Monday, January 13, 2014

சுவாமி விவேகானந்தர்!

சுவாமி விவேகானந்தர்!!!

உங்கள் பணி என்ன?
''ஏற்கெனவே இருப்பதை அழிப்பதல்ல என் பணி; மாறாக, இருப்பதைப் புனர்நிர்மாணம் செய்வதே!

உலக நாடுகளின் சரித்திரங்கள் அனைத்திலும், ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு மகாபுருஷன் அதன் தேசிய வாழ்வின் கேந்திரமாக விளங்குவான். அந்த மகாபுருஷனது கருத்துக்கள் மக்கள் யாவர் மீதும் சக்தியுடன் பாயும்.

என் சீடர்களாகிய நீங்கள் புத்திசாலிப் பிள்ளைகள்தான். ஆயினும், காரியத்தில் என்ன செய்திருக்கிறீர்கள்?

உங்களது ஒரு வாழ்வை மற்றுமுள்ள பலரின் வாழ்வுக்காக நீங்கள் அர்ப்பணிக்க வேண்டும். வேதாந்தம் கற்பது, தியானம் செய்வது முதலானவற்றை அடுத்த பிறவியில் பார்த்துக்கொள்ளலாம்!

'பிறருக்குப் பணி செய்வதிலேயே இந்த உடல் அழியட்டும்’ என்று நீங்கள் நினைக்கவேண்டும். அப்போதுதான், நீங்கள் என்னிடம் வந்தது வீண்போகவில்லை என அறிந்துகொள்வேன்!''

'என்னை நீ விலக்கலாமா?’

'துறவியர்க்கு எல்லோரிடத்தும் எல்லாவற்றிலும் சம பாவம் இருக்கவேண்டும்’ என்று சுவாமிஜி உணர்ந்து கூறிய ஒரு நிகழ்ச்சி.

சுவாமிஜி அப்போது ஜெய்ப்பூரில், மன்னரின் விருந்தினராகத் தங்கியிருந்தார். ஒருநாள் மாலையில், மன்னருக்காக ஒரு நாட்டிய நிகழ்ச்சி நடைபெற இருந்தது. அதற்கு சுவாமி விவேகானந்தரையும் அழைத்தார் மன்னர். ஆனால் சுவாமிஜியோ, நாட்டியப் பெண் ஒருத்தியின் கலை நிகழ்ச்சிக்கு சந்நியாசி ஆகிய தாம் வருவதற்கில்லை என மறுத்துவிட்டார். இந்தச் செய்தி அந்த நாட்டியப் பெண்ணுக்குத் தெரிந்துவிட்டது. அம்பு பட்ட வெண்புறா கதறுவதுபோல மிகவும் சோகத்துடன் பாடினாள் அவள். அந்தப் பாடலின் கருத்து...

'பரமனே! சமபாவம் என்பதையே இயல்பாகக் கொண்ட நீ, பாவம் செய்தவள் இவள் என்று என்னை ஒதுக்கிட நினைக்கலாமா? இரும்புத்துண்டு ஒன்று, இறைவனின் பதுமையில் பஞ்ச உலோகங்களில் ஒன்றுமாக அமைகிறது. பிறிதொரு இரும்புத் துண்டோ பிராணிகளைக் கொல்லும் பாவியின் கை வாளாக பாதகம் புரிகிறது. ஆயினும், இரண்டும் ரஸவாதியின் திறனால் மாசற்ற பொன்னாய் மாறுவதையும் நீ அறிவாய்! பாவம் செய்தவள் இவள் என்று என்னை விலக்க நினைக்காதே!

சமபாவம் என்பதே நின் இயல்பன்றோ? காளிந்தி நதியின் புனித நீரும், கழிகாலில் வழிகின்ற இழிநீரும் ஒரு நிலையில் இனிய கங்கையில் இணைகின்றபோது ஏற்றம் பெறுவதை நீ ஏற்றுக்கொண்டவன் அன்றோ! பாவம் செய்தவள் இவள் என்று என்னை விலக்க நினைக்காதே! பரமனே, சமபாவம் என்பதே நின் இயல்பன்றோ?’

அவளது அந்த அற்புத கீதம் சுவாமிஜியின் காதில் விழுந்தது. உள்ளத்தைத் தொட்டது. சுவாமிஜியின் இதயம் இளகியது. 'மாசு நிறைந்தவள்’ என்று உலகத்தவர் யாவரும் கருதிய ஒரு பெண்தான் எவ்வளவு அழகாக தனக்கு உயர்ந்ததொரு தத்துவத்தை உணர்த்திவிட்டாள்! பாவமும் புண்ணியமும் இறைவனின் சந்நிதியில் ஏது? பரமனின் முன்பு யாவும் ஒன்றுதானே! மாயைக்கு உட்பட்ட உலக மக்களுக்கு பேதங்கள் இருப்பது இயல்பு. ஆனால், மாயையைக் கடந்து, பிரம்மத்தில் லயித்திருக்கும் சந்நியாசிக்கு சமபாவம்தானே இருக்கவேண்டும்?’

சுவாமிஜி உடனே நேராக நாட்டியம் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்துக்குச் சென்றார். இயல்பிலேயே ஒளிவீசும் அவரது கண்கள் கண்ணீரால் பளபளக்க, பாடிய அணங்கை அன்னையைக் காண்பதுபோல் அன்புடன் நோக்கி, ''தாயே! நான் குற்றவாளி ஆகிவிட்டேன். இங்கு வராமலே இருந்து உன்னை அவமதித்த பாவத்துக்கு ஆளாகி இருப்பேன். ஆயினும் தாயே... அதிர்ஷ்டவசமாக உன் சங்கீதம் என் அறிவை விழிப்புறச் செய்துவிட்டது!'' என்றார்.

 'வேதங்களால் என்ன பயன்?’

சுவாமிஜி, பிரேமானந்தருடன் உலாவச் சென்றார். அது 1902-ம் ஆண்டு, ஜூலை 4-ம் தேதி, வெள்ளிக்கிழமை. அன்று மாலையில், பற்பல விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே சென்ற அவர், வேதத்தைப் பிரசாரம் செய்யவேண்டியதன் அவசியம் குறித்துச் சொன்னதுடன், வேதத்துக்காக ஒரு கல்லூரி தொடங்க வேண்டும் என்ற தமது விருப்பத்தையும் வெளியிட்டார்.
''சுவாமிஜி, வேதத்தைப் படிப்பதால் என்ன விசேஷ பயன் கிடைக்கும்?'' என்று கேட்டார் பிரேமானந்தர்.

சுவாமிஜி பளிச்சென்று, ''மூடநம்பிக்கைகள் அழியும்'' என்றார்.

மடத்துக்குத் திரும்பிய சுவாமிஜி சாதுக்களுடன் பேசிக் கொண்டிருந்தார். பற்பல நாடுகள் உன்னதமாக எழுந்ததையும், வீழ்ந்ததையும் பற்றிக் கூறினார். ஆனால் இந்தியாவைப் பற்றி அவர் பேசுகையில், ''இந்தியா அமரத்துவம் பெற்றது. ஆண்டவனைத் தேடுவதிலேயே ஈடுபட்டால், இந்தியா என்றும் வாழும். மாறாக அரசியலையும், சமூக சச்சரவுகளையும் தேடிப் போனால், இந்தியா செத்துவிடும்'' என்றார்.

இதுவே அவரது இறுதியான போதனை. எத்தனையோ விவேகானந்தர்கள் வருவார்கள்!

தாம் யார் என்று அறிந்து, அதுவாகவே சுவாமிஜி மாறப்போகும் அந்த இறுதியான நாளில், அதிகாலையில் எழுந்த சுவாமிஜி, சிறிது தேநீர் பருகிவிட்டு தியானத்தில் அமர்ந்தார்.

வழக்கத்துக்கு மாறாக பூஜாகிருகத்தின் கதவுகளை எல்லாம் மூடிவிட்டு, ஏகாந்தமாக தியானம் செய்யலானார். தியானத்தைவிட தியாகம் பெரிது என்று வாழ்ந்திருந்த நாட்களெல்லாம் முடிந்துவிடப் போகும் தினம் அது என்பதாலோ என்னவோ, சுவாமிஜி வெகு நேரம் தியான சமாதியில் ஆழ்ந்திருந்தார்.

தியானம் முடிந்து பூஜாகிருகத்தின் படிகளில் இறங்கி வந்த சுவாமிஜி, தன்னையும் அறியாமல் அம்பிகையைப் பற்றிய கமலாகாந்தரின் அற்புதமான பாடலைத் தமது அமுதமான குரலில் பாடினார். பேலூர் மடத்தினர் அந்தத் தீஞ்சுவைக் குரலைக் கேட் டனர்- அதுதான் தாங்கள் கடைசியாகக் கேட்கும் குரல் என்று அறியாமலே!

தம்மையறியாமலே பாடியதுபோல், பாடல் முடிந்ததும் தம்மையறியாமலே பேசவும் செய்தார் சுவாமிஜி. ''காளியை மட்டும்தானா... இந்த விவேகானந்தனையும்கூட யார் புரிந்துகொண்டார்கள்? அவன் என்ன செய்தான் என்று யார் தெரிந்துகொண்டார்கள்? இன்னொரு விவேகானந்தன் இருந்தால், அவனால்தான் புரிந்துகொள்ள முடியும். இன்னும் ஒரு விவேகானந்தன் என்ன... கால வெள்ளத்தில் எத்தனையோ விவேகானந்தர்கள் தோன்றத்தான் போகிறார்கள்..!''

Saturday, January 11, 2014

உங்களைச் சுற்றி உளவாளிகள்

உங்களைச் சுற்றி உளவாளிகள் .

1.ஒற்று என்னும் உளவு பார்க்கும் செயல் ,நாடுகளின் முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல தனி நபர்களின் முன்னேற்றத்திற்கும் அவசியம்.ஒவ்வொரு மனிதனும் உறவு மற்றும் நட்பு வட்டம்,பணிவட்டம் ,எதிர்ப்பு வட்டம் என்னும் மூன்று வட்டங்களுக்குள் தனது மனித உறவுகளை மேலாண்மை செய்து வருகின்றான்.

2.இந்த மூன்று வட்டங்களும் பெரும்பாலும் தனித்து     இயங்குவதில்லை.       ஒரு உறவு வட்டம் பணிவட்டத்திற்குள்ளும் ,உறவு வட்டமும் பணிவட்டமும் எதிர்ப்பு வட்டத்திற்குள்ளும் மாறி மாறி இயங்கும் .                               
                                                                      
3.இந்த மூன்று வட்டங்களில் உள்ளவர்கள்  ஒவ்வொருவரும் நம்மைப் பொறுத்து ,ஒவ்வொரு மாதிரி செயல் படுவார்கள் .இந்த செயலை நமதுநிலைக்கு  ஆதரவான செயல் ,நமது நிலைக்கு எதிரான செயல்,நடுநிலை  என்று பிரிக்கலாம்.இந்த மூன்று நிலைகளையும் நமது மேலே சொன்ன நட்பு,பணி ,உறவு என்னும்  மூன்று வட்டங்களில் உள்ளவர்களும் மாறி மாறி மேற்கொண்டு நமது வாழ்வில் வலம் வருவார்கள் .

3.இப்படி வலம் வருபவர்கள் எப்பொழுது நட்பு மற்றும் உறவு வட்டத்திற்குள்ளும் எப்பொழுது எதிர்ப்பு வட்டத்திற்குள்ளும் எப்பொழுது நடுநிலையுடனும் செயல் படுவார்கள் என்று முன்னிட்டு அறிந்து கொள்ளவில்லை என்றால் நாம் பல செயல்களை வெற்றிகரமாகச் செய்வது என்பது முடியாது.

4. இவர்களைக்  கையாள நாம் ஒரு ஒற்றனாக இருக்க வேண்டும் .மூன்று வட்டத்தினரும் எவ்வெப்பொழுது என்ன நிலைப்பாட்டினை கொண்டிருக்கின்றார்கள் என்பதை தொடர்ச்சியாக அறிந்து கொண்டே இருக்க வேண்டும் .ஆகவே தான் ஒற்று என்னும் உளவு பார்க்கும் செயல் நாடுகளின் முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல தனி நபர்களின் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்பிற்கும் அவசியம்.
                                                                                                             
5.இந்த உளவு பார்க்கும் முறையை ஒவ்வொருவரும் தெரிந்தோ தெரியாமலோ உணர்ந்து,அறிந்து வைத்து தங்களது நிலைப்பாட்டினை தக்க வைத்து வெற்றி அடைந்திருக்கின்றார்கள்.சரி இந்த மூன்று வட்டத்தினரையும் எப்படி உளவு பார்க்கலாம் என்று பார்ப்போம்.உளவு பார்ப்பதில் மூன்று முறை உண்டு .ஒருவகை நாமே உளவு பார்ப்பது ,அடுத்தவகை மற்றவர்கள் மூலம் உளவு பார்ப்பது மூன்றாவது வகை தாங்களே தங்கள் நிலைப்பாட்டினை கூறுபவர்களை அடையாளம் காண்பது.

6.முதல் வகை உளவைப் பற்றி பார்ப்போம்.நமது மூன்று வட்டங்களில் உள்ளவர்கள் பற்றி முழுவதும் நாம் அறிந்து கொள்ள வேண்டும் .அவர்களுக்கு என்ன பிடிக்கும்,பிடிக்காது.அவர்கள் எந்தெந்த பிரிவுகளில் திறமை காட்டுவார்கள் எந்தெந்த பிரிவுகளில் அவர்களுக்கு பலவீனம் .அவர்கள் எந்த முறையில் நம்மை உளவு செய்கின்றார்கள்,அவர்களுக்கு உதவிகள் புரியும் நபர்கள் யார்,அவர்களுக்காக நம்மை உளவு பார்ப்பவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

7.இந்த நபர்களுடன் நாம் தொடர்பு கொள்ளும் சூழ்நிலைகளில் அவர்களது உளவு மனப்பாண்மையை நம்மிடம் காட்ட மாட்டார்கள் மறைத்து வைப்பார்கள்.ஆகவே இதனை நாமே உளவு பார்ப்பது சிறந்தது .இந்த நபர்களுடன் நாம் தனிமையில் உரையாட வேண்டும் அவர்கள் கலக்கத்திலோ ,குழப்பத்திலோ இருக்கும் பொழுது தங்களைப் பற்றிய உண்மைகளை கூற அதிக வாய்ப்புகள் உண்டு .

8.அடுத்து மூன்றாம் நபர்களிடம் எப்படி நடந்து கொள்ளுகின்றார்கள் என்பதை பொறுத்து நாமே அவர்களின் நிலைப் பாட்டினை அறியலாம் .மற்றவர்கள் மூலமாக உளவு பார்க்கப்படும் நபரைப் பற்றி நாம் உளவுதான் பார்க்கின்றோம் என்று அறியப்படாமல் உண்மைகளை அறிவது.

9.இதெல்லாம் போக மற்றொரு முறை அவர்களது கொள்கைகளை ஏற்பது போல் பேசித் தெரிந்து கொள்வது.மற்றொரு முறை அவர்களது கொள்கைகளை எதிர்ப்பது போல பேசி அவர்களது மனதில் என்ன நினைத்திருக்கின்றார்கள் என்பதனையும் ,அவர்களது நிலைப்பாடு என்ன என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

10.இதெல்லாம் நாமே உளவு பார்ப்பது.மற்றவர்களை வைத்து உளவு பார்ப்பதற்கு முதலில் நமது இலக்கு நபரின் சுற்று வட்டத்தில் நெருக்கமானவர்கள் யார் என்பதை உளவு பார்க்க வேண்டும்.பின்பு அந்த நபர்களுடன் பேசி இலக்கின் குறிக்கோளை தெரிந்து கொள்ள வேண்டும் .எந்த சூழ்நிலையிலும் நாம் உளவு பார்க்கின்றோம் என்னும் உணர்வே இவர்களுக்கு வரக்கூடாது.

11.சுருக்கமாகச் சொன்னால் அடுத்தவர்களின் எண்ண  ஓட்டத்தை அறிந்து,அதற்கு ஏற்றாற் போல, நமது வாழ்விற்கு அதனை பயன்படுத்தும் திறமையை வளர்த்துக் கொள்ளும் போது  வெற்றி எளிதாகின்றது.

12.உளவு பார்க்க சில டிப்ஸ்கள்:

1.நாம் உளவு பார்க்கும் சமயம் நாமும் உளவு பார்க்கப் படுகின்றோம் என்ற எச்சரிக்கை தேவை.

2.நமது மூன்று வட்டத்தில் இருக்கும் நபர்கள் தனிமையில் அவர்களைப் பற்றிய ஒரு ரகசியம் என்று உங்களிடம் சொல்கின்றார்கள் என்றால் ,அவர் உங்களைப் பற்றிய ஒரு உண்மையை தெரிந்து  கொள்ள கண்னி வைக்கின்றார் என்று பொருள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும் தருணம்.

3.பல பேருடன் உல்லாசமாக இருக்கும் பொழுது நம்மை அறியாமல் ஒவ்வொருவரது வீர தீர பராக்கிமங்களைச் சொல்லுகின்றார்கள் என்பதற்காக சுயம் இழந்து விட வேண்டாம்.இதுவும் உளவு பார்க்க ,பார்க்கப்பட நல்ல சந்தர்ப்பம்.

4.சில கில்லாடிகள் நம்மை இப்படி உளவு பார்க்கின்றார்கள் என்பதைத் தெரிந்து உண்மையை மறைத்து பொய்யை உலவ விடுவார்கள் . இவர்களை உளவு பார்க்க மூன்றாம் படி நிலையில் அதாவது இலக்கின் நெருக்கத்திற்கு ,நெருக்கம் என்னும் படி நிலையில் வைத்து உளவு பார்க்கலாம்.

இந்த உலகில் யாரும் உளவு பார்க்காமல் இல்லை ,உளவு பார்க்கப்படாமலும் இல்லை என்பதை உணருங்கள் ,வாழ்வில் வெற்றி அடையுங்கள்.

Friday, January 10, 2014

தோல்வியை தாங்குவது எப்படி?

தோல்வியை தாங்குவது எப்படி?

வெற்றியெனும் ஆல மரத்துக்கு - விதையாவது தோல்வியின் அனுபவங்களே
    
மரணத்துக்கு பிறகும் வாழ்வு உண்டா என்பது நமக்கு தெரியாது ஆனால் நிச்சயம் தோல்விக்கு பிறகும் வாழ்வு உண்டு என்பதில் எவருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.
    
வாழ்வு என்பது ஒரு எண்ணெய் தடவிய வழக்கு மரம் சாண் ஏறினால் முழம் சருக்குகிறது.வாழ்வு என்பது ஒரு சுழலும் சக்கரம் எந்த இடத்தில் புறப்பட்டதோ திரும்ப அங்கு வந்து நிற்கிறது.
      
ஆனால் முயன்றவருக்கு வாழ்வு என்பது ஒரு பரமபத விளையாட்டு ஒவ்வொரு காலடியிலும் ஒரு சிறிய அல்லது ஒரு பெரிய பாம்பு கொத்துகிறது.
     
அஞ்சாமல் அடுத்த அடி எடுத்து வைத்தால் அங்கே ஒரு சிறிய அல்லது ஒரு பெரிய ஏணி அதிட்ட தேவதையாக நமக்காக காத்திருக்கிறது.எத்தனை அற்புதமான விளையாட்டு இந்த வாழ்க்கை சுவையான திருப்பங்கள் சோகமான வீழ்ச்சிகள் சுழன்றடிக்கும் காற்று.
    
வெற்றி திருமகள் ஒரு மோசமான விலைமகள் யாரிடமும் நிரந்தரமாக நிலைப்பதில்லை நிற்பதில்லை அடிக்கடி மாலை மாற்றி கொள்கிறாள் ஆளை மாற்றி கொள்கிறாள்.
    
இல்லாத மேடையொன்றில் எழுதாத நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம் நாம் எல்லோரும் நாமே பார்க்கின்றோம்.
    
இந்த நாடகத்திற்கு கதை வசனம் எழுதி தானே இயக்குபவன் இறைவன் அவன் சுயவிருப்பத்திற்காக காரணமே இன்றி காட்சியை மாற்றுவான்.
    
நாடகம் சுவையாக இருக்க வேண்டுமானால் கதாபாத்திரங்களையும் தன் விருப்படி மாற்றுவான் கொன்று கூட விடுவான்.
    
இவையேல்லாம் பல கவிஞர் அறிஞர்  சொன்ன கற்பனைகள் மட்டுமல்ல ஆழமாக அர்த்தமுள்ளதாக நாம் தோல்வியை தாங்கும் மனவலிமை பெறுவதற்காக ஊட்ட பட்ட ஊக்க சத்துக்கள் ஊட்ட மருந்துகள்.ஆனால் சிலருக்கு தூக்க மாத்திரைகளாக போகிறது.
     
விதி என்றோ வினை என்றோ போதித்தது தாங்குவதற்காகத்தானே  தவிர, தூங்குவதற்காக அல்ல  

கடந்தது நதி நடந்தது விதி இறந்தது பினி இனி நடப்பதை நினை எழுந்து நில் தொடர்ந்து செல்
  
ஆண்டாண்டு அழுதாழும் மாண்டவர் வருவதில்லை ஆற்றிலே போன நீர் திரும்புவதில்லை
      
புதுமழை வரும் புது நீர் வரும் புது உயிர்கள் பிறக்கும் புது வாழ்வு மலரும் புதிது புதிதாக தொடர் தொடராக வாழ்வு நீண்ட தொலை காட்சி தொடராக தொடரத்தானே போகிறது.
     
உடல்தானேமுற்றுகிறது அது ஒரு சிறுகதை  உலகம் என்றும் முற்றுவதில்லை முடிவதில்லை அது ஒரு முடியாத முழ நீள தொடர்கதை தொடரும் தொடர்ந்து கொண்டே இருக்கும் கருவறை தொடங்கி கல்லறை வரை எத்தனை எத்தனை இழப்புகள்  நாம் அடைந்த கணக்கை விட இழந்த கணக்கு அதிகம்.

    வெற்றி இழப்பு,
    பொருள் இழப்பு,
    பணம்  இழப்பு,
    மானம் இழப்பு,
    உறுப்பு இழப்பு,
    உயிர்  இழப்பு,
      
இழப்புகளுக்கு கணக்கேயில்லே தோல்விகளுக்கு முடிவேயில்லை.
      
ஆனால் நீ எதை இழந்தாய் நீ எதையாவது கொன்டு வந்தாயோ?இங்கிருந்து தானே எடுத்து கொண்டாய் ஆசை பட்டாய் அனுபவித்தாய் விட்டு விட்டு கிளம்ப வேண்டியதுதானே என்று கேட்கிறானே நியாயம்தானே.
        
சொல்வது சுலபம் வயிற்றுவலி நமக்கென்று வரும் போது சிரிப்பது கடினம் ஆனால் உடற் பயிற்சி போல இது மன பயிற்சி செங்கல்லில் அடித்து அடித்து கையை பலப்படுத்துவது போல சுயமாக தானே சொல்லிக் கொன்டு வந்தால் தன்னை தானே தயார் படுத்தி வைத்து கொண்டால் துயரம் கொஞ்சம் குறையும் இதுவே மனதை வலுபடுத்தும் பயிற்சி
         
தோல்வியை தாங்குவது என்பது வேறு அதை ஏற்று கொள்வது என்பது வேறு. விரக்தியை தாங்கும்   மனபக்குவம் வேண்டும் இது ஒரு நீர் அணைக்கட்டு போல பலரது கொள்கலன் சில அடி மட்டம் ஆனால் சிலரது தாங்கும் கொள்கலன் பல நூறு அடி உயரம் இதையே கொள்கிறன் தாங்கும் சக்தி என்கிறோம்

நமது சகிப்பு திறனும் விரக்தி குறைவும் நமது மனதினுடைய பலத்தை வலுப்படுத்துகிறது  ஆனால் சிலர் சுலபமாக தோல்வியை இயல்பாக ஏற்று கொள்கிறார்கள் நான் தோற்கத்தானே பிறந்தேன் என்று வேதனையாக விட்டு விடுவார்கள் இது தோல்வியை தாக்குவதல்ல.சாண் போனாலன்ன முழம் போனாலன்ன என்ற விரக்தி சோகம் இதில் எந்த பயனுமில்லை
     
அதே போல் தோல்விக்கு தயாராக இருப்பது என்பது வேறு தோல்விக்கு அச்சபடுவது என்பது வேறு
   
தயார் நிலை என்பது தீப்பிடித்தால் அணைப்பதற்கு எச்சரிக்கையாக இருப்பது போல எதிர் மறையாக நிச்சயம் நான் தோற்று விடுவேன் என விரக்தியாக பேசுவது ஒடுகிற நீரில் தானே குதித்து தற்கொலை செய்வதற்கு ஒப்பாகும்
      
எனவே நிச்சயம் வெல்வோம் ஒருவேளை தோற்றுவிட்டால் அது ஒரு வருத்தமில்லை மீண்டும் முனைப்பும் போராடி வெல்வோம் இது போன்ற எண்ண ஒட்டங்கள்தேவை. சிறு வயதிலே இருந்து இந்த பயிற்சியும் முயற்சியும் நமது இயல்பான சுபாவமாக அமைந்து விடுவது மிக சிறப்பானது.    
தோல்வி மனப்பான்மையும்,தன்னை தானே தோற்கடித்து கொள்வதும் ,எதிர்மறையான சிந்தனைகளும்,தோல்வி பற்றிய அச்சமும் தோல்விக்கு பிறகு அவமான உணர்வும்மனசோர்வும்,தாழ்வுமனபான்மையும் தன்னம்பிக்கை குறைவும்,தற்கொலை முயல்வும் போன்ற பல மன நல பாதிப்புகள் ஆபத்தானவை.
       
ஒருவரது திறமையையும்,செயல் திறனையும் முடக்க கூடியது.கல்வி,வேலை, நட்புறவு,உடலுறவு போன்ற பல அத்யாவசய தினசரி நடவடிக்கைகளையும் பாதிக்ககூடியது.
     
எனவே தோல்வி என்பதும் இழப்பு என்பதும் தவிர்க்க முடியாதது ஆனால் தாங்க கூடியது என்பது தெளிவாக உணரப்பட வேண்டும்.
      
அதே போல் தோல்வியும்,இழப்பும் நிலையானதும் நிரந்தரமானதும் அல்ல அது ஒரு சுழற்சி மீண்டும் லாபமும் வெற்றியும் உறவும் அன்பும்,பதவியும்,பொருளும் ஏதாவதொரு மாற்று வழியாக நாம் வெல்வோம் என்ற நம்பிக்கையும் முயற்சியும் தொடர வேண்டும்.
      
உலக இயல்பும்,வரலாறுகளும்,ஆழ்ந்த சுய அனுபவங்களும் பெற்றவரதுஆலோசனைகளும் அறிவுரைகளும் வாழ்வின் நுட்பமான நுணுக்கமான செய்திகளை நமக்கு உணர்த்துகின்றன.
      
ஆனால் பெரும்பாலோனோர்களுக்கு வெளுத்ததெல்லாம் பால் போல ஒரு வெகுளித்தனமான அறியாமை தொடர்கிறது.தோல்வி என்பதையே இயற்கைக்கு புறம்பானது என்பது போல‌ எண்ணத்தில் இருப்பார்கள்.தான் இது வரை தோற்றதில்லை என இருமாந்திருப்பார்கள் தோல்வியை தாங்க மாட்டேன் என்று சொல்லி தனக்கு தானே இறுக்கமான வலை பின்னி கொள்வார்கள்.
              
நாம் ஒரு செய்தியை நுனுக்கமாக புரிந்து கொள்ள வேண்டும் இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் உலகம் பல ஆயிரம் விதமான நுட்பமான திறமைகளை எதிர்பார்க்கிறது எல்லா திறன்களும் எல்லா
மனிதரிடமும் இருக்க வாய்ப்பில்லை.
              
உதாரணமாக உலோகங்கள் மற்றும் அதன் கலவைகளிடம் நாம் பல இயல்பியல் குணங்களை எதிர்பார்க்கிறோம் சில குணங்கள் சில உபயோகங்கள் உள்ளது ஆனால் அதுவே சில இடங்களுக்கு உபயோகமில்லாது போய் விடுகிறது உதாரணமாக வன்மையான இரும்பும்மென்மையான தங்கமும் வெவ்வேறு விதமான குணாதிசயங்களை உடையவை அவற்றின் உபயோகத்துக்கு தகுந்த மாதிரியும் புகழும் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. இதே மாதிரியாக மனிதன் பழக்கப்படுத்தும் விலங்குகளும் அமைகின்றது.பூனையும் ஆனையும் அதன் புகழும் விலையும் குணத்துக்கு தகுந்த மாதிரி அமைகிறது.
                  
இது இயல்பான மனித சமுதாய அமைப்பிலும் காணப்படுகிறது உடல் உழைபாளிகளை விட அறிவு ஜீவிகள் புகழும் பணமும் அடைகிறார்கள் ஆனால் இயற்கையின் படைப்பை நாம் குறை கூற முடியாது.                             

உடலின் ஒவ்வொரு அங்கமும் போல யாவரும் அத்யாவசயமானவர்கள்.இதயக் குழாயாகட்டும் மலக்குடலாகட்டும் இரண்டுமே முக்யமானவை புகழும் இக‌ழும் தற்கலிகமானவை.
                    
தோல் மருத்துவரை விட இதய மருத்துவர் புகழடைவது இயல்பு ஆனால் எவரும் தாழ்ந்தவரில்லை.
         
தெரு கூட்டுபவர் முதல் தேசிய கொடி நாட்டுபவர் வரை கொள்கையளவில் சமமே ஆனால் புகழிலும் பொருளிலும் சிலர் உயர்வடைவது உலக இயல்பு.மெல்ல மெல்ல இந்த இடைவெளி குறைந்து சமதர்ம சமுதாயம் மலரும். எனவே வெற்றி தோல்வி என்பது நம்மை தாண்டி பல நூறு நுட்பமான பிண்ணனி உண்டு என உணர வேண்டும்.அதை பயின்று மென்மேலும் உயர முயல வேண்டும்.தன்னைத்தானே நொந்து கொள்வது தவறு.அதற்காக இல்லாத ஒரு காரணத்தை சொல்லி தன்னை ஏமாற்றி கொள்வதும் தவறு.
                 
நமது தெளிவான சிந்தனைகளால் எதிர்பாராத ஏமாற்றத்திற்கும் தயாராக வேண்டும் எமாற்றத்தை ஏற்று எதிர்த்துபோராடவும் தயாராக வேண்டும்.
                
தோல்விக்கு பின் தோல்வி மனப்பான்மை தாழ்வு மனப்பான்மை துயரம் சோர்வு தளர்வு விரக்தி சுய பச்சாதாபம் குற்ற உண்ர்வு தன்னம்பிக்கை குறைவு ஏற்படுவது இயல்பு உடல் காயத்தை விட மனக்காயத்தின் வலி அதிகம். ஆனால் வீரர்கள் தமது முயற்சியால் சுய பயிற்சியால் இரு விதமான காயங்களையும் தாங்கும் வலிமையை வளரித்து கொள்கிறார்கள்.

                              தோற்றவர் கூட வெல்லலாம்
                               துவண்டவர் என்றும் வெல்லமுடியாது
                               மாண்டவர் கூட மீளலாம்
                               சோர்ந்தவர் என்றும் எழ முடியாது
         
நாளை நமதே வெற்றி நமதே என்ற ஜெய ஜெய கோஷங்கள் உற்சாகமூட்டும் பானங்கள்.  தன்னம்பிக்கையுள்ள தலைவர்கள் ஊக்க மருந்துகள் ஊக்கமூட்டும் எழுத்துக்கள் பேச்சுக்கள்,கவிதைகள் காவ்யங்கள் யாவும் அற்புதமான மருந்துகள்.
             
பெற்றோர் உற்றோர் ஆசிரியர் நண்பர் யாவரும் ஊட்டும் நம்பிக்கை வார்த்தைகள் மனம் என்ற  மரம் செழித்து வளர போடப்படும் உரங்கள்.
           
மாறாக வதைகளும் வசைகளும் குறை கூறலும் குற்றம் சாட்டுதலும் இழிவுபடுத்தலும் அழிவு தரும் வழி முறைகளாகும் இந்த முறைகளை ஆசிரியர் பெற்றோர் உற்றார் அயலார் அனைவரும் கை விடுவது மிக ந்ல்லது.
        
எனவே தோல்வியை விட பிறரது விமர்சனங்களுக்கு வேதனைப்படுவதே ஆபத்தானது ஆகவே மற்றவர் யாவரும் எதிர்மறையான விமர்சனங்களை தவிர்த்து ஆக்கபூர்வமான மற்றும் ஊக்கமளிக்கும் உற்சாக வார்த்தைகளை கூறுவது நல்லது.
                              
வென்றவரை கை தட்டி பாராட்டுவோம் தோற்றவரை கை தூக்கி ஆற்றுபடுத்துவோம்.வென்றவரை தோள் தட்டி ஊக்கபடுத்துவோம் பிறகு தோற்றவரை தோள் நிமிர்த்த பாடுபடுவோம்.
               
எனவே தோல்வியை தாங்கும் மனபக்குவம் மிக அவசியம் மேலும் பிறரது தவறான விமர்சனங்களை மறப்பதும் மிக மிக அவசியம்.
           
இறந்த பின் post martum செய்வது போல தோல்விக்கு பின் தெளிவான சுய ஆலோசனை சுய பரிசோதனை செய்வது அவசியம்.
                
நடு நிலையான ஆராய்வில் ந‌மது மீது குறைகள் தவறுகள் இருந்தால் முழுமனதோடு ஏற்று கொண்டு அதை மாற்ற முயல்வோம். அல்லது நம்மை மீறிய இடம்,காலம், நேரம்,சூழல்,அதிட்டம்,போன்றவை காரணமாக இருந்தால் மீண்டும் முழு உத்வேகத்துடன் மறு முயற்சி செய்வோம்.
    
பல நேரங்களில் நமக்கு நம்பிக்கையான ந்ண்பர் உறவினர் கற்றோர் மற்றோரிடம் ஆலோசனை கேட்பது தவறோ,பலவீனமோ அல்ல. நமக்கு புலப்படாத ஒரு பெரிய விஷயம் அவர்களுக்கு தெரியலாம்.
           
தேவையானால்அடிப்படையானநல்லகுணங்களையோ,கொள்கைகளையோ மாற்றாமல் சில புதிய பாதைகளில் புதிய அணுகு முறைகளில் முயற்ச்சித்தால் மீண்டும் வெற்றி பெறலாம்.

Thursday, January 9, 2014

சமயோசித அறிவை வளர்ப்போம்.

சமயோசித அறிவை வளர்ப்போம்.

1.ஒரு மனிதன் பேசுகின்றான் என்றால் சதையினால் உருவாக்கப்பட்ட அவனது நாவினால் அல்ல .சமயோசிதம் என்றால்  தகுந்த சமயத்தில் நாம் இருக்கும் நிகழ்கால சூழ்நிலையில் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் அந்த சூழ்நிலையை படைப்பாற்றல் மிக்கதாக ஆக்குவது.அதே சமயத்தில் நாம் எந்த சூழ்நிலையில் இருக்கின்றோம் என்பதைக்கூடவும் நமது சுற்றுப்புறத்தை மறந்தும் இருத்தல் ஆனது சூழ்நிலையில் இருந்து விலகி இருப்பது ஆகும்.

2.தனது பக்கம் எல்லாவற்றையும் கவர்ந்திழுப்பது சம்யோசிதத்தின் அடிப்படை. ஒரு சூழ்நிலையை அழகுபடுத்துவது என்பது அந்த சூழ்நிலையில் இருப்பவர்கள் எந்த அளவிற்கு அந்த சூழ்நிலையுடன் ஒன்றி இருக்கின்றார்கள் என்பதைப் பொறுத்தது.சில நபர்கள்  தன்னுடன் ஒத்த   சூழ்நிலையில் இருந்து விலகி இருப்பவர்களையும் தனது சமயோசித புத்தியினால் சூழ்நிலைக்குள் கொண்டு வரும் திறமையினைப் பெற்றிருப்பார்கள்.இந்தத் திறமை இயல்பாகச் சிலருக்கு அமைந்திருக்கும் ,சிலர் தங்களது சுய முயற்சியின் மூலமாக இதனை வளர்த்து இருப்பார்கள்.

3.இப்படிப்பட்ட தனித்திறமையை நாம் உணர்ந்து வளர்க்க வேன்டும் .நாங்கள் சிறு வயதினராக இருக்கும் போது கிராமத்திற்கு விடுமுறையில் செல்வோம் அப்போது எனது தாத்தா டே பேராண்டி இங்க வா நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல் என்று "உங்க வீட்டுச் சேவல் என் வீட்டில முடையிட்டா அது யாருக்குச் சொந்தம் "என்று கேட்பார் .அவரது கேள்வியில் இருக்கும் சூட்சுமத்தை எல்லாம் புரிந்து கொள்ளும் வயதில்லை, நாம் அதனை கோழி தானே முட்டையிடும் என்றுப் பகுத்துப் பார்க்கவெல்லாம் முடியவில்லை ,யாருக்கு உரிமை என்பதிலேயே மனது இருக்கும்.

4.இப்படித்தான் பல கேல்விகளும் மாட்டுக் கணக்குகளும் ,மாம்பழங்களைப் பிரிக்கும் கணக்குகளும் கேட்கப்படும் நமது முழித்தல் ரசிக்கப்படும்.சமயோசித புத்தி தான் வாழ்க்கயினை அனுபவிப்பதற்கு அடிப்படை என்பதனை மனிதர்கள் பன்னெடுங்காலமாக உணர்ந்து வந்திருக்கின்றார்கள்.அதனை மனதில் விதைக்கும் அடிப்படைக் காரணிகள் தான் இப்படிப்பட்ட கேள்விகள் என்பதைப் புரிந்து கொள்ள நமக்குப் பன்னெடுங்காலங்கள் ஆகின்றது அப்போது நாம் சமயோசிதத்தைப் பயன்படுத்தக்கூடிய நிலையில் இல்லாது, நமது அறிவு வளர்ச்சி  முதிர்ச்சியடைந்து விடுகின்றது.

5.ஆனால் பெரிய தலைவர்கள் ,அறிஞர்கள்,அறிவியலார்கள்,சமூக சிந்தனையாளார்கள் தங்களது வாழ்நாளின் இறுதிவரைக்கும் இந்த சமயோசித புத்தியைத் தகுந்தபடி உபயோகம் செய்து வந்தார்கள்.இவர்களின் இப்படிப்பட்ட சமயோசித அறிவால் தனி நபர்களின் மன முடிச்சுகளும் சமூகத்தின் மன முடிச்சுகளும் விடுக்கப்படுகின்றன.சமயோசித அறிவு என்பதை  வேறு கோணத்தில் எதனையும் பார் என்னும் மனச்சிந்தனையை நாம் எல்லோரும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பொருள் கொள்ளலாம்.

6,இதனை மாற்றுச் சிந்தனை என்றுகூடச் சொல்லலாம்,இயற்கை தன்னை எப்போதும் ஒரே மாதிரியான நிலையில் வைத்திருக்க விரும்புவதில்லை.அதன் அடிச்சுவட்டில் வாழும் நம்மையும் தான் .மாறுதல்களை மட்டுமே மாறாமல் வைத்துத்  தன்னைப் புதுப் பொலிவுடன் எப்போதும் வைத்துக் கொண்டே இருக்கின்றது.இந்த சிந்தனை மனநிலையை நாம் கற்றுக் கொள்வதற்கு அடிப்படை கற்பனை தான் .

7.மனிதனின் கற்பனைக்குக் கட்டுப்பாடு விதிக்க அவனைத் தவிர வேறு யாருக்கும்  உரிமை  இல்லை.எதனை வேண்டுமானாலும்  எப்படி வேண்டுமானாலும் கற்பனை செய்வதற்கு மனிதனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.அவனது கற்பனைக்கு எல்லையோ வரையறையோ கிடையாது இது தான் கற்பனைக்கான எல்லையும் வரையறையும் ஆகும்.கற்பனையையே எப்படி கற்பனை செய்வது என்பதனைக் கற்போம் ,கற்பனையில் கற்பனையைப் பயன் படுத்துவோம்.

8.ஒரு சின்னக் கற்பனை பொதுவாக ஒரு வரியை நாம் படிக்கும் போது அதனைப் புரிந்து கொண்டு உணர்வாகவும் அதனை  வரியாகவும் மனதில் பதிப்போம்.மனதில் அந்த வரி எப்படிப் பதிக்கப்பட்டு வெளிக்கொணரப் படுகின்றது என்பதனைப் பார்த்தோம் என்றால் நாம் எப்படி ஒரு வரியை நேர்கோட்டில் உள்ளது போல் படித்தோமோ அதே போல் தான் வெளிக்கொணரப்படும் போதும் நம்மால் உணரப்படுகின்றது.

9.ஏன் இந்த வரியை முக்கோணமாக நம்மால் கற்பனை செய்ய முடியாதா?சதுரமாக அமைக்க முடியாதா ,வட்டமாகக் கற்பனை செய்து படிக்க முடியாதா?முடியும் .இதனால் என்ன பயன் ?மனித மனம்  தனக்கும் சமூகத்திற்கும் ஒரு செயலால் ஏற்படும் பயனை அளவிட்டுத்தான் எதனையும் மதிப்பிடுகின்றது.நமது வாழ்க்கையின் பல தருணங்களில் பலவிதமான பாடங்களையும் கொள்கைகளையும் வழிகாட்டுதலையும் நமது செயலின் நிமித்தமாகப் படித்து மனதில் பதிவு செய்து வைத்து தகுந்த தருணத்தில் அதனைப் பயன்படுத்த வேண்டியிருக்கின்றது

10.நாம் இந்த நேர் வரி  மன கற்பனையில் ஒரே விதமாகப் பாடங்களைப் பயிலும் போது மனதின் இயற்கை குணமான எதுவும் மாறிக்கொண்டே இருக்க வேண்டும் என்னும் விதியினைப் புறக்கணித்து நாம் ஒரே நிலையில் தொடர்ச்சியாக  ஒரு வரியை நேராகவேப்  படித்து பொருள் கொள்ளும் போது சலிப்பும் அதனைத் தகுந்த நேரத்தில் தகுந்தபடி பயன்படுத்தும் போது அது முழு ஆற்றலுடன் வெளிப்படுவதில்லை ஏன் எனில் அதில் தான் மாற்றத்திற்கான சிந்தனையே இல்லையே.

11.அதனால் எதனையும் படிக்கும் போது அந்த வாக்கியங்களைப் பல கோணங்களில் நாம் படித்து மனதில் பதித்து அதனை நமது முழு ஆற்றல் மையத்தில் இருந்து தகுந்த சமயத்தில் வெளிப்படுத்தலாமே.சமயோசிதம் என்பது நாம் இருக்கின்ற சூழ்நிலையில் நமது  கண்ணுக்குத் தெரிந்த மற்றவர்களின்  கண்ணுக்கும் சிந்தனைக்கும் தெரியாத சிந்தனைகளை ஒருங்கிணைத்து அந்த சூழ்நிலையின் மறுபக்கத்தை வேறு ஒரு கோணத்தில் மற்றவர்களை உணரச் செய்வது .

12.ஒரு மனிதன் பேசுகின்றான் சதைகளால் உருவாக்கப்பட்ட நாவினால் அல்ல ,ஒரு மனிதன் ஓவியம் தீட்டுகின்றான் அவன் கைகளால் அல்ல,மனதில் சிந்தனைகளின் தாக்கம் நம்மால் தாங்கமுடியாத போது அந்த சிந்தனையின் அடிப்படையில் செயலை  மட்டும் தான்  செய்ய வேண்டும்  இது தான் அந்தச்  செயலைச் செய்ய ஒரு நல்ல தருணம்.சாக்ரட்டீஸ் சொல்லுகின்றார் நான் யாருக்கும் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை ஆனால்  சிந்தனை செய்வதற்கு மட்டும் அவர்களைத் தயார் செய்கின்றேன்.

13.ஒரே ஒரு வாழ்க்கைக்குத்தான் பலவித அர்த்தங்களைப் பலரும் சொல்லுகின்றார்கள் எல்லாமும் சரியாகத்தான் இருக்கின்றது அதனைக் கடைப்பிடிக்காத வரைக்கும்.இந்த சமயோசித சிந்தனையை எப்படிக்  கடைப்பிடிப்பது  நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இந்தப் பதிவு உங்களுக்காக

இந்தப் பதிவு உங்களுக்காக

1.எப்படி சிந்தித்தாலும் மனதிற்குத் தெளிவு பிறக்க மறுக்கின்றது. சிந்தனை  ஒட்டத்தில்  மயக்க நிலை தோன்றுகின்றது.சிந்தனைகளையே  உணர்வுப்  பாதையாக்கி வேகத்தின் உச்சத்தைக்  குறிக்கும் மனோவேகத்திற்குள்   மனோவேகம் கூட்டி மனதிற்குள் பயணம் மேற்கொண்டு  ஏதாவது    ஒரு எண்ணத்தைப்  பிடித்து அப்படிப்   பிடித்த எண்ணத்தை வைத்து  அந்த எண்ணத்துடன் தொடர்பு உள்ள இன்னொரு எண்ணத்தைப் பிடித்து அதனைப்  புரிந்தும் புரியாமலும் எழுத்துக்களாக மாற்றி அதனைக்  கண்பார்வைக்குக் கொண்டு வருவதற்குள் பிரசவ வேதனையாகத்தான் இருக்கின்றது.

2.சிந்தனைகளின் தாக்கமும்  தனி நபர் நிலைநிறுத்தலுக்கான  வாழ்க்கையின் போராட்டமும்  இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதும் போது தினம் தினம் புதுப்புது போராட்ட நிகழ்வுகள்.அதன் ஊடே வந்து போகும் மனிதர்கள் தங்களை  நிலை நிறுத்திக் கொள்ளப்  போடும்  பல வேசங்கள் பல அவதாரங்கள்.எல்லோரும்  மற்றவர்களினூடே தான்  தங்களை   நிலை நிறுத்தப் பாடுபடுகின்றார்கள் ஏன் என்று தெரியாமலேயே.

3.எல்லா சமயங்களிலும் எல்லோரும் விரும்பும் வண்ணம் எல்லோராலும் நடக்க முடிவதில்லை.ஒருவரது துன்பத்தில் தான் மற்ரொருவருக்கு இன்பம் ஒரு மனிதனில்  தோன்றும் எண்ணத்தின்  இறப்பால்  தான் மற்றவருக்கு வாழ்வு .இயற்கையின் இந்த விளையாட்டுப்  புரிந்தும் புரியாமலும். யாருக்காக இந்த வாழ்வு ,யாருக்காக இந்த நாடகம் ,இயற்கையின் உண்மையான நோக்கம் தான் என்ன?என்ற மயக்கத்தின் வழியே  வாழ்க்கைப் பாதைகள் போதைகளோடு அதில் நமது பயணங்கள்  .

4.நோக்கம் எதுவும்  இல்லாமல் செயல்கள் எதுவும்  இல்லை,தத்துவங்கள் இல்லாமல் பொருட்கள் இல்லை . செயல்கள்  எதுவும் தானகவோ  தன்னிச்சையாகவோ  எந்த  ஒரு தூண்டுதலும் நோக்கமும் இல்லாமல் வனாந்தரமாக  நடை பெறுவதில்லை.  யாருடைய மன  உணவுக்காக  இந்த செயல் நாடகங்கள் .இதில் பலிகெடாக்களின் துயரமும் யாருக்காக ?மற்றவர்களின் மன உணவும் அதன் இறப்பும்  அதனை வெளிப்படுத்தும் நபர்களின் மூலமாகக் கிடையாது அவர்களுக்காகவும் கிடையாது.சூத்திரதாரி   யார் என்று  புரிந்தும் புரியாமலும் சூத்திரத்திற்குள்ளாகுபவன் மயக்கத்தோடும் கலக்கத்தோடும் ,சூத்திரமோ என்றும் நிலையாக மயக்கமும் கலக்கமும் இல்லாமல்.

5.எந்த நோக்கமும் இல்லாமல் எழுதப்பட்டது நோக்கம் இல்லாத நபர்களால் படிக்கப்பட்டால் தான் அதன் நோக்கமின்மை தெரிய வரும்.நோக்கமின்மையே தான் அதன் நோக்கமாக இருக்க முடியுமோ. மொழியாலும் மனதின்  சிந்தனையாலும் ஒவ்வொருவருக்கும்  தன்னை உணர்வதில் மயக்கமும் கலக்கமும் .மொழிக்கும்  அதன் வழியில்  தோன்றும்  சிந்தனைக்கும் மனிதர்களின்  விருப்பங்களை முழுவதும் நிறைவேற்ற  முழு  ஆற்றல் தான் இருக்கின்றதா? வாழ்க்கையின்   உயிர் வாழ்வு  நிலை நிறுத்தல்களுக்காக ஏற்படுத்தப்பட்ட தற்போதைய  இந்திரியங்களும் உறுப்புக்களும் நிலைநிறுத்தல்களுக்குப்  போதவில்லை.

6.இயல்பான இருப்புக்கான  தற்போதைய   சிந்தனை   விருப்புகளை அடைவதற்கு போதுமானதாக  இல்லாத  நிலையில் இவற்றை மறு உருவாக்கலுக்காக எங்கே  விண்ணப்பிப்பது  யாரிடம் சிந்தனை செய்து அடைவது ?.எங்கே  நாம்  விரும்பும்படியான  கூடுதல்  இந்திரியங்களின் இருப்பைக் காணுவது கண்டால் அதனை எப்படி  உடலில் பூணுவது.ஐம்பூதங்களால் தான் இந்திரியங்கள் ஐந்தா?அல்லது இந்திரியங்கள் ஐந்தால் தான் ஐம் பூதங்களா?

7.பொருளை உருவாக்குவதிலும் சேர்த்து வைப்பதிலும் தான் இன்பம் அது தான் வாழ்க்கை லட்சியம்  என்று சேர்த்துவைப்பதை மட்டும் இலக்காகக்   கொண்ட  சமூகத்தைக் காண்கின்ற போது பாவம் அதன் பழைய இல்லாமைகளுக்கான ஏக்கங்களும்  தற்போதைய  இருத்தலை நிலை நிறுத்துவதற்கான  கவலைகளும்  புலப்படாமல் இல்லை.தனது இருப்பையும் தனக்கு முன் உள்ள காற்று ,அகச்சிவப்பு ,புற ஊதா கதிர்கள் காந்தப்புலன்கள் ஆகியவற்றைப் பட்டவர்த்தமாக,கண்கள் வழியாக  உணரக் கூடிய  மூளையும் அதனை உணர்த்தக் கூடிய மொழியையும் யார் படைப்பது .

8.ஐம்பூதங்கள்  இருப்பில் இருப்பது  இயற்கையின்  இரவலில் தனக்கென்று சொந்த ஒரு உருவம் கூட இல்லாமல் எப்போதும் நிலையாகத் தனது தனித்தன்மையுடன் இல்லாமல் மற்றொன்றுடன் கூடி அவ்வப்போது வேறு வேறு உருவங்களும் தன்மைகளும் எடுத்தும்  கண்ணுக்குத் தெரிந்ததாகவும்  தெரியாததாகவும்  ,உணரக்கூடிய அளவில் உணரமுடியாமல்,மயக்கத்தோடும் மயக்கம் இல்லாமலும் ,கலக்கத்தோடும் கலக்கம் இல்லாமலும் .

9.இந்த உடம்பில் மேலும் ஒரு இந்திரியத்தைப் பூணுவதற்கு இடம்  இல்லாமலா இருக்கின்றது .இயற்கையின் படைத்தலுக்கான முழு ஆற்றலான மொழியை  யாரவது கற்றுக் கொடுக்க முடியுமா?.இயற்கை அன்னையே உனது காலம் என்னும் சிந்தனையை   உணர  என்ன  விதமான அறிவு தேவை ?நீயும் எங்களைப் போல் இருந்து உனது போராட்டத்திற்குப் பின்புதான் உமக்கு இயற்கை என்னும் பட்டம் வழங்கப்பட்டதா?இந்தப் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளத்தான் உமக்குள்  இத்தனை நாடகங்களுமா 

பழக்கங்களை சமாளிப்பது எப்படி?

பழக்கங்களை சமாளிப்பது எப்படி?
        
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் இது முதுமொழி.

எனவே நமது ஆரம்பகால பழக்கங்கள் புதிது புதிதாய் ஆழ்மனதில் தொடர்ந்து பதிந்து கொண்டே வருகிறது.
    
எதுவும் பழக்கமாகுவது கெடுதலா?
   
மனோதத்துவ முறையில் பழக்கம் என்பது மனதில் உருவாகும் ஒரு பதிவு.பெரும்பாலான நமது திறமைகள் பழக்கத்தின் ஆதாரத்திலேயே உருவாகின்றன.
   
அவற்றை இருவகைகளாக பிரித்து கொள்ளலாம் ஒன்று நல்ல பழக்கவழக்கங்கள்,மற்றது தீய பழக்க வழக்கங்கள்.முன்னது வளர பின்னது தேய அவனது வாழ்க்கையில் உயர்வும் நல்ல பல குண நலன்களையும் அடைகிறான்.
   
இரண்டிலும் மனபழக்கங்கள்,உடல் பழக்கங்கள் என இரண்டு வகை உண்டு.
  
நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் உணவு,உடை, நடை,உறக்கம்,உணர்வுகள்,பொழுதுபோக்கு என்ற பல நூறு செயல்களிலும் நமது மாறாத பழக்க வழக்கங்களை காணலாம்.
   
மேலோட்டமாக மாறாதது போல தோன்றினாலும் சில ஆண்டுகள் பிண்ணோக்கி பார்த்து ஒப்பிட்டால் நாம் நிறையவே மாறியிருப்பது தெரிகிறது.
  
ஆனால் சிலர் பெரிய அளவில் மாறாமலிருப்பது புரிகிறது. நன்மையான பழக்கங்கள் உடையவர் மாறாதிருத்தல் நல்லது.தீய பழக்கங்கள் உள்ளவர் திருந்தாமலிருந்தால் தீயது.
   
இயல்பாகவே நல்ல பழக்கங்களை தொடர்வது கடினமானது அவை நீர் மேல் எழுத்துக்களை போல நிரந்தமற்றவை.தீய பழக்கங்களை விடுவது அதைவிட கடினம்,அவை நம் உடன் பிறந்த உறுப்புகளை போல் ஒட்டி கொள்கின்றன வெட்ட வெட்ட துளிர்க்கும் நகம்,முடி போல குறையாமல் வளர்கின்றன.
   
தெளிந்த அறிவால்,தீவிர முயர்சியால்,உறுதியான தீர்மானங்களால் நல்ல பழக்கங்களை கற்கவும்,தீமை பழக்கங்களை விடவும் ஒவ்வொரு புதிய நாளும் வாக்குறுதி தரப்படும்.

பழக்கத்தினால் என்ன பயன்?
    
நாம் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் சாலையோடு அதை ஒப்பிடலாம். நமது நரம்பியல் மண்டலத்தின் வரைப்படத்தை பார்த்தால் டெல்லி  மாநகரத்தின் சாலைகளின் வரைபடம் போலத்தான் இருக்கும்.கை தேர்ந்த அனுபவமுள்ள ஓட்டுனர் ஒருவன் அந்த மாநகரத்திலும் சுலபமாக வாகனம் ஒட்ட பழகி விடுவார்.அது போலத்தான் நமது வாழ்வின் பழக்க வழக்கங்க்ளும்.
   முன்பு நாம் கண்டது போல ஒரு செயலின் கொள்கை குறிக்கோள் எனப்து இன்பம் என்ற எல்லையை தேடுவது அல்லது வலி,துன்பம் என்ற எல்லையை தேடுவது தவிர்த்து ஓடுவது ஒரு சாலையின் இடது பக்கம் இன்பம் அதன் வலது பக்கம் துன்பம். நமது வாழ்வு என்ற வாகனம் தினம் வழக்கி கொண்டு துன்பக்கரையை நோக்கி ஓடும்.அதை மீண்டும் திசை திருப்பி இன்பத்துக்கான ஓரத்திலே ஓட்ட முயல்கிறோம்.வாழ்வின் சவால்களை சந்திக்க சமாளிக்க நாம் படும் பிரயத்தளங்களை முயற்சிகளை இவ்வாறு பெயரிட்டார்கள்.
   
வாழ்வு என்பதை ஒரு எலியின் வாழும் வளை என்பார்கள்.ஒரு திறந்த தப்பிக்கும் பாதையை கண்டுபிடிக்க அது பல அடைப்பட்ட வழிகளில் போய் திரும்பி திரும்பி தடுமாறுகிறது.அது போலவே நாம் துன்பக்கரைபக்கம் போகாமல் இன்பக்கரை பக்கம் வருவதற்காக பல நூறு சமாளிப்பு வேலைகள் செய்கிறோம்.இது சில நேரங்களில் நன்மையாக முடிகிறது.அதை ஆஆஆஆஆஅ என்றார்கள்.ஆனால் பல நேரங்கலில் தீம்கையாக முடிகிறது அதிகமாக வழக்கி துன்பக் கடலில் போய் மூழ்கிறோம் இதை ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்றார்கள்.

மனம் என்பது பரிணாம வளர்ச்சியில் முதலில் சில பழக்கங்களை முயற்சி செய்து பார்த்தது இயற்கையாக உணவு,உறவு,உறக்கம் என்ற மூன்றும் இன்பம் தந்தன.
   
ஆனால் இன்றும் இதை அளவுக்கதிகமாக உபயோகித்து அழிபவர் அதிகம்.வாழ்வதற்காகவே சாப்பிடுகிறோம்.ஆனால் பலர் சாப்பிடவே வாழப் பிறந்தவர் போல சாப்பிட்டுக் கொண்டே சாகிறார்கள்.மனச் சோர்வில் பலருக்கு அதீத உணவு இன்பம் தருகிறது.கவலைகளை மறக்க,மயக்க மருந்தாக போதையாக அதீத உணவு,அதிக உறவு,அதிக உறக்கம் அவர்களுக்கு வடிகாலாகிறது.
   
விளைவு உடல் பருத்து தீவிர நோயாளியாகிறார் அது போலவே துன்பம் தவிர்க்க உடலுறவு இன்பத்தை நாடி அடிமையாகிறார்.தீராத காமம்,திருமண முன் உறவு,திருமணம் தாண்டிய உறவு,பிறரது மணைவிகள் தொடர்பு விலைமகளிர் தொடர்பு,பாலியல் வக்ரங்கள் பல வற்றில் அடிமையாகிறார் உடல் நோய் மன நோய் மற்றும் சமூகத்தால் புறக்கணிக்கபடவும் வாழ்வின் பாதை திசை மாறவும் இவரது உடலுறவு பழக்கங்கள் காரணமாகிறது.பாதிக்கப்படுவது பெண்கள் என்றால் தீமைகளின் விளைவுகள் மிக தீவிரமானது இயல்பான காமமே அளவு மீறி நோயாக தொடங்குவது வாலிப பருவம்தான்.
  
அதற்கடுத்தது உறக்கம் பலருக்கு தப்பிக்க தெரிந்த ஒரே வழி உறங்குவது.தூங்கியே வாழ்வின் தோற்றவர்கள் ஏராளம் இந்த மூன்றையும் அளவோடு உபயோகித்தால் நிச்சயம் நல்ல இன்பம் தரும்.ஒரு நாளில் மூன்றில் ஒருபங்கு உறக்கம் ஒரு நாளுக்கு மூன்று முறை உணவு மூன்று நாளுக்கு ஒரு முறைஒரே பெண் உறவு இவை முறையாக அளவிடப்பட்ட இன்பங்கள்.எல்லை தாண்டியவர் கண்டதெல்லாம் துன்பமே.   இன்னும் கொஞ்சம் மனிதன் பணம் பொருள் உறைவிடம் பாதுகாப்பு எனப்து வசதிகள் வளர்ந்ததும் மனதை சாந்தபடுத்த இசை, நாடகம்,கலைகள்,விளையாட்டு என்ற பொழுதுபோக்கு அம்சங்களை வளர்த்தான்.
  
இவை ஆரம்ப காலங்களில் நிச்சயமாக மனதுக்கு நலத்தையும் வளத்தையும் கொடுத்தன.ஆனால் காமம்,வியாபாரம்,போட்டி,பொறாமை,சூது என்ற நஞ்சு கலந்ததும் இவற்றில் பல பழக்கங்களும் தீமையாகி விட்டன.முக்யமாக விளையாட்டு பொழுது போக்காக தொடங்கிய சூதாட்டம்,சீட்டாட்டம்,லாட்டரி போன்றவை அதிக துன்பம் தரும் பழக்கங்களாக மாறின இசை, நாடகம்,கலைகள் எல்லாம் சினிமா என்ற பெரிய திரை மற்றும் சின்ன திரை மறைவில்  மனிதனை அடிமையாக்கி அவனது அமைதியை கெடுத்தன.
  
இலக்கியங்களும்,புத்தங்களும் காம கோபம் குரோதம் வன்முறை பழிவாங்கும் உணர்வுகளை தூண்டும்வசிய முறைகளாகியப் போனதால் அதில் அடிமையானவர்களும் துயர்களையே சந்தித்தார்கள்.
  
இறுதியாக ஆண்மீகம் புதிய ஒளியுடன் வந்து மனித மனங்களுக்கு ஆறுதளிக்க வந்தது.மத போட்டிகளும் மத குருமார்களது தந்திரங்களும் இறுதியில் உபயோகமில்லாத சடங்குகளுக்கும்,மூட நம்பிக்கைகளுக்கும்  மக்களை அடிமையாக்கிவிட்டது.     
   
உண்டு பார்த்தான் உறங்கிபார்த்தான் கண்டவர் யாரோடும் உறவு கொண்டு பார்த்தான் கூத்தாட்டம் கொண்டாட்டம்,சூதாட்டம்,சீட்டாட்டம் எல்லாம் முயன்று பார்த்தான்.புத்தகங்கள்,பெரிய திரை,சின்னதிரை அத்தனைக்குள் சென்று பார்த்தான்.ஆன்மீகம்,மந்திரம்,தந்திரம் எந்திரம்,ஆருடம்,சாதகம் அத்தனையும் மூழ்கிபார்த்தான் எத்தனை சமாளிக்க முயற்சிகள் ஆனால் பலருக்கும் திருப்தியடையவில்லை இஎத பழக்கங்களால்.
   
ஆராய்ச்சி செய்த மனிதன் எதற்கு தலையை சுற்றி மூகை தொட வேண்டும். நேரடியாக தொட்டால் என்ன என்று சிந்தித்தான் இன்பம் தரும் மூளை நரம்பு மண்டலத்தையே நேரடியாக இயக்கி பார்க்க ஆராய்ச்சி பல செய்தான்.காப்பி,தேநீர்,புகை,கஞ்சா எல்லாம் பயரி செய்து பழகி ருசித்தார்கள்.சோம பானங்கள் மதுரசங்கள் வடித்து மகிழ்ந்தார்கள்.
   
இப்படி மூளையை பொம்மலாட்டாம் ஆடும் பொம்மை போல ஆட்டி வைத்தார்கள்.திட திரவு வாயு  பொருள் என பல் நூறு வகை மருந்துகளை கண்டு பிடித்தனர் இந்த போதை விஞ்ஞானிகள் இந்து துயர குகைக்குள்ளே மாண்டவர்கள் கோடி கோடி.
   
இன்றும் போதையின் பட்டியல்கள் நீண்டு கொண்டே போகின்றன.அதிர்ஷ்ட வசமாக பெண்கள் இனம் இந்த சீரழிவுகளில் அதிகமாக சிக்கி கொள்ளாமல் தப்பித்து வருகிறது,ஆனால் அதுவும் இந்த நூற்றாண்டு எல்லை வரை தாக்கு பிடிக்காது என்று தோன்றுகிறது நாளுக்கு நான் நாட்டுக்கு நாடு பெண்களும் போதை பழக்கங்களுக்கு மேலும் மேலும் அடிமையாகி வருகிறார்கள்.
   
15 வயது முதல் 40 வயது வரை உள்ள மிக முக்யமான வாழ்வின் 30 வருடங்களில் பலர் இந்த போதையால் பாதை மாறிப் போகிறார்.
   
மிருகத்திலிருந்து சமூக மிருமாகி,மனிதனாகி சமூக மனிதனாகி புனிதனாகி மாமனிதானாகும் பரிணாம  வளர்ச்சியின் பல திட்டங்களுக்கும் கொள்கைகளுக்கும் இது போன்று தீமையான பழக்கங்கள் இடையூறாக இருக்கிறது.
   
நல்ல பழக்கங்கள் நாளும் குறைவதும் தீய பழக்கங்கள் தினம் தோறும் வளர்வதும் தெளிவாக தெரிகிறது.தனிமனிதன் மிது குடும்ப,சமுதாய,தேசிய,கலாசார கட்டுபாடுகள் தளர்ந்து தனிமனித சுதந்திரம் அதி வேகமாக வளர்கிறது.இது ஒரு வகையில் மிகவும் நன்மை தரும் தனிமனித சிந்தனையும் செயலும் விரிவடைந்து வளர மிக உபயாகமாகிறது நல்லவர்கள் மிகமிக வல்லவர்களாக மாறுவதற்காக இது பயன்படுகிறது.
         
ஆனால் கட்டவிழ்த்து விடப்பட்ட மனிதன் கால் போன போக்கில் கெட்டுவிட வாய்ப்பானது.எதுவும் தவறில்லை எவருக்கும் அடிமையில்லை என்ற தனிமனித தத்துவம் பல விதமான தீய பழக்கங்களை ஆராய்ச்சி செய்கிறது அதிலே அடிமையாகிறது.கொஞ்ச கொஞ்சமாக பெற்றோர்,ஆசிரியர்,அயலார் என்ற கண்காணிப்பு தளர்கிறது.அதிகாரிகள்,அரசினர் தனிமனிதனை பற்றி என்களுக்கு ஆர்வமில்லை அக்கறையில்லை அடுத்தவர்க்கு தொல்லை கொடுகாதவரை அவனைப்பறி எங்களுக்கு நினைவுமில்லை   என்று விட்டு விட்டார்கள்.
        
பலருக்கு வாழ்வதற்காக கிடைத்த விடுதலை தாழ்வதற்கு பயன்படுகிறது  நெரடியாக மனதை மயக்கி மகிழ்விக்கின்றன போதை பழக்கங்கள் இதன் விளைவாக இன்பத்தின் கொள்கை துன்பத்திற்கு பாதையாகி விடுகிறது கண் விழித்து பார்க்கும் முன்பு வாழ்வு எனும் வாகனம் திரும்ப முடியாத ஆழாத்துக்குள் போய்விடுகிறது.
        
ஆனால் இது நன்று இது தீது என்று எல்லோருக்கும் தெரியுமே? பஞ்சமாபாதகங்களில் கள்ளும் காமமும் முதல் என்று மூடருக்கு கூட புரியுமே?பழக்கங்களை சமாளிப்பது எப்படி அதுதானெ புரியவில்லை அதைச் சொல்லுங்கள் என்கிறார் பலர் ஆனால் அவர் கேட்கும் போது தீயபழக்கங்களில் கழுத்து வரை மூழ்கி போய் கிடக்கிறார்.
      
எனவே இளைமயில் அது கூட தாமதம்தான் குழைந்தை பருவத்திலேயே நல்ல பழக்கங்கள் விதைக்கபட வேண்டும் தீய பழக்கங்கள் தடுக்கப்பட வேண்டும் ஆனால் இதை சொல்வது சுலபம் செய்வதுதான் கடினம்.
      
பல பெற்றோர்கள் தனது குழைந்தைகள் வயதுக்கு மீறிய கேவலமான தகாத வார்த்தைகளை பேசுகிறது பள்ளியில் போய் கற்று கொண்டது என புகார் செய்கிறார்கள் ஆனால் குழந்தையை கேட்டால் இது வீட்டிலிருந்துதானே கேட்டறிந்தேன் என்கிறது
     
உண்மையில் தொப்பியை கழற்றி எறிந்தால் குரங்கும்தொப்பியை தொப்பியை கழற்றி எரியும் என்பது தான் நமக்கு தெரியுமே,குழந்தைகளும் அப்படித்தானே நம்மிடம் உள்ள தீய பழக்கங்களை கழற்றி எறிந்தால் எதிர்கால சந்ததிக்கே அது தெரிய வராதே
        
நன்னடத்தை என்பது கற்பதுதானே நல்ல பழக்கவழக்க‌ங்கள் அப்பா,அம்மா ஆசிரியர்,அயலார்களின் அச்சடித்த பிரதி போலத்தானே அடுத்த தலைமுறை வளர்கிறது இவர்களது நடத்தைகள் முன் மாதியாக அமைந்து விட்டால் பாடமும் தேவையில்லை.
   
இளம்வயதிலேயே நல்ல பழக்கங்களின் நன்மைகளையும் தீயபழக்கங்களின் தீமைகளையும் மனதில் ஆழமாக பதிவு செய்ய வேண்டும்.இது நேரடியான போதனைகளாக இருக்க கூடாது மறைமுகமான சுவையான செய்திகள் பயிற்சிகள் வழியாக இவை செயல்பட வேண்டும்.ஜந்தில் வளையாதது அய்ம்பதில் வளையாது என்பார்கள்.

 தீமையான பழக்கங்களை பற்றிய விழிப்புணர்வு தொடர்ந்து கொடுக்கபட வேண்டும் புகைபழக்கம் உடல் நலத்துக்கு கெடுதி மதுபழக்கம் மன நலத்துக்கு கெடுதி என்று ஒப்புக்காக கடமைகள் எழுதி ஒட்டிவிட்டால் என் கடமை தீர்ந்தது என அரசு இருந்து விடக்கூடாது தீமை என விளம்பரபடுத்தும் வியாபாரிகளும் அரசும் அதை வியாபாரம் செய்வது ஏன்?
  
ஒரு கோலா பட்டியல் ஒரு துளி நஞ்சு என பதட்டபடும் அரசு முழு பாட்டிலும் நஞ்சான மதுவைப்பற்றி கவலைப்படாதது ஏன்
   
எனவே இந்த மாதிரியான கால கட்டத்தில் ஒரு தனி மனிதன் தன்னைத்தானே பாதுகாத்து கொள்ளவில்லை என்றால் வேறு வழியில்லை.யாரும் அவரைப் பற்றி கவலைப் பட போவதில்லை.தகுதியுள்ளதே வாழும் தகுதியற்றவை எல்லாம் சாகும் என்ற மிருகத்தனமான பரிணாம த‌த்துவம் முதலாளித்துவமாக நிலவுகிறது.
  
இன்று தனிமனித நடத்தை,ஒழுக்கம்,வலிமை அந்தஸ்து,பொருளாதாரம் பாதிக்கபட்டால் அவரது துணையும்,அவரது குழந்தைகளுமே அவரை புறக்கணிக்க த்யங்குவதில்லை இன்று தீய பழக்கங்களால் உடல் ந,மன நல பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பே சமூக பாதிப்புகள் நிறைய அவர் கெடும் போது யாரும் தடுப்பதில்லை அவர் கெட்ட பின்பு யாரும் கைகொடுப்பதில்லை.வெறுத்து ஒதுக்கப்பட்டு வீதிக்கு வரும் நிலை ஏற்படுகிறது.
  
வந்தபின் சமாளிப்பது கடினம் தீய பழக்கங்களை மன வாசலுக்குள் விடாமல் தடுத்து நிறுத்தவதே நல்லது.சுலபமானது அல்ல,ஆனாலும் உறுதியாக தடுப்பதே நல்லது.

Wednesday, January 8, 2014

பண்பினால் பண்பட்ட இதயம் எந்த வசையும் தாங்கும்

பண்பினால் பண்பட்ட இதயம் எந்த வசையும் தாங்கும்
                 
பக்குவம்

காமத்தை கடந்தவன் கர்ம வீரன்
சினத்தை வென்றவன் சிற‌ந்த வீரன்
நெருப்பினால் பதப்பட்ட இரும்பு எந்த எடையும் தாங்கும்
பண்பினால் பண்பட்ட இதயம் எந்த வசையும் தாங்கும்
கல்லும் மணியானது காலத்தாலே
சொல்லும் புகழானது ஞானத்தாலே

புல்லும் மருந்தானது குணத்தாலே
கல்லும் கடவுளானது நம்பிக்கையாலே
மாங்காய் கனிந்தால் புளிப்பு போய் இனிப்பு வரும்
மனமெனும் காய் கனிந்தால் சலிப்பு போய் சிரிப்பு வரும்
மூடிக் கிண்டிருந்தால் வாய்க்குள் ஈக்கள் வருவதில்லை
மூடிக் கொண்டிருக்கும் வாய்க்கு வம்புகள் வருவதில்லை
துணிவு உல்ளவர்கள் தான் மன்னிக்க முடியும்
மகிழ்வு உள்ளவர்களால் தான் மறக்க முடியும்
சலிப்புள்ள மனங்களுக்கு ஒரு போதும் சகிப்பு வருவதில்லை
மமதையுள்ள மனிதர்களுக்கு ஒரு போதும் மன்னிக்க தெரிவதில்லை
வெப்பமாக வெகுளும் மனிதர் வேதனை பெற்றெடுத்த பிள்ளைகள்
தெப்பமாக குளிரும் மாந்தர் தெய்வம் பெர்றுதந்த பிள்ளைகள்
மலை போல அறிவிருந்தாலும் ஒருதுளி பொறுமைக்கு ஈடாகாது
கடல்போல பண்பிருந்தாலும் சிறுதுளி அன்புக்கு அது ஈடாகாது

மனிதனைச் சுற்றி எல்லாம் மாறுகிறது

மனிதனைச் சுற்றி எல்லாம் மாறுகிறது

மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்

காலம் மாறுகிறது காட்சிகள் மாறுகிறது
அழகு மாறுகிறது அன்பு கூட மாறுகிறது
ஆட்சி மாறுகிறது அவலங்கள் கூட புதியஅவலமாக மாறுகிறது
உடை மாறுகிறது உணவு கூட மாறுகிறது,
உறவுகள் மாறுகிறது உண்மைகள் கூட மாறுகிற‌து
மதிப்பீடுகள் மாறுகிறது மரியாதையும் மதிப்பும் கூடவே மாறுகிறது
மனிதனைச் சுற்றி எல்லாம் மாறுகிறது
மனிதனுக்குள்ளும் அவன் அனுக்கள் எல்லாம் மாறுகிறது
மாறதது எதுவுமே இல்லை மாற்றத்தை தவிர
மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்
ஆனால் மனிதன் மட்டும் மாறவில்லை
அவன் மயக்கம் மட்டும் தீரவில்லை என்றான்
குணம் மாறுகிறான் கொள்கைகளும் மாறுகிறாள்
மனம் மாறுவதில்லை
குரங்கு போல எதையாவது பிடித்து கொண்டு
எல்லாமே பொய் என ஏங்குகிறான்
எதுவுமே  மாயை என புலம்புகிறான்
மாறுவதை அவன் புரிந்து கொள்வதுமில்லை
மாற்ற‌த்தை அவன் மனம் ஏற்றுக் கொள்வதுமில்லை
ஆசை,அச்சம்,பயம்
புதியதற்கு பயம்
பழையதை விடுவதற்கு பயம்
தனக்கு திறமையில்லையென பயம்
தன்னால் சமாளிக்க  முடியாதென பயம்
மாற்றத்தை அறிவால் விரும்புகிறான்
மாறுவதற்கு அச்சத்தால் பயப்படுகிறான்
பொம்மையைத்தர மறுக்கும் பேதைக் குழந்தையென‌
பழையதைக் கைவிட மயங்குகிறான்
இருப்பதை விட்டு விட்டால் இடறி விழவோமென அழகிறான்
மதீப்பீடுகளும் மாறுகின்றன் மனம் மட்டும்  மாற மறுக்கிறது
ஒரு முறை பூமி சுற்றுவதற்குள் ஒராயிரம் மாற்றங்கள்
தன்னைச் சுற்றி எல்லாமே மாறுவதைப் பார்த்து அஞ்சி நடுங்குகிறாள்
சாலைகள் மாறுகின்றன ஆலைகள் மாறுகின்றன
வீடுகள் மாறுகின்றன காடுகள் மாறுகின்றன
கல்வி மாறுகிறது கலவி கூட மாறுகிறது
பூமி சுழல்கிறது வேகம் தாங்காமல் மனிதன் தலை சுழல்கிறது
அச்சத்தில் ஆதாரமில்லாத மனம் மயங்குகிறது
அச்சம் பயம் குழப்பம்
தயக்கம் மயக்கம்
துக்கம் சோகம் தலை சுற்றுகிறது மனிததுக்கு
உலகத்தின் அசுர வேக வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாது,
காற்றிலாடும் இலைகளென இதயங்கள் நடுநடுங்குகின்றது.
பெருங்காற்றினிலேஏற்றி வைத்த தீபமென
கோழை மனங்கள் குளிர் சுரம் கான்கின்றன
மனிதா நீ மாறி விடு
மாறுகின்ற உலகத் தோடு நீயும் மாறிவிடு கரை ஏறி விடு
மனம் கலங்காதே, மதி மயங்காதே
மாறுவதைப் புரிந்து கொள் மயக்கம் தெளிந்து விடு என்றார்.

எனது வாழ்வே எனது செய்தி, என்றார் மகாத்மா

எனது வாழ்வே எனது செய்தி, என்றார் மகாத்மா

பக்குவம் பெற்ற மனிதன் மரணத்திலும் மரணமடைவதில்லை

பக்குவம் என்றால் என்ன?

வேகாத அரிசிக்கும் வெந்த சோறுக்கும் உள்ள வேறுபாடுதானே சீரணக்க முடியாத வாழ்வை எளிதில் சீரணித்து வாழம் கலைதானே பக்குவம் அது பரிபூரணமானால் அதை பரிபக்குவம் என்பார் முழமையானால் அது தொடரும்
அது  வாழம் இதை மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் வேறு வேறு வார்த்தைகளில் பேசுகிறது

தகுதியுள்ளவையே வாழம் முழமை பெற்றது தொடரும் குறையுள்ளது மறை தேயும் குற்றமுள்ளது அழிந்து போகும் உடலின் பரிணாம வளர்ச்சியை பேசுகிறது விஞ்ஞானம் உள்ளத்தின் பரிணாமத்தை உன்னத பரிபக்குவமென்கிறது மெய்ஞ்ஞானம் உள்ளம் முழமையடைவது பக்குவத்தால் அந்த பக்குவத்தால் பரிபூரணமனடந்து விடுகிறது அது மனிதத்தின் பரிணாம இலக்கான தெய்வ கல்யான குணங்களை நோக்கி பயனம் செய்து பரிபக்குவனடகிறது அந்த ஆழமான பதிவுகள் நிறைவான குணங்கள எழதப்படாத கோட்பாடுகளாக என்றெனறும் நிலைத்து நிற்கும் அதனால்தான் பரிபக்குவம் பெற்ற மனிதனுக்கு மரணம் வருகிறது ஆனால் முழமை பெற்ற அவன் மரணம் அடைவதில்லை அவன் தங்கியிருந்த உடல் மரணமடைகிறது அவன் வாழ்ந்திருந்த வாழ்வு மரணமடைவதில்லை அது வாழ்வாங்கு வாழ்கிறது எனது வாழ்வே எனது செய்தி,  என்றார் மகாத்மா அந்த செய்தியைச் சொல்லவே இறைவன் அவரை அனுப்பினார் அந்தச் செய்தி உலகில் வாழம் அந்த நீதி உலகம் உள்ள வரை வாழம் விஞ்ஞான பூர்வமாக பார்த்தாலும் உள்ள்த்தின் பரிபூரண பரிபக்குவமே முக்தி எனப்படும், தீர்வு எனப்படும், அதுவே பக்குவம் என்பது அது தானும் அமைதியாக வாழ்ந்து தன்னைச் சுற்றியுள்ளவரையும் அமைதியாக வாழ அனுமதிக்கும் அது பரிபக்குவ மனநிலை சலனமில்லாத சஞ்சலமில்லாத அமைதி அந்த நிலைக்கு நிச்சயம் மரணமில்லைதானே மாறுகின்ற மற்ற நிலைகளுக்கு மரணமுன்டு மாறாத அந்த பரிபூரண பரிபக்குவ நிலைக்கு மாற்றமில்லை அதற்கு மரணமுமில்லை அதை அடைய முயன்றவர் பலர் ஆனால்  அடைந்து வென்றவர் சிலரே வாழ்வென்பது  வெண்ணெய் தடவிய வழக்கு மரம் பரிபக்குவ நிலையில் ஏழ முயன்று வழக்கி விழந்தவர் பலர் சோதனைகளை கடந்து ஈர்ப்பு விசைகளைக் கடந்து வழக்கி விழாது வாழ்ந்து பக்குவமடைந்தவருக்கு மரணமில்லைதானே.

பண்பினால் பண்பட்ட இதயம் எந்த வசையும் தாங்கும்

பண்பினால் பண்பட்ட இதயம் எந்த வசையும் தாங்கும்
                   
பக்குவம்

காமத்தை கடந்தவன் கர்ம வீரன்
சினத்தை வென்றவன் சிற‌ந்த வீரன்
நெருப்பினால் பதப்பட்ட இரும்பு எந்த எடையும் தாங்கும்
பண்பினால் பண்பட்ட இதயம் எந்த வசையும் தாங்கும்
கல்லும் மணியானது காலத்தாலே
சொல்லும் புகழானது ஞானத்தாலே

புல்லும் மருந்தானது குணத்தாலே
கல்லும் கடவுளானது நம்பிக்கையாலே
மாங்காய் கனிந்தால் புளிப்பு போய் இனிப்பு வரும்
மனமெனும் காய் கனிந்தால் சலிப்பு போய் சிரிப்பு வரும்
மூடிக் கிண்டிருந்தால் வாய்க்குள் ஈக்கள் வருவதில்லை
மூடிக் கொண்டிருக்கும் வாய்க்கு வம்புகள் வருவதில்லை
துணிவு உல்ளவர்கள் தான் மன்னிக்க முடியும்
மகிழ்வு உள்ளவர்களால் தான் மறக்க முடியும்
சலிப்புள்ள மனங்களுக்கு ஒரு போதும் சகிப்பு வருவதில்லை
மமதையுள்ள மனிதர்களுக்கு ஒரு போதும் மன்னிக்க தெரிவதில்லை
வெப்பமாக வெகுளும் மனிதர் வேதனை பெற்றெடுத்த பிள்ளைகள்
தெப்பமாக குளிரும் மாந்தர் தெய்வம் பெர்றுதந்த பிள்ளைகள்
மலை போல அறிவிருந்தாலும் ஒருதுளி பொறுமைக்கு ஈடாகாது
கடல்போல பண்பிருந்தாலும் சிறுதுளி அன்புக்கு அது ஈடாகாது

மன்னிக்கிறவர் புனிதராவார் மன்னிக்கப்படுபவர் மனிதராவார் தண்டிக்கிறவர் மிருகமாவார் தண்டிக்கப்படுபவர் கயவராவார்

மன்னிக்கிறவர் புனிதராவார் மன்னிக்கப்படுபவர் மனிதராவார் தண்டிக்கிறவர் மிருகமாவார் தண்டிக்கப்படுபவர் கயவராவார்
                        
சகிப்பு

மாடு முட்டிய தென்று திரும்ப முட்டுபவர் மனிதரில்லை
அறிவிலாதவர் திட்டுகிறாரென்று திரும்ப திட்டுபவர் அறிஞரில்லை

எத்தனை காற்று வந்தாலும் கல்தூண்கள் கலங்குவதில்லை
எத்தனை தூற்று வந்தாலும் நல்லவர்கள் கலங்குவதில்லை

போற்றும் மாலைகளுக்கு தலை குனிந்து சேவை செய்
தூற்றும் தூசுகளுக்கு தலை குனிய தேவையில்லை

பொருளுள்ளவர்கள் பிறர் அன்பை பன்பை பொருட்படுத்துவதில்லை
அருளுள்ளவர்கள் பிறர் குறையை குற்றத்தை பொருட்படுத்துவதில்லை

சிலரது பார்வை பூதக்கண்ணாடி போல குறைகளை மிகைபடுத்தும்
சிலரது பார்வை மூக்குகண்ணாடி போல நெருக்கமாக இருக்கும்

போற்றித் தரும் பரிசையும் தூய்மையால் மறுத்துவிடு
அது போற்றுபவரிடமே திருப்பிச் செல்லும்
தூற்றி வையும் வசவையும் தூசு போல் தட்டிவிடு
    அது தூற்றுபவரையே ஒட்டிக் கொள்ளும்

உறங்கும் சிம்மத்தை இறந்து விட்டதென துள்ளக் கூடாது
சகிப்பு தன்மையை பயந்து விட்டதென எண்ணக் கூடாது

       மன்னிக்கிறவர் புனிதராவார்
       மன்னிக்கப்படுபவர் மனிதராவார்
       தண்டிக்கிறவர் மிருகமாவார்
       தண்டிக்கப்படுபவர் கயவராவார் 

Tuesday, January 7, 2014

நம் உள்ளே உள்ள உள்ளம் மாறினால் உலகம் மாறும்

நம் உள்ளே உள்ள உள்ளம் மாறினால் உலகம் மாறும்
                           
தர்மம்

பேரழிவின் போதுதான் தர்மம் வாழ வாய்ப்பு கிடைக்கிறது___செனீகா

தர்மத்திற்கு உடன்படாத  மனிதன் 
அவிழ்த்துவிடப்பட்ட மிருகம்___ஆல்பர்ட்கேம்ஸ்

அற உணர்வின் குரலை ஆனையாக ஏற்று 
அதன்படி வாழ்வதே அறவாழ்வு __இமாறுவேல்காண்ட்

வாழும் கலை என்பது 
பிறரை வாழ விட்டு நாம் வாழ்வதேயாகும்___ஹேவ்லாக் எல்லிஸ்

அறம் ஒரு போதும் தோற்றதில்லை 
அறிவு ஒரு போதும் பலகீனமானதில்லை___சாக்ரடீஸ்

நமக்கு கீழே உள்ளவர்களிடமும் 
நேர்மையுடன் நடக்க வேண்டும்___பிரடரிக்நீட்ஸே

எல்லா உண்மைகளும் 
எளிமையானவை என்பதே பொய்____பிரடரிக்நீட்ஸே

அனுபவத்தால் உணராதவரை 
உண்மையை யாராலும் ஏற்க முடியாது____ஜான்கீட்ஸ்

அறிவுத் தெளிவே அறம் 
உணர்வுகள் அறிவுக்கு தடையாகும்___ஸ்பினோசா

நம் உள்ளே உள்ள உள்ளம் மாறினால் உலகம் மாறும்___புளுடார்ச்

தெரியாததை தெரியாது என்று ஒத்துக்கொள்வதே பேரறிவு

தெரியாததை தெரியாது என்று ஒத்துக்கொள்வதே பேரறிவு
                                                              
அறிவு

அறிவிற்க்காக செலவு செய்யும் 
ஒவ்வொரு காசும் வட்டியுடன் பலன் தரும்

நன்மைக்காக உண்மையைக் கண்டறிவதே 
ஞானத்தின் நோக்கம்___வால்டேர்

மத்யமான அறிவுள்ளவரே 
மகத்தான வெற்றி பெறுகிறார்___சாமர்ஸட்மாம்

அரைகுறை அறிவும் படிப்பும் ஆபத்து___அலக்ஸாண்டர் போப்

ஆழமான ஆறு போல 
ஆழமான அறிவும் சலசலப்பில்லாமல் ஓடும்___பேகன்

அறிவும் புரிந்து கொள்ளுதலும் 
மனிதனுகு நன்றியுள்ள நண்பர்கள்___கலீல் கிப்ரன்

பொறுப்புணர்வே நன்பன் 
புத்திசாலித்தனம்தான் நம் வழிகாட்டி__‍‍பிரேம்சந்த்

தெரியாததை தெரியாது என்று 
ஒத்துக்கொள்வதே பேரறிவு___கன்பூசியஸ்

அறியாமையினால் ஆகும் நஸ்டத்தை விட 
அறிவை கற்க ஆகும் செலவு குறைவு

கற்க கற்கவே நமது அறியாமையின் அளவு நமக்கு புரியும்

உங்கள் வேலையை நேசியுங்கள் முழு திருப்தியடைய முடியும்

உங்கள் வேலையை நேசியுங்கள் முழு திருப்தியடைய முடியும்
                             
கடமை

கருமத்தை அற்ற முடிப்பவன் அறிவுடையோன்___முன்னுரை அரையனார்
கடமையைக் கடவுளாகக் கொண்டாடுபவருக்கு வெற்றி தானே வரும்__தம்மபதம்
கடமையும் அதற்கான கொள்கையும்        
                மனிதனுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்குகள்__அரவிந்தர்
யாருடைய கடமைகளுக்கும் நாம் தடையாக இருக்கக் கூடாது__குருநானக்
நம் கடமையைச் செய்வதே சிறந்த கடவுள் வழிபாடு__பஞ்சதந்தரா
நாம் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யவே நமது சரீரம் உள்ளது__தேவர்
கடமையென்ற பாத்திரத்தில் தான் உரிமைகள் ஒளிந்து கிடைக்கின்றன__வினோபா
கடமையாற்றாமல் நன்மையைப் பெறுகிறவன் திருடன்__தயானந்த சரஸ்வதி
கடமையும் அன்புமே ஆன்மாவின் கருவிகள்__அரவிந்தர்
கடமைகளில் குறைகள் இருந்தாலும் விட்டு விடக் கூடாது__கீதை
என் கடன் பணி செய்து கிடப்பதுவே__திருநாவுகரசர்
                   
உழைப்பு

உழைத்துத்தான் உண்ண வேண்டும் என்பது உலகத்து தர்மம்___நாகாமராசன்
உழைக்காத அன்று உணவு உண்ண உரிமையில்லை___பிரேம்சந்த்
வெறும் பொறுப்புணர்வு மட்டும் கடும் உழைப்புக்கு ஈடாகிவிடாது__கலாம்
காய்கள் கனிந்த போதும் வேர்கள் பங்கு கேட்பதில்லை___தாகூர்
உழைப்புக்கு மதிப்பு கொடுப்பதுதான் உண்மையான பெருமை___வினோபா
ரசம் பிழிந்த பிறகு கரும்பை யாரும் மதிப்பதில்லை___வேமணா
உடலும் வளரும் தொழிலும் வளரும் உழைப்பாலே___பட்டுகோட்டையார்
தாரணியே தொழிலாளர் உழைப்புக்கு சாட்சியும் நீயன்றோ___பாரதிதாசன்
ஒருசாண் வயிற்றை வளப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்___வாலி
உழைக்காமல் ஊதியம் வாங்கும் தொழில்தான் மானங்கெட்ட தொழில்__முவ‌
                 
செயல்

கர்மயோகத்தின் அற்புதம் இறைஎதிர்ப்பு கூட முக்திக்கு வழிவகுக்கும்___அரவிந்தர்
படைப்பை மலர வைக்கும் அம்சங்கள் செயல்பாட்டு பரிமாணங்கள்தாம்___கலாம்
செயலற்ற தியானம் பயனற்றது அவையிரண்டும் சேர வேண்டும் ___திலகர்
சொற்கள் புத்தியில் பிறக்கின்றன செயல்கள்
         ஆன்மாவில் பிறக்கின்றன___இராதாகிருக்ஷ்ணன்
எண்ணுங்கள் பணக்காரர் ஆகலாம் என்பது சுத்த மடத்தனமானது__ஓஸோ
செயலில்லாமல் விளைவில்லை/ விளைவில்லாத செயலுமில்லை___மகரிஷி
கருவி கர்மா கர்த்தா மூன்றும் செயலுக்கு மூலகாரணமாகிறது__கீதை
பேச்சை விதையாக அல்ல
       செயலை விதையாகக் கொண்டே உலகம் வளர்கிறது___அப்பாதுரையார்
உங்கள் வேலையை நேசியுங்கள் முழு திருப்தியடைய முடியும்__தயானந்தஸரஸ்வதி
செய்வது நம் கடமை செயல்படும் நாம் கடவுளின் கருவியே___சிவானந்தா
         
செல்வம்

உடையவராய் சென்றால் நமக்கு ஊரெல்லாம் சுற்றம்_அவ்வையார்
கர்வத்தை தாராதே உண்மையான செல்வம் எனப்படும்_பஞ்ச தந்த்ரா
பணத்துக்கு உள்ள காந்த சக்தியால் அது எல்லாவற்றையும் ஈர்க்கின்றது_அண்ணா
செல்வம் சேர்ப்பதில் அதிகமான ஆசை வைப்பவன் கெடுகிறான்_இராதா கிருஷ்ணன்
போகும் வரும் இரண்டு அது செல்வமும் வறுமையும்_தேவர்
செல்வம் அது நிலவு போல நிலையற்றது_வேமனா
தாய்க்கும் மகனுக்கும் கூட தகராறைத் தேடித் தருவது தனம்_வேமனா
பொண்ணொடு மணியுண்டானால் புலையனும் கிளைஞனான்_பட்டீஸ்வரர்
அடக்கம் இல்லாது நடப்பவன் செல்வம் குரங்கின் கை கொள்ளி போலே
நீரில் குமிழி இளமை செல்வம்_குமரகுருபரர்
மகிழ்கின்ற செல்வம் கவிழ்கின்ற நீர் செல்லும் கப்பல் போலே_திருமூலர்
உடல் உருவம் குணம் அறிவு சுகம் செல்வம் புகழ் ஆக ஏழு வளங்கள்_ மகரிஷி
                                   
அதிட்டம்

நாம் விதைப்பதைத்தான் நம்மால் அறுவடை செய்ய முடியும்___குருநாகை
தேடுபவனுக்கு அதிட்டம் கிடைக்காமல் போகலாம்
    அதிட்டத்துக்கு ஒரு ஆள் கிடைக்காமல் போகாது____காளிதாசர்
அல்லும் பகலும் தெருக்கல்லாயிருந்து விட்டு
    அதிட்டம் இல்லையென்று அலட்டி கொண்டார் பட்டுகோட்டையார்
காலம் வரும் போது புயல் வீசும் போது எச்சிலைகளும் வானில் பறக்கும்_____முவ‌
தாளாளன் என்பவள் கடன்படாது வாழ்பவன்____திரிகடுகம்
நமது தீர்வை நாம்தான் கண்டுபிடிக்கவேண்டும்
         வேறு யாரும் வந்து தீர்த்து விடமுடியாது___புத்தா
விதி எனும் புத்தகத்தின் வரிகள் எல்லாம் செயல் என்ற எழத்துக்களே___குருநானக்
பூ மலர்ந்தவுடன் ஈக்களுக்கு  அழைப்பிதழ் தேவையில்லை ____ராமகிருஷ்ணன்
அதிட்டத்தை நம்பி உழைக்காது காத்திருப்பவன் அழிவில் வீழ்வான்____சாணக்யன்,

எடுத்து வையுங்கள் இன்னும் ஒரே ஒரு அடி

எடுத்து வையுங்கள் இன்னும் ஒரே ஒரு அடி
          
மனோதிடன்

நட்டோர்க்கு அல்லது கண்கங்காத நெஞ்சம் வேண்டும்_பதிற்றுப்பத்து

நாளென் செயும் வினைதான் என் செயும்
நாடிவந்த கோளென் செயும்_அருணகிரியார்

நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்_திருநாவுக்கரசர்

விதியின் சங்கடங்களைக் கண்டால்
சீ என்று சிரித்துத்துப்பிவிடு_புதுமை பித்தன்

ஆற்றும் கடமையை மறக்காதே
காற்றுக்கும் மழைக்கும் கலங்காதே_கண்ணதாசன்

சாதலோ சரதம் நீதி அறத்தோடும் தழுவி நிற்பாய்_கம்பன்

தசையினைத் தீச் சுடினும் அசைவுறு மதி வேண்டும்_பாரதி

யாதே வரினும் மனவலி குன்றாதே மானமே பெரிது_மசு பிள்ளை

எல்லா நாளும் ஒரு நாள் போல இருக்க வேண்டும்
என் மனமே_அவ்வையார்

இருக்கும் பொழுதை ரசிக்கனும்
எதிலும் துணிஞ்சு இறங்கனும்_பட்டுகோட்டையார்

மனோசக்தி

துணியும் போது கடலின் ஆழம் குறைவதில்லை
நாம் உயர்கிறோம்_பிசிகணேசன்

மனித மனம் அபூர்வமானது
அதிசய சக்திகள் கொண்டது_வல்லிக்கண்ணன்

ஆபத்தை சந்திக்க துணிந்து விடு
அழுவதை மட்டும் நிறுத்தி விடு_கண்ணதாசன்

வன்மையிலே உளத்திண்மையிலே
மதிவன்மையிலே உயர்வோம் நாம்_பாரதி

நன்றே நினையுங்கள் நமனின்றி பயமில்லை_திருமூலர்

விசையுறு பந்தினைப் போல்
மனம் வேண்டியபடி செல்லும் உடல் வேன்டும்_பாரதி

வெயில் என முனியேன் பனி என மடியேன்_மதுரை குமரனார்

அசையாது நிற்பதாம் ஆண்மை_நாலடியார்

கலக்கினும் தண்கடல் சேறு ஆகாது_வெற்றி வேந்தன்

அன்றே எனின் அன்றே ஆம் ஆமே என்றுரைக்கின் ஆமே ஆம்_கம்பன்
          
துணிவு

உயிரிடத்தில் அன்பு வேனும் வயிரமுடைய நெஞ்சு வேனும்_பாரதி

துப்புத் துறை போகிய துணிவுடைய ஆண்மை வேண்டும்_பதிற்றுப்பத்து

நெருக்கடியை தவிர்ப்பதே
தோல்வியை எதிர்கொள்வதே வெற்றியாகும்_தயானந்த சரஸ்வதி

துணிந்தால் துன்பமில்லை
மனம் சோர்ந்தால் இன்பமில்லை_பட்டுகோட்டையார்

கொசு நெருப்பில் மொய்க்காது_தாமு சிவராம்

துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்_கண்ணதாசன்

அய்யம் தீர்ந்து விடல் வேண்டும்
புலை அச்சம் போய் ஒழிதல் வேண்டும்_பாரதி

வெஞ்சமரில் புறங்கொடுத்து மீள வேண்டாம்_நீதி வெண்பா

சித்தம் கலங்காது செய்கின்றது ஆனந்தம்_திருமூலர்

தூயவர் துணி திறன் நன்று அது தூயதே_கம்பன்

நம்பிக்கை

எடுத்து வையுங்கள் இன்னும் ஒரே ஒரு அடி___ஈரோடு தமிழன்பன்

உலகம் நம்பிக்கைகளால் உந்தப்படுகிறது___அரவிந்தர்

காரிருள் பெரிது விளக்கு சிறியது என்று என்ன வேண்டும்
பெருமையின் பீடுடையது இல்லை_வள்ளுவர்

கடமைகளுக்கு ஊதியம் கிடைத்தாலும்
மனம் பாராட்டு எனும் பரிசுக்கு ஏங்குகிறது_தாகூர்

பாராட்டுவதை பகிரங்கமாக செய்ய வேண்டும்
குறையை அறையில் சொல்ல வேண்டும்_கலாம்

அகங்காரம் தீனி தேடுகிறது யாராவது பாராட்ட வேண்டும்
அதுவே அதற்கு தீனி_ஒஷோ

இயந்திரங்களுக்கு மின்சாரம் தேவை மனிதருக்கு
அங்கீகாரம் தேவை_தயானந்த சரஸ்வதி

சிறப்பு வேண்டுமெனில் நல்ல செய்கை வேனுமப்பா_நாமக்கல் கவிஞர்

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே_வெற்றி வேற்கை

பேரும் புகழும் பெரு வாழ்வு_நல் வழி

வழங்கத் தளிர்க்குமாம் மேல்_நாண்மணிக்கடிகை

தமிழர் தத்துவம், துணிவு, மனோபக்குவம்.


விமர்சனம் செய்வது சுலபம்

விமர்சனம் செய்வது சுலபம்

சரியானச் சொல்வது சுலபம் சரியானதை செய்வது கடினம் அது ஏன்?  
சொல்லுக்கும் செயலுக்கும் ஏன் இந்த இடைவெளி?
அதனால்தான் போதிப்பவர்கள் சாதிப்பதில்லை, செயல்படுபவர்கள் பேசுவதில்லை என்பார்கள்  கமென்ட்ரி பாக்ஸில் மைக்கை பிடித்து விமர்சனம் செய்வது சுலபம் கையிலே மட்டை பிடித்து சரியாக பந்தையடிப்பதுதான் காரணம் இது வாழ்க்கை முழுதும் தொடர்கிறது

அதனால் தான் படிப்பறிவை விட‌ பட்டறிவு அவசியம் என்பார்

ஒரு கார்யத்தை சரியாகச் செய்ய திரும்ப திரும்ப அதைச் செய்து பயிற்சி எடுப்பதைத் தவிர மாற்று வழியிலே பாதையிலே,பயணத்தில் புதிய புதிய கேள்விகள், புதிய புதிய புதிர்கள் வந்து கொண்டே இருக்கும் அத்தனைக்கும் பத்தகத்தால் வழி சொல்ல முடியாது. 

பல பல காரணிகளின் எலிவளையின் இறுதி கண்டுபிடித்தவரே வெற்றியாளர்கள்,     அதன் இரகசியம் ஓயாத உழைப்பைத் தவிர வேறில்லை

ஞானமுள்ள தலையை விட ஈரமுள்ள இதயத்துக்கு புகழ் கூடுதலாகும்….

ஞானமுள்ள தலையை விட ஈரமுள்ள இதயத்துக்கு புகழ் கூடுதலாகும்….
     
எளிமையான மனித நேயத்தின் முன்பு முழுமையான ஞானம் கூட ஈடாகாது

மனிதரிடையே இரு துருவங்கள் போல‌ இரு குணாதிசியங்கள் காண்கிறோம்

ஒருவரின் குணம் இருதயத்தால் நிர்ணயிக்கப்படுகிறது மற்றவரது குணம் மூளையால் உருவாகிறது

அன்பேயில்லாத,உணர்ச்சியே இல்லாத‌ மூளை  வளர்த்த மூதறிஞரை விட‌ நேயமுள்ள இரக்கமுள்ள இதயம் எனும் அன்னை வளர்த்த எளிமையானவன்

எதுவுமே தெரியாதவனாய் இருந்தாலும் பரவாயில்லை

அதனால் நடைமுறையில் மெத்தப்படித்த மேதாவிகளான‌ பெரிய பெரிய பட்டங்களை வாங்கிய‌ உயர்ந்த பதவிகளில் இருக்கும் அதிகாரிகளை விட‌ மக்கள் இதயங்களின் பசியை,வலியை,  துயரை தேவையை உணர்ந்த எளிமையான மனிதர்கள் நிரந்தர இடம் பிடித்து விடுகிறார்கள்
    
ஞானமுள்ள தலையை விட ஈரமுள்ள இதயத்துக்கு புகழ் கூடுதலாகும்.

மனதின் மாச்சர்யங்கள் அதிகம்

மனதின் மாச்சர்யங்கள் அதிகம்

பிறர் பாராட்டப்படும் போது பெருமை அடையுங்கள்

நம்மை பாராட்டும் போது நாணம் வேண்டும் பிறர் பாராட்டப்படும் போதும் மகிழ்ச்சி வேண்டும்

நடைமுறையில் நம்மை யாராவது பாராட்டினால் ஆணவத்தில் அகந்தையில் மனம் குதியாட்டம் போடுகிறது அது நாம் வீழப் போவதற்கு அறிகுறி இதுகூட மன்னிக்கப்படும்,

ஆனால் மனதின் மாச்சர்யங்கள் அதிகம்,

நம்மைத் தவிர உண்மையிலேயே தகுதியுடைய‌ ஒரு நபர் வெற்றி பெறும் போதோ, புகழ் பெறும் போதோ பாராட்டப்படும் போதோ, அது நமது பகையானாலும் கூட‌  நடிப்பில்லாமல், உண்மையான மனமகிழ்ச்சி நம்முள் ஏற்படுமானால்  அதுவே நாம் மனப்பக்குவமடைந்ததன் வெளிப்பாடு,

ஆனால்  அது சாதாரண,சாமாண்ய, பாமர மக்களுக்கு கூட‌கைகூடுகிறது.

அறிவு ஜீவிகளான தலைபெருத்தவர்களுக்கு சுலபமாக வருவதில்லை

அச்சுறுத்தாமால் எச்சரித்து வைப்போம் தவறில்லை

அச்சுறுத்தாமால் எச்சரித்து வைப்போம் தவறில்லை
          
வாழ்வென்பது பூவினால் செய்த படுக்கையல்ல‌

வாழ்க்கை என்பது ஒரு காட்டு வழிப்பயண‌ம்

ஆனால் எல்லாம் நல்லபடி நடக்கும் என ஒப்புக்காக‌ நாம் சொல்லி வைக்கிறோம்

அது தவறில்லை, நம்பிக்கை தரும் எண்ணங்கள் நன்மையே எதிர்பார்க்கும் துணிவு எல்லாம் நல்லது

அது பல நேரங்களில் மனித மனங்களில் ஒரு போலியான‌ மமதையைத் தந்துவிடுகிறது

சாலைகள் என்பது ரோஜாப்பூக்களால் நிர‌ப்பப்பட்ட‌ மென்மையான படுக்கை என ஆசைப்பட்டுவருகிறது

நடைமுறையில் கல்லூரி வாழ்வு முடிந்து,கல்யாண வாழ்வு தொடங்கும் போது தேனிலவு முடிகிறது.

வாழ்வின் நிதர்சமான ஏமாற்றங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் எதிர்பார்த்திராத ஏமாளி மனங்கள் துயரத்தில் துடித்தழகின்றன.

அடிக்கடி முந்திரிக் கொட்டையாக‌ மூக்கை நீட்டுவது ஆத்திரம் எனும் அடங்காத குதிரைதானே.

அடிக்கடி முந்திரிக் கொட்டையாக‌ மூக்கை நீட்டுவது ஆத்திரம் எனும் அடங்காத குதிரைதானே.

ஒரு செயலை செய்தபின் சிந்திப்பவருக்கு வெற்றியில்லை

ஒரு சொல்லை சொல்லியபின் சிந்திப்பவருக்கு நண்பரேயில்லை

நமது மனம் எனும் ரதத்தை, இரண்டு குதிரைகள் இழுத்துக்கொண்டு ஓடுகின்றன.

ஒரு குதிரை அறிவு, மற்றஒரு குதிரை உணர்ச்சிகள்,

இந்த பயணத்திலே ஏதாவது ஒரு குதிரை விரைவாக‌ மூக்கை நீட்டி விட்டும்

அது அறிவு என்ற குதிரையானால் ஆபத்தில்லை
ஆனால் அடிக்கடி முந்திரிக் கொட்டையாக‌
மூக்கை நீட்டுவது ஆத்திரம் எனும்
அடங்காத குதிரைதானே.

முன்’ கோபம் என்று சொல்வார்கள்

சிந்திப்பதற்கு முன்பே வருவதால் அது முன்கோப‌ம்

உண்மையில் ஒரு நொடி சிந்திக்க அவகாசம் எடுத்துக்
கொண்டால் நிச்சயம் ஒரு போதும் கோபமே வராது

அப்படியே வந்தாலும் அது உறுதியாக நியாயமாகத்தான்
இருக்கும்,அதை ‘பின்’கோபம் என்று பேர்வைக்கலாம்

வில்லால் மாண்டவரை விட சொல்லால் மாண்டவர் கோடி கோடியே.

தேவையில்லாத இடத்தில் தேவையில்லாத நேரத்தில் தேவையில்லாத பேச்சால்

தேவையில்லாத இடத்தில் தேவையில்லாத நேரத்தில் தேவையில்லாத பேச்சால்…

தேவையில்லாமல் பேசுவதும் தேவைப்படும் போது பேசாமல் இருப்பதுவும் ஆபத்து

       
அடிக்கடி நாம் இதை சட்ட மன்றம் பாராளு மன்றம் தொடங்கி டீக்கடை பெஞ்ச் வரை நிறைய பார்க்கிறோம்

பேச வேண்டியவர்கள் வாயைத்திறந்து பேசுவதே இல்லை
தேவையில்லாதவர் வாயை மூடி இருப்பதுவும் இல்லை

வீடாகட்டும்,நாடாகட்டும்,
தேவையில்லாத இடத்தில்
தேவையில்லாத நேரத்தில்
தேவையில்லாத பேச்சால்
தேவையில்லாமல் உருவாகும் 
வம்புகளும் கலவரங்களும் வளருகின்றன.

ஆனால் அதே நேரத்தில் தேவைப்படும் போது
பெற்றோர்களும்,பெரியோர்களும்
மூத்தவர்களும் அமைதியாக இருப்பதால்
ஏற்படும் விளைவுகள் அதை விட ஆபத்தாகின்றன.

Monday, January 6, 2014

புதிய சிந்தனை,புதிய முயற்சி, புதிய பாதையிருந்தால் வெற்றி நிச்சயம்

புதிய சிந்தனை,புதிய முயற்சி, புதிய பாதையிருந்தால் வெற்றி நிச்சயம்

செய்ததயே திருப்தி திரும்பச் செய்து வேறு முடிவை எதிர்பார்ப்பது முட்டாள் தனம்
       
மாடுகளின் இரண்டு வகையுண்டு ஒன்று செக்கு மாடு மற்றது வண்டி மாடு

இந்த செக்கு மாட்டை மாற்றி வண்டியில் கட்டிவிட்டால் அது காலையில் நேராக நாடாமல் தனது வீட்டையே சுற்றிச் சுற்றிச் வரும் என்பார்கள்

மனித சோம்பலின் ம்னோபாவமும் அப்படித்தான் மாற்றிப் போகிறது
      
பெரும்பாலான மனிதர்களின் செயல்பாடுகளும் இப்படித்தான் இருக்கின்றன.
    
இதைத்தான் பாரதி தேடித் தினம் சோறு தின்று உறங்கும் இந்த வேடிக்கை மனிதரெனபாடினான்.
    
இதுவும் ஒரு சோம்பல் தான் அதனால் தான் அடிக்கடி "மாத்தி யோசி"என்றார்கள்
   
மனித செயல்களிலும் மாற்றும் பயிர் போல மாறுபட்ட முயற்சிகளும் வேண்டும்.
        
இதைதான் இந்த பாமர மக்களின் சோம்பலை avarage peoples Psychopathology என்கிறார்கள்

புதிய சிந்தனை,புதிய முயற்சி, புதிய பாதையிருந்தால் வெற்றி நிச்சயம்

விமர்சனத்தை தாங்க மாட்டாதவர்கள்

விமர்சனத்தை தாங்க மாட்டாதவர்கள்

திருவாளர் சுயகாதல்:
            
ஒரு சதவீதத்தினருக்கும் குறைவாகவே பெரும்பாலும் ஆண்களிடம் காணப்படும்.

அதிகமாக சுயமுக்கியத்துவமும் உலகிலேயே முதன்மையானவன் என்ற சுய முடிவும் தனிபட்ட முக்கியத்துவத்தையும் புகழையும் எதிர்பார்கிறார்கள்.

விமர்சனத்தை தாங்க மாட்டாதவர்கள்.விமர்சகர்களை தீவிரமாக எதிர்க்கிறார்கள்.தீவிரமாக பெரிய பெரிய பதவிகள் வெற்றிகள் மற்றும் கற்பனைக் கொட்டாத ஒருதலை காதல் போன்ற கற்பனைகள் பகல் கனவுகள் காண்கிறார்கள்.

மற்றவர்களை கேவலமாக நினைக்க கூடியவர்கள் எந்நேரமும் தன்னை துதிப்பவர்களையும் புகழ்பாடுபவர்களையும் விருப்ப கூடியவர்கள்.
      
ஆனால் என்றும் மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்தி சுரண்ட கூடிய உண்மையில் உணர்வுபூர்வமான ஆழமான உணர்வில்லாத தொடர்புடையவர்கள்.

முதுமையில் தனது உண்மையான நிலையை ஏற்றுகொள்ள முடியாமல் தவிப்பும் சோர்வும் அடைகிறார்கள்.

திருவாளர் ஒத்துழையாமை:

கோபம் எதிர்ப்பு உடன்பாடில்லாததை வெறுப்பை எதிர்மறை உணர்வை வெளிப்படுத்த பெரும்பாலானவர் நேரடியாக வெளிப்படையாக தனது ஆக்ரோசத்தை வண்மையாக தெளிவாக உணர்த்துவது இயல்பு.
      
மிகச்சிலர் இதற்க்கு நேர்மாறான மறைமுக எதிர்ப்பு என்ற ஒத்துழையாமை குணத்தில் உணர்த்த முயல்கிறார்கள்.
     
குழந்தைபருவம் தொடங்கி வாழ்நாள் முழுவதும் நீடிக்கலாம்.பயமும் தெளிவான ஆழ்மன உணர்வும் காரணங்கள்.

சமூக வாழ்வில் அடக்கபட்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் ஆயுதமில்லாதவர்களுக்கு அவர்கள் அனைவரும் ஒத்துழையாமை செய்தால் பலனிருக்கலாம்.

ஒரு தனிமனிதனாக பள்ளியில் குடும்பத்தில் வேலையிடத்தில் பொது இடத்தில் சமூகத்தில் இந்த குறைபாடு வெளிப்படும் போது தன்னைதானே தோற்கடிக்து விலக்கபடவும் வாய்ப்பாக அமையும்.கல்வியை வேலையை இழக்கவும் வழி வகுக்கிறது.

மற்றவரது  (பெற்றோர்/ஆசிரியர்/மேற்பார்வையாளர்)எதிர்பார்ப்புகளையும் கோரிக்கைகளையும் உத்த்ரவுகளையும் எப்போதும் அக்கிரமம் அநீதி 

அதீதமானது என்று சரியாக புரியவில்லையென்பது சொல்லவில்லையென்று மறுப்பது மற்றவரை குற்றம் சொல்வது போன்ற நடத்தை உள்ளவர்கள்.
      
எதிர்ப்பவர்கள் விரக்தியும் தோல்வியும் இழப்பும் ஏற்பட மறைமுகமாக செயல்படுகிறார்கள்.

பள்ளியிலும்வேலையிடத்திலும் அயலரிடத்தும் காண்பிக்கிறார்கள்

நாகரீகம்

நாகரீகம்

  • நாகரீகம் என்பது நாம் அணியும் துணியும் அல்லவே
  • நாகரீகம் என்பது நாம் பணியும் இனிய மொழியே
  • அறிவறிந்து கற்று வரவறிந்து வழங்கி உறவறிந்து கலந்து வாழ்க
  • செறிவறிந்து பழகி பரிவறிந்து நெருங்கி நெறியறிந்து கலந்து வாழ்க
  • ஆசைகளை குறைத்தார் அன்று
  • ஆடைகளை குறைக்கிறார் இன்று
  • கருணையை வளர்த்தார் அன்று
  • காமத்தை வளர்த்தார் இன்று
  • தூசு படிந்த விளக்குகள் துடைக்கப்பட்டால் ஒளிதரும்
  • மாசு படிந்த மனங்களும் திருத்தப்பட்டால் மலராகும்
  • உடலுக்கு பொருந்தாத உடைகளும் வெறும் பிணியே
  • காலத்துக்கு பொருந்தாத கருத்துக்களும் பெரும் பிணியே
  • மற்றவர் பெருமைப்படும் படி வாழலாம்
  • மற்றவர் பொறாமைப்படும் படி வாழலாகாது
  • அன்றைய நாகரீகங்கள் வளமான கருத்துக்களால் உருவாக்கப்பட்டன
  • இன்றைய நாகரீகங்கள் உயரமான கட்டிடங்களால் உருவாக்கப்பட்டன
  • பண்பான வரவேற்பை விட சிறந்த விருந்து வேறெதுவுமில்லை
  • அன்பான வார்த்தையை விட உயர்ந்த மருந்து வேறதுவுமில்லை
  • சிலர் உள்ளே வந்தால் சிறப்பு வரும் சுவர் பெரியோர்
  • சிலர் வெளியே சென்றால் அமைதி வரும் அவர் சிறியோர்.

அறிஞரின் அவையிலிருந்து… கடவுள்

அறிஞரின் அவையிலிருந்து… கடவுள்

நாம் காணும் யாவும் காணமுடியாத ஒன்றின் காலடி நிழல்‍‍‍_____லூதர் கிங்

உலகில் உள்ளவை எல்லாம் ஏதோ ஒரு பொதுவிதியால் கட்டப்ட்டுள்ளது‍_‍‍__வால்டேர்

உலகம் என்பது இறைவனின் உடல் உண்மைதான் அதன் ஆன்மா___உமாகயாம்

நேர்மையான மனிதரின் படைப்பிலே இறைவன் பெருமையடைகிறான்___அலக்ஸாண்டர்போப்

படைத்தவனை பாராட்டும் மனிதன் தோற்றதில்லை___கலீல்கிப்ரன்

அண்டம் முழுதுக்கும் அடிப்படையான பொது இயக்கசக்தியே கடவுள்___அரிஸ்டாடில்

தரையை பார்த்தபோது நாத்திகனாக இருந்த மனம் வானம் பார்த்தபின் மாறிவிட்டது__லிங்கன்

கடவுள் என்ற கருத்து இல்லை என்றால் உலகில் எதுவும் இல்லை___டஸ்டோவ்ஸ்கி


கடவுள் ஒரு முழுமையான கவிஞன்__‍ராபர்ட்ப்ரவ்னிங்

இறைவனைப் பராமரியுங்கள் அது வாழ்வுக்கு நங்கூரமாகும்___டென்னிஸன்

தாய்மையை பாராட்ட தமிழ் போதாது

தாய்மையை பாராட்ட தமிழ் போதாது

தாயிடம் சேவை தொடங்கி மனைவியிடம் வளர்கிறது தாய்நாட்டு சேவை சிறந்த தெய்வ சேவையில் நிறைவடைகிறது

ஒவ்வொருசிகரத்தை அடையவும் படிக்கட்டுகள் உண்டு.
தன் உட‌லுக்கு மட்டுமே சேவை செய்வது விலங்கியல்
தன் வயிறுக்கு உணவு தேடுவது
தன் பிறப்புறுப்புகளுக்கு உறவு தேடுவது
இவை இரண்டு மட்டுமே வில்ங்கினத்தின் சுய சேவைகள்
மனிதத்தில் மட்டுமே

முதன்முதலாக அந்த எல்லை தான்டப்பட்டது.
பாலூட்டிகளிடம் தன் சேவை சில காலம் உணவூட்டும் தாய்மை வள்ர்ந்தது
தாய் முதலில் தன் உதிரத்தை பாலாக ஊட்டியது
தகப்பன் தான் வேட்டையாடிய உணவின் மிச்சத்தை தந்தது.
இவைதாய்மையின் சிறிய விதைகள்.
ஆனால் மனிதத்தின் தாய்மை 
மகத்தான சிகரங்களை தொட்டது

பாலூட்டி, தாலாட்டி,குளிப்பாட்டி,பட்டுத்திசீராட்டியது
அன்பு தந்து அறிவுதந்து,பண்புதந்து,பாசம்தந்தும் தந்தது
அதன்சேவை பட்டியல் மிக நீளமானது
கடைசி மூச்சு உள்ள வரை
தன் சேவை சீராட்டும் அந்த தாய்மையை பாராட்ட தமிழ் போதாது
தாய்மையை சேவைகளின் தாய்,
அடுத்தது தாரம் ,அது தாய்மையிலும் உயர்வாக போற்றப்பட்டது
தன் சேயை காப்பாற்ற அதன் தேவைகளை நிறைவேற்ற‌
நிரந்தர ஆண் துணையைபெண்மையும், தாய்மையும் நாடியது

அந்த பரிணாம வளர்ச்சியின் அடுத்தகட்டமாக
தேர்ந்தெடுத்த தன் துணையை தன் சேய்க்கு சமமாக
பாராட்டி சீராட்டி பராமரித்தது பெண்மை.
பெண்மை என்பது தாய்மையின் சிகரமாக
குடும்பத்தின் தலைமை பீடத்தில் அமர்ந்தது
தன் கணவன் குழந்தைகளுக்காக
பல உயர் பண்புகளை வளர்த்துக் கொண்டது
உணவு,உறவு,உறக்கம் என்ற
உடலின் அடிப்படை ஆதாரங்களைக் கூட தியாகம் செய்தது.

இது வளர்ப்பினால் மட்டுமல்ல
கல்வியினால் மட்டுமல்ல 
உதிரத்தில் ஊறிப் போன பண்பாக பரிணமித்தது
இதயத்தில் எழத்தாக பதிந்து போனது
இந்த தாய்மையும், தலைமைப்பண்பும்
அவர்களும் தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும்
தன் இல்லத் துணைக்காக
இவள் பெற்ற பிள்ளைகளுக்காக
மொத்தத்தில் தன் குடும்பமே தன் உயிராக எண்ணி
தியாகம் செய்யும் சேவை பிறந்தது
அது தன் உறவினர்,அயலார்,ஊர்,தேசமென விரிந்து பரந்தது

தாய் நாட்டு,தேச சேவையில் தாய்மையின் முழமை வெளிபட்டது.
தன்னைத் தாண்டி
தன் உடலின் பசி,காமம் உறக்கம் தாண்டி
ஆன்மாவைப் பற்றி தேடிய போது மனிதன் ஆண்டவனை உணர்ந்தான்
தெய்வத்தின் பக்தியிலும் சேவையிலும் உயர்ந்து சிறந்தான்.