Saturday, January 19, 2013

“நல்ல நண்பர்கள்” – இறைவன் கொடுத்த வரம்


உன் நண்பன் பற்றிசொல் உன்னை பற்றி சொல்கிறேன். நம்முடைய குணநலன்கள், நடத்தை போன்ற அம்சங்களை நிர்ணயிக்க முக்கிய காரணம் .நல்ல மனைவியை போல நல்ல நண்பன் கிடைப்பதும் இறைவன் கொடுத்த வரம்தான். தாய், தந்தையை விட நன் வாழ்வில் அதிக நேரம் நம்முடன் இருப்பவர்கள் நண்பர்களே!.

இந்த நவீன யுகத்தில் எல்லாமே விரைவாக நடக்கின்றன ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்க்கையை ஐம்பத்து ஆண்டுகள் கழித்து பார்த்தால் இதுவரை என்ன பெற்றிருக்கிறோம் என ஆராய்ந்தால் நண்பர்கள் தான் நினைவுக்கு வருவர் .

உலகில் பெற்றோர், காதலி, உறவினர் ஏன் கல்வி அறிவு கூட இல்லாமல் வாழமுடியும் அனால் நண்பர்கள் இல்லாதவர் யாருமே இருக்கமுடியாது.

தினமும் நாளிதழ்களில் பார்க்கும் பொது பிரபலங்கள் இந்த நிலைக்கு வர காரணமாக நண்பர்களை குறிப்பிடுபவர்கள் .

அதேபோல திருட்டு , கொலை போன்ற பாதக செயல்களில் தனது நண்பர்களுடன் ஈடுபடுவதை பார்க்கின்றோம்.

ஆகவே நட்பு தான் நம்மை நிர்ணயிக்கின்றது பெரும்பாலான நேரங்களில். நண்பனை பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டே போகலாம் .

நண்பர்களை பற்றி :கண்ணதாசன்

அர்த்தமுள்ள இந்து மதத்தில் கண்ணதாசன் இன்றைய நண்பர்கள் பற்றி எளிமையாக சொல்லியிருப்பார், அதாவது பனைமரம், தென்னைமரம், வாழைமரம் .

பனைமரம் :

தானாக முளைத்து, தனக்கு கிடைத்த நீரை குடித்து தன்உடம்பையும், ஓலையையும் மற்றும் நுங்கையும் உலகத்திற்கு தருகிறது நம்மிடம் எந்த உதவியும் கேட்காமல் உதவுபவன் பனைமரம் போன்றநண்பன்.

தென்னைமரம்:

தென்னை நம்மால் நடப்பட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்தால் பலன் தருகிறது.
அதுபோல நிமிடம் உதவி பெற்று நண்பனாக இருப்பவன் தென்னை மரத்துக்கு இணையானவன்.

வாழைமரம் :

தினமும் தண்ணீர் ஊற்றினால் தான் பலன்தரும். அதுபோல நம்மிடம் தினமும் உதவி பெற்று வாழ்பவன் வாழைமரம் போன்றவன். இந்த மூவரில் பனைமரம் போன்றவனை தேர்ந்தெடுக்க வேண்டும் இது ஒரு பாடலின் வரிகள் என்கிறார் கண்ணதாசன்.
நண்பர்களில் நூற்றுக்கு ஒருவர், இருவர் தான் அப்படி கிடைத்தனர் . மற்றவர்கள் பணம் பறிக்க என்னிடம் இருந்தனர் இப்போது அவர்கள் கோழி மேய்க்கின்றனர் என கண்ணதாசன் குறிப்பிடுகிறார்.
நமது வாழ்விலும் இம்மூன்று வகையானவர்களை பார்க்கின்றோம்.

முன்னோர் காலத்தில் நட்பு:

பாரத கதையில் தான் செஞ்சோற்று கடனை அடைக்க சகோதரர்களுக்கெதிராக நண்பன் தீய செயல் புரிபவனாக இருந்தாலும் இறுதிவரை அவனுடனிருந்து உயிர் விட்ட கர்ணன் .

பார்க்காமல் நட்பு:

சங்க காலத்தில் கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு இதைவிட வேறு சரியான உதாரணம் இல்லை .

கோப்பெருஞ்சோழன் பற்றி கேள்விப்பட்டு பிசிராந்தையர் என்ற புலவர் அவன்மீது நட்பு கொண்டார் சோழ மன்னனும் புலவர் பற்றி அறிந்து இருவரும் பார்க்காமலே நட்பு கொண்டனர் . சில ஆண்டுகள் கழித்து சோழன் வடக்கிருக்க ( சாப்பிடாமல் இறைவனை நினைத்து உயிர் துறப்பது ) முடிவு செய்தான்.

இதனை அறிந்து அவனுடன் மேலும் சிலர் வடகிருக்க முடிவு செய்தனர் . சோழன் புலவருக்காக இடம் அங்கு ஒதுக்கினான் அது போல புலவரும் அங்கு வந்து சேர்ந்தார். தமிழர்களின் வாழ்வில் நட்பு என்பது வாழ்வில் கலந்துவிட்ட ஒன்று இப்போதுபோல நண்பர்கள் தினம் என்று தனியாக இல்லை.

நமக்கு நல்ல நண்பர்களை கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்லி , நம் நண்பர்களுடன் நேரிலோ தொலை பேசியிலோ நம் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

சில கருத்து வேறுபாடுகளால் நம்மை விட்டு பிரிந்து போன நண்பர்களுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு, அவற்றை மறந்துவிட்டு சிறிய நினைவு பரிசு கொடுத்து அவர்களுடன் மீண்டும் நட்பை புதுப்பிக்கும் நாளாக கொண்டாடலாம் .

எல்லாம் சரி ஆண் பெண் நட்பு பற்றி சொல்லவே இல்லையே:
நட்பிற்கு ஆண் பெண் வேறுபாடு கிடையாது, இன்றைய சூழ்நிலை, சமூகம் போன்றவற்றால் ஆண் பெண் நட்பு சற்று கடினமாக்கப்பட்டுள்ளது.

இதை தான் வள்ளுவன் தன்னுடைய 786 வது குறளில் இவ்வாறு தெரிவிக்கிறார்..
====================================================================

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து 
அகநக நட்பது நட்பு.
( பொருள் :முகம் மட்டும் மலரும்படியாக நட்புச் செய்வது நட்பு அன்று; நெஞ்சமும் மலரும்படியாக உள்ளன்புகொண்டு நட்புச் செய்வதே நட்பு ஆகும். )
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.
( பொருள் :மீண்டும் மீண்டும் ஆராயாமல் கொள்கிற நட்பு, கடைசியில் ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்.

====================================================================
Simply, I will describe, Good FRIENDS are hard to find, harder to leave, and impossible to forget.
நன்றி : முகநூல் தன்னம்பிக்கை பக்கம்.

No comments:

Post a Comment