Tuesday, December 10, 2013

பயனற்றவை எது?

பயனற்றவை எது?

1. பெற்றோர்களை அவர்கள் துயர் உற்றிருக்கும் காலத்தில் கவனித்துப் போற்றாத பிள்ளை..

2. நன்றாகப் பசிக்கும்போது கிடைக்காத உணவு.. (அது எவ்வளவு சுவையானதாக இருந்தாலும்)...

3. தாகத்தைத் தவிர்க்க முடியாத தண்ணீர்..

4. கணவனின் வருமானம் தெரிந்து குடும்பம் நடத்தாத பெண் (மனைவி)..

5. கோபத்தை அடக்கி ஆளத்தெரியாத ஆட்சியாளர்கள்..

6. தன் ஆசிரியர் சொல்லிக்கொடுத்தன்படி நடக்காத மாணவன்..

7. பாவம் போக்கும் புனிதத்தன்மை இல்லாத திருக்குளம்..

ஆகிய இந்த ஏழும் பயனற்றவை ஆகும்!

யார் சொன்னது?

ஞானி ஒருவன் சொன்னது!

பாடலைப் பாருங்கள்

“ஆபத்துக்கு உதவாப் பிள்ளை
அரும்பசிக்கு உதவாத அன்னம்
தாபத்தைத் தீராத தண்ணீர்
தரித்திரம் அறியாத பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன்
குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத தீர்த்தம்
பயனில்லை ஏழுந்தானே!”

No comments:

Post a Comment