Thursday, July 18, 2013

நீங்கள் விரும்பத்தக்க மனிதராய் இருக்க சில சிந்தனைத்துளிகள்

• உற்சாகமாகவும் சுறுசுறுப்புடனும் இருங்கள்
• மற்றவர்கள் செய்த உதவிக்கு நன்றி கூறுங்கள.;
• மற்றவர்களின் நல்ல செயலை பாராட்டுங்கள்
• நாம் இருக்கும் சூழலை கலகலப்பாக வைத்திருங்கள் (நகைச்சுவையுணர்வு)
• விசேட தினங்களில் வாழ்த்துமடல் அனுப்புங்கள்.
• மற்றவர்களுக்கு மதிப்பளியுங்கள்.
• புன்னகையை வெளிப்படுத்துங்கள்.
• மற்றவர்களை பெயர் சொல்லி அழையுங்கள.;
• அவருடைய சிறப்பம்சத்தை சுட்டிக்காட்டுங்கள்.
• மற்றவர்களை கேலி  பண்ணுவதை ஃகிண்டலடிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
• கோவப்படாது இருங்கள்
• மற்றவர்கள் கூறும் அறிவுரைக்கு ஃகதைக்கு செவிமடுங்கள்
• மற்றவர்களின் செயலை பகிரங்கமாய் வாழ்த்தி அவர்களிடம் மறைமுகமாக குறையை கூறுங்கள்.
• தெரியாததைத் தெரியப்படுத்தி தெரிந்து கொள்ளுங்கள்.
• நானே பெரியவன் நானே சிறந்தவன் என எண்ணுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்
• மற்றவர்களின் இரகசியத்தை காப்பாற்றுங்கள.;
• நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைப் பேசுங்கள.;
• சுயநலம் இல்லாது பொதுநலன் கொண்டிருங்கள்
• அர்த்தமில்லாமல் பிறருடன் பேசுவதை தவிருங்கள்
• நேரத்தை முகாமை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்
• விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கை கொண்டிருங்கள்
• நீங்கள் சொன்னதும் செய்ததும் சரி என வாதாடாதீர்கள்
• எளிமையான ஆடைகளை அணியுங்கள் (விலை குறைந்த மெல்லிய நிறம்)
• மனச்சாட்சியுடன் நேர்மையாக வேலை செய்யுங்கள்
• குறுகிய மனப்பாங்கை விட்டொழியுங்கள்
• அளவுக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்
• நல்லவனை கண்டுபிடியுங்கள் நல்லவனாய் நடியாதீர்கள்
• நல்ல செயல்களை ஒத்திப்போடாது அதனை இன்றே செய்யுங்கள்

No comments:

Post a Comment