Saturday, July 27, 2013

விவேகானந்தர் பொன்மொழிகள்

1. எந்த வேலையையும் தனது விருப்பத்துக்கு ஏற்றவாறு மாற்றுபவன் அறிவாளி.

2. மலை போன்ற சகிப்புத்தன்மை, இடைவிடாத முயற்சி, எல்லையற்ற நம்பிக்கை இவைதாம் நற்காரியத்தில் வெற்றி தரும்.

3. உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக்கூடாது.

4. நீங்கள் மகத்தான பணியைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை வையுங்கள்.

5. மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நீங்கள் உங்களது சொந்த, உறுதியான முடிவில் பிடிப்புடன் இருங்கள்.

 6. நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல்லுங்கள். நீங்கள் உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றதாகிவிடும்.

7. நீ உன் குறிக்கோளில் வெற்றியடைய வேண்டுமானால் அதைப் பற்றிய எண்ணம் உன் உடல் முழுவதும் பரவி இருக்க வேண்டும்.

8. உங்களுக்குத் தேவையான எல்லா வலிமைகளும் உங்களுக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன என நம்புங்கள்.

 9. நமது நெற்றியில் சுருக்கங்கள் விழட்டும்; ஆனால் இதயத்தில் சுருக்கம் விழவேண்டாம். ஏனெனில் இதயம் கிழடு தட்டக்கூடாது.

10. மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவனாகிறானோ அந்த அளவுக்குத் தக்கபடி அவன் கடுமையான சோதனைகளைக் கடந்து செல்லவேண்டும்.

அப்துல் கலாமின் 10 தன்னம்பிக்கை வரிகள்

1. முடியாது என்ற நோய்

" கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடியாது என்று காந்தியடிகளும், சுதந்திர போராட்ட வீரர்களும் நினைத் திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத் திருக்காது. சி.சுப்பிரமணியமும், எம். எஸ். சுவாமிநாதனும் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து இருக்காது. வர்கீஸ் கொரியன் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா வெண்மை புரட்சியில் வெற்றி அடைந்து இருக்காது. விக்ரம் சாராபாய் முடியாது என்று நினைத்திருந்தால் இன்று செயற்கைக்கோளை இந்தியா ஏவியிருக்க முடியாது. 

முடியாது என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. முடியும் என்று நம்பும் மனிதனால்தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது. எனவே நண்பர்களே, முடியும் என்ற நம்பிக்கை கொண்ட 54 கோடி இளைஞர்கள்தான், இந்திய நதிகளை இணைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்ட இளைஞர்கள்தான் அனுபவத் தின் துணை கொண்டு வெற்றியை காண வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும்... "முடியும்' என்ற நம்பிக்கை முதலில் ஓவ்வொரு இந்தியனுக்கும் வேண்டும் ".

2மனித நாகரிகம் வளர்ந் ததற்குக் காரணமாக நான் நினைப்பதே வீரத்தினால்தான். மனிதன் எடுத்து வைத்த ஒவ்வொரு காலடிக்கும் வீரம் தேவைப்பட்டது என்பதுதான் வரலாறு. தன்னுடைய பிரதேசத்தைக் காத்துக் கொள்ள வீரம் தேவைப்பட்டது. புதிய வாசல்களைத் திறக்க, புதிய இடங் களைத் தேடிச்செல்ல வீரம் தேவைப் பட்டது. பழமையை மீறவும் புதியவற்றைக் கண்டுபிடித்து புதுமைகள் செய்யவும் வீரம் தேவைப்பட்டது. சகமனிதனின் கண்ணீரைத் துடைத்து புரட்சிகளை உருவாக்க வீரம் தேவைப்பட்டது. மனிதநேயம் என்கிற பேனாவில் வீரம் என்னும் மையினால் எழுதப்பட்டது தான் நீண்ட நெடிய மனிதனின் வரலாறு என்பது என் எண்ணம்.

3 உறுதியும், நம்பிக்கையும் தலைமைப்பண்பும் கொண்ட நம்முடைய இளம் ஆண்களும் பெண்களும் ராணுவப்படை களில் ஆர்வமுடன் சேர முன்வர வேண்டும் என்பது என் ஆசை. இன்றைய வேகமான அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக ராணுவத்தின் எத்தனையோ சவாலான, சுவாரஸ்யமான வேலைகள் உருவாகி வருகின்றன. இளைஞர்களுக்கு அவை பெரும் சாகசங்களாகத் திகழும்.

4 சிந்தனை செய்.

இந்தியாவுக்கு நாம் என்ன செய்யலாம் என்று சிந்தனை செய்.
இந்தியாவை மேம்படுத்த வேண்டியவற்றைச் சிந்தனை செய்,
அமெரிக்கா, மற்ற மேலை நாடுகள் அடைந்துள்ள
மேன்மைப்பாடுகளை நாமும் பெற வேண்டுமானால்!

“புலப்படாத எதிர்காலத்துக்கு மட்டும் ஒருவர் வாழ்ந்து வருவது ஆழமற்ற மேலொட்டிய செயலாகும்.”

5  ”என்னால் மாற்ற முடியாதவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன்.   வாழ்க்கையில் உன்னை வரவேற்கும் சக்திகளும், அறவே எதிர்க்கும் சக்திகளும் இருக்கத்தான் செய்யும்.  பலனளிக்கும் ஆற்றல்கள், பயனற்ற ஆற்றல்களின் வேறுபாடுகளைத் தெளிவாகத் தெரிந்து, அவற்றுக்கு இடைப்பட்ட முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.”

6 “கனவு காண், கனவு காண், கனவு காண்,  பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு.  சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும்.  நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி.  ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும்.  அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.

7 “முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை!  ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம்!  தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்!”

8 இமயத்தின் உச்சியை எட்டித் தொடுவதாயினும் சரி அல்லது உன் வாழ்க்கைப் பணியின் உச்சத்தை அடைவதாயினும் சரி, மேலே ஏறிச் செல்ல ஒருவருக்கு மிக்க மனவுறுதி தேவைப்படுகிறது.”

9 மாணவப் பருவத்தில் பல்வேறு தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்தத் தேர்வு முடிவுகள் எதிர்பார்த்தவாறு அமையாவிட்டால், அதற்காக மாணவர்கள் மனம் சோர்ந்துவிட வேண்டியதில்லை. தேர்வு முடிவுகள்தான் வாழ்க்கையில் இறுதியானது எனக் கருத வேண்டாம்.கடவுள் நம்முடன் இருப்பாரானால், ஒருவரும் உங்களுக்கு எதிராகச் செயல்பட முடியாது. எனவே, தொடர்ந்து முயற்சி செய்தால், நிச்சயம் வெற்றி கிட்டும். தாற்காலிகமாக ஏற்படும் பின்னடைவுக்காக மனம் சோர்ந்து போய்விட வேண்டாம்.

10 வெற்றி எப்பொழுதுமே மகிழ்ச்சியைத் தரும். ஆனால், பல காரணங்களால் சில சமயம் தேர்வில் நாம் பின்னடைவைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதையும் நாம் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்.வாழ்க்கையில் நாம் சில எதிர்பாராத பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும் பிரச்னைகள் நம்மை மேலாதிக்கம் செய்ய அனுமதிக்கக் கூடாது.​ நாம்தான் பிரச்னைகளை மேலாதிக்கம் செய்ய வேண்டும்.​ பிரச்னைகளை தோல்வியுறச் செய்து, வெற்றி காண வேண்டும்

நீ நட்சத்திரமாக ஜொலிக்க விரும்பினால்
நீ யார் என்பது முக்கியமல்ல;
உனது மனது எதை விரும்புகிறதோ,​​
அது நிச்சயம் உன்னை வந்து சேரும்.”

எதிர்பாராத பிரச்னைகளை எதிர்கொண்டு அதில் வெற்றி பெறுவதுதான் இளைஞர்களின் தனித்தன்மையாகும்.

எத்தனை அதிர்ஷ்டக்காரர் நீங்கள்?

”நல்லதே பார், நல்லதே நினை, எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்” என்று நம்பியது மட்டுமல்லாமல் அனைவருக்கும் அதை உபதேசிப்பவர் அந்த அறிஞர். இறைவன் தந்திருக்கும் நன்மைகளை சிந்திக்கவும், அவற்றிற்காக நன்றியுடன் இருக்கவும் தன் பிரசாரங்களில் கூறுவார் அவர். இருப்பவற்றிற்காக நன்றியுடன் இருந்தால் மட்டுமே மேலும் நன்மைகள் நம்மிடம் வந்து சேரும் என்று அவர் உறுதியாகச் சொல்வார்.

“ஒரு வெள்ளைத் தாளை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் நடுவே ஒரு கோடு வரையுங்கள். வலது புறம் பெரிதாய் + குறியிட்டு உங்களுக்கு கிடைத்திருக்கும் நல்ல விஷயங்களை எழுதுங்கள். இடது புறம் – குறியிட்டு உங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளையும், தீமைகளையும் எழுதுங்கள். உண்மையாக ஆழமாக சிந்திப்பீர்களானால் கண்டிப்பாக வலது புறம் உள்ள பட்டியல் தான் நீண்டு இருக்கும். நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டக்காரர் என்பதை அப்போது தான் உங்களால் உணர முடியும்” என்று ஒரு சொற்பொழிவில் அவர் சொன்னதுடன் அனைவருக்கும் ஒரு வெள்ளைத் தாளைத் தந்து அப்போதே அப்படி எழுதிப் பார்க்கச் சொன்னார்.

அப்படி எழுதியவர்களில் பெரும்பாலானோருக்கு – குறியில் தான் எழுத நிறைய இருந்தது. ஒருசிலர் மட்டுமே + குறியில் நிறைய எழுதி இருந்தார்கள். அவர்களிடம் இப்போது இருக்கும் வாழ்க்கைக்கு இறைவனிடம் நன்றி சொல்லி விட்டுக் கிளம்பச் சொன்னார்.

மீதமுள்ளவர்களில் + குறியில் மிகக் குறைவாக எழுதியவர்களில் ஒருவரைத் தன்னிடம் வரச் சொன்னார். முத்து என்பவர் – குறியில் பெரிய பட்டியல் இட்டிருந்தார். ஆனால் + குறியில் எழுத ஒன்றுமே இல்லை என்று எதுவுமே எழுதாமல் இருந்ததால் அவரே அந்த அறிஞரிடம் போகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

அறிஞர் முத்துவிடம் இருந்து அந்தத் தாளை வாங்கிப் பார்த்தார். – குறியில் நுணுக்கி நுணுக்கி நிறைய எழுதி இருந்தார்.

அறிஞர் பேனாவை எடுத்துக் கொண்டு முத்துவிடம் கேட்டார். “உங்கள் மனைவி உங்களைப் பிரிந்து எவ்வளவு காலம் ஆகிறது?”

முத்துவிற்குக் கோபம் வந்து விட்டது. “என் மனைவி என்னை விட்டுப் பிரிந்து விட்டதாக யார் சொன்னது?  என்னுடன் தான் இருக்கிறாள். நாங்கள் அன்பாகத் தான் இருக்கிறோம்’

அறிஞர் + பகுதியில் கொட்டை எழுத்தில் எழுதினார். “அன்பான மனைவி உடன் இருக்கிறாள்”

பின் முத்துவிடம் கேட்டார். “உங்கள் குழந்தைகள் எந்த ஜெயிலில் இருக்கிறார்கள்?”

அறிஞராக இருந்து கொண்டு இப்படி ஏடாகூடமாகக் கேட்கிறாரே என்று கோபத்துடன் நினைத்த முத்து சொன்னார். ”என் பிள்ளைகள் நல்லவர்கள். ஜெயிலுக்குப் போகிற அளவில் மோசமாய் இல்லை”

அறிஞர் + பகுதியில் அடுத்ததாக எழுதினார். “நல்ல பிள்ளைகள் இருக்கிறார்கள்”

பின் அறிஞர் கேட்டார். “உங்கள் வியாதிக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதா?”

முத்து பொறுமையை இழந்தார். “மருந்து கண்டுபிடிக்காத வியாதி எல்லாம் எனக்கு இல்லை..”

அறிஞர் + பகுதியில் எழுதினார். “கொடிய வியாதி இல்லை”

இப்படியே முத்து சிறிதும் எதிர்பார்த்திருக்காத கேள்விகள் சிலவற்றைக் கேட்டு + பகுதியில் எழுதிக் கொண்டு போன அறிஞர் ஒரு கட்டத்தில் நிறுத்தி விட்டுச் சொன்னார். “இவை எல்லாம் சாதாரண நன்மைகள் அல்ல. இவற்றில் ஒன்று இல்லா விட்டாலும் நரக வாழ்க்கை அனுபவிக்க நேர்வது நிச்சயம். அப்படிப்பட்ட நல்ல விஷயங்கள் எல்லாம் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்குத் தெரியாமலேயே இன்னும் நிறைய இருக்கின்றன. இத்தனைக்கும் சாதாரண நல்ல விஷயங்களுக்கு நான் இன்னும் போகவில்லை. அதெல்லாமும் கூட எழுத ஆரம்பித்தால் உங்களுக்கு + பகுதியில் எழுத இன்னும் பல பக்கங்கள் தேவைப்படும்....”

முத்து அங்கிருந்து போன போது புதிய மனிதராகப் போனார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த மற்றவர்கள் + பட்டியலும் அதிகரித்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

முத்துவைப் போலத் தான் பலரும் இருக்கிறோம். எத்தனையோ நன்மைகள் நம்மிடம் இருந்தாலும், நமக்கு நடந்திருந்தாலும் அவற்றை அங்கீகரிக்கக் கூட மறந்து விடுகிறோம். அதில் ஒன்றில் குறைபாடு சிறிது வந்தால் மட்டும் அந்தக் குறைபாட்டை வைத்துத் தான் அதைக் கவனிக்கிறோம். அது அப்போது மட்டுமே பெரிய விஷயமாகி விடுகிறது. இந்தக் குணம் தான் நம்முடைய சந்தோஷமின்மைக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.


அடுத்தவரிடம் இருந்து, நம்மிடம் இல்லாத நன்மைகளைக் கவனித்து வருத்தப்படும் அளவுக்கு நாம் அடுத்தவரிடம் இல்லாத, நம்மிடம் இருக்கும் நன்மைகளைக் கவனிக்க முடிந்தால், நாம் எத்தனை பெரிய அதிர்ஷ்டசாலிகள் என்பதைக் கண்டிப்பாக உணர்வோம். உலகில் இருக்கின்ற பிரச்சினைகள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாகக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அவற்றில் எத்தனை சிறிய சதவீதம் மட்டும் தான் நமக்கு உள்ளது என்பதும் நமக்குப் புரியும்.

-          பட்டியல் அனைவரின் வாழ்க்கையிலும் இருக்கவே இருக்கிறது. அப்படி இல்லாத ஒருவர் இந்த பூமியில் இது வரை பிறந்ததில்லை. இனியும் பிறக்கப் போவதில்லை. எனவே அதற்கு விதிவிலக்காகும் ஆசை யாருக்கும் வேண்டியதில்லை. + பட்டியலை அறிந்திராமல் வாழ்க்கையில் எதுவுமே சரியில்லை என்ற கற்பனை அபிப்பிராயம் இல்லாமல் இருந்தால் போதுமானது.

இருக்கின்ற நன்மைகளைப் பார்க்கின்ற மனநிலை இல்லாததால் முத்துவின் அதிர்ஷ்டத்தை சுட்டிக் காட்ட அந்த அறிஞர் சில ஏடாகூடமான கேள்விகள் கேட்க வேண்டி வந்தது. நம் வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுநிலையோடு பார்க்க முடிந்தால் அடுத்தவர் உதவி இல்லாமலேயே நம்மிடம் உள்ள நன்மைகளை நன்றியுடன் நம்மால் உணர முடியும்.

சரி, நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?

போதிதர்மரும் போதனைகளும்

போதிதர்மர் என்ற பெயர் சமீபத்திய “ஏழாம் அறிவு” திரைப்படம் மூலம் பிரபலமான போதும், அதற்கு முன்பு வரை அவர் பெயரைச் சொன்னால் பெரும்பாலானோருக்கு நினைவுக்கு வருவது அவர் குங்ஃபூ தற்காப்புக் கலையின் பிதாமகர் என்பதும் ஜென் பௌத்தத்தின் சிருஷ்டிகர்த்தா என்பதும் தான்.  ஒரு தமிழன், காஞ்சிபுரத்து அரசகுமாரன், சீன தேசத்திற்குச் சென்று பௌத்த மதத்தின் ஆன்மாவையே உலகிற்கு அறிமுகப்படுத்தி வரலாற்றில் இடம் பெற்று இருப்பது நமக்கெல்லாம் ஒரு பெருமையே. அவரைப் பற்றியும் அவரது போதனைகளைப் பற்றியும் சிறிது பார்ப்போம்.

புத்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு புத்தமதத்தைத் தழுவிய போதிதர்மர் தன் குருவின் ஆணையை ஏற்று பௌத்தத்தை பரப்புவதற்கு கி.பி.520-ல் சீனா சென்றார். இந்தியாவிலிருந்து ஒரு மகாஞானி வருகிறார் என்பதையும், அவர்  பௌத்த மதத்தின் 28-வது தலைமைக்குரு என்பதையும் கேள்விப்பட்டிருந்த நான்ஜிங் பிரதேச மன்னர் லியாங் வூ-டி அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளித்தார். அப்போது மன்னர் போதிதர்மரிடம் கேட்ட கேள்வியும் அதற்கு போதிதர்மர் சொன்ன பதிலும் அவர் போதனைகளின் முக்கிய அம்சம் என்று சொல்லலாம்.

மன்னர் லியாங் வூ-டி சீனாவில் நிறைய புத்த மடாலயங்களைக் கட்டியிருந்தார், அதில் பல்லாயிரம் பிட்சுக்களுக்கு போஷகம் அளித்து வந்தார். எனவே அவர் தன் பௌத்தத் தொண்டினைச் சுட்டிக்காட்டி போதிதர்மரிடம் கேட்டார், “மகாஞானியே! என்னுடைய இந்த தர்ம காரியங்களுக்காக சொர்க்கத்தில் நான் பெறப்போகும் சன்மானம் என்ன?” இதைக் கேட்டதும் போதிதர்மர் மிக அமைதியாகச் சொன்னார். “உங்களின் காரியங்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை. நீங்கள் நேராக நரகத்தில்தான் விழுவீர்கள்.” இந்த பதிலைக் கேட்ட மன்னருக்கு எப்படி இருந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

துறவிக்கு வேந்தன் துரும்பு என்கிற விதத்தில் போதிதர்மர் முகஸ்துதி செய்யாமல் அப்படிச் சொல்லக் காரணம்  அந்த மன்னர் புகழுக்காகத் தான் அந்த தர்ம காரியங்களை எல்லாம் செய்து இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டது தான். சுயநல எண்ணத்துடனும் புகழுக்காகவும் நிறைவேற்றப்படும் தர்ம காரியங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதை அவர் அப்படிச் சுட்டிக்காட்டினார்.

போதிதர்மர் மன்னர் லியாங் வூ-டி’யைச் சந்தித்த பிறகு யாங்க்ஸி நதியைக் கடந்து ஹெனான் பகுதியின் மலைச் சிகரங்களில் உள்ள ஷாவொலின் மடலாயத்திற்குச் சென்றார். அங்கு தியானம் செய்துகொண்டிருந்த புத்த பிட்சுக்களைப் பார்த்தபோது அவருக்குப் பெரிதும் ஏமாற்றமாக இருந்தது. நாட்பட்ட பட்டினியாலும் தவத்தாலும் அவர்களின் தேகங்கள் மிகவும் பலவீனமாகவும் ஆரோக்கியம் அற்றும் இருந்தன. ஆன்மிகவாதிகள் என்றால் உடம்பை அலட்சியப்படுத்த வேண்டும் என்ற ஒரு தவறான கருத்து அவர்களிடம் மேலோங்கி இருப்பதை அவர் கண்டார்.

போதிதர்மர் எல்லா கோணங்களில் இருந்தும் ஞானத்தைக் காண முடிந்தவர். உடல் உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இல்லா விட்டால் பெரும்பாலான நேரங்களில் மனம் உடல் உபாதைகளிலேயே தங்கி விடும் என்பதை உணர்ந்தவர் அவர். அப்படியே இல்லா விட்டாலும் கூட ஆன்மிக மார்க்கத்தில் நிறைய தூரம் பயணிக்க வலுவான உடல் அவசியம், உடல் இல்லா விட்டால் எல்லாமே இல்லாமல் போய் விடும் என்பதால் அவர் உடலைப் பேணிப் பாதுகாப்பதும் ஒரு ஆன்மிகவாதிக்கு அவசியம் என்று நம்பியவர் அவர். எனவே உடலை வலுப்படுத்தும் பயிற்சிகளையும், தாக்க வரும் எதிரிகளிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும் பயிற்சிகளையும் புத்த பிட்சுக்களுக்கு அவர் விளக்கமாகக் கற்றுத் தந்தார். அப்படிப் பிறந்தது தான் குங்க்ஃபூ என்னும் தற்காப்புக்கலை.

மேற்போக்காகப் பார்ப்பவர்களுக்கு அவர் உடலுக்கு அதிக முக்கியத்துவம் தந்திருப்பது போலத் தோன்றினாலும் அவர் அதை விட அதிகம் மனத்திற்கும், ஞானத்திற்கும் தந்திருந்தார் என்பதே உண்மை. ஒன்பது வருட காலம் அவர் ஒரு குகையில் ஒரு சுவற்றைப் பார்த்தபடி அமர்ந்து தியானம் செய்ததாகவும் மேலான ஆன்மிக ரகசியங்களைத் தெளிவாக உணர்ந்த பின்னரே தியானத்தில் இருந்து எழுந்ததாகவும் பல சீன பௌத்த அறிஞர்களும் ஒருசேர குறிப்பிட்டிருப்பதே அதற்கு சான்று. 

போதிதர்மர் சென்ற காலத்தில் சீனாவில் பௌத்த மதத்தின் சடங்குகள் மட்டும் இருந்தன. அவை ஆன்மிக சாரமற்று வெறும் சக்கைகளாக இருந்தன என்றாலும் எந்திரத்தனமாகப் பின்பற்றப்பட்டன. ஒன்பதாண்டு கால தொடர் தியானத்திற்குப் பின் உணர்ந்த உண்மைகளையும், புத்தரின் போதனைகளையும், தாவோவையும் இணைத்து போதிதர்மர் ஆன்மிகத்திற்கு உயிர் சேர்த்தார்.  அவர் போதனைகள் ‘ச்சான்’ (chan) ஆகிப் பின்பு அது ஜப்பானில் ’ஜென்’ (zen) என்பதாக வடிவம் கொண்டது.

போதிதர்மா தன் கையில் எப்போதும் ஒரு கைத்தடி வைத்திருப்பார். அது இக்காலத்தில் நாம் பார்க்கும் கைத்தடி போல இருக்கவில்லை.  அதைப் பார்த்தால் அவர் ஏதோ ஒரு மரத்தையே வேறோடு பிடுங்கி வைத்திருப்பது போல் இருக்கும். முண்டு முடிச்சு உள்ள அந்தத் தடியை அவர் ஆன்மிக போதனைக்கும் பயன்படுத்தினார்.  ‘மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது”என்றும், ‘மனம் குரங்கு போல் தாவிக்கொண்டே இருக்கிறது”, ‘மனவிசாரங்களில் இருந்து விடுதலை வேண்டும்’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வரும் சீடர்களை நோக்கி, “அப்படியா அந்த மனதைப் பிடித்துக் கொண்டு வாருங்கள். ஒரே அடியில் போட்டுத் தள்ளிவிடுகிறேன்.” என்று சொல்லித் தன் கைத்தடியைக் காட்டுவாராம். 

போதிதர்மா தன் கடைசிக் காலத்தில் இமயமலைப் பகுதிக்குச் செல்ல விரும்பினார். ஹாய்கோ என்னும் சீடனைத் தன் வாரிசாக அறிவித்தார். இதனால் அவர் மேல் மனத்தாபம் கொண்ட ஒருசில சீடர்கள் அவரின் உணவில் விஷம் வைத்து விட்டார்கள். அதை உண்ட போதிதர்மா ‘கோமா’வில் விழுந்தார். அவர் இறந்துவிட்டதாக அறிவித்து அவர்கள் மடாலயத்திலேயே அவரைப் புதைத்துவிட்டார்கள். 

இது நடந்து சில நாட்கள் கழித்து சீனாவின் எல்லையில் அவர் நடந்து செல்வதை அவரை நன்கு அறிந்த ஒருவன் கண்டான். அவர் தன் கைத்தடியின் முனையில் ஒற்றைச் செருப்பைக் கட்டித் தொங்க விட்டிருப்பதைக் கண்டு அவனுக்கு வியப்பு மேலிடுகிறது. அவர் இமய மலையை நோக்கிச் செல்வதைக் கவனித்த அவன் மடாலயத்திற்குச் சென்று தான் போதிதர்மாவைப் பார்த்ததாகச் சொல்கிறான். அவர்கள் போதிதர்மர் இறந்து விட்டதாகச் சொல்ல அவனோ தான் பார்த்த காட்சி உண்மை என்பதில் உறுதியாக இருந்தான். அவர்கள் அவன் முன்பே அவரின் கல்லறையைத் திறந்து பார்த்தபோது அதனுள் அவருடைய ஒரே ஒரு செருப்பு மட்டும் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். அதற்குப் பின் போதிதர்மரைக் கண்டவர்கள் யாருமில்லை.

”மனதிலிருந்து விடுதலை அடையப் போராட வேண்டியதில்லை. மனதிற்குள் ஆழ்ந்து ஆழ்ந்து போய்க்கொண்டே இருங்கள். இறுதியில் மனமே புத்தராக இருப்பதைக் காண்பீர்கள். மனதின் யதார்த்த நிலையே ஞானம்” என்பதுதான் போதிதர்மாவின் போதனைகளின் சாரம். அந்த நிலையை அடையும்போது மனத்தின் உண்மையான ஆற்றல் வெளிப்படும். அப்போது மட்டுமே காலம், இடம் தளைகளிலிருந்து விடுதலை கிடைக்கும் என்கிறார் அவர்.

அவருடைய அறிவுரைகளில் இருந்து சில:

நல் ஆசிரியர்களைத்  தேடும் முட்டாள்கள் உணர்வதில்லை,  அவர்களது மனம் மிகச்சிறந்த ஆசிரியர்,  என்பதை!

’மனம் எப்போதும் இக்கணத்தில் இருக்கிறது.  நீதான் அதைக் காண்பதில்லை’

பாதையை அனைவரும் அறிவார்கள். அதில் நடப்பவர்கள் சிலரே’

’மாயைகளை உருவாக்காமல் இருப்பதே ஞானம்’

’வாழ்வும் சாவும் முக்கியமானவை. அவற்றை வீணடிக்காதீர்கள்’

’மொழியைக் கடந்து போ. எண்ணத்தைக் கடந்து போ’

‘புத்த நிலை என்பது விழிப்புணர்வு நிலையே. அது மனம், உடல் இரண்டிலும் முழு விழிப்புணர்வைக் கொண்டதாய் இருப்பதால் தீமைகள் இரண்டிலுமே உருவாகாமல் தடுக்கிறது’

அர்த்தமுள்ள திருமண மந்திரங்கள்!

அறிவார்ந்த ஆன்மிகம்-11

இந்துத் திருமணங்கள் என்பவை விரிவான சடங்குகளைக் கொண்டு செய்யப்படுபவை. அவை யாவும் அர்த்தமுள்ளவை. திருமணங்களில் சொல்லப்படும் மந்திரங்களில் பெரும்பான்மை மந்திரங்கள் தேவர்களைப் பணிவதாகவும், மேன்மையான செய்திகளைக் கொண்டதாகவும்  தனிமனித உறுதிமொழிகளாகவும் இருக்கின்றன. திருமணம் என்ற சடங்கில் சொல்லப்படும் மந்திரங்கள் மணமக்களுக்குப் புரியாமல் இருப்பது வருத்தத்திற்குரிய விஷயமே. அதை விட அதிக வருத்தத்திற்குரிய விஷயம் இந்த சமஸ்கிருத மந்திரங்களை ஓதுபவர்கள் கூட அர்த்தம் புரியாமல் எந்திரத் தனமாக வேகமாகச் சொல்லிக் கொண்டே போவது தான். சொல்பவருக்கும் புரிவதில்லை, யாருக்காக சொல்லப்படுகிறதோ அவர்களுக்கும் புரிவதில்லை. வெறும் சத்தங்களும், சடங்குகளுமாகத் திருமணம் நடந்து முடிப்பது வேதனையாகவே இருக்கின்றது.

சில முக்கிய மந்திரங்களுக்கு என்ன அர்த்தம் என்று பார்ப்போம். முதற் கடவுளாகிய வினாயகரைத் துதித்து, பின் நவக்கிரகங்களைப் பூஜித்து மணமகனிற்கும், மணப் பெண்ணிற்கும் கையில் காப்பு கட்டி அக்னியைத் தொழுது சங்கல்பம் செய்வதில் ஆரம்பிக்கிறது திருமணம்.

நோக்கம் என்ன என்று சொல்வது தான் சங்கல்பம். எதற்காக இதைச் செய்கிறோம் என்றும் இந்த புனித சடங்கை இறைவன் நல்லபடியாக நடத்திக் கொடுக்கட்டும் என்றும் வேண்டுகிறார்கள்.  இல்லற தர்மத்தை இவர்கள் இருவரும் சரிவரக் காத்து நன்மக்கள் பெற்று நீடுழி வாழ திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதே சங்கல்பம்.

மணப்பெண்ணின் தந்தை மணமகனை மகாவிஷ்ணுவாகவே பாவித்து அவன் திருவடிகளைக் கழுவுகிறார். அதற்குப் பதிலாக மாப்பிள்ளை சொல்லும் மந்திரம்: ‘‘என் காலைத் தொட்ட இந்தப் புனித நீர் என் அக எதிரிகளைத் தூளாக்கட்டும். நான் இறையொளியில் தேஜஸுடன் திகழ்வேனாக!’’ மணமகனை அழைத்துக் கொண்டு போய் அமர வைக்கும் மணப்பெண்ணின் தந்தை சொல்கிறார்: ‘‘ஓ, விஷ்ணுவின் வடிவே! இதோ உங்கள் ஆசனம்! உங்களுக்கு என் இனிய வரவேற்பு!’’


பின் நடக்கும் கன்யாதானத்தில் மணப்பெண்ணின் தந்தை மணமகனிடம் இப்படிச் சொல்கிறார்: ‘‘இதோ, என் மகளை உமக்கு வழங்குகிறேன். இவள் எல்லாக் குணநலன்களும் பொருந்தியவள். இனிய இயல்புடையவள். அறிவில் தெளிவுடையவள். அணிகலன்கள் பூண்டு நிற்கும் இவள் உமது அறம், செல்வம், அன்பு அனைத்துக்கும் காவலாக இருப்பாள்...’’ 

மணமகன் மணப்பெண்ணை ஏற்றுக் கொண்டு மும்முறை உறுதி சொல்கிறான். ‘‘இன்பத்திலும் துன்பத்திலும் இப்பிறப்பிலும் இதற்கப்பாலும் என்றென்றும் நான் இவளது துணைவனாக இருப்பேன்!’’ என்று.

மணப்பெண் தந்தையின் மடியில் அமர, தந்தை சொல்வது: ‘‘ஓ விஷ்ணுவே! அணிகலன்கள் பூண்ட என் மகளை உமக்கு வழங்குகிறேன். இதன் மூலம் எனது முந்தைய பத்து தலைமுறைகள் மற்றும் பிந்தைய பத்து தலைமுறைகள் கர்மவினைகளிலிருந்து விடுதலை பெறட்டும். எனக்கும் முக்தி கிடைக்கட்டும். அது இவள் மூலம் பிறந்த அறவழியில் நிற்கப் போகும் குழந்தைகளின் மூலம் நிகழட்டும்! பூமித்தாயும், எல்லாத் தேவர்களும், அனைத்து உயிரினங்களும் நான் செய்யும் இந்தக் கன்யாதானத்திற்கு சாட்‌சியாய் நிற்கட்டும்!’’

பின் அவர் மணமகனிடம், ‘‘பக்தி, செல்வம், ஆசை இவற்றை நிறைவேற்றிக் கொள்வதில் இவளுக்கு இடையூறு நேரக் கூடாது’’ என்று கேட்டுக் கொள்ள மணமகனும் பதிலுக்கு ‘‘நான் அவளுக்கு இடையூறு செய்ய மாட்டேன்’’ என்று மும்முறை உறுதி கூறுகிறான்.

மணமகன் மணமகள் கழுத்தில் மங்கல நாண் அணிவித்து ஒரு முடிச்சுப் போட, அவனது சகோதரியர் மற்றும் மூத்த சுமங்கலிகள் மற்றும் இரு முடிச்சுகளைப் போடுகிறார்கள். மங்கல நாணை அணிவிக்கையில் சொல்லும் மந்திரம் சினிமாக்களில் கேட்டாவது பலருக்கும் தெரிந்திருக்கும். 
மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவித ஹேதுநா |
கண்டே பத்நாமி ஸூபகே ஸஜீவ ஸரதஸ்ஸதம் ||
இது மணமகன் சொல்வதாக அமைந்த மந்திரம்.  ‘‘உன்னோடு நான் நீடுழி வாழ வேண்டி இந்த மங்கல நாணை உன் அழகிய கழுத்தில் அணிவிக்கிறேன். எல்லாப் பேறுகளும் பெற்று நீ நூறாண்டு நிறைவான வாழ்க்கை வாழ இறைவன் அருள் புரியட்டும்!’’

அதன்பின் அக்னியைச் சுற்ற மணமகன் மணமகளை அழைத்து வரும்போது சொல்லும் மந்திரம்: ‘‘பூஷா தேவதை உன்னை அக்னியின் முன்னிலைக்கு பத்திரமாக அழைத்துச் செல்லட்டும். அஸ்வினி தேவதைகள் என் வீட்டுக்கு உன்னை பாதுகாப்புடன் அழைத்து வரட்டும். பல மங்கலமான செயல்களில் என்னைத் தூண்டப்போகும் பெண்ணே! என் வீட்டின் அரசியாக அடியெடுத்து வை!’’

இதற்குப் பின் பாணிக்கிரஹண மந்திரம். மணமகளின் கரத்தைத் தன் கைக்குள் அடக்கிக் கொண்டு மணமகன், ‘‘ஓ பண்புள்ள பெண்ணே! கடவுளர்கள் கருணை மேலிட்டு நான் இல்லறம் பேணுவதற்காய் உன்னை எனக்கு அளித்துள்ளார்கள். முதுமையிலும் நாம் பிரியாமல் நீடு வாழ்வோமாக! உன் திருக்கரம் பற்றியே நான் இல்லறம் எனும் நிலைவாயிலில் நுழைகிறேன். இது வரை உன்னைக் காத்து வந்த சோமன், பகன் மற்றும் அக்னியின் ஆசிகள் எனக்கு இருக்கட்டும்.’ என்கிறான்
பிறகு சரஸ்வதி தேவியையும், வாயுவையும் தொழுது விட்டு. பின் இருவரும் அக்னியை வலம் வருகிறார்கள்.

மணமகளின் பாதம் மணமகன் தொட்டு,  மெட்டி அணிவித்து ஏழு அடிகள் அவள் எடுத்து வைக்க உதவுகிறான் மணமகன். இது ‘சப்தபதி’ எனப்படுகிறது. ஒவ்வொரு அடியிலும் மணமகன் சொல்வதாக அமையும் மந்திரத்தின் பொருள் இது.  முதல் அடி எடுத்து வைக்கும்போது கணவன் கூறுவது:

மணமகள் மணமகன் வீட்டிற்கு வந்து புத்திரபாக்கியங்களைப் பெற்று குலவிருத்தி செய்து, அனைவருக்கும் சந்தோஷம் அளிக்கவேண்டும் எனவும், அதற்குத் தேவையான உணவுப் பொருட்கள் போன்றவை குறையாமல் இருக்க நாம் இருவரும் மஹாவிஷ்ணுவைப் பிரார்த்தனை செய்வோம்.

இரண்டாவது அடியின் போது மனைவியின் தேகவலிமைக்கு வேண்டிக்கொண்டும், அவள் ஆசைகள் நியாயமான ஆசைகளாக இருக்கவும், அவை பூர்த்தியடையவேண்டியும், அதற்கான உடல், மன வலிமையை அவள் பெற மஹாவிஷ்ணு தரவேண்டும் எனவும் கேட்டுக்கொள்வான்.

மூன்றாம் அடியின் போது இருவரும் சேர்ந்து வாழப் போகும் புத்தம்புதிய வாழ்க்கையில் இல்லறத்தை நல்லறமாகச் செய்ய வேண்டிய கடவுள் ஒத்துழைக்கவேண்டும் எனவும், எடுக்கும் முயற்சிகளிலும் இருவருக்கும் நம்பிக்கையும், தர்மத்தை மீறாமலும் இருக்கவேண்டியும் விஷ்ணுவைப் பிரார்த்தனை செய்வான்.

நான்காம் அடியின் போது கணவன் தானும், தன் மனைவியும் பூவுலக இன்பங்களை எல்லாம் குறைவின்றி அனுபவிக்க வேண்டும் என்றும் அது முழுமையாகக் கிடைக்க மஹாவிஷ்ணு அருள் செய்யவேண்டும் எனவும் பிரார்த்தனை செய்வான்.

ஐந்தாம் அடியின் போது தன் மனைவியாய் வந்து இல்லற சுகம் என்பது வெறும் உடல் சுகம் மட்டுமில்லாமல்,  மற்ற சுகங்களான வீடு, வாசல், மற்றச் செல்வங்களுமாக இருக்க அந்த மஹா விஷ்ணு அருள் புரியவேண்டும் என்று அவன் வேண்டிக் கொள்கிறான்.

ஆறாம் அடியின் போது பருவ காலங்களின் தாக்கங்கள் தங்களைப் பெரிய அளவில் தாக்காதவாறும் அதன் மூலம் இல்வாழ்க்கையின் சுகமோ, சுவையோ குறையாமலும் இருவர் மனங்களும் அதற்கேற்ற வல்லமையோடு இருக்க மஹாவிஷ்ணுவைப் பிரார்த்திப்பதாகச் சொல்கிறது.

ஏழாம் அடியின் போது ”இல்வாழ்க்கையில் செய்யப் போகும் வேள்விகள் அனைத்துக்கும் நீ உதவியாகவும் துணையாகவும் இருந்து என் மனதையும், உன் மனதையும் ஆன்மீகத்திலும் செலுத்த வேண்டியும் எல்லாக் கடமைகளையும் தவறாமல் நிறைவேற்றவும் வேண்டிய பலத்தை உனக்கு அந்த மஹாவிஷ்ணு கொடுக்கட்டும்” என்று மணமகன் கூறுகிறான் 

பிறகு மணமகளை அம்மியை மிதிக்கச் செய்து, மணமகன் சொல்வது: ‘‘இந்த அம்மியின் மீது ஏறி நிற்பாயாக! உன்னை எதிர்ப்பவர்களை இந்தக் கல்லின் வலிமையுடன் எதிர்கொள்வாயாக! அதே நேரத்தில் எதிரிகளுடன் கருணையுடனும் நடந்து கொள்வாயாக! ஏழு முனிவர்களும் வசிட்டரின் மனைவியான அருந்ததியே சாலச் சிறந்தவள் என்று அறிவித்தார்கள். அதை மற்ற ஆறு மனைவியரும் ஏற்றுக் கொண்டார்கள். அதேபோல என் மனைவியும் கற்பில் தலைசிறந்தவள் என்று கருதப்பட்டு எட்டாவது தாரகையாய் மின்னட்டும்’’ என்று பிரார்த்திக்கிறான்.

இதன்பின் மணமக்கள் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கிறார்கள். ‘‘ஓ துருவனே! நீ உறுதியின் ஊற்று! வாழ்வில் உயிரின் உறுதிக்கு நீயே பொறுப்பு. நட்சத்திர மண்டலங்களின் அச்சாணி நீ. உறுதியைத் தாக்கும் எதிரிகளிடமிருந்து எம்மைக் காப்பாற்று!’’

இப்படி சொல்லப்படும் மந்திரங்களின் அர்த்தம் புரிகையில் தான் திருமணம் என்பது உறுதிமொழிகளிலும், ஒப்பந்தங்களிலும், பிரார்த்தனைகளிலும் உருவாகும் புனிதச் சடங்கு என்பது புரிகிறதல்லவா?

கிருபானந்த வாரியாரின் ஒவ்வொரு நாளும் சொல்ல ஒவ்வொரு துதி!

எல்லா நாட்களும் நல்ல நாட்களாகவே இருக்கவேண்டும்! இந்த ஆசை யாருக்குத்தான் இருக்காது?

அதற்கு எளிய வழி, இறைவனைத் துதிபாடித் துதிப்பதுதான் என்கின்றன புராணங்கள்.

இன்றைய அவசர உலகத்தில் கடவுளை, கையெடுத்துக் கும்பிடக்கூட நேரமில்லாத நிலையில் தினமும் பாட்டுப் பாடி கும்பிடுவதா? அது எப்படி முடியும்? என்கிறீர்களா?

முடியும். அதற்கான எளிய வழி இதோ இருக்கிறது. கிருபானந்த வாரியார் சுவாமிகள் அதற்காகவே வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்னச் சின்ன துதிகளை இயற்றியுள்ளார்.

திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் படைவீட்டு வாரப்பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன. உயர்வான அவை இதோ இங்கே தரப்பட்டுள்ளன.

ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம்தினம் சொல்லுங்கள். கந்தவேள் கருனையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை
தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி!
சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி!
மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி!
ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!

திங்கட்கிழமை
துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!
சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!
சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!
திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!

செவ்வாய்க்கிழமை
செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!
தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!
செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!

புதன்கிழமை
மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே
உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!

வியாழக்கிழமை
மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி!
தயாளசீலா தணிகை முதல் தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி!

வெள்ளிக்கிழமை
அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!
வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!

சனிக்கிழமை
கனிவாய் வள்ளி தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்
சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!

காயத்ரீ மந்திரமும் பலன்களும்

24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி.காலையில் கிழக்கு முகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு இரு கைகளையும் முகத்திற்கு எதிராகக் கூப்பிக் கொண்டும், மதியம் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு கைகளை மார்புக்கு எதிரே கூப்பிக் கொண்டும், மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்கு சமமாக கூப்பிக் கொண்டும் ஜபம் செய்ய வேண்டும்.மனம் ஒரு புறம் எதையோ நினைத்துக் கொண்டிருக்க வாய் மட்டும் இந்த மந்திரத்தை 1008 அல்லது 108 தடவை உச்சரித்தால் பலன் கிடையாது. முறையாக முழு மன ஒருமைப்பாட்டுடன் கூறினால் மட்டுமே பலன் கிடைக்கும்

வளமான வாழ்வு பெற காயத்ரீ மந்திரங்கள்
1.) ஸ்ரீ கணபதி காயத்ரீ.
                  ஓம் தற்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி
                  தன்னோ தந்தி ப்ரயோதயாத்
2.) பரப்பிரம்ம காயத்ரீ தேவி மந்திரம்.
                  ஓம் பூர்: ஓம் புவ: ஓம் ஸ_வ: ஓம் மஹ: ஓம் ஜந:
                  ஓம் தப: ஓம் ஸத்யம்: ஓம் தத்ஸவிதுர் வரேண்யம்
                  பர்கோ தேவஸ்ய தீமஹி தியோந ப்ரயோதயாத்.
3.) ஸ்ரீ சுப்பிரமணியர் காயத்ரீ.
            ஓம் தற்புருஷாய வித்மஹ  மஹா ஸேநாய தீமஹி
                  தந்நோ ஸண்முக  ப்ரயோதயாத்.
4.) அம்மன் காயத்ரீ
              ஓம் காத்யயனாய வித்மஹே கன்யாகுமாரி தீமஹி
                  தந்நோ துர்கீ ப்ரயோதயாத்.
5.) ஸ்ரீ ருத்ர காயத்ரீ
           ஓம் தற்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி
                 தந்நோ ருத்ர  ப்ரயோதயாத்.
6.) ஸ்ரீ மஹா லட்சுமி காயத்ரீ.
                ஓம் மஹாலட்சுமியைச வித்மஹே விஸ்ணு பத்ன்யை தீமஹி
                தந்நோ லட்சுமி ப்ரயோதயாத
7.) ஸ்ரீ விஸ்ணு காயத்ரீ.
                ஓம் நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி
                தந்நோ விஸ்ணு ப்ரயோதயாத்.
8.) ஸ்ரீ சரஸ்வதி காயத்ரீ.
          ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே: ப்ரம்ம பத்ன்யை தீமஹி
               தந்நோ வாணி ப்ரயோதயாத்.
9.) ஸ்ரீ பிரம்மா காயத்ரீ.
      ஓம் வேதாத்மனாய வித்மஹே ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
               தந்நோ பிரம்ம  ப்ரயோதயாத். 
10.) ஸ்ரீ தட்சிணாமூர்த்தி காயத்ரீ.
ஓம் தட்சிணாமூர்த்தியே ச வித்மஹே த்யானஸத்தாய தீமஹி
          தந்நோ லோககுரு ப்ரயோதயாத். 
11.)ஸ்ரீ சிவ காயத்ரீ:
ஓம் பஞ்ச்வக்த்ராய வித்மஹே: மஹாதேவாய
தீமஹி தந்நோ ருத்ர ப்ரயோதயாத்.

12.)ஸ்ரீ ராம காயத்ரீ:
ஓம் தஸ்ரதாய வித்மஹே: சீதா பல்லபயே
தீமஹி தந்நோ ராம: ப்ரயோதயாத்.

13.)ஸ்ரீ கிருஷ்ண காயத்ரீ:
ஓம் தெவ்கிநந்தனயே வித்மஹே: வசுதேவயே
தீமஹி தந்நோ கிருஷ்ண: ப்ரயோதயாத்.
                     
              நவக்கிரங்களின் காயத்ரீ மந்திரங்கள்.
1.) ஸ்ரீ சூரியன் காயத்ரீ:-
ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: பாச ஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்ய ப்ரயோதயாத்.

2.) ஸ்ரீ சந்திரன் காயத்ரீ:-
ஓம் பத்ம த்வஜாய வித்மஹே: ஹேம ரூபாய தீமஹி
தன்னோ ஸோம ப்ரயோதயாத்.

3.) ஸ்ரீ செவ்வாய் காயத்ரீ:-
ஓம் வீர த்வஜாய வித்மஹே: விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம ப்ரயோதயாத்.

4.) ஸ்ரீ புதன் காயத்ரீ:-
ஓம் கஜ த்வஜாய வித்மஹே: சுக ஹஸ்தாய தீமஹி
தன்னோ புத ப்ரயோதயாத்.

5.) ஸ்ரீ குரு காயத்ரீ:-
ஓம் விருஷப த்வஜாய வித்மஹே: க்ருணி ஹஸ்தாய தீமஹி
தன்னோ குரு ப்ரயோதயாத்.

6). ஸ்ரீ சுக்கிரன் காயத்ரீ:-
ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: தநுர் ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்கிர ப்ரயோதயாத்.

7.) ஸ்ரீ சனீஸ்வரர் காயத்ரீ:-
ஓம் காக த்வஜாய வித்மஹே: கட்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்த ப்ரயோதயாத்.

8.) ஸ்ரீ ராகு காயத்ரீ:-
ஓம் நாக த்வஜாய வித்மஹே: பத்ம ஹஸ்தாய தீமஹி
தன்னோ ராகு ப்ரயோதயாத்.

9.) ஸ்ரீ கேது காயத்ரீ:-
ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ கேது ப்ரயோதயாத்.

தமிழனின் தத்துவங்கள்

மெக்கானிக்கல் இன்ஜீனியர் மெக்கானிக் ஆகலாம். ஆனா சாப்ட்வேர் இன்ஜீனியர் சாப்ட்வேர் ஆக முடியாது.

பாக்கு மரத்துல பாக்கு இருக்கும். தேக்கு மரத்துல தேக்கு இருக்கும்.. ஆனா பனை மரத்துல பனை இருக்குமா?

சனிக்கிழமையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வரை ஒரு நாள்.. ஆனால் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து சனிக்கிழமை வரை..?

சைக்கிள்ல போனா 'சைக்கிளி'ங்க.. அப்ப டிரெயின்ல போனா டிரெயினிங்கா..?

டீ கப்புல டீ இருக்கலாம்.. ஆனால் வோல்ர்டு கப்புல வோர்ல்டு இருக்க முடியாது.

எவ்ளோ காசு கொடுத்து பிளேன்ல போனாலும் ஜன்னலைத் திறந்து வேடிக்கை பார்க்க முடியாது..

'கீபோர்ட்ல' 'கீ ' இருக்கும்.. ஆனால் மதர் போர்ட்ல 'மதர்' இருக்க முடியுமா?

பிரஷ்ஷை வைச்சு பல்லை கிளீன் பண்ணலாம்.. ஆனா பல்லை வைச்சு பிரஷ்ஷை கிளீன் பண்ண முடியுமா?

பேண்ட் போட்டு முட்டி போட முடியும். ஆனா முட்டி போட்டுட்டு பேண்ட் போட முடியுமா?

இன்பாக்ஸ்ல இலை பார்க்க முடியும். ஆனால் மேட்ச் பாக்ஸ்ல மேட்ச் பார்க்க முடியுமா?

இருக்குறப்ப என்னதான் காம்ப்ளான், போர்ன்விட்டா குடிச்சாலும், செத்தப்புறம் எல்லாருக்கும் பால்தான்..

சவுத் இண்டியால நார்த்தாங்காய் கிடைக்கும்.. ஆனால் நார்த் இண்டியால சவுத்தாங்காய் கிடைக்குமா?

பச்சை மிளகாய்ல பச்சை இருக்கும்.. ஆனா கொடை மிளகாய்ல குடை இருக்குமா?

லன்ச் பேக்ஸ்ல லன்ச் எடுத்திட்டுப் போகலாம்.. ஆனால் ஸ்கூல் பேக்ல ஸ்கூல எடுத்திட்டுப் போக முடியாது..

மெழுக வைச்சு மெழுகுவர்த்தி செய்யலாம். ஆனால் கொசுவ வைச்சு கொசுவத்தி செய்ய முடியாது.

கோவில் மணிய நம்ம அடிச்சா சத்தம் வரும்.. ஆனால் கோவில் மணி நம்மள அடிச்சா ரத்தம்தான் வரும்.

மின்னலை பார்த்தா கண்ணு போயிரும்.. ஆனால் பாக்கலைன்னா மின்னலும் போயிரும்..

நீ எவ்ளோ பெரிய நீச்சல்காரனா இருந்தாலும் டம்ளர் தண்ணில நீந்த முடியாது.

நெய் ரோஸ்ட்ல நெய் இருக்கும்.. பேப்பர் ரோஸ்ட்ல பேப்பர் இருக்குமா?

க்ரீம் பிஸ்கெட்ல கிரீம் இருக்கும்.. ஆனாநாய் பிஸ்கெட்ல நாய் இருக்குமா?

சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வைச்சு எடுத்திட்டுப் போகலாம்.. ஆனா டிபன் கேரியர்ல சைக்கிள வைச்சு எடுத்திட்டுப் போக முடியாது.

நீ எவ்ளோ பெரிய டான்ஸரா இருந்தாலும் உன்னோட சாவுக்கு உன்னால ஆட முடியுமா?

காக்கா என்னதான் கருப்பா இருந்தாலும் அது போடுற முட்டை வெள்ளைமுட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் அதுக்குள்ள இருந்து வர்ற காக்கா கருப்புதான்..

டிரெயினுக்கு டிக்கெட் வாங்கி பிளாட்பார்ம்ல உக்காரலாம்.. ஆனா பிளாட்பார்ம் டிக்கெட் வாங்கி டிரெயின்ல உக்கார முடியாது.

சோடாவ பிரிட்ஜ்ல வைச்சா கூலிங் சோடா ஆகும்..அதையே வாஷிங் மெஷினுக்குள்ள வைச்சா வாஷிங் சோடா ஆகுமா?

அயர்ன் பாக்ஸால அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸால பென்சில் பண்ண முடியாது.

டிக்கெட் வாங்கிட்டு உள்ள போறது சினிமா தியேட்டர். உள்ள போயி டிக்கெட் வாங்குறது ஆபரேஷன் தியேட்டர்.

சிற்பி கல்லை உளியால அடிச்சா அது கலை.. நாம சிற்பிய உளியால அடிச்சா அது கொலை..

நாம எவ்ளோதான் வேகமாக நடந்தாலும் ஒரு கால் முன்னாடி போனா ஒரு கால் பின்னாடிதான் இருக்கும்..

குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புற படுத்துக்கலாம்.. ஆனாகுப்புற படுத்துட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது..

வாயால நாயுன்னு சொல்லலாம். ஆனா நாயால வாய்ன்னு சொல்ல முடியுமா?

மண்டைய மண்டைய ஆட்டுறது டிஸ்கோ. மண்டைய போட்டா ஆடுறது டப்பாங்குத்து..

எத்தனால் குடிச்சா நாலு பேர் முன்னாடி ஆடலாம்.. மெத்தனால் குடிச்சா நாலு பேர் உன் முன்னாடி ஆடுவாங்க..

வேலை செஞ்சாத்தான் சோறு..வேலை ரொம்ப செஞ்சா போரு..

காருக்குள்ள டயர் இருந்தா அது ஸ்டெப்னி.. அதுவே நம்ம மேல இருந்தா நாம சட்னி..

தூங்கப் போறதுக்கு முன்னால தூங்கப் போறேன்னு சொல்லலாம்.. எந்திரிக்கப் போறதுக்கு முன்னால எந்திரிக்கப் போறேன்னு சொல்ல முடியுமா?

நீங்க பைக்ல எவ்ளோதான் பாஸ்ட்டா போனாலும் உங்களையே நீங்க ஓவர்டேக் பண்ண முடியாது..

கோல்டு செயினை அடகு வைச்சு சைக்கிள் வாங்கலாம்.. ஆனா சைக்கிள் செயினை அடகு வைச்சு கோல்டு வாங்க முடியாது..

ஆம்பளைங்க அடிபட்டா ஆம்புலன்ஸ் வருமாம்.. அப்போ பொம்பளைங்க அடிபட்டா பொம்புலன்ஸா வரும்..?

ரயில்வே ஸ்டேஷன்ல போலீஸ் ஸ்டேஷன் இருக்கும்.. ஆனா போலீஸ் ஸ்டேஷன்ல ரயில்வே ஸ்டேஷன் இருக்குமா?

பாய்ஸன் பத்து நாள் ஆனாலும் பாயாஸம் ஆக முடியாது. ஆனாபாயாஸம் பத்து நாள் ஆனா பாய்ஸன் ஆயிரும்..

ஒரு எறும்பு நினைச்சா ஆயிரம் யானையை கடிக்கும்.. ஆனா ஆயிரம் யானைக நினைச்சாலும் ஒரு எறும்பைக்கூட கடிக்க முடியாது..

புயலால கரையைக் கடக்க முடியும்.. ஆனா கரையால புயலைக் கரைக்க முடியுமா?

செல்லுல பேலன்ஸ் இல்லேன்னா கால் பண்ண முடியாது. ஆனா மனுஷனுக்கு கால் இல்லேன்னா பேலன்ஸ் பண்ண முடியாது..

நீ என்னதான் காஸ்ட்லி மொபைல் வைச்சிருந்தாலும் அதுல எவ்ளோதான் ரீசார்ஜ் பண்ணினாலும் உன்னால உனக்கே கால் பண்ண முடியாது..

என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும் அதால மீன் குழம்புல நீந்த முடியாது..

இன்னிக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனா நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதால நன்றின்னு வாயால சொல்ல முடியாது..

என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும் அதால அவிச்ச முட்டை போட முடியுமா?

நாய்க்கு நால் கால் இருந்தாலும் அதால கால் மேல் கால் போட்டு உக்கார முடியாது.

அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கலாம். பால் கொட்டினா வேற பால் வாங்கலாம். ஆனா தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியுமா?

Files-ன்னா உக்காந்து பாக்கணும்.. Piles-ன்னா பாத்து உக்காரணும்..

நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க முடியாது.. 

ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம். காலேஜ் டெஸ்ட்ல் பிட் அடிக்கலாம். ஆனா பிளட் டெஸ்ட்ல பிட் அடிக்க முடியாது..

ஆயிரம்தான் இருந்தாலும் ஆயிரத்தி ஒண்ணுதான் பெரிசு..

என்னதான் அஹிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்திய சுட்டுதான் சாப்பிடணும்..

நீ என்னதான் வீரனா இருந்தாலும் குளிரடிச்சா திரும்பி அடிக்க முடியாது..

காசு இருந்தா கால் டாக்ஸி. காசு இல்லேன்னா கால்தான் டாக்ஸி..

பல்லு வலின்னா பல்ல பிடுங்கலாம்.. ஆனா கண்ணு வலின்னா கண்ண பிடுங்க முடியுமா?

இட்லிப் பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியைத் தொட்டு மூக்க சாப்பிட முடியுமா?

என்னதான் உக்காந்து சாப்பிடற அளவுக்குச் சொத்து இருந்தாலும் பாஸ்ட்புட் கடைக்குப் போனா நின்னுதான் சாப்பிடணும்..

கொஞ்சம் பணம் கொடுத்து குடை வாங்கலாம்.. எவ்ளோ பணம் குடுத்தாலும் மழையை வாங்க முடியுமா?

தன்னம்பிக்கைக்கும், தலைக்கனத்துக்கும் ஒரு நூல் அளவுதான் வித்தியாசம் என்னன்னா..?என்னால ஒரு புல் அடிச்சிட்டு ஸ்டெடியா நிக்க முடியும்னு சொன்னா அது தன்னம்பிக்கை.. என்னால மட்டும்தான் புல் அடிச்சிட்டா ஸ்டெடியா நிக்க முடியும்னு சொன்னா அது தலைக்கனம்..

வெற்றிக்கு உதவும் ஆறு குணங்கள்

1. பணிவு

ஒரு துறையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர் நாலு விசயங்களைப் பழகியவுடன் கர்வம் அவர்களுடைய தலைக்கு மேல் ஏறிக் கொள்கிறது. என்னைப் போல் யார்? என்று நினைக்கிறார்கள். இதுதான் அவர்களின் சரிவுக்கான முதல் படி. முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை. இதற்குப் பதிலாகத் துணிவை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வெற்றிக்கு அது துணை நிற்கும்.

2. கருணை

உங்களைச் சுற்றியுள்ளவர்கள் துயரத்தை அனுபவிக்கும் போது, அவர்களுக்கு ஆறுதலாக இருங்கள். உங்களுக்குப் பிரச்சனை என்று வரும் போது அவர்கள் உதவுவதற்கு ஓடோடி வருவார்கள்.

3. பழகும் தன்மை

வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, உங்களுக்கு மேலே உள்ளவர்களிடமும், கீழே உள்ளவர்களிடமும் வெளிப்படையாக நடந்து கொள்ளுங்கள். திறந்த புத்தகமாக வாழத் தொடங்குங்கள். பல புதிய வெற்றி வாசல்கள் திறப்பதை அறிவீர்கள்.

4. அரவணைக்கும் குணம்

உலகில் எல்லாவிதமான மனிதர்களும் இருப்பார்கள் என்பதை ஒப்புக் கொண்டு, அவர்களிடம் உள்ள நல்ல விசயங்களைப் பார்த்துப் புரிந்து கொண்டு பழகத் தொடங்கினால் நட்பு வட்டம் பெருகும். வாழ்க்கை சிறகடிக்கும்.

5. இணைந்து பணியாற்றும் தன்மை

நாம் ஒவ்வொருவரும் பல தனிப்பட்ட திறமை கொண்டவர்களாக இருப்போம். நாம் அனைவரும் இணைந்து பணியாற்றினால் அந்த வெற்றி பல மடங்காக உயரும்.

6. முடிவெடுக்கும் திறன்

நாம் தினந்தோறும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஏதாவது ஒரு முடிவை எடுக்கிறோம். நமது திறமை மற்றும் அனுபவத்தைச் சரியான விகிதத்தில் யோசித்து எடுக்கும் முடிவுகள் நமது வாழ்வின் முக்கியத் திருப்புமுனையாக அமையும்.

இவையே நமது வெற்றியின் வளர்ச்சியைத் தூக்கிவிடும்.

தமிழ்ச் சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்

தமிழ்ச் சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448. இதைவிட ஒரு நோய் கூடவும் முடியாது குறையவும் முடியாது. அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.


1. தலை 307

2. வாய் 18

3. மூக்கு 27

4. காது 56

5. கண் 96

6. பிடரி 10

7. கன்னம் 32

8. கண்டம் 6

9. உந்தி 108

10. கைகடம் 130

11. குதம் 101

12. தொடை 91

13. முழங்கால் கெண்டை 47

14. இடை 105

15. இதயம் 106

16. முதுகு 52

17. உள்ளங்கால் 31

18. புறங்கால் 25

19. உடல்உறுப்பு எங்கும் 3100

ஆக 4448 என்பனவாகும். இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.

உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது கருதுதற்குரியது.

கிருமிகளினால் உண்டாகும் நோய்கள்

குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப் படுகின்றன. அவை, குடலில் உண்டாகும் நோய்களின் மூலமாகவும், கெட்ட உணவுகளின் மூலமாகவும் உண்டாகும். அவை, பூ நாகம், தட்டைப்புழு, கொக்கிப்புழு, சன்னப்புழு, வெள்ளைப் புழு, செம்பைப் புழு, கீரைப்புழு, கர்ப்பப் புழு, திமிர்ப்பூச்சி எனப் பலவாகும். இவை துர்நாற்றமடைந்த மலத்தினாலும், சிறுநீர், இரத்தம், விந்து, சீழ், சளி, வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும்.

கிருமிகளால் உண்டாகும் நோய்க்குறி குணங்கள்

குடலில் உண்டாகும் கிருமிகளினால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நோய்க்குரிய குணங்கள் புறத்தே தோன்றுமாறு குணங்களை ஏற்படுத்தும். அவை, உடல் நிறம் மாறும். சுரம், வயிற்றுவலி, மார்பு நோய், வெளுப்பு நோய், ஊதல் நோய், இருமல், வாந்தி, சயநோய், அருசி, அசீரணம், பேதி, வாய் நீரூறல், பிரேமை, சூலை, தொப்புள் சுற்றி வலி, வயிறு உப்பல், தூக்கத்தில் பல் கடித்தல், மாலைக்கண், குழந்தைகளுக்குத் தெற்கத்திக் கணை, குழந்தை இசிவு, மூக்கில் புண் ஆகிய குணங்களை விளைவிக்கும்.

குடற் கிருமிகளினால் கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை, சுரம், மயிர் உதிர்தல், குட்டம், சொறி சிரங்கு, படை, கரப்பான் முதலிய நோய்களை உண்டாக்கும் என்று, கிருமிகளினால் உண்டாகக் கூடிய உடல் பாதிப்பு விரித்துரைக்கப்படுகிறது.

கிருமிகள் உருவாகக் காரணம்

கரப்பான், கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை முதலிய நோய்கள் உண்டாகும் வழிகளை ஆராய்ந்தால், அவை, உடலின் சூட்டினாலேயே உருவானவை எனத் தெரியும்.அதிகமான உடலுறவின் காரணத்தினால் உடல் சூடுண்டாகி, அச்சூடு கொழுப்பு, தசை யாவற்றையும் தாக்கி, கிருமிகளை உண்டாக்கும். அக்கிருமிகள் உடலைத் துளைத்துக் கொண்டு எங்கும் பரவி விஷ கரப்பான் என்னும் நோயை உண்டாக்கித் தினவை விளைவிக்கும்.

அதே மாதிரியான உடற்சூடு மலத்தைத் தீய்த்து, கட்டுண்டாக்கித் துர்நாற்றமுண்டாக்கும். மலம்அழுகிக் கிருமிகளை உண்டாக்கும். அவை குடலுக்குள், உண்ணும் உணவை உண்டு வளர்ந்து குட்டம், வெடிப்புண்,சொறி, கரப்பான், கிராணி, பவுத்திரம், சுக்கிலப் பிரமேகம் போன்ற நோய்களை உருவாக்கும். மேலும் குடற்புழுக்களால் மலத்துவாரத்தில் இரத்தம், சீழ், நீர்க் கசிவு, முளைமூலம், வயிறு பொருமல், வாய்வு, புழுக்கடி, சோகை, குன்மம், சயநோய், மலடு, பெருவயிறு, சுக்கில நட்டம், உடல் தடிப்பு போன்ற நோய்களும் உண்டாகும்.

நோய்க் கிருமிகளால் உடலுக்கு நேரக் கூடிய விளைவுகளை விவரித்துள்ளது, நோய் வரும் வழிகளை யெல்லாம் கண்டறிந்ததின் விளைவாகவே எனலாம். எவையெவை நோயைத் தரவும், உண்டாக்கவும் வல்லவை என்பதை உணர்ந்து உணர்த்தினால் மட்டுமே நோயிலிருந்து விலகவும், நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயலும் என்பதை அறிந்தே சித்த மருத்துவத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன எனல் பொருந்தும்.

கண் நோய் :

கண் மருத்துவம் என்பது இன்றைய காலத்தில் சிறந்த இடத்தைப் பிடிப்பதைப் போலவே, தமிழ் மருத்துவ நூலாரும் கண் மருத்துவத்தைச் சிறந்த மருத்துவமாக வளர்த்தனர் எனலாம்.

பொதுக் காரணங்கள் :

வேகங்களின் வழியே உண்டாகும் தீவினையாகிய நோய்களையும், வெம்மையால் உண்டாகும் எரிச்சலையும், புவன போகங்களின் மேல் கொண்ட பெருத்த ஆர்வத்தால் உண்டான பற்பல நோய்களும், அதனால் மெய்யிலும், உள்ளத்திலும் ஏற்படும் தளர்ச்சிகளும், உலக வாழ்க்கை என்று கூறப்படும் இருநூறு துக்க சாகரங்களும் கண்நோய் உண்டாவதற்கான பொதுக் காரணங்கள் என்றும், மனிதன் பிறந்தபோதே உடன்தோன்றி வருத்துகின்ற வேகம் என்னும் பதினான்கு நோய்களும் குறிப்பால் உணர்த்தப் பட்டுள்ளன. அவை : சுவாசம், விக்கல், தும்மல், இருமல், கொட்டாவி, பசி, தாகம், சிறுநீர், மலம், இளைப்பு, கண்ணீர், விந்து, தூக்கம், கீழ்நோக்கிச் செல்லும் வாயு (அபான வாயு என்பர் சிலர்). பொதுவாக ஆராய்ந்தால் மேற்கண்ட பதினான்கும் உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் அடிப்படையாக உள்ளன என்பது தெளிவாகும். அவை இல்லா மனிதன் தேவனெனப் படுவான்.

சிறப்புக் காரணம் :

சிசுவானது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது, தாயின் வயிற்றில் கிருமிகள் சேர்ந்திருந்தாலும், தாயானவள் பசியால் வருந்தினாலும், தாயானவள் திகிலடைந்தாலும், மாங்காய், மாம்பழம் இவற்றை விரும்பித் தின்றாலும் சிசு பிறந்தவுடன் சிசுவின் கண்களில் நோய்கள் உண்டாகும்.

காசநோய் :

கண்ணில் உண்டாகும் காசநோய், நீலகாசம், பித்தகாசம், வாதகாசம், வாலகாசம், மந்தாரகாசம், ஐயகாசம், வலியுங்காசம், விரணகாசம் என எட்டாகும்.

வெள்ளெழுத்து

கண்பார்வை மயக்கம் என்று கூறப்படும் ‘திமிரம்’ ஏழாகும். அவை வெள்ளெழுத்து, மந்தாரம், மூளை வரட்சி, பித்தம், சேற்பம், நீர் வாயு, மேகம் என்பன.

முப்பத்தேழு வயது வரை கண் பார்வை தெளிவாகத் தீங்கின்றி இருக்கும். நாற்பத்தைந்தில் கண்பார்வை சற்று இயற்கைக்கு ஒதுங்கியும், தெளிவின்றி சற்றுப் புகைச்சலாய்த் தோன்றும். ஐம்பத்தேழாம் வயதிலிருந்து சிறிது சிறிதாகக் கண்பார்வை இருளத் தொடங்கும். கண்பார்வை அறவே நீங்கி இருண்டிடும் நூறாமாண்டில். கூர்மையான பார்வை தரத்தக்க கருவிழியில் அடர்ந்த புகை கப்பியது போலவும், மேகக் கூட்டம் போலவும், பார்வை தடைப்பட்டு, நேராய்க் காணத்தக்க பொருள் சற்று ஒதுங்கிக் காணப்பட்டாலும், பொருள்கள் சற்று மஞ்சளாகவும் நேர்ப்பார்வை சற்று தப்பியும் காணும். இத்தகைய குறிகள் கண்ணில் தோன்றினால் அதனை வெள்ளெழுத்து (திமிரம்) என்று அறியவும். கண்பார்வை வயது ஏறயேறக் குறைவதின் விவரத்தைக் குறிப்பதுடன், பார்வைத் திறன் ஒடுங்குவது இயற்கை என்பதையும் இக்கருத்து விவரிக்கிறது.

கண்ணின் நோய்களைக் குறிப்பிட்டு அதன் தோற்றத்தையும் வண்ணத்தையும் குறிப்பிட்டுக் காட்டியிருப்பது மருத்துவ நூலாரின் ஆழ்ந்த மருத்துவப் புலமை நன்கு விளங்கக் கூடியதாக இருக்கிற தெனலாம்.

தலைநோய் :

உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில் தலையில் தோன்றும் நோய்கள் 1008 என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள் என்று குறிப்பிடும் அங்காதி பாதம், தலையின் உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய், மூக்கு, காது, கண், பிடரி, கன்னம், கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும் நோய்கள் மொத்தம் 552 என்கிறது. ஆனால், தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர் 1008 என்கிறார். இதனால் நாக முனிவர் தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும். மேலும், அம்முனிவர் எண்ணூற்று நாற்பத்தேழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை

ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்ற குறிப்பினைத் தருகின்றபோது, தலையின் உச்சியில் நாற்பத்தாறு மூளையில் (அமிர்த்தத்தில்) பதினாறு, காதில் நூறு, நாசியில் எண்பத்தாறு, அலகில் முப்பத்தாறு, கன்னத்தில் நாற்பத் தொன்பது, ஈறில் முப்பத்தேழு, பல்லில் நாற்பத்தைந்து, நாக்கில் முப்பது நான்கு, உண்ணாக்கில் இருபது, இதழில் பதினாறு,நெற்றியில் இருபத்தாறு, கண்டத்தில் நூறு, பிடரியில் எண்பத் தெட்டு,புருவத்தில் பதினாறு, கழுத்தில் முப்பத்தாறு, என, தாம் அனுபவத்தினால் உணர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடு கின்றார். ஆனால், எந்த முறையைக் கொண்டு 1008 என்ற எண்ணின் தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப் படவில்லை.

கபால நோயின் வகை :

வாதம் முதலாகக் கொண்ட முக்குற்றங்களினால் வரும் நோய்கள்10, கபாலத் தேரை1, கபாலக் கரப்பான் 6, கபாலக் குட்டம் 5, கபாலப் பிளவை 10, கபாலத் திமிர்ப்பு2, கபாலக் கிருமி2, கபாலக் கணப்பு3, கபால வலி1, கபாலக் குத்து1, கபால வறட்சி1, கபால சூலை3, கபால தோடம்1 ஆக 46–ம் உச்சியில் தோன்றும் வகையாகக் குறிப்பிடுவர்.

தலையில் தோன்றும் நோய்களில் கண், காது, தொண்டை, மூக்கு, ஆகியவையும் அடங்கும். தற்காலத்தில் கண் மருத்துவம் எனத் தனியாகவும், காது, தொண்டை, மூக்கு ஆகியவை தனியாகவும், மூளை மருத்துவம் தனியாகவும்–சிறப்பு மருத்துவமாகவும் கொள்ளப் படுகின்றன. ஆனால் சித்த மருத்தவம் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் தனித்தனியே கருதாமல் ஒன்றாகவே கருதியிருக்கக் கூடும். அறிவியல் வளர்ச்சி என்பது தலைக்காட்டாத காலத்திலேயே அறிவியல் முறைக்கு உகந்ததாகச் சித்த மருத்துவத்தை வளர்த்தனர். மூளையில் உருவாகும் குற்றங்களைக் கண்டறிந்து அவை பதினாறு வகை நோயென உரைத்திருப்பது கருதுதற்குரியதாகும்.

அம்மை நோய் :

அம்மை நோய் என்னும் இந்நோயை வைசூரி நோய் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இந்நோய் வருவதற்குக் காரணமாக அமைவது வெப்பமாம். இதனை வெக்கை நோய் என்றும் குறிப்பிடக் காணலாம்.

மேலும், அம்மை நோய்க்குக் குரு நோய், போடகம் என்னும் பெயர்களும் வழங்கப்படுகின்றன.

அம்மைநோய், உடலில் ஏற்படுகின்ற அழலின் காரணத்தினால் உடலில் சூடு உண்டாகி, மூளை கொதிப்படைந்து, எலும்பைத் துளைத்துக் கொண்டு உண்டாகின்றது என்று மருத்துவ நூல் குறிப்பிடுகிறது.

இந்திய மருத்துவ வரலாற்றில் பெரும்பாதிப்பை உருவாக்கியது பெரியம்மை என்னும் வைசூரி நோய். இந்நோய் உயிர்க்கொல்லி நோயாக இருந்தது.

அம்மை நோயால் கண்கள் பாதிப்படையும். தோலில் பள்ளங் களைக் கொண்ட புள்ளிகளை ஏற்படுத்தும். அப்புள்ளிகள் என்றும் மாறாமல் இருப்பதுண்டு.

சித்த மருத்துவம் கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு. அவை,

1. பனை முகரி 2. பாலம்மை

3. மிளகம்மை 4. வரகுதரியம்மை

5. கல்லுதரியம்மை 6. உப்புதரியம்மை

7. கடுகம்மை 8. கடும்பனிச்சையம்மை

9. வெந்தயவம்மை 10. பாசிப்பயறம்மை

11. கொள்ளம்மை 12. விச்சிரிப்பு அம்மை

13. நீர்கொள்ளுவன் அம்மை 14. தவளை அம்மை

என்பனவாகும். இந்நோய்ப் பெயர்கள் அனைத்தும் அம்மைப் புள்ளிகள் தோன்றுவதைக் கொண்டும், அம்மை நோயுற்றவரின் செயலைக் கொண்டும் காரணப் பெயரால் சுட்டப்படுகின்றன. இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் நோயாகவே கருதப்படும். அதுவும் கோடைக் காலமான வேனிற் காலத்திலேயே வரும்.

கண்ணதாசனின் தத்துவங்கள்

துன்பங்களை வளர்ப்பதும் தனிமை தான் ; தணிப்பதும் தனிமை தான் .......

எதிரியின் கையில் உள்ள ஆயுதத்தை பார்த்து கேலி செய்வதைவிட அதை பிடுங்கிகொள்வது புத்திசாலித்தனம்

காலம் போனால் திரும்புவதில்லைகாசுகள் உயிரை காப்பதும் இல்லை !

பெண்கள் பூ போன்றவர்கள் , மாமிசம் சாப்பிட்டு பழக்கப்பட்ட நாய்களுக்கு பூவை கையாள தெரியாது

கட்டுக்காவல் எங்கே பலமாக இருக்கிறதோ , அங்கே தான் தாண்டி குதிக்கும் கால்களும் உறுதியாக இருக்கின்றன

ஒன்று தவிர்க்க முடியாது என்னும் போது. அதை எதிர்கொள்ளும் தைரியம் வந்துதானே தீர வேண்டும்.

சித்தாந்தம் தோற்றுப்போன இடத்தில் வேதாந்தம் தானே கை கொடுக்கிறது? --

கோடையில் குளம் வற்றிவிட்டதேஎன்று கொக்கு கவலைப்படக் கூடாது:மீண்டும் மழை காலம் வருகிறது.மழைக்காலம் வந்துவிட்டதென்று நதிகுதிக்கக் கூடாது: அதோ;வெயில்காலம் வந்து கொண்டிருக்கிறது.

எதை வெட்டிவிட்டால் அடுத்த கேள்வி இருக்காதோ, அதை வெட்டிவிடுபவனே அறிவாளி.

உலகத்தில் தப்பு என்று சில விஷயங்களைக் கருதுகிறோம்.ஆனால், அவை நிதானமாகவும், முறையாகவும் நடக்கும்போது அவையே நியாயங்களாகி விடுகின்றன.

ஊரிலே சாக்கடை என்பது மோசமான பகுதி தான் , ஆனால் அப்படியொன்று இல்லாவிட்டால் ஊரே சாக்கடையாகி விடாதா?

அறிமுகமில்லாதவர்கள் இருக்கின்ற இடத்தில். தவறான விஷயங்கள் நியாயமாகிவிடும்!

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..

வெற்றிக்கு வழி..!

தன்னம்பிக்கை என்பது என்ன? 

தன்னுள்ளே எழும் நம்பிக்கையைத்தான் தன்னம்பிக்கை என்கிறோம். ஒரு மனிதன் தன்னுடைய எண்ணத்தில் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்து முடித்துவிடுவோம் என்று உறுதியாக எண்ணுவதே தன்னம்பிக்கை. 

அந்த எண்ணம் தொடர.. தொடர.... அது வலுப்பெற்று, எந்த தடை வந்தாலும் அதைச் சமாளிக்கும் ஸ்திரத் தன்மையைப் பெற்றுவிடுகிறது. எனவே அந்த எண்ணத்தை (மனதை) எந்த ஒரு தடையாலும், சக்தியாலும் தகர்க்க முடியாது. அதுதான் தன்னம்பிக்கை. 

ஊக்கம்: 

சில சமயங்களில் புறச்சூழல் மற்றும் அகச்சூழலால் தன்னம்பிக்கையில் தளர்வு ஏற்படும். அவ்வாறு தளர்வு ஏற்படும்பொழுது மீண்டும் அதை வலுப்பெறச் செய்து, அதனுடைய ஸ்திரத்தன்மை மீட்டுக்கொண்டுவரப் பயன்படுவதுதான் ஊக்கம். ஊக்கம் ஒருவருடைய மனநிலையை அப்படியே முழுமையாக மாற்றிவிடக் கூடிய சக்தியுடையது. 

இதை தடகளப் போட்டிகளில் நாம் கண்கூடாக காண முடியும். ஒருவர் எட்ட முடியாத உயரத்தை தாண்ட நினைக்கிறார். அவருள் இருக்கும் சக்தியை குறிப்பிட்ட உயரம் வரை மட்டுமே எம்பி குதிக்க முடியும் என்ற நிர்ணயம் செய்துவிடுகிறது. என்றாலும் சுற்றி இருக்கும் பார்வையாளர்களை கைத்தட்டி ஆரவாரம் செய்யச் சொல்கிறார். காரணம் அவருள் இருக்கும் மாபெரும் சக்தி திரட்டுவதற்காக. அவ்வாறு கைத்தட்டி ஆரம்வாரம் செய்யும்பொழுது அவருடைய சாதாரணமான மனநிலையில் ஒரு உந்துதல் ஏற்பட்டு, புதிய சக்தி பிறக்கிறது. இறுதியில் அந்த வீரர் உலகே வியக்கும் வண்ணம் புதிய உலகசாதனையை படைத்துவிடுகிறார். 

இதுதான் ஊக்கத்தின் மகிமை. 

விடா முயற்சி: 

முயற்சி என்பது எல்லோரிடத்திலும் உள்ளது.. விலங்குகளிடம் கூட இந்த முயற்சி உண்டு. ஆனால் விடா முயற்சி? 

அது ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது.. ஒரு சில தோல்விகளிலேயே மனம் உடைந்து போனவர்கள் மீண்டும் அம் முயற்சியை தொடர்வதில்லை.. காரணம் அவர்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட எதிர்மறையான முடிவு. 

'இனிமேல் நம்மால் அது முடியாது' என்று அவர்கள் மனதில் அவர்கள் எடுத்துக்கொண்ட முடிவு. 

ஆனால் விடாமுயற்சி என்பது சாகும்வரை, தன்னுடைய எல்லையை அடையும் வரை, நினைத்ததை சாதித்து முடிக்கும் வரை ஒருபோதும் சோர்ந்துவிடுவதில்லை. 

உறுதியான முடிவு அங்கே நிலைப்பெற்றிருக்கும். எப்படியும் வென்றுவிடுவோம்.. எப்படியவும் இலக்கை அடைந்துவிடுவோம் என்ற ஒரு வெறியுடன் கூடிய திடமான முடிவு மனதில் இருந்துகொண்டே இருக்கும். 

இவ்வாறானவர்கள் விரைவில் வென்றுவிடுவார்கள். காரணம் விடாய முயற்சியே!

மேற்கண்டவைகளைப் பின்பற்றினாலே வாழ்க்கையில் வென்று சாதனை புரியலாம். ஒவ்வொரு வார்த்தையையும் செயல்படுத்த வேண்டும்.. செயல்படுத்தினால் நிச்சயம் வெற்றி நம்மைத் தேடிவரும். 

பதிவைப் படித்தோமா, கருத்தை பகிர்ந்தோமா.. என்றிராமல் பதிவில் உள்ள சொற்களை உள்வாங்கி, அவற்றை அப்படியே செயல்படுத்துதலில் வெற்றி அடங்கியுள்ளது. 

இந்த பதிவைப் படித்த முடித்துவிட்டீர்களா? அட.. நீங்களும் ஒரு வெற்றியாளர்தான்.. எப்படி என்றால் பதிவை முழுமையாக படித்து முடித்ததே ஒரு வெற்றிகரமான செயல்தானே.. !

இப்படி ஒவ்வொரு செயலிலும் வெற்றி... வெற்றி.... என்று மகிழ்ச்சியான, நேர்மறையான எண்ணத்துடன் செயல்பட்டாலே, விரைவில் நினைத்ததை அடைய முடியும். இதுதான் வெற்றிக்கு வழியும் கூட.

வாழ்வின் நம்பிக்கைத் தத்துவங்கள்!

ஈரம் இருக்கும்
வரை இலைகள்
உதிர்வதில்லை..!!!
நம்பிக்கை
இருக்கும் வரை
நாம்
தோற்பதில்லை..!!!
***************
உன் தாய் தந்தையின் அருமை
நீ வளரும் போது தெரியாது
உன் பிள்ளையை
வளர்க்கும் போது தான் தெரியும்...!!!
***************
துன்பத்தை நினைத்து
மகிழ்ச்சியை இழக்காதே!
காதலை நினைத்து
வாழ்க்கையை இழக்காதே!
சோதனையை நினைத்து
சாதனையை இழக்காதே!
தோல்வியை நினைத்து
வெற்றியை இழக்காதே!
****************
கஷ்டங்கள் மட்டும்
இல்லை என்றால்....
போராடும் எண்ணமே நமக்கு
இல்லாமல் போய்விடும்!!!
***************

படித்ததில் பிடித்த தத்துவங்கள் & நகைச்சுவைகள்

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ
அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.
=========================
வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
=========================
ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
=========================
நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,
ஒரு நல்ல நண்பனின் மவுனம்
இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.
=========================
நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;
ஆனால் அனுபவமோ
தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது. - பில் கேட்ஸ்
=========================
சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை!
=========================
மேலாளர்: உன் தகுதி என்ன?
சர்தார்: நான் Ph.D
மேலாளர்: Ph.Dன்னா என்ன?
சர்தார்: Passed high school with Difficulty.
=========================
நானும் சரி ஒரு ரவுண்டுதானேன்னு இன்டர்வியூக்குப் போனேன்.
அங்கே 5பேரும்மா.
மாத்தி மாத்தி கேள்வி கேட்டாங்க.
என்னால முடிஞ்ச வரைக்கும் பதில் சொன்னேன்.
திடீர்னு ஒருத்தன் HRக்கு போன் போட்டு
மச்சான் ஃபிரீயா இருந்தா வாடா.
ஒருத்தன் சிக்கியிருக்கான்னு சொன்னான்.

சரின்னு நானும் 4ஆவது மாடிக்குப் போனேன்.
அங்கே 8 பேரும்மா.
அவங்களால எவ்வளவு முடியுமோ
அவ்வளவு கேள்வி கேட்டாங்க.
நானும் எவ்வளவு நேரம் பதில் தெரிஞ்ச மாதிரியே நடிக்கிறது?
அதுல ஒருத்தன் சொன்னான்
இவன் எவ்வளவு கேள்வி கேட்டாலும் சமாளிக்கிறான்டா
இவன் ரொம்ப அறிவாளின்னு சொல்லிட்டாம்மா.
=========================
(தேர்வு அறையில்)

ஆசிரியர்: டேய் என்னடா... கையில் ஃபார்முலா எழுதியிருக்கே?
மாணவன்: எங்க கணக்கு வாத்தியார்தான் ஃபார்முலா எல்லாம் விரல் நுனியில்இருக்கணும்னு சொன்னார்.
=========================
விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.
=========================
அறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது நீங்க மனசு சொல்வதை மட்டும்கேளுங்கள்.

ஏன்னா அறிவு......

சரி விடு. இல்லாததைப் பத்திப் பேச வேண்டாம்.
=========================
ஒண்ணு + ஒண்ணு = ரெண்டு
நீதான் எனக்கு ஃபிரெண்டு.

ரெண்டு + ரெண்டு = நாலு
நீ ரொம்ப வாலு.

மூணு + மூணு = ஆறு
நீ இல்லாம போரு.

நாலு + நாலு = எட்டு
எஸ்எம்எஸ் அனுப்பலன்னா குட்டு.
=========================
நட்பு எனும் கலையானது, 
ஒரு நல்ல இசைக் கருவியை வாசிப்பது போன்றது. 
முதலில் விதிகளின்படி இந்தக் கருவியை வாசிக்கத் தொடங்க வேண்டும். 
பிறகு விதிகளை மறந்துவிட்டு இதயத்திலிருந்து வாசிக்க வேண்டும். 
=========================
கடவுள், 
நகைச்சுவையுடன் எழுதக்கூடிய ஒரு சிறந்த எழுத்தாளர். 
ஆனால் அவர், நகைச்சுவையுடன் நடிக்கத் தெரியாத 
மோசமான நடிகர்கள் பலரைக் கொண்டு தன் நாடகத்தை நடத்துகிறார்.
=========================
30 மாநிலங்கள்
1618 மொழிகள்
6400 சாதிகள்
6 மதங்கள்
6 இனங்கள்
29 பெரிய பண்டிகைகள்
ஒரு நாடு!
இந்தியனாக இருப்பதற்காகப் பெருமைப்படுங்கள்!
=========================
உயிரின் சுவாசம் மூச்சு
கண்களின் சுவாசம் கனவு
இதயத்தின் சுவாசம் துடிப்பு
நாக்கின் சுவாசம் பேச்சு
என் நட்பின் சுவாசம் நீ
=========================
எனக்கு இட்லியைப் பிடிக்காது
தோசையைத்தான் பிடிக்கும்.
ஏன்னா, இட்லி கூட்டமா வேகும்.
தோசை சிங்கிளாத்தான் வேகும்.
கூல்... 
=========================
உதவும் கரங்கள் 
ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.
- அன்னை தெரஸா.
=========================
வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
அதனால்,
வெற்றிக்குப் பிறகு
தொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;
தோல்விக்குப் பிறகு
தொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்!
=========================
எல்லாம் சில காலமே - ரமண மகரிஷி
=========================
கண்களைத் திறந்து பார்
அனைவரும் தெரிவார்கள்.

கண்களை மூடிப் பார்.
உனக்குப் பிடித்தவர்கள் மட்டும் தெரிவார்கள்!
=========================
தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!

துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை!
=========================
கையில் 10 ரோஜாக்களோடு
கண்ணாடி முன் நில்லுங்கள்!
இப்போது நீங்கள் 11 ரோஜாக்களைக் காண்பீர்கள்!
அந்த 11ஆவது ரோஜா,
உங்கள் புன்னகை!
நீங்ள் இப்போது புன்னைப்பதை நான் அறிவேன்!
=========================
வெற்றியை விரும்பும் நமக்குத் தோல்வியைத் தாங்கும் மனம் இல்லை;
தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்.
=========================
உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?
பிரச்சினைகள் வரும்போது அல்ல;
பிரச்சினைகளைக் கண்டு நீங்கள்
பயந்து விலகும்போது. - பாரதியார்
=========================
எவையெல்லாம் அழகாக இருக்கின்றனவோ
எவையெல்லாம் அர்த்தத்துடன் இருக்கின்றனவோ
எவையெல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமோ
அவை அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கட்டும்!
இன்றும் நாளையும் என்றும்.
=========================
இதை மெதுவாகப் படியுங்கள்:

LIFEISNOWHERE
இதை எப்படிப் படித்தீர்கள்?
LIFE IS NO WHERE என்றா?
LIFE IS NOW HERE என்றா?
நாம் பார்க்கிற விதத்தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பதை இந்த ஒற்றை வரிஉணர்த்திவிடுகிறது!
=========================
மின்தடை ஏற்படும்போதுதான்
நமக்கு மெழுதுவர்த்தி ஞாபகம் வருகிறது.
அப்படித்தான் பிரச்சினைகளின் போது
ஒரு நண்பர், தீர்வு என்னும் விளக்கேந்தி வருகிறார்.
நான் உனக்கொரு மெழுகுவர்த்தியாக இருப்பேன்
என்ற நம்பிக்கை எனக்குண்டு.
=========================
நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!
=========================
ஒரு நாள், கடவுள் என்னைக் கேட்டார்:

"இந்த நண்பர் இன்னும் எவ்வளவு காலம்
உன்னுடன் இருக்க வேண்டும்?"

நான் கண்ணீர் உகுத்தேன்.
என் கண்ணீர்த் துளி
ஒரு பெருங்கடலில் விழுந்தது.

நான் இப்போது கடவுளிடம் சொன்னேன்:

"இந்தத் துளியை நீங்கள் கண்டுபிடிக்கும் வரை."
=========================
நீ மற்றவருக்கு வழிகாட்டி ஆவதற்காகப்
பிறந்திருக்கிறாய்.
ஏன் மற்றவர்களிடம் உன் வழிகாட்டியைத்
தேடிக் கொண்டிருக்கிறாய்?
இந்த உலகம்
உன் வெற்றிக் கதையைப் படிக்கக்
காத்துக்கொண்டிருக்கிறது.
=========================
பிறக்கும்போது தாயை அழவைக்கிறோம்
இறக்கும்போது எல்லோரையுமே அழவைக்கிறோம்
வாழும்போதாவது
எல்லோரிடமும் சிரிக்கப் பழகுவோம்.
=========================
2 சொட்டு போட்டா அது போலியோ.
4 சொட்டு போட்டா அது உஜாலா
2880 சொட்டு போட்டா அது குவாட்டர்
இதுதான் இன்னிக்கு மேட்டர்.
=========================
வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும்
உப்பாக இருக்கலாம்.
ஆனால்,
அவைதான்
வாழ்வை இனிமையாக மாற்றும்.
=========================
ஒவ்வொரு மாநிலப் பெண்களிடமும்
ஒவ்வொரு சிறப்பு உண்டு.

கேரளா: நீண்ட கூந்தல்.
ஆந்திரா: கூரிய மூக்கு
மும்பை: செழுமையான கன்னங்கள்
பஞ்சாப்: பளிச் என்ற நிறம்
தமிழ்நாடு: ஒன்னுமே இல்லேன்னாலும் ஓவரா சீன் போடறது
=========================
நாம் அனைவரும் ஒரே அளவு திறமை பெற்றவர்கள் இல்லை
ஆனால்,
நம் திறமையை வளர்த்துக்கொள்ள
ஒரே அளவு வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம்.
- அப்துல்கலாம்.
=========================
ஓர் உண்மை:
நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது,
நீ யாரை விரும்புகிறாயோ
அவரை நினைத்துக்கொள்வாய்!

நீ துயரத்தில் இருக்கும்போது,
உன்னை யார் விரும்புகிறாரோ
அவரை நினைத்துக்கொள்வாய்!
=========================
ஒரு சிறிய கையசைப்பு, நம்மை அழவைக்கலாம்!
ஒரு சிறிய நகைச்சுவை, நம்மைச் சிரிக்கவைக்கலாம்!
ஒரு சிறிய அக்கறை, நம்மைக் காதலில் விழவைக்கலாம்!
ஒரு சிறிய தொடுதல், நம் உணர்வைக் கூர்மைப்படுத்தலாம்!
நானும் நம்புகிறேன்
என் சிறிய குறுஞ்செய்தி,
உனக்கு என்னை நினைவுபடுத்தலாம்!
=========================
உங்கள் இதயத்தில் மகிழ்ச்சி
உங்கள் ஆன்மாவில் புத்துணர்வு
உங்கள் வாழ்வில் வெற்றி
உங்கள் முகத்தில் புன்னகை
உங்கள் இல்லத்தில் அன்பின் நறுமணம்
இவை அனைத்தும் உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்!

நட்பு எனும் கலையானது, 
ஒரு நல்ல இசைக் கருவியை வாசிப்பது போன்றது. 
முதலில் விதிகளின்படி இந்தக் கருவியை வாசிக்கத் தொடங்க வேண்டும். 
பிறகு விதிகளை மறந்துவிட்டு இதயத்திலிருந்து வாசிக்க வேண்டும்    


பிறக்கும்போது தாயை அழவைக்கிறோம்
இறக்கும்போது எல்லோரையுமே அழவைக்கிறோம்
வாழும்போதாவது
எல்லோரிடமும் சிரிக்கப் பழகுவோம்

வாழ்வில் முன்னேற... விட வேண்டிய ஆறு குணங்கள்!

தன் வாழ்வில் முன்னேற விரும்புபவன் ஆறு குணங்களை விட்டுவிட வேண்டும் என்கிறது விதுரநீதி. அவை 1. தூக்கம், 2. சோர்வு, 3. அச்சம், 4. கோபம், 5. சோம்பேறித்தனம், 6. காரியத்தை ஒத்திப்போடுதல். விதுரரே அந்த ஆறு குணங்களை விட்டதால்தான் பஞ்ச பாண்டவர்களை எல்லா ஆபத்தில் இருந்தும் காப்பாற்றினார் எப்படி?மாமன், சகுனி, துரியோதனின் பங்காளிகளை வேருடன் களைய திட்டம் தீட்டினான். வாரணாவதம் எனும் இடத்தில் விளையாட்டுகளைக் கண்டு களித்து ஒரு வருடம் சுகவாசியாக அரசு மாளிகையில் தங்கி உடல், மனம் இவற்றைத் தேற்றிக்கொள்ள பாண்டவர்களை அனுப்பினான். கூடவே குந்தியும் சென்றாள். திருதராஷ்டிரனே உத்தரவு போட்டதால் யாருக்கும் சந்தேகமே வரவில்லை.

சகுனியின் நம்பிக்கைக்கு உகந்த புரோசனன் எனும் கட்டிடக் கலை நிபுணன் உதவியால் அரசு மாளிகை அரக்கு மாளிகையாகக் கட்டப்பட்டது. மரத்தால் கட்டப்பட்ட கிரிடாக்ரஹம் (விளையாட்டு மாளிகை) சகுனியின் உத்தரவுப்படி அரக்கினால் பூசப்பட்டது. இன்னும் சில இடங்களில் வெறும் நெய், கொழுப்பு என்று சீக்கிரம் எரியும் பொருட்களால் நிரப்பப்பட்டது. ஒரே வாசல் வழியேதான் உள்ளேயும் வெளியேயும் போக முடியும். பாண்டவர்கள் வாரணாவதத்துக்குக் கிளம்பும் போது விதுரர், சாப்பாட்டில் விஷம். அக்னி இரண்டிலும் மிக மிக னாக்கிரதையாக இருக்கும்படி தருமரிடம் கூறினார். அவர்கள் சென்றபின் முழு விவரமும் அறிந்த விதுரர் உறங்கவே இல்லை. தூக்கத்தைக் கைவிட்டார். அரக்கு மாளிகையில் இருந்து பாண்டவர்கள் தப்ப, சுரங்கம் தோண்டுவதில் நிபுணன் ஒருவனை அனுப்பிவைத்தார் விதுரர். பகலில் புரோசனனை அழைத்துக்கொண்டு பாண்டவர்கள் சென்ற சமயத்தில், அவன் சுரங்கபணியில் ஈடுபட்டான்.

அதேசமயம் துரியோதனன் அருகிலேயே இருந்தார் விதுரர், சிறிதும் பயப்படவில்லை. சகுனி துளி மோப்பம் பிடித்தாலும். விதுரர்உயிருடன் இருப்பது கடினம். அவர் அச்சப்படவில்லை. பீஷ்மரிடம் இதைப்பற்றி மூச்சும் விடவில்லை. துரியோதனன் செய்த ஏற்பாட்டை முறியடிக்க, ஒரு நிமிடத்தையும் வீண் செய்யவில்லை. நாளைக்குச் செய்யலாம் என ஒத்திப் போடவில்லை. சுரங்கம் அமைக்கும் பணி நிறைவடைந்தது அரக்கு மாளிகைக்கு வந்த ஒரு வேட்டுவப் பெண், தன் ஐந்து மகன்களுடன் விருந்தும் மதுவும் உண்டு களித்தாள். அந்த மாளிகையில் அவர்கள் மயங்கிக் கிடந்தபோது, கடைசியாக வெளியேறிய பீமன் ஒரு தீப்பந்தத்தை மாளிகையின்மேல் எறிந்துவிட்டுச் சென்றான். அதுவே கடைசி விருந்தாக ஆயிற்று அவர்களுக்கு! பாண்டவர்கள் இறந்ததாக எல்லோரும் நினைத்தார்கள். அதேசமயம் விதுரர் அனுப்பிய ஆள் சுரங்கம் வழியாக கங்கைக் கரைக்கு அவர்களை அழைத்துச் சென்றான். பாண்டவர்கள் பிழைத்தார்கள். ஏக சக்ர நகரத்தில் வசித்தார்கள். என்றெல்லாம் மகாபாரதம் விரிகிறது என்றால், அதற்குக் காரணம் விதுரரின் இந்த குணங்கள்தான்!

ஷட்தோஷாஹா புருஷேணேஹ
ஹாதவ்யா பூதிமிச்சதா!
நித்ரா தந்த்ரா பயம் குரோத
ஆலஸ்யம் தீர்க சூத்ரதா.