நீங்கள் சிரித்தால் உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும் அழுதால், நீங்கள் ஒருவர்தான் தனித்து அழுது கொண்டிருப்பீர்கள்..
நகைச்சுவை என்பது சில சமயம் கேலி செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.
எதையும் கேலி செய்வதற்கு விஷயத் தெளிவு வேண்டும்.
அதை நகைச்சுவையோடு கேலி செய்வதற்கு புத்திசாலிதனம் வேண்டும்.
அதுவும் பிறர் மனம் புண்படாமல் கேலிசெய்ய, கேலி செய்வதற்கு பக்குவமான அறிவு வேண்டும்.
அத்துடன் சிந்தனையை தூண்டிவிட தெளிந்த மனம் வேண்டும்.
சிரிப்பு ஆக்கபூர்வமமானது.
சிரியுங்கள்,
மனம் சுத்தமாகிறது.
ஆரோக்கியமடைகிறது.
மனம் ஆரோக்கியமடைந்தால் அதைத் தொடர்ந்து உடம்பும் ஆரோக்கியம் அடைகிறது.
அப்படி ஒரு மருந்து இருப்பதை நாம் மறந்துவிடுகிறோம். அவ்வளவுதான்.
சிரிப்பெனும் மருந்தைத் தினம் தினம் அருந்துங்கள்..
சிரிப்பே உலகின் மிகச்சிறந்த மருந்து என்று சொன்னால், அது மிகையல்ல.
நோய்விட்டுப் போக மனம் விட்டுச் சிரியுங்கள்.
சிரிப்பு என்பது மனிதனுக்கு மட்டும் உள்ள, மற்ற விலங்கினங்களுக்கு இல்லாத சிறப்பு.
இன்றைய கால கட்டத்தில் நமக்கு கொஞ்சம் நகைச்சுவையும், சிரிப்பும் பஞ்சம்ஏற்பட்டு இருப்பதாகவே கூறலாம்.
சமுதாய சூழ் நிலையும், மன உளைச்சலும் இதற்கு காரணம் கூறலாம்.
நம்மில் சிலர்- பெரிய பதவியிலுள்ளவர்கள் ‘சிரித்துப் பேசக் கூடாது’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு இறுக்கமாகவே இருக்கிறார்கள்.
இந்தப் போக்கு மாறவேண்டும்.
நகைச்சுவை உணர்வால் மட்டுமே பொறுமை வளர்க்க முடியும்.
நண்பர்களிடத்தில் தனித் தோற்றத்தையும், குடும்பத்தினரிடம் அதிகம் நெருக்கத்தையும்,
எந்த விதமான இடர்பாடுகளையும் எளியதாகக் கையாளவும், சிறப்பாக நமக்கு உதவி செய்கிறது.
மனிதனின் சோர்வை அகற்றுவது சிரிப்பு.
சிரிக்கும் உணர்வு இருந்தால் எத்தனை கொடிய துன்பத்தையும் துரத்தமுடியும்.
கஷ்டங்கள் யாவற்றிலிருந்தும் விடுபட, சிரிப்பு ஒன்றுதான் வழி.
உங்களால் சிரிக்க முடிகிறது என்றால் நல்ல மனத்தோடு இருக்கிறீர்கள் என்று பொருள்.
சிரிப்பு உங்களுக்கு உடல் நலத்தைத் தருகிறது.
இந்த பரபரப்பான வாழ்க்கைச் சுழலில் மனம்விட்டு அடிக்கடி சிரிப்பது மிக அவசியமாகிறது.
ஆகவே,
எப்போதும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும்.
மனம் விட்டு சிரிக்கவும்.
No comments:
Post a Comment