Wednesday, January 1, 2014

நாளைய ஆதி மனிதர்களா நாம்?

நாளைய ஆதி மனிதர்களா நாம்?

1.மனிதன் எவ்வளவு உயரத்தில் இருக்கின்றான் என்பதை வைத்து அவனது திறமையையும் வெற்றியையும் அளவிட முடியாது ,எந்த அடித்தளத்தில் இருந்து அவன் அந்த உயரத்தை அடைந்தான் என்பதே அளவுகோல் .இயற்கையினால் படைக்கப்பட்ட ஐந்து பூதங்களைப் பற்றி நமக்குத் தெரியும். நம்மை ஆக்கிரமித்துள்ள நம்மை இயக்குகின்ற இந்த  ஐந்து தத்துவங்களை நாம் ஐம்பூதம் என்று சொல்லுகின்றோம்.இயற்கை புதியதாக தினம்தோறும் எதையும் படைத்துக் கொண்டே  இருப்பதில்லை .மனிதன் தான் தினம் தோறும்   தான்  எதையாவது படைத்துக் கொண்டிருப்பதாக  நினைத்துக் கொள்கின்றான்.இயற்கை  ஏற்கனவே எல்லாவற்றையும் படைத்து முடித்துவிட்டது அதில் புதியதாக அவ்வப்போது நம்மால்  உணரப்படும் தத்துவங்களும் புதிய பொருட்களும் மிக மிகச் சிறியது தான்.

2.இயற்கை புதிய புதிய பொருட்களையும் தத்துவங்களையும் தொடர்ந்து படைக்கும் வேலையை ஏற்கனவே படைத்து முடித்துவிட்டது ஆகவே புதியதாகப் படைக்க இயற்கையிடம் ஏதும் இல்லை.அனைத்து  இயற்கை விதிகளையும் அறிவியல் விதிகளையும்  இயற்கை படைத்து முடித்துவிட்டது .அதனிடம் புதியதாக படைப்பதற்கு ஏதும் இல்லை என்பதை மட்டுமே  இயற்கை ஆனது  தனது ஆற்றல் மிக்க படைப்பாக்கி விட்டது.படைத்து முடித்தல் என்பதையே படைப்பாக்கி விட்டது.

3.ஆகவே தான் இயற்கை படைத்து முடித்துவிட்டது என்கின்றோம்.நாம் தான் அதன் படைப்பை இன்னும் உணர்ந்து முடியாமல்.இயற்கை எதையும் ரகசியமாய் வைக்கவில்லை அப்படிப்பட்ட ரகசியங்களையும் விரும்புவதில்லை  .எல்லோரும் எல்லா உயிரினங்களும் அதனை எளிதில்  உணருமளவிற்கு  வைத்துள்ளது .அதனால் இயற்கையினுள் பொதிந்து கிடக்கும்  மறைத்து வைத்திருக்ககப்படும்   ரகசியங்கள் என்று சொல்ல  ஏதும் இல்லை.ஏற்கனவே இருக்கின்ற இயற்கையின் படைப்பின் உட்பொருளையும்,அதன் தன்மையையும் திறந்த மனதுடன்  புரிதல்களுக்குட்படுத்தாமல் மனிதன் தான்   இருக்கின்றான்.

4..ஆதி மனிதன் தீயின் பயனையும் தீயின் தன்மையையும் அப்போது தான் கண்டுபிடித்துள்ள  நிலையில் உள்ள ஒருவனைத் தேடிக் கண்டுபிடித்து இன்றைய உலகிற்குக் கொண்டு வருவோம் .அவன் எப்படி இன்றைய உலகினைப் புரிந்து கொள்வானோ அதற்கு இனையான  உணருதல்கள்  தான் நமது இன்றைய  நிலையையும் , எதிர்காலத்தோடு  உணரப்படும் போது உள்ள நிலை.அந்த ஆதி மனிதனுக்கு முன்னிருந்த மனிதனைக் காட்டிலும் தீயைப் பற்றி உணர்ந்த  மனிதன் நிலையானது தொழில் நுட்பம் வாய்ந்ததாகத்தான் உணரப்பட்டு  இருக்கும் .

5.இப்போதைய தொழில் நுட்பங்களின் கண்டுபிடிப்புக்கும் தியரங்களுக்கும் கொஞ்சமும் குறைவு கிடையாது ஆதி மனிதனின் தீயைப் பற்றிய  கண்டுபிடிப்பும்,முதுகெலும்பை   நிமிர்த்திய தொழில் நுட்பமும்.அப்படி என்றால் இன்று நாம் நமது நிலையினை எதிர்கால உலகுடன்  ஒப்புமை செய்யப்படும் போது  எப்படி அந்த ஆதி மனிதனின் நிலையினில் இருக்கின்றோம் என்பதனை  உணர்ந்து  கொள்ளலாம்.

6.அதே நேரத்தில் ஆதிமனிதன் முதுகெலும்பை  தனது புரிதல்களால்  நிமிர்த்திய போது அடைந்த பிரமிப்பும் மகிழ்ச்சியும் தான், இன்றும்  மாறாமல்  நமது புதிய கண்டு பிடிப்புகளும் உணருதல்களும் பிரமிப்பையும்,மகிழ்ச்சியையும் கொடுக்கின்றன.ஆகவே அவனுடைய கண்டுபிடிப்புகளுக்கும் பிரமிப்புகளுக்கும் மகிழ்ச்சிகளுக்கும் கூடவோ குறைவாகவோ  தற்போதைய நமது கண்டுபிடிப்புகளும் பிரமிப்புகளும் மகிழ்ச்சிகளும் இருக்க முடியாது.

7.அதே போல் நாளைய மனிதனுடைய கண்டுபிடிப்புகளும் உணருதல்களும் ஆதிமனிதனின் கண்டுபிடிப்புக்கும் உணருதலுக்கும் பின்பான ,பிரமிப்புக்கும்  மகிழ்வுக்கும்  மேற்பட்டு இருக்க முடியாது என்பதனையும் உணருவோம்.அதனால் தான் இயற்கை ஏற்கனவே எல்லாவற்றையும் படைத்து முடித்து விட்டது என்பதனையே  தனது  படைப்பாகக் கொண்டிருக்கின்றது  என்று சொல்லுகின்றோம்.

8.மேலும்  நாம் வருங்கால மனிதன் கண்டுபிடித்து பயன்படுத்தப்  போகும் எதனை  இன்னும்  உணராமல்  இருக்கின்றோம் என்பதனை  உணருவோம்.உடலியல் ரீதியாக  நாம் நமது உடம்பில் நிமிர்த்த வேண்டியது இன்னும் என்ன இருக்கின்றது என்பதனையும் ,அதே போல்  மனவியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் . ஆதிமனிதனுக்கு   பிரமிப்பையும் ,மகிழ்வையும் கொடுத்த விசயங்கள்  போன்றவற்றை நாளைய ஆதி மனிதர்களான  நாம் திறந்த மனதுடன் இயற்கையினைப்  புரிந்து கொள்வோம்..

No comments:

Post a Comment