Monday, April 25, 2016

வாழ்க்கையில் முன்னேற நாம் பயன்படுத்த தவறிய‌ வழிகள் பத்து அத்தனையும் முத்து

1. வாழ்க்கைத் திட்டம் இல்லாமை
2. சமயத்துக்கு தகுந்தபடி திறனை பயன்படுத்த தவறுதல்
3. பலனை வெளிப்படுத்த தவறுதல்
4. தகுதியையும் திறமையும் குழப்புதல்
5. உங்களுக்குப் பதிலாக வேறொருவர்
6. கேள்வி கேட்பதில் விருப்பம்
7. புகழ்ச்சிக்கு மயங்கி பொழுதைக் கழித்தல்
8. பிறரை பாராட்ட மறுப்பது
9. தன்னை முன்னிறுத்த தவறுவது
10. குறைகளை உணரத் தவறுதல்

மேற்கண்ட பத்து வழிகளை எப்ப‍டி சரிசெய்வது என்பதை பார்ப் போம்

1. வாழ்க்கைத் திட்டம் இல்லாமை
தெளிவான வாழ்க்கைத் திட்டத்தை வகு த்தவர்கள் எல்லோருமே வெற்றி பெற்ற மனிதர்களாக உலா வருகிறார்கள். தங்கள் முன்னேற்றத்திற்கு இ தை இதை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு அவற்றை மனதில் கொண்டு இவர்கள் செயல்பட்டு இருப்பார் கள். அல்லது, தங்கள் திட்டங்களை வரி சைப்படுத்தி எழுதிவைத்து செயல்படுத்தி இருப்பார்கள். அந்தத் திட்டங்களை உரு வாக்கி, அதை அவ்வப்போது சீர் செய்து உபயோகித்து இருப்பார்கள். 85%பேர் தங் கள் வாழ்க்கையில் திருப்திகரமான திட்ட ம் வகுத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். ‘திட்டம் இல்லாவிட்டால், நமது வெற்றி யை வேறொருவர் கையில் கொடுத்துவிட நேரும். அவர்களும் கூட மற்றவர்கள் வெற்றியைப் பற்றி கவலைப் பட நேரம் இல்லாதவர்களாக இரு ப்பார்கள்’’ என்கிறார் மெக்கீ.

2. சமயத்துக்கு தகுந்தபடி திறனை பயன்படுத்த தவறுதல்
வர்த்தகத்தின் போக்கு நாளுக்கு நாள் நேரத்துக்கு நேரம் மாறிக் கொண்டே இருக்கும். வினியோ கத்தைக் காட்டிலும் வேலைக்கு கூடுதல் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கும். சக ஊழிய ர்களிடம் எச்சரிக்கையாக இருங் கள். அவர்கள் எப்போதும் உங்க ள் இடத்தைக் கைப்பற்ற தயாராக இருப்பார்கள்.
நிறுவனங்கள் தங்கள் செலவுகளைச் சுரு க்கவோ, அல்லது, தங்க ள் முதலீட்டுக்கு அதிகபட்ச லாபத்தை ஈட்டவோ விரும்புகி ன்றன. ‘‘உங்களைக் காட் டிலும் கூடுதல் லாபம் சம்பாதித்துத் தரக்கூடிய நபர் உங் கள் இடத்துக்கு நியமிக்கப்படும் வாய்ப்பு இருந்து கொண் டே இருக்கும்.

3. பலனை வெளிப்படுத்த தவறுதல்
பொறுப்புணர்வுதான் வெற்றிக்கு முக்கி ய காரணம் என்பது வெற்றியாளர்களுக் குப் புரியும். நீங்கள் உங்கள் பொறுப்பை தட்டிக்கழித் தால், மூலையில் தூக்கி வீச ப்படுவீர்கள் என்பதை உணரவேண்டும். வர்த்தகத் தையோ, தொழில் துறையையோ புரிந்து கொள் ளுங்கள். தொலைக் காட்சியில் எந்த நிகழ்ச்சிக் கு வருவாய் அதிகமோ, யாருடைய நிகழ்ச்சிக்கு அதிக பார்வையாளர்கள் கிடைக்கிறார்களோ அ வர்களுக்கு மதிப்பு கூடும். பார்வையாளர்கள் வி ரும்பாத நிகழ்ச்சிகள் தூக்கி எறியப்படும். அது போலத்தான், உங்களால் வருவாய் குறையும்போ து உங்களுக்குப் பதிலாக வேறு நபர் நியமிக்க ப்பட்டு விடுவார்.

4. தகுதியையும் திறமையும் குழப்புதல்
நேரடித் தொடர்பைக் காட்டிலும், மெயில் மூலம் தொடர்பு கொள்வதே இக்காலத்தில் போதுமானதாக சிலர் கருதுகிறார்கள். இது அவர்களுடை ய தனித்தகுதி எனவும் நினைக்கிறா ர்கள். இருந்தாலும் நேரடித்தொடர்பு தான் தனித்திறமையை வெளிப்படுத்தவும், நிலையான வெற்றிக்கு அடித்தளமாகவும் கருதப்படுகிறது. மெயில் மூலம் தொடர்புகொள்ளுதல் ஒருவருடைய தகுதியை வெளிப்படுத்தலாம். ஆனால், நேர டியாக பேசிப்பழகுதல் அவரிடைய திறமை யை முழுமையாக பிறர் புரிந்துகொள்ள உதவும் என்பதை உணர வேண்டும்.

5. உங்களுக்குப் பதிலாக வேறொருவர்
பணிபுரியும் இடங்களில் எதுவுமே நிரந்தரம் இல்லை. ஒரு விஷய த்தை நீங்கள் மட்டுமே செய்ய முடியும் என் பது இல்லை. ஒரு காரியத்தை நீங்கள் மட்டுமே செய் ய முடியும் என்றும், நீங்கள் செய்தால்தான் அது சரியாக இருக்கும் என்றும் எப்போது நம்பத் தொ டங்குகிறீர்களோ, அப்போதே உங்கள் வீழ்ச்சி தொடங்கிவிடுகிறது என்பதை புரிந்து கொள்ளு ங்கள்.

6. கேள்வி கேட்பதில் விருப்பம்
சிறந்த தலைவர்கள் யாவருமே கேள்விகள் கேட்பதையே விரும்புவார்கள். எல்லா கே ள்விகளுக்கும் பதில் தெரிந்தவராக தன் னைக் காட்டிக் கொள்கிறவர்கள் தோல்வி யையே சந்திப்பார்கள். நிறைய கேள்விகள் கேட்டவர்கள் பின்னாளில் வெற்றிச் சிகரத் தை தொட்டிருக்கிறார்கள். அறிவுதான் ஆற் றல் என்பதே உண்மை. வெற்றியாளர்கள் எல் லோருமே புதிய யோசனைகளையும் அணுகு முறைக ளையும் கற்றுக்கொள்ள விரும்புகி றவர்களாக இருக்கிறார்கள். அவ்வப்போதை ய சூழலுக்குத் தகுந்தவாறு யோசனைகளை கடைப்பிடிக்கிறவர்கள் தனக்குக் கீழ் பணி புரிகிறவர்களால் விரும்ப ப்படுகிறார்கள்.

7. புகழ்ச்சிக்கு மயங்கி பொழுதைக் கழித்தல்
தங்களைச் சுற்றிலும் புகழ்பாடும் கூட்ட த்தை சேர்த்திருப்பவர்கள் உழைப்பை வீ ணாக்குகிறார்கள். அவர்கள் பாடும் பாட் டு உண்மையாக இருந்தாலும் சரி, பொ ய்யாக இருந்தாலும் சரி. அந்தப் பாட்டுக் கு மயங்குகிறவர்கள் இருக்கிறார்கள். புகழ்பாடும் நபர்களை தட்டிக் கேட்கத் தவறுகிறார்கள். வெற்றிகரமான மேலாளர்கள் அனைவருமே, மற் றவர்களுக்குள் இருக்கும் புத்தி கூர்மையையும், ப டைப்புத் திறனையும் ஊக்குவிக்கிறவர்களாக இரு க்கிறார்கள்.

8. பிறரை பாராட்ட மறுப்பது
தொழிலாளர்கள் அல்லது ஊழியர்களால் கிடைக் கும் லாபத்தை அல்லது உழைப்பின் பலனை அங்கீ கரித்து பாராட்டமறுப்பவர்கள் நஷ்டத்தையே சந்தி ப்பார்கள். தங்களுடைய உழை ப்புக்கு ஏற்ற பாராட்டுகளை தொழிலாளர்கள் எதிர்பார்ப்பார்கள் என்பதை அவர்கள் உணர வே ண்டும். வெற்றியாளர்கள் யாவருமே, சக தொழி லாளர்களைப் பாராட்டி வேலை வாங்கியவர்க ள் என்பதை நிதர்சனமானஉண்மை. தங்களுடை ய யோசனைகளைத் திருடி முதலாளிகள் பெயர் சம்பாதித்தை தொழிலாளர்கள் விரும்புவதில் லை.

9. தன்னை முன்னிறுத்த தவறுவது
வெற்றி பெற்றவர்கள் தங்களுடைய வெற்றி க்கு காரணத்தை பிறருக்கு தெரிவிக்காமல் ம றைப்பதும் தவறு. நேர்வழியில் வெற்றி பெற் றவர்கள் அதை பகிரங்க மாக தெரிவிப்பதன் மூல ம் மற்றவர்களுக்கு உதாரணமாக முடியும். வெற்றியின் ரகசியத்தை தெரிவிக்க மறுத்தால், அவர்கள் தவறான வழியில் வெற்றி பெற்றதாக பிறர் கருத இடம் கொடுத்துவிடும்.

10. குறைகளை உணரத் தவறுதல்
வெற்றி பெறுவதற்கான எத்தனையோ முய ற்சிகளில் ஈடுபடுவீர்கள். மிகச் சிறந்த யோ சனைகளைக் கூட கடைப்பிடிப்பீர்கள். இரு ந்தாலும் உங்கள் பாதையில் வரும் தடங்க ல்களை எதிர் கொள்வதற்கு உங்கள் நண்பர் களிடமோ, சகாக் களிடமோ, உங்களுக்குப் பயிற்சி அளித் தவரிடமோ ஆலோசனை கேட்க தவறி யிருப்பீர்கள். உங்கள் குறைகள் உங்க ளைக் காட்டிலும் பிறருக்கு நன்றாக தெ ரியும் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டு ம். தவறினால், தோல்வியைச் சந்திக்க வேண்டியதுதான்.

No comments:

Post a Comment