Wednesday, July 17, 2013

நம்பிக்கை சிந்தனைகள்

பொறுமை!

அசைக்க முடியாத ஒரு அமைதியில்தான் உண்மையான சக்தியை காண முடியும்.

அமைதியுடன் கூடிய பொறுமை வெற்றிக்கு நிச்சயமான வழி.

சாந்தமான அமைதியில் வலிமை புதுப்பிக்கப்படுகின்றது.

இன்று செய்ய முடியாததை பின்னொருநாள் நிச்சயமாக
செய்ய முடியும்.முன்னேற்றத்துக்காக செய்யப்படும் எந்த முயற்சியும் ஒரு போதும் வீணாவதில்லை.
 –ஸ்ரீ அன்னை.

முயற்சிதான் பாராட்டுக்குறியது!
“நாம் அடையும் பொருள் புகழ் தருவதில்லை.
அதற்கான முயற்சிதான் புகழைத்தருகின்றது.
நாம் பந்தயத்தின் முடிவில் அடையும் கோப்பையை யாரும் வெற்றி என்று பாராட்டுவதில்லை.
ஓடி அடைந்த வேகத்தை,வெற்றிபெற முயற்சி செய்த நமது மனத்துணிவைத்தான் பாராட்டுகிறார்கள்”
–சுவாமி சின்மயானந்தர்.

வாழ்க்கை என்பது வெற்றி கொள்ளவே! 
தோல்விகளுக்காக துவளுதல் கூடாது. 
பொழுதுகளை வீணே கழிப்பதை விட 
வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை 
செய்வதே நன்மை பயக்கும்.
– யாரோ(நாந்தான்)

தனக்கு கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விட தன்னுடைய உழைப்பின் மதிப்பை
உயர்த்திக் காட்டும் மனிதந்தான் சமூகத்தில் முன்னேற முடியும்! 
-ஆபிரஹாம் லிங்கன்.

சரியானது எது என்று உணர்ந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதுதான் மகா
கோழைத்தனம்!
- கன்பூசியஸ்.

தொண்ணூற்றொம்பது சதவிகித உழைப்பும், ஒரு சதவிகித உள்ளக்கிளர்ச்சியும்
சேர்ந்ததுதான் மேதைத் தன்மை எனப்படுவது! 
-தாமஸ் ஆல்வா எடிசன்.

தன்னம்பிக்கை இருந்தால் தைரியம் தன்னால் வரும்!
-எமர்சன்.

வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இரண்டு கருவிகள் சிக்கனம், சேமிப்பு.
– ஹெர்பெர்ட்.

வரலாற்றைப் படைக்கும் மனிதர்கள் அதை எழுத அவகாசம் எடுத்துக் கொள்வதில்லை. 
-மேட்டர்னிக்.

பிரச்சினைகளையும் நோய்களையும் சமாளித்து வெற்றி பெற முடியும் என்ற
நம்பிக்கையே அனைத்தையும் வெற்றிகரமாக மாற்றித்தரும்.
– ஹெச்.ஷீல்லர்.

முன்னேற்றத்தை நோக்கி அது எத்தனை சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை,  ஒரு அடி எடுத்து வையுங்கள்.
நெப்போலியன் –கில்.

எல்லாம் போய் விட்டது என்று சோர்ந்து போய் விடாதீர்கள்.எந்த மனிதனாலும் வெல்ல முடியாத மன வலிமை இருக்கிறது. அதை மூலதனமாக வைத்துக் கொண்டு உழையுங்கள். வளம் பெறலாம். 
-மில்டன்.

பேனாவைக் கையில் பிடித்தவர்களெல்லாம் புத்திசாலிகளில்லை.
பிடிக்காதவர்களெல்லாம் முட்டாள்களுமில்லை.
-ஸாமுவேல் ஜான்சன்.

திறமையால் ஜொலிக்க முடியவில்லையா கவலையே படாதீர்கள் முயற்சி… முயற்சி… முயற்சியால் வெற்றிக் கனியைத் தட்டிப் பறிக்கலாமே.

நேரத்தை மதிப்பவர்களே மதிப்பானவர்கள்.
நேர்மைக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்
ஆனால் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும்.

மனிதன் தன் பலத்தைக் கொண்டு தானாகவே நிமிர்ந்து நிற்க வேண்டும்.

விழுந்தால் விதையாக விழு!
எழுந்தால் மரமாக எழு!
நம்பிக்கையற்றவன் மனித்னாகவே இருக்கமுடியாது.
செய்யும் ஒவ்வொரு காரியமுமே ஒரு லட்சியமாக இருத்தல் வேண்டும்.

உலகில் தன் கடமையைச் செய்பவன் எவனும் அதனிடம் ஒரு பொழுதும் அதிருப்தி கொள்வதில்லை.

மனிதன் தன் பலத்தைக் கொண்டு தானாகவே நிமிர்ந்து நிற்க வேண்டும்.

நல்ல செயலை செய்ய நினைத்தால் உடனே செய்க.

நல்ல சிந்தனைகள் உள்ளவரின் மனதில் குழப்பம் இராது.

நாம் எதச் செய்தாலும் நமது நோக்கத்தை மறவாதிருக்க வேண்டும்.

கடுமையினால் சாதிக்க முடியாததை அன்பு சாதித்து விடும்.

உறுதி இல்லாதவனுக்கு ஒன்றுமே இல்லை.

தன்னைத் தெரிந்து கொள்ளாமல் இந்த உலகம் முழுவதையும் 
தெரிந்து வைத்துக் கொள்வதால் ஒரு பயனும் இல்லை

“வெற்றி உனக்குள்ளே!”
-ஹிப்னோ ஜி.கெ கட்டுரையிலிருந்து…
தனி மனிதர்கள் அடைந்த வெற்றிக்குப் பின்னால் இந்த 5 சங்கதிகளே காரணமாக இருக்கின்றன. 

1.சாதிக்க வேண்டும் என்கிற வெறி
2.வரையறுக்க்ப்பட்ட இலக்கு 
3.விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுதல்
4.சரியான கண்ணோட்டம் 
5.தன் மீதான முழு நம்பிக்கை
1.சாதிக்க வேண்டும் என்கிற வெறி:

நாம் எதைப் பெற வேண்டும்; எதில் ஜெயிக்க வேண்டும் என்று குறியாக இருக்கிறோமோ அதில் ஓர் ஆழமான பற்று கொள்ள வேண்டும். உண்மையான ஈடுபாடு இருக்கவேண்டும். மின்சார பல்பை கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், பல நூறு முறை தன்னுடைய சோதனை சாவடியில் பின்னடைவு ஏற்பட்ட போதும் அவரது ‘வெற்றி கண்டே தீர வேண்டும என்கிற வெறித்தனமான ஆர்வம்தான் இறுதியில் ஜெயித்தது.

2.வரையறுக்கப்பட்ட இலக்கு:

தீர்க்கதரிசனமான குறிக்கோளை(clearly defined goal)மட்டுமே இலக்காக கொள்ள வேண்டும்.’குறிக்கோள்’ அனைத்தும் நம் கட்டுப்பாடு, சம்பந்தப்பட்ட முயற்சி, திறமை, ஆர்வம், ஈடுபாடு, ஞானம், உழைப்பு மற்றும் நம்மால் எம்பக்கூடிய உயரத்திற்குள்(சாத்தியப்படுவதாக) நிர்ணயிக்கப்பட வேண்டும்.

3.விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுதல்:

நமக்கு ஏற்படும் தோல்விகளுக்கு பெரும்பாலும் பிறறைத்தான் குறை சொல்கிறோம். இது தவறில்லை என்று சிலருக்கு தோன்றும். அவர்கள் தயவு செய்து ஒன்று செய்யுங்களேன். ஹானஸ்டாக இன்றோ,நேற்றோ ஏற்பட்ட ஒரு சின்ன தோல்விக்கு காரணம் எதுவாக இருக்கும் என்று சுய மதிப்பீடு செய்து பார்த்து விடுங்களேன். சம்பவத்தின் முடிவு தோல்வி என்பதால்,அதை வெற்றி கொண்டிருக்க நாம் என்னவெல்லாம் செய்திருக்கலாம் என்று.மாற்று வழி புலப்படும்.இந்த பரிசீலனை உங்களுக்கு அடுத்தமுறை உதவும்.

4.சரியான கண்ணோட்டம்:

நாம் திட்டமிட்டு சாதிக்க வேண்டிய ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு பயணத்திற்கு சமமானது. அந்த பயணத்தை தொடங்கும் போதும்,பயணத்தின் போதும் சில வேளைகளில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரலாம். எனவே அத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனோதிடம் நமக்கு இருக்க வேண்டும். இப்படி பல சோதனைகளைத் தாண்டியவர்கள்தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஒவ்வொரு பிரச்சினையும் நமது முன்னேற்றத்திற்கான வாய்ப்பு என்றும், ஒவ்வொரு வாய்ப்பும் ஒரு பிரச்சினையை உள்ளடக்கியதே என்றும் புரிந்து கொள்ள வேண்டும். அதே போல பிரச்சினைகளின் பின் விளைவுகளை கண்டு பயப்பட்டால் ஓரடி கூட முன்னேற முடியாது. மனித சமுதாயத்தின் ஒவ்வொரு அடி வளர்ச்சிக்கும் இரண்டு அடியாவது பின்னடைவு இருந்திருக்கும் என்பதை உணருங்கள்.

5.தன் மீதான முழு நம்பிக்கை:

வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்துடன் முன் வைக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் அசைக்க முடியாத நம்பிக்கையை அடித்தளமாக கொள்ளுங்கள்.

‘நம்மால் முடியும்’ என்று தினசரி இரண்டு முறையாவது உங்களது குறிக்கோளை மனதில்கொண்டு வந்து மனதிற்கு கட்டளை இடுங்கள். ‘ இது ஒன்றும் எனக்கு பெரிய விஷயமில்லை; நான் நினைத்தது நடக்கப் போகிறது; என்னை சுற்றி உள்ளவர்கள் எனது வெற்றிக்கு துணை புரிகிறார்கள், எனது வெற்றிகளை பாராட்டுகிறார்கள்’ என்று திரும்பத் திரும்ப மனக்கண் முன்பாக உங்களது இலக்கை நிறுத்தி வைத்து கற்பனை செய்யுங்கள்.


கடுமையினால் சாதிக்க முடியாததை அன்பு சாதித்துவிடும்.

எவன் எதைப்பற்றி எந்த வகையில் சிந்திக்கிறானோ அதை அதே வகையில் அனுபவிக்க ஆரம்பித்து விடுகிறான்.

நம்பிக்கையே வாழ்வின் ஆதாரம்!

நம்பிக்கையே இனிமையானஎதிர்காலங்களை அமைக்கும்!

நம்பிக்கைஅச்சாணிமுறியாமல் இருந்தால்தான் வாழ்க்கைச் சக்கரம் சீராகச்சுழலும்!

நம்பிக்கையை விதை:
நல்லெண்ண நீரூற்று:
தடைகளை களையெடு:
விடாமுயற்சியை உரமாக்கு:
வெற்றிக்கனிகள் உன்வசமாகும்

No comments:

Post a Comment