Tuesday, August 23, 2016

மாற்றம் மலரட்டும்...கவிதாசன் ..

..மனமாற்றம் நிகழ்ந்தால்தான் வாழ்வில் முன்னேற்றம் நிகழும். மாற்றமே முன்னேற்றத்திற்கு முதல்படி.

ஒரு கவிதை விதையாகவே உள்ளது, எந்த விதமாற்றமும் இல்லை என்றால் அது செடியாக வளராது என்பது எவ்வளவு உண்மையோ இதுவும் அவ்வளவு உண்மை.

இருவிதமான மாற்றங்கள் நம்மில் நிகழ்கின்றன. ஒன்று, உடல் ரீதியான மாற்றம். மற்றொன்று, மன ரீதியான மாற்றம்.

உடல் ரீதியான மாற்றம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே உள்ளது. மேலும் உடல் ரீதிதான மாற்றம் நமது கட்டுப்பாட்டில் அவ்வளவாக இல்லை.

ஆனால், மன ரீதியான மாற்றம் முழுமையாக நமது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. மேலும், நாம் நினைத்தால்தான் மன ரீதியான மாற்றத்தை நிகழ்த்த முடியும்.

மனதில் மாற்றம் ஏற்படு வதற்கு நீங்கள் சிறந்த கருத்துக் களை மனதில் தூவிக்கொண்டே இருக்க வேண்டும். எவ்வாறு, நிலத்தில் புதைந்த விதை, ஈரம் கிடைத்ததும் முளைத்து விடுகிறதோ அதுபோல மனத்தில் விழுந்த கருத்தும் அதற்கென உரிய நேரம் வரும்போது விழித்து விடுகிறது. அவ்வாறு மனம் விழிக்கும் போது மன மாறுதல்கள் நிகழ்கின்றன.

மேலும், அவை உங்கள் வாழ்க்கைக்கு அடித்தளமாகவும் மாறிவிடுகிறது. ஏனென்றால் மனதில் தோன்றும் கருத்துக் களின் வெளிப்பாடே வாழ்க்கை.

நல்ல கருத்துக்களின் விளை நிலமாக உங்கள் மனம் விளங்கும் போது வளமான வாழ்க்கை தன்னிச்சையாகவே மலர்ந்து விடுகிறது.

மனமாற்றமே வெற்றிக்கு விதை. மேலும் புதிய மாற்றங் களைத் தோற்றுவிப்பவராகவும், புதிய மாற்றங்களை ஏற்றுக் கொள்பவராகவும், நீங்கள் விளங்க வேண்டும்.

புதிய கருத்துக்களை உள்வாங்குங்கள்

உங்கள் கருத்துக்களில் உடும்புப்பிடியாக இல்லாமல், புதிய கருத்துக்களுக்கும் செவி கொடுங்கள். பழைய கருத்துக் களில் உங்களுக்கு நம்பிக்கையும் பிடிப்பும் இருப்பதால் தவறு இல்லை என்றாலும் புதிய கருத்துக்களுக்கு வழிவிடுங்கள்.

புதிய நீர் ஊறிக்கொண்டே இருப்பதால்தான் நதி நகர்ந்து கொண்டே இருக்கின்றது. அவ்வாறு புதிய நீர் உற்பத்தி ஆகவில்லை என்றால் நதி ஏது? கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.

ஆகவே, ஆயிரமாயிரம் கருத்து மலர்கள் மலரும் பூஞ்சோலையாக உங்கள் மனம் மாறட்டும். அதில் பல்வேறு மாறுதல்கள் மலரட்டும்.

மாறுதல்கள் மலர்வது உங்கள் மனதிற்கு ஆறுதல் அளிப்பதாகவும் செயலுக்கு வேகம் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும். உங்கள் இயக்கத்தை முடக்கி விடுவதாக மாறுதல்கள் இருந்துவிடக் கூடாது. ஆகவே மாற்றம் ஆக்கமாக மலரட்டும்.

கருத்துக் கருவூலம்

பல்வேறு நூல்களைப் படிப்பதாலும், அறிஞர்களின் உரைகளைக் கேட்பதாலும் புதிய கருத்துக்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு புதிய கருத்துக்களைத் தெரிந்து கொள்ளும்போது அவற்றை அப்படியே உள்வாங்கிக் கொள்ளக் கூடாது. மாறாக புதிய கருத்துக் களுக்கும் ஏற்கனவே உங்களிடம் உள்ள கருத்துக்களுக்கும் உள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமை ஆகியவற்றை அலசி ஆராய்ந்து பாருங்கள்.

மேலும், புதிய கருத்துக்கள் உங்கள் இலட்சியத்தை அடைவதற்கு எந்த அளவுக்கு உபயோகமாகவும் உறுதுணையாகவும் இருக்கும் எனவும் எண்ணிப் பாருங்கள்.

பிறகு, புதிய கருத்துக்களின் செயலாக்கம் உங்களுக்கு உதவுமாயின் அவற்றைக் கடைப் பிடியுங்கள். அவ்வாறு இல்லை யெனில் அக்கருத்துக்களை தள்ளி விட்டு, ஏற்கனவே நீங்கள் கொண்டுள்ள கருத்துக்கள் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் அடிப் படையில் செயல்படுங்கள்.

மனம் திறக்கட்டும்

எப்பொழுதும் புதிய கருத்துக் களை ஏற்றுக் கொள்ள உங்கள் மனம் திறந்த நிலையிலேயே இருக்கட்டும். நமக்குத்தான் எல்லாம் தெரியும் என்று எண்ணுவதால் மனம் இறுக்க நிலைக்கு சென்று விடுகிறது. அதனால் முன்னேற்றம் தடைபடுகிறது.

ஆகவே, புத்தம் புதிய கருத்துக் கள், மாற்றுக் கருத்துகள் என எத்தகைய மாற்றத்தையும் உள் வாங்கிக்கொள்ளும் உயர்ந்த நிலையில் உங்கள் மனம் மலர்ந்திருக்க வேண்டும்.

மாற்றம் மலர்ந்தால் புதிய மார்க்கம் தென்படும். ஆகவே, தற்பொழுது நீங்கள் வாழும் வாழ்க்கை முறையை, செயல் முறையை, பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும்.

மேலும், இது இப்படித்தான் இருக்க வேண்டும் அது அப்படித்தான் இருக்க வேண்டும், என்னும் எதிர்பார்ப்புக்களோடு எதையும் அணுகக் கூடாது. அவை எப்படி உள்ளதோ அதற்குத் தக்கவாறு அவற்றை அணுகி உங்கள் இலட்சி யத்தை அடைவதற்குத் தக்கவாறு மாற்றிக்கொள்ள வேண்டும்.

புதியன விரும்புவோம்

நீங்கள் உண்ணும் உணவில், உடுக்கும் உடையில், அவ்வப்போது மாறுதல்களைச் செய்யுங் கள். எனக்கு இதுதான் பிடிக்கும், இது பிடிக்காது, என்ற மன நிலையிலிருந்து விடுபட்டு எனக்கு எதுவும் பிடிக்கும் எதன் சுவையையும் நான் விரும்பு வேன், என புதுப்புது உணவு வகை களையும் உடை வகைகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

மேலும், உங்கள் அறையில் மாறுதல்களை அவ்வப்போது செய்யுங்கள். அதாவது பொருட் களின் இடத்தை மாற்றுங்கள், இவ்வாறு செய்தால் மனம் மாறுதல் களை தாங்கும் வலிமையையும், மாறுதல்களைத் தோற்றுவிக்கும் வல்லமையையும் பெறுகின்றது.

மனதில் மாற்றம் நிகழும் போது சிந்தனையில் மாற்றம் மலர்கிறது. சிந்தனை மாறும்போது செயலும் வாழ்க்கை முறையும் மாறுதல்களைச் சந்திக்கிறது. இத்தகைய மாற்றமே முன்னேற்றத்தின் முகாந்திரமாக அமைந்து விடுகிறது.

மேலும், மாற்றத்தை தோற்று விக்கும் ஆக்க சிந்தனையின் உறைவிடமாக உங்கள் மனம் திகழும்போது எந்தப் பிரச்சனையையும் சந்தித்துத் தீர்க்கும் ஆற்றல் உங்களுக்கு வருகிறது.

ஆகவே, மாற்றம் மலர்வதற்கு மனதில் வழிவிடுங்கள்.

Thursday, August 18, 2016

தோல்வியை தாங்குவது எப்படி?

வெற்றியெனும் ஆல மரத்துக்கு விதையாவது தோல்வியின் அனுபவங்களே
    
மரணத்துக்கு பிறகும் வாழ்வு உண்டா என்பது நமக்கு தெரியாது ஆனால் நிச்சயம் தோல்விக்கு பிறகும் வாழ்வு உண்டு என்பதில் எவருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.
    
வாழ்வு என்பது ஒரு எண்ணெய் தடவிய வழக்கு மரம் சாண் ஏறினால் முழம் சருக்குகிறது.வாழ்வு என்பது ஒரு சுழலும் சக்கரம் எந்த இடத்தில் புறப்பட்டதோ திரும்ப அங்கு வந்து நிற்கிறது.
      
ஆனால் முயன்றவருக்கு வாழ்வு என்பது ஒரு பரமபத விளையாட்டு ஒவ்வொரு காலடியிலும் ஒரு சிறிய அல்லது ஒரு பெரிய பாம்பு கொத்துகிறது.
     
அஞ்சாமல் அடுத்த அடி எடுத்து வைத்தால் அங்கே ஒரு சிறிய அல்லது ஒரு பெரிய ஏணி அதிட்ட தேவதையாக நமக்காக காத்திருக்கிறது.எத்தனை அற்புதமான விளையாட்டு இந்த வாழ்க்கை சுவையான திருப்பங்கள் சோகமான வீழ்ச்சிகள் சுழன்றடிக்கும் காற்று.
    
வெற்றி திருமகள் ஒரு மோசமான விலைமகள் யாரிடமும் நிரந்தரமாக நிலைப்பதில்லை நிற்பதில்லை அடிக்கடி மாலை மாற்றி கொள்கிறாள் ஆளை மாற்றி கொள்கிறாள்.
    
இல்லாத மேடையொன்றில் எழுதாத நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம் நாம் எல்லோரும் நாமே பார்க்கின்றோம்.
    
இந்த நாடகத்திற்கு கதை வசனம் எழுதி தானே இயக்குபவன் இறைவன் அவன் சுயவிருப்பத்திற்காக காரணமே இன்றி காட்சியை மாற்றுவான்.
    
நாடகம் சுவையாக இருக்க வேண்டுமானால் கதாபாத்திரங்களையும் தன் விருப்படி மாற்றுவான் கொன்று கூட விடுவான்.
    
இவையேல்லாம் பல கவிஞர் அறிஞர்  சொன்ன கற்பனைகள் மட்டுமல்ல ஆழமாக அர்த்தமுள்ளதாக நாம் தோல்வியை தாங்கும் மனவலிமை பெறுவதற்காக ஊட்ட பட்ட ஊக்க சத்துக்கள் ஊட்ட மருந்துகள்.ஆனால் சிலருக்கு தூக்க மாத்திரைகளாக போகிறது.
     
விதி என்றோ வினை என்றோ போதித்தது தாங்குவதற்காகத்தானே தவிர,தூங்குவதற்காக அல்ல  

கடந்தது நதி நடந்தது விதி இறந்தது பினி இனி நடப்பதை நினை எழுந்து நில் தொடர்ந்து செல்ஆண்டாண்டு அழுதாழும் மாண்டவர் வருவதில்லை ஆற்றிலே போன நீர் திரும்புவதில்லை
      
புதுமழை வரும் புது நீர் வரும் புது உயிர்கள் பிறக்கும் புது வாழ்வு மலரும் புதிது புதிதாக தொடர்தொடராக வாழ்வு நீண்ட தொலை காட்சி தொடராக தொடரத்தானே போகிறது.
     
உடல்தானேமுற்றுகிறது அது ஒரு சிறுகதை 
உலகம் என்றும் முற்றுவதில்லை முடிவதில்லை அது ஒரு
முடியாத முழ நீள தொடர்கதை தொடரும் தொடர்ந்து கொண்டே இருக்கும் கருவறை தொடங்கி கல்லறை வரை எத்தனை எத்தனை இழப்புகள்  நாம் அடைந்த கணக்கை விட இழந்த கணக்கு அதிகம்.
    வெற்றி இழப்பு,
    பொருள் இழப்பு,
    பணம்  இழப்பு,
    மானம் இழப்பு,
    உறுப்பு இழப்பு,
    உயிர்  இழப்பு,
      
இழப்புகளுக்கு கணக்கேயில்லே தோல்விகளுக்கு முடிவேயில்லை.
      
ஆனால் நீ எதை இழந்தாய் நீ எதையாவது கொன்டு வந்தாயோ?இங்கிருந்து தானே எடுத்து கொண்டாய் ஆசை பட்டாய் அனுபவித்தாய் விட்டு விட்டு கிளம்ப வேண்டியதுதானே என்று கேட்கிறானே நியாயம்தானே.
        
சொல்வது சுலபம் வயிற்றுவலி நமக்கென்று வரும் போது சிரிப்பது கடினம் ஆனால் உடற் பயிற்சி போல இது மன பயிற்சி செங்கல்லில் அடித்து அடித்து கையை பலப்படுத்துவது போல சுயமாக தானே சொல்லிக் கொன்டு வந்தால் தன்னை தானே தயார் படுத்தி வைத்து கொண்டால் துயரம் கொஞ்சம் குறையும் இதுவே மனதை வலுபடுத்தும் பயிற்சி
         
தோல்வியை தாங்குவது என்பது வேறு அதை ஏற்று கொள்வது என்பது வேறு. விரக்தியை தாங்கும்   மனபக்குவம் வேண்டும் இது ஒரு நீர் அணைக்கட்டு போல பலரது கொள்கலன் சில அடி மட்டம் ஆனால் சிலரது தாங்கும் கொள்கலன் பல நூறு அடி உயரம் இதையே கொள்கிறன் தாங்கும் சக்தி என்கிறோம்     

நமது சகிப்பு திறனும் விரக்தி குறைவும் நமது மனதினுடைய பலத்தை வலுப்படுத்துகிறது  ஆனால் சிலர் சுலபமாக தோல்வியை இயல்பாக ஏற்று கொள்கிறார்கள் நான் தோற்கத்தானே பிறந்தேன்என்று வேதனையாக விட்டு விடுவார்கள் இது தோல்வியை தாக்குவதல்ல.சாண் போனாலன்ன முழம் போனாலன்ன என்ற விரக்தி சோகம் இதில் எந்த பயனுமில்லை
     
அதே போல் தோல்விக்கு தயாராக இருப்பது என்பது வேறு தோல்விக்கு அச்சபடுவது என்பது வேறு  தயார் நிலை என்பது தீப்பிடித்தால் அணைப்பதற்கு எச்சரிக்கையாக இருப்பது போல எதிர் மறையாக நிச்சயம் நான் தோற்று விடுவேன் என விரக்தியாக பேசுவது ஒடுகிற நீரில் தானே குதித்து தற்கொலை செய்வதற்கு ஒப்பாகும்
      
எனவே நிச்சயம் வெல்வோம் ஒருவேளை தோற்றுவிட்டால் அது ஒரு வருத்தமில்லை மீண்டும் முனைப்பும் போராடி வெல்வோம் இது போன்ற எண்ண ஒட்டங்கள்தேவை. சிறு வயதிலே இருந்து இந்த பயிற்சியும் முயற்சியும் நமது இயல்பான சுபாவமாக அமைந்து விடுவது மிக சிறப்பானது.    
தோல்வி மனப்பான்மையும்,தன்னை தானே தோற்கடித்து கொள்வதும் ,எதிர்மறையான சிந்தனைகளும்,தோல்வி பற்றிய அச்சமும் தோல்விக்கு பிறகு அவமான உணர்வும்மனசோர்வும்,தாழ்வுமனபான்மையும் தன்னம்பிக்கை குறைவும்,தற்கொலை முயல்வும் போன்ற பல மன நல பாதிப்புகள் ஆபத்தானவை.
       
ஒருவரது திறமையையும்,செயல் திறனையும் முடக்க கூடியது.கல்வி,வேலை, நட்புறவு,உடலுறவு போன்ற பல அத்யாவசய தினசரி நடவடிக்கைகளையும் பாதிக்ககூடியது.
     
எனவே தோல்வி என்பதும் இழப்பு என்பதும் தவிர்க்க முடியாதது ஆனால் தாங்க கூடியது என்பது தெளிவாக உணரப்பட வேண்டும்.
      
அதே போல் தோல்வியும்,இழப்பும் நிலையானதும் நிரந்தரமானதும் அல்ல அது ஒரு சுழற்சி மீண்டும் லாபமும் வெற்றியும் உறவும் அன்பும்,பதவியும்,பொருளும் ஏதாவதொரு மாற்று வழியாக நாம் வெல்வோம் என்ற நம்பிக்கையும் முயற்சியும் தொடர வேண்டும்.
      
உலக இயல்பும்,வரலாறுகளும்,ஆழ்ந்த சுய அனுபவங்களும் பெற்றவரதுஆலோசனைகளும் அறிவுரைகளும் வாழ்வின் நுட்பமான நுணுக்கமான செய்திகளை நமக்கு உணர்த்துகின்றன.
      
ஆனால் பெரும்பாலோனோர்களுக்கு வெளுத்ததெல்லாம் பால் போல ஒரு வெகுளித்தனமான அறியாமை தொடர்கிறது.தோல்வி என்பதையே இயற்கைக்கு புறம்பானது என்பது போல‌ எண்ணத்தில் இருப்பார்கள்.தான் இது வரை தோற்றதில்லை என இருமாந்திருப்பார்கள் தோல்வியை தாங்க மாட்டேன் என்று சொல்லி தனக்கு தானே இறுக்கமான வலை பின்னி கொள்வார்கள்.
              
நாம் ஒரு செய்தியை நுனுக்கமாக புரிந்து கொள்ள வேண்டும் இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் உலகம் பல ஆயிரம் விதமான நுட்பமான திறமைகளை எதிர்பார்க்கிறது எல்லா திறன்களும் எல்லா
மனிதரிடமும் இருக்க வாய்ப்பில்லை.
              
உதாரணமாக உலோகங்கள் மற்றும் அதன் கலவைகளிடம் நாம் பல இயல்பியல் குணங்களை எதிர்பார்க்கிறோம் சில குணங்கள் சில உபயோகங்கள் உள்ளது ஆனால் அதுவே சில இடங்களுக்கு உபயோகமில்லாது போய் விடுகிறது உதாரணமாக வன்மையான இரும்பும்மென்மையான தங்கமும்
வெவ்வேறு விதமான குணாதிசயங்களை உடையவை அவற்றின் உபயோகத்துக்கு தகுந்த மாதிரியும் புகழும் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது.
இதே மாதிரியாக மனிதன் பழக்கப்படுத்தும் விலங்குகளும் அமைகின்றது.பூனையும் ஆனையும் அதன் புகழும் விலையும் குணத்துக்கு தகுந்த மாதிரி அமைகிறது.
                  
இது இயல்பான மனித சமுதாய அமைப்பிலும் காணப்படுகிறது உடல் உழைபாளிகளை விட அறிவு ஜீவிகள் புகழும் பணமும் அடைகிறார்கள் ஆனால் இயற்கையின் படைப்பை நாம் குறை கூற முடியாது.  


                                
உடலின் ஒவ்வொரு அங்கமும் போல யாவரும் அத்யாவசயமானவர்கள்.இதயக் குழாயாகட்டும் மலக்குடலாகட்டும் இரண்டுமே முக்யமானவை புகழும் இக‌ழும் தற்கலிகமானவை.
                    
தோல் மருத்துவரை விட இதய மருத்துவர் புகழடைவது இயல்பு ஆனால் எவரும் தாழ்ந்தவரில்லை.
         
தெரு கூட்டுபவர் முதல் தேசிய கொடி நாட்டுபவர் வரை கொள்கையளவில் சமமே ஆனால் புகழிலும் பொருளிலும் சிலர் உயர்வடைவது உலக இயல்பு.மெல்ல மெல்ல இந்த இடைவெளி குறைந்து சமதர்ம சமுதாயம் மலரும்.

எனவே வெற்றி தோல்வி என்பது நம்மை தாண்டி பல நூறு நுட்பமான பிண்ணனி உண்டு என உணர வேண்டும்.அதை பயின்று மென்மேலும் உயர முயல வேண்டும்.தன்னைத்தானே நொந்து கொள்வது தவறு.அதற்காக இல்லாத ஒரு காரணத்தை சொல்லி தன்னை ஏமாற்றி கொள்வதும் தவறு.
                 
நமது தெளிவான சிந்தனைகளால் எதிர்பாராத ஏமாற்றத்திற்கும் தயாராக வேண்டும் எமாற்றத்தை ஏற்று எதிர்த்துபோராடவும் தயாராக வேண்டும்.
                
தோல்விக்கு பின் தோல்வி மனப்பான்மை தாழ்வு மனப்பான்மை துயரம் சோர்வு தளர்வு விரக்தி சுய பச்சாதாபம் குற்ற உண்ர்வு தன்னம்பிக்கை குறைவு ஏற்படுவது இயல்பு உடல் காயத்தை விட மனக்காயத்தின் வலி அதிகம். ஆனால் வீரர்கள் தமது முயற்சியால் சுய பயிற்சியால் இரு விதமான காயங்களையும் தாங்கும் வலிமையை வளரித்து கொள்கிறார்கள்.

                              தோற்றவர் கூட வெல்லலாம்
                               துவண்டவர் என்றும் வெல்லமுடியாது
                               மாண்டவர் கூட மீளலாம்
                               சோர்ந்தவர் என்றும் எழ முடியாது
         
நாளை நமதே வெற்றி நமதே என்ற ஜெய ஜெய கோஷங்கள் உற்சாகமூட்டும் பானங்கள்.தன்னம்பிக்கையுள்ள தலைவர்கள் ஊக்க மருந்துகள்  
     
ஊக்கமூட்டும் எழுத்துக்கள் பேச்சுக்கள்,கவிதைகள் காவ்யங்கள் யாவும் அற்புதமான மருந்துகள்.
             
பெற்றோர் உற்றோர் ஆசிரியர் நண்பர் யாவரும் ஊட்டும் நம்பிக்கை வார்த்தைகள் மனம் என்ற மரம் செழித்து வளர போடப்படும் உரங்கள்.
           
மாறாக வதைகளும் வசைகளும் குறை கூறலும் குற்றம் சாட்டுதலும் இழிவுபடுத்தலும் அழிவு தரும் வழி முறைகளாகும் இந்த முறைகளை ஆசிரியர் பெற்றோர் உற்றார் அயலார் அனைவரும் கை விடுவது மிக ந்ல்லது.
        
எனவே தோல்வியை விட பிறரது விமர்சனங்களுக்கு வேதனைப்படுவதே ஆபத்தானது ஆகவே மற்றவர் யாவரும் எதிர்மறையான விமர்சனங்களை தவிர்த்து ஆக்கபூர்வமான மற்றும் ஊக்கமளிக்கும் உற்சாக
வார்த்தைகளை கூறுவது நல்லது.
                              
வென்றவரை கை தட்டி பாராட்டுவோம் தோற்றவரை கை தூக்கி ஆற்றுபடுத்துவோம்.வென்றவரை தோள் தட்டி ஊக்கபடுத்துவோம் பிறகு தோற்றவரை தோள் நிமிர்த்த பாடுபடுவோம்.
               
எனவே தோல்வியை தாங்கும் மனபக்குவம் மிக அவசியம் மேலும் பிறரது தவறான விமர்சனங்களை மறப்பதும் மிக மிக அவசியம்.
           
இறந்த பின் post martum செய்வது போல தோல்விக்கு பின் தெளிவான சுய ஆலோசனை சுய பரிசோதனை செய்வது அவசியம்.
                
நடு நிலையான ஆராய்வில் ந‌மது மீது குறைகள் தவறுகள் இருந்தால் முழுமனதோடு ஏற்று கொண்டு அதை மாற்ற முயல்வோம்.
             
அல்லது நம்மை மீறிய இடம்,காலம், நேரம்,சூழல்,அதிட்டம்,போன்றவை காரணமாக இருந்தால் மீண்டும் முழு உத்வேகத்துடன் மறு முயற்சி செய்வோம்.
                      
பல நேரங்களில் நமக்கு நம்பிக்கையான ந்ண்பர் உறவினர் கற்றோர் மற்றோரிடம் ஆலோசனை கேட்பது தவறோ,பலவீனமோ அல்ல. நமக்கு புலப்படாத ஒரு பெரிய விஷயம் அவர்களுக்கு தெரியலாம்.
           
தேவையானால்அடிப்படையானநல்லகுணங்களையோ,கொள்கைகளையோ மாற்றாமல் சில புதிய பாதைகளில் புதிய அணுகு முறைகளில் முயற்ச்சித்தால் மீண்டும் வெற்றி பெறலாம்.

மாற்றம் மலரட்டும்

மனமாற்றம் நிகழ்ந்தால்தான் வாழ்வில் முன்னேற்றம் நிகழும். மாற்றமே முன்னேற்றத்திற்கு முதல்படி.

ஒரு கவிதை விதையாகவே உள்ளது, எந்த விதமாற்றமும் இல்லை என்றால் அது செடியாக வளராது என்பது எவ்வளவு உண்மையோ இதுவும் அவ்வளவு உண்மை.

இருவிதமான மாற்றங்கள் நம்மில் நிகழ்கின்றன. ஒன்று, உடல் ரீதியான மாற்றம். மற்றொன்று, மன ரீதியான மாற்றம்.

உடல் ரீதியான மாற்றம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே உள்ளது. மேலும் உடல் ரீதிதான மாற்றம் நமது கட்டுப்பாட்டில் அவ்வளவாக இல்லை.

ஆனால், மன ரீதியான மாற்றம் முழுமையாக நமது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. மேலும், நாம் நினைத்தால்தான் மன ரீதியான மாற்றத்தை நிகழ்த்த முடியும்.

மனதில் மாற்றம் ஏற்படு வதற்கு நீங்கள் சிறந்த கருத்துக் களை மனதில் தூவிக்கொண்டே இருக்க வேண்டும். எவ்வாறு, நிலத்தில் புதைந்த விதை, ஈரம் கிடைத்ததும் முளைத்து விடுகிறதோ அதுபோல மனத்தில் விழுந்த கருத்தும் அதற்கென உரிய நேரம் வரும்போது விழித்து விடுகிறது. அவ்வாறு மனம் விழிக்கும் போது மன மாறுதல்கள் நிகழ்கின்றன.

மேலும், அவை உங்கள் வாழ்க்கைக்கு அடித்தளமாகவும் மாறிவிடுகிறது. ஏனென்றால் மனதில் தோன்றும் கருத்துக் களின் வெளிப்பாடே வாழ்க்கை.

நல்ல கருத்துக்களின் விளை நிலமாக உங்கள் மனம் விளங்கும் போது வளமான வாழ்க்கை தன்னிச்சையாகவே மலர்ந்து விடுகிறது.

மனமாற்றமே வெற்றிக்கு விதை. மேலும் புதிய மாற்றங் களைத் தோற்றுவிப்பவராகவும், புதிய மாற்றங்களை ஏற்றுக் கொள்பவராகவும், நீங்கள் விளங்க வேண்டும்.

புதிய கருத்துக்களை உள்வாங்குங்கள்

உங்கள் கருத்துக்களில் உடும்புப்பிடியாக இல்லாமல், புதிய கருத்துக்களுக்கும் செவி கொடுங்கள். பழைய கருத்துக் களில் உங்களுக்கு நம்பிக்கையும் பிடிப்பும் இருப்பதால் தவறு இல்லை என்றாலும் புதிய கருத்துக்களுக்கு வழிவிடுங்கள்.

புதிய நீர் ஊறிக்கொண்டே இருப்பதால்தான் நதி நகர்ந்து கொண்டே இருக்கின்றது. அவ்வாறு புதிய நீர் உற்பத்தி ஆகவில்லை என்றால் நதி ஏது? கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.

ஆகவே, ஆயிரமாயிரம் கருத்து மலர்கள் மலரும் பூஞ்சோலையாக உங்கள் மனம் மாறட்டும். அதில் பல்வேறு மாறுதல்கள் மலரட்டும்.

மாறுதல்கள் மலர்வது உங்கள் மனதிற்கு ஆறுதல் அளிப்பதாகவும் செயலுக்கு வேகம் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும். உங்கள் இயக்கத்தை முடக்கி விடுவதாக மாறுதல்கள் இருந்துவிடக் கூடாது. ஆகவே மாற்றம் ஆக்கமாக மலரட்டும்.

கருத்துக் கருவூலம்

பல்வேறு நூல்களைப் படிப்பதாலும், அறிஞர்களின் உரைகளைக் கேட்பதாலும் புதிய கருத்துக்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு புதிய கருத்துக்களைத் தெரிந்து கொள்ளும்போது அவற்றை அப்படியே உள்வாங்கிக் கொள்ளக் கூடாது. மாறாக புதிய கருத்துக் களுக்கும் ஏற்கனவே உங்களிடம் உள்ள கருத்துக்களுக்கும் உள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமை ஆகியவற்றை அலசி ஆராய்ந்து பாருங்கள்.

மேலும், புதிய கருத்துக்கள் உங்கள் இலட்சியத்தை அடைவதற்கு எந்த அளவுக்கு உபயோகமாகவும் உறுதுணையாகவும் இருக்கும் எனவும் எண்ணிப் பாருங்கள்.

பிறகு, புதிய கருத்துக்களின் செயலாக்கம் உங்களுக்கு உதவுமாயின் அவற்றைக் கடைப் பிடியுங்கள். அவ்வாறு இல்லை யெனில் அக்கருத்துக்களை தள்ளி விட்டு, ஏற்கனவே நீங்கள் கொண்டுள்ள கருத்துக்கள் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் அடிப் படையில் செயல்படுங்கள்.

மனம் திறக்கட்டும்

எப்பொழுதும் புதிய கருத்துக் களை ஏற்றுக் கொள்ள உங்கள் மனம் திறந்த நிலையிலேயே இருக்கட்டும். நமக்குத்தான் எல்லாம் தெரியும் என்று எண்ணுவதால் மனம் இறுக்க நிலைக்கு சென்று விடுகிறது. அதனால் முன்னேற்றம் தடைபடுகிறது.

ஆகவே, புத்தம் புதிய கருத்துக் கள், மாற்றுக் கருத்துகள் என எத்தகைய மாற்றத்தையும் உள் வாங்கிக்கொள்ளும் உயர்ந்த நிலையில் உங்கள் மனம் மலர்ந்திருக்க வேண்டும்.

மாற்றம் மலர்ந்தால் புதிய மார்க்கம் தென்படும். ஆகவே, தற்பொழுது நீங்கள் வாழும் வாழ்க்கை முறையை, செயல் முறையை, பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும்.

மேலும், இது இப்படித்தான் இருக்க வேண்டும் அது அப்படித்தான் இருக்க வேண்டும், என்னும் எதிர்பார்ப்புக்களோடு எதையும் அணுகக் கூடாது. அவை எப்படி உள்ளதோ அதற்குத் தக்கவாறு அவற்றை அணுகி உங்கள் இலட்சி யத்தை அடைவதற்குத் தக்கவாறு மாற்றிக்கொள்ள வேண்டும்.

புதியன விரும்புவோம்

நீங்கள் உண்ணும் உணவில், உடுக்கும் உடையில், அவ்வப்போது மாறுதல்களைச் செய்யுங் கள். எனக்கு இதுதான் பிடிக்கும், இது பிடிக்காது, என்ற மன நிலையிலிருந்து விடுபட்டு எனக்கு எதுவும் பிடிக்கும் எதன் சுவையையும் நான் விரும்பு வேன், என புதுப்புது உணவு வகை களையும் உடை வகைகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

மேலும், உங்கள் அறையில் மாறுதல்களை அவ்வப்போது செய்யுங்கள். அதாவது பொருட் களின் இடத்தை மாற்றுங்கள், இவ்வாறு செய்தால் மனம் மாறுதல் களை தாங்கும் வலிமையையும், மாறுதல்களைத் தோற்றுவிக்கும் வல்லமையையும் பெறுகின்றது.

மனதில் மாற்றம் நிகழும் போது சிந்தனையில் மாற்றம் மலர்கிறது. சிந்தனை மாறும்போது செயலும் வாழ்க்கை முறையும் மாறுதல்களைச் சந்திக்கிறது. இத்தகைய மாற்றமே முன்னேற்றத்தின் முகாந்திரமாக அமைந்து விடுகிறது.

மேலும், மாற்றத்தை தோற்று விக்கும் ஆக்க சிந்தனையின் உறைவிடமாக உங்கள் மனம் திகழும்போது எந்தப் பிரச்சனையையும் சந்தித்துத் தீர்க்கும் ஆற்றல் உங்களுக்கு வருகிறது.

ஆகவே, மாற்றம் மலர்வதற்கு மனதில் வழிவிடுங்கள்.

Monday, August 15, 2016

வேதாந்தம் கூறும் வழிகள்

உங்களின் குழந்தைகள் கல்வியில் சிறக்க ஐந்து வழிகள்
(தைத்திரீய உபநிடதம், யஜுர் வேதம்)

யஜுர் வேதத்தின் முடிவாக அமைந்திருக்கும் உபநிடதங்களில் ஒன்று தான் தைத்திரீய உபநிடதம். இந்த உபநிடதத்தின் (1:3) ஆவது பாகத்தில், மாணவர்கள் கல்வியில் சிறப்படைய தேவையான ஐந்து வழிகள் தரப்படுகின்றன.
அதிலோகம் – தகுந்த சூழல்
அதிஜ்யௌதிஷம் – மேன்மையான அறிவொளி
அதிவித்யம் – தேர்ச்சிபெற்ற ஆசிரியர்
அதிப்ரஜம் – சிறந்த பெற்றோர்
அதியாத்மம் – சரியான உடல்நலம்

அதிலோகம் – தகுந்த சூழல்

நமது பாரம்பரிய குருகுல கல்வி முறை 
தகுந்த சூழலில் மாணவர்களுக்குக் கல்வி கற்றுத் தரப்பட வேண்டும். நல்லக் காற்றோட்டமான, மரங்களும் செடிக் கொடிகளும் நிறைந்த, அமைதியான இடத்தில் கல்வி கற்றுத் தரப்பட வேண்டும். இத்தகைய இடங்களில் கல்வி கற்றுத் தரப்படும் போது, மாணவர்களின் கவனம் சிதறாமல் இருக்கும்.

அதிஜ்யௌதிஷம் – மேன்மையான அறிவொளி

வகுப்பு ஆரம்பிக்கும் முன்னர் தியானத்தில் ஈடுபட்டிருக்கும்
வெளிநாட்டு பள்ளி மாணவர்கள் 
கல்வி கற்பதற்கு தகுந்த இடத்தை தேர்ந்தெடுத்த பின்னர், மனதையும் உடலையும் சீர்நிலைக்கு கொண்டு வரவேண்டும். அதாவது எண்ணங்களும் சிந்தனைகளும் அமைதியாகவும், உடல் செயல்பாடு சாந்தமாகவும் இருக்க வேண்டும். அதற்கு தியானத்தில் ஈடுபட வேண்டும். எனவே கல்வி கற்க ஆரம்பிக்கும் முன்னர், தியானத்தில் ஈடுபட வேண்டும். முறையான தியானத்தின் போது, பிரபஞ்சத்தின் இயக்க சக்தி நம் உள்ளாற்றலோடு இணைந்து அறிவொளியைத் தூண்டும். இது உள்ளுணர்வுகளை அமைதிபடுத்தி, மனத்தை சாந்தநிலைக்கு கொண்டுவரும். இதனால் மாணவர்கள் கல்வியில் அதிக கவனத்தை செலுத்திடலாம்.

அதிவித்யம் – தேர்ச்சிபெற்ற ஆசிரியர்
ஆசிரியரை “ஆச்சார்யர்” என்று வேதங்கள் குறிப்பிடுகின்றன. ஆச்சார்யர் என்றால் ஒழுக்கத்திலும் கல்வியிலும் சிறந்தவர். ஆச்சார்யர் என்பவர் வெறும் கற்பித்தல் மட்டுமல்லாமல், தான் போதிக்கும் நல்ல நெறிகளையே தன் வாழ்க்கையாக கொண்டு வாழ்பவர். நன்னெறிகளோடு வாழும் ஆச்சார்யர் கல்விக்கு ஆதாரமாக கூறப்படுகின்றார். எனவே, ஒழுக்கமும் நிறைவான அறிவும் உடைய ஆசிரியர் தான் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அமைய முடியும்.

அதிப்ரஜம் – சிறந்த பெற்றோர்

வித்யாரம்பம் - கல்வி ஆரம்பம் 
வீட்டில் இருந்து தான் கல்வி தொடங்குகின்றது. இந்த கருத்தை சுட்டிக் காட்டவே இந்துக்களின் 16 சடங்குகளில் ஒன்றாக “வித்யாரம்பம்” எனும் சடங்கு அமைந்துள்ளது. ஒருவனுக்கு அவனின் வீடு தான் முதல் பள்ளிக்கூடம், அவனின் பெற்றோர்களே முதல் ஆசிரியர்கள். அதிப்ரஜம் எனும் சொல் நல்ல நெறிகளும் மேன்மையான குணங்களும் உடைய பெற்றோர்களை அல்லது குடும்பத்தினரைக் குறிப்பிடுகின்றது. கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்த பிள்ளைகளே பெற்றோர்களுக்கு நீண்ட ஆயுளை அளிப்பவர்கள். தங்கள் பிள்ளைகளின் முன்னேற்றத்தில் பெற்றோர்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது. நம்முடைய பாரத பாரம்பரியத்தில் கதைகளின் மூலமாகவும், பாடல்களின் மூலமாகவும் குழந்தைகளுக்கு நல்ல நெறிகளை கற்பிக்கும் வழக்கம் இருக்கின்றது. அவ்வாறு குழந்தைகளுக்கு சிறுவயதிலே நன்னெறிகளையும் சமய ஒழுக்கங்களையும் கற்பிக்க வேண்டியது பெற்றோரின் அல்லது குடும்பத்தினரின் கடமையாகும்.

அதியாத்மம் – சரியான உடல்நிலை

பழங்களும் காய்கறிகளும்

யோகாசனம் புரியும் சிறுவர்கள்
கல்வியில் கவனம் சிதறாமல் இருப்பதற்கு மாணவர்களின் உடல்நிலை மிகவும் அவசியமாகும். இதனால் மாணவர்களின் உணவுப் பழக்கம் மற்றும் உடல்பயிற்சி ஆகிய இரண்டிற்கும் அதிக முக்கியத்துவம் தரப்படவேண்டும். பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றை மாணவர்கள் அதிகமாக உட்கொள்ள வேண்டும். காரம், உப்பு, கொழுப்பு போன்றவற்றை மாணவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் யோகாசனப் பயிற்சி செய்வதால், உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்? மேலும், மாணவர்களின் கேட்டல் திறன் மற்றும் பேச்சுத்திறன் அதிகரிக்க வேண்டும். மந்திரங்கள், தேவாரங்கள் போன்றவற்றை கேட்பதாலும் அவற்றை செப்புவதாலும் மாணவர்களின் கேட்டல் திறன் மற்றும் பேச்சுத்திறன் அதிகரிக்கின்றது.

முடிவுரை
தகுந்த சூழல், தியானம், தேர்ச்சிபெற்ற ஆசிரியர், சிறந்த பெற்றோர் மற்றும் சரியான உடல்நலம் ஆகிய ஐந்தும் “பஞ்சஸ் அதிகரணம்” என்றழைக்கப்படுகின்றன. இன்று ஐரோப்பிய நாடுகளில் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு இத்தகைய யுக்திகளே கையாளப்படுகின்றன. ஆனால் இவ்வழிகள் யாவும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் வேதங்களில் சொல்லப்பட்டுள்ளன. முடிந்தவரை நம் பிள்ளைகளுக்கு சமய நெறிகளையும், ஒழுக்கங்களையும் வீட்டிலே கற்றுத் தருவோம். ஓம் ஷாந்தி

Friday, August 12, 2016

முயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்

1.சின் முத்திரை ;அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும்.

2.வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.

3.சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

4.பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும்.

5.சூரிய முத்திரை: மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும்.

6.வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும்.

7.பிராண முத்திரை: மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

8.அபான முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூல நோய், வாயுத் தொல்லை விலகும். உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.

.9அபான வாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டு கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதய நோய் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும்.

10.லிங்க முத்திரை: இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். கபத்தை அகற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும்.

11.அஸ்வின் முத்திரை: பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம்.

இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்.

நீங்கள் தோழரா... வாத்தியாரா?

கீழே உள்ள கேள்விகள் அனைத்துக்கும் 'ஆமாம்’ என நீங்கள் பதில் சொன்னால், இந்தக் கட்டுரையைத் தவிர்த்து வேறு பக்கங்களுக்கு நீங்கள் செல்லலாம். முழுவதற்கும் 'இல்லை’ என்பது உங்கள் பதிலானால், அவசியம் நீங்கள் இதை வாசிப்பது நல்லது. சிலவற்றுக்கு 'ஆம்’ சிலவற்றுக்கு 'இல்லை’ என்று நடுவில் தத்தளிப்போரும் தங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்ள இதை வாசிக்கலாம். 

 உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் நல்ல பெற்றோர்களாக இருக்கிறீர்களா?

 அவர்களின் நியாயமான தேவைக ளைப் பூர்த்தி செய்கிறீர்களா?

 குழந்தைகளின் மகிழ்ச்சியான தருணங்களில் நீங்கள் பங்கேற்கிறீர்களா?

 அவர்களுக்கென தனியே நேரம் ஒதுக்குகிறீர்களா?

அவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் என்னவென்று தெரிந்து வைத்திருக்கிறீர்களா?

இன்னும் இதுபோன்ற கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம்தான். இதற்கான பதில்களை யோசிக்கும்முன் ஜானவியின் பிரச்னை என்னவென்று சொல்லிவிடுகிறேன்.

ஜானவிக்கு 14 வயது மகளும் 12 வயது மகனும் இருக்கிறார்கள். ஜானவி தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். கணவன் மகேஷ் மார்கெட்டிங் லைனில் இருப்பவர். இருவரும் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டே இருப்பார்கள். தனிமையில் விடப்பட்ட குழந்தைகளுக்கு டி.வி, கம்ப்யூட்டர், மொபைல் ஆகிய மூன்றும் முப்பெரும் நண்பர்கள். ஜானவியின் மகள் ஸ்ரேயாவுக்கு மூக்குக்கு மேல் கோபம் வரும். கேள்விகள் கேட்டால் பிடிக்காது. கொஞ்சம் குரலை உயர்த்தி அதட்டினாலே அழுது ஆர்ப்பாட்டம் செய்வாள். சாப்பிடாமல் அழிச்சாட்டியம் செய்வாள். மகன் விகாஷ§க்குப் படிப்பில் நாட்டமே இல்லை. எல்லாப் பாடத்திலும் தேர்வு பெறவில்லை. இந்தப் பிரச்னை இத்துடன் நிற்காமல் கணவன் மனைவிக்குள் உறவு விரிசல் ஏற்படும் அளவிற்குப் போனது.   இதனால், வீட்டில் அடிக்கடி சண்டை, குழப்பம் எனப் பிரச்னைகள் தொடர்ந்தன.  

இருவருமே தங்களின் ஆத்திரம், கோபம், இயலாமை ஆகியவற்றை அப்பாவிக் குழந்தைகளின் மீது கொட்டினர். பெற்றோர்களின் இந்த மனோபாவத்தால்,  அவர்களின் எதிர்ப்பு குணம் மெதுவாக வளர்ந்தது. ஜானவிக்கு மட்டும் அல்ல... இதுபோன்ற பிரச்னைகள் நம்மை சுற்றி உள்ள சாந்தினி, அமுதா, செல்வி, பவித்ரா என்று பெரும்பாலான பெண்களுக்கும் உண்டு.

''குழந்தை வளர்ப்புக் கலை என இனிமையாகச் சொல்ல வேண்டிய ஒன்றைப் பிரச்னையாகப் பார்க்கத் தொடங்கியது பெரும் வேதனை. குழந்தையைப் பெறுவது மட்டும் அல்ல... நல்ல பெற்றோர்களாக இருப்பதும் சவாலான விஷயம்தான்!'' எனச் சொல்லும் மனநல மருத்துவர் ஷாலினி பதின் பருவத்தைக் கடக்கும் பிள்ளைகளை எப்படிப் புரிந்துகொண்டு கையாள வேண்டும் என்பதை விரிவாக எடுத்துக் கூறினார்.

''பதின்பருவம் என்பது சிறார்களின் உடல் அளவிலும் மனநிலையிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படுத்தும் வயது. அவரவர் பாலினத்துக்குத் தகுந்த மாதிரி ஹார்மோன்கள் உற்பத்தி அதிகரிக்கும். ஆண் என்றால் அரும்பு மீசை துளிர்விடும். பெண் குழந்தைகள் வயதுக்கு வருவார்கள். பிள்ளைகளுக்கு எனப் பிரத்யேகமாக நேரம் ஒதுக்கி, அவர்கள் மீது நாம் அக்கறையாக இருக்கிறோம் என்பதை உணர்த்தினால் போதும்'' என்கிற டாக்டர் ஷாலினி மேலும் தொடர்ந்தார்.

''நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இந்தப் பருவத்தில் அவர்களுக்கு அதிகரிக்கும். தாங்களே சுயமாக யோசிக்கவும் முடிவு செய்யவும் ஆரம்பித்துவிடுவார்கள். பதின்வயதில் மூளையில் ஐந்து முக்கியமான மாற்றங்கள் ஏற்படுகின்றன.

சிந்தனை: பதின் வயதினருக்கு மூளையின் அளவு வளரும். அவர்களின் புத்தி, கூர்மையடையும்.  'நான் சொல்றதை நீ கேட்டுத்தான் ஆகணும்’ என்ற அதட்டலாகப்  பேசும் தொனி அவர்களுக்குப் பிடிப்பதில்லை. தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து எதிர்க் கேள்வி கேட்பார்கள். உதாரணமாக 'என்னைக் கேட்காம ஏன் டூவீலரை எடுத்துட்டுப் போனே?’ என்று அம்மா கேட்டால் 'நீ மட்டும் அப்பாகிட்ட கேட்காம அவரோட காரை எடுத்துட்டுப் போகலாமா?’ என்று மடக்குவார்கள். பதமாகப் பேசிப் புரியவைக்க வேண்டும்.

எதிர்ப் பாலின ஈர்ப்பு:  பதின்பருவப் பெண்களுக்கு ஆண்கள் மீதும் அந்த வயசு ஆண்களுக்குப் பெண்கள் மீதும் ஈர்ப்பு ஏற்படுவது இயற்கை. அதில் எந்தத் தவறும் இல்லை. சரியாக இயல்பாக வளர்கிறார்கள் என்றுதான் அர்த்தம். இந்தச் சூழலில் வீட்டில் ஏற்கெனவே பெற்றோர் இடையே பிரச்னைகள் இருந்தால் அது பதின்வயதினரை பாதிப்புக்கு உள்ளாக்கும். வெளியிடங்களில் அன்பைத் தேட முனைவார்கள். வேறு பல பிரச்னைகளுக்கு இது வழி வகுத்துவிடும். பிள்ளைகளின் முன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடக்கூடாது.

தன்னுணர்வு - 'பிளஸ் டூ முடிச்சிட்டு ஃபேஷன் டிசைனிங் பண்ணப் போறேன்’ என்று ஒன்பதாவது படிக்கும்போதே சொல்வார்கள். இதற்கு முன் அவர்களின் தேர்வுகள் குழப்பமாகவும் அவர்களுக்கே உறுதி இல்லாமலும் இருக்கும். ஆனால், பதின்வயதில் ஆழமாகத் தோன்றும் விருப்பங்கள்தான் கடைசிவரை அவர்களை வழிநடத்தும். பெற்றோர்கள் அவர்களின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

மனநிலை மாறுதல்கள்: திடீர் என்று ஏற்படுகின்ற ஹார்மோன் மாற்றங்களால் பதின்பருவத்தினரின் மனநிலைகள் அடிக்கடி மாறும். காரணம் எதுவும் இல்லாமல் கோபப்படுவதும், சின்ன விஷயத்துக்கு எல்லாம் அழுவதும், நண்பர்களோடு சேர்ந்து இருக்கும்போது சத்தமாகச் சிரிப்பதும், சினிமா தியேட்டரில் கைத்தட்டி விசில் அடிப்பதும் என உணர்ச்சிக் கலவையாக இருப்பார்கள். சின்னத் தோல்வியைக்கூட அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. பெற்றோர்கள் அவர்களுடன் அடிக்கடி மனம்விட்டுப் பேசி அவர்களின் தேவை என்ன பிரச்னைகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு தோழன் - தோழியைப்போல அவர்களிடம் இதமான நெருக்கத்தையும் அன்பையும் காட்ட வேண்டும்.  

நட்பு சூழ் உலகம்: பாய்ஸ் படத்தில் வருவது போலப் பதின்வயதினர் எப்போதும் நான்கைந்து நண்பர்களுடன்தான் இருப்பார்கள். இந்தச் சமயத்தில் பெற்றோர்களை விட்டுக் கொஞ்சம் விலகியே இருப்பார்கள். தங்களுடைய நண்பர்களை - அல்லது ரோல் மாடலாக யாரை நினைக்கிறார்களோ அவர்களை அப்படியே பின்பற்ற முயற்சி செய்வார்கள். இத்தனை நாள் தங்களையே சுற்றிச் சுற்றி வந்த பிள்ளைகள் திடீரென்று விலகிப் போவதைப் பார்த்து பெற்றோர்களின் மனம் சங்கடப்படும்.

'காலைலேர்ந்து எங்கடா போய்த் தொலைஞ்சே?’ என்று அப்பா திட்டினால், பிள்ளைக்கு மூக்குக்கு மேல் கோபம் வரும். 'புராஜெக்ட் வொர்க் பண்ணேன்’ என்று வாயில் வந்ததைச் சொல்வானே தவிர, உண்மையில் எங்கு போனான் என்று சொல்லமாட்டான். 'என்னப்பா ரொம்ப பிஸியா? ஆளையே காணலையே?’ என்று கேட்டுப் பாருங்கள், 'ஃபிரண்ஸோட ஷாப்பிங் மால் வரைக்கும் போனோம்பா!’ என்பான். பெற்றோர்கள் தங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதையும் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதையும் பிள்ளைகள் விரும்ப மாட்டார்கள். பிள்ளைகள் யாருடன் பேசுகிறார்கள் பழகுகிறார்கள் என்று பெற்றோர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

பதின்வயதினரிடம் பேசுவதைவிட அவர்கள் பேசுவதை நிறையக் கேட்க வேண்டும். உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கவேண்டும். அதன்பின் நம் கருத்துக்களைச் சரியான முறையில் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அன்பும் அனுசரணையான பேச்சும் தேவையான அக்கறையும் தோழமையான நெருக்கமும் இருந்தால் போதும் அவர்களை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

அவர்கள் கடைப்பிடித்தே ஆக வேண்டிய சில விதிமுறைகளை அவர்களின் பங்களிப்புடனே வடிவமைத்துத் தரவேண்டும். பதின்வயதினர் ஏதேனும் தவறு செய்தால், அதை மிக நாசுக்காக, தனிமையில் வைத்துக் கண்டிக்கலாம். தேவை இல்லாமல் கடுமையாகக் கண்டிக்கப்படுவதையோ, மூன்றாம் நபரின் முன்னிலையில் விமர்சிக்கப்படுவதையோ எந்தப் பிள்ளையும் விரும்புவதில்லை.'' என்கிறார் டாக்டர் ஷாலினி.

'அடிச்சு வளர்க்காத குழந்தையும் ஒடிச்சு வளர்க்காத முருங்கையும் உருப்படாது’ எனச் சொலவடை சொல்லும் கிராமங்களில்தான், 'வளர்ந்த வாழையை வெட்டக்கூடாது’ என்றும் சொல்வார்கள். அதாவது கைக்கு உயர்ந்த பிள்ளையைக் கைநீட்டக்கூடாது என்பதற்காக! பதின் பருவத்தில் சக தோழனாக நம் பிள்ளைகளைப் பாவிப்பவதே சரியான அணுகுமுறையாக இருக்கும். அதைச் செய்யாமல் கண்டிப்பு காட்டும் வாத்தியாராக நீங்கள் செயல்பட்டால், உங்கள் வாரிசுக்கும் உங்களுக்குமான இடைவெளி இன்னும் இன்னும் கூடிக்கொண்டேதான் போகும்!

வேலை வாங்குவது எப்படி…? :மற்றவர்கள் மனம் நோகாமல்

உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த நீங்கள் தோந்தெடுத்து சொல்கிற வார்தை ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும். அது எவ்வாறு மற்றவர்கள் மனதை உங்கள்பால் ஈர்க்கச் செய்கிறது என்பதை உணர முடியும்.

சில வார்த்தைகள் உறவுக்கு பாலம் போடும். அந்த வார்த்தைகள் உண்மையான மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். ஒற்றுமையை உண்டாக்கும். தன்னம்பிக்கையை வளர்க்கும். மனதளவில் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் உண்டாக்கும்.

ஆரோக்கியமான சூழலும் அன்யோனியமும் அதிகமாகும். நெருக்கத்தையும், பாசத்தையும் பெருக்கும். பிரியத்தையும், விருப்பத்தையும் அதிகப்படுத்தும். நேர்மறையான எண்ணங்களையும், அதனால் மேலான பலன்களையும் உண்டாக்கும். இந்த வார்த்தைகள் நம்பிக்கையை ஊட்டி வெற்றிக்கு வழிகாட்டும்.

சில வார்த்தைகள் உறவுக்கு வேலி போடும். இவைகள் ஒற்றுமையை குலைக்கும். வெறுப்பை உண்டாக்கும். அதிருப்தியை அதிகப்படுத்தும், மனக்காயங்களை உருவாக்கும். பணி நேரத்திலே அழுத்தங்களும், மனச்சோர்வுகளும் உருவாகும். ஈடுபாட்டை குறைக்கும். வெற்றிகளுக்கு விலங்கு போடும். வினைகள் உங்களுக்கு பரிசாகத்தரும். இதனால் இழப்புகளுடன் கூடிய எதிர்மறையான விளைவுகள் உண்டாகும்.

உங்களிடம் பணிபுரிபவர்களிடம் இந்த வேலையை கண்டிப்பாக செய்ய வேண்டும். இதை செய்து முடித்தே தீர வேண்டும். இன்று மாலைக்குள் இதை முடித்துவிட்டு என்னிடம் பேசுங்கள் என்று கட்டளையிடுகிற அதிகாரதோரணைக் காட்டுகிற, ஆணைணயிட்டுப்பேசுகிற, அழுத்தமான வார்த்தைகளை உபயோகிக்கும்போது அந்த வார்த்தைகள் உங்களுக்கு முன்னால் இருப்பவர்கள் முகத்தில் அல்லது மனத்தில் எந்த மாற்றத்தை உண்டாக்குகிறது என்பதை பார்க்க வேண்டும்.

இந்த வார்த்தைகளை கேட்டு அவர்கள் அதிர்ச்சியுற்றார்களா…? அல்லது உடைந்து போனார்களா…? அல்லது கோபப்பட்டார்களா…? அல்லது ஏதாவது எதிர்வினை ஆற்றினார்களா…? என்பதை பார்க்க வேண்டும். இதே வார்த்தைகளை உங்கள் மேல் அதிகாரிகள் உங்களிடம் உபயோகித்திருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதையும் யோசித்துப்பார்க்க வேண்டும். அந்த வார்த்தைகள்தான் உறவுகளுக்கிடையே சுவர்களை எழுப்புகின்றன.

உங்களிடம் பணிபுரிவர்களிடம் “நான் சொல்லுகின்ற யோசனைகளை யோசித்துப்பார், உன்னால் அதை உறுதியாக செய்ய முடியும். உன்னால் மட்டுமே செய்ய முடியும். வேறு ஒருவரிடம் இந்தப்பணியைத்தர விருப்பம் இல்லை. இந்தப்பணியை முடிக்கிற திறமை உன்னிடம் மட்டுமே இருக்கிறது. உன்னைத்தவிர யாரும் செய்ய முடியாது என்று நம்புகிறேன். முயற்சித்துப்பார், இன்று மாலைக்குள் வேலை முடியும்” என்று அனுகூலமான, மென்மையான, நம்பிக்கையூட்டுகிற ஆனால், அழுத்தத்துடன் கூடிய வேண்டுகோள்களை முன்வையுங்கள். அந்த வேலையை அவர்கள் எளிதாகவும்  விருப்பத்தோடும், மகிழ்ச்சியோடும் செய்வார்கள்.

திறந்த மனமே சிந்தனை தெளிவாம்

நீங்கள் விரும்பும் துறையில் சாதனை படைக்க வேண்டும் என்றால், உங்களைப் பற்றியும், குடும்பம், சமுதாயம் பற்றியும், மனித உறவுகள், அறிவியல் வளர்ச்சி, அறநெறிகள், சமயங்கள் பற்றிய தெளிந்த கண்ணோட்டம் உங்களுக்குத் தேவை.

சரியான கண்ணோட்டம் இல்லாத போது உங்கள் முயற்சிகள், தொடரும் உழைப்பு எல்லாமே பயனற்றுப் போகின்றன. அல்லது தடைபட்டுப் போகின்றன.

உலகைக் குறித்தும் உலகின் இயக்கம் குறித்தும், மக்கள் மனப்பாங்கு குறித்தும் தெளிவான கண்ணோட்டம் அமைய, தெளிவான திருத்தமான சிந்தனை தேவைப் படுகிறது. திருத்தமான சிந்தனை அமைய திறந்த மனம் தேவைப்படுகிறது.

திறந்த மனம்தான் ஒருவனைச் சுதந்திர மாகக் சிந்திக்க வைக்கிறது. மூடிய மனம் எதையும் பரிசீலிக்காமலேயே ஒன்றைப் புறக்கணிக்கிறது. தொடர்ந்து எதிர்க்கிறது.

புதிய கருத்திற்கும், யோசனைக்கும், அனுபவங்களுக்கும் தன் மனதை மூடி வைத்து, பரிசீலிக்கவே மறுக்கும் ஒருவன் தன் ஆளுமையை அடிமைப்படுத்தி, இயங்காமல், வளராமல் செய்து விடுகிறான்.

மூடிய மனம் சகிப்புத்தன்மையைக் சாகடிக்கிறது. புதிய வாய்ப்புகளைப் புரிந்து கொள்ள மறுக்கிறது. புதிய தொடர்புகளை ஏற்க மறத்துவிடுகிறது.

திறந்த மனதுடன் சிந்திக்கும்போது காரியங்களைப் பற்றி புதிய கண்ணோட்டம் அமைகிறது. உங்கள் கற்பனைகள் புதிய திசைநோக்கி விரிவடைகிறது. உங்கள் முன்னேற்றத்திற்கான யோசனைகள் உங்களுக்கு அலையலையாக உருவாகின்றன.

நுண்ணறிவுடைய மனிதர்கள் கூட புதிய அறிவியல் முறைகள், உண்மைகள் முதன்முதலாக அறிவிக்கப்பட்டபோது அவற்றைக் கேலி செய்தார்கள். கண்டு பிடித்தவர்களுக்கு கண்டனத்தையே பரிசாக அளித்தார்கள்.

திறந்த மனமுடையவர்கள் மட்டுமே புதிய உண்மைகளைப் பரிசீலித்தார்கள் எதுவும் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று உருவாக்கித் தமக்கும் பெருமை சேர்த்து மக்கள் சமுதாயத்திற்கு அளப்பரும் சேவை செய்தார்கள்.

மூடிய மனதை உடையவர்கள் முடியாது என்று குரல் கொடுக்கும் அதே நேரத்தில் திறந்த மனதை உடையவர்கள் தொழிற்துறையிலும், வணிகத் துறையிலும் அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டுள்ளார்கள்.

மூடியமனம் எவ்வாறு அமைகிறது. விருப்பு வெறுப் புடன் சிந்திக்கப் பழகிவிட்டால் உள்ளம் மூடிக்கொள்கிறது. மூட நம்பிக்கை அங்கே உருவாகிறது. எதிலும் உணர்ச்சி வசப்பட்டுச் சிந்திக்கும்போது உண்மையை அறியமுடியாமற் போகும். மற்றவர் கருத்துக்களைக் காது கொடுத்துக் கேட்க மறுக்க வேண்டி வரும். வதந்தி களையே உண்மை என்று மயங்கும்படி நேரும்.

நீங்கள் வாழ்க்கையில் சாதனை படைக்க விரும்பினால் மனதைத் திறந்துவிட்டு புதிய கருத்துக்களையும், புதிய வாய்ப்புகளையும் ஆர்வத்துடனும் அக்கறையுடனும் பரிசீலிக்க வேண்டும்.

நமக்கு முன்னர் வாழ்ந்த மேதைகள் புதிய கருத்துக்களைச் சொல்லிவிட்டு மூடிய மனம் பெற்றவர்களால் பட்ட துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல.

சாக்ரடீஸுக்கு நச்சுக் கோப்பை, ஏசுவுக்கு சிலுவை மரணம், கலிலியோவுக்கு வீட்டுக்காவல்.

“குதிரையோ, மாடோ இழுக்காமல் தானே நகரும் வாகனத்தைச் செய்வேன்” என்று ஹென்றிபோர்டு முதன்முதலில் சொன்னபோது கேலி பேசப்பட்டார்.

காற்றில் உள்ள ஈதர் ஒலி அலைகளைத் தாங்கிச் செல்லக்கூடியது. அதன் உதவியால் ஓரிடத்தில் பேசுவதை ஒலியலைகளாக மாற்றி பல்லாயிரம் மைல்களுக்கப்பால் மீண்டும் பேச்சாக மாற்றிக் கேட்க முடியும் என்று மார்க்கோணி சொன்னபோது அவரைப் பைத்தியம் என்று முடிவு கட்டினார்கள்.

இராக்கெட் விண்கலங் களை உருவாக்கி, மனிதனைச் சந்திரனில் கொண்டுபோய் இறக்க முடியும் என்று அறிவியலறிஞர்கள் முதன்

முதலில் சொன்னபோது சாத்தியமே இல்லாத அதீத ஆசை என்று கடிந்துகொள்ளப்பட்டார்கள்.

ஆகவே திறந்தமனம் உங்களிடம் இல்லை என்றால் தெளிவான சிந்தனையை நீங்கள் பெறமுடியாது.

தெளிவான சிந்தனை இல்லாதவன், தன் ஆற்றலை உணர முடியாது. தன்னூக்கம் கொள்ள முடியாது. வாழ்வில் வெற்றிபெற முடியாது.

மற்றவர் முன்னேற்றத்தைக் காணும்போது பொறாமை அவனிடம் உருவாகும். அவர்கள் தவறான வழியில் பதவியைப் பிடித்துவிட்ட தாகவும், பணத்தைச் சேர்த்து விட்டதாகவும் பேசிக் கொண்டிருப்பான்.

ஒருவனிடம் பொறாமை சேரும்போது வெறுப்புணர்வு, பகையுணர்வு ஆகியவை அவனை அண்டிக்கொள்ளும். பிறரை விமர்சனம் செய்வதில் காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பான். தன் முன்னேற்றத்தைத் தானே தடுத்து நிறுத்தி விடுவான்.

மூடிய மனமுடையவன் காரியங்களை பிறர் கோணத்திலிருந்து பரிசீலிப்பதில்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்று சாதிக்கிறான்.

தன் மதம் மட்டுமே உயர்வானது, மற்றவை தாழ்ந்தவை என்று பேசுகிறான். தன்மொழி மட்டுமே சிறப்பானது மற்றவை இழிவானவை என்கிறான். தன் இனம் மட்டுமே வாழ வேண்டியது; மற்றவை சாக வேண்டியவை என்னும் உணர்வோடு செயல்படுகிறான். தான் சார்ந்துள்ள கட்சி மட்டுமே ஆளத் தகுதியானது; மற்றவை தகுதியற்றவை எனச் சாதிக்கிறான்.

திறந்த மனம் இல்லாத வரிடம் தெளிந்த சிந்தனை பிறப்பதில்லை. விருப்பு வெறுப்புடன் மதிப்பீடுகளைச் செய்வதனால் சரியான முடிவு களுக்கு வர முடிவதில்லை.

நுண்ணறிவும், புத்திசாலித் தனமும் உடையவர்கள் சிலர் தெளிந்த சிந்தனை இல்லாதவர்களை அடையாளம் கண்டு தம் சுயநல நோக்கங்களுக்கு அவர் களை அடிமையாக்கி விடுகிறார் கள். சாதி, மத, இன, மொழி அடிப்படை உணர்வுகளைத் தூண்டி தம் நோக்கங்களுக் கேற்ப அவர்களை ஆட்டி வைக்கிறார்கள்.

இவர்கள் குழுவாகச் சேர்ந்து கொள்ளும் போது அமைதியான உலகச் சூழ் நிலையை மாற்றி அமளிக் காடாக்கி விடுகிறார்கள். தம் வாழ்க்கையை வீணாக்கி சமுதாய முன்னேற்றத் தையும் பாழ்படுத்தி விடுகிறார்கள்.

சமுதாயத்தின் எல்லாச் சீரழிவுகளும் மூடிய மனதில் தான் துவங்குகின்றன. திறந்த மனம் எல்லாவற்றையும் பரிசீலிக்கிறது. சிறந்ததை ஏற்கிறது. தெளிந்ததை மதிக்கிறது.

மாபெரும் வெற்றிபெற விரும்பும் நீங்கள் திறந்த மனதுடன் புதிய கருத்துகளைப்

பரிசீலிக்க வேண்டும். எது உண்மை என்று கவன மாக ஆராய வேண்டும். உங்கள் குறிக்கேளுக்குச் சாதகமானவற்றைப் பற்றிக்கொள்ள வேண்டும். சோதித்துப் பார்க்காமல் எதையும் விமர்சிக்கவும் கூடாது. ஏற்கவும் கூடாது.

ஆழ்மனம், அதன் ஆற்றல்கள், அதை இயக்கப் பயன்படும் ஆட்டோசஜசன், மனச் சித்திரம், நமக்கு எதிராக உள்ள சூழ்நிலையை மாற்றும் மனச்சித்திரத்தின் ஆற்றல், நம்பிக்கை யின் மந்திரசக்தி போன்ற ஆற்றல் ஆகியவை உங்களுக்குப் புதிய செய்திகளாக இருக்கலாம். விநோதமாகக் கூடத் தோன்றலாம்.

ஆனால் முப்பது, அறுபது நாட்கள் அவற்றைச் செய்து பார்க்கும்போது, நடைமுறைப் படுத்தும்போது உள்ளக் கிளர்ச்சியை நீங்கள் அனுபவிப்பீர்கள். உண்மையை அறிவீர்கள்.

தெளிந்த சிந்தனையோடு செயல்படுபவர்க்கு மட்டுமே வெற்றி கிடைக்கும் என்பதால், அவ்வெற்றிக்கு வழிவகுக்கும் அதிமுக்கியமான சில செய்திகளை நன்கு புரிந்து கொள்ளுங்கள்.

ஆழ்மனம் ஒரு வளமான நிலம் போன்றது. வெற்றிக்கான நல்ல எண்ணங்களை, நம்பிக்கை யுடன், எதிர்பார்ப்புடன் பதிக்கும்போது, எண்ணமாகிய விதை முளைத்துச் செடியாகி, மரமாகி உங்கள் எண்ணத்திற்கேற்ற கனிகளைத் தந்தே தீரும்.

நல்ல எண்ணங்களை விட்டு வறுமை, பற்றாக்குறை, தோல்வி, அவமானம் பற்றிய எண்ணங்களை விரும்பியோ, விரும்பாமலோ, தெரிந்தோ தெரியாமலோ, மனதில் பதித்தால் அவையே செடியாகி, மரமாகி அதற்கேற்ப கனி கொடுக்கும்.

வெற்றிக்கான விதைகளை எண்ணத்தின் மூலம் நீங்களாக ஊன்றாமல் விட்டுவிட்டால், நல்ல நிலத்தில் களைகளும், முட்செடிகளும், முளைத்துப் புதராவது போன்று, வாழ்க்கையில் வறுமையும், தோல்வியுமே விளைந்து கொண்டிருக்கும்.

ஆழ்மனமாகிய நிலத்தில் நல்ல விதைகளை விதைப் பதற்குப் பயன்படும் உளவியல் உத்திதான் ஆட்டோ சஜசன். தற்போதைய வாழ்க்கை நீங்கள் விரும்பாத நிலையில் இருக்குமானால் அதை ஆட்டோ சஜசனால் மட்டுமே மாற்ற முடியும்.

பழைய பாடல் பதிவாகியுள்ள ஒரு கேசட்டில், புதிய பாடலைப் பதிவு செய்வது போன்று, எதிர்மறை எண்ணங் கள் பதிவாகியுள்ள ஆழ்மனதில், ஆக்கப் பதிவுகளை பதிக்க வேண்டும்.

இதற்கு “ஆட்டோ சஜசன்” என்பது என்ன என்று முற்றிலும் ஆராய்ந்து அறிவது அவசிய மில்லை. “ஸ்விட்ச்” சைப் போட்டால் மின்விளக்கு எப்படி எரிகிறது? என்று கேட்டால் எத்தனை பேருக்கு விடை தெரியும்? விடை தெரியாமலே மின்விளக்கைப் பயன்படுத்துகிறோமா இல்லையா? அது போன்று ஆட்டோ சஜசனைப் பயன்படுத்தி உங்களால் வெற்றி பெற முடியும்.

அதுபோன்றே, மனச் சித்திரம் பார்த்தல் என்னும் உத்தியும் உங்கள் வெற்றி வாழ்க்கையை அமைத்துத் தரும். அதைப்பற்றி நீங்கள் முழுமை யாக ஆராய்வது அவசியமில்லை. நடைமுறைப் படுத்தினாலே நல்ல முன்னேற்றம் காணமுடியும்.

வெற்றிபெற முடியும்; சாதிக்க முடியும்; வளமடைய முடியும் என்று பலரால் ஏன் நம்ப முடியவில்லை? அவர்களுக்கு நம்பிக்கையின் ஆற்றலைப் பற்றித் தெரியாததே காரணம்.

மனிதனுக்கு எதிராக விரோதமாக, பாதகமாக இருக்கும் சூழ்நிலையை மாற்றும் சக்தி அவனைத் தவிர வேறு எவரிடமும் இல்லை.

விரும்பாத சூழ்நிலை ஒருவருக்கு அமைந்திருக்குமானால், அழுவதாலோ, புலம்பு வதாலோ, கவலைப்படுவதாலோ அதை மாற்றி அமைக்க முடியாது. நம்பிக்கை என்னும் மந்திர சக்தி மட்டுமே அதை மாற்றி அமைக்கும்.

“உங்கள் சூழ்நிலை சாதகமாக இல்லாத நிலையிலும், அது சாதகமாக மாறும் என்பதற்கு அறிகுறியோ, அடையாளமோ, ஆதாரமோ இல்லா நிலையிலும், விரைவில் சூழ்நிலை சாதகமாக, ஆதரவாக, உதவியாக, ஒத்துழைப்பாக, வளமாக, வெற்றிகரமாக மாறியே தீரும்” என்று நம்பிக்கையைப் பதிவு செய்யுங்கள்.

நீங்கள் அடைய விரும்புவது, விரும்புகிற காலவரையறைக்குள் கிடைத்தே தீரும். எப்படி என்று தெரியாது. அதைப்பற்றிக் கவலை இல்லை. ஆனால் கிடைத்தே தீரும் என்று சொல்லிச் சொல்லி மனதில் பதிய வையுங்கள்.

ஆழ்மனச் சக்தி ஐம்புலன் களால் அறியப்பட முடியாதது. “நம்பிக்கை” என்னும் ஆற்றலை யும் ஐம்புலன்களால் அறிய முடியாது, ஆனால் அவற்றைப் பயன்படுத்தி நல்ல விளைவுகளைக் கொண்டு அறிய முடியும்.

மேலோட்டமாகப் பார்த்தால் மூட நம்பிக்கை போன்று தோற்றமளிக்கும். மூட நம்பிக்கை என்று நினைத்து ஏமாற வேண்டாம். திறந்த மனதோடு ஆராய்ந்து தெளிந்த சிந்தனை உடையவர்கள் இவற்றை நிரூபித்திருக்கிறார்கள்.

அவர்தம் அனுபவங்களைத் திறந்த மனதுடன் ஆராயுங்கள்; தெளிந்த சிந்தனை அமையும்.

வெற்றியின் ஆறாவது இரகசியம் இதுதான்.
திறந்த மனமே சிந்தனைத் தெளிவாகும்.

தொப்பையை குறைப்பது எப்படி?

இஞ்சி சாறு தேன் கலந்து தினமும் சாப்பிட தொப்பை குறையும்.
அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அன்னாசியுடன் சேர்த்துக் கிளற வேண்டும். பின் ஒரு டம்ளர் நீர் ஊற்றி இரவிலேயே கொதிக்க வைத்து இறக்கி மூடி வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கிவிட்டு சாரை வெரும் வயிற்றில் அருந்த வேண்டும். தொடர்ந்து பத்து நாட்கள் மட்டும் இதை அருந்தினால் தொந்தி கரைந்துவிடும். இதோடு யோகா, உடற்பயிற்சி, அளவான சாப்பாடு இவற்றையும் தொடர வேண்டும்.

காலை காலையில் எழுந்த உடன் சூரிய குளியல் பண்ண வேண்டும். அப்புறமா 5டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.. ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து அதில் பத்து  துளசி இலைகளை போட்டு ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

காலையில் காப்பி குடிக்கூடாது இதுக்கு பதிலாக சுக்கு காபி குடிக்கலாம் 

ஒருமணிநேரம் கழித்து எழுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.

காலை 9  மணியளவில்  1 டம்ளர் கேழ்வரகு கஞ்சி அல்லது பார்லி கஞ்சி சாப்பிடலாம். அப்புறம் சாத்துக்குடி ஜூஸை கொஞ்சம் தேன் கலந்து சாப்பிடலாம். 

காலை 10 மணி. – சாம்பல் பூசணி சாறு அல்லது முள்ளங்கி சாறு குடிக்கலாம்

காலை 11 மணி – அவலை ஊறவைத்து அதனுடன்  நாட்டுச் சர்க்கரை , வாழைப்பழம்,  கொஞ்சம்  ஏலக்காய் பொடி  எல்லாவற்றையும் சேர்த்து அப்படியே சாப்பிடலாம்.

மதியம் சாப்பாட்டுக்கு  20 நிமிடத்திற்கு முன்னாடி காய்கறி சாலட் சாப்பிடலாம். அப்புறம் மதிய சாப்பாட்டுக்கு கீரையைப் பாதி வேகவைத்து அதில் ஊறவைத்த பச்சைப் பாசிப் பருப்பை சேர்த்து அரிசியைக் குறைத்து நிறையக் காய்கறிகள் சேர்த்துச் சாப்பிடலாம்.

மாலை4 மணி : முளைவிட்ட தானியங்கள் ஏதாவது ஒன்றை 4 டீஸ்பூன் எடுத்து அதில் கொத்துமல்லி, புதினா இலைகள், எலுமிச்சைச் சாறு பிழிந்து சாப்பிடலாம். அப்புறம் காப்பிக்குப் பதில் சுக்கு, கொத்துமல்லி கலந்த காப்பி சாப்பிடலாம்.

மாலை 6 மணி : சிறிது வேகவைத்த முளைவிட்ட தானியத்தைச் சாப்பிடலாம். 

இரவு 8 மணி: சாப்பிடுவதற்கு 20 நிமிடத்திற்கு முன்பாக பச்சைக் காய்கறி சாப்பிடலாம.  பசும்பாலுக்குப் பதில் சோயா பால் சாப்பிடலாம்.

மூன்றே நாளில் தொப்பையை குறைக்க!!!

இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, செய்யும் வேலையும் முக்கிய காரணமாக இருக்கின்றன. தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள்.

ஆனால் அப்படி உடற்பயிற்சியை மட்டும் செய்தால் போதாது. உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜூஸை மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து, உடற்பயிற்சி செய்து வந்தால், தொப்பையின் அளவு குறைவதை நன்கு காணலாம்.

சரி, இப்போது மூன்றே நாளில் தொப்பையைக் குறைக்க உதவும் அந்த ஜூஸ் என்னவென்றும், அந்த ஜூஸில் சேர்க்கப்படும் பொருட்களில் நிறைந்துள்ள சத்துக்களைப் பற்றியும் பார்ப்போமா!!!

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம் மற்றும் உடலின் அல்கலைன் அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் இது வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க மிகவும் சிறப்பான உணவுப் பொருளும் கூட.

எலுமிச்சை, எலுமிச்சங்காய்
எலுமிச்சை மற்றும் எலுமிச்சங்காயில் பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும். மேலும் இவை உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும்.

புதினா
புதினா உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் புதினா வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.

இஞ்சி
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள மனித ஊட்டச்சத்து நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் கலந்து கொண்டவர்கள், குடிக்கும் பானங்களில் இஞ்சியை சேர்த்துக் கொண்டு வந்தனர். அப்படி இஞ்சியை சேர்த்ததால், அவர்கள் வயிறு நிறைந்தது போன்று உணர்ந்ததோடு, குறைவான அளவிலேயே உணவை உட்கொண்டனர். இதனால் இஞ்சியானது அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்களை கரையச் செய்ததாம்.

தண்ணீர்
தண்ணீர் உடலின் நீர்ச்சத்தை அதிகரிப்பதோடு, உடற்பயிற்சியின் போது தசை மற்றும் மூட்டுகளில் தோய்வு ஏற்படாமல் தடுக்கும். மேலும் நீரை அதிக அளவில் தொடர்ந்து குடித்து வந்தால், அது உணவின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கும்.

குறிப்பு
மேற்கூறிய பொருட்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்து, தினமும் குடித்து வந்தால், 3 நாட்களில் தொப்பை குறைவதை நன்கு காணலாம். அதற்காக மூன்றே நாட்களில் தொப்பை முற்றிலும் குறையாது. தினமும் குடித்து வந்தால், தொப்பை குறைந்து கொண்டே வருவதை காண முடியும்.

ஜூஸ் செய்யும் முறை
1 வெள்ளரிக்காய்
5 எலுமிச்சை
1 எலுமிச்சங்காய்
15 புதினா இலைகள்
2 டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி
2.5 லிட்டர் தண்ணீர்

வெள்ளரிக்காய், 1 எலுமிச்சங்காய் மற்றும் 2 எலுமிச்சையை வட்ட வட்டமாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் மீதமுள்ள 3 எலுமிச்சையை ஒரு பாத்திரத்தில் பிழிந்து, அதில் புதினாவை நறுக்கி போட்டு, அதில் 1.5 லிட்டர் நீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் இஞ்சி மற்றும் மீதமுள்ள தண்ணீரை ஊற்றி, அத்துடன் வெள்ளரிக்காய், எலுமிச்சங்காய் மற்றும் எலுமிச்சையை போட்டு நன்கு கிளறி, 24 மணிநேரம் ஊற வைத்து, பின் குடிக்க வேண்டும்.

இப்படி 3 நாட்கள் தொடர்ந்து செய்து குடித்து வந்தால், தொப்பை குறைவதைக் காணலாம். வேண்டுமெனில் இந்த செயலை ஒரு வாரம் கழித்து மீண்டும் 3 நாட்கள் தொடரலாம்.

திறந்த மனம் உள்ளவனிடம் தெளிவான சிந்தனை பிறக்கும்

நீங்கள் விரும்பும் துறையில் சாதனை படைக்க வேண்டும் என்றால் உங்களைப் பற்றியும், குடும்பம், சமுதாயம் பற்றியும், மனித உறவுகள், அறிவியல் வளர்ச்சி, அறநெறிகள், சமயங்கள் பற்றிய தெளிந்த கண்ணோட்டம் உங்களுக்குத் தேவை.


சரியான கண்ணோட்டம் இல்லாத போது உங்கள் முயற்சிகள், தொடரும் உழைப்பு எல்லாமே பயனற்றுப் போகின்றன. அல்லது தடைப்பட்டுப் போகின்றன.

உலகைக் குறித்தும் உலகின் இயக்கம் குறித்தும், மக்கள் மனப்பாங்கு குறித்தும் தெளிவான கண்ணோட்டம் அமைய, தெளிவான திருத்தமான சிந்தனை தேவைப்படுகிறது. திருத்தமான சிந்தனை அமைய திறந்த மனம் தேவைப்படுகிறது.

திறந்த மனம்தான் ஒருவனைச் சுதந்திரமாகக் சிந்திக்க வைக்கிறது. மூடிய மனம் எதையும் பரிசீலிக் காமலேயே ஒன்றைப் புறக்கணிக்கிறது. தொடர்ந்து எதிர்க்கிறது.

புதிய கருத்திற்கும், யோசனைக்கும், அனுபவங்களுக்கும் தன் மனதை மூடிவைத்து பரிசீலிக்கவே மறுக்கும் ஒருவன் தன் ஆளுமையை அடி மைப்படுத்தி இயங்காமல் வளராமல் செய்து விடுகிறான்.

மூடிய மனம் சகிப்புத்தன்மையைக் சாகடிக்கிறது. புதிய வாய்ப்புகளைப் புரிந்து கொள்ள மறுக்கிறது. புதிய தொடர்புகளை ஏற்க மறத்துவிடுகிறது.

திறந்த மனதுடன் சிந்திக்கும்போது காரியங்களைப் பற்றி புதிய கண்ணோட்டம் அமைகிறது. உங்கள் கற்பனைகள் புதிய திசை நோக்கி விரிவடைகிறது. உங்கள் முன்னேற் றத்திற்கான யோசனைகள் உங்களுக்கு அலையலையாக உருவாகின்றன.

நுண்ணறிவுடைய மனிதர்கள் கூட புதிய அறிவியல் முறைகள், உண்மைகள் முதன் முதலாக அறிவிக்கப்பட்டபோது அவற்றைக் கேலி செய்தார்கள். கண்டுபிடித்தவர்க ளுக்கு கண்டனத்தையே பரிசாக அளித்தார்கள்.

திறந்த மனமுடையவர்கள் மட்டுமே புதிய உண்மைகளைப் பரிசீலித்தார்கள். எதுவும் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று உருவாக்கித் தமக்கும் பெருமை சேர்த்து மக்கள் சமுதாயத்திற்கு அளப்பரும் சேவை செய்தார்கள்.

மூடிய மனதை உடையவர்கள் முடியாது என்று குரல் கொடுக்கும் அதேநேரத்தில் திறந்த மனதை உடையவர்கள் தொழிற்துறையிலும், வணிகத் துறையிலும் அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டுள்ளார்கள்.

மூடிய மனம் எவ்வாறு அமைகிறது. விருப்பு வெறுப்புடன் சிந்திக்கப் பழகிவிட்டால் உள்ளம் மூடிக்கொள் கிறது. மூட நம்பிக்கை அங்கே உருவாகிறது. எதிலும் உணர்ச்சி வசப்பட்டுச் சிந்திக்கும்போது உண்மையை அறிய முடியாமற் போகும். மற்றவர் கருத்துக்களைக் காது கொடுத்துக் கேட்க மறுக்க வேண்டி வரும். வதந்திகளையே உண்மை என்று மயங்கும்படி நேரும்.

நீங்கள் வாழ்க்கையில் சாதனை படைக்க விரும்பினால் மனதைத் திறந்துவிட்டு புதிய கருத்துக்களையும் புதிய வாய்ப்புக்களையும் ஆர்வத்துட னும் அக்கறையுடனும் பரிசிலிக்க வேண்டும்.

நமக்கு முன்னர் வாழ்ந்த மேதைகள் புதிய கருத்துக்களைச் சொல்லிவிட்டு மூடிய மனம் பெற்றவர்களால் பட்ட துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல.

சாக்ரடீஸ¤க்கு நச்சுக் கோப்பை, ஏசுவுக்கு சிலுவை மரணம், கலிலியோவுக்கு வீட்டுக்காவல்.

"குதிரையோ, மாடோ இழுக்காமல் தானே நகரும் வாகனத்தைச் செய்வேன்" என்று ஹென்றி போர்டு முதன் முதலில் சொன்னபோது கேலி பேசப்பட்டார்.

காற்றில் உள்ள ஈதர் ஒலி அலைகளைத் தாங்கிச் செல்லக்கூடியது. அதன் உதவியால் ஓரிடத்தில் பேசுவதை ஒலியலைகளாக மாற்றி பல்லாயிரம் மைல்களுக்கப்பால் மீண்டும் பேச்சாக மாற்றிக் கேட்க முடியும் என்று மார்க்கோணி சொன்னபோது அவரைப் பைத்தியம் என்று முடிவு கட்டினார்கள்.

ரொக்கெட் விண்கலங்களை உருவாக்கி மனிதனைச் சந்திரனில் கொண்டுபோய் இறக்க முடியும் என்று அறிவியலறிஞர்கள் முதன் முதலில் சொன்னபோது சாத்தியமே இல்லாத அதீத ஆசை என்று கடிந்து கொள்ளப்பட்டார்கள்.
ஆகவே திறந்த மனம் உங்களிடம் இல்லை என்றால் தெளிவான சிந்தனையை நீங்கள் பெறமுடியாது.

தெளிவான சிந்தனை இல்லாதவன் தன் ஆற்றலை உணர முடியாது. தன்னூக்கம் கொள்ள முடியாது. வாழ்வில் வெற்றிபெற முடியாது.

மற்றவர் முன்னேற்றத்தைக் காணும்போது பொறாமை அவனிடம் உருவாகும். அவர்கள் தவறான வழியில் பதவியைப் பிடித்துவிட்டதாக வும், பணத்தைச் சேர்த்து விட்டதாகவும் பேசிக்கொண்டிருப்பான்.

ஒருவனிடம் பொறாமை சேரும் போது வெறுப்புணர்வு பகையுணர்வு ஆகியவை அவனை அண்டிக் கொள்ளும். பிறரை விமர்சனம் செய்வதில் காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பான். தன் முன்னேற் றத்தைத் தானே தடுத்து நிறுத்தி விடுவான்.

மூடிய மனமுடையவன் காரியங்களை பிறர் கோணத்திலிருந்து பரிசீலிப்ப தில்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்று சாதிக்கின்றான்.

தன் மதம் மட்டுமே உயர்வானது மற்றவை தாழ்ந்தவை என்று பேசுகிறான். தன் மொழி மட்டுமே சிறப்பானது மற்றவை இழிவானவை என்கிறான். தன் இனம் மட்டுமே வாழ வேண்டியது. மற்றவை சாக வேண்டியவை என்னும் உணர்வோடு செயல்படுகிறான். தான் சார்ந்துள்ள கட்சி மட்டுமே ஆளத் தகுதியானது. மற்றவை தகுதியற்றவை எனச் சாதிக்கின்றான்.

திறந்த மனம் இல்லாதவரிடம் தெளிந்த சிந்தனை பிறப்பதில்லை. விருப்பு வெறுப்புடன் மதிப்பீடுகளைச் செய்வதனால் சரியான முடிவுகளுக்கு வர முடிவதில்லை.

நுண்ணறிவும், புத்திசாலித்தனமும் உடையவர்கள் சிலர் தெளிந்த சிந்தனை இல்லாதவர்களை அடையாளம் கண்டு தம் சுயநல நோக்கங்களுக்கு அவர்களை அடிமையாக்கி விடுகி றார்கள். சாதி, மத, இன, மொழி அடைப்படை உணர்வுகளைத் தூண்டி தம் நோக்கங்களுக்கேற்ப அவர்களை ஆட்டி வைக்கிறார்கள்.

இவர்கள் குழுவாகச் சேர்ந்து கொள்ளும் போது அமைதியான உலகச் சூழ் நிலையை மாற்றி அமளிக்கு காடாக்கி விடுகிறார்கள். தம் வாழ்க்கையை வீணாக்கி சமுதாய முன்னேற்றத்தையும் பாழ்படுத்தி விடுகிறார்கள்.
சமுதாயத்தின் எல்லாச் சீரழிவுகளும் மூடிய மனதில் தான் தொடங்குகின்றன. திறந்த மனம் எல்லாவற்றையும்

மாபெரும் வெற்றிபெற விரும்பும் நீங்கள் திறந்த மனதுடன் புதிய கருத்துகளைப் பரிசீலிக்க வேண்டும். எது உண்மை என்று கவனமாக ஆராய வேண்டும். உங்கள் குறிக் கோளுக்குச் சாதகமானவற்றைப் பற் றிக்கொள்ள வேண்டும். சோதித்துப் பார்க்காமல் எதையும் விமர்சிக்கவும் கூடாது. ஏற்கவும் கூடாது.

ஆழ் மனம், அதன் ஆற்றல்கள், அதை இயக்கப் பயன்படும் தன்னிச்சையான கருத்து, மனச் சித்திரம், நமக்கு எதிராக உள்ள சூழ்நிலையை மாற்றும் மனச்சித்திரத்தின் ஆற்றல், நம்பிக்கையின் மந்திர சக்தி போன்ற ஆற்றல் ஆகி யவை உங்களுக்குப் புதிய செய்திகளாக இருக்கலாம். விநோதமாகக் கூடத் தோன்றலாம்.

ஆனால் முப்பது, அறுபது நாட்கள் அவற்றைச் செய்து பார்க்கும்போது நடைமுறைப்படுத்தும் போது உள்ளக்கிளர்ச்சியை நீங்கள் அனுப விப்பீர்கள். உண்மையை அறிவீர்கள்.

தெளிந்த சிந்தனையோடு செயற் படுபவர்க்கு மட்டுமே வெற்றி கிடைக்கும் என்பதால் அவ்வெற்றிக்கு வழிவகுக்கும் அதி முக்கியமான சில செய்திகளை நன்கு புரிந்து கொள்ளுங்கள்.

ஆழ் மனம் ஒரு வளமான நிலம் போன்றது. வெற்றிக்கான நல்ல எண்ணங்களை நம்பிக்கையுடன் எதிர்பார்ப்புடன் பதிக்கும்போது எண்ணமாகிய விதைமுளைத்துச் செடியாகி, மரமாகி உங்கள் எண்ணத் திற்கேற்ற கனிகளைத் தந்தே தீரும்.

நல்ல எண்ணங்களை விட்டு வறுமை, பற்றாக்குறை, தோல்வி, அவமானம் பற்றி எண்ணங்களை விரும்பியோ, விரும்பாமலோ, தெரிந்தோ தெரியாமலோ, மனதில் பதித்தால் அவையே செடியாகி, மரமாகி அதற்கேற்ப கனி கொடுக்கும்.

வெற்றிக்கான விதைகளை எண் ணத்தின் மூலம் நீங்களாக ஊன்றாமல் விட்டுவிட்டால், நல்ல நிலத்தில் களைகளும், முட்செடிகளும், முறைத்துப் புதராவது போன்று வாழ்க்கையில் வறுமையும், தோல்வியுமே விளைந்து கொண்டிருக்கும்.

ஆழ்மனமாகிய நிலத்தில் நல்ல விதைகளை விதைப்பதற்குப் பயன்படும் உளவியல் உத்திதான் தன்னிச்சையான கருத்து. தற்போதைய வாழ்க்கை நீங்கள் விரும்பாத நிலையில் இருக்குமானால் அதை தன்னிச்சையாக கருதினால் மட்டுமே மாற்ற முடியும்.

பழைய பாடல் பதிவாகியுள்ள ஒரு கேசட்டில், புதிய பாடலைப் பதிவு செய்வது போன்று எதிர்மறை எண்ணங்கள் பதிவாகியுள்ள ஆழ்மனதில் ஆக்கப்பதிவுகளை பதிக்க வேண்டும்.

இதற்கு "தன்னிச்சையான கருத்து" என்பது என்ன என்று முற்றிலும் ஆராய்ந்து அறிவது அவசியமில்லை. ஆழியைப் போட்டால் மின்விளக்கு எப்படி எரிகிறது? என்று கேட்டால் எத்தனை பேருக்கு விடை தெரியும்? விடை தெரியாமலே மின்விளக்கைப் பயன்படுத்துகிறோமா இல்லையா? அது போன்று தன்னிச்சையான கருத்தைப் பயன்படுத்தி உங்களால் வெற்றி பெற முடியும்.

அதுபோன்றே மனச் சித்திரம் பார்த்தல் என்னும் உத்தியும் உங்கள் வெற்றி வாழ்க்கையை அமைத்துத்தரும். அதைப்பற்றி நீங்கள் முழுமையாக ஆராய்வது அவசியமில்லை. நடைமுறைப்படுத்தினாலே நல்ல முன்னேற்றம் காணமுடியும்.

வெற்றிபெற முடியும், சாதிக்க முடியும், வளமடைய முடியும் என்று பலரால் ஏன் நம்ப முடியவில்லை? அவர்களுக்கு நம்பிக்கையின் ஆற்றலைப் பற்றித் தெரியாததே காரணம்.

மனிதனுக்கு எதிராக விரோதமாக, பாதகமாக இருக்கும் சூழ்நிலையை மாற்றும் சக்தி அவனைத் தவிர வேறு எவரிடமும் இல்லை.

விரும்பாத சூழ்நிலை ஒருவருக்கு அமைந்திருக்குமானால், அழுவதாலோ, புலம்புவதாலோ, கவலைப்படுவதாலோ அதை மாற்றி அமைக்க முடியாது. நம்பிக்கை என்னும் மந்திர சக்தி மட்டுமே அதை மாற்றி அமைக்கும்.

"உங்கள் சூழ்நிலை சாதகமாக இல்லாத நிலையிலும் அது சாதகமாக மாறும் என்பதற்கு அறிகுறியோ, அடையாளமோ, ஆதாரமோ இல்லா நிலையிலும், விரைவில் சூழ்நிலை சாதகமாக, ஆதரவாக, உதவியாக, ஒத்துழைப்பாக, வளமாக, வெற்றிகரமாக மாறியே தீரும்" என்று நம்பிக்கையைப் பதிவு செய்யுங்கள்.

நீங்கள் அடைய விரும்புவது, விரும்புகிற காலவரையறைக்கு கிடைத்தே தீரும். எப்படி என்று தெரியாது. அதைப்பற்றிக் கவலை இல்லை. ஆனால் கிடைத்தே தீரும் என்று சொல்லிச் சொல்லி மனதில் பதியவையுங்கள்.

ஆழ் மனச் சக்தி ஐம்புலன் களால் அறியப்பட முடியாதது. "நம்பிக்கை" என்னும் ஆற்றலையும் ஐம்புலன்களால் அறிய முடியாது. ஆனால் அவற்றைப் பயன்படுத்தி நல்ல விளைவுளைக் கொண்டு அறிய முடியும்.

மேலோட்டமாகப் பார்த்தால் மூடநம்பிக்கை போன்று தோற்றமளிக் கும். மூட நம்பிக்கை என்று நினைத்து ஏமாற வேண்டாம். திறந்த மனதோடு ஆராய்ந்து தெளிந்த சிந்தனை உடைய வர்கள் இவற்றை நிரூபித்திருக்கி றார்கள்.
அவர் தம் அனுபவங்களைத் திறந்த மனதுடன் ஆராயுங்கள். தெளிந்த சிந்தனை அமையும். வெற்றிக்கு இதுவும் ஒரு இரகசியம்

அவமானம்

அண்மையில் கவியரசர் கண்ணதாசன் பற்றி அவரது அருமை மகள் காந்தி கண்ணதாசன் ஒரு செய்தி சொன்னார். செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் பதினான்கு வயசுப் பையனாக சென்னை வந்தார் கவியரசு கண்ணதாசன். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா கடற்கரையில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார் கவிஞர்.

நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும். இரவு மண்ணாடி வரை நடந்து போக முடியாது. அதனால் கடற்கரையில் படுத்துக் கொள்ள அனுமதி கேட்ட அந்தப் பதினான்கு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது. “படு…படுக்கணும்னா நாலணா கொடு” என்று காவல் மிரட்டியது. நாலணாவுக்கு வழியின்றிக் கலங்கிய கண்களுடன் காந்தி சிலையில் இருந்து நடந்திருக்கிறார் கண்ணதாசன்.

அவர் வளர்ந்து கவியரசாகி “சுமைதாங்கி” என்ற சொந்தப்படம் எடுக்கிறார். கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார்.

நள்ளிரவு படப்பிடிப்பு. ஆனால் படத்தில் இரவு ஏழு மணி மாதிரி இருக்க கடற்கரை ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும். ஏழு கார்களை நிற்க வைத்து மாறிமாறி ஒன்றன்பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள். வீட்டில் இந்தப் படத்தைப் பார்த்துச் சொல்லியருக்கிறார். “இந்தக் கார்களை கவனித்தீர்களா? இவை எல்லாமே நம்முடைய கார்கள். வாழ முடியும் என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லை என்று போலீஸ் நடக்கவிட்டது… இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன். நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது” என்றாராம்.

எங்கு அவமதிக்கப்பட்டாரோ அங்கு கவியரசர் தம் வெற்றியை அரங்ககேற்றியிருக்கிறார். அவமானம் ஒரு மூலதனம்.

கவியரசு அவர்களின் மெய்சிலிர்க்கும் பாடல் வரிகளில் ஒரு சில…

“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை!

எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!!”

“போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்

தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்

ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்

எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன்; அஞ்சேன்”

ஆறு கட்டளைகள்

கவியரசு கண்ணதாசனின் ஆறு கட்டளைகள்

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்

உள்ளத்தில் உள்ளது அமைதி!

இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்

இறைவன் வகுத்த நியதி!


சொல்லுக்குச் செய்கை பொன்னாகும், வரும்

இன்பத்தில் துன்பம் பட்டாகும் – இந்த

இரண்டு கட்டளை அறிந்த மனதில்

எல்லா நன்மையும் உண்டாகும்!


உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்

உலகம் உன்னிடம் மயங்கும்! – நிலை

உயரும்போது பணிவு கொண்டால்

உயிர்கள் உன்னை வணங்கும்!


உண்மை என்பது அன்பாகும் – வெரும்

பணிவு என்பது பண்பாகும் – இந்த

நான்கு கட்டளைகள் அறிந்த மனதில்

எல்லா நன்மையும் உண்டாகும்!


ஆசை, கோபம், களவு கொள்பவன்

பேசத் தெரிந்த மிருகம்!

அன்பு, நன்றி, கருணை கொண்டவன்

மனித வடிவில் தெய்வம்!


இதில் – மிருகம் என்பது கள்ளமனம்

உயர் – தெய்வம் என்பது பிள்ளைமனம்

இந்த – ஆறு கட்டளை அறிந்தமனது

ஆண்டவன் வாழும் வெள்ளைமனம்!

தொழிலில் வெற்றி

சமீபத்தில் திருச்சியைச் சார்ந்த எமது வாசகர் ஒருவர் மின்னஞ்சலில் இவ்வாறு தெரிவித்திருந்தார். அவர் இரண்டு முறை தொழில் தொடங்கியதாகவும் அந்த இரண்டிலும் தோற்று போனதாகவும் தெரிவித்திருந்தார். நண்பருக்காகவும் மற்றும் அவரைப் போன்ற வளரும் இளம் தொழில் அதிபர்களுக்காகவும் இந்த தகவலை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

வெறுமே யோசித்துக்கொண்டே இருக்காதீர்கள்; வெறுமே ஆசைப்பட்டுக் கொண்டே இருக்காதீர்கள்; உண்மையிலேயே நீங்கள் தீவிரமாக இருந்தால், களத்தில் குதித்து அதைச் செய்யுங்கள்.
ஒரு முறை உள்ளே இறங்கிவிட்டால், அதன் அடி ஆழம் வரை புகுந்து புறப்படுங்கள்; அதை விட்டு வெளியேறுவதை ஒரு வாய்ப்பாக ஒருபோதும் பார்க்காதீர்கள்.
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்… உங்கள் முயற்சி தோற்றால், தோற்றது உங்கள் ஐடியாதானே தவிர, நீங்கள் அல்ல!!! (தாமஸ் ஆல்வா எடிசன் மின்சாரத்தை தேக்கி வைக்கும் ஸ்டோரேஜ் பாட்டரியைக் கண்டுபிடிக்கப் பத்துவருடம் உழைத்தார்! அவரும் அவரது உதவியாளர்களும் 17,000 வகைத் தாவரங்களைப் பரிசோதித்துப் பாகுபாடு செய்து பின்னர் ஒரே ஒரு மரத்திலிருந்து லேடக்ஸ் என்னும் பொருளை வடிக்கும் முறையைக் கண்டுபிடித்து வெற்றி அடைந்தார்கள்! ஒரு முறை வெற்றியடையும் பொருட்டு 17,000 முறை தோல்வியடைய தயாராக இருந்தார்).
பெரிய நிறுவனங்கள் பெரிய மனிதர்களால் உருவாக்கப்படுகின்றன. தனி மனிதன் தனியொரு ஆளாகச் சாதிக்க முடிவது மிகக் குறைவே!
சரியான குழுவை ஒன்றிணையுங்கள் (அளவுக்கதிகமான திறமைகள், மதிப்புகளைவிட, கோட்பாடுகளும் அணுகுமுறையும்தான் முக்கியம்).
திட்டங்களை தீட்டுங்கள்; ஆனால், சந்தையில் தொடர்ந்து நிகழும் நிகழ்வுகளுக்கு ஏற்ப, எல்லா வாய்ப்புகளுக்குமே தயாராக இருங்கள்.
பெரிதாக நினையுங்கள்; உங்களுடைய உயர்வை ஏற்கனவே அடைந்திருந்தால் எப்படி நடந்துகொள்வீர்களோ, அப்படி நடந்துகொள்ளுங்கள்.
வேலையையும் வாழ்க்கையையும் சமமாக வைத்துக்கொள்ளுங்கள்.

பெரிதாக குறிவை

‘பெரிதாக குறிவை’ என்பது ஆரம்பத்தில் மிகக் கடினமானதாகத் தோன்றும். ஏனென்றால் நம் வாழ்நாள் முழுவதும் இதற்கு மாறான முறையில் வேலை செய்தே பழகிவிட்டோம். இன்றைக்கு நம்மிடையே இருக்கும் நடைமுறை விதிகள் எல்லாம் ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’, ‘இருப்பதை விட்டு விட்டுப் பறப்பதைப் பிடிக்க நினைக்காதே’, ‘தேன்கூட்டில் கல் எறியாதே’ என்பன போன்றவை. இப்போது இருக்கும் இடத்திலேயே இருந்தால் போதும், மாற்றம் கூடாது என்பதையே வலியுறுத்துகின்றன.

நமக்கேற்ற புதிய சவால்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? மலை ஏறும் விளையாட்டு வீரன் டாட் ஸ்கின்னரைக் கேட்டால் சொல்வார். ‘ஒரு மலையைப் பார்த்தவுடன் உங்கள் மனதில் பயம் எழவில்லையா? அப்படியானால் ஏறுவதற்கு மிகவும் சுலபமான மலையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்டீர்கள். உண்மையான சவால் என்றால் அதை நினைக்கும்போதே மனத்தில் பிரமிப்பான பயம் ஏற்பட வேண்டும். உங்கள் தற்போதைய வலிமைக்கு உட்பட்ட மலையில் ஏறுவது என்றால் அதில் செலவிடும் நேரம், உழைப்பு எல்லாமே வீண். அது மட்டுமல்ல, பெரிய சாதனை ஒன்றைச் செய்யும் வாய்ப்பையும் தவறவிடுகிறீர்கள்!

மற்றவர்களெல்லாம் முடியாத காரியம் என்று கைவிட்டவற்றை எடுத்துக்கொண்டு மோதிப் பார்த்துவிடுகிற மனம்தான் இதற்கு அடிப்படைத் தேவை. சூரத் நகரத்தில் பிளேக் நோய் பரவிவிட்டது. இப்போது ஊரையே சுத்தப்படுத்தியாக வேண்டும். அதிகாரிகள் எல்லோரும் இதில் கை வைக்கப் பயந்தார்கள். பதவிக்கே ஆபத்து வரவழைக்கக் கூடிய விஷயம் இது. அந்த நேரத்தில் ஒரே ஒரு அதிகாரி மட்டும் ‘நான் செய்கிறேன்’ என்று முன்வந்தார். அவர்தான் எஸ். ஆர். ராவ். இருபதே மாதங்களில் வெற்றிகரமாக வேலையைச் செய்து முடித்தார். இன்றைக்கு பல வருடம் கடந்துவிட்டது. இன்றும் கூட சூரத் மக்களுக்கு அவர்தான் சூப்பர் ஸ்டார்!

இங்கு எஸ். ஆர். ராவ் மட்டுமல்ல இன்னும் பலர் பெரிதாக குறி வைத்து அவற்றை சாதித்து காட்டுகிறார்கள்.

வரப்ரசாத் ரெட்டி: இந்தியாவிலிருந்து மஞ்சல் காமாலையை (ஹெபடைடிஸ்-பி) ஒழித்துக்கட்டப் போகிறேன் என்று புறப்பட்டார்.
ஜி. வெங்கடசுவாமி: உலகம் முழுவதில் பார்வைக் குறைபாடு உடையவர்கள் அனைவருக்கும் பார்வை தரப்போகிறேன் என்று கூறியதுதான் இன்று அரவிந்த் கண் மருத்துவமனையாக உருவெடுத்துள்ளது.
டைட்டான் கைக் கடிகார நிறுவனத்தின் செர்க்லெஸ் தேசாய் உலகிலேயே மெலிய நீர் புகாத கைக் கடிகாரம் தயாரிக்க முனைந்தபோது அவருடைய வல்லுநர்களே ‘அது எங்களால் இயலாத காரியம்’ என்றுதான் சொன்னார்கள். இது ‘ஸ்விட்சர்லாந்துகாரர்களாலேயே முடியாத விஷயம். நம்மால் எப்படி முடியும்?’ என்றார்கள். ஆனால் தேசாய் விடவில்லை; அவருடைய அணியும் சளைக்க வில்லை. கடைசியில் அதே எஞ்சினியர்கள், ‘அட! நம்மிடமும் இந்தத் திறமை ஒளிந்திருக்கிறதே!” என்று கண்டுபிடித்தார்கள். நம்மால் என்ன சாதிக்க முடியும் எனபதற்கு அளவுகோலாக, நாம் இதுவரை சாதித்தவற்றையே வைத்துக்கொள்வது கூடாது, அப்போது ஓர் எல்லைக்கு மேல் வளராமல் நின்றுவிடுவோம்.
மாற்றுப்பாதையில் மனம் சிந்திக்க ஆரம்பித்தவுடன் இலக்குகள் மட்டும் பெரிதாவதில்லை; மனிதர்களையும் ஒரேடியாக மாற்றிவிடுகிறது. பழகிய பாதையை மாற்றியாக வேண்டும் என்ற சவால் தோன்றியவுடன், அதைச் சாதிப்பதற்குத் தேவையான திறமைகளும் தானாகவே வளர்ந்துவிடுகின்றன.

தோல்விக்கு ஆயிரம் வழிகள். வெற்றிக்கு மிகக் குறைந்த வழிகள்தான்.

வெற்றிகளில் இருந்து கற்றுக்கொள்வது மனத்தையும் உற்சாகப்படுத்தும்.

வெற்றிகளும் விதிவிலக்குகளும் பல சாத்தியங்களைத் திறந்து காட்டுகின்றன.

ஒப்பீடு

ஒருவர் இன்னொருவருடன் ஒப்பீடு செய்வது உயர்வைத் தராது. இதோ.. ஓஷோ சொல்வதைச் செவிமடுப்போம். துறவி ஒருவர் என்னுடன் உரையாடியபோது, ஒப்பீடு ஒரு வகையில் நல்லது என்றார். மகிழ்ச்சி இல்லாத மனிதர்களைக் கண்டுகொள்வதே மகிழ்ச்சியின் இரகசியம் ஆகும் என்று விளக்கினார். ‘முடமானவனைப் பார்த்து, நடப்பவன் மகிழலாம். விழியற்றவனைப் பார்த்து, பார்க்க முடிந்தவன் மகிழ்ச்சி கொள்ளலாம். ஏழையைப் பார்த்து, ஓரளவு வசதியுள்ளவன் மனநிறைவு அடையலாம்’ என்று சொல்லிக் கொண்டே போனவரை நான் தடுத்து நிறுத்தினேன். ‘ஓர் எளிய உண்மையை நீங்கள் மறந்துவிட்டீர்கள். ஒருவன் இன்னொருவனுடன் ஒப்பீடு செய்யத் தொடங்கிவிட்டால் அவனைவிட அதிர்ஷ்டக் குறைவானவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கமாட்டான். அவனைவிட அழகு, அறிவு ஆகியவை அதிகம் உள்ளவனுடனும் வலிமையுள்ளவனுடனும் தன்னை ஒப்பிட்டுப் பார்த்து துயரமடைவான். நீங்கள் அவனுக்கு மகிழ்ச்சியின் ரகசியத்தைச் சொல்லவில்லை. துயரத்தின் ரகசியத்தை சொல்லிக் கொடுக்கிறீர்கள்’ என்றேன். யாரோடும் ஒப்பிட்டுப் பார்க்காதே. ஒப்பிடுவது போட்டி மனப்பான்மையை உருவாக்கும். நீ ஒரு முறை போட்டி போடத் தொடங்கிவிட்டால், அதற்கு முடிவே இல்லை!!!

ஓஷோவின் இந்த வார்த்தைகள், நம்முன் ஓயாமல் ஒலிக்கட்டும். மனத் திருப்திக்கான வழிமுறைகள் மனிதனுக்குள் இல்லாவிட்டால் மகிழ்ச்சிக்கான வாசற் கதவுகள் ஒருபோதும் திறக்காது. தொடுவானத்துக்கு அப்பால் மாயத் தோற்றமிடும் ரோஜாக்களின் கூட்டத்தைக் கனவில் கண்டு மகிழ்வதைவிட, நம் வீட்டு ஜன்னலுக்கு வெளியில் மலர்ந்து சிரிக்கும் ரோஜாப்பூவின் ஸ்பரிசத்தில் பரவசம் கொள்வதே வாழ்வின் புத்திசாலித்தனம்.

அடுத்தவருடன் நம்மை ஒப்பிட்டு அமைதி இழக்காமல், நம் இயல்புகளுடன் நாம் மகிழ்ச்சியாக இருப்போம். வாழ்க்கை, நாம் நினைப்பதைவிட குறைவான காலம் கொண்டது.

உன்னிடம் இருப்பதோடு திருப்தி அடைவாயாக. ஒருவன் எல்லாவற்றிலும் முதல்வனாக முடியாது.

பிரச்சனையைத் திருப்பிப் போடு

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அல்லது ஒவ்வொரு நிர்வாகத்திலும் மிகப்பெரிய திருப்புமுனைகள் நடந்திருக்கும். பிரம்புடன் உள்ளே நுழைந்து பார்த்தால் மூச்சு அடைத்துப் போய்விடுவோம் அந்த அளவுக்கு எளிமையாக இருக்கும்.

சில சமயம், பிரச்சனைகளை வேறொரு கோணத்தில் அணுகினாலே போதும்; பிரச்சனை சட்டென்று தீர்ந்துவிடும். ஆப்பிள் நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் ஜான் ஸ்கல்லி. அவர் ‘நீயூட்டன்’ என்ற பெயரில் உள்ளங்கை அளவு கணிப்பொறி ஒன்று (PDA) தயாரித்தார். கீ போர்டில் டைப் செய்யத் தேவையில்லாமல், நம் கையெழுத்தையே அது படித்துப் புரிந்துகொள்ளும் என்று சொல்லப்பட்டது. கடைசியில் நீயூட்டனுக்கு என்ன ஆயிற்று? பரிதாபத் தோல்வி! அந்த இயந்திரத்தால் மனிதக் கையெழுத்தை சரியாகப் படித்துப் புரிந்து கொள்ள முடியவில்லை. அன்றைய தொழில்நுட்பம் அவ்வளவுதான். இதை நம்பி 500 மில்லியன் டாலர் செலவழித்து முடிந்தபிறகு இந்தத் தோல்வி.

இதே சமயத்தில் வேறு பல நிறுவனங்களும் ‘கையால் எழுதியதைப் படிக்கும் கணிப்பொறி’ என்று தயாரிக்க முயன்றாலும், அவற்றுக்கும் தோல்விதான். மொத்தத்தில் பில்லியன் டாலர், சாக்கடையில் போய்விட்டது. இப்படித் தோல்வி அடைந்த நிறுவனங்களில் ஒன்றுதான் ‘பாம்கம்ப்யூட்டிங்’ அதன் தலைவர் ஜெஃப் ஹாக்கின்ஸ். அவர் யோசித்துப் பார்த்துவிட்டு, அடிப்படைக் கேள்வியையே தலைகீழாகப் புரட்டிப் போட்டார். ‘இதுவரை எல்லோரும் சிக்கலான மென்பொருள் எழுதி எழுதி, கணிப்பொறி எப்படிப்பட்ட எழுத்தையும் புரிந்துகொள்ளுமாறு முயற்சி செய்தார்கள்’. இதற்கு நேர்மாறாக, கணிப்பொறியால் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் நாம் எழுத முயன்றால் என்ன?

பிறகு அவர்கள் கண்டுபிடித்தது ‘க்ராஃபிட்டி’ என்ற ஒரு வகை எழுத்து வடிவம். பேனாவை எடுக்காமல் ஒரே வீச்சில் ஒவ்வொரு எழுத்தையும் எழுதும் முறை அது. இதை நாம் எழுதக் கற்றுக் கொள்வதும் சுலபம்; படிப்பதும் கம்ப்யூட்டருக்கு எளிது. அப்படிப் பிறந்ததுதான் பாம்பைலட்!

பாம் பைலர் 1997ல் விற்பனைக்கு வந்தது. 2000க்குள் வருடத்துக்கு 1 பில்லியன் டாலருக்கு மேல் வருமானம் ஈட்டித் தந்தது. பாம்பைலட்டை உருவாக்க ஆன செலவு? வெறும் 3 மில்லியன் டாலர்! இது எப்படி சாத்தியமாயிற்று? எல்லாம் ‘பிரச்சனையைத் திருப்பிப்போடு’ என்ற மந்திரம்தான்.

புதிய சிந்தனை

வெற்றிகரமான புதிய சிந்தனைகளை எழவிடாமல் தடுப்பது நம்முடைய அறிவு அல்ல; உணர்ச்சிகள் தான். வரலாறு, அனுபவம் போன்றவை நமக்குப் பல உணர்ச்சி பூர்வமான தடைகள் போட்டு வைத்திருக்கின்றன. அந்தத் தடையை மீறிச் சிந்திக்கும் போதுதான் நம் பார்வை வேறு திசையில் போகும். அங்கேதான் புதுமையும் பிறக்கும்.

புதிய சிந்தனைகளைத் தடுக்கும் அணைகள் என்று சொல்லத் தக்கவை மூன்று உண்டு:

நாம் செய்ய நினைப்பதற்கு முன்மாதிரிகள் ஏதாவது உண்டா என்று தேடுவது.
இதைச் செய்வது ஏன் முடியாது என்று சாக்குப் போக்குகள் எழும்போது அவற்றை ஒப்புக்கொண்டு அங்கேயே நிறுத்திவிடுவது.
ஏற்கனவே தேடிச் சலித்த இடங்களிலேயே திரும்பத் திரும்பப் புதிய ஐடியாக்களைத் தேடுவது.
முன் மாதிரிகளைத் தேடும்படலம் ஆரம்பிக்கும் போது கேட்கப்படும் முதல் கேள்வி, ‘இதற்கு முன் யாராவது இப்படிச் செய்திருக்கிறார்களா?’ என்பதுதான். இதுவரை செய்யப்படாவிட்டால் இனியும் அது முடியாத காரியம். முடியக்கூடியதாக இருந்தால், யாராவது இதற்குள் செய்திருப்பார்களே!!! முன் மாதிரிகளைத் தேடுவது என்ற அணை, நம்முடைய அடிமை மனப்பான்மையிலிருந்து எழுவது.

டாக்டர். துவாரகாநாத், டைட்டன் நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர்; நுண்பொறியியல் துறைத்தலைவர்; இதற்கு முன் அவர் எச்.எம்.டி நிறுவனத்தில் வேலை செய்த அனுபவத்தைப் பற்றிச் சொல்வார்: ஏதாவது புதுமையாகவோ, வித்தியாசமாகவோ ஒரு ஐடியாவை எடுத்துக்கொண்டு தன் மேலதிகாரிகளிடம் பேசுவார். அந்த அதிகாரிகள் ஜப்பானில் சிட்டிஸன் நிறுவனத்தில் 18 மாதங்கள் வேலை செய்துவிட்டு வந்திருப்பவர்கள். ‘ஜப்பானியர்களாலேயே ஒன்றைச் செய்ய முடியவில்லை என்றால், அது வேறு யாராலும் முடியாது. எனவே இந்த யோசனை சரிவராது’ என்று நிராகரித்து விடுவார்கள்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு, கடைசியில் துவாரகாநாத் அதிகாரிகளுக்கு தெரியாமல் நேரடியாக சிட்டிஸனை அணுகினார். அவர் சொன்னதைக் கேட்ட ஜப்பானியர்கள் ‘அருமையான ஐடியா’ என்று துள்ளக் குதித்தார்கள். ‘இந்த ப்ராஜெக்டில் உங்களுடன் நாங்களும் சேர்ந்து கொள்கிறோம்’ என்று முன் வந்தார்கள். எனவே, முதல் அணையை உடைப்பதற்கு தேவை, ஒரு முன்னோடியின் மனநிலை. ‘முடிந்தால் இதற்கு ஒரு வழி கண்டுபிடிப்போம். இல்லாவிட்டால் நாமே ஒரு வழியை உருவாக்குவோம்’ என்ற மனநிலை.

புதிய சிந்தனை:

செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை. செய்வதற்கு ஒரு ஐடியா இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்! அதை கண்டுபிடிக்கும் வரை அவருக்குத் தூக்கம் வராது.

வெற்றிக்கான இரண்டாவது மனநிலை, பாசிட்டிவ் ஆகச் சிந்திப்பது. ‘ஏன் முடியாது?’ என்று பேசிக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, ‘எப்படியெல்லாம் செய்ய முடியும்?’ என்று யோசிப்பது.

புதிதாய் சிந்திப்போம்! புதிய சகாப்தம் படைப்போம்!!