Sunday, January 20, 2013

மனதைப் பழக்கினால் மகத்தான வெற்றி!!



‘உன்னோடு’ இருபதற்கும் ‘உன் நினைவோடு ‘ இருபதற்கும் சிறு வித்தியாசம் தான்…!
உன்னோடு இருபது ” வரம் ” உன் நினைவோடு இருபது ” தவம்”

நீ பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும்…!
ஆனால் 
நீ பேசாத மௌனம் உன்னை நேசிப்போருக்கு மட்டுமே புரியும்…! .

“உயிரோடு இருக்க”  “ஒரு பிறவி”  “போதும்”  “ஆனால் உன் நட்போடு வாழ”  “பல ஜென்மம் வேண்டும்”

” சாதிக்க நினைப்பவன் மட்டுமே அதிகமாக சோதிக்க படுகிறான்..!
பிறரை அதிகமாக நேசிப்பவன் மட்டுமே அதிகமாக காய படுகிறான் …!”


” இல்லாத ஒன்றை தேடி அலையும் நீ, எப்போதும் இருக்கும் என்னை ஏன் தொலைத்து விடுகிறாய்”..!
இப்படிக்கு.. உனக்கே தெரியாமல் உனக்குள் இருக்கும் உன் ‘ சந்தோஷம்’

விரும்புவதை எளிதாக அடைய என்ன தேவை?


நாம் விரும்புவதை அடைய ஒரு எளிய வழி உள்ளது.

அந்த வழி நமது மகத்தான ஆழ்மன சக்தியின் மூலமாக விரும்புவதை அடைய துணை புரிகின்றது.

அந்த வழி என்ன என்று கேட்கிறீர்களா? நிற்க.

அது தான் சுய உருவக மாற்றம். (இப்போது உட்காரலாம்!)

நாம் இப்போது உள்ள நிலைக்கு காரணம் நாம் நம்பிக் கொண்டிருக்கும், நாம் ஏற்றுக் கொண்டிருக்கும் நமது சுய உருவகம் தான்.

ஆகவே இந்த தற்போதைய சுய உருவகத்தை வைத்துக் கொண்டு நமது குறிக்கோளை விரும்புவதை அடைய முடியாது.

ஏனென்றால் நமது தற்போதைய அதிர்வுக்கும், நமது குறிக்கோளுக்கான அதிர்வுக்கும் இடைவெளி உள்ளது, தொலைவு உள்ளது.

அப்படியென்றால் விரும்புவதை அடைபவர்களும், குறிக்கோளை தொடுபவர்களும் இது போல் எங்காவது மூலையில் உட்கார்ந்து கொண்டு சுய உருவகத்தை மாற்றி கொண்டு தான் சாதிக்கிறார்களா என யாராவது நண்பர்கள் பின்னூட்டத்தில் கேட்கலாம்.

விஷயமென்னவென்றால் நமது குறிக்கோளை அடைய நாம் எடுக்கும் செயல்பாடுகள் தன்னிச்சையாகவே நமது சுய உருவகத்தை மாற்றி விடுகிறது.

அதற்கு பதிலாக சுய உருவகத்தை முதலில் மாற்ற முனைந்தால் அதுவே நம்மை நம் குறிக்கோளை நோக்கி சரியான வழியில் வேகமாக செயல்பட வைக்கும்.
தகுந்த சூழ்நிலைகளையும், மனிதர்களையும் நம்மிடம் சேர்க்கும்.

நம் லட்சியத்தை எளிதாக அடைய வழி வகுக்கும்!


மனதைப் பழக்கினால் மகத்தான வெற்றி!!

தலைப்பைப் படித்தவுடன் யாருக்காவது தோன்றலாம்:
‘ஆமாம்..அவனவன் அலைஞ்சு திரிஞ்சு உழைச்சு முயற்சி பண்ணினாலே ஜெயிக்கறதுக்கு எவ்வளவு பாடு பட வேண்டியிருக்கு..இவரு மைனர் மாதிரி உக்காந்துட்டு மனசைப் பழக்குவாராம்..அப்படியே வெற்றியெல்லாம் வந்து குவியுமாம்..போய் பொளப்பப் பாருங்கய்யா..’
கண்டிப்பாக உழைப்புக்கு வெற்றியுண்டு தான்.
ஆனால் நாம் நமது மனதைப் பழக்கும் போது நமது எண்ண ஆற்றல் நம்மை உந்தி சரியான திசையில், சரியான முறையில் செயல்பட வைத்து வெற்றியை தேடித் தரும் என்பதே உண்மை.
சரி, நமது குறிக்கோளை அடைய மனதைப் பழக்க என்ன செய்ய வேண்டும்?
மிகவும் எளிது. இரண்டு விஷயங்களை செய்தால் போதும்.
1. நமக்கு எதை விரும்புகிறோமோ, எதை சாதிக்க நினைக்கிறோமோ அதை மட்டும் நினைக்க வேண்டும்.
2. எது வேண்டாமோ அதை நினைக்க கூடாது.
நமது இப்போது உள்ள நிலையை பொருட்படுத்தாமல் நமது குறிக்கோளுக்கு ஒத்த எண்ணங்களை நினைக்க வேண்டும்.
இதன் மூலம் நமது மனம் நமது செயல் திறனை கூட்டி, நம்மை குறிக்கோளை நோக்கி சரியான திசையில் இட்டு செல்லும்.
நாம் வெற்றி பெற நமக்கு சரியான சிந்தனைகளை அவ்வப்போது சொல்லும்.
மேலும் சரியான சூழ்நிலைகளையும், மனிதர்களையும் கொண்டு வந்து சேர்க்கும்.
நாம் என்ன எண்ணுகிறோமோ அதைத் தான் பெறுவோம்.

No comments:

Post a Comment