Sunday, January 5, 2014

குற்றம்

குற்றம்

  • குற்ற உணர்வு என்பது கரையை அலை கரைப்பதை போல மனதைஅழிக்கும்
  • குற்ற உணர்வுகள் உள்ளவர் குற்றம் செய்வதில்லை
  • குற்ற உணர்வை ஒரு போதும்  புறக்கனிக்காதீர்க்கள்
  • குற்ற் உணர்வை மறைக்காதே மறைத்தால் நீ குற்றவாளியாகி விடுவாய்
  • குற்ற உணர்வு மரணம் வரை முதலில் உனக்கு நீ உண்மையாக இருக்கபழகு
  • குற்றங்கள் மறைக்கப்பட்டாலும் நீதி ஒருநாள் வெளிப்படுவது உறுதி
  • குற்றங்கள் வளர வளர சட்டங்கள் பெருகும்
  • குற்றங்களில் எல்லாம் பெரிய குற்றம் பலாத்காரம்
  • குற்றங்களில் முதல் குற்றம் மூல குற்றம் களவு என்பார்
  • குற்றங்களின் காயங்களை நீதிஎன்ற மருந்தே குணமாக்கும்
  • குற்றங்களை பார்த்துக் கொண்டிருந்தால் துயரமனம் அழும்
  • குற்றங்களை பாராது குணங்களை பார்ப்பவன் தெளிவடைவான்
  • குற்றத்திற்கு குற்றமிழைப்பது ஒன்றும் குற்றமில்லை
  • குற்றத்தின் கொள்கலம் பற்றாசை பற்றுமிடம் உடலே
  • குற்றத்தை உணர்ந்து கேட்டும் மன்னிப்பு நமது பாவங்களை துடைக்கும் தடை
  • குற்றத்தை மறைப்பதை விட குற்றமே செய்யாமல் வாழ்வது சுலபம்
  • குற்றந்தமதே பிறிதன்று என்பர் முற்றுணர்ந்தோர்
  • குற்றம் உள்ளோர் கோழையர் என்பது சற்றும் பொய்யல்ல 
  • குற்றம் எனப்து நாம் தாழும் போது வந்து சேர்வது
  • குற்றம் குறை பேசினால் சுற்றெமென ஏதுமில்லை சொந்தமென நாதியில்லை
  • குற்றம் சுமத்துபவர்கள் விரைந்து செயல்பட்டால் அநீதி உருவாகும்
  • குற்றம் சுமத்துவதால் ஏற்படும் அற்ப இன்பம் நட்பை முறிக்கும்
  • குற்றம் செய்தவன் அச்சப்படுவான் அதுவே அவனுக்கு தண்டனை
  • குற்றம் செய்தவனுக்கு வரும் அச்சமே அதற்கு தண்டனை
  • குற்றம் செய்பவருக்கு குற்ற உணர்வேயிருப்பதில்லை 
  • குற்றம் சொல்ல சொல்ல உறவான சுற்றங்கள் கூட பகையாகும்
  • குற்றம் சொல்லாதீர்கள் அது சுற்றங்களை ஒடித்து விடும்
  • குற்றம் தவிர்க்கும் நெறியதனைக் கொள்வோமே
  • குற்றம் பார்த்தால் சுற்றமுமில்லை சொந்தமுமில்லை
  • குற்றம் வெற்றியடைந்தால் அது கூட கொள்கையாகி  விடும்
  • குற்றமும் குற்றப்படுத்துதலும் கட்டுபடுதலும் நல்ல மனித குணங்கள்
  • குற்றமும் குற்றவாளிகளும் மக்களாட்சியின் அவமானங்கள்
  • குற்றவாளிகள் தண்டிக்கப்படாமலிருக்க வாதாடுகிறது சட்டம் இன்று
  • குற்றவாளிகளை கண்டிக்காது வாய்மூடியவரும் பெரிய குற்றவளியே
  • குற்றவாளிகளை தண்டிக்காது கண்மூடியவரும் குற்றவாளியே

No comments:

Post a Comment