Monday, January 6, 2014

நாகரீகம்

நாகரீகம்

  • நாகரீகம் என்பது நாம் அணியும் துணியும் அல்லவே
  • நாகரீகம் என்பது நாம் பணியும் இனிய மொழியே
  • அறிவறிந்து கற்று வரவறிந்து வழங்கி உறவறிந்து கலந்து வாழ்க
  • செறிவறிந்து பழகி பரிவறிந்து நெருங்கி நெறியறிந்து கலந்து வாழ்க
  • ஆசைகளை குறைத்தார் அன்று
  • ஆடைகளை குறைக்கிறார் இன்று
  • கருணையை வளர்த்தார் அன்று
  • காமத்தை வளர்த்தார் இன்று
  • தூசு படிந்த விளக்குகள் துடைக்கப்பட்டால் ஒளிதரும்
  • மாசு படிந்த மனங்களும் திருத்தப்பட்டால் மலராகும்
  • உடலுக்கு பொருந்தாத உடைகளும் வெறும் பிணியே
  • காலத்துக்கு பொருந்தாத கருத்துக்களும் பெரும் பிணியே
  • மற்றவர் பெருமைப்படும் படி வாழலாம்
  • மற்றவர் பொறாமைப்படும் படி வாழலாகாது
  • அன்றைய நாகரீகங்கள் வளமான கருத்துக்களால் உருவாக்கப்பட்டன
  • இன்றைய நாகரீகங்கள் உயரமான கட்டிடங்களால் உருவாக்கப்பட்டன
  • பண்பான வரவேற்பை விட சிறந்த விருந்து வேறெதுவுமில்லை
  • அன்பான வார்த்தையை விட உயர்ந்த மருந்து வேறதுவுமில்லை
  • சிலர் உள்ளே வந்தால் சிறப்பு வரும் சுவர் பெரியோர்
  • சிலர் வெளியே சென்றால் அமைதி வரும் அவர் சிறியோர்.

No comments:

Post a Comment