Tuesday, December 18, 2018

வெற்றி வாழ்வின் ரகசியம் - தைரியமாக இருங்கள்

* மனிதன் வாழ்வில் எந்த அளவுக்கு உயர்கிறானோ அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளைக் கடந்தாக வேண்டும்.
* தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதை விட, போர்க்களத்தில் மாய்வது மேலானது.
* திட்டம் எதுவும் தேவையில்லை. அதனால், ஆகப்போவது எதுவுமில்லை. கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள். அது போதும்.
* கோழை தான் வாழ்வில் பாவம் செய்கிறான். தைரியசாலியோ ஒருபோதும் பாவம் செய்வதில்லை.
* மக்களிடம் உண்மையான சமத்துவம் எப்போதும் இருந்ததில்லை. இனி இருக்கப் போவதுமில்லை.
* சுயநலம், சுயநலமின்மை என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
* மற்றவர்களுக்கு நன்மை செய்யும் முயற்சியில், இந்த உடல் அழிந்து போனால் அதுவே மேலானது.
* சுதந்திரமானவர்களாக இருங்கள். யாரிடமும் எதையும் எதிர்பாராதீர்கள்.
* பிரதிபலன் பாராமல் நன்மை செய்யுங்கள்.

வெற்றி வாழ்வின் ரகசியம்

* நன்மை செய்யவும், நல்லவர்களாக வாழவும் விரும்புபவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
* உண்மை எதற்கும் தலை வணங்கத் தேவையில்லை. மனித சமூகம் தான் உண்மைக்குத் தலை வணங்க வேண்டும். 
* எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது. அதை விழித்து எழச் செய்வதே நல்லாசிரியரின் கடமை.
* இன்றைய கல்வித்திட்டம் மனிதனை இயந்திரமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. ஒழுக்கம், மனவலிமை, பரந்த அறிவு இவற்றை புகட்டுவதாக கல்வித்திட்டம் மாற வேண்டும்.
* மனிதர்கள் விலங்குகளை விட அதிக ஒழுக்கமானவர்களாக இல்லை. சமுதாயக் கட்டுப்பாடு என்ற சாட்டையால் மனிதன் அடக்கி வைக்கப்பட்டிருக்கிறான். 
* கற்புநெறியில் இருந்து பிறழும் போது, மனித சமூகம் முடிவை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகும்.
* நாம் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்வை அனுசரித்து அமைத்துக் கொள்வது தான் வெற்றி வாழ்வுக்கான ரகசியம்.

உண்மையைப் பின்பற்றுங்கள்!

* இதயம் விரிவடைந்தால் தான் உண்மை ஞானம் உதிக்கும். உண்மை ஞானம் மலர்ந்தால் மனதில் நம்பிக்கை நிலைக்கும்.
* பொன், பொருளில் ஆசை கொண்டு அற்ப வாழ்க்கை நடத்துபவர்கள் பொருட்படுத்தக் கூடியவர்கள் அல்ல.
* யாருடைய நெஞ்சம் ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ அவரே மகாத்மா.
* கோழைகளே பாவச் செயல்களைச் செய்வர். தைரியம் கொண்ட மனிதர்கள் ஒருக்காலும் பாவம் புரிய நேர்வதில்லை. 
* வஞ்சனையால் பெரிய விஷயம் எதையும் வாழ்வில் சாதித்து விட முடியாது. 
* அறிவைப் பலவீனப்படுத்தும் எந்த விஷயமாக இருந்தாலும் அதை விஷம் எனக் கருதி ஒதுக்குங்கள்.
* உண்மை உங்களை எங்கே இழுத்துச் சென்றாலும் அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். ஒருபோதும் கோழையாகவோ, கபடதாரியாகவோ இருக்காதீர்கள்.
* நிச்சயமாக நன்மை விளையும் என்று உணர்ந்தால் மட்டுமே மனதில் இருப்பதை வெளிப்படுத்துங்கள்.

நம்மால் சாதிக்க முடியும்!

* நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பொருட்டு மனம், இதயம், ஆன்மா இந்த மூன்றையும் அர்ப்பணித்து விடுங்கள்.
* உயர்ந்த லட்சியம் கொண்டவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் இல்லாதவன் ஐம்பதாயிரம் தவறுகளைச் செய்வான்.
* நாம் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் கொண்டவர்கள். மகத்தான செயல்களைச் செய்வதற்காகவே ஆண்டவன் நம்மைப் படைத்து இருக்கிறான். அவற்றை நாம் விரைந்து செய்து முடிப்போம்.
* நல்ல எண்ணங்களின் கருவிகளாக்கிக் கொள்ளும் முயற்சியில் மனதை எப்போதும் ஈடுபடுத்துங்கள். 
* சரியான வழியில் செலுத்தப்பட்ட மனம் நம்மைக் காக்கும். இறுதியில் நம்மை விடுதலை பெறச் செய்யும். 
* தூய உள்ளம் படைத்தவர்கள் அதிகமானால், இந்த உலகமும் தூய்மை பெற்றதாக மாறி விடும்

உலகத்துக்காக தியாகம் செய்!

* நல்லவர்கள் மற்றவர்களுடைய நன்மைக்காக மட்டுமே வாழ்கிறார்கள்.
* ஒருவருக்கொருவர் நன்மை செய்வதன் மூலமாகத் தான், நற்பலன்களை அடைய முடியும்.
* மற்றவர்களுக்கு முக்தியை வாங்கிக் கொடுப்பதற்காக நீ நரகத்திற்கே செல்லவும் தயாராக இருக்கவேண்டும். மரணம் ஒருநாள் உறுதி என்னும்போது நல்ல செயலுக்காக உயிரை விடுவது மேலானது.
* பெரியவர்கள் பலர் செய்த தியாகத்தின் பயனையே இன்று மனிதகுலம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இந்த உண்மையை உலகம் முழுவதிலும் காணமுடியும்.
* உன் சொந்த முக்திக்காக நீ உலகத்தைத் துறந்து விட விரும்பினால் அது ஒன்றும் பாராட்டத்தக்கது அல்ல. ஆனால், உலக நன்மைக்காக உன்னை நீயே தியாகம் செய்ய முடியுமானால் கடவுளாகி விடுவாய்.
* உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல. இங்கிருந்து தப்பி ஓட முயற்சிக்காதே. வெற்றி, தோல்வி என்று கவனித்துக் கொண்டிருக்காதே. உடனடியாக, தியாக உள்ளத்துடன் சேவையில் ஈடுபடு.

உழைத்து வாழ வேண்டும்ஜனவரி 10,2013,14:01  IST
* தைரியமாயிருங்கள். பலமுடையவர் ஆகுங்கள். உங்கள் மீதே முழுப் பொறுப்பு களையும் சுமத்திக் கொண்டு செயல்படுங்கள். 
* உங்கள் விதியை நிர்ணயிப்பவர் நீங்களே. உங்களுக்கு வேண்டிய பலமும், துணையும் உங்களுக்குள்ளேயே இருக்கின்றன.
* கொழுந்து விட்டெரியும் அன்பும், தன்னலமில்லாத பண்பும், ஒழுக்கமும் கொண்ட நல்லவர்களையே இந்த மண்ணுலகம் வேண்டி நிற்கிறது.
* உழைத்து வாழுங்கள். இவ்வுலக வாழ்வு எத்தனை நாள் என்பது நமக்குத் தெரியாது. உலகில் தோன்றியதன் அறிகுறியாக ஏதேனும் நல்லதைச் செய்ய முயலுங்கள்.
* உங்களுக்குள் இருக்கும் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்துங்கள். அதன் பின் உங்களைச் சுற்றி இருக்கும் ஒவ்வொன்றும் சீராகி ஒழுங்காகி விடும். 
* வாழ்வில் நன்மை பெற வேண்டுமானால், மனிதர்களுக்கு முதலில் தொண்டு செய்யுங்கள்.
விவேகானந்தர்
(இன்று விவேகானந்தர் பிறந்ததினம்) 


இயற்கையை வெற்றி கொள்!

* உள்ளக்கதவைத் திறந்து வையுங்கள். நாலாபுறத்திலும் இருந்து நல்ல விஷயங்கள் அதற்குள் நுழைய அனுமதி அளியுங்கள்.
* எல்லாப் பூக்களில் இருந்தும் தேனைப் பெற்றுக் கொள்ளுங்கள். யாரிடமும் பகை பாராட்ட வேண்டாம். நட்புணர்வுடன் பழகுங்கள். ஆனால், உங்கள் சொந்தக்கருத்தை விடாப்பிடியாகப் பற்றுங்கள். 
* மனிதன் பிறந்திருப்பது இயற்கையை வெற்றி கொள்ளத் தானே தவிர, அதற்கு ஒருபோதும் பணிந்து போவதற்கு அல்ல.
* பாமர மக்களுக்கு உயர்வான எண்ணங்களைப் பரப்புவதற்காகவே புராணங்கள் எழுதப்பட்டன.
* கடவுளை வணங்கும் போது, அவரை நமது தாய் தந்தையாக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், மற்றவர்களை சகோதர சகோதரிகளாக நேசிக்க மறந்து விடுகிறோம்.
* நாலுபேர் அறிய நல்லவனாக காட்டிக் கொண்டு, பிறர் அறியாதவகையில் தீய செயல்களில் ஈடுபடுவது இழிவான செயல்.

உள்ளத்தை ஒழுங்குபடுத்து!

* உங்களுக்கு வருகிற துன்பம் எதுவென்றாலும் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
* உலகத்தில் உள்ள தீமைகளைப் பற்றி வருந்த வேண்டாம். உங்கள் உள்ளத்தில் இருக்கும் தீமையைப் போக்க வழிகாணுங்கள்.
* உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால், எல்லா இடத்திலும் கடவுளைக் காண்பீர்கள்.
* பாவ எண்ணமும், பாவச் செயலும் ஒன்று தான். அதனால், தீய எண்ணமும் கூட ஒருவனுக்கு கேடு விளைவிக்கும் என்பதை மறவாதீர்கள்.
* சுதந்திரம் இல்லாத வரையில் ஒரு மனிதனிடம் அன்பு தோன்றுவதில்லை. அடிமையாகி விட்டால் உண்மையான அன்புக்கு இடமே இல்லை.
* உயிர் போகும் வேளையில் கூட, ஒருவருக்கு உதவி செய்வது தான் கர்மயோகம். 
* தன்னை அடக்கக் கற்றுக் கொண்டவன் தரணியையே அடக்கும் வலிமை பெறுகிறான்.
* நேர்மை, அக்கறை உணர்வுடன் ஈடுபடும் எந்த விஷயத்திலும் சாதனை நிகழ்த்த முடியும்.

தவறுகளைத் திருத்திக்கொள்!

* ஒழுக்கத்தை அதிகம் வலியுறுத்தியதோடு, அதை கடைபிடித்தவர்களில் புத்தருக்கு இணையான ஒருவரை உலகம் இதுவரை காணமுடியவில்லை.
* ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலம் நல்ல ஒழுக்கத்தை உறுதியாகப் பின்பற்றி நடக்க முடியும். 
* ஆன்மிகம் என்பது அனுபவித்து அறியும் விஷயமே தவிர, வெறும் பேச்சன்று.
* இரும்பைப் போன்ற மன உறுதியும், மலைகளைத் துளைத்துச் செல்லும் வலிமையும் வந்து விட்டால் கடலையும் கடக்க முடியும்.
* அறிவு வளர்ச்சிக்கு ஒரே ஒரு வழிமுறை தான் இருக்கின்றது. அது தான் நம்முடைய மனதை ஒருமுகப்படுத்துவதாகும்.
* அன்பில்லாதவன் பெற்ற உலகியல் அறிவும், ஆன்மிக ஞானமும் பயனற்றது. அவனால் கடவுளை ஒருபோதும் அடைய முடியாது.
* "நான் கெட்ட செயலை செய்து விட்டேன்' என்று வருந்துவதைக் காட்டிலும் அதை திருத்திக் கொள்வதே மேலானசெயல்.

விருப்பத்துடன் வேலை செய்

* பகை, பொறாமை போன்ற தீய எண்ணங்களை வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் தோன்றிய இடத்திற்கே திரும்பி வந்து விடும்.
* நன்மை செய்வதே சமயவாழ்வின் சாரம்.
* எல்லாவற்றையும் செவி சாய்த்துக் கேளுங்கள். ஆனால், உங்களுக்கு எது நல்லதென்று தோன்றுகிறதோ அதை மட்டும் உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.
* உண்மை எங்கே இழுத்துச் சென்றாலும் அஞ்ச வேண்டாம். அதையே துணிச்சலுடன் பின்பற்றுங்கள். ஒருபோதும் கோழையாக இருக்காதீர்கள்.
* தன்னை அடக்கிப் பழகியவன் வேறு எதற்கும் வசப்பட மாட்டான். அத்தகையவனே உலகில் நன்றாக வாழும் தகுதி பெற்றவன்.
* எந்த வேலையாக இருந்தாலும், அதை தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றிக் கொள்பவனே அறிவாளி.
* அன்புடைய மனிதனே வாழ்கிறான். சுயநலம் கொண்டு மற்றவர்கள் மீது வெறுப்பு கொள்பவன் செத்துக் கொண்டிருக்கிறான் என்பது பொருள்.

No comments:

Post a Comment