Wednesday, September 30, 2015

சுயநலம் எவ்வளவு கொடுமை என்பது அனுபவித்தவர்களுக்கு தெரியும்

சுயநலம் எவ்வளவு கொடுமை என்பது அனுபவித்தவர்களுக்கு தெரியும்

நண்பர்கள் என்றால் நல்லா பேசுவர், நம்முடன் நேரம் செலவழிப்பர்; நம்மிடமிருந்து அனைத்தையும் பகிர்ந்து கொள்வர். ஆனால், சிலர் தனக்ெகன்று ஒரு வேலையோ, வாய்ப்போ, வாழ்க்கையோ வந்து விட்டால், மிக சுயநலமாய், அப்படியே கழட்டிவிட்டுவர். சுயநலம் என்பது எவ்வளவு கொடுமை என்பது, அனுபவித்து பார்த்தவர்களுக்கு தான் தெரியும்.

இவர்கள், நான் உனக்கு இதைச் செய்தால், நீ எனக்கு அதைச் செய் என, ஒப்பந்தத்தை மனதுக்குள் வைத்து கொள்வர். நீ மட்டும் அதைச் செய்தால், நான் உனக்காக இதைச் செய்துவிடுவேன் என, பதிலுக்கு பதில் செய்யத்தான் கணக்கு போடுவர். நட்புகளுக்கு இடையில் மட்டுமல்ல, சொந்தங்களுக்கு, உறவுகளுக்கு இடையிலும் இப்படி நடந்துக் கொள்வோர் இருப்பர்.பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே, நாம் வாழும் வாழ்வு அர்த்தமானதாக இருக்க வேண்டும். வாழ்ந்தோம் எனும் சொல்லுக்கும், வாழ்வு எனும் சொல்லுக்கும் ஒரு சிறப்பான அர்த்தம் இருக்கிறது. ஏதோ வாழ்ந்தோம் என்றில்லாமல், பலருக்கும் அர்த்தமாக, உதாரணமாக வாழ்ந்தோம் என்று, வாழ்வு இருக்க வேண்டும்.

வெற்றியாளர்களின் பின்னணிசுயநலமாய் நடப்போர் கண்கள், அவர்களின் நலம் வரைதான் கண்டுக் கொள்ளும்படி இருக்கும். அதாவது, சில மிருகங்கள் போல, ஒரு குறிப்பிட்ட தூரத்தை மட்டுமே பார்க்க முடியும். இப்படி சுயநலமாய் நடந்துக் கொள்வோர், அந்த நேரத்து வேலையை மட்டுமே கருத்தில் கொள்வர். சில ஆண்டுகளுக்கு பின், என்ன நடக்கும் என்பதை, அவர்களால் அனுமானிக்க முடியாது. இவர்கள் எப்படியென்றால், தன் நன்மையை மட்டும் நினைக்கும் சுயநலம்.இவர்கள் எவ்வளவு படித்திருந்தாலும், பணம் படைத்தவர்களாய் இருந்தாலும், ஆன்மிகவாதியாக இருந்தாலும் இவர்களுக்கு வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்கும் வாய்ப்பு குறைவுதான். வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர், ஒவ்வொருவர் பின்னணியில் எங்கேயோ அளவற்ற பொதுநலம் இருக்கும். அதற்காக, தன்னலத்தை துறந்தவர்களாய் இருக்கணும் என்று இல்லை. இவர்கள், வாழ்வின் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர் என்று அர்த்தம்.நம்மிடமிருந்தே துவக்கம்சுயநலமாய் இருப்பது, கெட்டதா என்பது தெரியாது. ஆனால், பொதுநலமாய் இருப்பது நல்லது. உலகில் அனைவருமே சுயநலமாய் இருந்துவிட்டால் நாடு எப்படி உருப்படும்? ஆனால், நாம் நம் நிலையை உயர்த்திக் கொள்வதில், சுயநலமாய் இருப்பதில்தான் ஒரு பொதுநலமும் அடங்கியுள்ளது. 

என்னங்க ஒரே குழப்பமாய் இருக்கிறதா?
ஒழுங்கா, ஒழுக்கமாக சம்பாதிச்சா நம்முடைய வீடு, மனைவி, குழந்தைகள் நன்றாக இருப்பர். நம் ஒழுக்கமும், ஒழுங்கும் நம் வீட்டிலும் பிரதிபலிக்கும். அவங்க படிக்கிற படிப்பும், பார்க்கிற வேலையும் நாட்டுக்கு பயன்படுகிற மாதிரி இருந்தால் போதும். அதுவே, பொதுநலமாக மாறிவிடும். வீடும், ஊரும், நாடும் உருப்படும். அதாவது, நம் சுயநலத்தில், பொதுநலமும் கலந்து இருக்கணும்; அப்போ இந்த சுயநலம் தேவைதானே!
இப்போ புரியுதுங்களா?
நம் நலத்தை பேணிக்காக்காதவன், எப்படி பொதுநலம் ஆற்றமுடியும்? செயலின் முடிவு பொதுநலமாக இருந்தால் போதும். அதுவே, தன்னலத்தில் பொதுநலம் கருதும் செயலாக அமைந்துவிடும்.ஆனால், அயோக்கியத்தனமான சுயநலம் அமைந்துவிட்டால் என்ன செய்வது? யாரையும் காயப்படுத்தாத, சுரண்டாத சுயநலம் அனைவருக்கும் தேவைதான். இச்சுயநலம், ஒரு வகையில் கடமையும், பொறுப்பும் ஆகும். எந்தச் செயலும், நம்மிடமிருந்தே தான் துவங்க வேண்டும்; ஆனால், செயலின் முடிவு, பொதுநலமாக இருந்தால் போதும்.’மழை பெய்யணும்னு நினைக்கிறது பொதுநலம் நாம் நனையாம குடை பிடிச்சிக்கிறது சுயநலம்’ சிந்தனையில், பொதுநலம் இருந்தாலே போதும். சின்ன சின்ன செயல்கள் நூறு செய்யலாம். பொது இடங்களை சுத்தமாக வைத்து கொள்வதும், பொது இடங்களில் புகை பிடிக்காமல் இருப்பதும், தண்ணீர், மின்சாரத்தை சேமிப்பது என்று துவங்கி, பலவற்றை பட்டியல் போடலாம். பொதுநல சிந்தனையுடன், என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யாமல் இருக்கலாம் என்று, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஒரு புத்தகமே எழுதியுள்ளார். பொதுநல சிந்தனை மனதில் பூக்க இடமளித்தாலே போதும், உங்கள் அறிவு பொதுநல நோக்கில்  என்ன செய்யலாம் என்று, வழிக்காட்டத் துவங்கும்.
பொதுநல சிந்தனையோடு… யார் யாரோ கண்டுபிடித்த பொருட்களையும் பயன்படுத்தி வருகிறோம். யார், யாரோ அமைத்து கொடுத்த, அடிப்படை வசதிகளை அனுபவித்து வருகிறோம். ஆனால், அதே சிந்தனையோடு, அடுத்த தலைமுறைக்காகவும், சக மனிதனுக்காகவும், நாம் செயல்பட தயங்குவதென்பது அநியாயம் தானே?
பெரிய அரசியல் தலைவர்கள், ஞானிகள் போன்றோரால் மட்டும் தான், பொதுநலத்துடன் சிந்திக்க முடியும் என்றும், மற்றபடி சராசரி மனிதர்களுக்கு அதெல்லாம் சாத்தியமில்லாத ஒன்றாகும் எனவும், நம்மில் பலர் நினைக்கிறோம்.
யாருக்கும் எந்த கெடுதல் நினைக்காமலும், செய்யாமலும் என் குடும்பத்தில், எனக்கு இருக்கும் கடமைகளை, எந்தக் குறையும் வைக்காமல் நிறைவேற்றினாலே போதாதா? என்று, ஒரு கேள்வியை கேட்டு, ஒரு வட்டம் போட்டு அதற்குள்ளேயே நின்றுக் கொள்கின்றனர். இன்றைக்கும் பொதுநல சிந்தனையோட, ஈர இதயங்கள் ஆங்காங்கே பலர் இருப்பதால்தான், இந்த சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அன்ன தானம். ரத்த தானம், கண் தானம், உடல் உறுப்புகள் தானம் வரை நடந்துக் கொண்டேயிருக்கிறது.
நாடென்ன செய்தது நமக்கு என கேள்விகள் கேட்பது எதற்கு?
நீ என்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை நமக்கு…

மற்றும் நான் ஏன் பிறந்தேன்… இந்த நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்? இந்த முழு பாடல்களின் அர்த்தம் புரிந்தால் போதும்,நாமும் பொதுநலம் பார்த்து நடக்க ஆரம்பித்து விடுவோம்.



நிம்மதியாய் வாழ் !

 நிம்மதியாய் வாழ் !

ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள் உள்ளம் உடல் ரீதியாக நிம்மதி பெறுங்கள். கண்ணியம் மற்றும் பொருளாதாரத்தில் பாதுகாப்பு பெறுங்கள் :

உங்களை விட்டுப்போன பொருளைப்பற்றி கவலை கொள்ளாதே.
    
உன்னை அடையாத விஷயத்தைப்பற்றி பயம் கொள்ளாதே.
    
உன்னிடமும் அதே போன்ற ஒரு குறையிருக்க அதற்காக நீ அடுத்தவரை இழித்துரைக்காதே.
    
நீ செய்யாத வேலைக்கு கூலியை எதிர்பார்காதே.
    
உன் உடமை (மனைவி) அல்லாத வேறு பொருளை (அன்னியப்பெண்னை) இச்சையோடு பார்க்காதே.
    
உன் கோபம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதே அப்படிப்பட்ட கோபம் கொள்ளாதே.
    
இறைவன் தான் அனைத்தையும் செய்விக்கிறான் என்று எண்ணாதவனை நீ புகழாதே.

நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம் !

நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம் !
1. நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.

2. கணவன்-மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.

3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்தநிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.

4. வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியை சீர்குலைக்கும்.
 
5. ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது, பெரும்பாலானோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும். சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம். சிலர் குறைவாக சம்பாதிக்கலாம். எப்படி இருந்தாலும் அதை காப்பது, கவர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.
 
6. கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிரச்சினைகளுக்கு இடம் தரும். மனதில் ஒளிவு மறைவு வைத்துக்கொண்டிருந்தால் தெய்வீக உறவு இருக்காது.

7. குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் ஆகியனவற்றையும் கடைப்பிடித்து வரவேண்டும்.

8. பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழி வகுக்கும்.

9. தனக்கு கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவையில்லை. அவரவர் அடிமனமே இதை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.

10. நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி அவசியம்.

தன்னம்பிக்கையை அதிகரிக்க

தன்னம்பிக்கையை அதிகரிக்க
1.எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன் வரிசைக்கு வாருங்கள்.

2.யாரைச் சந்தித்தாலும், தைரியமாக அவர்கள் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். அவர் எப்பேர்ப்பட்ட பிரபலமாக இருந்தாலும்,  தலை கவிழ்ந்து தரையில் விரலால் கோலம் போடுவதெல்லாம் வேண்டாம்.

3.நீங்கள் நடக்கிற வேகத்தை அதிகப்படுத்துங்கள்.நடையில் தெரியும் அந்த சுறு சுறுப்பு, உற்சாகம் உங்கள் செயல் வேகத்தையும் தானாக அதிகரிக்கும்.

4. எந்த கூட்டத்திலும் அடுத்தவர்கள் பேசட்டும் என்று காத்திருக்காதீர்கள். அங்கே கேட்கிற முதல் குரல் உங்களுடையதாகட்டும்.

5. எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள்.அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது

மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
மனிதனுக்கு மனம்தான் அஸ்திவாரம். எல்லா விஷயங்களும் இங்குதான் ஆரம்பமாகிறது. மனிதனின் உடல் மரம் போன்றது. அதன் ஆணி வேர் மனம். மரத்தின் மேலே தெரியும் தண்டு, கிளை, இலை, பூ, காய், கனி எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நன்றாக பார்த்துக்கொள்கிறோம். ஆனால் ஆணிவேர் மோசமாகிக்கொண்டே இருந்தால் மரத்தின் ஏதேனும் ஒரு பகுதி இலையோ, பூவோ, காயோ, கனியோ மோசமாகிக்கொண்டே தான் இருக்கும். நாம் பல நேரங்களில் இலை இலையாகப்பார்த்து, காய்காயாகப் பார்த்து, பழம்பழமாகப்பார்த்து தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கிறோம். வேரை கவனிக்காவிட்டால் ஒரு நாள் மரமே (மனமே) பட்டுப்போய்விடும்.

இன்று மனித மனம் பலகீனமாக இருந்துகொண்டிருக்கிறது. அதை பலப்படுத்தும் முயற்சிகளில் நாம் இறங்காமல், கூடுதலான வேலைகளையும், எதிர்பார்ப்புகளையும் அதற்கு கொடுத்து மென்மேலும் அதை பலகீனமாக்கிக் கொண்டிருக்கிறோம்.

நமது உடல் பலகீனமாவது தெரிந்ததும், உடனே வேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஓய்வு, மருந்து என்று சிந்திக்கிறோம். ஆனால் மனதை கவனிப்பதும் இல்லை. தேவைக்கு ஓய்வு கொடுப்பதும் இல்லை. அதனால் ஆர்வமற்ற நிலையில் வேலைகளை செய்யவேண்டியதாகி விடுகிறது. வேலையை ஆர்வத்தோடு அனுபவித்து செய்தால், அதிலே மகிழ்ச்சி கிடைக்கும். ஆனால் ஆர்வமின்றி, கடனே என்று வேலையை செய்வதால், வேறு வழியில் மகிழ்ச்சியை தேடவேண்டிய கட்டாயம் மனிதர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.

`பேலன்ஸ்’ செய்வது, அதாவது சமநிலையை கையாளுவதில் நமக்கு பக்குவம் குறைவு. வேலையாக இருந்தாலும், பொழுதுபோக்காக இருந்தாலும், நட்பாக இருந்தாலும், உறவாக இருந்தாலும் ஒன்று, அளவுக்கு மீறி ஆர்வம் காட்டுகிறோம். முக்கியத்துவம் கொடுக்கி றோம். நெருங்குகிறோம். இல்லாவிட்டால் அத்தனையையும் ஒதுக்கித்தள்ளிவிட்டு அதில் இருந்து முழுமையாக விலகி ஓடி விடுகிறோம். இதில் எல்லை என்பது நமக்கு தெரிவதில்லை.

மனதை சரி செய்தால்தான் நம்மால் எல்லையை உணர முடியும். எல்லையை உணர்ந்தால் தான் எல்லை வரை மகிழ்ச்சியை அனுபவிக்கவும், எல்லை மீறாமல் இருக்கவும் முடியும். மனதை சரிசெய்ய அதன் மீது “கவனம்” செலுத்த வேண்டும்.
 
தியானம் என்பது இன்று எல்லோரும் உச்சரிக்கும் சொல். தியானம் என்றால், கவனம் என்றுதான் அர்த்தம். உங்கள் கார் மீது, செல்போன் மீது, வீட்டின் மீது, உறவினர்கள் மீது கவனம் வைத்திருக்கிறீர்கள். அதுபோல் மனதின் மீது கவனத்தை முழுமையாக விஞ் ஞான ரீதியாக செலுத்துவதுதான் தியானம்.

`நீங்கள் யாரை எல்லாம் கவனிக்கிறீர்கள்?’- என்று உங்களிடம் கேட்டால், `வீடு, மனைவி, மக்கள், அலுவலகம்.. என்று பலவற்றை அடுக்குவீர்கள். `நான் என்னையும் கவனித்துக் கொள்கிறேன்’ என்றும் சொல்வீர்கள். `நான்’ என்று நீங்கள் உங்கள் உடலைத்தான் சொல்வீர்கள். மனதை சொல்வதில்லை.

மனதே சரியில்லை என்ற வார்த்தை இப்போது ரொம்ப மலிந்துபோய்விட்டது. கோவிலுக்கு செல்கிறார்கள். அந்த நேரத்தில் மனதுக்கு ஒரு அமைதி கிடைக்கிறது. இரண்டு மணி நேரம் உபன்யாசம் கேட்கிறார்கள். நிறைய நல்ல விஷயங்களை கேட்கும் அந்த நேரத்தில், மனது நன்றாக இருக்கிறது அற்புதமாக இருக்கிறது என்று கைதட்டுகிறோம். அங்கிருந்து வெளியேறிய அடுத்த நிமிடமே மீண்டும் பழைய குழப்பங்கள், பிரச்சினைகள், சச்சரவுகள். மீண்டும் போவோம்.. வருவோம்.. ஆனால் அங்கு வார்த்தைகளில் கிடைத்ததை, அவர் களால் வாழ்க்கையில் பயன்படுத்த முடிவதில்லை. ஏன் என்றால் வாழ்க்கை, குழப்பம் நிறைந்த மனதின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

நாம், கவனம் செலுத்தி நம் மனதையே கவனிக்காமல் விட்டுவிட்டால், நம்மைச் சார்ந்த யார் மனதையும் நம்மால் கவனிக்க முடியாது. நமது மனைவி, குழந்தைகள் மனதைக்கூட கவனிக்க முடியாது.
இந்த உலகில் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? ஆம் என்று சொன்னால், அது நல்ல ஆசை!
ஆனால்..
 
- உங்களிடம் உணவு இருந்தால்தான் அதை நீங்கள் அடுத்தவர்களுக்கு கொடுக்க முடியும்.
- உங்களிடம் பணம் இருந்தால்தான் அடுத்தவர்களுக்கும் கொடுக்க முடியும்.
 
அதுபோல் உங்களிடம் மகிழ்ச்சி இருந்தால், நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் மட்டுமே நீங்கள் விரும்புகிறவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்க முடியும். அதனால் இந்த உலகம் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று விரும்பும் நீங்கள் முதலில் மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

நம்பிக்கையின் வலிமை

 நம்பிக்கையின் வலிமை

அனைவரின் வாழ்க்கைக்கும் அவசியம் தேவையான, ஆற்றல் தரும் விஷயம் நம்பிக்கை. உயிர் இல்லாத உடலுக்கு மதிப்பு குறைவு போல, நம்பிக்கை இல்லாத மனிதனுக்கும் இங்கே மதிப்பு குறைவு. பலரது வாழ்க்கையை மாற்றும் வலிமை நம்பிக்கைக்கு மட்டுமே உண்டு. வாழ்க்கை எனும் ஆற்றை நம்பிக்கை எனும் நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே சுலபமாக கடக்கிறார்கள், மற்றவர்கள் கரையிலேயே வீழ்ந்து கிடக்கிறார்கள். கஷ்டத்தில் வரும் துன்பத்தைவிட கஷ்டம் வந்துவிடுமோ என்ற பயத்தால் வரும் துன்பம் அதிகம். இதை தவிர்க்க நம்பிக்கையால் மட்டுமே முடியும்.

நம்பிக்கை எங்கும் இருக்கிறது. நமக்குள் இருக்கிறது. நம்மைச்சுற்றி இருப்பவர்களிடம் இருக்கிறது. புத்தகங்களில் இருக்கிறது. கடவுளிடம் இருக்கின்றது. நம்மைச்சுற்றி நடக்கும் சிறுசிறு சம்பவங்களில் இருக்கிறது. ஓவவொன்றையும் கூர்ந்து கவனித்தால் நம்பிக்கையை பற்றி நாம் நிறைய விஷயங்களை புரிந்து கொள்ளலாம்.

வாகனத்திலோ, இரயிலிலோ, விமனத்திலோ, பயணம் செய்யும்போது அந்த பயணம் பாதுகாப்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் நம்மால் வேடிக்கை பார்த்துக்கொண்டும், புத்தகம் படித்துக் கொண்டும், அரட்டை அடித்துக்கொண்டும் பயணம் செய்ய முடியும். விபத்து ஏற்படுமோ என்ற பயம் வந்துவிட்டால் பயணம் பயங்கரமானதாகத்தான் தோன்றும்.

கணவன் மனைவியும் ஒருவர் மீது ஒருவர் உண்மையான நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அன்றாட வேலைகளும், இல்லறமும் சிறப்பாக இருக்கும். இல்லாவிட்டால் குடும்பத்தில் குழப்பங்கள்தான் நிறைந்திருக்கும்.

தொழில் ஒன்றை தொடங்குகிறோம் அதை சிறப்பாக செய்யமுடியும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் அதை சிறப்பாக செய்ய முடியும். நஷ்டம் வந்துவிடுமோ என்ற பயத்துடனே ஆரம்பித்தால் அது நஷ்டத்தில் தான் முடியும்.

இன்னும் எத்தனையோ விஷயங்கள் நம்பிக்கையால்தான் நடந்துக் கொண்டிருக்கிறது. நாம் எடுக்கும் எந்த ஒரு செயலையும் சிறப்பாக செய்ய முடியும் என்று நம்பவேண்டும். நம்மால் முடியுமா என்று சந்தேகப்படக்கூடாது.

ஒரு தத்துவம் நினைவுக்கு வருகிறது

சந்தேகம் இருக்கும் இடத்தில் சந்தோஷம் இருக்காது!
நம்பிக்கை இருக்கும் இடத்தில் நன்மைகள் இருக்கும்!

நம்பிக்கையை இரண்டு விதமாக சொல்லலாம்

1. தானே ஏற்படுத்திக்கொள்ளும் நம்பிக்கை

2. நிர்பந்தத்தால் ஏற்படும் நம்பிக்கை

ஒரு மாணவன் நிறைய மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆரம்ப முதலே நம்பிக்கையுடன் அன்றாடம் படித்தால் அது தானாக ஏற்படுத்தி கொள்ளும் நம்பிக்கை. தேர்வு நெருங்கும் சமயத்தில் குறைந்த காலத்தில் படித்தால்தான் தேர்ச்சி பெறமுடியும் என்ற சூழ்நிலையில் நம்பிக்கையுடன் படிப்பது நிர்பந்தத்தால் வரும்.

நம்பிக்கையின் வலிமையை நம்மை சுற்றி நடக்கும் சின்ன சின்ன சம்பவங்களில் இருந்தும் கற்றுக்கொள்ளலாம் நான் கற்ற சில சம்பவங்கள்.

நம்பிக்கையை பற்றி சொல்லும் போது குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் "எதை நம்புவது? யாரை நம்புவது? எப்போது நம்புவது? எப்படி நம்புவது?" என்று நம்பத்தெரிய வேண்டும். நம்முடைய நம்பிக்கைகள் கண்முடித்தன நம்பிக்கையாக இருக்க கூடாது. ஆரோக்கியமான நம்பிக்கையாகவும் அறிவுபூர்வமான நம்பிக்கையாகவும் இருக்க வேண்டும்.

என் நண்பன் வீட்டின் அருகே ஒரு பையன் இருந்தான். ஒரு பெண்னை காதலித்தான். அந்த பெண் தன்னுடைய அத்தை பையனை காதலிப்பதால் மறுத்து விட்டாள். அவன் மீண்டும் மீண்டும் அந்த பெண்னை தொந்தரவு செய்தான். ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டதற்கு எப்படியும் கடைசியில் அவள் என்னை காதலிப்பாள் என்ற நம்பிக்கை எனக்கு இருப்பதாக சொன்னான்! இதற்கு பெயர் நம்பிக்கையா? முட்டாள்தன்ம். இதே போல் தான் சிலர் தவறாக ஒன்றை சரி என்று நினைத்து, அதன் மீது நம்பிக்கை வைத்து தன்னை தானே ஏமாற்றி கொள்கிறார்கள்.

நம்பிக்கையை பற்றி திருவள்ளுவர் சொல்லும் அழகான கருத்து இது

" தேரான் தெளிவும் தெளிந்தபின் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்"

ஒன்றைபற்றி சரியாக தெரிந்துக் கொள்ளாமல் அதை நம்புவதும், நன்கு தெரிந்த நம்பிக்கையான ஒன்றை சந்தேகப்படுதலும் தீராத துன்பத்தை தரும் என்பது இதன் கருத்து.

எல்லோரையும் நம்புவது ஆபத்து. யாரையும் நம்பாதது பேராபத்து.

எனவே நாம் எந்த ஒரு விஷயத்திலும் நன்றாக யோசித்த பிறகே நம்பிக்கை வைக்க வேண்டும். பிறகு அந்த நம்பிக்கையில் உறுதியாக இருக்கவேண்டும்.

நமக்கு நிறைய நன்மைகளை தரும் நம்பிக்கையில் முக்கியமான ஒன்று கடவுள் நம்பிக்கை. இந்த நம்பிக்கையால் தான் பலரது வாழ்க்கை நல்ல நிலைமையில் இருக்கிறது. நிறைய மதங்களும், நிறைய கடவுள்களும் இருக்கின்றன. பாதைகள் வேறாக இருந்தாலும் பயணம் ஒன்றை நோக்கிதான். எனவே எந்த கடவுளை வண்ங்குகிறோம் என்பது முக்கியமில்லை. எந்த அளவிற்கு உண்மையாகவும் நம்பிக்கையுடனும் வண்ங்குகிறோம் என்பதை பொறுத்தும் தான் கடவுள் அருள் புரிகிறார்.

நம்பிக்கை! நம்பிக்கை! நம்மிடத்தில் நம்பிக்கை! பிறகு கடவுளிடத்தில் நம்பிக்கை! என்று சொல்கிறார் விவேகானந்தர். உழைப்பதற்கு முன்னால் தன்னம்பிக்கை வேண்டும் உழைப்புக்கு பின் கடவுள் நம்பிக்கை வேண்டும்.

உலகில் எல்லா மதங்களும் வழியுறுத்தும் கருத்து "நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்"

பிரச்சனை யாருக்குதான் இல்லை. ஒவ்வொருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள். பிரச்சனைகள் தீர்க்க வேண்டுமானால் முதலில் அதை புரிந்துக் கொள்ள வேண்டும். பிரச்சனைகளை புரிந்து கொள்ள வேண்டுமானால் பதட்டமில்லாமல் நம்மால் அதை தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை ஏற்பட்டாலே அதற்குரிய வழியும் கிடைத்து விடுகிறது. ஒரு சிறிய கதையின் மூலம் இதை எளிதாக புரியவைக்கலாம்.

ஒரு சிறிய நாடு ஆனால் மிகவும் சொழிப்பான வளமிகுந்த நாடு. அருகே உள்ள பெரிய நாட்டின் மன்னனுக்கு அந்த வளமான சிறிய நாட்டை பிடிக்க வேண்டும் என்று போருக்கு தயாரானான். சிறிய நாட்டின் மன்னனோ, மிகவும் கவலை அடைந்தான். நமது படை சிறியது. போர் வந்தால் தோல்வி நிச்சயம்.எனவே அடிபணிந்து போய்விடுவது நல்லது என்று நினைத்தான். ஆனால் மன்னின் மகள் இளவரசியோ அதை மறுத்தாள். முடிந்த வரை போராடுவோம், நேர்மையும் நம்பிக்கையும் நம்மிடம் இருக்கிறது. போருக்கு தயாராகுங்கள் நம்பிக்கை நம்மிடம் இருக்கும்வரை பிரச்சனைகளுக்கு தீர்வும் கண்டிப்பாக கிடைக்கும் என்று சொல்லி நம்பிக்கையுடன் யோசிக்க ஆரம்பித்தாள். ஒரு யோசனை பிறந்தது. அந்த காலாம் முதலே ஒரு பழக்கம் இருக்கிறது. ஒரு பெண் ராக்கி என்று சொல்லப்படும் பலவண்ண கயிற்றை ஒரு ஆணிடம் கொடுத்தால் அவனை தன்னுடைய அன்பிற்குரிய சகோதரனாக ஏற்றுகொண்டு விட்டாள் என்று அர்த்தம். உடனடியாக அருகில் இருக்கும் மற்ற நாட்டு மன்னர்களுக்கெல்லாம் ராக்கி சகோதர கயிறை அனுப்பி, அதனுடன் ஆபத்தில் இருக்கிறோம் உதவுமாறு ஒரு கடிதமும் சேர்த்து அனுப்பினாள். சகோதரிக்கு ஒரு ஆபத்தென்றால் சகோதரர்கள் சும்மா இருப்பார்களா? எல்லா மன்னர்களும் உதவிக்கு வந்தார்கள். பெரிய நாட்டின் மன்னன் தோற்று ஓடிப்போனான். இக்கதையில் நமக்கு புரிவது பிரச்சனைகளை கண்டு பயப்படுவதை விட அதை தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை நம் மனதிற்குள் ஏற்பட்டு விட்டால் அதை தீர்ப்பதற்கு வழியும் தானாகவே கிடைத்து விடுகிறது.

ஒரு நாட்டின் மன்னன் பக்கத்து நாட்டு மன்னனை மட்டும் நண்பனாக்கி கொண்டால் போதும். போர் என்றால் மன்னனுடன் சேர்ந்து அவனது வீரர்படை, யானைபடை, குதிரபடை, அனைத்தும் உதவிக்கு வந்துவிடும். அது போல நாமும் நல்லநம்பிக்கையை மட்டும் மனதில் ஏற்படுத்திக்கொண்டால் அதனுடன் சேர்ந்து உழைப்பும் ஆர்வம், திட்டம், சந்தோஷம், மனப்பக்குவம் எல்லாமே நமக்கு வந்துவிடும்.

நம்பிக்கையை பற்றி சில தத்துவங்கள்:

வெற்றிக்கு மிகச்சிறந்த வழி என்னால் முடியும் என்ற தீவிரமான நம்பிக்கை மட்டுமே.

நம்பிக்கையின் மீதும்மட்டும் நம்பிக்கை இழக்காதீர்கள் நம்பினோர் கெடுவதில்லை. நான்குமறை(வேதம்) தீர்ப்பு.

நம் எல்லோர் வாழ்க்கையினும் நம்பிக்கையால் வெற்றி பெற்ற நிமிடங்களும் இருக்கும், நம்பிக்கையில்லாமல் தவறவிட்ட தோல்விகளும் இருக்கும். ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றும் பொழுது பல பிரச்சனைகள் தீர்க்கபடுகிறது. ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்கும் போது பிரச்சனைகள் உருவாகுகிறது.

எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் நம் மீது பிறர் வைத்திருக்கும் நல்ல நம்பிக்கைக்கு மாறாக நாம் நடந்து கொள்வது தான். இதுவரை எப்படி இருந்தாலும் இனி நான் நன்றாக வாழ்வேன் என்று ஒருவன் நம்ப ஆரம்பிக்கும் போது அவனது வாழ்க்கையை அந்த நம்பிக்கையை மாற்றி அமைத்து விடுகிறது.

உலகின் மிகப்பெரிய வெற்றியாளர்கள் முதல் உங்கள் பக்கத்து வீட்டில் முன்னேறிக்கொண்டிருப்பவர்கள் வரை யாரை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் ஒரு காலத்தில் சாதாரணமானவர்களாகவும் தோல்வியை சந்தித்தவர்களாகவும் தான் இருப்பார்கள். அவரது வெற்றிக்கு காரணம் அழுத்தமான நம்பிக்கையும் அதனால் வந்த உழைப்புமே காரணமாகும்.

நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகும் தன்மை உனக்கு உண்டு என்று எல்லா மதமும் சொல்கிறது. நம்முடைய வாழ்க்கை எப்படி இருந்தாலும் அதை மாற்றும் தன்மை நல்ல நம்பிக்கைக்கு உண்டு. இறுதியாக நம்பிக்கையை பற்றி நான் படித்த கவிதை ஒன்றை சொல்லி நிறைவுசெய்கிறேன்.

படிப்பில்
நம்பிக்கையை இழந்தால்
பரிட்சைகள் நம்மை பார்த்து சிரிக்கும்

காதலில்
நம்பிக்கையை இழந்தால்
கவிதைகள் நம்மை பார்த்து சிரிக்கும்

நட்பில்
நம்பிக்கை இழந்தால்
பிரிவுகள் நம்மை பார்த்து சிரிக்கும்

கடமையில்
நம்பிக்கை இழந்தால்
கஷடங்கள் நம்மை பார்த்து சிரிக்கும்

கட்டுப்பாடுகளில்
நம்பிக்கை இழந்தால்
கலாச்சாரம் நம்மை பார்த்து சிரிக்கும்

நிகழ்காலத்தில்
நம்பிக்கை இழந்தால்
எதிர்காலம் நம்மை பார்த்து சிரிக்கும்

எதிலும்
நம்பிக்கையோடு இருந்தால்
வாழ்வில் எல்லாமே சிறக்கும்.

உன்னுடைய பாதை நேர்மையானதாகவும்! உழைப்பு உண்மையானதாகவும் இருந்தால் இறைவன் அருள் பற்றி ஐயம் வேண்டாம். அது உனக்கு எப்போதும் உண்டு நம்பிக்கையுடன் செயல்படு! வெற்றி நிச்சயம்! என்று அருமையான கருத்தை முன் வைக்கிறார் புதுவை அன்னை.

நல்லதே நினைப்போம், நம்பிக்கையுடன் செயல்படுவோம். நலமாக வாழ்வோமாக

அமெரிக்காவில் ஒரு ஊரில்

அமெரிக்காவில் ஒரு ஊரில் 
அமெரிக்காவில் ஒரு ஊரில், கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது........
 
அந்த கடை வாசலில் கடையின் விதிமுறைகளின் பலகை இருந்தது. அதில் எழுதியிருந்தது..

1. கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.
 
2. கடையில் மொத்தம் 6 தளங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தளத்திலும் இருக்கின்ற ஆண்களோட தகுதிகள் மேல போகப்போக அதிகமாகிக் கொண்டே போகும்.
 
3. ஒரு தளத்தில் இருந்து மேலே சென்று விட்டால் மறுபடியும் கீழே வர முடியாது.. அப்படியே வெளியே தான் போக வேண்டும்.....
இது தான் அந்த விதிமுறைகள்....

இதையெல்லாம் படித்து பார்த்து விட்டு, ஒரு இளம்பெண் கணவர் வாங்க கடைக்கு வந்தார்..
 
"கணவர் வாங்குவது என்பது காய்கறி வாங்குவது போன்ற காரியமல்லவே, என்று நினைத்துக்கொண்டு கடையின் உள்ளே நுழைந்தார்...

முதல் தளம் அறிக்கை பலகையில்,
 
>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<
"வேலை உள்ளவர்கள்".
"கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்".
இது என்ன ஒரு அடிப்படை தகுதி என்று எண்ணிக்கொண்டு மேலே செல்கிறார்...

இரண்டாம் தளம் அறிக்கை பலகையில்,
 
>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<
"வேலை உள்ளவர்கள்".
"கடவுள் நம்பிக்கை உளளவர்கள்"
மேலும்
"குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"
இதுவும் என்ன ஒரு அடிப்படை தகுதி என்று எண்ணிக்கொண்டு மேலே செல்கிறார்...

மூன்றாம் தளம் அறிக்கை பலகையில்.
 
>>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<<
"வேலை உள்ளவர்கள்"
"கடவுள் நம்பிக்கை உளளவர்கள்"
"குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"
மற்றும்
"வசீகரமானவர்கள்"

அந்த இளம்பெண் "வசீகரமானவர்கள்" என்பதை பார்த்ததும், "ஆஹா.. மூன்றாவது தளத்திலேயே இவ்வளவு தகுதிகள் இருந்தால், மேலே போகப்போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ"என்று நினைத்துக்கொண்டு மேலே செல்ல முடிவெடுத்தார்....

நாலாவது தளம் அறிக்கை பலகையில்,
 
>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<
"வேலை உள்ளவர்கள்"
"கடவுள் நம்பிக்கை உளளவர்கள்"
"குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"
"வசீகரமானவர்கள்"
மற்றும் "வீட்டு வேலைகளில் மனைவிக்கு
உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்"
இதை விட வேறு என்ன வேண்டும்.. நல்ல குடும்பம் அமைக்கலாமே...?

கடவுளே... மேல என்ன இருக்கு என்று தெரிந்தே ஆகணும்.
அப்படி என்று முடிவு செய்து விட்டு, அடுத்த தளத்திற்கு சென்றார்...

ஐந்தாவது தளம் அறிக்கை பலகையில்,
 
>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<
"வேலை உள்ளவர்கள்"
"கடவுள் நம்பிக்கை உளளவர்கள்"
"குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"
"வசீகரமானவர்கள்"
"வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்"
மற்றும் "மிகவும் "ரொமாண்டிக்" ஆனவர்கள்"
 
அவ்வளவு தான்.. அந்த பெண்ணால் தாங்க முடியவில்லை..
 
சரி இங்கேயே யாரையாவது தேர்வு செய்யலாம் என்று நினைத்தாலும் இன்னொரு தளம் பாக்கி இருக்கின்றதே..
 
அங்கே என்ன எப்படிப்பட்ட கணவர்கள் இருப்பார்கள் என்பதை பார்க்காமல் எப்படி முடிவு செய்வது....???

சரி மேலே சென்று பார்த்து விடலாமே என்று முடிவு செய்து விட்டு ஆறாவது தளத்திற்கு செல்கிறார்....
*
*
*��
*
*
*
*��
*
*
*
*
*
*
*��
*
*
*
*
*
*
*��
*
*
*
*
*��
*
*
ஆறாவது தளம் அறிக்கை பலகையில்,

""இந்த தளத்தில் கணவர்கள் யாரும் இல்லை.. வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது.. இந்த தளத்தை அமைத்ததற்கு காரணம், பெண்களை திருப்திப்படுத்தவே முடியாது என்பதை நிரூபிக்கத்தான்""..... "எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி"...!

" கீழே படிகளில் இறங்கவும்".  என்று இருந்தது.

தன்னம்பிக்கை வார்த்தைகள்! ! !

தன்னம்பிக்கை வார்த்தைகள்! ! !
இலட்சியத்தில் வெற்றிபெறுவோம் என்ற உறுதிமட்டும் இருந்தால்போதும். உங்கள் பணிக்கு மட்டும் முதலிடம் கொடுத்து உழையுங்கள். தன்னம்பிக்கைதான் உங்கள் வாழ்க்கையைப் பாதுகாப்பான வாழ்க்கையாக மாற்றித் தருகிறது என்பதை மறவாதீர்கள். வெற்றியைச் சந்திக்காமல் திரும்பமாட்டேன் என்ற உங்களது உறுதிஒன்றே எப்பொழுதும் கைவிளக்காக இருக்க வேண்டும்.
 
'வெற்றிபெறவேண்டும்' என்னும் உங்களுடைய திடமான எண்ணம்தான் வேறு எந்தக் காரியத்தையும் விட மிக மிக முக்கியமானது. மிக இக்கட்டான சூழ்நிலைகளில், நான் தோற்றுவிடுவேனோ? என்று சிந்திக்காதிர்கள். நான் வெல்வேன் என்று நம்புங்கள்.

அப்போதுதான் பிரச்சினைகளை வெல்ல வழிபிறக்கும். வீட்டிலும், வேலையிலும், வெளியிலும் நான் வெற்றிபெறுவேன் என்கிற மனநிலையே உங்களை வெற்றிபெறச் செய்துவிடும். எதையும் ஒரு திட்டத்தோடு மட்டும் தொடங்காதிர்கள்.செயலோடும் தொடங்குங்கள்.சிந்தனை செய்யுங்கள்; முடியும் என்ற மாறாத தன்னம்பிக்கை யுடனேயே உங்களுடைய சிந்தனை அமைந்திருக்கட்டும். இந்த மனப்பான்மையிலிருந்து மாறிவிடாமல் சிந்தித்தைச் செயலில் காட்ட மிகுந்த மகிழ்ச்சியுடன் உழையுங்கள். வெற்றி மிக அருகில் இருப்பதை உணர்வீர்கள்.

தாழ்வுமனப்பான்மை வேண்டாம்.அனைத்தையும் வெல்ல முடியும்.வெற்றியைப்பற்றிய சிந்தனையுடன் செயல்படுங்கள். தோல்வி, வெறுப்பு, அவநம்பிக்கை ஆகியவற்றிற்கு இடமளிக்காமல் வெற்றியை மட்டுமே சிந்தித்து உயர்வடையுங்கள்.
 
உங்களுடைய கவனம் முழுவதும் உங்களின் இலட்சியத்தை நோக்கித்தான் இருக்க வேண்டும். தடைகள் எதிர்படும்பொழுதும் இலட்சியத்திலிருந்து உங்கள் மனத்தையும், செயலையும் பின்வாங்கவிடாதீர்கள். இவையெல்லாம் உங்கள் உறுதியை சோதிகக வந்தவை என்று கருதி அந்தத் தடைகளையும் தாண்டி உங்களுடைய உயர்ந்த இலட்சியத்தை அடையுங்கள்.

வெற்றியைக் கற்பனையில் நம்பிக்கையுடன் பார்க்கும் திறன், என்னால் முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, உறுதியாக வெற்றி பெற வேண்டும் என்ற செயல்வேகம், எது வேண்டும் என்றாலும் பொறுமையுடன் விடாப்பிடியாக முயற்சி செய்யும் குணம், இந்த நான்கும் உள்ளவரே தன்னம்பிக்கையுள்ள மனிதர்.
 
நம்முடைய வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பது மனவளர்ச்சியோ, மனவளர்ச்சி இன்மையோ அல்ல.நல்லதே நடக்கும் என்ற மனோபாவம்தான்.எனவே எப்போதும் உண்மையான ஆர்வத்துடன் வெற்றிக்காக உழையுங்கள். நம்முடைய உழைக்கும் நேரம் நாள்தோறும் அதிகரிக்க வேண்டும். அதற்கு ஏற்றபடி நமது சிந்தனை, செயல்வேகம் ஆகியவை இருக்க வேண்டும். முயற்சியை எவனொருவன் எப்பொழுது கைவிடுகிறானோ அப்பொழுதே அவனது சக்தி முழுவதும் அவனிடமிருந்து பறந்து போய்விடுகிறது.

அரிய சாதனைகள் செய்யப்படுவது வலிமையினால் அல்ல.விடாமுயற்சியினால் தான்.வெற்றியின் இரகசியம் 'கடின உழைப்பு' என்ற சொற்களில் தான் அடங்கி இருக்கிறது. நம்பிக்கையும் உற்சாகமும் மட்டும் இருந்தால் போதும். வெற்றி இலக்கை அடைந்துவிடலாம்.சிந்தனையைவிடச் செயல்தான் எல்லோரையும், எல்லாவற்றையும் மாற்றி அமைக்கும். முன்னேற்றத்தையும் தரும். எப்போதும் சிந்தித்துக் கொண்டே மட்டும் இருக்காமல் செயல்பட்டுக் கொண்டெ இருங்கள்.

நீங்கள் பணிவுடன் பழகுபவர் என்றால் பலரை உங்கள் பக்கம் ஈர்த்து விடுவீர்கள். நேர்மை உள்ளம் கொண்டவர் என்றால் உங்களை எல்லோரும் நம்புவார்கள். விடாது முயற்சி செய்யும் அரிய குணத்தைப் பெற்றிருந்தால், எப்போதும் நீங்கள் வெற்றி வீரனாகத் திகழ்வீர்கள்.மனம் அமைதியாக இருக்கவேண்டுமானால் எதிர்மறையான சிந்தனைகளையும், பிறரது திறமைகளை சிறுமைபடுத்துவதையும், கீழ்த்தரமான முறையில் விமர்சிப்பதையும் நிறுத்துங்கள். உங்கள் மனதை சுத்தப்படுத்துங்கள். ஊக்கமான சிந்தனைகளையே நிரப்புங்கள். எதிலேயும் நல்லதே நடக்கும் என்றே செயல்படுங்கள். இப்போது நீங்கள் தான் உலகிலேயே மிகவும் அமைதியான மனம் உடையவர்.
 
வெற்றி பெறுவோம்' என்ற திடமான மன உறுதியில் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தொடர்ந்துவிடாது செயலாற்றிக்கொண்டேயிருந்தால் மிக எளிதாக வெற்றிக் கனியைப் பறிக்கமுடியும். வாழ்க்கையில் உயரவேண்டும் என்று உங்கள் மனத்திற்கு கட்டளையிடுங்கள்.
 
கட்டளையை முழு வேகத்துடனும் விருப்பத்துடனும் அடிக்கடி இட்டால் நீங்கள் உண்மையில் அதை அடைய செயலிலும் இறங்கிவிடுவீர்கள்.தன்னம்பிக்கையே உலகின் மிகச்சிறந்த ஆயுதம். இந்த ஆயுதம் இருந்தால் கஷ்டங்களைப் பொறுத்துக்கொண்டு அதற்கான காரணகாரியத்தை ஆராய்ந்து தீர்வு காணமுடியும். தன்னம்பிக்கையே நோய்களையும், உடல் வலியையும், மனவேதனைகளையும் நீக்குகிறது. தன்னம்பிக்கையே நீடித்த நல்வாழ்க்கையை அமைத்துத் தருகிறது.
 
வெற்றி பெறுகிறவனின் ஒரே மந்திரச்சொல் 'இப்பொழுது'. தோல்வி அடைகிறவனின் ஒரே சாபச்சொல் 'பிறகு'. வெற்றி பெற்றே தீர வேண்டும். எனவே எதையும் தள்ளிப் போடாதிர்கள்.பிரச்னைகள்தாம் மிகப்பெரிய சாதனைகளையும், உறுதிமிக்க சாதனையாளர்களையும் உருவாக்குகின்றன. எனவே பிரச்னைகளை விருப்பத்துடன் எதிர்கொள்ளுங்கள்.
 
தோல்வி எனக்கு மனச்சோர்வை அளிப்பதில்லை. மாறாக அது என்னை மேலும் மேலும் ஊக்குவிக்கிறது.எவ்வளவுதான் கல்வியும், செல்வமும் இருந்தாலும் ஒருவனால் வெற்றி பெறமுடியாது. தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் தொடர்ந்து முயற்சி செய்யும் ஊக்கம் அவனிடம் இருந்தால்தான் முன்னேற முடியும், வெற்றி பெற முடியும். இந்த ஊக்கம் இருந்தால், கல்வியறிவு இல்லாதவனும், பொருள்வசதி இல்லாதவனும் கூட முன்னேறுவது உறுதி.

முன்னேற முயற்சியை, உழைப்பை, அறிவை, ஒழுக்கத்தை நம்புங்கள். இதைத்தவிர வேறு எதை நம்பினாலும் முன்னேற முடியாது. அறிவுக்கு இந்த உலகம் எப்போதும் வணங்கும். திறமைக்கு இருகரம் நீட்டி ஆதரவு தரும். தூய்மையான உள்ளத்திற்கு மிகுந்த வரவேற்பு தரும்.வேதனையை மனோபலத்துடன் எதிர்கொள்ள முடிந்தால், எப்படிப்பட்ட துக்கத்தையும் தாங்கிக்கொள்ள முடியும்.
 
வாழ்க்கையை அதன்போக்கில் ஏற்றுக்கொண்டு முடிந்தவரை மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். பிரச்சனையை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்காமல், அதை எதிர் கொள்வது எப்படி என்று நீங்கள் யோசிக்க ஆரம்பித்தாலே போதும். குழப்பநிலையிலிருந்து நீங்கள் வெளியில் வந்துவிட்டதாக அர்த்தம். இந்த நிலையில்தான் நீங்கள் சரியான முடிவுகளை, சரியான நேரத்தில் எடுக்கவேண்டியுருக்கும். பிரச்சனை களுக்குத் தீர்வு காணும் முன்பு மனதை சமநிலைப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
 
மிகப்பெரிய எழுத்தாளராகத் தன்னைக் கற்பனை செய்துகொள்ளும் ஒருவன் தான் எழுதிக் கொண்டிருக்கும் படைப்பு 'எப்படி முடிந்தால் சிறப்பாக இருக்கும்' என்பதை கற்பனையில் பார்த்து, அதற்கு ஏற்றபடி எழுதினால் நிகழ்காலத்தில் வெற்றி பெறமுடியும். ஆகவே நாம் செய்து முடிக்க எடுத்துக்கொண்டுள்ள காரியங்களும் அதை கற்பனையில் பார்த்தபடி உருவாக்கும் குணமும் நம் வாழ்வில் நிச்சயம் பலம் சேர்க்கும். எனவே ' முடிவு இப்படி இருக்க வேண்டும்' என்று உறுதியாக கற்பனையில் படமாகப் பார்த்து முடிவு செய்துகொண்டு தீவிராமாக உழைத்து வெற்றி அடையுங்கள். இதைப் பழக்கத்தில் கொண்டுவந்து தொடர்ந்து சாதனை புரியுங்கள்.

செயல்படுங்கள். காரியத்தில் இறங்குங்கள். அறிவுடன் இருங்கள். காலத்தை வீண் அடிக்காதிர்கள். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் சரி. உறுதியாக நின்று, நானும் ஓர் 'வெற்றி வீரனே' என்று காட்டுங்கள். வெற்றி வீரனாக செயல்படுங்கள்.
 
நிறைந்த முயற்சியை உடையவன், மலர்ந்த வாழ்வைப் பெறுவான்.ஆபத்திலிருந்து காப்பாற்றும்படி பிரார்த்திக்க மாட்டேன். ஆபத்துகளைச் சந்திக்க எனக்கு அஞ்சாமையைக் கொடு. நோய்களிலிருந்து காப்பாற்றும்படி யாசிக்க மாட்டேன். நோயைப் பொறுத்துக்கொண்டு வெற்றி கொள்ளும் மனதிடத்தை எனக்கு கொடு. வாழ்க்கை எனும் போரில் எனக்கு துணை கேட்க மாட்டேன். வெற்றியடைய சுயலாபத்தைக் கொடு.

எதிர்பார்ப்புகள் என்ன ஆகுமோ? என்ற பயத்திலிருந்து காப்பாற்றும்படி வேண்ட மாட்டேன். நம்பிக்கையுடன் இருந்து வெற்றியடைய பொறுமையைக் கொடு.-தாகூர்நிகழ்வதை கொண்டு நிகழ்ச்சிகள் உறுதிப்படுகின்றன. அகமகிழ்வதும், தோல்வியில் வருந்துதலும் சூழல்நிமித்தம். முழுமை பெறுவதே அமைதி.-தொல்காப்பியர் எந்தப் பணியை நாம் மேற்கொள்கிறோம் என்பது முக்கியமில்லை. அந்தப் பணியில் நம்முடைய ஆற்றலை எப்படி செயல்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். நமக்குள் இருக்கின்ற ஆற்றலை வெளிப்படுத்தி வளர்த்துக்கொள்வது நம்முடைய ஆர்வத்தையும் முயற்சிகளையும் பொறுத்தே அமைகிறது. விரும்பியது கிடைக்கவில்லையெனில், கிடைத்தை விரும்பக் கற்றுக்கொள்ள வேண்டும்.

பல்வேறு காரணங்களால் நமக்குள்ளே உருவாகும் தன்னம்பிக்கையின்மை, தாழ்வு மனப்பான்மை, அச்சம், சந்தேகம், எதிர் காலத்தைப் பற்றிய அவநம்பிக்கை ஆகியவற்றறின் காரணமாக நம்மிடம் உள்ள ஆற்றல்செயல்பட முடியாமல் முடக்கி வைக்கப்பட்டுவிடுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நம்மைப்பற்றி நமக்கென்று 'ஒரு சுயமதிப்பீடு' இல்லாதபோது நம்முடைய ஆற்றலைப்பற்றிய உணர்வும் நமக்கில்லாமல் போய்விடுகிறது. என்னால் இது முடியுமா? என்று சந்தேகப்படுவதை விட்டுவிட்டு, என்னால் முடியும் என்கிற நம்பிக்கையினைப் பெறுகிறபோது ஆற்றலும் செயல்படத் தொடங்குகிறது.

ஆற்றல் ஒருவரிடம் ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும்தான் வெளிப்பட வேண்டும் என்கிற அவசியமில்லை. எத்தனைத் துறைகளில் ஈடுபட்டாலும் அத்தனைத் துறைகளிலும் நம்முடைய ஆற்றலை நம்மால் வெளிப்படுத்த முடியும். ஆனால் அத்தனைத் துறைகளிலும் அக்கறை காட்டுகின்ற மனஉறுதி நமக்கிருப்பது அவசியம்.முயற்சிகள் தொடரும்போது ஆற்றல் வெளிப்படத் தொடங்குகிறது. முயற்சி விடாமுயற்சியாகும் போது ஆற்றல் வலிமை பெறுகிறது. ஆற்றல் வலிமை பெறுகிறபோது மனத்தளவில் ஏற்பட்ட தடைகள் தகர்ந்து போகின்றன.

நான் விரும்பிய துறை கிடைக்கவில்லை. ஆகவே என்னுடைய ஆற்றல் வெளிப்பட வழியில்லை என எண்ணுவது தவறு. அவ்வாறு எண்ணுகின்ற மனிதன் தன்னுடைய ஆற்றலுக்குத் தானே தடை விதித்துக்கொள்ளுகிறவன் என்றுதான் கருத வேண்டும்.கதவைத் தட்டி வாய்ப்புகள் தங்களை அறிவித்துக் கொள்வதில்லை. நாம்தான் வாய்ப்புகளின் கதவைத் தட்டி, திறக்க வைத்து அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாய்ப்பு சிறிதாயினும், பெரிதாயினும் உங்களுடைய முழுத்திறமையைக் காட்டி செயல்படுங்கள். அப்போது உங்கள் ஆற்றல் வளர்ந்து கூர்மையடைவதை உணரலாம்.

தன் திறமையில் சந்தேகம், பயம், சோம்பல், வேண்டாத வீணான கற்பனை, கீழ்நிலையில் உள்ளவர்களின் துன்பத்தைப் பற்றியே தொடர்ந்து நினைத்துக் கொண்டிருப்பது, ஆரம்பத்திலேயே வெற்றியின் அறிகுறியை எதிர்பார்ப்பது, சிறுதடை என்றாலும் மனமுடைந்துபோவது, இவைபோன்ற பல காரணங்களால் ஒருவருக்குத் தோல்வி மனப்பான்மை ஏற்பட்டுவிடுகிறது. மனஉறுதியென்பது நமக்கு நாமே உண்மையோடும், நம்பிக்கையோடும் உண்டாக்கிக் கொள்வதுதான்.விழுவதில் தவறில்லை. விழுந்தபின்பும் அமைதியாய் இருப்பதுதான் தவறு. விழுந்தபின்பு மீண்டும் எழுந்து நடப்பதில்தான், நமது வெற்றியின் ரகசியமே உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மூடிய கதவுகளை முறைத்துப் பார்த்துக்கொண்டிருக்காதிர்கள். அதையே நினைத்து நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்காதிர்கள். திறந்திருக்கும் கதவுகளை தேட முயலுங்கள். ஒவ்வொரு வினாடியும் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் மனிதனுடைய கால்களை முன்னோக்கி நடக்கும் விதத்தில் அமைத்திருக்கின்றார்.

பார்க்கின்ற பொருட்களில் மகிழ்ச்சியில்லை. அந்தப் பொருளை பார்க்கின்ற மன நிலையில்தான் மகிழ்ச்சி இருக்கின்றது. முயற்சி என்னும் விளைநிலத்தில் உழைப்பு எனும் இரயில் வெற்றி அனும் இடத்தை அடைய வேண்டுமானால் உற்சாகம் என்னும் பச்சைவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டே இருக்க வெண்டும்.தாமதிப்பதால் நம் ஒளியை வீணாக்குகிறோம்.அது பகலில் விளக்குகளை எரிப்பதற்குச் சமம். தாமதம் செய்து கொண்டிருப்பவர்களும், தடுமாறிக் கொண்டிருப்பவர்களும் ஒருபோதும் செயலில் துணிந்து இறங்கமாட்டார்கள்.

ஒரு முக்கியமான காரியத்தை நாம் விரும்பி ஏற்றுக்கொண்டுவிட்ட பின்பு, யாருடைய அபிப்பிராயத்துக்காகவும் காத்துக்கொண்டு இருக்கக் கூடாது. யாருடைய பேச்சைக் கேட்டும் இடையில் காரியத்தை நிறுத்திவிடுவதும் சரியல்ல. நாம் மேற்கொள்ள வேண்டிய காரியங்களைப் பற்றி நாம் ஆலோசனை செய்து பார்க்க வேண்டிய சந்தர்ப்பங்களும் உண்டு. செயல் புரியாமல் சோம்பி இருப்பவர்கள் செத்துப்போன சவத்துக்கு ஒப்பானவர்கள்.

முன்னேற்றப்பாதைக்கு, அகத்தூண்டுதல் ஒரு சதவிகிதம். வியர்வை சிந்துதல் 99 சதவிகிதம்.-எடிசன்சுறுசுறுப்பு என்பது ஒரு செயலை நோக்கி தேக்கமில்லாமல், மந்தமில்லாமல் அதே சமயத்தில் அமைதியோடு முன்னேறும் (முன்னேற்றும்) உன்னத நிலையாகும். நாம் முன்னேற்றமடைந்து உயர்வடைவதை நம்மைத்தவிர வேறு எவராலும் தடுத்துவிட முடியாது.எந்தத் தொழிலும் வெற்றி பெறக் கூடியவர்கள் தங்களுடைய வேலை நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ள விரும்புவார்கள்.-ஆண்ட்ரு கார்னீகிஊதியத்திற்கு மேற்பட்ட உழைப்பைச் செய்வதன் மூலம் நமக்கு நாமே பெரிய உதவியை செய்து கொள்கிறோம்.ஒரு இடத்திற்குப் போய் சேரவேண்டுமானால், இருக்கின்ற இடத்தை விட்டுத்தான் செல்லவேண்டும். ஆக உயர்ந்த குறிக்கோளை அடைய வேண்டுமெனில் சில இன்பங்களை மறந்துதான் ஆகவேண்டும்.'இன்று' என்பது நம்மிடம் உள்ள ஒரு பணநோட்டு போன்றது.

அதனை எப்படி வேண்டுமானாலும் நம்மால் செலவு செய்ய குடியும். 'நாளை' என்பது பின்தேதியிட்ட காசோலை போன்றது. அந்தத் தேதி வரும்வரை நம்மால் அதனைக் காசாக்க முடியாது. இன்று அது வெறும் தாளுக்குச் சமம்.

தோல்வியை சந்திக்க நேரும் போது அதிருப்தி ஏற்படுவது இயற்கைதான். ஆனால் அந்த அதிருப்தியானது உங்களை இயலாதவர்களாக, அவமானப்பட்ட வர்களாக உருமாற்றும் முன்பே அதை 'பிடிவாதமாக' மாற்றிக் கொள்ளுங்கள். எதையோ சாதிப்பதற்காக நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். அது என்னவென்று தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்களுடைய வேதனைகளை நினைத்து வருத்தப்படாதீர்கள். அப்படி வருத்தப் பட்டாலும் அதை வெளியில் சொல்லாதீர்கள். முக்கியமாக 'சுய இரக்கம்' என்பது கூடாது.உங்களை யாராவது விரும்பாவிட்டால் அது அவர்களுடைய பிரச்சனை. அது பற்றி நீங்கள் வருத்தப்பட வேண்டிய தேவை இல்லை.

மற்றவர்கள் உங்களுடன் கழிக்கப் போகும் நேரம் ரொம்பக் குறைவுதான். ஆனால் உங்களுடன் நீங்கள் 24 மணி நேரம் கழிக்க வேண்டியிருக்கும். உங்களுடைய கம்பெனி உங்களுக்கு பிடித்தமானதாக இருக்க வேண்டும்.விரும்பியதை யாராலும் பெறமுடியும்.முயன்றால் முடியாதது இல்லை.யாரையும் நம்மைவிட தாழ்ந்தவர்களாக எண்ணிவிடக் கூடாது. நீங்கள் பணிபுரியும் இடத்தில் உங்களை மிகவும் முக்கியமானவராக, தவிர்க்க இயலாதவராக மாற்றிக் கொள்ளுங்கள். இனிமையான பேச்சுக்களின் மறுபதிப்பாக இருங்கள்.

ஒரு மனிதனுக்குத் தேவை தன்னம்பிக்கை மட்டுமே. தன்னம்பிக்கையே அவனை முழுவேகத்தில் செயல்படவைத்து தடைகளையும் தாண்டி வலிமையுடன் வெற்றியைச் சந்திக்க வைக்கிறது.எல்லாக் கவலைகளையும் மறக்கவும், கவலையே இல்லாமல் வாழவும் தன்னம்பிக்கையுடன் சிந்தியுங்கள்.வழிபிறக்கும்.

'தோல்வி உறுதி' என்கிற நிலையிலும் போராடத் துணிந்தவனே உண்மையான வீரன். 'வெற்றி பெறுவோம்' என்று நம்புங்கள். இறுதிவரை போராடுங்கள். விடாமல் முயற்சி செய்யுங்கள். வெற்றி பெறுவீர்கள்.-முசோலினி தன் மேஜை மீது வைத்திருந்த பொன்மொழிமனதைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இலட்சியத்தை அடையும்வரை, நமது மனமும் செயலும் இலட்சியத்தை நோக்கியே சென்று கொண்டிருக்க வேண்டும். முதலில் கடினமாகத் தோன்றினாலும் மனப்பழக்கத்தினால் நம்முடைய பணிகளை வெகு எளிதாக தொடர்ந்து செய்யமுடியும். கடினமான வேலையைச் செய்வதில் மகிழ்ச்சியை காணும் மனநிலை கொண்டவர்கள் எப்போதும் வெற்றியையும் அதன்மூலம் புகழையும் பெறுகிறார்கள்.

மனம் சோர்ந்து போனால் நீங்கள் இதுவரை பெற்ற வெற்றிகளை நினைத்துப் பாருங்கள். உங்கள் நண்பர்கள் உங்களைப் பாராட்டிய அம்சங்களை நினைவிற்குக் கொண்டுவாருங்கள். நாம் எழுந்து எழுந்து உறுதியுடன் எடுத்து வைக்கும் முயற்சிகளில்தான் நம்பிக்கையும் வெற்றியும் உள்ளன

Tuesday, September 29, 2015

தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள்

தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள்

மனிதனாக பிறந்தவர் எவருமே தவறுகளுக்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆனால் தவறு என்று உணர்ந்த பின், அந்த தவற்றை ஒப்புகொள்ளத் தயாராக இருக்கிறீர்களா என்பது தான், உங்களை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தும்.
 
செய்தது தவறா, தவறில்லையா என்பது கூட பிரச்சனையல்ல.. அதை ஒப்புக்கொள்கிற அகங்கார நினைப்புதான் பிரச்சனனை!
 
குழந்தையாக இருந்தபோது எவ்வளவு வளைந்து கொடுத்தீர்கள்? உங்களை அடிதவரிடமே கூட எந்த வண்மமும் இல்லாமல் திரும்ப அவ்ர்களிடம் செல்வீர்களே... அப்போது அந்த சந்தோசம் எப்படி இருந்தது?
 
வளர வளர உடல் அளவிலும் மனதளவிலும் இருகிவிட்டீர்கள்.
 
சமூகத்தில் உங்களுக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டீர்கள்.
 
அந்த அடையாளத்தின் கெளரவத்தை நிலைநிறுத்தும் முயற்சியில், உங்கள் நேர்மையையே பலி கொடுக்கத் தயாராகிவிட்டீர்கள். அதனால் தான் தவறுகளை ஏற்றுக்கொள்ளும் அடிப்படை குணத்தைக் கூட இழந்துவிட்டீர்கள்!
 
"மன்னித்துவிடு! தெரியாமல் நடந்துவிட்டது, அறியாமல் செய்துவிட்டேன்! அடுத்த தடவை திருத்திக்கொள்கிறேன்!" என்று பணிந்து சொல்வதால், என்ன குறைந்துவிடுவீர்கள்.
 
தவற்றை உணர்ந்த பின்னும், வெளிப்படையாக ஏற்கத் துணிவில்லாமல், மேலும் அதை நியாயப்படுத்திகொண்டு இருப்பது தான் தவறு.
 
ஒரு முறை சங்கரன்பிள்ளை, இன்னொருவர் தோட்டத்தில் கனிந்த பழங்கள் தொங்குவதைக் கண்டார். ஒரு கோணிப்பை எடுத்து வந்தார், வேலி தான்டிக் குதித்தார்.
 
மரத்திலிருந்து பழங்களைப் பறித்தார். கோணிப்பையை நிர‌ப்பித் தோளில் போட்டுக்கொண்டார். வேலி தாண்டி வெளியேறப் பார்த்த போது தோட்டத்தின் சொந்தக்காரன் கையில் வசமாக சிக்கிக் கொண்டார்.
 
"யார் அனுமதியுடன் இவற்றைப் பரித்தாய்?"
 
"நான் பறிக்கவில்லையே, பலமான காற்று அடித்தது, அவற்றில் இவை எல்லாம் உதிர்ந்தன!" என்றார் சங்கரன்பிள்ளை.
 
"அப்படியானால், இந்தக் கோணியை எதற்காக எடுத்து வந்தாய்?"
 
"ஓ... இதுவா? இதுவும் காற்றில் காற்றில் எங்கிருந்தோ பற‌ந்து வந்தது!"
 
“காற்றிலே பழங்கள் உதிர்ந்திருக்கட்டும்.... கோணியும் பறந்து வந்திருக்கட்டும்! பழங்களைக் கோணியில் நிர‌ப்பியது யார்?" என்று சொந்தக்காரன் உறுமினான்.
 
சங்கரன்பிள்ளை அதற்கும் கலங்காமல், அப்பாவி போல் தன் முகத்தை வைத்துக்கொண்டு, "அது தான் எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது!" என்றார்.
 
தவறு செய்பவர்கள் பலரும் சங்கரன்பிள்ளை போலத் தான்.... கையும்கள‌வுமாகப் பிடிபட்டாலும், தன் தவற்றை ஒப்புக்கொள்ளாமல் அதை நியாயப்படுத்த மேலும் மேலும் வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போவார்கள்.
 
இந்த மனப்பான்மை மிகவும் அபாயகரமானது! 
நண்பர்களிடம், சக ஊழியர்களிடம், மேலதிகாரியிடம், உங்க‌ளுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம், முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் என்று பாகுபாடு பார்க்காதீர்கள்.
 
என்ன தவறு செய்தாலும் அதை நேர்மையாக ஒப்புக்கொள்ளுங்கள். அது உங்களைப் பற்றிய நன்மதிப்பைத் தான் கூட்டும்.
 
தவறு என்றே உணராமல், சிலர் வார்த்தைகளாலும், செயல்களாலும் அடுத்தவரைக் காயப்படுத்தி விடுவார்கள். அதைச் சுட்டிக் காட்டினால் உனக்கு வேதனை ஏற்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல என்பார்கள்.
 
பழைய ஜோக் ஒன்று... 
 
பஸ்ஸில் ஒருவன் தனக்கு பக்கத்தில் நின்றவனின் காலை அழுத்தமாக மிதித்துவிட்டான். பின்பு கவனிக்கலே என்று சொல்லி, காலை எடுத்துக் கொண்டான்
 
மிதிபட்டவன் தன் காலைப் பார்த்து, "ஏ...காலே! அவர் தான் காரணத்தை சொல்லி விட்டாரே! இன்னும் ஏன் வலிக்கிறாய்?" என்று அதட்டினாய்.
 
வேண்டும் என்றே மிதித்தாலும், தெரியாமல் மிதித்தாலும் வலி, வலி தானே?
       
மன்னிப்புக் கேட்பதை விடுத்து, "வேண்டுமென்றா மிதித்தேன்?" என்று விவாதிப்பது எப்படி நியாயமாகும்.
 
கவனமற்று இருப்பதே ஒரு தவறு என்பதை புரிந்து கொள்ள மறுக்கலாமா?
 
கவனிக்காதவரை, அதே வேதனையை இன்னும் பல நூறு பேர்களுக்கு கொடுக்க நேரலாம் அல்லவா?
 
கவனமில்லாமல் ஒரு முறை தவறு செய்யலாம். ஆனால், தவறு பற்றிய கவனமில்லாமல் தான் தொடர்ந்து இயங்குவேன் என்பது வளர்ச்சிக்கு எதிரானது.
 
சிலர் உங்கள் தவறுகளை பூதக்கண்ணாடியால் பார்க்கக்கூடும், பார்த்துவிட்டு தான் போகட்டுமே!
 
 நீங்கள் மன்னிப்பு கேட்டால், உங்கள் யுத்தம் அங்கேயே முடிந்து, குற்றம் சுமத்தியவர் அல்லவா குற்ற உணர்வை சுமப்பார்?
 
புரிந்துகொள்ளுங்கள்.. இது விட்டுக் கொடுப்பதோ, தோற்றுப் போவதோ அல்ல! உங்கள் மனம் பக்குவப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்....
 
வியாபாரம் செய்தாலும், விளையாட்டாக இருந்தாலும், உங்கள் தவறுகளை எற்றுக்கொள்ளப்வதைப் பொறுத்து் தான் வாழ்க்கையில் உங்கள் வெற்றி அமைகிறது.
 
தவற்றை ஒப்புக்கொள்ளாதவரை, மனதிற்க்குள் சிலுவை போல் உங்கள் குற்ற உணர்வைத் தேவையின்றி சுமக்க நேரிடும்.
 
உங்கள் அலட்சியமான குணத்தினால் அதைப் பற்றி அப்போது (தவறிழைக்கும் போது) உணர்ந்தாலும், கவலைப்படாமல் செயல்பட்டாலும், காலம் வரும்போது அந்தக் குற்றஉணர்வு உங்களைத் துரத்தும்.

தவறுகளை ஒப்புக்கொள்வது என்பது, எதிரிகளையும் நண்பர்களாக்கித் தரும் பலம். எதிர்த்து விழ்த்த முடியாத பலம். வாழ்க்கையில் உங்களை அடுத்த உயரத்திற்கு அழைத்துச் செல்லும் பலம்!

சிகரத்தை அடைவதற்க்கு சுலபமான‌ வழிகள்! ஆனந்தம்

சிகரத்தை அடைவதற்க்கு சுலபமான‌ வழிகள்! ஆனந்தம்      
வாகனம் ஓட்டுவது என்று தேர்ந்தெடுத்துவிட்டால் போக்குவரத்து நெரிசலை ஏற்றுக்கொண்டாக வேண்டும். ஆரோக்கியம் குறித்து அக்கறை கொண்டிருந்தால், நாக்கு கேட்டதையெல்லாம் அதற்கு கொடுக்க முடியாது! வருமானம் என்றால் வருமான வரியும் உடன் வரும்.

வாழ்க்கையில் நீங்கள் எதைத்தேர்ந்தெடுத்தாலும் அதோடு ஒட்டிப்பிறந்த நன்மைகளோடும் தீமைகளும் தான் அதுவரும். முட்களற்ற ரோஜாவைத் தேடுவது எவ்வளவு மடத்தனம்! நானயத்தின் ஒரு பக்கத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தால் அதன் மறுபக்கத்தையும் சேர்த்துதான் நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள். பிரச்சனைகளற்ற ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை வாழவேண்டும் என்று கேட்க்காதீர்கள். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை மகான்க‌ளால் கூட வாழமுடியாது! அப்படிப்பட்ட வாழ்க்கை எதுவும் கிடையாது!
 
கனவுகள் பெரிதாகும் போது பிரச்சனைகளும் பெரிதாகும். நீங்கள் நடக்க விரும்பும் போது ஒருசில பிரச்சனைகள் மட்டுமே இருக்கும். அதே நேரம் ஒரு ஓட்டப்பந்திய வீரனாக பந்தயங்களில் கலந்து கொள்ள நீங்கள் விரும்பினால், பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பது வெளிப்படை. வெறுமனே வாழ்க்கையை ஓட்டினால் மட்டும் போதும் என்று நீங்கள் நினைத்தால், பிரச்சனைகள் குறைவு தான். ஆனால் உங்கள் முழுத்திறனையும் வெளிப்படும் விதத்தில் வாழ நினைத்தால், நீங்கள் பெரிய பெரிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
 
செதுக்கப்பட நீங்கள் தயாராக இருந்தால் தான், துதிக்கப்படும் ஒரு சிலையின் நிலையை அடையும் தகுதியை உங்களால் பெற‌ முடியும். சிகரத்தை அடைவதற்க்கு சுலபமான‌ வழிகள் ஏதும் கிடையாது. சிகரத்தை அடைந்தவர்கள் அதை சுலபமாக சென்றடையவில்லை.
 
என்ன இருந்தாலும் வரலாற்றை படிப்பவனுக்கும், வரலாற்றைப் ப‌டைப்பவனுக்கும் வித்தியாசம் இருக்கத்தானே வேண்டும்?

வெள்ளியின் கதை:     
பைபிள் வாசிப்புக் குழு ஒன்றில் இப்படி ஒரு வாசகத்தைப் படித்தனர்: "வெள்ளியை சுத்தப்படுத்தும் மாசு அகற்றும் நபர் போல அவர் அமர்ந்திருப்பார்." கடவுளின் குணம் மற்றும் இயல்பு குறித்து இங்கு கூற முற்படுவது என்ன?
      
அந்த வாரம் அக்குழுவில் இருந்த ஒரு பெண்மனி வெள்ளி உலோகக்கொல்ல‌ன் ஒருவன் வேலை செய்வதைப் பார்ர்கச் சென்றாள். அங்கே முதலில் கொல்லன் ஒரு துண்டு வெள்ளியை  எடுத்து தீயில் வைத்து அது சூடாவதற்காக காத்திருந்தான். "வெள்ளியை தீயின் நடுவில் வைக்கவேண்டும். ஏனெனில் அங்கே தான் சூடு அதிகமாக இருக்கும், அது அனைத்து மாசுகளையும் எரித்துவிடும்" என்று எடுத்துரைத்தான் கொல்லன். "முழுநேரமும் உலையின் முன்னாலேயே உட்கார்ந்திருக்க வேண்டும் என்பது உண்மையா?" என்று அந்தப் பெண்மனி கேட்டாள். "உண்மைதான்! முழுநேரமும் உட்கார்ந்திருப்பது மட்டுமல்லாமல், வெள்ளியில் இருந்து கண்களை அகற்றவும் கூடாது" என்றும் தெரிவித்தான். "அதிகப்படியான் ஒரே ஒரு கணம் வெள்ளியை நெருப்பில் விட்டுவிட்டால் அது உருகி ஓடிவிடும்". உடனே அப்பெண்மனி "வெள்ளி முழுவதும் மாசு அகற்றப்பட்டுவிட்டது என்பது உனக்கு எப்படித் தெரியும்?" "ஓ! அது ரொம்ப சுலபம்...... என் உருவத்தை நான் அதில் பார்க்கும் போது!"

வாழ்க்கைப் பிரச்சனை உங்களை அதிகமாகத் தாக்குவதாக நீங்கள் உணர்ந்தால், கடவுள் உங்கள் மீது தான் வைத்த கண்னை எடுக்கவில்லை என்பதையும், அவரது பிம்பம் உங்களில் தெரியும் வரை அவர் தனது கண்களை அகற்ற மாட்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனுள்ளும் ஒரு தீர்கதரிசி உறங்கிக்கொண்டிருக்கிறான். கடவுள் மனிதனாக மாறியதற்க்கு காரணம், மனிதன் மீண்டும் கடவுளாக ஆக வேண்டும் என்பதற்காகதான். வாழ்க்கை என்பது உங்களை எரித்துக் கொண்டிருக்கும் ஒரு உலை அல்ல. ஜொலிக்கும் வெள்ளியாக மாற்றிக் கொண்டிருக்கும் ஒரு உலை!

வெற்றிக்காக காத்திருத்தல்

 வெற்றிக்காக காத்திருத்தல்      
வெறுமனே காத்திருத்தலுக்கும், 'ஏதோ ஒன்றிற்காகக் காத்திருத்தலுக்கும் இடையே நூலிழை வித்தியாசம். அமைதியான முன்னேற்றத்திற்கும், மன அழுத்தத்துடன்கூடிய வெற்றிக்கும் இடையே உள்ள வித்தியாசம் தான் அது.
 
விவசாயி தன் நிலத்தை உழுது, விதையும் விதைத்தாகி விட்டது. இப்போது அவன் காத்திருக்க வேண்டும் அவ்வளவுதான். மனிதனின் பொறுப்பு முடியுமிடத்தில் பரம்பொருளின் பொறுப்பு தலைதூக்குகிறது. காத்திருத்தல் கலையை அந்த விவசாயி அறிந்திருந்தால், அவன் பொறுமையுடன் காத்திருப்பான். மாறாக, பொறுமையின்றி இருப்பானெனில், காத்திருக்கும் ஒவ்வொரு கணமும் அவனது பதற்றமும், மன அழுத்தமும் அதிகரிக்கும். "ஏன் இன்னும் இது நடைபெறவில்லை? மற்றும் ஏன் இன்னும் இது முளைவிட வில்லை?" என்று கேள்விகளால் அவன் மனம் அலைக்கழிக்கப்படும். விதை ஒருவழியாக முளை விடும் போது அவன் வெற்றிக்காக விவசாயி தன் மன அமைதியை அடகு வைத்திருப்பான். பாதிப்பு ஏற்க்கனவே ஏற்ப்பட்டு விட்டது.
 
லிஃப்ட் வருவதற்க்கான பொத்தானை அழுத்திவிட்டீர்களா? காத்திருங்கள்! அது வரும்போது வரட்டும். ஆனால் லிஃப்ட்க்காக காத்திருதுக்கொண்டிருக்கும் வேளையில் நீங்கள் அங்கும் இங்கும் நடை போடுவது, கண்களால் மேலும் கீழும் பார்ப்பது போன்றவற்றால், லிஃப்ட்டை வேகப்படுத்தி உங்களிட்ம் அதை விரைவாக சேர்த்து விடுமா என்ன? சர்வரிடம் உங்களுக்கு வேண்டிய உணவு வகைகளை கூறியாகி விட்டதா என்ன? காத்திருங்கள்! பொறுமை இழக்காதீர்கள், பொறுமை இழந்தால் சர்வருக்காக காத்திருப்பதை மோசமான அனுபவமாக்கிவிடும். எடுக்கப்பட வேண்டிய முடிவுகளை எடுத்து விட்டீர்களா? செய்ய‌ப்பட வேண்டிய செயல்களை செய்து விட்டீர்களா? மேற்க்கொள்ள‌ப்பட வேண்டிய நடவடிக்கைகளை மேற்க்கொண்டுவிட்டீர்களா? வெறுமனே காத்திருங்கள். இதற்காக அல்லது அதற்காக காத்திருக்காதீர்கள். வெறுமனே காத்திருங்கள். சாந்தமான முன்னேற்றத்திற்க்கான திறவு கோள் அதில் இருப்பதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். ஏதாவது ஒன்றிற்க்காக காத்திருப்பது வெற்றியை கொண்டுவரலாம், ஆனால் அது மன அழுத்தத்தோடு கூடியதாக இருக்கும். வெற்ரியை அடைய அமைதியான வழி இருக்கும் போது ஏன் மன அழுத்ததோடு கூடிய வழியை தேர்ந்தெடுக்கவேண்டும்?

உங்கள் கடமையை செய்யுங்கள். உங்கள் பங்கை வழங்குங்கள். வெறுமனே காத்திருங்கள் அதுதான் அமைதியான முன்னேற்றத்திற்கான பாதை...............

மன்னிக்க முடியாத மன்னிப்பு !

மன்னிக்க முடியாத மன்னிப்பு !     

வெறும் நம்பிக்கைகளாகவும் ஒழுக்க விதிகளாகவும் திணிக்கப்படும் அட்வைசுகளில் ஒன்றான மன்னிப்பை, மறுப்பதே நம்மில் பலர் வழக்கமாய் கொண்டிருக்கிறோம். மன்னிக்கச் சொல்லி பல மதங்கள் நமக்கு அறிவுரை வழங்கினாலும் ஏற்றுக் கொள்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் நம்மை படுத்துகிறது.

அமெரிக்கப் பெண்மணி ஒருவர் பகிர்ந்து கொண்ட விஷயம் இது.
 
“நேற்று காலையில் என் மகளுடன் சண்டை. அவள் என்னை அடித்தாள்; கிள்ளினாள்; கடித்தாள். இரவு தூங்கப்போகும் முன், வழக்கம்போல் எனக்கு முத்தம் கொடுக்க வந்தாள். ‘ஒன்றும் தேவையில்லை’ என்றேன் வெறுப்புடன். ‘இதேபோல் நான் உன்னை அடித்துக் காயப்படுத்திவிட்டு, முத்தம் கொடுக்க வந்தால், நீ என்ன செய்வாய்?’ என்றேன். அவள் சற்றும் யோசிக்காமல், ‘உன்னை மன்னித்துவிடுவேன். என்ன இருந்தாலும் நீ என் அம்மா அல்லவா?’ என்றாள்” – இதைச் சொல்லும்போது அந்தப் பெண்மணிக்குக் கண்ணீர் வந்துவிட்டது.

மன்னிப்பு என்பது அவ்வளவு உணர்ச்சிகரமானது. 
என் வாழ்க்கையுடன் யாரும் விளையாடவில்லை என்று அர்த்தமல்ல. என் உயிரைப் பறிக்கும் முயற்சிகள் கூட நடந்து இருக்கிறது. அந்தந்தச் சந்தர்ப்பங்களில் அவசியமான நடவடிக்கைகள் எடுத்திருக்கிறேனே தவிர, எதையும் குற்றமாக நினைக்கவில்லை.
 
ஆனால், என் வாழ்வில் மன்னிப்பு என்ற வார்த்தைக்கே இடமில்லை. யாரையாவது குற்றவாளி என்று நினைத்தால்தானே மன்னிக்க முடியும்?
      
அதற்காக என் வாழ்க்கையுடன் யாரும் விளையாடவில்லை என்று அர்த்தமல்ல. அந்தந்தச் சந்தர்ப்பங்களில் அவசியமான நடவடிக்கைகள் எடுத்திருக்கிறேனே தவிர, எதையும் குற்றமாக நினைக்கவில்லை. யாரையும் குற்றவாளியாகப் பார்க்கவில்லை.
 
உண்மையில் மன்னிப்பு என்பதே ஒருவித தந்திரம். அது இன்றைக்கு உலகில் பெரிய வியாபாரமாகிவிட்டது. முதலில் தவறு செய்யது விட்டு அல்லது செய்ய வைத்து விட்டு பின் மன்னிப்பு என்பது?
 
ஒருவன் கடற்கரையில் நடந்து கொண்டு இருந்தான். எதிரில் ஒரு விற்பனையாளன் வந்தான்.

“ஐயா, ஒரு டூத்பிரஷ் வாங்கிக் கொள்ளுங்கள். ஐந்நூறு ரூபாய்.”

“என்னது… பல் தேய்க்கும் பிரஷ் ஐந்நூறு ரூபாயா? கொள்ளையாக இருக்கிறதே?”

“வீட்டில் தயாரித்த சாக்லேட் இருக்கிறது. வெறும் ஐந்து ரூபாய்தான். அதையாவது வாங்கி உதவுங்கள்.”

“இது நியாயமாகத் தெரிகிறது” என்று அவன் ஐந்து ரூபாய் கொடுத்து அதை வாங்கி வாயில் போட்டான். உடனே, ‘த்தூ… த்தூ…’ என்று துப்பினான்.

“ஏய் இதில் கழிவறை நாற்றம் வருகிறதே?”

“அங்கிருந்து எடுத்ததுதான் சார். இப்போது சொல்லுங்கள். வாயைச் சுத்தம் செய்ய டூத்பிரஷ் வேண்டுமா?”
 
இப்படித்தான், முதலில் உங்களைப் பாவம் செய்ய வைத்து பின்னர் அதற்கு மன்னிப்பு வழங்கி அல்லது கேட்க வைத்து வியாபாரம் செய்கிறார்கள். இது ஒரு வித அரசியல்
 
ஒருவரை ஏன் குற்றவாளியாகப் பார்க்கிறீர்கள்? அவர் உங்களைப்போல் சிந்திக்கவில்லை. நடந்து கொள்ளவில்லை. உணரவில்லை என்பதால்தானே?
 
நீங்கள் வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறீர்களோ, அப்படி சுதந்திரமாக வாழ விரும்புகிறீர்கள். உங்களைச் சுற்றி உள்ள மற்ற மனிதர்களும் வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறார்களோ, எப்படி அறிந்திருக்கிறார்களோ, அப்படி வாழ விரும்புகிறார்கள். அவ்வளவுதானே?
 
யாரையும் பெருந்தன்மையோடு மன்னித்துவிட்டதாக நினைக்காதீர்கள். அப்படிச் செய்தால், வாழ்நாள் முழுவதும் அவர்களை உங்கள் அடிமைகளாக நினைக்கத் தோன்றும்.

அவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பு எழுதாமல் இருப்பது அதைவிடச் சிறப்பல்லவா?

நீங்கள் உண்மையான நண்பரா?

நீங்கள் உண்மையான நண்பரா?  
உங்கள் நண்பர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்? பெருவாரியான மக்களைப் போல் நீங்களும் இருந்தால், உங்கள் எண்ணங்களுக்கு, உங்கள் உணர்வுகளுக்கு, நீங்கள் புரிந்து கொள்ளும் விதத்திற்கு, உங்கள் விருப்பு-வெறுப்புகளுக்கு ஒத்துப் போகிறவராய் பார்த்து உங்கள் நண்பராய் தேர்ந்தெடுப்பீர்கள். இதை மற்றொரு விதத்தில் பார்த்தால், உங்கள் குளறுபடிகளை ஒத்துக் கொண்டு ஆதரிப்பவர்களையே நண்பர்களாக ஆக்கி கொள்கிறீர்கள்.
 
நீங்கள் யாரோ ஒருவருடைய நண்பராக இருக்கும்போது, அந்த மனிதரை அவருடைய குற்றம் குறைகளைச் சொல்லி சதா சர்வகாலமும் நச்சரித்துக் கொண்டே இருக்க மாட்டீர்கள். அதே சமயம் உங்கள் நண்பரிடம் உள்ள குறைகளை எடுத்துச் சொல்லும் நேர்த்தியும் உங்களுக்கு இருக்க வேண்டும்.
 
அனைவரும் நம்மை விரும்ப வேண்டும் என்ற நம் தாகத்தால், முட்டாள்தனமான செய்கைகளை நாம் செய்யத் துவங்கிவிடுகிறோம். உங்களைச் சுற்றி இனிமையான சூழ்நிலையை உருவாக்குவதற்காக உங்களுக்குள் நீங்கள் உருவாக்கும் இனிமையற்ற சூழ்நிலையைப் பாருங்கள்! மனம் ஒரு வளமையான நிலம், அதில் நீங்கள் விதைக்கும் உணர்வுகளுக்கு நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். மிகவும் இனிமையற்ற விஷயங்களை நீங்கள் உங்களுக்குள் புதைத்தால், வளரும் கனிகள் கசப்பாகத்தான் இருக்கும்.
 
உங்கள் நட்பின் உறுதியை நீங்கள் பரிசோதிக்க விரும்பினால், உங்கள் நண்பரிடம் நல்ல பெயர் எடுக்கும் எண்ணத்தை தளர்த்த முயற்சி செய்து பாருங்கள். அதைச் செய்வதற்கு உங்களுக்கு துணிவு இருக்கிறதா? தற்சமயம் உங்கள் நட்பு, உடன்படிக்கைகளின் பேரிலும் விருப்பு-வெறுப்பின் பேரிலும் நடைபெறுகிறது. ஆனால் உண்மையான நண்பன் என்றால், உங்கள் தவறுகளை சுட்டிக் காட்டும் அதே சமயத்தில் உங்களிடம் அதே அன்பையும் அரவணைப்பையும் வழங்குவார்.

என்ன புரியவில்லையா? ஒரு கதை சொல்கிறேன்… 
அமெரிக்க போர் தளபதிகள் ஒருநாள் கூடினார்கள். தங்கள் போர் படைகளுடன் உடற்பயிற்சிக்காகவும், களிப்பிற்காகவும் கிரான்ட் கன்யான் என்னும் பள்ளத்தாக்கிற்கு பயணப்பட்டார்கள். வெகு சீக்கிரத்திலேயே படைத் தளபதிகள் தங்களைத் தாங்களே மெச்சிக் கொள்ளத் துவங்கினர்.
 
முதல் தளபதி “என் படை வீரர்களைப் போல் துணிவும் கட்டளைக்கு பணிந்து போகும் திறனும் வேறு ஒருவருக்கு வராது,” என்று தன் படைவீரர்களின் திறத்தை மெச்சத் துவங்கினார்.
 
நான் நிரூபித்துக் காட்டுகிறேன் பாருங்கள், என்று “ஏ! பீட்டர்.” அங்கொரு இளம் படைவீரர் ஓடி வந்தார். “உனக்கு பின்னால் அந்த பிரம்மாண்ட பள்ளத்தாக்கை பார்க்கிறாயே? அதை நீ இப்பொழுதே தாவி மறுபக்கத்திற்குச் செல்ல வேண்டும்!”
 
 அந்த வீரன் தன்னால் எவ்வளவு வேகத்தில் ஓடிக் குதிக்க முடியுமோ, ஓடிக் குதித்தான். அவனால் அவ்வளவு பெரிய பள்ளத்தாக்கை தாண்ட முடியுமா என்ன? பாறையில் விழுந்து, மண்டை உடைந்து செத்துப் போனான்.
 
தற்போது இரண்டாவது படைத் தலைவனின் சந்தர்ப்பம். இரண்டாவது தலைவன் இலக்காரமாக சிரித்து, “என்னைப் பார்,” என்றான்.
 
“ஹிகின்ஸ்,” என்று அழைத்தார். ஒரு வீரன் வந்தான். “தற்போது ஓர் அவசர நிலை, நீ இந்த பள்ளத்தாக்கை கடந்து பறந்து சென்று மறுமுனையில் இருக்கும் நம் ஆபீஸருக்கு தகவல் சொல்லிவிட்டு வா,” என்றார்.
 
அந்த மனிதர் தன் கைகளை அசைத்துக் கொண்டு… வேறென்ன நிகழ்ந்திருக்கும் பள்ளத்தாக்கில் தொப்பென விழுந்தார்.
 
மூன்றாவது படைத் தளபதி மிக அமைதியாகிவிட்டார். ஆனால் பிற தளபதிகள் அவரை விடுவதாய் இல்லை. வெளியே சென்று மூன்றாமவரின் போர் வீரன் ஒருவனை அழைத்து, “அதோ கீழே உள்ள அந்த ஓடையை உன்னால் பார்க்க முடிகிறதா?” அந்த வீரன் தலை அசைத்தான். அந்த ஓடை மிகப் பெரிய அருவி ஒன்றிலிருந்து 200 மீட்டர் தொலைவிலேயே இருந்தது. அந்த படை வீரனிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து, “நீ அந்த ஓடைக்குள் குதித்து, அதை நீந்திக் கடந்து, இந்தத் தகவலை தலைமையகத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்,” என்று சொன்னார்.
 
குழம்பிய நிலையில் தளபதியை பார்த்த அந்த வீரன், “சார், நீங்க ரொம்ப குடிச்சிட்டீங்கன்னு நினைக்கிறேன், இது மாதிரி முட்டாள்தனமான விஷயத்தை நான் செய்யவே மாட்டேன்,” என்றான்.
 
மூன்றாவது தளபதி, அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த பிற தளபதிகளைப் பார்த்து, “இதுதான் உண்மையான தைரியம்!” என்றார்.
 
உங்கள் நட்பில் தைரியமாய் இருங்கள். உங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாய் பேசுவது உங்கள் நண்பரை இழக்கச் செய்தால், பிரிவதற்கு தயாராய் இருங்கள்.

தலைவராக விரும்புகிறீர்களா?

தலைவராக விரும்புகிறீர்களா?
 
இந்த உலகில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒருவிதமான மக்கள் தங்களைத் தாங்களே இயக்கிக் கொள்பவர்கள். இன்னொரு விதமான மக்கள் இருக்கிறார்கள் இவர்களை  வேறு யாராவது தள்ளி விட்டுக்க்கொண்டே இருக்க வேண்டும். இவர்கள் எப்பொழுதும் அடிமைகளாகவும், வேலையாள் போலவும் தான் இருப்பார்கள். ஆனால் தங்களைத் தாங்களே இயக்கிக் கொள்ளும் மக்கள் எப்பொழுதும் தலைவர்களாக இருப்பார்கள்.
 
நீங்கள் ஏதாவது ஒரு சூழ்நிலையை கையாள வேண்டும் என்று விரும்பினால், அது வீடோ அல்லது அலுவலகமோ, அந்த சூழ்நிலைக்கு முழுமையாக பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய எல்லைகளைக் கடந்து அந்த சூழ்நிலைக்கான தீர்வுக்காக பணி புரியத்தயாராக இருக்க வேண்டும். இப்படித் தயாராகும் போது உங்களை வேறு யாரும் இயக்கத் தேவையில்லை. உங்களை நீங்களே இயக்கிக் கொள்வீர்கள். தேவையான சுதந்திரமும் உங்களுக்குக் கிடைக்கும். ஒரு தாலைவராக ஏற்றுக் கொள்ளபடுவீர்கள்.
 
எனக்கு அது வராது, என்னால் அது முடியாது, நான் இவ்வளவு தான் செய்யமுடியும் என்று எப்பொழுதும் தன்னைத் தானே குறுக்கிக் கொள்பவர்கள் என்றென்றும் அடிமைகளாகவும், மற்றவர்களால் விரட்டப்படும் நிலையில் தான் இருப்பார்கள். எனவே தலைவராக விரும்புகிறீர்களா? அல்லது அடிமையாகவே காலத்தை கழிக்க விரும்புகிறீர்களா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்

ஒழுக்கம் என்றால் என்ன?

ஒழுக்கம் என்றால் என்ன?
 
ஒழுக்கத்தை உருவாக்கவேண்டும் என்கிற தவிப்பு தலைமை நிலையில் இருக்கும் பலருக்குஏற்படுகிறது. ஒழுக்கம் என்றால் என்ன என்கிற புரிதலை முதலில் ஏற்படுத்திக் கொள்வது அவசியம்.
 
 வேலை பார்க்கும் சூழ்நிலையில் ஒரு ஒழுங்குநிலையைக் கொண்டுவருவது தான் ஒழுக்கம் என்று பலரும் கருதுகிறார்கள்.
 
இதற்க்கு பெரிதாக முயற்ச்சிகள் எதுவும் தேவையில்லை. ஒழுக்கம் குறித்து ஒன்றும் பேசாமல் உரிய சூழ்நிலையை உருவாக்கினாலே நிலமை கட்டுக்குள் இருக்கும்.
 
இதில் சிலருக்கு வழிகாட்டுதல்கள் தேவைப்படக்கூடும். ஆனாலும் கூட ஒரு நிறுவணத்திலோ பணியிடத்திலோ இந்த்ச் சூழலை உருவக்குவது எளிதான விஷயம் தான்.
 
ஆனால் துரதிருஷ்ட வசமாக என்ன நடக்கிறது தெரியுமா? நீங்கள் விரும்பும் ஒன்றை யாரையாவது செய்ய வைப்பதற்க்காக நிர்பந்திப்பது என்று தான் பலரும் கருதிக்கொண்டிருக்கிறார்கள்.
 
எனவே ஒழுக்கம் என்றாலே யாரையாவது கட்டுப்படுத்துவது, கண்டிப்பது, தண்டிப்பது, தட்டிவைப்பது, என்றெல்லாம் தவறான புரிதல்கள் உலவுகின்றன. இதுவல்ல ஒழுக்கம்.
 
ஒருவர் புதியதாக ஒன்றை கற்றுக் கொள்வதற்காக திறந்த மனதுடன் இருப்பாரேயானால் அதன் பெயர் தான் ஒழுக்கம். கற்றுக் கொள்வதன் அம்சமே ஒழுக்கம் என்பது. எவெரெவர் எந்த நிலையில் இருந்தாலும் தொடர்ந்து கற்றுக் கொள்ளும் இயல்பு எப்போதும் அவசியம். இதற்க்கு என்ன தேவை என்றால் செய்கின்ற வேலைகளில் முழு ஈடுபாடும் அர்ப்பணிப்பும் தான்.
 
ஈடுபாடு இல்லாமலேயே வேலை செய்தால் செய்வதையே திரும்பத்திரும்ப செய்து கொண்டு இருப்பார்களே தவிர புதிதாக எதையும் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.
 
புதிய சிந்தனைகள் யோசனைகள் எல்லாம் உருவாவது கற்றுக்கொள்வதற்கான திறந்த மனம் இருக்கின்ற போதுதான்.
 
ஒரே வேலையை ஒரே மாதிரி பலர் செய்து கொண்டிருப்பார்கள். அதில் ஏதாவது எளிய‌ ஒரு யோசனையை யாரவது சொன்னால் "அடேடே இத்தனை நாட்கள் இதை கவணிக்காமல் விட்டு விட்டோமே" என்று தோன்றும்.
 
உதாரணமாக தரையை தூய்மை செய்கிர வேலையை ஆண்டாண்டு காலமாய் செய்து வருகிறோம். அதி சின்னதாய் ஒரு புதுமையை ஒருவர் புகுத்திய பிறகு அதன் அடிப்படையே மாறிவிட்டது.
 
அதே நேரம் கற்றுக்கொள்ளும் மனநிலையை உடையவர்களிடம் தான் புதிதாக ஏதவாது யோசனைகள் தோன்றும். அந்த மாதிரியானவர்களை தொடர்ந்து நீங்கள் ஊக்குவிக்க வேண்டும்.
 
அதே நேரம் பலரையும் நீங்கள் அந்த மாதிரி ஊக்குவிக்கும் போது பலவிதமான யோசனைகள் வரும். அது நூறு எண்ணிக்கை கூட வரலாம். அதில் உருப்படியான இர‌ண்டு அற்புதமான பலன் தருவதைக் காணலாம்.
 
உங்கள் நிறுவணத்தில் இத்தகைய கற்றுக்கொள்ளல் நிகழ்கிறதா என்பதை கண்காணிக்க வேடியது அவசியம். அப்படி செய்யும் போது அது வளர்ச்சிக்குத் தானே என்றும் சந்தேகப்பட்டு அல்ல என்பதை நீங்கள் தெளிவு படுத்த வேண்டியது அவசியம்.
 
இத்தகைய திறந்த நிலை ஏற்பட்டால், ஒழுக்கம் என்பது எல்லோரும் விரும்பிக்கொண்டு வரும் விசயமாகும்.
 
மாறாக ஒருவர் மற்றவர் மீது ஒழுக்கத்தை திணிக்க முற்ப்பட்டால். அது சர்வாதிகாரத்தில் போய் முடியும்.

எனவே ஒரு குழுவிலோ ஒரு நிறுவணத்திலோ ஒழுக்கத்தை கொண்டு வர ஒரே வழி ஈடுபட்டைக் கொண்டு வரவேண்டியதுதான். ஈடுபாடு இல்லாத இடத்தில் ஒழுக்கத்தை கொண்டு வர முயற்ச்சித்தால் அதை உடைப்பதற்க்கு ஆயிரமாயிரம் வழிகளைக் க‌ண்டறிவார்கள். பணிச்சூழலில் ஈடுபாட்டைக் கொண்டு வாருங்கள், நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா ஒழுக்கங்களும் தாமாக வரும்.

காக்கா முட்டையும் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைத் தத்துவமும்

காக்கா முட்டையும் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைத் தத்துவமும்..

பேசுவோம். பேசுவோம். மாற்றங்களை நோக்கி பேசுவோம்.எழுத்தும் பேச்சும் ஒரு ஆயுதம் தானே. வாருங்கள், ஆயுதம் சேய்வோம். புது மலர்களை பூக்கச்செய்வோம். வன்முறையாளர்களை, மனம் கொத்திப் பறவைகளை வெல்வோம்.

பொதுவாகவே நான் திரைப்படங்களைப் பற்றி அவ்வளவாக எழுதுவதில்லை. அதற்கு ஒன்றும் பெரிய காரணங்கள் கிடையாது. ஒன்று ஜன ரஞ்சக சினிமாக்கள் மிகவும் சினிமாத்தனமாக இருக்கும், மற்றொன்று கலைப்படங்கள் புரியாமல் போய் விடவும் வாய்ப்புண்டு.

தொலைக்காட்சிகளில் வரும் கலந்துரையாடலின்போது திரைப்படத் துறையைச் சார்ந்த சிலர் சினிமாக்களில் வரும் வன்முறை, போக்கிரித்தனம் அல்லது பெண்களை கொச்சைப்படுத்துவது போன்றவைகளைப் பற்றி பேசும் போது தாங்கள் சமுதாயத்தை பிரதிபலிப்பதாகவும் எனவே குற்றம் தங்களிடம் இல்லை எனவும் சொல்வதைக் கேட்கும்போது எரிச்சலாக வரும்.

இருந்தாலும் முன்பு தூர் தர்ஷனில் இரவு நேரங்களில் வரும் தேசிய அளவில் பரிசுகள் பெற்ற படங்களைப்பார்த்து (ஆங்கிலத்தில் sub title களுடன்) நான் லயித்துப்போன சந்தர்ப்பங்களும் உண்டு. இத்தகைய படங்கள் மனிதர்களின் உயர்வான குணங்களை போற்றத் தவறுவதில்லை. எவரையும் தரம் தாழ்த்தி காட்சிப்படுத்துவதும் இல்லை.

அத்தகைய ஒரு சந்தர்ப்பமாக வாய்த்தது நான் ‘காக்கா முட்டை’ படம் பார்த்தது. தொலைக்காட்சியில்தான் பார்த்தேன்.

பிள்ளைகளை மிகவும் இயற்கையாக விட்டு படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.

இரு சிறுவர்களை வைத்து ஒரு பெரும் வாழ்க்கைத் தத்துவத்தை இயல்பாக நம் முன்னே வைத்திருக்கிறார்.

நான் படத்தின் மற்ற செய்திகளை விளக்கி நேரத்தை வீணாக்காமல் கீழே குறிப்பிட்டவைகளை மட்டும் இயக்குனரை பாராட்டும் பொருட்டும்,  அனைவருக்கும் இந்த அழகான வாழ்க்கைத் தத்துவம் போய்ச் சேரும் பொருட்டும் சொல்லிச் செல்ல விரும்புகிறேன்.

வாழ்க்கைத் தத்துவமும் படத்தில் வரும் காட்சிகளும்:
1.   வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தனது அனுபவங்களைப் பொறுத்தும் அறிவைப் பொறுத்தும் சூழலின் உந்துதலைப் பொறுத்தும் ஒரு இலக்கை நிச்சயிக்கவேண்டும். படத்தில் சிறுவர்கள் பிட்சா சாப்பிடும் அனுபவத்தை அடைய விரும்புகின்றனர்.

2.   இலக்கை நிச்சயித்தபின்னர் இலக்கை நோக்கி விவேகானந்தரின் வாக்கைப் போல யாரையும் எதையும் எதிர்பாராது நாம் நகர ஆரம்பித்தால் வழி தானாக கிடைக்க ஆரம்பித்துவிடும். படத்தில் பிள்ளைகள் கரித்துண்டுகளை பொறுக்குவதில் ஆரம்பித்து குடித்துவிட்டு மயங்கிக் கிடப்பவர்களை வீட்டில் சேர்ப்பது வரை எல்லா வேலைகளையும் செய்ய ஆரம்பிக்கின்றனர்.

3. இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கம் நம் வாழ்வை ஊக்குவித்து நம்மை உயர வைக்க வேண்டுமே தவிர அதுவே ஒரு வெறியாகி நம்மை நெறி பிறழ வைக்கும் செயல்களில் ஈடுபடுத்தி நெறிகொண்ட பாதையினின்றும் நம்மை மாற்றிவிடக்கூடாது. படத்தில் பிள்ளைகள் மற்றவர்களைப் போல செல்போன் வழிப்பறிச் செயலில் ஈடுபடுமளவுக்குப் போய் பின்னர் அதைக் கைவிட்டுத் திரும்புவதும், அது மட்டுமல்லாது அவர்களது பணக்கார நண்பன், தான் ‘தின்று மீந்த’ பிட்சாவை தங்களுக்குத் தருகையில் அதை தன்மானத்துடன் வாங்க மறுப்பதும்,  கையில் காசு சேர்ந்ததும் அந்தக் காசையும் பிட்சா ஆசையையும் விட தனது தாய் பாட்டியின் இறுதிச் சடங்குக்காக பணமின்றித் தவிக்கும் போது அந்தக் காரியத்திற்கு உதவியாகவேண்டும் என்ற நிலைக்கு வந்து தாம் கொண்ட நோக்கத்தை விட மனிதாபிமானமே  மிகப்பெரியது என உணர்த்துவது.

4.   நாம் கொண்ட இலக்கில்  இடர்களைப்பாராது உறுதி கொண்டு நின்றோமானால் ஒரு கால கட்டத்திற்குப் பின்னர் நமது இலக்கு நம்மைத்தேடி வரும் அல்லது இலக்கை அடைவது மிக எளிதாக கைகூடும். படத்தில் பிள்ளைகளை விரட்டிய பிட்சா கடைக்காரரே மிகுந்த வரவேற்புடன் அவர்களை வரவேற்று அவர்களுக்கு பிட்சா அளித்து உபசரிப்பது மட்டுமல்லாது இனி வாழ்நாள் முழுதும் அவர்களுக்கு பிட்சா இலவசமாகவே அளிக்கப்படும் என்று சொல்வது.

5.   வாழ்வில் நாம் இலக்கை அடைந்த பிறகு அதில் நாட்டம் குறைந்து நமது மனநிலையே மாறிவிடும் சூழல் ஏற்படுவது உண்டு. இது எல்லோரது வாழ்விலும் பெரும்பாலும் நடக்கும் ஒரு நிகழ்வு. படத்தில் அதுவரை பிட்சா சாப்பிட பாடுபட்டவர்கள் பிட்சா கையில் கிடைத்து அதைச் சுவைத்ததுமே முகம் சுளித்து ‘ஐயே…! இதுதான் பிட்சாவா? உவ்வே..! எப்படிடா இவ்வளவையும் சாப்பிடுவது..?’ என்று முகம் சுளித்து, ‘இதுக்கு ஆயா சுட்ட தோசையே நல்லா இருந்திச்சு..’ என உணர்வது மிக முக்கியமான கட்டம்.

6.   மேற்சொன்னது நாம் வாழ்வில் இலக்கை தீர்மானிப்பதில் எத்துனை கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு சரியானதொரு எடுத்துக்காட்டு. வாழ்வின் பயணம் முழுவதும் இலக்கை அடைவதில் செலவழித்துவிட்டு பின்னர் இலக்கை அடைந்தபிறகு முட்டாள் தனமாக உணருவது நாம் வாழ்வையே எளிதில் இழப்பதற்கு சமமாகும். எனவேதான் நாம் நிலையான, மாறாத, எப்போதும் போற்றத்தகுந்ததான இலக்குகளை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அடைய விழைய வேண்டும். இது நம் வாழ்க்கைப் பாதையை மட்டுமல்லாது வாழ்வில் நாம் கொள்ளும் எல்லா முயற்சிகளையும் பெருமைப் படுத்தும் விதமாகவும் நாம் நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பயனுறும்படியாகவும் முடியும்.

7.   இது மட்டுமல்லாது வாழ்வில் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நம்மையும் நமது சூழலையும் தங்களின் சுய நலத்திற்கு பயன்படுத்திக் கொள்வது மட்டுமன்றி நமது நோக்கையும், எண்ணங்களையுமே திசை திருப்பிவிட்டு நம் வாழ்க்கையை புரட்டிப் போடவும் தயங்க மாட்டார்கள் என்பது வாழ்வியல் உண்மை. படத்தில் இதை மற்ற கதா பாத்திரங்களை வைத்து போகிற போக்கில் இயக்குனர் சொல்லியிருக்கிறார்.

இயல்பான, லயிக்க வைக்கும் படம்.

இன்னமும் பேசுவோம்.

ஒரே ஒரு கருத்தைத் தெரிவு செய்யுங்கள்.அதையே உங்கள் வாழ்வாகத் தீர்மானியுங்கள்.

ஒரே ஒரு கருத்தைத் தெரிவு செய்யுங்கள்.அதையே உங்கள் வாழ்வாகத் தீர்மானியுங்கள்.


எப்போதும் கற்றுக்கொள்ளும் தயார் நிலையில் உங்கள் மனதை வைத்திருந்தால், நீங்கள் எதையும் கற்றுக்கொள்ளலாம். வாழ்க்கையின் கையிருப்பில் இருப்பதோ ஏராளம். நமக்குத்தான் பெற்றுக்கொள்ள நேரமும் இல்லை.. மனமும் இல்லை.

ஒரு ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் பார்க்க வேண்டி, லிப்கோ அகராதியை புரட்டினேன். ஒரு பக்கதில் இருந்த வாசகங்கள் என்ன மிகவும் கவர்ந்தன. இவைதான் அந்த வாசகங்கள்:

“ஒரே ஒரு கருத்தைத் தெரிவு செய்யுங்கள்.அதையே உங்கள் வாழ்வாகத் தீர்மானியுங்கள்.

அது பற்றியே சிந்தியுங்கள்; அதையே கனவு காணுங்கள். அதற்காகவே வாழுங்கள். உங்கள் மூளை, தசைகள் நரம்புகள்… ஏன்..உடம்பின் ஒவ்வொரு பகுதியிலும் அக்கருத்தே நிரம்பியிருக்கட்டும்.மற்ற எல்லாக் கருத்துக்களையும் ஒதுக்கி விடுங்கள்.இதுவே வெற்றிகான் வழி”

இந்த இணையற்ற மந்திர வரிகளைச்சொல்லயிருந்தவர் வீரத்துறவி விவேகானந்தர்.சுவாமிகளின் இச்சத்திய வரிகள் துறவிக்கு மட்டுமின்றி வாழ்வின் எல்லா நிலையில் இருப்போர்க்கும் மிகச்சரியாய் பொருந்தும்.

சிதறிய கவனத்தை, ஒரு நிலையில் குவித்து, வெற்ற காண விழைவோர் ஒவ்வொருவருக்கும் இவ்வரிகள் நிச்சயம் கரை காணாத் தோணிக்கு, கரை காட்டும் கலங்கரை விளக்கு.இவ்வைர வரிகளை பெரிதாய் எழுதி, ஒவ்வொருவரும் தங்களது இல்லங்களில் வைத்து, அனுதினமும் வாசித்து வர, எண்ணம் குவிந்து வலுப்பெறும்! செயல் துவங்கும்.

Please read without fail ... காக்கா முட்டையும் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைத் தத்துவமும்..

என்ன தொழில் செய்யலாம்!

என்ன தொழில் செய்யலாம்!
உழைக்கத் தயார் என்றால் வெற்றி நிச்சயம். குறைந்த செலவில் தொழில் ஆரம்பித்து பிறகு பெரிய அளவில் செய்தால்

உழைக்கத் தயார் என்றால் வெற்றி நிச்சயம். குறைந்த செலவில் தொழில் ஆரம்பித்து பிறகு பெரிய அளவில் செய்தால் நம்மால் எதையும் சமாளிக்க முடியும். மேலும் மிகப் பெரிய முதலீடும் தேவையில்லை. நமது கை விரல்கள் பத்தும் இயற்கை நமக்களித்த மூலதானம்தானே. இன்றும் ரூ.500 முதலீட்டில் செய்யக்கூடிய சிறு தொழில்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்:

பட்டுப் புடவை குஞ்சம்: பட்டுப்புடவையில் மணி வைத்து குஞ்சம் கட்டுவது தற்போது அனைவராலும் மிகவும் விரும்பக் கூடிய ஒன்றாக உள்ளது. தமிழ்நாட்டு பெண்களிடையே பட்டுப்புடவை இல்லாதவர்களே இருக்க மாட்டார்கள். முதலில் உங்கள் பட்டுப் புடவையில் குஞ்சம் இருப்பதைப் பார்த்தாலே அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஆர்டர் தருவார்கள். இது வீட்டில் இருந்தபடியே ஓய்வு நேரத்தில் செய்யக் கூடிய தொழிலாகும். இதற்கு பட்டு நூல் மற்றும் விதவிதமான மணிகள் தேவை.
 
கம்பி பொம்மை: கம்பி, பஞ்சு, உல்லன் நூல் ஆகியவற்றைக் கொண்டு செய்யக் கூடிய பொம்மைகள் இவை அலங்காரப் பொருளாகவும், பரிசுப் பொருளாகவும், நவராத்திரி, வரிசை தட்டு, கல்யாண சீர்வரிசை என அனைத்துக்கும் பயன்படுகிறது. ஆகவே இதையும் தொழிலாக செய்யலாம்.
 
பேப்பர் பை தயாரித்தல்: பேப்பர் பேக், தாம்பூல பை, வாட்டர் பாட்டில் பேக், மெடிக்கல் கவர், ஆபீஸ் கவர் என விதவிதமாக செய்யலாம். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இவை உள்ளதால் இவற்றுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு.
 
பேப்பர் நகை தயாரிப்பு: தற்போது கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் விதவிதமாக, கலர் கலராக லேசாக உள்ள நகைகளை அணியவே விரும்புகிறார்கள். இதனால் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
 
இன்ஸ்ட்ன்ட் பொடி, மசாலா பொடி: திடீர் புட்டு, பாயாசம், பொங்கல் இவற்றுக்கு தேவையான பொருள்களைக் கொண்டு வீட்டிலிருந்தே செய்யலாம். சாம்பார் பொடி, பிரியாணி மசாலா போன்றவற்றையும் தயாரித்து விற்பனை செய்யலாம்.
 
அப்பளம், வற்றல்: இது அனைவருக்குமே தெரிந்த விஷயம். இருந்தாலும் இதை செய்வதற்கு நேரம் ஒதுக்குவதில்லை. ஆதலால் அப்பளம், வற்றல் ஆகியவற்றைத் தயாரித்து விற்பனை செய்வதன் மூலம், நல்ல லாபம் கிடைக்கும்.
 
ஹெர்பல் சீயக்காய், குளியல் பவுடர், பேஸ் பேக்: பூலாங்கிழங்கு, முல்தானி மட்டி, வேம்பாலம் பட்டை, வெட்டி வேர், ரோஜா இதழ் ஆகியவை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் இயற்கை பொருள்களை கொண்டு தயாரித்து விற்பனை செய்யலாம்.
 
பினாயில், சோப் ஆயில்: தினசரி அனைவரும் பயன்படுத்தும் பொருள். இதற்கு தேவை இருந்து கொண்டே இருக்கும். இதனையும் தொழிலாகச் செய்யலாம்.
 
குங்குமம், மஞ்சள் தயாரிப்பு: கோவில்கள் உள்ள இடத்தில் அதிகமாக விற்பனையாகும் பொருளாகும். உடலுக்கு கேடு விளைவிக்காத இயற்கை பொருள்களைக் கொண்டு தயாரித்து விற்கலாம்.

பருத்திப் பால்: உடல் ஆரோக்கியத்திற்கும், டீ, காபி ஆகியவற்றிற்கு மாற்றாகவும் உபயோகிக்க நினைப்பவர்களுக்கு மிகவும் ஏற்றது. மாலை நேரங்களில் பகுதி நேரமாகவே செய்யலாம். நல்ல லாபம் கிடைக்கும்

வேலையை விடுத்து தொழில் தொடங்குவோருக்கான 20 வெற்றி உத்திகள்

வேலையை விடுத்து தொழில் தொடங்குவோருக்கான 20 வெற்றி உத்திகள்
வேலையை  விடுத்து தொழில் தொடங்கலாமா? வேலையின் போது கிடைத்த அதே வருமானத்தை தொழிலில் ஈட்டுகிற   காலம்  எப்போது வரும்? தொழிலை  எங்கிருந்து தொடங்குவது? விலை நிர்ணயிப்பது எப்படி? பணத்திற்கு எங்கே போவது? என்பது போன்ற பல கேள்விகள்  தொழில் தொடங்க விரும்புவோருக்கு எழும்.

தொழிலில் மிக முக்கியமான காலக்கட்டம் எது தெரியுமா? வேலையை விடுத்து, தொழில் தொடங்கி நிலைபெறச் செய்து, இன்னொருவரை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளும் அளவிற்கு வளர்வது வரையிலான காலகட்டமே. இந்தக்  காலகட்டத்தைக் கடந்து விட்டால், பாதித் தொலைவு தாண்டியது மாதிரி.

தொழில்முனைவர்கள் எல்லாம் பெரும்பாலும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து, பிறகு சிறிய முதலீட்டில் தனியொரு ஆளாகத் தொழில் தொடங்கி, கஷ்டப்பட்டு பிறகுதான் வளரத் தொடங்கி இருப்பார்கள்.

CATALYST PUBLIC RELATIONS PVT LTD நிறுவனத்தின் தலைமை  செயல் அதிகாரியான ( CEO) திரு.இராம்குமார்  சிங்காரம் பல்வேறு தொழில்முனைவர்களையும் பொதுமைப்படுத்தி ,அவர்கள் தொழிலில் நிலைத்து நின்றதற்கான  காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை 20 உத்திகளாக தந்திருக்கிறார் .வேலையை விடுத்து தொழிலில் இறங்க விரும்புகிற அனைவருக்கும் பயன்தரக்கூடியதாக  இருக்கும். இதோ,தனி ஆளாகதொழிலில் வெற்றி பெற அந்த 20 உத்திகள்.

1.வேலையை விடுக்கின்ற போது  , உங்களுக்கான மாதந்திர  வருமானம் நின்றுபோகும். இதனால் உங்கள் வீட்டுச் செலவு, பிள்ளைகளின் படிப்பு செலவு,வீட்டுக்கடன்  போன்றவற்றைச் சமாளிக்க குறைந்தபட்சம் 6 மாதங்களுக்காவது பணம் தேவை. இந்த தொகையை ஏற்பட்டு செய்து கொண்டு தொழிலில் இறங்க வேண்டும்.

2.இதுமட்டுமில்லாமல், கூடுதலாக இரண்டு வகையான முதலீடுகளுக்கும்(Capital)  உங்களுக்கு பணம் தேவைப்படும் . ஒன்று , தொழில் தொடங்குவதற்காக -ஒரு முறை செய்யப்பட வேண்டிய நிரந்திர முதலீடு( Fixed Capital)  (அலுவலக வாடகை முன்பணம்(Office advance) , எந்திரங்கள் (Machinery)  , கணினி(Computer) போன்ற மின் மற்றும்  மின்னணு சாதனங்கள்(Electric & Electronics Goods), மேசை-நாற்காலிகள்(Furniture’s) , வாகனம்(Vehicles)  போன்ற  பல ).
இரண்டாவது, ஆறு மாதங்களுக்குத் தேவையான நடைமுறை மூலதனம்( Working Capital)  (வாடகை(Rent) , ஊழியர் சம்பளம்(Salaries), மின் மற்றும் தொலைபேசி கட்டணம்(Electric & Telephone Charges),  பயணச் செலவு (Travel Expenditures), விளம்பர செலவு(Advertisement Cost),பொருள் கொள்முதல்(Raw Material Cost) போன்றவை ), இந்த இரண்டு தேவைகளுக்கும் பணம் இருந்தால் மட்டுமே நீங்கள் தொழில் தொடங்க வேண்டும்.

3.தொழில் தொடங்க விரும்புவோர் , வேளையில் இருந்து கொண்டே அதற்கான தொடக்ககட்ட பணிகளை முடித்துவிட வேண்டும். அதாவது தொழிலுக்கான  Project Report தயாரித்தல், இடத்தை தேர்வு செய்தல் , TIN(Tax-Payer Identification Number), VAT(Value Added Tax Registration),PAN (Permanent Account Number),CST (Central sales Tax ), IEC (Import & Export Code),Company Registration போன்ற   அரசு நடைமுறைகளை நிறைவு செய்தல் , தொழிலுக்கு தேவைப்படும் அரசு அனுமதிகளை ( License ) பெறுதல் , வங்கி கணக்கு (Bank Account)  தொடங்குதல், அலுவலக உள் மற்றும் வெளி அலங்கார வேலைகளை மேற்கொள்ளுதல் , Business Card, Letter Pad, Brochure, Palm let  போன்றவற்றை  முன்கூட்டியே தயாரித்தல்,   உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டால், முதல் நாளில் இருந்தே வருமானத்தில் கவனம் செலுத்தலாம்.

4.வேலையை விடுத்தவுடன் வீணாக்குகிற   ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வருமான இழப்பாகும்  . அதுமட்டுமல்ல… அன்றிலிருந்தே தொழிலை நடத்துவதந்கான  செலவும் தொடங்கிவிடும்.

5.எல்லாவற்றையும்விட , வாடிக்கையாளரையும்(Customers) கண்டறிந்து விட்டால் வேலை எளிதாகி விடும் . உங்களுடைய தொழிலில் , நீங்கள் முதலில் கவனம் செலுத்த வேண்டியது , வருமானம் தரக்கூடிய  வாடிக்கையாளர்களைத்தான்( Revenue Customers)  .

6.வருமான உத்தரவாதம் இல்லாதவரை , தொழில்முனைவர் தொழிலை தள்ளிப் போடுவது நல்லது.

7.தொழில் தொடங்குவதற்கு முன்பே நீங்கள் பலரிடம் தொழில் தொடங்கப் போகின்ற செய்தியைச் சொல்லி அதைப் பரவலாக்க வேண்டும் .அப்போதுதான் வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடிவருவார்கள் .

8.உங்கள் தொழிலில்  பிற வருமானம் தரக்கூடிய ( Other Revenue Sources)  வழிகளை முடிந்தவரை அதிகரிக்கச் செய்யுங்கள் .

9.கல்லாவில் பணம் புழங்குகிற தொழிலாக  இருந்தால் ,தொழிலை கணினிமயம் ஆக்குகிற வரை நீங்கள்தான் கல்லாவில் அமரவேண்டும்.

10.தொழிலை தொடங்கத் திட்டமிடுகிறபோது, நீங்கள் உருவாக்குகிற திட்டம் இழப்பைத் தருமானால், அடுத்து மாற்று வழி ( Alternative Planning) என்ன என்பதையும்  முன்கூட்டியே திட்டமிட வேண்டும் .

11.உங்களைவிட அறிவாளிகளை உடன் வைத்துக்   கொள்ளுங்கள். ஒரு நிறுவனத்திற்கு தொழில் ஆலோசகர்களும் , வழிகாட்டிகளும் மிக,மிக முக்கியம் . குறிப்பாக திறமையான Auditor , Business Advisor, Business analyst,Advocate , Human Resource Advisor  போன்றோரை எப்போதும் கலந்து ஆலோசித்த பிறகே முடிவுகளை எடுங்கள்.

12.எந்த பொருளையும் கொள்முதல் செய்கின்றபோது குறைந்தபட்சம் மூன்று Supplier  களிடமாவது விலைப்பட்டியலைப் ( Price Quotation)  பெறுங்கள். இணையதளத்தில் உலவி (Search in Internet) கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

13.உங்கள் தொழில் வளர்ச்சி அடைகிற வரை ,குடும்பத்தினரில்   யாரவது ஒருவருடைய உதவி உங்களுக்கு அவசியம் தேவை .

14.தொழில் வளர்கிற வரை பிடிவாதம் வேண்டாம். வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற படி, நெகிழ்வுத் தன்மையோடு நடந்து கொள்ளுங்கள் . உங்கள் திறமையை நிரூபித்தபின் உங்கள் ஆலோசனைகளை கேட்க அவர்கள் முன் வருவார்கள் .

15.முடிந்த வரை வாடகை ,சம்பளம் போன்ற நிரந்தரச் செலவுகளை குறைத்துக் கொண்டு , கொள்முதல் ,விளம்பரம் போன்ற மாறிக் கொண்டிருக்கும் செலவுகளை  அதிகரித்துக் கொள்வது நல்லது . இதனால், பணத் தேவையை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.

16.தொழிலில் எவ்வளவு முதலீடு , அதை  விட இரண்டு மடங்கு வரை நீங்கள் கடன் வாங்கலாம். அதற்கு மேல் வாங்கினால், இடர்கள் அதிகம்.

17.வாங்குகிற கடன்களுக்கெல்லாம் மாதந் தோறும்   வட்டியை மட்டுமே செலுத்தாமல், அசலில் ஒரு பகுதியையும் திருப்பிச் செலுத்தப் பழகுங்கள்.

18.முடிந்தவரை Supplier-களிடம் பணத்தைத் திரும்பச் செலுத்துவதற்கான காலக்கட்டத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

19.எளிதில் பணம் கிடைக்கிறது என்பதற்காக, பல தொழில்களில் கவனம் செலுத்தாதீர்கள்( Don’t Focus Many-things)  . நீங்கள் பணத்தை  தேடி ஓடுவதை  விட , பணம் உங்களைத் தேடி வரும் வகையில் , உங்கள் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளுங்கள் .

20. மாதந்தோறும் உறுதியாக வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே , ஒரு ஆளை வேலைக்கு அமர்த்திக் கொள்ளுங்கள். அதுவரை நீங்கள் தனி ஆளாக ஓடிக்கொண்டே இருங்கள் .

தொழில்கள்-100

தொழில்கள்-100
சூப்பர் டிப்ஸ்…( Super Tips)
”அம்மா, நான் படிக்கறதை நிறுத்திட்டு, பிசினஸ்(Business) பண்ணி சம்பாதிக்கப் போறேன்!”

”என்னது… படிப்பை(Education) நிறுத்தப் போறியா…? படிக்கறது

நாலாங்கிளாஸ். அதை நிறுத்திட்டு என்ன பிசினஸ் பண்ணிக் கிழிக்கப் போற?”
”மூணாங்கிளாஸ் பசங்களுக்கு டியூஷன் எடுக்கப்போறேன்!”

– என்ன… படித்ததுமே ‘குபுக்’ என்று சிரிப்பு பொங்கிக் கொண்டு வருகிறதா? கூடவே, இந்த ‘எஸ்.எம்.எஸ்’ (SMS) ஜோக் புறப்பட்டதன் அடிநாதம்… இந்த உலகமே பிசினஸ் எனும் ஒரு புள்ளியை மையமாக வைத்துதான் சுழன்று கொண்டிருக்கிறது என்பதும் புரிந்திருக்குமே!

ஆம், எடுத்ததெல்லாம் பிசினஸ் Business என்பதாகிக் கொண்டிருக்கும் ‘பிசினஸ் பெருங்காலத்தில்’ நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆதிமனிதனின் மட்பாண்டத்தில் ஆரம்பித்து, இன்றைய இன்டர்நெட்(Internet) வரை எதை எடுத்தாலும் பிசினஸ்தான். இத்தகைய சுற்றுச்சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கு, தோள் கொடுக்கும் உற்ற தோழிதான் இனி படையெடுக்கும் அத்தனை டிப்ஸ்களும்!

இணையதளம்…அது உங்கள் களம்!


1. விளம்பரத்துறை (Advertisement Department) அளிக்கும் வாய்ப்புகள் எக்கச்சக்கம். கற்பனை வளம்மிக்க வாசகங்கள் எழுதுவோர் ‘ஃப்ரீலான்சர்’ (Freelancer) என்ற வகையில் காப்பிரைட்டராக(Copywriter) விளம்பர ஏஜென்சிகளுடன் (Advertisement Agencies) பணியாற்றலாம். மிகப்பெரிய நிறுவனங்கள்கூட (Companies) அவர்களுடைய தமிழ் விளம்பரங்களில் ஏடாகூடமாகத் தடுமாறியிருப்பதை அடிக்கடி காண முடியும். இதிலிருந்தே நல்ல தமிழ், கற்பனை வளம், சந்தைப்படுத்துதல்(Marketing) பற்றிய புரிதல்… இவை மூன்றும் இருப்பவர்களுக்கு எத்தனை வாய்ப்புகள்(Chances) உள்ளன என்பதைப் புரிந்து கொள்ளலாம். www.freelanceindia.com என்ற இணையதளத்தில் நம்மைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்வது இப்படிப்பட்ட வாய்ப்புகள் நம்மைத் தேடிவர உதவும்.

2. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் இணையதளத்தை(Web Sites), இணையத்தில் பிரபலமாக்கும் வித்தைதான் எஸ்.இ.ஓ. (SEO-Search Engine Optimisation) அதிகம் பிரபலமாகாத… ஆனால், வேகமாக வளர்ந்து வரும் துறை இது. முறையான பயிற்சி(Training) பெற்றால், துணிந்து களம் இறங்கலாம், இணையவெளிக்குள்! இதைப் பயிற்றுவிக்கும் இணையம் மூலமாகவே ஏகப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. நல்ல நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்!

3. வலைப்பூ…(Blog) ஒரு வரப்பிரசாதம். அதாங்க நெட்ல பிளாக் எழுதுவது. ‘பொழுது போகாதவர்களின் இணைய விளையாட்டு(Internet Games) அது!’ என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை இப்போதே மாற்றிக் கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுநராக நீங்கள் இருந்தாலோ, அல்லது குறிப்பிட்ட எந்த விஷயத்தின் மீதாவது தீவிர ஆர்வம் உடையவராக இருந்தாலோ இன்றே தொடங்குங்கள் ஒரு வலைப்பூ(Blog). போதுமான அளவு பார்வையாளர்கள்(Visitors) உங்கள் வலைப்பூவுக்கு உருவாகிவிட்டால், தங்கள் நெட்வொர்க்கில் வந்து இணையுமாறு உங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப் போவது யார் தெரியுமா… சாட்சாத் கூகுள்(Google)! ஆம், தன்னுடைய வாடிக்கையாளர்களின்(Clients) விளம்பரத்தை உங்கள் வலைப்பூவில் கூகுள் கொண்டு வந்து சேர்க்கும். இதற்கு பிரதிஉபகாரமாக, தன்னுடைய விளம்பர வருமானத்தில்(Earnings) உங்களுக்கு விகிதாச்சார பங்கு வைக்கும் கூகுள்! இதை மட்டுமே முழுநேரத் தொழிலாக செய்து காசு பார்ப்பவர்கள் அயல்நாடுகளில்(Other Countries) எக்கச்சக்கம்.

4. www.franchiseindia.com போன்ற இணையதளங்களுக்குப் போய் பாருங்கள். சொற்ப முதலீட் டில் பெரிய நிறுவனங்களின் பிரான்சைஸ் வாய்ப்புகள் குவிந்திருப்பதைக் காணலாம். இதில் உங்களுக்கு ஆர்வமிருக்கும் துறையில் வாய்ப்பைத் தேர்ந்தெடுத்து, நன்கு விசாரித்துத் தொழில் தொடங்கலாம்.

5. இபே (ebay) போன்ற நம்பிக்கையான வலைதளங்களில் பொருட்களை வாங்கி விற்பது ஒரு லாபகரமான வேலை. சிறிது நாள் இந்த ‘இபே’ E-bay செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்தபின் களத்தில் இறங்குவது நல்லது.

6. வெப் டெவலப்பர்(Web Developer) – இப்போதைய ஹாட் வேலைகளில்(Hot Job) ஒன்று. வீட்டில் இருந்தபடியே தனியாருக்குத் தேவையான வலைதளங்கள் உருவாக்கு வதுதான் இந்த வேலையே. இணையத்தில், இதற்கென இருக்கும் பகுதிகளில் உங்களைப் பற்றி ஒரு விளம்பரம்(Advertisement) கொடுத்தால் வேலை(Job) தேடி வர வாய்ப்பு உண்டு.

7. ‘புரூஃப் ரீடிங்'(Proof Reading), ‘எடிட்டிங்'(Editing) போன்ற வேலைகளைச் செய்வதற்கு இப்போது நிறைய ஆட்கள்(Man Power) தேவைப்படுகிறார்கள். அதிலும், வீட்டில்இருந்தபடியே(home Based) செய்யத் தயாராக இருந்தால் வரவேற்பு நன்றாகவே இருக்கும். பத்திரிகை அலுவலகங்கள், பதிப்பகங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டால்… வாய்ப்புகள் கிடைக்கும்.

8. டைப்பிங்(Typing) நன்றாகத் தெரிந்தால் டேட்டா என்ட்ரி(Data Entry) வேலை செய்யலாம். வீட்டில் இருந்தபடியே ஆவணங்களை(Documents)  கம்ப்யூட்டரில்(Computer) டைப் செய்து ஏற்ற வேண்டும். பெரும்பாலும் அதுதான் வேலை. இந்த வேலைக்காக ஆள் கேட்டு பேப்பரில்(Papers) வரும் விளம்பரங்களில் தொடர்புகொண்டு(Contact) பணி தேடலாம். அதோடு, நிறுவனத்தின் நம்பகத்தன்மையை ஏற்கெனவே பணி செய்பவர்களிடம் உறுதி செய்வதும் முக்கியம்.

9. வீட்டில்(Home) நான்கு கம்ப்யூட்டர் வைக்க இடமிருந்தால்(Place) போதும்… குழந்தைகளுக்கு(kids) கம்ப்யூட்டர் பயிற்சி(Training) கொடுக்கும் தொழிலை ஆரம்பிக்கலாம். அளவான வருமானத்துக்கும், உங்களின் பொழுது போக்குக்கும்(Entertainment) இது உத்தரவாதம்.

10. கம்ப்யூட்டர் ஹார்ட்வேர்(Hardware)  தெரிந்தால்… வீட்டிலேயே ரிப்பேர்(Repair) கடை ஒன்றை ஆரம்பிக்கலாம். கம்ப்யூட்டர்தான் என்றில்லை… எந்தெந்த துறையில் எல்லாம் ரிப்பேர் பார்க்கும் திறமை உங்களுக்கு உண்டோ, அதிலெல்லாம் நுழையலாம்.

வீடே தொழிற்பேட்டை! (Home Industry)

உங்கள் வீட்டைச் சுற்றி டெய்லரிங் கடைகள், ஹேட்டல்கள்(Hotels), நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள், பெரிய அபார்ட்மென்ட்கள் (Apartments) என்று இருந்தால், ஏகப்பட்ட வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

11. வீட்டுக்கு அருகில் டெய்லரிங் கடை இருந்தால், பட்டன் தைத்தல், ஹெம்மிங் செய்தல், எம்ப்ராய்டரி என்று துணைத்தொழில்களை அவர்களிடம் இருந்து கேட்டுவாங்கி செய்து கொடுக்கலாம்.

12. ஹோட்டல்கள்(Hotels) மிகுந்த ஏரியா என்றால்… இலை மற்றும் தண்ணீர் சப்ளை செய்வ தற்கான வாய்ப்பை கேட்டுப் பெறலாம். சில ஹோட்டல் களில் மசாலா அரைத்துத் தருவது, பாத்திரம் கழுவித் தருவது போன்ற வேலைகளையே கான்ட்ராக்ட்(Contract) ஆக தருகிறார்கள். ஆர்வம் இருப்பின் ஆட்களை வைத்துக் கொண்டு அதையும் முயற்சிக்கலாம்.

13. கடை வீதியாக இருந்தால், பல கடைகளுக்கு வாசல் பெருக்கி தண்ணீர் தெளிக்க வேண்டிய வேலை இருக்கும். இதையும் கான்ட்ராக்ட் ஆக எடுத்து செய்தால்.. அதிலிருந்து ஒரு லாபத்தைப் பார்க்கலாம்.

14. வீட்டுக்குக் குறைந்த பட்சம் இரண்டு செல்போன்(Cell Phone) வைத்திருப்பார்கள். அதனால் ரீ-சார்ஜ்(Recharge) கூப்பன்கள் வாங்கி வைத்து வியாபாரம் செய்யலாம். மொத்தமாக நீங்கள் ரீ-சார்ஜ் கூப்பன்(Coupons) வாங்கும்போது சம்பந்தப்பட்ட செல்போன்(Cell phone)  நிறுவனத்திடம் இருந்து கமிஷன் கிடைக்கும்.

15. மொத்த விலையில் பாக்கெட்(Packet) பால் வாங்கி, நீங்களாகவோ அல்லது ஆள் வைத்தோ வீடு வீடாக பால் சப்ளை(Supply) செய்யலாம். வீட்டில் எப்போதும் ஸ்டாக் வைத்திருந்தால் தேவைப் படுபவர்களுக்கு விற்கலாம். தயிர், மோர், தண்ணீர் கேன் மற்றும் பாக்கெட் மாவு போன்றவற்றை விற்பனை செய்தால் கூடுதல் லாபம்(Profit).வீட்டிலேயே போதுமான இடவசதி இருந்தால்… குழந்தைகளுக்குரிய(Kids) புத்தகங்களை வைத்து வாடகை நூலகம் நடத்தலாம்.

16. அண்டை வீட்டுப் பெண்களின் புடவைகளை சேகரித்து, நாமே டிரைவாஷ் (Dry Wash)செய்து தரலாம். அல்லது டிரைவாஷ் கடைகள் மூலம் செய்து தந்து அதற்கான கமிஷனைப்(Comission) பெற்றுக் கொள்ளலாம்.

17. அண்டை வீடுகளில் அலுவலகம்(Office) செல்பவர்களாக இருந்தால், அவர்களுடைய மின்சாரம், தொலைபேசி(Telephone) போன்றவற்றின் கட்டணங்களைச் செலுத்துவது, சமையல் கேஸ் புக் செய்வது போன்ற வேலைகளை செய்து கொடுத்து கமிஷன்(Comission) பெறலாம்.

18. வெட்டிங்(Wedding) பிளானர்(Planner) என்பது திருமணங்களுக்குத் தேவையான அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுக்கும் பணி. திருமண அழைப்பிதழ் எங்கே அச்சடிக்கலாம்(Print) என்று தொடங்கி, என்ன மாதிரியான சாம்பார் வைப்பது என்பது வரை பிளான் பண்ணும் வேலை. திறமையான சிலர் வேலைக்கு இருந்தால் மொத்தமாக ஆர்டர்(Order) பிடித்து நல்ல லாபம் ஈட்டலாம்.

19. ஒரு வீட்டுக்கு என்னென்ன தேவைப்படும் என்பதை பட்டியலிடுங்கள். அவற்றில் சிலவற்றைச் செய்து தரும் ஏஜென்ஸி(Agency) போல செயல்படலாம். உதாரணமாக, வீடுகளுக்கு அலாரம் அமைப்பது, கொசு வராமல் ஜன்னல்களில் வலை அடிப்பது இப்படி சில. இதற்கான நிறுவனங்களை இணையதளம் வழியாக கண்டறிந்து மொத்த விலையில் கொள்முதல் செய்து, பின்னர் நிறுவனங்கள், வீடுகளில் கேன்வாஸ் செய்து ஆர்டர் எடுக்கலாம்.

20. உங்கள் வீட்டில் விசாலமான ஹால் அல்லது எக்ஸ்ட்ரா ரூம் இருந்தால், கம்ப்யூட்டர் கேம்(Computer Game) ஆரம்பிக்கலாம். அக்கம் பக்கத்து குழந்தைகளை அழைத்து விஷயத்தைச் சொன்னால்… அந்த ஏரியாவுக்கே விஷயம் ஈஸியாக பரவிவிடும். மணிக்கு இவ்வளவு ரூபாய்(Rupee) என கணக் கிட்டு காசு பார்க்க லாம்.

கைகொடுக்கும் இயந்திரங்கள்(Machinery)!

வீட்டிலேயோ அல்லது சிறிய அளவிலான கடையிலேயோ வைத்து பிசினஸ் செய்யும் வகையில் எண்ணற்ற இயந்திரங்கள் இருக்கின்றன. அவற்றில் சில கீழே அணி வகுக்கின்றன. உங்கள் வசதிக்கு ஏற்ப முடிவு செய்யலாம்.

21. மெழுகுவர்த்தி மெஷின்: 700 ரூபாயில் தொடங்கி 45 ஆயிரம் ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கிறது. சிறிய மெஷினில் ஒரு மணி நேரத்தில் 55 மெழுகுவர்த்திகள் செய்யலாம். ஏற்றுமதி செய்யும்பட்சத்தில் பெரிய மெஷின் வாங்கலாம். இதில் 500 முதல் 1,000 மெழுகுவர்த்திகள் தயாரிக்கலாம்.

22. சாக்பீஸ் மெஷின்: இதன் விலை 15 ஆயிரம் ரூபாய். நாள் ஒன்றுக்கு 10 கிலோ அளவுக்கு சாக்பீஸ் தயாரிக்கலாம்.

23. பவுச் மெஷின்: 1 ரூபாய், 2 ரூபாய் என்று விற்பனை செய்யப்படும் ஊறுகாய், வாஷிங் பவுடர், எண்ணெய் போன்ற பொருட்களை சாஷே பாக்கெட்டுகளில் அடைத்துத் தரும் மெஷின் இது. விலை ஒரு லட்சம். 24 மணி நேரமும் தொடர்ந்து இயக்கலாம்.

24. பாப் கார்ன் மெஷின்: விலை 70 ஆயிரம் ரூபாய். மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் இந்த மெஷினை வைத்து வியாபாரத்தை ஆரம்பித்தால், நல்ல வருமானத்தைப் பார்க்கலாம்.

25. பேப்பர் கப் மெஷின்: இதில் செமி ஆட்டோமேட்டிக், ஃபுல்லி ஆட்டோமேட்டிக் என இரண்டு வகை இருக்கிறது. ரூ. 5 லட்சம் முதல் 18 லட்சம் வரை விற்கப்படுகிறது (18 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கும்போது, குறிப்பிட்ட கால அளவுக்கு மூலப்பொருட்களையும் சப்ளை செய்வார்கள். ஒரு வருட வாரன்ட்டியும் உண்டு). இதில், பேப்பர் பேக் கூட தயாரிக்கலாம்.

26. ஜூட் பேக் மெஷின்: சணல் பைகள், சணல் மிதியடி போன்றவை தயாரிக்கும் மெஷின் இது. 8 ஆயிரம் ரூபாயில் தொடங்கி பல்வேறு விலைகளில் கிடைக்கிறது. 2 மெஷினை வாங்கிப் போட்டு, ஒரு மாஸ்டர், 2 வேலையாட்களை வைத்தால்.. நல்ல லாபம் கிடைக்கும்.

27. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதைக் குறைப்பது போன்றவை இப்போது அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றன. சணல் பைகள், பிளாஸ்டிக் பைகளின் இடத்தைப் பிடிக்கத் தொடங்கிவிட்டன. இந்த வணிகம் வளரும் நிலையிலிருக்கும்போதே இதில் நுழைந்து பழகிக் கொண்டால்… பெரிய வருங்காலம் உண்டு

பள்ளிக்கூடம்(Schools)  அல்லது கல்லூரிகளின் அருகில் நீங்கள் குடியிருந்தால் பல்வேறு வாய்ப்புகள் திறந்து கிடக்கின்றன…

28. கேன்டீன் ஆர்டர் எடுக்கலாம்.

29. மாணவர்களை அழைத்துச் செல்வதற்கான ஆட்டோக்கள் வாங்கி வாடகைக்கு விடலாம்.

30. பள்ளியின் அனுமதியுடன் ஸ்டேஷனரி கடை வைக்கலாம்.

31. டெய்லரிங் தெரிந்திருந்தால் பள்ளியில் மொத்தமாக ஆர்டர் எடுத்து யூனிஃபார்ம் தைத்துத் தரலாம்.

32. பள்ளிக்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ ஜெராக்ஸ்(Xerox) கடை வைக்கலாம். கம்ப்யூட்டர் இருப்பின் பிரின்ட் எடுத்து தரும் வேலையையும் செய்யலாம்.

33. புத்தகங்களை பைண்டிங் செய்து தரும் வேலை நன்றாக கைகொடுக்கும்.

34. இப்போதெல்லாம் பள்ளிகளில் கிராஃப்ட்(Craft) வேலைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது, நீங்கள் ஓரளவுக்கு அதில் கில்லாடி எனில், அக்கம் பக்கமிருக்கும் பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தரச்சொல்லி உங்களை மொய்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.

பயிற்சியிலேயே பணம்(Money) பார்க்கலாம்!

35. ‘நேர்மறை சிந்தனை, போதுமான பேச்சுத்திறன், தமிழ் மற்றும் ஆங்கில அறிவு… இதெல்லாம் எனக்கு உண்டு!’ என்பவர்களை, மனிதவளத்துறை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது. உங்கள் பேச்சைக் கேட்டு இதுவரை உங்கள் நட்பு வட்டம் மட்டுமே உத்வேகம் அடைந்திருக்கும். இனி, அதை உங்கள் தொழில் அடையாளமாக மாற்றிக் கொண்டு சுற்றுப்புறத்திலிருக்கும் பள்ளிகளை முதலில் அணுகுங்கள். கல்லூரி அளவில் பர்சனாலிட்டி டெவலப்மென்ட், கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் போன்றவற்றைப் பிரித்து மேய்வதற்கு பெரிய பெரிய புலிகள் இருக்கும்போது, பள்ளிகளில் இதற்கான முயற்சிகள் பெருமளவில் நடைபெறுவதில்லை என்பதே உங்களுக்கான வாய்ப்பு திறந்தே இருக்கிறது என்பதற்கு அடையாளம். ஆளுமை வளர்ச்சி பற்றிய டிப்ஸ், குட்டிக் குட்டி நீதிக் கதைகள் எனத் தொடங்கி சிறப்பான ஒரு பவர்பாயின்ட் பிரசன்டேஷனைத் தயார் செய்யுங்கள். நியாயமான சிறு தொகைக்கு பயிற்சி வகுப்பு எடுத்து, வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்படி செய்யுங்கள். முதல் மூன்று அல்லது நான்கு பள்ளிகள் தான், பிறகு உங்கள் டைரி எப்பவுமே ஹவுஸ்ஃபுல்தான்!

36. பெரிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின்(Employees) திறமையை மேம்படுத்த பல்வேறு டிரெய்னிங் புரோக்ராம்களை(Program) நடத்துகின்றன. மென்கலைகள், கம்யூனிகேஷன்(Communication), ஆங்கில உச்சரிப்பு போன்றவை சில உதாரணங்கள். நல்ல தெளிவான ஆங்கிலம்(English) இருந்தால் இத்தகைய டிரெய்னிங் நடத்தித் தரும் நிறுவனங்களில் சேர்ந்து பணியாற்றலாம். தேவைப்படும்போது மட்டும் நிறுவனங்களுக்குச் சென்று டிரெய்னிங் கொடுக்க அழைப்பார்கள். மற்ற நேரங்களில் வீட்டிலேயே இருக்கலாம்.

37. செல்லப் பிராணிகளைக் கவனிப்பது, அதற்குப் பயிற்சி கொடுப்பது… இவையெல்லாம் நகர்ப்புறங்களில் நல்ல வருவாய் தரக்கூடிய பணி. ஒரு மணி நேர பயிற்சிக்கு சராசரியாக 200 ரூபாய் கிடைக்கும். அருகிலுள்ள பெட் ஷாப் மற்றும் வெட்னரி டாக்டர்களின் தொடர்பு எல்லையில் இருப்பது இதற்கு கைகொடுக்கும்.

38. சத்தமே போடாமல் சாதித்துக் கொண்டிருக்கிறது மொழிபெயர்ப்புத் துறை, பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய மொழிகளில் பயிற்சி எடுத்துக் கொண்டால்… உள்நாட்டு மொழிபெயர்ப்பு முதல் பன்னாட்டு நிறுவன வாய்ப்புகள் வரை வாய்க்கும். சென்னையில் இருக்கும் அல்லயன்ஸ் பிரான்ஸ் (பிரஞ்சு மொழிக்கு), மேக்ஸ்முல்லர் பவன் (ஜெர்மன் மொழிக்கு) ஆகிய நிலையங்களில் இதுபற்றிய வழிகாட்டுதல் கிடைக்கும்.

ஏற்றம் தரும் ஏஜென்ஸிகள்!

39. கல்லூரி மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை வாடகை(Rent) சேவை மூலமாக அளிப்பது நல்லதொரு சுயதொழில். ‘புத்தகங்களை நகலெடுப்பதைவிட, மலிவான வாடகைக்கு கிடைக்கிறதே’ என்று மாணவர்களும் மொய்ப்பார்கள். இதில் ஆர்வமுடையவர்கள், எம்.வி. புக் பேங்க் போன்ற தென்னிந்திய அளவில் செயல்படும் புத்தக வங்கிகளை அணுகி, அவர்களின் ஏஜென்ஸியாக சுயதொழில் தொடங்கலாம்.

40. வீட்டில் இணையதள வசதியிருந்தால்… ரயில்(Train)  மற்றும் பேருந்துக்கான(Bus) டிக்கெட் முன்பதிவு செய்து தரும் ஏஜென்ஸியை ஆரம்பிக்கலாம்.

41. உங்கள் பகுதியில் சுற்றுலா(Travel) முக்கியத்துவம் இருந்தால்… டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் ஏஜென்ட் ஆக மாறிவிடலாம். கையிலிருந்து முதலீடு போட்டு வாகனமெல்லாம் வாங்கித்தான் இதைத் தொடங்க வேண்டும் என்பதில்லை. சரியான நெட்வொர்க்கிங் திறன் இருக்கும்பட்சத்தில், லோக்கல் வாடகை வண்டி ஆபரேட்டர் களையே பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்களுக்கும் வேலை கிடைத்த மாதிரி ஆகிவிடும்.

42. ஹெல்த் இன்ஷுரன்ஸ்(Health Insurance) பற்றிய விழிப்பு உணர்வு போது மான அளவில் இல்லை. ஆனால், தேவை இருக்கிறது. ‘எந்த ஹெல்த் இன்ஷுரன்ஸ், தானே மருத்துவமனைக்குப் பணத்தை செலுத்தும் வசதி கொண்டது’ என்பது போன்ற தகவல்களையெல்லாம் கையில் வைத்துக் கொண்டு ஹெல்த் இன்ஷுரன்ஸ் ஆலோசகராகக் கலக்கலாம். இன்ஷுரன்ஸ் கம்பெனிகள் தரும் கமிஷன், உங்களுக்குக் கைகொடுக்கும்.

43. ஹெல்த் இன்ஷுரன்ஸ் ஆலோசனைகளைத் தேடி வருவோரிடம்… வாகன இன்ஷுரன்ஸ், பயண இன்ஷுரன்ஸ் என அத்தியாவசிய இன்ஷுரன்சுகளை அறிமுகப்படுத்தலாம். கூடவே… வருமான வரி திட்டமிடுதல், ஆண்டு முதலீட்டுத் திட்டங்கள் என நம் சேவை தளங்களை மேலும் விரிவுபடுத்தினால் கூடுதல் லாபம்தான்!

44. இன்ஷுரன்ஸ் ஏஜென்ட் நல்ல வருமானம் தரக்கூடியத் தொழில். தொடர்புகளும், பேச்சுத் திறமையும்தான் முதலீடு. மாதம் ஒன்றுக்கு லட்ச ரூபாய் சம்பாதிக்ககூடிய ஏஜென்ட்கள்கூட நாட்டில் உள்ளனர். ஏஜென்ட் ஆவதற்கானப் பயிற்சியை இன்ஷுரன்ஸ் நிறுவனங்களே தருகின்றன. உங்கள் ஊரிலிருக்கும் எல்.ஐ.சி. கிளையின் மேனேஜரை அணுகினால் வழிகாட்டுவார்கள்.

45. கார்ப்பரேட்9Corporate)  நிறுவனங்களுக்கு தேவைப்படும் கேட்டரிங் சேவை, புத்தகங்கள், காபி ஷாப் உள்பட ஏ டு இசட் சேவைகள் (மின்சார பில் கட்டுதல், டெலிபோன் பில் கட்டுதல்) போன்ற ஏரியாக்களை மூன்று நான்கு பெண்கள் ஒரு குழுவாக இணைந்து செய்து தரலாம். விசிட்டிங் கார்டு தயாரித்துக் கொண்டு தேவையுள்ளவர்களை சந்தித்து வாய்ப்புக் கேட்டால்… வெற்றி நிச்சயம். அது தொடர்பான இடங்களில் சிறிது காலம் பணியாற்றி அனுபவம் பெறுவது நல்லது.

46. ஏதேனும் வாங்க வேண்டும் என சிலரும், எதையேனும் விற்கவேண்டும் என சிலரும் தினமும் அல்லாடுவார்கள். இவர்கள் இருவருக்கும் தேவை ஒரு ஏஜென்ஸி. அதை நீங்களே ஆரம்பிக்கலாம். ‘நெட்வொர்க்’ எவ்வளவு விரிவாக… நம்பிக்கையாக இருக்கிறது என்பதன் அடிப்படையில் பிசினஸ் களைகட்டும்.

கலையிலும் கலக்கல் வருமானம்(Income)!

47. அனிமேஷன் துறை, புயல் வேகத்தில் வளர்ந்து வருகிறது. இத்துறையில் பயிற்சி தருவதற்கு சிறியது முதல் பெரிய நிறுவனங்கள் வரை போட்டி போடுகின்றன. உள்ளுக்குள் ஊறியிருக்கும் படைப்புத் திறனை இவற்றில் மெருகேற்றிக் கொண்டால், முயற்சி திருவினையாக்கும்! அனிமேஷன் படிப்புக்கான குறுகியகால படிப்புகள் உள்ளன. விநாடி அடிப்படையில் வருமானத்தைக் கொட்டும் தொழில் இது.

48. ஸ்க்ரீன் பிரின்ட்டிங், ஃபேப்ரிக் பிரின்ட்டிங் போன்ற தொழில்கள் தொடங்க அதிகம் முதலீடு தேவையில்லை. ஒன்று அல்லது இரண்டு வார பயிற்சி போதும். ஸ்க்ரீன் பிரின்ட்டிங்கில் பொதுவாக விசிட்டிங் கார்டுகள், திருமண அழைப்பிதழ்கள் என்று பிசியாகவே இருக்க முடியும். ஃபேப்ரிக் பிரின்ட்டிங்கைப் பொறுத்தவரை பெண்களுக்கான உடைகள் விற்கும் கடைகளோடு நல்ல தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வது வளர்ச்சிக்கு உதவும்.

49. ஓவியம், கார்ட்டூன் போடும் கலை உங்களுக்கு வாய்த்திருக்கிறதா? பத்திரிகை அலுவலகங்கள் மற்றும் அதன் உதவி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களுடன் மின்னஞ்சல்(E mail), கடிதம் வழியாகத் தொடர்பு கொண்டு வாய்ப்புக் கேட்டு முன்னேறலாம்.

50. ‘கிளாஸ் பெயின்ட்டிங்’ இப்போது மிகவும் பாப்புலர். நல்ல கவன சக்தி இருந்தால் போதும் கண்ணாடி பெயின்ட்டிங்கில்(Paintings) கலக்கலாம். இன்ட்டீரியர் டிசைனரோடு தொடர்பில் இருந்தால் வாய்ப்புகள் தேடி வரும்.

51. ஃபேஷன் ஜுவல்லரி உருவாக்குவது இப்போதைக்கு சூப்பர் பிசினஸ். வேலையில் இருக்கும் பெண்கள்கூட ஓய்வு நேரங்களில் இதில் இறங்கி காசு பார்க்கிறார்கள். இதற்கான பயிற்சி நிலையங்கள் எக்கச்சக்கமாக உள்ளன. நகரங்களில் இதற்கென தனிக் கடைகள் உள்ளன.

52. ஃபேஷன் டிசைனிங்… வீட்டில் இருந்தபடியே செய்யக் கூடிய ஒரு நல்ல வேலை. நல்ல கற்பனை வளமும், உலக ஞானமும் இருந்தால் இதில் சாதிக்கலாம். ரெடிமெடு ஆடை நிறுவனங்களில் நிறைய வாய்ப்பு உள்ளது.

53. வீட்டு ஜன்னல் களுக்கு அழகழகாக கர்ட்டன் செய்து போடுவது ஒரு நல்ல கலை. சிறப்பாக வடிவமைக்க முடிந்தால்… அது ஒரு நல்ல தொழிலாகிவிடும். கொஞ்சம் டெய்லரிங், கொஞ்சம் கலையுணர்வு இரண்டும் இருந்தால்… நிறைய சம்பாதிக்கலாம்.

54. பொம்மை செய்வது பெண்களுக்கு எளிதான ஒரு பணி. பொம்மை உருவாக்கும் கம்பெனிகளிடமிருந்து ஆர்டர் பெற்று வீட்டிலேயே பொம்மைகளைத் தயாரிக்கலாம். அக்கம் பக்கத்து கடைகளிலேயே ஆரம்பகட்ட ஆர்டகளை கணக்கிட்டு, தொழிலைத் தொடங்கலாம்.

55. ஹேண்டி கிராஃப்ட் தொழிலில் நீங்கள் வல்லவர்கள் என்றால், நீங்கள் செய்த பொருட்களோடு சென்னையில் இருக்கும் காதி கிராஃப்டை அணுகுங்கள். அங்கே மிக குறைந்த விலையில் உங்கள் பொருட்களை வைப்பதற்கு இடம் தருவார்கள். வருபவர்களின் பார்வை உங்கள் பொருளில் பட்டால் லக் உங்களுக்குதான்.

ஊட்டம் தரும் உணவு பிசினஸ்!

56. அலுவலகவாசிகளின் மிகப்பெரிய சிக்கலே வீட்டுச் சாப்பாடுதான். கேன்டீன், ஹோட்டல் என சாப்பிடும்போது பர்ஸ் காலியாவதோடு… வயிறும் பதம்பார்க்கப்படுகிறது. இவர்களை குறி வைத்து வீட்டுச் சாப்பாடு விற்பனையில் இறங்கினால்… கொடி கட்டலாம். ஒரு இடத்தில் வைத்து விற்பதானாலும் சரி, வேலையாள் மூலமாக அலுவலக வாசல்களில் விற்பதானாலும் சரி… சிறந்த வருவாய் தரக்கூடிய வேலை. வீட்டுக்கு அருகில் இருக்கும் அலுவலகங்களில் ஆர்டர் பிடிப்பதன் மூலம் பிள்ளையார் சுழி போடலாம்.

57. பிறந்த நாள் கேக் போன்றவை செய்வது சுவாரஸ்யமான வேலை. கேக் டெகரேஷன் பண்ணுவதே ஒரு கலை. அதைக் கற்றுக் கொண்டால் இதில் பிரகாசிக்கலாம். அருகிலுள்ள பேக்கரி, ஹோட்டல் போன்றவற்றை அணுகுவது பயனளிக்கும்.

58. சமையலில் நீங்கள் கில்லாடி எனில், சமையல் பள்ளி ஒன்றை ஆரம்பித்தால்… சக்கை போடு போடலாம். சமைக்கத் தெரியாத பார்ட்டிகள்தான் இப்போது அதிகம் என்பதால்… உங்கள் அக்கம் பக்கத்து வீட்டு பெண்களே குவிய ஆரம்பித்துவிடுவார்கள்! புதுமையான விஷயமாகவும் இருக்கும்.

59. வீட்டில் கொஞ்சம் இடம் இருந்தால்… மினி பேக்கரி நடத்தலாம். இனிப்புவகைகள், முறுக்கு வகைகள் என ஆரம்பித்து… இடம், பொருள் அறிந்து செயல்பட்டால் விரிவாகவே பிசினஸை டெவலப் செய்ய முடியும்.

60. ஒரு ஜூஸ் ஷாப் ஆரம்பிக்கலாமே… முதலீடு கொஞ்சம் போதும். ஓரளவுக்கு மக்கள் நடமாட்டம் உள்ள இடமாக இருக்கவேண்டும். நாலு பேருக்கு உங்கள் கடை ஜூஸ் பிடிக்கும் வரைதான் போராட்டம். பிறகு, ஆட்கள் தேடி வருவார்கள்.

61. மாலை நேர திடீர் கடை ஆரம்பித்து சூப், பிரட் ஆம்லெட், சாண்ட்விட்ச், சாலட் தயாரித்து விற்றுப் பாருங்கள். நல்ல ஆள் நடமாட்டமுள்ள பகுதியெனில் வியாபாரம் சூடு பிடிக்கும்.

62. இயற்கை உணவுகள் பற்றி பெரிதாக பலரும் பேச ஆரம்பித்திருக்கும் நேரமிது. கேழ்வரகு கூழ், கம்பங்கஞ்சி என்று சுத்தம் சுகாதாரமாக ஒரு கடையைப் போட்டுப் பாருங்கள்…. ஈஸியாக கல்லா நிறையும்.

மார்க்கெட்டிங்குக்கு மரியாதை!

63. எந்தப் பொருளைத் தயாரிக்க விரும்பினாலும், பிள்ளையார் சுழி போடுவதற்கு முன்பாக நீங்கள் செய்ய வேண்டியது… விற்பனை வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதைத் தேடித் தெரிந்துகொள்வதைத்தான். அந்தப் பொருள் அந்தச் சூழலுக்குத் தேவையானதுதானா… அதை மக்கள் வாங்குவார்களா… என்பது போன்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டு சிறிய அளவிலான சர்வே நடத்துவது மிக முக்கியம்.

64. உங்கள் பகுதியில் எந்த பொருளுக்கு சிறப்பான மரியாதை இருக்கிறது என்பதைக் கண்டறி யுங்கள். அதுவே கூட உங்களை உயர்த்திப் பிடிக்கக் கூடிய ஒரு தொழிலாக இருக்கக்கூடும். ஆம், பிற பகுதிகளிலும் அதற்கு சந்தை வாய்ப்பு இருக்கிறதா என்று தேடி அறிந்தால்… திருநெல்வேலி அல்வாவுக்கு சென்னையில் மவுசு இருப்பது போல, நீங்கள் கையில் எடுக்கும் பொருளுக்கும் மவுசைக் கூட்ட முடியும். பாக்கெட்டை நிரப்ப முடியும்! உதாரணத்துக்கு, உங்கள் பகுதியில் பனை பொருட்கள் அல்லது சுடுமண் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்றால், உள்ளூர் சந்தையில் ஒரு விலை இருக்கும். பிற நகரங்களுக்கு வந்துவிட்டால் அவற்றின் விலை வேறு. இந்த சூட்சமம் உங்களுக்குப் புரிந்துவிட்டால் உள்ளூர் அம்பானி… நீங்கள்தான் அம்மணி.

65. மார்க்கெட்டிங் ஒரு சிறப்பான வழி. குறிப்பாக ‘ஆம்வே’ போன்ற நம்பத் தகுந்த மார்க்கெட்டிங் குழுவில் இணைந்து பணியாற்றலாம். பேச்சுத் திறமை மட்டும் இருந்தால் போதும். அலுவலகத்தில் இருக்க வேண்டிய தேவையில்லை. உங்கள் பொருளை மார்க்கெட்டில் விற்கப் போகிறீர்கள் என்றால், கஸ்டமரிடம் தப்பித் தவறிகூட ‘என் குடும்ப கஷ்டம் இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன். தயவு செய்து இந்தப் பொருளை வாங்கிக் கோங்க…’ என்று மட்டும் மூக்கை சிந்த ஆரம்பித்துவிடாதீர்கள். ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் நாணயத்தை பிச்சையாக விட்டெறிந்து கதவைச் சாத்திவிடுவார்கள். அதேபோல உங்களுடைய பெருமைகளை டமாரம் அடிக்கவும் செய்யாதீர்கள்

66. ஒரு தொழிலைத் திட்டமிடும் முன்பாக… எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதைக் கணக்கிடுங்கள். பிறகு, அதைப்போல இரண்டு முதல் மூன்று மடங்கு வரை பணத்தைத் தயாராக வைத்துக் கொண்டு களமிறங்குங்கள்.

67. தோல்வி குறித்த பயமின்மை, சரியான தெளிவு, போதிய பண வசதி… ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு இவை மூன்றும்தான் முக்கியமான முதலீடுகள்.

கதம்பம்!

68. பியூட்டி பார்லர் ஆரம்பிப்பது சிறப்பான வருமானம் தரக்கூடிய வேலை. உங்கள் வீடு மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் இருந்தால்… உடனடியாக ஆரம்பிக்கலாம். இதற்கென பயிற்சிகள் தர நிறைய நிறுவனங்கள் உள்ளன.

69. ‘பொக்கே’ கொடுக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. மொத்த வியாபாரிகளிடம் தொடர்பு கொண்டால், தேவையான பூக்களை தினமும் வரவழைத்துத் தருவார்கள். அதை நம் கற்பனைக்குத் தக்கவாறு தயாரித்து விற்கலாம். முதலீடு இருந்தால் போட்டோ பிரின்ட்டிங், ஃபிரேமிங் போன்றவை ஆரம்பிக்கலாம். தொடர்புடைய நிறுவனங்களை அணுகி பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்.

70. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி செய்து ஓய்வு பெற்றவர்கள் என்றால்… வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுவதையே ஒரு தொழிலாகச் செய்யலாம். ரெஸ்யூம் எனப்படும் பயோடேட்டா தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்துகொடுத்து, தகுந்த சன்மானத்தைப் பெறலாம்.

71. போட்டோ ஷாப், இன்டிஸைன், போன்ற கோர்ஸ்களை பயின்றால் பத்திரிகை அலுவலகங்கள், அச்சகங்கள் போன்றவற்றில் வேலைவாய்ப்பு உண்டு. ஆர்டர் வாங்கி வீட்டில் இருந்தும் தொழில் செய்யலாம். வீடியோவில் எடிட்டிங் செய்வது போன்ற பயிற்சிகளைப் பெற்றால் ஸ்டூடியோக்களில் பணி கிடைக்கும்.

72. டி.வி.டி., சி.டி., புத்தகம் போன்றவற்றை வாடகைக்கு விடும் கடையை வீட்டிலிருந்தபடியே நடத்தலாம். மெம்பர்ஷிப் அதிகம் கிடைத்தால்… பெரிய அளவில் விரிவுபடுத்தலாம்.

விவசாயத்துலயும் விஷயமிருக்கு!

லட்சங்களையும் கோடிகளையும் முதலீடு செய்தால்தான் பிசினஸா… மிகக்குறைந்த முதலீட்டிலும் லாபம் பார்க்கலாம் என்பதற்கு விவசாயம் சார்ந்த பிசினஸ்களே சரியான உதாரணங்கள்…

73. உங்கள் பகுதியில் எந்தெந்த பருவத்தில் என்னென்ன காய்கறிகள் அதிகம் கிடைக்கிறதோ… அவற்றை வாங்கி சுத்தப்படுத்தி காயவைத்து, காய்கறி வற்றல் தயாரிக்கலாம். பாலித்தீன் பைகளில் அடைத்து அருகில் இருக்கும் மொத்த வியாபாரிகளிடம் கொடுப்பதன் மூலம் உங்களுக்கு வருமானம் வரும். கொத்தவரங்காய், கத்திரிக்காய், சுண்டக்காய், பாகற்காய், மாங்காய் போன்ற வத்தல்களுக்கு எப்போதும் மவுசு உண்டு.

74. சுயஉதவிக் குழு பெண்கள் இணைந்து கிராமத்தில் இருக்கும் புளிய மரங்களை ஏலத்துக்கு எடுக்கலாம். புளியம் பழங்களை உதிர்த்து, புளியை இடித்துப் பதப்படுத்தி பேக் செய்து மொத்த வியாபரிகளிடம் விற்கலாம்.

75. நெல்லிக்காய் அதிகம் கிடைக்கும் சீஸன் என்றால்… அதை வாங்கி சுத்தப்படுத்தி, தேனில் ஊறவைத்து, நிழலில் காயவையுங்கள். பிறகு, 50 கிராம், 100 கிராம் என பாலித்தீன் பைகளில் பேக் செய்து மூலிகைக் கடைகளிலும், டவுனிலுள்ள மளிகைக் கடைகளில் கொடுக்கலாம். தொடர்ந்து செய்யும்போது ரெகுலர் கஸ்டமர்கள் கிடைப்பார்கள்.

76. உங்கள் வீட்டு புறக்கடையில் அதிக இடமிருந்தால்… நாட்டுக்கோழி வளர்க்கலாம். உள்ளுர் சந்தையிலேயே நல்ல வரவேற்பு இருக்கும். நாட்டுக்கோழி மற்றும் அதன் முட்டைகளுக்கு எப்போதுமே கிராக்கிதான்.

77. வீட்டுக்கு அருகில் இடமிருந்தால்… நர்சரிகளில் விற்கும் செடிகளை வாங்கிவந்து விற்கலாம். அருகில் உள்ள தோட்டக்கலை மற்றும் வனத்துறையில் மிகக் குறைந்த விலைக்கு நாற்றுகள் கிடைக்கும். உங்கள் ஏரியாவில் நன்றாக வளரக்கூடிய செடிகளை விற்பதால் அதிக லாபம். செடிகளுக்கு போடக்கூடிய ஆர்கானிக் உரம், காய்கறி மற்றும் பூச்செடி விதைகள்கூட விற்கலாம். இதற்காக, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், மாநில தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்துறை போன்றவற்றை அணுகலாம்.

78. வண்ண மீன் வளர்ப்பு என்பது நகர்ப்புறங்களில் பரபரப்பான விஷயமாக இருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை கொளத்தூர் பகுதியில் வண்ண மீன் வளர்ப்புத் தொழில் பெரியளவில் நடைபெறுகிறது. இங்கு மொத்தமாக வாங்கி, சில்லறையாக விற்கலாம். தொட்டிகள் உட்பட மீன் வளர்ப்புக்குத் தேவையான பொருட்களையும் விற்கலாம்.

79. காளான் வளர்ப்பு பெரிய பிசினஸாக வளர்ந்து வருகிறது. வீட்டில் இருக்கும் சிறிய இடத்திலேயே பயிர் செய்து, அக்கம் பக்கத்து வீடுகளுக்கு ரெகுலராக சப்ளை செய்தாலே… மாதாந்திர செலவுக்கு கைகொடுக்கும்.

80. கீரையைக் கிள்ளுவதுதான் பெரிய பிரச்னையாக இருக்கிறது. அதனால், கீரையை வாங்கி சுத்தப்படுத்தி, அதைக் கிள்ளி பாக்கெட் போட்டுக் கொடுத்தால் பக்காவாக காசு பார்க்கலாம்.

பிசினஸைப் பதிவு செய்வது எப்படி?

81. பெயரில்லாத பிள்ளையை எப்படி அழைக்க முடியும்? எனவே, நீங்கள் தயாரிக்கும் பொருளுக்கு முதலில் தகுந்த பெயரை வைத்து விடுங்கள். அந்தப் பெயர் என்ன டிசைனில் வரவேண்டும் என்பதை தீர்மானித்த பிறகு, முறைப்படி பதிவு செய்யுங்கள். பதிவு செய்ய 3,500 ரூபாய் செலவாகும். விஷயம் தெரியாமல் ஏமாற்றுக்கார புரோக்கர்களிடம் சிக்கினால், குறைந்தது பத்தாயிரம் ரூபாய் காலி.

82. ‘இந்தியன் கம்பெனீஸ் ஆக்ட்’படி உங்கள் கம்பெனிக்கான பின் நம்பரை வாங்க
வேண்டும். இதற்காக நீங்கள் அணுகவேண்டியது ‘ரிஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனீஸ்’ அலுவலகத்தைதான். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் போகிறீர்கள் என்றால், அதே அலுவலகத்தில் ஐ.இ. (இன்டர்நேஷனல் எக்ஸ்போர்ட்) கோட் நம்பர் வாங்க வேண்டும். இது இருந்தால்தான் ஏற்றுமதி செய்ய முடியும்.

83. www.ipindia.nic.in இந்த இணையதள முகவரி, உங்கள் பொருட்களுக்கான டிரேட்மார்க் பெறுவற்கான அப்ளிகேஷன் பதிவது முதல், சர்வதேச அளவில் விற்பனை செய்வதற்கான இன்டர்நேஷனல் பின்கோடு வாங்குவது வரை அத்தனை வசதிகளையும் அளிக்கிறது.

84. ஃபேஷன் ஜுவல்லரி, தங்க நகைகள், டயமண்ட், ஆர்டிஃபீஷியல் ஜுவல்லரி உற்பத்தி செய்கிறீர்கள் என்றால் இந்திய அரசின் ஜெம் அண்ட் ஜுவல்லரி எக்ஸ்போர்ட்ஸ் புரமோஷன் கவுன்சிலில் உங்கள் பொருட்களின் பெயர்களைப் பதிந்து கொள்ளுங்கள். அவர்கள் வெளியிடும் புத்தகத்தில் உங்கள் பொருட்கள் பற்றிய தகவலும் இடம்பெறும். வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் நகை வாங்க வேண்டும் என்றால், இந்தக் கவுன்சிலைத்தான் அதிகம் தொடர்பு கொள்வார்கள். அந்த நிறுவனம் உங்கள் பெயர்களை பரிந்துரைக்க நிறையவே வாய்ப்பு இருக்கிறது. இதில் பதிவு செய்வதற்கு குறிப் பிட்ட தொகையைக் கட்டணமாகச் செலுத்தவேண்டும். இணையதளம்: www.gjepc.org

உஷார்… உஷார்!

85. பக்கத்து வீட்டுக்காரர் சம்பாதிக்கிறார் என்பதற்காக அதேபோன்ற தொழிலில் நீங்களும் இறங்க வேண்டாம். உங்களுக்கு என்று ஒரு தனித்துவத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

86. உங்கள் பார்டனராக நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர் வெறும் வாய்ச்சொல் வீரராக மட்டுமல்லாமல், பிசினஸில் முதலீடு போடுபவராகவும் இருக்கவேண்டும்.

87. சிறு தவறுகூட பெரிய நஷ்டத்தில் கொண்டு விடும். ஒரு தவறு நடந்துவிட்டால் உடனே சரி செய்ய முயற்சியுங்கள்.

88.உங்கள் பொருளுக்கு பெரிய ஆர்டர் கிடைத்திருக்கிறது என்றால், உடனடியாக சம்பந்தப்பட்ட விவரங்களை சரி பார்த்து, கணக்குப் போட்டு சூட்டோடு சூடாக களம்இறங்குங்கள். கொஞ்சம் தாமதித்தாலும் வேறொருவர் கைக்கு ஆர்டர் கைமாறிவிடவும் வாய்ப்பு உண்டு.

89. நேரடியாக சென்று பொருட்களை விற்கும் தொழிலில் இறங்குகிறீர்களா… ஜாக்கிரதை. குறிப்பாக அதிக கூட்டமற்ற இடங்கள் மற்றும் இரவு, மதியம் போன்ற நேரங்களைத் தவிர்க்க வேண்டும்.

90. ‘முன்பணம் அனுப்புங்கள்’ என்று வரும் விளம்பரங்களில் 100% எச்சரிக்கை தேவை. நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு பைசாவுக்கும் ஆவணங்களை உருவாக்குவது முக்கியம்.

91. பொருட்களில் கண்டிப்பாக தரம் வேண்டும். 100 பொருட்களை நன்றாக செய்து, 101-வது பொருள் தரமில்லாததாக இருந்தால் உங்களது பெயர் கெட்டுவிடும்.

92. பொருட்கள் எவ்வளவு முக்கியமோ… அதே அளவு அதனை ‘பேக்’ செய்து கொடுக்கும் விதமும் அவசியம். பொருட்களை அழகாக பேக் செய்து கொடுப்பதை மறந்தால் வாய்ப்புகள் மங்கிவிடும்.

93. ஏற்றுமதி தொழில் என்றால், எதிர்த்தரப்பு நம்பகமானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவது அதி முக்கியம். ஏனெனில், பல சந்தர்ப்பங்களில் பொருள் டெலிவரியான பிறகு, பணம் செட்டில் ஆகாமல் ஏமாற வாய்ப்புள்ளது.

94. நீங்கள் உற்பத்தி செய்யும் பொருளின் சந்தை வாய்ப்புகளை அவ்வப்போது கண்காணித்துக் கொண்டே இருக்கவேண்டும். கண்மூடித்தனமாக உற்பத்தி செய்துவிட்டு, கடைசியில் மார்க்கெட்டிங் இல்லாமல் திண்டாடக்கூடாது.

95. ஒரு தொழிலைப் பார்ட்னராக தொடங்கியிருந்தால்… தொழிலாளர் பொதுச் சேமநல நிதித் (பி.பி.எஃப்.) திட்டத்தில் உடனடியாக ஐக்கியமாவது முக்கியம். தொழில் முனைவோரின் நீண்டகால சேமிப்புக்கும், ஓய்வுகால வாழ்க்கைக்கும் மிகவும் அவசியமானது இந்தத் திட்டம்.

இன்முகமே லாபம் தரும்!

96. பல சந்தர்ப்பங்களில் பேச்சை விட, சிரித்த முகங்களே வெற்றியை தானே வரவழைக்கும். அதனால் எந்த சந்தர்ப்பத்தையும் ஒரு புன்னகையோடு சமாளிக்கும் பாங்கு, எளிதில் யாரோடும் பேசிப் பழகும் தன்மை… இதெல்லாம் உங்களுக்கு முக்கியம்.

97. தனியார் அலுவலகங்களில் ‘பப்ளிக் ரிலேஷன் ஆபீஸர்’ என்ற பணிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. இதற்கான குறுகியகால சான்றிதழ் பயிற்சிகள், தனியார் இன்ஸ்டிடியூட்களில் உள்ளன. ஆரம்பத்தில் சிறிய நிறுவனங்களில் சேர்ந்து, படிப்படியாக மிகப்பெரிய நிறுவனங்களில்கூட வேலையில் அமரும் சாத்தியங்கள் உண்டு!

98. கவுன்சிலிங் வழங்குவது ஒரு நல்ல பணி. குறிப்பாக, அளவுக்கு அதிகமாக மன அழுத்தம் பாதிக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. உளவியல் படித்த இளம் பெண்களுக்கு இது ஒரு அருமையான வேலை. மனநல மருத்துவர், தொண்டு நிறுவனத்தினர் போன்றோரின் தொடர்புகள் மற்றும் தனிப்பட்ட முறையிலும் கவுன்சிலிங் வழங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறலாம். ஆன்லைன் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும்கூட கவுன்சிலிங் கொடுக்க முடியும். பணத்தை வங்கியிலோ… செக் அல்லது மணியார்டர் மூலமாகவோ வாங்கிக் கொள்ளலாம்.

99. நிகழ்ச்சி மேலாண்மை (event management) இன்னுமொரு சுவாரசிய துறை. ஒரே நேரத்தில் பல வேலைகளை ஒருங்கிணைக்கும் திறன், ஒரு நிகழ்ச்சிக்குத் தேவையான அத்தனையையும் யோசித்து அவற்றைத் தயார் செய்வது போன்ற திறன்களை நம் பெண்கள் தனியே கற்க வேண்டுமா என்ன! நம் வீடுகளில் கல்யாணம், பண்டிகை என்றால் அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்பவர்களாயிற்றே நாம். நிகழ்ச்சி மேலாண்மையின் முறைமைகளை மட்டும் கொஞ்சம் பழக்கப்படுத்திக் கொண்டால் போதும், ஒவ்வொரு வேலை நாளும் திருவிழாதான்! இத்தொழிலில் ஈடுபடுவோரிடம் முதலில் உதவியாளராக சேர்ந்து பயிற்சி பெறலாம். அல்லது சின்னச் சின்ன கல்லூரி நிகழ்ச்சிகள், போட்டிகள் என பழகிக் கொண்டு, சிறிய மற்றும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை அணுகி வாய்ப்பு தேடுங்கள்.

பயிற்சி

100. இந்திய அரசின் ‘மைக்ரோ ஸ்மால் அண்ட் மீடியம் என்டர்பிரைசஸ்’ டெவலப்மென்ட் நிறுவனம் (MSME Development Institute) பெண்களுக்காக இலவசமாக ஒன்றரை மாத பயிற்சியை அவ்வப்போது நடத்தும். இதில், வாஷிங் பவுடர், சோப், பினாயில் போன்ற கெமிக்கல் பொருட்கள் மற்றும் ஊறுகாய், ஜூஸ், ஜாம், மசாலாத்தூள் போன்ற உணவு சார்ந்த பொருட்களைத் தயாரிக்க பயிற்சி அளிப்பார்கள். இதைத் தொடர்ந்து சான்றிதழ் வழங்குவதோடு தொழில் தொடங்க வழிகாட்டுவார்கள். மார்க்கெட்டிங்குக்கு தனியாக பயிற்சி வகுப்புகளும் உண்டு.