Thursday, December 5, 2013

ஸ்ரீ திருமால் 108 போற்றிகள் -விஷ்ணு 108 போற்றி மந்திரம்

ஸ்ரீ திருமால் 108 போற்றிகள்

ஓம் அப்பா  போற்றி

ஓம் அறமே  போற்றி

ஓம் அருளே  போற்றி

ஓம் அச்சுதா  போற்றி

ஓம் அரவ சயனா  போற்றி

ஓம் அரங்கமா நகராய்  போற்றி

ஓம் அற்புத லீலா  போற்றி

ஓம் ஆறுமுகனின் அம்மான்  போற்றி

ஓம் அனுமந்தன் தேவே  போற்றி

ஓம் ஆதியே அனாதி  10 போற்றி



ஓம் ஆழ்வார்கள் தொழுவாய்  போற்றி

ஓம் ஆதி மூலனே  போற்றி

ஓம் ஆபத்துச் சகாயா  போற்றி

ஓம் ஆனைக்கும் அருள்வாய்  போற்றி

ஓம் ஆனந்த மூர்த்தியே  போற்றி

ஓம் உமையம்மை அண்ணா  போற்றி

ஓம் உலகெலாம் காப்பாய்  போற்றி

ஓம் உத்தமர் தொழுவாய்  போற்றி

ஓம் உம்பருக் கருள்வாய்  போற்றி

ஓம் எங்குமே நிறைந்தாய்  20 போற்றி



ஓம் எண்குண சீலா  போற்றி

ஓம் ஏழைப்பங்காளா  போற்றி

ஓம் எழில்நிற வண்ணா  போற்றி

ஓம் எழில்மிகு தேவே  போற்றி

ஓம் கலியுக  வரதா  போற்றி

ஓம் கண்கண்ட தேவே  போற்றி

ஓம் கருடவா கனனே  போற்றி

ஓம் கல்யாணமூர்த்தி  போற்றி

ஓம் காமரு தேவே  போற்றி

ஓம் காலனைத் தவிர்ப்பாய்  30 போற்றி



ஓம் கோக்களைக் காத்தாய்  போற்றி

ஓம் கோவிந்தா-முகுந்தா  போற்றி

ஓம் சர்வலோ கேசா  போற்றி

ஓம் சாந்தகுண சீலா  போற்றி

ஓம் சீனிவாசா  போற்றி

ஓம் சிங்காரமூர்த்தி  போற்றி

ஓம் சிக்கலை யறுப்பாய்  போற்றி

ஓம் சிவபிரான் மகிழ்வாய்  போற்றி

ஓம் தவசிகள் தொழுவாய்  போற்றி

ஓம் தரணியைக் காப்பாய்  40 போற்றி



ஓம் திருமகள் மணாளா  போற்றி

ஓம் திருமேனி உடையாய்  போற்றி

ஓம் திருவேங்கடவா  போற்றி

ஓம் திருமலைக் கொழுந்தே  போற்றி

ஓம் திருத்துழாய் அணிவாய்  போற்றி

ஓம் தீந்தமிழ் அருள்வாய்  போற்றி

ஓம் கடலமு தளித்தாய்  போற்றி

ஓம் நந்தகோ பாலா  போற்றி

ஓம் நான்முகன் பிதாவே  போற்றி



ஓம் நாரதர் துதிப்பாய்  50 போற்றி

ஓம் நவமணி தரிப்பாய்  போற்றி

ஓம் நரசிம்ம தேவே  போற்றி

ஓம் நான்மறை தொழுவாய்  போற்றி

ஓம் பாற்கடல் கிடந்தாய்  போற்றி

ஓம் பாவலர் பணிவாய்  போற்றி

ஓம் தசாவ தாரா  போற்றி

ஓம் தயாநிதி -ராமா  போற்றி

ஓம் தந்தை சொல் காத்தாய்  போற்றி

ஓம் தவக்கோலம் பூண்டாய்  போற்றி

ஓம் பட்டத்தைத் துறந்தாய்   60 போற்றி



ஓம் பரதனுக்கீந்தாய்  போற்றி

ஓம் பாண்டவர் துணைவா  போற்றி

ஓம் பரந்தாமா- கண்ணா  போற்றி

ஓம் பாஞ்சாலி மானம் காத்த பார்புகழ் தேவே  போற்றி

ஓம் புண்ணிய மூர்த்தி  போற்றி

ஓம் புலவர்கள் புகழ்வாய்  போற்றி

ஓம் வாமன வரதா  போற்றி

ஓம் உலகினை அளந்தாய்  போற்றி

ஓம் பிரகலாதன் பணிவாய்  போற்றி

ஓம் பரகதி அருள்வாய்  70 போற்றி



ஓம் துருவனும் தொழுவாய்  போற்றி

ஓம் சபரியின் கனியே  போற்றி

ஓம் துருவநிலை தந்தாய்  போற்றி

ஓம் நற்கதி தந்தாய்  போற்றி

ஓம் வையகம் புகழ்வாய்  போற்றி

ஓம் வைகுண்ட வாசா  போற்றி

ஓம் முழுமதி வதனா  போற்றி

ஓம் மும்மலம் அறுப்பாய்  போற்றி

ஓம் கமலக் கண்ணா  போற்றி

ஓம் கலைஞான மருள்வாய்  80 போற்றி



ஓம் கஸ்தூரி திலகா  போற்றி

ஓம் கருத்தினி லமர்வாய்  போற்றி

ஓம் பவளம் போல் வாயா  போற்றி

ஓம்  பவப்பணி ஒழிப்பாய்  போற்றி

ஓம் நான்கு புயத்தாய்  போற்றி

ஓம் நற்கதி அருள்வாய்  போற்றி

ஓம் சங்குசக் கரனே  போற்றி

ஓம் சன்மார்க்க மருள்வாய்  போற்றி

ஓம் கோபிகள் லோலா  போற்றி

ஓம் கோபமும் தணிப்பாய்  90 போற்றி



ஓம் வேணுகோ பாலா  போற்றி

ஓம் வேட்கையைத் தணிப்பாய்  போற்றி

ஓம் புருடோத் தமனே  போற்றி

ஓம் பொன் புகழ் அருள்வாய்  போற்றி

ஓம் மாயா வினோதா  போற்றி

ஓம் மனநிலை தருவாய்  போற்றி

ஓம் விஜயரா கவனே  போற்றி

ஓம் வினையெல்லாம் ஒழிப்பாய்  போற்றி

ஓம் பதும நாபனே  போற்றி

ஓம் பதமலர் தருவாய்   100 போற்றி

ஓம் பார்த்தசா ரதியே  போற்றி

ஓம் பார்வேந்தர் தொழுவாய்  போற்றி

ஓம் கரிவரத ராஜா  போற்றி

ஓம் கனிவுடன் காப்பாய்  போற்றி

ஓம் சுந்தர ராஜா  போற்றி

ஓம் சுகமெலாம் தருவாய்  போற்றி

ஓம் அனைத்துமே ஆனாய்  போற்றி

ஓம் அரி அரி நமோ நாராயணா     108 போற்றி

No comments:

Post a Comment