Thursday, September 10, 2015

அடுத்த பில்கேட்ஸ் நீங்களா??? - உங்களின் உழைப்பு உங்களுக்குத்தராது களைப்பு!

அடுத்த பில்கேட்ஸ் நீங்களா???

உங்களிடம் நம்பிக்கை, விடாமுயற்சி,  கடின உழைப்பு மற்றும் புதிய சிந்தனைகள் போன்றவை காணப்படுமாயின் நீங்கள்தான் அடுத்த பில்கேட்ஸ் என்று உங்களிடம் பொய் சொல்லி நான் உங்களை உசுப்பியெல்லாம் விட மாட்டேன்.

உலகிலுள்ள ஏராளமானவர்களிடத்தில் நான் மேற்கூறிய பண்புகள் காணப்படுகின்றன என்பதும் அதற்கான காரணமாகும். 

ஆம், தற்போது இவ்உலகில் உள்ள அனைவரும் கடினமாக உழைக்கத் தயார் நிலையிலேயே இருக்கின்றனர். அதேபோல் புதிய மாறுபட்ட சிந்தனைகளை உடையவர்களாகவும் காணப்படுகின்றார்கள். 

ஆனால் பிரச்சினை என்னவென்று ஆராய்ந்தால்,

பெரும்பாலானவர்களிடத்தில் பெரிய கனவுகளோ, அதனை செயற்படுத்துவதற்குரிய போதுமான நீண்ட காலத் திட்டமிடல்களோ இல்லை என்பதுதான் விடயமாகும்.

குறுகிய கால சிறிய இலக்குகளை நோக்கி குறிவைத்திருக்கும் இவர்கள் பெரிய இலக்குகளை நோக்கிய கனவுகள் விடயத்தில் கஞ்சத்தனம் காட்டுகிறார்கள் என்பதுதான் இவர்களின் பில்கேட்ஸ் கனவுகளுக்கு முதல் தடையாக அமைந்து விடுகின்றது.

கிழக்காசிய நாடுகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமான இன்றைய இளைஞர்கள் ஏதோ ஒரு பட்டப் படிப்பை நிறைவு செய்து அதனுடன் தொடர்பானதொரு துறையில் ஏதோ ஒரு நிறுவனத்தில் இணைந்து கைநிறைய சம்பாதிப்பதனையே அவர்களது வாழ்நாள் இலட்சியமாக வைத்திருக்கிறார்கள் என்பதுதான் சத்தியமான உண்மையாகும். 

அதிலும் குறிப்பாக தொழிநுட்பத் துறையை தெரிவு செய்து ஏதோ ஒரு அளவுக்கு வருமானம் கிடைத்தவுடன் வீட்டில் பார்க்கும் ஒருவரை திருமணம் செய்து ஐயம் செட்டில்ட் டவுன் என்று கூறிக்கொண்டும் திறிகிறார்களாம்...

இதை தவரென்றோ அல்லது இவர்கள் இலட்சியமற்றவர்கள் என்றோ யாராலும் குறை கூற முடியாது.

ஆனால், இவர்கலெல்லாம் அடுத்த பில்கேட்ஸ் அளவுக்கு யோசிப்பார்களேயானால் அதுதான் அவர்களின் வாழ்நாள் முட்டாள் தனம் என்று என்னால் கூற முடியும்.

“உங்களின் இலக்குகளைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்க வில்லையெனின் உங்களது இலக்குகள் மிகவும் சிறியவை ”  -அசிம் பிரேம்ஜி

உங்களின் பெரிய கனவுகள் தான் உங்களின் நீண்ட கால வெற்றிக்கு ஒரு ஊன்றுகோலாகும். 

யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு உங்களின் கனவுகளையும் இலக்குகளையும் தீர்மானியுங்கள். 

அதனை ஒவ்வொரு நாளும் நினைவுபடுத்துங்கள். உங்களுக்கென்றே ஒரு கற்பனை சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். 

நீங்கள்தான் அந்த சாம்ராஜ்யத்தின் பில்கேட்ஸ்.

உங்களின் கனவுகளுக்கு சக்தி கொடுங்கள் அதனை எவ்வாறு அடையலாம் என்று திட்டமிடுங்கள். வியூகங்களை வகுத்துக் கொள்ளுங்கள்.

நிச்சயமாக நீங்கள் ஒரு நாள் உங்களின் கனவுகளுக்கு உயிர் கொடுப்பீர்கள் என்று உங்களை நம்புங்கள். அதற்கான தயார் படுத்தல்களை ஆரம்பியுங்கள். 

இவை போதும் உங்களின் பெரிய கனவுகளை நிஜமாக்குவதற்கு. 

ஒருபோதும் ஒரே இரவில் வெற்றிவாகையெல்லாம் சூட முடியாது. அதாவது ஓவர் நைட் சக்ஸஸ் (Overnight Success) எல்லாம் ரஜினிகாந்தின் திரைப்படங்களிலேயே சாத்தியமாகும்.

மாறாக, முறையான நீண்டகாலத் திட்டமிடல்கள், நம்பிக்கையான உழைப்பு, அதன் மீது மட்டில்லா ஈர்ப்பு (அல்லது அதன் மீது ஒரு வெறி) போன்றவற்றை ஒருமைப்படுத்திய யாருடைய தலையீடுமற்ற செயற்பட்டாடுகள் அவசியம்.

இதற்கு நீங்கள் தயார் எனின்,

நிச்சயமாக அடுத்த பில்கேட்ஸ் நீங்கள்தான்.

ஒரு வேளை அது நானாகக் கூட இருக்கலாம்!!!!

--பாஸ் முதல்ல உங்கள நம்புங்க, அப்புறமா அடுத்தவன நம்பலாம்--

உங்களின் உழைப்பு உங்களுக்குத்தராது களைப்பு!

அலுவலகம், வீடு என, பம்பரமாய் சுற்றும் மக்கள், வாரத்தின் இறுதி நாளுக்காக ஏங்குவது வழக்கம். மன நிம்மதிக்காக, எங்கேயாவது செல்லலாம் என நினைப்பதற்குள், விடுமுறை நாள் ஓடிவிடும். மன இறுக்கத்தோடு, தினசரி பொழுதை கழிப்பது பெரும் வேதனை.

இதை தவிர்க்க, சிரமமின்றி விருப்புடன் உங்கள் பணிகளை செய்ய சில குறிப்புகள்.

சத்தான உணவை சாப்பிடுங்கள்: 

சத்தான, இயற்கையான உணவு வகைகளைச் சாப்பிடும்போது, மூளை சுறுசுறுப்பாக இருக்கும். பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட, உணவுகளைச் சாப்பிடும்போது, உடல் ஒருவித மந்தநிலையை அடைகிறது. இதனால், நாம் செய்யும் செயல்களில், சோர்வடைந்து குறிப்பிட்ட நேரத்திற்குள், பணிகளை முடிக்க முடியாத நிலை ஏற்படலாம்.

நன்றாகத் தூங்குங்கள்:

நல்ல ஆழ்ந்த தூக்கம், எல்லாருக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால், களைப்புறும் உடல் உறுப்புகள், தூக்கத்தில் மட்டுமே புத்துணர்ச்சி அடைகின்றன. தூக்கம் தடைபடும் போது, உடல் நலக்குறைவு ஏற்படும். இளைஞர்களுக்கு, ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை தூக்கம் அவசியம்.

நடங்கள்... ஓடுங்கள்! 

தினமும், அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ, மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை, ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி, விரைந்து நடக்கலாம். இது உடல் இறுக்கத்தை, பெருமளவு தளர்த்தும்; மனம் உற்சாகம் பெறும். 

ஆரம்பத்தில், அதிகாலை எழுவதும், மெனக்கெட்டு செல்ல வேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்றால் பழகிவிடும். பின், 40 வயதுக்காரர் கூட, 20 வயது இளைஞனைப்போல், உற்சாகமாக வேலை செய்யலாம்.

ஓய்வெடுங்கள்: 

பணியிடையே, அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது, வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள். கடினமான, மிகக் கவனமான, வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம், மேம்போக்காக இருக்கும். அதனால், மூளைக்கு சரியான அளவு ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு, ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.

சிரியுங்கள்: 

மனம் விட்டு சிரியுங்கள். மனம் விட்டு என்பதற்கு, ஆழ்ந்த அர்த்தமுண்டு. சிரிக்கும்போது, மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக, முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும். வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி, பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது, வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எப்பொதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில், ஒருவித தேஜஸ் இருக்கும். அது மற்றவர்களை கவர்ந்திழுக்கும் வல்லமை கொண்டது. கூடுமானவரை அருகில் யாரும் உங்களை விசித்திரமாக பார்க்கமலிருக்கும் வரை மனம் விட்டு சிரிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இவற்றை தொடர்ந்து செய்து வந்தால், உங்கள் வேலைகளை செய்வது உங்களுக்கு விருப்பமான பொழுது போக்கு போல் மாறிடும்.!

உங்களின் உழைப்பு உங்களுக்குத்தராது களைப்பு!



No comments:

Post a Comment