தத்துவம் மச்சி தத்துவம் - சிந்தனை சிற்பிகளிடமிருந்து சில முத்துக்கள்
வாழ்கை அனுபவங்கள் தான் தத்துவங்களின் பிறப்பிடம். தத்துவங்கள் பலருடைய வாழ்கையே புரட்டி போட்டிருகின்றது. பல சாதனையாளர்களையும், பல நல்லா மனிதர்களையும் உருவாக்கி இருக்கிறது. எனக்கு பிடித்த என்னுள் சில மாற்றங்களை கொடுத்த சில தத்துவங்கள் இதோ உங்களுக்காக,
வாழ்க்கையில் வெற்றி பெற
மூன்று வழிகள் உள்ளன.
பிறரைக்காட்டிலும் அதிகமாக
அறிந்து கொள்ள முயலுங்கள்.
பிறரைக்காட்டிலும் அதிகமாக
உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
பிறரைக் காட்டிலும் குறைவாக
பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
-வில்லியம் ஷேக்ஸ்பியர்
வாழ்க்கை!!
ஓராயிரம் கற்பனைகளும்
ஒரு சில நிஜங்களும்
என்று நினைவில் கொள்.
மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது
-கார்ல் மார்க்ஸ்
எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்;
எதிர்பார்த்தால் இறுதிவரை
எதையும் சாதிக்காமலே போய் விடுவீர்கள்!
-எட்மண்ட் பர்சி
”தூய்மை, பொறுமை, விடாமுயற்சி
ஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்"
-விவேகானந்தர்
ஒருவன் கற்பிக்கும் போது
இருவர் கற்றுக்கொள்கின்றனர்.
-ராபர்ட் ஹாஃப்
நேற்று அசாத்தியமாய் இருந்தது,
இன்று சாத்தியமாகும் அற்புதத்தை
ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம்
– காந்திஜி
ஆணுக்கு தூக்கம் ஆறுமணி நேரம்.
பெண்ணுக்கு தூக்கம் ஏழு மணி நேரம்.
முட்டாளுக்கு தூக்கம் எட்டு மணிநேரம்.
-நெப்போலியன்
சிந்திக்காதவன் முட்டாள்
சிந்திக்கத் துணியாதவன் கோழை
சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன்
டிரம்மண்ட்
வெற்றிபெற காது கொடுத்து கேளுங்கள்;
குறைவாக பேசுங்கள்;
நிறைய நேரம் செயல்படுங்கள்.
-ஏ.வான்பர்ன்
ஒரு மனிதனின் வாழ்க்கையில்
நன்மை செய்தலே
உண்மையான இன்பம் அளிக்கும் செயல்.
- சர் பிலிப்சிட்னி
"மகிழ்ச்சி என்பது நல்ல ஆரோக்கியமும்
குறைந்த ஞாபக சக்தியையும்விட வேறொன்றுமில்லை."
-ஆல்பர்ட் ஸ்வேசர்
"ஒரு நல்ல நூல்
ஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும்.
- வில்லியம் ஹாஸ்விட்
"மிக அற்பமான விஷயங்களைப் பற்றி
அதிகமாக அறிந்து கொள்கிறவனே நிபுணன் ஆகிறான்.
- சாமுவேல் பட்லர்.
எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.
சொல்லில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.
செயலில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.
பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!”
-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
நீ என்னவாக நினைகின்றாயோ
அதுவாக ஆகின்றாய் - பகவத் கீதை
கடுமையான கஞ்சத்தனம்
தகுதியற்ற தற்பெருமை
எல்லையற்ற பேராசை
இந்தமூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும்
-முகமதுநபி
ஞானமே முக்கியம்,
ஞானத்தைச் சம்பாதி;
என்னத்தைச் சம்பாதித்தாலும்
புத்தியைச் சம்பாதித்துக்கொள்.
-பைபிள்
தாமஸ் புல்லர்
தங்கள் கால்களால்
பறவை சிக்கிக் கொள்ளும்;
தன் நாவினால்
மனிதன் சிக்கிக் கொள்வான்
No comments:
Post a Comment