Wednesday, December 11, 2013

வாழ்வின் நோக்கம்

வாழ்வின் நோக்கம் .

1.எதை நோக்கி இருக்கின்றது வாழ்க்கை .நாம் பார்ப்பது நல்ல வேலையா இல்லையா?ஒரு நாள் நினத்துப் பார்க்கும் பொழுது நல்ல வேலை ,இது எல்லாருக்கும் கிடைக்காது என்று மனதில் சந்தோசம் ,மற்றறொரு நாள் நினக்கும் பொழுது இந்த வேலையெல்லாம் பாவப்பட்டவன் செய்வது என்று.

2.எந்த எண்ணம் நிலையானது. வரும் வருமானத்தை வயித்தைக் கட்டி வாயைக்கட்டி வாழ்ந்தும்,கிடைத்த சேமிப்புகளைக் கொண்டு நான்கு பேர் பார்க்கும் படிக்கு வாழ்ந்து சேமிப்பைப் பெருக்கி ஒரளவுக்கு வாழ்க்கை கேள்விக் குறியாக இல்லாமல் ,எந்த துன்பம் என்றாலும் சமாளிக்கலாம் என்று ஒரு நாள் ,இன்னொரு நாள் என்ன வாழ்க்கை இது எல்லோரும் தான் வாழுகின்றார்கள்  இதை அடைய எவ்வளவு தியாகங்கள் ,இதில் என்ன மகிழ்ச்சி இருக்கின்றது என்று எண்ணம்.

3.என் பிள்ளைகள் திறமைசாலிகள் எதையும் சட்டென்று புரிந்து கொள்ளுகின்றார்கள் நாலு இடத்தில் இவர்களால் எனக்கு பெருமைதான் இன்னொரு நாள் என்ன பிள்ளைகள் இவர்கள் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாங்க .இப்படி வாழ்வின் போது சந்திக்கும் நபர்கள் ,பொருட்கள் ,அனுபவங்கள் ஒரு நேரம் ஒரு உணர்வையும் மற்றொரு நேரம் வேறு விதமாகவும் மனதிற்கு உணர்வுகளைக் கொடுக்கின்றது .அப்படி என்றால் எது தான் வாழ்க்கையில் நிரந்தரமான,நிலையான,நிச்சயமான,மாறாத, பொருள்,அனுபவம்,மகிழ்ச்சி,துன்பம்,.

4.எதுவுமே வாழ்க்கையில் நிரந்தரமான மகிழ்ச்சியையோ,துன்பத்தையோ கொடுப்பதில்லை .ஒருநாள் இருந்தது மறு நாள் இல்லை மறுநாள் இல்லாதது அடுத்த நாள் இருக்கின்றது .வாழ்வில் நிலைத்த ஒன்று இல்லவே இல்லையா?இருக்கின்றது "அன்பு" மற்றும் "சத்தியம் " ஆகியவைகள்  தான் எல்லா சமயங்களிலும் வேறு பட்ட உணர்வை அனுபவத்தைக் கொடுப்பதில்லை.

5.ஏன் இப்படி நமது மனத்தில் எழும் அன்பு என்னும் உணர்வுக்கு ஒரு வடிவம் கொடுப்பதாக வைத்துக் கொள்ளுவோம் ,அது உங்களை சுற்றியுள்ள வெளிப்புறத்தை ஒத்ததாக இருக்கும் .அந்த வெளிப்புறத்தை நீங்கள் உலகம் ,வானம்,பிரபஞ்சம்,ஈதர் ,வெளி ,சூன்யம் இப்படி எந்த பெயர் வைத்துப் புரிந்து கொண்டாலும் சரி .அன்பு மனித மனதின் தர்க்கங்களுக்குட்படாதது எதையும் எந்த எதிர் பார்ப்பு இல்லாமலும் தாங்கிக் கொள்ளுவது .

6.எந்த பொருளும் அனுபவமும் தனித்தன்மையுடன் இல்லை ,அன்பானது அன்பில்லாமையினாலும் ,சத்தியமானது அசத்தியத்தாலும் சூழப் பட்டுள்ளது.இவைகள் எந்த அளவிற்கு இவைகளைச் சூழ்ந்துள்ளதோ அந்த அளவிற்கு எதிரிடையாக இவைகள்             வெ ளிப்படும்.அன்பு எதையும் தாங்குவது போல நமது வெளிப்புறமும் அன்புணர்வோடு பூமி ,சூரியன் இப்படி அனைத்து கோள்களையும் இன்னும் உள்ளவைகளையும் தாங்கி தான் எந்த ஒரு வடிவமும் இல்லாமல் இருக்கின்றது .

7.அதேபொல சத்தியமும் எல்லாவற்றினுடைய இருப்பு,மற்றும் உண்மைத்தன்மையை தாங்கி இருப்பதால் இவை இரண்டு மட்டுமே எந்த நிலையிலும் ஒரே அனுபத்தைத் தரக்கூடியது.இவை இரண்டையும் உணர்ந்து கொள்ளுதலே ஒவ்வொரு உயிரின் நோக்கம் ஆகும்.

No comments:

Post a Comment