எண்ணங்கள்
எண்ணங்களே வாழ்க்கையை அமைக்கின்றன. ஒவ்வொரு மனிதனின் எண்ணங்களே அவனது வாழ்க்கைக்கு காரணமாய் அமைகிறது. நல்ல எண்ணங்கள், நல்ல சிந்தனைகள், நல்ல சூழ்நிலையை உருவாக்குகின்றன. தீய எண்ணங்கள், தீய சிந்தனைகள், தீய சூழ்நிலையை உருவாக்குகின்றன.
இந்த பிரபஞ்சம் முழுவதுமே என்ன அலைகளால் சூழப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் வாழ்கையும், சுற்றுப்புறமும், செயல்பாடுகளும் இந்த எண்ண அலைகலாலேயே வழிநடத்தப்படுகிறது.
நல்ல சிந்தனையை விதைக்கும் மனிதன் நல்ல எண்ண அலைகளால் ஈர்க்கப்படுகிறான். அதே எண்ண அலைகள் கொண்ட மற்றவர்களும் அவன்பால் ஈர்க்கபடுகிரார்கள். அதேபோல் தீய சிந்தனையை விதைக்கும் மனிதன் தீய எண்ண அலைகளால் ஈர்க்கப்படுகிறான்.
நல்ல எண்ணங்களை விதைப்போம், நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்.
“மனமிருந்தால் மார்க்கமுண்டு”
சிந்தனைகள் தொடரும்..
No comments:
Post a Comment