Wednesday, December 18, 2013

உலக தத்துவம்.

ஆஸ்கார் ஒயில்ட்…
  • அதிகம் உள்ளவர்கள் அதிகம் பேராசைக்காரர்களாக இருக்கிறார்கள்
  • அளவுக்கதிகமானது வெற்றியே மிதமானது யாவும் மாய்ந்துபோகும் 
  • அறக்கட்டளை நிதிகள் பல்வேறு பாவங்களுக்கு காரணமாகிறது
  • அறிந்து யார் மனதையும் நோகச் செய்யாதவனே கண்ணியவான்
  • அறையில் இரகசியமாக செய்த தவறுக்காக கூரையில் நின்று அழுவாய் ஒருநாள்
  • அனுபவங்களை கலையுணர்வுடன் ஏற்றுக் கொள்ளக்கூடியது ஆன்மா
  • ஆண் முகம் சுயசரிதை பெண் முகம்  கற்பனை காவியம் 
  • ஆண்கள் வருமானத்தை மட்டும் தருகிறார்கள் 
  • பெண்கள் அனைத்தையும் தருகிறார்கள்
  • ஆணின் முகம் சுயசரிதை பெண்ணின் முகம் நாடகக் கலை 
  • ஆரம்பத்தில் ஆணை தவிர்க்கிறார்கள் பெண்கள் 
  • முடிவில் தப்பிக்கவிடாமல் தடுக்கிறார்கள்
  • இசை என்ற சாவி உணர்வு ,நினைவு,கண்ணீர் கதவுகளை திறக்கும் 
  • இளமையில் பணம் தான் முக்கியம் என்பார் 
  • முதுமை அதை முழுமையாக உறுதி செய்யும்
  • இறைவன் மனிதனை படைத்த போது தனது திறமையில் தோற்றுவிட்டன்
  • இன்பங்களில் தன்மையானது மாயக்கற்பனையே
  • உண்மை உனர்வுகள் நல்ல கவிதையாகுவதில்லை
  • உலகத்துக்கு எதிரான கசப்பிலிருந்து மனதை விடுவித்து கொள்ள வேண்டும்
  • உன் அலமாரியை களவாடலாம் ஆன்மாவின் சொத்தை திருட முடியாது
  • உனது வாழ்வில் அறிவை பயன்படுத்து வேலையில் திறமையை பயன்படுத்து
  • எதிரியை மன்னியுங்கள் அதைவிட அவனுக்கு பெரிய அவமானமில்லை
  • ஏழைகள் அதிகம் நுட்ப உணர்வு உடையவராக இருக்கிறார்கள்
  • கயவருக்கு கடந்த காலமுண்டு புனிதருக்கே எதிகாலமுண்டு 
  • கருமிக்கு எல்லாவற்றுக்கும்  தெரியும் எதற்கும் மதிப்பு தெரியாது
  • காதலில் தோற்காமல் இருக்க் வேண்டுமானால் கல்யாணம் செய்யாதே
  • குழந்தைகளை மகிழ்வாய் வளர்ப்பதே அவர்களை நல்லவராக்கும் வழி
  • சபலத்துக்கு பலகீனமானவர்களை விட புத்திசாலிகளே வீழ்கிறார்
  • சபலத்தை தவிர மற்ற தூண்டுதல்களை நம்மால் வெல்ல முடியும்

  • சிலர் வரும் போது மகிழ்ச்சி சிலர் போகும் போது மகிழ்ச்சி
  • துயரம் தாம் வாழ்வின் உண்மையான இரகசியம்
  • தொடர்ந்து திருமணம் செய்யாது வாழ்பவர் அனைவருக்கும் தூண்டில்
  • நமது தவறுகளின் தொகுப்பே நமது அனுபவம்
  • நமது பிராத்தனையை நிறைவேற்றித்தான் ஆண்டன் நம்மை தண்டிக்கிறான்
  • நல்ல அறிவுரை இருந்தால் பிறருக்கு கொடுத்து அது நமக்கு பயன்படுவதில்லை
  • நல்ல நன்பர்கள் நல்லவர்/ அவர்கள் மார்பிலேதான் குத்துவார்கள்
  • நீ அன்பினை விரும்பும் போதுதான் 
  •  அது உனக்காக காத்து கொண்டிருப்பதை அறிவாய்
  • பகைவர்களை மன்னிப்பதே அவர்களை தண்டிப்பதற்கு சரியான வழி
  • பண்பாடு தனி மனித ஆளுமைப் பண்பினை ஆழ்ந்ததாக மாற்றியுள்ளது
  • பலன் தரும் அறிமுகம் நிசச‌சியம் நல்ல நட்பாக உருவாகும்
  • பாவங்களை விட வறுமையே குற்றங்களின் பிறப்பிடமாகும்
  • பாவத்தை விட வறுமையே குற்றங்களின் பிறப்பிடமாகும்
  • பிரம்மச்சர்யரியராக இருப்பவர்பொதுவாழ்வில் நிரந்தர சந்தையுள்ளவர்
  • பிறரும் தன் விருப்பப்படியே வாழவேண்டும் என்பது மோசமான சுயநலம்
  • பெற்றோர்களை குழந்தைகள் நேசிக்கிறார்கள் 
  • ஆனால் ஒரு போதும் மன்னிப்பதில்லை
  • பொதுமக்களுக்கு சகிப்பு அதிகம் அறிவாளிகளை மட்டும் மன்னிக்கமாட்டார்கள்
  • மற்றவர்களை ஏமாற்றும் வித்தையை வசிகரம் எனப் பெயரிடுகிறது உலகம்
  • மற்றவரை ஏய்ப்பதை உலகம் ஒரு பெரிய திறமையென கொண்டாடுகிறது
  • முதியவரின் சோகம் முதுமையினால் அல்ல இளமைக்கு ஆசைப்படும்
  • யாராக இருந்தாலும் 
  • தனது செய்கையால் அன்றி தன்னை அழித்து கொள்ளமுடியாது
  • யாருடைய மனதையும் தெரியாமல் கூட புண்படுத்தாதவன் புனிதன்
  • வலி என்பது மகிழ்ச்சியைப் போல முகமூடி போடுவதில்லை
  • வாதங்கள் வக்கிரமானவை தவிர்ப்பதே நல்லது 
  • வாழ்க்கையை கலைகள் சொல்வதை விட கலைகள் வாழ்வை  தொடர்கிறது
  • வாழ்வின் வேர் போன்றது காமம் 
  • அதை புரிந்து வாழ்வு என்பது அதில் முக்கியமானது 
  • வாழ்வென்பது புனிதப் பயணம் ஞானி ஒரு போதும் அக்கம் பக்கம் தங்குவதில்லை 
  • வெற்றி என்பது ஒரு விஞ்ஞானம் செய்முறையறிந்தால் விடை கிடைக்கும்

ஆன்டன் செக்கோவ்…
  • அன்பு, நட்பை விட ஒரு பொது வெறுப்பும்,பகையும் பலரை ஒற்றுமைபடுத்துகிறது
  • ஆன்மாவின் அணுகுமுறையே நம்பிக்கை அது உடன் பிறந்த திறமை
  • இரும்பைத் துரு போல ஆன்மாவை பொய் அழிக்கிறது
  • உபயோகபடுத்தப்படாத அறிவினால் எந்தப் பயனுமில்லை
  • உபயோகம் எதுவும் இல்லாததே பலருக்கு இன்பம் தருகிறது 
  • உயர்ந்த நோக்கம் உடைய போது செயலும் உயர்ந்து நிற்கிறது
  • சோம்பித்திரியும் வாழ்விலே தூய்மை இருப்பதில்லை
  • தத்துவம் மனோதத்துவமும் புரியாததை புரிந்து கொண்டது போல நடிக்கக் கூடாது
  • நடைமுறை வாழ்வு தத்துவங்களுக்குள் அடங்குவதில்லை
  • பிறர் துன்பங்களை நகைப்பவர் மன்னிக்கப்பட மாட்டார்கள்
  • பொய் உரைப்பதும் குடிப்பழக்கம் போல மாறுவதில்லை
  • ம்னித உறவுகள் மிகமிகச் சிக்கலாக்கி அச்சுறுத்துகிறது
  • மனிதன் என்பவன் அவன் நம்பிக்கையைபொறுத்தவன் 
  • மனிதன் மகிழ்ச்சியாக இருக்கும் போது மழையும் வெயிலும் தெரிவதில்லை
  • முகம் உடை உயிர் சிந்தனை யாவும் அழகாக இருக்க வேண்டும்

ஆவபரி..
  • அறிவுள்ள உயர்ந்த எண்ணங்களால் நிரம்பிய மனம் அமைதியாகும்
  • இலட்சியமில்லாத மனிதனிலக்கில்லாத கப்பலைப் போலத்திரிவான்
  • உலகம்  ஒரு கண்ணாடி நம்மையே அது பிரதிபலிக்கும்
  • கடல் போல் ஞானம் கிடக்க கரையில் சிற்பி பொறுக்கும் குழந்தைகள் நாம் 
  • கடினமான உழைப்பை விட கடுகளவு மனக்கவலை தளர்ச்சி தரும்
  • கடைசி துளி மனோதிடம் உள்ளவரை எவனும் தோற்கடிக்கபட மாட்டான்
  • செல்வத்தால் சன்மார்க்கம் வராது  அதற்காக வறுமையில் சன்மார்க்கம் வராது
  • பொறுமை மித மிஞ்சினால் பலகீனமாகி விடக்கூடாது
  • ரோஜா செடியில்முள்ளென வருந்தாது முள்ளில் மலரென மகிழ்வோமே
  • வறுமை என்பது குறைந்த செல்வம் என்பதை விட அதிக ஆசையே


ஆல்பர்ட்ஸ்விட்சர்…

  • அடுத்தவருக்கு வலி கொடுப்பதனால் உன் வலி தீர்ந்து விடுமா மனமே
  • அற்புதச்செயல்களை நிகழ்த்து அனைவரும் உன் பின்னால் வருவார்
  • உண்மைக்கு காலமில்லை ஏனென்றால் அது நிரந்தரமானது
  • உதவி செய்வதே மனித வாழ்வின் உன்னத லட்சியம்
  • கதிரானது பணியை உருக்குவது போல அன்பானது பகையைவெல்லும்
  • சூர்யன் பனியை உருக்குவது போல அன்பானது அவநம்பிக்கையை அகற்றும்
  • சேவை செய்ய முயன்று வென்றவரே நிரந்தர மகிழ்ச்சியுடனிருப்பார்
  • தீயது எதற்கும் பழக்கப்படாத மனிதனே வெற்றியாளன்
  • தூய ஆத்மாக்களால்  உலக வரலாறு உன்னதமானது
  • நமது ஆத்ம தீபம் மங்கும் போது எல்லாம் தூண்டி விடுபவர்களுக்கு நன்றி
  • பிறருக்காக வாழம் வாழ்வில் மகிழ்வும் புகழம் ஆயுளும் அதிகம் 
  • மகிழ்ச்சிக்காக வெற்றியில்லை மகிழ்ச்சி இல்லாதவனுக்கு வெற்றியில்லை
  • மலையில் வைத்த உருளும் பாறை போல வஞ்சம் மீண்டு வந்து தாக்கும்
  • மனிதன் ஒரு புத்திசாலியான மிருகம் ஆனால் முட்டாள் தனமாக வாழ்கிறது
  • மனிதன் தன்னையும் பூமியையும் அழிக்காமல் ஒழிய மாட்டான்
  • மனிதன் தான் உருவாக்கிய சைத்தான்களை அடையாளம் காண்பதில்லை
  • மனிதனின் படைப்புகள் 
  • இறைவனது படைப்புகளை விட அபத்தமானது ஆபத்துமானது
  • முன் உதாரணமாக இருந்து முன் செல்பவனே தலைவனாவன்


ஆல்பர்ட் கேம்ஸ்
  • அடைய வேண்டுமென்ற ஆசை அழிக்கமுடியாதது
  • உண்மை என்பது ஒளி போலக் கூசும் 
  • ஒவ்வொரு புரட்சியாளனும் இறுதியில் சர்வாதிகாரியாகச் சாகிறான்
  • கேட்காமலேயே உடன்பட வைக்கும் திறமையே கவர்ச்சி 
  • தர்மத்திற்கு உடன்படாத  மனிதன் அவிழ்த்துவிடப்பட்ட மிருகம்
  • தன்னைத் தானேஉணரக்கூடிய மனசக்தி உடையவனே ஞானி
  • நவீன மனம் முழமையாகக்  குழம்பிக் கிடக்கிறது
  • வாழ்வின் முட்டாள்தனம் இன்னொரு பிறவிக்கு ஏங்குவது


ஆல்டஸ் ஹக்ஸ்லி
  • அரசியலிலும் கூட ஒரு வித தத்துவ அமைப்பு ஒளிந்துள்ளது
  • அறிவை போதிக்கலாம் ஞானத்தை தானே தான் உணர வேண்டும்
  • இசை என்பது விஞ்ஞானமாக போதிக்கப்பட்டு இன்ப நோக்கத்தை மறந்தது
  • இசையென்பது மொழியாலும் மௌனத்தாலும் 
  • சொல்ல முடியாத செய்திகளைச் சொல்கிறது
  • உப்பு சப்பான உண்மையை உணர்ச்சியூட்டும் ஒரு பொய் வெல்கிறது
  • உப்பு சப்பில்லாத உண்மையை விட காரசாரமான மசால பொய் வியாபாரமாகிறது
  • காலம் தெளிவுபடுத்தும் அதுவரை நம்பிக்கையே நல்ல துணை
  • சுய தியாகங்கள் பல செய்யாது ஞானத்தை அடைய முடியாது
  • செயல்படுவதே கற்பதற்கு வழி அந்த செயல் நன்மையாக இருந்தால்
  • திறமைக்கு மாற்று ஈடு என்பது வேறு ஒன்றுமில்லை
  • புதிய கண்டுபிடிப்பும் ஆதிக்கத்தினரின் ஆதிக்கத்துக்கே உபயோகமாகிறது
  • மன்னிப்பு என்பது தண்டனையை விட கொடிது அவரது மனம் தண்டிக்கும்
  • மனித மனம் தன் உடல் உறுப்புகளுக்கு ஊழியம் செய்யும் அடிமை
  • மனிதர்கள் எதையும் இயல்பாக உறுதியாக எடுத்துகொள்கிறார்
  • மனிதன் அவனது உறுப்புகளுக்கு வேலை செய்யும் அடிமையில்லை
  • வலி என்பது நமது தனிப்பட்ட அபிப்ராயம்தான்
  • வார்த்தை எனும் ஙாலிலே நமது அனுபவ முத்துகளை கோர்க்கிறோம்
  • விரகத்தியை தாண்டி ஒருவனுக்கு எதிலாவது ஆர்வம் வந்தால் 
  • அவனுக்கு நிச்சயம் வெற்றி


ஆர்தர்ஸ்கோப்னர்
  • அறிவாற்றலும் ஞானமும் வலுப்பட கலைகள் உதவுகின்றன
  • இன்பம் என்பது கூட துன்பத்தின் தற்காலிக மறுப்பே
  • என்ன முயன்றாலும் மனம் தன் சிறையிலிருந்து வெளிவருவதில்லை
  • ஒருவனுடைய உதடுகளை விட முகம் தெளிவாகப் பேசுகிறது
  • ஒவ்வொரு விடியலும் ஒரு குட்டி பிறப்பு
  • சலுகைகளைப் பெற கொள்கைகளை விற்று பிழைக்கலாகாது
  • சிந்தனையின் சிம்மாசனத்திலே வக்ரமே அரசாள்கிறது
  • செல்வமென்பது  கடல் நீர் போல குடிக்க குடிக்க தாகமேறும்
  • ஞானத்தின் மூலமே மனிதன் துன்பத்திலிருந்து விடுபட முடியும்
  • தியாகத்தால் திறமையில்லாதவரும் புகழடையலாம்
  • துன்பத்தை தவிர்க்க இன்பத்தை கூட தியாகம் செய்யலாம்
  • நமது எண்ணம்  செயல் அனைத்துக்கும் ஆதாரமாய் உள்ள்து ஆசை
  • நல்லவருக்கும் நல்லவைகளுக்கும் உலகில் ஒரு காலமுண்டு
  • பெரிய சிறந்த மனிதர் பறவை போல தனிக்கூட்டிலே வாழ்வார்
  • பேருதவி செய்த மணைவியை கட்டிக் கொண்டு தூங்குபவனே மனிதர்
  • மரியாதயை வெல்வது முக்யமல்ல இருப்பதை இழக்காமலிருப்பதே நல்லது
  • மாற்றம் ஒன்று மட்டுமே என்றும் மாறாதது
  • வானத்தை குறிக்கோளாகக் கொண்டவனுக்கு வாழ்வு எளிது
  • விருப்பாற்றலை மீறி எழும் அறிவாற்றலே துன்பத்தை கடக்க உதவும்


ஆப்ரகாம்மாஸ்லோ
  • அச்சமில்லாது துணிவுடன் புதுமையை சந்திப்பனுக்கே எதிர்காலம் உண்டு
  • அனுபவத்தின் ஆற்றல் அறிந்தவரே வாழ்வின் அர்த்தம் புரிந்தவர் 
  • ஆன்மாவின் குரல் நம்மை உள்ளிருந்தே வழி நடத்தும்
  • உதவி செய்ய இதயம் உள்ளவனுக்கே விமர்சனம் செய்யும் உரிமையுண்டு
  • உன்னால் முடிந்ததை நீ முயலாது விட்டால் நீ சந்தோசமாக இருக்க முடியாது
  • கையில் சுத்தி உள்ளவன் பார்ப்பதை எல்லாம் ஆணி என நினைக்கிறான்
  • தடைகளை கண்டுதயங்காது நடந்தால் அவை தானே தகார்ந்துவிடும்
  • தனது சுய சொருபத்தை சாதிபபதே சுய சாதனையாகும்
  • நிகழ்காலத்தில் வாழத்தெரிந்தவரே மனஅமைதியுடன் இருக்க  முடியும்
  • புதுமையை அச்சமில்லாது சந்திக்கும்  துணிவுள்ளவரே சாதிப்பார்
  • மனிதர் யாரும் தன்னை குறைந்த விலைக்கே விற்கிறார்
  • வளைந்து கொடுக்கும் படைபாற்றல் உள்ளவரே வாழ முடியும்


அலக்ஸாண்டர் போப்
  • அரைகுறை அறிவும் படிப்பும் ஆபத்து
  • அளவுக்கு அதீதமான ஓய்வு வலிகளுக்கு விதையாகிறது
  • அறிஞர் தொடவும் அஞ்சுவதில் மூடர் மூழ்கி நீச்சலடிப்பார்
  • அறைகுறை அறிவு அறியாமையைவிட ஆபத்தானது
  • இளமையில் அழகு அதிகம் அறிவோ அபூர்வம்
  • இளமையின் அழகிலும் துடிப்பிலும் அறிவு என்பது அபூர்வமே
  • உத்தமானான மனிதர் என்பவர் கடவுளின் உன்னதமான புனித படைப்பு
  • எதிரியின் தடுமாற்றத்துக்காக வஞ்சநரி தந்திரமாக காத்திருக்கிறது
  • ஒருவர் இல்லாத போது அவர் மீது அவதூறு பேசாதீர்கள்
  • ஒழுங்கும் ஒழுக்கமுமே சுவர்க்கத்தின் முதல் சட்டம்
  • குறுகிய ஆன்மாக்கள் என்பது கழுத்து குறுகிய பாத்திரம் 
  • உள்ளேயும் விடாது வெளியேயும் விடாது
  • கோபமென்பது மற்றவர் குற்றத்துக்கு நம்மை பழி வாங்கும் செயல்
  • தகுதியில்லாதவரை புகழ்வது மாறுவேடமிட்ட ஊழலே
  • தவறுவது மனித இயல்பு அதை மன்னிப்பதே தெய்வ இயல்பு
  • தவறுவது மனித இயல்பு மன்னிப்பதே தெய்வீககுணம்
  • திறமையை முட்டாள்கள் புகழ்வார் அறிஞர்களோ ஆமோதிப்பார்
  • நமது பங்கை சரியாகச் செய்தாலே நிச்சயம் மரியாதை கிடைக்கும்
  • நல்ல ரசணையே ந்ல்ல அறிவாளரை உருவாக்குகிறது
  • நல்ல ரசனையுள்ள மனிதரே நல்ல படைப்பாளியாகிறார்
  • நல்லது சொன்ன நன்பரில்லை
  • நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் நம் தரம் குறைகிறது
  • நேர்மையான மனிதரின் படைப்பிலே இறைவன் பெருமையடைகிறான்
  • புனிதர்கள் புகத்  தயங்கும் செயல்களிலே மூடர்கள் ஒடி விளையாடுவார்
  • புனிதர்கள் புகத்  தயங்கும் செயல்களிலே மூடர்கள் ஒடி விளையாடுவார்
  • பெருமையுடைய பெண்கள் கூட காதலால் ஏமாற்றப்படுகிறார்கள்
  • பொறுமையும் நம்பிக்கையும் முதல் ஞானமாகும்
  • மனித இருதயங்களில் நம்பிக்கையெனும் ஊற்று வற்றாது சுரக்கிறது
  • மனிதருடைய அகந்தை தேவதைகளாக தேவளாகவே ஆக விரும்புகிறது
  • முகத்தின் இனிமை மொழியில் மென்மையுடையவர் வாழ்வில் மேன்மையடைவார்
  • மூடர்கள் பாராட்டுவார் அறிஞரோ அரவனைத்து ஆதரவு தருவார்
  • மென்மையாக பேசுவது மன நலத்துக்கு நல்ல மருந்து 
  • வாய்மை என்பது மகிழ்ச்சிக்கு குறைவு என்பது உண்மையான நிதர்சனம்


அரிஸ்டாட்டில்….
  • அச்சப்படும் மனிதன் மீது யாராலும் அன்பு செலுத்த முடியாது
  • அடிக்கடி கோபப்படுபவன் விரைவில் வயோதிகனாகி விடுவான்
  • அண்டம் முழுதுக்கும் அடிப்படையான பொது இயக்கசக்தியே கடவுள்
  • அரிய மனித வாழ்வின் முதலும் முடிவுமாக இருப்பது இன்ப ஙகர்வு
  • அழகு ஆண்டவன் கொடுத்த பரிசு அதற்கு கர்வ பட கூடாது
  • அறிவும் ஞானமும் சமதானமும் கலந்த தீர்ப்பே சரியான நீதியாகும் 
  • அன்பு மதிப்பு மரியாதைக்கு காரணமான 
  • குடும்பம் இல்லாத சமுதாயம் பாலைவனம்
  • ஆண்களின் துணிவு ஆள்வதில் பெண்களின் துணிவு பணிவு 
  • ஆன்மா உயிரின் சக்தி அது அணுவால் ஆனதல்ல அழிவதல்ல
  • இயற்கையின் நியதிக்கு மாறுபட்டவையாவும் அநீதியே
  • இலட்சிய மனிதன் என்பவன் எதையும் கலங்காது ஏற்பான்
  • இளமை என்பது மது போல போதையானது அதனால் மயக்கத்திலே வாழ்கிறார்
  • இளமை கொண்டாட்டம் மதியம்  போராட்டம் முதுமை  திண்டாட்டம்
  • உண்மையில் இருந்து ஒரு நூல் விலகினால் அக‌ல பாதாளம் தான்
  • எதுவும் எவருக்கும் சொந்தமில்லை என்பது நாணயத்தின் மறுபக்க்ம் 
  • எல்லா திறமைகளும் நல்ல பழக்கங்களின் பயிற்சியினாலேயே வளர்கின்றது 
  • எல்லா மனிதருக்கும் அறிய வேண்டுமென்ற ஆர்வம் உடன் பிறந்தது
  • எனது ஆசிரியர் மரியாதைக்குரியவர் ஆனால் உண்மை அவரைவிட மரியாதைக்குரியது
  • ஒவ்வொரு பொருளுக்கும் வடிவம் செயல் நோக்கம் உண்டு
  • கல்வியின் வேர்கள் கசக்கும் ஆனால் அதன் கனிகள் இனிக்கும்
  • கற்றவர்களால் மட்டுமே தனக்கு பிடிக்காத சிந்தனையை 
  • காது கொடுத்து கேட்க முடியும்
  • கெளரவத்தை பெறுவதை விட அதற்கு தகுதியானவ்ராக நடப்பதே சிறப்பு
  • கெளரவம் என்பது பதவிகளை அடைவதை விட 
  • அதற்கு தகுதியானவராக இருப்பது தான்
  • சட்டங்களின் மூலம் மக்களிடையே ஒற்றுமை ஏற்படுத்த முடியாது  
  • சட்டம் என்பது அறிவுக்கு உடன்பட வேண்டும் உணர்ச்சிக்கு அடிமையாக கூடாது
  • சமுதாய தீங்குகளுக்கு சொத்துரிமையை விட பொறாமை உணர்வே காரணம்
  • சிறந்த ஆன்மா என்பது சிறிதள‌வாவது பேதலித்த நிலையுள்ளது
  • சிறந்த நற்பண்புகள் யாவும் நிறைந்த ஞானம் முதிர்ந்த அறிவின் விளைவே
  • தனிமனிதனின் சிறப்பியல்பு இல்லாத பொது உடைமை குன்றி அழியும்
  • தீமை என்பது இருக்கும் போது தெரியாது மரமான பின் அழியாது
  • தீமைகளை எதிர்ப்பார்த்தால் அச்சமே கிளைவிடும்
  • தீமையை எதிர்பார்க்கும் வலியே அச்சம் என்பது
  • துரதிட்டத்திலும் வறுமையிலும் உண்மை நன்பர்களே கடவுள்
  • நமது மகிழ்ச்சி என்பது நமது மனிதில்தான் இருக்கிறது
  • நற்செயலால் அடையும் இன்பத்தையே நாம் நாட வேண்டும்
  • நியாயம் என்ற நிலத்தில் நேர்மை என்ற பூ மலரும்
  • நீதி என்ற நூல்தான் மனித முத்துகளை சமூக மாலையாக்குகிறது
  • பேரரசுகளின் விதி இளைஞர்களின் கல்வியை பொறுத்ததே
  • மனிதர்கள் அடைய விரும்பும் யாவும் மகிழ்வு பெறுவதற்கான கருவிகளே 
  • மனிதன் என்பவன் சமுதாயத்தால்தான் முழுமையடைகிறான்
  • மனிதன் ஒரு புனிதமான மிருகம் சட்டம் ஒழுங்குதவறினால் மோசமானமிருகம்
  • முகத்துக்கு நேராக புகழ்பவர் பயன் கருதியே செய்கிறார்கள்
  • முக்ய பதவியில் உள்ளவர் ஆயுள் முழுதும் அதில் நீடிப்பது நல்லதல்ல
  • முழுமையாக மனிதன் வாழ்வில் விபத்துக்களை நளினமாக கண்ணியத்துடன் ஏற்பான்
  • முழுமையான மனிதன் முக்ய பதவி உள்ளவர் 
  • ஆயுள் முழுதும் அதில் நீடிப்பது நல்லதல்ல
  • வறுமை பெற்றெடுத்த குழந்தைகளே குற்றமும் புரட்சியும்
  • வறுமையே வன்முறைக்கும் புரட்ச்சிகளுக்கும்  தாய்
  • வாய்மை என்பது என்னவென்றால் நீதியை நியாய‌த்தை நிலைநாட்டுவதுதான் 
  • வாழ்வின் துன்பங்களை சமாளிக்க நண்பரை விட நல்ல துணை இல்லை


அயன்ரான்ட்
  • இளமையில்வெற்றி பெற சுறுசுறுப்பும் 
  • முதுமையில் வெற்றி பெற பொறுமையும் தேவை
  • உடல் இல்லாமல் உயிரில்லை செல்வமில்லாமல் மனிதமில்லை
  • உனது அனுமதியின்றி உனக்கு தீமை நடந்து விட முடியாது
  • எதற்கும் இருபக்கம் ஒன்று சரிமற்றது தவறு நடுவே இருப்பது சர்வநாசம்
  • எதுவும் உன் அனுமதியின்றி உன் உள்ளே புக முடியாது
  • ஒழுக்கத்தின் தேவை மகிழ்வதற்காக அது துயரடைவதற்காக அல்ல
  • ஒழுக்கம் இல்லாத வெற்றிடத்தால் தான் எல்லா சாத்தான்களும் பரவுகிறது
  • ஒழுக்கமும் பணமும் முரண்பாடும்போது பணமே எப்போதும் வெல்கிறது
  • கலாசார பாரம்பரியம்  பண்பாடு மனசாட்சிக்குள் விதைத்த விதைகளே பாவமன்
  • கலைகள் ,ஞானம்,விஞ்ஞானம் ,மதம் யாவும் ஒரு மரத்தின் கிளைகளே
  • சந்தர்ப்பம் எனும் படிகளில் ஏறினால் வெற்றி ஏணியில் உயர முடியும்
  • சாதனைகளுக்காகத்தான் வெற்றி அது ம்ற்றவரை தோற்கடிக்க அல்ல
  • சிந்திக்கும் மனிதர்களை அடக்கியாள முடியாது
  • செல்வமென்பது வாகனம் அதை நீதான் சரியாக ஒட்ட வேண்டும்
  • துப்பாக்கி முனையால் ஒழுக்கத்தை வளர்க்கமுடியாது
  • நமது சாதனைகளின் மேடையிலேதான் மகிழ்ச்சி உருவாகிறது
  • நன்மையில்லாத வெற்றிடத்தில் தீமையெனும் நஞ்சு பரவும்
  • படைப்பாளியின் நோக்கம் சாதனைக்கான முனைப்பு வெற்றிக்கான வெறியல்ல
  • பணம் தான் தீமையின் வேர் என்றால்,பணத்தின் வேர் எது?பணம் தீமையானது என்று சொல்லும் மனிதரை விட்டு விலகி விடு
  • மக்களின் வாய்மையை பரிசோதிக்கும் உரைகல் அச்சடித்தநோட்டு
  • மகிழ்ச்சிதான் வாழ்வின் இலட்சியம் அதை அடை துயர்படகூடாது 
  • முரண்பாடுகள் இயற்க்கையானது அல்ல அது நமது செயல்களால்
  • முனைப்பு என்பது  அந்த செயலுக்கான உத்வேகத்தை தடுகிறது

No comments:

Post a Comment