Thursday, February 2, 2017

#ஜோதிடத்தை #நம்பலாமா?


♥🌠 ஜோதிடத்தை மட்டுமே நம்பிய காலம் உண்டு, எனினும் ஜோதிடம் உண்மையா? ஜோதிடத்தை நம்பலாமா? என்ற கேள்வி இங்கே எழுந்ததிற்கான காரணம் ஜோதிடம் என்கிற விஷயத்தை இங்கு பலர் தவறாக பயன்படுத்துவதால் மட்டுமே. பல விஷயங்களை தவறாக பயன்படுத்துகிறார்கள், கெட்டு போகாத விஷயங்கள் உலகத்தில் ஏதும் இல்லை. அவ்வாறு சிலர் தவறாக பயன்படுத்துவதால் ஜோதிடம் தவறானது அல்ல, மிக சரியானது, மிக தௌpவானது.
♥🌠 கடவுளை நம்பலாமா என்ற கேள்விக்கு உங்கள் மனது என்ன பதிலை தீர்மானமாக அளிக்கிறதோ, அந்த பதிலை இந்த கேள்விக்கான பதிலாக வைத்து கொள்ளுங்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே எத்தனை கிரகங்கள் உள்ளது என்றும், அவை எப்படி சுழல்கிறது என்றும் எழுத்தில் வடித்துள்ளனர் நம் முன்னோர்கள். இன்றும் நாம் நமது பஞ்சாங்கங்களின் மூலம் கிரகணங்களை அறிந்துகொள்ள கூடிய அளவுக்கு ஒரு அறிவியலை தரும் மெய்யறிவு பெற்ற நமது முன்னோர்கள்.
♥🌠 இல்லாத ஒரு விஷயத்திற்காக இத்தனை கோவில்களும் இத்தனை நியமங்களும் செய்திருக்க மாட்டார்கள். ஜோதிடம் நம் முன்னோர்கள் நமக்கு அருளிய வழிகாட்டி. செயல்களில் எவை எல்லாம் நல்லவைகள்... எவை எல்லாம் பாவங்கள்.. அதன் விளைவுகள் என்ன என்பதை ஜோதிட சாஸ்திரத்தை விடவும் மிகவும் தீர்க்கமாக, தௌpவாக நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். நம் செயல்களின் விளைவுதான் நம் வாழ்க்கை. நாம் அனுபவிக்கும் இன்பங்களும், துன்பங்களும் சரியாக ஜோதிடத்தை பயன்படுத்தியறிந்து நல்ல செயல்களை அதிகபடுத்தி, இறைவனின் அன்பை பெற்றால் நாம் நமக்கு விதிக்கப்பட்ட இன்ப, துன்பங்களை தாங்கும் வலிமையை பெறலாம்.
♥🌠 ஒருவன் வெற்றியை தழுவ காரணமாய் இருப்பவை எவை, அவனது கடின உழைப்பே, அவ்வாறு கடினமாய் உழைப்பதற்கு காரணமாய் இருப்பது அவன் மனதின் உற்சாகமே. மனதின் உற்சாகத்தை தூண்டுவது ஒரு விதமான நம்பிக்கையே. அப்படி பட்ட நம்பிக்கையை தர கூடியது ஜோதிடம்.

No comments:

Post a Comment