Monday, January 30, 2017

உதவி பண்ணுங்க....ஒருவனுக்கு நீங்கள் கூறும் ஆறுதல் கூட உதவிதான்

1.துடுப்பு கூட உதவி பண்ணுகிறது ஓடம் செல்வதற்க்கு..எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்..

2.புல்லாங்குழலும் உதவுகிறது இசைக்கு தன் உயிர் தந்து....எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்..
... 
3.ஏணியும் கூட உதவுகிறது நம்மை மேலே ஏற்றிவிட.....எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்..

4.மரம் கூட நிழல் தந்து நமக்கு உதவுகிறது...எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்...ரோட்டுல விபத்துல அடிபட்டிருப்பவரை பார்த்து உச்சு கொட்டுவதை நிறுத்துங்கள் முதலுதவி பண்ணுறவரை தடுக்காதீங்க அதுவே நீங்க அவருக்கு செய்யுற மிகப்பெரிய உதவி...அடுத்தவன கவுக்குறதுக்கு நீங்க கொடுக்குற ஐடியா உதவி கிடையாது.அடுத்தவன் அடுத்தடுத்த வெற்றி பெற நீங்க கொடுக்குற ஐடியா தான் உதவி.உதவி பண்ணிட்டு அதை ஊர்ல உள்ள அம்புட்டுபேருக்கும் போஸ்டர் அடிக்காத குறையாக தம்பட்டம் அடிக்காதீங்க ,அதுக்கு நீங்க உதவி பண்ணாமலே இருக்கலாம்.(உ.தா) நம்ம நடிகர்கள் பண்ணுற உதவிகள்.....கோவில் போன்ற புனித ஸ்தலங்களில் அன்பளிப்பு என்ற பெயரில் நம் மக்கள் தங்கள் பெயரையே அந்த அன்பளிப்பு பொருள் மறையுற அளவுக்கு பொறிச்சுருப்பாங்க.....தேவையா இந்த விளம்பரம்......(உ.தா)டியூப்லைட் அன்பளிப்பு கருவேல்னாயக்கன்பட்டி க.மு.கே.கருப்பசாமி....கருப்பு கலர்ல இதுல எங்க வெளிச்சம் தெரியும்?

கல்யாணவீட்டுல நீங்க அளிக்கும் அன்பளிப்பு மணமக்களுக்கு நீங்கள் தரும் பரிசு அன்பு பரிசாய் இருக்கட்டும் வம்பு பரிசாய் வேண்டாம்(உ.தா) உங்க மகனுக்கு நான் ஆயிரம் மொய்யெழுதினேன் நீங்க ஐனூறுதான் எழுதிருக்கீங்கன்னு ஆரம்பிக்கிற சண்டை பெரிய கொலை கேசே ஆயிருக்கு தேவையா வம்பு......முடிந்ததை செய்யுங்கள்......

நீங்கள் செய்கிற உதவி ஒருவரால் மனதாரா வாழ்த்தட்டும் உதட்டால் அல்ல.....

எண்ணி தருவது உதவியல்ல .... நல்ல எண்ணத்தால் தருவதே உதவி.....

ஒருவேளை உணவளித்தாலும் மனதளவால் அளியுங்கள் கையளாவால் அல்ல.....

தேவைப்படும் பொழுது நீங்கள் உதவும் ஒரு ரூபாயும் ஒருகோடிக்கு சமம்.....

தேவையில்லாத பொழுது நீங்கள் அமிர்தமளித்தாலும் அது நஞ்சாக தெரியும்...

கஷ்டத்திலும், நஷ்டத்திலும் துவண்டிருக்கும் ஒருவனுக்கு நீங்கள் கூறும் ஆறுதல் கூட உதவிதான்

மரியாதை

மரியாதையை பல நேரங்களில், மரியாதை என்பது உங்கள் பதவிக்காகவும், பணத்திற்காகவும் கொடுக்கப்படுகிறது அதை உங்களுக்காக தரப்பட்டதாக நினைத்தால், அது முட்டாள்தனம்.

எப்போது மதிப்பு உயரும்? ஒருவன் ஒரு விஷயத்தை தெரிந்து வைத்திருப்பது என்பது வேறு தெரிந்து வைத்திருப்பதைச் செயல் படுத்துவது என்பது வேறு ... எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறான் என்பதில் ஒருவன் மதிக்கப்படுவதில்லை

தெரிந்து வைத்திருப்பதை எப்படிச் செயல் படுத்துகிறான் என்பதை பொறுத்தே அவன் மதிப்பு உயரும்

பிள்ளையாருக்கு ஏன் தோப்புக்கரணம் போட வேண்டும் ?

பிள்ளையார் மிகவும் எளிமையான கடவுள். மஞ்சள்பொடி, பசுஞ்சாணம் எதைப் பிடித்து வைத்தாலும் பிள்ளையார் ஆவாஹணம் ஆகிவிடுவார். அவருடைய வழிபாடும் மிக எளிமையானது. சின்னச் சின்ன வழிபாடுகளிலேயே மகிழ்ந்து, நாம் கேட்கும் வரங்களை உடனுக்குடன் கொடுத்துவிடுவார்.

தோப்புக்கரணம்

நெற்றிப்பொட்டில் குட்டிக் கொள்வதும், தோப்புக்கரணம் போடுவதும் பிள்ளையாரை வழிபடும்போது பக்தர்கள் அவசியம் கடைப்பிடிக்கவேண்டிய நியதிகள் ஆகும். இப்படி விநாயகருக்கு தோப்புக்கரணம் போடுவதன் பின்னணியில் இருக்கும் தத்துவம் பற்றி விளக்குகிறார் வேத விற்பன்னர் சுந்தரேசஷர்மா.

''விநாயகருக்கு முன்பாக இரண்டு கைகளையும் நெற்றிப்பொட்டில் குட்டிக் கொள்வார்கள். இரண்டு காது மடல்களையும் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடுவார்கள். இதன் பின்னணியில் சுவாரஸ்யமான ஒரு புராணக் கதை சொல்லப்பட்டு இருக்கிறது.

முன்பொரு சமயம், கஜமுகாசுரன் என்ற அரக்கன் சிவபெருமானை நோக்கி கடும்தவம் புரிந்தான். அவனது தவ வலிமையைக்கண்டு சக்திமிக்க பல வரங்களை அவர் வழங்கினார். இத்தனை வரங்களைப் பெற்றதும் கஜமுகாசுரன் தனது சேஷ்டைகளைத் தொடங்கிவிட்டான். பலவிதத்திலும் மக்களுக்கும், தேவர்களுக்கும் கணக்கிலடங்காத துன்பங்களைக் கொடுத்தான்.  ஒவ்வொரு நாளும், தேவர்களை சின்னக் குழந்தைகளைப் போல பாவித்து, அவர்களை காலை, மதியம், மாலை, இரவு எனப் பாராமல் தொடர்ந்து 1,008 தோப்புக்கரணங்கள் போடச்சொன்னான். இதனால்  தேவர்கள் உலக இயக்கத்துக்கு தங்களது கடமைகளை ஆற்றமுடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர். இதை சிவபெருமானிடம் சொல்லி வருந்தினர். உலகையெல்லாம் காத்து ரட்சிக்கும் இறைவன் கஜமுகாசுரனை அழிப்பதற்கு விநாயகரை அனுப்பி வைத்தார்.

விநாயகருக்கும் கஜமுகாசுரனுக்கும் நடைபெற்ற பெரும் போரில் அவனது படை முற்றிலும் அழிந்தது. ஆனால், அவனை மட்டும் அழிக்க முடியவில்லை. எந்த ஆயுதத்தாலும் தனக்கு அழிவு வரக்கூடாது எனும் வரத்தை வாங்கி இருந்ததால், அவனை விநாயகரால் அழிக்க முடியவில்லை. உடனே, விநாயகர் தனது கொம்புகளில் ஒன்றை ஒடித்து சிவ மந்திரத்தைச் சொல்லி வீசவே கஜமுகாசுரனின்  அசுர உருவம் அழிந்து பெருச்சாளி வடிவமாகி விநாயகரைப் பணிந்து நின்றான். விநாயகரும், அவனை மன்னித்து தனது வாகனமாக்கிக் கொண்டார். நிலைமை கட்டுக்குள் வந்து சகஜமானதும், தேவர்கள் விநாயகப் பெருமானை வணங்கி மும்முறை நெற்றிப் பொட்டில் கொட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டனர்.

இதைப் போலவே இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது.

ஒருமுறை தவமுனிவரான அகத்தியர் கமண்டலமும் கையுமாக வந்து கொண்டிருந்தார். அப்போது காக உருவெடுத்து வந்த விநாயகப் பெருமான் அக்கமண்டல நீரை தட்டி விட்டு ஓடி விட்டார். காகம் கவிழ்த்த கமண்டல நீர் ஆறாக ஓடிவந்தது. காகம் தட்டியதும் விரிந்து பரந்து ஓடியதால் ・காவிரி・என்ற பெயர் அந்நதிக்கு உண்டானது. கமண்டலத்தை தட்டி விட்ட காகத்தை அகத்தியர் திரும்பிப் பார்த்தார்.அதைக்காணவில்லை. காகம் நின்ற இடத்தில்  ஒரு சிறுவன் நின்றிருந்தான். செய்வதையும் செய்துவிட்டு முனிவரைப் பார்த்துச் சிரித்தான். கோபமடைந்த அகத்தியர் அச்சிறுவன்தான் கமண்டல நீரை கவிழ்த்தவன் என்றெண்ணி, அவனது தலையில் குட்ட முயன்றார். ஆனால், அச்சிறுவன் விநாயகப் பெருமானாக அகத்தியர் முன் நின்றான். குட்ட முயன்ற தவறுக்காக வருந்திய அகத்தியர், அப்படியே தன் தலையில் குட்டிக் கொண்டு, மன்னிக்குமாறு வேண்டினார்.

இவ்விதமாகத்தான் விநாயகர் வழிபாட்டில் தோப்புக்கரணம் ஒரு அம்சமானது.

* பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுவதன் மூலமும், நெற்றிப் பொட்டில் குட்டிக்கொள்வதன் மூலமும் நம் உடலில் இருந்து குண்டலினி சக்தி தட்டி எழுப்பப்படுகிறது. நமது நாடி நரம்புகள் சுறுசுறுப்படைந்து, உடலும் மனமும் உற்சாகம் கொள்கின்றது. இந்த நிகழ்வு வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

* தோப்புக்கரணம் போடும்போது வலது காதுமடலின் கீழ்ப்பகுதியை இடது கையாலும், இடது காது மடலின் கீழ்ப்பகுதியை வலதுகையாலும்  அழுத்திப்பிடிக்க வேண்டும். இடதுகை உள்ளேயும் வலதுகை வெளியேயும் இருக்குமாறு தோப்புக்கரணம் போட வேண்டும்.

* நமது வலது பக்க மூளை இடது பக்கத்திலும் இடது பக்க மூளை வலது பக்கத்திலும் இருப்பதால் கைகளை நாம் பிடிக்கும்போது சரியான அளவில் அவை தூண்டப்படுகின்றன.

* காதுமடல்களை ஒட்டிச் செல்லும் நரம்புகளை நாம் பிடித்து இழுப்பதால் நமது ஞாபகசக்தி அதிகரிப்பதாக இன்றைய அறிவியல் உலகம் ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனால், நம் முன்னோர்கள் இதை அந்தக் காலத்திலேயே கண்டறிந்து வைத்திருக்கின்றனர்.

* தோப்புக்கரணம்  போடுவதால் மூளையின் செயல்பாடு அதிகரித்து புதுவித சக்தியும் உற்சாகமும் ஏற்படுகின்றது. படிப்பு, எழுத்து, கணிதம் போன்றவற்றில் கவனம் அதிகமாகும்.

* இறைவழிபாட்டுடன், சிறந்த உடற்பயிற்சியாகவும் இருப்பதுடன் ஆத்ம சங்கல்பத்தை, லட்சியத்தில் வைராக்கியத்தை ஏற்படுத்துகின்றது.

Sunday, January 29, 2017

உடல்... உயிர்... மனம்!

சிறுவயதில் தந்தையை இழந்து ஒன்பது வயதில் கீ போர்டை பிடித்து  ஒட்டுமொத்த குடும்பத்தையும் காப்பாற்றிய அந்தச் சிறுவன், இருபத்து ஐந்து வயதில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, முதல் படத்திலேயே தேசிய விருதும் பெறுகிறார். அடுத்த பத்தொன்பது வருடங்கள் கழித்து திரையுலகத்தின் உச்சகட்டமாக கருதப்படும் ஆஸ்கர் விருதையும் பெறுகிறார். ஒன்றல்ல; இரண்டு விருதுகள். இதில் சிறப்பு என்னவெனில், உலகிலேயே அதிகம் திரைப்படங்கள் தயாரிக்கப்படும் இந்தியாவில் இருந்து தனிப்பட்ட முறையில் இதுவரை யாரும் ஆஸ்கர் விருதைப் பெற்றதில்லை.

அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் நமக்கெல்லாம் தெரிந்த நபர்தான். நான் அவர் பெயரைத் தட்டச்சடிக்கும் முன்பே நீங்கள் கணித்துவிடுவீர்கள்... அவர் யார் என்று!

உங்கள் கணிப்பு மிகச் சரியே! ஏ.ஆர்.ரஹ்மான்தான். இத்தனை சாதனைகளுக்கு உரிய ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்டுப்பாருங்கள்... `உங்கள் வெற்றிகளுக்கு எல்லாம் காரணம் என்ன?' என்று.

மிக எளிமையாக சொல்வார்-“எல்லா புகழும் இறைவனுக்கு” என்று.

உண்மைதான். தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொருவரது வெற்றிக்குப் பின்னும் இறைவனின் ஆற்றலும், ஆசியும் அவசியமாகின்றன. திறமையை மீறி பிரபஞ்சத்தை உங்கள் முன் வளைத்து தரும் சக்தி, ஆன்மிக வளத்துக்கு மட்டுமே உண்டு. அதனைச் சரியாக அணுக ஓர் உண்மையான குருவின் தூண்டுதல் தேவைப்படுகிறது.  

இதையே மிக எளிமையாக `குருவருள்’ என்கிறோம்.  இது இருந்தால் எதுவும் சாதிக்கலாம். முன்பு இறைவனைப் பற்றிய அறிவு என்பது கொஞ்சம் மறைபொருளாக இருந்தது. இன்று அப்படியில்லை. எண்ணற்ற குருமார்கள், எத்தனையோ வகையில் இதனை வெளிப்படையாகவே விவாதித்து வருகிறார்கள்.

எனது ஆன்மிக விருப்பம் எல்லோரையும் போல் பக்தி யோகத்தில்தான் ஆரம்பித்தது. நினைத்துப் பார்த்தால் இன்று குதூகலமாக இருக்கிறது. எனது சிறுபிராயத்தில் நான் விளையாடிய விளையாட்டு, பெரும்பாலும் சாமிக்கு பூஜை செய்வதும் ஒரு சின்ன வண்டியில் சாமிப் படங்களை வைத்துக்கொண்டு, அந்த வண்டியை இழுத்து சாமிக்கு ஊர்வலம் நடத்துவதும்தான்.

இன்று உரைக்கப்பட பிரபஞ்ச அறிவை நோக்கிய ஈர்ப்பு, எனக்கு அப்போதே இருந்தது. சின்ன வயதில் என் அம்மா நிலாவையும், நட்சத்திரங்களையும் காட்டி சோறூட்டிப் பழக்கியதால், எப்போதும் வானத்தைப் பார்த்து லயிப்பதில் எனக்கு தனி ஆர்வம். எங்கள் வீட்டைச் சுற்றி தோட்டம் இருக்கும். அதன் பசுமை மடியில் படுத்துக்கொண்டு வானத்தின் நீலத்தில் எப்போதும் லயித்துக் கிடப்பேன். அப்படி ஒருநாள் ஒரு வெண்டைத் தோட்டத்தில்  வானத்தைப் பார்த்தபடி தூங்கிப் போக, நான் எங்கோ தொலைந்துவிட்டேன் என்று என் குடும்பமே கதறி அழுது தேடிய கதையை இன்று நினைத்தாலும் இனிக்கிறது.

`சாமிக்கிட்ட எது கேட்டாலும் கிடைக்கும்’ என்று வளர்ந்து, ஒரு கட்டத்தில் கேட்டவை பலவும் கிடைக்காமல் போயின. விரும்பியது நடக்கவில்லை. சாமி மீது நம்பிக்கை இழந்து, விதண்டாவாதம் பேசி  கொஞ்சநாட்கள் நாத்திக வேஷமும் பூண்டு திரிந்ததை இன்று நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.

நமக்கு எத்தனையோ லட்சியங்கள் இருக்கும், கனவுகள் இருக்கும், தேவைகள் இருக்கும், ஆசைகள் இருக்கும். அத்தனையையும் அடைய நாம் முயற்சிக்கிறோம். அவை அனைத்தையும் அடைவதற்கு நமக்குத் தேவை மனோபலம். அதாவது, நீங்கள் விரும்புவது எதுவாகினும் அது உங்களை நோக்கி நகர்ந்து வரவேண்டும். அந்த மனோபலத்தை நீங்கள் பெருக்கிக்கொள்ள வேண்டுமெனில், இயற்கைக்கும் உங்களுக்குமான  உறவில் ஓர் இணக்கம் நிகழவேண்டும்.

அப்படியான இணக்கம் ஓரளவு எனக்கும் கிடைத்தது என்றால், அது, வேதாத்திரி மகரிஷி கிடைத்தபின்தான். அவரை அறிந்தபிறகே ஆன்மிக பின்புலனில் இருக்கும் வலுவான அறிவியலையும் வாழ்வியலையும்  தெளிந்துகொள்ள முடிந்தது.

உடல், உயிர், மனம்!

இதுதான் ஆன்மிக சாரம். இதன் பின்புலனை உணர்த்ததான் பக்தி யோகம், ராஜ யோகம், ஞான யோகம் எல்லாம். புறவெளியில் ஒரு சக்தி இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்தச் சக்தியை உங்கள் உடலும் மனமும் கிரகிக்கும் புள்ளியில்தான் உங்களின் வாழ்வியல் இயங்குகிறது. மிக எளிமையான நியதிதான். ஆனால், இதன் அனுபவம் விளங்கவில்லை.

அப்போதுதான் வேதாத்ரி மகரிஷியின் வழியில் நின்ற ஐயா டி.கே.எஸ். சுப்ரமணியம் கிடைத்தார். என் பேராசான். தாமிர துரிய சபை எனக்கு அறிமுகமானது. ஆன்மிகம் கொஞ்சும் நெல்லையில், சேரன்மாதேவி செல்லும் வழியில், `பேட்டை' எனும் இடத்தில் அமைந்துள்ளது தாமிர துரிய சபை. 

என்னை அழைத்து, அணைத்து, அரவணைத்து தாமிர துரிய சபையின் மத்தியில் உட்கார வைத்தார். எதையும் எதிர்பார்க்காமல் ‘உன் உடலையே மூச்சோடு கவனி’ என்றார்.

எங்கிருந்து அத்தனை ஆற்றல் வந்தது என்று தெரியவில்லை; உடல் முழுவதும் பெருமழைபோல் சக்தி பேரியக்கம் இறங்குவதை என்னால் உணர முடியாது. எனக்குள் ஏற்பட்ட உற்சாகத்துக்கும் ஆனந்தத்துக்கும் அளவேயில்லை. என் உடலும் மனமும் ஓர் இறகாய் இருப்பதுபோல் மென்மையாக உணரமுடிந்தது.

மனம் லேசான பின்னர் எனது எண்ணங்களில் உறுதி வந்தது. அப்போதே, எழுந்த எண்ணங்களில் எது எனக்கு தேவையானது எது தேவையற்றது என்றும் தரம் பிரிக்கமுடிந்தது. எனக்கு ஆச்சர்யம் தாங்கமுடியாமல் கேட்டேன்: “ஐயா, இது என்ன மந்திர சபையா?”

ஐயா சொன்னார்: “மந்திர சபையுமில்லை... தந்திர சபையுமில்லை. நீ உன் உயிரின் அறிவியலை அனுபவித்துக்கொண்டிருக்கிறாய். நம் தலை உச்சியில் ஒரு சுரப்பி இருக்கிறது. அது பீனியல் சுரப்பி. இதனை `துரியம்' என்கிறது ஆன்மிகம். இது எப்போதும் பிரபஞ்ச வெளியோடு தொடர்பில் இருக்கும். பிரபஞ்ச வெளியில் அந்த பரிபூரண சக்தியை உன்னுள் கிரகிக்க, இது ஒரு ஆன்டெனா போன்று செயல்படும். அதனை எழுச்சிப்பெறச் செய்யும் வகையில், பிரபஞ்ச சக்தி உன் உச்சியில் குவியும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது இந்த துரிய சபை. இதனால், நீங்கள் சொல்வீர்களே இன்ஸ்டன்ட்... அதுபோன்ற ஓர் இன்ஸ்டன்ட் சக்தி உங்களுக்குள் பாய்கிறது’’ என்றார்.

அதுதான் அகக் கண். துரியத்தில் இருந்து எது நிகழ்த்தினாலும் விழிப்பு உணர்வோடு நிகழும் என்பதால், தவறுகள் என்பதே வாழ்க்கை யில் நிகழாது. மேலும் துரியம் என்பது நம் மன அலைச்சூழலை எப்போதும் குறைத்து வைப்பதால் பேராசை, கடுஞ்சினம், கடும் பற்று, வஞ்சம், முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு-தாழ்வு மனப்பான்மை என எதுவும் நம்மை அண்டாது.

தாமிர துரிய சபையில் பெற்ற எழுச்சியை நான் எந்தக் கோயிலுக்குள் சென்றாலும் உணர்கிறேன். எல்லாக் கோயில்களும் இந்த அபரிமிதமான சக்தியை அள்ளி தந்துகொண்டிருக்கின்றன. நம்முள் சக்தி வழியும்போது மனதும் எண்ணங்களும் கூர்மையடைகின்றன. நீங்கள் விரும்பும் எதுவாகினும் அது உங்களை வந்தடையும்.

இன்றைய இளைஞர்களான நமக்கெல்லாம் தேவை இந்த ஆன்மிக எழுச்சிதான். உடல், உயிர், மனம் மூன்றையும் வலிமைப்படுத்துவோம். 

‘உடலை எஃகு போல் ஆக்கு’ என்றார் விவேகானந்தர். இருபத்து நான்கு மணிநேரம் கொண்ட ஒரு நாளில் இரண்டு மணிநேரம் இந்த உடலையும், மனதையும், உயிரையும் செம்மைப் படுத்தி வந்தால் வானம் உங்கள் வசம்தான்!

Monday, January 23, 2017

#நீங்கள் #பிறந்த #கிழமைக்கான #பலன்கள்..!!

♥ பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறக்கும் கிழமையும் அதிமுக்கியமானது. கிழமைகள், ஒருவரது பண்பு நலன்களுக்கும் அதன் விளைவாக அவர்களுடைய செயல்பாடுகளின் பலன்களுக்கும் காரணமாக அமைவது உண்டு. கிழமையின் மூலமாக அவர்களின் குண நலன்கள், அவர்களின் சிறப்பு பற்றி கூற முடியும்.
கிழமைகளும் பலன்களும்
#ஞாயிற்றுக்கிழமை :
♥ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பானவர்களாகவும், திறன் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு போட்டி மனப்பான்மை, ஆளுமைதிறன் இருக்கும். செல்வம் உடையவராய் இருப்பார்கள். கொடுத்த வாக்கை உயிர்போல காப்பவர்கள்.
#திங்கட்கிழமை :
♥திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் பொறுமையானவர்களாகவும், இளகிய மனம் உடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் கீர்த்திமான், தர்மவான், அபிமானி, அன்பானவன். இனிய சொற்களால் யாரையும் மயக்கிவிடுவார்கள். சுற்றமும், நட்பும் நிரம்ப பெற்றவர்களாக இருப்பார்கள்.
#செவ்வாய்கிழமை :
♥செவ்வாய் கிழமையில் பிறந்தவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். குடும்பத்தின் மீது அதீத அன்பு கொண்டவர்கள். தந்திரக்காரனாய் இருப்பார். பிறருக்கு உதவுபவர்கள். நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவன் என வாழ்பவர்கள்.
#புதன்கிழமை :
♥புதன்கிழமையில் பிறந்தவர்கள் இளமையான தோற்றம் கொண்டவர்களாகவும், இனிமையாக பேசுபவர்களாகவும் இருப்பார்கள். சிரித்த முகத்தினர். கல்வியறிவாளன், தெய்வபக்தி உள்ளவன், பிறரை மகிழ்விப்பவர். நயமாகவும், விகடமாக பேசி அனைவரையும் தன்பால் ஈர்க்கும் தன்மை கொண்டவர்கள். தன்காரியம் நடக்க எதையும் செய்வார்கள்.
#வியாழக்கிழமை :
♥வியாழக்கிழமையில் பிறந்தவர்கள் பொறுப்பானவர்களாகவும், வசதியானவர்களாகவும், புகழ்பெற்றவர்களாகவும் இருப்பார். அறநெறியில் விருப்பம் உடையவராய் இருப்பார்கள். உண்மை விளம்பிகள், கடமை, கண்ணியம், கட்டுபாடு மிக்கவர்கள்.
#வெள்ளிக்கிழமை :
♥வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் கலைகளில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதிர் பாலினத்தினரை கவரும் இயல்புடையவர். வாகனங்கள் உடையவர். உயர்ந்த காரியங்களைச் செய்பவராய் இருப்பார். அழகாக பேசுபவர், முகஸ்துதிக்கு மயங்குபவர்கள், செயல் திறன் மிக்கவர்கள்.
#சனிக்கிழமை :
♥சனிக்கிழமையில் பிறந்தவர் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். இவர்களிடம் போராடி வெற்றிபெறும் குணம் இருக்கும். தனக்கு பிடித்தவரிடத்தில் உயிர் உள்ளவரை விசுவாசமாக இருப்பார்கள். பொறுமையானவர்கள், சகிப்பு தன்மையுள்ளவர்கள், தன்னை யார் ஏமாற்றினாலும், ஏளனம் செய்தாலும் கலங்காமல் முன்னேற்ற வழியில் தொடர்ந்து நடப்பவர்கள். மேலும், இவர்கள் நேர்மையாக நடக்க ஆசைப்படுவார்கள்.

#மனதைத் #தொட்ட #அற்பவுதமான #வரிகள்

1. பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம்.
2.துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்?உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும்.
3.உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.
4. ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது.அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில்முட்டாளாக்கி விடுகிறாள்.
5. பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள்.ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள்என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள்.
6. அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது. (யாருங்க அது
7. பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை!!!!!
8. ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
9. நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள்.
10. தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.
11. குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்
12. சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்
13. வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்.
14. பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
15. மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது. நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!
16. அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும்சாவுக்காக் காத்திருப்பதும்ஒன்றே!
17. செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை!
18. நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!
19. பறக்க விரும்புபவனால் படர முடியாது.
20. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.
21. ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்மனதைத் தொட்ட வரிகள

மூலம் பூராடம், கேட்டை, சித்திரை... பெண்களுக்கு ஆகாததா?!

-நட்சத்திரக் கட்டுக்கதைகள்

பெண்கள் எல்லோருமே, சாபத்தையும் வரமாக்கிக்கொள்ளும் வல்லமை படைத்த வர்கள். ஆனால், அன்று தொட்டு இன்று வரையிலும், பல பெண்களின் கல்யாணக் கனவுகள், ஜாதகம், ஜோதிடம் என்ற பெயரில் பெரும் சாபமாகிவிட்டதுதான் கொடுமை!

மூல நட்சத்திரம் மாமனார் - மாமியாருக்கு ஆகாது, பூராடம் என்றால் கழுத்தில் தாலி ஆடாது... இப்படி என்னென்னவோ ஜோதிட நம்பிக்கைகள் பெண்களின் திருமணத்துக்குத் தடையாக நிற்கின்றன. உள்ளபடி இதெல்லாம் உண்மைதானா? இந்த நம்பிக்கைகளுக்கு ஜோதிட ஆதாரங்கள் உண்டா? ‘இல்லை’ என்பதே அழுத்தமான பதில். விளக்கங்களுடன் பார்ப்போம்.

பெண் மூலம் நிர்மூலமா?

‘ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்’, ‘பெண் மூலம் மாமனாருக்கு ஆகாது’ - ஆதாரம் இல்லாத இந்த சொல்வழக்குகள் மக்களிடம் ஆழமாகப் பதிந்துவிட்டன. இன்றும், மூலத்தில் பிறந்த பெண்ணை மணக்க தயங்குவோர் உண்டு. பிற்காலத்தில் வந்த ஜோதிட நூல்களில்தான், மூலத்துப் பெண் தன் மாமனாரை அலைக்கழிப்பாள் எனும் தகவல் உண்டு. ஆனால், அது சரியாகாது!

முன்னதாகவே பிறந்து, தமது ஆயுளும் நிர்ணயிக்கப்பட்டுவிட்ட மாமனாரின் ஜாதகப் பலனை, பின்னர் வந்த பெண்ணின் ஜாதகப் பலன்... அதுவும் ரத்தபந்தம் நேரடியாக இல்லாத நிலையில், தனக்கு நெருக்கமான கணவனையும் மீறி, அவன் தந்தையைப் பாதிக்கும் என்ற தகவல் ஏற்புடையது அல்ல. ‘தன் ஜாதகப் பலனையும் மீறி பிறரது ஜாதகப் பலன் தன்னைத் தாக்கும் அல்லது நடைமுறைக்கு வரும்’ என்பது ஜோதிடம் ஏற்காத ஒன்று.

குழந்தை கருவறையில் இருக்கும்போதே ஆயுள் நிர்ணயிக்கப்பட்டு விடும் என்ற தகவல் ஜோதிடத்தில் உண்டு. ஆயுள், செயல்பாடு, பொருளாதாரம், அறிவு, மறைவு ஆகிய ஐந்தும் கருவறையில் இருக்கும்போதே தீர்மானிக்கப்பட்டுவிடும் என்கிறது ஜோதிடம் (ஆயு:கர்மசவித்தம் சவித்யாநிதன மேவச...). ஆக, மாமனார், அவரின் தாயார் கருவறையில் இருக்கும்போதே அவருடைய ஆயுள் நிர்ணயிக்கப்பட்ட பிறகு, பல வருடங்கள் கழித்து வந்து சேரும் மருமகளின் ஜாதகப் பலன், மாமனாரின் ஆயுளை நிர்ணயிக்காது என்பது கண்கூடு.

புராண ரீதியிலான ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். போரில் அசுரர்களின் தலைவன், தேவர்களால் அழிக்கப்பட்டான். அவன் அழிந்த வெற்றி விழாவைச் சிறப்பிக்கும் பொருட்டு, அசுரத் தலைவனை அழித்த நட்சத்திரம் என்று மூலத்துக்குச் சிறப்பு பெயர் தந்தனர். அதாவது, ‘மூல பர்ஹணீ’ என்று கொண்டாடினர் எனும் தகவல் வேதத்தில் உண்டு (மூலமே ஷாமவிருஷாமேதி தன் மூலபர்ஹணீ). இதையொட்டியே ‘மூலம் குடும்பத் தலைவனுக்கும் ஆகாது’ எனும் நம்பிக்கை வந்துவிட்டதுபோலும்!

இங்கு, தலைவன் அழிந்த பிறகு மூலத்துக்கு சிறப்பை ஏற்படுத்தினர்; மூலத்தின் காரணமாக தலைவன் அழியவில்லை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். எனவே, ‘தாம்பத்யத்தில் இணைந்த மருமகளின் வரவு, குடும்பத் தலைவனை அழிக்கும்’ என்ற தகவல், சிந்தனைக்குப் பொருந்தாது.

பூராடம் கழுத்தில் நூலாடாது!

பூராடம் நட்சத்திரத்தைப் ‘பூர்வாஷாடம்’ என்கிறது வேதம். ‘பூராடத்தின் கழுத்தில் நூலாடாது’ என்றொரு சொல்வழக்கு உண்டு. இதற்கு, ‘கழுத்தில் இருக்கும் தாலி நூல் ஆடாது, அறுந்துவிடும்’ எனும் விளக்கம் கொள்ளப்படுகிறது. ஆனால்... ‘ஆடாமல் - அசையாமல் நிலைத்து இருக்கும்’ என்ற பொருளில் வந்தது அந்த வழக்கு.

நட்சத்திரம் ஒருவரை விதவை ஆக்காது. பெண் ஒருத்தி விதவை ஆவதற்குக் காரணம், கணவனது ஆயுளின் குறைவே ஆகும். அதை பூராடம் நிர்ணயிக்காது. கணவனின் ஜாதகமே அவனது ஆயுளை இறுதி செய்யும். அல்ப ஆயுள் உள்ள ஒருவனை மணம் புரிந்தவளுக்கு பூராடம் நட்சத்திரம் இருந்திருக்கலாம். ஆனால், அங்கும் பூராடம் காரணம் இல்லை! காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையே!

உண்மையில் பூராடம் சிறப்புக்கு உரியது. நவராத்திரியில் தேவி பூஜைக்கு உகந்த நட்சத்திரமாக மூலம், பூராடம், உத்திராடம் ஆகியவற்றைச் சொல்கிறது தர்மசாஸ்திரம் (மூலேன ஆவாஹயேத் தேவீம் ச்ரவணேனவிஸர்ஜயேத்). அம்பாள் நித்ய சுமங்கலி. அவளுக்கு ‘சுமங்கலீ’ என்று பெயர் உண்டு என்கிறது புராணம். அந்த நித்ய சுமங்கலிக்கான பூஜைக்கு உகந்த நட்சத்திரங்களில் பூராடமும் அடங்கும். ஆக, ஆடாமல் அசையாமல் என்றைக்கும் சுமங்கலியாக இருக்கும் தகுதியை பூராடம் அளிக்கும் என்கிற விளக்கமே சரியானது.

தலைச்சன் - தலைச்சன் திருமணம் கூடாதா?

தலைச்சன் (மூத்த குழந்தை), கேட்டை நட்சத்திரம் மற்றும் ஆனி மாதத்தில் பிறந்திருந்தால், ஆனி மாதத்தில் அவனுக்குத் திருமணம் நடத்துவதைத் தவிர்க்கச் சொல்கிறது தர்மசாஸ்திரம். ஆனால், விஷயத்தைச் சரி யாக வாங்கிக் கொள்ளாமல், ‘தலைச்சன் - தலைச்சன் திருமணம் கூடாது’, ‘கேட்டை கேட்டை திருமணம் கூடாது’, ‘ஆனி மாதமும் கூடாது’ என்று அதை விரிவுபடுத்தி, பல திருமணங்களைத் தவிர்க்கிறார்கள்! தற்போது ஒரே குழந்தை வைத்திருக்கும் குடும்பங்கள் பெருகி வருகின்றன. தலைச்சன் என்று ஒதுக்குவது முடியாத ஒன்றாக மாறப் போகி றது. சான்றில்லாத சொற்றொடரை நம்பும் பாமரர்கள் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும்.

கேட்டை, அண்ணனுக்கு ஆகாதா?

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் மூண்டது. இந்த இரு தரப்பும் அண்ணன் தம்பி முறை. அசுரன் அண்ணன், தேவன் தம்பி. பல நாட்கள் முடிவில்லாமல் தொடர்ந்த போரில், ஒரு நாள், அசுரன் ஒருவனை, தேவன் ஒருவன் வீழ்த்தியதில் தேவர்களுக்கு நம்பிக்கை முளைத்தது. பல நாட்களுக்குப் பிறகு, அண்ணன் ஒருவனை வீழ்த்திய நாளைப் பெருமைப்படுத்த அன்றைய நட்சத்திரத்துக்கு (கேட்டைக்கு) ‘அண்ணனை வீழ்த்திய நட்சத்திரம்' (ஜ்யேஷ்டக்னீ) என்று பெயர் சூட்டி வெற்றியைக் கொண்டாடினார்கள் என்ற தகவல் வேதத்தில் உண்டு.

ஆக, அண்ணனுக்கு ஆகாததாகிவிட்டது கேட்டை! ‘கேட்டை ஜ்யேஷ்டனுக்கு ஆகாது’ என்று, ‘பெண்ணானவள் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தால், அவளைத் திருமணம் செய்யும் கணவனின் அண்ணனை அழித்துவிடும்’ என திருமணத்தைத் தவிர்ப்பவர்களும் உண்டு. தன் அண்ணனுக்குக் கெடுதல் என்பதை மாற்றி, கணவனின் அண்ணனுக்கு என்று சொல்வது சிந்தனைக்குப் பொருந்தாத ஒன்று!

எனினும் ‘கேட்டையில் பிறந்தால் தன் அண்ணனுக்கு ஆகாது’ எனும் மனநெருடலைத் தவிர்க்க, சாந்தி செய்யச் சொல்கிறது சாந்திரத்னாகரம். ஜ்யேஷ்டா நட்சத்திர ஜனன சாந்தி என்கிற தலைப்பில், அதை விரிவுபடுத்தி விளக்குகிறது சாந்திகுஸுமாகரம்.

சித்திரை அப்பன் தெருவிலே!

‘சித்திரை அப்பன் தெருவிலே’ என்ற சொல் வழக்கு உண்டு. இதற்கு, ‘சித்திரா நட்சத்திர ஜனன சாந்தி’ என்று குறிப்பிட்டு பரிகாரம் செய்யப் பரிந்துரைக்கிறது சாந்திரத்னாகரம் எனும் நூல்.

இந்த நட்சத்திரக்காரர்களுக்கு, தந்தையின் காரகக் கிரகமான சூரியன், துலாத்தில் நீசம் பெற்று அங்கு சந்திரனுடன் இணைந்திருக்கும். இதன் விளைவாக மனபலம் குன்றி, சிந்தனை மாற்றம் ஏற்பட்டு தந்தையின் துயரத்துக்கு மகன் காரணமாகலாம் என்று விளக்கம் சொல்வார்கள். ஆனால், இந்த விளக்கத்தை ஒட்டுமொத்தமாக சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் சேர்ப்பது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது.

ஜாதகத்தில், ‘சூரியனும் செவ்வாயும் சுக்கிரனும் அனுகூலமாக இருந்தால் செல்வச் சீமானாகப் பெயரும் புகழும் பெற்று விளங்குவார் இவரின் தந்தை’ என்ற ஜோதிடக் கணிப்பு, இந்த வழக்குச் சொல்லை பொய்யாக்குகிறது. ‘அழகான தோற்றம், வசீகரமான கண்கள், வண்ண வண்ண ஆடை - அணிகலன்களில் ஆர்வம், ஆடம்பரப் பொருட்களை ஏற்று மகிழ்வதில் அலாதியான விருப்பம் ஆகியவற்றை சித்ரா நட்சத்திரத்தில் பிறந்தவனிடம் காணலாம்’ என்பார் வராஹமிஹிரர்!

வழக்குச் சொல்லில் ஏற்பட்ட தவறான விளக்கங்கள், பெண்களின் கல்யாணக் கனவுகளை கேள்விக்குறியாக்குவதை இனி திருத்துவோம்!

ஒரு வருடத்தில் வரும் 24/25 ஏகாதசிகளும் அதில் விரதம் இருப்பதால் கிட்டும் பலன்களும்*"

" *ஒரு வருடத்தில் வரும் 24/25 ஏகாதசிகளும் அதில் விரதம் இருப்பதால் கிட்டும் பலன்களும்*"
1. *உற்பத்தி* (ஏகாதசி) - மார்கழி - க்ருஷ்ண (பக்‌ஷம்) - *சகல பாக்கியங்களும் கிடைக்கும்.*
2. *மோட்ச* - மார்கழி - சுக்ல பக்ஷ- *வைகுண்டம் கிடைக்கும்.*
3. *ஸபலா* - தை - க்ருஷ்ண பக்ஷ- *பாப நிவர்த்தி* (உலும்பகன் மோட்சம்).
4. *புத்ரதா* - தை - சுக்ல பக்ஷ- *புத்ர பாக்கியம் கிடைக்கும்* (சுகேதுமான் விரதம் இருந்து பிள்ளைகள் பெற்றான்).
5. *ஷட்திலா* - மாசி - க்ருஷ்ண பக்ஷ- *அன்ன தானத்திற்கு ஏற்றது.*
6. *ஜயா* - மாசி - சுக்ல பக்ஷ- *பேய்க்கும் மோட்சம் உண்டு* (மால்யவான் பேயான சாபத்தில் இருந்து விடுதலை பெற்றான்).
7. *விஜயா* - பங்குனி - க்ருஷ்ண பக்ஷ- *ராமர் சீதையை மீட்க, பகதாப்யர் எனும் முனிவரின் உபதேசப்படி, விரடம் இருந்த நாள்.*
8. *ஆமலதீ* - பங்குனி - சுக்ல பக்ஷ- *கோதானம் செய்ய ஏற்றது.*
9. *பாப மோசனிகா* - சித்திரை - க்ருஷ்ண பக்ஷ - *பாபங்கள் அகலும்.*
10. *காமதா* - சித்திரை - சுக்ல பக்ஷ- *நினைத்த காரியம் நடக்கும்*.
11. *வருதிந்* - வைகாசி - க்ருஷ்ண பக்ஷ- *ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கும் (சிவன், பாரம்மன் தலையை அறுத்த தோஷம் நீங்கிய நாள்)*.
12. *மோஹினி* - வைகாசி - சுக்ல பக்ஷ- *பாவம் நீங்கும்*.
13. *அபரா* - ஆனி - க்ருஷ்ண பக்ஷ- *குரு நிந்தனை, பொய் சாட்சி போன்றவை அகலும்*.
14. *நிர்ஜலா (பீம)* - ஆனி - சுக்ல பக்ஷ - *எல்லா ஏகாதசி பலனும் உண்டு* (நீர் அருந்தக் கூடாது - பூமியில் நீர் குறைந்து இருக்கும் நாள்).
15. *யோகினீ* - ஆடி - க்ருஷ்ண பக்ஷ- *நோய் நீங்கும்* (குபேரன் பணியாளன் ஹேமநாதன் விரதம் இருந்து குஷ்ட நோய் நீங்கிய நாள்).
16. *சயிநீ* - ஆடி - சுக்ல பக்ஷ - *தெய்வ சிந்தனை அதிகமாகும்* - திரிவிக்கிரமனாய்த் தோன்றி, பின் பாற்கடலில் சயனித்த நாள் (பெயர்க் காரணம்).
17. *சாமிகா* - ஆவணி - க்ருஷ்ண பக்ஷ - *விருப்பங்கள் நிறைவேறும்.*
18. *புத்ரஜா* - ஆவணி - சுக்ல பக்ஷ- *புத்ர பாக்கியம் கிடைக்கும்*.
19. *அஜா* - புரட்டாசி - க்ருஷ்ண பக்ஷ - *இழந்ததைப் பெறலாம் - அரிச்சந்திரன் விரதம் இருந்த நாள்*.
20. *பத்மநாபா* - புரட்டாசி - சுக்ல பக்ஷ- *பஞ்சம் நீங்கும்.*
21. *இந்திரா* - ஐப்பசி - க்ருஷ்ண பக்ஷ - *பித்ருக்கள் நற்கதி பெறுவர்.*
22. *பாபாங்குசா*-ஐப்பசி- சுக்ல பக்ஷ - *கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்* பாபங்கள் அகலும்.
23. *ரமா* - கார்த்திகை - க்ருஷ்ண பக்ஷ - *உயர்ந்த பதவி, வைகுண்ட பதவி கிடைக்கும்.*
24. *ப்ரபோதினி* - கார்த்திகை - சுக்ல பக்ஷ - *பொதுவாக உயர்ந்த நன்மைகள் உண்டாகும்.*
25. *கமலா* - (சில வருடங்களில் மட்டும்) - *மகாலட்சுமி அருள் கிடைக்கும்*
"துவாதசிக்கு சமமான திதி இல்லை"
எங்கும் நிறைந்த விஷ்ணுவே சகல ஜனங்களையும் , ரக்ஷிக்க வேண்டி துவாதசி எனும் திதியாக மாறி கருணை செய்கிறான் என்கிறது வராஹ புராணம். 
" விஷ்ணுவுக்குச் சமமான தெய்வமில்லை. துவாதசிக்கு சமமான திதியும் இல்லை " என்பார்கள். எனவே " துவாதசி அன்று தானம் செய்தாலும், போஜனம் செய்வித்தாலும், பூஜை செய்தாலும் பத்து மடங்கு பலன் தரும்" எனக் கூறுகிறது பத்ம புராணம். தெரிந்தோ தெரியாமலோ செய்த " நம்முடைய ஏழு ஜென்மத்து பாபங்கள் துவாதசியில் ஹரியைப் பூஜித்த அடுத்த க்ஷணம் போய்விடும்" என்கிறது பத்ம புராணம்.
" ஏகாதசி விரதமிருந்து துவாதசியில் துளஸியுடன் கூடிய விஷ்ணு பிரசாதத்தைச் சாப்பிட்டவருக்கு கோடி ஜென்ம பாபம் போய் விடும்" என்கிறது ஸ்காந்தம்.
" ஏகாதசி விரதமே மோக்ஷ ஸாதனம்" 
" துவாதசியில் விஷ்ணுவைப் பூஜிப்பவர்கள் சுகமாய் வாழ்வார்கள், முக்தியும் பெறுவார்கள்" எனகிறார் சௌனகர்.
" தசமி, ஏகாதசி, துவாதசி ஆகிய இந்த மூன்று தினங்களிலும் சந்தன, தாம்பூல, புஷ்ப, ஸ்த்ரீ சங்கமம் ஆகிய நான்கையும் விலக்க வேண்டும் " என்கிறது நாரதீய புராணம்.
"ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம் "

குழந்தைகளுடன் இருக்கும்போது இதையெல்லாம் கடைபிடியுங்கள் பெற்றோர்களே #MustRead

பெற்றோருடன் குழந்தைகள்

கண்களை உருட்டி, கைகளில் பிரம்பெடுத்து, நாக்கை கடித்து, குரலை உயர்த்தி... அடடா எதற்கு இந்த காளி அவதாரம்? கூல்....இனிமே உங்க குட்டிச் செல்லம் தான் உங்க எஜமான். இந்த அவதாரத்தை இனி  குழந்தைகளே எடுக்கப் போகிறார்கள். ஒரு வேளை நீங்கள் அவர்கள் முன் மண்டியிட்டு தோப்புக்கரணம் போட வேண்டி வரலாம். எதற்கும் தயாராக இருங்கள் பெற்றோர்களே என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.  

உங்கள் குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களுடன் செலவழிக்கும் நேரத்தை வடிவமைப்பது பற்றி சொல்கிறார் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரபு. 

*அலுவலகப் பணிகள், செல்போனில் பேச வேண்டிய விஷயங்களை வீட்டுக்கு வெளியில் முடித்து விடுங்கள். குழந்தைகளுடன் இருக்கும் போது செல்போனை தவிர்த்துவிடுங்கள். ஆக, குழந்தைகளுக்கு நெருக்கமாகவும், செல்போனுடன் செல்லக் கோபத்துடனும் தள்ளியிருங்கள். 

* உங்க குட்டிச் செல்லம் என்ன பேசினாலும் ‘ம்’ கொட்டிக் கேளுங்கள். வியப்பை வெளிப்படுத்துங்கள். குழந்தைகளை நான் தான் வளர்க்கிறேன் என்ற எண்ணத்தை முதலில் ரீசைக்கிள் பின்னுக்கு தள்ளி விட்டு சுதந்திரக் காற்றை சுவாசிக்க விடுங்கள். அவர்களது குழந்தைத் தனம் வாங்கி மீண்டும் ஒரு முறை வளரப் பழகுங்கள். நாட்கள் ஒவ்வொன்றும் வெகு சுவாரஸ்யமாக மாறிப் போகும். 

* உங்கள் குழந்தைகள் சொன்னதை மறுபடியும் சொல்கிறார்கள் என்றால், நீங்களும் முதலில் கேட்ட அதே பாவனையோடு மீண்டும் கேளுங்கள்.

* பொடிசுகளுக்கு எதுக்கு மரியாதை என்று எண்ணாமல் அவர்களை உங்களுக்கு சமமாக எண்ணி, மரியாதை கொடுத்துப் பழகுங்கள். சிறப்பாக செய்யும் செயல்களுக்கு முத்தமழை பொழியுங்கள்.

* அவர்களுக்கு பிடித்த சேமிப்பு டப்பாவாக வாங்கி கொடுத்து சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். அவர்கள் நல்ல செயல்கள் செய்யும்போதெல்லாம், நாணயம் ஒன்றை கொடுத்து அந்த பாக்ஸில் போட செய்யுங்கள். ஊக்கப்படுத்துதல், சேமிப்பு என்று இரட்டிப்பு சந்தோஷம் குழந்தைகளுக்கு கிடைக்கும்.

* நெகட்டிவ் விஷயங்களை அவர்கள் முன் பேசுவதை தவிர்த்துவிடுங்கள். என்றோ அவர்கள் செய்த பிரச்னை ஏற்படுத்திய விஷயத்தை கூட ஞாபகப்படுத்திவிடாதீர்கள்.

* அவர்களுடைய நட்பு வட்டம், அவர்களுக்கு பிடித்த கலர், பிடித்த பொம்மை என அவர்கள் ரசனையை உங்களுக்கும் பிடித்ததாகக் காட்டிக் கொள்ளுங்கள். அவர்களுடைய நட்பு வட்டத்தில் இணைய இதுவே ஒரே வழி.

 * குரலை உயர்த்திப் பேசுவது, அவர்கள் முன்பு மிரட்டலாக நடப்பது, கெத்துகாட்டுவது எல்லாம் வேஸ்ட். அவர்களுடன் இணையுங்கள். சாப்பிடும்போது குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டால் அன்பின் ருசி கூடும்.  

* குழந்தைகளிடம் இயல்பாகவே உள்ள குறைகளை அடுத்தவர் முன்பு சுட்டிக் காட்டுவதைத் தவிர்க்கலாம். வழிபாடு, தியானம், ஊர் சுற்றுதல், திட்டமிடாப் பயணம் என்று உங்களது குழந்தைக்கு வித்தியாசமான அனுபவங்களை தரத் தவறாதீர்கள். 

* போரடிப்பதும், சோர்வாக இருப்பதும் குழந்தைகளுக்கு பிடிக்காது. சுறுசுறுப்பாக இயங்குவதற்கான வாய்ப்புகளை அள்ளிக் கொடுங்கள். குழந்தைகள் இயல்பாக செய்யும் தவறுகளை கிண்டலடிக்க வேண்டாம். ஏதாவது ஒரு வேலையில் இலக்கை முடிவு செய்து அவர்களோடு இணைந்து செய்து முடித்து விடுங்கள். 


*இப்போது நீங்களும் உங்கள் குழந்தையும் நெருங்கிய நண்பர்கள். இனி வாழ்வே சொர்க்கம் தானே. குழந்தைகளாகவே இருந்தாலும்  அடிக்கக்கூடாது  பெற்றோர்களே.

பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு பெற்றோர்கள் செய்ய வேண்டியவை!

‘தந்தையுடன் மகிழ்ச்சியாக இருக்கும் பெண் குழந்தை

குழந்தைகளுக்கு 'குட் டச்', 'பேட் டச்' சொல்லிக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் வாழ்கிறோம். பள்ளி, ட்யூஷன், திறன் வகுப்புகள், வீடு, உறவினர்கள்,உளவியல் நிபுணர் நப்பின்னை நண்பர்கள் என இந்தச் சூழல்களில் எல்லாம், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய பெற்றோர்கள் தவறாமல் கடைப்பிடிக்க  வேண்டியவற்றை விளக்குகிறார், உளவியல் நிபுணர், முனைவர் நப்பின்னை.

* ''ட்யூஷன், பாட்டு, நடனம் என குழந்தையை அனுப்பும் வகுப்புகள் அமைந்துள்ள இடம், அதன் பயிற்சியாளர், அங்கு பணியாற்றுபவர்கள் என அனைத்தைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொண்டு, பின்னரே குழந்தையை அங்கு அனுப்புவது பற்றி முடிவெடுக்க வேண்டும். ஆரம்ப நாட்களில் குழந்தையை வீட்டினர் யாராவது அழைத்துச் சென்று விடுவதும், மீண்டும் அழைத்து வருவதும் முக்கியம். பிறகு, அவ்வப்போது பெற்றோர்கள் அங்கு சென்று கண்காணிப்பதும் அவசியம். 

*  ஆண், பெண் நண்பர்களிடம், உறவினர்களிடம், ஆசிரியர்களிடம், பயிற்சியாளர்களிடம், சமூகத்தில் அன்றாடம் சந்திப்பவர்களிடம் என ஒவ்வொருவரிடம் குழந்தை பழகக்கூடிய விதம், எல்லையை தெளிவாக அறிவுறுத்த வேண்டும். 

*  இன்றைக்கு பாலியல் கல்வியை பலரும் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதுதான், பெண் குழந்தைகள் மற்றும் இளம்பெண்களுக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தலுக்குக் காரணமாக இருக்கிறது. பாலியல் கல்வியை பள்ளிகளில் கற்பிக்க அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் பெற்றோர்கள்தான் தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் வயது மற்றும் புரிந்துகொள்ளும் தன்மைக்கு ஏற்ப பாலியல் சார்ந்த விஷயங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். 10 வயதுக் குழந்தைக்கு, அப்போது அதன் உடலில் நடைபெறும் மாற்றங்களுக்கான பயாலஜிக்கல் விளக்கங்களை, அது புரிந்துகொள்ளும் மொழியில் விளக்க வேண்டும். அப்போது எதிர்பாலினத்தவர் குழந்தையிடம் எந்த எல்லைக்குள் பழக அனுமதிக்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்த வேண்டும். அப்போதுதான், ஓர் ஆண் தன்னிடம் என்ன கண்ணோட்டத்தில் பழகுகிறார் என்பதை அதனால் அறிந்துகொள்ள முடியும். 

விளையாடும் பெண் குழந்தைகள்

* குழந்தைகளை தற்காப்பு வகுப்புகள் அனுப்பலாம். அல்லது, சீண்டலுக்கு உட்பட்டால் கத்துவது, கடிப்பது, அடிப்பது போன்ற தற்காப்பு பயிற்சிகளை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கலாம். அப்போதுதான் ஆபத்தான சூழலில் இருந்து வெளிவரும் தைரியம் அவர்களுக்குக்  கிடைக்கும். 

*  தாய்-தந்தை, அண்ணன்-தம்பி இவர்களைத் தவிர ஒருவர் குழந்தையிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்டு பழகுவது, உடலில் தொட்டுப் பேசுவது, பரிசுப்பொருட்களை கொடுத்து நெருங்கிப் பழகுவது, அதீத அக்கறையுடன் பேசுவது என நடந்துகொண்டால், ஆரம்பகட்டத்திலேயே தங்களிடம் தெரிவிக்கும்படி பெற்றோர்கள் குழந்தைகளிடம் சொல்லி வைக்கவும். அதை உறுதி செய்தபின், சம்பந்தப்பட்ட நபரை எச்சரிக்கவும் தவற வேண்டாம். 

* அம்மா, அப்பா முன்னிலையில் பழக்கப்பட்ட நபர் அன்பு காட்டும் விதமாக, 'குட் டச்' ஆக உன் உடல் மீது கை வைக்கலாம். ஆனால், யாரும் இல்லாத சூழலில் மற்றவர்கள், அது யாராக இருந்தாலும், அவர்கள் 'குட் டச்' செய்தாலும்கூட, அவர் கையைத் தட்டிவிட்டு விலக வேண்டும். அதையும் மீறி அவர் உன் மீது கைவைத்தால், சத்தம் போடு. ஓடிச்சென்று அருகில் இருப்பவர்களிடம் சொல். அம்மா, அப்பாவிடம் சொல்' என்று விளக்கமாக அறிவுறுத்தவும்.

*  பல குழந்தைகள் தங்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களை அச்சத்தினால் வெளியில் சொல்வதில்லை. அதனால் தினமும் குழந்தையின் நடவடிக்கை, செயல்பாடு, உடல்நிலை, உணர்வுகளை கண்காணிக்க வேண்டும். இயல்புக்கு மாறாக பெண் குழந்தைகள் நடந்துகொண்டால், அதற்கான காரணங்களை கண்டறிந்து சரிசெய்ய வேண்டும்.

பள்ளி செல்லும் பெண் குழந்தை

*  தினமும் இரவு நேரத்தில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்கி, அன்றைக்கு என்னவெல்லாம் நடந்தது, யாரோடு எல்லாம் குழந்தை பழகியது, சந்தோஷமான, அசாதாரண நிகழ்வுகள் ஏதாவது நடந்ததா என்பதை பெற்றோர்கள் பொறுமையுடன் கேட்க வேண்டும். 'உனக்கு ஒரு பிரச்னை வந்தால் உடனடியாக எங்ககிட்ட வந்து சொல்லு. உன் மேல எந்த தப்பும் இல்லாத பட்சத்தில் எந்த ஒரு விஷயத்துக்கும் பயப்படவேண்டிய அவசியமே இல்லை. தைரியமா இரு' என்று குழந்தைகளுக்கு நம்பகமான நம்பிக்கை ஊட்ட வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் எந்த ஒரு விஷயத்தையும் ஆரம்பகட்டத்திலேயே பெற்றோர்களிடம் வந்து தெரிவிப்பார்கள். அதற்கு பெற்றோர்கள், பிள்ளைகள் தங்களிடம் எல்லா விஷயங்களையும் ஒளிவு மறைவின்றி பேசும் அளவுக்கு புரிதலுடன், தோழமையுடன் நடந்துகொள்ள வேண்டும். அப்போது, தனக்கோ, தன் தோழிக்கு ஏதாவது நடந்தால்கூட, தன் பெற்றோர்களிடம் அதைச் சொல்லி, பிரச்னையை சரிசெய்ய முடியும்.

*   ஒருவேளை குழந்தை பாலியல் சீண்டலுக்கு ஆளாகியிருந்தால், அச்சம்பவத்தில் இருந்து அது முழுமையாக வெளிவர பெற்றோர்கள் பலம் கொடுக்க வேண்டும். மாறாக நடந்த சம்பவத்தை நினைவுபடுத்தும்படியே நடந்து கொள்வது, அச்சம்பவத்தையே திரும்பத் திரும்ப சொல்லிக் காட்டுவது, ட்யூஷன், அவுட்டிங் என்று அனைத்தையும் முடக்கி அவர்களை வெளியுலகில் இருந்து துண்டிப்பது, சக நண்பர்களிடம் பழக விடாமல் செய்வது... இவையெல்லாம் குழந்தைகளுக்கு இன்னும் பெரிய பாதிப்பை உண்டாக்கும். 

* குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல் தந்தவர்கள் பற்றி காவல் துறையில் பெற்றோர்கள் புகார் அளிக்க வேண்டும். அவமானமாக நினைத்தோ, அச்சத்தினாலோ அதைச் செய்யாமல் விட்டால், அதே துன்புறுத்தலை அந்தக் குழந்தைக்கோ அல்லது மற்ற குழந்தைகளுக்கோ சம்பந்தப்பட்ட மோசமான நபர் மீண்டும் தரும் அபாயம் இருக்கிறது. 

*  குழந்தைகளுக்கு எதிரான பல குற்றச் சம்பவங்கள் நன்றாக தெரிந்த நபர்களால்தான் அதிகமாக நடைபெறுகின்றன. அதனால் கூடுதல் கவனத்துடன், குழந்தையிடம் பழகுபவர்களை, அவர்களின் பின்புலன்கள் பற்றி தெரிந்துகொள்வது முக்கியம். 

ஒரு விஷயம் நடந்த பின்னர் வருத்தப்படுவதைவிட, முன்னரே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்'' என மீண்டும் ஒருமுறை அறிவுறுத்துகிறார், நப்பின்னை.

குழந்தைகள் விரும்பும் பெற்றோராக, செய்ய வேண்டியவை! #GoodParenting

பெற்றோர்களின் அரவணைப்பில் குழந்தைகள்

*  குழந்தைகளின் நல்ல செயல்கள் ஒவ்வொன்றையும் பாராட்டுங்கள். 'வாவ் என் தங்கமா இவளோ சூப்பரா செஞ்சிருக்கு.. கங்கிராட்ஸ்" என்று குழந்தைகள் மகிழ ஆச்சர்யப்படுங்கள்.  

* பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பாடமாக எடுப்பதைவிட, வெளியிடங்களுக்கு அழைத்து செல்லுங்கள். அங்கே அவர்கள் என்ன தவறு செய்தார்கள், அதை எப்படி செய்திருக்க வேண்டும் என்பதை விளக்கி சொல்லுங்கள்.  

* எலெக்ட்ரானிக் சாதனங்கள் என்பது இக்காலக்கட்டத்தில் குழந்தைகள் தெரிந்திருக்க வேண்டிய ஒன்றுதான். அதற்காக அவர்கள் அதிலேயே மூழ்கிவிட பெற்றோர்களான நீங்கள் காரணமாக இருக்க வேண்டாம். ஒன்றை குழந்தைகளிடம் அறிமுகப்படுத்தும் நமக்கு, அச்சாதனங்களை அவர்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என்பதை சொல்லி கட்டுப்படுத்தவும் செய்ய வேண்டும்.

* ஒரு வயதில் இருந்து குழந்தைகளுக்கு புத்தகங்களை வாசித்து காண்பியுங்கள். தினமும் இரவு படுக்கசெல்லும் முன் சில பக்கங்களையாவது வாசித்து காண்பிப்பதை பழக்கமாக்கி கொள்ளுங்கள். புத்தகம் விசாலமான அறிவை பெறச் செய்யும் என்பதை அவர்கள் உணர வையுங்கள்.

*  தினமும் ஒரு புது வார்த்தை கற்றுக் கொடுங்கள். அவர்களுடைய வேலைகளை அவர்களாக செய்ய பழக்குங்கள். இதில் ஆண்-பெண் பேதம் தேவையில்லை. பள்ளி முடிந்து வந்தவுடன் டிபன்பாக்ஸை எடுத்து சிங்கில் போடுவது, ஷூக்களை கழட்டி உரிய இடங்களில் வைப்பது, சாப்பிடும் முன் அதற்கான பொருட்களை பெற்றோர்களுடன் சேர்ந்து எடுத்து வைப்பது போன்ற வேலைகளை பகிர்ந்து கொள்ள பழக்குங்கள். 

* உறவுகளை அறிமுகப்படுத்துங்கள். சித்தி, சித்தப்பா, மாமா என்று உங்கள் குடும்பத்தில் இருக்கும் உறவுகளை குழந்தைகளுக்கு பழக்கப்படுத்துங்கள். நேரில் பார்ப்பது, போனில் பேசுவது என எது சாத்தியமோ அதை செய்ய வையுங்கள். அப்போதுதான் குழந்தைகளின் வானம் விரிவடையும். 

* குழந்தைகள் முன் உபயோகிக்கும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். அவை ஃபேஷனாக, இதுவரை நீங்கள் உபயோகித்து வந்த அர்த்தமில்லாத வார்த்தைகளாக இருக்கலாம். உடனே சுதாரியுங்கள். இல்லையெனில் அவை நம் குழந்தைகள் மூலமாக வெளிப்படும்போது அவர்களை மட்டுமல்லாது அவை நம்மையும் சேர்த்தே பாதிக்கும் என்பதை உணருங்கள். 

* குழந்தைகளிடம் பெற்றோர்கள் எந்த சூழலிலும்  கடுமையான மனப்பாங்குடன் நடந்துகொள்வதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் தெரிந்தோ, தெரியாமலோ ஏதேனும் ஒரு தவறை செய்தாலும்கூட, அந்த தவறை இனி அடுத்த முறை குழந்தைகள் செய்யாத வகையில் பக்குவமாக எடுத்துக்கூற வேண்டும். 

* மற்றொரு மாணவரை உதாரணத்துக்கு எடுத்துச் சொல்லலாம் தவிர, இன்னொரு மாணவருடன் உங்கள் குழந்தைகளை ஒப்பீடு செய்து, குற்றம் சாட்டுவது மிகவும் தவறு.

* குழந்தைகளின் கெப்பாசிட்டியை தெரிந்து கொள்ளுங்கள். அதை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளுங்கள். அதற்குபதில் கடல் தாண்ட சொல்லாதீர்கள். அப்போதுதான் அவர்களால் வெற்றியை அடைய முடியும்.

Tuesday, January 17, 2017

இந்துக்களின் சம்பிரதாயங்கள்

இந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அற்புதமான விஞ்ஞான  விளக்கங்கள் (காரணங்கள்)❗

ஒவ்வொரு சடங்குகளுக்கு பின்னால் இருக்கும் காரணங்களை தெரிந்து கொள்வதில் அவ்வளவு சுவாரசியம் உண்டாகும்.

_*நமஸ்காரம்:*_

நமஸ்காரம் செய்வது இந்துக்களின் உன்னதமான சைகையாகும். பொதுவாக இதை மரியாதை அளிக்கும் சைகையாக பார்க்கிறனர். ஆனால், நமஸ்காரம் செய்யும் போது, இரண்டு கைகளையும் ஒன்று சேர்க்கும் போது, உங்களின் விரல் நுனிகள் அனைத்தும் ஒன்று சேரும். அவைகள் ஒன்றாக அழுத்தும் போது ப்ரெஷர் புள்ளிகள் செயல்பட தொடங்கும். இதனால் அந்த நபரை நீண்ட நாட்களுக்கு மறக்காமல் இருக்க செய்யும். 

_*மெட்டி:*_

திருமணமான இந்து பெண்கள் மெட்டி அணிவது வாடிக்கையான ஒன்றே. அது வெறும் அலங்காரத்திற்கு மட்டுமில்லை. பொதுவாக பெருவிரலுக்கு அடுத்த விரலில் தான் பெண்கள் மெட்டி அணிவார்கள். இந்த விரலில் இருந்து செல்லும் நரம்பு கர்ப்பப்பை மற்றும் இதயத்திற்கு நேரடியாக செல்கிறது. இரண்டாம் விரலில் மெட்டி அணிவதால் கர்ப்பப்பை வலுவடைந்து, மாதவிடாய் இரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவும். 

_*பொட்டு:*_

ஒவ்வொரு பெண்ணும் நெற்றியில் குங்குமம் அணிவது வாடிக்கையான ஒன்றே. நெற்றியில் தான் ஆட்ன்யா சக்கரம் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் நெற்றியில் பொட்டு வைக்கும் போது இந்த சக்கரம் தானாக செயல்பட தொடங்கி விடும். இது உடலில் உள்ளல ஆற்றல் திறனை இழக்க விடாமல் செய்யும். மேலும் புத்தி ஒருமுனைப்படுதலை மேம்படுத்தும். 

_*கோவில் மணிகள்:*_

கோவில் மணிகள் சாதாரண உலோகத்தில் செய்யப்படுவதில்லை. காட்மியம், ஜின்க், லெட், காப்பர், நிக்கல், க்ரோமியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற பல உலோகங்களை கொண்டு செய்யப்படுபவை தான் மணிகள். கோவில் மணியை செய்ய ஒவ்வொரு உலோகத்தையும் சரியான அளவில் கலக்க வேண்டும். அதன் பின்னணியில் இருக்கும் விஞ்ஞானம் என்னவென்று தெரியுமா? மணியை ஒலிக்க செய்யும் போது ஒவ்வொரு உலோகமும் ஒவ்வொரு தனித்துவமான ஒலியாய் எழுப்பும். இது உங்கள் இடது மற்றும் வலது மூளையை இணைக்க செய்யும். அதனால் மணி அடித்த அடுத்த தருணமே, நீண்ட நேரம் ஒலிக்கும் கூர்மையான சத்தம் எழும். இது 7 நொடிகள் வரை நீடிக்கும். மணியில் இருந்து எழும் எதிரொலி உங்கள் உடலில் உள்ள 7 குணமாதல் மையங்களையும் (சக்கரங்கள்) தொடும். அதனால் மணி ஒலித்த உடனேயே, உங்கள் மூளை சில வினாடிகளுக்கு வெறுமையாகி விடும். அப்போது மெய்மறதி நிலையை அடைவீர்கள். இந்த மெய்மறதி நிலையில், உங்கள் மூளை சொல்வதை வரவேற்கும் பண்பை பெறும். 

_*துளசியை வழிபடுதல்:*_

 இந்துக்களின் வீடுகளில் துளசி செடியுடன் கூடிய துளசி மாடம் இருக்கும். அதனை தினசரி வழிபடுவார்கள். அதற்கு காரணம் துளசியில் உள்ள உயர்ந்த மருத்துவ குணங்கள். துளசி செடியின் மகத்துவத்தை புரிந்து கொண்ட பழங்கால முனிவர்கள், அது அழிந்து விடாமல் காப்பதற்காக, அதனை வழிபடும் சடங்கை உண்டாக்கினார்கள். அப்படி செய்வதால் அச்செடியை மதித்து அதனை பத்திரமாக பாதுகாத்திடுவர். 

_*அரசமரம்:*_

பொதுவாக அரசமரத்தை பயனற்ற மரமாக பார்க்கின்றனர். அதனால் எந்த ஒரு கனியோ அல்லது திடமான மரமோ கிடைப்பதில்லை. இருந்தும் கூட அதனை பல இந்துக்கள் வழிபடுகின்றனர். ஆனால், இரவு நேரத்தில் ஆக்சிஜென் உண்டாக்கும் சில மரங்களில் அரசமரமும் ஒன்று. என்ன சுவாரசியமாக உள்ளதா? அதனால், இந்த மரத்தை பாதுகாப்பாக வைத்திடவே அதை புனித மரமாக கருதுகின்றனர். 

_*உணவருந்திய பின் இனிப்பு உண்ணுது:*_

காரசாரமான பதார்த்தங்களோடு ஆரம்பிக்கும் உணவு, இனிப்பு பண்டங்களுடன் முடிவடையும். அதற்கு காரணம் செரிமான அமைப்பு மற்றும் அமிலங்களை செயல்படுத்த செய்வது காரசாரமான உணவுகள். இந்த செயற்பாட்டை குறைத்திடும் இனிப்புகள். அதனால் உணவருந்திய பிறகு இனிப்புகள் உண்ண பரிந்துரைக்கப்படுகிறது. 

_*கைகளில் மருதாணி  வைப்பது:*_

அலங்கார காரணத்தை தவிர, மருதாணி என்பது சக்தி வாய்ந்த மருத்துவ மூலிகையாகும். திருமணங்கள் என்பது அழுத்தத்தை உண்டாக்கும், குறிப்பாக மணப்பெண்ணுக்கு. மருதாணி தடவிக் கொண்டால், நரம்புகளை குளிரச் செய்யும். அதற்கு காரணம் குளிரச் செய்யும் குணங்களை கொண்டுள்ளது மருதாணி. அதனால் தான் மணப்பெண்ணின் கைகளிலும் கால்களிலும் மருதாணி தடவப்படுகிறது. 

_*தரையில் அமர்ந்து உண்ணுவது:*_

நாம் தரையில் அமரும் போது சுகாசன் தோரணையில் அமர்கிறோம். இந்த தோரணை செரிமானத்தை மேம்படுத்தும். அதனால் நாம் சுகாசன் தோரணையில் அமரும் போது நம் உணவு சுலபமாக செரிமானமடையும் 

_*காலையில் சூரியனை வழிபடுதல்:*_

விடியற்காலையில் சூரிய பகவானை வணங்கும் வழக்கம் இந்துக்களிடம் உள்ளது. அதற்கு காரணம் விடியற்காலையில் வரும் சூரிய ஒளிகள் கண்களுக்கு மிகவும் நல்லதாகும். மேலும் காலையில் வேகமாக எழுந்திருப்பது உடலுக்கு ஆரோக்கியமானது. 

_*கோவிலை வலம் வாருங்கள்:*_

உடல் ஆரோக்கியத்திற்கு காலை வேளையல் சுத்தமான இடத்தில் வலம் வர வேண்டும். அதுவும் வெறும் பாதத்தில் மேடும் பள்ளமாக பதித்து இருக்கின்ற வெளி பிரகாரத்தில் நடக்கும் போது உங்கள் பாதம் உண்மையான ஒரு உணர்வை ஏற்படுத்தும், வெளி பிரகாரத்தை 51 சுற்று அல்லது 101 சுற்று சுற்றவேண்டும் வெறும் பாதத்தில் நீங்கள் கோவிலை வலம் வரும் பொது அக்குபஞ்சர் முறை உங்கள் உடல் ஆரோக்கியம் அடையும். இது புன்னியதுடன் கூடிய ஆரோக்கியம் நம் உடல் உறுப்புகளின் அனைத்து நரம்புகளும் பாதங்களின் இணைந்துள்ளன, பீச் மற்றும் சாலைகளில் நடப்பதை தவிர்த்து, வெறும் பாதங்களில் கோவிலை வலம் வாருங்கள், புண்ணியமும் கிடைக்கும் ஆரோக்கியமும் கிடைக்கும்.

எது வெற்றி எதுவெற்றி? எது வெற்றி!!! வெற்றி தரும் மகிழ்ச்சி


4 வயதில், தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி !
8 வயதில், தனியாக வெளியே சென்று வழி   தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி !
12 வயதில், நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி !
18 வயதில், வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி !
22 வயதில்,   பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால்,  அது வெற்றி !
25 வயதில், நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி !
30 வயதில்,  தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால், அது வெற்றி !
35 வயதில்,  போதுமான அளவு சம்பாரிக்க முடியுமானால், அது வெற்றி !
45 வயதில்,  இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால், அது  வெற்றி  !
50 வயதில், தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், அது வெற்றி !
55 வயதில், நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால், அது வெற்றி !
60 வயதில், ஓய்வு பெற வேண்டியவர் என  நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால், அது வெற்றி !
65 வயதில்,   நோயில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !
70 வயதில்,   மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !
75 வயதில், பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால், அது வெற்றி !
80 வயதிற்கு மேல் மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால், அது வெற்றி !
”வாழ்க வளமுடன்”

காத்திருக்கப் பழகு - தத்துவம்

சுவாமி விவேகானந்தர் தனது உடல் எனும் சட்டையை களைந்த நாளில் தனது சேவையாளரிடம் கடைசியாக சொன்ன வார்த்தைகள்: 

'தியானம் செய். நான் அழைக்கும் வரை காத்திரு'. 

காத்திரு
நாம் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் விரும்பிக் காத்திருக்க பழகினால் நிறைவு நமதாகும் அவையாவன. 

பசிக்கும் வரை காத்திரு 
உடல் நீர் கேட்கும் வரை காத்திரு
காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை காத்திரு 
சளி வெளியேறும் வரை காத்திரு 
உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு 
பயிர் விளையும் வரை காத்திரு 
உலையில் அரிசி வேகும் வரை காத்திரு 
கனி கனியும் வரை காத்திரு
எதற்கும் காலம் கனியும் வரை காத்திரு.
செடி மரமாகும் வரை காத்திரு 
செக்கு எண்ணெய் பிரிக்கும் வரை காத்திரு 
தானியத்தின் உமி நீங்கும் வரை காத்திரு 
தானியம் கல்லில் மாவாகும் வரை காத்திரு 
துவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு 
தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு 
உணவு தயாராகும் வரை காத்திரு 
போக்குவரத்து சிக்கலில் இருந்து விடுபடும் வரை காத்திரு
நண்பர்கள் பேசும் போது தாம் கூற வந்த  கருத்துக்களை அவர்கள் கூறி முடிக்கும் வரை காத்திரு
பிறர் கோபம் தணியும் வரை காத்திரு

இது உன்னுடைய வாழ்க்கை ஒட்டப்பந்தையம் அல்ல

ஒடாதே
நில்
விழி
பார்
ரசி
சுவை
உணர்
பேசு
பழகு
விரும்பு

உன்னிடம் காத்திருப்பு பழக்கம் இல்லாததால்,

உன் வாழ்க்கைமுறைக்கு சற்றும் பொருந்தாத, தேவையில்லாத பொருட்களும், செய்திகளும் உன் மேல் திணிக்கப்படுகிறது.
உன் மரபணுவிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விஷ உணவுகள் உன் மேல் திணிக்கப்படுகிறது.
எதிலும் அவசரம் உன்னையும், உன் சந்ததியையும் அழிக்கும் ஆயுதம் என்பதை மறவாதே.  
உனது அன்பிற்கும் அக்கறைக்கும் எத்தனை உள்ளங்கள் காத்திருக்கின்றன என்பதை அறிவாயா?

நீ இதற்கெல்லாம் காத்திருந்தால்
உன் உயிர் உன்னைவிட்டு பிரியும் வரை காத்திருக்கும்.


காத்திருக்கப் பழகினால்

வாழப் பழகுவாய்.
இறை ஆற்றல் நீ உள்நோக்கி திரும்புவாய் என்று காத்திருப்பதை உணர்வாய்.
எல்லையற்ற அமைதி ஆற்றல் அபரிமிதம் உனக்காக காத்திருப்பதை உணர்வாய்.
வேறு ஏதேனும் தெரியுமாயின்   .........................

பஞ்சபூத சிவதலங்கள்

இந்த உலகம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து சிவசக்திகளால்
ஆனது. இந்த ஐந்து சக்திகளுக்கு உலகை ஆக்கும்வ ல்லமையும், காக்கும் வல்லமையும், அழிக்கும்வ ல்லமையும் உண்டு. இந்த சிவசக்திகளை சமஸ்கிருத மொழியில் பிருதிவி(நிலம்), அப்பு(நீர்), தேயு(நெருப்பு), வாயு(வளி), ஆகாசம்(வான்) என அழைக்கின்றார்கள்.

இவற்றின் வல்லமையை கருத்தில்கொண்டு ஐம்பெரும்சக்திகள்என்று தமிழில் அழைப்பதைப் போல சமஸ்கிருதத்தில்ப ஞ்சபூதங்கள் என்று வழங்குகிறார்கள்.

இறைவனான சிவபெருமான் பஞ்ச பூதங்களாக அருள்புரியும் தென்
இந்தியாவின் ஐந்து கோவில்கள் பஞ்சபூத சிவதலங்களாகும்.

1) பிருத்விதலம்
தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில்
உள்ள தியாகராஜர் அல்லியங்கோதை
திருக்கோயில் பிருத்விதலமாகும். சுந்தர மூர்த்தி
நாயனார் நட்பு கொண்டவர்,
அப்பர் சுவாமிகளால்
பாடல்பெற்றவர் தியாகராஜர். பிருத்வி
என்றால் மண்ணாகும். இங்குள்ள இறைவனை
பிருத்விலிங்கம் என்றும், புற்றுமண்ணால் ஆன
லிங்கரூபாக இறைவன் இருக்கிறார்
என்பதால் புற்றிடங் கொண்ட
நாதர் என்று வழங்கப்படுகிறார்.

2) அப்புதலம்
தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி
மாவட்டத்தில் உள்ள ஐம்புலிங்கேஸ்வரர்
அகிலாண்டேஸ்வரி திருக்கோயில்
அப்புதலமாகும். இத்திருக்கோயில்
திருவானைக்காவல் என்றும்
அழைக்கப்பெறுகிறது. அப்பு என்றால்
நீராகும். உமையம்மை ஈசனை வணங்க நீரைக்
கொண்டு லிங்கம் செய்தார்,
இந்த லிங்கம் அப்புலிங்கம் என்று
அழைக்கப்படுகிறது. இறைவன் நீர்வடிவான
அப்புலிங்கமாக தோன்றி அருள் செய்த
தலம் இது.

3) தேயுதலம்
தமிழ்நாட்டில் திருவண்ணாமலை
மாவட்டத்தில் உள்ள அருணாசலேஸ்வரர்
உண்ணாமுலையம்மை திருக்கோயில்
தேயுதலமாகும். தேயு என்றால்
நெருப்பாகும். பிரம்மாவிற்கும்
விஷ்ணுவிற்கும் இடையே யார் பெரியவன்
என்று போர் நிகழந்த போது, அடிமுடி
காணமுடியாத நெருப்பாக உயர்ந்து
தானே பெரியவன் என்று
சிவபெருமான் உணர்த்தினார்.
பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் இறைவன்
நெருப்பாக தோன்றி அருள் செய்த
தலம் இது.

4) வாயுதலம்
ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள
காளஹஸ்தீஸ்வரர் ஞானப்பூங்கோதை
திருக்கோயில் வாயுதலமாகும். சிலந்தி, பாம்பு,
யானை என உயிர்கள் வழிபட்டு
சிவபெருமானை அடைந்த தலம். இந்த
உயிர்களின் பெயரான ஸ்ரீ (சிலந்தி),
காள (பாம்பு), ஹஸ்தி (யானை) என்று
அழைப்படுகிறார். இறைவன் வாயுலிங்கமாக
காட்சி தரும் தலம் இது.

5) ஆகாசதலம்
தமிழ்நாட்டில் சிதம்பரம் மாவட்டத்தில் உள்ள
நடராசர் சிவகாமியம்மை திருக்கோயில்
ஆகாசதலமாகும். நடராஜர் கோலத்தில்
உலகில் ஐந்தொழில் செய்யும்
திருக்கோலத்தில் சிவபெருமான்
இருக்கிறார். மாணிக்கவாசரின் பாடலை
எழுதி சிற்றம்பலத்தான் என இறைவனே
கையெழுத்து இட்டு அருள் செய்த தலம்.
சித் என்றால் அறிவு, அம்பரம் என்று
வெளி,. நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும்
இறைவன் ஆகாயமாக அருள் தரும் தலம்.
ஓம் நமச்சிவாய...

Thursday, January 12, 2017

சாதிக்க விருப்பமா.. அவமானப்படுங்கள்

என்னை நானே யாரென்று 
புரிய எனக்கு தேவைப்படும் 
ஓர் ஆயுதம் தான் அவமானம்! 

இது உண்மை என்பது போல், 
அனைவரின் வாழ்விலும் ஏதாவது ஒரு சம்பவம் நடந்திருக்கும்.  அவமானங்கள் தான், நம்மை திசைமாறச் செய்கின்றன. அப்படி மாறுகிற திசை சரியாக அமைய வேண்டும். அதில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். அப்படியே அந்தஅவமானத்தில் கூனிக் குறுகி நின்று விடக் கூடாது. வெற்றியாளர்களின் ஆரம்ப கட்ட அடிதளமே, ஏதாவது ஒரு அவமானத்தில் தான் ஆரம்பித்து இருக்கும். அவர்கள் உயருவதற்கான படிக்கட்டுகளில் இந்த அவமானத்திற்கும், ஓர் இடம் இருந்திருக்கும். 

நம்மை அவமானப் படுத்து வோரை பார்த்து பாதிப்படையக் கூடாது; அவர்களுக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். அவமானம் என்பது தோல்வி என எடுத்துக் கொள்ளக் கூடாது. இது இழிவும் அல்ல; ஒரு பாடம். நம் வாழ்க்கையில் வெற்றிகளுக்கு மட்டுமல்ல; தோல்விகளுக்கும், இந்த மாதிரி அவமானங்களுக்கும் இடம் உண்டு. உங்களை உருவாக்குவதில் அந்த அவமானங்களுக்கு இடமில்லை என்று நினைக்காதீர்கள். ஏற்பட்ட அவமானங்களுக்காக குமைந்து கொண்டிருக்காதீர்கள். நம் வாழ்வில் தவறுகள் என்கிற காற்று அடிக்கும்போது, அவமானம் போன்ற புழுதிகள் கிளம்பத் தான் செய்யும். 

நாம் வாழ்க்கையில், மற்றவர்களை விட ஏதாவது ஒரு காரியத்தில் வேறுபட்டு சாதிக்க வேண்டுமெனில், பல அவமானங்களை சந்தித்து தான் ஆகவேண்டும். 

நம் மீது குப்பையையும், சாணத்தையும் கொட்டுகின்றனரே என்று, செடி ஒருநாளும் நம்மைப் போல் ஆதங்கப்படுவதில்லை; அழுது ஆர்ப்பாட்டம் செய்வதில்லை. அந்த குப்பையை தனக்கான உயிர்ச்சத்தாக எடுத்துக் கொண்டு, பூக்களை, காய், கனிகளை தருவதில்லையா! நாம் அந்த செடியை போல இருக்க வேண்டாமா? மற்றவர்களின் ஏளனங்களையும், அவமானங்களையும் உரமாக ஏற்று, வெற்றி நோக்கி செல்ல வேண்டாமா?
உங்களுடைய குறைகளை சொல்லி மற்றவர்கள் இன்று அவமதித்தாலும், நாளை உங்கள் வெற்றியை பார்த்து பூரிப்படைந்து, நல்ல வாழ்த்தையும் அவர்களே சொல்வர்! ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்… ‘நம்மை இவ்வளவு அவமானப் படுத்துகின்றனரே…’ என்று மட்டும் சோர்ந்து உட்கார்ந்து விடாதீர்கள். 

சோர்ந்து போகாதீர் 
அப்படி ஒவ்வொரு துறையிலும் அவமானப்பட்டவர்கள் உட்கார்ந்து விட்டால், சமுதாயத்தில் வெற்றியாளர்களே உருவாக முடியாது; இப்போது இருக்கும் வெற்றியாளர்களும் உருவாகியிருக்க மாட்டார்கள். 

எல்லாவற்றிலும் முதல் முயற்சியில் வெற்றி கிடைக்கும் என, எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதைவிட பெரிய முட்டாள்தனம், ஒரு அவமானத்தை கண்டு சோர்ந்து போய், அந்த காரியத்திலிருந்து விலகிவிடுவது. 

மனித இனத்தை தவிர, மற்ற ஜீவராசிகள் எதையும் அவமானமாக எடுத்துக் கொள்வதில்லை. மனிதன் தான் ஒரு விஷயத்தில் அவமானப்பட்டால் துவள்வதும், அந்த வேலையே வேண்டாமென ஓடிப் போவதை வழக்கப்படுத்திக் கொள்கிறான். 

ஆகவே, அவமானப்படுவது ஒன்றும் பெரிய தப்பில்லை. இப்போது சொன்ன விஷயங்கள் அனைத்துமே, நல்ல விஷயங்களுக்கு மட்டுமே… வேறு மாதிரியான காரியங்களுக்கு, நாங்கள் பொறுப்பல்ல!

பிரச்னைகளில் விலகி நின்று யோசியுங்கள். தீரும்!

இடுக்கண் வருங்கால் நகுக அதனை 
அடுத்தூர்வது அது ஒப்ப நில்! 

இந்த குறளுக்கு நமக்கு கண்டிப்பாய் விளக்கம் தெரிந்திருக்கும். நமக்கு துன்பம் வரும் போது சிரிக்க வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்; அந்த மகிழ்ச்சியே, அந்த துன்பத்தை தூர காணாமல் போக்கிவிடும். அந்த துன்பத்திற்கு நிகர், அந்த நேர மகிழ்ச்சி தான். 

சமீபத்தில் ஒரு வாழ்வியல் பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன். இதற்கான ஒரு புது விளக்கம், நாம் ஒத்துக் கொள்கிற மாதிரி, வேறு விதமாக கூறப்பட்டது ஆச்சரியமாக இருந்தது. 

‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்றால், – துன்பம் வரும்போது நகர்ந்து விடுங்கள் என அர்த்தம். 

அதற்காக, ‘துன்பத்தை பார்த்து பயந்து ஓடி விடுங்கள்’ என்று நேர் அர்த்தம் கொள்ளக் கூடாது; அந்த துன்ப மனநிலையிலிருந்து நகர்ந்து, தள்ளி நின்று, அந்த பிரச்னையை – துன்பத்தை கவனியுங்கள்; தீர்வு கிடைக்கும் என்பதாக விளக்கம் கூறினர். 

இது எவ்வளவு தூரத்திற்கு உண்மை,
ஒத்துக் கொள்ளக் கூடியதா என்று சில திருக்குறள் ஆர்வலர்களிடம் கேட்டேன்.’இதுவரை திருக்குறளுக்கு என்று திருவள்ளுவரால் இயற்றப்பட்ட பொழிப்புரை ஒன்று தனியாக கிடையாது. படித்தவர்கள் அவரவர் வசதிக்கேற்ப, புரிந்து கொள்ளும் திறனுக்கு ஏற்ப இயற்றிய பொழிப்புரை தான் வழக்கத்தில் இருந்து வருகிறது. அதனால், இதையும் ஒரு விளக்கமாக எடுத்துக் கொள்ளலாம்; தவறொன்றுமில்லை’ எனக் கூறினர். 

‘நகுக’ என்றால் என்ன? 
யோசித்து பார்த்தால், இந்த, ‘நகுக’ என்பதற்கு இப்படி நகர்ந்து போவது என்றே வைத்துக் கொண்டால் கூட நன்றாகத் தான் இருக்கும் என்றே தோணுகிறது. நீங்கள் மிகவும் துன்பத்தில் இருக்கும் போது, ‘அய்யய்யோ… நான் படும் துன்பத்தை சுற்றியே என் சிந்தனை சுழல்கிறதே…’ என்று வெறுப்படைந்து விடாமல், ‘இல்லை! நான் மகிழ்ச்சியோடு தான் இருக்கிறேன்’ என்று நேர்மறையாக சிந்திக்கும் சித்தாந்தத்தின் படி, மாற்றுச் சிந்தனையைத் திணிக்க நீங்கள் முயற்சி செய்தால், மனதுக்குள் ஒரு போராட்டம் தான் உருவாகும். 

அதற்கு பதிலாக உங்களின் சிந்தனையை நீங்களே சற்றுத் தள்ளி நின்று, கவனிக்க ஆரம்பியுங்கள். 

துன்பமான சிந்தனையோ, மகிழ்ச்சியான சிந்தனையோ, சபலமான சிந்தனையோ… அதை நீங்களே விலகி நின்று பார்க்கும்போது, 

உங்களுக்குள்ளே, ‘புரிந்து கொள்ளல்’ நடக்கும்.இதுபோன்ற மனநிலை வந்து விட்டால் துன்பம், மகிழ்ச்சி இந்த இரண்டுமே ஒன்று தான்! மகிழ்ச்சி  எப்படி ஓர் அனுபவமோ, அதே போல் துயரமும் ஓர் அனுபவமே! ஆனால் மனதில் அமைதியும், தெளிவும் இல்லாத மனிதர்களுக்கு, மகிழ்ச்சி கூட சோகமானதாய் போய்விடும். ஆனால் மனதுக்குப் பிடித்து விட்டால், இனிப்பு என்பது எப்படி ஒரு சுவையோ, அதேபோல், கசப்பும் ரசிக்கக் கூடிய ஒரு சுவைதான் என்பதை உணர்ந்து கொண்டால், ‘பிரச்னையா… அய்யோ, இதென்ன எனக்கு மட்டும் இப்படி கசக்கிறதே!’ என்ற புலம்பலோ இருக்காது!: சிறுபிள்ளையாக இருக்கும்போது, இனிப்பு ஒன்று தான் சுவை. கசப்பு, துவர்ப்பு, புளிப்பு எல்லாம் சுவை இல்லை என்று, நமக்கு நாமே முடிவெடுத்து, மற்ற சுவைகளுக்கு இடம் தராமல் மூடி விடுகிறோம். 

அது போல, மகிழ்ச்சி மட்டும் தான் நல்ல உணர்ச்சி; மற்றது எல்லாம் வெறுக்கத்தக்க உணர்ச்சிகள் என்று எண்ணி நாம், அனேக உணர்ச்சிகளுக்கு கதவை திறப்பது இல்லை; பயத்துடனேயே அதை எதிர்நோக்காமல் விட்டு விடுகிறோம். 

பிரச்னைகளை விட்டு ஓடவோ, விலகி ஒதுங்கவோ கூடாது. அப்படியே துன்பம் ஏற்பட்டுவிட்டால், கத்தி கூப்பாடு போட்டு அதகளம் பண்ணுவதில் அர்த்தம் இல்லை. ‘இது எனக்கான துன்பம் இல்லை… யாருக்கோ உள்ளது. அவர்களுக்கு வெளியில் ஒரு மூன்றாவது மனிதராய் நான் என்ன தீர்வு சொல்ல இயலும், முடியும்’ என்கிற மாதிரி தள்ளி நின்று யோசித்தாலே அந்த துன்பத்தின் வீரியம் குறைந்து, சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிடும். 

ஒவ்வொரு நொடியும் நாம் என்ன செய்கிறோம் என்பதற்கான விளைவு தான், நாம் வாழ்க்கையில் சந்திக்கும் இன்பங்களும், துன்பங்களும். வேதனையான சூழ்நிலையில் எதிர்பாராத பாதிப்புகள் வாழ்க்கையை கேள்விக் குறியாக்குகின்றன. ஆனால், எந்த சூழ்நிலையிலும், வாழ்க்கையில் ஓர் அர்த்தம் உள்ளது என்பதை, நாம் கண்டுகொள்ள வேண்டும். 

இருண்ட பக்கங்கள்? 
துன்பம் நம்மை சூழ்ந்துக் கொள்ளும் போது : வாழ்க்கையின் இருண்ட பக்கங்கள் முழுமையாக ஆட்கொண்டது போல தோன்றுகிறது. 

துன்பத்தை ஒரு எல்லையில் வைத்து பார்ப்பது கடினம் தான். பழகினால், பழக்கிக் கொண்டால், இதெல்லாம் நமக்கு ஒரு விஷயமா என்று நீங்கள் சொல்ல ஆரம்பித்து விடுவீர்கள். இப்படி எந்தச் சிறையிலும் அடைபடாமல், தள்ளி நின்று சிந்தனையைக் கவனிக்கும் போது மனம் தானாகவே அமைதி அடையும். திரைகள் விலகும்; உண்மைகள் புரியும். வாழ்க்கை அழகாக, அற்புதமானதாக, ஒரு மலரைப் போல மவுனமாக மென்மையாக விரியும். முயற்சித்து தான் பார்ப்போமே, கொஞ்சம் 
நகர்ந்து நின்று!

சுயநலம் எவ்வளவு கொடுமை என்பது அனுபவித்தவர்களுக்கு தெரியும்

நண்பர்கள் என்றால் நல்லா பேசுவர், நம்முடன் நேரம் செலவழிப்பர்; நம்மிடமிருந்து அனைத்தையும் பகிர்ந்து கொள்வர். ஆனால், சிலர் தனக்ெகன்று ஒரு வேலையோ, வாய்ப்போ, வாழ்க்கையோ வந்து விட்டால், மிக சுயநலமாய், அப்படியே கழட்டிவிட்டுவர். சுயநலம் என்பது எவ்வளவு கொடுமை என்பது, அனுபவித்து பார்த்தவர்களுக்கு தான் தெரியும். 

இவர்கள், நான் உனக்கு இதைச் செய்தால், நீ எனக்கு அதைச் செய் என, ஒப்பந்தத்தை மனதுக்குள் வைத்து கொள்வர். நீ மட்டும் அதைச் செய்தால், நான் உனக்காக இதைச் செய்துவிடுவேன் என, பதிலுக்கு பதில் செய்யத்தான் கணக்கு போடுவர். நட்புகளுக்கு இடையில் மட்டுமல்ல, சொந்தங்களுக்கு, உறவுகளுக்கு இடையிலும் இப்படி நடந்துக் கொள்வோர் இருப்பர்.பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே, நாம் வாழும் வாழ்வு அர்த்தமானதாக இருக்க வேண்டும். வாழ்ந்தோம் எனும் சொல்லுக்கும், வாழ்வு எனும் சொல்லுக்கும் ஒரு சிறப்பான அர்த்தம் இருக்கிறது. ஏதோ வாழ்ந்தோம் என்றில்லாமல், பலருக்கும் அர்த்தமாக, உதாரணமாக வாழ்ந்தோம் என்று, வாழ்வு இருக்க வேண்டும்.

வெற்றியாளர்களின் பின்னணிசுயநலமாய் நடப்போர் கண்கள், அவர்களின் நலம் வரைதான் கண்டுக் கொள்ளும்படி இருக்கும். அதாவது, சில மிருகங்கள் போல, ஒரு குறிப்பிட்ட தூரத்தை மட்டுமே பார்க்க முடியும். இப்படி சுயநலமாய் நடந்துக் கொள்வோர், அந்த நேரத்து வேலையை மட்டுமே கருத்தில் கொள்வர். சில ஆண்டுகளுக்கு பின், என்ன நடக்கும் என்பதை, அவர்களால் அனுமானிக்க முடியாது. இவர்கள் எப்படியென்றால், தன் நன்மையை மட்டும் நினைக்கும் சுயநலம்.இவர்கள் எவ்வளவு படித்திருந்தாலும், பணம் படைத்தவர்களாய் இருந்தாலும், ஆன்மிகவாதியாக இருந்தாலும் இவர்களுக்கு வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்கும் வாய்ப்பு குறைவுதான். வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர், ஒவ்வொருவர் பின்னணியில் எங்கேயோ அளவற்ற பொதுநலம் இருக்கும். அதற்காக, தன்னலத்தை துறந்தவர்களாய் இருக்கணும் என்று இல்லை. இவர்கள், வாழ்வின் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர் என்று அர்த்தம்.நம்மிடமிருந்தே துவக்கம்சுயநலமாய் இருப்பது, கெட்டதா என்பது தெரியாது. ஆனால், பொதுநலமாய் இருப்பது நல்லது. உலகில் அனைவருமே சுயநலமாய் இருந்துவிட்டால் நாடு எப்படி உருப்படும்? ஆனால், நாம் நம் நிலையை உயர்த்திக் கொள்வதில், சுயநலமாய் இருப்பதில்தான் ஒரு பொதுநலமும் அடங்கியுள்ளது. 

என்னங்க ஒரே குழப்பமாய் இருக்கிறதா? 
ஒழுங்கா, ஒழுக்கமாக சம்பாதிச்சா நம்முடைய வீடு, மனைவி, குழந்தைகள் நன்றாக இருப்பர். நம் ஒழுக்கமும், ஒழுங்கும் நம் வீட்டிலும் பிரதிபலிக்கும். அவங்க படிக்கிற படிப்பும், பார்க்கிற வேலையும் நாட்டுக்கு பயன்படுகிற மாதிரி இருந்தால் போதும். அதுவே, பொதுநலமாக மாறிவிடும். வீடும், ஊரும், நாடும் உருப்படும். அதாவது, நம் சுயநலத்தில், பொதுநலமும் கலந்து இருக்கணும்; அப்போ இந்த சுயநலம் தேவைதானே! 

இப்போ புரியுதுங்களா? 
நம் நலத்தை பேணிக்காக்காதவன், எப்படி பொதுநலம் ஆற்றமுடியும்? செயலின் முடிவு பொதுநலமாக இருந்தால் போதும். அதுவே, தன்னலத்தில் பொதுநலம் கருதும் செயலாக அமைந்துவிடும்.ஆனால், அயோக்கியத்தனமான சுயநலம் அமைந்துவிட்டால் என்ன செய்வது? யாரையும் காயப்படுத்தாத, சுரண்டாத சுயநலம் அனைவருக்கும் தேவைதான். இச்சுயநலம், ஒரு வகையில் கடமையும், பொறுப்பும் ஆகும். எந்தச் செயலும், நம்மிடமிருந்தே தான் துவங்க வேண்டும்; ஆனால், செயலின் முடிவு, பொதுநலமாக இருந்தால் போதும்.’மழை பெய்யணும்னு நினைக்கிறது பொதுநலம் நாம் நனையாம குடை பிடிச்சிக்கிறது சுயநலம்’ சிந்தனையில், பொதுநலம் இருந்தாலே போதும். சின்ன சின்ன செயல்கள் நூறு செய்யலாம். பொது இடங்களை சுத்தமாக வைத்து கொள்வதும், பொது இடங்களில் புகை பிடிக்காமல் இருப்பதும், தண்ணீர், மின்சாரத்தை சேமிப்பது என்று துவங்கி, பலவற்றை பட்டியல் போடலாம். பொதுநல சிந்தனையுடன், என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யாமல் இருக்கலாம் என்று, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஒரு புத்தகமே எழுதியுள்ளார். பொதுநல சிந்தனை மனதில் பூக்க இடமளித்தாலே போதும், உங்கள் அறிவு பொதுநல நோக்கில் என்ன செய்யலாம் என்று, வழிக்காட்டத் துவங்கும். 

பொதுநல சிந்தனையோடு… யார் யாரோ கண்டுபிடித்த பொருட்களையும் பயன்படுத்தி வருகிறோம். யார், யாரோ அமைத்து கொடுத்த, அடிப்படை வசதிகளை அனுபவித்து வருகிறோம். ஆனால், அதே சிந்தனையோடு, அடுத்த தலைமுறைக்காகவும், சக மனிதனுக்காகவும், நாம் செயல்பட தயங்குவதென்பது அநியாயம் தானே? 

பெரிய அரசியல் தலைவர்கள், ஞானிகள் போன்றோரால் மட்டும் தான், பொதுநலத்துடன் சிந்திக்க முடியும் என்றும், மற்றபடி சராசரி மனிதர்களுக்கு அதெல்லாம் சாத்தியமில்லாத ஒன்றாகும் எனவும், நம்மில் பலர் நினைக்கிறோம். 

யாருக்கும் எந்த கெடுதல் நினைக்காமலும், செய்யாமலும் என் குடும்பத்தில், எனக்கு இருக்கும் கடமைகளை, எந்தக் குறையும் வைக்காமல் நிறைவேற்றினாலே போதாதா? என்று, ஒரு கேள்வியை கேட்டு, ஒரு வட்டம் போட்டு அதற்குள்ளேயே நின்றுக் கொள்கின்றனர். இன்றைக்கும் பொதுநல சிந்தனையோட, ஈர இதயங்கள் ஆங்காங்கே பலர் இருப்பதால்தான், இந்த சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அன்ன தானம். ரத்த தானம், கண் தானம், உடல் உறுப்புகள் தானம் வரை நடந்துக் கொண்டேயிருக்கிறது. 

நாடென்ன செய்தது நமக்கு என கேள்விகள் கேட்பது எதற்கு? 
நீ என்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை நமக்கு… 
மற்றும் நான் ஏன் பிறந்தேன்… இந்த நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்? இந்த முழு பாடல்களின் அர்த்தம் புரிந்தால் போதும்,நாமும் பொதுநலம் பார்த்து நடக்க ஆரம்பித்து விடுவோம்.

மேல் தட்டு மக்களிடம் கற்க வேண்டியவை!

செல்வம் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களை பார்த்து, பொறாமைபட தெரிந்த அளவிற்கு, அவர்களது வெற்றி ரகசியங்களை அறிந்து கொள்ளத் தெரியவில்லை நம்மவர்களுக்கு!

‘எவ்வளவு தேறும் இவருக்கு…’ என்று கேட்கத் தெரிந்த அளவிற்கு, ‘இவர்களைப் போல நாமும் வர வேண்டாமா…’ என்று உந்து சக்தியாக பயன்படுத்திக் கொள்ளத் தெரிவது இல்லை.

சிலருடைய அபார வளர்ச்சிகளை பார்க்கும்போது, வெற்றியின் காரணங்கள் பிடிபடுவதில்லை. ‘எப்படித்தான் இந்நிலைக்கு வந்தனரோ…’ என்று, நம்மை ரொம்பவே யோசிக்க வைக்கின்றனர்.

‘சிபாரிசுக்கும், பொருளாதார உதவிக்கும், இவர்கள் எந்த அளவுக்கு நமக்கு பயன்படுவர்…’ என்று தான் இவர்களை சுற்றியிருப்போர் கணக்கு போடுகின்றனரே தவிர, எத்தகைய தனித்திறமைகளால், தங்கள் நிலைகளை தக்க வைத்தோ, உயர்த்திக்கொண்டோ செல்கின்றனர் என்கிற ஆராய்ச்சியில், இறங்குவது இல்லை.

நன்கு வளர்ந்தவர்களைப் பொறாமைக் கோணத்துடன் பார்ப்பது வயிற்றில் வைக்கப்படும் நெருப்பை போன்றது. இது வயிறெரியத்தான் பயன்படுமே தவிர, வேறு பயன் இல்லை.

‘என்னோட தான் படிச்சான்; எப்பவும் கடைசி பெஞ்சுல தான் உட்காருவான். இன்னைக்கு என்னடான்னா, எங்கேயோ போயிட்டான். வயிறு பத்திக்கிட்டு எரியுது…’ என்று பள்ளித் தோழர் ஒருவர், காதில் புகை வெளிவரும்படி எட்டி நின்று பேசினால், அவர் இன்னும் கீழே போகப் போகிறார் என்று தான் பொருள்.
மாறாக, நெருப்பை நெஞ்சில் வைத்து, அந்த நெருப்பை, நம் வாழ்க்கை நிலை எனும் வாகனத்தை, முன்னோக்கி தள்ளும் எரிசக்தியாகப் பயன்படுத்த வேண்டும்.

‘வாடா நண்பா… நல்லா வந்துட்டே… உன் கூட படிச்சேன்னு சொல்லிக்கவே பெருமையா இருக்கு. எனக்கும் வாழ்க்கையில் எப்படி ஜெயிக்கிறது, உன்னைப் போல எப்படி முன்னுக்கு வர்றதுன்னு சொல்லித் தரக் கூடாதா…’ என்று அண்டி சென்று கேட்கிற அணுகுமுறை, எத்தனை பேருக்கு இருக்கிறது?

இப்படி கேட்டே விட்டார் ஒருவர்… உடனே, இதை பாராட்டாகவும், பூரிப்பாகவும் எடுத்து கொண்ட பால்ய நண்பர், ‘நல்ல நேரத்தில் வந்தே… கர்நாடகத்துல ஒரு கிளை திறக்கலாம்ன்னு முடிவு செய்து, யாரை போடலாம்ன்னு யோசிச்சிக்கிட்டிருந்தேன். நீதான் என், ‘மேனேஜிங் பார்ட்னர்’ ஓ.கே. வா?” என்று கேட்க, திக்கு முக்காடி போனார் நம்மவர்.

இந்தளவிற்கு எல்லாராலும் நிர்வாக பங்குதாரராக முடியாவிட்டாலும், நெருங்கி பழகவாவது இடம் கொடுக்க, இந்த வாய்ப்பை கொண்டே, இவரது வெற்றி சூத்திரங்களை தெரிந்து கொண்டு விடலாம். பின் என்ன… புழுவாக கிடந்தவர்களின் உடலில், புலியின் ரத்தம் ஏறிய கதைதான்.

‘நம்மை பார்த்து பொறாமைப் படும் கூட்டத்தில், இதோ என்னை கதாநாயகன் போல எண்ணி வியக்க ஒருவன் இருக்கிறான்; இவனுக்கு, நம் இதயத்தில் இனி நல்லிடம் தான்…’ என்று வளர்ந்தவர்கள் இடம் கொடுக்க, வியந்து பேசியவர் வாழ்க்கையில், புது அத்தியாயம் ஆரம்பிப்பது உறுதிதான்.

‘அதெல்லாம் முடியாது… இவன் கிட்டப்போய் எவன் நிப்பான்; நான் மானஸ்தன், தன்மானம் கொண்டவன்…’ என்கிற வீராப்பு மனநிலை இருக்குமானால், எட்டி நின்று இவரது வளர்ச்சிகளை வியந்து நோக்கலாம்.
மேல்தட்டு மக்களிடம், நான் பார்த்து வியந்த விஷயங்களை உங்களிடம் கூறுகிறேன்… இவை உங்களுக்கு பயன்படுமானால் மகிழ்ச்சி.

நன்கு வளர்ந்தவர்கள் அனை வருமே வெகு சீக்கிரம் எழுகின்றனர்; நீண்ட நேரம் உழைக்கின்றனர்; எப்போதும் வளர்ச்சி வளர்ச்சி என்று அடங்காமல் வலம் வருகின்றனர். எந்நேரமும், தொழில் சார்ந்த சிந்தனையாகவே இருக்கின்றனர். குறைந்த உழைப்பால், நிறைந்த பலன் கிடைப்பதில் மட்டும் அதிக கவனம் செலுத்துகின்றனர்; மிகக் குறைவாகவே பேசுகின்றனர். வார்த்தைகளை மிக நளினமாக கையாள்கின்றனர். பிடிக்காவிடில், பகைத்து கொள்ளாமல், ஒதுங்கி கொள்கின்றனர். எது ஒன்றையும், மனம் புண்படாதபடி மறுக்கின்றனர்.

மேல்தட்டு மக்களை வியப்பதை பொறுத்த வரை, ஒரே ஒரு நிபந்தனை உண்டு. சிலர், நியாயத்திற்கு புறம்பான வளர்ச்சிகளை அடைந் திருக்கின்றனர் அல்லவா? இவர்களை மட்டும், கரும்புள்ளி வைத்து ஓரங்கட்டி விடுங்கள் போதும்!

வெறுப்பை அகற்ற பத்து வழிகள்

உலகில் உங்கள் எதிர்ப்படும் எல்லோரையும் நண்பர்களாக்கிக் கொள்ள விரும்புகிறீர்களா?அப்படியானால் வெறுப்பு எனும் கறுப்பு உணர்வை துடைத்து எறிய வேண்டும். அது முடியுமா? ஏன் முடியாது. குழந்தைகளாக இருக்கும்போது அந்த உணர்வு இல்லையே. வளர வளரத்தானே வெறுப்பு உணர்வும் வேர்விட்டு படர்ந்து விருட்சமாக வளர்ந்தது வெறுப்பு என்ற விரும்பத்தகாத ஒரு குணத்தை மட்டும் நீங்கள் கைவிட்டுப் பாருங்கள் உலகில் உள்ள அனைவருமே உங்களுக்கு நண்பர்களாகத் தான் இருப்பார்கள்.
குழந்தைகளாக இருக்கும்போது மனதில் துளிர்விடாத வெறுப்பு, சூழ்நிலையின் தாக்கத்தாலும், உடன் பழகுபவர்களாலும், வளர்ப்பாலும் நம் மனதில் மெல்ல குடிபுகுகிறது விளைவு? பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து, பக்கத்து நாடு வரை நமது வெறுப்பைக் காட்ட நேரிடுகிறது.

இந்த வெறுப்புணர்வால் நமக்கு கிடைப்பது ஒன்றுமில்லை. நண்பர்களின் வழிகாட்டால், உறவினர்களின் உதவி, பெற்றோர்களின் பாசம், ஆகியவற்றை இழப்பதுதான் மிச்சம். கடைசியில் நாம் தனிமரமாக நிற்க வேண்டியதுதான்.
பல வகைகளில் வெறுப்பு உருவெடுக்கும். ஒருவரின் இனம், குணம், நிறம், பேச்சு, மதம், பொருளாதாரம், பழக்கவழக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் இந்த நச்சுக் குணம் நம் மனதில் குடிகொள்ளும்.நாம் பேசும் வெறுப்பான வார்த்தைகள், நம்மிலிருந்து தெறித்து, எதிர்படுபவர் மீது விழும்போது, அவர்களுடைய மனநிலையைப் புரிந்து கொள்ள தவறிவிடுகிறோம்.உங்கள் மனதிற்குள் வெறுப்புணர்வு நுழைந்துவிட்டால் அவ்வளவுதான்.அனைவருமே உங்களுக்கு எதிரியாக தோன்றுவார்கள்.பிறருடைய வளர்ச்சி உங்களை ஏளனம் செய்வது போல தெரியும்.வெறுப்புணர்ச்சியை ஒழிக்க இங்கே தரப்பட்டுள்ள 10 வழிகள் நிச்சயம் உங்களுக்கு உதவும்.

செயல்பாடு
‘‘நீ எவ்வாறு நினைக்கிறாயோ அவ்வாறே வளர்வாய்.’’ இது ஒரு பழமொழி.உங்களுடைய நினைப்பும், செயல்பாடும் மிகவும் முக்கியம்.உங்களின் செயல்பாடும், பேச்சும் எவ்வாறு அமைய வேண்டும். பொறுமையையும், அன்பையும் வெளிக்காட்டுவதாக இருக்க வேண்டும்.உங்களுடைய செயல்பாடே, அனைத்து கெட்ட நிகழ்வுகளுக்கும், நல்ல நிகழ்வுகளுக்கும் அடிப்படை…உங்களுடன் பழகுவோரிடம் பொறுமையையும், அன்பையும் உணர்த்த வேண்டும்.இனம், நிறம், சாதி, மதம் பொருளாதாரக் காரணிகளால் வெறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு இருக்கும் மக்களிடம் நாம் அன்பு காட்ட வேண்டும்.-அவர்களுக்கு ஆதரவான, ஆறுதலான வார்த்தைகளை வழங்க வேண்டும். நம்முடன் பழகுவோரிடமும் இந்த வெறுப்புக் காரணிகளைக் வெளிக்காட்டக் கூடாது.இந்தப் பழக்கத்தை உங்கள் மனதில் தொடர்ந்து நிலைநிறுத்தினால், நாளடைவில் உங்கள் வெறுப்புணர்வு ஒழிந்து அன்பு மலரும்.

ஒருங்கிணைப்பு :
தனிப்பட்ட நபர் மீதோ அல்லது குழு மீதோ உங்களுக்கு வெறுப்புணர்ச்சி இருக்கலாம். அந்தக் குழுவினரையோ அல்லது தனிப்பட்ட நபரையோ நீங்கள் ஒதுங்கி வைப்பதுபோல் வேறு பலரும் ஒதுக்கி வைக்கலாம். வெறுப்புணர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நீங்கள் இருக்க வேண்டும். வெறுப்புணர்ச்சி உள்ளவர்களை ஒன்றிணைத்து, பொறுமையின் முக்கியத்துவத்தையும், வெறுப்புணர்ச்சியின் பாதிப்புகளையும் எடுத்துரைக்க வேண்டும். வெறுப்புணர்ச்சி ஏன் மனதில் தோன்றுகிறது என்பதை ஒவ்வொருவரிடமும் கேட்டறிந்து அதை மனதிலிருந்து அகற்றுவதற்கான ஆலோசனைகளைக் கேட்க வேண்டும்.தொடக்கத்தில் வெறுப்புணர்ச்சி உள்ளவர்களை ஒன்றிணைப்பது சிறிது சிரமமாக இருக்கும்.நாளடைவில் குழு முறையில் அமர்ந்து அவர்களுடன் நீங்கள் கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டும்.இதன் மூலம் விரைவில் நல்ல மாற்றம் ஏற்படுவது நிச்சயம். பல்வேறு குணங்களைக் கொண்டோருடன் கலந்துரையாடி, மனம் விட்டுப் பேசுவதன் மூலம் நட்புறவு வளர்ந்து வெறுப்பு மறைவதற்கு வாய்ப்பு உண்டு.ஆகவே, வெறுப்புணர்ச்சியுள்ள நபரை ஒருங்கிணைத்து அவர்களுடன் கலந்துரையாடுங்கள். அந்தக் குணத்தை களைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள்.

ஆதரவு :
நமது வெறுப்புணர்ச்சியால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு ஆதரவு அளிப்பது மிகவும் முக்கியம். உடல் ரீதியாக, மனரீதியாக, பாலின ரீதியாக மட்டுமின்றி, இனம், நிறம், சாதி பொருளாதார அடிப்படையில் கூட வெறுப்புணர்வால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம். தாக்கப்பட்டிருக்கலாம். அவர்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளில் இருந்து, சட்ட உதவிகள் வரை அனைத்து வகையிலும் ஆதரவு அளிப்பது அவசியம்.மற்றவர்களுக்கு உதவி செய்வதை சிலர் ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள். வேறு சிலரோ, யாரேனும் உதவி செய்ய முன்வர மாட்டார்களா என்று ஏங்கியிருப்பார்கள். அத்தகைய நபர்களை இனம் கண்டு ஆதரவு அளிப்பது வெறுப்புணர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும்.நாம் மட்டும் ஆதரவு அளித்தால் போதாது. நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும்படி செய்ய வேண்டும்.

வெறுப்புணர்வால் பாதிக்கப்பட்ட பிரிவினரை நாம் அடிக்கடி சந்தித்து பேச வேண்டும். அவர்களுடன் கடிதம் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும்.வெறுப்புணர்வால் பாதிக்கப்பட்டோம் என்ற உணர்வு அவர்களுக்குள் மெல்ல மறைவதற்கு இவை உதவும்.நீங்கள் தனியாக இல்லை. நான் உங்களுடன் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை அளிக்கிறீர்கள் எனபதை மறந்து விடாதீர்கள். மதநம்பிக்கை உடையவர்களாக இருந்தால், அந்தந்த மதத்திற்குரிய சின்னங்கள், கடவுள்களின் படங்களை அளித்து நம்பிக்கை ஊட்டலாம்.வெறுப்புணர்வால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் வெறுப்புணர்வை பரப்பும் குழுக்களால் பாதிக்கப்படலாம். வார்த்தைகளாலோ அல்லது உடல்ரீதியாகவோ அவர்கள் தாக்கப்படலாம் என்று நீங்கள் நினைத்தால் அத்தகையோருக்கு பாதுகாப்பு அளிக்கலாம்

செயலில் இறங்குங்கள் :
வெறுப்புணர்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெறும் ஆதரவு மட்டுமே அளிப்பது போதாது. வெறுப்புணர்வுடன் அலைபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்ய வேண்டும்.வெறுப்புணர்வு எங்கு உள்ளது. எப்படி, எதனால் உருவாகிறது என்பதைக் கண்டறிய வேண்டும். வெறுப்புணர்வால் பாதிக்கப்பட்ட மக்களையும் இச்செயலில் ஈடுபடுத்தினால், அவர்களின் அனுபவ வார்த்தைகள் நிச்சயம் வெறுப்புணர்வுடன் இருப்பவர்களுடைய மனதையும் மாற்ற உதவி புரியும்.

மாற்றுவழிகளைக் கண்டுபிடியுங்கள் :
வெறுப்புணர்வை பரப்பும் கூட்டங்களையும், ஊர்வலங்களையும் ஒதுக்க வேண்டும்.ஒரு குறிப்பிட்ட பிரினருக்கு எதிரான கூட்டம் என்று தெரிந்தால் அதில் கலந்து கொள்ளாதீர்கள். அவர்களுக்கு எதிரான ஊர்வலத்தை புறக்கணியுங்கள். தனிப்பட்ட ஒருவருக்கு எதிரானதாக் இருந்தாலும் அதைக்கூட தவிர்த்து விடுங்கள்.உங்கள் அருகில் வெறுப்புணர்வை வளர்க்கும் விதத்தில் யாரேனும் பேசினாலோ அல்லது நடந்து கொண்டாலோ அவரகளிடம் வெறுப்புணர்வைக் குறைக்கும் வழிகளைக் கூறுங்கள்.அன்பையும், ஒற்றுமையும், மனித உரிமையின் அவசியத்தையும் அவர்களிடம் வலியுறுத்துங்கல். மனிதாபிமானத்துடன் மற்றவர்களுடன் பழக வேண்டும். மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை எடுத்துக் கூறுங்கள். வெறுப்புணர்ச்சியை மறக்க முயற்சிக்க வேண்டும். அதற்கு மாற்றுவழிகளை தேட வேண்டும்.

போராட்டம் :
மனம் முழுவதும் வெறுப்புணர்வை நிரப்பியவர்களை கண்டுபிடியுங்கள். அவர்களுடைய மனதிலிருந்து வெறுப்புணர்வை ஒழிக்கப் போராட்ட வேண்டும்.அவர்களுடைய ஒவ்வொரு செயலிலும் ஒளிந்திருக்கும் வெறுப்புணர்வை எடுத்துக் காட்ட வேண்டும்.அதற்கு, நடுநிலையுடன் செயல்படும் நபர்கள், நிறுவனங்கள், நாளேடுகள் ஆகியவற்றை துணையாகக் கொள்ளுங்கள். ஆனால், எவ்விதத்திலும் வெறுப்பை ஒழிக்க வெறுப்புணர்வு உள்ளவர்களிடம் நேரடியாக மோதாதீர்கள். அவர்களை நேரடியாக கண்டிக்காதீர்கள். இப்படி செய்தால் அவர்களுடைய வெறுப்புணர்வை நாம் ஈட்ட வேண்டியது வரும்.மறைமுகமான வழிகள் மூலமாகவே போராட வேண்டும். வெறுப்புணர்வுடன் உள்ளவர்கள் கூடும் இடங்களை தேடிப்பிடியுங்கள்.பொறுமையின் அவசியத்தையும், அன்பின் முக்கியத்துவத்தையும் அங்கு பரப்புங்கள். வீடுகள் தோறும் பிரச்சாரம் செய்யுங்கள். இணையதளங்கள், உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகள், நாளேடுகள் வாயிலாக பரப்புங்கள்.

புகழ்பெற்றவர்கள் மூலம் பிரச்சாரம் :
வெறுப்புணர்வை ஒழிக்க முகம் தெரியாத நாம் கூறும் கருத்துகளையும், ஆலோசனையைக் காட்டிலும், தெரிந்த ஒரு முக்கிய நபர் மூலமாக வெறுப்புணர்வுக்கு எதிரானக் கருத்துகளைப் பரப்பலாம். நடிகர், நடிகைகள், கட்சித் தலைவர்கள், ஊர் பெரியோர்கள், மதத்தலைவர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மூலமாக வெறுப்புணர்வை ஒழிக்கும் வழிகளை எடுத்துக் கூறுவதன் மூலமாக கருத்துகள் 100 மடங்கு விரைவாக அனைவரையும் சென்றடையும். இத்தகைய புகழ் பெற்றவர்கள் மூலமாக கூட்டங்கள் நடத்துவது, ஊர்வலம் நடத்துவது பிரச்சாரம் செய்வது போன்றவற்றின் மூலம் வெறுப்புணர்வு உள்ளவர்களையும் இணைத்து அவர்கள் மனதில் உள்ள குணத்தை ஒழிக்கச் செய்யலாம். அதற்கான பாதிப்பும் நிச்சயம் இருக்கும்.

தொலை நோக்கு :
வெறுப்புணர்வை தற்சமயத்திற்கு மட்டும் ஒழிக்காமல், எதிர்காலத்தில் அத்தகைய குணம் மனதில் தோன்றாத நிலையை உருவாக்க வேண்டும். அதற்கு நம் எண்ணங்களையும், செயல்களையும், சிந்தனைகளையும் அகலப்படுத்திக் கொள்வது முக்கியம். வெறுப்புணர்வு என்பது முதலில் நம்முடைய வீட்டில் இருந்துதான் தொடங்குகிறது. நம் மனதிலிருந்துதான் தொடங்குகிறது. அதை எவ்வாறு வேரறுப்பது என்பதை சிந்திக்க வேண்டும். வெறுப்புணர்வை ஒழிக்க மிகச்சிறந்த வழி பொறுமை என்று மனோவியல் வல்லுநர்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்து கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆதலால் பொறுமையை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். எப்போதும் ஒருவரைப் பற்றியோ அல்லது ஒரு பிரிவினரைப் பற்றியோ முழுமையாக அறிந்து கொள்ளாமல் மனதில் அவர்கள் குறித்த தவறான எண்ணங்களை வளர்க்கும் பழக்கத்தை அழிக்க வேண்டும். இந்த எண்ணமாற்றம் மனதில் உதித்துவிட்டால் செயல்பாடுகளில் நிச்சயம் மாற்றம் வரும். தவறான, முழுவிவரம் தெரிந்து கொள்ளாமல் வரும் எண்ணங்களே வெறுப்புணர்வுக்கு அடிப்படை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பொறுமையைக் கற்றுக்கொடுங்கள் :
விதை நன்றாக இருந்தால் விளையும் பொருளும் நன்றாக இருக்கும். ஆதலால், வெறுப்புணர்வை ஒழிக்கும் நடவடிக்கையை குழந்தைகளிடமிருந்து தொடங்குவது சிறந்தது. அவர்களுக்குப் பொறுமையின் முக்கியத்துவத்தையும், சக மாணவர்களிடம், தோழிகளிடம் காட்டும் அன்பின் அவசியத்தையும் எடுத்துக் கூற வேண்டும். இன, மத, பொருளாதார உணர்வுகளில் உண்டாகும் வெறுப்புகளால் விளையும் தீமைகளை எடுத்துக்கூற வேண்டும்.நல்ல கதைகள், நாடகங்கள், பாடங்கள், பாடல்கள், ஓவியங்கள் மூலமாகவும் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறி அவர்களையும் பங்கேற்கச் செய்யலாம். யோகா, இசை, உள்ளிட்டவற்றில் குழந்தைகளை ஈடுபடுத்தி, அதன் மூலமாக பிறரிடம் வெறுப்புணர்வை காட்டாமல் இருப்பது குறித்து உணர்த்தலாம்.

உங்களைச் சோதித்துக் கொள்ளுங்கள்
உங்கள் மனதில் பிறரைப்பற்றிய தவறான எண்ணங்கள், முழுமையாக அறியாமல் வளர்த்துக் கொண்டுள்ள தவறிய கணிப்புகள் ஆகியவற்றை வெளிக்கொணருங்கள். அவை எவ்வாறு உருவானது என்பதற்கு காரணத்தைத் தேடுங்கள்.

உறவினர்களைத் தெரியுமா உங்கள் குழந்தைகளுக்கு?

த்தை… அவன் என் முடியைப் பிடிச்சு இழுக்கறான்…’
‘அவதான் முதல்ல என் சட்டையைப் பிடிச்சு இழுத்தா…’
‘ரெண்டு பேரும் கொஞ்சம் நேரம் சும்மா இருக்க மாட்டீங்களா? உங்க பாட்டி நெய் சீடை செஞ்சுட்டு இருக்காங்க… ரெண்டு பேரும் சமையக்கட்டுக்குப் போங்க!
– சிலபல ஆண்டுகளுக்கு முன் இப்படியான பேச்சுகளை நம் குடும்பங்களில் கேட்டிருக்கலாம்.
‘மம்மி… பிளாக் ஃபாரஸ்ட் கேக் வேணும்’
‘ம்ம்ம்… ஷாப்பிங் போலாம்’
‘டாடி, ஐபேடு வேணும்’
‘கொஞ்ச நேரம் டிஸ்டர்ப் பண்ணாம மொபைல்ல கேம்ஸ் ஆடு செல்லம்…’
– இது நிகழ்காலத்தில் நம் வீடுகளில் கேட்கும் உரையாடல்கள்.
 
அம்மா – அப்பா, அண்ணன் – தம்பி, அக்கா – தங்கை, பாட்டி – தாத்தா, பெரியம்மா – பெரியப்பா, சித்தி – சித்தப்பா, அத்தை – மாமா, அண்ணன் – அண்ணி, மைத்துனி – மைத்துனர், பேத்தி – பேரன், மனைவி – கணவன், மாமியார் – மாமனார், நாத்தனார் – மாப்பிள்ளை, மகள் – மகன்… இதெல்லாம் குடும்ப உறவுகள் என்பதை நம் குழந்தைகள் பாடப்புத்தகத்தில் படித்திருக்கலாம். அல்லது பெரியவர்கள் பேசும்போது கவனித்திருக்கலாம். கூட்டுக் குடும்பங்கள் தழைத்திருந்த காலத்தில், அத்தனை உறவுகளுமே ஒரே வீட்டில் இருந்ததைப் பார்த்திருக்க முடியும்.
கூட்டுக்குடும்பங்கள் தனிக்குடும்பங்களாக உடைந்த பிறகு, ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மாவோடு இரு குழந்தைகள் என்று சுருங்கியது. இப்போது அதுவும் குறைந்து, ஒரு குழந்தை மட்டுமே உள்ள வீடுகள் அதிகரித்து வருகின்றன.
அப்பா, அம்மா, மகன் அல்லது மகள் என்று அமையும் நியூக்ளியர் குடும்பங்கள் அதிகரித்து வருவது ஒருபக்கம் இருக்க, வருந்தத்தக்க வகையில், குழந்தையுடன் தனித்து வாழும் தாய் அல்லது தந்தை என சிங்கிள் பேரன்ட் குடும்பங்களும் பெருகிவருகின்றன.
இப்படி உறவுகள் அனைத்தும் சிதறி வாழும் இன்றைய காலகட்டத்தில், உறவுமுறைகளின் பெயர்களை குழந்தைகள் பெயரளவில் தெரிந்து வைத்திருப்பதே ஆச்சர்யம்தான். குடும்பம் குடும்பமாக ஸ்டுடியோவுக்குச் சென்று குடும்பப் புகைப்படங்கள் எடுத்து, அதைச் சுவரில் மாட்டிவைத்து, ‘இது தாத்தா, இது கொள்ளுப் பாட்டி, இது பெரியப்பா’ என்று சொல்லி வளர்த்த காலம், இன்று செல்போன் செல்ஃபிகளில் கரைந்துகொண்டிருக்கிறது.
பாட்டி வீட்டுக்குப் போய் ஆற்றில் குளிப்பது, ஆலமரத்தில் விழுதுகட்டி ஊஞ்சல் ஆடுவது, பெரியம்மா வீட்டு முற்றத்தில் பம்பரம் விளையாடுவது, மாமாவோடு சென்று மீன் பிடிப்பது, சித்தியோடு திருவிழா பார்ப்பது, அண்ணி வீட்டில் கைமுறுக்கு சாப்பிடுவது என உறவுகளுடனான சுகானுபவங்கள் இல்லாமல் பிணைப்பற்று வாழ்கிறார்கள் இன்றைய குழந்தைகள்.
நம் தலைமுறையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் உறவுகளைப் பற்றி பெயர் அளவில்கூட தெரியாத அளவுக்கு குழந்தைகளை வளர்த்துக்கொண்டிருப்பது ஆரோக்கியமானதா? இப்படியே போனால் நாளை நமது பேரக் குழந்தைகளுக்கு, நாம் யாரென்பதுகூட தெரியாத நிலை வரக்கூடுமா? குடும்ப உறவுகளை நம் குழந்தைகள் எந்த அளவுக்கு அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை, முதலில் நாம் தெரிந்துகொள்வது அவசியமானதுதானே? அதை அறிய, விகடன் இணையதளத்தில் பிரத்யேக சர்வே நடத்தினோம் (பார்க்க: பாட்டிக்குக் கெத்து!).
உறவுகள் என்பதே விவாதத்துக்கு உரிய விஷயமாகிவிட்ட நிலையில், இன்றைய குழந்தை வளர்ப்பும் உறவுகளை விட்டு தனித்திருப்பதையே பிரதானப்படுத்துகிறது. உறவினருக்கும் குழந்தை களுக்குமான உறவு எப்படி இருக்க வேண்டும்? உறவுகள் பலம் இழந்ததன் காரணம் என்ன? இதற்கான தீர்வு என்ன? இவற்றைப் பற்றிப் பேசுகிறார், மனநல மருத்துவர் திருநாவுக்கரசு.
‘`உறவுகள் தேவை என்றால் அதற்குக் குடும்பம் இருக்க வேண்டும். அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போதுதான் அவர்களின் வாரிசுகளுக்கு மாமா, அத்தை, பெரியம்மா, பெரியப்பா, சித்தப்பா, சித்தி, சித்தப்பா உள்ளிட்ட உறவுகள் கிடைக்க முடியும். தனியொரு குழந்தையாக இருக்கும் போது, உறவுகள் எப்படி விரியக்கூடும்? திருமணத்தையே ‘ஏன், எதற்கு?’ என்று கேள்விக்கு உள்ளாக்கும் சமூக அமைப்பு நம்மை நெருக்கிக்கொண்டிருக்கும் வேளையில், குடும்பங்களில் உறவுகளைப் பெருக்குவது சற்று கடினம்தான்.
தனிக்குடித்தனம்
பொருளாதாரச் சூழல்
ஒரே குழந்தை
சமூக மாற்றம்
தொழில்நுட்ப (டெக்னாலஜி) வளர்ச்சி
இதுபோன்ற காரணங்களாலேயே இன்று உறவுகள் சுருங்கிக்கொண்டிருக்கின்றன. இதில் மிக முக்கியப் பங்கு, டெக்னாலஜிக்கு இருக்கிறது. என்னதான் டெக்னாலஜியின் மூலமாக எங்கோ இருக்கும் உறவுடனும் பேச முடியும் என்றாலும், அதன் அசுர வளர்ச்சி, நாம் உறவினர்களுக்கு ஒதுக்க வேண்டிய நேரத்தை அபகரித்துக்கொள்கிறது என்பது உண்மை.
மனித உணர்வுகளை சக மனிதர்களிடம் பகிர முடியுமே தவிர, இயந்திரத்திடம் பகிர்ந்துகொள்ள முடியாது. நம் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையையும், அவர்களின் அனுபவத்தையும் அவர்களே சொல்லிக் கேட்டு, அதை பின்தொடர்ந்து வாழ்கிற வாய்ப்பையும் இன்றைய தலைமுறையினர் இழந்துவருகிறார்கள்.
இதற்கான தீர்வுதான் என்ன?
`தனிமனிதனாகவே வாழ்ந்துவிடலாம்’ என்கிற எண்ணம் துறந்து உறவுகளைப் பேணுவதில் கவனம்கொள்ள வேண்டும்.

உணவு, உடை, உறைவிடம், தூக்கம், போலவே உறவுகளுக்கு முக்கியத்துவம் தரும்போதுதான் மனிதாபிமானம் நிறைந்த சமூகம் உயிர்ப்புடன் இருக்கும்.

அடிப்படையில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம்.
பொருளாதாரத்தை உயர்த்துவதில் காட்டும் முனைப்பைவிட, குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.
குழந்தைகளுக்கு உறவினர்களிடம் பழகும் வாய்ப்பை தொலைபேசியோடு நிறுத்திவிடாமல், நேரிலும் வாய்க்கச் செய்ய வேண்டும்.
இப்படி, குடும்பம் என்கிற மரம் தழைக்கும்போதுதான் உறவுகள் கிளைகளாகச் செழித்திருக்கும்!’’ என்கிறார் திருநாவுக்கரசு!