Monday, January 6, 2014

சோகத்தை மாற்றுவது எப்படி?

சோகத்தை மாற்றுவது எப்படி?
    
பிறப்பிலிருந்து இறப்புக்குள் உலகில் பிறந்த எல்லா மனிதரும் வாழ்வின் ஒரே ஒரு முறையாவது சோகம் மன சோர்வு என்ற குளத்தில் மூழ்காதவரில்லை என்கிறார்கள். ஆனால் சிலர் அதிலிருந்து மீண்டும் வருவதேஇல்லை சோகம் ஏற்படுவதற்கு காரணம் துயரம்,துயரத்துக்கு தூண்டுதலாய் இருப்பது இழப்பு, இழப்பு என்றால் அதில் மூன்று வகை சாதாரணமாக அந்தஸ்து அதிகாரம் பதவி,வேலை,புகழ், மானம் பெயர்,கெளவரம் இது போன்ற மனதுக்கு அதிர்ச்சி தரும் இழப்புகள் பரவலாக காணப்படுகின்றன

இரண்டாவது உடைமை,பொருள்,பணம்,சொத்து இது போன்ற இழப்புகள் அடுத்தது.மூன்றாவது அன்பான,உறவான,நட்பான உயிர்களை இழப்பது. இப்படி பல வகையான இழப்புகளுக்கு பிறகு அவற்றின் தராதரத்துக்கு ஏற்ப துயரமும் சோகமும் ஏற்படும். ஆனால் நடை முறையில் பார்த்தால் இது போன்ற உண்மையான துயரமான வாழ்வு சம்பவங்களை தொடர்ந்து சோகம் வருவதை விட கற்பனையான எண்ணங்களால் அதிகம் பேர் துன்பமடைகிறார். இழப்பதற்கு முனபே இழந்து விடுவோம் என்றபயமும்,கற்பனையுமே பலரை சோகத்துககு உள்ளாக்குகிறாது.

தேர்வில் தோல்வி, காதல் தோல்வி என்ற அர்த்தமில்லாத காரணங்களால் வாலிப வயதினர் சோகமடைகிறார்கள். மத்ய வயதில் கணவன் மணைவிக்குள்ளே ஒற்றுமையின்மை, வாக்குவாதம் வேலை செய்யும் இடங்களில் மற்றவர்களுடன் அனுசரித்து போகாமல் இப்படி சிறிய காரணங்களுக்கு பெரிதாக வருந்துகிறார்கள்.

முதிய வயதில் அன்பில்லை ஆதரவில்லை நன்றியில்லை என்று ஏங்குகிறார்கள்.

உண்மையோ கற்பனையோ சோகம் வருவதை தவறு என்று சொல்ல முடியாது ஆனால் சம்பவத்தில் தரத்துக்கேற்ப அளவும் காலமும் ஆழமும் உணர்வும் சரியாக அமைந்து விரைவில் அதிலிருந்து மீளவேண்டும் என மற்றவர் எதிர்பார்ப்பார்கள்.

உதாரணமாக தாய் செத்ததற்கு அழ வேண்டாம் என யாரும் தடுக்க மாட்டார் ஆனால் நாய் செத்தற்கு அழுதால் பிறர் கை கொட்டி சிரிப்பார்.

அதனால் காதல் தோல்வி போன்ற கருத்தில்லாத அற்ப காரணங்களுக்கு தாடி வளர்ப்பது மது குடிப்பது தற்கொலை முயற்சி என்று துயரப்படுவதை கண்டால் எல்லோரும் வருத்தபடுவார்.

எனவே சோகம் என்பது கண்ணீர் என்பதும் வெளிபடுத்தபட்டு விட்டால் மனபாரம் குறையும் என்பது உண்மை

ஆனால் அளவுக்கு  அதிகமான தேவையற்ற மனச்சோர்வினால் பலவித பின் விளைவுகள் ஏற்ப்படும்.

கல்வியில் ஒருமுகமின்மை,வேலையில் ஈடுபாடின்மை,உடல் நல பராமரிப்பின்மை,பொருளாதார இழப்புகள்,நட்புறவு ஏமற்றங்கள் போன்ற பல வித தீமையான விளைவுகள் சோகம் என்ற சோம்பலால் உருவாகும்.

சோர்வு,சோகம்,சோம்பல் நாளடைவில் அவரை உபயோகமில்லாத துருபிடித்த இரும்பு போல ஆக்கி விடும்.

அவரது திறமைகள்,சுபாவம் பலன்கள் யாவும் கொஞ்சமாக கொஞ்சமாக அரிக்கப்பட்டு விடும்.

எனவே எவ்வளவு விரைவில் நல்லபடியாக சோகம் என்ற இருளில் இருந்து வெளிப்பட முடியுமோ அவ்வளவு விரைவாக சோகத்தை விரட்டி விடுவது நல்லது.

தொடர்ந்து நீடிக்கவிட்டால் அது உடல்,உயிர்,செயல்,பொருளாதாரம்,தொழில் போன்ற பல விதமான பிரதேசங்களுக்கும் படிபடியாக பரவி ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.
எதற்குமே உபயோகம் இல்லாத உயிருக்கும் உடலுக்கும் மனதுக்கும் துயரம் தரும் இந்த சோகம் எதனால் ஏற்படுகிறது.

இறைவன் ஏன் இந்த நுட்பத்தை உடலில் வைத்துள்ளான்

நாம் எல்லோருமே இன்ப நுகர்வு அல்லது இன்ப நோக்க கொள்கையில் தான் இயங்குகிறோம்

துன்பத்தை விலக்கவோ தவிர்க்கவோ தான் நமது உயிரும் மனமும் விரும்புகிறது

ஆனால் நடைமுறை வாழ்வில் இது ஒரு பெரிய போரட்டமாகவே ஆகி விட்டது.

உடலில் இன்பம் வரும் போது அல்லது நாம் விரும்பிய எல்லாம் நடந்தாலோ அல்லது கிடைத்தாலோ அதறகான இராசயணபொருள்கள் பெருகி மகிழ்ச்சி போன்ற நல்ல உணர்வுகளை ஏற்ப்படுத்துகிறது

மாறாக ஆசைப்பட்டது அடைய முடியாத போது துயரம் வருகிறது

அதாவது உற்சாக இராசயணபொருள் குறைவது ம‌ட்டுமல்ல சோர்வு தரும் இராசயணம் கூடுகிறது

இதுவே சோகம் என்ற உணர்வை விளைவிக்கிறாது என்கிறார்கள்.

எனவே இதற்கு தற்போதைய சம்பவம் நிகழ்வு மட்டுமல்லாது வளர் பருவத்தில் வாலிபத்தில் வாழ்வு முழுவதும் ஏற்ப்பட்ட முன் அனுபவங்களும் காரணமாகிறது.

அதனால் தான் மயில் தோகை போல் மென்மையுடைய துயர் என்றாலும் அளவுக்கு அதிகமாக மனம் எனும் மாட்டு வண்டியில் ஏற்றினால் அதன் அச்சு முறியும் என்றார் வள்ளுவர்
சிறிய வயதில் பெற்றோர் இழப்பு,
அல்லது
இருந்தும் துயரம் தரும் தாய் தந்தை
வறுமை
துயரமான இளமைக்காலங்கள்
இழப்புகள்
காதல்,கல்வி தோல்விகள்
துயர சம்பவங்கள்
துவள வைத்த நிகழ்வுகள்

மீண்டும் மீண்டும் பட்ட காயங்கள் தழும்புகளாகின்றன.

இப்படிப்ட்ட பிண்ணனி உள்ளவர் மிகச் சுலபமாக அதிவிரைவாக சிறிய துயருக்கு கூட பெரிய சோகம் அடைவது ஒன்றும் ஆச்சர்மில்லையே
தழும்பில் அடிபட்டால் உதிரம் பெருகத்தானே செய்யும்.

எனவே பாரம்பர்யம் உடல் அமைப்பு,பிறப்பு,வளர்பருவம்,குடும்ப சமுக சூழல் போன்ற பழங்கால பதிவுகளும் நிகழ்கால நிகழ்வுகளும் சோகத்தை பிரசவிக்கின்றன‌

சோகமும் சோர்வும் வருவதுதன் காரணம் உடனடியாக நிகழ்ந்த சம்பவத்து தொடர்புடையதாக பெரும்பாலோனோர் கருதுகிறோம்.

ஆனால் உண்மையில் ஆழமாக பல காரணங்கள் உண்டு.

பீலி பெய் சாக்காடும் அச்சிறும் அப்பண்டம் மென்மையான மயிலிறகு என்றாலும் ஏற்கனவே ஏற்றி வைத்த எடை அதிகமாக இருந்த போது வண்டியின் அச்சு முறிந்து போக காரணமாக இருக்கிறது.

ஆனால் காகம் அமர்ந்ததும் பணம்பழம் விழுந்ததும் என்பார்

காரணம் பழம் பழத்ததே அன்றி காகமல்ல காரணம்

அது போல ஏற்கனவே கஸ்டபட்டு பாரம் சுமந்து திரியும் மனம்

சிறு சுமை தாங்காது உடைந்து சிதறும்.

எனவே ஆறாத காயமாக ஆழமான தழும்பான புண் காற்று பட்டதும் வலிப்பது போல நிகழ்கால சம்பவங்கள்  சிறிதாக இருந்தாலும் அதன் துயரம் பெரிதாக இருப்பது போல தோன்றுகிறது.

எனவே கடந்த கால காயங்களும் பாரம்பர்ய குறைபாடுகளும் குறைவான விரக்தியை தாங்கும் சக்திகளும் சக்திகளும் போன்ற பல காரணங்களே சோர்வுக்கு முல காரணமாக அமைகிறது.

No comments:

Post a Comment