற பதம் மஞ்சளையும் மஹாலக்ஷ்மியையும் குறிப்பதாகும். சூரணம் என்பது பொடி என்பது பொருள்.
சித்த வைத்தியத்தில் இந்தப் பெயரை நாம் அடிக்கடி கேட்டிருப்போம்.
ஸ்ரீசூரணம் பொதுவாக சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். செம்பட்டு உடுத்திய மஹாலக்ஷ்மியைக் குறிப்பது சிவப்பு நிறம். ஸ்ரீசூரணம் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும் என்று சிலர் சொல்வதுண்டு. தங்கத்தை மிக மெல்லிய கம்பியாக அடித்தால் அது சற்று சிவப்பு நிறத்தில் இருப்பதை பார்க்கலாம்.
எனவே பொண்மகளான மஹாலக்ஷ்மியின் அம்சமாக இடப்படும் ஸ்ரீசூரணம் சிவப்பு நிறத்தில் இருப்பதே உசிதமானது என்பது பெரியோர் கொள்கை . வைதீக காரியங்களில் ஈடுபடுகிறவர்களும், வேதம் ஓதம் பிரஹ்மச்சாரிகளும் மஞ்சள் ஸ்ரீசூரணத்தை இட்டு கொள்வது உண்டு.
ஸ்ரீசூரணத்தை இட்டுக்கொள்வதில் கூட சில நெறிமுரைகள் சொல்லப்பட்டுள்ளன. ஆண்கள் மட்டும் அல்லாமல், சுமங்கலிப்பெண்கள், கன்னிப் பெண்கள், கைம்பெண்கள் ஆகியோரும் நெற்றியில் ஸ்ரீசூரணத்தை தரித்துக்கொள்ள வேண்டும். ஆண்கள் புருவத்தின் நடுப்பகுதி முதலாக, நெற்றியில் கேசப்பகுதி வரையில் இட்டுக்கொள்ளவேண்டும். சுமங்கலிப் பெண்கள் மூங்கில் இலையைப் போலவும் . கைம்பெண்கள் எள்ளின் வடிவதிலும், கண்ணி பெண்கள் பூசணி விதை வடிவத்திலும் ஸ்ரீசூரணம் தரிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது .
திருமண் காப்புக்கு நடுவில் ஸ்ரீசூரணத்தைத் தரித்துக்கொண்டு, அதன் அடியில் மஞ்சளையும் வைத்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு செய்து மஹாலக்ஷ்மியை அதில் ஆவாகணம் செய்தல் வேண்டும் .
ஆண்கள் பன்னிரண்டு திருமண் இட்டுக்கொண்டபிறகு, மஞ்சள் காப்பை ஸ்ரீசூரணத்தின் அடியில் இட்டுக் கொள்ள வேண்டும் .
அப்போது கீழ்க்கண்ட நாமாவை உச்சரித்தல் வேண்டும்.
நெற்றியில் - ஸ்ரீ தேவியை நம
நடுவயிறு - ஸ்ரீ அமீர்தோத்பாவையை நம
மார்பில் - ஸ்ரீ கமலாயை நம
கழுத்தில் - ஸ்ரீ லோக சுந்தர்யை நம
வலப்புற வயிறு - ஸ்ரீ விஷ்ணுபத்நியை நம
வலது பூஜம் - ஸ்ரீ வைஷ்ணோ தேவியை நம
வலது கழுத்து - ஸ்ரீ வராரோஹாயை நம
இடப்புற வயிறு - ஸ்ரீ ஹரிவல்லபாயை நம
முதுகு அடியில் - ஸ்ரீ மஹாலக்ஷ்மி நம
பிடரியில் - ஸ்ரீ லோகபூஜிதாயை நம
இவ்வாறு பெருமாளையும் தாயாரையும் மனத்தில் தியானித்து திருமண் இட்டுக்கொள்வதன் மூலமாக நாம் சகல சௌபாக்கியங்களையும் இந்த உலகில் அடைவதோடு, வைகுண்ட பதவியும் பெறுவது நிச்சயம் .
ஆசிரியர் பெயர் - திரு. வேணு ஸ்ரீநிவாசன்
புத்தகத்தின் பெயர் -ஸ்ரீவைஷ்ணவம்
No comments:
Post a Comment