அன்பால் வெற்றி கொள்!
* எதை எதிர்பார்க்கிறாயோ, அதை கடவுளிடமிருந்து பெற்றுத் தரும் சக்தி நம்பிக்கைக்கு உண்டு.
* சந்தேகம் என்னும் அரக்கனை ஒரு போதும் அனுமதிக்காதீர்கள். நம்பிக்கை முன்வாசலில் நுழைந்தால், சந்தேகம் பின்வாசலில் வெளியேறி விடும்.
* சந்தோஷச் சிறகுகளை வெட்டி விடும் சந்தேகத்தை தூக்கி எறியுங்கள். நம்பிக்கையை நலிவடையச் செய்யும் சந்தேகம் நமக்கு வேண்டவே வேண்டாம்.
* தேடும் இயல்புள்ளவர்கள் தடைகள் பலவற்றை எதிர் கொள்ளத்தான் வேண்டும்.ஒவ்வொன்றும் ஒரு சவால் போலத் தான். இருந்தாலும் முயற்சியைத் தொடர்ந்தால்வெற்றி கிடைத்து விடும்.
* ஒருமுறை கோபம் வந்தால் மூன்று மாத ஆரோக்கியம் போய் விடும். கோபத்தை தைரியத்தாலும், பொறாமையை அன்பாலும் வெற்றி கொள்ள வேண்டும்.
- சாய்பாபா
No comments:
Post a Comment