Tuesday, April 7, 2015

ஆண்கள் – பெண்கள் – சில வித்தியாசங்கள்!!!

ஆண்கள் – பெண்கள் – சில வித்தியாசங்கள்!!!

1. தனக்கு தேவையென்றால் ஒரு ஆண் ரூ.100/- மதிப்புள்ள ஒரு பொருளை ரூ.200/- கொடுத்து கூட வாங்குவான். அதுவே ஒரு பெண் என்றால், ரூ.200/- மதிப்புள்ள ஒரு பொருளை ரூ.100/- க்கே கூட வாங்கிவிடுவாள். (அதாவது அவளுக்கு தேவையில்லாத பொருளை!)

2. தங்களுக்கு ஒரு துணை கிடைக்கும் வரை தான் பெண்கள் தங்களது எதிர்காலத்தை பற்றி கவலைப்படுவார்கள். ஆண்களோ துணை கிடைக்கும் வரை எதிர்காலத்தை பற்றியே சிந்திக்கமாட்டார்கள்.

3. தன் மனைவி செலவழிக்கூடிய தொகைக்கும் அதிகமாக எவன் சம்பாதிக்கிறானோ அவன் தான் வெற்றிகரமான ஆண். அப்படிப்பட்ட ஒருவனை கணவனாக அடையும் பெண்ணே வெற்றிகரமான பெண்!

4. ஒரு ஆணுடன் ஒரு பெண் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தவேண்டும் என்றால், அவனை அதிகமாக புரிந்துகொண்டு, குறைவாக நேசிக்கவேண்டும். அதுவே ஒரு பெண்ணுடன் ஒரு ஆண் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தவேண்டும் என்றால், அவளை அவன் அளவுக்கதிகமாக நேசிக்கவேண்டும். ஆனால் புரிந்துகொள்ள முயற்சிக்கவே கூடாது.

5. திருமணம் செய்துகொள்ளாத ஆண்களை விட திருமணமான ஆண்களே அதிக நாட்கள் உயிர்வாழ்கிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டம் என்னவென்றால், அவர்கள் அதிக நாட்கள் வாழ விரும்புவதில்லை.

6. திருமணமான எந்த பெண்ணும் தன்னுடைய தவறுகளை மறந்துவிடவேண்டும். ஒரு விஷயத்தை இருவர் நினைவில் வைத்திருப்பதால் எந்த பயனும் இல்லை.

7. திருமணத்திற்கு பின், ‘அவன் மாறிவிடுவான்’ என்று பெண் நினைக்கிறாள். ஆனால் அவன் மாறுவதில்லை. திருமணத்திற்கு பிறகு அவள் மாறமாட்டாள் என்று அவன் நம்புகிறான். ஆனால் அவள் மாறிவிடுகிறாள்.

8. எந்த ஒரு வாதத்திலும் பெண் சொல்வதே இறுதி. அதற்கு பிறகு ஆண் சொல்வது புதிய வாதத்திற்கு ஒரு துவக்கம்.

9. ஒரு பெண்ணை ஒரு ஆணால் இரண்டு சந்தரப்பங்களில் புரிந்துகொள்ள முடியாது. திருமணத்திற்கு முன்பும். திருமணத்திற்கு பின்பும்.

10. எந்த ஒரு உரையாடலையும் ஆண் தான் ஆரம்பிப்பான். ஆனால் பெண் தான் முடித்து வைப்பாள்.

11. ஒரு பெண் தனது தவறுகளை ஒருபோதும் ஒப்புக்கொள்வதில்லை. ஆனால் தனது தவறை கடைசீயாக ஒப்புக்கொண்ட ஆண் யார் தெரியுமா? பெண்ணினத்தை படைத்தவன்.

12. ஒரு ஆணிடம் சூரியனுக்கு கீழே உள்ள எதைப்பற்றியாவது விளக்கம் கேட்டால், கூடுமானவரை ஒரே ஒரு வாக்கியத்தில் பதில் வரும். ஆனால் ஒரு பெண்ணிடம் உங்கள் தலைநகரம் எது என்று கேட்டால் கூட வண்டி வண்டியாக ஏதாவது பதில் வரும்.

13. ஒரு ஆண் ஆமாம் என்றால் ஆமாம் என்றும் இல்லை என்றால் இல்லை என்றும் அர்த்தம். ஆனால்  பெண், ஆமாம் என்றால் இல்லை என்று அர்த்தம். இல்லை என்றால் ஆமாம் என்றும் அர்த்தம்.

14. ஆண்கள் கண்ணாடியில் மட்டுமே தங்களை பார்த்துக்கொள்வார்கள். ஆனால் பெண்கள் ஸ்பூன்கள், பிளேட்டுகள், கார் கண்ணாடிகள், பளபளப்பாக தெரியும் எதன் மீதும் தங்களை பார்த்துக்கொள்வார்கள்.

15. ஆண்கள் செல்போனை தகவல் தொடர்புக்கு மட்டுமே உபயோகிப்பார்கள். பெண்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் தோழியரை பார்க்க செல்வார்கள். மணிக்கணக்கில் அவர்கள் வீட்டில் தங்கிவிட்டு பேசிவிட்டு வருவார்கள். வீட்டுக்கு வந்தவுடன் மறுபடியும் அவர்களிடமே மொபைலில் மணிக்கணக்காக பேசுவார்கள்.

16. பெண்கள் எப்பொதும் ஆண்கள் மறந்து போகும் விஷயத்தை பற்றியே கவலைப்படுவார்கள். ஆண்களோ பெண்கள் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் விஷயங்களை எண்ணி கவலைப்படுவார்கள்.

17. திருமணம் ஆன புதுதம்பதினர்கள் மருத்துவமனைக்கு வரும்பொழுது, Pregnancy Confirmed ( உங்கள் மனைவியின் கர்ப்பம் உறுதி செய்யப்படுகிறது ) – என சொல்லும் அந்ததருணம் பெண் சந்தோஷப்படுகிறாள், ஆண் பெருமைப்படுகிறான். பெண் மனதில் 9 மாதகாலம் குழந்தையை எப்படி பாதுகாப்பது என சிந்தீப்பாள், ஆனால் ஆண் மனைவி, குழந்தை இரண்டு பேரையும் எப்படி பாதுகாப்பது என சிந்தித்து கொண்டு இருப்பான்.

பெண் மனதில் 10% அன்பு இருந்தால், அதை 100 % வெளிப்படுத்துவாள். ஆனால் ஆண் மனதில் 100% அன்பு இருக்கும் ஆனால் 10% அன்பைக்கூட வெளிப்படுத்த தெரியாது. ஆண்களுக்கு கோபத்தை வெளிப்படுத்த தெரிந்த அளவிற்க்கு அவர்கள் மனதில் இருக்கும் அன்பையும் முழுமையாக வெளிப்படுத்தி இருந்தால் பெண்களை விட ஆண்களே அன்புக்குரியவர்கள் என்ற உண்மை இந்த உலகத்திற்க்கு தெரிந்து இருக்கும்.

அறிவு தளத்தில் வேண்டுமானல் சில நேரங்களில் பெண்கள் ஆண்களைவிட உயர்வாக தெரியலாம். ஆனால் அன்பு தளத்தில் எப்பொழுதும் பெண்களை விட ஆண்களே உயர்ந்துள்ளனர் என்பதை என்னால் உறுதி பட சொல்ல முடியும்.

No comments:

Post a Comment