எண்ணங்களும் உணர்வுகளும்
நமது செயல்களின் ஆரம்பம் நமது எண்ணங்கள்,நமது எண்ணங்களின் பிறப்பிடம் நமது மனம்.
ஆகவே நமது மனத்தை நம் வசத்தில் வைத்திருக்க வேண்டும் அதன் உள்ளே புகும் எண்ணங்களையும் ஆசைகளையும் பற்றி நாம் சர்வ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
நம் மனதில் நல்லெண்ணங்களை,ஆரோக்கியமான எண்ணங்கள்,பொறாமை நிறைந்த எண்ணங்களையும்,கெட்ட எண்ணங்களையும் நம் முள்ளே விடுவதன் மூலம் நமக்கு நாமே தண்டனை கொடுத்துக் கொள்கிறோம்.
- வாழ்வில் துயர்,துன்பம் இல்லை என்று சொல்லிவிடமுடியாது
- புத்திசாலித்தனம் என்பது வாழ்க்கையை சந்தோசமாக அமைத்துக்கொள்வது.
மனப்பழக்கம்- ஒவ்வொரு முறையும் நடக்கிற ஒவ்வொரு விஷயத்தையும் அறிவு பூர்வமாக ஆராய்ந்து 'ஏன்?','எப்படி?' என்று கேட்டுப் புரிந்து கொள்ளும்போது நமது மன இயக்கத்தை நம் கைக்கு கொண்டு வருகிறேம்.
- "திருத்தக் கூடியவற்றை திருத்தும் தைரியம்"
- "திருத்த முடியாதவற்றை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம்"
இப்படியாக நமது எண்ணங்களையும் உணர்வுகளையும் பக்குவப்படுத்திக்கொள்ளலாம்
"குறை சொல்லுவது தன்னம்பிக்கையில்லாதவர்களின் கடைசிப்புகலிடம்"
No comments:
Post a Comment