Saturday, October 17, 2015

என்றும் நம்புங்கள் உங்கள் வாழ்கையை

என்றும் நம்புங்கள் உங்கள் வாழ்கையை

எண்ணிய எல்லாம் எய்த வேண்டுமானால் மனத்தூய்மையோடு அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் இந்நான்குமில்லாமல் வாழப் பழக வேண்டும். இவ்வுலக உயிர்களின் மீது அன்பு கொண்டு, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ, எவ்வுயிர்க்கும் தீங்கு எவ்வித்திலும் நேராத நல்ல தேவைகளைக் குறித்து எண்ண வேண்டும்

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம்
தெளிந்த நல்லறிவு வேண்டும் – பாரதி

பொதுவாக மனிதர்கள் தங்களின் அபிலாஷைகள், ஆசைகள், தேவைகள், இலட்சியங்கள் குறித்து எண்ணுகிற போது இயல்பாகவே மனம் கணக்குப் போட்டுப் பார்க்கும். கணக்குப் போட்டுப் பார்த்துக் காரியம் எப்படியோ நடக்கும் என்று நம்புவதற்கும், நடவாது என்று முடிவெடுக்காமல், நடக்கும் எப்படியோ நடக்கும் என்று நம்புவதற்கும், எதிர்பார்ப்பதற்கும் ஒரு உபாயம் மனிதர்களுக்குத் தேவைப்படுகிறது. அந்த உபாயம் தான் “நம்பிக்கை”.மனித சமுதாயத்தில் எல்லா மனிதர்களும் மன முதிர்ச்சியும், சிந்தனை ஆற்றலும் உள்ளவர்கள் இல்லை. இருக்கவும் இயலாது.படித்தவர்கள் இருக்கலாம், படிக்காத பாமரர்கள் இருக்கலாம். பட்டறிவின் வழி சிந்திப்பவர்கள் இருக்கலாம். சிந்திக்கத்தெரியாத அல்லது சிந்திக்க மறுக்கிற சிந்தனைச் சோம்பேறிகள் இருக்கலாம்.“நம்பினவர்க்கு நடராஜன், நம்பாதவர்க்கு எமராஜன்” என்று ஒரு வழக்குச் சொல்லும் வாழ்க்கையில் வழங்கப்படுகிறது. நம்பிக்கை நலம் கூட்டுவதால் நடராஜனைப் போல வெள்ளியம்பதியில் ஆனந்தக் கூத்தாட முடியும். நம்பிக்கையற்றவர்கள் தோல்வியுற்று எமராஜனின் காரிருள் நரகத்தில் இடர்ப்பட நேரிடுகிறது.
நம்பிக்கையின் மீது அவநம்பிக்கையும் அவநம்பிக்கையின் மீது நம்பிக்கையும் வைக்கும் அவலத்தை நீக்குவோம். நம்பிக்கையின் மீது நம்பிக்கை வைப்போம்.

என்றும் நம்புங்கள் உங்கள் வாழ்கையை

No comments:

Post a Comment