Thursday, February 26, 2015

வாழ்வில் வெற்றி பெற நீங்கள் செய்ய‍க் கூடாத செயல்கள் – ஒரு பார்வை

வாழ்வில் வெற்றி பெற நீங்கள் செய்ய‍க் கூடாத செயல்கள் – ஒரு பார்வை

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற எந்தக்காலத்தி லும் செய்யக்கூடாத, செய்ய‍ மறுக்க‍வேண்டிய செயல் கள் உண்டு. அந்த செயல்களை வெற்றியாளர்கள் ஒரு போதும் செய்ய‍ மாட்டார்கள் அதனால்தான் அவர்களால் வாழ்க்கையில் வெற்றி பெற முடிந்தது  

வெற்றியாளர்கள், எப்போது மே  எதைச் செய்கிறார்கள், எப்படி செய்கிறார்கள், எதற்கு செய்கிறார்கள் என்று தான் பார்ப்போம். ஆனால் பல செயல்களை அவர்கள் செய்யாமலே விட்டுவிடுவார்கள். அவை எவை என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

1. பணத்திற்காக வெற்றி பெற வே ண்டும் என எண்ண மாட்டார்கள் பெரும்பாலான வெற்றியாளர்கள் பணத்தினை வெற்றி யாகக் கருதியதே இல்லை. மன அமைதி அல்லது மற் றவர்களுக்கு உதவுவதைத்தான் அவர்கள் வெற்றியாகக் கு றிப்பிடுகின்றனர். அவர்கள் பணத்தினை வாய்ப்புகளை த்தரும் கதவாகவும், சில வேளைகளில் சுகம் தரும் பொருளாகவும் மட்டுமே கருதுகின்றனர். பணத்திற்கும் மகிழ்ச்சிக்கும் சம்ப ந்தம் இல்லை என அவர்கள் நம்புகின்றனர்.

2. திட்டமிடாமல் ஒரு நாளை தொடங்குவதில்லை ஒவ்வொரு நாளையும் எப் படி பயன்படுத்த வேண்டும், அதற்கான திட்டமிடல்களா க எவற்றை செய்ய வேண் டும் என அவர்களுக்கு நன் றாகத் தெரிந்திருக்கும். அன்றைய நாளில் செய்ய வேண்டிய செயல்கள் அனை த்தையும் ஒரு பட்டியலாக வைத்திரு ப்பார்கள். அத னை எந்த வரிசைப்படி செய்ய வேண்டுமெனவும் முன் கூட்டி யே தீர்மானித்திருப்பார்கள்.

3. ‘முழுநிறைவு’ என எதையும் இலக்காக கொண்டிருக் க மாட்டார்கள் ‘அய்யய்யோ நான் இதை முடித் தே ஆக வேண்டும்’ என்று அவர் களின் மனம் அவர்களை வருத் தாது. முழு நிறைவினை பெறுவ தற்கான பசியினைக் காட்டிலும், இதுவரை செய்த செயல்களில் தவறுதல்கள் ஏதும் இல்லை என்பதை உறுதிபடுத்துவ தில் அவர்களின் கவனம் சற்று அதிகமாக இருக்கும். வெற்றிக் கான செயல்களின் ஒவ்வொரு நிறுத்தத்திலும், தங்களது வளர் ச்சிக்கான செயல்முறை குறித்து ஆய்வு செய் வார்கள்.

4. ‘நெகடிவ்’ பேச்சாளர்களின் கூட்டத்தில் இருக்க மாட்டார்கள் எந்த செயல் எடுத்தாலும் இது நடக்காது, இது உருப்ப டாது என்று கூறுவதற்கென்றே ஒரு குழு எப் போதும் நம்மைச் சுற்றி இருந்தால் நாம்செய்யும் செயலின் மீதான நம் பிக்கை மிகவும்குறைவாக மாறிவிடும். இதனால்தான் அத்தகைய ஆட்கள்இருக்கும் கூட்டத்தில் வெற்றியாளர்க ள் இருப்பதே இல்லை. அவர் களை இலக்கினை நோக்கி உற்சாகப்படுத்துபவர்கள் எங் கு இருக்கிறார்களோ, அங்கு தான் இவர்களும் இருப்பார்க ள்.

5. கஷ்டங்களை பிரச்சனைகளாக எண்ணமாட்டார்கள் வெற்றியை நோக்கிச் செல்லும் போது கண்டிப்பாக பல தடை கள் வரும் அவற்றையெல்லாம் பிரச்சினைகளாகக் கருதினால் இலக்கினை அடைய முடியாது. அதனால்தான் எல்லாத் தடைகளையும் தங்களை வலு ப்படு த்த வந்த வரப்பிரசாதமாக எண்ணுவார்கள்.

6. தோல்வியால் துவண்டு விட மாட்டார்கள் ஒவ்வொரு தோல்விலும் துவ ண்டுவிடாமல், அந்த தோல்வி யில் இருந்த தங்களைப் பற்றிய குறைகளைக் கண்டறிந்து கொ ள்ள முயற்சி செய்வார்கள். தோல்வியும் வெற்றிக்கான பாதையில் உள்ள கற்கள், அவற்றைக் கண்டு பயந்தா ல் இலக்கினை அடைய முடியாது என் பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

7. பிரச்சனைகளால் கீழே விழுந்தாலு ம் வருத்தப்பட மாட்டார்கள் ஒரு பிரச்சனையின்போது அதிலே தொடர்ந்து சிந்திப் பதால்தான் ஒரு பிரச்சனை பல பிரச்சனைகளாக மாறத் தொடங்குகிறது. உங்கள் எண் ணங்களையும், கவனத்தையும் ஒன்று சேர்த்து உங்கள் செயலில் இறங்குங்கள். உங்கள் கவனம் பிரச்சனை யிலிருந்து மாறும்போ து, அதில் தோல்வி ஏற்பட்டாலு ம் வருத்தப்பட மாட்டீர்கள். இதை த்தான் வெற்றியாளர்களும் செய் கின்றனர்.

8. தங்களின் சுயமரியாதையினை மற்றவர்கள் தீர்மா னிக்கும்படி விட்டுக்கொடுக்கமாட்டார்கள் மற்றவர்களின் வார்த்தைக ளினாலோ அல்லது செயல் களினாலோ தங்களுக்கு சுய மரியாதை கிடைக்க வேண்டுமென அவர்கள் எண்ணமாட்டார்கள். தாங்கள் எந்த நிலையில் இரு க்கிறோம், தங்களின் மதிப்பு என்ன என்பது அவர்களு க்குத் தெரிந்திருக்கும். மற்றவர் களிடம் தங்களது திற மையினை நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு எப்போதும் இருக்காது, அத்துட ன் தனக்கென தானே வகுத்துக் கொண்ட வழிமுறைகள் இவர்க ளை எப்போதும் திருப்தியடைய ச் செய்யும்.

9. சாக்கு-போக்கு சொல்லமாட்டார்கள் தங்களின் தவறுதல்களுக்கு தாங்கள்தான் காரணம் என் பதை எந்தவித ஒளிவு மறை வுமின்றி ஏற்றுக் கொள்வார் கள். அவர்கள் நினைத்தது கை கூடாத நேரங்க ளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அவர்களே பொறுப்பேற்றுக்கொள் வார்கள். அத்துடன், இலக்கு பெரியதாக இருந்தாலும், சிறியதாக இருந்தாலும் அ தை குறித்த நேரத்தில் முடி க்க வேண்டுமென எண்ணு வார்கள். அப்படி நிறைவே றாத காலங்களில் எந்த சா க்கு-போக்கினையும் அவர் கள் முன்வைப்பதில்லை.

10. அடுத்தவர்களின் வெற்றியைப் பார்த்து பொறாமை ப் பட மாட்டார்கள் நாம் அடைய முடியாத இல க்கினை மற்றவர்கள் அடை யும்போது பொறாமை வரு வது மனித இயல்புதான். என்றாலும், மற்றவர்களுக் கு நம்மைப்போல் பிற திற மைகள் இருக்கும் என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். இதை மனதில் வைத்துதான், மற்றவர்கள் வெற்றி பெற்றால் அதை உத் வேகமாக எடுத்துக் கொண்டு முன்னேற நினைப்பார்கள் வெற்றியாளர்கள். அவர்க ளைக்கண்டு பொறாமைப்பட மாட்டார்கள்.

11. தங்களுக்கு அன்பு கொடுப்பவர்களை புறக்கணிக்க மாட்டார்கள் வேலை எவ்வளவு முக்கி யமானதாக இருந்தாலும் நம்மை விரும்புபவர்களா ன குடும்பம், மனைவி மற் றும் நண்பர்கள் வேலையி னை விட முக்கியமானவர்கள். இந்த அன்பு நம்மை இலக்கினை நோக்கிக் கொண்டு செல்வதிலும் முக்கி யப்பங்கு வகிக்கும்.

12.வேடிக்கையினை வேலைக ளை தவறவிடுவதில்லை வேடிக்கையில்லாத வேலைஎரிச் சலை ஏற்படுத்தி விடும். ஆண்டி ல் அனைத்து நாட்களும், 24 மணி நேரமும் வேலை செய்ய நாம் கடவுள் படைத்த இயந்திரங்கள் அல்ல, மனிதர்கள்!. நாம் செய்யும் வேலை நமக்கு பிடித்தாற்போல் இரு ந்தால்தான் நம்மால் தொடர்ந்து வேலை செ ய்யமுடியும். இப்படி வே லைகளை பிடித்தாற் போல் மாற்றுவ தற்கு வேலை மற்றும்பொழு து போக்குகளை சம அளவில் வைத்திருக்கவேண்டும். அதனால் பொழுதுபோக்குகளை வெற்றியாளர்கள் எப் போதும் ஒதுக்கியதே இல்லை.

13.உடலை அதிகம் துன்பப்படுத்த மாட்டார்கள் உடல் உழைப்பு இல்லாமல் வெற் றி பெற முடியாது என்றாலும், ந மது உடலை கவனிக்காமல் வெ றும் வேலையினைப்பார்த்து இல க்கினை அடைவதால் ஒரு பயனும் இல்லை. இதனா ல்தான், இலக்கினைப் பற்றிய வே லைகள் ஒருபுறம் நடந்தாலும், தங் களது உடலையும் அவர்கள் பேணி க்காத்துக்கொள்கின்றனர்.

14. வீண் இலக்குகளை வைக்க மாட்டார்கள் ஏதாவது இலக்கு வேண்டும் என்பதற்காக, வாழ்க்கைக் கு சம்பந்த்ம் இல்லாத இலக்குக ளை வைக்க மாட்டா ர்கள். தங்கள் கனவு இலக்கிற்கு தகுந்தாற் போ ல் சிறு இலக்குகள வகுத்து பெரிய இலக்குகளைஅடைவார்கள். தான் வாழ்க்கையில் இருக்கும் தற்போ தைய நிலை குறித்து அவர்களு க்கு நன்றாகத் தெரிந்திருக்கும்.

15. வெட்டிப்பேச்சு பேசமாட்டார்கள் வெற்றியாளர்கள் வெறும் பேச்சினை மட்டும் பேசிக் கொண்டிருப்பவர்கள் அல்ல, பேசியபடி செய்தும் காட் டக் கூடியவர்கள். அவர்கள் சொ ன்னால் கண்டிப்பாக செய்து காட்டுவார்கள், அவர்களை நம்பலாம் என்று மற்றவர்கள் கூறும் அளவிற்கு தங்க ளது வார்த்தைகளின் மீது பற்று கொண்டிருப்பார்கள்.

16. மற்றவர்களால் தாங்கள் பாதிக் கப்படுவதை அனும திக்கமாட்டா ர்கள் தங்களின் எண்ணங்களுக்கு அல் லது இலக்கிற்கு ஒவ்வாமல் இரு ப்பவர்களிடம் இருந்து வெற்றியா ளர்கள் விலகியே இருப்பார்கள். தங்களின் பாதையில் முன்னேறிச் செல்வது மட்டுமே தனக்கு மகிழ்ச் சியைத் தரும் என எண்ணவார்கள். மற்றவ ர்கள் செய்யும் செயல்களால் தங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு நடந்துகொள் வார்கள்.

17. கடந்தகாலத்திலேயே நிலைத்திருக்கமாட்டார்கள் கடந்தகால பிரச்சினைகளை சுமப்பதா ல் தங்களது வேலைப்பளுவும், பொறுப் புகளும் அதிகரிக்கும் என்று வெற்றியா ளர்கள் கருதுவார்கள். அதனால்தான் பழைய வலிதரும் காலத்தினை மறந்து விட்டு தற்கால மகிழ்ச்சிக்குத் தேவை யான வேலையினை செய்வார் கள்.

18. மாற்றங்களை தடுப்பதில்லை ‘மாற்றம் ஒன்றுதான் மாறா தது’ என்பதைப் போல் தங் களின் திட்டங்கள், வழிமு றைகள் மற்றும் செயல்பா டுகள் எப்போது வேண்டுமா னாலும் மாறாக்கூடும், அத னால் அத்தகைய மாற்றங் களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பார்களே தவிர, அவற்றினை தடுக்க மாட்டார்கள்.

19. ஒருபோதும் கற்றுக் கொள்வதை விட மாட்டா ர்கள் எத்தனை வயதானாலும் தாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் இ ருக்கிறது என எண்ணுவார்கள். எவருக்குமே அனைத் தும் தெரிந்திருக்காது, ஒவ் வொருவரும் மற்றவரிடம் இருந்து எதையாவது கற்று க் கொண்டுதான் ஆக வேண்டும் என்று அவர்களுக்குத்தெரியும் .கற்றுக்கொள்வதற்கான தன து மனநிலையினை எப்போது ம் ஆயத்தமாக வைத்திருப்பார்கள்.

20. நன்றியில்லாமல் நாட் களை முடிக்கமாட்டார்கள் தனக்கு கிடைத்த ஒவ்வொ ன்றிற்கும் நன்றி கூறுவார் கள். இதை தங்களுக்குள் ளே கூறிக்கொள்வார்கள். இந்த நன்றி தனக்கு உதவியவர்கள், தன்மீது அன்பு செ லுத்தியவர்கள் மற்றும் அன்றைய நாளினை சிறப்பா ன நாளாக மாற்ற உதவியவர்கள் என யாராகவும் இருக்கலாம். இந்நாளின் இறுதியில் மனதால் கூறப்படும் நன்றி , மன அமைதியையும், உறுதியான எ ண்ணங்களையும் கொடுக்கவல்லது.

இவையனைத்தும் உங்களுக்கும் பய ன்படும் செயல்முறைகள்தான். இதில் உங்களுக்குப் பொருந்திய செயல் முறைகளை முயற்சித்துப் பாருங்கள். உங்கள் வாழ்வும் பிரகாசம் பெறும்.

சாதனை படைக்க‍ நமக்குத் தேவையான அவசியமான விசேஷ குணங்கள்

சாதனை படைக்க‍ நமக்குத் தேவையான அவசியமான விசேஷ குணங்கள்

சாதனையாளர்களிடம் காணப்ப டும் சிறப்பு குணங்களும் கூட‌ ஒருமனிதன் வெற்றியடையத் துணைபுரிவது அவனது குணங்களே என்று சொல்லப்படுகிறது. சாதனையா ளர்களின் குணங்கள் மற்றவர்க ளைவிட சற்று வேறுபட்டே இரு க்கின்றதுஎன்பதுதான் உண்மை. அப்படி இருக்கையில் வெற்றி மனிதர்களிடம் காணப்படும் விசேஷ குணங்கள்தான் என்ன என்பதைச் சற்று ஆராய்ந்துப் பார்ப்போம்.

சாதனையாளர்கள் உணர்வுக்குக் கட்டுப்பட்டவர்கள் உணர்வுக்குக் கட்டுப்படும் இவர்களது முதல் குணமே மற்றவர்களை விட இவர்க ள் வேறுப்பட்டிருக்கக் கார ணமாய் உள்ளது. அவர்க ளைப் பொருத்த வரை ஒரு காரியத்தில் ஈடுபட அதனை உணர்வுப்பூர்வமாக அணு குவது, அறிவுப்பூர்வமாக அணுகுவதைவிட முக்கிய மானது. இதனால்,வெற்றி மனிதர் கள் ஒருகாரியத்தில் ஈடுபடுகை யில் அதை முழுமையாக விரும் பிச் செய்வார்கள். சால்ஸ் டார்வி ன், ஆல்பெர்ட் என்ஸ்டைன்போன் ற பல சாதனை மனிதர்கள் அவர்க ளது இளமை பருவத்தில் படிப்பில் பின் தங்கியவர்க ளாகவே இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

சாதனையாளர்கள் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை ப்பற்றிக்கவலை கொள்வதில்லை சாதனையாளர்கள் எப்பொழுதுமே தங்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள உறவின் எல்லையை நன்கு அறி ந்தவர்களாக இருப்பர். அவர்கள் மற்றவர்களின் கருத்தைக் கேட்பார்களேத் தவிர, மற்றவர்களை முடி வெடுக்கவிட மாட்டார்கள். தாங்கள் விரும்பும் தொழிலி ன் முன்னேற்றத்திலேயே அ வர்களது கவனம் இருக்கும். மற்றவர்களின் தேவையில் லா விமர்சனத்தில் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள்.

சாதனையாளர்கள் தங்கள் செயல் திறனை வளர்த்துக் கொண்டே இருப்பார்கள்
ஒருமனிதன் தன் வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள, அவன து படைப்பாற்றல், செயல்திற ன் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டே இருத்தல் அவசியம். இதைத்தான் சாதனை மனிதர்க ள் செய்கின்றனர். அவர்கள் சற்று சோர்ந்து போகும் போதெல்லாம் தங்கள் ஆற்றலை மேம்படுத்தும் பலவித நடவடிக் கைகளில் ஈடுபடுகின்றனர். அது அவர்களின் தொழில் சம்பந்தப்ப ட்டதாக இருக்க வேண்டிய அவசி யம் இல்லை. ஆனால், அவர்களு க்குப் பிடித்ததாய் இருத்தலே அவசியம்.

சாதனையாளர்களுக்குத் தங்களின் தனியுரிமையைத் தற்காத்துக் கொள்ள முடியும் இந்நவீன காலக்கட்டத்தில் கை தொலைப்பேசியின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே இருக்கி ன்றது. நமக்குஉதவியாக இரு க்  கவேண்டிய இத்தொலைப்பே சி, நமக்குச் சில சமயங்களில் அதிகத் தொல்லைத் தரும் ஒன்றாக அமைந்து, நம் வேலையையும் பாதிக்கின்றது. இதனால்தான், சாத னைமனிதர்கள் பலர்வேலை நேரங்களின்போது தங்களது தொலைப்பேசியை அடைத்து விடுகின்றனர். இவர்களில் சிலர் ஸ்மார்ட்போன் போன்ற நவீனக் கைத்தொலைப் பேசி யைப் பயன்படுத்துவதில்லை . இருப்பினும், அவர்களுக்கும் வெளியுலகத் தொடர் புக்கும் எப்பொழுதுமே துண்டிப்பு வந்ததில்லை.

சாதனையாளர்கள் கவனம் சிதறா மல் இருப்பார்கள் சாதனை மனிதர்கள் எப்பொழுதும் எதையாவது செய்துக் கொண்டே இருப்பார்கள். இதற்கு அவர்களது கவனம் முகவும் முக்கியப் பங்களி க்கிறது. தங்களது கவனம் சிதறா மளிருக்க, தனி அறையில் வேலைசெய்தல், தியானித் தல் போன்ற பல வழிகளைப் பின்பற்றுவர். எதற்குமே அதிகம் உணர்ச்சிவசப்பட மாட்டார்கள். அவர்களின் எண்ணம் முழுக்கத் தாங் கள் ஈடுப்படும் தொழிலைப் பற்றியே இருக்கும்.

சாதனையாளர்கள் தங்கள் முதல் வெற் றியில் நிலை த்திருக்க மாட்டார்கள்
சாதனையாளர்கள் ஒவ்வொரு நாளும் சாதித்திக் கொ ண்டே இருப்பார்கள். அவர்கள் தங்கள் முதல் வெற்றி க்குப்பிறகு ஓய்ந்துவிட மாட்டா ர்கள். வெற்றிப் பாதையை நோ க்கி ஓடிக் கொண்டேயிருக்கும் இவர்கள், புதுப்புது காரியங்களி லும் ஈடுப்படுவார்கள். இதற்கும் மேலாக, அவர்கள் வெற்றிக்கா க எந்தவித சவாலையும் எதிர்க் கொள்ளத் தயாராக இருப்பார்கள்.

மேற்கூறிய குணங்கள் உங்களிடமும் உள்ளதா? அப்படியென்றால் நீங்களும் ஒரு வெற்றியாளர்தான்!!

Monday, February 23, 2015

நிதி நிர்வாகத்தில் தவிர்க்க வேண்டிய தவறுகள்!

நிதி நிர்வாகத்தில் தவிர்க்க வேண்டிய தவறுகள்!

நிதி நிர்வாகத்தை கையாளுவது என்பது நமக்கு தேவையில்லாத வேலை என்று நினைத்து பலர் ஒதுங்குகிறார்கள். இல்லை யென்றால் இது விஷயமே இல்லை என்பதுபோல் டீல் செய்கிறார்கள். இது இரண்டுமே தவறுதான்.

நிதி நிர்வாகத்தில் நம்மவர்கள் செய்யும் தவறு குறித்து நிதி ஆலோசகர்களிடம் கேட்டோம். அவர்கள் சொல்லிய கருத்துகளின் தொகுப்பு உங்களுக்காக. தவறுகளை குறைத்துக்கொள்வது என்பதே சரியான செயலை செய்வது போலதான்.

திட்டமிடல்

முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்’ பெரும்பாலான நிதி ஆலோசகர்கள் சொல்லும் முதல் வார்த்தை இதுதான். ஆனால் சேமிப்பே இல்லாமல் பலருடைய வாழ்க்கை நகர்கிறது. வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் சேமிக்க ஆரம்பிப்பதே நல்லது.

‘உங்களின் பெரும்பாலானவர்கள் வரவு, செலவு குறித்து எந்தவிதமான திட்டமும் இல்லாமலே இருக்கிறார்கள். மாதம் வருமானம் எவ்வளவு வருகிறது, எவ்வளவு செலவு ஆக வாய்ப்பு இருக்கிறது என்பதை பற்றிய எந்த விதமான திட்டமும் இல்லை. திட்டமிடல் இல்லாததால் சேமிப்பு என்பதே இல்லாமல் இருக்கிறது.

பணவீக்கத்தை தாண்டிய வருமானம்

சிலர் தொடர்ந்து சேமித்துவருவார்கள். ஆனால் பணவீக்கத்தை பற்றிய எந்த கவலையும் இல்லாமல் பிக்ஸட் டெபாசிட் உள்ளிட்ட நிலையான வட்டி விகிதம் கொடுக்கும் சேமிப்புகளில் முதலீடு செய்வார்கள். முதலீட்டின் தாரக மந்திரமே பணவீக்கத்தை தாண்டிய வருமானம்தான். ஆனால் இதைபற்றி கவலைப்படாமல் மிகவும் பாதுகாப்பான முதலீடுகளிலேயே சிலருடைய மொத்த முதலீடும் இருக்கும்.

முதலீட்டுப் பகிர்வு

சிலர் மிகவும் பாதுகாப்பான முதலீடு களை நோக்கி செல்லும் பட்சத்தில் சிலருடைய மொத்த முதலீடும் பங்குச் சந்தையிலே இருக்கும். இன்னும் சிலரோ தங்கமாக வாங்கி குவித்துக்கொண்டே இருப்பார்கள். ஒருவருடைய மொத்த முதலீட்டில் அதிகபட்சம் 10 சதவீதம் தங்கம் இருக்கலாம்.

வயதுக்கு ஏற்ப பங்குச்சந்தையில் முதலீடு இருக்க வேண்டும் என்பது பொதுவான விதி. முதலீடு செய்யாமல் இருப்பது எப்படி தவறோ அதுபோல மொத்த முதலீடும் ஒரே இடத்தில் இருப்பதும் தவறு. தங்கம், பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்ட், பிக்சட் டெபாசிட் என அனைத்து முதலீடுகளிலும் பிரித்து முதலீடு செய்வது நல்லது.

காப்பீடு தேவை

இந்தியாவில் ஆயுள் காப்பீடு எடுத்தவர்கள் 5 சதவீதம் கூட இல்லை. நம்மிடம் சேமிப்பே இல்லை அல்லது கொஞ்சம் சேமிப்பு இருக்கிற நிலையில் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால் மொத்த சேமிப்பும் கரைந்துவிடும் அல்லது பெருங்கடனாளியாக மாறும் சூழ்நிலை உருவாகும்.

இப்போது வரும் நோய்களும், நாம் சிகிச்சைக்கு செல்லும் மருத்துவமனைகளும் நம்மை கடனாளி ஆக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால் ஒரு மருத்துவக் காப்பீடும், ஆயுள் காப்பீடும் அவசியம் எடுப்பது நல்லது.

ஆயுள் காப்பீடு எடுக்க வேண்டும் என்பதற்காக ஏதாவது ஒரு பாலிசியை சிலர் எடுக்கிறார்கள். அதுவும் கணக்கின்றி பல பாலிசிகளை எடுக்கிறார்கள். குறிப் பாக பிப்ரவரி - மார்ச் மாத காலத்தில் வரிச்சலுகை பெற வேண்டும் என்பதற்காக தேவை இல்லாத பாலிசிகளை எடுக்கவும் செய்கிறார்கள். ஆயுள் காப்பீட்டை பொறுத்தவரை டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பதுதான் சிறந்த தேர்வு.

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு உபயோகம் நிச்சயம் மோசமானது கிடையாது. ஆனால் இதை யார், எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்து இருக்கிறது. தவறாக பயன்படுத்தும் பட்சத்தில் பல சிக்கல்களை இது உண்டாக்கும்.

ஒரு கிரெடிட் கார்டில் வாங்கிய கடனை இன்னொரு கார்டு மூலம் செலுத்துவது, குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்துவது உள்ளிட்ட காரணங்களால் சிக்கல்கள் மேலும் அதிகரிக்கும். தவிர, காலதாமத கட்டணம், வட்டி, சிபில் கணக்கில் பிரச்சினை உள்ளிட்ட பல ஆபத்துகள் தொடரும்.

ஓய்வுகால திட்டம்

30 வயதில் இருக்கும் நான் ஓய்வு காலத்துக்கு ஏன் இப்போதே திட்டமிட வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் இப்போது திட்டமிடாவிட்டால் அதன் பிறகு எப்போதும் திட்டமிட முடியாது என்பதை மறந்து விட வேண்டாம்.

தற்போது மருத்துவ வசதிகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் சராசரி ஆயுள் காலம் உயர்ந்துகொண்டே இருக்கிறது. ஓய்வு காலத்துக்கு பிறகு 15 வருடங்களுக்கு மேலே சராசரியாக வாழ வேண்டி இருக்கும் என்பதை மனதில் வைத்துகொண்டு ஓய்வு காலத்துக்கு சேமிப்பது நல்லது.

அதிகக் கடன்

கடன் வாங்குவது தவறில்லை. கடன் வாங்காமல் வீடு வாங்க முடியாது என்ப தும் உண்மைதான். ஆனால் தங்களது எல்லை தெரிந்து வாங்க வேண்டும். எவ்வளவு காலத்துக்கு நமக்கு வருமானம் கிடைக்கும், எவ்வளவு தொகையை நம்மால் திருப்பி செலுத்த முடியும் உள்ளிட்டவற்றை தெரிந்து கடன் வாங்க வேண்டும்.

பொதுவாக கையில் கிடைக்கும் நிகர வருமானத்தில் 40 சதவீதத்துக்கும் மேல் கடன் இருக்க கூடாது. வீட்டுக்கடன், கார் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களும் இந்த எல்லைக்குள்தான் இருக்கவேண்டும். ஆனால் எளிதாகக் கடன் கிடைக்கிறது என்று பல வகையான கடன் வாங்குகிறார்கள்.

இது தவிர நண்பர்கள் உறவினர்களிடம் வாங்கும் கடன் தனி. எல்லை தாண்டிய கடன் தலைக்கு மேல் தொங்கும் கத்தி என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அவசர கால நிதி

பலர் சீராக சேமித்து வந்தாலும், அனைத்து முதலீடுகளையும் உடனடி யாக எடுக்க முடியாத திட்டங்களாக தேர்ந்தெடுத்து முதலீடு செய்து வருவார்கள். ஏதாவது அவசர தேவைகள் அல்லது வேலை இழப்பு என்னும் சூழ்நிலை வரும் போது பணம் இல்லாமல் சிரமப்பட வேண்டி இருக்கும். அல்லது கடன் வாங்க வேண்டி இருக்கும். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் முதலீட்டின் மீது கிடைக்கும் வருமானத்தை விட வாங்கிய கடனுக்கு அதிக வட்டி செலுத்த வேண்டி இருக்கும். அதனால் குறைந்தபட்சம் 3 மாத சம்பளத்தையாவது எளிதில் எடுக்க முடிகிற முதலீடுகளில் சேமிப்பது நல்லது.

முதலீடு செய்யாமல் இருப்பது எப்படி தவறோ அதுபோல மொத்த முதலீடும் ஒரே இடத்தில் இருப்பதும் தவறு. தங்கம், பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்ட், பிக்சட் டெபாசிட் என அனைத்து முதலீடுகளிலும் பிரித்து முதலீடு செய்வது நல்லது.

Thursday, February 19, 2015

ஆலயம் சென்று வழிபடுவோர் கவனிக்கவும்

ஆலயம் சென்று வழிபடுவோர் கவனிக்கவும் ...........

1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.
2. முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது.
3. போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டாம்.
4. குடும்பத்தோடு செல்வது நல்லதுதான். அதற்காக பூஜையை வாரக்கணக்கில் தாமதப்படுத்தக் கூடாது.
5. புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும், பின்பும் அசைவ உணவு, மது இவற்றை தவிர்ப்பீர். மற்ற விஷயங்களிலும் கட்டுப்பாடு தேவை.
6.
7. பெண்கள் வீட்டுக்கு விலக்காகி 5-7 நாட்கள் கழித்துச் செல்வது நல்லது.
8. யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று சொல்லி வாங்காதீர்.
9. போகும்போதோ வரும்போதோ குல தெய்வத்தை வழிபடலாம். தோஷமில்லை.
10. தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.
11. சுவாமி தரிசனம் சிலமணி நேரம் ஆகும் என்பதால் புறப்படுவதற்கு முன்பு பன், டீ, பிஸ்கட், காபி, ரஸ்க், டிரை ப்ரூட்ஸ், கூல்ட்ரிங்ஸ், போன்ற ஸ்லைட் ஃபுட் சாப்பிடலாம்.
12. பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்யவும்.
13. ஆலயம் வர இயலாதவர்கள், வெளி நாடு வாசிகள், விரும்பாதவர்கள் இவர்களுக்கு அவர்களது இரத்த உறவுக்காரர்கள், விசுவாசமுள்ளவர்கள் குருமார்கள் பூஜை செய்தால் பலிதமாகும்.
14. பூஜைக்காக தாங்கள் நேரம், பணம் செலவழிப்பது பெரிய விஷயமல்ல. கணிந்த, தாழ்ந்த, முறையான பக்தி மனோபாவமே பலனை நிர்ணயம் செய்கிறது.
15. முக்கிய பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களை பிறரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது.
16. பூஜை சம்பந்தப்பட்ட கிரகத்தின் நாள் ஹோரையில் செய்யுங்கள்.
17. தேவையான காலம் வரை வருடத்திற்கு ஒரு முறையாவது இப்பூஜையை செய்ய வேண்டும்.
18. எல்லா ஆலயங்களுக்கும் சம்பந்தாசம்பந்தமின்றி சென்று வருவது பயனற்றது.
19. பொழுதுபோவதற்காக (சுற்றுலா) ஆலயம் செல்லாதீர்.
20. தங்கள் சக்திக்கேற்றபடி பூஜை செய்ய வேண்டும். வசதியுள்ளவர்கள் சாதாரண பூஜை செய்தால் பலிக்காது. எளியவர்கள் கடன் வாங்கி பெரிதாக செய்ய வேண்டாம்.
21. பூஜைக்கு அமாவாசை, பவுர்ணமி தங்கள் பிறந்த நாள், சித்திரை 1, ஜனவரி 1 போன்றவை உகந்தவை.
22. தலங்களுக்கு செல்வதற்கு முன் 1 நாளும், பின் 1 நாளும் இறந்தவர் வீட்டிற்கு செல்லாதீர்.
23. நெருங்கிய உறவினர் இறந்துவிட்டால் ஐயர் அல்லது ஜோதிடரைக் கேட்டு தகுந்த காலம் கடந்து தரிசிக்க வேண்டும்.
24. வசதியுள்ளவர்கள் புத்தாடை அணிந்து செல்லலாம்.
25. மாலை நேர பூஜைக்கு காலை அணிந்த உடையை அணியாதீர்.
26. ராகுகால பூஜையைத் தவிர மற்ற பூஜைகளை காலை 7.00 மணிக்குள் ஆரம்பித்து விட வேண்டும்.
27. பொருட்கள் தரமாக இருந்தால் அனைத்தையும் பரிகார ஸ்தலத்தில் வாங்குவது சிறந்தது.
28. அதிகம் பேரம் பேச வேண்டாம்.
29. முதலில் விநாயகர், அருகம்புல் வைத்து பிரார்த்தித்து, ஒரு தேங்காயை வலது கையில் வைத்துக்கொண்டு 1 பிரதட்சணம் வந்து பூஜையைத் துவங்கி ஒதுக்கப்பட்ட இடத்தில் அந்த சிதறு காயை உடையுங்கள்.
30. ஆலயத்திற்குள் யாருடனும் பேச வேண்டாம். செல்போன்களைத் தவிர்க்கவும்.
31. வெற்றிலைக்கு நுனியும், வாழைப் பழத்திற்கு காம்பும் இருக்க வேண்டும். வில்வம் மற்றும் தாமரைப்பூவிற்கு இதழ்கள் மட்டுமே உயர்ந்தவை. காம்பு, மஞ்சள் கரு, உள் இழைகள் இருக்கக்கூடாது.
32. வெற்றிலை, வாழைப்பழம், தேங்காய், உதிரி புஷ்பங்கள், பழவகைகள், மண் விளக்கு, ஸ்பூன், அலங்கார மாலை, அர்ச்சனைத் தட்டு முதலியவற்றை கழுவி எடுத்துச் செல்லவும்.
33. சிதறு காயைத் தவிர மற்ற காய்களை மஞ்சள் தடவி (இளநிற மஞ்சள்) எடுத்துச் செல்லுங்கள்.
34. மண்விளக்குகளில் ஐந்து இடத்தில் மோதிர விரலால் மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். இதற்கு சந்தனம் உபயோகிக்கக் கூடாது.
35. பூஜை சாமான்களை கைகளில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக்காமல் பித்தளை, எவர் சில்வர் தாம்பாளம், கூடை இவற்றில் வைத்துக் கொடுங்கள்.
36. நைவேத்யம் அந்தந்த ஆலய மடப்பள்ளியில் தயார் செய்ய வேண்டும். நீங்கள் தயாரித்து எடுத்துச் செல்லக்கூடாது.
37. பால்கோவா, ஸ்வீட்ஸ், அவல் பொரி, கடலை இவற்றையும் நைவேத்தியமாகப் பயன்படுத்தலாம்.
38. திரி, தீப்பெட்டி, டிஸ்யூ பேப்பர், கேண்டில், நெய் துடைக்க துணி, ஸ்பூன் முதலியவற்றை எடுத்துச் செல்லவும்.
39. திரை போட்ட பின் பிரதட்சணம் வர வேண்டாம்.
40. விநாயகருக்கு ஒன்று. தனி அம்பாளுக்கு இரண்டு. சிவனைச் சார்ந்த அம்பாளுக்கு மூன்று என்ற கணக்கில் வலம் வாருங்கள்.
41. ஒரு பிரதட்சணம் முடிந்ததும் கொடி மரத்தடியில் கைகூப்பி நின்று வணங்கியதும் அடுத்ததை துவங்கவும்.
42. கொடிமரத்தடியைத் தவிர வேறெங்கும் விழுந்து வணங்கக் கூடாது.
43. ஸ்பெஷல் எண்ட்ரன்ஸ் வழியாகச் சென்றால் சிறப்பான நிம்மதியான தரிசனம் கிடைக்கும்.
44. பிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்ற வேண்டாம்.
45. நெய் அல்லது எண்ணையை பிற விளக்குகளில ஊற்ற வேண்டாம்.
46. அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும்.
47. பரிகாரம் சம்பந்தப்பட்டவர்களுக்கு விபூதி, பிரசாதம் அனுப்பி வைக்க வேண்டும்.
48. பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக் கூடாது.
49. பூஜை செய்து கொண்டிருக்கும் சமயம், யாராவது பிரசாதம் கொடுத்தால், அதை பெற்றுக்கொண்டு பூஜை முடிந்தபின் உண்ணவும்.
50. பரிகாரம் செய்தபின் பூஜை பொருட்களை அங்கேயே கொடுத்து விடுவது நல்லது. பசுமாட்டிற்கு வாழைப்பழம், மற்றவற்றை ஐயரிடம் கொடுக்கலாம். சிப்பந்திகளிடமும் கொடுக்கலாம்.
51. பிரத்யேக கனி வகைகளை வைத்துப் படைப்பது நல்லது. எலுமிச்சை, மாதுளை, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, மா முதலியன.
52. வேகமாக ப்ரதட்சணம் வராமல் பொறுமையாக நமச்சிவாய என்ற 5 எழுந்து மந்திரத்தை உச்சரித்தபடி பொறுமையாக வருவது நல்லது.
53. பலன் முழுமையாகப் பெற 1 வருஷ காலம் வரை ஆகலாம். நமக்கு 1 வருஷம் என்பது ஆண்டவனுக்கு 1 நாள்.
54. ஒவ்வொரு ஆலயத்திலும் தீபம் ஏற்றுவதற்கென்று உரிய தனியான இடத்தில் ஏற்றவும், சிலைகள் அருகில் ஏற்றக்கூடாது.
55. சுவாமியைத் தொடாமல் பூஜிக்கவும்.
56. பூஜை செய்த சாமான்கள் பூஜை செய்யாதவற்றுடன் சேர்ந்து விடக்கூடாது.
57. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களுக்காக 5 மூக்கு தீபம் ஏற்ற வேண்டும்.
58. திரி கனமாக இருந்தால் தீபம் நின்று எரியும். தீபம் ஏற்றிய பின் விளக்குகளை தூக்கி தீபம் காட்டுவது, நகற்றுவது கூடாது. தீபத்துடன் பிரதட்சணம் வருவது தவறு.
59. ஒரு கையில் விபூதி குங்குமம் வாங்கக்கூடாது. இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து பௌயமாக பெற்றுக் கொள்ள வேண்டும். விபூதி, குங்குமத்தை பேப்பரில் வாங்ககூடாது.
60. பெற்ற விபூதி குங்கும பிரசாதத்தை கீழே கொட்டாமல் வீட்டிற்கு பேப்பரில் மடித்து எடுத்துச் செல்லவும்.
61. விபூதியை நிமிர்ந்து நின்று அப்படியே பூசிக் கொள்ளவும். இடது கையில் வைக்க வேண்டும்.
62. பரிகாரங்கள் அனைத்தும் தங்கள் ஜோதிடரின் அறிவுரைப்படி வரிசைக் கிரமமாக இருக்க வேண்டும்.
63. அலங்கார மாலை அவசியமானது தான். ஆனால் மாலையை விட உதிரிப்பூக்கள் விசேஷமானது.
64. அருகம்புல், வில்வம், தாமரைப்பூ, சம்பங்கி, சாமந்தி, பச்சை, மரிக் கொழுந்து, சங்குப்பூ, நீலப்பூ, துளசி, மல்லிகை, ரோஜா, பன்னீர் ரோஜா, விருட்சிப்பூ போன்ற பூ வகைகளால் பூஜிப்பது நல்லது.
65. காளி, துர்கா, முருகனுக்கு பஞ்ச அரளிப் பூக்கள் விசேஷமானது.
66. அம்பாளுக்கு மெருன் நிற குங்குமமே சிறந்தது.
67. எண்ணையை விட நெய்க்கு வீரியம் மிக அதிகம்.
68. சாதாரண மாலையை வாங்காமல் பாதம் வரையிலுள்ள வாகை மாலையை வாங்குங்கள்.
69. சுவாமி சன்னதியில் ஸ்தோத்திரங்கள் பாடுவது பிறருக்கு தொல்லையாக அமையும். அமைதி தேவை.
70. கஜ பூஜை, ஒட்டக பூஜை, கோ பூஜை, சிப்பந்திகளுக்கு தட்சணை தருவது இவை பூஜையின் பலனை அதிகரிக்கும். ஜீவகாருண்யம் உயர்வு தரும்.
71. சிவன், அம்பாளை மட்டும் தரிசிப்பது சரியல்ல. பரிவார தேவதைகள் என வழங்கப்படும் பிற சன்னதிகளிலும் வழிபாடு தேவை. நெய் தீபம் ஏற்றி உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கலாம்.
72. வாழைப்பழத்தில் பூவம் பழம் உயர்ந்தது. அடுத்து நாட்டுப்பழம்.
73. சூடம் ஏற்றினால் புகையினால் இடம் மாசுபடும்.
74. ஆலயத் தூய்மை ஆலய தரிசனத்தை விட முக்கியமானது.
75. தல வரலாறு புத்தகம் வாங்கி ஸ்தலம் சம்பந்தப்பட்ட அனைத்து விசேஷங்களையும் தெரிந்துகொள்வது பூஜைக்கு உதவும்.
76. கோயிலுக்குள் சில்லறை கிடைக்காது. ரூ. 10,50,100 என மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். சில்லறைக் காசுகள் போடுவதைத் தவிர்ப்பீர்.
77. கூட்டம் அலைமோதும் ஸ்தலங்களில் பொறுமை தேவை.
78. காசு செலவழித்து செல்பவர் மீது பொறாமை வேண்டாம். நிர்வாகத்திற்கு பணம் தேவை.
79. செல்போன்களைத் தவிர்க்கவும்.
80. விபூதி குங்குமம் வாங்கும் முன்பே பிராமணருக்கு தட்சணை கொடுத்து விட வேண்டும்.
81. சங்கல்பம் மிக முக்கியம்.
82. கோபுர தரிசனம் கோடி நன்மை.
83. சண்டிகேஸ்வரருக்கு கடைசிப் பிரகாரத்தில் தீபம் ஏற்றி வழிபடுங்கள். அமைதியாக கையை தட்டுங்கள். சொடுக்குப் போடாதீர்.
84. கொடி மரத்தடியில் வடக்குப் பார்த்து விழுந்து வணங்கி பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும்.
85. பிறகு சற்று விலகி கீழே அமர்ந்து 1 நிமிஷம் தியானம் பண்ணி பிரார்த்தனையை நிறைவேற்றவும்.
86. ஆரம்பத்தில் விநாயகரிடம் விடுத்த வேண்டுகோள்தான் இறுதி வரை இருக்க வேண்டும். மாறக்கூடாது.
87. பிரார்த்தனைகள் 1 அல்லது 2க்கு மேல் இருக்கக்கூடாது.
88. காவல் தெய்வங்கள் இருந்தால் அவர்களை வழிபட்ட பிறகே விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும்.
89. இத்தகைய பூஜைகள் காரியசித்தி பூஜைகள் தானே தவிர கர்ம வினைகளை முற்றிலும் மாற்றாது. ஆனால் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும்.
90. பூஜைக்கு முன்னுரிமை பெறுபவை. 1. பித்ருக்கள், 2. குலதெய்வம், 3. விநாயகர், 4. திசாநாதன், 5. பிரச்சனை அல்லது கோரிக்கை சார்ந்த தெய்வம்.
91. நவக்கிரகங்கள் சம்பந்தமின்றி நேரடியாக செயல்படும் ஆற்றல் முனீஸ்வரர், அனுமார், பசு, யானை இவர்களுக்கு உண்டு.
92. இயன்றவரை இறைவனைப் பற்றிய சிந்தனையிலேயே இருங்கள்.
93. தோஷ நிவர்த்திப் பூஜாக்களை இளம் வயதிலேயே 30 வயதிற்குள் செய்து விடுங்கள்.
94. ஸ்தோத்ர பாராயணம் எல்லோருக்கும் அவ்வளவு பலன் தராது.
95. கடுமையான விரதங்களை மேற்கொள்வது, அடிக்கடி பட்டினி கிடப்பது இவற்றை தவிர்க்கவும்.
96. இயல்பான முழுமையான நம்பிக்கையுடன், நேர்த்தியாக, பூரண மன அமைதியுடன் பிரார்த்தனை செய்யுங்கள்.
97. பூஜைக்கு விபூதி, குங்குமம், மஞ்சள், நெய், உதிரி புஷ்பம், வஸ்திரம், மாலை, சந்தனம், தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, நைவேத்யம், தட்சணை இவை முக்கியம்.
98. சின்னச்சின்ன பூஜைகளை விட அனைத்தும் அடங்கிய முறையான ப்ரத்யேக பூஜைதான் பலன்களை அள்ளித் தருகின்றன.
99. ஆண்டவன் நினைத்தால் மட்டுமே பூஜைக்குரிய அனுமதி கிடைக்கும்.
100. ஆண்டவனை நினைத்துக் கொண்டே இருங்கள். காலம் கனியும்போது ஆண்டவன் நம்மை நினைப்பார்.

Tuesday, February 17, 2015

பாம்புக்கடி வைத்திய முறைகள்

பாம்புக்கடி வைத்திய முறைகள்

நம்மிடையே பல காலங்களாக இருந்து வந்த நாட்டுப்புற வைத்தியர்கள் (சித்த வைத்தியர்கள்) இப்போது குறைந்து போனதால் நாட்டு மருந்துகளை பற்றிய விசயங்களும் மறைந்து வருகின்றன. முன்பெல்லாம் பாம்பு கடியை பற்றி அவ்வளவாக பயப்பட மாட்டார்கள். கடித்த பாம்பு எதுவென்று தெரிந்து கொண்டால் எளிதாக வைத்தியம் பார்த்து பிழைத்துக்கொள்ளலாம் என்பதை உறுதியாக நம்புவார்கள்.

பொதுவாக கிராமங்களில் வயல்வரப்புகளில் எலிகளை தேடி வரும் பாம்புகள் அங்கு வேலை செய்யும் விவசாயிகளை கடித்து விடுவதண்டு. என்ன கடித்தது என்றே தெரியாமல் ஏதோ கடித்து விட்டது என்ற எண்ணிக் கொண்டு மந்திரித்தால் சரியாகி விடும் என்று விட்டு விடுபவர்கள் தான் பெரும்பாலும் இறந்து போகிறார்கள். இன்றைக்கு அரசாங்கம் மக்களுக்கான பாம்பு கடி மருந்துகள் கூட பற்றாக்குறையில் இருக்குமளவுக்கு தான் அரசை நடத்துகிறது. நகரங்களில் நாய் கடித்தவர்களின் புள்ளி விவரம் இருக்கும் அளவுக்கு கூட இந்தியாவில் பாம்பு கடித்து இறப்பவர்களின் எண்ணிக்கை சரியாக இல்லை.

பாம்புகளில் ஏராளமான வகைகள் இருக்கின்றன. நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், ஊது சுருட்டை, வளனை, சாரை, தண்ணீர் பாம்பு( டிஸ்கவரி சேனலில் அவ்வப்போது பசிக்கு பியர் கிரில்ஸ் பிடித்து சாப்பிடுவது), கொம்பேறி மூக்கன், மலைப்பாம்பு, கருநாகம், சுண்டக்கருவினை, சாரை என்று பல வகை இருக்கின்றன.ஆனால் இவற்றில் மனிதனை கொல்லக்கூடிய அளவுக்கு விஷமுள்ளவை குறைவே. ஆனால் கடுமையான விஷமுள்ளவை என்று கருநாக வகை பாம்புகளின் கடி தான் ஆபத்தானவை. ஆனாலும் பாம்பு கடித்த அடுத்த நிமிடம் முதலுதவி கிடைத்து விட்டால் கடி பட்ட நபரை பிழைக்க வைத்து விடலாம் என்பது தான் அனுபவத்தில் கண்ட உண்மை.

இது தவிர கடிபட்ட நபர்கள் தன்னை கடித்தது என்ன பாம்பு என்று அடையாளத்தை சரியாக சொல்ல தெரிந்தால் அந்த நபருக்கு நச்சு முறிவு மருந்தை உடனடியாக தேர்வு செய்ய முடியும். பொதுவாக இப்படி அடையாளம் காண தெரியாமல் விடும் போது தரப்படும் தடுப்பு மருந்துகள் ஒருவரின் உயிரை பிழைக்க வைத்து விட்டாலும், கடி பட்ட இடத்தில் இருக்கும் தசை அணுக்கள் செயலற்று போய்விடுகின்றன.

எனவே பாம்பு கடித்து விட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். நோயாளி சுயநினைவுடன் இருக்கும் போதே பாம்பின் அடையாளத்தை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் இருக்கும் சில பாம்பு பிடிக்கும் குழு மக்களுக்கு பாம்புகள் கடித்தால் விஷம் ஏறுவதில்லை என்று சமீபத்தில் டிஸ்கவரி சேனலில் சொல்வதை பார்க்க முடிந்தது. காரணம், காலம் காலமாக இந்த இனத்து மக்கள் பாம்பு பிடிப்பதும், அவர்கள் பாம்பு கடிபடும் போது அது அவர்கள் உடலில் நாளாவட்டத்தில் பாம்பு விஷத்தை முறித்துக்கொள்ளும் அளவு வலிமை பெற்றிருப்பதும் தெரியவந்தது. ஆனால் சாதாரண நபர்கள் பாம்புகளிடம் கடி பட்டால் பதறிவிடுகிறார்கள்.

பாம்பு கடித்ததும் ஐயோ....பாம்பு கடித்து விட்டதே என்று அதிர்ச்சியடைகிறார்கள். இப்படி ஏற்படும் அதிர்ச்சியும் பயமும் தான் அந்த நபரை மரணத்தின் விளிம்புக்கு அழைத்து சென்று விடுகிறது. பாம்பு கடித்து விட்டால் பதறக்கூடாது. இது தான் மிக முக்கியமானது. கடித்த பாம்பு தப்பித்து விட்டாலும் அதன் தோற்றத்தை நினைவில் கொள்ள வேண்டும். அப்போது தான் மருத்துவர்கள் சரியான விஷ முறிவு மருந்தை தேர்வு செய்ய முடியும்.

பொதுவாக கடிபட்ட இடத்தில் பாம்பின் ஒரு பல் பதிந்திருந்தால் அது தோலை மட்டும் தான் பாதித்திருக்கிறது என்றும், இரண்டு பல்லும் பதிந்திருந்தால் அது சதையை பாதிக்கும் என்றும், மூன்று பல் பட்டால் அது எலும்பை பாதிக்கும் என்றும், நான்கு பல் பட்டால் மூளையை பாதிக்கும் என்றும் சொல்வார்கள். பொதுவாக பற்குறி அழுத்தமாக தெரிந்தாலோ, கடிபட்ட இடம் கூர்மையான தீக்கனலில் காட்டிய ஊசியை இறக்கியது போல் எரிச்சலாக இருந்தாலே கடியின் வேகம் அதிகம் என்று தெரிந்து கொள்ளலாம்.

இப்படி இருக்கும் நிலையில் கிராமப்புறங்களில் விரலி மஞ்சளை நெருப்பில் காட்டி அது தணலாக இருக்கும் போது இந்த மஞ்சளின் எரிந்து கொண்டிருக்கும் பகுதியை வைத்து கடிவாயில் அழுத்துவார்கள். இதனால் பாம்பின் நஞ்சு முறிந்து விடும் என்கிறார்கள் அனுபவ வைத்தியர்கள்.

மருத்துவர்கள் இல்லாத பல கிராமங்களில் இன்றும் இது நடைமுறையில் இருக்கிறது. இது தவிர பாம்பு கடி பட்ட நபர்களுக்கு வாழை மட்டையை திருகினால் வரும் சாற்றை எடுத்து குடிக்க கொடுப்பதுண்டு. இந்த வாழைப்பட்டை சாறு பாம்பின் விஷத்தை முறிக்கிறது என்பது கைகண்ட வைத்திய முறை.

நாகப்பாம்பு அல்லது கருநாகம் கடித்திருந்தால் கடித்த இடத்தில் ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் ஒரு அங்குல இடைவெளி தென்படும்.

விரியன் பாம்பு கடித்திருந்தால் இரண்டிற்கும் மேற்பட்ட பற்குறிகள் காணப்படும்.

நல்ல பாம்பு கடித்தால் ரத்தம் வேகமாக உறையும். மற்ற பாம்புகள் கடித்தால் ரத்தம் உறையாமல் கடி இடத்திலிருந்து ரத்த ஒழுக்கு இருக்கும்.

பாம்பு கடிபட்டவருக்கு ஆமணக்கு இலைகளுடன், ஏழு மிளகை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் பாம்பின் நஞ்சு ஏறாது. மணிக்கு ஒரு தடவை இந்த மருந்தை கொடுத்து வரவேண்டும். இந்த பச்சிலை மருந்து வாந்தியை ஏற்படுத்தி நச்சை நீங்க செய்யும்.

பாம்பு கடித்த நபரை எக்காரணம் கொண்டும் தூங்க விடக்கூடாது. உப்பு, புளி, காரம், எண்ணெய் நீக்கிய வெறும் பச்சரிசியும், பாசிப்பயறும் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட தரவேண்டும். பாம்பு கடி பட்டவர் மூர்ச்சையாகி விட்டால் தும்பை செடியை கசக்கி பிழிந்து சாறு எடுத்து அவரது மூக்கினுள் சிறிது விட வேண்டும். இதனால் மூர்ச்சை தெளிந்து விடும். இது தவிர அருகம் புல்லை வெண்ணெய் போல் அரைத்து கடிபட்ட இடத்தில் வைத்து கட்டினால் பாம்பின் நஞ்சு இறங்கி விடும். அருகம்புல்லின் வாசனை மூர்ச்சையை தெளிய வைக்கும்.

நஞ்சு இறங்கி கடிபட்டவர் ஒரளவு தெளிவான நிலையில் இருந்தால் அவருக்கு வேப்பிலையை வாயில் போட்டு மெல்ல சொல்ல வேண்டும். அப்போது கசப்பு தெரிந்தால் நஞ்சு வெளியாகி விட்டது என்று தெரிந்து கொள்ளலாம். இந்த நிலையில் தும்பை இலை, தும்பை பூ ஆகிய இரண்டையும இடித்து சாற்றை குடிக்க தரவேண்டும். இப்படியான நாட்டு வைத்திய முறையில் பாம்பு கடிபட்டவரை முதலுதவி செய்து காப்பாற்றி விடலாம்.

சில பாம்புகள் கடித்தால் அறிகுறிகள். . .
நல்ல பாம்பு கடித்தால், கடிபட்ட இடத்தில் வலி இருக்கும். சிலருக்கு வலி தெரியாது. பார்வை மங்கும். கண் இமை சுருங்கும். நாக்கு தடிக்கும். பேச்சு குளறும். வாயில் எச்சில் வடியும். மூச்சு திணறும். நினைவு குறையும்.

கட்டு விரியன் கடித்தால் இந்த அறிகுறியுடன் வயிற்று வலியும் இருக்கும். கண்ணாடி விரியன் கடித்தால் கடிபட்ட இடத்தில் வலி கடுமையாக இருக்கும். கடிபட்ட இடத்தில் வீக்கம், மூச்சுதிணறல், வாந்தி, சோர்வு, சிறுநீர், மலம் ஆகியவற்றுடன் ரத்தம் வரும்.

1. கடித்த இடம், மனிதன் கடித்தது போல் அனைத்து பற்களும் வரிசையாக பதிந்து காணப்படுகிறதா....???

இந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல...

2. கடித்த இடம், இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதித்து காணப்படுகிறதா....??? கடித்த இடம் சற்று தடித்து(வீங்கி)
காணப்படுகிறதா..?? கடுமையான வலி இருக்கிறதா..???

இந்த அறிகுறி விஷப்பாம்பு கடித்ததாகத்தான் இருக்கக்கூடும்...

முதலுதவி:-

1.இறுக்கி கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி அழுகிபோகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.

2.காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.

3.பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது. அவர் பதற்றமடையும்போதும் ரத்தஓட்டம் அதிகரிக்கும்.

4.பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்க கூடாது. ஏனெனில் நாம் வேகமாக நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவுபடுத்துகிறது

4.இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டவும். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ, அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம்.

5.பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.

6.பாம்பு கடித்துவிட்டால், பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை "அட்மிட்" செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.

7.இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை.

பாம்பு கடித்தால்.. கிட்னியையும், கண்களையும் உடன் பாதிக்ககூடும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்...

எனவே பாம்பு கடித்தால் அலட்சியம் வேண்டாம். காரணம், சில நேரங்களில் அது மரணத்தை ஏற்படுத்தாவிட்டாலும் உடலின் முக்கிய பாகங்களில் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தி விடும். உங்கள் கிராமங்கள் அவசர மருத்துவத்திற்கு எட்டாத இடத்தில் இருந்தால் இது போன்ற முதலுதவிகளை உடனே செய்ய அறிவுறுத்துங்கள்.

உலகில் ஆயிரக்கணக்கான பாம்பு வகைகள் உள்ளன. அதில் 246 வகை பாம்புகள் இந்தியாவில் உள்ளன. அயர்லாந்து, நியூசிலாந்து, ஆர்ட்டிக் போன்ற பகுதிகளைத் தவிர உலகின் அனைத்து பகுதிகளிலும் பாம்புகள் காணப்படுகின்றன.

பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது சில வகைப் பாம்புகளைத் தவிர பெரும்பான்மையான பாம்புகள் விஷ மற்றவையே. இந்தியாவில் வாழக்கூடிய நச்சுப் பாம்புகளில் ஆறு வகைப் பாம்புகள் தான் மிகவும் அபயமளிக்கக் கூடியவை அவை,

1.நல்ல பாம்பு
2.கட்டு வீரியன்
3.கண்ணாடி வீரியன்,
4.சுருட்டை பாம்பு
5.கரு நாகம்
6. ராஜ நாகம்.

மேற்கூறிய ஆறு வகைகளில் முதல் நான்கு வகைகளே நம் நாட்டில் பெருமளவு காணப்படுகின்றன. பாம்பு விஷக் கடிக்கான முறிவு மருந்து"சீர நஞ்சு" (anti -venum) இந்த நான்கு வகை பாம்பு விஷத்தை சேகரித்து கலந்து அதைக் குதிரைக்கு சிறிது சிறிதாக ஊசி மூலம் செலுத்தி பிறகு அதன் இரத்தத்தில் இருந்து சீரம் பிரித்து எடுக்கின்றனர்.

இதுவே அலோபதி மருத்துவத்தில் அனைத்து பாம்பு கடிக்கும் விஷ முறிவு மருந்தாக பயன் படுத்தப் படுகின்றது. ஒருவருக்கு பாம்பு கடித்துவிஷம் ஏறிய நிலையில் இந்த "சீர நஞ்சு" நல்ல குணமளிக்கும் மருந்து தான் ஆனால் பாம்பு கடிக்காத நிலையில் இந்த ஊசி மருந்தைப் போட்டால் இதுவே விஷமாகி அந்த மனிதர் இறந்துவிடக்கூடும்.

பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள் நல்லபாம்பு கடித்து விட்டால் மருந்து :-

கடிவாய் எரியும், வாந்தி வரும், நடை தளரும், மயக்கம் வரும், மூக்கில் நுரை வரும், உயிர்ப்பு தடை படும், இறப்பு நேரிடும், வேப்பிலை கசக்காது,மிளகு காரம் இருக்காது, ஆடு தீண்டாப்பாளை வேர் இனிக்கும், இரு பற்கள் தடம் இருக்கும் குருதி பெரும்பாலும் வராது இதற்க்கு அரை மணி நேரத்தில் மருந்து கொடுத்து விட வேண்டும் .

வாழை மட்டையைப் பிழிந்து அதன் சாற்றை 200 மி.லி.கொடுக்க வேண்டும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம். நினை வற்று இருந்தால் உடைகளைக் களைந்து வாழை மட்டையில் படுக்க வைக்கவும் , வாய் திறக்கும் , வாழைப் பட்டை சாற்றை ஊற்றலாம். விஷம் முறிந்து பிழைத்துக் கொள்வார்கள்.

வீரியன் பாம்பு கடித்து விட்டால் மருந்து :-

இது கடித்து விட்டால் கடி வாய் தொடர்ந்து எரியும், குருதி தொடர்ந்து வரும், கடி வாய் சதை வீங்கி நீல நிறமாக மாறும், வாயில், மூக்கில் குருதி வரும், சிறு நீரும் குருதியாகும், ஆடு தீண்டாப் பாளை வேர் உப்புக்கரிக்கும் சிரியா நங்கை, வேம்பு கசக்காது. இது கடித்த அரை மணி நேரத்தில் சிரியா நங்கையை அரைத்து நெல்லி அளவு கொடுத்தால் விஷம் இறங்கி வரும் ,10 நிமிடம் கழித்துக் சிறிது கொடுத்தால் கசக்காத மூலிகை சிறிது கசக்கும், மீண்டும் பத்து நிமிடம் கழித்துக் கொடுத்தால் கசப்பு நன்றாகத் தெரியும் விஷம் படிப் படியாக இறங்குவது தெரியும்.

ஆங்கில மருத்துவம் நம் பூமியில் கால் பதிக்கும் முன் இது போன்ற சித்த பாரம்பரிய மூலிகை மருந்துகள் தான் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றி வந்துள்ளது.

இரவில் நச்சுப் பூச்சி ஏதேனும் கடித்து விட்டால் என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம். இந்நிலையில் கடி பட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால்
Ø இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்லபாம்பு என்றும்,
Ø புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டுவிரியன் பாம்பு என்றும்
Ø வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு, நீர் பிரட்டை போன்றவை என்றும்,
Ø கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும்
அறிந்து உணரலாம்.

தேள்கடி மருந்துகள் :
ü எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள்கடி நஞ்சு இறங்கி விடும். கடிவாயில் எலுமிச்சைப் பழ இரசத்தையும் உப்பையும் கலந்து தடவினால் நலம் கொடுக்கும்.
ü கல்லில் சில சொட்டுத் தண்ணீரைத் தெளித்து அதில் புளியங் கொட்டையைச் சூடு உண்டாகும்படி தேய்த்துத் தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும்; நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்துவிடும்.
ü சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும். கண்ணாடி இலையின் பால் எடுத்துத் தேள் கடித்த இடத்தில் வைத்தால் நஞ்சு இறங்கும். பட்டு ரோஜா (டேபிள் ரோஜா) செடியின் இலையின் நான்கை எடுத்து வெற்றிலையில் மடித்துத் தின்றால் நஞ்சு இறங்கும்.
ü குப்பை மேனி இலையைப் பறித்து நன்றாக நீரில் கழுவி விட்டுப் பின்பு கசக்கிச் சாறு எடுத்துத் தேள் கடித்த இடத்தில் தடவ வேண்டும். அத்துடன் கசக்கிய இலையைக் கடிவாயில் வைத்துக் கட்டி விட்டால் நஞ்சு இறங்கும்.

ஒற்றை மருத்துவம்:-
சித்த மருத்துவத்தில் ஒரு பொருளை மட்டும் மருந்தாகப் பயன்படுத்தும் முறைக்கு ஒற்றை மருத்துவம் என்று பெயர்.
v நட்டுவாய்க்காலி கொட்டினால் கொப்பரைத் தேங்காயை வாயில் போட்டு மென்று தின்றால் உடன் நஞ்சு நீங்கும்.
v பூரான் கடித்தால் பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும்.

வெறிநாய்க்கடி மருந்து :
v வெறிநாய் கடித்து விட்டால் நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்கடி குணமாகும்.

பாம்புக்கடி மருந்து :
ü பாம்பு கடித்து விட்டால் உடன் வாழை மரம் ஒன்றை அடியிலும் நுனியிலும் வெட்டி ஆறு அடி நீளத் துண்டிட்டுக் கொண்டு வரவேண்டும். பாம்புக்கடி பட்டவன் பல் கட்டி வாய் திறக்க முடியாமலிருப்பான். அதனால் வாழைப்பட்டையை உரித்துப் பாயாகப் பரப்பிக் கடிபட்டவனை அதில் படுக்கவைக்க வேண்டும். பின் வாழைப்பட்டைச் சாறு 1 லிட்டர் பிழிய வேண்டும். சாறு பிழிவதற்குள் வாழைப்பட்டையில் படுக்கவைத்தவன் பல்கட்டு நீங்கி வாய் இயல்பாகத் திறக்கும். உடன் ஒரு லிட்டர் வாழைப்பட்டைச் சாறையும் பாம்புக் கடிபட்டவனைக் குடிக்கச் செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் பாம்புக் கடிபட்டவன் நஞ்சு நீங்கி எழுந்து நடப்பான்.

நஞ்சு முறிப்பு
Ø எலி, பெருச்சாளி, மூஞ்சுறு, தேள், பூரான் போன்றவைகளின் நஞ்சை நீக்க, நாயுருவியின் விதையை வீசும்படி எடுத்து வெய்யலில் காயவைத்துப் பொடி செய்ய வேண்டும். இந்தப் பொடியை நல்ல மூடியுள்ள பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். நஞ்சு நீங்கத் தேவையான காலத்தில் இந்தப் பொடியில் மூக்குப் பொடி அளவு எடுத்துத் தேனில் குழைத்துக் காலையிலும், மாலையிலும் 25 நாட்கள் சாப்பிட வேண்டும். இப்படிச் சாப்பிட்டால் நஞ்சு நீங்கும்.

Ø உடலுக்குள் சென்ற எந்த நஞ்சாக இருந்தாலும் வாந்தி ஏற்படுத்துவதன் மூலம் நஞ்சை வெளியேற்றலாம். வாந்தி ஏற்படுத்துவதற்கு நஞ்சிலைப் பறிச்சான் என்ற செடியின் வேருடன், தலைச்சுருளி என்ற பெரு மருந்து இலையைச் சேர்த்து நன்றாக அரைத்து எலுமிச்சைப்பழம் அளவு உருண்டை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்தால் உடனே வாந்தி ஏற்பட்டு அனைத்து நஞ்சும் அதன் மூலம் வெளியேறிவிடும். வாந்தி ஏற்பட்ட பின்பு எலுமிச்சைப் பழத்தைத் தண்ணீரில் பிழிந்து குடித்துவிட்டால் நஞ்சு முறிந்து போகும்.

சித்த மருத்துவம் ஏராளமான மூலிகைகளை நமக்குக் கூறுகின்றது. நஞ்சு நீக்கத்திற்கு மட்டுமன்றி, மனிதனின் அகப்புற உறுப்புக்களைத் தாக்கும் எல்லாவிதமான சிறு, பெரு நோய்களுக்கும் மருந்துண்டு. ஆனால் சித்த மருத்துவத்தின் பயன்பாடுதான் இப்போது குறைந்து வருகிறது. 
--------------------------------------------------------------------------------------
தமிழ் வானொலிகளுள், ஓர் வித்தியாசமான இசைத் தொழில்நுட்பத்தில், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் Tune in இல் புரட்சி எப்.எம் ஐக் கேட்டு மகிழ இங்கே கிளிக் செய்யுங்கள்
http://tunein.com/radio/Puradsi-Fm-s172414/

www.facebook.com/puradsifm 
.......................................................
www.puradsifm.com
www.isaiyaruvi.com
www.puradsifm.com/news

Wednesday, February 11, 2015

பொது அறிவு

பொது அறிவு

01. ஒட்டகத்துக்கு வேர்க்காதது ஏன் - வியர்வை நாளங்கள் கிடையாது
02. ஸ்பெயின் நாட்டின் தேசிய சின்னம் எது - கழுகு
03. ஆசியாவின் வைரம் என்று அழைக்கப்படும் நாடு எது - இலங்கை
04. ஒரு மண்டலம் என்பது எத்தனை நாட்கள் - 48
05. வேர் இல்லாத தாவரம் எது - இலுப்பை
06. இந்தியர்களே ஆரம்பித்த முதல் வங்கி எது- பஞ்சாப் நேஷனல் பேங்க்
07. இந்தியாவில் எந்த நகரில் அரண்மனைகள் அதிகம் உள்ளன - கொல்கத்தா
08. இஸ்ரோ விண்வெளி கோள் நிலையம் எங்குள்ளது - பெங்களூரு
09. தாவரங்கள் எந்த உறையில் தன் உணவை சேமிக்கின்றன - சூலகம்
10. திண்மப்படிக வடிவில் உள்ள ஹாலஜன் - குளோரின்
11. வரலாற்றுச் சான்றுகளை எத்தனை பிரிவாக பிரிக்கலாம் - ஐந்து
12. வரலாற்றின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் - ஹெரோடட்டஸ்
13. எந்த நூற்றாண்டில் சமண, பௌத்த சமயங்கள் தோன்றின - கி.மு. 4ம் நூற்றாண்டு
14. சமண சமயத்தை தோற்றுவித்தவர் யார் - மகாவீரர்
15. அக்கெமீனியர் பேரரசை தோற்றுவித்தவர் யார் - முதலாம் சைரஸ்
16. கி.மு.250ல் யாரால் புத்த மாநாடு கூட்டப்பட்டது - அசோகர்
17. அலெக்ஸாண்டர் எந்த நாட்டின் மன்னனாக இருந்தார் - மாசிடோனியா
18. எந்த நூற்றாண்டில் ஹரியாங்க வம்சத்தவர்கள் ஆட்சி செய்தனர் - கி.மு. ஆறாம் நூற்றாண்டு
19. அர்த்தசாஸ்திரத்திலிருந்து அசோகரின் எந்த அமைப்பை பற்றி அறியலாம் - நிர்வாகம்
20. மௌரிய வம்சத்தின் கடைசி மன்னன் யார் - பிருகத்ரதன்

Sunday, February 8, 2015

சிந்தனை செய் மனமே !

சிந்தனை செய் மனமே !

தெரிந்துக்கொள்வோம் வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்...

1. நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்

2. உன் தகுதி பிறருக்குத் தெரியவேண்டுமானால் பிறர் தகுதியை நீ தெரிந்துகொள்.

3. திருட்டுப் பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனை விட மோசமானவன்.

4. தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை 
ஆரம்பிக்கிறது.

5. அறிவுக்காக செய்யப்படும் முதலீடு எப்போதுமே கொழுத்த வட்டியையே தரும்.

6. நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை. கெட்ட மனைவியை விட மோசமான சாபமும் இல்லை.

7. முதலில் மனிதன் மதுவைக் குடிக்கிறான். பின்பு மது மனிதனை குடிக்கிறது.

8. ஆயிரம் பேர் சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக் கட்டி விடலாம். ஒரு 
வீட்டைக் கட்ட ஒழுக்கமான ஒரு பெண் வேண்டும்.

9. இரண்டு கால் உள்ள எல்லோரும் நடந்து விடலாம். ஆனால் இரண்டு கை 
உள்ள எல்லோருமே எழுதிவிட முடியாது.

10. உழைப்பு உடலை வலிமையாக்கும். துன்பங்களே மனதை வலிமையாக்கும்.

11.ஒருவன் தான் செய்த தவறை ஒத்துக்கொள்ள வெட்கப்படக் கூடாது. 
ஒப்புக்கொள்வதன் பொருள் என்ன? அவன் நேற்றைவிட இன்று அதிக அறிவு 
பெற்று விட்டான் என்பதே.

12. வாழ்க்கை சுவையானது. உங்கள் அறியாமையினால் அதை நரகமாக்கி 
விடாதீர்கள்.

13. பிறரைப் பாராட்டுங்கள். பாராட்டு கிடைக்கும். பிறரை மதியுங்கள். மதிப்புக் 
கிடைக்கும். அன்பு செலுத்துங்கள். அன்பு தேடி வரும். இவை ஒற்றைவழிப் 
பாதைகள் அல்ல. இரட்டை வழிப் பாதைகள். அன்பில் வணிகத்திற்கு 
இடமில்லை. வணிகத்தில் அன்புக்கு இடமில்லை.

14. தனக்கென வாழ்ந்தவன் தாழ்ந்தவன் ஆகிறான். பிறருக்கென வாழ்பவன் 
பெருவாழ்வு வாழ்கிறான். அடக்கம் அணிகலன் மட்டுமல்ல. அறத்தின் 
காவலன்.

15. சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக் கந்தல்களாகவும், 
கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது.

16. சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும். ஊக்கமுள்ளவனுக்கு 
எல்லாமே எளிதாகத் தோன்றும்.

17. எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும் 
கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.

18.எந்த மனிதன் தீவிரமாகவும், திடமாகவும், சிந்திக்கிறானோ அந்த 
சிந்தனைகளின் வளர்ச்சி கலையாகும். அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன் 
ஆவான்.

19. பல அறிஞர்களுடன் பழகினால் நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல 
பணக்காரர்களுடன் பழகினாலும் பணக்காரன் ஆக மாட்டாய்.

20. இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா? நீ  விரும்பியதைச் செய்வதில் அல்ல. நீ செய்வதை விரும்புவதில்தான்.

Thursday, February 5, 2015

வாழ்க்கை

வாழ்க்கை 

01. வாழ்க்கை ஒரு சவால் அதனை சந்தியுங்கள் 

02. வாழ்க்கை ஒரு பரிசு அதனை ஏற்றுக்கொள்ளுங்கள் 

03. வாழ்க்கை ஒரு சாகசப்பயணம் அதனை மேற்கொள்ளுங்கள் 

04. வாழ்க்கை ஒரு ஒரு சோகம் அதனை கடந்து வாருங்கள் 

05. வாழ்க்கை ஒரு துயரம் அதனை தாங்கிக் கொள்ளுங்கள்

06. வாழ்க்கை ஒரு கடமை அதனை நிறைவேற்றுங்கள் 

07. வாழ்க்கை ஒரு விளையாட்டு அதனை விளையாடுங்கள் 

08. வாழ்க்கை ஒரு வினோதம் அதனை கண்டறியுங்கள் 

09. வாழ்க்கை ஒரு பாடல் அதனை பாடுங்கள் 

10. வாழ்க்கை ஒரு  சந்தர்ப்பம் அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள் 

11. வாழ்க்கை ஒரு ஒரு பயணம் அதனை புகழுடன் முடித்துவிடுங்கள்

12. வாழ்க்கை ஒரு உறுதி மொழி அதனை நிறைவேற்றுங்கள் 

13. வாழ்க்கை ஒரு காதல் அதனை ரசனையுடன் அனுபவியுங்கள் 

14. வாழ்க்கை ஒரு அழகு அதனை ஆராதியுங்கள் 

15. வாழ்க்கை ஒரு உணர்வு அதனை உணர்ந்து கொள்ளுங்கள் 

16. வாழ்க்கை ஒரு போராட்டம் அதனை எதிர் கொள்ளுங்கள் 

17. வாழ்க்கை ஒரு குழப்பம் அதற்கு விடைக்காணுங்கள்

18. வாழ்க்கை ஒரு இலக்கு அதனை எட்டிப் பிடியுங்கள்     

19. வாழ்க்கை ஒரு உயரம் அதனை அடைந்து பாருங்கள் 

20. வாழ்க்கை ஒரு இனிமை அதனை ரசித்து வாழ  பழகிக்கொள்ளுங்கள் 

இறைவன் கூறிய வாழ்க்கை தத்துவத்தை பின்பற்றி வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு துணை வர வாழ்த்துகிறோம்

பிசினஸ்...100. சூப்பர் டிப்ஸ்...

பிசினஸ்...100. சூப்பர் டிப்ஸ்...

1. விளம்பரத்துறை அளிக்கும் வாய்ப்புகள் எக்கச்சக்கம். கற்பனை வளம்மிக்க வாசகங்கள் எழுதுவோர் 'ஃப்ரீலான்சர்' (Freelancer) என்ற வகையில் காப்பிரைட்டராக விளம்பர ஏஜென்சிகளுடன் பணியாற்றலாம். மிகப்பெரிய நிறுவனங்கள்கூட அவர்களுடைய தமிழ் விளம்பரங்களில் ஏடாகூடமாகத் தடுமாறியிருப்பதை அடிக்கடி காண முடியும். இதிலிருந்தே நல்ல தமிழ், கற்பனை வளம், சந்தைப்படுத்துதல் பற்றிய புரிதல்... இவை மூன்றும் இருப்பவர்களுக்கு எத்தனை வாய்ப்புகள் உள்ளன என்பதைப் புரிந்து கொள்ளலாம். www.freelanceindia.com என்ற இணையதளத்தில் நம்மைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்வது இப்படிப்பட்ட வாய்ப்புகள் நம்மைத் தேடிவர உதவும்.

2. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் இணையதளத்தை, இணையத்தில் பிரபலமாக்கும் வித்தைதான் எஸ்.இ.ஓ. (SEO-Search Engine Optimisation) அதிகம் பிரபலமாகாத... ஆனால், வேகமாக வளர்ந்து வரும் துறை இது. முறையான பயிற்சி பெற்றால், துணிந்து களம் இறங்கலாம், இணையவெளிக்குள்! இதைப் பயிற்றுவிக்கும் இணையம் மூலமாகவே ஏகப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. நல்ல நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்!

3. வலைப்பூ... ஒரு வரப்பிரசாதம். அதாங்க நெட்ல பிளாக் எழுதுவது. 'பொழுது போகாதவர்களின் இணைய விளையாட்டு அது!' என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை இப்போதே மாற்றிக் கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுநராக நீங்கள் இருந்தாலோ, அல்லது குறிப்பிட்ட எந்த விஷயத்தின் மீதாவது தீவிர ஆர்வம் உடையவராக இருந்தாலோ இன்றே தொடங்குங்கள் ஒரு வலைப்பூ. போதுமான அளவு பார்வையாளர்கள் உங்கள் வலைப்பூவுக்கு உருவாகிவிட்டால், தங்கள் நெட்வொர்க்கில் வந்து இணையுமாறு உங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப் போவது யார் தெரியுமா... சாட்சாத் கூகுள்! ஆம், தன்னுடைய வாடிக்கையாளர்களின் விளம்பரத்தை உங்கள் வலைப்பூவில் கூகுள் கொண்டு வந்து சேர்க்கும். இதற்கு பிரதிஉபகாரமாக, தன்னுடைய விளம்பர வருமானத்தில் உங்களுக்கு விகிதாச்சார பங்கு வைக்கும் கூகுள்! இதை மட்டுமே முழுநேரத் தொழிலாக செய்து காசு பார்ப்பவர்கள் அயல்நாடுகளில் எக்கச்சக்கம்.

4. www.franchiseindia.com போன்ற இணையதளங்களுக்குப் போய் பாருங்கள். சொற்ப முதலீட் டில் பெரிய நிறுவனங்களின் பிரான்சைஸ் வாய்ப்புகள் குவிந்திருப்பதைக் காணலாம். இதில் உங்களுக்கு ஆர்வமிருக்கும் துறையில் வாய்ப்பைத் தேர்ந்தெடுத்து, நன்கு விசாரித்துத் தொழில் தொடங்கலாம்.

5. இபே (ebay) போன்ற நம்பிக்கையான வலைதளங்களில் பொருட்களை வாங்கி விற்பது ஒரு லாபகரமான வேலை. சிறிது நாள் இந்த 'இபே' செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்தபின் களத்தில் இறங்குவது நல்லது.

6. வெப் டெவலப்பர் – இப்போதைய ஹாட் வேலைகளில் ஒன்று. வீட்டில் இருந்தபடியே தனியாருக்குத் தேவையான வலைதளங்கள் உருவாக்கு வதுதான் இந்த வேலையே. இணையத்தில், இதற்கென இருக்கும் பகுதிகளில் உங்களைப் பற்றி ஒரு விளம்பரம் கொடுத்தால் வேலை தேடி வர வாய்ப்பு உண்டு.

7. 'புரூஃப் ரீடிங்', 'எடிட்டிங்' போன்ற வேலைகளைச் செய்வதற்கு இப்போது நிறைய ஆட்கள் தேவைப்படுகிறார்கள். அதிலும், வீட்டில்இருந்தபடியே செய்யத் தயாராக இருந்தால் வரவேற்பு நன்றாகவே இருக்கும். பத்திரிகை அலுவலகங்கள், பதிப்பகங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டால்... வாய்ப்புகள் கிடைக்கும்.

8. டைப்பிங் நன்றாகத் தெரிந்தால் டேட்டா என்ட்ரி வேலை செய்யலாம். வீட்டில் இருந்தபடியே ஆவணங்களை கம்ப் யூட்டரில் டைப் செய்து ஏற்ற வேண்டும். பெரும்பாலும் அதுதான் வேலை. இந்த வேலைக்காக ஆள் கேட்டு பேப்பரில் வரும் விளம்பரங்களில் தொடர்புகொண்டு பணி தேடலாம். அதோடு, நிறுவனத்தின் நம்பகத்தன்மையை ஏற்கெனவே பணி செய்பவர்களிடம் உறுதி செய்வதும் முக்கியம்.

9. வீட்டில் நான்கு கம்ப்யூட்டர் வைக்க இடமிருந்தால் போதும்... குழந்தைகளுக்கு கம்ப் யூட்டர் பயிற்சி கொடுக்கும் தொழிலை ஆரம்பிக்கலாம். அளவான வருமானத்துக்கும், உங்களின் பொழுது போக்குக்கும் இது உத்தரவாதம்.

10. கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் தெரிந்தால்... வீட்டிலேயே ரிப்பேர் கடை ஒன்றை ஆரம்பிக்கலாம். கம்ப்யூட்டர்தான் என்றில்லை... எந்தெந்த துறையில் எல்லாம் ரிப்பேர் பார்க்கும் திறமை உங்களுக்கு உண்டோ, அதிலெல்லாம் நுழையலாம்.

வீடே தொழிற்பேட்டை!

உங்கள் வீட்டைச் சுற்றி டெய்லரிங் கடைகள், ஹேட்டல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள், பெரிய அபார்ட்மென்ட்கள் என்று இருந்தால், ஏகப்பட்ட வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

11. வீட்டுக்கு அருகில் டெய்லரிங் கடை இருந்தால், பட்டன் தைத்தல், ஹெம்மிங் செய்தல், எம்ப்ராய்டரி என்று துணைத்தொழில்களை அவர்களிடம் இருந்து கேட்டுவாங்கி செய்து கொடுக்கலாம்.

12. ஹோட்டல்கள் மிகுந்த ஏரியா என்றால்... இலை மற்றும் தண்ணீர் சப்ளை செய்வ தற்கான வாய்ப்பை கேட்டுப் பெறலாம். சில ஹோட்டல் களில் மசாலா அரைத்துத் தருவது, பாத்திரம் கழுவித் தருவது போன்ற வேலைகளையே கான்ட்ராக்ட் ஆக தருகிறார்கள். ஆர்வம் இருப்பின் ஆட்களை வைத்துக் கொண்டு அதையும் முயற்சிக்கலாம்.

13. கடை வீதியாக இருந்தால், பல கடைகளுக்கு வாசல் பெருக்கி தண்ணீர் தெளிக்க வேண்டிய வேலை இருக்கும். இதையும் கான்ட்ராக்ட் ஆக எடுத்து செய்தால்.. அதிலிருந்து ஒரு லாபத்தைப் பார்க்கலாம்.

14. வீட்டுக்குக் குறைந்த பட்சம் இரண்டு செல்போன் வைத்திருப்பார்கள். அதனால் ரீ-சார்ஜ் கூப்பன்கள் வாங்கி வைத்து வியாபாரம் செய்யலாம். மொத்தமாக நீங்கள் ரீ-சார்ஜ் கூப்பன் வாங்கும்போது சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்திடம் இருந்து கமிஷன் கிடைக்கும்.

15. மொத்த விலையில் பாக்கெட் பால் வாங்கி, நீங்களாகவோ அல்லது ஆள் வைத்தோ வீடு வீடாக பால் சப்ளை செய்யலாம். வீட்டில் எப்போதும் ஸ்டாக் வைத்திருந்தால் தேவைப் படுபவர்களுக்கு விற்கலாம். தயிர், மோர், தண்ணீர் கேன் மற்றும் பாக்கெட் மாவு போன்றவற்றை விற்பனை செய்தால் கூடுதல் லாபம்.வீட்டிலேயே போதுமான இடவசதி இருந்தால்... குழந்தைகளுக்குரிய புத்தகங்களை வைத்து வாடகை நூலகம் நடத்தலாம்.

16. அண்டை வீட்டுப் பெண்களின் புடவைகளை சேகரித்து, நாமே டிரைவாஷ் செய்து தரலாம். அல்லது டிரைவாஷ் கடைகள் மூலம் செய்து தந்து அதற்கான கமிஷனைப் பெற்றுக் கொள்ளலாம்.

17. அண்டை வீடுகளில் அலுவலகம் செல்பவர்களாக இருந்தால், அவர்களுடைய மின்சாரம், தொலைபேசி போன்றவற்றின் கட்டணங்களைச் செலுத்துவது, சமையல் கேஸ் புக் செய்வது போன்ற வேலைகளை செய்து கொடுத்து கமிஷன் பெறலாம்.

18. வெட்டிங் பிளானர் என்பது திருமணங்களுக்குத் தேவையான அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுக்கும் பணி. திருமண அழைப்பிதழ் எங்கே அச்சடிக்கலாம் என்று தொடங்கி, என்ன மாதிரியான சாம்பார் வைப்பது என்பது வரை பிளான் பண்ணும் வேலை. திறமையான சிலர் வேலைக்கு இருந்தால் மொத்தமாக ஆர்டர் பிடித்து நல்ல லாபம் ஈட்டலாம்.

19. ஒரு வீட்டுக்கு என்னென்ன தேவைப்படும் என்பதை பட்டியலிடுங்கள். அவற்றில் சிலவற்றைச் செய்து தரும் ஏஜென்ஸி போல செயல்படலாம். உதாரணமாக, வீடுகளுக்கு அலாரம் அமைப்பது, கொசு வராமல் ஜன்னல்களில் வலை அடிப்பது இப்படி சில. இதற்கான நிறுவனங்களை இணையதளம் வழியாக கண்டறிந்து மொத்த விலையில் கொள்முதல் செய்து, பின்னர் நிறுவனங்கள், வீடுகளில் கேன்வாஸ் செய்து ஆர்டர் எடுக்கலாம்.

20. உங்கள் வீட்டில் விசாலமான ஹால் அல்லது எக்ஸ்ட்ரா ரூம் இருந்தால், கம்ப்யூட்டர் கேம் ஆரம்பிக்கலாம். அக்கம் பக்கத்து குழந்தைகளை அழைத்து விஷயத்தைச் சொன்னால்... அந்த ஏரியாவுக்கே விஷயம் ஈஸியாக பரவிவிடும். மணிக்கு இவ்வளவு ரூபாய் என கணக் கிட்டு காசு பார்க்க லாம்.

கைகொடுக்கும் இயந்திரங்கள்!

வீட்டிலேயோ அல்லது சிறிய அளவிலான கடையிலேயோ வைத்து பிசினஸ் செய்யும் வகையில் எண்ணற்ற இயந்திரங்கள் இருக்கின்றன. அவற்றில் சில கீழே அணி வகுக்கின்றன. உங்கள் வசதிக்கு ஏற்ப முடிவு செய்யலாம்.

21. மெழுகுவர்த்தி மெஷின்: 700 ரூபாயில் தொடங்கி 45 ஆயிரம் ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கிறது. சிறிய மெஷினில் ஒரு மணி நேரத்தில் 55 மெழுகுவர்த்திகள் செய்யலாம். ஏற்றுமதி செய்யும்பட்சத்தில் பெரிய மெஷின் வாங்கலாம். இதில் 500 முதல் 1,000 மெழுகுவர்த்திகள் தயாரிக்கலாம்.

22. சாக்பீஸ் மெஷின்: இதன் விலை 15 ஆயிரம் ரூபாய். நாள் ஒன்றுக்கு 10 கிலோ அளவுக்கு சாக்பீஸ் தயாரிக்கலாம்.

23. பவுச் மெஷின்: 1 ரூபாய், 2 ரூபாய் என்று விற்பனை செய்யப்படும் ஊறுகாய், வாஷிங் பவுடர், எண்ணெய் போன்ற பொருட்களை சாஷே பாக்கெட்டுகளில் அடைத்துத் தரும் மெஷின் இது. விலை ஒரு லட்சம். 24 மணி நேரமும் தொடர்ந்து இயக்கலாம்.

24. பாப் கார்ன் மெஷின்: விலை 70 ஆயிரம் ரூபாய். மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் இந்த மெஷினை வைத்து வியாபாரத்தை ஆரம்பித்தால், நல்ல வருமானத்தைப் பார்க்கலாம்.

25. பேப்பர் கப் மெஷின்: இதில் செமி ஆட்டோமேட்டிக், ஃபுல்லி ஆட்டோமேட்டிக் என இரண்டு வகை இருக்கிறது. ரூ. 5 லட்சம் முதல் 18 லட்சம் வரை விற்கப்படுகிறது (18 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கும்போது, குறிப்பிட்ட கால அளவுக்கு மூலப்பொருட்களையும் சப்ளை செய்வார்கள். ஒரு வருட வாரன்ட்டியும் உண்டு). இதில், பேப்பர் பேக் கூட தயாரிக்கலாம்.

26. ஜூட் பேக் மெஷின்: சணல் பைகள், சணல் மிதியடி போன்றவை தயாரிக்கும் மெஷின் இது. 8 ஆயிரம் ரூபாயில் தொடங்கி பல்வேறு விலைகளில் கிடைக்கிறது. 2 மெஷினை வாங்கிப் போட்டு, ஒரு மாஸ்டர், 2 வேலையாட்களை வைத்தால்.. நல்ல லாபம் கிடைக்கும்.

27. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதைக் குறைப்பது போன்றவை இப்போது அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றன. சணல் பைகள், பிளாஸ்டிக் பைகளின் இடத்தைப் பிடிக்கத் தொடங்கிவிட்டன. இந்த வணிகம் வளரும் நிலையிலிருக்கும்போதே இதில் நுழைந்து பழகிக் கொண்டால்... பெரிய வருங்காலம் உண்டு (மேலும் விவரங்களுக்கு: ஷ்ஷ்ஷ்.ழீutமீ.நீஷீனீ).

பள்ளிக்கூடம் அல்லது கல்லூரிகளின் அருகில் நீங்கள் குடியிருந்தால் பல்வேறு வாய்ப்புகள் திறந்து கிடக்கின்றன...

28. கேன்டீன் ஆர்டர் எடுக்கலாம்.

29. மாணவர்களை அழைத்துச் செல்வதற்கான ஆட்டோக்கள் வாங்கி வாடகைக்கு விடலாம்.

30. பள்ளியின் அனுமதியுடன் ஸ்டேஷனரி கடை வைக்கலாம்.

31. டெய்லரிங் தெரிந்திருந்தால் பள்ளியில் மொத்தமாக ஆர்டர் எடுத்து யூனிஃபார்ம் தைத்துத் தரலாம்.

32. பள்ளிக்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ ஜெராக்ஸ் கடை வைக்கலாம். கம்ப்யூட்டர் இருப்பின் பிரின்ட் எடுத்து தரும் வேலையையும் செய்யலாம்.

33. புத்தகங்களை பைண்டிங் செய்து தரும் வேலை நன்றாக கைகொடுக்கும்.

34. இப்போதெல்லாம் பள்ளிகளில் கிராஃப்ட் வேலைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது, நீங்கள் ஓரளவுக்கு அதில் கில்லாடி எனில், அக்கம் பக்கமிருக்கும் பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தரச்சொல்லி உங்களை மொய்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.

பயிற்சியிலேயே பணம் பார்க்கலாம்!

35. 'நேர்மறை சிந்தனை, போதுமான பேச்சுத்திறன், தமிழ் மற்றும் ஆங்கில அறிவு... இதெல்லாம் எனக்கு உண்டு!' என்பவர்களை, மனிதவளத்துறை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது. உங்கள் பேச்சைக் கேட்டு இதுவரை உங்கள் நட்பு வட்டம் மட்டுமே உத்வேகம் அடைந்திருக்கும். இனி, அதை உங்கள் தொழில் அடையாளமாக மாற்றிக் கொண்டு சுற்றுப்புறத்திலிருக்கும் பள்ளிகளை முதலில் அணுகுங்கள். கல்லூரி அளவில் பர்சனாலிட்டி டெவலப்மென்ட், கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் போன்றவற்றைப் பிரித்து மேய்வதற்கு பெரிய பெரிய புலிகள் இருக்கும்போது, பள்ளிகளில் இதற்கான முயற்சிகள் பெருமளவில் நடைபெறுவதில்லை என்பதே உங்களுக்கான வாய்ப்பு திறந்தே இருக்கிறது என்பதற்கு அடையாளம். ஆளுமை வளர்ச்சி பற்றிய டிப்ஸ், குட்டிக் குட்டி நீதிக் கதைகள் எனத் தொடங்கி சிறப்பான ஒரு பவர்பாயின்ட் பிரசன்டேஷனைத் தயார் செய்யுங்கள். நியாயமான சிறு தொகைக்கு பயிற்சி வகுப்பு எடுத்து, வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்படி செய்யுங்கள். முதல் மூன்று அல்லது நான்கு பள்ளிகள் தான், பிறகு உங்கள் டைரி எப்பவுமே ஹவுஸ்ஃபுல்தான்!

36. பெரிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் திறமையை மேம்படுத்த பல்வேறு டிரெய்னிங் புரோக்ராம்களை நடத்துகின்றன. மென்கலைகள், கம்யூனிகேஷன், ஆங்கில உச்சரிப்பு போன்றவை சில உதாரணங்கள். நல்ல தெளிவான ஆங்கிலம் இருந்தால் இத்தகைய டிரெய்னிங் நடத்தித் தரும் நிறுவனங்களில் சேர்ந்து பணியாற்றலாம். தேவைப்படும்போது மட்டும் நிறுவனங்களுக்குச் சென்று டிரெய்னிங் கொடுக்க அழைப்பார்கள். மற்ற நேரங்களில் வீட்டிலேயே இருக்கலாம்.

37. செல்லப் பிராணிகளைக் கவனிப்பது, அதற்குப் பயிற்சி கொடுப்பது... இவையெல்லாம் நகர்ப்புறங்களில் நல்ல வருவாய் தரக்கூடிய பணி. ஒரு மணி நேர பயிற்சிக்கு சராசரியாக 200 ரூபாய் கிடைக்கும். அருகிலுள்ள பெட் ஷாப் மற்றும் வெட்னரி டாக்டர்களின் தொடர்பு எல்லையில் இருப்பது இதற்கு கைகொடுக்கும்.

38. சத்தமே போடாமல் சாதித்துக் கொண்டிருக்கிறது மொழிபெயர்ப்புத் துறை, பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய மொழிகளில் பயிற்சி எடுத்துக் கொண்டால்... உள்நாட்டு மொழிபெயர்ப்பு முதல் பன்னாட்டு நிறுவன வாய்ப்புகள் வரை வாய்க்கும். சென்னையில் இருக்கும் அல்லயன்ஸ் பிரான்ஸ் (பிரஞ்சு மொழிக்கு), மேக்ஸ்முல்லர் பவன் (ஜெர்மன் மொழிக்கு) ஆகிய நிலையங்களில் இதுபற்றிய வழிகாட்டுதல் கிடைக்கும்.

ஏற்றம் தரும் ஏஜென்ஸிகள்!

39. கல்லூரி மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை வாடகை சேவை மூலமாக அளிப்பது நல்லதொரு சுயதொழில். 'புத்தகங்களை நகலெடுப்பதைவிட, மலிவான வாடகைக்கு கிடைக்கிறதே' என்று மாணவர்களும் மொய்ப்பார்கள். இதில் ஆர்வமுடையவர்கள், எம்.வி. புக் பேங்க் போன்ற தென்னிந்திய அளவில் செயல்படும் புத்தக வங்கிகளை அணுகி, அவர்களின் ஏஜென்ஸியாக சுயதொழில் தொடங்கலாம்.

40. வீட்டில் இணையதள வசதியிருந்தால்... ரயில் மற்றும் பேருந்துக்கான டிக்கெட் முன்பதிவு செய்து தரும் ஏஜென்ஸியை ஆரம்பிக்கலாம்.

41. உங்கள் பகுதியில் சுற்றுலா முக்கியத்துவம் இருந்தால்... டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் ஏஜென்ட் ஆக மாறிவிடலாம். கையிலிருந்து முதலீடு போட்டு வாகனமெல்லாம் வாங்கித்தான் இதைத் தொடங்க வேண்டும் என்பதில்லை. சரியான நெட்வொர்க்கிங் திறன் இருக்கும்பட்சத்தில், லோக்கல் வாடகை வண்டி ஆபரேட்டர் களையே பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்களுக்கும் வேலை கிடைத்த மாதிரி ஆகிவிடும்.

42. ஹெல்த் இன்ஷுரன்ஸ் பற்றிய விழிப்பு உணர்வு போது மான அளவில் இல்லை. ஆனால், தேவை இருக்கிறது. 'எந்த ஹெல்த் இன்ஷுரன்ஸ், தானே மருத்துவமனைக்குப் பணத்தை செலுத்தும் வசதி கொண்டது' என்பது போன்ற தகவல்களையெல்லாம் கையில் வைத்துக் கொண்டு ஹெல்த் இன்ஷுரன்ஸ் ஆலோசகராகக் கலக்கலாம். இன்ஷுரன்ஸ் கம்பெனிகள் தரும் கமிஷன், உங்களுக்குக் கைகொடுக்கும்.

43. ஹெல்த் இன்ஷுரன்ஸ் ஆலோசனைகளைத் தேடி வருவோரிடம்... வாகன இன்ஷுரன்ஸ், பயண இன்ஷுரன்ஸ் என அத்தியாவசிய இன்ஷுரன்சுகளை அறிமுகப்படுத்தலாம். கூடவே... வருமான வரி திட்டமிடுதல், ஆண்டு முதலீட்டுத் திட்டங்கள் என நம் சேவை தளங்களை மேலும் விரிவுபடுத்தினால் கூடுதல் லாபம்தான்!

44. இன்ஷுரன்ஸ் ஏஜென்ட் நல்ல வருமானம் தரக்கூடியத் தொழில். தொடர்புகளும், பேச்சுத் திறமையும்தான் முதலீடு. மாதம் ஒன்றுக்கு லட்ச ரூபாய் சம்பாதிக்ககூடிய ஏஜென்ட்கள்கூட நாட்டில் உள்ளனர். ஏஜென்ட் ஆவதற்கானப் பயிற்சியை இன்ஷுரன்ஸ் நிறுவனங்களே தருகின்றன. உங்கள் ஊரிலிருக்கும் எல்.ஐ.சி. கிளையின் மேனேஜரை அணுகினால் வழிகாட்டுவார்கள்.

45. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தேவைப்படும் கேட்டரிங் சேவை, புத்தகங்கள், காபி ஷாப் உள்பட ஏ டு இசட் சேவைகள் (மின்சார பில் கட்டுதல், டெலிபோன் பில் கட்டுதல்) போன்ற ஏரியாக்களை மூன்று நான்கு பெண்கள் ஒரு குழுவாக இணைந்து செய்து தரலாம். விசிட்டிங் கார்டு தயாரித்துக் கொண்டு தேவையுள்ளவர்களை சந்தித்து வாய்ப்புக் கேட்டால்... வெற்றி நிச்சயம். அது தொடர்பான இடங்களில் சிறிது காலம் பணியாற்றி அனுபவம் பெறுவது நல்லது.

46. ஏதேனும் வாங்க வேண்டும் என சிலரும், எதையேனும் விற்கவேண்டும் என சிலரும் தினமும் அல்லாடுவார்கள். இவர்கள் இருவருக்கும் தேவை ஒரு ஏஜென்ஸி. அதை நீங்களே ஆரம்பிக்கலாம். 'நெட்வொர்க்' எவ்வளவு விரிவாக... நம்பிக்கையாக இருக்கிறது என்பதன் அடிப்படையில் பிசினஸ் களைகட்டும்.

கலையிலும் கலக்கல் வருமானம்!

47. அனிமேஷன் துறை, புயல் வேகத்தில் வளர்ந்து வருகிறது. இத்துறையில் பயிற்சி தருவதற்கு சிறியது முதல் பெரிய நிறுவனங்கள் வரை போட்டி போடுகின்றன. உள்ளுக்குள் ஊறியிருக்கும் படைப்புத் திறனை இவற்றில் மெருகேற்றிக் கொண்டால், முயற்சி திருவினையாக்கும்! அனிமேஷன் படிப்புக்கான குறுகியகால படிப்புகள் உள்ளன. விநாடி அடிப்படையில் வருமானத்தைக் கொட்டும் தொழில் இது.

48. ஸ்க்ரீன் பிரின்ட்டிங், ஃபேப்ரிக் பிரின்ட்டிங் போன்ற தொழில்கள் தொடங்க அதிகம் முதலீடு தேவையில்லை. ஒன்று அல்லது இரண்டு வார பயிற்சி போதும். ஸ்க்ரீன் பிரின்ட்டிங்கில் பொதுவாக விசிட்டிங் கார்டுகள், திருமண அழைப்பிதழ்கள் என்று பிசியாகவே இருக்க முடியும். ஃபேப்ரிக் பிரின்ட்டிங்கைப் பொறுத்தவரை பெண்களுக்கான உடைகள் விற்கும் கடைகளோடு நல்ல தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வது வளர்ச்சிக்கு உதவும்.

49. ஓவியம், கார்ட்டூன் போடும் கலை உங்களுக்கு வாய்த்திருக்கிறதா? பத்திரிகை அலுவலகங்கள் மற்றும் அதன் உதவி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களுடன் மின்னஞ்சல், கடிதம் வழியாகத் தொடர்பு கொண்டு வாய்ப்புக் கேட்டு முன்னேறலாம்.

50. 'கிளாஸ் பெயின்ட்டிங்' இப்போது மிகவும் பாப்புலர். நல்ல கவன சக்தி இருந்தால் போதும் கண்ணாடி பெயின்ட்டிங்கில் கலக்கலாம். இன்ட்டீரியர் டிசைனரோடு தொடர்பில் இருந்தால் வாய்ப்புகள் தேடி வரும்.

51. ஃபேஷன் ஜுவல்லரி உருவாக்குவது இப்போதைக்கு சூப்பர் பிசினஸ். வேலையில் இருக்கும் பெண்கள்கூட ஓய்வு நேரங்களில் இதில் இறங்கி காசு பார்க்கிறார்கள். இதற்கான பயிற்சி நிலையங்கள் எக்கச்சக்கமாக உள்ளன. நகரங்களில் இதற்கென தனிக் கடைகள் உள்ளன.

52. ஃபேஷன் டிசைனிங்... வீட்டில் இருந்தபடியே செய்யக் கூடிய ஒரு நல்ல வேலை. நல்ல கற்பனை வளமும், உலக ஞானமும் இருந்தால் இதில் சாதிக்கலாம். ரெடிமெடு ஆடை நிறுவனங்களில் நிறைய வாய்ப்பு உள்ளது.

53. வீட்டு ஜன்னல் களுக்கு அழகழகாக கர்ட்டன் செய்து போடுவது ஒரு நல்ல கலை. சிறப்பாக வடிவமைக்க முடிந்தால்... அது ஒரு நல்ல தொழிலாகிவிடும். கொஞ்சம் டெய்லரிங், கொஞ்சம் கலையுணர்வு இரண்டும் இருந்தால்... நிறைய சம்பாதிக்கலாம்.

54. பொம்மை செய்வது பெண்களுக்கு எளிதான ஒரு பணி. பொம்மை உருவாக்கும் கம்பெனிகளிடமிருந்து ஆர்டர் பெற்று வீட்டிலேயே பொம்மைகளைத் தயாரிக்கலாம். அக்கம் பக்கத்து கடைகளிலேயே ஆரம்பகட்ட ஆர்டகளை கணக்கிட்டு, தொழிலைத் தொடங்கலாம்.

55. ஹேண்டி கிராஃப்ட் தொழிலில் நீங்கள் வல்லவர்கள் என்றால், நீங்கள் செய்த பொருட்களோடு சென்னையில் இருக்கும் காதி கிராஃப்டை அணுகுங்கள். அங்கே மிக குறைந்த விலையில் உங்கள் பொருட்களை வைப்பதற்கு இடம் தருவார்கள். வருபவர்களின் பார்வை உங்கள் பொருளில் பட்டால் லக் உங்களுக்குதான்.

ஊட்டம் தரும் உணவு பிசினஸ்!

56. அலுவலகவாசிகளின் மிகப்பெரிய சிக்கலே வீட்டுச் சாப்பாடுதான். கேன்டீன், ஹோட்டல் என சாப்பிடும்போது பர்ஸ் காலியாவதோடு... வயிறும் பதம்பார்க்கப்படுகிறது. இவர்களை குறி வைத்து வீட்டுச் சாப்பாடு விற்பனையில் இறங்கினால்... கொடி கட்டலாம். ஒரு இடத்தில் வைத்து விற்பதானாலும் சரி, வேலையாள் மூலமாக அலுவலக வாசல்களில் விற்பதானாலும் சரி... சிறந்த வருவாய் தரக்கூடிய வேலை. வீட்டுக்கு அருகில் இருக்கும் அலுவலகங்களில் ஆர்டர் பிடிப்பதன் மூலம் பிள்ளையார் சுழி போடலாம்.

57. பிறந்த நாள் கேக் போன்றவை செய்வது சுவாரஸ்யமான வேலை. கேக் டெகரேஷன் பண்ணுவதே ஒரு கலை. அதைக் கற்றுக் கொண்டால் இதில் பிரகாசிக்கலாம். அருகிலுள்ள பேக்கரி, ஹோட்டல் போன்றவற்றை அணுகுவது பயனளிக்கும்.

58. சமையலில் நீங்கள் கில்லாடி எனில், சமையல் பள்ளி ஒன்றை ஆரம்பித்தால்... சக்கை போடு போடலாம். சமைக்கத் தெரியாத பார்ட்டிகள்தான் இப்போது அதிகம் என்பதால்... உங்கள் அக்கம் பக்கத்து வீட்டு பெண்களே குவிய ஆரம்பித்துவிடுவார்கள்! புதுமையான விஷயமாகவும் இருக்கும்.

59. வீட்டில் கொஞ்சம் இடம் இருந்தால்... மினி பேக்கரி நடத்தலாம். இனிப்புவகைகள், முறுக்கு வகைகள் என ஆரம்பித்து... இடம், பொருள் அறிந்து செயல்பட்டால் விரிவாகவே பிசினஸை டெவலப் செய்ய முடியும்.

60. ஒரு ஜூஸ் ஷாப் ஆரம்பிக்கலாமே... முதலீடு கொஞ்சம் போதும். ஓரளவுக்கு மக்கள் நடமாட்டம் உள்ள இடமாக இருக்கவேண்டும். நாலு பேருக்கு உங்கள் கடை ஜூஸ் பிடிக்கும் வரைதான் போராட்டம். பிறகு, ஆட்கள் தேடி வருவார்கள்.

61. மாலை நேர திடீர் கடை ஆரம்பித்து சூப், பிரட் ஆம்லெட், சாண்ட்விட்ச், சாலட் தயாரித்து விற்றுப் பாருங்கள். நல்ல ஆள் நடமாட்டமுள்ள பகுதியெனில் வியாபாரம் சூடு பிடிக்கும்.

62. இயற்கை உணவுகள் பற்றி பெரிதாக பலரும் பேச ஆரம்பித்திருக்கும் நேரமிது. கேழ்வரகு கூழ், கம்பங்கஞ்சி என்று சுத்தம் சுகாதாரமாக ஒரு கடையைப் போட்டுப் பாருங்கள்.... ஈஸியாக கல்லா நிறையும்.

மார்க்கெட்டிங்குக்கு மரியாதை!

63. எந்தப் பொருளைத் தயாரிக்க விரும்பினாலும், பிள்ளையார் சுழி போடுவதற்கு முன்பாக நீங்கள் செய்ய வேண்டியது... விற்பனை வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதைத் தேடித் தெரிந்துகொள்வதைத்தான். அந்தப் பொருள் அந்தச் சூழலுக்குத் தேவையானதுதானா... அதை மக்கள் வாங்குவார்களா... என்பது போன்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டு சிறிய அளவிலான சர்வே நடத்துவது மிக முக்கியம்.

64. உங்கள் பகுதியில் எந்த பொருளுக்கு சிறப்பான மரியாதை இருக்கிறது என்பதைக் கண்டறி யுங்கள். அதுவே கூட உங்களை உயர்த்திப் பிடிக்கக் கூடிய ஒரு தொழிலாக இருக்கக்கூடும். ஆம், பிற பகுதிகளிலும் அதற்கு சந்தை வாய்ப்பு இருக்கிறதா என்று தேடி அறிந்தால்... திருநெல்வேலி அல்வாவுக்கு சென்னையில் மவுசு இருப்பது போல, நீங்கள் கையில் எடுக்கும் பொருளுக்கும் மவுசைக் கூட்ட முடியும். பாக்கெட்டை நிரப்ப முடியும்! உதாரணத்துக்கு, உங்கள் பகுதியில் பனை பொருட்கள் அல்லது சுடுமண் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்றால், உள்ளூர் சந்தையில் ஒரு விலை இருக்கும். பிற நகரங்களுக்கு வந்துவிட்டால் அவற்றின் விலை வேறு. இந்த சூட்சமம் உங்களுக்குப் புரிந்துவிட்டால் உள்ளூர் அம்பானி... நீங்கள்தான் அம்மணி.

65. மார்க்கெட்டிங் ஒரு சிறப்பான வழி. குறிப்பாக 'ஆம்வே' போன்ற நம்பத் தகுந்த மார்க்கெட்டிங் குழுவில் இணைந்து பணியாற்றலாம். பேச்சுத் திறமை மட்டும் இருந்தால் போதும். அலுவலகத்தில் இருக்க வேண்டிய தேவையில்லை. உங்கள் பொருளை மார்க்கெட்டில் விற்கப் போகிறீர்கள் என்றால், கஸ்டமரிடம் தப்பித் தவறிகூட 'என் குடும்ப கஷ்டம் இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன். தயவு செய்து இந்தப் பொருளை வாங்கிக் கோங்க...' என்று மட்டும் மூக்கை சிந்த ஆரம்பித்துவிடாதீர்கள். ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் நாணயத்தை பிச்சையாக விட்டெறிந்து கதவைச் சாத்திவிடுவார்கள். அதேபோல உங்களுடைய பெருமைகளை டமாரம் அடிக்கவும் செய்யாதீர்கள்

66. ஒரு தொழிலைத் திட்டமிடும் முன்பாக... எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதைக் கணக்கிடுங்கள். பிறகு, அதைப்போல இரண்டு முதல் மூன்று மடங்கு வரை பணத்தைத் தயாராக வைத்துக் கொண்டு களமிறங்குங்கள்.

67. தோல்வி குறித்த பயமின்மை, சரியான தெளிவு, போதிய பண வசதி... ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு இவை மூன்றும்தான் முக்கியமான முதலீடுகள்.

கதம்பம்!

68. பியூட்டி பார்லர் ஆரம்பிப்பது சிறப்பான வருமானம் தரக்கூடிய வேலை. உங்கள் வீடு மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் இருந்தால்... உடனடியாக ஆரம்பிக்கலாம். இதற்கென பயிற்சிகள் தர நிறைய நிறுவனங்கள் உள்ளன.

69. 'பொக்கே' கொடுக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. மொத்த வியாபாரிகளிடம் தொடர்பு கொண்டால், தேவையான பூக்களை தினமும் வரவழைத்துத் தருவார்கள். அதை நம் கற்பனைக்குத் தக்கவாறு தயாரித்து விற்கலாம். முதலீடு இருந்தால் போட்டோ பிரின்ட்டிங், ஃபிரேமிங் போன்றவை ஆரம்பிக்கலாம். தொடர்புடைய நிறுவனங்களை அணுகி பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்.

70. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி செய்து ஓய்வு பெற்றவர்கள் என்றால்... வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுவதையே ஒரு தொழிலாகச் செய்யலாம். ரெஸ்யூம் எனப்படும் பயோடேட்டா தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்துகொடுத்து, தகுந்த சன்மானத்தைப் பெறலாம்.

71. போட்டோ ஷாப், இன்டிஸைன், போன்ற கோர்ஸ்களை பயின்றால் பத்திரிகை அலுவலகங்கள், அச்சகங்கள் போன்றவற்றில் வேலைவாய்ப்பு உண்டு. ஆர்டர் வாங்கி வீட்டில் இருந்தும் தொழில் செய்யலாம். வீடியோவில் எடிட்டிங் செய்வது போன்ற பயிற்சிகளைப் பெற்றால் ஸ்டூடியோக்களில் பணி கிடைக்கும்.

72. டி.வி.டி., சி.டி., புத்தகம் போன்றவற்றை வாடகைக்கு விடும் கடையை வீட்டிலிருந்தபடியே நடத்தலாம். மெம்பர்ஷிப் அதிகம் கிடைத்தால்... பெரிய அளவில் விரிவுபடுத்தலாம்.

விவசாயத்துலயும் விஷயமிருக்கு!

லட்சங்களையும் கோடிகளையும் முதலீடு செய்தால்தான் பிசினஸா... மிகக்குறைந்த முதலீட்டிலும் லாபம் பார்க்கலாம் என்பதற்கு விவசாயம் சார்ந்த பிசினஸ்களே சரியான உதாரணங்கள்...

73. உங்கள் பகுதியில் எந்தெந்த பருவத்தில் என்னென்ன காய்கறிகள் அதிகம் கிடைக்கிறதோ... அவற்றை வாங்கி சுத்தப்படுத்தி காயவைத்து, காய்கறி வற்றல் தயாரிக்கலாம். பாலித்தீன் பைகளில் அடைத்து அருகில் இருக்கும் மொத்த வியாபாரிகளிடம் கொடுப்பதன் மூலம் உங்களுக்கு வருமானம் வரும். கொத்தவரங்காய், கத்திரிக்காய், சுண்டக்காய், பாகற்காய், மாங்காய் போன்ற வத்தல்களுக்கு எப்போதும் மவுசு உண்டு.

74. சுயஉதவிக் குழு பெண்கள் இணைந்து கிராமத்தில் இருக்கும் புளிய மரங்களை ஏலத்துக்கு எடுக்கலாம். புளியம் பழங்களை உதிர்த்து, புளியை இடித்துப் பதப்படுத்தி பேக் செய்து மொத்த வியாபரிகளிடம் விற்கலாம்.

75. நெல்லிக்காய் அதிகம் கிடைக்கும் சீஸன் என்றால்... அதை வாங்கி சுத்தப்படுத்தி, தேனில் ஊறவைத்து, நிழலில் காயவையுங்கள். பிறகு, 50 கிராம், 100 கிராம் என பாலித்தீன் பைகளில் பேக் செய்து மூலிகைக் கடைகளிலும், டவுனிலுள்ள மளிகைக் கடைகளில் கொடுக்கலாம். தொடர்ந்து செய்யும்போது ரெகுலர் கஸ்டமர்கள் கிடைப்பார்கள்.

76. உங்கள் வீட்டு புறக்கடையில் அதிக இடமிருந்தால்... நாட்டுக்கோழி வளர்க்கலாம். உள்ளுர் சந்தையிலேயே நல்ல வரவேற்பு இருக்கும். நாட்டுக்கோழி மற்றும் அதன் முட்டைகளுக்கு எப்போதுமே கிராக்கிதான்.

77. வீட்டுக்கு அருகில் இடமிருந்தால்... நர்சரிகளில் விற்கும் செடிகளை வாங்கிவந்து விற்கலாம். அருகில் உள்ள தோட்டக்கலை மற்றும் வனத்துறையில் மிகக் குறைந்த விலைக்கு நாற்றுகள் கிடைக்கும். உங்கள் ஏரியாவில் நன்றாக வளரக்கூடிய செடிகளை விற்பதால் அதிக லாபம். செடிகளுக்கு போடக்கூடிய ஆர்கானிக் உரம், காய்கறி மற்றும் பூச்செடி விதைகள்கூட விற்கலாம். இதற்காக, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், மாநில தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்துறை போன்றவற்றை அணுகலாம்.

78. வண்ண மீன் வளர்ப்பு என்பது நகர்ப்புறங்களில் பரபரப்பான விஷயமாக இருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை கொளத்தூர் பகுதியில் வண்ண மீன் வளர்ப்புத் தொழில் பெரியளவில் நடைபெறுகிறது. இங்கு மொத்தமாக வாங்கி, சில்லறையாக விற்கலாம். தொட்டிகள் உட்பட மீன் வளர்ப்புக்குத் தேவையான பொருட்களையும் விற்கலாம்.

79. காளான் வளர்ப்பு பெரிய பிசினஸாக வளர்ந்து வருகிறது. வீட்டில் இருக்கும் சிறிய இடத்திலேயே பயிர் செய்து, அக்கம் பக்கத்து வீடுகளுக்கு ரெகுலராக சப்ளை செய்தாலே... மாதாந்திர செலவுக்கு கைகொடுக்கும்.

80. கீரையைக் கிள்ளுவதுதான் பெரிய பிரச்னையாக இருக்கிறது. அதனால், கீரையை வாங்கி சுத்தப்படுத்தி, அதைக் கிள்ளி பாக்கெட் போட்டுக் கொடுத்தால் பக்காவாக காசு பார்க்கலாம்.

பிசினஸைப் பதிவு செய்வது எப்படி?

81. பெயரில்லாத பிள்ளையை எப்படி அழைக்க முடியும்? எனவே, நீங்கள் தயாரிக்கும் பொருளுக்கு முதலில் தகுந்த பெயரை வைத்து விடுங்கள். அந்தப் பெயர் என்ன டிசைனில் வரவேண்டும் என்பதை தீர்மானித்த பிறகு, முறைப்படி பதிவு செய்யுங்கள். பதிவு செய்ய 3,500 ரூபாய் செலவாகும். விஷயம் தெரியாமல் ஏமாற்றுக்கார புரோக்கர்களிடம் சிக்கினால், குறைந்தது பத்தாயிரம் ரூபாய் காலி.

82. 'இந்தியன் கம்பெனீஸ் ஆக்ட்'படி உங்கள் கம்பெனிக்கான பின் நம்பரை வாங்க 
வேண்டும். இதற்காக நீங்கள் அணுகவேண்டியது 'ரிஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனீஸ்' அலுவலகத்தைதான். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் போகிறீர்கள் என்றால், அதே அலுவலகத்தில் ஐ.இ. (இன்டர்நேஷனல் எக்ஸ்போர்ட்) கோட் நம்பர் வாங்க வேண்டும். இது இருந்தால்தான் ஏற்றுமதி செய்ய முடியும்.

83. www.ipindia.nic.in இந்த இணையதள முகவரி, உங்கள் பொருட்களுக்கான டிரேட்மார்க் பெறுவற்கான அப்ளிகேஷன் பதிவது முதல், சர்வதேச அளவில் விற்பனை செய்வதற்கான இன்டர்நேஷனல் பின்கோடு வாங்குவது வரை அத்தனை வசதிகளையும் அளிக்கிறது.

84. ஃபேஷன் ஜுவல்லரி, தங்க நகைகள், டயமண்ட், ஆர்டிஃபீஷியல் ஜுவல்லரி உற்பத்தி செய்கிறீர்கள் என்றால் இந்திய அரசின் ஜெம் அண்ட் ஜுவல்லரி எக்ஸ்போர்ட்ஸ் புரமோஷன் கவுன்சிலில் உங்கள் பொருட்களின் பெயர்களைப் பதிந்து கொள்ளுங்கள். அவர்கள் வெளியிடும் புத்தகத்தில் உங்கள் பொருட்கள் பற்றிய தகவலும் இடம்பெறும். வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் நகை வாங்க வேண்டும் என்றால், இந்தக் கவுன்சிலைத்தான் அதிகம் தொடர்பு கொள்வார்கள். அந்த நிறுவனம் உங்கள் பெயர்களை பரிந்துரைக்க நிறையவே வாய்ப்பு இருக்கிறது. இதில் பதிவு செய்வதற்கு குறிப் பிட்ட தொகையைக் கட்டணமாகச் செலுத்தவேண்டும். இணையதளம்: www.gjepc.org

உஷார்... உஷார்!

85. பக்கத்து வீட்டுக்காரர் சம்பாதிக்கிறார் என்பதற்காக அதேபோன்ற தொழிலில் நீங்களும் இறங்க வேண்டாம். உங்களுக்கு என்று ஒரு தனித்துவத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

86. உங்கள் பார்டனராக நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர் வெறும் வாய்ச்சொல் வீரராக மட்டுமல்லாமல், பிசினஸில் முதலீடு போடுபவராகவும் இருக்கவேண்டும்.

87. சிறு தவறுகூட பெரிய நஷ்டத்தில் கொண்டு விடும். ஒரு தவறு நடந்துவிட்டால் உடனே சரி செய்ய முயற்சியுங்கள்.

88.உங்கள் பொருளுக்கு பெரிய ஆர்டர் கிடைத்திருக்கிறது என்றால், உடனடியாக சம்பந்தப்பட்ட விவரங்களை சரி பார்த்து, கணக்குப் போட்டு சூட்டோடு சூடாக களம்இறங்குங்கள். கொஞ்சம் தாமதித்தாலும் வேறொருவர் கைக்கு ஆர்டர் கைமாறிவிடவும் வாய்ப்பு உண்டு.

89. நேரடியாக சென்று பொருட்களை விற்கும் தொழிலில் இறங்குகிறீர்களா... ஜாக்கிரதை. குறிப்பாக அதிக கூட்டமற்ற இடங்கள் மற்றும் இரவு, மதியம் போன்ற நேரங்களைத் தவிர்க்க வேண்டும்.

90. 'முன்பணம் அனுப்புங்கள்' என்று வரும் விளம்பரங்களில் 100% எச்சரிக்கை தேவை. நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு பைசாவுக்கும் ஆவணங்களை உருவாக்குவது முக்கியம்.

91. பொருட்களில் கண்டிப்பாக தரம் வேண்டும். 100 பொருட்களை நன்றாக செய்து, 101-வது பொருள் தரமில்லாததாக இருந்தால் உங்களது பெயர் கெட்டுவிடும்.

92. பொருட்கள் எவ்வளவு முக்கியமோ... அதே அளவு அதனை 'பேக்' செய்து கொடுக்கும் விதமும் அவசியம். பொருட்களை அழகாக பேக் செய்து கொடுப்பதை மறந்தால் வாய்ப்புகள் மங்கிவிடும்.

93. ஏற்றுமதி தொழில் என்றால், எதிர்த்தரப்பு நம்பகமானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவது அதி முக்கியம். ஏனெனில், பல சந்தர்ப்பங்களில் பொருள் டெலிவரியான பிறகு, பணம் செட்டில் ஆகாமல் ஏமாற வாய்ப்புள்ளது.

94. நீங்கள் உற்பத்தி செய்யும் பொருளின் சந்தை வாய்ப்புகளை அவ்வப்போது கண்காணித்துக் கொண்டே இருக்கவேண்டும். கண்மூடித்தனமாக உற்பத்தி செய்துவிட்டு, கடைசியில் மார்க்கெட்டிங் இல்லாமல் திண்டாடக்கூடாது.

95. ஒரு தொழிலைப் பார்ட்னராக தொடங்கியிருந்தால்... தொழிலாளர் பொதுச் சேமநல நிதித் (பி.பி.எஃப்.) திட்டத்தில் உடனடியாக ஐக்கியமாவது முக்கியம். தொழில் முனைவோரின் நீண்டகால சேமிப்புக்கும், ஓய்வுகால வாழ்க்கைக்கும் மிகவும் அவசியமானது இந்தத் திட்டம்.

இன்முகமே லாபம் தரும்!

96. பல சந்தர்ப்பங்களில் பேச்சை விட, சிரித்த முகங்களே வெற்றியை தானே வரவழைக்கும். அதனால் எந்த சந்தர்ப்பத்தையும் ஒரு புன்னகையோடு சமாளிக்கும் பாங்கு, எளிதில் யாரோடும் பேசிப் பழகும் தன்மை... இதெல்லாம் உங்களுக்கு முக்கியம்.

97. தனியார் அலுவலகங்களில் 'பப்ளிக் ரிலேஷன் ஆபீஸர்' என்ற பணிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. இதற்கான குறுகியகால சான்றிதழ் பயிற்சிகள், தனியார் இன்ஸ்டிடியூட்களில் உள்ளன. ஆரம்பத்தில் சிறிய நிறுவனங்களில் சேர்ந்து, படிப்படியாக மிகப்பெரிய நிறுவனங்களில்கூட வேலையில் அமரும் சாத்தியங்கள் உண்டு!

98. கவுன்சிலிங் வழங்குவது ஒரு நல்ல பணி. குறிப்பாக, அளவுக்கு அதிகமாக மன அழுத்தம் பாதிக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. உளவியல் படித்த இளம் பெண்களுக்கு இது ஒரு அருமையான வேலை. மனநல மருத்துவர், தொண்டு நிறுவனத்தினர் போன்றோரின் தொடர்புகள் மற்றும் தனிப்பட்ட முறையிலும் கவுன்சிலிங் வழங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறலாம். ஆன்லைன் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும்கூட கவுன்சிலிங் கொடுக்க முடியும். பணத்தை வங்கியிலோ... செக் அல்லது மணியார்டர் மூலமாகவோ வாங்கிக் கொள்ளலாம்.

99. நிகழ்ச்சி மேலாண்மை (event management) இன்னுமொரு சுவாரசிய துறை. ஒரே நேரத்தில் பல வேலைகளை ஒருங்கிணைக்கும் திறன், ஒரு நிகழ்ச்சிக்குத் தேவையான அத்தனையையும் யோசித்து அவற்றைத் தயார் செய்வது போன்ற திறன்களை நம் பெண்கள் தனியே கற்க வேண்டுமா என்ன! நம் வீடுகளில் கல்யாணம், பண்டிகை என்றால் அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்பவர்களாயிற்றே நாம். நிகழ்ச்சி மேலாண்மையின் முறைமைகளை மட்டும் கொஞ்சம் பழக்கப்படுத்திக் கொண்டால் போதும், ஒவ்வொரு வேலை நாளும் திருவிழாதான்! இத்தொழிலில் ஈடுபடுவோரிடம் முதலில் உதவியாளராக சேர்ந்து பயிற்சி பெறலாம். அல்லது சின்னச் சின்ன கல்லூரி நிகழ்ச்சிகள், போட்டிகள் என பழகிக் கொண்டு, சிறிய மற்றும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை அணுகி வாய்ப்பு தேடுங்கள்.

பயிற்சி

100. இந்திய அரசின் 'மைக்ரோ ஸ்மால் அண்ட் மீடியம் என்டர்பிரைசஸ்' டெவலப்மென்ட் நிறுவனம் (MSME Development Institute) பெண்களுக்காக இலவசமாக ஒன்றரை மாத பயிற்சியை அவ்வப்போது நடத்தும். இதில், வாஷிங் பவுடர், சோப், பினாயில் போன்ற கெமிக்கல் பொருட்கள் மற்றும் ஊறுகாய், ஜூஸ், ஜாம், மசாலாத்தூள் போன்ற உணவு சார்ந்த பொருட்களைத் தயாரிக்க பயிற்சி அளிப்பார்கள். இதைத் தொடர்ந்து சான்றிதழ் வழங்குவதோடு தொழில் தொடங்க வழிகாட்டுவார்கள். மார்க்கெட்டிங்குக்கு தனியாக பயிற்சி வகுப்புகளும் உண்டு.

விவரங்களுக்கு:

கே.வி.ராவ், உதவி இயக்குநர்,
இந்திய அரசு வளர்ச்சி நிலையம்,