ஆரோக்கியமே! அதிக செல்வம்!!
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ஆரோக்கியமான வாழ்வே அருள் பெற்ற வாழ்வு.
*நடைப்பயிற்சியை ஒரு கடமையாகக் கொண்டால் நலமாக வாழலாம்.
*மாலை வெயிலில் ‘வைட்டமின் D சத்து’ உள்ளதால் மாலையில் நடப்பது நல்லது.
*தினமும் குறைந்தது 20 நிமடமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். அல்லது குறைந்தது 45 நிமிடமாவது நடைப்பயிற்சி.
*நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதனால் உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி அடையும். இதயத்தின் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
*நடைப்பயிற்சியினால் அதிக இரத்த அழுத்தம் குறைகிறது.
*சர்க்கரை நோய் உள்ளவர்கள் நடைப்பயிற்சியை மேற்கொண்டால் இரத்தத்தின் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். உடல் பருமன், தொந்தி குறையும்.
*தொடர் உடற்பயிற்சியினால் இரவில் நன்றாக தூக்கம் வரும். இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும். மலச்சிக்கல் வராது. அஜீரணக் கோளாறு நீங்கும்.
*உடற்பயிற்சியினால் இதயத்தில் சேரும் கெட்ட கொழுப்பு கரைந்து விடும். இதயம் புத்துணர்ச்சி பெறும்.
*“நபிகள் நாயகத்தின் நோய் நிவாரணி” என்ற நூலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தினமும் தன் வீட்டிலிருநது பேரீச்சம்பழத் தோட்டம் வரை நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
*மிதமாக உண்ண வேண்டும். மெதுவாக உண்ண வேண்டும். நன்றாகச் சவைத்து, சுவைத்து உண்ண வேண்டும்.
*எச்சில் நீர் உணவில் கலப்பதற்கு ஏதுவாக வாயை மூடி சவைக்க வேண்டும்.
*எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். சோம்பேறித்தனம் வந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
*உணவில் காய்கறிகள், பழங்கள் அதிகம் சேர்க்க வேண்டும்.
*இயற்கை உணவே இனிய உணவு. செயற்கை பானங்கள், அதிவேகமாகத் தயாரிக்கப்படும் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
*சாப்பிட்ட பின் உடனே படுக்கக்கூடாது. குறைந்தது அரை மணி நேரம் கழித்துத்தான் தண்ணீர் அருந்த வேண்டும்.
*சாப்பிட்ட பின் உடனே படுத்தால் வயிற்றிலுள்ள உணவைச் செரிக்க சுரக்கும் அமிலம் உணவுக் குழாய் வழியாக மேலே வரும். உணவுக்குழாயின் சுவர்கள் அமிலத்தால் அரிக்கப்பட்டு, நெஞ்செறிச்சல் ஏற்படுகிறது.
No comments:
Post a Comment