Tuesday, December 17, 2013

நீங்கள் அதிகாரம் உள்ள நபரா?இல்லையா?

நீங்கள் அதிகாரம் உள்ள நபரா?இல்லையா?

1.உங்கள் வாழ்க்கை அதிகார வட்டத்தை பாதுகாத்திடுங்கள்.அப்பா நான் தான் இந்த வீட்டுல மூத்த பிள்ளை என் பேச்சுக்கு எப்போதும் நீங்க மதிப்பே கொடுக்கிறது கிடையாது ,இந்த சின்னப் பையன் சொல்லுறதைத் தான் எல்லோரும் கேட்கின்றீர்கள் அதன்படி நடக்கின்றீர்கள்

2.ஒரு அண்ணன் தனது தந்தையிடம் சொல்லும் வார்த்தை ,இதை நீங்கள் உங்கள் வாழ்வில் கேட்டிருக்கலாம்,அல்லது இந்தக் கட்டுரையில் கண்டுள்ளதை கடைப் பிடிக்காவிட்டால் இப்படிப்பட்ட ஒரு நிலையை நீங்கள் அடையலாம்.
                                                  
3.இதே போல் இன்னும் ஒரு இடம் ,"சார்" இந்த வேலை எனக்கு ஒதுக்கப் பட்ட வேலை நீங்கள் என் மேல் அலுவலர் என்னும் முறையில் எனக்கு ஒதுக்கப்பட்ட பணிப் பொறுப்பை என்னுடன் பணி புரியும் அந்த நபரிடம் ஒப்படைத்து அவரிடமே கருத்துக் கேட்பது நன்றாக இல்லை.

யார் இவர்கள் எதற்காக இப்படி சண்டைக்கு நிற்கின்றார்கள்?

4.எங்களது தெருவில், அந்த தெருவில் உள்ள எல்லோரும் அறிந்த  கருப்பு நாய் ஒன்று இருக்கின்றது ,அந்த நாய்க்கு அந்த தெருவில் கிடைக்கும் அனைத்து நல்லது கெட்டதும் நாய் என்னும் முறையில் அதற்குக் கிடைக்கும் .

5.ஒரு நாள் அடுத்த தெருவில் இருந்து ஒரு சிவப்பு நாய் எங்கள் தெருவிற்கு வந்தது பாருங்கள் ,கருப்பு நாய்க்கு வந்ததே கோபம் யாரும் அப்படிப் பட்ட ஒரு கோபத்தினை அதனிடம் இதற்கு முன்பு பார்த்ததில்லை,சிவப்பு நாயை அந்த தெருவை விட்டு உடனே வெளியேற்றியது.

ஏன் இப்படி யார் இதற்கு பட்டா கொடுத்தார்கள் இந்ததெரு கருப்பு நாயினுடையது என்று .

6.இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரும், தனது ஆளுகைக்கென்று சில எல்லைகளை வரையறுத்து வைத்துள்ளது.அது நில எல்லைகளாகவும் இருக்கலாம்,மன எல்லைகளாகவும் இருக்கலாம்.மனிதனைப் பொறுத்து மன எல்லைகள் எனப்படும் அதிகாரங்களாக இருக்கின்றது.

7.மனிதர்  எவரும் அதிகாரம் இல்லாமல் வாழ முடியாது,குழந்தைகளாக இருக்கும் போது நமது பெற்றோரிடம் அவர்களது குழந்தைகள் என்று அதிகாரத்தைச் செலுத்துகின்றோம் அவர்கள் தங்களது குழந்தைகள் என்னும் முறையில் நம்மிடம் மட்டுமே அதிகாரத்தை செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

8.அதில் ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் அதற்கு எதிர் வினை செய்கின்றோம்.இப்படியே நாம் வளர வளர நமது அதிகார வட்டத்தைக்  கூட்டியும் குறைத்தும் கொண்டு நமது வாழ்க்கையின் அந்திமக் காலம் வரை வாழுகின்றோம்.

9.மேலே சொன்ன இரண்டு நபர்களில் ஒருவர் தனது குடும்பத்தில் அண்ணன் என்ற முறையில் தனது அதிகார வட்டத்தை இழந்தவர்,மற்றொருவர் பணியாளர் என்னும் முறையில் தனது அதிகார வட்டத்தினை இழந்தவர் .

10.ஏன் இவர்கள் இழந்தார்கள் என்பது அவரவரது தனிச் சூழலைப் பொறுத்தது.எந்த மனிதனும் தாங்கள் வாழ இப்படிப்பட்ட அதிகார மையங்கள் கண்டிப்பாக வேண்டும் என்பது அவர்கள்  அனைவருக்கும் தெரியும்.

11.ஒரு அதிகார எல்லையில் கவணம் செலுத்தவில்லை என்றால் அந்த இடத்திற்கு வேறு யாரேனும் வரவில்லை என்றால் ஒன்னும் பாதகமில்லை ,ஆனால் அதிகார எல்லைகளை நாள் தோறும் உருவாக்கும் மனிதர்கள் எந்த அதிகார எல்லைகளையும் விட்டு வைப்பதில்லை.

12.ஒரு  அதிகார மையம் தங்களுக்குத் தேவையில்லை என்றால் அதனை விடுவது தவிர வேறு வழியில்லை.ஆனால் ஒரு அதிகார எல்லையை கைவிடும் முன்பு நன்கு சிந்தனை செய்து அதனை கைவிட வேண்டும்.அதனை விட சிறந்த அதிகார எல்லைகள் இருந்தால் மட்டுமே இப்படி கைவிட வேண்டும் .

அதிகார மையம் பற்றிய சில சிந்தனைகள்:

1.மனிதன் மனிதனாக வாழ இப்படிப்பட்ட அதிகார மையங்கள் வேண்டும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும் .

2.அதிகார எல்லைகள் என்பது நிரந்தரமானவைகள் அல்ல.அவ்வப்போது  நாமாகவே மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும்,இல்லையென்றால் சூழ்நிலைகளால் நாம் அதிகார மையத்தை இழக்கலாம்.

3.எப்படிப் பட்ட அதிகார வட்டத்தை நாம் உருவாக்குகின்றோம் என்பதனையும் எப்படிப்பட்ட அதிகாரமையத்தை நாம் நாமாக இழக்கின்றோம் அல்லது இழக்க வைக்கப்படுகின்றோம் என்பதைப் பொறுத்துத் தான் நமது வாழ்க்கை வெற்றிகள் இருக்கின்றன .

என்பதை இன்று சிந்தனைக்கு எடுத்துக் கொண்டு அதிகார வட்டத்தை உருவாக்கி ,விரிவுபடுத்தி நலமுடன் வாழ்வோம்.

No comments:

Post a Comment