Wednesday, July 24, 2013

தத்துவங்கள் 2013

 எல்லோரும் உண்மையையே பேசுகிறோம் வாய் திறக்காதவரை!

தவறி விழும்போது மட்டுமே சிலருக்கு வாயிலிருந்து வருகிறது - "அம்மா"

சரியோ தவறோ கடந்துவிடுகிறது -வாழ்க்கை    

மனைவி அடிக்கும்போது வாய்விட்டு கத்த முடிஞ்சா அதுதான் சுதந்திரம்!

பிரதர்க்கும் பிரதமர்க்கும் என்ன வித்தியாசம்?
பிரதர் பேசியே கொல்லுவான், பிரதமர் பேசாம கொல்லுவார்!

போனில் பாஸ் பேசும்போது
பதில்-"எஸ் சார், ஓகே சார், ஓகே சார், எஸ் சார், ஓகே சார், ஓகே சார், ஓகே சார்!"

உங்களிடம் உள்ள டிகிரியை வைத்துக்கொண்டு ஒரு ஃபில்டர் காபிகூட போட முடியாது!

பெண்களுக்குத் தேவை குடிக்காத நல்ல ஆண்கள்!
இல்லாதததைத் தேடுவதே இவங்களுக்கு பொழப்பா போச்சு!
 
நன்றியும் மன்னிப்பும் நட்பிற்கு தேவையில்லை - சரக்கு மட்டும் போதும்

பெண்கள் அழகு என்பதை நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன்!
 மறுத்து நான் அழகு என்பவர்கள் என்னை நேரில் பார்க்கவும்!

'சட்டம் தன் கடைமையைச் செய்யும்'ங்கிறாங்களே எங்க வீட்டிலேயும் கூரைல சட்டம் தன் கடைமையைச் செய்துகிட்டிருக்கே அதானா இது?

பவர் ஸ்டாரை புடிச்சு ஜெயில்ல போட்டுட்டீங்க,
 அப்புறம் எப்படி இருக்கும் தமிழ் நாட்டுல பவரு

கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்!

ஆசையை வளரவிடாதே அது "கள்" ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை"கள்")

ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் - ஒவ்வொரு முறையும்!!

இந்தியாவில தீர்ப்பு சொல்லும்போது வழக்கு போட்டவன் உயிரோடு இருப்பதில்லை அல்லது குற்றவாளி உயிரோடு இருப்பதில்லை.

காலம் கடந்து கொடுக்கப்படும் எந்த ஒரு சரியான தீர்ப்பும் தவறானதே!

சில தவறுகள் மன்னிக்கப்படாதது தான் மிகப்பெரிய தவறாய் மாறிவிடுகின்றது!!

நல்லதாய் ஒரு காரியம் செய் என்பதற்கு வேண்டாத ஒருவருக்குக் காரியம் செய் என்பது பொருளல்ல!

கஷ்டம் என்றால் என்னவவென்று தெரிந்துகொள்ளவே கஷ்டப்படுகிறேன்!    

வாழ்க்கைல நல்லவனா இருப்பதைவிட நல்லவனா நடிப்பது ரொம்ப கஷ்டம்டா சாமி!

No comments:

Post a Comment