Thursday, December 11, 2014

நம்மைச் சுற்றி மாற்றங்கள்

நம்மைச் சுற்றி மாற்றங்கள்

Resource Info

Basic Information

ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு தருணத்திலும் நம்மைச் சுற்றி மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் மாற்றங்களுக்கு உட்பட்டவை. ஆனால் ஏன், எப்படி இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன? அவைகள் எல்லாம் ஒரே மாதிரியான அமைப்பைபின்பற்றுகின்றனவா? அல்லது வெவ்வேறு விஷயங்கள் வெவ்வேறாக மாற்றம் பெறுகின்றனவா? வெவ்வேறு விதமான மாற்றங்கள் என்னென்ன? இந்தக் கட்டுரை இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்க முயற்சிக்கிறது.
Duration: 
03 hours 00 mins
முன்னுரை: 
இந்த உலகத்தில் மற்ற எல்லாவற்றையும் விட மாற்றம் ஒன்றுதான் நிலையானது. நமது அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றி நிகழும் பல மாற்றங்களை கவனித்துக் கொண்டு இருக்கிறோம் – இரவு பகலாவதும், நமது சூடான காலை உணவு நாம் சாப்பிட்டு முடிப்பதற்குள் குளிர்ந்து போவதும், காலையில் புத்தம் புதிதாக இருக்கும் மலர்கள் மாலை நேரத்தில் வாடிப் போவதும் உடனடியாக நிகழக்கூடிய மாற்றங்கள். இது போல சில மாற்றங்கள் காலப்போக்கில் ஏற்படுவதுமுண்டு.  ஆக எங்கும் வியாபித்து இருக்கிற இதை எப்படி கற்றுக் கொடுப்பது?  நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்களை எப்படி விறுவிறுப்பாக கற்றுக் கொடுப்பது என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். உண்மையில் இந்த அணுகுமுறை பல பரிமாணத்தில் குழந்தைகள் கற்றுக்கொள்ளத் தூண்டுதலாக அமையும்
Objective: 
குறிக்கோள்களும், நோக்கங்களும்
  • மெதுவாக மாறுவது, வேகமாக மாறுவது, தலைகீழாக மாறுவது, திரும்பவும் மாறமுடியாத அளவிற்கு மாறுவது, காலப் போக்கில் மாறுவது, விரும்பக்கூடிய மாற்றம் மற்றும் விருப்பமில்லாத மாற்றம் போன்ற பல சொற்றொடர்களின் பொருளை அறிந்து கொள்வது
  • ஒரு வகையான மாற்றத்தை இன்னொரு வகையான மாற்றத்திலிருந்து வித்தியாசப்படுத்துவது.
  • கலந்துரையாடப்படும் பலவிதமான மாற்றங்களுக்கு உதாரணங்கள் கொடுப்பது
Activity Steps: 
நம்மைச் சுற்றிய மாற்றங்கள்
நம்மைச் சூழ்ந்துள்ள மாற்றங்களை ஆர்வத்துடன் கற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. முக்கியமான காரணம் என்னவெனில் மாற்றம் என்பது நம்மைச் சுற்றியே உள்ளது. குழந்தைகளும் இந்த மாற்றங்கள் நிகழ்வதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களால் அறிவியல் கோட்பாடுகளை மாற்றத்திற்கு செயல்முறைபடுத்த முடியவில்லை என்றாலும், மாற்றம் என்றால் என்ன என்பது அவர்களுக்குத் தெரியும்.
ஆகையால், அவர்களுக்குத் தெரிந்ததிலிருந்து ஏன் நாம் கற்பிக்க ஆரம்பிக்கக்கூடாது? குழந்தைகள் அறிந்த மாற்றங்கள் பற்றி அவர்களிடமே கேட்பதிலிருந்து இதைப் பற்றிய கலந்துரையாடலை நீங்கள் துவங்கலாம். 
மொட்டு மலர் ஆவதையோ அல்லது இரவு பகல் ஆவதையோ அவர்கள் பார்த்திருக்கிறார்களா?
தர்க்க ரீதியில் தூண்டும் சிந்தனை மாதிரிவடிவம் - Inductive Thinking Model -   மூன்று செயல்திட்டங்களைக் கொண்டிருக்கிறது – கருத்து உருவாக்கம்,  புள்ளிவிவர விளக்கம் மற்றும் கோட்பாடுகளை செயல்படுத்துவது ஆகியவை இம்மூன்று செயல்திட்டங்களாகும்.
அதன்படி, மாணவர்களுக்கு முன்பே அறிந்துள்ள, அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றி நிகழும் பல்வேறு மாற்றங்களிலிருந்து ஆரம்பிக்கலாம்.
ஆசிரியருக்கான குறிப்பு - வயதான மற்றும் இளைஞர்களின் படங்களைக் குழந்தைகளுக்குக் காண்பித்து, அவர்களை அதைப் பற்றி வர்ணிக்கச் சொல்லவும். சில ஐஸ் கூம்புகளை குழந்தைகளின் பார்வைக்கு வைத்து, அதை உன்னிப்பாகாக கவனிக்கச் சொல்லவும். ஒரு மாணவனை ஒரு ரப்பர் துண்டுப் பட்டையை இழுக்கச் செய்து, அந்தப் பயிற்சியில் ரப்பர் துண்டு என்ன ஆகிறது என்று ஆசிரியர் கேட்க வேண்டும்.
குழந்தைகள் தங்களது கவனிப்பை முடித்தவுடன் நீங்கள் “நம்மைச் சுற்றிய மாற்றங்கள்” என்கிற தலைப்பைப் பற்றி விளக்க ஆரம்பிக்கலாம். மாணவர்களிடம் அவர்கள் பார்த்த 5 அல்லது 6 மாற்றங்களை பட்டியலிடும் படி கூறி  இந்த விஷயத்தை மேலும் எடுத்துச் செல்லலாம். அதோடு மாணவர்கள் கூறாத சில மாற்றங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மாற்றங்களின் பட்டியல்
  • குழந்தை பெரியவனாக வளர்வது.
  • செடி மரமாகவது
  • விதை செடியாவது
  • காகிதத்தை எரிப்பது.
  • காலணி பழையதாய் மாறுவது.
  • சீருடை பழையதாய் மாறுவது.
  • பென்சில் குட்டையாக மாறுவது.
  • தண்ணீர் கொதிப்பது
  • இரவு பகலாவது
  • சூடு குளிராவது
  • இரும்பு துருப்பிடிப்பது
  • மாங்காய் பழுப்பது
  • நில அதிர்வுகள்
  • விபத்துக்கள்
  • கோடை காலம்
  • சுவர் வண்ணங்கள் மங்கிப்போவது.
  • பால் தயிராவது
  • ரப்பர் பேண்ட் நீள்வது.
  • ஐஸ் கட்டி கரைந்து போவது.
இப்பொழுது குழந்தைகளிடம் இந்த யோசனைகளை பல தலைப்புகளின் கீழ் பட்டியிலிடச் சொல்லுங்கள். தலைப்புகளை நீங்களே தெரியப்படுத்துவதற்குப் பதில்,  பட்டியிலிடுவதற்கான வரைமுறையை அவர்களே தீர்மானிக்கும் படி கூறுங்கள்
மேற்குறிப்பிட்ட மாற்றங்களைக் கொண்டு  பல்வேறு தொகுதிகளாக  
உருவாக்கப்பட்டிருக்கும் உதாரணப் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அணிA
சிறியதிலிருந்து பெரியதாக மாறுவது

அணி B
மோசமாக மாறுவது

அணி C
பழையதாக மாறுவது

அணி D
காலத்துடன் மாறுவது

அணி E
வெப்பநிலை மாறுவது


அணி F
நல்லதாக மாறுவது

அணி G
உடனடியாக மாறுவது



குழந்தைகள் மாற்றங்களை அணிவாரியாக பட்டியலிட்டவுடன், அவர்களிடம் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்கவும்.
  • எந்த மாற்றங்கள் அதிக நேரம் எடுத்தது? எந்த மாற்றங்கள் குறைந்த நேரம் எடுத்தது? இதன் மூலம் மெதுவான மற்றும் விரைவான மாற்றங்களைப் பற்றித் தெரிந்து கொள்வார்கள்.
  • எந்த மாற்றங்கள் நமக்குப் புதிய பொருட்களைத் தரக்கூடியது? உதாரணமாக, மாங்காய் பழுத்த மாம்பழம் ஆன பிறகு மீண்டும் மாங்காயாக நம்மால் திரும்பப் பெற முடியுமா? இந்த மாதிரி மாற்றங்களை  ` மீள ஒண்ணாத மாற்றங்கள் என குழந்தைகளிடம் கூறுங்கள். இதே வழியில் பல்வேறு மாற்றங்களுக்கான அறிவியல் பெயர்களைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
இதற்கு முன்பாக, ஐஸ் கட்டி உருகுவதை குழந்தைகள் பார்த்திருப்பார்கள். அந்தத் தண்ணீரை மீண்டும் `ப்ரீஷரில்’ வைத்தால் என்னவாகும் என்று அவர்களைக் கேளுங்கள். மீண்டும் ஐஸ்கட்டி உருவாகும். ஆகையால், இவைகள் மீள ஒண்ணாத மாற்றங்கள் ஆகும்.
இப்பொழுது நீங்கள் குழந்தைகளிடம் கீழ்க்கண்ட படங்களைக் காண்பியுங்கள்.
  • யுவதி மற்றும் மூதாட்டி
  • விதை மற்றும் செடி
  • மாங்காய் மற்றும் மாம்பழம்
  • எரிந்து போன காகிதம் மற்றும் புதிய காகிதம்
  • குழந்தை மற்றும் மனிதன்.
அந்தப் படங்களில் காணும் மாற்றங்களின் வகைகளைப் பற்றி குழந்தைகள் எழுதும்படி நீங்கள் கேட்கவும். இது வரை அவர்கள் கற்றுக் கொண்டதின் அடிப்படையில் அவர்கள் இந்த மாற்றங்களின் வகைகளை அறிந்து கொள்ள முடியும். அவர்களால் அறிந்து கொள்ள முடியாத மாற்றங்களை இதே முறையில் ஆழமான கேள்விகளைக் கேட்டு அதற்கான பதில்களைப் மாற்றங்களின் பட்டியல் மற்றும் பல்வேறு வகையான மாற்றங்களையும் எழுதி ஒரு அட்டவணையை உருவாக்குங்கள். ஒவ்வொன்றுக்கும் எதிரில் என்ன மாதிரியான மாற்றம் என்பதை `டிக்’ செய்யுங்கள். குழந்தைகளுடன் சேர்ந்து இந்த அட்டவணையைப் பூர்த்தி செய்யுங்கள்.
இதில் விரும்பதக்க மற்றும் விரும்பத்தகாத மாற்றங்களும் இருக்கும். நீங்கள் அதைப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதாவது பால் தயிராவது மற்றும் ஆணிகள் துருப்பிடிப்பது போன்றவைகள் இதற்கு உதாரணங்களாகும்.
ஒரே குறிப்பிட்ட நேரத்தில் மீண்டும் மீண்டும் நிகழும் மாற்றங்களை - கால மாற்றங்கள் என்று சொல்கிறோம்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மீண்டும், மீண்டும் ஏற்படும் மாற்றம் `காலத்தின்’ மாற்றம் ஆகும்.
காலை, மாலையாவது அல்லது ஒவ்வொரு திங்கட்கிழமைக்குப் பிறகும் செவ்வாய்க்கிழமை வருவது இதற்கு உதாரணங்களாகும்.
சாலை விபத்துகள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ந்து நடக்குமா? அதே போல், நில அதிர்வுகள் மற்றும் எரிமலை விபத்துகள் ஒவ்வொரு குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை நடக்குமா?
இப்படிப்பட்ட மாற்றங்கள் எல்லாம் குறித்த காலத்தில் நிகழா மாற்றங்கள் என்று குழந்தைகளுக்குக் கற்பியுங்கள்.
இந்த மாற்றங்களையெல்லாம் அட்டவணையில் உள்ள மாற்றங்களின் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மாற்றங்களின் பட்டியல், பலவகையான மாற்றங்களின் பட்டியல் ஆகியவைகளின் மாதிரிகளுக்கு, பட்டியல்கள் 1 - 2 என்று குறித்துள்ளவைகளைப் பாருங்கள்.
அட்டவணை 1

மாற்றங்கள்
மெதுவாக மாறுவது
வேகமாக மாறுவது
மீளும் தன்மை மாற்றம்
மீளாத் தன்மை மாற்றம்
குறித்த காலத்தில் நிகழா மாற்றம்
குறித்த காலத்தில்  நிகழும் மாற்றம்
குழந்தை பெரிய ஆளாக மாறுவது
\/


\/


செடி மரமாக மாறுவது
\/


\/


விதை செடியாக மாறுவது
\/


\/


பேப்பரை எரிப்பது

\/

\/


காலணி பழமையாவது
\/





சீருடைய பழைமையாவது
\/





பென்சில் குட்டையாவது

\/

\/


தண்ணீர் கொதிப்பது


\/



இரவு பகலாவது





\/
சூடு குளிராவது


\/


\/
இரும்பு துருப்பிடிப்பது
\/


\/


மாங்காய் பழுப்பது
\/


\/


நில அதிர்வுகள்



\/


விபத்துக்கள்

\/
\/



கோடை காலம்





\/
சுவர் பெயிண்ட் மங்கிப்போவது
\/






பால் தயிராவது
\/


\/


ரப்பர் துண்டுப் பட்டையை நீட்டுவது
\/
\/
\/



ஐஸ் கரைவது

\/
\/



  
அட்டவணை 2 -

மாற்றங்கள்

விரும்பத்தகாத மாற்றம்
விரும்பத்தக்க மாற்றம்
மெதுவான மாற்றம்
வேகமான மாற்றம்
மீளும் தன்மை கொண்ட் மாற்றம்
மீளாத் தன்மை கொண்ட் மாற்றம்.
குறித்த
காலத்தில்  நிகழும்
மாற்றம்
இரும்பு ஆணிகள் துருப்பிடிப்பது
\/

\/


\/

பால் தயிராவது

\/



\/

நீட்டிய ரப்பர் துண்டுப் பட்டை



\/
\/


வீடு எரிவது
\/




\/

எரிமலை வெடிப்பது
\/


\/



குளிர்காலம்


\/




பால் தீய்ந்து போவது
\/


\/


\/
மரங்களை வெட்டுவது
\/


\/



உணவு சமைப்பது



\/



கண்ணாடியை உடைப்பது
\/




\/

சுவரில் வரைவது

\/





No comments:

Post a Comment