Tuesday, November 3, 2015

கணவன் மனைவியிடம் எதிர்பார்க்கும் அந்த 32 விடயங்கள் என்ன‌..!

கணவன் மனைவியிடம் எதிர்பார்க்கும் அந்த 32 விடயங்கள் என்ன‌..!

இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவி பிரச்சினை அதிகரித்து வருகின்றது இறுதியில் குடும்ப பிளவு கூட ஏற்படுகின்றது. இதற்கு காரணம் கணவன் மனைவி புரிந்துணர்வு இன்மையாகும் . ஒரு கணவன் தான் மனைவியிடம் பின்வருவனவற்றை எதிர்பார்த்து நிற்கின்றான்

1* எப்போதும் சிரித்த முகம்.
2* மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
3* காலையில் முன் எழுந்திருத்தல்.
4* பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் உணவு தயாரித்தல்.
5* நேரம் பாராது உபசரித்தல்.
6* கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7* எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
8* அதிகாரம் பண்ணக் கூடாது.
9* குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10* கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11* கணவனை சந்தேகப்படக் கூடாது.
12* குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
13* பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14* வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
15* கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16* இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17* அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18* குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19* கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
20* கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
21* தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22* எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்து ழைக்க வேண்டும்.
23* தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24* தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
25* அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
26* குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27* சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
28* கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும் படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
29* பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
30* உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
31* தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
32* உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.
இவ் எதிர் பார்ப்புக்கள் ஒவ்வொன்றையும் மனைவி பின்பற்றும் பட்சத்தில் அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. மனைவியின் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தானாகவே நிறைவேறும்

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..
1.எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் , ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்.

2.கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில் ,தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது.

3.மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.

4.இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக்கூடாது.பொய்யின் ஆரம்பமே பயம் தான்.

5.எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும்.கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது.தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.

6.மனைவியை தன்னில் ஒரு பாதியாக பார்க்காவிட்டாலும் வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு.

7.மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத்தையும் முழுமனதாய் கணவன் ஏற்க வேண்டும்.கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும்.( இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)

8.கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம் கழித்து வீடு வருவது. மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித்
தான் நடத்துகின்றனர்.

9.கணவனும் மனைவியும் தனித் தனியே வெளியில் சென்றால் நேரமாய் வீடு திரும்ப வேண்டும் .அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றக் கொள்ளவேண்டும்.

10.அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர்பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும் அவளை திட்டக் கூடாது. அப்படி திட்டுவேன் தான் என்றால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள். திருமணம் ஆன புதிதில் உங்க அம்மாவும் இப்படித் தான் உங்க அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள் சமையலுக்காக.பக்குவம் பார்த்ததும் வந்து விடக்கூடியதல்ல.பல வருட அனுபவத்தில் வருவது.

நரகமாய் இருக்கும் வீடு சொர்க்கம் ஆவதும், சொர்க்கமாய் இருந்த வீடு நரகம் ஆவதும் கணவன் மனைவி நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது

படித்ததில் பிடித்த தத்துவங்கள் & நகைச்சுவைகள்

படித்ததில் பிடித்த தத்துவங்கள் & நகைச்சுவைகள்
நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ
அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். – விவேகானந்தர்.
=========================
வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
=========================
ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
=========================
நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,
ஒரு நல்ல நண்பனின் மவுனம்
இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.
=========================
நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;
ஆனால் அனுபவமோ
தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது. – பில் கேட்ஸ்
=========================
சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை!
=========================
மேலாளர்: உன் தகுதி என்ன?
சர்தார்: நான் Ph.D
மேலாளர்: Ph.Dன்னா என்ன?
சர்தார்: Passed high school with Difficulty.
=========================
நானும் சரி ஒரு ரவுண்டுதானேன்னு இன்டர்வியூக்குப் போனேன்.
அங்கே 5பேரும்மா.
மாத்தி மாத்தி கேள்வி கேட்டாங்க.
என்னால முடிஞ்ச வரைக்கும் பதில் சொன்னேன்.
திடீர்னு ஒருத்தன் HRக்கு போன் போட்டு
மச்சான் ஃபிரீயா இருந்தா வாடா.
ஒருத்தன் சிக்கியிருக்கான்னு சொன்னான்.

சரின்னு நானும் 4ஆவது மாடிக்குப் போனேன்.
அங்கே 8 பேரும்மா.
அவங்களால எவ்வளவு முடியுமோ
அவ்வளவு கேள்வி கேட்டாங்க.
நானும் எவ்வளவு நேரம் பதில் தெரிஞ்ச மாதிரியே நடிக்கிறது?
அதுல ஒருத்தன் சொன்னான்
இவன் எவ்வளவு கேள்வி கேட்டாலும் சமாளிக்கிறான்டா
இவன் ரொம்ப அறிவாளின்னு சொல்லிட்டாம்மா.
=========================
(தேர்வு அறையில்)

ஆசிரியர்: டேய் என்னடா… கையில் ஃபார்முலா எழுதியிருக்கே?
மாணவன்: எங்க கணக்கு வாத்தியார்தான் ஃபார்முலா எல்லாம் விரல் நுனியில்இருக்கணும்னு சொன்னார்.
=========================
விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.
=========================
அறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது நீங்க மனசு சொல்வதை மட்டும்கேளுங்கள்.

ஏன்னா அறிவு……

சரி விடு. இல்லாததைப் பத்திப் பேச வேண்டாம்.
=========================
ஒண்ணு + ஒண்ணு = ரெண்டு
நீதான் எனக்கு ஃபிரெண்டு.

ரெண்டு + ரெண்டு = நாலு
நீ ரொம்ப வாலு.

மூணு + மூணு = ஆறு
நீ இல்லாம போரு.

நாலு + நாலு = எட்டு
எஸ்எம்எஸ் அனுப்பலன்னா குட்டு.
=========================
நட்பு எனும் கலையானது,
ஒரு நல்ல இசைக் கருவியை வாசிப்பது போன்றது.
முதலில் விதிகளின்படி இந்தக் கருவியை வாசிக்கத் தொடங்க வேண்டும்.
பிறகு விதிகளை மறந்துவிட்டு இதயத்திலிருந்து வாசிக்க வேண்டும்.
=========================
கடவுள்,
நகைச்சுவையுடன் எழுதக்கூடிய ஒரு சிறந்த எழுத்தாளர்.
ஆனால் அவர், நகைச்சுவையுடன் நடிக்கத் தெரியாத
மோசமான நடிகர்கள் பலரைக் கொண்டு தன் நாடகத்தை நடத்துகிறார்.
=========================
30 மாநிலங்கள்
1618 மொழிகள்
6400 சாதிகள்
6 மதங்கள்
6 இனங்கள்
29 பெரிய பண்டிகைகள்
ஒரு நாடு!
இந்தியனாக இருப்பதற்காகப் பெருமைப்படுங்கள்!
=========================
உயிரின் சுவாசம் மூச்சு
கண்களின் சுவாசம் கனவு
இதயத்தின் சுவாசம் துடிப்பு
நாக்கின் சுவாசம் பேச்சு
என் நட்பின் சுவாசம் நீ
=========================
எனக்கு இட்லியைப் பிடிக்காது
தோசையைத்தான் பிடிக்கும்.
ஏன்னா, இட்லி கூட்டமா வேகும்.
தோசை சிங்கிளாத்தான் வேகும்.
கூல்…
=========================
உதவும் கரங்கள்
ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.
– அன்னை தெரஸா.
=========================
வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
அதனால்,
வெற்றிக்குப் பிறகு
தொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;
தோல்விக்குப் பிறகு
தொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்!
=========================
எல்லாம் சில காலமே – ரமண மகரிஷி
=========================
கண்களைத் திறந்து பார்
அனைவரும் தெரிவார்கள்.

கண்களை மூடிப் பார்.
உனக்குப் பிடித்தவர்கள் மட்டும் தெரிவார்கள்!
=========================
தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!

துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை!
=========================
கையில் 10 ரோஜாக்களோடு
கண்ணாடி முன் நில்லுங்கள்!
இப்போது நீங்கள் 11 ரோஜாக்களைக் காண்பீர்கள்!
அந்த 11ஆவது ரோஜா,
உங்கள் புன்னகை!
நீங்ள் இப்போது புன்னைப்பதை நான் அறிவேன்!
=========================
வெற்றியை விரும்பும் நமக்குத் தோல்வியைத் தாங்கும் மனம் இல்லை;
தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்.
=========================
உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?
பிரச்சினைகள் வரும்போது அல்ல;
பிரச்சினைகளைக் கண்டு நீங்கள்
பயந்து விலகும்போது. – பாரதியார்
=========================
எவையெல்லாம் அழகாக இருக்கின்றனவோ
எவையெல்லாம் அர்த்தத்துடன் இருக்கின்றனவோ
எவையெல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமோ
அவை அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கட்டும்!
இன்றும் நாளையும் என்றும்.
=========================
இதை மெதுவாகப் படியுங்கள்:

LIFEISNOWHERE
இதை எப்படிப் படித்தீர்கள்?
LIFE IS NO WHERE என்றா?
LIFE IS NOW HERE என்றா?
நாம் பார்க்கிற விதத்தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பதை இந்த ஒற்றை வரிஉணர்த்திவிடுகிறது!
=========================
மின்தடை ஏற்படும்போதுதான்
நமக்கு மெழுதுவர்த்தி ஞாபகம் வருகிறது.
அப்படித்தான் பிரச்சினைகளின் போது
ஒரு நண்பர், தீர்வு என்னும் விளக்கேந்தி வருகிறார்.
நான் உனக்கொரு மெழுகுவர்த்தியாக இருப்பேன்
என்ற நம்பிக்கை எனக்குண்டு.
=========================
நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!
=========================
ஒரு நாள், கடவுள் என்னைக் கேட்டார்:

“இந்த நண்பர் இன்னும் எவ்வளவு காலம்
உன்னுடன் இருக்க வேண்டும்?”

நான் கண்ணீர் உகுத்தேன்.
என் கண்ணீர்த் துளி
ஒரு பெருங்கடலில் விழுந்தது.

நான் இப்போது கடவுளிடம் சொன்னேன்:

“இந்தத் துளியை நீங்கள் கண்டுபிடிக்கும் வரை.”
=========================
நீ மற்றவருக்கு வழிகாட்டி ஆவதற்காகப்
பிறந்திருக்கிறாய்.
ஏன் மற்றவர்களிடம் உன் வழிகாட்டியைத்
தேடிக் கொண்டிருக்கிறாய்?
இந்த உலகம்
உன் வெற்றிக் கதையைப் படிக்கக்
காத்துக்கொண்டிருக்கிறது.
=========================
பிறக்கும்போது தாயை அழவைக்கிறோம்
இறக்கும்போது எல்லோரையுமே அழவைக்கிறோம்
வாழும்போதாவது
எல்லோரிடமும் சிரிக்கப் பழகுவோம்.
=========================
2 சொட்டு போட்டா அது போலியோ.
4 சொட்டு போட்டா அது உஜாலா
2880 சொட்டு போட்டா அது குவாட்டர்
இதுதான் இன்னிக்கு மேட்டர்.
=========================
வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும்
உப்பாக இருக்கலாம்.
ஆனால்,
அவைதான்
வாழ்வை இனிமையாக மாற்றும்.
=========================
ஒவ்வொரு மாநிலப் பெண்களிடமும்
ஒவ்வொரு சிறப்பு உண்டு.

கேரளா: நீண்ட கூந்தல்.
ஆந்திரா: கூரிய மூக்கு
மும்பை: செழுமையான கன்னங்கள்
பஞ்சாப்: பளிச் என்ற நிறம்
தமிழ்நாடு: ஒன்னுமே இல்லேன்னாலும் ஓவரா சீன் போடறது
=========================
நாம் அனைவரும் ஒரே அளவு திறமை பெற்றவர்கள் இல்லை
ஆனால்,
நம் திறமையை வளர்த்துக்கொள்ள
ஒரே அளவு வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம்.
– அப்துல்கலாம்.
=========================
ஓர் உண்மை:
நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது,
நீ யாரை விரும்புகிறாயோ
அவரை நினைத்துக்கொள்வாய்!

நீ துயரத்தில் இருக்கும்போது,
உன்னை யார் விரும்புகிறாரோ
அவரை நினைத்துக்கொள்வாய்!
=========================
ஒரு சிறிய கையசைப்பு, நம்மை அழவைக்கலாம்!
ஒரு சிறிய நகைச்சுவை, நம்மைச் சிரிக்கவைக்கலாம்!
ஒரு சிறிய அக்கறை, நம்மைக் காதலில் விழவைக்கலாம்!
ஒரு சிறிய தொடுதல், நம் உணர்வைக் கூர்மைப்படுத்தலாம்!
நானும் நம்புகிறேன்
என் சிறிய குறுஞ்செய்தி,
உனக்கு என்னை நினைவுபடுத்தலாம்!
=========================
உங்கள் இதயத்தில் மகிழ்ச்சி
உங்கள் ஆன்மாவில் புத்துணர்வு
உங்கள் வாழ்வில் வெற்றி
உங்கள் முகத்தில் புன்னகை
உங்கள் இல்லத்தில் அன்பின் நறுமணம்
இவை அனைத்தும் உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்!

மனதை வருடிய வரிகள்

மனதை வருடிய வரிகள்
  1. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்…!!!
  2. தந்தையிடம் பணம் இருந்தால் அவர் பெயரை நம் பெயரோடு இணைகிறோம் நம்மிடம் பணம் இருந்தால் அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறோம்…!!!
  3. உன் வாழ்கையில் எந்த ஒரு நாளில் உன் முன்னாள் எந்த பிரட்சனையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழது நீ தவறான பாதையில் பயணிக்கிறாய்…!!!
     
  4. செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால் உடனே அவர் தம்மை விட கீழ்யிருப்பவர்களை நினைத்து பார்க்கட்டும்…!!!
     
  5. ஆயிரம் பறவைகளின் நிம்மதியை கெடுக்க ஒரு ‘கல்’ போதும்! ஆயிரம் மனிதர்களின் நிம்மதியை கெடுக்க ஒரு ‘கெட்டவன்’ போதும்!
     
  6. “நமக்கு வரும் தடைகளை கண்டு மிரளுவதை விட ஒரு முறை துணிவதே மேல் வரலாற்றில் பல சரித்திரங்களை மாற்றியவர்கள் எல்லாம் தடைகளை தவிடு பிடியாக்கியவர்கள்
     
  7. உலகில் உள்ள எல்லா இதயங்களும் நல்ல இதயங்களே, ஆனால் சந்தர்ப்பம், சூழ்நிலைகள் அதை மாற்றியமைக்கின்றன
     
  8. நீ கிழே விழுந்து விட்டால் உடனே எழுந்து விடு..! இல்லையென்றால்.. இந்த உலகம் உன்னை புதைத்து விடும்..
  9. மனிதர்கள் மீது இரக்கம் காட்டுங்கள் , இறைவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான். – நபிகள் நாயகம்
     
  10. நீ யாரிடம் உன் இரகசியங்களைச் சொல்கிறாயோ அவரிடம் உன் சுதந்திரத்தை இழப்பாய் – லாவோட்சு
     
  11. தவறுகளை ஒப்புக் கொள்வதற்கான தைரியமும், அதைத் திருத்திக் கொள்வதற்கான பயனும்தான் வெற்றிக்கான வழி.
     
  12. மீனாக பிறந்து மடிவது என்று முடிவெடுத்துவிட்டால்.. பொழுதுபோக்கிற்கு மீன்பிடிப்பவனின் வலையில் சிக்காதே! பிழைப்பிற்காக மீன்பிடிப்பவனின் வலையில் சிக்கிடு. உன் மரணமும் ஒருவனை வாழ வைக்கட்டும்..!
     
  13. அன்பிற்கும் நோபல் பரிசு வழங்க பெற்று இருப்பது உண்மையில் பாராட்ட கூடிய விசையம் அன்பையே மையமாக வைத்து வாழ்ந்து காட்டிய அன்னை தெரேசா தான்
     
  14. இந்த உலகம் பல துன்பங்களை அனுபவிப்பது கெட்டவர்களால் அல்ல . அதை அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நல்லவர்களால் தான்.
     
  15. “வெற்றியோ தோல்வியோ எதுவாயினும் கடமையே செய்வோம்
     
  16. நேற்றைய பொழுதும் நிஜமில்லை நாளைய பொழுதும் நிச்சயமில்லை இன்றைக்கு மட்டுமே நம் கையில்
     
  17. நீ வெற்றி பெறும் பொழுதெல்லாம்…உன் முதல் தோல்வியை நினைத்துக் கொள்…!
     
  18. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.
     
  19. பயத்தை விடு…! இல்லை இலட்சியத்தை விட்டு விடு…!”
     
  20. நாம் எந்த ஆயுதத்தை எடுப்பது என்பதை நமது எதிரிகளே தீர்மானிக்கிறார்கள். – தோழர் மாவோ
     
  21. பு ரட்சிகள் உருவாகுவதில்லை நாம்தான் உருவாக்கவேண்டும் ! தோழர் – சேகுவாரா
     
  22. சோம்பேறி இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம் போன்றவன். அத்தகைய கடிகாரம் ஓடினாலென்ன? நின்றாலென்ன?
     
  23. நீ வெற்றி பெறும் பொழுதெல்லாம்…உன் முதல் தோல்வியை நினைத்துக் கொள்…!
     
  24. நேற்றைய பொழுதும் நிஜமில்லை நாளைய பொழுதும் நிச்சயமில்லை இன்றைக்கு மட்டுமே நம் கையில்
     
  25. குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்
     
  26. நமக்கு எது வசதி என்பதில் எது சரி என்பதை மறந்து விடுகிறோம்
     
  27. கற்காமல் இருப்பதை விட பிறக்காமல் இருப்பதே நல்லது ஏனெனில் அறியாமை தான் தீவினையின் மூல வேர்”..!
     
  28. எத்தனை நிறைகள் இருந்தாலும், ஒரு குறை இருந்தால்…!!! இவ்வுலகம் உன்னை கூர்ந்து கவனிக்க தொடங்கிவிடும்…!!!
     
  29. வெற்றி என்பது உன்னை உலகிற்கு அடையாளம் காட்டும் !! தோல்வி என்பது உன்னை உனக்கே அடையாளம் காட்டும் !!
     
  30. அறிவைப் பயன்படுத்தி நம் அறியாமையை ஒப்புக்கொள்வதுதான் உண்மையான அறிவு!
     
  31. ஒரு மொழியைக் கற்கும் போது குழந்தைபோல் இருக்க வேண்டும்… !! தவறாகப் பேசுவதற்குக் குழந்தை வெட்கப்படுவதே இல்லை…!!
     
  32. விதைகள் கீழ் நோக்கிஎறியப்பட்டால் தான் விருட்சங்கள் மேல்நோக்கி வளரும்..! விழும்போது விதையென விழு… விருட்சமாய் எழு…!
     
  33. செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை !!! உனக்குள் இருக்கும் திறமையே நீ வளர்த்துகொண்டால் அதுவும் ஒரு செல்வம் தான் !!!
     
  34. “அறிவின் ஆழம் புரியட்டும் சிகரம் கண்ணில் தெரியட்டும் …!
     
  35. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவான செயல் ..!!
  36. முழு சுதந்திரத்தின் அர்த்தம் என்பது பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து விடுபடுவது மட்டுமல்ல. அனைத்து சமூகத்தைச் சார்ந்தவர்களும் சகோதரர்களாக வாழும் இணக்கமான ஒரு சூழலை ஏற்படுத்துவது என்பதும்
     
  37. நம்மை சிந்திக்க தூண்டும் வரிகள் !!!
     
  38. வெற்றியின் வாசல் தேடி வந்தவர்கள் நிச்சையம் ஆயிரம் தோல்விகளிடம் விலாசம் கேட்டு இருப்பார்கள்
     
  39. உண்மையான போராளியின் உண்மையான வார்த்தைகள் !!
     
  40. “வெற்றியே விட தோல்விக்கு பலம் அதிகம் ” “வெற்றி சிரித்து மகிழ வைக்கும் ” “தோல்வி சிந்தித்து வாழ வைக்கும் ”
     
  41. நீ கிழே விழுந்து விட்டால் உடனே எழுந்து விடு..! இல்லையென்றால்.. இந்த உலகம் உன்னை புதைத்து விடும்.
     
  42. இதமான வார்த்தைகளை பேச முடியாத பட்சத்தில்மௌனம் காப்பது மேல்… அல்லது உங்களின் சூழ்நிலையை மாற்றுவது சிறந்தது…!
     
  43. “போராட்டம் என்பது ஓரிருவர் சீறிப் பாய்வதல்ல .. மாறாக நாம் அனைவரும் சேர்ந்து ஓரடி முன் வைப்பதே”…!!
     
  44. ஓடாத மானும் போராடாத மக்கள் இனமும் உயிர் வாழ்ந்ததாக வரலாறு இல்லை..!
     
  45. புரட்சியாளன் வெற்றிப்பெற்றால் அவன் போராளி..! தோல்வியுற்றால் அவன் தீவிரவாதி..!

அரிய தகவல்கள் - 1

அரிய தகவல்கள்

* நீர்நிலைகளின் அடிப்பகுதி யில் 2-3 ஆண்டுகள் கூட்டுப் புழுவாகவே வாழக்கூடிய ‘மே’ பூச்சிகள், கூடு உடைத்து இறகுகள் பெற்று பறக்கத் தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே வாழ்வை முடித்துக் கொள்கின்றன.

* உலகத்தின் 5வது முக்கிய இணையதளமாக விளங்கும் ‘விக்கி பீடியா’ நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் மொத்தம் 154 பேர் மட்டுமே!

* இதுவரை பதியப்பட்ட அடிப்படையில் பூமியின் அதிகபட்ச குளிர் அளவு மைனஸ் 89.2 டிகிரி செல்சியஸ். இது அன்டார்க்டிகாவில் 1983ம் ஆண்டு பதிவானது.

* இதுவரை நிரூபிக்கப்பட்ட அளவில், மோட் டார் சைக்கிள் எட்டிய அதிகபட்ச வேகம்… மணிக்கு 406.62 கிலோமீட்டர்.

* ஆரோக்கியமான மனிதரின் சிறுநீரகப்பை சௌகரியமாக தேக்கி வைக்கக்கூடிய அதிகபட்ச சிறுநீரின் அளவு 453 கிராம் (2கப்).

* டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் உறிஞ்சுவதில் மூன்றில் ஒரு பங்கு மின்சாரமே லேப்டாப்களுக்கு போதுமானது!

* புவிவட்ட சுற்றுப்பாதையில் அரை கிலோ எடையை நிலைபெறச் செய்வதற்கு ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக செலவாகும்.

* உயரமான கால்பந்து வீரர்களே உயரம் குறைந்தவர்களை விட அதிக ஃபவுல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிறார்கள்.

* 1965ல் ஜான் யங் என்ற விண்வெளி வீரர் ஜெமினி 3 விண் கலத்தில் ஒரு சாண்ட்விச்சை கடத்திச் சென்றுவிட்டார். பிரெட்டுகளில் ஏற்படும் வேதிமாற்றத்தின் விளைவாக, விண்வெளி நிலையத்திலும் விண்கலத்திலும் மின்கோளாறுகள் ஏற்படும் என்பதால், பூமிக்குத் திரும்பியதும் அவருக்குச் சிறப்பான ‘கவனிப்பு’ நடந்தது!
* தேனீயால் தேன் ஏற்கனவே ஜீரணம் செய்யப்பட்டிருப்பதால், நம் உடலிலும் எளிதில் ஜீரணமாகும்.

* ட்விட்டர் இணையதளத்தில் ஒரு நாளில் எழுதப்படுபவற்றை மட்டும் புத்தகமாக ஆக்கினாலே, ஒரு கோடி பக்கங்கள் தேவைப்படும்!

* நூலகங்களில் அதிகம் திருடப்பட்டவை என்ற சாதனையை படைத்திருப்பது கின்னஸ் சாதனைப் புத்தகமே!

* படிப்பதும் கனவு காண்பதும் மூளையின் வெவ்வேறு பகுதிகளில் தூண்டப்படும் செயல்களாகும். அதனாலேயே நாம் கனவு காணும்போது படிக்க முடிவதில்லை!

* சராசரியாக நம் தும்மலின் வேகம் மணிக்கு 96 கிலோ மீட்டர்!

* நம் கண்களால் பழுப்பு நிறத்தின் 500 ஷேடுகளைக் கூட பிரித்து அறிய முடியும்.

* மலேசியாவிலுள்ள ‘நைக்’ தொழிற்சாலையில் பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களின் மொத்த வருமானத்தை விடவும், ‘நைக்’ அம்பாசிடராக உள்ள மைக்கேல் ஜோர்டான் அதிக பணம் சம்பாதிக்கிறார்.

* எரேசர் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் பென்சில் எழுத்துகளை அழிக்க ரொட்டிதான் பயன்படுத்தப்பட்டது.

* உலக மக்கள் தினமும் 5 லட்சம் மணி நேரங்களை இன்டர்நெட் செக்யூரிட்டி பாஸ்வேர்டுகளை அடிக்க மட்டுமே செலவழிக்கின்றனர்.

* அனைத்து துருவக்கரடிகளும் ஆழ்துயில் கொள்வதில்லை. கர்ப்பிணியாக இருப்பவை மட்டுமே அப்படி உறங்குகின்றன.

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற

சுவாமி விவேகானந்தர்:

உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.

வில்லியம் ஷேக்ஸ்பியர்:

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்

1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.

அடால்ஃப் ஹிட்லர்:

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.

ஆலன் ஸ்டிரைக்:
இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.

அன்னை தெரசா:

இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.

நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.

பான்னி ப்ளேயர்:
வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.

லியோ டால்ஸ்டாய்:
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

அப்ரஹாம் லிங்கன்:
கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.

ஐன்ஸ்டைன்:
எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.

சார்லஸ்:
ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.

நமது வாழ்வை சிறப்பாக்கும் வழிகள் : நம்பிக்கை! விழித்து எழு!

நமது வாழ்வை சிறப்பாக்கும் வழிகள் : நம்பிக்கை! விழித்து எழு!
வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கை உன்னுள்ளே பிறக்கட்டும் உன்னுடைய உடம்பின் ஒவ்வொரு அணிவிலும் இந்த நம்பிக்கைப் பரவட்டும். அப்படிச் செய்தால்தான் உன்னால் எதையும் சாதிக்க முடியம்.

நீ ஆயிரம் மருந்துகளை உன்னுடைய வியாதிகளின் பொருட்டுச்சாப்பிடலாம். ஆனாலும் நோயில் இருந்து மீண்டுவிட வேண்டும் என்ற தளராத நம்பிக்கை உனக்கு இல்லாமல் போய்விட்டால் நீ குணம் அடைவது முடியாத ஒரு விஷயம் தான்.

பொறுமை!
நீ ஒரு போதும் உணர்ச்சி வசப்படாதே! உணர்ச்சி வசப்படுவதால் பரபரப்பு ஏற்படுகிறது. அதற்கு இடம் தராதே!

உன்னுடைய பொறுமையை இழக்காதே!

எரிச்சல் அடையாதே!
உனக்கு எப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்ப்பட்டாலும் நிர்ச்சலனமாக இருக்கப் பழகிக்கொள்.

கோபம்
மற்றவர்கள் உன்னை எப்படி நடத்தினாலும் நீ கோபத்துக்கு மட்டும் இடம் தரக்கூடாது.

சோர்விலே எச்சரிக்கை
நீங்கள் மிகவும் சோர்ந்து போய் இருக்கும் போது ஒருபோதும் தூங்கச் செல்லவேண்டாம். இடையிடையே ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் உங்களால் முடிந்த மிக எளிமையான உடல் பயிற்சிகளைச செய்யுங்கள். உங்களுக்கு மீண்டும் புத்துணர்ச்சியைத் தரக்கூடிய உங்களுக்குப் பிடித்தமான எதையாவது படியுங்கள்.

உங்களுக்கு மிகவும் பிடித்த இசையைக் கேளுங்கள். சுடச்சுட ஒரு கோப்பைப் பால் அருந்துங்கள்.

உதவியும் இன்பமும்!
உன்னிடம் உள்ள கடவுள் உணர்வு ஒன்றுதான் உனக்குக் கிடைக்கும் உணைமையான ஒரே உதவி. அது ஒன்றுதான் உண்மையான மகிழ்ச்சி.

சுயநலம்


மனிதர்கள் அந்தக் கடவுளுடைய சக்தியைக் கொண்டு தான் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவற்றைத் தங்களுடைய சொந்த நோக்கங்களுக்காகவும் சுயநலமான திட்டங்களுக்காகவும் தான் பயன்படுத்துகிறார்கள்.

இறை உணர்வு

நீ தியானம் செய்வதன் பொருட்டுத தனிமையான இடத்தில் அமர்ந்தாலும் சரி, ஏதாவது ஒரு வேலையை மேற்கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தாலும் சரி. உனக்குத் தேவையான ஒரே விஷயம் இறைவனைப்பற்றிய இடைவிடாத உணர்வுதான்.

இறைவனுக்கே காணிக்கை

நீ பகுத்தறிவு சம்பந்தப்பட்ட முயற்சிகளைச் செய்தாலும் சரி

செயலாற்றக் கூடிய திட்டங்களை சம்பந்தப்பட்ட முயற்சிகளாக இருந்தாலும் சரி. அல்லது வேறு எவ்வகைப்பட்ட முயற்சிகளாக இருந்தாலும் சரி.

அவற்றை எல்லாம் மறக்காமல் இறைவனுக்கு அர்பணிக்கவேண்டும் என்பதை உன் குறிக்கோளாக வை.

நீ செய்யக்கூடியவை அத்தனையும் இது இறைவனுக்கே காணிக்கை என்ற உணர்வுடன் செய்.

இதுவே உனக்கு மிகச்சிறந்த ஒழுக்கத்துக்குறிய முறை. இதுமட்டுமல்லாமல், பலப்பல முட்டாள்தனமான வீணான செயல்களைச் செய்வதிலிருந்து அது உன்னைத் தடுத்து விடும்.

மௌனம்!

மனிதர்கள் பேசாமல் இருக்கக் கற்றுக்கொண்டால், எத்தனை எத்தனையோ தொல்லைகளைத் தவிர்த்துவிடலாம். எப்போதும் அமைதியாக இருந்து வலிமையைத் திரட்டுவாயாக!

இவ்வாறு செய்தால் அது வேலை செய்வதற்கு மட்டுமல்ல, உருமாற்றம் அடையவும் உதவும்.

தன்னம்பிக்கை

ஒரு மனிதனுக்குத் தன்னிடத்திலே அசைக்க முடியாத நம்பிக்கை மட்டும் இருந்தது என்றால் , அவனால் எல்லாவித்த் துன்பங்களையும், என்ன விதமான சூழ்நிலைத் துயரங்களையும், மிகமிக மோசமானவை என்று கருதப்படுபவன்ற்றையும் எதிர்த்து நிற்க முடியும்.

இதற்குத் அவனுக்குத் தேவை ஊக்கமும், மனம் உடையாத மனோநிலைமையும் கூடத்தான்!

யோகத்தில் அடியெடுத்து வைக்க…

ஒருவன் யோக மார்க்கத்தில் அடியெடுத்து வைக்க வேண்டுமென்றால் அவனுக்கு ஒரு சில விஷயங்கள் எப்போதும் கவனத்தில் இருக்க வேண்டும்.

1. விடியற்காலையில் எழு.
2. அந்த நாளை இறைவனுக்கு அற்பணி.
3. நீ நினைப்பதையும், நீ செய்ய இருப்பதையும் அவனிடம் ஒப்படை.
4. இரவில் படுக்கைக்குப் போகும் முன், அன்றையத் தினத்தைப் பற்றி முழுமையாக எண்ணு.
5. என்னென்னவெல்லாம் செய்தாய் என்று நினைத்துப்பார்.

முதலில் உன் குறையை நீக்கு!

பிறமனிதர்கள் விஷயத்தில் நீ எதையாவது செய்ய வேண்டும் என்று விரும்பினால் அதை முதலில் உன் விஷயத்தில் கடைப்பிடிக்க வேண்டும்.

மற்றவர்களுக்கு ஒரு நல்ல புத்திமதியை வழங்குவதற்கு முன்னால் அந்தப் புத்திமதியை உனக்கே நீ சொல்லிக் கொள்ள வேண்டும்.

அந்த புத்திமதிப்படி நீயே நடந்துகொள்ளவேண்டும். நேர்ந்தால் அதை நீக்கக்கூடிய மிகச் சிறந்த வழி முதலில் அவ்விதமான சிக்கலை உன்னிடமிருந்து நீ விலக்குவதுதான்.

மற்றவர்களிடத்தில் நாம் என்ன விதமான குறையினைக் காண்கிறோமோ அதே குறை நம்மிடம் இருக்கிறது. என்பதை நம் உணரவேண்டும். அதன் பிறகு நம்மிடம் இருப்பதை நீக்குவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.

நம்மிடமிருந்து அது முற்றிலும் நீக்கப்பட்டபிறகு மற்றவருடைய குறையை மாற்றக்கூடிய வலிமையினை நாம் அடைந்துவிடுகின்றோம்!

கடவுள் உன்னுடன் இருக்க…

கடவுளை மட்டும் நீ நினை. கடவுள் உன்னுடனே இருப்பார்.

தவறு – தவறு தவறுக்கு மேல் தவறு!

ஒரு மனிதன் என்ன செய்கிறான் என்பதைப் பற்றி வெட்டிப் பேச்சு பேசுவது தவறு.

என்ன செய்யவில்லை என்பதைப் பற்றி வெட்டிப் பேச்சு பேசுவது தவறு.

அவ்வாறான வெட்டிப்பேச்சுகளுக்கு காது கொடுப்பது அதை விடத் தவறு.

அது உண்மைதானா என்று அறிய முயலுவது அதையும் விடத் தவறு.

தவறான வம்புகள் நிறைந்த ஒரு பேச்சுக்குப் பதிலுக்குப் பதில் பேசுவது தவறினும் தவறு.

உன்னை மாற்றிக்கொள்!

மற்றவர்களுடைய விஷயங்களில் எப்பொழுதும் தலையிடாமல் இருப்பது நல்லது. மனிதர்கள் மற்றவர்களின் விஷயங்களில் கண்டபடி தலையிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

கேட்காவிட்டாலும் கூடத் தங்களுடைய அபிப்ராயத்தைச் சொல்லக்கூடிய பழக்கம் தான் இதற்கெல்லாம் காரணம்!

மனதில் உறுதி வேண்டும்

ஒரு காரியம் கடினமாக இருப்பதால் அதை எண்ணிப் பயந்துவிட்டு விடக்கூடாது. மாறாக அது எவ்வளவு கடினமாக இருக்கின்றதோ அந்த அளவுக்கு அதில் வெற்றி பெறுவதன் பொருட்டு நாம் அதிகமான உறுதியுடன் இருக்க வேண்டும்.

கடவுளே எல்லாம் செய்பவன்.

நீ தன்னந்தனியாக இருக்கவில்லை. என்பதை ஒரு போதும் மறக்காதே கடவுள் உன்னுடனேயே இருக்கிறான். உனக்கு உதவிக் கொண்டும், வழிக்காட்டிக்கொண்டும் இருக்கிறான்..

அவன்தான் எப்போதுமே கை விடாத துணைவன். தன்னுடைய அன்பினால் நமக்கு ஆறுதலை அளிக்கக்கூடிய வலிமையையூட்டக்கூடிய நல்ல நண்பன்
அவன் மீது நம்பிக்கையை வை! அவன் உனக்கு எல்லாவற்றையும் செய்வான்.!

இரக்கத்தின் சிறப்பு:

இப்போது இருக்கக்கூடிய உலகத்தில் தர்மத்தைச் செய்வதுதானம் அன்பிற்குச் சிறந்த அடையாளம் என்று கூறமுடியாது. ஆனால் ஏதாவது ஒரு பொருளைக் கொடுப்பதன் மூலமாகவோ, வேறு வகையிலோ நம்முடைய அன்பினை வெளியிடும் போது நம்முடைய அன்பானது மற்றவருடைய அன்பையும், நட்பையும் பெறுவதிலே உலகத்திலே மிகச்சிறந்த சக்தியாக வேலை செய்கின்றது.

பலமும்- பலஹீனமும்!

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி, அதை அமைதியான முறையில் எடுத்துச் சொல்லுவதே எப்போதும் வலிமைக்கு அடையாளம் ஆகும்.

கடுகடுவென்று வெடித்து விடுவது பலஹீனத்தின் அடையாளம் ஆகும்.

விலகி இருத்தல்

எப்பொழுதும் அமைதியுடன் இரு. அமைதி இழக்கும் படியான சோதனைகள் எல்லாம் வரக்கூடிய காலத்தில் எல்லாம் அதை எதிர்த்து நில்.

விலகி நிற்காமல் எதையும் முடிவு செய்ய வேண்டாம்.

தற்புகழ்ச்சி

தற்புகழ்ச்சி செய்து கொள்ளுதல் என்பது முன்னேற்றத்துக்குப் பெரும் தடைகளாக உள்ளவற்றுள் ஒன்று.

உண்மையான முன்னேற்றத்தின் மீது ஆர்வம் இருந்தால் இந்த முட்டால் தனத்தைக் கவனமாகத் தவிர்க்க வேண்டும்.

இரண்டு வழிகள்

யோகத்திலே இருக்கும் வழிகள் இரண்டே இரண்டுதான்.
1. தவம் செய்தல்
2. சரண் அடைதல்
மகிழ்ச்சி தரும் விஷயம்

எந்தவிதப் பற்றும் இல்லாத தூய பக்தியைப்பொல வேறு எதுவும் மகிழ்ச்சியை அளிக்காது.

அருள்


அருள் என்பது என்றுமே நம்மைக் கை விடுவது இல்லை. இந்த நம்பிக்கையை நம்முடைய உள்ளத்திலே எப்போதும் நாம் கொண்டிருக்கவேண்டும்.
அரும் மருந்து

ஒரு நோயாளியின் நம்பிக்கை ஒன்றுதான் அவனை நோயிலிருந்து குணமாக உதவக்கூடிய சக்தியைத் தரும் அரும் மருந்து.
குறைகள்!

எப்போதும் மற்றவர்களுடைய குறைகளைப் பற்றிப் பேசுவது என்பது தவறு எனபதிலே சிறிது கூடச் சந்தேகமே இல்லை.

எல்லாரிடமும் கறைகள இருக்கத்தான் செய்கின்றன. அவற்றைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பது மட்டும் அவற்றைப் போக்க நிச்சயமாக உதவாது.
மாபெரும் வலிமை!

ஒருவர் மௌனமாக இருக்கக்கூடிய திறனை மட்டும் வளர்த்துக் கொண்டாரேயானால் அதிலேயே பெரிய வலிமை இருக்கிறது.

பிரகாசமான எதிர்காலம் அமைய..

நீ எப்போதும் இரக்கத்தை உடையவனாய் இரு. உனக்குத துன்பமே நேராது. எபுபோதும் திருப்தியுடனும்,சந்தோஷத்துடனு​ம் இரு. கடுமையான விமர்சனத்தைத் தவிர்த்துவிடு. எல்லாற்றிலும் தீமையைக் காண்பதையும் தவிர்த்துவிடு. சாந்தியோடு கூடிய நம்பிக்கையும், பிரகாசமான எதிர்காலமும் அமையும்.

கடவுளின் உதவி வேண்டுமா?

கடவுளின் உதவியானது எப்போடுத் இருக்கிறது. நீ தான் உன்னுடைய ஏற்றுக் கொள்ளக்கூடிய திறனை உயிர்த்துடிப்புடன் வைத்துக் கொண்டு இருக்க வேண்டும். எந்த மனிதனாலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதையும் விட மிக அதிக அளவிலே கடவுளின் உதவியானது இருக்கிறது.

சிறந்த மகிழ்ச்சி தேவையா?

இறைவனுக்குத் தொண்டு செய்யுங்கள். இதைவிட சிறந்த மகிழ்ச்சி வேறு இல்லை.

இறைவனிடம் விட்டு விடு!

இறைவனிடம் உனக்குத் தூய்மையான கலப்பு இல்லாத அன்பு இருப்பதால, மற்றவர்களுடைய மனத்தாங்கள், கெட்ட எண்ணங்களை ஆகியவற்றில் இருந்து உன்னை எப்படிக் காப்பது என்பதை அவனிடமே விட்டுவிடு.

அழகு இருக்க வேண்டும்!

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அழுக, ஒழுங்கு ஹார்மோனி என்று கூறப்படும். இசையை ஆகியவற்றின் அவசியத்தை உயர்வாக மதிக்க வேண்டும். உதாரணமாக நம்முடைய உடைகளை நல்ல முறையில் பராமரித்தல், நம்முடைய புத்தகங்களை அடுக்கி வைத்தல், நம்முடைய சமையல் பாத்திரங்கைப் பராமரித்தல், ஆகியவற்றிலும் கூட அழகும் ஒழுங்கும் இசைமையும் இருக்க வேண்டும்.

தவறை உணருங்கள்!

நீ ஒரு தவறைச் செய்துவிட்டாய் என்றால் அந்தத் தவறு தவறுதான் என்று உன்னால் உணரப்பட்டு அதற்காக நீ வருந்தினால் அந்தத் தவறானது கண்டிப்பாக மன்னிக்கப்பட்டு விடும்.

இன்பத்தைக் காண முடியாதவர்கள்!

முயற்சிதான் மகிழ்ச்சியை அளிக்கிறது. முயற்சியினை எவ்வாறு செய்வது என்பதை அறியாத மனிதன் தான எப்போதும் மகிழ்ச்சி இல்லாத மனிதனாக இருக்கிறான்.

ஒருவன் தன் வாழ்நாளின் துவக்கத்திலே இருந்தே சோம்பேறியாக இருப்பவர்களை ஒரு போதும் இன்பத்தைக் காணமாட்டார்கள்.

நோய்வாய்ப்பட கிருமிகள் காரணமல்ல!

சந்தேகம்.

மனம் சோர்வடைதல் தன்நம்பிக்கை இல்லாத தன்மை சுயநலத்துடன் தன்னையே கருத்தில் கொள்ளுதல் இவை எல்லாம் ஒரு மனிதனைத் தெய்வீக ஒளியில் இருந்தும், சக்தியில் இருந்தும் உன்னைத் துண்டித்து விடுகின்றன.

பகை சக்திகளின் தாக்குதலுக்குச் சாதகமாக இருக்கின்றன. நீ நோய்வாய்ப்படுவதற்குக் காரணம் கிருமிகள் அல்ல. இது தான் காரணம்.

சிற்றின்பத்தை நீக்கு

சிற்றின்பம் என்பது மனிதனை மயங்க வைக்க்கூடிய வக்கரித்த ஒரு வேஷம். இது நம்மை நம்முடைய இலக்கிலிருந்து விலகிச் செல்லச் செய்கின்றது.

நாம் உண்மையைக் காண்பதில் ஆவல் உள்ளவர்களக இருந்தால் , நாம் அதை நாடக்கூடாது.

பயப்படாதே!

நீ உன்னை நன்றாக கவனித்துப் பார்!

நீ பயத்தை உன்னிடம் அனுமதிக்கின்ற போது நீ எதைக் கண்டு பயப்படுகின்றாயோ அதை வரவேற்கும் ஆளாக மாறிவிடுகின்றாய்.

நீ நோயைக் கண்டு பயப்படும்போது நீ நோயை வருமாறு அழைக்கிறாய்! இதுதான் தினந்தோறும் நடைபெறக்கூடிய அனுபவமாகின்றது. இதைக் கொஞ்சம் சிந்தனை செய்தால் இது விளங்கும்.

நீ உனக்கு நீயே எதைக்கண்டும் பயப்படுவது மடமை என்று கூறிக்கொள்ள வேண்டும்.

உன் வாழ்க்கை அமைதியடைய….

இரக்கத்துடன் கூடிய புன் முறுவலுடம் எல்லாவற்றையும் பார்ப்பாயாக! உனக்கு எரிச்சலையூட்டக்கூடிய விஷயங்களை யெல்லாம் உனக்கு கிடைத்த பாடமாகக் கருது.

அப்போது உன்னுடைய வாழ்க்கையானது அதிக அமைதியுடையதாகவும், அதிக பயன் உடையதாகவும் இருக்கும்.

முன்னேறிச் செல்!

யோகப் பாதையில் நீ ஒரே தடவை அடியெடுத்து வைத்துவிட்டாய் என்றால், உன்னுடைய உறுதியானது எஃகைப் போல் இருக்க வேண்டும்.

எவ்வளவு துன்பங்கள் உனக்கு எதிரிடையாக வந்தாலும் நீ உன்னுடைய இலட்சியத்தை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டும்.

துணிவு ஏற்பட…

நாம் கடவுளுடைய அருளின் மேலே முழுமையான ஒரு நம்பிக்கையை வைக்கும் போது நாம் திடமான , உறுதி வாய்ந்த ஒரு துணிவினைப் பெறுகின்றோம்

நேர்மையாய் இரு..

நேர்மையாக இருப்பதிலே ஒரு ஆதிதமான மகிழ்ச்சி உண்டாகின்றது. ஒவ்வொரு நேர்மையான செயலிலும் பரிசு உள்அடங்கியே இருக்கிறது.

தற்கொலை செய்யாதே!

உபயோகம் இல்லாத பேசப்படக்கூடிய ஒவ்வொரு சொல்லும் ஆபத்து நிரம்பிய வம்புப் பேச்சே! கெட்ட எண்ணங்களுடன் பேசக் கூடிய ஒவ்வொரு சொல்லும். ஒவ்வொரு அவதூறு நிரம்பிய பேச்சும் மட்டமான கீழ்த்தரமான மொழியிலே நாகரிகமில்லாத சொற்களில் சொல்லப்படும்போது அது உன்னையே நீயே தற்கொலை செய்து கொள்வதற்குச் சமமானது ஆகும்.

முயற்சிக்கும் பலன் உண்டு

எந்த முயற்சியை நீ செய்தாலும் அது ஒரு போதும் வீண் ஆவதில்லை. அதற்கு நிச்சயமாக்ப் பலன் கிடைத்தே தீரும். ஆனால் அந்த பலனை நம்மால் உணரமுடிவதில்லை.

வெற்றியடைய வழி!

இறைவனுடைய பணியிலே ஈடுபட்டிருப்பது தான் உன்வெற்றி அடைவதற்கு மிகவும் நிச்சயமான வழி.

குறிக்கோளை வைத்தே வாழ்க்கை!

குறிக்கோள் இல்லாத வாவு என்பதே பரிதாபமான ஒரு வாழ்வாகும். உங்களுடைய ஒவ்வருவருக்கும் ஒவ்வொரு குறிக்கோள் உண்டு.

ஆனால் மறந்துவிடாதீர்கள். உங்களுடைய குறிக்கோளின் தன்மையைச் சார்ந்து தான் உங்களுடைய வாழ்க்கையின் தன்மையும் அமையும்.

பகை தேவை!

ஒரு மனிதனுக்குப் பகை சக்திகள் இருப்பது தேவை என்று கூடச் சொல்ல்லாம். அவை உன்னுடைய மன உறுதியை வலுப்படுத்தப்படுகின்றன.

பணத்தைப்பற்றி…

பணம் எப்போதும் வழி தவறிப் போகின்றது ஏன் என்றால் அது பகைச் சக்திகளின் பிடியில் இருக்கிறது.

இறைவனின் அன்பு

இறைவனின் அன்பினிலே எல்லா ஆதரவினையும், எல்லா ஆறுதலையும் எப்போது காண்கிறோம்.

தியானம் ஏன் செய்ய வேண்டும்?

தெய்வீகச்சக்தி உன்னைத் திறப்பதற்காக நீ தியானம் செய்யலாம்.

பேசாதே!

எப்போதும் நீ சொல்லுவதையே செய்ய வேண்டும். ஆனால் செய்பவை எல்லாவற்றையும் பற்றிப் பேசுவது என்பது அறிவுடமை ஆகாது. நீ பேசும் போது எப்போதும் உணைமையே பேச வேண்டும். ஆனால் சில சமயங்களில் பேசாமல் இருப்பது தான் நல்லது.

பணிவுடம் இரு!

உண்மையான ஞானம் பெறுவதற்குரிய நிபந்தனை என்னவென்றால் ஆரோக்கியமான பணிவுதான்.

கடவுள் உன்னை தாங்குகிறார்

உன்னை பேணி வளர்க்கிறார்

உனக்கும் உதவுகிறார்.

உனக்கு அறிவூட்டுகிறார்

உனக்கு வழிகாட்டுகிறார். இவ்வாறெல்லாம் அவர்தான் செய்கின்றார் என்று நம்பி நீ பணிவுடன் இருக்க வேண்டும்.

பக்தி என்றால் என்ன?

பக்தி என்றால் தனதாக்கிக் கொள்ளுவது அல்ல. தன்னை அர்பணித்துக் கொள்ளுவது தான் பக்தி.

முன்னேற்றம் அடைய….

கடவுளின் அருளை நோக்கிச் செய்யப்படக்கூடிய ஆர்வமுடைய நேர்மையான பிரார்த்தனை எதுவும் வீணாவதே இல்லை. தொடர்ந்து ஆர்வத்துடன் இரு.

மிகச்சரியான முன்னேற்றம் வந்தே தீரும்.

குறைகூறுவதை நிறுத்த…

நீ உபயோகப்படுத்தும் வித்த்தில் பத்து நிமிடங்கள் பேச வேண்டும் என்று கருதினால் அதற்காகப் பத்து நாட்கள் மொனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

உன்னுடைய பேச்சிலே எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் வெளிப்படக்கூடிய குறை கூற்க்கூடிய பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு செய்ய வேண்டுமானால் பின் வருவனவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.

1. அவ்வாறான உணர்வு நிலையில் இருக்கும் போது நீ ஒரு போதும் பேசாதே. தேவை என்றால் உடல் அளவில் பேசமுடியாதபடி ஆக்கிக்கொள்.

2. உன்னையே ஆராய்ந்து பார். மற்றவர்களிடத்தில் எவை எல்லாம் சிரிப்புக்கு இடமானவையாக உனக்குத் தோன்றுகிறதோ அவை எல்லாவற்றையும் உன்னிடத்தில் இருப்பதாக அறிந்து கொள்வாயாக!

3. உன்னுடைய இயற்கையிலே அதற்கு எதிரான எண்ணம் விலகி இருப்பதைக் கண்டறிந்து அந்தத் தவறான எண்ணம் விலகி, இந்த நல்ல குணம் வளர வற்புறுத்து.

இயற்கைக் குணம் கீழ் வருமாறு:-
1. நல்ல எண்ணம்.
2. பணிவு.
3. பிறருக்கு நல்லது செய்யும் விருப்பம்.

நேரத்தை வீணாக்காதே
எப்போதும் விழிப்புணர்ச்சியுடன் இருந்து முன்னேறுவதற்கு இன்னும் என்னென்ன வெல்லாம் செய்ய வேண்டும் என்பதைக் கவனி. நேரத்தை ஒரு கணமும் வீண்டிக்காதே!

தனி ஒருவன் செய்ய வேண்டியது என்ன?
ஒருவனுடைய கடந்த காலம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அவன் எவ்வளவு வேண்டுமானாலும் தவறுகளைச் செய்திருக்கலாம்.

எவ்வளவு அஞ்ஞானத்தில் வேண்டுமானாலும் வாழலாம். அவனுடைய உள்ளத்தின் ஆழ்த்துக்குள்ளே ஒரு மிக உன்னதமான தூய்மை உள்ளது. அது அற்புதமான சித்தியாக மலர்ந்து வெளிப்பட முடியும்.

ஆள வேண்டியது!
இறைவனுடைய அன்பும், ஞானமும் தான் நம்முடைய சிந்தனைகளையும், செயல்களையும், எப்போதும் ஆள வேண்டும்.

தாங்க முடியும்!
மிகவும் கடுமையான உடல் வேதனை கூட அதை அமைதியடன் எதிர்கொள்ளும் போது கடுமை குறைந்து தாங்கக் கூடியதாக ஆகிவிடுகிறது.

கோபம்
கோபம் என்பது எப்போதுமே முட்டாள்தனமானவற்றைத்தான் பேசவைக்கும்.

பயம்!
பயம் என்பது ஒரு குற்றமாகும். அது குற்றங்களுக்குள் ஒன்று. இந்த உலகத்தில் கடவுளைடைய செயலானது நிறைவேற விடாமல் அதை அழித்துவிட விரும்பக்கூடிய கடவுள் விரோத சக்திகளிடமிருந்து நேரடியாக வருகின்றவற்றுள் ஒன்றுதான் பயம்.

கோபத்தை ஒழிக்கும் வழி!
யாராவது ஒருவர் உன் மீது கோப்ப்பட்டால், அவருடைய கோப அதிர்வுகளிலே நீ அகப்பட்டுக் கொள்ளாமல் விலகி நின்றுவிடு.

எவ்விதமான ஆதரவோ, பதிலோ கிடைக்காவிட்டால் அந்தக் கோபக்கார்ரின் கோபம் ஒழிந்துவிடும். நல்லவனாக இரு

நீ நல்லவனாக இரு!
மகிழ்ச்சி உடையவனாக இரு நீ வேறு எதையும் செய்ய வேண்டாம்!வேண்டும், வேண்டும்!

நம்முடைய சிந்தனைகள் இன்னமும் அறியாமையிலே தான் இருக்கின்றன. அவற்றை நாம் ஒளி பெறச்செய்ய வேண்டும்.

நம்முடைய ஆர்வமானது இன்னும் குறைபாடுடன்தான் இருக்கிறது. அது தூய்மைப்படுத்தப்பட வேண்டும்.

நம்முடைய செயல்கள் இன்னும் வலிமையற்றவையாகத்தான் இருக்கின்றன. இவை அதிக ஆற்றல் வாய்ந்தவையாக மாற வேண்டும்.

எல்லாவற்றிலும் சிறந்தது!
பேச்சைக் கட்டுப்படுத்துவது என்பது முழு மௌனத்தைவிடச் சிறந்தது, பயன் உள்ள ஒரு விஷயத்தைப்பற்றி மிகமிகத் துல்லியமாகவும் , உண்மையான முறையில்மு சொல்லக் கற்றுக் கொள்வதுதான் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்

நினைக்காதே!
என்னுடைய அறிவுதான் மிகமிக இறுதியானது. மற்ற எல்லாருடைய அறிவை விட உயர்ந்தது. ஆகவே மற்றவர்கள் சொல்வது தவறு என்று ஒரு போதும் நினைக்கவே கூடாது.

உணர முடியாதவர்கள்!
அன்பைச் செய்கின்றவனால் தான் அன்பு இருப்பதை உணர முடியும். உண்மையான அன்பினால் தங்களைக் கொடுக்க முடியாதவர்களினால் எங்குமே அன்பினை உணர முடியாது.

எந்த அளவுக்கு அன்பு தெய்வீகமாக இருக்கின்றதோ அந்த அளவுக்கு அதை அவர்கள் உணர்வதும் குறையும்.

அமைதி வேண்டும்!
மற்றவர்களுடைய குறைகளைப் பற்றி அதிகமாக நினைக்காதே! அது உதவியாக இருக்காது. உன்னுடைய மனப்பான்மையில் எப்போதும் அமைதியும், சாந்தியும் இருக்கட்டும்.
திரும்பி வரும்!
மற்றவர்களுக்கு தீமைகளையே நினைப்பவர்களுக்குச் சொல்.நீ வேண்டுமென்றே செய்த தீமை ஓர் உருவில் இல்லாவிட்டாலும் மற்றோர் உருவில் உன்னிடம் வந்தே தீரும்.
இறைத் தொண்டு

நாம் வேறு எந்தத் தொண்டிலும் ஈடுபட வேண்டியது இல்லை. இறைவனது தொண்டிலேயே ஈடுபட வேண்டும்.

மிகவும் கஷ்டம்!
ஏழையாக ஒருவன் இருக்கிறான். மற்றொருவன் பணக்காரனாக இருக்கிறான். இந்த ஏழை மனிதனைவிடப் பணக்காரனாக இருப்பவனால், நல்லவனாக – விவேகம் உள்ளவனாகவோ- புத்திசாலியாகவோ-

வள்ளல் குணம் கொண்டவனாகவோ – இருப்பது ஆயிரம் மடங்கு மிகவும் கஷ்டமானது.

இறைவன் உன்னோடு!
இறைவனின் பனிபூரண அருளானது வலிமையிலே சாந்தியையும், செயலிலே அமைதியும், எல்லாச் சூழ்நிலைகளிலும் மாறாத சுகத்தையும் தருகின்றது. எப்பொழுதும் கிடைக்கக்கூடியது இறைவனின் பதில் ஒன்றுதான். எப்பொழுதும் மாறாது இருக்கும் அன்பு இறைவனின் அன்பு ஒன்றுதான்!

இறைவன் ஒருவன் மீது மட்டும் நீ அன்பு செலுத்துவாயாக!
இறைவன் எப்போதும் உன்னோடே இருப்பான்.

உறவுகளை மேம்படுத்த உன்னத வழிகள்.

உறவுகளை மேம்படுத்த உன்னத வழிகள்.
உறவுகளை மேன்மைப்படுத்த தவறியதன் விளைவாக , வாழ்க்கையில் எல்லாமே நமக்கு எதிராக இருப்பதைப்போன்ற எண்ணம் ஏற்படுகிறது. அவசரத்தில் நாம் எடுக்கும் எந்த ஒரு சின்ன விஷயமும் நமக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிடுகிறது. நிதானமாக யோசித்தால், நாம் பெரிதுபடுத்திய பல விஷயங்கள் அற்ப விஷயங்கள் என்பது புலனாகும். எதையுமே சாதாரணமாக எடுத்துக்கொண்டால் வாழ்க்கை எளிமையாகி விடுகிறது. உறவுகளை மேம்படுத்த உளவியாலாளர்கள் கூறிய ஆலோசனை பின்பற்றுங்கள் வெற்றிப்பாதைகள் தானாகவே திறக்கும்.

தவறான மனோபாவம்

சின்ன விஷயங்களைச் சின்ன விஷயங்களாக நாம் பார்க்க முடியாதபோது இனிய உறவுகளைக்கூட அவை பாதித்து விடுகின்றன. நாம் சிறு விஷயங்களை அலட்சியப்படுத்தத் தொடங்கிவிட்டால், அவை சக்தி இழந்து செயலற்றுப் போய் விடுகின்றன. யோசித்துப் பார்த்தால் எல்லாமே சின்ன விஷயங்கள்தான். ஒரு விஷயத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே அதன் தன்மையும் அமையும். எல்லாவற்றுக்கும் நம்முடைய மனம்தான் காரணம். வாழ்க்கையில் ஏற்படுகின்ற பல இடர்ப்பாடுகளுக்கும் நம்முடைய தவறான மனோபாவங்களே காரணமாகின்றன.

முழுமையாக கேளுங்கள்

ஒருவருடன் பேச ஆரம்பிக்கும்போது, அவர் பேசுவதை முழுமையாகக் கேட்பது என்று முடிவு செய்து கொள்ளுங்கள். குறுக்கிட வேண்டும் என்று தோன்றினாலும் குறுக்கிடாதீர்கள். அவர் சொல்வதை நீங்கள் முழுமையாகக் கேட்ட பிறகு, நீங்கள் என்ன சொல்ல வேண்டுமென்பதைத் தீர்மானித்துத் தெளிவாகப் பேசுங்கள். மற்றவர்களை நீங்கள் பேச அனுமதித்து அக்கறையுடன் கவனிக்கின்றபோது, நீங்கள் சொல்வதையும் கவனிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அவருக்கும் தானாகவே ஏற்பட்டு விடும். இதைக் கடைபிடிக்க ஆரம்பித்தால் கருத்துப் பரிமாற்றம் எளிதாகும். மற்றவர்கள் அன்பும் சுலபமாகக் கிடைக்கும்.

எதிராளியை சந்தோசப்படுத்துங்கள்

ஒவ்வொருவரையும் திருத்திக் கொண்டிருப்பது நம்முடைய வேலை அல்ல. அது சாத்தியமுமில்லை. நம்முடைய நேரம்தான் வீணாகும். நம்முடைய குறைபாடுகளே நிறைய இருக்கும்போது, அவற்றை திருத்திக்கொள்ள முயற்சிக்காமல் மற்றவர்களை விமர்சிப்பது வீண் வேலை.

எதிராளியை மகிழ்ச்சிப்படுத்துங்கள்

நாம் நினைப்பதுதான் சரியாகவே இருக்கும் என நிரூபிப்பது அவசியமில்லை. நம்முடையதும், பிறருடையதும் சரியாக இருக்கும். பல சந்தர்ப்பங்களில் இரண்டும் ஒரே சமயத்தில் நடப்பதில்லை. இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது அவசியம். நம்முடைய அளவுகோல்களை வைத்துக் கொண்டு பிறருடைய அபிப்ராயங்கள் நம்மைப் பாதிக்காதவரை அதை மறுக்க வேண்டிய அவசியமில்லை. அந்த நிலை மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்குமானால், அதைக் கெடுக்காமல் அதில் நாமும் பங்கு பெறலாம்.

வாழ்க்கை எளிதாகும்


திருப்தி என்பது தொடுவானம் போன்றது. நெருங்க நெருங்க தூர விலகிச் சென்று கொண்டே இருக்கும். எனவே கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும். நாம் விரும்பியது கிடைக்காமல் போகும் சந்தர்ப்பங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காக அதையே நினைத்துக் கொண்டு வாழ்க்கையை வீணாக்கி விடக்கூடாது. எது கிடைக்கிறதோ, அதை விரும்ப கற்று கொள்ள வேண்டும். விரும்புகின்றபடியே எல்லாம் நடக்காது என்ற யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு நமக்கக் கிடைத்ததை விரும்புகின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் வாழ்க்கை இலகுவாகி விடும்.

எதிர்மறைகளை விலக்குங்கள்

எதிர்மறையான, பலவீனமான எண்ணங்கள் மன அமைதியைத் தகர்த்து சீர்குலையச் செய்யும் சக்தி படைத்தவை. ஒரு எதிர்மறை எண்ணம் இன்னொரு எதிர்மறை எண்ணத்துக்கு உங்களை இட்டுச் சொல்கிறது. இதன் விளைவாக குழப்பம் மிக்க மனநிலைக்கு ஆளாவீர்கள். மேலும் மனமானது கவலை களும் வேதனைகளும் நிரம்பிய குப்பைத் தொட்டியாகி விடுகிறது. எதிர்மறை எண்ணங்கள் அல்லது கவலைகள் மனத்தில் வேகம் பெறுவதற்கு அனுமதிக்காதீர்கள். பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைப்பதற்குப் பதிலாக, பிரச்னைகள் பற்றிய கவலைகளே அதிகமாகி மனத்தில் பாரம் அதிகரித்து விடுகிறது.

நிதானத்தை கடைபிடியுங்கள்

நாம் விரும்புகின்ற விஷயங்களே நம்மைச் சுற்றி நிகழ வேண்டும் எதிர்ப்பார்ப்பது வீண். இருப்பதை அல்லது நடப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டு விட்டால் பொறுமையினை இழக்க வேண்டிய அவசியமே இருக்காது. பொறுமை இல்லாமல் போனால் வாழ்க்கையே ஏமாற்றம் நிறைந்ததாகி விடும். மற்றவர்களின் செயல்களைக் கண்டு பொறுமை இழக்காதீர்கள். அவர்கள் செய்வது அறியாமையின் விளைவு என்று நீங்கள் நினைத்தால், பொறுமை இழக்க வேண்டிய அவசியம் இருக்காது.

மன அமைதியே மனித ஆற்றலின் ஊற்றுக் கண்ணாகவும் விளங்குகிறது. அமைதி நிலையில்தான் ஆற்றலை முழுமையாக ஒருமுகப்படுத்தவும் முடியும். எனவே, மன அமைதிக்கு முதலிடம் கொடுங்கள், உறவுகள் கூடிவரும், சாதனைகள் தொடரும்.

கோவில் அதிசயங்கள்..!

கோவில் அதிசயங்கள்..!

அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர். ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு! அவைகளில் சில:

1. உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம். – நடராஜ கோயில்

2. கும்பகோணம் அருகே “தாராசுரம்” என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில்உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும்.

3. தர்மபுரி மல்லிகார்ஜுன கோவிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி பூமியில் படியாது.

4. கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில் இரட்டை நடராஜர் தரிசனம் செய்யலாம்.

5. கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்தலம் கும்பகோணம் அருகே வெள்ளியங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டும் இது போல் காட்சிதருகிறார்.

6. நாச்சியார் கோவில் கல்கருடன் சன்னதியில் 4 பேர் தூக்குவார்கள் பின்பு 8,16, கோவில் வாசலில் 64 பேர் தூக்கி வருவார்கள் கருடனும் முகத்தில் வேர்வை துளிர்க்கும்.

7. ஸ்ரீபெரும்புதூரில் உள் ராமானுஜர் உருவம் விக்ரஹமோ, வேறு உலோகப் பொருளால் ஆன வடிவமைப்போ இல்லை.குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.

8. திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில் லிங்க வடிவில் காய் காய்க்கிறது.

9 கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் “பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர்.

10. விருதுநகர், சொக்கநாதன்புத்தூரில் உள்ள தவநந்திகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்திக்கு கொம்போ, காதுகளே இல்லை.

11. ஆந்திராவில் சாமல் கோட்டை அருகே உள்ள 3 பிரதான சாலைகளில் சந்திப்பில் உள்ள 72 அடி ஆஞ்சநேயர்சிலையின் கண்களும்-சில நூறுமைகளுக்கு அப்பால் உள்ள பத்ராசல ஆலயத்தில் ஸ்ரீராமன் திருவடிகளும் ஒரே மட்டத்தில் உள்ளன.

12. வேலூர் அருகே உள்ள விருஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ள கோயில் தூணின் தென்புறம் அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6முதல் 12 வரையும் எண்கள் செதுக்கியுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தில் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியுன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போது மணி ஆகும்.

13. சென்னை-திருப்பதி சாலையில் ஊத்துக் கோட்டைதாண்டி நாகலாபுரம் என்ற ஊரில் உள்ள ஸ்ரீவேத நாராயண பெருமாள் தலையிலிருந்து இடுப்புவரை மனித உருவம், கிழே மீன்வடிவம் கொண்டுள்ளார்.

14. தருமபுரி – பாப்பாரப்பட்டி {16கி.மீ} இருக்கும் ஸ்ரீ அபிஷ்டவரதர் பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் பெண்வடிவில் உள்ளது.

15. மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலில் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு கோபுரங்கள் கிடையாது.

16. கும்பகோணம் சாரங்கபாணி கோவில் கோமளவல்லி தாயாருக்கு படி தாண்டா பத்தினி என்ற பெயரும் உண்டு – பெருமாளோடு எக்காலத்திலும் வெளியே வராத காரணத்தால்.

தமிழ் எழுத்து பிறந்த கதை அறிவோமா?

தமிழ் எழுத்து பிறந்த கதை அறிவோமா?

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள (உயிர் எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால் மட்டுமே ஏற்படும் ஒலி.
உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றை மட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை உயிர் எழுத்துக்கள்.

க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் (மெய் எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடும்.
இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிட உடலின் பங்கு அதிகம் என்பதால் இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர் சூட்டப்பட்டது.

உயிர் எழுத்துக்கள்: 12
மெய் எழுத்துக்கள்: 18
உயிர்மெய் எழுத்துக்கள்: 216
ஆய்த எழுத்து: 1
தமிழ் எழுத்துக்கள் மொத்தம்: 247

நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது என்பதைக் காண்போம்.

க, ச, ட, த, ப, ற – ஆறும் வல்லினம்.
ங, ஞ, ண, ந, ம, ன – ஆறும் மெல்லினம்.
ய, ர, ல, வ, ழ, ள – ஆறும் இடையினம்.

உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் அ(படர்க்கை), இ(தன்னிலை), உ(முன்னிலை) என்பது பாவாணர் கருத்து.
தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெயெழுத்துக்களை­த் தேர்ந்தெடுத்தனர். அவை த், ம், ழ் என்பவை.

இந்த மூன்று மெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி த்+அ கூடி ‘த’ வாகவும், ம்+இ கூடி ‘மி’ யாகவும், ழ்+உ கூடி “ழு” வாகவும் என்று தமிழு என்று ஆக்கி, பிறகு கடையெழுத்திலுல்ல உகரத்தைத் நீக்கி தமிழ் என்று அழைத்தனர். அழகே அமுதே அழகிய மொழியே எனதுயிரே!!

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதி அமைந்த இடமும்

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதி அமைந்த இடமும்
1. திருமூலர் – சிதம்பரம்.
2. போகர் – பழனி என்கிற ஆவினன்குடி.
3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
4. புலிப்பாணி – பழனி அருகில் வைகாவூர்.
5. கொங்கணர் – திருப்பதி, திருமலை
6. மச்சமுனி – திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் – மதுரை.
8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10. தேரையர் – தோரணமலை (மலையாள நாடு)
11. கோரக்கர் – பேரூர்.
12. பாம்பாட்டி சித்தர் – மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
13. சிவவாக்கியர் – கும்பகோணம்.
14. உரோமரிசி – திருக்கயிலை
15. காகபுசுண்டர் – திருச்சி, உறையூர்.
16. இடைக்காட்டுச் சித்தர் – திருவண்ணாமலை
17. குதம்ப்பைச் சித்தர் – மயிலாடுதுறை
18. பதஞ்சலி சித்தர் – சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19. புலத்தியர் – பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
20. திருமூலம் நோக்க சித்தர் – மேலை சிதம்பரம்.
21. அழகண்ண சித்தர் – நாகப்பட்டினம்.
22. நாரதர் – திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23. இராமதேவ சித்தர் – அழகர் மலை
24. மார்க்கண்டேயர் – கருவை நல்லூர்.
25. புண்ணாக்கீசர் – நண்ணாசேர்.
26. காசிபர் – ருத்ரகிரி
27. வரதர் – தென்மலை
28. கன்னிச் சித்தர் – பெருங்காவூர்.
29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்
30. நந்தி சித்தர் – காசி, திருவாவடுதுறை, காளங்கி.
31. காடுவெளி சித்தர் – திருக்காஞ்சிபுரம்.
32. விசுவாமித்திரர் – காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33. கௌதமர் – திருவருணை, திருவிடைமருதூர்.
34. கமல முனி – ஆரூர்
35. சந்திரானந்தர் – திருவாஞ்சியம்.
36. சுந்தரர் – வாரிட்சம், திருவாரூர்.
37. காளங்கி நாதர் – திருக்கடவூர், திருப்பணந்தாள்.
38. வான்மீகி – எட்டிக்குடி, திருவையாறு.
39. அகப்பேய் சித்தர் – திருவையாறு, எட்டிக்குடி.
40. பட்டினத்தார் – திருவொற்றியூர்.
41. வள்ளலார் – வடலூர்.
42. சென்னிமலை சித்தர் – கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43. சதாசிவ_பிரமேந்திரர்_சமாதிசதாசிவப் பிரம்மேந்திரர் – நெரூர்.
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் – பேலூர் மடம்
45. ராகவேந்திரர் – மந்திராலயம்.
46. ரமண மகரிஷி – திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47. குமரகுருபரர் – காசி.
48. நடன கோபால நாயகி சுவாமிகள் – காதக்கிணறு.
49. ஞானானந்த சுவாமிகள் – அனைத்து தபோவனங்கள்.
50. ஷீரடி சாயிபாபா – ஷீரடி.
51. சேக்கிழார் பெருமான் – மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52. ராமானுஜர் – ஸ்ரீரங்கம்.
53. பரமஹம்ச யோகானந்தர் – கலிபோர்னியா.
54. யுக்தேஸ்வரர் – பூரி.
55. ஜட்ஜ் சுவாமிகள் – புதுக்கோட்டை
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார் – காளஹஸ்தி.
58. சிவப்பிரகாச அடிகள் – திருப்பழையாறை வடதளி.
59. குரு பாபா ராம்தேவ் – போகரனிலிருந்து 13 கி.மி.
60. ராணி சென்னம்மாள் – பிதானூர், கொப்புலிமடம்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி – மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
62. குழந்தையானந்த சுவாமிகள் – மதுரை காளவாசல்.
63. முத்து வடுகநாதர் – சிங்கம் புணரி.
64. இராமதேவர் – நாகப்பட்டிணம்.
65. அருணகிரிநாதர் – திருவண்ணாமலை.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67. மௌன சாமி சித்தர் – தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68. சிறுதொண்டை நாயனார் – திருச்செட்டாங்குடி.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் – பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70. வல்லநாட்டு மகாசித்தர் – வல்லநாடு.
71. சுப்பிரமணிய சித்தர் – ரெட்டியப்பட்டி.
72. சிவஞான பாலசித்தர் – மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73. கம்பர் – நாட்டரசன் கோட்டை.
74. நாகலிங்க சுவாமிகள் – புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75. அழகர் சுவாமிகள் – தென்னம்பாக்கம்.
76. சிவஞான பாலைய சுவாமிகள் – புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77. சித்தானந்த சுவாமிகள் – புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78. சக்திவேல் பரமானந்த குரு – புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் – வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80. அக்கா சுவாமிகள் – புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
81. மகான் படே சுவாமிகள் – சின்னபாபு சமுத்திரம்.
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் – புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83. பகவந்த சுவாமிகள் – புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85. சாந்த நந்த சுவாமிகள் – ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86. தயானந்த சுவாமிகள் – புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் – பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள் – புதுவை.
89. வேதாந்த சுவாமிகள் – புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90. லஷ்மண சுவாமிகள் – புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91. மண்ணுருட்டி சுவாமிகள் – புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் – பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) – திருவண்ணாமலை.
94. கோட்டூர் சுவாமிகள் – சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95. தகப்பன் மகன் சமாதி – கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96. நாராயண சாமி அய்யா சமாதி – நாகர்கோவில்.
97. போதேந்திர சுவாமிகள் – தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் – சென்னை பூந்தமல்லி.
99. வன்மீக நாதர் – எட்டிக்குடி.
100. தம்பிக்கலையான் சித்தர் – சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் – திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
102. குகை நாச்சியார் மகான் – திருவண்ணாமலை.
103. வாலைகுருசாமி – சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104. பாம்பன் சுவாமிகள் – திருவான்மியூர்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் – கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106. பெரியாழ்வார் சுவாமிகள் – அழகர் கோவில் (மதுரை)
107. மாயம்மா ஜீவசமாதி – கன்னியாகுமரி.
108. பரமாச்சாரியார் ஜீவசமாதி – காஞ்சிபுரம்.

பதினெண் சித்தர்களும் சமாதியான ஸ்தலங்களைப் பற்றி குறிப்பிடும் பழைய ஓலைச்சுவடி :
ஆதி காலத்திலே தில்லை திருமூலர்
அழகுமலை இராமதேவர்
அனந்த சயன கும்பழனி திருப்பதி கொங்கணவர்
கமலமுனி ஆரூர்
சோதி அரங்க சட்டமுனி கருவை கருவூரார்
சுந்தரானந்தர் கூடல்
சொல்லும் எட்டிக்குடியில் வான்மீகரோடு நற்
றாள் காசி நந்திதேவர்
ப்லாதி அரிச்சங்கரன் கோவில் பாம்பாட்டி
பழனி மலை போகநாதர்
திருப்பரங்குன்றமதில் மச்சமுனி
பதஞ்சலி இராமேசுவரம்
சோதி வைத்தீஸ்வரம் கோவில் தன்சந்திரி பேரையூர்
கோரக்கர் மாயூரங்குதம்பர்
திருவருணையோர் இடைக்காட சமாதியிற்
சேர்ந்தனர் எமைக் காக்கவே.
இது நெற்கட்டும் செவல் மன்னர் பூலித்தேவர் காலத்தில் உள்ள ஓலைச்சுவடியின் சான்று.
மதுரை அழகர் கோவிலின் முன்பாக 18-ம் படி கருப்பண்ணசாமியாக உள்ள 18 படிகளும், 18 சித்தர்கள் ஆவார்கள். ஆடி 18 அன்று சிறப்பு பூசை நடைபெறுகிறது.

கரூர் அருகில் உள்ள அய்யர் மலையில் உள்ள சுனையில் பஞ்சமாசித்தர்களான

பஞ்சமுக சுரேஸ்வர சித்தர்,
சதுர்முக சுரேஸ்வர சித்தர்,
திரிபலாதர சுரேஸ்வர சித்தர்,
ஸ்கந்த பதுமபலாதி சித்தர்,
திரி மதுர நீற்று முனீஸ்வர சித்தர் வசிக்கிறார்கள்.

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!
இரு கண்களுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் அவ்வப்போது விரல்களால் அழுத்துவதால் நமக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். மறந்து போன விஷயங்களை ஞாபகத்துக்கு கொண்டுவர இது உதவும். இந்த இடத்தில்தான் நினைவாற்றலுக்கான அக்குப் புள்ளிகள் உள்ளன. இதனால்தான் மறந்துபோன விஷயங்களை நினைவுக்குக் கொண்டுவர நெற்றியில் விரல் வைத்து தட்டுகிறார்கள். இது முன்னோர்கள் வழியாக நமக்கும் வந்தது.

*வலது கைப்பழக்கம் உள்ளவர் என்றால் சாப்பிடும்போது வாயின் வலது புறத்தில்தான் உணவை மென்று சுவைத்துச் சாப்பிடுவார்கள். அதே சமயம் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் சாப்பிடும்போது வாயின் இடது புறத்தை உபயோகித்து உணவை ருசிப்பது வழக்கம்.

*வெங்காயம் உரிக்கும்போது நமக்கு கண்ணீர் வரும். காரணம் அதில் உள்ள அமிலத்தன்மை. வெங்காயத்தினை உரிக்கும்போது அதில் உள்ள அமிலம் வெளிப்பட்டு காற்றில் கரைந்து உரிப்பவர் மற்றும் அருகில் இருப்பவர் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்து விடுகிறது. வெங்காயம் உரிக்கும்போது சூயிங்கம் மென்றால் கண்களில் இருந்து கண்ணீர் வெளிவராது.

*உங்கள் நாக்கு இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் உங்கள் நாக்கு பாக்டீரியா தொல்லையில்லாமல் சுத்தமாக இருக்கிறது என்று அர்த்தம். வெண்மை நிறத்தில் இருந்தால் பாக்டீரியா பாதிப்பு உள்ளது என்று பொருள்.

*வியப்பால் அவள் விழி விரிந்தது என்று கவிஞர்கள் கவிதை புனைவார்கள். விஞ்ஞான ரீதியில் இது உண்மை. அதாவது ஒரு மனிதன் மகிழ்ச்சியான ஒன்றை அல்லது ஆச்சர்யம் தரும் ஒன்றைப் பார்க்கும்போது அவனது கருவிழி 45 விழுக்காடு விரிவடைகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

*கடலில் கிடைக்கும் சங்கை எடுத்து காதில் வைத்துக் கேட்டால் அதில் இருந்து அலை ஓசை சத்தம் வருவதுபோல கேட்கும். அதனை சிலர் கடல் அலையின் ஓசை என்று நினைப்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. காதுகளில் உள்ள ரத்தக் குழாயில் ரத்தம் பாய்ந்து செல்லும் சத்தம்தான் சங்கில் எதிரொலித்து நமக்கு கடலலை ஓசையாகக் கேட்கிறது.

*கேரள மாநிலம் நீலாம்பூர் என்னும் காடுகளில் ஆதிவாசி மக்களின் சில பிரிவினரில் வினோதமான பழக்கம் நிலவுகிறது. இவர்கள் பிறக்கும் குழந்தை களுக்கு உடனடியாக பெயர் வைத்துவிடுவதில்லை. 15 வருடங்கள் ஆன பிறகே பெயர் சூட்டுகிறார்கள். அதுவரை தங்களது குழந்தைகளை மோளே (மகள்), மோனே (மகன்) என்று மலையாளத்தில் அழைக்கி றார்கள். 15 வயதாகும்போது அந்தக் குழந்தையின் தந்தையின் கனவில் கடவுள் தோன்றி `இந்தப் பெயரை உன் குழந்தைக்கு வை’ என்று சொல்வாராம். அதன் பிறகே பெயர் சூட்டும் படலம் நடக்கும்.

*ஆயிரக்கணக்கான சிட்டுக்குருவிகளை அறிவியல் ரீதியில் ஆராய்ச்சி செய்ததில் அவைகள் அனைத்தும் கசக்கும் சுபாவமுடைய வேப்பமரத்து இலை-குச்சிகளால் நேர்த்தியாக கட்டியிருப்பது கண்டறியப்பட்டது. மகத்தான மருத்துவ குணம் கொண்ட வேப்பிலையின் கசப்பான நெடிக்கு முட்டைகளையோ, குஞ்சுகளையோ வைரஸ் கிருமிகள் நெருங்குவது கிடையாது. ஆகவேதான் சிட்டுக்குருவிகள் வேப்பிலையால் கூடுகளை கட்டுகின்றன.

*நீரிலும் நிலத்திலும் வாழும் இயல்புடைய தவளைகள் தமது கண்களால் கேட்கவும் செய்கின்றன. தவளைகளின் கண்களே காதுகளாகவும் இயங்குகிறது. தவளைகளுக்கு அதனுடைய கண்களுக்குப் பின்புறம் மூளையிலிருந்து வரும் நுண்ணிய நரம்பு அமைந்துள்ளது. அதன் காதுகளின் பணியிணைச்செய்கிறது.

*கொடிய விஷத்தைக் கொண்ட தேள்கள் சேர்ந்தாற்போல் ஆறு மாதம் கூட உணவு உண்ணாமலே வாழக் கூடிய வல்லமை பெற்றது. விலங்கியல் ஆராய்ச்சியின் போது ஒரு தேள் 420 நாட்கள் எந்த வித ஆகாரமும் இல்லாமல் வாழ்ந்து சாதனை புரிந்தது.

*கண்கவர் நீலகிரி மலைக் காடுகளில் ஒரு வகை பச்சோந்தி வாழ்கிறது. இதனுடைய உடல் நீளம் 5 செ.மீட்டர் தான். இதில் ஒரு வியப்பான செய்தி என்னவென்றால், இதன் நாக்கின் நீளம் 1.25 மீட்டர். இதன் நாக்கு எப்போதும் சுருட்டிய நிலையிலேயே இருக்கும். இது ஒரு மரக்கிளையில் ஒய்யாரமாக உட்கார்ந்தபடியே தனது நீண்ட நாக்கினை நீட்டி மற்ற கிளைகளில் உள்ள புழு, பூச்சிகளை அதில் ஒட்ட வைத்து தின்றுவிடும்

*முதன் முதலில் நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை உருவாக்கியவர் வில்லியம் போர்னே என்னும் இங்கிலாந்துக்காரர். இவர், 1578-ம் ஆண்டு நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை வரைந்தார். எனினும் கார்னிலியூஸ் வான் டிரெப்பல் என்னும் நெதர்லாந்து நாட்டுக் காரர் 1620-ம் ஆண்டு முறையான நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தவர். நீரில் மூழ்கக் கூடிய ஒரு படகைத் தயாரித்த அவர் அதில் பிராண வாயு கிடைப்பதற்காக நீண்ட குழாயை இணைத்திருந்தார். நீருக்குள் மூழ்கியிருப்பவர் துடுப்பு மூலம் படகை இயக்கவேண்டும். 12 படகோட்டிகளுடன் தான் வடிவமைத்த நீர்மூழ்கிக் கப்பலை அவர் லண்டன் தேம்ஸ் நதியில் இயக்கிக் காட்டினார். 3 மணி நேரம் இந்தக் கப்பல் நீருக்கடியில் இருந்தது.

*ராணுவத்திற்கான நீர்மூழ்கிக் கப்பலை 1776-ம் ஆண்டு டேவிட் புஷ்னல் என்னும் அமெரிக்கர் வடிவமைத்தார். எனினும் சகல வசதிகளுடனும் கூடிய முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஜான் பி.ஹாலண்ட் மற்றும் சைமன் லேக் என்னும் இருவர் 1890-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தயாரித்தனர். ஜானின் நீர்மூழ்கிக் கப்பலின் டிசைனை அமெரிக்காவும் சைமன் லேக்கின் வடிவமைத்ததை ரஷியா-ஜப்பான் நாடுகளும் ஏற்றுக்கொண்டு தயாரிக்க ஆரம்பித்தன.

*ஒரு மனிதன் தினமும் சராசரியாக ஒரு மணி நேரம் 6 நிமிடங்களை பயணத்தில் கழிக்கிறான். வருடத்திற்கு ஒவ்வொருவரும் சராசரியாக 12 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்கிறார்கள்.உலக அளவில் 53 சதவீதம் பேர் கார்களிலும், 26 சதவீதம் பேர் பஸ்சிலும், 9 சதவீதம் பேர் ரெயிலிலும் இன்னொரு 9 சதவீதம் பேர் விமானங்களிலும் பயணிக்கிறார்கள். சைக்கிள் பயணம் வெறும் 3 சதவீதம்தான். 2050-ம் ஆண்டு அதிகவேக வாகனங்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகி விடும் என்பதால், அப்போது ஒரு நாளில் ஒருவர் பயணம் செய்யும் நேரம் 12 நிமிடங்களாகக் குறைந்து விடுமாம். அப்போது கார்களில் பயணம் செய்வோர் 35 சதவீதம் பேரும், பஸ்சில் 20 சதவீதம் பேரும் அதிகவேக வாகனங்களில் 41 சதவீதம் பேரும் ரெயிலில் 4 சதவீதம் பேரும் பயணம் செய்வார்கள் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள்..

*உலகின் முதல் போக்குவரத்து சிக்னல் 1890-ம் ஆண்டு லண்டன் நகரில் பயன் படுத்தப் பட்டது. இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அப்போது பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் லண்டனில் எதுவும் கிடையாது. குதிரைகள் இழுத்துச் செல்லும் பஸ்கள் மட்டுமே இயங்கின. அமெரிக்காவில் 1890ம் ஆண்டு இறுதி வாக்கில் தான் கார்கள் அறிமுகமாயின. முதல் தானியங்கி போக்குவரத்து சிக்னல் ஓகியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லாண்ட் நகரில் 1920-ம் ஆண்டு பொருத்தப்பட்டது.

*வங்கி முறையிலான கடன் கொடுக்கும் பழக்கம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டு விட்டது. பணக் கடன் வழங்கியது, கடனை அடைத்தது போன்றதற்கான ஆதார ரசீதுகள் 14-ம் நூற்றாண்டில் ஏற்பட்டதாகும். காகிதப் பணம் கடன் தருவது 17-ம் நூற்றாண்டில் வேகமாக பரவியது. தானியங்கி பணம் பட்டுவாடா செய்யும் எந்திரங்களில் பணம் எடுப்பதற்கு அட்டை வழங்குவது நமது நாட்டில் 2000-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் வேகமாக வளர்ச்சி கண்டது. எனினும் அமெரிக்காவில் 1951-ம் ஆண்டிலேயே பணம் எடுக்கும் அட்டைகள் புழக்கத்திற்கு வந்து விட்டன. டைனர்ஸ் கிளப் தனது உணவக வாடிக்கையாளர்கள் 200 பேருக்கு நிïயார்க் நகரில் உள்ள தங்களின் 27 உணவகங்களில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளும் கிரடிட் கார்டுகளை வழங்கியது. காந்த பட்டைகளுடன் கூடிய கிரடிட் கார்டு 1970-ம் ஆண்டு புழக்கத்திற்கு வந்தது.

*வாலாட்டிக் குருவி எப்போதும் ஏன் வாலை ஆட்டிக் கொண்டே இருக்கிறது தெரியுமா?… அது சுவாச உறுப்பாக பெற்றிருப்பது வாலைத்தான். எனவேதான் சுவாசிப்பதற்காக தனது வாலை இடைவிடாது ஆட்டிக் கொண்டே இருக்கிறது !

நாஸ்டர்டாமஸ் என்னும் ஐரோப்பிய தீர்க்க தரிசி !

நாஸ்டர்டாமஸ் என்னும் ஐரோப்பிய தீர்க்க தரிசி !

நம் நாட்டு சித்தர் பெருமக்களை ஒப்பிடும்போது , இவை எல்லாம் ஒன்றுமே இல்லை. என்ன பண்ணுவது? அவர் தான் மேலை நாட்டில் பிறந்து விட்டாரே ! அற்புதம் என்று தோன்றும் விஷயங்களை அவர்கள் தான் விளம்பரப் படுத்துவதில் ஜித்தர்களே. அவரை வைத்து எழுதிய புத்தகங்கள் அனைத்தும், மில்லியன் டாலர்களை சம்பாதித்துக் கொடுத்துள்ளன. சரி, நமது நண்பர்களுக்காக – அவரைப் பற்றி ஒரு சில பதிவுகள் . இந்த தகவல்கள், தற்செயலாக நான் படிக்க நேர்ந்தது. நமது நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. நிச்சயமாக சுவாரஸ்யமாக இருக்கும்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாமஸ் உலகில் கி.பி.3797 வரை என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர். சுமார் 3000 பலன்களை இவர் கூறியுள்ளதும் அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைக்கிறது. ‘நூற்றாண்டுகள்’ என்ற இவரது நூல் 942 செய்யுட்களைக் கொண்டது. ஒவ்வொரு செய்யுளிலும் நான்கு வரிகள் உள்ளன. இவைகள் காண்டமாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு காண்டத்திலும் நூறு பாடல்கள் உள்ளன..

14-12-1503ல் பிறந்த இவர் 2-7-1566ல் மறைந்தார். இவர் வாழ்வு மிக விசித்திரமான ஒன்று. இவர் கூறிய பலன்கள் பெரும்பாலும் அழிவையும் விபத்துக்களையும் கொலைகளையும் சுட்டிக் காட்டுவதால் சிறிது பயத்துடன்தான் இந்த நூலை அணுக வேண்டியிருக்கிறது. ஆனால் ஹிந்து மதம் மிக உயரிய நிலையை இந்த நூற்றாண்டில் அடையப் போகிறது என்பதையும் இவர்தான் கூறியுள்ளார். லண்டனில் ஏற்பட்ட மாபெரும் தீ விபத்து, பிரெஞ்சுப் புரட்சி, ஹிட்லரின் எழுச்சியும் வீழ்ச்சியும், கென்னடியின் கொலை போன்றவற்றை இவரால் எப்படித் துல்லியமாகக் கூற முடிந்தது என்பது ஆச்சரியகரமான விஷயம்தான்!

லத்தீனில் ஆழ்ந்த புலமை பெற்ற நாஸ்டர்டாமஸ் அம்மொழியின் செழுமையான வார்த்தைகளைக் கையாண்டிருப்பதால் அதன் உள் அர்த்தம் புரியாமல் அறிஞர்களும் ஜோதிட ஆர்வலர்களும் இன்று வரை அச்சொற்பொருள்களை அறிய தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நான்கு ஆண்டுகளில் இந்நூலை முடித்து 1555ம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி வெளியிட்டார். நூல் அச்சிடப்பட்ட மேஸ்பான்ஹோம் பிரஸ்ஸின் முன்னே வெகு தூரத்திற்கு நீண்ட வரிசையில் மக்கள் நின்று இதை வாங்கி மகிழ்ந்தனர். ஆனால் சங்கேத மொழியில் பலன்களைக் கொண்டுள்ள பாடல்கள் அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தின

அவரது மகனுக்கே அவர் ஒரு எச்சரிக்கையை சங்கேத மொழியில் அளித்திருந்தார். ஒரு கடித வடிவில் அது இருந்தது, சீஸர் என்ற பெயருடைய அவரது மகன் 22ம் வயதில் தன் தந்தையின் பெயரைத் தீய வழியில் பயன்படுத்துவார் என்றும் அது அவருக்கு நலம் பயக்காது என்றும் எச்சரித்திருந்தார் நாஸ்டர்டாமஸ். இதை அலட்சியப்படுத்திய சீஸர், தந்தையைப் போல் பலன்கள் கூற வேண்டும் என்ற ஆர்வத்தில் விவாரிஸ் என்ற நகர் அழியப் போகிறது என்று ஆரூடம் கூறினார். ஆனால் அரசாங்கப் படைகளின் பாதுகாப்பில் இருந்த அந்த நகரத்திற்கு ஒரு ஆபத்தும் நேரவில்லை. மக்கள் சீஸரைச் சூழ்ந்து கொண்டு எப்போது நமது நகரம் அழியப் போகிறது என்று கேட்கலாயினர். பளீரென்று சீஸர் ‘இன்னும் மூன்று நாட்களில்’ என்றார். அடுத்த நாள் இரவு அவரே நகருக்குத் தீ வைக்க முயன்ற போது கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு அரசாங்க வீரர்களால் கொல்லப்பட்டார்.

இதே போல நடந்த இன்னொரு விசித்திரமான சம்பவம் அவர் புகழை வெகுவாகப் பரப்பி விட்டது. புகழ் பெற்ற மருத்துவராகவும் தீர்க்கதரிசியாகவும் அவர் திகழ்ந்ததால் பிரான்ஸிலுள்ள பெரும் தனவந்தர்களும் பிரபுக்களும் அவரை அழைத்துத் தங்கள்குறைகளைப் போக்கிக் கொள்வது வாடிக்கையாக இருந்தது, ஒரு சமயம் லொரெய்ன் என்ற மாகாணத்தில் இருந்த பெயின்ஸ் கோட்டையின் உரிமையாளரான லார்ட் ப்ளோரின்ஸ்வில்லி அவரை அழைத்தார். அவரது தாயாரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று பிரபு ப்ளோரின்ஸ்வில்லி கேட்டுக் கொள்ளவே சலான் என்ற தனது நகரிலிருந்து பயணப்பட்டு லொரெய்ன் வந்து தன் சிகிச்சையைத் தொடங்கினார் நாஸ்டர்டாமஸ். சீக்கிரமே அவர் குணமடைந்தார். இதனால் மனம் மகிழ்ந்த பிரபு தன் தாயார் குணமடைந்ததைக் கொண்டாட ஒரு பெரும் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். விருந்து நடக்கும் நாளன்று காலையில் தோட்டத்தில் நாஸ்டர்டாமஸுடன் அவர் உலாவச் சென்றார். அங்கே ஒரு இடத்தில் இரண்டு குட்டிப் பன்றிகள் இருந்தன. ஒன்றின் நிறம் கறுப்பு. இன்னொன்றின் நிறம் வெள்ளை. அதைச் சுட்டிக் காட்டிய ப்ளோரின்ஸ்வில்லி நாஸ்டர்டாமஸிடம் கிண்டலாக “இந்த இரண்டு பன்றிகளின் எதிர்காலம் பற்றிச் சொல்ல முடியுமா” என்று கேட்டார். நாஸ்டர்டாமஸின் உண்மையான பெருமை அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

இரண்டு பன்றிகளையும் உற்றுப் பார்த்த நாஸ்டர்டாமஸ் ப்ளோரின்ஸ் வில்லியிடம் “இதோ இந்த கறுப்புப் பன்றி ஒரு ஓநாய்க்கு உணவாகப் போகிறது. இதோ இந்த வெள்ளைப் பன்றி நமக்கு இரவு விருந்தில் உணவாகப் போகிறது” என்றார். ப்ளோரின்ஸ்வில்லி இதைப் பொய்யாக்கி விட வேண்டுமென்று எண்ணம் கொண்டு தனது சமையல்காரரை ரகசியமாக அழைத்து கறுப்புப் பன்றியை விருந்து உணவிற்குக் கொல்லுமாறு கட்டளையிட்டார். இரவு விருந்தில் தனது அருகில் உட்கார்ந்திருந்த நாஸ்டர்டாமஸிடம் “உங்கள் கூற்றுப் பொய்யாகி விட்டது. இதோ நாம் சாப்பிடுவது கறுப்புப் பன்றியைத்தான்” என்றார். நாஸ்டர்டாமஸோ சிரித்தார். “இல்லை, இது நான் சொன்ன வெள்ளைப் பன்றிதான்” என்றார். உடனே பிரபு தன் சமையல்காரரை அழைத்தார். சமையல்காரர் நடந்ததை விளக்கினார். “கறுப்புப் பன்றியைக் கொன்ற பின்னர் சில நிமிடம் நான் வெளியே போனேன். அப்போது ஒரு நொண்டி ஓநாய் உள்ளே வந்து அந்த மாமிசத்தை உண்டு விட்டது. வேறு வழியின்றி வெள்ளைப் பன்றியையே சமைத்தேன்” என்றார். இந்த விஷயம் வெளியில் பரவவே நாஸ்டர்டாமஸின் புகழ் பெருமளவில் பரவியது. அவரை பய பக்தியுடன் அனைவரும் வணங்கினர்.

இன்னொரு சம்பவம்: ஒரு நாள் மாலையில் அவரைத் தாண்டிச் சென்ற ஒரு இளம் பெண் தனது மாலை வணக்கத்தைத் தெரிவித்து அருகிலுள்ள காட்டில் சுள்ளிகளைப் பொறுக்கப் போவதாகச் சொன்னாள். நாஸ்டர்டாமஸும் அவளிடம் “மாலை வணக்கம் இளம் பெண்ணே” என்று கூறினார். சற்று நேரம் கழிந்து இரவான போது அவள்திரும்பி வந்தாள். அவருக்குத் தனது இரவு வணக்கத்தைத் தெரிவித்தாள். நாஸ்டர்டாமஸ், “மாலை வணக்கம் கூறிய போது இளம் கன்னியாகப் போனாய்; இப்போது இளம் மனைவியாக வந்து விட்டாயே” என்று சிரித்துக் கொண்டே கூறினார். அரண்டு திகைத்துப் போன அவள் ஓடியே விட்டாள். தனது காதலனைக் காட்டில் சந்தித்த அவள் கன்னிமை இழந்ததை நாஸ்டர்டாமஸ் போகிற போக்கில் கூறியது அவரது எதையும் உணரும் ஆற்றலை உணர்த்தியது. நாளுக்கு நாள் அவர் புகழ் பெருகவே அவர் வாயிலிருந்து என்ன சொல் உதிரப் போகிறது என்பதை அனைவரும் அறிய ஆவலுற்றனர். அவர் மரணத்திற்குப் பின்னும் கூட அவர் ஆரூடம் பலித்ததுதான் விசித்திரத்திலும் விசித்திரம்!

மனித உடம்பில் இவ்வளவு விஷயங்களா? ஆச்சர்யம்! ஆச்சர்யம்!!!

மனித உடம்பில் இவ்வளவு விஷயங்களா? ஆச்சர்யம்! ஆச்சர்யம்!!!
1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது.

2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதார ணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்.

3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள் ஒரே அளவாக இருப்பதில்லை காரணம்கருவில் சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக வளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வத்தியாசம் தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது. நம் இடது கால் செருப்பை விட வலதுகாலின் செருப்பு வேகமாக தேய்வது கூட இந்த சிறு வித்தியாசத்தால் தான்.

4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள் தொடர்ந்து 24 மணி நேரம் வரை செயல்படுகிறது. அவனது எலும்பு தொடர்ந்து 4 நாட்களை வரை செயல் படுகிறது. தோல் தொடர்ந்து 5 நாட்கள் வரை பணி செய்கிறது. கண் மற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம் பணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம் செயல்படுகிறது. அவனது சிறுநீரகம் தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது. ஆக அவனது உயிர் பிரிந் தாலும் அவனது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படவில்லை.

5. 50 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 300 நாட்களில் குழந்தை பிறக்கிறது. 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது. இது தவிர மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறப்பும் சற்று முன்னாடியே (குறை பிரச வம்) அமைந்து விடுகிறது. பெண்கள் இது விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும்.

6. பகலில் 8 மில்லிமீட்டர் சுருங்கி இரவில் 8 மில்லி மீட்டர் உயர்ந்து விடுகிறோம். காரணம் பகலில் நமது வேலைகள் செய்யும்போது தண்டு வடத்திலுள்ள குறுத்தெலும்பு வட்டுகள் ஈர்ப்பு விசைகாரணமாக அழுத்துகின்றன. இதனால் உயரம் குறைகிறது. இரவில் எவ்வித விறைப்புத் தன்மையும் இல்லாமல் படுத்து உறங்குவதால் நமது உடம்பின் உயரம் கூடுகிறது.

7. நம் இரத்தத்தில் சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 127 நாட்கள் தான் அதன் பிறகு அது மடிந்து விடும். புது சிவப்பணுக்கள் உருவாகும். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள்.

8. நம் உடலில் சுமார் 20 லட்சம் வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அவை ஒரு நாளில் சராசரியாக 5 லிட்டர் முதல் 6 லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின்றன.

9. நமது கைகளில் நடுவிரலில் நகம் வேகமாகவும், கட்டை விர லில் நக ம் மெதுவாகவும் வளர்கின்றன. நம்முடைய உடல் பாரத்தால் கை விரல் நகத்தைவிட கால்விரல் நகம் மெதுவாக வளர்கிறது.

10. நாம் இரவில் தூங்கும் போது அசையாமல் தூங்குவதில்லை, சுமார் 40 முறை அந்தப் பக்கம், இந்த ப்பக்கமாகப் புரண்டு படுக்கிறோம்.

11. நம்முடைய உடல்தோலின் பருமன் மிகக் குறைந்தபட்சம் ½ மில்லி மீட்டர் கண்ணிமைகளிலும், அதிகபட்சமாகப் பருமன் 4 முதல் 6 மில்லி மீட்டராக உள்ளங்கைகளிலும், அடிப் பாதங்களிலும் அமைந்திருக்கிறது.

12.மூளை அதிகமாக வேலை வாங்கும் மனித உறுப்பு கட் டை விரல்கள்.

13. மனித உடலில் மிகவும் கடினமான பாகம் தாடை எலும்பு.

14. மனித மூளை 80 முதல் 85 சதவீதம் தண்ணீரைக் கொண்டதாகும்.

15. கல்லீரல் 500 விதமான இயக்கங்களை நிகழ்த்துகிறது.

16. நம் ஒடல் தசைகளின் எண்ணிக்கை 630.

17. நம் உடலின் மொத்த எடையில் 12 சதவீதம் பங்கு ரத்தம் உள்ளது.

18. நம் தலைமுடி 1 லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை உள் ளன. அவை 1 மாதத்திற்குள் 1-1/4 செ.மீ. வளர்கின்றன.

19. மண்டை ஓடு மனிதனின் 80 ஆம் வயது வரை வளர்கிறது.

20. மனித முகங்களை மொத்தம் 520 வகைகளுக்குள் அடக்கி விடலாம்.

21. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ.

22. நாம் படுத்திருக்கும் போது 1 நிமிடத்திற்கு 9 லிட்டர் மூச்சுக் காற்றும் உட்கார்ந்திருக்கும் போது 18 லிட்டர் மூச்சுக்காற்றும், நடக்கும் போது 1 நிமிடத்திற்கு 27 லிட்டர் மூச்சுக்காற்றும் தேவைப்படுகிறது.

23. நமது சிறு நீரகத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வடிகட்டிகள் இருக்கின்றன. இவைகள் ஊறுகாய், உப்புக்கருவாடு, ஆல்கஹால் போன்றவற்றால் பாதிப்படைகிறது.

24.பெண்களைவிட ஆண்களுக்கு மூளை மிகப்பெரியது. பெண்களை விட சுமார் 4000 உயிரணுக்கள் ஆண்கள் மூளையில் இருக்கிறது.

25. மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்.

26. நமது தலையின் எடை 3.175 கிலோ கிராம்.

27. மூளையின் 100கோடி நியூரான்கள் நமக்கு 4 வயதுக்குள் கிடைத்து விடும்.

28. நாம் ஒரு பொருளை இறுக்கிப்பிடிக்க நம்கட்டை விரலிலுள்ள 3 தசைகள் தான் பெரும் பங்கு அளிக்கிறது. மனிதனை ஒத்த உருவம் கொண்ட சிம்பன்ஸி குரங்கிற்கு இந்த 3 தசைகள் கிடை யாது.

29. மூளையின் மடிப்புகளே அறிவு கூர்மையை தீர்மானிக்கிறது.

30. மனித உடலில் இருக்கும் இரத்தம் 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும்.

31. பிறந்த குழந்தைக்கு வெள்ளை / கறுப்பு நிறங்களை தவிர வேறு நிற வேறுபாடே தெரியாது.

32. மனித உடலின் தோலின் எடை 27 கிலோ கிராம்.

33. மனித உடலில் 33 முள்ளெலும்புகள் உள்ளன.

34. இதயத்தை, சிறுநீரகத்தை, கல்லீரலை, முழங்காலை மாற்றலாம். ஆனால் மூளையை மட்டும் மாற்றவே முடியாது. காரணம் ஞாபங்கள், நினைவுகள், எதிர்காலத்தில் மாற்ற முடிந்தாலும், மாற்றப்பட்டவன் வேற்று மனிதன் தான் அவன் அந்நியன் தான்.

35. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. கண் இமைகள் தான் நம் வைப்பர்கள். அவற்றின் விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும் போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம் அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும் போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணீர் வினியோகம் ஆகிறது.

36. நமது உடலிலுள்ள செல்கள் பிரிந்து இரண்டாகும் தன்மையு டையது. ஒரு நாளைக்கு நம் உடலில் 60 கோடி செல்கள் இறந்து புது செல்கள் பிறக்கின்றன.

37. தலைமுடி 2 வருஷத்திலி ருந்து 4 வருஷம் வரை வளர்கி றது. அதன்பின் 3 மாதம் வளராமல் இருந்து உதிர்கிறது. பிறகு புது கேசம் வளர்கிறது.

38. ஓர் அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54 தசைகள் பணிபுரிய வேண்டியுள்ளது.

39. 70 வயது வரை வாழும் ஒரு மனிதனின் இதயம் 250 கோடி தடவை துடிக்கிறது. ஒரு பம்பின் செயல்பாட்டிற்கு ஒப்பிட்டால் இதயம் ஒரு நாளைக்கு 18 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை பம்ப் செய்கிறது. இதயம் சீராக துடிக்க பொறாமை, கெட்ட சிந்தனை இவைகளை விட்டொழித்தால் போது ம், உயிர் வாழும் ஆண்டுகள் அதிகரிக்கும்.

40. நமது நரம்பு மண்டலம் தான் மூளைக்குத் தகவல்களை அனுப்புகிறது. அது ஒரு நிமிடத் திற்கு 6 லட்சம் தகவல்களை அனுப்புகிறது.

41. நமது உடலின் நீளமான எலும்பு தொடை எலும்பு தான்.

42. மனிதன் சிந்திக்கும் வேகம் நிமிடத்திற்கு 500 சொற்கள் என்றும் பேசும் வேகம் நிமிடத்திற்கு 100 சொற்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

43. மூளையில் ஏற்படும் வலியை நம்மால் உணரமுடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின் வலியை உணர்த்துவது மூளையே.

44. பெண்களைவிட ஆண்களுக்கு 40 சதவீ தம் கூடுதலாக வியர்க்கிறது.

45. உயிர்வாழ உடலுக்குத் தேவை 13 வைட்டமின்கள்.

46. உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி மட்டுமே.

47. நம் வாழ்நாளில் 50 டன் உணவுப் பொருளையும் 11 ஆயிரம் காலன் திரவத்தையும் உட்கொள்கிறோம்.

48. நம் உள்ளங்கைகளில் ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் 3000 வியர்வை சுரப் பிகள் இருக்கின்றன.

49. நம்முடைய தலை ஒரே எலும்பால் உருவானது அல்ல, 22 எலும்புகளில் உருவானதாகும்.

50. மனித உடலில் 50 லட்சம் முடிக்கால்கள் உள்ளதாகவும், பெண்களின் முடியை விட ஆண்களின் முடி வளர்ச்சி விரைவானது என் றும் அறியப்படுகிறது.

51. ஆரோக்கியமான மனிதன் 7 நிமிடங்களில் தூங்கி விடுகின்றான்.

52. மூளையின் கனபரிமாணம் 1500 கன சென்டி மீட்டர்.

53. மனிதன் பயன்படுத்தும் சொல் தொகுதி 5000 முதல் 6000 வார்த்தைகள் தான். சாதாரண மனிதன் முதல் விஞ்ஞானிகள் வரை சராசரியாக இவ்வளவு வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

54. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள் உள்ளன.

55. நம் நகம் தினமும் 0.1 மில்லி மீட்டர் வீதம் வளர்கிறது.

56. நாள் ஒன்றுக்கு நாம் 23,040 தடவை சுவாசிக்கின்றோம்.

57. மனிதனின் உடலிலுள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை 46 (23 ஜோடி)

58. நாம் பேசக்கூடிய வார்த்தை க்கு 72 தசைகள் வேலை செய்ய வேண்டும். பேச்சை குறைத்தால் சாதனைகளை நிகழ்த்தலாம்.

59. நமது நுரையீரல் 3 லட்சம் துவாரங்களையும் இரத்த குழாய்களையும் கொண்டதாக இருக்கிறது. இவைகளின் நீளம் 2400 கி.மீ. உள்ளது.

60. கண்களில் உள்ள லென்ஸ் ஆயுள் முழுவதும் வளரும்.

61. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன.

62. முளையின் நிறம் பழுப்பான நீலநிறம்.

63. உடலில் பொட்டாசியம் அளவு 70 சதவீதமாக குறைந்துவிட் டால் அசதி, சோர்வு, வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படும்.

64. ஒரு மனிதன் தினமும் 2 லிட்டர் எச்சிலை ஊறச் செய்கிறான். 1.14லிட்டர் வியர்வை வெளியிடுகிறான்.

65. சிந்தனையின் வேகம் அல்லது ஒரு யோசனையின் தூரம் என்று சொல்லுகிறோம் இந்த தூரம் 150 மைல்களாகும்.

66. ஓர் ஆணின் இதயத்தைவிட பெண்ணின் இதயம் அதிகமாக துடிக்கிறது.

67. மணிக்கட்டிலிருந்து நடுவிரல் நுனிவரை உள்ள நீளமும், மேவாய் கட்டையிலிருந்து நெற்றி உச்சி வரை உள்ள நீளமும் எல்லாருக்கும் சமமாக இருக்கும்.

68. ஒரு முறை வெளியாகும். ஆணின் விந்தில் 30 கோடி உயி ரணுக்கள் வரை இருக்கும்.

69. உடலில் உண்டாகும் உஷ்ணம் வெளியேறிவிடாமல் தடுக்கவே ரோமம் உள்ளது.

70. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம் 30 செகண்டு ஆகும்.

71. மண்ணீரலில் சுரக்கும் ஒரு வகை நீர் ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று சிறிய அறைகளைப் பாதிக்கிறது. இதனால் தான் மனிதனுக்கு கோபம் வருகிறது.

72. மனித மூளையில் தாமிரத்தின் அளவு 6 கிராம் ஆகும்.

73. ஆட்ரினல் சுரப்பி அளவுக்கு அதிகமாக நீரை சுரக்கத் தொடங்கிவிட் டால் ஆணுக்கு பெண்குணமும், பெண்ணுக்கு ஆண்குணமும் ஏற்படும்.

74. தானாக மூச்சை அடக்கி தனக்குத்தானே மரணம் ஏற்படும்படி செய்ய எவராலும் முடியாது.

75. நம் மூக்கில் வாசனையை நுகரும் செல்கள் 50 லட்சம் உள்ளன. ஆனால் நாயின் மூக்கில் 22கோடி நுகரும் செல்கள் உள்ளன. அதனால் மோப்ப சக்தி அதிகம். காவல் துறையில் வேலை.

76. நம் இதயத்தின் எடை 10 அவுன்ஸ் தான். அவரவர் கைவிரல் 5 யையும் பொத்திப் பார்த்தால் என்ன அளவு இருக்குமோ அதே அளவு தான் அவரவர் இதயம் இருக்கும்.

77. நம் நுரையீரலில் உட்புறம் அமைந்துள்ள ‘ஆலவியோலி’ என் னும் சிறிய காற்று அறைகளின் எண்ணிக்கை மட்டும் 30 கோடியாகும்.

78. மூளை 65 சதவீதம் கொழுப்பு பொருளால் ஆனது.

79. இரத்தத்தில் 300 கோடி வெள்ளை அணுக்கள் உள்ளன.

80. மனிதனுக்கு 3 வகையான பற்கள் உண்டு.

81. நமது நாக்கில் சுவை உணரும் மொட்டுக்கள் 9000 உள்ளன.

82. நம் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசைகள் உள்ளன.

83. எலும்புகளின் துணை இன்றி தானே அசையும் தசை நாக்கு.

84. மனித உடலில் அதிக செல்களால் உருவான பகுதி மூளை,மூளையின் வெளிப்பகுதி மட்டுமே 8 பில்லியன் செல்களால் உருவானது.

85. ஒரு மனிதன் தன் தாழ்நாளில் 23 வருஷம் தூங்குகிறான்.

86. ஒரு பெண் பிறக்கும் போதே அவள் சுமார் 3-½ லட்சம் கரு முட் டைகளோடு தான் பிறக்கிறாள். இந்த முட்டைகளை ஒரு டீஸ் பூனில் 10 லட்சம் நிரப்பலாம்.

87. 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 5600 மில்லிலிட்டர் ரத்தம் உடம்பிலிருக்கும்.

88. பெண்களுக்கு வாழ்நாளில் மாத விடாய் சுமார் 375 முறை ஏற் படுகிறது.

89. இதயம் ஒரு நாளைக்கு சுமார் 1லட்சம் தடவை லப்டப் செய்கி றது. வருஷத்திற்கு 4 கோடி தடவை.

90. நமது தோலின் பரப்பளவு சுமார் 20 சதுரஅடிகள்.

91. மனித உடலிலுள்ள பாஸ்பரசைக் கொண்டு 20 ஆயிரம் தீக்குச்சிகள் செய்யலாம்.

92. மனித உலின் கார்பனைக் கொண்டு 900 பென்சில்களை உரு வாக்கலாம்.

93. மனித உடலிலுள்ள கொழுப்பைக் கொண்டு 7 பார் சோப்புகளை செய்ய லாம்.

94. மனித உடலின் இரும்பைக் கொண்டு 2 அங்குல ஆணி ஒன்று செய்யலாம்.

95. மனித உடலில் அதிகமாக காணப்படும் தாதுப்பொருள் கால்சியம்.

96. இரத்தம் சுமார் 97,000 கிலோ மீட்டர் நீளமுள்ள இரத்த நாளங்களிலி ருந்து இதயம் வழியே நிமிடத்திற்கு 70 தடவை செல்கிறது.

97. உள் வாங்கும் காற்றில் ஆக்ஸிஜன் குறைவாகி கார்பன்டை ஆக்சைடு அதிகமாகிவிட்டால் உபரியாக காற்றை உள்வாங்க கொட்டாவி விடுகிறோம்.

98. மனிதன் 21 வயது முடிவதோடு உடலின் எல்லா உறுப்புகளின் வளர்ச்சியும் நின்று விடுகிறது. இறுதிவரை தொடர்ந்து வளர்வது காது மட்டும்தான் சின்னதாக.. நம்மால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வளர்ச்சி.

99. 60 வயது வரை மனிதன் வாழுகின்றான் என்றால் அந்த மனிதன் ஒரு நாளைக்கு 10 நிமிடம் வீணாக்கினால் அவன் ஆயுளில் 5மாதங்கள் வீணாக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அவயத்தின் படைப்பின் நுட்பத்தை நவீன விஞ்ஞானத்தின் மூலம் காணும் போது பெரும் வியப்பில் ஆழ்த்தும் அத்தனை ஆச்சரியங்களையும் எழுதி முடித்துவிட முடியாது.

உதாரணத்திற்கு, நமது மூளையைப் பற்றி நவீன விஞ்ஞானம் அறிந்து கொண்டது மிகமிக சொற்பமானது தான் இன்னும் தெரியாத புரியாத விளங்கிக் கொள்ள முடியாத விநோதங்கள் ஏராளம், ஏராளம்.

இந்து மதம் பற்றிநாஸ்டர்டாமஸ் கணிப்பு..!

இந்து மதம் பற்றிநாஸ்டர்டாமஸ் கணிப்பு..!
நாஸ்டர்டாமஸ் சிறுவயதில் யூதர்களின் மொழியான ஹீப்ரு மொழியைத் தன் தாத்தாவிடமிருந்து கற்றுக் கொண்டார். லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றதோடு கணிதத்திலும் தேர்ச்சி பெற்றார். இத்தோடு ஜோதிடத்தின் மர்மங்களையெல்லாம் ஆழ்ந்து கற்று அதில் நிபுணரானார். தாத்தா இறந்தவுடன் தன் சொந்த ஊருக்குத் திரும்பி பெற்றோருடன் வாழலானார். இயற்கையாகவே செழுமையான குடும்பமாக இருந்ததால் அவர் வாழ்நாளில் ஒரு நாளும் பணத்திற்காகத் துன்பப்பட்டதுமில்லை; செலவழிக்கத் தயங்கியதுமில்லை!

பதினேழாவது வயதில் சட்டம் பயில அவிக்னான் என்ற பெரிய நகருக்கு அவர் சென்றார். அங்கு அவரது புத்தி சாதுரியத்தால் அனைவரையும் விஞ்சி நின்றார். ஆயினும் அவர் பைபிளுக்கு எதிரான கருத்துக்களை துணிச்சலாகச் சொல்லவே அவரது பெற்றோர் அவருக்குத் தண்டனை கிடைத்து விடும் என்று பயந்து அவரை ஊருக்குத் திரும்பி வரச் சொல்லி வற்புறுத்தினர். சொந்த ஊருக்கு வந்த நாஸ்டர்டாமஸ் பின்னர் மாண்ட்பெல்லியர் என்ற நகருக்குச் சென்று தனது 19ம் வயதில் மருத்துவம் பயில ஆரம்பித்தார். 1526ல் பெரிய மருத்துவரானார்.

சலான் என்ற நகரில் அவரது வீட்டில் மேல் மாடியில் ஒரு சிறிய அறை இருந்தது. அதைத் தனது பணிகளுக்கான அறையாகக் கொண்ட அவர் அதில் அடிக்கடி தீவிர தியானத்தை மேற்கொண்டு சமாதி நிலையை அடைந்தார். அவர் அகக்கண்ணில் எதிர்காலம் பற்றிய காட்சிகள் தோன்றலாயின அவர் எதிர்காலத்தில் பயணிக்கும் காலப் பயணியாக மாறித் தனக்குப் புலப்பட்டதை எல்லாம் குறித்துக் கொண்டார். அதன் விளைவுதான் அவரது ‘செஞ்சுரீஸ்’ என்ற எதிர்காலக் கணிப்பு நூல்!.

அந்நூலில் சங்கேத பாஷையில் அமைந்த அவரது பாடல்களில் இருந்து சில எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம்.
மூன்றாம் காண்டத்தில் 57வது க்வாட்ரெய்னில் (நான்கு வரிச்செய்யுள்) உள்ள நான்கு வரிகள் இவை:-
பிரிட்டிஷ் தேசம் ஏழு முறைகள் மாறுதலைச்சந்திக்கும்
290 ஆண்டுகளில் ரத்தக் கறை தோயும்
ஜெர்மனியில் விடுதலைக்கு ஆதரவிருக்காது
துருக்கிய காலிப்கள் மாறியிருக்கும் ரஷியாவைக் காண்பர்

இங்கிலாந்து சந்தித்த ஏழு மாறுதல்கள்
1)1485ல் பெஸ்வொர்த்தில் நடந்த போர். இங்கிலாந்தை ட்யூடர் வம்சம் ஆள ஆரம்பித்தது

2)1533ல் ரோமுடனான தொடர்பை எட்டாம் ஹென்றி முறித்துக் கொண்டார்.

3)1553ல் ஹென்றியின் மகள் மேரி ரோமன் கத்தோலிக்க மதத்தை மீண்டும் கொண்டு வந்தார். ப்ராடஸ்டண்டுகள் கொடுமைக்குள்ளாக்கப்பட்டனர்

4)1558 மேரியின் ஒன்றுவிட்ட சகோதரி ப்ராடஸ்டண்டு மஹாராணி ஆனார்.

5)1649ல் பிரிட்டிஷ் அரசர் முதலாம் சார்லஸின் தலை பொதுமக்கள் முன்பாக வெட்டப்பட்டது. ஆலிவர் க்ராம்வெல் சர்வாதிகாரியானார்.

6)1688ல் முதலாம் சார்லஸின் மகன் இரண்டாம் ஜேம்ஸ் செட்ஜ்மூர் போரைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது

7)1775ல் பங்கர் ஹில் போரைத் தொடர்ந்து அமெரிக்கா பிரிட்டனுடனான தொடர்பை முறித்துக் கொண்டது. உலகில் வானளாவிய அதிகாரம் கொண்டிருந்த பிரிட்டிஷ் வீழ்ச்சியை நோக்கிச் சரிய ஆரம்பித்தது. அமெரிக்கா உலகின் உன்னத இடத்தை நோக்கி நடை போட ஆரம்பித்தது.

இதே போல ஒவ்வொரு பாடலும் ஒரு எதிர்காலக் காட்சியைக் காட்டுவது வியப்பூட்டுவதாக உள்ளது.

ஹிந்து மதம் பற்றிய நாஸ்டர்டாமஸின் எதிர்காலக் கணிப்பு இரண்டாம் காண்டத்தில் 13வது பாடலாக மலர்கிறது:-
ஆன்மா இல்லாத உடல் இனியும் புனிதமாகக் கருதப்படமாட்டாது
இறந்த தினத்தன்று ஆன்மா அடுத்த பிறவியை நோக்கிப் பயணிக்கிறது
இறைவனின் நினைப்பு ஆத்மாவை சந்தோஷத்திற்குள்ளாக்கும்
என்றுமுள்ள அக்ஷரத்தைக் கண்டவுடன்.

‘இதர மதங்கள் மறுபிறவியை ஏற்பதில்லை. ஹிந்து மதம் ஒன்றே உடல் ஆத்மாவிற்கு ஒரு சட்டை தான்; நலிந்து கிழிந்த சட்டையை உதறுவது போல ஆன்மா பழைய சரீரத்தை உதறி விட்டு அடுத்த சரீரத்தை நோக்கிச் செல்கிறது என்று கூறுகிறது. இறுதி வரியில் வரும் அக்ஷரம் ஓம் என்பதாகும். ஆக மறுபிறப்புக் கொள்கையை வலியுறுத்தும் ஹிந்து மதக் கொள்கை உலகில் ஓங்கி உயரும் என்பதை நாஸ்டர்டாமஸ் இந்தப் பாவில் தெளிவாக விளக்குகிறார்’.

இப்படி ஒரு விளக்கத்தைத் தருபவர் பெங்களூரைச் சேர்ந்த திரு ஜி.எஸ்,ஹிரண்யப்பா. இவர் ஹிந்து டெஸ்டினி இன் நாஸ்டர்டாமஸ் என்ற நூலில் ஹிந்து மதம் பற்றி நாஸ்டர்டாமஸ் பல பாடல்களில் பூடகமாகக் கூறியுள்ளதைத் தகுந்த ஆதாரங்களுடன் விளக்குகிறார்.
நாஸ்டர்டாமஸின் பாடல்களை விளக்கி உலகின் அனைத்து மொழிகளிலும் ஆயிரக்கணக்கான நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளது குறிப்பிடத்தகுந்த ஒரு செய்தியாகும்!

ஆன்மிக அற்புதங்கள் நிரம்பிய சிதம்பரம் நடராஜர் கோவில்

ஆன்மிக அற்புதங்கள் நிரம்பிய சிதம்பரம் நடராஜர் கோவில்

இந்த உலகத்தின் ஒட்டு மொத்த மையப்புள்ளி அமைத்திருக்கும் இடமாக, தமிழகத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த உண்மையை கண்டு, இன்றைய நவீன விஞ்ஞான உலகம் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.

நோயின்றி வாழ:

சிதம்பரம் நடராஜர் கோவில், இன்றைய அறிவியலுடன் மட்டுமல்ல, மனிதர்களின் உடற்கூறுடன் பொருந்துவதும் அதிசயமே. ஆகவே தான், நம்மை, அங்கு சென்று வழிபட வைத்து, உலகத்தின் காந்த சக்திக்கு கட்டுப்பட்டு, நோயின்றி வாழ, நம் முன்னோர் வழிகாட்டியுள்ளனர். இக்கோவிலின் அற்புதங்களும், ரகசியங்களும், ஆச்சரியங்களும் ஏராளம். இன்னும், மனித ஆற்றலினால் கண்டுபிடிக்க இயலாத, பேருண்மைகள் இக்கோவிலின் அமைப்பில் புதைந்து உள்ளன!

கால் பெருவிரலில்…:

சர்வதேச ஆன்மிக அமைப்புகள், கடந்த எட்டு ஆண்டுகளாக, சில கோடி டாலர்கள் செலவு செய்து, தீவிர ஆராய்ச்சி நடத்தி, சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில் தான், மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக கண்டுபிடித்துள்ளன. இதை, பல நூற்றாண்டுகளுக்கு முன் அறிந்து, இக்கோவிலை, நம் முன்னோர் கட்டினர்; அவர்கள், ஆன்மிகத்தின் உள் அறிவியலை

புகுத்திய ஞானிகள்!

நவீன ஆய்வகங்கள், விலை உயர்ந்த நவீன கருவிகள் ஏதும் இல்லாத, அக்காலத்தில், இதை முன்னோர் கண்டறிந்துள்ளனர் என்பது, நம்மை வியப்பின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது! அணுத் துகள்கள் அசைந்தபடியே இருக்கும் என்ற உண்மையை, ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து, அதை பூமியின் மையப்புள்ளியில் அமர்த்தியது பெரிய சாதனை தான்!

அறிவியல் நூல்:

இதை, 5,000 ஆண்டுகளுக்கு முன்பே, கண்டறிந்த திருமூலரின் சிந்தனை ஆற்றலும், சக்தியும் மகத்தானது. திருமூலரின் திருமந்திரம், உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும். இதை உணர, இன்றைய அறிவியலுக்கு மேலும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்! ‘சிதம்பரம் நடராஜர் கோவில் ரகசியம்’ என்று பலரும், பல தகவல்களை கூறிவரும் வேளையில், கோவிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த விவரங்கள் அளவிட இயலாதவை. முன்னோர் செய்த அனைத்து செயல்களும், ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது. மன்னர்கள் கட்டிய பிரமாண்டமான கற்கோவில்களுக்கு, பின்னால் இருக்கிற பல அற்புதங்கள், அதைக் கட்டியவர்களின் நுண்ணறிவை வெளிப்படுத்துகிறது.

ஒன்பது வாயில்:

மனித உடலை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டுள்ள, சிதம்பரம் கோவிலில், ஒன்பது நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும், ஒன்பது வாயில்களை குறிக்கின்றன. கோவிலின் விமானத்தின் மேலே உள்ள பொற்கூரை, 21,600 தங்கத் தகடுகள் மூலம் வேயப்பட்டுள்ளது; இது, ஒரு மனிதன், தினமும் சராசரியாக, 21,600 தடவை சுவாசிக்கிறான் என்பதை குறிக்கிறது. இந்த தங்கத் தகடுகளை பொருத்த, 72 ஆயிரம் தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன; இந்த எண்ணிக்கை, மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளையும் குறிக்கின்றன. இதில் பல, கண்ணுக்குத் தெரியாத, உடலின் பல பாகங்களுக்கு சக்தியை சேர்ப்பவையும் அடங்கும். திருமூலர், திருமந்திரத்தில், ‘மானுடராக்கை வடிவு சிவலிங்கம், மானுடராக்கை வடிவு சிதம்பரம், மானுடராக்கை வடிவு சதாசிவம், மானுடராக்கை வடிவு திருக்கூத்தே’ என்று கூறுகிறார். அதாவது, ‘மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்’ என்ற பொருளைக்
குறிக்கிறது.

பஞ்சாட்சர படிகள்:

பொன்னம்பலம், சற்று இடதுபுறமாக அமைக்கப்பட்டுள்ளது; இது, நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய, ஐந்து படிகளை ஏற வேண்டும். இந்த படிகள், பஞ்சாட்சர படிகள் என அழைக்கப்படுகின்றன. அதாவது, ‘சி, வா, ய, ந, ம’ என்ற ஐந்து எழுத்தே அது! கனகசபை, பிற கோவில்களில் இருப்பதை போன்று, நேரான வழியாக இல்லாமல், பக்கவாட்டில் வருகிறது. இந்த கனகசபை தாங்க, நான்கு தூண்கள் உள்ளன; இது, நான்கு வேதங்களையும் குறிக்கின்றன. பொன்னம்பலத்தில், 28 தூண்கள் உள்ளன. இவை, 28 ஆகமங்களையும்; சிவனை வழிபடும், 28 வழிகளையும் குறிக்கின்றன. இந்த 28 தூண்களும், 64 + 64 மேற்பலகைகளை (பீம்) கொண்டன; இது, 64 கலைகளை குறிக்கின்றன. இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள், மனித உடலில் ஓடும் பல ரத்த நாளங்களை குறிக்கின்றன. பொற்கூரையின் மேல் இருக்கும் ஒன்பது கலசங்கள், ஒன்பது வகையான சக்தியை குறிக்கின்றன. அர்த்த மண்டபத்தில் உள்ள ஆறு தூண்கள், ஆறு சாஸ்திரங்களையும்; அர்த்த மண்டபம் அருகில் இருக்கும் மண்டபத்தில் உள்ள, 18 தூண்களும், 18 புராணங்களையும் குறிக்கின்றன.

ஆனந்த தாண்டவம்:

சிதம்பரம் நடராஜரின், ஆனந்த தாண்டவம் என்ற கோலம், ‘காஸ்மிக் டான்ஸ்’ என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகிறது. இந்து மத சாஸ்திர, சம்பிரதாயங்கள் அறிவியல் ரீதியானவை. அவை, மனிதனை மேம்படுத்த, உயர்ந்த தத்துவங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டவை. இத்தகைய சிறப்பு மிக்க கோவிலுக்கு, வரும், ?ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

ஆகாய உருவில் இறைவன்!

சிதம்பர ரகசியம் என்பது, சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும். சிற்சபையில், சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது, ஒரு சிறு வாயில். இதன் திரை அகற்றப்படும்போது, கற்பூர ஆரத்தி காட்டப்படும். இதனுள்ளே, திருவுருவம் ஏதும் இல்லை. தங்கத்தினாலான, வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே, வில்வ தள மாலை தொங்கும். இதன் ரகசியம், இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கிறார் என்பதை உணர்த்துவதே! அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை, வெறும் வெளியையே காட்டி, இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது. இது தான், ‘சிதம்பர ரகசியம்’ என, அனைவராலும் போற்றி வழிபாடு செய்யப்படுகிறது.

அகத்தியரின் வரலாறு கூறும் அறிவியல் உண்மை!

அகத்தியரின் வரலாறு கூறும் அறிவியல் உண்மை!
படித்தவர், பாமரர் அனைவரும் அகத்தியரை அறிவார்கள். ஆறுவகைச் சமயத்தினரும் அகத்தியரைப் போற்றுகின்றனர். குடுவையில் பிறந்தது, தென்புலம் தாழ்ந்த பொழுது பூமியைச் சமன் செய்தது, பார்வதி திருமணத்தைப் பொதிகையில் கண்டது, காவிரி கொணர்ந்தது போன்ற அகத்தியர் தொடர்பான வரலாறுகள் அனைத்திலும் அறிவியல் கூறுகள் பொதிந்துள்ளன.

சோதனைக்குழாய் குழந்தை

உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை அகத்தியர்தான் ! குடுவையில் கருத்தரித்து, வளர்ந்து வெளிப்பட்டதால் அவரை, கலயத்தில் பிறந்தோன் (கும்பசம்பவர்) என்றும், குடமுனி என்றும் கூறுவர். உயிர்கள் தாயின் கருப்பைக்கு வெளியே கருத்தரித்து வளர இயலும் என்ற அறிவியல் உண்மை, அகத்தியரின் பிறப்பிலேயே பொதிந்துள்ளது. அவ்வாறு, செயற்கை முறையில் உருவாக்கப்படும் உயிரினங்கள், தொடக்க நிலையில் இயல்புக்கு மாறான உருவத்தைப் பெற்றிருக்கும் என்பதும், இயல்பான வளர்ச்சி, மேம்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகே சாத்தியமாகும் என்பதும் அறிவியல் உண்மை. முதல் சோதனைக் குழாய் குழந்தையாகிய அகத்தியர் இயல்புக்குக் குறைவானே உயரமே பெற்றிருந்தார் என்பது இந்த உண்மையை நிரூபிக்கிறது.

தொலைக்காட்சி பார்த்தவர்

முதன்முதலில் தொலைக்காட்சி பார்த்தவரும் அகத்தியரே ! பார்வதி – பரமசிவன் திருமணத்தைக் காண அனைவரும் இமயத்தில் கூடியதால் வடபுலம் தாழ்ந்தது. அதனைச் சமன்செய்ய, சிவபெருமான், அகத்தியரை தென்னாட்டிற்கு அனுப்பினார். அனைவரும் காணப்போகும் தங்கள் திருமண நிகழ்ச்சிகளை அடியேன் மட்டும் பார்க்க முடியாமல் போகுமே ? என்று வினவினார். அகத்தியர், இமயத்தில் நடைபெறும் எமது திருமண நிகழ்வுகளை உமக்குப் பொதிகையில் காட்டியருள்வோம் என்றார் ஈசன். அவ்வாறே, அகத்தியர் பார்வதி – பரமசிவன் திருமணக் காட்சியைப் பொதிகையில் கண்டு களித்தார். ஓரிடத்தில் நிகழும் நிகழ்ச்சியைப் பிறிதோர் இடத்தில் காணக்கூடிய சிந்திக்கத் தூண்டும் அறிவியல் கூறு இதில் அமைந்துள்ளது. அகத்தியர் கண்டது நேரடி ஒளிபரப்பு ! (லைவ் டெலிகாஸ்ட்). ஈசன் திருமணம் நடந்து பலநாட்கள் கழித்து அதனை மீண்டும் காண விரும்பினார். திருமால் ! சீர்காழியை அடுத்த ஒரு தலத்தில் சிவ பெருமான், திருமாலுக்குத் தனது திருமணக் கோலத்தை மீண்டும் காட்டியருளினான் ! திருமணத் திருக்கோலம் காட்டிய அந்தத் தலமே, திருக்கோலக்கா என்று பெயர் பெற்றது. இது பதிவு செய்த மறுஒளிபரப்பு!.

அணுவுருவில் நதிகள்

அகத்தியர் தென்னாட்டிற்குப் புறப்பட்டபொழுது, காவிரியை, அணுவுருவாக்கிக் கமண்டலத்தில் அடைத்து எடுத்து வந்தார் என்பது வரலாறு. மனிதன் தண்ணீர் இல்லாத வேறு கோள்களில் குடியேறும் காலத்தில், தண்ணீரை அணுவுருவாக்கி எடுத்துச் சென்று அங்கு, மீண்டும் தண்ணீரை உற்பத்தி செய்துகொள்ள வேண்டியிருக்கும் என்பது நவீன அறிவியல். நானோ – டெக்னாலஜி என்னும் தற்போதைய மூலக்கூறு தொழில் நுட்பத்திற்கு, இந்த சம்பவம் புராண ஆதாரம்.

கண்ணதாசனின் தத்துவங்கள்

கண்ணதாசனின் தத்துவங்கள்
துன்பங்களை வளர்ப்பதும் தனிமை தான் ; தணிப்பதும் தனிமை தான் …….

எதிரியின் கையில் உள்ள ஆயுதத்தை பார்த்து கேலி செய்வதைவிட அதை பிடுங்கிகொள்வது புத்திசாலித்தனம்

காலம் போனால் திரும்புவதில்லைகாசுகள் உயிரை காப்பதும் இல்லை !

பெண்கள் பூ போன்றவர்கள் , மாமிசம் சாப்பிட்டு பழக்கப்பட்ட நாய்களுக்கு பூவை கையாள தெரியாது

கட்டுக்காவல் எங்கே பலமாக இருக்கிறதோ , அங்கே தான் தாண்டி குதிக்கும் கால்களும் உறுதியாக இருக்கின்றன

ஒன்று தவிர்க்க முடியாது என்னும் போது. அதை எதிர்கொள்ளும் தைரியம் வந்துதானே தீர வேண்டும்.

சித்தாந்தம் தோற்றுப்போன இடத்தில் வேதாந்தம் தானே கை கொடுக்கிறது? —

கோடையில் குளம் வற்றிவிட்டதேஎன்று கொக்கு கவலைப்படக் கூடாது:மீண்டும் மழை காலம் வருகிறது.மழைக்காலம் வந்துவிட்டதென்று நதிகுதிக்கக் கூடாது: அதோ;வெயில்காலம் வந்து கொண்டிருக்கிறது.

எதை வெட்டிவிட்டால் அடுத்த கேள்வி இருக்காதோ, அதை வெட்டிவிடுபவனே அறிவாளி.

உலகத்தில் தப்பு என்று சில விஷயங்களைக் கருதுகிறோம்.ஆனால், அவை நிதானமாகவும், முறையாகவும் நடக்கும்போது அவையே நியாயங்களாகி விடுகின்றன.

ஊரிலே சாக்கடை என்பது மோசமான பகுதி தான் , ஆனால் அப்படியொன்று இல்லாவிட்டால் ஊரே சாக்கடையாகி விடாதா?

அறிமுகமில்லாதவர்கள் இருக்கின்ற இடத்தில். தவறான விஷயங்கள் நியாயமாகிவிடும்!

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..

வாழ்க்கைப் படிகள் பதினாறு (16)

வாழ்க்கைப் படிகள் பதினாறு (16)
1) மிகமிக நல்ல‍ தொரு நாள் எது ?
பதில் – இன்று

2) மிகப் பெரிய வெகுமதி எது?
பதில் – மன்னிப்பு

3) நம்மிடம் இருக்க‍ வேண்டி யது எது?
பதில் – பணிவு

4) நம்மிடம் இருக்க‍க் கூடாதது எது ?
அதுக்கு இதுதான் பதில் – வெறுப்பு

5) நமக்கு அத்தியாவசியமாய் தேவைப்படுவது எது?
பதில் – ச‌மயோஜித புத்தி

6) ந‌மக்கு வரக்கூடாத அதி பயங்கர நோய் எது?
பதில் – பேராசை

7)ந‌மக்கு எளிதாக வரக்கூடியது எது
அதுக்கு இதுதான் பதில் – குற்ற‍ம் காணல்

8) நம்மிடம் இருக்க‍ கூடாத கீழ்த்த‍ரமான செயல் எது?
பதில் – போறாமை

9) நாம் எதை நம்பக்கூடாது?
பதில் – வ‌தந்தி

10) எதுன்னு கேட்ட‍து – ந‌மக்கு அதீத ஆபத்தை உண்டாக்குவது எது?
பதில் – அதீத பேச்சு

11) நாம் செய்யவேண்டியது எது?
பதில் – உதவி

12) நம்மிடம் இருந்து விட்டொழிக் க‍ வேண்டியது எது?
பதில் – விவாதம்

13) ந‌மது உயர்வுக்கு வழி எது?
பதில் – உழைப்பு

14) நாம் எதை நழுவ விடக்கூடாது?
பதில் – வாய்ப்பு

15) பிரி(ய)க்கக் கூடாதது எது?
பதில் – நட்பு

16) நாம் எதை ம‌றக்க கூடாதது ?
பதில் – நன்றி

தலை சிறந்த தத்துவங்கள்

தலை சிறந்த தத்துவங்கள்
01. வாழ்வில் நமக்கு பலமுறை இரண்டாவது வாய்ப்பு கிடைக்கும், சில சமயம் பத்தாவது வாய்ப்புக் கூட கிடைக்கும், வாய்ப்பை இழந்துவிட்டோமென்று யாருமே நம்பிக்கை இழக்க வேண்டாம்.

02. வாழ்வின் இனிமையான பாகம் இனித்தான் வரவிருக்கிறது, எப்போதுமே இனித்தான்.. இது தனது 95 வது பிறந்த நாளில் நீதிபதி சர். எம். மல்லாக் கூறியது.

03. நான் இன்னும் வேலை செய்கிறேன். என் கைகள் கலப்பையிலும் என் முகம் எதிர் காலத்திலும் இருக்கிறது. மாலை நிழல் நீளுகிறது ஆனால் காலை என் இதயத்தில் இருக்கிறது.

04. முன்னேற்றம் என்ற கோடு உங்களுக்கு பின்னால் போய்விடவில்லை அது இன்னமும் உங்களுக்கு முன்னாலேயே கிடக்கிறது கலங்க வேண்டாம்.

05. கவலையோ குழப்பமோ இன்றி ஒவ்வொரு நாளையும் வரவேற்று, தனக்கு விதிக்கப்பட்ட செயல்களை செய்து, சந்தோஷமாக, பயமற்று வாழுங்கள். நல்ல நண்பர்களை உருவாக்குங்கள், நல்ல நினைவுகளை எண்ணி மகிழுங்கள், காலம் மறைவதை புறக்கணியுங்கள், எதிர் காலத்தை மட்டும் பாருங்கள் வாழ்வில் சிறந்தது இனிமேல்தான் வரப்போகிறது.

06. வயதான காலத்தை அரவணைத்து நேசியுங்கள். அதை எப்படி நேசிப்பது என்று உங்களுக்கு தெரிந்தால் அதில் சந்தோஷம் மிதமிஞ்சி இருக்கிறது. மெதுவாக கடந்து செல்லும் வருடங்கள்தான் ஒரு மனித வாழ்வில் மிக இனிமையானவை. அவை இறுதியை அடைந்துவிட்டாலும் அதன் சந்தோஷங்கள் மாறுவதில்லை.

07. இலையுதிர் காலம் என் தலையில் இருக்கிறது ஆனால் வசந்த காலம் என் இதயத்தில் இருக்கிறது.
08. வயது என்பது மனதின் தன்மை
உங்கள் கனவுகளை நீங்கள் தொலைத்துவிட்டால்
நம்பிக்கை இழந்து விட்டால்
எதிர் காலத்தை நீங்கள் எதிர்பார்க்காவிட்டால்
உங்கள் இலட்சிய தாகம் அடங்கிவிட்டால்
நீங்கள் வயதானவர்தான்.
ஆனால் வாழ்வில் இருந்து சிநந்ததை நீங்கள் எடுத்து
விளையாட்டாக உங்களால் இருக்க முடிந்தால்
அன்பாக இருந்தால்
எவ்வளவு வருடங்கள் கடந்தாலும்
எத்தனை பிறந்த நாள் போனாலும்
உங்களுக்கு வயதாவதில்லை.

09. சந்தோஷத்தை தேடுபவர்களுக்கு மூன்று முக்கிய தேவைகள் உண்டு. அ. சுய அடையாளம் காணல் ஆ. சுய வழிகாட்டல் இ. சுய வெளிப்பாடு. வாழ்வு நாற்பது வயதில் தொடங்குகிறது சில சமயங்களில் அது அறுபது வயதுக்குப் பிறகுதான் உண்மையாகவே தொடங்குகிறது. ஆகவேதான் ஒவ்வொருவரும் முடி நரைக்கும் காலத்திலாவது தமது சுய வெளிப்பாட்டைக் காட்ட வேண்டும்.

10. நமது புருவங்களில் சுருக்கம் ஏற்படலாம். இதயத்தில் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நமது மனதிற்கு வயதாகக் கூடாது.

11. உங்கள் நரை முடி குறித்து வெட்கப்படாதீர்கள் அதை ஒரு கொடிபோல பெருமையாக அணியுங்கள். ஏனென்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் இந்த நரைமுடியை பார்க்காமலே பலர் புவியில் இறந்துவிட்டார்கள். இதைப் பார்க்கும்வரை உங்களுக்கு வாழக் கிடைத்தது எத்தனை சிறப்பு என்று எண்ணுங்கள்.

12. மூளை நன்கு வளர்ந்து மூளையில் உள்ள வெண்ணிற செல்கள் நரை முடியாக வெளியே வருகின்றன அது பெருமைக்குரியதே.

13. இளமை என்பது வாழ்வின் பாகமல்ல அது ஒரு மனோநிலை. இளமை என்றால் பயத்தை தைரியம் வெற்றி கொள்ளும் மனோநிலை.

14. வருடங்களை கடப்பதால் ஒருவனுக்கு வயதாவதில்லை. தங்கள் இலட்சியங்களை துறப்பதால்தான் ஒருவனுக்கு வயதாகிறது.

15. உங்கள் நம்பிக்கையைப் போலவே இளையவராக இருக்கிறீர்கள், சந்தேகத்தைப் போலவே முதியவராக இருக்கிறீர்கள், தன்னம்பிக்கையைப் போலவே இளைஞராக இருக்கிறீர்கள், பயத்தைப் போலவே முதியவராக இருக்கிறீர்கள், விசுவாசத்தைப் போலவே இளைஞராக இருக்கிறீர்கள்.

16. முதுமை என்பது எப்போதுமே உங்களை விட 15 வயது அதிகமாக இருப்பது என்று எண்ணிக் கொள்ளுங்கள்.

17. ஒரு மனிதனின் மதிப்பு அவன் வாழ்ந்த வருடங்களின் எண்ணிக்கையாலோ அல்லது செய்த வேலையாலோ அளக்கப்படுவதில்லை. ஒரு மனிதனின் மதிப்பு அவன் உருவாக்கிய நடத்தையால்தான் அளக்கப்படுகிறது.

18. வாழ்வின் அந்திம காலத்தை நம்பிக்கையோடும் சந்தோஷத்தோடும் அணுகுங்கள். வாழ்வின் இறுதியை ஆர்வத்தோடு அணுகுங்கள், சோகத்தோடு அல்ல. ஏனெனில் வாழ்வின் இறுதிதான் சிறப்பானது, கடவுளை நம்புங்கள்.

19. உன்னிடம் எந்தத் திறமை இருந்தாலும் முட்டாளிடமிருந்து உன்னைப் பிரிக்கும் தெய்விக பொறியை வரவேற்று அதை வளர்த்துக் கொள். ஆனால் உன் வாழ்வின் குறிக்கோளாக உலக வெற்றியை கருதாதே.

20. வழி நீண்டதாகவும், கடினமானதாகவும் இருக்கலாம் ஆனால் போராட்டத்தையும், வலியையும் வரவேற்பாயாக. ஏனெனின் வாழ்வின் வலியில் இருந்துதான் ஞானமும், புரிதலும் வருகின்றன.

21. வலியை கற்றுக்கொள் கணக்கிடாதே..! வேதனையை எதிர் கொள் எதிர்க்காதே.

22. கடவுளின் சரியான திட்டப்படிதான் முழு வாழ்வும் இருக்கிறது. முழுவதும் பார், முழு வடிவமைப்பையும் பார். வாழ்வதும் கற்பதும் எவ்வளவு இனிமை எண்ணிப்பார்.

23. இருப்பது எல்லாமே என்றென்றும் நீடிக்கும் என்று கடந்த காலம் கூறுகிறது. உலகம் மாறும் ஆனால் ஆன்மாவும் கடவுளும் மாறாது. சாம்பலை விட்டுவிடு நெருப்பில் தங்கம்தான் மிஞ்சுகிறது.

24. புயலுக்கு பறவை சாயாமல் சரி செய்வதைப்போல
காலப் புயலில் உன்னை சரி செய்து கொள்
பயத்தை நீக்கு வாழ்க்கைக் கப்பலை நேராக செலுத்து
கப்பலுக்கு ஏற்ற துறைமுகம் அருகே வந்துவிட்டது
ஒவ்வொரு அலையும் சந்தோஷத்தில்….

25. மிகச் சிறந்த மதுவை எதிர் பாருங்கள் அது கடந்த காலத்தில் இல்லை கடவுள் நல்ல மதுவை இறுதியில்தான் வைத்திருப்பார்.

26. வாழ்வை எண்ணத்தாலும் செயலாலும் அளக்க வேண்டும், காலத்தால் அல்ல.

27. உன் தலைவிதி எதுவானாலும் நன்றியுள்ள சந்தோஷமான இதயத்தை கடவுளிடம் திருப்பித்தர தயாராக இரு.

28. உனக்கு வயதாகும் ஆனால் வாழ்வின் துடிப்பை இழந்துவிடாதே.. ஏனெனில் தெருவின் இறுதி வளைவுதான் சிறந்த வளைவு.

29. ஒவ்வொரு வருடமாக வாழ்வை வாழ்..
எதிர் காலத்தை நோக்கி தளராத இதயத்துடன் இரு
இலட்சியத்தை விட்டு விலகாதே
பயணம் கரடு முரடாக அல்லது வழுவழுப்பாக இருக்கட்டும்
நீ மட்டும் சந்தோஷத்தை இழந்துவிடாதே.

30. ஒவ்வொரு பெரிய போராட்டம் அல்லது தோல்வி இவற்றிலிருந்து ஒரு புதிய விடியல், வாழ்வின், உயிரின் மறுபிறப்பு தோன்றி முன்னேற்றத்தின் சக்திவாய்ந்த அலை மனிதனை மேலும் மேலும் உயர்த்தியே வருகிறது.