உலகிலேயே மிக உயரமான அனுமன் சிலை- !!!!
இச்சிலைப் பற்றி சில துளிகள்.
1.சிம்லாவில் உள்ள மிக உயரமான மலையின் உச்சியில், உலகிலேயே மிக உயரமான அனுமன் சிலை உள்ள்து.
2. இமாச்சல் தலைநகரான சிம்லாவின் மால்ரோடில் இருந்து, 2 கி.மீ., தொலைவில், 2,455 அடி உயரமுள்ள, 'ஜாகூ' மலை உள்ளது. இது, சிம்லாவில் மிக உயரமான மலை. நெடிய தேவதாரு மரங்களுக்கு மத்தியில், அனுமன் கோவில் உள்ளது
3. இந்த மலை உச்சியின் மீது, 1837ம் ஆண்டு, அனுமனுக்கு கோவில் கட்டப்பட்டது. தற்போதுள்ள கோவில், 1920ம் ஆண்டு, மாநிலத்தில், கடைப்பிடிக்கப்படும் வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்டது.
4. இக்கோவிலில், தினசரி நடக்கும் ஆரத்தி நிகழ்ச்சியிலும், பவுர்ணமி நாட்களில் நடக்கும் சிறப்பு பூஜையிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். தசரா விழாவும், மிக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
ஜெய் ஆஞ்சனேயா
No comments:
Post a Comment