எண்ணங்கள் ஆயிரம்...
நல்ல நண்பர்கள் கிடைக்க ரொம்பவும் கஷ்ட்டம். இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்...
நம்மை எந்த விதத்திலாவது தங்களின் சுய நலத்துக்கு உபயோகப்படுத்திக் கொள்ளவே பலர் நம்மோடு நட்பாக இருப்பார்கள். அதிலும் உறவுக்காரர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்... நம்மால் அவர்களுக்கு எவ்வளவு இலாபம் கிடைக்கும் என்பதிலேயே குறியாக இருப்பார்கள்.
நாக்கில் சுத்தம் என்பது இவர்களுக்கு கொஞ்சம் கூட இருக்கவே இருக்காது. சொல்லில் இனிமையும் செயலில் கொடுமையும் கொண்டு நம்முடன் நாடகமாடுபவர்களே அதிகம். நம் நன்மை மட்டுமே அவர்களின் மூச்சு என்பது போல முகத்துக்கு முன் நடந்துகொள்வர். கண்களிலிருந்து மறைந்திடும் அடுத்த நிமிடம், இலக்கனமரபின்றி வரும் அவர்களின் வார்த்தைகள்.
கண்களை மூடி சிந்தித்துப் பார்த்தால் இந்த உண்மை புரியும்.
எந்தவித பிரதிபலனும் இன்றி நம்மோடு பழகக் கூடியவர்கள் உறவினர்களிலும் நண்பர்களிலும் ஒரு சிலரே...
ஒன்றைச் செய்துவிட்டு பத்தை எதிர்ப்பார்ப்பது இதுபோன்றவர்களின் சாதுர்ய குணம். எனினும் இதை அடையாளம் கண்டு அவர்களை விட்டு அகன்றிடுவோரிடம் இந்த தந்திர குணம் பலிப்பதில்லை.
தனிமரம் தோப்பாகாது என்பதை அவர்கள் உணரவேண்டும்.
நேர்மையானவர்கள் அவர்கள் பக்கம் இருப்பதே பலம் என்று மனதில் படும்போது நல்லவர்களை தேடத்தொடங்குவார்களோ என்னவோ...
டூ லேட்டாக முடிவெடுக்காமல் இருந்தால் சரிதான்.
No comments:
Post a Comment